விக்கிரங்கள் பாதுகாப்பும், திருடும்!

விக்கிரங்கள் பாதுகாப்பும், திருடும்!

விக்கிரங்கள் பாதுகாப்பு பற்றி ஒருபக்கம், கூட்டம், விவாதம் எல்லாம்!

மறுபுறமோ, விக்கிரங்கள் கொள்ளை, களவு முதலியன!!

30_09_2009_004_013

30_09_2009_152_004
திருச்சி அருங்காட்சியத்தில் வெண்கல சிலைகள் திருட்டு
செப்டம்பர் 30,2009,00:00  IST

திருச்சி: திருச்சி அரசு அருங்காட்சியக கதவை உடைத்து, உள்ளே புகுந்த மர்ம கும்பல், அங்கிருந்த 27 வெண்கல சுவாமி சிலைகளை கொள்ளையடித்துச் சென்றது. திருச்சி கோட்டை போலீஸ் ஸ்டேஷன் அருகே, அரசு அருங்காட்சியம் இயங்கி வருகிறது. ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு இரு நாட்களுக்கு முன், அருங்காட்சியகம் பூட்டப்பட்டது. முன்னாள் ராணுவ வீரரான லூர்துசாமி, வாட்ச்மேன் பணியில் இருந்துள்ளார்.

நேற்று அதிகாலை 2 மணிக்கு, அருங்காட்சியக பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம கும்பல், அங்கு பூட்டி “சீல்’ வைக்கப்பட்டிருந்த அறையினுள் இருந்த வெண்கல சுவாமி சிலைகளை கொள்ளையடித்துச் சென்றது. காலை 7 மணிக்கு, கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்ட வாட்ச்மேன் லூர்துசாமி, போலீசுக்கு தகவல் கொடுத்தார். காப்பாட்சியர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் அருங்காட்சியகத்தினுள் சென்று பார்த்தனர். இரண்டு செ.மீ., முதல் 53 செ.மீ., உயரம் கொண்ட 27 வெண்கலத்தால் ஆன சுவாமி சிலைகள் கொள்ளை போனது தெரியவந்தது. கொள்ளையடித்தவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , ,

8 பதில்கள் to “விக்கிரங்கள் பாதுகாப்பும், திருடும்!”

 1. vedaprakash Says:

  அழகர் சுவாமி கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு

  ஜூன் 27,2009,00:00 IST
  http://www.dinamalar.com/Sambavamnewsdetail.asp?news_id=11059&ncat=DI&archive=1&showfrom=6/27/2009

  எழுமலை: சாப்டூர் அருகே பழையூர் அழகர் சுவாமி கோயிலில், ஐம்பொன் சிலைகளைத் திருடிச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே பழையூரில் அழகர் சுவாமி கோயில் உள்ளது.

  நேற்று காலை துப்புரவு பணி செய்யும் கொப்பம்மாள் கோயிலுக்குள் சென்ற போது, வடக்குபுறம் உள்ள சொர்க்கவாசல் கதவும், கர்ப்பகிரக கதவும் திறந்திருந்தன. சுவாமி சிலைகள் திருடு போயிருந்தன. கொப்பம்மாள் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். பரம்பரை அறங்காவலர் பெரியராஜா, பட்டர் சந்தான கிருஷ்ணன் வந்து பார்த்த போது, 400 ஆண்டுகள் பழமையான சவுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, கைலாசநாதர் பிரியா ஆவுடை , ஆனந்த வள்ளியம்மாள் ஐம்பொன் சிலைகள் திருடுபோயிருந்தன. அறங்காவலர் பெரியராஜா, சாப்டூர் போலீசில் புகார் செய்தார். பேரையூர் டி.எஸ்.பி., பாலசுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன், சாப்டூர் எஸ்.ஐ., வேம்புலு ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மோப்பநாய் ரோவர் சொர்க்கவாசல் கதவு வழியாக காட்டுப் பகுதிக்குள் சென்று கண்மாய் கரையில் அமைந்துள்ள சொக்கலிங்கம் என்பவரின் தோட்டத்தை சுற்றி வந்து மறுபடியும் பழைய இடத்திற்கே திரும்பியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்தனர். சிலைகளை திருடுவதற்கு முன் திருடர்கள், கோயில் பின்புற சுற்றுச் சுவருக்கு பின் மது குடித்துவிட்டு, பின்னர் திருடியிருக்கின்றனர். கோயிலுக்கு பின்னால் “புல்’ மது பாட்டிலும், ஸ்நாக்ஸ்களும், சிலைகளின் மீது சாத்தப்பட்ட பட்டுத் துணிகளும் சிதறிக் கிடந்தன.

 2. vedaprakash Says:

  நெல்லை அருங்காட்சியகத்தில் சாமி சிலைகள் திருட்டு
  திங்கள்கிழமை, ஜூன் 15, 2009

  நெல்லை: நெல்லையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் புகுந்த சிலர், அங்கிருந்த பழங்காலத்து சாமி சிலைகளை திருடிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  பாளையங்கோட்டை எஸ்.பி அலுவலகம் அருகே அரசு அருட்காட்சியகம் உள்ளது. இங்கு சேர, சோழ, பாண்டிய மன்னர் காலத்து பராம்பரியம் மிக்க சாமி சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

  இதன் காப்பாளராக கிருஷ்ணம்மாள் மற்றும் மற்றும் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் வராந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் அருட்காட்சியகத்திற்கு வருவர்.

  இந்நிலையில் கடந்த 11ம் தேதி வியாழக்கிழமை மாலை அருட்காட்சியகத்தை ஊழியர்கள் பூட்டிச் சென்றனர். வெள்ளி மற்றும் சனிக்கிழமை விடுமுறை என்பதால் நேற்று காலை ஊழியர்கள் அருட்காட்சியகத்தை திறக்க சென்றனர்.

  அப்போது அருட்காட்சியக வெளிபக்க கதவு மற்றும் உள்அறைகளின் கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த சாமி சிலைகள் கொள்ளை போயிருந்தன.

  இதுகுறித்து பாளை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

  2 அடி காளி வெண்கல சிலை, முருகன், விநாயகர், ராமர் ஆகியோரின் 1 அடி வெண்கல சிலை; மற்றும் நடனமாடும் பெண், தேவி பித்தளை சிலைகள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.

  கொள்ளை போன சிலைகளின் மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

 3. vedaprakash Says:

  தமிழகம் முழுவதும் சாமி சிலை கடத்தல் முக்கிய புள்ளி கைது. ஐம்பொன் சிலைகள் பறிமுதல்
  செவ்வாய்க்கிழமை, 29, செப்டம்பர் 2009
  http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=17520

  தமிழகம் முழுவதும் கோயில்களில் உள்ள சாமி சிலைகளை திருடும் கும்பலை மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக கண்காணித்துவருகின்றனர். சிலை கடத்தல் கும்பலைச் சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவர் வேலூரை சேர்ந்தவர் என்றும் அவர் குறித்த தகவல் வேலூர் போலீசாருக்கு அளிக்கப்பட்டது.

  அதன்பேரில் வேலூர் டி.எஸ்.பி. பாலசுப்பிரமணி தலைமையில் இன்ஸ்பெக்டர் பலுலுல்லா மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் சத்துவாச்சாரியில் பதுங்கியிருந்த அந்த முக்கிய புள்ளியை இரவு சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

  அவரிடம் இருந்து சிறிய அளவிலான ஐம்பொன் சிலைகள் சிலவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சிலைகள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து திருடப்பட்டவை என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் சிலைகளை வாங்கி விற்பனை செய்யும் நபர் என தெரியவந்துள்ளது.

  மேலும் பிடிபட்டுள்ள நபர் சிலை கடத்தல் கும்பலைச் சேர்ந்த முக்கிய நபர் என்பதால், தமிழகத்தில் சிலை கடத்தல் தொழிலில் தொடர்புடையவர்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்துவருகின்றனர்.

  இவரது முக்கிய கூட்டாளி தலைமறைவாகிவிட்டார். அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பிடிபட்டுள்ள ஆசாமியிடம் சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தனியாக விசாரணை நடத்திவருகின்றனர்.

  இவருக்கும் வேலூர் மாவட்டத்தில் காணாமல் போன சிலை கடத்தலில் தொடர்பு உள்ளதா என்று தனிப்படை போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

 4. vedaprakash Says:

  கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள திருபரந்தான் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் இருந்து விலை மதிப்புள்ள நடராஜர் சிலை
  உள்பட 8 சிலைகள் திருட்டு போய்விட்டது. இந்த கோவில் சோழர் கால கோவில் ஆகும்.

  இந்த சிலைகளை கடத்தியது யார்? எங்கே விற்கப்பட்டது என்பது தெரியாமல் இருந்தது. தற்போது சிலை திருட்டு தடுப்பு போலீசார் திருடப்பட்ட நடராஜர் சிலை உள்பட 8 சிலைகளும் அமெரிக்காவுக்கு கடத்தி செல்லப்பட்டதை கண்டறிந்துள்ளனர்.

  அமெரிக்காவில் உள்ள மிïசியம் ஒன்றில் இந்த சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. சர்வதேச போலீஸ் உதவியோடு அந்த சிலைகளை மீட்டு தமிழகத்திற்கு பத்திரமாக கொண்டுவர கூடுதல் டி.ஜி.பி. திலகவதி, ஐ.ஜி. ராஜேந்திரன் ஆகியோர்
  நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

  சிலை திருட்டு தடுப்பு போலீசில் 5 வருடத்தில் இருந்து 30 ஆண்டுகளாக ஒரு இன்ஸ்பெக்டர் உள்பட 24 போலீசார் பணியாற்றுகிறார்கள். இவர்களில் சில போலீசார்
  சிலை கடத்தல் கும்பலோடு தொடர்பு வைத்துக்கொண்டு பெரிய அளவில் சதிவேலையில் ஈடுபட்டதாக உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணையில் தெரிய வந்துள்ளது. உயர் அதிகாரிகள் எடுக்கும் முக்கிய முடிவுகளை அவ்வப்போது சிலை கடத்தல் கும்பலிடம்
  இவர்கள் உளவு சொல்லியதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

 5. vedaprakash Says:

  தமிழ்நாடு சிலைத்திருட்டு தடுப்புப் பிரிவு வெளியிட்டுள்ள விவரங்களை கீழ்காணும் தளத்தில் காண்க:
  http://www.tneow.gov.in/IDOL/status_info.html

  Eight Antique metal idols from one Prahadheeswarar temple at Sree Puranthan Village in Ariyalur District were found stolen on 18.08.2008 at 15.00 hrs.

  http://www.tneow.gov.in/IDOL/idols_not_yet_recovered_2009.pdf

  திருடிய சிலைகள் / விக்கிரங்கள், புதியதாக தயாரிக்கப் பட்டவையுடன் கலந்து அதற்கான சான்றிதழைப் பெற்று ஏற்றுமதியும் செயவதாக உள்ளது.

  Investigation reveals that Sanjive Asokan presented all the said eight antique idols before the Assistant Director, Office of the Handicraft development commissioner, Ministry of Textiles, Shastri Bhavan, Chennai through his agent Packia Kumar’s export company Ever Star
  International Services. Ever time, part of the stole antique idols were mingled with New metal idols. (Like 2 or 3 stolen idols with 4 or 5 new metal idols) and presented the export invoice with a false affidavit that all the idols in the consignment were recently manufactured. After obtaining the Handicraft certificate, that the said idols were Artistic Handicraft Products only, the said idols were produced at the Customs with those certificate on various dates the he made successfully
  the illicit export of stolen Antique idols to one Nimbus import export inc, No.2, Cross field Avenue, Suite 105, West Nyack, New York-10994, USA..

  எனவே, இவை சாதாரணமான சிலைத் திருட்டோ, கள்ளத்தனமாக ஏற்றுமதி செய்யப்பட்டதோ, போன்ற நிகழ்ச்சிகள் அல்ல. நன்கு விஷயங்கள் அறிந்த, குறிப்பாக சட்ட நுணுக்கங்கள் மற்றும் அதிலுள்ள ஓட்டைகள், அயல்நாட்டில் ஏற்படுத்திக் கொண்ட தொடர்புகள் முதலியவற்றோடு செயல்படும் கூட்டத்தைத் தான் நிகழ்ச்சிகள் காட்டுகின்றன.

 6. vedaprakash Says:

  IDOL WING history and set-up:
  http://www.tneow.gov.in/IDOL/IW_history.html

  Idol theft cases were investigated by a small team of officials in CB-CID till the year 1980. During the year 1980 there was a sudden increase in thefts of Panchaloga idols. The thefts of such idols from the temples affected the sentiments of the local people.

  A proposal was initiated by the Director-General of Police to re-organize the strength allotted for investigating the idol theft cases.

  The Government accepted the proposal, constituted Idol Wing CID Vide G.O.Ms.No.2098 Home (Police IV) Dept Dt. 7.10.1983, with 1 SP, 1 DSP, 5 Inspectors, 3 SIs, 4 HCs, 3 Gr.I PCs and 13 Gr.II PCs. The unit functions from the Head Quarters, Chennai.

  In the year 2000, CB-CID was bifurcated and Idol Wing was brought under the control of Economic Offences Wing in accordance with the order issued in the Chief Office Proceedings Rc.No.RAI (2)/273552/98 dt.30.12.1999.

  At present Idol Wing CID is headed by DIG-Idol Wing and assisted by one DSP and 5 Inspectors of Police.

  Primary functions of the Idol Wing CID

  * To investigate cases of theft of idols and antiques exceeding value of Rs.5 Lakhs.

  * To investigate idol theft cases referred to it by the State Government.

  * To co-ordinate in the investigation of important idol theft cases handled by the District Police

  * Collection of intelligence on nefarious activities of antique dealers and art collectors.

  சிலை திருட்டு தடுப்பு போலீசில் 5 வருடத்தில் இருந்து 30 ஆண்டுகளாக ஒரு இன்ஸ்பெக்டர் உள்பட 24 போலீசார் பணியாற்றுகிறார்கள்.

  இவர்களில் சில போலீசார் சிலை கடத்தல் கும்பலோடு தொடர்பு வைத்துக்கொண்டு பெரிய அளவில் சதிவேலையில் ஈடுபட்டதாக உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

  உயர் அதிகாரிகள் எடுக்கும் முக்கிய முடிவுகளை அவ்வப்போது சிலை கடத்தல் கும்பலிடம் இவர்கள் உளவு சொல்லியதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

  இதிலிருந்து, சுலபமாக யார் அந்த இன்ஸ்பெக்டர், அவர் யாரிடமெல்லாம் தொடர்பு வைத்திருந்தார் என்ற விவரங்களை தாராளமாக தெரிந்து கொள்ளலாம், வெளியிடலாம்.

  ஆனால், அவை வெளியிடப் படவில்லை. மற்ற விஷயங்களில் போட்டிப் போட்டுக் கொண்டு, விசாரணை செய்து செய்திகளை திரட்டும், வெளியிடும் பத்திரிக்கையாளர்கள், இதில் மௌனம் காட்டுவதைப் போல உள்ளது.

 7. vedaprakash Says:

  தாராசுரம் கோயிலில் சாமி சிலை கொள்ளை
  Monday, 05 October 2009

  கும்பகோணம், கும்பகோணம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற தாராசுரம் கோயிலில் நர்த்தன விநாயகர் சிலை நேற்று இரவு கொள்ளையடிக்கப் பட்டது. தஞ்சை பகுதியில் அடுத்தடுத்து கோயிலில் சிலை கொள்ளையடிக்கும் மர்ம நபர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  கும்பகோணம் அருகே உள்ளது தாராசுரம். அங்கு பிரசித்திபெற்ற ஐராவதீஸ்வரர், பெரியநாயகி அம்மன் கோயில் உள்ளது. முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்ட கலைநய மிக்க கோயில். யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக இந்த கோயில் அறிவிக்கப்பட்டு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில்
  உள்ளது.

  கோயிலை சுற்றி 15 ஏக்கர் பரப்பில் புல்வெளி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கோயிலுக்கு தினந்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். குறிப்பாக வெளிநாட்டு பயணிகள் அதிக அளவில் இங்கு வருவார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பல்லாயிரகணக்கான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

  இரவு 8 மணி வரை இங்குள்ள புல்தரையில் அமர்ந்திருந்தனர். இன்று காலையில் பார்த்தபோது புல்வெளியில் கிழக்கு கோபுர பகுதி அருகில் இருந்த நர்த்தன விநாயகர் சிலையை காணவில்லை. ஒன்றரை அடி உயரத்தில் கலைநயத்துடன் கல்லில் உருவாக்கப்பட்ட இந்த சிலை பீடத்துடன் பெயர்த்து எடுக்கப்பட்டு உள்ளது.

  இதுபற்றி தகவல் அறிந்ததும் குடந்தை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்கமலை மற்றும் போலீசார் வந்து சிலை கொள்ளையடிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் அந்த
  பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  கடந்த மாதம் திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள மணக்கால் என்ற கிராமத்தில் அபிமுத்தீஸ்வரர் கோயிலில் 5 அடி உயரம் உள்ள ஐம்பொன்சிலையும், அதன் அருகே பெருமாள் கோயிலில் ஒரு ஐம்பொன் சிலையும் கொள்ளை போனது. இப்போது 3 வது கோயிலிலும் சிலை கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. எனவே 3
  கோயில்களிலும் ஒரே கும்பல் கைவரிசை காட்டியதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

  http://sangamamlive.in/index.php?/content/view/5832/31/

 8. vedaprakash Says:

  தமிழகத்தில் இவ்வாறு நடக்குமா?

  கோட்டையில் தகர்க்கப்பட்டசிவலிங்கம் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டது
  தினமலர், அக்டோபர் 07,2009,00:00 IST
  http://www.dinamalar.com/new/General_detail.asp?news_id=17636

  கண்ணூர்: ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய, பழசி ராஜா பதுங்கி இருந்த கோட்டையில், அவர் வணங்கி வந்த சிவலிங்கம், மர்ம நபரால் தூக்கி எறியப்பட்டது; மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில், மாலூர் அருகே புரளிமலையில், அரிச்சந்திரக் கோட்டை உள்ளது.

  தமிழகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனைப் போல், கேரள பகுதிகளில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட பழசி ராஜா, இங்கு தான் பதுங்கி இருந்தார். அவர் பதுங்கி இருந்தபோது வழிபட்ட சிவலிங்கம், இப்போதும் அங்குள்ளது. ஆனால், பராமரிப்பின்றி காணப்பட்டது. இந்நிலையில், 200 ஆண்டு காலத்திற்கு முந்தைய சரித்திரச் சின்னங்களை, அம்மலையை கையகப்படுத்திய சிலர், அழித்து வருவதாக கூறப்படுகிறது.

  அச் சிவலிங்கத்தை மர்ம நபர்கள், சிதைத்து எறிந்து விட்டனர். இதையறிந்த அம்மலையைச் சுற்றியுள்ள முருங்கோடி, மேல் முருங்கோடி கிராமங்களில் வசிக்கும் மக்கள், சிவலிங்கத்தை தேடிக் கண்டுபிடித்தனர். ஒரு குவிண்டாலுக்கும் அதிகமான எடையுள்ள சிவலிங்கம், கயிற்றால் கட்டப்பட்டு, ஏற்கனவே இருந்த இடத்திலேயே மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. “இக்கோட்டையை சரித்திர சின்னமாக அறிவித்து, அரசு பாதுகாக்க வேண்டும்’ என, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: