Archive for ஒக்ரோபர், 2009

பாழாகிவரும் பல்லவர் கால குடைவரை கோவில் பராமரிக்கப்படுமா?

ஒக்ரோபர்21, 2009
பாழாகிவரும் பல்லவர் கால குடைவரை கோவில் பராமரிக்கப்படுமா?
அக்டோபர் 21,2009,00:00  IST
http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=5359
சிதம்பரம் கோவிலிலே இரவோடு இரவாக உண்டியல் வைத்த பச்சைத் தமிழினம், இந்த பல்லவன் குடைவரை கோவிலை ஏன் கண்டு கொள்ளவில்லை? உண்டி வைத்தாலும் காசு வராது என்பதால் தானே?

பிறகு என்ன நாத்திக-அரசியல்வாதிகளுக்கு கோவில்களில் அக்கரை?

அனால், நிச்சயமாக கொள்ளை அடிக்கும் திராவிடக் கூட்டங்களுக்கு அதில் அக்கரை உண்டு. எப்படி சமீபத்தில் ஒரு போலீஸ் அதிகாரி விக்கிரங்களைப் பற்றித் தகவல்களை கொள்ளைக்காரர்களுக்கு சொல்லி வந்தாரோ, அதே மாதிரி இத்தகைய இடிந்த கோவில்கள்,  யாரும் வராத கோவில்கள், ஒதுக்குப் புறத்தில் இருக்கும் கோவில்கள் என ஒரு பட்டியல் வைத்துக் கொண்டு கோள்ளையடித்து, கடத்தி பணம் சம்பாதிக்கின்றன். அதற்கு சான்றிதழ் அளிக்கவும் சரித்திர ஆசிரியர்கள் / ASI மற்ற அதிகாரிகளும் உண்டு.

Front page news and headlines today

செஞ்சி : செஞ்சி அருகே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல்லவ மன்னர் களின் குடைவரைக் கோவில் பராமரிப் பின்றி அழிவின் விளிம் பில் உள்ளது. தொல்லியல் துறையினரின் கவனத்திற்கு வராமல் உள்ள இந்த குடைவரை கோவிலை பாதுகாக்க அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பல்லவ மன்னர்கள் தமிழகத்தை ஆட்சி செய் வதற்கு முன்பு வரை தமிழகத்தில் கட்டப்பட்ட கோவில்கள் செங்கல், மரம், உலோகம், சுண் ணாம்பு கலவைகளால் கட்டப்பட்டன. பல்லவ மன்னர்களின் காலத் தில் முதன் முறையாக பாறைகளை குடைந்து குடைவரை கோவில்களை அமைத்தனர். செஞ்சி அருகே உள்ள மண்டகப்பட்டு, தளவானூர் ஆகிய இடங்களில் உள்ள குடைவரை கோவில்களே தமிழகத்தின் முதன்மையான குடைவரை கோவில்கள் என வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். இதே போன்ற பழமையான பல்லவ மன்னர்களின் காலத்தை சேர்ந்த குடைவரை கோவில் ஒன்று செஞ்சியில் இருந்து 5 கி.மீ., வடமேற்கே மேலச்சேரி கிராமத்தில் உள்ளது.

இந்த கோவிலில் உள்ள சிவலிங்கத்தை மத்திலீஸ்வரர் என பெயரிட்டு கிராம மக்கள் வணங்கி வருகின்றனர். வரலாற்று ஆய்வாளர்களால் இந்த குடைவரை கோவில் சிகாரி பல்லவேஸ்வரம் என குறிப்பிடப்பட்டுள் ளது. நீளமான பாறையின் அடி முதல் உச்சி வரை சதுரமான இரண்டு தூண் களுடன் குடைவரையின் முன்பகுதி உள்ளது. உள்பகுதியில் அர்த்தமண்டபம், முகமண்டபம் என பிரிக்காமல் இரண்டும் சேர்ந்து ஒரே மண்டபமாக குடைந்துள்ளனர்.

கருவறையின் உள்ளே தாய்ப் பாறையில் 5 அடி உயர அளவில் 7 அடி சுற் றளவில் என்கோண வடிவிலான சிவலிங் கத்தை வடித்துள்ளனர். கருவறைக்கு வெளியே உள்ள மண்டபத்தின் வடக்கு பகுதி தாய்ப்பறையில் நின்ற நிலையில் பார்வதியின் உருவத்தை மிக நேர்த்தியாக புடைப்பு சிற்பமாக வடித்துள்ளனர். (இந்த அம்மனை பிரஹன்னா நாயகி என கிராம மக்கள் அழைக் கின்றனர்.) குடை வரையின் வெளியே தெற்கு பகுதி சுவற்றில் விநாயகரின் புடைப்பு சிற்பமும், கருவறைக்கு வெளியே சுப்பரமணியர், வள்ளி, தேவயானை சிலைகளும் உள்ளன. இவைகள் பிற்காலத்தை சேர்ந்தவை.

இப்பகுதியை ஆட்சி செய்த நாயக்க மன்னர்கள் விழாக்கள் நடத்தவும், பைரவர் உள்ளிட்ட சிலைகளை வைத்து வழிபடவும் குடைவரையின் முன் பகுதியை மறைத்து பிற்காலத்தில் கருங்கல் தூண் மற்றும் செங்கற்களை கொண்டு இரண்டு பிரிவுகளாக மண்டபத்தை கட்டியுள்ளனர். இவற்றிற்கு வெளியே கருவறையை நோக்கியபடி சிறிய மண்டபத்தில் நந்தியும், (இந்த மண்டபம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விட்டது.) நந்திக்கு பின்புறம் பலி பீடம், துஜஸ்தம்பமும், வடக்கே சிதிலமடைந்த கருங்கல் மண்டபமும், தெற்கே குடைவரை உள்ள பறையின் தொடர்ச்சியை ஒட்டி படிகளுடன் கூடிய சிறிய குள மும். குளத்தின் எதிரே கருங்கற் களால் கட்டப்பட்ட விக்ரகங்கள் இல்லாத இரண்டு சிறிய சன்னதிகளும், சன்னதிக்கு பின்னால் நான்கு தூண்களுடன், கலை நயமிக்க சுதை வேலைகளால் ஆன சிறிய உற்சவ மண்டபமும் உள்ளது.

தளவானூரில் உள்ள சத்ருமல்லேஸ்வராயம் கோவிலை பல்லவ மன் னன் நரேந்திரன் என்னும் சத்ருமல்லனும் (காலம் கி.பி. 580 முதல் 630), மண் டகப்பட்டில் உள்ள குடைவரைக்கோவிலை பல் லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனும் கட்டியுள்ளனர். இந்த இரண்டு இடங்களிலும் உள்ள குடைவரை கோவில்களின்முகப்பில் இரண்டு பக்கமும் துவார பாலகர்களை வடித் துள்ளனர். ஆனால் மேலச்சேரியில் உள்ள குடைவரை கோவிலில் துவார பாலகர்கள் இல்லை. எனவே மேலச்சேரியில் உள்ள குடைவரை கோவில் தளவானூர், மண்டகப்பட்டு குடைவரை கோவில்களுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தவையாக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வரலாற்றில் செஞ்சிக் கோட்டை நூலாசிரியர் பொறியாளர் மணி, மேலச்சேரி குடைவரை கோவிலை பற்றி குறிப்பிடுகையில், மகேந்திரவர்மனின் தந்தையான சிம்மவிஷ்ணு காலத்தில் இந்த குடைவரை கோவில் உருவாக்கப்பட்டது என வரலாற்று அறிஞர் சுப்புராயலு தனது ஆய்வில் தெரிவித்திருப்பதை மேற் கோள் காட்டியுள்ளார். இதன்படி மேலச்சேரி மத்திலீஸ்வரர் குடைவரைக் கோவில் 4 – 5ம் நூற் றாண்டில் உருவாக்கப்பட் டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இந்த குடைவரையின் முன்பகுதியில் உள்ள வலது பக்க தூணில் பழமையான கல்வெட் டுக் கள் காணப்படுகின்றன. இந்த கோவிலின் வடமேற்கே உள்ள சிறிய ஏரியில் உள்ள பாறையிலும் சிதிலமடைந்த நிலையில் கல்வெட்டுக்கள் உள்ளன. இந்த கல்வெட்டுக்களைப் பற்றிய சரியான ஆய்வுகள் இதுவரை செய்யவில்லை. ஊருக்கு வெளியே ஒரு கி.மீ., தூரத்தில் பாதை எதுவும் இல் லாமல் கரடு முரடான ஒத்தையடி பாதையில் ஏரி வாய்க் காலை கடந்தே இந்த கோவிலுக்கு பொதுமக் கள் சென்று வரு கின்றனர். குடைவரைக்கு வெளியே பிற்காலத்தில் கட்டப் பட்ட மண்டபங்கள் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் இருப்பதுடன், விஷப் பாம்புகளின் நடமாட்டமும் இருப்பதால் மிகக்குறைந்த எண்ணிக் கையிலேயே பக்தர்கள் வருகின்றனர். ஒன்பதாவது தலைமுறையாக இந்த கோவிலில் பூஜைகள் செய்து வரும் செவலபுரை கிராமத்தை சேர்ந்த முத்து குமாரசாமி குருக் கள் மட்டும் மேலச் சேரியை சேர்ந்த குப்பன் என் பவரின் உதவியோடு நித்ய பூஜைகளை செய்து வருகிறார். கோவிலுக்கு என சொத்துக்கள் இருந் தும் இவற்றில் இருந்து வருவாய் இல்லாமல் உள்ளது.

மாமல்லபுரத்திற்கு இணையான குடைவரைகளை கொண்ட செஞ்சி பகுதியில் மற்றுமொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடம், இதுவரையில் இந்திய தொல் லியல் துறையின் கவனத்திற்கு வராமல் உள் ளது. இந்தியாவின் சிற்பக் கலை பெருமையை உலகுக்கு உணர்ந்தும் மற்றுமொரு குடைவரையை அழிவில் இருந்து காக்க வேண்டியது நமது கடமையாகும். எனவே தமிழக அரசு உடனடியாக தொல்லியல் ஆய்வா ளர்களை கொண்டு இந்த குடைவரை கோவிலை ஆய்வு செய்வதுடன், இதை அழிவில் இருந்து பாதுகாக்க மத்திய அரசின் தொல் லியல் துறைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என வரலாற்று ஆர்வலர்களும், மேலச் சேரி செஞ்சி பகுதி மக்களும் எதிர்பார்க்கின்றனர்.

ஆலயத் திருட்டு – தொடர்கிறது: இன்னும் இரு கோவில்களில் உண்டியல் உடைப்பு!

ஒக்ரோபர்20, 2009

இரு கோவில்களில் உண்டியல் உடைப்பு

காஞ்சிபுரம், அக். 19_2009: காஞ்சிபுரத்தில் இரண்டு கோவில்களில் புகுந்து உண்டியல் பணத்தை திருடிச் சென்ற நபர்க-ளைப் காவல்-துறையி-னர் தேடி வரு-கின்றனர்.

காஞ்சிபுரம் ஏகாம்பர-நாதர் கோவில் வடக்கு சன்னிதி தெருவில் ஜெய் ஆஞ்சநேயர் கோவில், அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது. நேற்று-முன்தினம் (அக்.17) இரவு மர்ம நபர்கள் ஜெய்-ஆஞ்சநேயர் கோவில் பூட்டை உடைத்துள்-ளனர். பின் உள்ளிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடியுள்ளனர். பின்னர் அய்யப்பன் கோவில் பூட்டை உடைத்து உள்-ளிருந்த உண்டியல் பணம், மின்சார அடுப்பு, பித்-தளை பாத்திரங்கள், அரிசி ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். காலையில் அப்பகுதி மக்கள் கோவில் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்-தனர். சிவகாஞ்சி காவல்-நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். காவல்-துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தமிழகத்தில் கோவில் உண்டிகள் உடைத்து பணம் திருடுவது என்பது வழக்கமாகி விட்டது.

சனீஸ்வரன், திருநள்ளாறு, திருவாரூர், கலைஞர் தொலைக்காட்சி

ஒக்ரோபர்17, 2009

சனீஸ்வரன், திருநள்ளாறு, திருவாரூர், கலைஞர் தொலைக்காட்சி

சில நாட்களுக்கு முன்பு கலைஞர் செய்தி டிவி “தாமஸ் கட்டுக்கதை”யைப் பரப்பிக் கொண்டிருந்தபோது, நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, ஏனெனில், கிருத்துவர்கள் அத்தகைய பிரசாரத்தில் வல்லவர்கள் மற்றும் “கலைஞர் டிவிக்கு” லட்டுதான்!. சென்ற ஆண்டு “தாமஸ் சினிமா”வையே தொடங்கி வைத்தவர் ஆயிற்றே கலைஞர்!

ஆனால், தீபாவளி இன்று “தசாவதாரம்” பார்க்கலாம் என்று உட்கார்ந்தபோது, விளம்பரங்களின் தொல்லைத் தாங்க முடியவில்லை. “கலைஞர் டிவிக்கு” நல்ல வருமானம்தான்! இடையில் செனலை மாற்றியபோது, கலைஞர் செய்தி டிவியில் ஏதோ “சனீஸ்வர புராணம்” என்றெல்லாம் பேசுவதைக் கண்டு பார்க்க ஆரம்பித்தேன். பிறகுதான் தெரிந்தது, அது வேறு விதமாக “சனீஸ்வர புராணத்தை” கிண்டல் செய்து கொண்டிருந்தது.

கலைஞர் செய்தி டிவி 17-10-2009 மாலை 7.30 – 8.00 வரை திருநள்ளாறு மற்றும் திருவாரூர் கோவில்களிடைய தனக்கே உரிய பாணியில் சிண்டு முடித்துக் கொண்டிருந்தது. நிகழ்ச்சியில் விளக்குபவர் நிறையவே புராணங்களையும், சம்பிராதயங்களையும் குறிப்பாக ஸ்த-புராணங்களை பற்றி நக்கலாக உச்ச ஸ்தாயில் பேசிக் கிண்டல் அடித்துக் கொண்டிருந்தார். திருநள்ளாறு சென்றாலும் திருவாரூர் செல்ல வேண்டும், ‘திருநள்ளாறு சென்றாலும் திருவாரூரை விடாதே, என்பவற்றிற்கு மிகவும் நக்கலாக விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்!

ஒரு பக்கம் மஹாதேவன் என்ற திருநள்ளாறு சாஸ்திரிகளைப் பேட்டிக் காண்பது, இடை-இடையில் அதற்கு நக்கலாக “கமன்டு” அடிப்பது என்றவாறு நிகழ்ச்சி இருந்தது. மேலும், திருவாரூர் கோவில் அதிகாரி ஒருவரையும் பேட்டி கண்டு அவர் சொல்லுவதை நடு-நடுவே சொருகியிருந்தனர்.

இதில் வெங்கடேஸ்வரன் என்ற சாஸ்திரியின் நேர்காணல் கொசுருதான்.

உண்மையில், அவ்வாறு நக்கலும், கிண்டலும் அடிப்பதைப் பார்க்க நேரிட்டால், அல்லது பார்த்தவர்கள் சொல்ல நேரிட்டார், மகாதேவன் நிச்சயமாக பேட்டி கண்டவரின் விஷமத் தனத்தை அறிந்து கொண்டிருப்பார். அடடா, ஏன் பேட்டி கொடுத்தோம் என்று நொந்து போயிருப்பார். எனெனில் அந்த் அளவிற்கு அவரது பேச்சுகளை விஷமத் தனமாக, நிகழ்ச்சியில் பேசுபவர் திரித்து விளக்கிக் கொண்டிருந்தார்.

சுருக்கமாக சொல்வதானால், திருவாரூர் சனீஸ்வரன் தான், திருநள்ளாறு சனீஸ்வரனைவிட சக்தி வாய்ந்தவர், பலன் தருபவர் என்று வற்புறுத்துவது நன்றகவே தெரிந்தது.

சரி இதன் பின்னணி என்ன என்று விசாரித்தபோது, நாளுக்கு நாள் லட கணக்கில் திருநள்ளாறுக்கு கூட்டம் பெருகுவது கண்டும், அங்கு வியாபாரம் அமோகமாக பெருகுவது கண்டும் கட்சிகாரர்களுக்கு ஒரே பொறாமையாம். விளைவு, திருவாரூர் சனீஸ்வரருக்கு மகிமை பெருக்கும் பிரசாரம் தான். அதற்கு கலைஞர் செய்தி டிவி செனல் உதவி போவது விஷேசமே!

இன்றைய வருடம், திருவாரூரில் போட்டியாக சனிபெயர்ச்சி விழாவாம்! தடபுடலான ஏற்பாடுகள்! கட்சிகாரர்களின் வசூலோ அமோகம். புதியதாக “ஸ்தல புராணம்” அச்சடித்து விற்பனை, லாட்ஜ் முதலிய வியாபாரத்தில் ஏற்கெனெவே போட்டி ஆரம்பித்து விட்டது. சில மற்ற மாநில “அரசியல் பக்தர்களையும்” இங்கு இழுப்பது, அதற்கு பத்திரிக்கைகளில் முக்கியத்துவம் கொடுத்தது முதலியனவும் அவர்களது வணிக-பெருக்க நோக்கத்தை நன்றாக வெளிக் காட்டுகிறது.

கடவுளே இல்லை, கடவுளை வணங்குவது மடத்தனம், காட்டுமிராண்டி என்றெல்லாம் பேசுபவர்கள், கோவில்-சொத்தை கொள்ளையடிப்பவர்கள், அசையும்-அசையா சொத்துகளை வாடகை / குத்தகைப் பணம் கூட கொடுக்காமல் ஏமாற்றுபவர்கள் முதலியன் இவர்களுக்கு கோவில்கள் மீது தீவிரமாகக் கண் விழுந்துள்ளது. இன்னும் தமிழ் நாட்டில் என்னென்ன நடக்கப் போகிறதோ?

பூட்டிய கோவிலைத் திறந்து கலவரத்தை உண்டாக்கும் திராவிடம், திராவிட அதிகாரிகள், நாத்திக ஆட்சியாளர்கள்

ஒக்ரோபர்15, 2009

பூட்டிய கோவிலைத் திறந்து கலவரத்தை உண்டாக்கும் திராவிடம், திராவிட அதிகாரிகள், நாத்திக ஆட்சியாளர்கள்

ராஜிவ் காந்தியாக மாறத் துடிக்கும் திராவிட அதிகாரிகள் போலும். பூட்டிக் கிடந்த கொவிலை சமயம் பார்த்துத் திறந்து கலவரத்தை உண்டாக்கி விட்டார். அப்பப்பா, இவர்களது கடவுள், மதம், முதலியவற்றில் திடீர்-திடீரென்று பீறிக் கிளம்பும் ஆவலை, கரிசனத்தை, கவலையை நோக்கும்போது, அவர்களது இரட்டைவேடம், போலித்தனம் முதலியன வெளிப்படும்போது அருவருப்புதான் ஏற்படுகிறது. எப்படி நடிகைகள் கற்பைப் பற்றி ரோஷத்துடன் கவலைப் படுகிறார்களோ!

வேதாரண்யம் அருகே செட்டிக்குளம் என்ற கிராமம் உள்ளது. அங்குள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குள் தலித்கள் அனுமதிக்கபடுவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த மாதம் 30ம்தேதி கம்யூனிஸ்டுகள் “கோவில் ஃஉழைவு போராட்டம்” நடத்தியதால், கோவில் பூட்டப்பட்டது. இதனால் தலித்களை கோயிலுக்குள் அழைத்துச் செல்ல அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஆர்டிஓ ராஜேந்திரன் தலைமையில் இன்று தலித்துக்கள் ஆலய பிரவேசம் செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து அங்கு பதட்டம் ஏற்பட்டது. கூடுதல் டிஎஸ்பி ஈஸ்வரன்
தலைமையில் பலத்த போலீஸ் படை குவிக்கப்பட்டது.

தலித்துக்களை இன்று காலை ஆர்டிஓ ராஜேந்திரன் அழைத்து வந்து இருக்கிறார். ஊர் மக்கள் திரண்டார்கள். தலித்துக்களை அழைத்துச் செல்லக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதையும் மீறி தலித்துகள் அழைத்துச் செல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு கூடியிருந்த கூட்டத்தினர் சரமாரியாக கற்களை வீசி இருக்கிறார்கள். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. உடனே போலீசார் 10 ரவுண்ட் வானத்தை நோக்கி சுட்டார்கள்.
இதனை தொடர்ந்து கூட்டம் கலைந்து ஓடியது. இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. கூடுதல் போலீசார் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

“வேதாரண்யம் அருகே கலவரம், துப்பாக்கி சூடு”, “தலித்துகள் ஆலய பிரவேசம்: வேதாரண்யத்தில் துப்பாக்கி சூடு”, என நேற்று மாலையிலிருந்தே (14-10-2009) செய்திகள் வெளிவர ஆரம்பித்து விட்டன. வேதாரண்யம் என்றால், ஏதோ “சத்தியாகிரகம்” நடக்கிறது என்று, தமிழர்கள் நினைத்துக் கொள்ளலாம். அந்த அதிகாரியும் தான் ஏதோ ஒரு புரட்சி செய்து விட்டதாக நினைத்துக் கொள்ளலாம்! உள்ளப் பிரச்சினைகளை மறந்து, திசைத் திருப்ப செய்யப் பட்ட ஏற்பாடா அல்லது வேறு ஏதாவது காரணமா என்று கடவுளுக்கு இல்லை கடவுள்-இல்லாததற்குத் தான் தெரியும். இல்லை, ஒருவேளை, பெரியாரின் ஆவியைத் தான் கேட்க வேண்டியிருக்கும்.

“தலித்துகள் ஆலய பிரவேசம்: வேதாரண்யத்தில் துப்பாக்கி சூடு”, என்று பத்திரிக்கைகளில் படிக்கும்போது, விஷயம் தெரிந்த வாசகர்களுக்கு ஒரு வினா எழலாம். இங்கு “தலித்துகள்” என்றால் யார்? இந்துக்களா, கிருத்துவர்களா, நியோ-புத்திஸ்ட்டுகளா அல்லது மற்றவர்களா? “தலித்” என்ற வார்த்தையை உபயோகிக்கக் கூடாது என்று ஆணையிட்டப் பிறகும் ஏன் அந்த வார்த்தை உபயோகிக்கப் படுகிறது? திடீரென்று என்ன அவசரம், கோவிலில் நுழைய? திராவிடம் பேசி, கடவுளர்களை அவதூறு பேசி, தூற்றி-அகவல்கள் பாடி, பல வழக்குகள் நீதிமன்றத்தில் இருந்தாலும், “செக்யூலரிஸ” தமிழ்நாட்டை ஆளும் கருணாநிதி சக்கர-நாற்காலியில் பவனி வருவதாலா? தமிழனுக்கே ஒவ்வாத “தீபாவலி” வந்து விட்டதாலா?

விலைவாசி உயர்ந்து, தமிழர்களிடமிருந்து பணம் தினமும் வியாபாரிகளால் உரிஞ்சப் படுகிறது. இந்த “வைசியர்கள்” ஏன் இப்படி செய்கிறார்கள் என்று கேட்க யாருக்கும் நாதியில்லை. இந்த வலியானால், இன்னும் என்னென்ன நிகழப் போகிறதோ தெரியவில்லை. முன்பே கருணாநிதி காய்கறி கடைகள் வைத்து காய்கறி விற்றால் நன்றாக இருக்கும் என்று எழுதியிருந்தேன். ஆனால், அவர் “ஹாயாக” உருளும் நாற்காலியில் பவனி வந்து கொண்டு இருக்கிறார். மகன்-துணை முதல்வரோ திட்டங்களை திறந்து கொண்டே போகிறார்.

திருவாரூர் கோவிலில் திருட்டு!!!

ஒக்ரோபர்13, 2009
திருவாரூர் கோவிலில் திருட்டு: மர்ம நபர்களை தேடும் தனிப்படை
அக்டோபர் 13,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=13342

Important incidents and happenings in and around the world

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவில் உண்டியலை உடைத்து தங்கம், வெள்ளி மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த 12ம் தேதி அதிகாலை, திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் இரண்டு உண்டியல்களை கடப்பாரையால் உடைத்து, ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். கோவில் நிர்வாக அதிகாரி கஜேந்திரன் புகாரின் பேரில், திருவாரூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். கைரேகை பதிவு செய்யப்பட்டதில், பழைய குற்றவாளிகளின் கைரேகையுடன் ஒத்துவரவில்லை.

இதையடுத்து, மூன்று சிறப்பு தனிப்படைகளை போலீசார் அமைத்து, குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். பழைய குற்றவாளிகள் குறித்தும் தீவிர விசாரணை நடக்கிறது. தனிப்படையினர் சந்தேகப்படும் படியான நபர்களின் கைரேகை எடுத்து, சோதனை செய்து வருகின்றனர். இதுவரை 50க்கும் மேற்பட்டவர்களின் கைரேகை பதிவு செய்து சோதனை செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உண்டியல் உடைத்து கொள்ளை
[ ஞாயிற்றுக்கிழமை, 11 ஒக்ரோபர் 2009, 02:12.04 PM GMT +05:30 ]
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தியாகராஜர் சன்னதி, நவக்கிரக சன்னதிகள் முன்பு இருந்த உண்டியல்கள் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதனால் கோயில் நடை அடைக்கப்பட்டதால் வெளியூர் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் திரும்பிச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சைவ தலங்களில் பழமையானதும் வரலாற்று சிறப்பு மிக்கதுமான திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்கு சனி, ஞாயிறு கிழமைகளில் பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வந்து செல்வார்கள். நேற்று சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. இரவு 10 மணிக்கு கோயில் குருக்கள் மற்றும் ஊழியர்கள் கோயில் உள்பிரகார கதவை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டனர்.
இன்று அதிகாலை 5.30 மணிக்கு குருக்கள் மற்றும் ஊழியர்கள் கோயிலை திறக்க வந்தனர். அப்போது கோயில் உள்பிரகார கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது தியாகராஜர் சன்னதி முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது. நவக்கிரக சன்னதி முன்பு இருந்த 4 அடி உயர உண்டியலும் உடைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து கோயில் ஊழியர்கள் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையரும், கோயில் நிர்வாக அதிகாரியுமான கஜேந்திரனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் திருவாரூர் நகர போலீசில் புகார் செய்தார். டிஎஸ்பி சீனிவாசன், இன்ஸ்பெக்டர் இமயவரம்பன் மற்றும் போலீசார் கோயிலுக்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை, தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. 2 மோப்பநாய்களும் வரவழைக்கப்பட்டது.

கடந்த மாதம் 2-வது வாரத்தில் உண்டியல் திறக்கப்பட்டது. அதன்பின்னர், காலாண்டு விடுமுறை, புரட்டாசி உற்சவம் என்பதால் உள்ளூர், வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சென்றனர். இதனால் உடைக்கப்பட்ட 2 உண்டியல்களில் ரூ.50ஆயிரத்துக்கு மேல் பணம், சில்லரை காசுகள் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. சிலைகள் எதுவும் திருட்டுபோனதா என்று தீவிர சோதனை நடத்திவருகின்றனர்.

போலீசாரின் சோதனையை தொடர்ந்து கோயில் வெளிப்பிரகார 4 வாயில்களும் அடைக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். கொள்ளை குறித்து போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோயிலில் திருட்டு நடந்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து வரும் கோவில் திருட்டுகள்

ஒக்ரோபர்7, 2009

கோவில் கலசம் திருட்டு
http://www.dinamalar.com/new/district_main.asp?ncat=Chennai
தினமலர், சென்னை, 07-09-2009

வளசரவாக்கம்: வளசரவாக்கம் கைக்கான்குப்பத்தில் ஓம் சூமுக விநாயகர் கோவிலில் விநாயகர், முருகன், ஐயப்பன் உள்ளிட்ட ஏராளமான சுவாமி சன்னிதிகள் உள்ளன. இதில், ஐயப்பன் சன்னிதியின் மேல் வைக்கப்பட்டிருந்த கோபுர கலசம் திருடு போனது. செம்பினால் செய்யப்பட்ட அந்த உலோக கலசம், ஒரு கிலோ எடையுள்ளது. பெரிய, பெரிய கோவில்களில் இதுபோன்ற கலசங்களில் தங்கம், நவரத்தினம் போன்றவை வைக்கப்படும். அவையும் பிரதான கலசங்களிலேயே இடம் பெறும். இதனால், விலை உயர்ந்த பொருட்களை எதிர் பார்த்து ஐயப்பன் கோபுர கலசம் திருடப்பட் டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து வளசரவாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

முன்பு, http://www.indiainteracts.com என்ற தளத்தில், தமிழகத்தில் தொடர்ந்து நடந்த, நடந்து வரும் கோவில்-கொள்ளை, திருட்டு, சிலைகள் உடைப்பு முதலியவற்றைப் பதிவு செய்து வந்தேன். திடீரென்று அவர்கள் நிறுத்திவிட்டார்கள். ஆகையால், இங்கு அவற்றைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.