Archive for திசெம்பர், 2009

திராவிடநாடு எதற்காக மனிதமலத்தை அள்ள ஊக்குவிக்கிறது?

திசெம்பர்25, 2009
திராவிடநாடு எதற்காக மனிதமலத்தை அள்ள ஊக்குவிக்கிறது?
கருணாநிதி இந்த பிரச்சினையை அரசியலாக்க முனைந்தபோது, அதன் விஷமத்தை எடுத்துக் காட்டி இவ்வாறு எழுதியிருந்தேன்:
ஆனால், பிரச்சினை இப்படிக்கூட வரலாம் என்று இப்பொழுது தெறியவருகின்றது:
ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் மனிதக் கழிவு? ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகள் கைது
டிசம்பர் 25,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=14939

திருச்சி: மனித கழிவுகளை மனிதனே அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஸ்வாமி கோவிலுக்குள் வாளியில் மலம் எடுத்துச் சென்ற ஆதித்தமிழர் பேரவையை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஸ்வாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, தற்போது பகல்பத்து நிகழ்ச்சி நடந்து வருகிறது.

தமிழகம் மட்டுமன்றி வெளிமாநிலங்களில் இருந்து ஸ்வாமியை தரிசனம் செய்ய நாள்தோறும் ஏராளமானோர் வருவதால் கோவில் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்துடன், கடும் சோதனைக்கு பிறகே பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.நேற்று காலை 11 மணியளவில் இரு வாலிபர்கள் வாளி ஒன்றை எடுத்துச் சென்றனர். இவர்கள் கொண்டு சென்ற வாளியில் இருந்து கடுமையான நாற்றம் வீசவே, கோவிலுக்கு வந்த பக்தர்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாரிடம் தகவல் தெரிவித்தனர்.

விரைந்து சென்ற போலீஸார், வாளியுடன் சென்ற வாலிபர்களை பிடித்து சோதனை செய்தனர். வாளியில் மலம் இருந்தது தெரியவந்தது.இதையடுத்து இருவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், கோட்டை ரயில்வே காலனியை சேர்ந்த குப்புசாமி மகன் சோழன்(30), பாலக்கரை ஜெயிலர் பேட்டையை சேர்ந்த மலர்மன்னன்(34) என்பதும், இருவரும் ஆதித்தமிழர் பேரவையை சேர்ந்தவர்கள் என்பதும், மனிதக் கழிவுகளை மனிதனே அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கோவிலுக்குள் மலம் எடுத்து வந்ததாகக் கூறினர்.உடனடியாக கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆகஸ்டு மாதம் 2008 மத்திய தேசிய துப்புரவுப் பணியாளர் கமிஷனின் தலைவர் சந்தோஷ் சவுத்ரி தமிழகத்திற்கு வந்திருந்தபோது, மத்திய அரசு கொடுத்த பணம் மற்றும் மானியத்தை சரியாக செலவிடவில்லை மற்றும் பட்டுவாடா செய்யப்படவில்லை என்று எடுத்துக் காட்டினார். குறிப்பாக, “மனித மலத்தை அள்ளும் துப்புரவுத் தொழிலாளர் மேம்பாட்டிற்காக, மத்திய அரசு 57 கோடியே 80 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தது. அதில், 24 கோடியே 52 லட்சம் ரூபாய் மட்டும் மாநில அரசு செலவிட்டுள்ளது; 33 கோடியே 28 லட்சம் ரூபாய் செலவிடப்படாமல் உள்ளது. இது தவிர, இந்த ஆண்டு தமிழகத்திற்காக 21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதுவும் செலவிடப்படாமல் மொத்தம் 54 கோடியே 28 லட்சம் ரூபாய் செலவிடப்படவில்லை“, என்றும் எடுத்துக் காட்டினார். அன்றையிலிருந்துதான் அவருக்கு “அருந்ததியரின்”மிது மோகம் வந்தது! இருப்பினும், அவர்தான் எல்லாவற்றிற்கும் பதில் சொல்வதற்கு திறமையானர் தானே?

இதோ பதில்!

துப்புரவு பணியாளர் கமிஷன் குற்றச்சாட்டு : உண்மையில்லை என முதல்வர் மறுப்பு

ஆகஸ்ட் 24,2008,00:00 IST
http://www.dinamalar.com/Arasiyalnewsdetail.asp?News_id=3257&cls=row3&nc at=TN

சென்னை : “மத்திய தேசிய துப்புரவுப் பணியாளர் கமிஷனின் தலைவர் சந்தோஷ் சவுத்ரியின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை; பொறுப்புள்ள பதவிகளில் இருப்பவர்கள் பொறுப்புடன் பேசுவது தான் முறை’ என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை: “மனித மலத்தை அள்ளும் துப்புரவுத் தொழிலாளர் மேம்பாட்டிற்காக, மத்திய அரசு 57 கோடியே 80 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தது. அதில், 24 கோடியே 52 லட்சம் ரூபாய் மட்டும் மாநில அரசு செலவிட்டுள்ளது; 33 கோடியே 28 லட்சம் ரூபாய் செலவிடப்படாமல் உள்ளது. இது தவிர, இந்த ஆண்டு தமிழகத்திற்காக 21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதுவும் செலவிடப்படாமல் மொத்தம் 54 கோடியே 28 லட்சம் ரூபாய் செலவிடப்படவில்லை’ என்று மத்திய தேசிய துப்புரவுப் பணியாளர் கமிஷனின் தலைவர் சந்தோஷ் சவுத்ரி குறை கூறியுள்ளார். தமிழகத்திற்காக 57 கோடியே 80 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தது ஓராண்டுக்கானதல்ல. 1992ம் ஆண்டிலிருந்து 2007-08ம் ஆண்டு வரை இத்திட்டத்தின் கீழ் தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த தொகை. இந்த ஒதுக்கீட்டில் 24 கோடியே 52 லட்சம் ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டதாகக் கூறுவது தவறான புள்ளிவிவரம். தி.மு.க., ஆட்சி நடைபெறும் காலங்களில் எல்லாம் இத்திட்டத்தில் சிறப்பான முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. பொறுப்புள்ள பதவிகளில் இருப்பவர்கள் பொறுப்புடன் பேசுவது தான் முறை. இவ்வாறு முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்

மரகதலிங்கம் படும்பாடு!

திசெம்பர்24, 2009
17 ஆண்டுக்கு பின் மீட்கப்பட்ட மரகதலிங்கம் முறைப்படி கோவிலில் ஒப்படைப்பு
டிசம்பர் 24,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=14904

திருத்துறைப்பூண்டி :  திருத்துறைப்பூண்டி அருகே, திருக்காரவாசல் கோவிலில், 17 ஆண்டுக்கு முன் திருடப்பட்ட மரகதலிங்கம் மீட்கப்பட்டு, நேற்று கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில், திருக்காராயில் எனப்படும் திருக்காரவாசல் கைலாசநாயகி உடனுறையும் கண்ணாயிரநாதர் கோவில் அமைந்துள்ளது. இது, திருஞானசம்பந்தரால் பாடப் பெற்ற ஸ்தலம். இங்கு வழிபடுவோர், நோய் நீங்கும், புத்திர பேறு பெறுவர், முக்தி அடைவர் என்று பல்வேறு சிறப்புகளைக் கொண்டது.
இக்கோவில் தியாகராஜர் சன்னிதியில், ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட ஆதிவிடங்கராக, விலை மதிப்பற்ற மரகதலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. “சப்தவிடங்கர் ஸ்தலம்’ என அழைக்கப்படும் ஏழு ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. இந்த ஏழு தலங்களில் மட்டுமே இதுபோன்ற விலைமதிப்பற்ற மரகதலிங்கம், கோமேதக லிங்கங்கள் உள்ளன. இந்நிலையில், திருக்காரவாசல் கோவிலிருந்த ஆதிவிடங்கர் மரகதலிங்கம்,  1992 ஜூன் 27ம் தேதி திருடு போனது. தொடர்ந்து, நாகையில் இருந்து கோமேதக லிங்கமும், 2008 பிப்., 19ம் தேதி, திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீசர் கோவிலில் தீர்த்தவிடங்கராக விளங்கிய மரகதலிங்கமும் திருடு போயின. இதுகுறித்து, போலீசார் விசாரித்து வந்தனர். பல வருடங்கள் ஆகியும், சிலைகள் கிடைக்காததால், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தினர். அதனால், எட்டு போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், திருத்துறைப்பூண்டி மரகதலிங்கத்தை 2009 அக்., 26ம் தேதி கைப்பற்றி, கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், விழுப்புரத்தில் மரகதலிங்கம் ஒன்றை விற்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.
இந்த மரகதலிங்கம், நேற்று திருக்காரவாசல் கோவில் நிர்வாகத்திடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. இச்சிலை 17 ஆண்டுக்குப் பின், மீட்கப்பட்டு, ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  போலீசார் கூறுகையில், “இப்பகுதியில் திருடு போன மூன்று விலை மதிப்பற்ற மரகதலிங்கத்தில், இரண்டு மீட்கப்பட்டுள்ளது. திருடு போன கோமேதக லிங்கத்தை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்’ என்றனர்.

மரகதலிங்கம், நேற்று திருக்காரவாசல் கோவில் நிர்வாகத்திடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது: இவ்வாறு சொன்னாலும், நேற்று டிவி முதலியவற்றாஇப் பர்க்கும்போது, அந்த லிங்அம் படும்பாடு, மிகவும் க்நேவலமக உள்ளது. அந்த லிங்கத்துடன் போஸ் கொடுக்கும் அதிகாரிகளின் போக்கைக் கண்டால் ஆச்சரியமாக உள்ளது. கீழே லிங்கத்தை கையில் பிடிக்கும் திலகவதி, புடவைக்கூட அணியாமல், “கேஷுவலாக” – “நைட்டி” போட்டுக் கொண்டு செயற்கையாக போஸ் கொடுக்கிறார்!
Maragatha Lingam handed over to temple authorities
Special Correspondent — Photo: M. Srinath

http://www.hindu.com/2009/12/24/stories/2009122454380400.htm


Kavitha, Joint Commissioner, HR&CE, handing over the Maragatha Lingam to the temple priest at Thirukaravasal near Tiruvarur on Wednesday.

TIRUVARUR: Maragatha Lingam, which was stolen from the Thyagarajaswamy temple at Thirukaravasal near here in 1992 and recovered by the police recently, was handed over to temple authorities by the idol wing police on Wednesday. S. Selvaraj, Deputy Superintendent of Police, Idol wing, and Inspectors I. Khader Batcha and N. Jeevanandam handed over the idol to Hindu Religious and Charitable Endowment officials.

The lingam was taken in a procession to the temple and villagers welcomed it.

According to Mr. Selvaraj, After G. Thilakavathy became the Additional Director General of Police, Idol wing, a special team was formed to investigate the case.

On receiving a tip-off that a person had tried to sell the lingam in the Villupuram area, the team rushed there and recovered it. Later the police verified with archakas of the temple and others and confirmed that it was the same lingam. The HR and CE officials said pujas for the lingam would start on an auspicious day. Until then the lingam would be kept safe in the temple.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு; 3 பேர் கைது

டிசம்பர் 12,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=14638

Important incidents and happenings in and around the worldசென்னை : திருவாரூர் திருக்காரவாசல் தியாகராஜசாமி கோவிலில், 1992ம் ஆண்டு களவு போன, பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகத லிங்கம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து சென்னையில் நேற்று பேட்டியளித்த பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி., திலகவதி கூறியதாவது:திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் இருந்து திருடப்பட்ட, 50 கோடி ரூபாய் மதிப்பிலான மரகத லிங்கத்தை, சமீபத்தில் மீட்டோம். இதன் பிறகு, தலைமைச் செயலர் ஸ்ரீபதி நடத்திய கலந்தாய்வு கூட்டத்தில், “மற்ற சிலைகளையும் கண்டுபிடித்தால் நன்றாக இருக்கும்’ என தெரிவித்தார். அதற்கான முயற்சிகளை துவங்கினோம்.எங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கடந்த 6ம் தேதி, விழுப்புரம் பஸ் நிலையத்தில் சென்று கண்காணித்தோம். அங்கு மூன்று பேரை தனிப்படை போலீசார் விரட்டிப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள், விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை சேர்ந்த தேவசேனாதிபதி(66) வேல்முருகன்(40) கார்த்திகேயன்(45) என தெரிந்தது.

தேவசேனாதிபதி கையில் வைத்திருந்த, பையில் இருந்த பிளாஸ்டிக் டப்பாவில் ஐந்து சென்டி மீட்டர் உயரம், கால் கிலோ எடையுள்ள பச்சை நிற மரகத லிங்கம் இருந்தது. தேவசேனாதிபதியிடம் விசாரித்த போது, முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்தார்.”மரகத லிங்கத்தை, சில ஆண்டுகளுக்கு முன், எனது மைத்துனர் கொடுத்தார். அவர் தற்போது இறந்து விட்டார். மைத்துனருக்கு அச்சிலை எப்படி கிடைத்தது என்பது தனக்கு தெரியாது. லிங்கத்தை, புதுச்சேரியில் விற்பதற்காக செல்கிறேன்’ என, அவர் தெரிவித்தார். லிங்கத்தை வைத்திருப்பதற்கான ஆதாரமோ, சட்டப்பூர்வமான உரிமையோ அவரிடம் இல்லை. அந்த லிங்கம், திருடப்பட்டிக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், மூவரும் கைது செய்யப்பட்டனர். லிங்கம் மீட்கப்பட்டது.

தமிழக கோவில்களில் கடந்த 10, 20 ஆண்டுகளில், எங்கேயாவது மரகத லிங்கம் திருட்டு போய் உள்ளதா என ஆய்வு செய்தோம். அப்போது 1992ம் ஆண்டு, திருவாரூர் திருக்காரவாசலில் தியாகராஜசாமி கோவிலில் உள்ள மரகத லிங்கம், திருட்டு போய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஊரைச் சேர்ந்த கோவில் நிர்வாக அதிகாரி கவியரசு, ஓதுவார் முத்துக்குமாரசாமி, லிங்கத்தை வாங்கி, தானம் செய்த அருணாச்சல செட்டியாரின் தம்பி மகன் கருப்பன், குருக்கள் வைத்தியநாதன் ஆகியோரை வரவழைத்து விசாரித்தோம்.மரகத லிங்கம் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் டப்பாவை திறப்பதற்கு முன்பாகவே, கோவில் ஓதுவார், “லிங்கத்தின் பின்பகுதியில் “வி’ வடிவிலான சிறிய பள்ளம் இருக்கும் என்றும், ஆவுடையாரை நோக்கி போகும் பகுதியில், வெளிர் நிற ரேகை இருக்கும் என்றும் கூறினார்.

அந்த அடையாளங்கள் லிங்கத்தில் இருந்தன.”கோவிலில் இருந்த ஸ்படிக லிங்கத்தில் விரிசல் ஏற்பட்ட போது, பர்மாவில் வியாபாரம் செய்த அருணாச்சலம் என்பவர் இந்த மரகத லிங்கத்தை வாங்கி, கோவிலுக்கு தானமாக வழங்கினார்’ என்று கூறினார். “அருணாச்சலத்தின் தம்பி மகன் கருப்பன், “இந்த லிங்கத்தை எங்கள் வீட்டில் வைத்து பூஜை செய்த போது எடுத்த புகைப்படம் உள்ளது. அப்போது, லிங்கத்தின் பக்கத்தில் இருந்த வெள்ளி பாத்திரங்களுடன், இந்த லிங்கத்தின் அளவை ஒப்பிட்டு பார்த்து விட்டு சொல்கிறேன்’ என்றும் கூறினார்.

அவர் நேற்று காலை 8 மணியளவில், இந்த மரகத சிலை, திருக்காரவாசல் கோவில் சிலை தான் என்று உறுதி செய்தார்.இந்த லிங்கம் களவு போன 1992ம் ஆண்டு, நாகப்பட்டினம் நீலாய தாட்சியம்மன் கோவிலில், ஸ்படிகம், கோமேதகம் லிங்கங்களும் களவு போயுள்ளன. அந்த திருட்டிலும் கைது செய்யப்பட்டவர்களுக்கு தொடர்பு இருக்குமா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். விசாரணைக்கு பிறகு இந்த லிங்கம் கோவில் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்படும்.இவ்வாறு திலகவதி கூறினார்.

திருக்காரவாசல் மரகதலிங்கம் கோர்ட் மூலம் ஒப்படைப்பு
டிசம்பர் 15,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=14713

விழுப்புரம் : திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் கோவில் மரகதலிங்கம் விழுப்புரம் கோர்ட் மூலம் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் தியாகராய சுவாமி கோவிலில் கடந்த 1992ம் ஆண்டு திருட்டு போன ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத லிங்கத்தை, கடந்த சில நாட்களுக்கு முன் போலீசார் மீட்டனர்.

பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி., ராஜேந்திரன் தலைமையில், டி.எஸ்.பி., செல்வராஜ், இன்ஸ்பெக்டர் காதர் பாட்ஷா தலைமையிலான தனிப் படையினர், விழுப்புரம் அடுத்துள்ள திருவெண்ணை நல்லூரைச் சேர்ந்த தேவசேனாதிபதி தலைமையிலான மூன்று பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, திருக்காரவாசல் கோவிலுக்குச் சொந்தமான மரகத லிங்கத்தை மீட்டு, தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இதனையடுத்து, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று விழுப்புரம் கோர்ட்டில் நீதிபதி புருஷோத்தமன் முன்னிலையில் மரகத லிங்கத்தை ஒப்படைத்தனர். நீதிபதி உத்தரவின் பேரில், மரகத லிங்கம் திருக்காரவாசல் தியாகராய சுவாமி கோவில் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

மரகத லிங்கத்தை பெற்ற கவியரசு தலைமையிலான கோவில் நிர்வாக குழுவினர், ஓரிரு நாட்களில் விழா ஏற்பாடு செய்து மீட்கப்பட்ட மரகத லிங்கத்தை கோவிலில் மீண்டும் வைக்கப்படும் என தெரிவித்தனர்.

பழனி கோவில் பணம் எதற்கு செலவிடப்படுகிறது?

திசெம்பர்24, 2009
பழனி கோவில் பணம் எதற்கு செலவிடப்படுகிறது?
பழநி கோயில் உண்டியல் வசூல் 80 லட்சம் ரூபாயை தாண்டியது
டிசம்பர் 24,2009,00:00  IST

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=20082

General India news in detailபழநி : பழநி கோயில் உண்டியல் வசூல் 14 நாட்களில் 80 லட்சம் ரூபாயை எட்டியது. பழநி கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் எண்ணப்பட்டது.

வசூல் வருமாறு;

ரொக்கம் ரூ.79 லட்சத்து 47 ஆயிரத்து 548.

தங்கம் 467 கிராம்.

வெள்ளி 2 ஆயிரத்து 982 கிராம்.

அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளின் கரன்சி 717 காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

தங்கத்தால் ஆன வேல், செயின், திருமாங்கல்யம், காவடி, வளையல், நாணயங்கள், வெள்ளி வேல், கொலுசு, கிண்ணம், காவடி, கண், குடை, மயில், வீடு போன்றவையும், பரிவட்டங்கள், பித்தளையால் ஆன பொருட்கள், ஏலக்காய் மாலை, கைக்கடிகாரம் உள்ளிட்டவையும் காணிக்கையாக செலுத்தப் பட்டிருந்தது. இந்த உண்டியல் வசூல் 14 நாட்களில் கிடைத்ததாகும். பழநி கோயில் இணை ஆணையர் தி.ராசமாணிக்கம், துணை ஆணையர் மங்கையற்கரசி, உதவி ஆணையர் நடராஜன், உள்ளிட்டோர் இருந்தனர்.

திருமலைத் திருப்பதி தேவஸ்தானம், இந்துமதத்திற்கு என்று பல நல்ல காரியங்களைச் செய்து வருகின்றது.

அதுபோல பழனியில் கிடைக்கும் பக்தர்களின் காணிக்கைப் பணம் அம்மாதிரி செலவிடப்படுகிறதா?

கருணாநிதியின் ஆட்சியில் தொடரும் கோவில் கொள்ளை!

திசெம்பர்24, 2009
கருணாநிதியின் ஆட்சியில் தொடரும் கோவில் கொள்ளை!

ஏற்கெனவே பலதடவைக் குறிப்பிட்டப்படி, இந்த கருணாநிதியின் ஆட்சியில், நாத்திகம் மற்றும் இந்து எதிரிப்பு கொள்கையில், சம-தர்மம் என்பதெல்லாம் ஒன்றும் இல்லாம் கோவில்களை இடிப்பதும், கோவில் சொத்துகளை அபகரிப்பதும்,  உண்டியல்கள் திட்டமிட்டபடி உடைத்து பணம் திருடுவதும் நிரந்தர தொழிலாகிவிட்ட நேரத்தில், இப்படி கோவில் சொத்துக்களை – நிலங்களை கொள்ளையடுப்பதும் தொடர்கிறது!

ஒருபக்கம் மரகதலிங்கத்தைக் கண்டுபிடித்துவிட்டோம் என்று ஊர்வலம் நடத்தி அந்த லிங்கத்தையே ஏன் சைவத்தையே கேலி செய்து, கேவலப்படுத்துகின்றனர்!

ஆனால் கோடிக்கணக்கில் மரகதலிங்கங்கள் திருடப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது!

எதெல்லாம் மக்களைத் திசைத் திருப்பும் நாடகங்கள்.

இவர்கள் ஏதோ கோவில்களுக்க்காக உயிரையேவிடும் மாதிரியான நடிப்பு!

கலைஞர் டிவியிலேயோ தொடர்ந்து காசியைக் காவலப்படுத்திகின்றனர்.

இவர்களா சைவத்தை / இந்து மதத்தைக் காப்பாற்றாப் போகிறார்ள்?


கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
தினமலர், 24-05-2010

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=5510

திருவண்ணாமலை: களம்பூர் வேணுகோபால் ஸ்வாமி கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இக்கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடித்துவிட்டு அர்ச்சகர் கோவிலை பூட்டி சென்றார். நேற்று அதிகாலை வழக்கம்போல் கோவிலை அர்ச்சகர் திறக்க வந்த போது, கோவில் வளாகத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது. களம்பூர் போலீஸார் விசாரித்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
அறநிலையத்துறையின் 148 ஏக்கர் நிலம் கபளீகரம்
டிசம்பர் 23,2009,00:00  IST

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=20028&ncat=TN&archive=1&showfrom=12/23/2009

கோவை:அறநிலையத்துறை வசமிருந்த 148 ஏக்கர் நன்செய் நிலம், தனியார் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் தங்களது வசமாக்கி, மனையிடங்களாக விற்பனை செய்தனர். அங்கு கட்டுமானப் பணி துவங்கிய நிலையில் கோவிலிற்கு சொந்தமான நிலம் என்பது தெரிய வந்ததால், பல லட்சம் கொடுத்து இடம் வாங்கியவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.சூலூருக்கு அருகே உள்ள திருவேங்கடநாத பெருமாள் கோவிலிற்கு சொந்தமாக 148.18 ஏக்கர் நிலம் உள்ளது. இதில், தேவதாசி மானியத்தின் அடிப்படையில், இனாம் ஒழிப்பு சட்டத்தின் கீழ் 1963ல் கோவில் பூமியை, ஊழியம் செய்து வந்தவர்களுக்கு நிபந்தனை அடிப்படையில் பட்டா வழங்கப்பட்டது.

இந்த பட்டா அடிப்படையில், பல்லடம் செட்டில்மென்ட் தாசில்தாராக பணிபுரிந்த நாகராஜன் என்பவர், கோவில் ஊழியம் செய்து வந்தவர்களுக்கு நிபந்தனை பட்டா என்று குறிப்பிடாமல், வழக்கமாக வழங்கப்படும் பட்டாவை போல வழங்கினார்.இதை அடிப்படையாக வைத்து 148.18 ஏக்கர் நிலத்தை, ஊழியம் செய்து வந்தவர்கள் பலருக்கும் பல அளவுகளில் விற்பனை செய்தனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், இந்நிலங்களை சிலரிடம் இருந்து வாங்கிய மேரிலேண்ட் புரோமோட்டர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம், அதே இடத்தை பலருக்கும் காலிமனையிடமாக பிரித்து விற்பனை செய்தது. காலிமனையிடங்களை 200க்கும் மேற்பட்டவர்கள் வாங்கினர்.இவர்களில் சிலர், வீடு கட்டுவதற்கு, கடன் பெறுவதற்காக, வில்லங்கச் சான்று, மூலபத்திர நகல், பட்டா ஆகியவற்றை பெறுவதற்காக சூலூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு வந்தனர்.கிராம நிர்வாக அலுவலர் பட்டா வழங்குவதற்காக, பழைய பதிவேடுகளை தூசு தட்டினார். அப்போது தேவதாசி முறையில் வழங்கப்பட்ட, இந்நிலம் கோவிலுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

இது குறித்து கோவில் செயல் அலுவலர் கோபால் கூறியதாவது: இனாம் ஒழிப்பு சட்டத்திற்கு பிறகு, மைனர் இனாம் ஒழிப்பு சட்டம் வந்தது. அதன்படி கோவில் ஊழியம் செய்து வருபவர்கள் வசம் இருக்கும் நிலத்தை பயன்படுத்திக்கொள்ளலாமே தவிர, சொந்தம் கொண்டாட முடியாது. நிபந்தனை அடிப்படையில் ஊழிய பூமிதாரர்களுக்கு பட்டா வழங்கப்பட வேண்டும். ஆனால், இதை மாற்றி நிரந்தர பட்டாவாக வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறை பரிந்துரை செய்துள்ளது.

நிலத்தை வாங்கியவர்கள் எவ்விதத்திலும் தவறு செய்யவில்லை. ஆனால், இது போன்ற நிலத்தை விலைக்கு வாங்கி, அதில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்படுவர்.அறநிலையத்துறை வசம் உள்ள இது போன்ற நிலங்கள் கணக்கீடு செய்யப்பட்டு, அவை குறித்த தகவல் பத்திர பதிவுத்துறைக்கு அனுப்பப்பட்டு வருகிறது, என்று அறநிலையத்துறை அதிகாரிகள் கூறினர்.அறநிலையத்துறை இணை கமிஷனர் அசோக் கூறுகையில், “கோவை மண்டலத்தில் மட்டும் இது போன்ற நிலங்கள் 700 ஏக்கர் வரை தனியார் வசமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. இதில் தவறு செய்தவர்கள் மீது கடுமையான தண்டனை வழங்க அறநிலையத்துறை பரிந்துரை செய்துள்ளது’ என்றார்.

தாமதம் ஏன்?:கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், பதிவுத்துறைக்கும், வருவாய்த்துறைக்கும் மிகப்பெரிய இடைவெளி இருந்தது. வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்.டி.ஓ. (வருவாய் கோட்டாட்சியர்) பதவிக்கு கீழே இருக்கும் தாசில்தார்கள், பட்டா வழங்கியது குறித்து ஆவணங்களில் பதிவு செய்தாலும், அவை பதிவுத்துறைக்கு முறையாக அனுப்பி வைக்கவில்லை.இதனால் எந்த நிலங்களுக்கு, பட்டா வழங்கப்பட்டது, எதற்கு பட்டா வழங்கப்படவில்லை என்பது தெரியாமல் பத்திர பதிவுத்துறை யார் வந்தாலும் எளிதாக பத்திரப்பதிவை மட்டும் செய்து கொடுத்தது.தற்போது இந்நிலை மாறி பத்திர பதிவுத்துறை, வருவாய்த்துறை ஆகியன இரண்டும் ஆவணங்களை சரியான முறையில் பதிவு செய்துகொள்கிறது. இதனால் இந்த முறைகேடு அன்றே வெளிச்சத்துக்கு வரவில்லை.

இப்படி, கொலை, கொள்ளை……..!

ஒரே நாளில் பல கோவில்களில் சிலைகள், பணம் முதலிய கொள்ளை!

திசெம்பர்19, 2009
ஒரே நாளில் பல கோவில்களில் சிலைகள், பணம் முதலிய கொள்ளை!
* இனி  மொஹம்மது கஜ்னி, இப்ராஹிம் லோடி, ஔரங்கசீப், மாக்லிகாஃபூர் போன்ற கொள்ளையர்கள் தூரத்திலிருந்து வரவேண்டாம். உள்ளுரிலேயே கைதேந்ர்தவர்கள் இருப்பது நன்றாகவேத் தெரிகிறது.

டி மதிப்புள்ள மரகதலிங்கம் திரும்பப்பெறப்பட்டது என்று படோபடமாக செய்திகள், படங்கள் எல்லாம் வெளிவந்தன. ஏதோ சிலை திருட்டுத் தடுப்பு காவல் துறையினர் பயங்கரமாக வேலை செய்து பிடித்தது போல படம் காட்டினர். ஆனால், கொள்ளை என்னவோ நடந்து கொண்டுதான் உள்ளது. இதோ உண்மைகள்………………

கோவில்களில் தொடர் திருட்டு; மர்ம நபர்களுக்கு போலீசார் வலை
டிசம்பர் 19,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=14790

அரியலூர்: அரியலூர் அருகே, கோவில்களில் அடுத்தடுத்து நடந்த திருட்டு சம்பவங்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் கிராமத்தில், சோழர் காலத்தில் கட்டப்பட்ட சோழீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில், பல்வேறு கோவில்களுக்குச் சொந்தமான, 51 வெண்கல சுவாமி சிலைகள் உள்ளன. நேற்று முன்தினம், கோவிலின் நிர்வாக அலுவலர் முருகேஷ் உள்ளிட்டோர் சுவாமி சிலைகளை கணக்கெடுக்கும் பணிக்காக, கோவில் காப்பகத்துக்கு சென்றனர். அப்போது, கோவில் காப்பகத்தின் மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் வாயில் கதவுகள் திறந்து கிடந்தன.

பூட்டப்பட்டக் காப்பகத்த்லிருந்து வெண்கல சிலைகள் மாயம்! கோவில் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த வெண்கல சிலைகளை கணக்கெடுத்த போது, சோமாஸ்கந்தர், கந்தன், மயில் வாகன முருகன், சொக்கநாதர், மீனாட்சி அம்மன், ஐயனார் உள்ளிட்ட ஆறு சுவாமி சிலைகள் திருடப்பட்டது தெரிந்தது. கோவில் நிர்வாகத்தின் புகாரின் பேரில், போலீசார் விசாரிக்கின்றனர்.

* பூட்டிய 3, 4 மற்றும் 5வது கதவுகள் எவ்வாறு திறந்து கிடக்கும்?
* பூட்டுகள் திறக்கப்பட்டனவா, உடைக்கப் பட்டனவா?
* யார் யாரிடம் சாவிகள் இருந்தன?
* நன்றாகத் தெரிந்தவர்கள்தாம் திருடியிருக்கின்றனர்.
* அயல்நாடுகளில் சோமஸ்கந்தர் சிலை விலை அதிகம் என்பதனால் குறிப்பாக அதைத் திருடியது தெரிகிறது.
* நிச்சயமாக இது ஒரு திட்டமிட்டுத் திருடிய “உத்தியோகத்”திருட்டு / சிலைக் கடத்தல் கும்பல்.

பூட்டை உதைத்து கோவில் உண்டியல் பணம் கொள்ளை: இதேபோல், அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே, மீன்சுருட்டி சலுப்பை கிராமத்தில், துறவு மேல் அழகர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, கோவில் நடையை சாத்திய பிறகு, கோவில் கதவின் பூட்டை உடைத்து, கோவில் உண்டியலில் இருந்த இரண்டாயிரம் ரூபாய் பணத்தை, மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். கோவில் தர்மகர்த்தா கொடுத்த புகாரின் பேரில், போலீசார் விசாரிக்கின்றனர்.

* கோவில் பூட்டை உடைத்து கோவிலுக்குள் நௌழைந்திருக்கவேந்தும்.
* பிறகு உண்டியலையும் உடைத்திருக்கவேண்டும்.
* எனவே அத்தகைய விவரங்களை அறியாதவர்கள் திருடியிருக்கமுடியாது.

மூன்று கோவில்களில்மர்மநபர்கள் கைவரிசை
டிசம்பர் 19,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=14792

வேலூர்:அரக்கோணம் அருகே, ஒரே நாளில் மூன்று கோவில்களில் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த பாராஞ்சி கிராமத்தில், பழமையான அகத்தீஸ் வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த இரு மாதங்களுக்கு முன் கோபுர கலசம் திருடு போனது.

அகத்தீஸ் வரர் கோவிலில் கொள்ளை: இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் குருக்கள், கோவிலை திறக்க சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டு, சுவாமியின் மீதிருந்த வெள்ளி திருநீர்பட்டை, ருத்ராட்ச மாலை, தங்கத்தாலி, பொட்டு, வெள்ளி கிரீடம், வெள்ளிக் கவசம் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து தெரிந்தது.அதே பகுதியில் உள்ள மற்றொரு கோவிலான பிரம்ம அய்யங்கார் கோவிலின் உண்டியலை உடைத்து, அதிலிருந்த பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மேலும், குறிசொல்லும் கோவிலின் ஜன்னலை உடைத்து, அங்கிருந்து பட்டுத்துணிகளை கொள்ளையடித்துள்ளனர். மூன்று கோவில்களின் கொள்ளை சம்பவம் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

* ஏற்பெனவே கோபுர கலசங்கள் மட்டும் திருடும் கோஷ்டி பாண்டிச்சேரி, கடலூர் பகுதிகளில் உள்ளது என்பதனை, அத்தகையத் திருட்டுகள் வைத்து உண்ரலாம்.
* இப்பொழுது அரக்கோணம், வேலூர் பகுதிகளில் அத்தகைய திருட்டுகள் இருப்பதனால், அதே கோஷ்டி இங்கு வந்துள்ளதா அல்லது இன்னொரு கோஷ்டி உருவாகியுள்ளதா என்று ச்சராயவேண்டும்.
* பொருட்களை எடுத்துள்ள முறைப் பார்க்கும்போது, இது பொருள் மதிப்பிற்காகத் திருடியதைப் போல உள்ளது.
* அதாவது மேற்குறிப்பிடப் பட்ட சிலைகளைத் திருடிய “உத்தியோகத்” திருடர்கள் அல்லர்.

பகல் முழுவதும் சிவன் கோவில்களில் பூஜை செய்ய வாய்ப்பு இல்லை! திராவிடம் சொல்கிறது!!

திசெம்பர்11, 2009
பகல் முழுவதும் சிவன் கோவில்களில் பூஜை செய்ய வாய்ப்பு இல்லை :துணை ஆணையர் கைவிரிப்பு
டிசம்பர் 11,2009,00:00  IST

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=19677

General India news in detail

திண்டுக்கல்:பக்தர்கள் நெரிசலை குறைப்பதற்காக, சிவன் கோவில்களை பகல் முழுவதும் திறந்து பூஜை செய்ய ஆகம விதிகளின்படி வாய்ப்பு இல்லை,” என மதுரை இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் கோவிந்தராமன் தெரிவித்தார்.திண்டுக்கலில் அவர் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் கவுமாரியம்மன் கோவில் வெள்ளி, செவ்வாய் கிழமைகளிலும், மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில் தினமும் பகல் முழுக்க திறக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மதுரை மீனாட்சியம்மன் கோவில், திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில்களுக்கும் அதிக பக்தர்கள் வருவதால், பகல் முழுக்க திறக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளன.ஒவ்வொரு கோவிலிலும் ஆகம விதிகள், பாரம்பரிய பழக்கம், ஊர் நடைமுறைகளின் படி விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

இதன்படி மாரியம்மன், காளியம்மன், காமாட்சியம்மன் கோவில்களை பகல் முழுக்க திறப்பதில் எந்த தடையும் இல்லை. ஆனால், சிவன் கோவில்களில் ஆகம நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இந்த நடைமுறைப்படி பகலில் நடை சாத்தியே ஆக வேண்டும். எனவே, சிவன் கோவில்களை பகல் முழுவதும் திறப்பது சாத்தியம் இல்லை.இவ்வாறு கோவிந்தராமன் தெரிவித்தார்.

விமர்சனம்:

கருணாநிதி வந்ததிலிருந்து கோவில்களில் பிரச்சினைகள்தாம் வளர்ந்துள்ளது.

நாத்திகம், இந்துமத துவேஷம்,  என்ற இருகிப்போன மனப்பாங்கால், எல்லாவற்றையும் ஒழித்துவிடவேண்டும் என்ற ஔரங்கசீப் செறிதான் உள்ளது.

“ஆகமநெறிகள்” என்று இப்பொழுது பேசுகிறார்களே, அந்த ஆகமநெறிகளை மதித்திருந்தால், இதுவரை நாம் கண்டவை தமிழகத்தில் “சிவனிருக்கும் தென்னாட்டில்”, இவ்வாறெல்லாம் நடந்திருக்குமா?

திருமூலை சொன்னாரே?

கோவில் மதிற்சுவரிலிருந்து ஒரு கல் விழுந்தால், அரசன் அழிவான் என்று!

ஆனால், ஒன்றும் நடக்கவில்லையே என்று திராவிட கருணாநிதி “ஔரங்கசீப்-வேலையில்” பல “ஷேவியர்கள்” மற்றும் “மாலிக்காஃபூர்களின்” துணையோடு இறங்கியுள்ளார்!

இன்று நாத்திகம் பேசும், இத்தகைய கொடுமைகள் பேசும் திராவிடர்களின் தாய்-தந்தையர், சகோதரிகள், மனைவிப்பெண்டுகள் இந்துக்கள்தாம், நம்பிக்கையுள்ளவர்கள்தாம்!

காலம் இப்படியே இருந்து விடாது!!!

வெளிநாட்டில் உள்ள தமிழக சிலைகள் மீட்க நடவடிக்கை: அதேன்ன தமிழக சிலைகள்?

திசெம்பர்9, 2009
வெளிநாட்டில் உள்ள தமிழக சிலைகள் மீட்க நடவடிக்கை: அதேன்ன தமிழக சிலைகள்?
வெளிநாட்டில் உள்ள தமிழக சிலைகள் மீட்க நடவடிக்கை : ஏ.டி.ஜி.பி., திலகவதி
டிசம்பர் 09,2009,00:00  IST

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=19636

General India news in detailமேட்டுப்பாளையம் : “” தமிழக கோவில்களில் திருட்டு போன சிலைகள், வெளி நாட்டு மியூசியங்களில் ஏல மையத்தில் உள்ளது தெரிய வந்தது. இச் சிலைகளை மீட்க இன்டர்போல் உதவி கோரப்பட்டுள்ளது,” என தமிழக போலீஸ் பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி., திலகவதி தெரிவித்தார்.

மேட்டுப்பாளையம் ஸ்ரீ சரஸ்வதி வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற துவக்க விழா நடந்தது. இதில், தமிழக போலீஸ் குற்றப் பிரிவு கூடுதல் டைரக்டர் ஜெனரல் திலகவதி பேசினார். பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சிலை திருட்டு தடுப்பு பிரிவு, கடந்த அக்டோபர் மாதம் வரை, 24 ஐம்பொன் சிலைகள் மற்றும் விலை உயர்ந்த மரகத லிங்கத்தை மீட்டுள்ளது. இதன் மதிப்பு 55.50 கோடி ரூபாய். சிலை திருட்டு தடுப்பு தொடங்கியது முதல், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சிலைகள் பிடித்தது, இதுவே முதல் முறை. பெரும்பாலும் வழிபாடு இல்லாமல் உள்ள ராஜாக்கள் கட்டிய பழைய கோவில்களில் தான், சிலைகள் திருட்டு அதிகம் நடந்துள்ளன. இதில் ஈடுபட்டுள்ளவர்கள் உலகளவிய குற்ற வலையில் தொடர்பு வைத்துள்ளனர். வெளிநாட்டில் அளவிட முடியாத அளவிற்கு சிலைகள் விலை போகின்றன.

கோவில்களில் சிலை திருட்டை முற்றிலும் தடுக்கவும், கண்காணிக்கவும், தமிழக இந்து சமய அறநிலையத் துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளோம். கோவில்களில் கண்காணிப்பு கேமராக்களும், தொழில் நுட்பத்துடன் கூடிய, “அலாரமும்’ பொருத்தப்படும். இரவில் சுவாமி சிலைகளை யாராவது திருட முயற்சி செய்தால், அலாரம், 10 பேருக்கு போன் மூலம் எச்சரிக்கை தகவல் தெரிவிக்கும். தமிழகத்தில் 38 ஆயிரம் கோவில்கள், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. தனியாரிடம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. கோவில்களில் சிலை திருட்டு நடைபெறாமல் இருக்க, பயிற்சி பெற்ற பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும். தனியார் தங்களது கோவிலில் உள்ள ஒவ்வொரு சிலைகள், விலை உயர்ந்த பொருட்களை போட்டோ எடுத்து வைக்க வேண்டும். குற்றவாளிகளிடம் இருந்து மீட்கப்பட்ட சுவாமி சிலைகள், சென்னையை அடுத்த மணிமங்கலம் சிவன் கோவிலுக்குச் சொந்தமானது என்று தெரிய வந்தது. இச்சிலை திருட்டு போனது குறித்து, அந்த கோவில் நிர்வாகிகளுக்கு தெரியவில்லை.

திருவாரூர் அருகேவுள்ள அருமருந்தீஸ்வரர் கோவிலில் இருந்த மரகத லிங்கம் திருட்டு போனபோது, அப்பகுதி மக்கள் லிங்கம் கிடைக்கும் வரை நாங்கள் சாப்பிட மாட்டோம் என்று கூறினர். சிலைகளின் மதிப்பு பற்றி பொது மக்களுக்கு தெரிவதில்லை. சிலைகள் “கலாசார சின்னம்’ என்று போற்றி பாதுகாக்க வேண்டும். எல்லா சிலைகளும் அதிகளவில் விலை போவதில்லை. ஐம்பொன் சிலைகளில் தங்கம் அதிகம் உள்ளதாக கொள்ளையர்கள் நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் இந்த சிலைகளில் தங்கத்தின் அளவு மிகவும் குறைவாகத்தான் உள்ளது. கலை நயத்திற்காகவும் சிலைகள் திருட்டு போகின்றன. அரியலூர் அருகே ஸ்ரீபெருந்தான் கோவிலிருந்து திருட்டு போன சிலைகள் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளின் மியூசியங்களில் ஏல மையத்தில் உள்ளது தெரியவந்தது. இந்த சிலைகளை மீட்க, சர்வதேச போலீஸ் மூலம் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, திலகவதி கூறினார்.

விமர்சனம்:

அதென்ன “தமிழக சிலைகள்” என்று தனித்துப் பேசுவது?

இதுவும் “லஞ்ச கைதுகள்” போலவா?

அடிக்கடி, இப்படி சிலைகளைப் பற்றி செய்திகள் வருகின்றனவே?

ஏதோ கருணாநிதி ஆட்சியில் திடீரென திருடு போன சிலைகள் எல்லாம் திரும்பக் கிடைக்கிறார்போல் பிரமிப்பை ஏற்படுத்துகிறார்களே?

சோனியா மைனாவே சிலைகளைக் கடத்திச் சென்றதாக சுப்ரமணியசாமி வழக்குப் போட்டிருக்கிறார்.

அவற்றையும் பிடித்துக் கொடுப்பாரா?

இல்லை ஒருவேளை, இபடியெல்லம் கேட்பார்கள் என்று கருணாநிதி “தமிழ்” அடைமொழியைப் போட்டு பேச சொல்லியிருக்கிறாரா?

சிதம்பரம் கோவில் கொழிக்கிறது, ஊர் நாறுகிறதா?

திசெம்பர்2, 2009

சிதம்பரம் கோவில் கொழிக்கிறது, ஊர் நாறுகிறதா?

“சிதம்பர ரகசியம்” என்று சொன்னாலும் சொன்னார்கள். இன்று “சித்ம்பரம்” மாபெரும் ரகசியமாகவே உள்ளது!

கோவிலில் லட்ச-லட்சமாக பணம் வசூல் என்று தொடர்ந்து வரும் செய்திகள்!

ஆனால் இன்றோ (02-12-2009), நகராட்சி நாறுவது போல, சண்டை!

சிதம்பரம் நகராட்சி கூட்டத்தில் திடீர் ரகளை: நாற்காலி, மைக் பறந்தன; தீர்மான நகல் கிழிப்பு
டிசம்பர் 01,2009,00:00  IST

Latest indian and world political news information

// <![CDATA[//
// <![CDATA[//

சிதம்பரம்: சிதம்பரம் நகராட்சியின் சீர்கேட்டை கண்டித்தும், மா.கம்யூ., சேர்மன் பதவியை ராஜினாமா செய்யக் கோரியும், தி.மு.க., காங்., உள்ளிட்ட கூட்டணிக் கட்சி கவுன்சிலர்கள் நாற்காலி, மைக் வீசி, தீர்மான நகலை கிழித்து எரிந்து ரகளையில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சி கூட்டம், சேர்மன் பவுஜியாபேகம் தலைமையில் நேற்று நடந்தது. பா.ம.க., கவுன்சிலர் சாந்தி பிரியதர்ஷினி, “எனது வார்டில் எந்த பணியும் நடக்கவில்லை எனக்கூறி வெளிநடப்பு செய்து பிரச்னைக்கு பிள்ளையார் சுழி போட்டார். அவரை தொடர்ந்து காங்., கவுன்சிலர் முகமது ஜியாவுதீன் பேசுகையில்,”மேஸ்திரி குடித்துவிட்டு தகராறு செய்தார் என, எழுத்து மூலமாக புகார் செய்தும் இதுவரை நடவடிக்கை இல்லை, நகராட்சியில் குடிநீர் கூட வழங்க முடியவில்லை, சாலைகளில் கழிவுநீர் ஓடுகிறது என, அடுக்கடுக்காக புகார்களை கூறினார்.

இந்த நகராட்சியில் கவுன்சிலராக இருப்பதற்கு செருப்பால் தான் அடித்துக் கொள்ள வேண்டும் என கூறி, தனது செருப்பை எடுத்து தலையில் அடித்துக் கொண்டார்.
“எங்களது கட்சியின் மத்திய அமைச்சர் வாசன் ஒதுக்கிய நிதியில் நிழற்குடை அமைக்க தீர்மானம் வந்துள்ளது. ஆனால், அவரது பெயரைக் கூட போடாமல், காங்., கட்சியை அவமானப்படுத்தியுள்ளீர்கள்’ என்று ஆவேசமாக நாற்காலியை தூக்கி வீசினார். அதே கருத்தை காங்., உறுப்பினர் அமிர்தலிங்கம், அமுதவள்ளி ஆகியோர் காரசாரமாக விவாதித்துவிட்டு வெளிநடப்பு செய்தனர்.

கூட்டம் துவங்கும் போதே, நகரில் கொசுத் தொல்லையை சுட்டிக் காட்டும் வகையில், கொசு வத்தி சுருளை ஏற்றி வைத்துக் கொண்டு ஒரு முடிவோடு அமர்ந்திருந்த தி.மு.க., கவுன்சிலர்கள், அடுத்து பேசத் துவங்கினர். ஜேம்ஸ் விஜயராகவன் எழுந்து, “வேண்டுமென்றே தி.மு.க.., காங்., டி.பி.ஐ., பா.ம.க., சுயேட்சை கவுன்சிலர்கள் வார்டுகள் புறக்கணிக்கப்படுகிறது. நெல்லிக்குப்பம், கடலூர், விருத்தாசலம், புவனகிரி போன்ற பகுதிகளில், பல்வேறு பிரச்னைகளை கண்டித்து மா.கம்யூ., வினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். மண்சோறு சாப்பிடுகின்றனர். ஆனால், சிதம்பரத்தில் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகிறது. வடிகால் வாய்க்கால் சரியில்லாமல் சாலையில் கழிவுநீர் ஓடுகிறது. அங்கு ஒரு நியாயம். இங்கு ஒரு நியாயமா? எனவே மா.கம்யூ., கட்சி நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.

உடனடியாக சிதம்பரம் சேர்மன் பதவியை கம்யூ., கட்சி ராஜினாமா செய்ய வேண்டும்’ என்றார்.அதனைத் தொடர்ந்து, அனைத்து தி.மு.க., மற்றும் கூட்டணிக் கட்சி கவுன்சிலர்கள் மா.கம்யூ., மற்றும் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து கோஷமிட்டனர். நகரில் அடிப்படை பணிகளை செய்யாமல் கூட்டத்தை நடத்த விடமாட்டோம் எனக் கூறி, தி.மு.க., காங்., பா.ம.க., டி.பி.ஐ., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். கோரம் இல்லாததால் கூட்டத்தை ஒத்தி வைப்பதாக கூறி, சேர்மன் பவுஜியா பேகம் எழுந்து சென்றுவிட்டார்.இத்தனை ரகளை நடந்தும் கூட, எதைப்பற்றியும் கவலைப் படாதவர்களாக அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ஐந்து பேர் கடைசி வரை இருந்துவிட்டு, கூட்டம் ஒத்தி வைத்ததும் எழுந்து சென்றனர்.

தனியாக போராடிய மா.கம்யூ., கவுன்சிலர்: சிதம்பரம் நகராட்சி தேர்தலில், மா.கம்யூ., சார்பில் மூன்று பேர் வெற்றி பெற்றனர். அவர்களில் ஒருவர் சேர்மனாகிவிட, மற்றொரு பெண் கவுன்சிலர் டி.பி.ஐ., கட்சியில் சேர்ந்துவிட்டார். சந்திரசேகர் என்ற கவுன்சிலர் மட்டுமே தற்போது கட்சியில் உள்ளார். நேற்று, நகராட்சி கூட்டத்தில் மா.கம்யூ., கட்சியைக் கண்டித்து, தி.மு.க., உள்ளிட்ட தோழமைக் கட்சி கவுன்சிலர்கள் கோஷம் போட்டதை பொறுத்துக் கொள்ள முடியாத சந்திரசேகர் எழுந்து பேச முயன்றார். அவரிடமிருந்து மைக்கை பிடுங்கி, வாயை பொத்தி பேச விடாமல் தடுத்தும் கூட, அவர் ஆக்ரோஷமாக மா.கம்யூ., வாழ்க, சேர்மன் வாழ்க என கோஷங்கள் எழுப்பினார். இறுதி வரை போராடிய அவர், ஒரு கட்டத்தில் சோர்ந்து நாற்காலியில் அமர்ந்துவிட்டார்.

விமர்சனம்:

1. பாருங்களேன், நாற்காலியை வீசிப் போடும் அவர் முகத்தில் ஏதாவது சமூக பிரக்னை இருக்கிறதா?

2. “…………சாலைகளில் கழிவுநீர் ஓடுகிறது”: இது சாதாரண காட்சிதானே! சென்னைவாசிகளுக்கு, இது மிகச் சாதாரணம். செய்கின்ற வேலைக்கே லஞ்சம் கொடுக்கவில்லையென்றால், எந்த கார்பொரேஷன்காரனும் வேலை செய்வதில்லை!

3. முகமது ஜியாவுதீன், “இந்த நகராட்சியில் கவுன்சிலராக இருப்பதற்கு செருப்பால் தான் அடித்துக் கொள்ள வேண்டும்” என கூறி, தனது செருப்பை எடுத்து தலையில் அடித்துக் கொண்டார்……………..ஆவேசமாக நாற்காலியை தூக்கி வீசினார். மக்கள் எல்லோருமே செருப்பில் / செருப்பை அடித்துக் கொள்ளும் நிலையில்தான் உள்ளார்கள்!

4. “.…நகரில் கொசுத் தொல்லையை சுட்டிக் காட்டும் வகையில், கொசு வத்தி சுருளை ஏற்றி வைத்துக் கொண்டு ஒரு முடிவோடு அமர்ந்திருந்த தி.மு.க., கவுன்சிலர்கள்”: சென்னை மட்டும் என்ன வாழ்ந்தது. இங்கே வந்து பாருங்கோ! கொசு நடந்துகொண்டிருக்கும் மக்களையேக் டிக்கும்! அந்த அளவிற்கு தேர்ச்சி பெற்றுள்ளது!

5. “மண்சோறு சாப்பிடுகின்றனர். ஆனால், சிதம்பரத்தில் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகிறது. வடிகால் வாய்க்கால் சரியில்லாமல் சாலையில் கழிவுநீர் ஓடுகிறது“: எங்கே போய்விட்டார்கள், பகுத்தாரிவாளர்கள். கலைஞரிடம் சொன்னால் பிரியாணி போஒடமாட்டாரா? இல்லை கஞ்சித் தொட்டிதான் திறக்க மாட்டார? வாய்க்கால் இல்லாமலே சென்னையில் ஓடுகின்றதே? அத்ற்கென்ன செய்வது?

6. “……………..எழுந்து பேச முயன்றார். அவரிடமிருந்து மைக்கை பிடுங்கி, வாயை பொத்தி பேச விடாமல் தடுத்தும் கூட, அவர் ஆக்ரோஷமாக …………., வாழ்க, சேர்மன் வாழ்க என கோஷங்கள் எழுப்பினார்”: இது ஒரு புதிய முயற்சியாகத் தெரிகிறது! வாயைப்பொத்துவது நல்ல முறைதான், பல பிரச்சினைகள் முடிவிற்கு வரும்!