நாத்திக ஆட்சியாளர்களும், கோவில் நிர்வாகமும்

விடுதலையில் (18-09-2009) “கலைஞர் பதில்” என்று இன்றைய செய்திதாளில், கீழ்கண்டவாறு உள்ளது.
http://www.viduthalai.com/

கேள்வி: சிதம்பரம் ஆலயத்தின் நிர்வாகத்தை எடுத்துக் கொண்டது சரிதான்என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டிருக்-கிறதே; இப்போது வழக்கு தொடுத்தவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தால் என்னவாகும்?

கலைஞர்: தீர்ப்பில் முக்கியமாக கோவில் பணம் முறைகேடு செய்-யப்பட்டது, 400 ஏக்கர் நிலத்தின் நிலைமை என்ன-வென்றே நூறாண்டு-களுக்கும் மேலாக தெரி-யாமல் இருப்பது, நிர்வாக அதிகாரியின் நியமனத்-துக்-குப்பின் ஏற்பட்ட மேம்பாடுகள் இவற்றை யெல்லாம் கருத்தில் கொண்டு, நிர்வாக அதி-காரியின் நியமனத்தில் இந்தக் கோர்ட் தலை-யிட்டால், பழைமை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க கோவிலைப் பாதுகாக்கும் கடமையிலி-ருந்து தவறி விடுவது போலாகும் என்று கூறப்-பட்டுள்ளது. மேல் முறை-யீடு செய்தால்கூட, என்ன நடக்கும் என்பதற்குமுன் கூட்டியே தில்லை நட-ராஜர் தன் காலைத் தூக்-கிக் காட்டியிருக்கிறாரே?

வீரமணிக்கும், கருணாநிதிக்கும், மற்ற நாத்திக / இந்து விரோதிகளுக்கும் கோவில்களைப் பற்றிய அக்கரையை கடந்த 70 ஆண்டுகளாக நாங்கள் பார்த்துக் கொண்டுதான் வருகிறோம்.

ஆகையால், இவர்களது கோவில் மீதான கரிசனத்தை உண்மையான நாத்திகனே நம்ப மாட்டான்.

அந்நிலையில், இவர்கள் ஏதோ கோவில் களைக் காப்பவர்கள் போல வேடம் போடுவதும், இப்படி கேள்வி-பதில் வெளியிடுவதும் கண்டு, உண்மையான பக்தர்கள் ஏமாற மாட்டார்கள்.

கடவுள் இல்லை என்பவர்களுக்கு கடவுளைப் பற்றிய அக்கரை தேவையில்லை.

தெய்வம் நின்று கொல்லும் என்பது போகப் போகத்தான் தெரிய வரும்.

தில்லை நடராஜனையும், ஸ்ரீரங்கநாதனையும் பீரங்கி வைத்துப் பிளப்பது என்னாளோ, அந்நாளே பொன்னாள்என்று அன்று எக்காளமிட்டவரின் சீடர் தான், இப்போது, ஆட்சிபீடத்தில் இருக்கிறார்.

வயதாகியும், நாகரிகம் தெரிவது இல்லை.

வாழ்க, தமிழகத்தின் கோவில் நிலை!

 

குறிச்சொற்கள்: , , , , , ,

10 பதில்கள் to “நாத்திக ஆட்சியாளர்களும், கோவில் நிர்வாகமும்”

 1. vedaprakash Says:

  நாத்திகம் பேசுபவர்கள், இத்தகைய வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது, அவர்களது, இணைதலங்களே, கீழ்கண்டவாறு எடுத்துக் காட்டுகின்றன:

  Reported Attack Site!

  This web site at http://www.modernrationalist.com has been reported as an attack site and has been blocked based on your security preferences.

  Attack sites try to install programs that steal private information, use your computer to attack others, or damage your system.

  Some attack sites intentionally distribute harmful software, but many are compromised without the knowledge or permission of their owners.
  ————————————————————————————-

  Reported Attack Site!

  This web site at http://www.unmaionline.com has been reported as an attack site and has been blocked based on your security preferences.

  Attack sites try to install programs that steal private information, use your computer to attack others, or damage your system.

  Some attack sites intentionally distribute harmful software, but many are compromised without the knowledge or permission of their owners.

 2. vedaprakash Says:

  கடவுளின் பெயரால் நடக்கும் சடங்குகளால் தமிழ் கலாசாரம் அழிந்தது: அன்பழகன்

  First Published : 18 Sep 2009 01:28:34 AM IST

  Last Updated : 18 Sep 2009 12:13:44 PM IST
  http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Tamilnadu&artid=126103&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=

  “ஈமான் தமிழ் இலக்கியப் பேரவை’யின் சார்பில் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் க. அன்பழகன். உடன் (
  சென்னை, செப். 17: “”கடவுளின் பெயரால் நடத்தப்படும் சடங்குகளால் தமிழ் கலாசாரம் அழிந்தது” என்று நிதி அமைச்சர் க. அன்பழகன் தெரிவித்தார்.

  “ஈமான் தமிழ் இலக்கியப் பேரவை’யின் சார்பில் சென்னை எழும்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அவர் பேசியது:

  உலகின் முதல் மொழி தமிழ். முதல் மனிதன் தமிழன். உலகில் கடைசியாக தோன்றிய மார்க்கம் இஸ்லாம். அதற்குப் பிறகு மதங்கள் தோன்றவில்லை. சீர்திருத்த இயக்கங்கள்தான் தோன்றின.

  “இஸ்லாம் எங்கள் மார்க்கம்; தமிழ் எங்கள் மொழி’ என்று இங்கே பேசியவர்கள் குறிப்பிட்டார்கள். இஸ்லாமியர்கள் தங்களுக்கென்று ஒரு மொழியை வைத்துள்ளனர். ஆனாலும் ஆரிய கலாசாரத்தால் தமிழ் தாழ்த்தப்பட்டதைப்போல இஸ்லாமியர்களால் தமிழ் தாழ்த்தப்படவில்லை.

  இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ நம்பிக்கையில்லாதவர்கள் அதாவது இந்த மண்ணில் தோன்றியதாகக் கூறப்படும் ஒரு மதத்தைப் பின்பற்றுபவர்கள் [இந்துக்கள் என்று பெயர் சொல்லாமல் குறிப்பிடப் பட்கிறது], கடவுளின் பெயரால் நடத்திய சடங்குகள் ஏராளம். அதனால் தான் தமிழர்கள் தங்களை மறந்தார்கள். திருவள்ளுவரை மறந்தார்கள். தமிழ் கலாசாரம் அழிந்தது.

  “ஒரே கடவுள்’ கொள்கை மூலம் மக்களை ஒருங்கிணைத்தவர் நபிகள் நாயகம். ஏழைகளை மறந்துவிட்டு யாரும் கடவுளைத்தேட முடியாது. அதனால் தான் “ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்று அண்ணா கூறினார் என்றார் அன்பழகன். குடிசை மாற்று வாரிய அமைச்சர் சுப. தங்கவேலன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எம். காதர்மொகிதீன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
  ———————————————————————————-

 3. vedaprakash Says:

  சிதம்பரம் நடராஜர் ஆலய வழக்கு: தீட்சிதர்கள் மேல்முறையீடு மனு தள்ளுபடி

  First Published : 16 Sep 2009 01:12:00 AM IST

  Last Updated :
  http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Edition-Chennai&artid=124855&SectionID=135&MainSectionID=135&SEO=&Title=

  சென்னை, செப். 15: சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் செயல் அதிகாரி நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

  சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் பொது தீட்சிதர்கள் முறைகேடுகள் செய்வதாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, கோயிலை நிர்வகிக்க செயல் அதிகாரியை நியமித்து இந்து அறநிலையத்துறை 05.08.1987-ல் உத்தரவிட்டது.

  இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சிதம்பரம் நடராஜர் ஆலயத்துக்கு செயல் அதிகாரியை நியமித்தது செல்லும் என்று உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டது.

  உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பொது தீட்சிதர்கள் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தன்னையும் இந்த வழக்கில் இணைத்துக்கொண்டார். நீதிபதி கே. ரவிராஜபாண்டியன், நீதிபதி டி. ராஜா ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் இவ் வழக்கு விசாரணைக்கு வந்தது.

  விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

  பொது தீட்சிதர்களோ அல்லது அவர்களது மூதாதையர்களோ சிதம்பரம் நடராஜர் ஆலயத்தைக் கட்டவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் அரசியல் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு கோர முடியாது.

  யார் கட்டியது? சிதம்பரம் நடராஜர் ஆலயம் சோழ, பாண்டிய மற்றும் விஜயநகர அரசர்களால் 10 முதல் 13-ம் நூற்றாண்டுக்குள் கட்டப்பட்டுள்ளது. சைவர்கள் மற்றும் வைணவர்கள் இணைந்து இந்த ஆலயத்தில் வழிபாடு செய்துள்ளனர். எனவே, இந்த கோயில் தங்கள் சமூகத்துக்கே உரியது என்று பொது தீட்சிதர்கள் சொந்தம் கொண்டாட முடியாது.

  நியமன உத்தரவு சரியானதே: நடராஜர் ஆலயத்துக்குச் சொந்தமான 400 ஏக்கர் விளைநிலங்கள், காணிக்கையாக வழங்கப்பட்ட தங்க நகைகள் மற்றும் பணத்துக்கு பொது தீட்சிதர்கள் பல ஆண்டுகளாக முறையான கணக்கு எதையும் வைத்திருக்கவில்லை. எனவே, ஆலயத்தை நிர்வகிக்கும் கடமையிலிருந்து பொது தீட்சிதர்கள் தவறிவிட்டனர் என்று இந்து அறநிலையத் துறை ஆணையர் முடிவு செய்துள்ளார். கோயிலுக்கு வழங்கப்பட்ட “கட்டளைகள்’ மற்றும் நிலங்களை அடையாளம் காணவும், வருவாயைப் பெருக்கவும் செயல் அதிகாரியை நியமித்து உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு சரியானதே.

  சிதம்பரம் நடராஜர் ஆலயச் சொத்துகளை முறையாக நிர்வகித்திருந்தால், திருப்பதி மற்றும் பழனிக்கு நிகராகச் செல்வத்தைப் பெற்ற ஆலயமாக மாறியிருக்கும். வரலாறு மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த நடராஜர் ஆலயத்தைப் புதுப்பிக்கவும், கும்பாபிஷேகம் நடத்தவும் ரூ. 50 கோடியிலான திட்டத்தை 13-வது நிதி கமிஷனிடம் செயல் அதிகாரி அளித்துள்ளார். நடராஜர் ஆலயத்தை முறையாக நிர்வகிக்க வேண்டும் என்ற இந்து அறநிலையத் துறையின் ஆர்வத்தை இது காட்டுகிறது.

  ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: செயல் அதிகாரிக்கான பணிகளும், அதிகாரங்களும் அரசாணையில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. செயல் அதிகாரி நியமனத்தால் பொது தீட்சிதர்கள் யாரும் ஆலயத்திலிருந்து வெளியேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கோயிலைச் சிறப்பாக நிர்வாகம் செய்ய பொது தீட்சிதர்களும், செயல் அதிகாரியும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் ஆலய நிர்வாகத்தில் முறைகேடுகள் நடைபெற்றதைத் தொடர்ந்தே செயல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். செயல் அதிகாரியும் கோயில் நிர்வாகத்தை மேம்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

  இந்த நிலையில் செயல் அதிகாரி நியமனத்தில் தலையிட்டால், அது பாரம்பரியமிக்க கோயிலைக் காக்கும் கடமையிலிருந்து நீதிமன்றம் தவறியதுபோல் ஆகும்.

  அவ்வாறு செய்தால் பழம்பெருமை வாய்ந்த கோயில் அழிவதோடு, பொது தீட்சிதர்களின் வருவாய் ஆதாரமும் பாதிக்கும் என்று கூறி மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

 4. vedaprakash Says:
  இந்து அறநிலையத்துறையின் நிர்வாகமும், செயல்பாடுகளும் http://www.hrce.tn.nic.in/ திருக்கோயில்களின் அன்றாட நிருவாகம், சொத்துக்களைப் பராமரித்தல் ஆகியவற்றைக் கண்காணிக்க 1927-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் “இந்து சமய அறநிலைய வாரியம்” அமைக்கப்பட்டு இந்து சமய அறநிறுவனங்களின் நிருவாகம் ஒருமுனைப்படுத்தப்பட்டது. நாடு விடுதலை அடைந்த பின்னர், இந்து சமய அறநிலைய வாரியம் கலைக்கப்பட்டு 1951-ஆம் ஆண்டின் 19-ஆவது சட்டத்தின்படி, “இந்து சமய அறக்கட்டளை சட்டம்” ஏற்படுத்தப்பட்டு இந்து சமய அறநிறுவனங்களின் அமைப்பு சீர்படுத்தப்பட்டது. அறங்காவலர்களின் செயல்பாட்டை மேற்பார்வையிட வட்டாரக் குழுக்களும் அமைக்கப்பட்டன. திருக்கோயில்களின் நிருவாகத்தில் முழுமையான பலனுள்ள நிருவாகக் கட்டுப்பாட்டினை இச்சட்டம் கொண்டுவர இயலாததால் குறிப்பிடத்தக்க மாறுதல்களுடன் 1959-ஆம் ஆண்டின் 22-வது சட்டமாக, தற்போதுள்ள “இந்து சமய மற்றும் அறக்கொடைகள்” சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் அமைந்த அரசு 1968-ஆம் ஆண்டின் 19-ஆவது சட்டத்தின்படி, வட்டாரக் குழுக்களை நீக்கிவிட்டு முழுப்பொறுப்புகளையும் ஆணையரிடமும் அவரது சார்நிலை அலுவலர்களிடமும் ஒப்படைத்தது. அடுத்தடுத்து பல சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டன. 1971-ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டம் 2-ன்படி திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகள் பரம்பரை முறையில் நியமனம் செய்யப்பட்டு வந்ததை இரத்து செய்து அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகள் நியமனங்கள் நெறிப்படுத்தப்பட்டன. 1991-ஆம் ஆண்டு திருத்தச் சட்டத்தின் மூலம் மாநில அளவில் திருக்கோயில் நிருவாக வாரியமும், மாவட்ட அளவில் மாவட்டக்குழுக்களும் அமைக்கப்பட்டு சட்டமுறை அதிகாரங்கள் அனைத்தும் அவைகளுக்கு வழங்கப்பட்டிருந்தன. இந்துசமய அறநிறுவனங்களின் நிருவாகத்தை சீர் செய்யும் பொருட்டு, 1991-ம் ஆண்டு திருத்தச் சட்டத்தை திருத்தி இந்து சமய அறநிறுவனங்களின் நிருவாகம் அரசு அலுவலர்களான ஆணையர் மற்றும் சார்நிலை அலுவலர்களின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் வகையில், 1996-ஆம் வருடத்திய 39-ஆவது திருத்தச்சட்டம் இயற்றப்பட்டு 09.12.1996 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு செயற்பாட்டில் உள்ளது. இத்துறையின் நிருவாகத்தின் கீழ் இந்து மற்றும் சமண சமய அறநிறுவனங்கள் 38,465 உள்ளன. 1959-ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்ட விதிகளின்படி, நியமிக்கப்பட்ட அறங்காவலர்கள், பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் அரசால் நியமிக்கப்பட்ட செயல் அலுவலர்கள் ஆகியோரால் இந்து சமய நிறுவனங்கள் நிருவகிக்கப்படுகின்றன. செயல் அலுவலர் பணியமர்த்தப்படாத ஆலயங்கள் அறங்காவலர்களின் முழுமையான நிருவாகத்திலிருந்து வருகின்றன. சமய நிறுவனங்கள்: இத்துறையின் நிருவாகத்தின் கீழுள்ள இந்து மற்றும் சமண அறநிறுவனங்கள் விவரம் பின்வருமாறு: சமய நிறுவனங்களின் பாகுபாடு: சமய நிறுவனங்கள் அவற்றின் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு பாகுபாடு செய்யப்பட்டுள்ளன: அறநிலையத்துறையின் நிருவாக அமைப்பு: இத்துறையின் நிருவாகத்தில் ஆணையர், அலுவலர்கள், சார்நிலை அலுவலர்கள், செயல் அலுவலர்கள் அயல்பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், காவலர்கள், துப்புரவாளர்கள் ஆகிய பணியிடங்கள் மொத்தம் 2,409 அனுமதிக்கப்பட்டு தற்போது 1,404 பேர் பணிபுரிந்து வருகின்றனர். அதன் விவரம் கீழ்க்கண்டவாறு உள்ளன: தலைமையிட நிருவாக அமைப்பு: இந்துசமய அறநிலையத்துறையின் நிருவாக தலைமைப் பொறுப்பில் இந்திய ஆட்சிப் பணி நிலையில் ஆணையர் செயல்படுகின்றார். ஆணையருக்கு உதவியாக துறையின் தலைமையிடத்தில் கீழ்க்கண்ட அலுவலர்கள் உள்ளனர். மேற்கண்ட அலுவலர்கள், துறையின் பொது நிருவாகம், பணியாளர் அமைப்பு, திருக்கோயில்களின் மேலாண்மை, திருப்பணி, கட்டுமானங்கள், நீதிமுறை சார்புடைய விவகாரங்கள், நில நிருவாகம், தணிக்கை, ஆகியவற்றில் ஆணையருக்கு உதவிடும் பொறுப்பு வகிக்கின்றனர். மண்டல / கோட்ட நிருவாக அமைப்பு: இத்துறை, மாநில அளவில் 11 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, அவை ஒவ்வொன்றும் ஓவ்வொரு இணை ஆணையரின் நிருவாகத்தின் கீழ் உள்ளது. மேலும், இத்துறை மாநில அளவில் 27 கோட்டங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றும் ஒரு உதவி ஆணையரின் நிருவாகத்தின் கீழ் இயங்கி வருகிறது. அதன் விவரம் பின்வருமாறு: திருவாரூர் சிலைகள் பாதுகாப்பு மையத்தின் பொறுப்பாளராக ஒரு உதவி ஆணையர் பணிபுரிகின்றார். பழனி, அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயிலில் இணை ஆணையர்/செயல் அலுவலரின் நேர்முக உதவியாளராக ஒரு உதவி ஆணையர் பணிபுரிகின்றார். இத்திருக்கோயிலில் துணை ஆணையர் ஒருவரும் பணிபுரிகின்றார். இராமேசுவரம், அருள்மிகு இராமநாத சுவாமி திருக்கோயிலில் இணை ஆணையர்/செயல் அலுவலரின் நேர்முக உதவியாளராக ஒரு உதவி ஆணையர் பணிபுரிகின்றார். இணை ஆணையர் மண்டலங்கள் ஒவ்வொன்றிலும் கீழ்க்கண்டவாறு நகைகள் மற்றும் விலையுர்ந்த பொருட்கள் சரிபார்ப்பு அலுவலகம் உள்ளன. செயல் அலுவலர்கள்: திருக்கோயில்களின் முக்கியத்துவம், வருமானம், சொத்துக்கள் அதன் செயல்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் செயல் அலுவலர்கள் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டு அவைகள் நிருவகிக்கப்பட்டு வருகின்றன. செயல் அலுவலர்கள் விவரம் பின்வருமாறு: பொறியாளர்கள்: திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள ஏதுவாக மதிப்பீடுகள் தயாரித்தல், மேற்பார்வையிடல் போன்ற பணிகளுக்காக (விழுப்புரம் நீங்கலாக) ஒவ்வொரு இணை ஆணையர் மண்டலத்திலும் (10 மண்டலங்கள்) ஒரு உதவி கோட்டப் பொறியாளர், ஒரு இளநிலை வரைதொழில் அலுவலர் ஆகியோர் பணிபுரிகின்றனர். (விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், திருவள்ளூர், திருவாரூர், நாமக்கல், கரூர், திண்டுக்கல் உதவி ஆணையர் அலுவலகங்கள் நீங்கலாக) ஒவ்வொரு உதவி ஆணையர் கோட்டத்திலும் (19 கோட்டங்கள்) இப்பணிகளுக்காக ஒரு உதவிப் பொறியாளர் பணிபுரிகின்றார். திருக்கோயில்கள் தணிக்கை: சமய நிறுவனங்களின் கணக்குகளை தணிக்கை செய்ய இரண்டு துணை தலைமை தணிக்கை அலுவலர்களும், 17 மண்டல தணிக்கை அலுவலர்களும், 28 உதவி தணிக்கை அலுவலர்களும் பணிபுரிகின்றனர். திருமடங்களை ஆய்வு செய்ய தலைமையிடத்தில் மண்டல தணிக்கை அலுவலர் ஒருவர் பணிபுரிகின்றார். எட்டு முதுநிலைத் திருக்கோயில்களில் அயல்பணியில் எட்டு முதுநிலை கணக்கு அலுவலர்கள் (மண்டல தணிக்கை அலுவலர் நிலையில்) பணியாற்றி வருகின்றனர் திருமடங்கள் நிருவாகம்: தமிழகத்தில் அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் தற்போது 56 திருமடங்களும், அவற்றுடன் இணைந்த 19 குறிப்பிட்ட கட்டளைகளும் உள்ளன. இவைகளின் நிருவாகம் முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய, ஒரு மண்டலத் தணிக்கை அலுவலர், இரு கண்காணிப்பாளர்கள், இரு ஆய்வாளர்கள், இரு தணிக்கை ஆய்வாளர்கள், இரு உதவியாளர்கள் அடங்கிய ஒரு ஆய்வுப் பிரிவு, ஆணையருக்கு உதவியாக தலைமையிடத்தில் இயங்கி வருகிறது. அறங்காவலர்கள் நியமனம்: திருக்கோயில்களின் நிருவாகத்தை இந்து சமயம் மற்றும் அறக்கொடைகள் சட்டத்தின் கீழ் நிருவகிக்க ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் அறங்காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். (i) அரசு அதிகாரம்: பட்டியலைச் சேர்ந்த சமய நிறுவனங்களில் ரூ.10,00,000/- மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருமானம் பெறும் இந்து சமய அறக்கொடைகள் சட்டப் பிரிவு 46 (iii) ன் கீழ் அறிவிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு அறங்காவலர்கள் அரசால் நேரடியாக நியமிக்கப்படுவர். (ii) ஆணையர் அதிகார வரம்பு: பட்டியலைச் சேர்ந்த, ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு குறையாமலும், ரூ.10,00,000/-க்கு மிகாமலும் உள்ள, சட்டப்பிரிவு 46(ii)-ன்கீழ் அறிவிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மூன்று அறங்காவலர்கள் ஆணையரால் நியமிக்கப்படுவர். தேவையெனில் பொதுநலன் கருதி மேலும் இரண்டு அறங்காவலர்கள் அரசால் நியமனம் செய்யப்படுவர். (iii) இணை ஆணையர் அதிகார வரம்பு: பட்டியலைச் சேர்ந்த, ஆண்டு வருமானம் ரூ.10,000/-க்கு குறையாமலும் ரூ.2,00,000/-க்கு மிகாமலும் உள்ள, சட்டப்பிரிவு 46(i)-ன்கீழ் அறிவிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மூன்று அறங்காவலர்கள் அந்தந்த மண்டல இணை ஆணையர்களால் நியமிக்கப்படுவர். தேவையெனில் பொதுநலன் கருதி மேலும் இரண்டு அறங்காவலர்கள் அரசால் நியமனம் செய்யப்படுவர். (iv) உதவி ஆணையர் அதிகார வரம்பு: பட்டியலைச் சேராத, சட்டப்பிரிவு 49(i)-ன்கீழ் உள்ள நிறுவனங்களான, ரூ.10,000/-க்குக் குறைவாக ஆண்டு வருவாய் பெறும் நிறுவனங்களுக்கு, அந்தந்தக் கோட்ட உதவி ஆணையர்களால் மூன்று அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர். தேவையெனில், பொதுநலன் கருதி மேலும் இரண்டு அறங்காவலர்கள் அரசால் நியமனம் செய்யப்படுவர். பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் நியமனம் குறித்த சில விவரங்கள்: அறங்காவலர் குழுவில், மூன்று அறங்காவலர்களுக்கு குறையாமலும், ஐந்து அறங்காவலர்களுக்கு மிகாமலும் நியமனம் செய்யப்பட வேண்டும். இக் குழுவில், ஒரு பெண் உறுப்பினர் மற்றும் ஒரு ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியைச் சேர்ந்த உறுப்பினர் கண்டிப்பாக இடம் பெற வேண்டும். அறங்காவலர் குழுவிற்கான பதவிக் காலம் ஓராண்டு மட்டும். அரசின் அதிகார வரம்பு: அரசால் நேரடியாக அறங்காவலர்கள் நியமிக்கப்படும் அறநிறுவனங்கள் தவிர, இதர அறநிலையங்கள் ஒவ்வொன்றுக்கும் 3 அறங்காவலர்கள் மட்டுமே குறிப்பிட்டபடி அந்தந்த அலுவலர்களால் நியமனம் செய்யப்படுவர். கூடுதலாக 2 அறங்காவலர்கள் நியமனம் தேவையெனில் அரசால் நேரடியாக நியமனம் செய்யப்படுவர். திருக்கோயில்களுக்கு பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் நியமனம் செய்யப்படும் பணி துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. பரம்பரை அறங்காவலர்கள் நிருவாகத்தில் உள்ள மற்றும் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக வழக்கு நிலுவை உள்ள 9,877 அறநிறுவனங்களுக்கு பரம்பரை முறைவழிசாரா அறங்காவலர்கள் நியமிக்க இயலாத நிலையுள்ளது. சமய நிறுவனங்களுக்குச் சொந்தமான நிலங்கள், கட்டடங்கள் மற்றும் மனைகள் இத்துறை சார்ந்த சமய நிறுவனங்களுக்கு கீழ்க்காணும் விவரப்படி 4,78,681.48 ஏக்கர் பரப்புடைய நன்செய், புன்செய் மற்றும் மானாவாரி நிலங்களும் 22,599 கட்டடங்களும் 33,627 மனைகளும் சொந்தமாக உள்ளன. நிலங்கள் விவரம்: திருக்கோயில் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்களில் மொத்தம் 1,23,729 குத்தகைதாரர்கள் சாகுபடி செய்கிறார்கள். திருக்கோயில்களுக்குச் சொந்தமான கட்டடங்களை 22,600 வாடகைதாரர்களும், மனைகளை 33,665 வாடகைதாரர்களும் அனுபவித்து வருகிறார்கள். 1. திருப்பணி ஆழ்வார்களாலும், நாயன்மார்களாலும் பாடி பரவப்பெற்ற புகழ்மிகு புனித திருத்தலங்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டிலேயே உள்ளன. இத்திருத்தலங்களில் அமைந்துள்ள, வரலாற்று முக்கியத்துவம், தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த திருக்கோயில்களையும், பிரசித்தி பெற்ற பிரார்த்தனை தலங்களையும், இன்னபிற திருக்கோயில்களோடு கிராமப்புறங்களில் அமைந்துள்ள சிறிய திருக்கோயில்களையும் மற்றும் ஆதிதிராவிடர்கள், பிற்படுத்தப்பட்டோர் வாழும் பகுதிகளிலுள்ள சிறிய திருக்கோயில்களையும் நன்முறையில் பேணிப் பாதுகாத்திட அவற்றிற்கு திருப்பணி செய்வது இன்றியமையாதது. இதனைக் கருத்தில் கொண்டு கீழ்க்கண்ட நிதியாதாரங்களின் அடிப்படையில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன: 1. பொதுமக்கள் அளிக்கும் நன்கொடை 2. அந்தந்தத் திருக்கோயில்களின் நிதி 3. நிதிவசதி மிகுந்த திருக்கோயில்களின் உபரி நிதியிலிருந்து வழங்கப்படும் நிதி. 4. அரசு மானியம் 5. ஆணையர் பொது நல நிதி 6. ஆலய மேம்பாட்டு நிதி 7. கிராமப்புறத் திருக்கோயில் திருப்பணி நிதி 8. திருக்கோயில் திருப்பணி மற்றும் அறப்பணி நிதி 9. தாமே முன்வந்து திருப்பணி செய்யும் செல்வந்தர்கள் உபயம் திருக்கோயில் திருப்பணிகளை அந்தந்தப் பகுதி மக்களோ, பக்தர்களோ, செல்வந்தர்களோ ஏற்று செய்திட முன்வரும் போது, அவர்களின் முயற்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் தேவைக்கேற்ப துறையின் மூலமாகவும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றது. i.பொதுமக்கள் அளிக்கும் நன்கொடை : சமயம் மற்றும் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டோர், தொழிலதிபர்கள், செல்வந்தர்கள், தனியார் நிறுவனங்கள், செல்வந்தர்கள் மற்றும் பொதுமக்கள் மனமுவந்து அளிக்கும் நன்கொடை தொகையைக் கொண்டு பெரும்பாலான திருக்கோயில்களின் திருப்பணிகள் நடைபெறுகின்றது. ii.அந்தந்தத் திருக்கோயில்களின் நிதி: நிதிவசதியுள்ள திருக்கோயில்களில் அந்தந்தத் திருக்கோயில்களின் நிதியிலிருந்து முழுமையாகவோ, பகுதியாகவோ திருக்கோயில்களின் திருப்பணி செய்வது வழக்கத்தில் உள்ளது. iii.நிதிவசதி மிகுந்த திருக்கோயில்களின் உபரி நிதியிலிருந்து வழங்கப்படும் நிதி: நிதிவசதியற்ற திருக்கோயில்களின் திருப்பணிகளை மேற்கொண்டிட இந்து சமயம் மற்றும் அறக்கொடைகள் சட்டப்பிரிவு 36-ன் கீழ் நிதிவசதிமிக்க திருக்கோயில்களின் உபரி நிதியிலிருந்து நிதிமாற்றம் மூலம் நிதியுதவி வழங்கி திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. iv.அரசு மான்யம்: ஒவ்வொரு ஆண்டும் திருக்கோயில்களின் திருப்பணிக்காக அரசு நிதியிலிருந்து மானியமாக ரூ.75 இலட்சம் வழங்கப்பட்டு வந்தது. இத்தொகை, 2007-2008ஆம் நிதியாண்டிலிருந்து ரூ.3 கோடியாக உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. v.ஆணையர் பொது நல நிதி: சமய நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களால் தானாக முன்வந்து அளிக்கும் நன்கொடைகளைக் கொண்டு ஆணையரின் பதவிப் பெயரில் பொது நலநிதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிதி, திருக்கோயில்களின் திருப்பணிகளுக்கும், அவற்றைப் பேணிக் காத்தலுக்கும் வழங்கப்படுகின்றது. vi.ஆலய மேம்பாட்டு நிதி: நிதிவசதி மிகுந்த திருக்கோயில்களின் உபரி நிதியிலிருந்து ரூ.8 கோடி நிதிமாற்றம் மூலம் பெற்று மைய நிதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இம்மைய நிதியிலிருந்து பெறப்படும் வட்டித் தொகையினைக் கொண்டு அரசின் முன் அனுமதியுடன் பழமை வாய்ந்ததும், சரித்திர முக்கியத்துவம் பெற்றதும், பாடல் பெற்ற மற்றும் மங்களாசாசனம் செய்யப்பெற்றதுமான திருக்கோயில்களின் திருப்பணிகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. vii.கிராமப்புறத் திருக்கோயில் திருப்பணி நிதி: கிராமப்புறத் திருக்கோயில்களின் திருப்பணிக்கு நிதியுதவி வழங்கிட பழனி, அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயிலின் உபரி நிதியிலிருந்து ரூ.2 கோடி தனியே முதலீடு செய்யப்பட்டுள்ளது. இம்முதலீட்டு நிதியிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையைக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் கிராமப்புறங்களிலும், இத்துறையின் கட்டுப்பாட்டிலும் உள்ளதுமான 100 சிறிய திருக்கோயில்களின் திருப்பணிக்கு திருக்கோயில் ஒன்றுக்கு ரூ.25,000/- வீதம் வழங்கப்படுகிறது. viii.திருக்கோயில் திருப்பணி மற்றும் அறப்பணி நிதி: திருக்கோயில்களின் தொன்மை வாய்ந்த பழம்பெரும் கலை, பண்பாட்டுச் சிறப்பு மிக்க தன்மை ஆகியவற்றைப் பேணிக் காப்பதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டது. தொண்டுள்ளம் கொண்ட செல்வந்தர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து இந்நிதிக்கு நன்கொடைகள் பெறப்பட்டன. 2008-2009-ம் நிதியாண்டில், 11 திருக்கோயில்களுக்கு ரூ53.72 இலட்சங்கள், இந்த நிதியின் வட்டியிலிருந்து திருப்பணி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ix.தாமே முன்வந்து திருப்பணி செய்யும் செல்வந்தர்கள் உபயப் பணி திருக்கோயில்களின் திருப்பணியை செல்வந்தர்கள் தாமே முன்வந்து உபயப் பணியாக ஏற்று இத்துறையின் கண்காணிப்புக்குட்பட்டு செய்வது வழக்கத்தில் இருந்து வருகிறது. x.ஆதிதிராவிடர் வசிக்கும் பகுதியில் உள்ள திருக்கோயில்களின் திருப்பணி : ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள இத்துறையின் ஆளுகையின் கீழ் இல்லாத திருக்கோயில்கள் புனரமைப்பு செய்து தர இத்திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், திருக்கோயில்களுக்கு, தலா ரூ.25,000/- வீதம் நிதியுதவி செய்யப்படுகிறது. 2. குடமுழுக்கு செய்தல் ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையேனும் குடமுழுக்கு நடைபெற வேண்டும், என்ற அடிப்படையில் தமிழகத்தில் ஆண்டுதோறும் ஆயிரத்திற்கு குறையாத திருக்கோயில்களில் திருப்பணி செய்து குடமுழுக்குகள் செய்யப்படுகின்றன. இந்த அரசு பொறுப்பேற்றது முதல் 31.5.2009 முடிய 3345 திருக்கோயில்களில் திருப்பணி செய்யப்பட்டு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளது. 3.தங்கரதத் திருப்பணி பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகளில் ஒன்றாக, உற்சவ மூர்த்தியை தங்க ரதத்தில் எழுந்தருளச் செய்து, தங்க ரதம் இழுப்பது வழக்கத்தில் இருந்து வருகிறது. தற்போது கீழ்க்கண்ட 36 திருக்கோயில்களில் தங்க ரதம் பயன்பாட்டில் உள்ளது. 1. அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில், பழனி. 2. கந்தசுவாமி திருக்கோயில், பூங்காநகர். 3. அருள்மிகு வடபழனியாண்டவர் திருக்கோயில், வடபழனி. 4. அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், .திருத்தணி. 5. அருள்மிகு கருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு, 6. அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், சுவாமிமலை. 7. அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயில், வைதீஸ்வரன் கோயில் 8. அருள்மிகு விநாயகர் திருக்கோயில், ஈச்சநாரி, கோவை. 9. அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம், திருச்சி. 10. அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மதுரை. 11. அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில், சங்கரன் கோயில். 12. அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்துர். 13. அருள்மிகு வானமாமலைப் பெருமாள் திருக்கோயில், நாங்குநேரி. 14. அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில், காஞ்சிபுரம். 15. அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், இரத்தினகிரி. 16. அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், சிவன்மலை. 17. அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர். 18. அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில், மாங்காடு. 19. அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேஸ்வரம். 20. அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில், சிறுவாச்சூர். 21. அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், மருதமலை. 22. அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில், பண்ணாரி. 23. அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில், திருவண்ணாமலை. 24. அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர். 25. அருள்மிகு வேலாயுதசுவாமி திருக்கோயில், திண்டல்மலை, ஈரோடு. 26. அருள்மிகு அனந்தபத்மநாபசுவாமி திருக்கோயில், அடையாறு. 27. அருள்மிகு கருநெல்லிநாதசுவாமி திருக்கோயில், திருத்தங்கல். 28. அருள்மிகு முண்டகக்கண்ணியம்மன் திருக்கோயில், மயிலாப்பூர். 29. அருள்மிகு வேங்கடாஜலபதி திருக்கோயில், ஒப்பிலியப்பன்கோயில். 30. அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம். 31. அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், கரூர். 32. அருள்மிகு தண்டு மாரியம்மன் திருக்கோயில், கோவை. 33. அருள்மிகு சந்திரசூடேஸ்வரர் திருக்கோயில், ஓசூர் 34. அருள்மிகு ஜெம்புகேசுவரர் மற்றும் அகிலாண்டேசுவரியம்மன் திருக்கோயில், திருவானைக்காவல். 35. அருள்மிகு ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், நாமக்கல். 36. அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பச்சைமலை, கோபிச்செட்டி பாளையம். 37. அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோயில், அரியாக்குறிச்சி தங்கரதத் திருப்பணி நடைபெற்று வரும் திருக்கோயில்கள் விவரம் 1. அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில், திண்டுக்கல். 2. அருள்மிகு .சுகவனேஸ்வரர் திருக்கோயில், சேலம். 3. அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில், ஆனைமலை, கோவை மாவட்டம். 4. அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்கோடு. 5. அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில், தேக்கம்பட்டி 6. அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில், உறையூர், திருச்சிராப்பள்ளி 7. அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில், மேல்மலையனுர், விழுப்புரம் மாவட்டம். 8. அருள்மிகு கொண்டத்துக் காளியம்மன் திருக்கோயில், பாரியூர், ஈரோடு மாவட்டம். 9. அருள்மிகு இலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில், சோளிங்கர், வேலூர் மாவட்டம். 10. அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயில், கன்னியாகுமரி. 11. அருள்மிகு முருகன் திருக்கோயில், சோலைமலை, (அழகர்கோயில்) மதுரை. 12. அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதியம்மாள் திருக்கோயில், திருநெல்வேலி. 13. அருள்மிகு கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோயில், நாட்டரசன் கோட்டை, சிவகங்கை மாவட்டம். 14. அருள்மிகு திருமலைக் குமாரசுவாமி திருக்கோயில், பண்பொழி, திருநெல்வேலி மாவட்டம். தங்க விமானம் உள்ள திருக்கோயில்கள் விவரம் 1. அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம். 2. அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம். 3. அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில், மலைக்கோட்டை 4. அருள்மிகு மீனாட்சிசுந்தரேஸ்வரர் திருக்கோயில், மதுரை, 5. அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர்கோயில். 6. அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழநி. 7. அருள்மிகு தேவிகருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு வெள்ளி ரதம் உள்ள திருக்கோயில்கள் விவரம் 1. அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழநி. 2. அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்துர். 3. அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மதுரை. 4. அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருத்தணி. 5. அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேஸ்வரம். 6. அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை 7. அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோயில், சுவாமிமலை. 8. அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோயில், திருநெல்வேலி. 9. அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில், திருப்பாதிரிபுலியூர், கடலுர் மாவட்டம். 10. அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில், வைத்தீஸ்வரன் கோயில் 11. அருள்மிகு சட்டநாதசுவாமி திருக்கோயில், சீர்காழி. 12. அருள்மிகு மயூரநாதசுவாமி திருக்கோயில், மயிலாடுதுறை, விருத்தாச்சலம் வட்டம். 13. அருள்மிகு மாரியம்மன், அங்காளம்மன் திருக்கோயில், பொள்ளாச்சி 14. அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில், உடுமலைப்பேட்டை 15. அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு 16. அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோயில், மணவாளநல்லுார் 17. அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம். 18. அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில், காஞ்சிபுரம் 19. அருள்மிகு முத்துகுமாரசுவாமி திருக்கோயில், பார்க்டவுண், சென்னை 20. அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில், அரியக்குடி 21. அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், குன்றக்குடி 22. அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், கீழச்செவல்பட்டி 23. அருள்மிகு கண்ணுடையநாயகியம்மன் திருக்கோயில், நாட்டரசன்கோட்டை 24. அருள்மிகு கொப்புடையநாயகியம்மன் திருக்கோயில், காரைக்குடி 25. அருள்மிகு நகரசிவன் என்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், தேவகோட்டை 26. அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், கொன்னையூர், திருமயம் வட்டம். 27. அருள்மிகு ஆருத்ர கபாலீஸ்வரர் திருக்கோயில், ஈரோடு நகர் 28. அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில், பவானி 29. அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில், பவானி 30. அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், ஆயக்குடி, திருநெல்வேலி மாவட்டம் 31. அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில், தொட்டியம் 32. அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், நெய்வேலி, பண்ருட்டி 33. அருள்மிகு வெயிலுக்கு உகந்த விநாயகர் திருக்கோயில், உப்பூர், இராமநாதபுரம் 34. அருள்மிகு செளந்திரராஜப்பெருமாள் திருக்கோயில், திண்டுக்கல் 35. அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், குமரக்கோட்டம், காஞ்சிபுரம். வெள்ளி ரதத் திருப்பணி நடைபெறும் திருக்கோயில்கள் விவரம் 1. அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் மற்றும் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், செட்டிக்குளம், பெரம்பலுர் மாவட்டம். 2. அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், எட்டுக்குடி, நாகை. 3. அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், மயிலம், திண்டிவனம். 4.திருத்தேர் திருப்பணி நின்றுபோன தேர்த்திருவிழாக்களை நடத்தவும், திருத்தேர்களைப் பாதுகாக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 668 திருக்கோயில்களுக்குச் சொந்தமான 857 மரத்தேர்களில் சுமார் 309 திருத்தேர்கள் செப்பனிட வேண்டியுள்ளது. இவற்றில் 241 தேர்களை ரூ.11.68 கோடி மதிப்பீட்டில் செப்பனிட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 68 தேர்களையும் உரிய நிதி ஆதாரங்களைக் கொண்டு செப்பனிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 5.திருக்குளங்கள் திருப்பணி இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழுள்ள 1576 திருக்கோயில்களுக்குச் சொந்தமாக 2324 திருக்குளங்கள் உள்ளன. இத்திருக்குளங்களைச் சீரமைத்து திருப்பணி செய்து தெப்பத்திருவிழா நடத்துவதற்கு ஏதுவாகவும், மழை நீரை சேகரித்து வறட்சியை எதிர்கொள்ளவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 1095 திருக்குளங்கள் சீரமைக்கப்பட்டு நல்ல நிலையில் உள்ளன. எஞ்சியுள்ள 1229 திருக்குளங்களை எதிர்வரும் ஆண்டுகளில் மாவட்ட நிர்வாகம், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் மூலம் செப்பனிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 6.சுற்றுலாத்துறை நிதியுதவி மற்றும் திருக்கோயில் நிதி மூலம் திருக்கோயில்களுக்கு அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் திருக்கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான கழிப்பறை, குளியலறை, தங்குமிடம், குடிநீர் வசதி, அணுகுசாலை, உயர்மின் விளக்குகள், பொருட்கள் பாதுகாப்பு அறை, புல்வெளி அமைத்தல், வாகனம் நிறுத்துமிடம் போன்ற அடிப்படை வசதிகள் செய்ய கொடுக்க வேண்டியது அவசியமாததலால் சுற்றுலாத்துறையின் நிதியுதவி மற்றும் திருக்கோயில் நிதி ஆகியவற்றின் மூலம் 50 திருக்கோயில்களில் மத்திய மற்றும் மாநில சுற்றுலாத் துறை நிதியாக ரூ.17.11 கோடி மாவட்ட ஆட்சியர் மூலம் வழங்கப்பட்டுள்ளது. 7. வரலாற்று சிறப்புமிக்க திருக்கோயில்கள் அவற்றின் பழமை மாறாமல் புதுப்பித்தல். பன்னிரெண்டாவது நிதி ஆணைய நல்கையின் கீழ் வரலாற்று சிறப்பு மிக்க, பழமை வாய்ந்த திருக்கோயில்களை அவற்றின் பழமை மாறாமல் புதுப்பிக்கும் திட்டத்தின் கீழ் 48 திருக்கோயில்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றினை புதுப்பித்திட மத்திய அரசின் பன்னிரெண்டாவது நிதி ஆணையத்திடமிருந்து ரூ.9.87 கோடி நிதியுதவி ஒதுக்கீடு பெறப்பட்டு, திருக்கோயில்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. 8.நலிவுற்ற பழம்பெரும் திருக்கோயில்களின் கால பூஜைகளை புதுப்பித்தல் நலியுற்ற, வரலாற்றுச் சிறப்புமிக்கதும், பாடல் பெற்றதுமான பழம்பெரும் திருக்கோயில்கள் சிலவற்றில் காலபூஜைகள் செய்வதில் ஏற்பட்ட தொய்வினைக் கருத்தில் கொண்டு, நிதிவசதி மிக்க திருக்கோயில்களின் உபரி நிதியிலிருந்து முழு அளவிலான காலபூஜைகள் செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் பயனாக இத்திட்டத்தின்கீழ் 50 நலிவுற்ற திருக்கோயில்களுக்கு நிதியுதவி செய்யப்பட்டு பயனடைந்துள்ளன. 9.திருக்கோயில்களில் அடிப்படை வசதிகள் i.குடிநீர் வசதி திருக்கோயில்களுக்கு வருகைதரும் பக்தர்கள் அனைவருக்கும் தூய்மையான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ii.கழிப்பறை வசதி திருக்கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு, ஆண்கள், பெண்களுக்கென தனித்தனியாக நவீன கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கழிப்பறை வசதிகள் நிதி வசதி உள்ள திருக்கோயில்களில் இலவசமாக்கப்பட்டுள்ளது. . iii.குடில்கள், அறைகள், பொருள் பாதுகாப்பு அறை வசதிகள் பெருவாரியான பக்தர்கள் வருகைபுரியும் திருக்கோயில்களில் தங்குவதற்குத் தேவையான குடில்கள், அறைகள் மற்றும் பொருள்களைப் பாதுகாத்திட தனி அறைகள் ஆகிய வசதிகள் செய்துதர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் 2006-2007 மற்றும் 2007-2008ம் ஆண்டு மான்யக் கோரிக்கை விவாதத்தின்போது, பழனி, சமயபுரம், திருச்செந்தூர், திருத்தணி, மதுரை, திருவண்ணாமலை போன்ற இடங்களில் உள்ள பெரிய திருக்கோயில்களில் பக்தர்களுக்காக தங்கும் வசதி, அன்னதானக் கூடம், முடி காணிக்கை செலுத்தும் இட வசதி போன்ற பல்வேறு சேவார்த்திகளுக்கான நலத்திட்டப் பணிகளை செய்திட அறிவிப்பு வெளியிடப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன. 10.நிதி வசதி இல்லாத திருக்கோயில்களுக்கு பரிவட்டங்கள வழங்குதல் நிதிவசதியற்ற பல சிறிய திருக்கோயில்களில் உள்ள திருவுருவங்களுக்கு போதுமான பரிவட்டங்கள் இல்லாத நிலை உள்ளது. இந்நிலையினைக் களையும் பொருட்டு, அதிக எண்ணிக்கையில் பரிவட்டங்கள் காணிக்கையாக வரப்பெற்று, உபரியாக உள்ள திருக்கோயில்களிலிருந்து பரிவட்டங்களை நிதி வசதியற்ற திருக்கோயில்களுக்கு பண்டிகைக் காலங்களிலும், விழாக் காலங்களிலும், இதர தேவையான காலங்களிலும் வழங்கப்பட்டு வருகின்றன. 11.உலோகத் திருமேனிகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் பாதுகாப்பு திருக்கோயில்களில் உள்ள உலோகத் திருமேனிகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களைப் பாதுகாத்திட கள்வர் எச்சரிக்கை மணி, கோள் சொல்லிக் கடிகாரம், தொட்டிப் பூட்டுகள் மற்றும் இரும்புக் கதவுகள் நிறுவுதல், இரவுக் காவலர்கள் நியமனம், திருக்கோயில்கள் பாதுகாப்புப்படை ந
 5. vedaprakash Says:
  11.உலோகத் திருமேனிகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் பாதுகாப்பு திருக்கோயில்களில் உள்ள உலோகத் திருமேனிகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களைப் பாதுகாத்திட கள்வர் எச்சரிக்கை மணி, கோள் சொல்லிக் கடிகாரம், தொட்டிப் பூட்டுகள் மற்றும் இரும்புக் கதவுகள் நிறுவுதல், இரவுக் காவலர்கள் நியமனம், திருக்கோயில்கள் பாதுகாப்புப்படை நியமனம், சி.சி.டி.வி நிறுவுதல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விலை மதிக்க இயலாத உலோகத் திருமேனிகளைப் பாதுகாக்க, கீழ்க்கண்ட இடங்களில் உலோகத் திருமேனிகள் பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு வசதிகள் குறைவாக உள்ள திருக்கோயில்களில் உள்ள உலோகத் திருமேனிகளை இப்பாதுகாப்பு மையங்களில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. திருவிழாக் காலங்களில் அவற்றை எடுத்துச் சென்று விழா முடிந்ததும், மீண்டும் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைப்பு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு மையத்தில் உள்ள உலோகத் திருமேனிகளுக்கு நாள்தோறும் பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. i.உலோக திருமேனி பாதுகாப்பு மையங்கள் விவரம் 1. திருவாரூர் சிலைகள் பாதுகாப்பு மையம் (அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில் வளாகம்). 2. அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், திருவானைக்காவல், திருச்சிராப்பள்ளி. 3. அருள்மிகு காந்திமதி உடனுறை நெல்லையப்பர் திருக்கோயில், திருநெல்வேலி. 4. அருள்மிகு சுகவனேசுவரர் திருக்கோயில், சேலம். 5. அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், காந்திநகர், வேலுர். 6. அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை. 7. அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம். 8. அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில், திருப்பாதிரிபுலியூர், கடலுர் 9. அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம். 10. அருள்மிகு பட்டீஸ்வர சுவாமி திருக்கோயில், பேரூர், கோயமுத்துரர். 11. அருள்மிகு பிரகதாம்பாள் திருக்கோயில், திருகோகர்ணம், புதுக்கோட்டை 12. அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில், செல்லுர், மதுரை. 13. அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில், சிவகங்கை. 14. அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில், திருவாரூர் (கூடுதல் மையம்) 15. அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில், திருநெல்வேலி (கூடுதல் மையம்). . ii. 2008-09 பகுதி II திட்டத்தின் கீழ் கட்டப்படஉள்ள உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையங்கள் :: 1. அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில், திருவொற்றியூர். 2. அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருத்தணி 3. விருதுநகர் 4. விழுப்புரம் 5. தருமபுரி 12. கருணை இல்லம் சமுதாயத்தில் ஆதரவற்ற சிறுவர் சிறுமியர்களுக்கென இத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் 3.6.1975 முதல் கருணை இல்லங்கள் துவக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள 31 திருக்கோயில்களில் 34 கருணை இல்லங்கள் இயங்கி வருகின்றன. இந்த கருணை இல்லங்களில் 554 சிறுவர்களும், 289 சிறுமியர்களும் ஆக மொத்தம் 843 சிறுவர், சிறுமியர்கள் உள்ளனர். கருணை இல்லக் குழந்தைகளுக்கு ஏற்படும் மொத்த செலவில் ஒரு குழந்தைக்கு மாதம் ஒன்றுக்கு உணவு செலவாக ரூ.200/-ம், நிர்வாக செலவாக ரூ.267/-ம் ஆக மொத்தம் ரூ.467/- என்ற அடிப்படையில் அரசு நிதியுதவி அளித்து வருகிறது. இந்த கருணை இல்லங்கள் அனைத்திற்கும் வண்ணத்தொலைக்காட்சி பெட்டிகளை அரசு இலவசமாக வழங்கி உள்ளது. 2008-2009ம் ஆண்டு சட்டப்பேரவையில் புதியதாக 10 கருணை இல்லங்கள் தொடங்க அறிவிப்பு வெளியிடப்பட்டு கீழ்க்கண்ட இடங்களில் புதியதாக கருணை இல்லங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 1. அருள்மிகு வடபழநியாண்டவர் திருக்கோயில், வடபழநி 2. அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், மேல்மலையனூர், செஞ்சி. 3. அருள்மிகு அரண்மனைதேவஸ்தானத்துடன் இணைந்த திருக்கோயில் தஞ்சாவூர். 4. அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம் 5. புதுக்கோட்டை சமஸ்தானத்துடன் சேர்ந்த திருக்கோயில்கள், புதுக்கோட்டை 6. அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில், சிறுவாச்சூர் 7. அருள்மிகு நாச்சியார் திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர். 8. அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில், திருச்செங்கோடு, 9. அருள்மிகு குற்றாலநாத சுவாமி திருக்கோயில், குற்றாலம் 10. அருள்மிகு நாகராஜ சுவாமி திருக்கோயில், நாகர்கோயில் 13.கல்வி நிறுவனங்களும் பிற நிறுவனங்களும் நன்னெறிகளைக் கடைபிடிக்கத் தேவையான கட்டுப்பாட்டினையும், கலாச்சாரம் மற்றும் சமயக் கோட்பாடுகளையும், கலை மற்றும் பண்பாட்டினையும் இளமையிலிருந்தே பயிற்றுவிக்கும் சமூக நோக்கோடு, திருக்கோயில்கள் சமயம், கலை, பண்பாடு மற்றும் பொதுக் கல்வி தொடர்பான பள்ளிகள், கல்லூரிகள், பாடசாலைகள் மற்றும் சமூக நல நிறுவனங்கள் ஆகியவற்றை நிறுவி பேணி வருகின்றன. அவற்றின் விவரம் பின்வருமாறு: i.கல்வி நிறுவனங்கள் இக்கல்வி நிறுவனங்களின் மேம்பாட்டுக்காக இந்த ஆண்டு ரூ.5 கோடி சிறப்பு நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ii.சமூக நல நிறுவனங்கள் 17.தமிழில் வழிபாடு அனைத்துத் திருக்கோயில்களிலும் “தமிழில் அர்ச்சனை ” செய்யப்படும் என்ற அறிவிப்புப் பலகை திருக்கோயில் வளாகத்தில் பார்வையில் எளிதில்படும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. தமிழில் வழிபாடு செய்வதை ஊக்குவிக்க தமிழில் கீழ்க்கண்ட “போற்றி’ (அர்ச்சனை) நூல்கள் வெளியிடப்பட்டு, திருக்கோயில்களுக்கும் அங்கு பணிபுரியும் அர்ச்சகர்களுக்கும் இவை வழங்கப்பட்டுள்ளன. 1. அருள்மிகு விநாயகர் போற்றி 108 போற்றிகள் 2. அருள்மிகு முருகவேள் போற்றி 108 போற்றிகள் 3. அருள்மிகு சிவன் போற்றி 108 போற்றிகள் 4. அருள்மிகு திருமால் போற்றி 108 போற்றிகள் 5. அருள்மிகு உமையம்மை போற்றி 108 போற்றிகள் 6. அருள்மிகு நடராஜர் போற்றி 108 போற்றிகள் 7. அருள்மிகு தென்முகக் கடவுள் போற்றி 108 போற்றிகள் 8. அருள்மிகு கோதண்டராமர் போற்றி 108 போற்றிகள் 9. அருள்மிகு தாயார் போற்றி 108 போற்றிகள் 10. அருள்மிகு துர்க்கையம்மன் போற்றி 108 போற்றிகள் 11. அருள்மிகு காளியம்மன் போற்றி 108 போற்றிகள் 12. அருள்மிகு மாரியம்மன் போற்றி 108 போற்றிகள் 13. அருள்மிகு அனுமன் போற்றி 108 போற்றிகள் 14. அருள்மிகு நவகோள்கள் போற்றி 108 போற்றிகள் 15. அருள்மிகு சிவன் போற்றி 1008 போற்றிகள். 15. அருளாளர்கள் விழா. . i.சேக்கிழார் விழா தெய்வச் சேக்கிழார் விழா அன்னார் பிறந்த இடமான சென்னை குன்றத்தூரில் அரசு விழாவாக அறநிலையத்துறை சார்பில் ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இவ்விழா நடைபெற ஏதுவாக திருக்கோயில் உபரி நிதியிலிருந்து ரூபாய் ஐந்து இலட்சம் வழங்கப்பட்டு, வைப்பு நிதி ஏற்படுத்தப்பட்டு இவ்வைப்பு நிதியிலிருந்து கிடைக்கப்பெறும் வட்டித் தொகையைக் கொண்டு குன்றத்தூரில் சேக்கிழார் திருநட்சத்திரத்தன்று விழா சிறப்புற நடத்தப்பட்டு வருகிறது. குன்றத்தூரில் நடத்துவது போல சென்னை, மயிலாப்பூர், அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலிலும் சேக்கிழார் விழா ஆண்டுதோறும் நடத்த அரசு ஆணையிடப்பட்டு இவ்விழா நடைபெற்று வருகிறது. . ii.திருஞானசம்பந்தர் இசை விழா சமயக் குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தரைப் போற்றும் வகையில், திருஞான சம்பந்தர் இசை விழா இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இவ்விழாவிற்கான செலவுத் தொகை ஆணையர் பொது நல நிதியிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. iiiஒளவை விழா நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், துளசியாப்பட்டினம் கிராமத்தில் அருள்மிகு விசுவநாதசுவாமி திருக்கோயில் வளாகத்தில் தமிழ் மூதாட்டி ஒளவையாருக்கு திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் சதய நட்சத்திரத்தன்று ஒளவை விழா அரசு விழாவாக நடைபெற்றுவருகிறது. iv.தாயுமானவர் விழா பக்தி நெறியில் தத்துவங்களுக்கு முதலிடம் தந்து பாடிய தாயுமான அடிகள், மலைக்கோட்டை, அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயிலில் உள்ள தட்சிணா மூர்த்தியை வணங்கி திரும்பும்போது, திருமூலர் மரபில் வந்த மெளன குருவைக் கண்டு அவரால் ஈர்க்கப்பெற்றார். நல்ல தமிழ் ஞானப் பாடல்களைத் தமிழ் உலகிற்கு அளித்த தாயுமான அடிகளுக்கு, திருச்சிராப்பள்ளி, மலைக்கோட்டை, அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் விழா நடைபெற்று வருகிறது. v.திருவள்ளுவர் விழா திருவள்ளுவர் அவதரித்த நாளான தைத்திங்கள் இரண்டாம் நாளன்று (ஜனவரி 15) ஆண்டுதோறும் சென்னை, மயிலாப்பூரில் அமைந்துள்ள அருள்மிகு திருவள்ளுவர் திருக்கோயிலில் “திருவள்ளுவர் விழா�� கொண்டாடப்பட்டு வருகிறது. திருக்குறள் தொடர்பான சொற்பொழிவுகள் மற்றும் கருத்தரங்குகள் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் வகையில் இவ்விழா சிறப்பாக நடைபெறுகிறது. vi.அருணகிரிநாதர் விழா திருவண்ணாமலை மாவட்டம் அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் கேட்டை நட்சத்திரத்தன்று அருளாளர் அருணகிரிநாதருக்கு முத்திப்பேறுவிழா திருக்கோயில் சார்பில் சிறப்பாக நடத்தப்படுகிறது. இவ்விழா கடந்த 53 ஆண்டுகளாக ஆகஸ்டு திங்கள் 14,15,16 ஆகிய தேதிகளில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. vii.கோட்செங்கட்சோழ நாயனார் விழா. திருச்சி மாவட்டம், திருவானைக்காவல், அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் 63 நாயன்மார்களில் ஒருவரான அருள்திரு கோட்செங்கட்சோழ நாயனார் விழா ஆண்டுதோறும் அவர் அவதரித்த திருநாளான மாசி மாதத்தில் சதய நட்சத்திரத்தன்று கோட்செங்கட்சோழ நாயனார் விழாவாக சிறப்பாக நடைபெற்றுவருகிறது. 16. தலவரலாறு மற்றும் தலபுராணம் திருக்கோயில்களின் வரலாறு, சிறப்புகள், கட்டடக் கலை, கல்வெட்டுச் செய்திகள், புராணசிறப்புகள், வழிபாட்டு சிறப்புகள் ஆகியவற்றை மக்கள் அறியும் வண்ணம் திருக்கோயில்களில் தலவரலாறு மற்றும் தலபுராணங்கள் வெளியிடப்படுகின்றன. வரலாற்றுச் சிறப்புகள் மற்றும் புராண சிறப்புகள் இல்லாத திருக்கோயில்களுக்கு அதன் வழிபாட்டுச் சிறப்பினை அறிய ஏதுவாக சிற்றட்டைகள் அச்சிட்டு வெளியிடப்படுகின்றன. 17. ஆகம மற்றும் இதர நூல்களைத் தமிழில் வெளியிடுதல் 1. சமஸ்கிருத மொழியில் உள்ள ஆகம சாத்திர நூல்களை அனைவரும் எளிதில் அறிய ஏதுவாக தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டு வருகிறது. அதன் முதற்கட்டமாக உத்ரகாமிக ஆகம நூலினைத் தமிழில் மொழி பெயர்ப்பு செய்து வெளியிடப்பட்டது. தற்போது இந்நூல் மூன்றாம் பதிப்பாக மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. 2. ஆலய நிர்மாண பிம்பலட்சண சிற்பநூல் என்ற நூல் தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. 3. குமார தந்திரம் என்ற நூல் தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. 4. இதுபோல், இந்து மத இணைப்பு விளக்கம், சைவமும் வைணவமும் போன்ற அரிய தமிழ் நூல்களை அனைவரும் படித்து உணர ஏதுவாக மறு பதிப்பு செய்து வெளியிடப்பட்டுள்ளன. 18.திருக்கோயில் பாதுகாப்புப் படை திருக்கோயில்களில் உள்ள உலோகத் திருமேனிகள், ஆபரணங்கள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களின் பாதுகாப்பிற்காக 1992ஆம் ஆண்டு திருக்கோயில் பாதுகாப்புப்படை ஏற்படுத்தப்பட்டது. இதில், 1,000 காவல் துறையைச் சேர்ந்த இரண்டாம் நிலை காவலர்களும், 3000 முன்னாள் இராணுவத்தினர்/காவலர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது 2080 ஓய்வு பெற்ற இராணுவத்தினரும், 903 காவலர்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு, 2626 திருக்கோயில்களில் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். திருக்கோயில்களில் களவு, கொள்ளை முதலிய நிகழ்வுகளை தடுப்பதற்காக 26.9.2007 அன்று மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில், உள்துறை செயலாளர் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்களுடன் ஓர் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் திருக்கோயில்களில் பாதுகாப்பு ஏற்பாட்டை வலுப்படுத்துவது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 19. “திருக்கோயில்”- திங்களிதழ் இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் 1958ஆம் ஆண்டு முதல் “திருக்கோயில்” என்ற பெயரில் திங்களிதழ் வெளிவருகிறது. இவ்விதழ் தற்போது புதுப்பொலிவுடன் பல வண்ணங்களில் அச்சிட்டு, வாசகர்களின் எதிர்பார்ப்பினை ஈடு செய்யும் வகையில், பல நல்ல கருத்துகளுடனும், பிரபல எழுத்தாளர்களின் கட்டுரைகளுடனும் வெளியிடப்படுகிறது. 20. இத்துறையின் இணைய தளம் : http://www.hrce.tn.nic.in இத்துறையின் செயல்பாடு மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள், முதலியவற்றுடன் பற்பல திருக்கோயில்களின் அரிய தகவல்களை அறிவதற்கு http://www.hrce.tn.nic.in என்ற இணைய தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் மதுரை, ஸ்ரீரங்கம், திருச்செந்தூர் போன்ற பெரிய திருக்கோயில்களின் இணையதளத்துடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு, அத்திருக்கோயில்களின் வரலாறு, புராணம், வளர்ச்சிப்பணிகள் போன்ற தகவல்களுடன் பூஜைகளை பதிவு செய்துகொள்ள இ-பூஜா என்னும் திட்டத்துடன், தெய்வத் திருவுருவங்களின் படங்கள் பலவற்றையும் கண்கவர் வண்ண வடிவமைப்பில் ஒளி-ஒலியுடன் காணும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. 21. பட்டயப் பொறியாளர் அங்கீகாரம் திருக்கோயில்களின் திருப்பணிகளை மேற்கொள்ள மதிப்பீடுகள் தயாரித்தளிப்பதில் தொய்வு ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு, பொதுப் பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பொறியாளர்கள், பட்டயப் பொறியாளர்களாக அங்கீகாரம் செய்யப்படுகின்றனர். இவ்வாறு அங்கீகாரம் பெறும் பட்டயப் பொறியாளர்கள், திருக்கோயில்களின் கட்டுமானப் பணிகளுக்கு தேவையான வரைபடங்கள், மதிப்பீடுகள் தயார் செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 22. ஸ்தபதிகள் அங்கீகாரம் தமிழகத் திருக்கோயில் திருப்பணிகள் ஏனைய கட்டுமானப் பணிகளைப் போலன்றி பெரும்பாலும் ஸ்தபதிகள்(பெருந்தச்சர்கள்) மூலமாகவே செய்யப்பட்டு வருகின்றன. எனவே இப்பணிகளை மேற்கொள்ள ஸ்தபதிகள் தேவைப்படுவதால் அரசாணை 535 நாள் 22.10.99ன்படி 2000 ஆம் ஆண்டில் 13 ஸ்தபதிகள் கொண்ட பட்டியல் அங்கீகரிக்கப்பட்டது. திருக்கோயில்களின் திருப்பணிகள் அதிக அளவில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதால் ஸ்தபதிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாத நிலையினைக் கருத்தில் கொண்டு அதிக அளவில் ஸ்தபதிகளை அங்கீகரிக்கவும், திருக்கோயில்களின் திருப்பணிகளை துரிதப்படுத்தவும் மாமல்லபுரம் சிற்பக் கல்லூரியில் பயின்றவர்கள் தவிர மரபு வழியில் தகுதி உள்ளவர்களையும் ஸ்தபதி பட்டியலில் சேர்க்கலாமென அரசாணை எண்.172 நாள் 4.8.2006ல் உத்திரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் தகுதி பெற்ற ஸ்தபதிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரி, 184 நபர்கள் ஸ்தபதிகளாக தேர்வு செய்யப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 23. சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிதி வசதியுடைய திருக்கோயில்களில், ஆண்டுதோறும் சுதந்திரத் திருநாள் மற்றும் பேரறிஞர் அண்ணா நினைவு நாள் ஆகிய நாட்களில் அனைத்துச் சமுதாய மக்களும் பங்குபெறும் வகையில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்தப்பட்டு வருகின்றது. 24. திருக்கோயில்களில் நாதசுர இசைப் பணியாளர்கள் நியமனம் பாடல் பெற்ற மற்றும் மங்களாசாசனம் செய்யப்பெற்ற வரலாற்றுப் புகழ்வாய்ந்த பழமையான திருக்கோயில்களில் நிதிவசதியின்மையால் காலபூஜை மற்றும் திருவிழாக்களின்போது மங்கல இசை இசைக்கப்படுவது குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, நாதசுரம், தவில் மற்றும் தாள இசைக் கலைஞர்களை நியமனம் செய்து அவர்களுக்கு முறையே ரூ.1,500/-, ரூ.1,000/- மற்றும் ரூ.750/- வீதம் மாத ஊதியம் இத்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கென ரூபாய், ஒரு கோடி முதலீடு செய்யப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகை மூலம் மாத ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. 25. தமிழ் புலவர்கள் நியமனம் திருக்கோயில்களில் திருமுறை, திவ்ய பிரபந்தங்கள் பாடுதல், முற்றோதல் செய்தல், சொற்பொழிவுகள் செய்தல், சமயக் கருத்துக்களைப் பரப்புதல், தலவரலாறு, தலபுராணம் வெளியிட நடவடிக்கை எடுத்தல் மற்றும் நூல் நிலையம் பராமரித்தல் ஆகிய பணிகளுக்காக தமிழ்ப்புலவர்கள் நியமனம் செய்யப்படும் திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டம் 77 திருக்கோயில்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு தற்போது 68 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு அவரவர் பணிபுரியும் திருக்கோயிலின் இளநிலை உதவியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதிய ஏற்ற முறையில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. 26. திருக்கோயில் பணியாளர்கள் நலத்திட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களின் பணியாளர்கள் பல்வேறு பதவித் தரங்களில் பணிபுரிந்து வருகின்றனர். திருக்கோயில் பணியாளர்களுக்கு கீழ்க்கண்ட நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 1. குடும்ப நலநிதி 2. சிறப்பு சேம நல நிதி மற்றும் பணிக்கொடை 3. ஆலய ஊழியர் நலநிதி 4. ஓய்வூதியம் (அர்ச்சகர், ஓதுவார், இசைக் கலைஞர், வேதபாராயணர் மட்டும்) 5. பணியிலிருக்கும்போது இறந்துவிடும் பணியாளர் குடும்பத்திற்கு கருணைத் தொகை வழங்குதல் 6. திருமணம், வாகனம், பண்டிகை முன்பணம். 7. மருத்துவப்படி, சலவைப்படி, வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி 8. தட்டச்சர்களுக்குச் சிறப்பூதியம் 9. தொகுப்பூதியப் பணியாளர்களுக்கு 30 சதவீத ஊதிய உயர்வு 10. தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை ஊதிய நிர்ணயம் 11. கருணை அடிப்படையில் பணி நியமனம். 12. அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்று அகவிலைப்படி உயர்வு, சம்பளத்துடன் 50 சதவிகிதம் அகவிலைப்படி இணைப்பு. 13. திருவிழாக்கால சிறப்பூதியம், குடமுழுக்கு விழா சிறப்பூதியம். 14. அடிப்படைப் பணியாளர்களுக்கு சீருடை. 15. ஓய்வு பெறும் திருக்கோயில் பணியாளர்களுக்கு ஓய்வூதியம். i.குடும்ப நல நிதி திருக்கோயில்களில் பணியிலிருக்கும்போது மரணமடையும் பணியாளரது குடும்பத்தாருக்கு உதவும் பொருட்டு இத்திட்டம் ஏற்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்படி, பணியிலிருக்கும்போது மரணமடையும் பணியாளரது குடும்பத்தாருக்கு ரூ.1,00,000/- உதவித் தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்திற்கென, உபரி நிதி மிக்க திருக்கோயில்களிலிருந்து, ஐந்து கோடி ரூபாயும், ஆலய மேம்பாட்டு நிதியிலிருந்து பெறப்பட்ட வட்டித் தொகையிலிருந்து 5 கோடி ரூபாயும் ஆக மொத்தம் 10 கோடி ரூபாய் மூலதனம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நிதிவசதிமிக்க திருக்கோயில்களின் உபரி நிதியிலிருந்து மேலும் ரூ5 கோடி பெற்று, மொத்த வைப்பு நிதி ரூ15 கோடியாக உயர்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வைப்பு நிதியிலிருந்து கிடைக்கப்பெறும் வட்டித் தொகையைக் கொண்டு இவ்வரசு பொறுப்பேற்றபின் 278 பணியாளர்களுக்கு ரூ.202.95 இலட்சம் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. . ii.சிறப்பு சேம நல நிதித் திட்டம் ஆண்டொன்றுக்கு ரூபாய் ஒரு இலட்சமும் அதற்கு மேலும் வருமானம் பெறக்கூடிய திருக்கோயில்களில் பணிபுரியும் பணியாளர்களுக்குச் சிறப்பு வருங்கால வைப்பு நிதித் திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கென திருக்கோயில்களின் உபரி நிதியிலிருந்து ரூ.10 இலட்சம் வைப்பு நிதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பணியாளர் ஓய்வு பெறும்போது, அவர் செலுத்திய, உறுப்பினர் கட்டணத் தொகை திருக்கோயில் மூலம் வட்டியுடன் வழங்கப்படுவதுடன், துறை மூலம் ரூ 5,000/- பணிக் கொடை வழங்கப்படுகிறது. iii.ஆலய ஊழியர் நல நிதி ஆண்டு வருமானம் ரூ.1,00,000/-க்கும் குறைவாக உள்ள திருக்கோயில்களில், மாத ஊதியம் ரூ.750/-க்கும் குறைவாகப் பெறும் பணியாளர்களுக்குச் சம்பள நிலுவை ஏற்படின், அப்பணியாளர்களுக்குத் துறை மூலம் சம்பள நிலுவைத் தொகை வழங்கிட ஆலய ஊழியர் நல நிதித் திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கென பழனி, அருள்மிகு தண்டாயுபாணிசுவாமி திருக்கோயிலின் உபரி நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் வைப்பீடு செய்யப்பட்டுள்ளது. வங்கி வட்டி விகிதங்கள் நாளுக்கு நாள் குறைந்து வருவதாலும், சம்பளப் பாக்கிகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் உயர்ந்து கொண்டு வருவதைக் கருத்தில் கொண்டும், கூடுதலாக நான்கு கோடி ரூபாயை நிதி வசதி மிக்க திருக்கோயில்களிலிருந்து நிதிமாற்றமாகப் பெற்று வைப்பு நிதி ரூபாய் ஐந்து கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அம்மூலதனத்திலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையைக் கொண்டு இத்திட்டம் ஆண்டுதோறும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், 3375 பணியாளர்களுக்கு ரூ. 98.02 இலட்சம் இவ்வரசு பொறுப்பேற்றபின் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. கருணை அடிப்படையில் வேலை வாய்ப்பு திருக்கோயில்களில் பணியாற்றும்போது மரணமடைந்த, திருக்கோயில் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் உதவிடும் வகையில் வேலை வாய்ப்பு வழங்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. ஓய்வூதியத் திட்டம் அர்ச்சகர், ஓதுவார், வேதபாராயணம், அரையர்கள், திவ்விய பிரபந்தம் பாடுவோர் மற்றும் இசைக் கலைஞர்களுக்கு ஓய்வூதியம் திருக்கோயில்களில் 20 ஆண்டுகள் பணிபுரிந்து 60 வயது நிறைவடைந்து ஓய்வுபெற்ற அர்ச்சகர்கள், ஓதுவார்கள், வேதபாராயணர்கள், அரையர்கள், திவ்விய பிரபந்தம் பாடுவோர் மற்றும் இசைக்கலைஞர்கள் போன்றோருக்கு அரசு நிதியிலிருந்து இத்துறை மூலம் மாதம் ஒன்றுக்கு ரூ.750/- ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் பயனாளிகள் விவரம் பின்வருமாறு திருக்கோயிலில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் ஓய்வூதியத் திட்டம் திருக்கோயில்களில் பணிபுரிந்து வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறும் அர்ச்சகர்கள், ஓதுவார்கள், வேதபாராயணர்கள், அரையர்கள், திவ்வியபிரபந்தம் பாடுவோர் மற்றும் இசைக்கலைஞர்கள் ஆகியோருக்கு மட்டுமே அரசின் மூலம் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதனடிப்படையில், எஞ்சிய திருக்கோயில் பணியாளர்கள் நீண்ட காலமாக ஓய்வூதியம் கோரி வேண்டுகோள் விடுத்து வந்தனர். திருக்கோயில்களில் பணிபுரியும் தகுதியுள்ள பணியாளர்களுக்கு மத்திய அரசின் திட்டமான பணியாளர் சேம நல நிதி திட்டத்தில் சேர்ந்து வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறும் திருக்கோயில் பணியாளர்களுக்கு ஓய்வூதியப் பலன்களை பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பணியாளர் சேம நலநிதி திட்டத்திற்கு சந்தா செலுத்த இயலாத நிலையில் உள்ள பணியாளர்கள், பணியாளர் சேம நல நிதிக்கு சந்தா செலுத்துபவராக இருந்தும், இத் திட்டத்தில் சேர்ந்த பின் 10 ஆண்டுகளுக்கும் குறைவாக பணிக்காலம் உள்ள பணியாளர்கள் ஆகியோர்களுக்கு “துறை நிலையிலான ஓய்வூதியத் திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு மாத ஓய்வு ஊதியம் ரூ.750/- பெற்று, பயன்பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2006ல் ஓய்வு பெற்ற 229 திருக்கோயில் பணியாளர்களுக்கும், 2007ல் ஓய்வு பெற்ற 255 நபர்களுக்கும், 2008ல் ஓய்வு பெற்ற 167 திருக்கோயில் பணியாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. 27. அர்ச்சகர் பயிற்சி நிலையங்கள் இந்து சமயத்தினைச் சார்ந்த அனைத்து சமுதாயத்தினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று தமிழக அரசு அறிவித்தனைத் தொடர்ந்து, தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பாக சென்னை, திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோயில், ஸ்ரீரெங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் வைணவ அர்ச்சகர் பயிற்சி நிலையமும், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசவாமி திருக்கோயில், மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மற்றும் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் சைவ அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும் கடந்த 11.5.2007 அன்று தொடங்கப்பட்டுள்ளது. பயிற்சி நிலையத்தில் சேர்ந்து பயிலும் மாணவர்கள் தங்குவதற்கான இடம், உணவு, சீருடை, பயிற்சிக்கான பாட புத்தகங்களும் மற்றும் பொருட்களை பாதுகாக்க பூட்டுடன் கூடிய பெட்டி ஆகியன இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. மேலும் மாணவர்களுக்கு உதவித் தொகை ரூ.500/- மாதந்தோறும் வழங்கப்படுகிறது. இப்பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தலைமை ஆசிரியர் ஒருவரும், ஆகம ஆசிரியர் ஒருவரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இப்பயிற்சி நிலையங்களில் மொத்தம் 207 மாணவர்கள் ஓராண்டு இளநிலை அர்ச்சகர் சான்றுக்கான பயிற்சியினை முடித்து தேர்ச்சி பெற்றுள்ளனர். இம்மாணவர்களில் ஆதிதிராவிட, பழங்குடி வகுப்பைச் சேர்ந்த 34 பேர், மிகவும் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த 55 பேர், பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த 76 பேர், இதர வகுப்பைச் சேர்ந்த 42 பேர், ஆக மொத்தம் 207 மாணவர்கள் இளநிலை அர்ச்சருக்கான ஓராண்டு பயிற்சியை முடித்துள்ளனர். 28.அறநிலையத்துறை நடத்தும் கல்லூரிகளை மேம்படுத்த சிறப்புத் திட்டம் இந்து சமய அறநிலையத்துறையால் நடத்தப்படும் குற்றாலம், பராசக்தி மகளிர் கல்லூரி, குழித்துறை, தேவி கருமாரி மகளிர் கல்லூரி, மேலையூர் பூம்புகார் கல்லூரி ஆகிய மூன்று கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கட்டடங்கள், ஆய்வகம், நூலகம், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் மற்றும் கணினி வசதிகளைச் செய்து தருவதற்காகவும், இக்கல்லூரிகளின் வளர்ச்சிக்காகவும், ஆண்டுதோறும் ஒவ்வொரு கல்லூரிக்கும் ரூ.15 இலட்சம் வீதம் ரூ.45 இலட்சம் நிதியுதவி வழங்கவும், இதற்கென நிதி வசதியுள்ள திருக்கோயில்களின் உபரி நிதியிலிருந்து நிதிமாற்றத்தின் மூலம் ரூ.5 கோடி அளவில் மைய நிதி உருவாக்கிடவும் அரசாணை வழங்கப்பட்டுள்ளது. 29. திருக்கோயில் கல்வி நிலையங்கள் மேம்படுத்துதல். 2008-2009-ம் ஆண்டு சட்டமன்றப் பேரவையில், இத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 36 பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களது நலனைக் கருத்திற்கொண்டு அடிப்படை வசதிகள், ஆய்வகங்கள், நூலகங்கள் மற்றும் கணினி வசதிகள் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த வசதிகளைச் செய்து தருவதற்காக நிதி வசதியுள்ள திருக்கோயில்களின் உபரி நிதியிலிருந்து நிதிமாற்றத்தின் மூலம் ரூ.5 கோடி நிதியைப் பெற அரசாணை வழங்கப்பட்டுள்ளது. 30. சிதம்பரம் திருக்கோயிலில் செயல் அலுவலர் நியமனம். சிதம்பரம் அருள்மிகு சபாநாயகர் திருக்கோயிலுக்கு சட்டப்பிரிவு 45 (1)-ன்கீழ் செயல் அலுவலர் நியமனம் செய்ததை உறுதி செய்து அரசாணை எண்.(டி) 168 நாள் 9.5.2006-ல் உத்தரவு பிறப்பித்ததை எதிர்த்து, சிதம்பரம் பொது தீட்சிதரால் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனு எண்.16248/2006 வழக்கு 2.2.2009-ல் தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டதை அடுத்து, செயல் அலுவலர் 2.2.2009 அன்று திருக்கோயில் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். விழுப்புரம், இணை ஆணையர் மற்றும் கடலூர் உதவி ஆணையர் ஆகியோரால் திருக்கோயில் அன்றாட நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 31. வருவாய் நீதிமன்ற வழக்குகள். குத்தகைதாரர் பதிவு சட்டத்தின்கீழ், பதிவுபெற்ற குத்ததைதாரர்கள் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலத்தை அனுபவித்து கொண்டு, குத்தகை தொகையை செலுத்தாமல் இருக்கும்பொழுது, நிலுவை தொகைகளை வசூலித்திட வருவாய்நீதிமன்றங்களில் திருக்கோயிலின் சார்பில் வழக்குகள் தொடுக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் நிலுவைகளை வசூலிக்கவும், நியாய வாடகை நிர்ணயம் செய்யவும், குத்தகை செலுத்தாத குத்தகைதாரர்களை வெளியேற்றிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இப்பணிக்காக ஆறு இடங்களில் தனித்துணை ஆட்சியர் நிலையில் வருவாய் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முழுநேர நீதிமன்றங்கள்(6) – தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், மதுரை. முகாம்நீதி மன்றங்கள் (4) – மன்னார்குடி, கும்பகோணம், சேலம், தென்காசி. வருவாய் நீதிமன்றங்களில் கீழ்கண்டவாறு வழக்குகள் நிலுவையாய் உள்ளன. 32.திருக்கோயில்களுக்கு சொந்தமான மனைகளில் குடியிருப்போருக்கு வாடகை சீரமைப்பு திருக்கோயில்களுக்குச் சொந்தமான மனைகள், கட்டடங்கள் முதலியவற்றுக்கு வாடகை நிர்ணயம் செய்வதற்கு அரசாணை எண்.353, தமிழ் வளர்ச்சி பண்பாடு மற்றும் அறநிலையத்துறை நாள் 4.6.1999ல் வழிமுறைகள் வகுக்கப்பட்டன. இதன்படி, குடியிருப்போருக்கு நிர்ணயம் செய்யப்பட்ட வாடகை விகிதம் மிகவும் அதிகம் என்றும், பொதுவாக மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை வாடகைத் தொகையை 33.3 விழுக்காடு உயர்த்த வேண்டும் என்பதைக் குறைக்க வேண்டும் என்றும் பரவலாகக் கோரிக்கைகள் அரசுக்கு வந்ததைக் கருத்தில் கொண்டு, ஆலோசனைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், திருக்கோயில்களுக்குச் சொந்தமான மனைகளில் குடியிருப்போருக்கு நிர்ணயிக்கப்பட்ட வாடகை விகிதத்தைப் பாதியாகக் குறைத்தும், மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பொதுவாக விதிக்கப்படும் வாடகை உயர்வை 33.3 விழுக்காட்டிலிருந்து 15 விழுக்காடாகக் குறைத்தும் அரசு ஆணை எண்.456 தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை, நாள் 9.11.2007ல் ஆணையிடப்பட்டுள்ளது. இதனால் 56,265 நபர்கள் பயனடைவர். 33. திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்டல் வருவாய் அலுவலர்கள் நியமனம் நிலவரித்திட்ட நடவடிக்கையின்போதும், நில உடமை மேம்பாட்டுத்திட்ட செயலாக்கத்தின்போதும் பல திருக்கோயில்களுக்குச
 6. vedaprakash Says:

  33. திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்டல் வருவாய் அலுவலர்கள் நியமனம்

  நிலவரித்திட்ட நடவடிக்கையின்போதும், நில உடமை மேம்பாட்டுத்திட்ட செயலாக்கத்தின்போதும் பல திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் தவறுதலாக தனிப்பட்ட நபர்களின் பெயரில் பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளன. இதுபற்றி அனைத்து திருக்கோயில்களின் நிர்வாகங்கள் செய்யும் சட்டரீதியான மேல்முறையீட்டு மனுக்களை காலதாமதமின்றி விசாரித்து ஆணை பிறப்பிப்பதற்காக மதுரை, கோயம்புத்தூர் ஆகிய இடங்களை தலைமையிடமாகக் கொண்டு இரண்டு மாவட்ட வருவாய் அலுவலர் பணியிடங்கள் இதர பணியாளர்களுடன் ஏற்படுத்தி 22.2.2008 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசாணை எண். 1498 பொது (சிறப்பு – ஏ) துறை நாள் 10.4.2008ன்படி கோவை/மதுரை ஆகிய இடங்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர்/ தனி அலுவலர் நியமனம் செய்யப்பட்டு பணியில் சேர்ந்து பணியாற்றி வருகிறார்கள்.

  34. கோசாலைகள்

  சென்னை உயர்நீதிமன்ற உத்திரவின்படி திருக்கோயில்களுக்கு உபயமாக வரும் கால்நடைகளை சேகரித்துக்கொள்ளும் உரிமையினை பொது ஏலத்தின் மூலம் விடப்படும் நடைமுறை நிறுத்தப்பட்டது. கால்நடைகள் இந்திய விலங்குகள் நல வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கோசாலைகளுக்கு பராமரிப்புக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் சில கோசாலைகளில் தவறுகள் நடைபெறுவதாக இத்துறையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து கோசாலைகளுக்கு கால்நடைகள் அனுப்புவது நிறுத்தப்பட்டு சம்பந்தப்பட்ட திருக்கோயிலிலேயே கால்நடைகள் பராமரிக்கப்பட்டு வரப்பட்டன. உபயமாக வழங்கப்படும் கால்நடைகள் இளங்கன்றுகளாகவும், நோயுற்ற தன்மை உடையதாகவும் வழங்கப்படுவதால் அவ்வப்போது அவை இறந்து விடுகின்றன.

  இப்பொருண்மை தொடர்பாக 24.1.2008 அன்று மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பழனி, திருச்செந்தூர், திருச்சி, இராமேசுவரம், சேலம், மதுரை, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களில் ஒருங்கிணைந்த கால்நடைப் பண்ணை அமைக்கவும், கால்நடை தீவனம் பயிரிடவும், கால்நடை மருத்துவர்கள் நியமித்திடவும், கால்நடைகளின் கழிவு பொருட்களிலிருந்து உரங்கள், எரிவாயு, மருந்து பொருட்கள் போன்றவை தயார் செய்திடவும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

  இம்முடிவுகளின்படி தற்போது திருச்செந்தூர், பழனி, இராமேஸ்வரம் மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் திருக்கோயில் மூலமாக ஒருங்கிணைந்த கோசாலைகள் அமைக்கப்பட்டு திருக்கோயில்களுக்கு உபயமாக வழங்கப்பட்ட கால்நடைகள் அங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

  35. கூட்டு ஆக்கிரமிப்பு வரன்முறைப்படுத்துதல்.

  திருக்கோயில்களுக்குச் சொந்தமான காலிமனை, நிலம் ஆகியவற்றினை குடியிருப்புக்காக கூட்டாக ஆக்கிரமித்து நீண்டகாலமாக குடியிருந்து வருபவர்களை, வாடகைதாரர்களாக முறைப்படுத்துவது குறித்து அரசால் பரிசீலிக்கப்பட்டு, சில நிபந்தனைகளுக்குட்பட்டு, கூட்டு ஆக்கிரமிப்பினை வரன்முறைப்படுத்திட, அரசாணை எண்.340 நாள் 6.8.2007-ல் வழங்கப்பட்டுள்ளது.

  கூட்டு ஆக்கிரமிப்புதாரர்களை முறைப்படுத்த, 1. நீண்ட காலமாக குடியிருப்புக்காக நிலத்தை பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும், 2. அரசாணையின்படி நியாய வாடகை நிர்ணயத்தை எற்றுக் கொள்ள வேண்டும், 3. வாடகை நிலுவைத் தொகையினை 12 மாதங்களில் சம தவணைகளில் செலுத்துதல் வேண்டும், 4. 10 மாத வாடகை நன்கொடையாக வழங்குதல் வேண்டும், 5. வாடகை நிர்ணயம் 1.7.1998 முதல் அமுல்படுத்தப்பட வேண்டும் ஆகிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

  இதுவரை 2605 கூட்டு ஆக்கிரமிப்புதாரர்கள் திருக்கோயில்களின் நேரடி வாடகைதாரர்களாக வரன்முறைப்படுத்தப்பட்டுள்ளனர்.

  இவ்வாறு வாடகைதாரர்களாக வரன்முறைப்படுத்தப்பட்டவர்களுக்கு மின் வசதி மற்றும் ஏனைய வசதிகள் பெற தடையில்லாச் சான்றும் வழங்கப்படும்.

 7. vedaprakash Says:

  திட்டங்கள்

  புரவலர் விருது வழங்கும் திட்டம்

  திருக்கோயில்களில் திருப்பணி மேற்கொள்வதற்காக இந்த பொது நலநிதிக்கு ரூ.5 இலட்சம் நன்கொடையாக அளிப்பவர்களுக்கும், ஏதேனும் ஒரு திருக்கோயிலில் ரூ.5 இலட்சத்துக்கு குறையாமல் திருப்பணி செய்பவர்களுக்கும் அல்லது அத்தகைய திருப்பணிகள் மேற்கொள்ளும் நிறுவனத்திற்கும் திருக்கோயில் “புரவலர்” என்று பொறிக்கப்பட்ட தங்க நிற அட்டை வழங்கப்படும் எனவும், இவர்கள் குடும்பத்தினருக்கு அல்லது அந்த நிறுவனத்துக்கு (ஐந்து பேருக்கு மேற்படாமல்) தமிழகத்தில் இத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் தரிசனம் செய்ய சிறப்பு நுழைவு அனுமதி வழங்கப்படும்.

  ஒருகால பூஜைத் திட்டம்

  ஒரு கால பூஜையைக்கூட செய்திட இயலாத நிதி வசதியற்ற திருக்கோயில்களுக்கு ஒருகால பூஜையினை செய்திட உதவும் வகையில் இத்திட்டம் 1986ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பொதுமக்களையும் ஈடுபடுத்தும் நோக்கில், பொதுமக்கள் நன்கொடையாக திருக்கோயில் ஒன்றுக்கு ரூ.2,500/- அளித்தால், நிதி வசதியுள்ள திருக்கோயில்களின் உபரி நிதியிலிருந்து ரூ.20,000/-ம், திருக்கோயில் திருப்பணி மற்றும் அறப்பணியிலிருந்து ரூ.1,300/-ம் ஆலய மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1,200/-ம் வழங்கி அத்திருக்கோயிலின் பெயரில் மொத்தம் ரூ.25,000/- நிரந்தர முதலீடு செய்யப்படுகிறது. இம்முதலீட்டிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையிலிருந்து குறிப்பிட்ட திருக்கோயிலில் ஒரு கால பூஜை நாள்தோறும் நடைபெற வழி வகுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 31.3.2009 முடிய 11414 திருக்கோயில்கள் பயன் அடைந்து வருகின்றன. மேலும் இத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 1567 திருக்கோயில்கள் ஒரு கால பூஜை கூட நடைபெறாத திருக்கோயில்கள் என கண்டறியப்பட்டு அவற்றில் 467 திருக்கோயில்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 1100 திருக்கோயில்களுக்கு நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

  அன்னதானத் திட்டம்

  அன்னதானத் திட்டத்தின் கீழ் 360 திருக்கோயில்களில் பக்தர்களுக்கு மதிய வேளையில் நாள்தோறும் உணவு வழங்கப்படுகிறது. அன்னதானத் திட்டத்திற்கென ஆணையர் பதவி பெயரில் வங்கிக் கணக்கு ஒன்று துவங்கப்பட்டு, ரூ.3.27 கோடி நன்கொடையாக பெற்று முதலீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நிதி வசதிமிக்க திருக்கோயில்களின் உபரி நிதியிலிருந்து ஒரு சிறப்பு நிரந்தர முதலீடாக ரூ.21.83 கோடி நிதி இத்திட்டத்திற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதிலிருந்து கிடைக்கப் பெறும் வட்டித் தொகையிலிருந்து இத்திட்டத்தை செயல்படுத்துவதில் இதுவரை நிதிப் பற்றாக்குறை ஏற்படும் திருக்கோயில்களுக்கு பற்றாக்குறை நிதி உதவியாக இதுவரை ரூ.435.31 இலட்சம் இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர் தொகைகள் விடுவிக்கப்பட்டுள்ளது.

  ஆன்மிகம் மற்றும் ஒழுக்க நெறி வகுப்பு

  அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்படும் திருக்கோயில்கள் உட்பட 485 திருக்கோயில்களில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறுவர் மற்றும் சிறுமியர்களை நெறிப்படுத்தும் பொருட்டு கற்றோரைக் கொண்டு ஆன்மிகம் மற்றும் ஒழுக்க நெறி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

  கிராமக்கோயில் பூசாரிகள் நல வாரியம்

  இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கிராமப்புற திருக்கோயில்களில் பணிபுரியும் பூசாரிகளின் நலனைப் பேணி பாதுகாப்பதைக் கருத்தில் கொண்டு “கிராமக்கோயில் பூசாரிகள் நலவாரியம்” என ஏற்படுத்தி, மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சர் அவர்களைத் தலைவராகவும், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையரை உறுப்பினர்/செயலர் ஆகவும், எட்டு அலுவலர் சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் பத்து அலுவல் சாராத உறுப்பினர்களாக நியமித்து அரசு ஆணையிட்டது.

  இவ்வாரியக் கூட்டம் 22.5.2007, 18.3.2008 மற்றும் 6.11.2008 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. உறுப்பினர்களாக சேருவதற்கான தகுதிகள் நிர்ணயம், உறுப்பினர்கள் சேர்க்கைக்கான படிவம், உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை, பயனாளிகள் அட்டை மற்றும் உறுப்பினர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்து முடிவெடுக்கப்பட்டு. இதுவரை 35885 பூசாரிகள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அடையாள அட்டையும், நலத்திட்ட உதவிகளுக்கான கையேடும் வழங்கப்பட்டுள்ளன.

  கிராமக்கோயில் பூசாரிகளுக்கு மூக்கு கண்ணாடி வாங்குவதற்கு ரூ.500/- நிதியுதவி, அவரது குழந்தைகளது உயர் கல்விக்கு 1000/- முதல் ரூ.6000/- வரை நிதியுதவி, திருமணத்திற்கு ரூ.6000/- நிதியுதவி, மகப்பேறு-கருச்சிதைவு-கருக்கலைப்பிற்கு மாதம் ஒன்றுக்கு ரூ.1000/- வீதம் 6 மாதங்களுக்கு மொத்தம் ரூ6000/- நிதியுதவி, உறுப்பினர் மரணமடைந்தால் அவரது இறுதி சடங்கிற்கு ரூ.2000/-, வாரிசுதாரருக்கு ரூ.15,000/- நிதியுதவி, உறுப்பினருக்கு விபத்து ஏற்படின், குழுக் காப்பீட்டுத் திட்டத்தின்மூலம் ரூ.25,000/- முதல் ரூ.1,00,000/-வரை நிதியுதவி ஆகிய நலத்திட்ட உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 205 உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

  கிராமப்புற பூசாரிகள் ஓய்வூதியத் திட்டம்

  இத்துறையின் நேரடி ஆளுகையின் கீழ் இல்லாத திருக்கோயில்களில் 20 ஆண்டுகள் பணிபுரிந்து 60 வயதினை அடைந்து ஓய்வு பெற்ற பூசாரிகளுக்கு, நபர் ஒருவருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.750/- வீதம் 4,000 கிராமப் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்க அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 3190 கிராமக் கோயில் பூசாரிகள் பயன்பெற்று வருகின்றனர்.

  திருக்கோயில்களில் புதிதாக நூல் நிலையங்கள் துவக்குதல்.

  நிதிவசதியும், இடவசதியும் உள்ள 114 முக்கியத் திருக்கோயில்களில், புதிதாக நூல் நிலையங்கள் துவங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே நூல்நிலையங்கள் உள்ள திருக்கோயில்களில், அவற்றை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  திருக்கோயில்களில் யோகாசன பயிற்சி வகுப்புகள் நடத்துதல்

  நிதிவசதியும், இடவசதியும் உள்ள 52 திருக்கோயில்களில், பொதுமக்கள்/பக்தர்களின் உடல் நலத்தையும், மனநலத்தையும் பேணிகாக்கும் பொருட்டு, தினந்தோறும் காலை வேளையில் தகுதியான பயிற்சியாளர்களைக் கொண்டு திருக்கோயிலுக்குச் சொந்தமான நல்ல காற்றோட்டமும், சுகாதார வசதியுள்ள இடங்களில் யோகாசனப் பயிற்சி மற்றும் தியான பயிற்சி அளிப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

  தமிழில் நல்ல ஆன்மிக நீதி நூல்கள் வெளியிடப்படுவதை ஊக்குவிக்க உதவித் தொகை வழங்குதல்.

  தமிழில் நல்ல ஆன்மிக நீதி நூல்கள் வெளியிடப்படுவதை ஊக்குவிக்கும் பொருட்டு, தமிழில் வெளியிடப்படும் சிறந்த ஆன்மிக நீதி நூல்களுக்கு, இந்து சமய அறநிலையத்துறையின் பொது நிதியிலிருந்து ஆண்டுதோறும் உதவித் தொகை வழங்குவதற்கும் மற்றும் தமிழில் உள்ள சிறந்த ஆன்மிக நீதி நூல்களை வாங்கி வெளிநாட்டிலுள்ள இந்து திருக்கோயில்களுக்கு நன்கொடையாக அளிப்பதற்கும், இதற்கான கோரிக்கைகளை பரிசீலித்து முடிவு எடுக்க, அறநிலையத்துறை ஆணையர் தலைமையில் ஐந்து பேர்கள் கொண்ட ஒரு தேர்வுகுழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 8. kannan Says:

  kanchi lord varadharaja perumal temple new namam inventered with out knowledge of yours and other parties, public. he is taking unnessassery complaints from the public. who is allowed the new inventered the vadagalai namam of paiting/sheeld embosing. till date devasthana officer are not sit in this temple. only clerks, maniayakarar are maintained the temple. one of the maniyakar are embosed the new vadagalai namam inside the premises. please enquire and take action this fellows and please change the vadagalai namakkarargal and fresh appointment to other cast in this devasthanam. all archaga/parcharagas/maniayakars are well to settled in this kanchipuram varadharaja perumal temple. pl enquir.
  kannan/kanchipuram/24865355

 9. கோவில் நிலங்களை இனி விற்பதில்லை: இந்து அறநிலையத்துறை முடிவு! « நாத்திகமும்-ஆலயநிர்வாகமும் Says:

  […] https://atheismtemples.wordpress.com/2009/09/18/atheist-rulers-temple-administration/ […]

 10. கோவில்குத்தகை, வாடகைபாக்கி: திராவிடக்கொள்ளை தொடர்கிறதா? « நாத்திகமும்-ஆலயநிர்வாகமும் Says:

  […] https://atheismtemples.wordpress.com/2009/09/18/atheist-rulers-temple-administration/ […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: