Archive for நவம்பர், 2009

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் எண்ணிக்கையை உயர்த்த கோரிக்கை!

நவம்பர்14, 2009
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் எண்ணிக்கையை உயர்த்த கோரிக்கை
நவம்பர் 14,2009,00:00  IST

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=18788

General India news in detail

சென்னை : “”சிலைகடத்தல் தடுப்புப் போலீசார் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், மாவட்ட அளவில் சிலைகடத்தல் தடுப்பு போலீஸ் பிரிவை உருவாக்க வேண்டும்,” என பொருளாதாரக் குற்றப்பிரிவு மற்றும் சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு ஏ.டி.ஜி.பி., திலகவதி தெரிவித்தார். சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது: சிலைகடத்தல் தடுப்பு போலீசில், தமிழக அளவில் ஐ.ஜி., தலைமையில், ஒரு டி.எஸ்.பி., ஐந்து இன்ஸ்பெக்டர்கள், 10 போலீசார் மட்டுமே உள்ளனர். சமீபகாலமாக, பொருளாதாரக் குற்றப்பிரிவில் உள்ள போலீசாரைப் பயன்படுத்தி, கடத்தப்பட்ட சிலைகள் தொடர்பாக விசாரணை நடத்தி மீட்டு வருகிறோம்.

சிலைகடத்தல் தடுப்பு போலீசாரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் தான் அதிகளவில் புராதானச் சிலைகள் உள்ளன என கூறுவது தவறு. விழுப்புரம், கடலூர், கன்னியாகுமரி என, தமிழகம் முழுவதும் பல பெரிய கோவில்களில், அரிய புராதானச் சிலைகள் உள்ளன.

சில கோவில்களில் பாதுகாப்பு மிகவும் மோசமாக உள்ளது. பாழடைந்த நிலையில், கேட்பாரற்று இருக்கும் கோவில்களில் சிலைகளை திருடினால், வெளியே தெரியாது என திட்டமிட்டு திருடுகின்றனர். சில கோவில்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் வயது 70க்கும் மேல் உள்ளது.இவற்றை பாதுகாக்க, மாவட்ட அளவில் சிலைகடத்தல் தடுப்பு போலீஸ் படையை உருவாக்க வேண்டும். இதுகுறித்து, அரசுக்கு பரிந்துரை அனுப்பியுள்ளோம். அரசு பரிசீலித்து வருகிறது. இவ்வாறு திலகவதி கூறினார்.

கோவில் சிலைகள் திருடு போகாமல் பாதுகாப்பது தொடர்பாக சில நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி, இந்து சமய அறநிலையத் துறைக்கு, சிலைகடத்தல் தடுப்பு போலீசார் சார்பில் கடிதமும் எழுதப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது: கோவில் சிலை மற்றும் நகைகளை பாதுகாக்க, குறைந்தபட்சம் மாவட்டத்திற்கு ஒரு சிலை மற்றும் நகைகள் பாதுகாப்பு மையம் ஏற்படுத்தப்பட வேண்டும். விலைமதிப்பற்ற சிலைகள் உள்ள கோவில்களை பட்டியலிட்டு, சிலைகடத்தல் தடுப்பு போலீசாருக்கு வழங்க வேண்டும்.

அச்சிலைகள் பாதுகாப்பு மையங்களுக்கு மாற்றப்படும் வரை உள்ளூர் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். கோவில்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது. மரகத லிங்கம் திருடு போன திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோவிலில், பழுதடைந்த எச்சரிக்கை அலாரம் ஆறு மாதங்களாக சரிசெய்யப்படவில்லை.

நவீன உபகரணங்கள் மூலம், கோவில்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். திருடு போகும் சிலைகளை அடையாளம் காண உதவும் வகையில், அனைத்து சிலைகளையும் புகைப்படம் எடுத்து பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisements

கோவில்களுக்கு ISO சான்றிதழ் தேவையா?

நவம்பர்13, 2009

கோவில்களுக்கு ISO சான்றிதழ் தேவையா?

கோவில் நிர்வாகத் தரம் பார்க்கும் நிறுவனங்கள், முயற்ச்சிகள்: திடீரென்று இப்பொழுது கோவில்கள் எல்லாம் ISO தரச்சான்றிதழ் (ISO Certification) பெற்றாகிவிட்டன என்று தெரிவிக்கப் படுகின்றன. உடனே கோவில் டிரஸ்ட் அதிகாரிகள், தலைவர்கள், “இப்பொழுதெல்லாம் கோவில்கள் மிகவும் நன்றக நிர்வகிக்கப்படுவதாகவும், வெளியாட்களின் சேவையால் கோவிலின் பாதுகாப்பு மற்றும் தூய்மை நன்றாக இருப்பதாகவும் வைத்திருப்பதாகவும்“ அறிக்கைகள் விடப்படுகின்றன, செய்திகள் வருகின்றன. உடனே மற்றவர்களும் அப்பாதையைப் பின்பற்றுவோம் என்று கிளம்பிவிட்டர்கள்.

கோவில்களை சுத்தப்படுத்த வெளியாட்கள் வரவேண்டும் என்றால் இந்துக்கள் வெட்கப்பட வேண்டும்: இந்துக்களுக்கு என்ன கொஞ்சம் கூட சூடு, சொரணை, தன்மானம்…..  ….  ….  …இவையெல்லாம் இல்லையா, அல்லது மறந்து விட்டதா? “இந்துக்களாக” சாமி கும்பிட உள்ளே வரும்வரும் அவர்களுக்கு கொஞ்சம்கூட புத்தியில்லையா? மனத்திற்குள் இருக்கும் மாசை, அழிக்கை, குப்பைகளை அழிக்கத்தானே இந்துக்கள் கோவில்களுக்கு வருகிறார்கள்? ஒருவேளை, இத்தனை ஆண்டுகளாக கோவில்களுக்கு வந்து அங்கேயே இவையெல்லாவற்றையும் கொட்டிவிட்டுச் சென்றதால்தானோ, இந்த பெறுக்கிகள் இன்று தூய்மை செய்கிறேன் என்று கிளம்பி விட்டர்கள்? பாருங்களேன், கோவில்களுக்கு உள்ளயேயும், வெளியேயும்! [மனிதனால் வெளியேற்றப் பட்ட குப்பைகள், நாகரிக குப்பைகள், விஞ்ஞானமுறையில் கொட்டப்பட்டக் குப்பைகள்] அத்தகைய “பக்திகரமான” ஊழலை, அசிங்கத்தை ஏன் செய்ய வேண்டும்? இதையேல்லாம் தான் ஆழ்வார்களும், நாயன்மார்களும் சொல்லிக் கொடுத்தார்களா?

உழவாரப்பணி எங்கே போயிற்று? நமது திருமூலர் சொல்லியதைவிடவா, இவர்கள் நமக்கு ஆலய நிர்வாகத்தைப் பற்றி சொல்லிவிட போகின்றனர்? நினைவிருக்கிறதா? திருநாவுக்கரசர் / அப்பர் அடிகள் அந்த தள்ளாடும் வயதினிலும் எப்படியிருந்தார்? குவாலிஸ் காரில் சென்றாரா? கையிலே உழவாரப்ப்டை வைத்துக் கொண்டுதானே கோவில்களில் சுத்தம் செய்துகொண்டிருந்தார். ஆமாம், “பெருசு” பற்றியெல்லாம் கதை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் என்று ஏளனம் பேசி திசைத் திருப்பும் காலமிது! இந்துக்கள் விழித்துக் கொள்ளவேண்டும். எப்படி தங்களது மீதான தாக்குதல்கள் அதி-நவீன முறையில் பிரயோகிக்கப் படுகிறது, செயல்படுகிறது என்பதனை உணர்ந்து, அறிந்து காரியத்தில் இறங்கவேண்டும் [ஏனெனில் படித்த நண்பர்களே அத்தகைய நவீன நிர்வாகமுறை நல்லதிற்காகத்தானே என்று வாதிட தோன்றும்]

கோவில்களைக் கட்டியவர்களுக்கு நிர்வாகம் தெரியாதா? கோவில் நிர்வாகம் என்பது ஒன்றும் புதிய கலையல்ல, அதை இந்தியர்களுக்கோ, இந்துக்களுக்கோ புதியதாகச் சொல்லிக் கொடுக்க. கோவிகளைக் கட்டத் தெரியும், ஆனால் நிர்வகிக்கத் தெரியாது என்பன போல சித்தரித்துக் காட்டும் இந்த முயற்ச்சிகள் கோவில்களில் உண்மையான அக்கரை இல்லாத “கருப்புப் பரிவார்”, “சிகப்புப் பரிவார்” கோஷ்டிகள், மறைமுகமாக கோவில் பணத்தை சட்டரீதியாக உறுஞ்சுவதற்கு என்றுதான் தெரிகிறது. மேலும் அத்தகைய எண்ணத்தை உருவாக்குவதே நச்சுத்தனமானது.

“குருகுலங்கள்” அழிக்கப்பட்டு வியாபாரக் கூடங்கள் வளர்ந்தமை: எப்படி “குருகுலங்கள்” அழிக்கப்பட்டு, இன்று கல்வி வியாபாரமாக்கப் பட்டு அதிலும், சிறுபான்மையினர் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு இந்திய நாகரிகம், கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் முதலியவற்றை அழித்துக் கொண்டிருக்கிறார்களோ, அதுபொல, நேரிடையாக கோவில்களில் நுழைந்து, இந்தியநாகரிகம், கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் முதலியவற்றை அழிக்கப் போடும் வேடமோ என்ரு எண்ணத் தோன்றுகிறது. விஜயநகர காலத்திற்குப் பிறகு வந்த மேனாட்டு வியாபாரக் கம்பெனிகளும், இனிமேல் வரப்போகும் வியாபாரக் கம்பெனிகளும் ஆலயங்களைக் காக்காது, நிச்சயமாகக் கொள்ளைத் தான் அடிக்கும்.

கோவில்கள் வியாபாரக் கம்பெனிகள் அல்ல: இப்படியே விட்டுவிடால், எப்படி “குருகுலங்கள்” அழிக்கப்பட்டு, இன்று கல்வி வியாபாரமாகி போய்விட்டதோ, அதுபோல, கோவில்களும் கம்பனிகளாகிவிடும்! பிறகென்ன, லாபம்-நஷ்டம் பார்க்கவேண்டியிருக்கும்! ஒரு பொருளை / சேவையை விற்ப்பவன் மற்றும் வாங்குபவன் என்ற நிலையில் கோவில்கலின் நிலையைக் குறைத்துவிட்டால், அத்தகைத் தரம், தரமாகாது. அது கோவில்களுக்கு(ள்) வரும் “நம்பிக்கையாளர்களின்” திறம் குறைந்துவிட்டது என்பதுதான் பொருள்! பிறகு எந்த கோவில்கள் லாபத்துடன் இயங்குகிறது-இல்லை, எந்த கோவில்கள் வேவை செய்யும் கம்பெனிகளுக்கு சம்பளம் / போனஸ் கொடுக்கிறது-இல்லை, அத்தகைய கோவில்களின் மீது வழக்குகள், அத்தகைய குற்ரங்களை மீறியதற்கு கோவில்களின் மீது அபராதங்கங்கள், திவாலா நோட்டீஸுகள், ஜப்தி…………………அல்லது அடுத்த கோவில் ”தத்தெடுத்து”க் கொள்வது (takeover)………..  …  … இப்படியெல்லாம் நடக்கும். அது இந்துக்களுக்குத் தேவையா? அதுமட்டுமா, வேவை செய்யும் வேலையாட்கள் இந்த கோவில் சங்கம் . அந்த கோவில் சங்கம் என்று ஆரம்பித்துவிட்டு, கோவில் முன்பே கொடியேற்றி விடுவர்! அவை அரசியல் சார்புடையாதாக இருக்கும். திடீரென்று “ஸ்டிரைக்”கும் நடக்கும்! இதெல்லாம் தேவையா?

கோவில்களை பாதுகாப்பது யார்? “வெளியாட்களை நியமித்தல்” (Outsourcing) என்ற ரீதியில், இவர்களே புதிய கம்பெனிகளைத் தோற்றுவித்து அல்லது உள்ல கம்பெனிகளையே காசு கொடுத்து வாங்கிவிட்டு, அதன் மூலம் தமது அதிகாரத்தை பலப்படுத்திக் கொள்ள ஆரம்பிப்பார்கள். செக்யூரிடி கம்பெனிகள் பாதுகாப்பு அளிக்குமாம். பிறகு, யாராக இருக்கும் இந்த செக்யூரிடி கம்பெனிகள்? யார் அதில் பயிற்ச்சி கொண்டு, கோவில்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வருவர்? அதில் இந்துக்கள் அல்லாதவர்கள் கூட வரலாமே? ஏன் இத்தகைய வாய்ப்பு உள்ளது என்று தெரிந்தவுடனே “ஜிஹாதி தீவிரவாதிகள்” இன்று முதலே “இந்துக்கள்” போர்வையில் பயிற்ச்சி பெற்று கழகங்களின் கம்பெனிகள் மூலம் கோவில்களுக்குள் நுழைந்து விடுவார்களே? பிறகு, கோவில்களினின்று குண்டுகள் வெடிக்கும்! உடனே நம்முடைய செக்யூலரிஸ சித்தாந்திகள் மற்றவர்கள் “இந்து தீவிரவாதிகளே, குண்டு வைத்துவிட்டு” மற்றவர்கள்மீது பழி போடுகிறார்கள் என்ற பிரச்சாரத்தை ஆரம்பித்து விடுவார்கள். கோவிகளில் “ரையிட்” நடக்கும். ஞாபகம் இருக்கிறதா, “Operation Bluestar”!

இந்து அறநிலையத்துறை சான்று பெற்றுவிட்டதா? நாத்திகக் கூட்டங்கள் கோவில் சொத்துகளைக் கொள்ளையடித்து, ஔரங்கசீப்புகள், மாலிக்காஃபுர்களையும் வென்றுவிட்ட இவர்கள், இன்று கோவில் நிர்வாகத்தைப் பற்றி பேசுகின்றனர். கோடிக்கணக்கான கோவில் பணம் நிலுவையுள்ளதை வசூல் செய்ய இவர்களுக்குத் துப்பில்லை, நாதியில்லை. கோவில் நிலங்களையே பட்டாப் போட்டு கொடுத்து விட்டபிறகு, தவறு என்று “சர்க்குலர்” விடும் நிர்வாகம் இந்த கொள்ளையடிக்கும் நிர்வாகம். “இந்து அறநிலையத்துறை”யில் சம்பந்தமே இல்லாதவர்கள் வேலையில் இருந்து கொண்டு கோடிக்கணக்கான இந்துக்களை ஆட்டிப் படைக்கிறார்கள். கும்பாபிஷேகம் நடத்துகிறோம் என்று லட்சக்கணக்கில் வசூல் பணத்தை விழுங்கிவிடுகிறார்கள். ஆனால், அதே நேரத்தில், பல்லாயிரக் கணக்கான வழக்குகள் போட்டு, நல்ல காரியங்களை முடக்கி வைத்துள்ளார்கள்.

படித்த இந்து இளைஞர்கள் முன்னே வரவேண்டும்: இன்று ஓரளவிற்கு இந்து இளைஞர்களுக்கு விழிப்பு வந்துயிருக்கிறது [சித்தாந்தங்களினால் குழம்பியுள்ளனர் என்பது வேறு விஷயம்]. ஆகவே எப்படி கோவில்களைக் காப்பது என்பது பற்றி அவர்கள் தீவிரமான சிந்தனையுடன் அவர்கள் இத்தகைய பிரச்சினைகளை நுண்ணமாக யோசித்து, அலசி முடிவிற்கு வரவேண்டும். வாரத்திற்கு ஒருநாள் அங்கங்குள்ள இளைஞர்கள் கோவில்களுக்குச் சென்று சுத்தப்படுத்த ஆரம்பித்தாலே போதும், அந்த குப்பைகளை அள்ள, இன்னொரு டென்டர் விட்டுவிடுவார்கள்! கோடிக்கணக்கான “இந்துக்கள்” உள்ளனரே, அப்படி ஒருநாள் வந்து புல்லைப் பிடுங்கி, களையெடுக்க ஆரம்பித்துவிட்டலே போதும், இத்தகைய அதி-நவீன-யுக்திக்காரர்கள் அடங்கி விடுவர்கள்.

எழுமின், விழுமின்: விவேகானந்தர் சொல்லியபடி இந்துக்கள் விழித்துக் கொள்ளவும், எழுந்துக் கொள்ளவேண்டிய நேரம் வந்தாகிவிட்டது! இனி வெட்கப் படாமல், பாரபட்சம் பார்க்காமல், தைரியம்மாகப் புல்லைப் பிடுங்க வேண்டும், களையெடுக்க வேண்டும், நச்சுண்ணிகள், சாருண்ணிகள், ஒப்புண்ணிகளை அழித்துவிட வேண்டும். புறப்படுங்கள், எழுமின், விழுமின்!

கோவில்களுக்கு ஐ.எஸ்.ஓ., சான்று : அமைச்சர் பெரியகருப்பன் தகவல்!

நவம்பர்12, 2009
கோவில்களுக்கு ஐ.எஸ்.ஓ., சான்று : அமைச்சர் பெரியகருப்பன் தகவல்
நவம்பர் 12,2009,00:00  IST

http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=14932

Latest indian and world political news informationசிவகங்கை : சென்னை கபாலீஸ்வரர், பார்த்தசாரதி, வடபழனி கோவில்களுக்கு உலக தரச்சான்று பெற (ஐ.எஸ்.ஓ.,) முயற்சி எடுத்து வருவதாக அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறினார். சிவகங்கையில் அவர் கூறியதாவது: அறநிலையத்துறையின் கீழ், 38 ஆயிரத்து 645 கோவில்கள் உள்ளன. கடந்த ஆட்சியில் கோவில் திருப்பணிக்காக 147 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 360 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளோம். பழநி கோவிலில் பக்தர்கள் பாதுகாப்பாக செல்ல, இரண்டாவது “ரோப் கார்’ (மோனோ கேபிள் ஜிப் பேக் முறை) அமைக்கப்பட உள்ளது. சோளிங்கரில் புதிதாக “ரோப் கார்’அமைக்கப்படும். இதற்கு 12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, ஒரு மாதத்திற்குள் டெண்டர் விடப்படும். நடப்பு ஆண்டில் பயிற்சி பெற்ற 207 பேர் அர்ச்சகராகியுள்ளனர்.பழநி, திருச்செந்தூர், ராமேஸ்வரம், மதுரை மீனாட்சியம்மன் உட்பட 10 கோவில்கள் சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.

உலகத்தர சான்று: சென்னை கபாலீஸ்வரர், பார்த்தசாரதி, வடபழனி முருகன் கோவில்களுக்கு உலகத்தர சான்று (ஐ.எஸ்.ஓ.,) பெற முயற்சிக்கிறோம். இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைத்து விடும். திருத்தணி முருகன் கோவில் கோபுரம் கட்டுமானப் பணிக்கு மூன்று கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டு விழா, ஒரு சில நாட்களில் நடக்கும். ஆதிதிராவிடர்கள் பகுதியில் உள்ள 1,000 கோவில் திருப்பணிக்காக, தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதுவரை 20 ஆயிரம் ஆதிதிராவிடர் கோவில்களுக்கு திருப்பணி செய்ய நிதி தரப்பட்டுள்ளது, என்றார். அறநிலையத்துறை கமிஷனர் சம்பத், கலெக்டர் மகேசன்காசிராஜன், ராஜசேகரன் எஸ்.பி., உடனிருந்தனர்.

விமர்சனம்:

1. கடந்த ஆட்சியில் கோவில் திருப்பணிக்காக 147 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 360 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளோம்: இப்படி சொல்வதைவிட, இந்த ஆட்சியில் இந்துக்களுக்கு மேலாக என்ன செய்துவிட்டீர்கள் என்று சொல்லவில்லையே?
2. அந்த 360 கோடி எங்கிருந்து வந்தது, எங்கே போகப் போகிறது?
3. பழநி கோவிலில் பக்தர்கள் பாதுகாப்பாக செல்ல, இரண்டாவது “ரோப் கார்’ (மோனோ கேபிள் ஜிப் பேக் முறை) அமைக்கப்பட உள்ளது. சோளிங்கரில் புதிதாக “ரோப் கார்’அமைக்கப்படும். இதற்கு 12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, ஒரு மாதத்திற்குள் டெண்டர் விடப்படும். இவ்வாறு டெண்டர் பணம் எங்கே போகும்? இங்கு ஏன் தமிழ் கலாச்சாரம், பண்பாடு, நாகரிகல் மறந்து விட்டது?
4. உழவாரப் பணியைச் செய்யவேண்டியதுதானே? அதுதானே தமிழ் கலாச்சாரம்? எதஏகு டெண்டர் போட்டு கொள்ளை?
5. நடப்பு ஆண்டில் பயிற்சி பெற்ற 207 பேர் அர்ச்சகராகியுள்ளனர். கோர்ட்டில் வழஜ்க்குள்ள போதிலேயே வேலைக்கு அமர்த்தப் பட்டுள்ளனரா?
6. பழநி, திருச்செந்தூர், ராமேஸ்வரம், மதுரை மீனாட்சியம்மன் உட்பட 10 கோவில்கள் சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.அத்தனை குப்பையை ஏன் தமிழர்கள் கொட்டுகிறார்கள்?
7. சென்னை கபாலீஸ்வரர், பார்த்தசாரதி, வடபழனி முருகன் கோவில்களுக்கு உலகத்தர சான்று (ஐ.எஸ்.ஓ.,) பெற முயற்சிக்கிறோம். ஐயோ, இதென்ன கூத்து? எதோ “பத்மஸ்ரீ” விவேக் அடிக்கும் ஜோக் மாதிரி இருக்கின்றதே?
8. இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைத்து விடும். ஓஹோ, அப்படியா விஷயம்! அதற்குள் எத்தனை கம்பெனிகளை “திராவிடர்கள்” / “கழகங்கள்” பதிவி செய்துவிட்டனவோ தெரியவில்லை!
9. திருத்தணி முருகன் கோவில் கோபுரம் கட்டுமானப் பணிக்கு மூன்று கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டு விழா, ஒரு சில நாட்களில் நடக்கும்.டெண்டெர் எடுத்தவர்களின் “ஒதுக்கிடு” என்னவோ தெரியவில்லை!
10. ஆதிதிராவிடர்கள் பகுதியில் உள்ள 1,000 கோவில் திருப்பணிக்காக, தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதுவரை 20 ஆயிரம் ஆதிதிராவிடர் கோவில்களுக்கு திருப்பணி செய்ய நிதி தரப்பட்டுள்ளது, என்றார். அறநிலையத்துறை கமிஷனர் சம்பத், கலெக்டர் மகேசன்காசிராஜன், ராஜசேகரன் எஸ்.பி., உடனிருந்தனர். இதுவும் ஒதுக்கீடா அல்லது அரசியல் ரீதியில் ஜாதி உணர்வுகளை காப்பாற்றிவைக்கும் சூழ்ச்சியா?