Archive for செப்ரெம்பர், 2009

விக்கிரங்கள் பாதுகாப்பும், திருடும்!

செப்ரெம்பர்30, 2009

விக்கிரங்கள் பாதுகாப்பும், திருடும்!

விக்கிரங்கள் பாதுகாப்பு பற்றி ஒருபக்கம், கூட்டம், விவாதம் எல்லாம்!

மறுபுறமோ, விக்கிரங்கள் கொள்ளை, களவு முதலியன!!

30_09_2009_004_013

30_09_2009_152_004
திருச்சி அருங்காட்சியத்தில் வெண்கல சிலைகள் திருட்டு
செப்டம்பர் 30,2009,00:00  IST

திருச்சி: திருச்சி அரசு அருங்காட்சியக கதவை உடைத்து, உள்ளே புகுந்த மர்ம கும்பல், அங்கிருந்த 27 வெண்கல சுவாமி சிலைகளை கொள்ளையடித்துச் சென்றது. திருச்சி கோட்டை போலீஸ் ஸ்டேஷன் அருகே, அரசு அருங்காட்சியம் இயங்கி வருகிறது. ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு இரு நாட்களுக்கு முன், அருங்காட்சியகம் பூட்டப்பட்டது. முன்னாள் ராணுவ வீரரான லூர்துசாமி, வாட்ச்மேன் பணியில் இருந்துள்ளார்.

நேற்று அதிகாலை 2 மணிக்கு, அருங்காட்சியக பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம கும்பல், அங்கு பூட்டி “சீல்’ வைக்கப்பட்டிருந்த அறையினுள் இருந்த வெண்கல சுவாமி சிலைகளை கொள்ளையடித்துச் சென்றது. காலை 7 மணிக்கு, கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்ட வாட்ச்மேன் லூர்துசாமி, போலீசுக்கு தகவல் கொடுத்தார். காப்பாட்சியர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் அருங்காட்சியகத்தினுள் சென்று பார்த்தனர். இரண்டு செ.மீ., முதல் 53 செ.மீ., உயரம் கொண்ட 27 வெண்கலத்தால் ஆன சுவாமி சிலைகள் கொள்ளை போனது தெரியவந்தது. கொள்ளையடித்தவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பும், சிதம்பரம் கோவில் நிர்வாகமும்

செப்ரெம்பர்29, 2009

தங்களுக்கும், இப்பிரச்சினைக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல திக  “விடுதலை”,  மங்கள முருகேசன் என்பவரின் கட்டுரைகள் வெளியிடப் பட்டுள்ளன:

சிதம்பரம் நடராசர் கோயில் வழக்கு
டாக்டர் கலைஞர் அரசுக்குக்கிடைத்த நல்லதொரு தீர்ப்பு – வெற்றித் தீர்ப்பு
திருந்துவார்களா தில்லை தீட்சிதர்கள்?

http://www.viduthalai.com/

பல நூற்றாண்டுக் காலப் பார்ப்பனிய ஆதிக்கத்திற்கு, தில்லை நடராசர் கோயிலுக்கு, ஏன்? தில்லை நடராசருக்கு விடிவு காலம் பிறந்துவிட்டது.

கிரிக்கெட் விளையாட்டில் கால் இறுதி, அரை இறுதி விளையாட்டில் வெற்றி பெறுவதைப் போல் இறுதிச் சுற்-றுக்குத் தமிழக அரசு தயாராகிவிட்டது?

சைவர்களுக்குத் தமிழகத்தில் சோழர் காலம் முதலே முதன்மை பெற்றுத் திருப்பதிக்கு ஈடான சிறப்பும் பெற்ற கோயில் சிதம்பரம் நடராசர் கோயில்.

திருவிளக்கு மான்யமாகச் சிதம்பரம் கோயிலுக்கு 200 ஏக்கர் நிலம் உண்டு. அவை யாவும் குத்தகைதாரர் வசம் உள்ளன. குத்தகையை எல்லோருக்கு-மாகப் பொது தீட்சிதர்கள் பெறுகிறார்கள். ஒவ்வொரு தீட்சிதருக்கும் பக்தர்களில் தனி வாடிக்கையாளர் உண்டு; பக்தர்-களின் தட்சணையும் உண்டு. தினசரி பூசைக்கும் மற்ற திருவிழாக்களுக்கும் வேண்டிய பொருள்களனைத்தும் கட்டளைதாரர்கள் கொடுத்து விடு-கின்றனர். 1923 இல் இந்து அற-நிலையச் சட்டம் நிறைவேறி ஆலயங்களில் முறையான நிருவாக அமைப்பு உருவாகி ஊழல்களின் ஊற்றுக்கண் ஓரளவு அடைக்கப்பட்டது.

தமிழகத்தின் பெரிய கோயில்களான திருச்செந்தூர் முருகன் கோயில் முதல் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வரை அனைத்துப் பெரிய, சிறிய கோயில்களும் அறநிலையத்துறையின் கட்டுக்குள் வந்தன. ஆனால் சிதம்பரம் கோயில் நிருவாகத்தை எப்படியோ தங்கள் கைக்குள் வைத்துக் கொண்ட தீட்சிதர்கள், மதங் கொண்ட யானைபோல் திமிரிக் கொண்டிருந்தனர்.

அது மட்டுமல்லாது, சிதம்பரம் சபாபதி கோயில், பொன்னம்பலம் என்று போற்றப் பெறும் நடராசர் கோயில் அன்று முதல் இன்றுவரை ஏதாவது ஒரு சிக்கலின் இருப்பிடமாய் சீர்கேட்டின் நிகழ்விடமாய், முடிவு காணமுடியாத முடிச்சுக் கற்றையாய் விளங்கியது.

அக்கோயில்களில் எல்லாம் எழாத சிக்கல்கள் சிதம்பரம் கோயிலில் மட்டும் எழக் காரணம், கோயிலில் புரோகி-தர்-களாய், பூசாரிகளாய், மணியை ஆட்டி மந்திரம் சொல்லிக் கொண்டு இருக்க வேண்டிய தீட்சிதர்கள் சிதம்பரம் நடராசர் கோயில் எங்களுக்குச் சொந்தம், எவரும் எங்களை எதுவும் கேட்கமுடியாது, எங்கள் கோயில், இது எங்கள் பிரைவேட் லிமிடெட் கம்பெனி என உரிமை கொண்டாடி உச்சநீதி மன்-றம் வரையும் போவோம் என்று ஆர்ப்-பரித்ததுதான் நியாய, தர்மங்களுக்குப் புறனாய் விளங்கிற்று.

நடராசர் கோயில் வழக்குகள்

சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் தொடுத்த வழக்குகளில் இரண்டு வழக்கு-கள் மிகவும் குறிப்பிடத் தக்கவை. ஒரு வழக்கு_ ஆங்கிலேயர் இந்-நாட்டை ஆண்ட போது போடப்பட்டது. மற்றொரு வழக்கு_ இந்தியா விடுதலை பெற்ற சில ஆண்டுகளில் போடப்பட்டது.

எதற்காக இந்த வழக்குகள்? ஏன் இந்த வழக்குகள், சிதம்பரம் கோயில் பற்றியும், தீட்சிதர்கள் உரிமை பற்றியும் அரசின்அதிகார எல்லை குறித்தும் தெரிந்து கொள்ள உதவும் வழக்குகள்.

வழக்கறிஞர் ச. செந்தில்நாதன் சிதம்-பரம் கோயில் சில உண்மைகள் என்-னும் நூல் ஒன்றில் இவ் வழக்குகள் குறித்தும் கூறியுள்ளதைக் காணலாம்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்

சென்னை மாநிலத்தில் நீதிக் கட்சியின் ஆட்சி நடந்த காலக் கட்டத்-தில் இந்து சமயக்கோயில்கள், அறக்-கட்டளைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் 1923 ஆம் ஆண்டு இந்து சமய அறக்கட்டளைச் சட்டம் கொண்டு வந்தது.

அப்போது சிதம்பரம் கோயில் தீட்சதர்கள் சென்னை மாநில ஆங்கி-லேய ஆளுநரிடம் ஒரு முறையீட்டு மனுவினைக் கொடுத்தார்கள். அந்த மனுவில் 1923 இல் கொண்டு வரப்பட்ட இந்து சமய அறக்கட்டளைகள் சட்டத்-திலிருந்து சிதம்பரம் நடராசர் கோயி-லுக்கு விலக்கு அளிக்கும்படிக் கேட்டுக் கொண்டார்கள்.

தீட்சிதர்களின் முறையீட்டு மனு-வைப் பரிசீலித்து ஆளுநர், சட்டத்தின் சில பிரிவுகள் சிதம்பரம் கோயிலையும் கட்டுப்படுத்தும் எனவும், அப்பிரிவுகள் தவிர மற்றபடி சட்டம் சிதம்பரம் கோயி-லுக்கு நடைமுறையில் வராது என்ற ஆணையினை 1926 இல் பிறப்பித்தார். என்னென்ன பிரிவுகள் அச்சட்டத்தின் படி சிதம்பரம் கோயிலைக் கட்டுப்-படுத்துவன.

1) சிதம்பரம் கோயில் பரம்பரை அறங்-காவலர்கள்

2) வரவு செலவு கணக்கு, அவற்றை அரசுக்கு அளித்தல்

3) கோயில் நிருவாகத்தை நடத்து-வதற்குத் திட்டம் வரைதல்.

4) கோயில் நிதி தொடர்பானவை. இவற்றிற்கு 1923 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையக் கட்டளைச் சட்டப்-படி சிதம்பரம் நடராசர் கோயிலுக்கு அதாவது தீட்சிதர்களுக்கு விலக்குக் கிடையாது.

இதற்கிடையில் சிதம்பரம் கோயில் நிருவாகம் சரியாக நடைபெறவில்லை-யென அம்பலவாணர் பக்தர்களே உணர்ந்-ததன் விளைவால் 1931 ஆம் ஆண்டு அப்போதைய இந்து சமய அறநிலையத் துறை வாரியத்திற்கு (Hindu Religious Endowment Board) ÜŠ«ð£¶ (Hindu Religious and Charitable Endowment Commission கிடையாது) ஒரு திட்டம் வகுக்கும்படி கேட்டுக் கொண்டார்கள். அவ்வாறான பக்தர்களின் (தி.க.வினரோ, தி.மு.க.-வினரோ அல்ல) அதாவது பொன்னம்-பலவாணர் நடராசரின் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று அறநிலைய வாரியம் ஒரு திட்டத்தை வகுத்தது. ஆனால் அத்திட்டத்தில் சில குறைகள் இருப்பதை உணர்ந்து அத்திட்டத்தை அப்போது கைவிட்டது.

என்ற போதிலும் 1933 ஆம் ஆண்டு அதாவது இரண்டு ஆண்டு-கள் கழித்து, 1933 ஆம் ஆண்டு அறநிலைய வாரியம் தனக்குள்ள சட்ட அதிகாரத்தின் அடிப்படையில் தானே ஒரு திட்டத்தை வகுத்தது.

வழக்கு

தீட்சிதர்கள் ஆட்டம் கண்டு போனார்-கள். அத் திட்டத்தை எத (South Arcot District Civil Court) வழக்கு ஒன்றைத் தொடுத்தனர். 13.3.1937 இல் அவ்வழக்கில் தீர்ப்பு வழங்-கிய நீதிபதி அறநிலையத் துறைக்குக் கோயில் நிருவாகத்தை ஒட்டித் திட்டம் வகுக்க உரிமை உண்டு என்பதை ஏற்றுக் கொண்டது. அதே சமயம் அறநிலையத் துறையின் திட்டத்தில் சில மாறுதல்களைச் செய்தது.

இங்கே ஒன்றைக் கவனிக்க வேண்டும். கடலூர் நீதிமன்றம் இந்து அறநிலையத் திட்டத்தை ரத்துச் செய்யவோ, திட்டம் வகுக்க அதிகாரம் இல்லை என்றோ சொல்லவில்லை. மாறா-கத் திட்டத்தில் சில மாறுதல்களைச் செய்தது. அவ்வளவுதான்.

திட்டத்தில் செய்யப்பட்ட மாறுதல்-களைக் கூடப் பொருத்துக் கொள்ளாத தீட்சதர்கள் தங்களுக்கு ஏதோ அநீதி இழைக்கப்பட்டதாகச் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

சிதம்பரம் நடராசர் கோயில் பொதுக் கோயில் அல்ல. அது தனியார் கோயில். அறநிலையத் துறையின் சட்டம் எங்களைக் கட்டுப்படுத்தாது. அப்படியே கோயில் நிருவாகத்திற்காகத் திட்டம் வகுக்க வேண்டும் என்றாலும் நிரு-வாகத்தில் எந்தக் குறையும் சொல்லப் படாத நிலையில் திட்டம் வகுக்க வேண்-டிய இன்றியமையாமை இல்லை.

இதுதான் தீட்சிதர்கள் எடுத்து வைத்த வாதம்.

இந்த மேல்முறையீடு வழக்கு எண். 306/1936, நீதியரசர்கள் வெங்கட-ரமணராவ், நீதியரசர் நியூசம் ஆகிய இருவராலும் விசாரிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பின் 3.4.1939 இல் தீர்ப்பு வழங்கப்பட்டது.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் சிதம்பரம் கோயில் பொதுக் கோயில்-தான், தனியார் கோயில் அல்ல என்-பதை உறுதி செய்தனர். தங்கள் தீர்ப்-பில் 1890 ஆம் ஆண்டு நடந்த ஒரு வழக்கிலேயே நீதிபதி முத்துச்சாமி அய்யரும், மற்றொரு ஆங்கிலேய நீதிபதி ஜே.ஜே.ஷெப்பர்டும் சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் சொந்தச் சொத்து அல்ல, பொதுச்சொத்துதான் என்று தீர்ப்பு வழங்கியதையும் தங்கள் தீர்ப்பில் எடுத்துக் காட்டினார்கள்.

கோயிலின் நிருவாகத்தில் குளறுபடி இல்லை என்ற போதிலும் கோயிலின் முறையான நிருவாகத்திற்காகத் திட்டம் வகுக்கலாம் என்றார்கள். என்ற போதிலும் அறநிலையத் துறை வகுத்த திட்டத்தில் மாவட்ட நீதிமன்றம் செய்த மாறுதல்களோடு உயர்நீதி மன்றமும் சில மாறுதல்களைச் செய்தது. தீட்-சிதர்களின் மேல்முறையீடு தள்ளுபடி ஆயிற்று.

இந்த வழக்கு நிலுவையில் இருக்-கையில் நிருவாகத்தை அரசு மேற்-கொள்ள முயன்றது. ஏற்கெனவே திட்டம் வகுக்கப்பட்டு நடைமுறையில் இருக்கையில் அரசு நிருவாகத்தை எடுத்துக் கொள்ளும் அறிவிப்பு விரும்பத் தக்கதல்ல எனக் கருதிய நீதிமன்றம் அதே வேளையில் நிருவாகத்தை அரசு மேற்கொள்ளலாம் என்பதை ஏற்றது.

அரசு எப்போது எடுத்துக் கொள்ளலாம்? கோயில் நிருவாகம் செய்யும் அறங்காவலர்களை அவர்கள் வகிக்கும் பொறுப்புகளிலிருந்து நீக்கும் அளவுக்கு மிகக் கடுமையான, முறை-யற்ற நிருவாகம் இருந்தால் ஒழிய நிரு-வாகத்தை அரசே எடுத்துக் கொள்ளும் நடைமுறை சர்வசாதாரணமாக இருக்கக் கூடாது என்பதுதான் நீதி-மன்றத்தின் கருத்து. மோசமாக நிருவாகம் இருந்தால் அரசு கோயிலின் நிருவாகத்தை எடுத்துக் கொள்ள முடியும். (1939 (2) விலியி ப. 1) (தொடரும்)

சிதம்பரம் நடராசர் கோயில் வழக்கு
டாக்டர் கலைஞர் அரசுக்குக்கிடைத்த நல்லதொரு தீர்ப்பு – வெற்றித் தீர்ப்பு
திருந்துவார்களா தில்லை தீட்சிதர்கள்?

26.9.2009 அன்று வெளிவந்த கட்டுரையின் தொடர்ச்சி….

இரண்டாவது வழக்கு

28.8.1951 இல் அப்போது சென்னை மாநிலத்தை ஆட்சி செய்த காங்கிரசு அரசு நடராசர் ஆலயத்தை எடுத்துக் கொள்ளும் அரசாணை ஒன்றைப் பிறப்பித்தது. இதனை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தனர். சென்னை உயர்நீதிமன்றம் அந்த அரசாணையை ரத்து செய்தது. தீட்சதர்கள் தனிச்சமயக் குழு என ஏற்றது.

இதனை எதிர்த்து மாநில அரசு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்-தது. ஆனால் மேல் முறையீட்டு மனு-வைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. சிதம்பரம் கோயிலை அரசு எடுத்துக் கொள்-ளும் அரசாணையை-யும் நீக்கிக்-கொண்டு விட்டது. ஆண்டுகள் ஓடத் துவங்கின. தீட்சிதர் கொட்டம் தீர்ந்த-பாடில்லை.

30 ஆண்டுகளுக்குப் பிறகு எம்.ஜி.ஆர். அரசு ஆலய நிருவாகத்தில் நடந்துள்ள பல்-வேறு முறைகேடுகளையும் மோசடிகளையும் குறிப்பிட்டு நிருவாக அலுவலரை நியமிக்க-விருப்பதாக ஒரு குறிப்பு அனுப்பியது. இதற்குத் தடை விதிக்க உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். 9.8.1983 இல் அரசு அனுப்பிய குற்றச்சாற்றுகளுக்கு பதில் தருமாறு 9.8.1983 இல் தீர்ப்பு வெளிவந்தது. காலம் கடத்தினர் தீட்சிதர்கள் பதில் தர.

எம்.ஜி.ஆர்.அரசு 31.7.1987 இல் நான்-காண்டுகளுக்குப் பின் எம்.ஜி.ஆர். நிரு-வாத்தை மேற்கொள்ள நிருவாக அதிகாரியை நியமிக்கும் ஆணை பிறப்பித்தது. தீட்சிதர்கள் மறுபடியும் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

பத்து ஆண்டுகள் பருத்திக் கொட்டை-யைப் போல் வழக்கு ஊறிக் கொண்டி-ருந்தது. சென்னை உயர் நீதிமன்றம் 11.2.1999 இல் தீட்சிதர்கள் தொடர்ந்த வழக்கை விசா-ரணைக்கு ஏற்று நிருவாக அதிகாரியைத் தமிழக அரசு நியமித்தது செல்லும் என்று தீர்ப்பளித்தது.

தீட்சிதர்கள் உயர்நீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மீண்டும்வழக்குத் தொடர்ந்தனர். இப்போதும் தீட்சிதர்களின் முறையீட்டை விசாரித்த நீதிமன்றம் தீட்சி-தர்கள் முறையீடு செய்ய வேண்டியது தமிழக அரசிடமே, அவர்கள் செல்ல வேண்-டிய இடம் தமிழக அரசே என்று தீர்ப்பு வழங்கியது.

தமிழக அரசும் உடனே நடவடிக்கை எடுக்க-வேண்டும் என்ற ஆத்திர உணர்-வெல்லாம் கொள்ளாமல் ஏழு ஆண்டுகள் பொறுமை காத்தது. 2006 இல் தீட்சிதர்களின் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து நிருவாக அதிகாரியை நியமித்து வெளி-யிட்டுள்ள உத்தரவை உறுதி செய்தது. தமிழக அரசின் இந்த ஆணையை எதிர்த்துத்தான் தீட்சிதர்கள் உயர்நீதிமன்றத்தில் மனுச் செய்தார்கள். இந்த வழக்கில் சம்பந்தமில்லாத சுப்பிரமணிய சுவாமி,இந்த ஆசாமி-களுக்கு ஆதரவாக மனுச் செய்து, தன்னையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று வந்த போதுதான் அவர்–மீது முட்டை வீச்சு நிகழ்ச்சி, வழக்-கறிஞர் போராட்டம், நீதிபதி மீது வழக்கறிஞர்மீது தடியடி முதலிய அலங்-கோலங்கள், வரலாறு காணா அவலங்கள் நடந்தேறின.

2.2.2009 ஆம் நாள் சிதம்பரம் நடராசர் கோயில் வரலாற்றில் குறிப்பிடத்தகு நாளாக அமைந்தது. சென்னை உயர்நீதி-மன்ற நீதியரசர் பானுமதி அவர்கள் வரலாற்று முக்-கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை வழங்கினார். தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை செல்லும் என்று தீர்ப்பளித்தார்.

இதுவரை பொறுமை காத்த அரசு, தீர்ப்புக் கிடைத்த உடனேயே சுறுசுறுப்-பாகச் செயல்பட்டுச் செயல் அலுவலரை நியமித்துத் தீட்சிதர்களின் நிருவாகப் பொறுப்பிலிருந்து நடராசர் கோயிலை மீட்டது. கோயில் நிரு-வாகத்தைத்தான் மீட்டதே தவிர வழிபாட்-டிலோ, அவர்கள் நடராசருக்கு மேற்-கொள்கின்ற எந்தப் பக்திக் கடமையிலோ குறுக்கிடவில்லை.

2007 ஆம் ஆண்டு தீட்சிதர்கள் நீதி-மன்றத்திலேயே கோயிலுக்கு வந்த வரு-மானம் என்று காட்டிய தொகை, ஓர் ஆண்டு முழுவதுக்கும் மொத்தத் தொகை ரூபாய் 37,199. அதில் செலவு போக இருப்பு ரூ.199 ஆம். வெறும் 199 ரூபாய்தான். ஒரு சிறிய பிள்ளையார் கோயிலில் கூட மாதம் ரூ.2000 க்குக் குறையாமல் வருமானம் கிட்டுகையில், அவ்வளவு பெரிய உள்நாட்டு, வெளிநாட்டுப்-பக்தர்கள் வந்து குவிகின்ற, சைவர்களின் முதன்மைக்கோயிலில், பிறவியே வேண்-டாம் என்று இறைவனிடம் வழக்கமாக வேண்டுகின்ற பக்தர்கள், நடராசரின் புருவம், செவ்வாய், குமிண் சிரிப்புக்காண மீண்டும் பிறவி வேண்டும்என்று வேண்டி வருகிற கோயிலில், வெறும் 199 ரூபாய்தான் என்று கணக்குக் காட்டி வருவாயைப் பெருக்கித் தங்கள் பிழைப்புக்கு முறையற்றவகையில் வழிதேடிக் கொண்டதற்கு முற்றுப் புள்ளி வைக்கப் பட்டது.

தமிழக அரசு உண்டியல் வைத்தது. வைத்த முதல் நாளிலேயே ரூபாய் 2000 உண்டியலில் கிடைத்தது. உண்டியல் வைத்து அது நிரம்பி சமீபத்தில் எண்ணிய போது ஆறு மாதத்தில் வருவாய் ரூ.2,00,000 அய்த் தாண்டி இருக்கிறது. ஆகக் கோயில் நிரு-வாகம் முறைப்படுத்-தப்படவில்லை. தீட்-சிதர்களிடம் எந்த வருமானத்திற்கும் செலவுக்கும் கணக்கே கிடையாது.

பொதுச் சொத்தான நடராசரின் சொத்து தீட்சிதர்களால் பராதீனம் செய்யப்-பட்டுள்ளது என்பது கண்கூடாகத் தெரிந்தது. மேலும் அவர்களின் அடா-வடித்தனம், அடாத செயல்கள் ஆகிய-வற்றிற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்-டுள்ளது. அவர்களின் வாழ்க்-கையிலேயே நீதிபதிகள் தீர்ப்பு ஒரு மாற்றத்தை ஏற்படுத்-தும். மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட வருவாய் கிட்டி பஞ்சத்தில் வாழா-மல் இருக்கும் ஒரு நிலை உருவாகியிருக்-கிறது என்று விவரம் அறிந்தவர்கள் குறிப்பிடு-கிறார்கள்.

ஆண்டாண்டுக் காலமாக அனுப-வித்து வந்த ஆதிக்கக் கும்பல் அடங்கிப் போனதாக வரலாறுதான் கிடையாதே. நீதிக்குக் கட்-டுப்பட்டதேதான் கிடையாதே. நீதிபதி பானுமதி அவர்களின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்தனர். வி.சுந்தரம் அய்.ஏ.எஸ். போன்றவர்களைக் கொண்டு பெண் நீதிபதியின் மதமான கிறித்துவ மதத்தைக் கூறிப் பழி கூறினர்.

செப்டம்பர் 15, 2009 அண்ணாவின் 101 ஆவது பிறந்த நாளில் சென்னை உயர்நீதி மன்றத்தின் மாண்பமை நீதிபதி ரவிராஜ-பாண்டியன்அவர்கள், நீதிபதி டி.ராஜா ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்-னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்குப் பின் இரண்டு நீதி-பதிகளும் அளித்த முதன்மையான தீர்ப்புக் கலைஞர் அரசு எதிலும் சரியான பாதையில் செல்கிறது என்று மெய்ப்பிக்கும் தீர்ப்பு இது. நடராசர் ஆலயத்துக்குச் சொந்தமான 400 ஏக்கர் விளைநிலங்கள், காணிக்கையாக வழங்கப் பெற்ற தங்க நகைகள், பணத்துக்கும் பொது தீட்சிதர்கள் பல ஆண்டுகளாக முறை-யான கணக்கு எதையும் வைத்திருக்க-வில்லை. எனவே ஆலயத்தை நிருவகிக்கும் கடமையி-லிருந்து பொது தீட்சிதர்கள் தவறி-விட்டனர் என இந்து அறநிலையத் துறை ஆணையர் முடிவு செய்துள்ளார். கோயி-லுக்கு வழங்கப்பெற்ற கட்டளைகள், நிலங்களை அடையாளம் காணவும், வரு-வாயைப் பெருக்கவும் செயல் அலுவ-லரை நியமித்த உத்தரவு இட்டுள்ளார். இந்த உத்தரவு சரியானதே.

(It is startling revelation that Podhu Dikshidars never maintained any account either in respect of 400 acres of fertile lands or in respect of gold offerings, hundi collections and cash donations for ages, and that they never maintained at any point of time any account of the rent collected from tenants. This reveals that the Commissioner of the Hindu Religious and Charitable Endowments Department rightly came to the conclusion that the Podhu Dikshidars have continuously neglected to perform their duties).

அடுத்து இந்தத் தீர்ப்பில் மிக முக்கிய-மான பகுதி இது ‘Times of India’ ஆங்கிலப் பத்-திரிகை போன்றவை இதனை வெளி-யிட்டுள்ளன. அதில் முக்கியமான இவ்வரி-கள் தமிழ்ப் பத்திரிகைகளில் விடப்பட்-டுள்ளன. தீட்சிதர்கள் இக்கோயில் தங்கள் சொந்தக் கோயில் ‘Denominational Temple’ என்றே வலியுறுத்தி வந்தனர். இதையே வி.சுந்தரம் அய்.ஏ.எஸ்., சுப்பிரமணிய சுவாமி ஆகியோர் கிளிப்பிள்ளை போல் கூறி-வந்தனர்.

இந்தக் கூற்று நீதிமன்றத்தின் தீர்ப்பினால் அடி பட்டுப்போய்விட்டது. The Podu Dikshithars cannot claim Natarajar Temples a denominational temple நீதிபதிகள் கூறு-கின்றனர். பொது தீட்சிதர்களோ அவர்களது மூதாதையர்களோ சிதம்பரம் நடராசர் ஆலயத்தைக் கட்டவில்லை என்பது நிரூபிக்-கப்பட்டுள்ளது. எனவே அவர்கள் அர-சமைப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு கோர முடியாது.

சிதம்பரம் நடராசர் கோயில் சோழர், பாண்டியர், விஜயநகர அரசர்களால் 10 முதல் 13 ஆம் நூற்றாண்டுக்குள் கட்டப்-பட்-டுள்ளது. சைவர்கள், வைணவர்கள் இணைந்து இந்த ஆலயத்தில் வழிபாடு செய்துள்ளனர். எனவே இந்தக் கோயில் தங்கள் சமூகத்-திற்கே உரியது என்று பொது தீட்சிதர்கள் சொந்தம் கொண்டாட முடியாது. சிதம்பரம் நடராசர் ஆலயச் சொத்து-களை முறையாக நிருவகித்-திருந்தால் திருப்பதி, பழனிக்கு நிகராகச் செல்வத்தைப் பெற்ற ஆலயமாக மாறி-யிருக்கும். வரலாறு, தொல்லியல் முதன்மை வாய்ந்த நடராசர் ஆல-யத்தைப் புதுப்பிக்கவும் குடமுழுக்கு நடத்தவும் ரூ 50 கோடியிலான திட்டத்தை 13 ஆவது நிதிக் குழுவிடம் செயல் அலு-வலர் அளித்துள்ளார். நடராசர் ஆலயத்தை முறையாக நிருவகிக்க வேண்டும் எனும் இந்து அறநிலையத் துறையின் ஆர்-வத்தை இது காட்டுகிறது.

செயல் அலுவலர்க்கான பணிகளும் அதி-காரங்களும் அரசாணையில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. செயல் அலுவலர் நியமனத்தால் பொது தீட்சிதர்கள் யாரும் ஆலயத்திலிருந்து வெளியேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கோயிலைச் சிறப்பாக நிருவாகம் செய்யப் பொது தீட்-சிதர்களும், செயல் அலுவலரும் ஒருங்-கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் ஆலய நிருவாகத்தில் முறைகேடுகள் நடைபெற்றதைத் தொடர்ந்தே செயல் அலுவலர் நியமிக்கப் பட்டுள்ளார். செயல் அலுவலரும் கோயில் நிருவாகத்தை மேம்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இந்த நிலையில் செயல் அலுவலர் நிய-மனத்தில் தலையிட்டால் அது, பாரம்-பரியம் மிக்க கோயிலைக் காக்கும் கடமை-யிலிருந்து நீதிமன்றம் தவறியதுபோல் ஆகும். அவ்வாறு செய்தால் பழம் பெருமை வாய்ந்த கோயில் அழிவதோடு பொது தீட்சிதர்களின் வருவாய் ஆதாரமும் பாதிக்கும்.

சென்னை உயர்நீதிமன்றம் இவ்வாறு நல்லதொரு தீர்ப்பினைப் பொறுப்புணர்வு-டனும், கடமை உணர்வுடனும் நன்கு ஆராய்ந்து நம் எதிர்காலச் சந்ததியினர் என்றும் போற்றிப் புகழத்தக்க தீர்ப்பினை வழங்கியுள்ளனர்.

இதுவரை பார்த்த இந்தக் கோயில் குறித்த வழக்குகளில் எல்லாம்,

தில்லைக் கோயிலைப் பொறுத்தவரை இந்துச் சமய அறநிலையச் சட்டமோ அதன் விதிகளோ அக்கோயிலுக்குப் பொருந்தாது என்று எந்த நீதிமன்றமும் கருத்துத் தெரிவிக்கவில்லை. எனவே இத்திருக்கோயில் நிருவாகம் இந்த சமய அறநிலையச் சட்டத்திற்கு உட்பட்ட கோயிலே ஆகும்.

தீட்சிதர்கள் தாங்கள் வெறும் அர்ச்-சகர்கள் அல்லர்; தாங்கள் மடாதிபதிகளுக்கு இணையானவர்கள் என்று சொல்லி வந்தது முற்றிலும் தவறு என்பதும், மடாதிபதிகள் என்பதற்கும் பொது தீட்சிதர்கள் என்பதற்கும் தெளிவான வேறுபாடு உண்டு என்பதும் ‘Denominational Temple’ அல்ல என்ற தீர்ப்பில் நன்கு நிறுவப்பட்டுள்ளது.

தீட்சிதர்களுக்கு ஒரு வார்த்தை. தில்லைக் கோயிலில் தங்களுக்கு உள்ள பூஜை செய்யும் உரிய உரிமையும் வாழ்வாதாரமும் பறிபோய்விடுமோ என்று அச்சப்பட வேண்டியதில்லை. ஏற்கெனவே இருக்கும் நிருவாகத் திட்டத்திலேயே தீட்சிதர்களின் உரிமை பாதிக்கப்பட்டிருக்கின்றதா என்றால் இல்லை, பாதுகாக்கப்பட்டிருக்கிறது. தீட்சிதர்கள் எதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

உச்சநீதிமன்றம் சென்றிருக்கிறார்கள் சுப்பிரமணிய சுவாமி, இராம கோபாலன் என்று படரும் கொடிகளை விட்டு விட்டுப் பக்தர்களை நினையுங்கள். மற்றக் கோயில் அர்ச்சகர்கள் போல் இணக்கமாக வம்பு, தும்பு இல்லாமல் வழி-பாட்டு முறைகளில் கவனம் செலுத்-துங்கள்.

உங்கள் ஆதாரங்கள் சொத்தை-யானவை. இறுதி வெற்றி கலைஞர் அரசுக்கு_- அதா-வது மக்களுக்கு. இறுதி-யாகவும் உங்களுக்கு உச்சநீதிமன்றம் வைக்கும் ஆப்பும் வெகுதொலைவில் இல்லை. ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பது போல் தீட்சிதர்கள் செய்யும் அடாவடிக்-கெல்லாம் நன்மை விளைகிறது.

நடராசருக்கு இனிமேல் இரட்டைத் தாழ்ப்பாள். இரண்டு சாவி இருக்கும். ஒரு சாவி தீட்சிதரிடம்; இன்னொரு சாவி செயல் அலுவலரிடம். அப்படியானால் இருவரும் எப்போது வேண்டுமானாலும் திறந்து கொள்ளலாம் என்று அர்த்த-மாகாது.

இல்லை, இருவரும் சேர்ந்து திறந்தால்-தான் கதவு திறக்கும். திருக்கதவம் தாழ் திறவாய் என்று தீட்சிதர்கள் பாடினாலும் தாழ் திறக்காது.

நன்மைகள் ஏற்படுகின்றன. நல்லது செய்-யும் கழக அரசை உளமாரப் பாராட்டு-கிறேன்.

நாத்திக ஆட்சியாளர்களும், கோவில் நிர்வாகமும்

செப்ரெம்பர்18, 2009

விடுதலையில் (18-09-2009) “கலைஞர் பதில்” என்று இன்றைய செய்திதாளில், கீழ்கண்டவாறு உள்ளது.
http://www.viduthalai.com/

கேள்வி: சிதம்பரம் ஆலயத்தின் நிர்வாகத்தை எடுத்துக் கொண்டது சரிதான்என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டிருக்-கிறதே; இப்போது வழக்கு தொடுத்தவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தால் என்னவாகும்?

கலைஞர்: தீர்ப்பில் முக்கியமாக கோவில் பணம் முறைகேடு செய்-யப்பட்டது, 400 ஏக்கர் நிலத்தின் நிலைமை என்ன-வென்றே நூறாண்டு-களுக்கும் மேலாக தெரி-யாமல் இருப்பது, நிர்வாக அதிகாரியின் நியமனத்-துக்-குப்பின் ஏற்பட்ட மேம்பாடுகள் இவற்றை யெல்லாம் கருத்தில் கொண்டு, நிர்வாக அதி-காரியின் நியமனத்தில் இந்தக் கோர்ட் தலை-யிட்டால், பழைமை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க கோவிலைப் பாதுகாக்கும் கடமையிலி-ருந்து தவறி விடுவது போலாகும் என்று கூறப்-பட்டுள்ளது. மேல் முறை-யீடு செய்தால்கூட, என்ன நடக்கும் என்பதற்குமுன் கூட்டியே தில்லை நட-ராஜர் தன் காலைத் தூக்-கிக் காட்டியிருக்கிறாரே?

வீரமணிக்கும், கருணாநிதிக்கும், மற்ற நாத்திக / இந்து விரோதிகளுக்கும் கோவில்களைப் பற்றிய அக்கரையை கடந்த 70 ஆண்டுகளாக நாங்கள் பார்த்துக் கொண்டுதான் வருகிறோம்.

ஆகையால், இவர்களது கோவில் மீதான கரிசனத்தை உண்மையான நாத்திகனே நம்ப மாட்டான்.

அந்நிலையில், இவர்கள் ஏதோ கோவில் களைக் காப்பவர்கள் போல வேடம் போடுவதும், இப்படி கேள்வி-பதில் வெளியிடுவதும் கண்டு, உண்மையான பக்தர்கள் ஏமாற மாட்டார்கள்.

கடவுள் இல்லை என்பவர்களுக்கு கடவுளைப் பற்றிய அக்கரை தேவையில்லை.

தெய்வம் நின்று கொல்லும் என்பது போகப் போகத்தான் தெரிய வரும்.

தில்லை நடராஜனையும், ஸ்ரீரங்கநாதனையும் பீரங்கி வைத்துப் பிளப்பது என்னாளோ, அந்நாளே பொன்னாள்என்று அன்று எக்காளமிட்டவரின் சீடர் தான், இப்போது, ஆட்சிபீடத்தில் இருக்கிறார்.

வயதாகியும், நாகரிகம் தெரிவது இல்லை.

வாழ்க, தமிழகத்தின் கோவில் நிலை!

 

வணக்கம் தமிழா!

செப்ரெம்பர்18, 2009

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!