ஏற்கெனவே பலதடவைக் குறிப்பிட்டப்படி, இந்த கருணாநிதியின் ஆட்சியில், நாத்திகம் மற்றும் இந்து எதிரிப்பு கொள்கையில், சம-தர்மம் என்பதெல்லாம் ஒன்றும் இல்லாம் கோவில்களை இடிப்பதும், கோவில் சொத்துகளை அபகரிப்பதும், உண்டியல்கள் திட்டமிட்டபடி உடைத்து பணம் திருடுவதும் நிரந்தர தொழிலாகிவிட்ட நேரத்தில், இப்படி கோவில் சொத்துக்களை – நிலங்களை கொள்ளையடுப்பதும் தொடர்கிறது!
ஒருபக்கம் மரகதலிங்கத்தைக் கண்டுபிடித்துவிட்டோம் என்று ஊர்வலம் நடத்தி அந்த லிங்கத்தையே ஏன் சைவத்தையே கேலி செய்து, கேவலப்படுத்துகின்றனர்! ஆனால் கோடிக்கணக்கில் மரகதலிங்கங்கள் திருடப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது! எதெல்லாம் மக்களைத் திசைத் திருப்பும் நாடகங்கள். இவர்கள் ஏதோ கோவில்களுக்க்காக உயிரையேவிடும் மாதிரியான நடிப்பு! கலைஞர் டிவியிலேயோ தொடர்ந்து காசியைக் காவலப்படுத்திகின்றனர். இவர்களா சைவத்தை / இந்து மதத்தைக் காப்பாற்றாப் போகிறார்ள்? |
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=5510
http://www.dinamalar.com/General_detail.asp?news_id=20028&ncat=TN&archive=1&showfrom=12/23/2009
கோவை:அறநிலையத்துறை வசமிருந்த 148 ஏக்கர் நன்செய் நிலம், தனியார் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் தங்களது வசமாக்கி, மனையிடங்களாக விற்பனை செய்தனர். அங்கு கட்டுமானப் பணி துவங்கிய நிலையில் கோவிலிற்கு சொந்தமான நிலம் என்பது தெரிய வந்ததால், பல லட்சம் கொடுத்து இடம் வாங்கியவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.சூலூருக்கு அருகே உள்ள திருவேங்கடநாத பெருமாள் கோவிலிற்கு சொந்தமாக 148.18 ஏக்கர் நிலம் உள்ளது. இதில், தேவதாசி மானியத்தின் அடிப்படையில், இனாம் ஒழிப்பு சட்டத்தின் கீழ் 1963ல் கோவில் பூமியை, ஊழியம் செய்து வந்தவர்களுக்கு நிபந்தனை அடிப்படையில் பட்டா வழங்கப்பட்டது.
இந்த பட்டா அடிப்படையில், பல்லடம் செட்டில்மென்ட் தாசில்தாராக பணிபுரிந்த நாகராஜன் என்பவர், கோவில் ஊழியம் செய்து வந்தவர்களுக்கு நிபந்தனை பட்டா என்று குறிப்பிடாமல், வழக்கமாக வழங்கப்படும் பட்டாவை போல வழங்கினார்.இதை அடிப்படையாக வைத்து 148.18 ஏக்கர் நிலத்தை, ஊழியம் செய்து வந்தவர்கள் பலருக்கும் பல அளவுகளில் விற்பனை செய்தனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், இந்நிலங்களை சிலரிடம் இருந்து வாங்கிய மேரிலேண்ட் புரோமோட்டர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம், அதே இடத்தை பலருக்கும் காலிமனையிடமாக பிரித்து விற்பனை செய்தது. காலிமனையிடங்களை 200க்கும் மேற்பட்டவர்கள் வாங்கினர்.இவர்களில் சிலர், வீடு கட்டுவதற்கு, கடன் பெறுவதற்காக, வில்லங்கச் சான்று, மூலபத்திர நகல், பட்டா ஆகியவற்றை பெறுவதற்காக சூலூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு வந்தனர்.கிராம நிர்வாக அலுவலர் பட்டா வழங்குவதற்காக, பழைய பதிவேடுகளை தூசு தட்டினார். அப்போது தேவதாசி முறையில் வழங்கப்பட்ட, இந்நிலம் கோவிலுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.
இது குறித்து கோவில் செயல் அலுவலர் கோபால் கூறியதாவது: இனாம் ஒழிப்பு சட்டத்திற்கு பிறகு, மைனர் இனாம் ஒழிப்பு சட்டம் வந்தது. அதன்படி கோவில் ஊழியம் செய்து வருபவர்கள் வசம் இருக்கும் நிலத்தை பயன்படுத்திக்கொள்ளலாமே தவிர, சொந்தம் கொண்டாட முடியாது. நிபந்தனை அடிப்படையில் ஊழிய பூமிதாரர்களுக்கு பட்டா வழங்கப்பட வேண்டும். ஆனால், இதை மாற்றி நிரந்தர பட்டாவாக வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறை பரிந்துரை செய்துள்ளது.
நிலத்தை வாங்கியவர்கள் எவ்விதத்திலும் தவறு செய்யவில்லை. ஆனால், இது போன்ற நிலத்தை விலைக்கு வாங்கி, அதில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்படுவர்.அறநிலையத்துறை வசம் உள்ள இது போன்ற நிலங்கள் கணக்கீடு செய்யப்பட்டு, அவை குறித்த தகவல் பத்திர பதிவுத்துறைக்கு அனுப்பப்பட்டு வருகிறது, என்று அறநிலையத்துறை அதிகாரிகள் கூறினர்.அறநிலையத்துறை இணை கமிஷனர் அசோக் கூறுகையில், “கோவை மண்டலத்தில் மட்டும் இது போன்ற நிலங்கள் 700 ஏக்கர் வரை தனியார் வசமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. இதில் தவறு செய்தவர்கள் மீது கடுமையான தண்டனை வழங்க அறநிலையத்துறை பரிந்துரை செய்துள்ளது’ என்றார்.
தாமதம் ஏன்?:கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், பதிவுத்துறைக்கும், வருவாய்த்துறைக்கும் மிகப்பெரிய இடைவெளி இருந்தது. வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்.டி.ஓ. (வருவாய் கோட்டாட்சியர்) பதவிக்கு கீழே இருக்கும் தாசில்தார்கள், பட்டா வழங்கியது குறித்து ஆவணங்களில் பதிவு செய்தாலும், அவை பதிவுத்துறைக்கு முறையாக அனுப்பி வைக்கவில்லை.இதனால் எந்த நிலங்களுக்கு, பட்டா வழங்கப்பட்டது, எதற்கு பட்டா வழங்கப்படவில்லை என்பது தெரியாமல் பத்திர பதிவுத்துறை யார் வந்தாலும் எளிதாக பத்திரப்பதிவை மட்டும் செய்து கொடுத்தது.தற்போது இந்நிலை மாறி பத்திர பதிவுத்துறை, வருவாய்த்துறை ஆகியன இரண்டும் ஆவணங்களை சரியான முறையில் பதிவு செய்துகொள்கிறது. இதனால் இந்த முறைகேடு அன்றே வெளிச்சத்துக்கு வரவில்லை.
இப்படி, கொலை, கொள்ளை……..!
குறிச்சொற்கள்: அறங்காவலர்கள், அறநிலையத்துறை, அறநிலையத்துறை கட்டுப்பாடு, ஆலய நிர்வாகம், இந்துவிரோத நாத்திகம், உண்டி உடைப்பு, உண்டியல், ஔரங்கசீப், கருணாநிதி, கலைக் கொள்ளை, கிருத்துவர்கள் ஆக்கிரமிப்பு, கோயில் நிலம், கோயில் விடுதிகள், கோர்ட்டில் வழக்கு, கோவிலுக்கு சீல், கோவில் திருட்டு, சிலைதிருட்டு, நாத்திக அறத்துறை, போலி ஆவணங்கள், மடத்துக்கு சொந்தமாக நிலம்
1:34 முப இல் மார்ச்24, 2012 |
[…] [3] https://atheismtemples.wordpress.com/2009/12/24/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A… […]
1:34 முப இல் மார்ச்24, 2012 |
[…] [3] https://atheismtemples.wordpress.com/2009/12/24/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A… […]
1:34 முப இல் மார்ச்24, 2012 |
[…] [3] https://atheismtemples.wordpress.com/2009/12/24/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A… […]
1:34 முப இல் மார்ச்24, 2012 |
[…] [3] https://atheismtemples.wordpress.com/2009/12/24/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A… […]
1:40 முப இல் மார்ச்24, 2012 |
[…] [3] https://atheismtemples.wordpress.com/2009/12/24/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A… […]