பூட்டிய கோவிலைத் திறந்து கலவரத்தை உண்டாக்கும் திராவிடம், திராவிட அதிகாரிகள், நாத்திக ஆட்சியாளர்கள்

பூட்டிய கோவிலைத் திறந்து கலவரத்தை உண்டாக்கும் திராவிடம், திராவிட அதிகாரிகள், நாத்திக ஆட்சியாளர்கள்

ராஜிவ் காந்தியாக மாறத் துடிக்கும் திராவிட அதிகாரிகள் போலும். பூட்டிக் கிடந்த கொவிலை சமயம் பார்த்துத் திறந்து கலவரத்தை உண்டாக்கி விட்டார். அப்பப்பா, இவர்களது கடவுள், மதம், முதலியவற்றில் திடீர்-திடீரென்று பீறிக் கிளம்பும் ஆவலை, கரிசனத்தை, கவலையை நோக்கும்போது, அவர்களது இரட்டைவேடம், போலித்தனம் முதலியன வெளிப்படும்போது அருவருப்புதான் ஏற்படுகிறது. எப்படி நடிகைகள் கற்பைப் பற்றி ரோஷத்துடன் கவலைப் படுகிறார்களோ!

வேதாரண்யம் அருகே செட்டிக்குளம் என்ற கிராமம் உள்ளது. அங்குள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குள் தலித்கள் அனுமதிக்கபடுவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த மாதம் 30ம்தேதி கம்யூனிஸ்டுகள் “கோவில் ஃஉழைவு போராட்டம்” நடத்தியதால், கோவில் பூட்டப்பட்டது. இதனால் தலித்களை கோயிலுக்குள் அழைத்துச் செல்ல அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஆர்டிஓ ராஜேந்திரன் தலைமையில் இன்று தலித்துக்கள் ஆலய பிரவேசம் செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து அங்கு பதட்டம் ஏற்பட்டது. கூடுதல் டிஎஸ்பி ஈஸ்வரன்
தலைமையில் பலத்த போலீஸ் படை குவிக்கப்பட்டது.

தலித்துக்களை இன்று காலை ஆர்டிஓ ராஜேந்திரன் அழைத்து வந்து இருக்கிறார். ஊர் மக்கள் திரண்டார்கள். தலித்துக்களை அழைத்துச் செல்லக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதையும் மீறி தலித்துகள் அழைத்துச் செல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு கூடியிருந்த கூட்டத்தினர் சரமாரியாக கற்களை வீசி இருக்கிறார்கள். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. உடனே போலீசார் 10 ரவுண்ட் வானத்தை நோக்கி சுட்டார்கள்.
இதனை தொடர்ந்து கூட்டம் கலைந்து ஓடியது. இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. கூடுதல் போலீசார் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

“வேதாரண்யம் அருகே கலவரம், துப்பாக்கி சூடு”, “தலித்துகள் ஆலய பிரவேசம்: வேதாரண்யத்தில் துப்பாக்கி சூடு”, என நேற்று மாலையிலிருந்தே (14-10-2009) செய்திகள் வெளிவர ஆரம்பித்து விட்டன. வேதாரண்யம் என்றால், ஏதோ “சத்தியாகிரகம்” நடக்கிறது என்று, தமிழர்கள் நினைத்துக் கொள்ளலாம். அந்த அதிகாரியும் தான் ஏதோ ஒரு புரட்சி செய்து விட்டதாக நினைத்துக் கொள்ளலாம்! உள்ளப் பிரச்சினைகளை மறந்து, திசைத் திருப்ப செய்யப் பட்ட ஏற்பாடா அல்லது வேறு ஏதாவது காரணமா என்று கடவுளுக்கு இல்லை கடவுள்-இல்லாததற்குத் தான் தெரியும். இல்லை, ஒருவேளை, பெரியாரின் ஆவியைத் தான் கேட்க வேண்டியிருக்கும்.

“தலித்துகள் ஆலய பிரவேசம்: வேதாரண்யத்தில் துப்பாக்கி சூடு”, என்று பத்திரிக்கைகளில் படிக்கும்போது, விஷயம் தெரிந்த வாசகர்களுக்கு ஒரு வினா எழலாம். இங்கு “தலித்துகள்” என்றால் யார்? இந்துக்களா, கிருத்துவர்களா, நியோ-புத்திஸ்ட்டுகளா அல்லது மற்றவர்களா? “தலித்” என்ற வார்த்தையை உபயோகிக்கக் கூடாது என்று ஆணையிட்டப் பிறகும் ஏன் அந்த வார்த்தை உபயோகிக்கப் படுகிறது? திடீரென்று என்ன அவசரம், கோவிலில் நுழைய? திராவிடம் பேசி, கடவுளர்களை அவதூறு பேசி, தூற்றி-அகவல்கள் பாடி, பல வழக்குகள் நீதிமன்றத்தில் இருந்தாலும், “செக்யூலரிஸ” தமிழ்நாட்டை ஆளும் கருணாநிதி சக்கர-நாற்காலியில் பவனி வருவதாலா? தமிழனுக்கே ஒவ்வாத “தீபாவலி” வந்து விட்டதாலா?

விலைவாசி உயர்ந்து, தமிழர்களிடமிருந்து பணம் தினமும் வியாபாரிகளால் உரிஞ்சப் படுகிறது. இந்த “வைசியர்கள்” ஏன் இப்படி செய்கிறார்கள் என்று கேட்க யாருக்கும் நாதியில்லை. இந்த வலியானால், இன்னும் என்னென்ன நிகழப் போகிறதோ தெரியவில்லை. முன்பே கருணாநிதி காய்கறி கடைகள் வைத்து காய்கறி விற்றால் நன்றாக இருக்கும் என்று எழுதியிருந்தேன். ஆனால், அவர் “ஹாயாக” உருளும் நாற்காலியில் பவனி வந்து கொண்டு இருக்கிறார். மகன்-துணை முதல்வரோ திட்டங்களை திறந்து கொண்டே போகிறார்.

குறிச்சொற்கள்: ,

4 பதில்கள் to “பூட்டிய கோவிலைத் திறந்து கலவரத்தை உண்டாக்கும் திராவிடம், திராவிட அதிகாரிகள், நாத்திக ஆட்சியாளர்கள்”

  1. vedaprakash Says:

    இன்று (17-10-2009) அன்று விடுதலை இவ்வாறு தலையங்கத்தில் வெளியிட்டுள்ளது:

    கொண்டாடலாமா?

    நமக்குக் கேடும், இழிவும் ஏற்பட்டதான போராட்டத்தில் வரும் உற்சவம், பண்டிகைகள் ஆகியவற்றை நாம் திராவிடர்கள், அதாவது சூத்திரர்கள் என இழித்துக் கூறப்படுபவர்களாகிய நாம் கொண்டாடலாமா?

    (விடுதலை,17.10.1965)

    சிவனை வழிபட குறுக்கே நந்திகளா?

    நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஒன்றியம் செட்டிப்புலம் என்ற ஊரில் உள்ள சிவன் கோயிலில் தாழ்த்தப்பட்டவர்கள் வழிபாடு செய்வதற்கு மற்ற ஜாதிக்காரர்கள் எதிர்ப்பும், தடையும் செய்வதால் அங்கு பிரச்சினைகள் வெடித்துக் கிளம்பியுள்ளன. காவல்துறையினரும், அவர்களின் வாகனமும் அவர்களால் தாக்கப்-பட்டுள்ள நிகழ்வு வன்மையாகக் கண்டிக்கத்-தக்கதாகும்.

    கோட்டாட்சியர், காவல்துறை அதிகாரிகள் நேரடியாகப் பேசியும், உயர்ஜாதியினர் என்று தங்களைக் கருதிக்கொண்டிருக்கிறவர்கள், அதற்கு ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை என்பது வருந்தத்தக்க ஒன்றாகும்.

    2009 ஆம் ஆண்டிலும், அதுவும் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இந்த மனப்பான்மை ஒரு சிலரிடம் இருப்பது மிகவும் வெட்கப்-படத்தக்கதாகும்.

    தாழ்த்தப்பட்டவர்களானாலும், பிற்படுத்தப்பட்ட-வர்களானாலும், பார்ப்பனர் அல்லாத முன்னேறிய ஜாதியினர் ஆனாலும், இந்து மத சாத்திரங்களின்-படியும், ஏன், இந்திய அரசமைப்புச் சட்டப்-படியும்-கூட சூத்திரர்கள்தான். இந்த இழிவை ஒழித்துக்-கட்ட முன்வராதவர்கள் தார்மீகக் கோபம் கொள்-ளாத-வர்கள், மட்டத்தில் உசத்தி என்கிற முறையில் சண்டை போட வீதிக்கு வருகிறார்கள் என்றால், இதன் பொருள் என்ன? இன்னும் சிந்திக்கும் தகுதியை அவர்கள் பெறவில்லை என்றுதான் பொருள்படும்.

    தன்னைக் கும்பிட வரும் பக்தர்களுக்-கிடையே ஏற்படும் இந்தச் சண்டை சச்சரவு-களைப் போக்கக்கூட வக்கற்ற, சக்தியற்ற நிலை-யில்-தான் அந்தக் கோயில் சிவலிங்கம் என்ற குத்துக்-கல் அடித்து வைக்கப்பட்டுள்ளது _ இதைக் கண்ட பிறகாவது தாழ்த்தப்பட்டவர்களோ, பிற்படுத்தப்பட்டவர்களோ, கொஞ்சம் சிந்திக்கவேண்டாமா?

    கோயிலும், பக்தியும், சடங்குகளும் _ இவற்றைக் கட்டிக் காக்கும் மதமும், ஜாதிகளை உண்டாக்கி அவர்களிடையே கலகத்தை மூட்டு-வதற்காகத்தான் என்ற கண்ணோட்டத்திலும் சிந்திக்கவேண்டியது மிகவும் அவசியமாகும்.

    கடவுள் ஒருவர்தான் என்றும், அவர்தான் மக்களை எல்லாம் படைத்தார் என்றும், கடவுளே மக்களுக்குத் தந்தை என்றும் இதோபதேசம் செய்யும் பாகவதர்களும், உபந்நியாசிகளும், சங்கராச்சாரிகளும், ஜீயர்களும், ஆன்மிகவாதி-களும், கல்கி, தினமணி, ஆனந்தவிகடன், காம-கோடி, துக்ளக் வகையறாக்களும் கோயிலுக்குள் நுழைந்து சிவலிங்கத்தை வழிபடும் பிரச்சினை-யில் மோதல் ஏற்பட்டு இருக்கிறதே _ அதிகாரி-களால் கோயில் பூட்டப்பட்டுள்ளதே, இதற்கு என்ன சமாதானம் சொல்லப் போகிறார்கள்?

    இன்னொரு கேள்வி மிக முக்கியமானதாகும். நாகை மாவட்டத்தில், வேதாரண்ய வட்டாரத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் இருக்கத்தானே செய்-கின்றன. அவற்றின் கொள்கைகள் என்ன? ஜாதி பேதம் இல்லாமல் வழிபாடு செய்ய அனை-வருக்கும் உரிமை உண்டு என்று நினைப்பவர்-கள்-தானே. அரசியலை மறந்துவிட்டு அவர்கள் வகிக்கும் கட்சிகளின் கொள்கை அடிப்படையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, ஒரு சுமூகமான முடிவினை எட்டுவதற்கு முயற்சிக்கக் கூடாதா?

    வெறும் சட்டத்தை மட்டும் கையில் எடுத்துக்-கொண்டு அதிகாரத் தோரணையில் பிரச்சி-னைக்-குத் தீர்வு காண்பது கடைசிக் கட்டமாகத்-தானிருக்க முடியும்.

    அதற்கு முன்னதாக அனைத்துக் கட்சியினர் ஒன்றுகூடி இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண-வேண்டும்; இந்தப் பிரச்சினையில் ஒத்துழைப்புக் கொடுக்க திராவிடர் கழகம் தயாராகவே இருக்கிறது.

    மாவட்ட ஆட்சியர் இதற்கான முயற்சியில் ஈடுபடலாமே!

    கீரிப்பட்டி, பாப்பாப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டகச்சியேந்தல் முதலிய ஊர்களில் பத்தாண்டுகளுக்குமேல் ஊராட்சிமன்ற தேர்தல் நடத்த முடியாதிருந்த நிலையில், அதனை மாற்றிக் காட்டிய சாதனை மானமிகு கலைஞர் அவர்-களின் தலைமையிலான ஆட்சிக்கு உண்டே! முத-லமைச்சர் தலையிட்டால்தான் தீர்வு கிடைக்-கும் என்றால், கலைஞர் அவர்கள் கண்டிப்பாகக் கவனம் செலுத்துவாரென்று நம்புகிறோம்!

  2. தமிழகத்தில் தொடரும் கோவில் கொள்ளைகள் – தாலிகள் அறுக்கப்படுகின்றன, காரணம், பின்னணி என்ன? « நாத Says:

    […] [12] https://atheismtemples.wordpress.com/2009/10/15/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B… […]

  3. தமிழகத்தில் தொடரும் கோவில் கொள்ளைகள் – தாலிகள் அறுக்கப்படுகின்றன, காரணம், பின்னணி என்ன? « நாத Says:

    […] [12] https://atheismtemples.wordpress.com/2009/10/15/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B… […]

  4. தமிழகத்தில் தொடரும் கோவில் கொள்ளைகள் – தாலிகள் அறுக்கப்படுகின்றன, காரணம், பின்னணி என்ன? « நாத Says:

    […] [12] https://atheismtemples.wordpress.com/2009/10/15/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B… […]