Archive for ஜனவரி, 2010

போலி ஆவணம் தயாரித்து விற்ற கோவில் நிலம் மீட்பு!

ஜனவரி22, 2010
ரூ.10.5 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்பு: அறநிலையத்துறை நடவடிக்கை
ஜனவரி 22,2010,00:00  IST

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=21126

கோவை:கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுத்தவர், சில ஆண்டுகள் விவசாயம் செய்த பின், போலி ஆவணம் தயாரித்து, வேறொருவருக்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்தார். இச்சம்பவம் தினமலரில் செய்தியாக வெளியானதையடுத்து, பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அறநிலையத்துறை மீட்டது.கோவை உக்கடத்தில் உள்ள மாகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள், கோவை நகர் மற்றும் கோவை புறநகர் பகுதியில் உள்ளது.மாகாளியம்மனை வழிபாடு செய்த முன்னோர்கள், கோவிலிற்கு தேவையானவற்றை தங்கள் ஆயுள் முழுக்க செய்து கொடுத்தனர்.

ஆயுளுக்கு பின், தங்களுடைய சொத்துகள் அனைத்தும் கோவிலுக்கே சேர வேண்டும் என்று உயில் எழுதி பதிவு செய்தனர்.அதன்படி, உக்கடம் பகுதியில் 16 வீடுகள், அங்காடிகள், வணிக வளாகங்கள், குடோன்கள், நன்செய் நிலங்கள் என்று ஏராளமான சொத்துகள் உக்கடம் மாகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமாக இன்றும் உள்ளன.ஆனால், கோவிலுக்கு இச்சொத்துகள் வாயிலாக ஒரு சிறு தொகை கூட வருவதில்லை. அத்தனை சொத்துகளையும் போலி ஆவணங்கள் தயாரித்து வெவ்வேறு பெயர்களில் பதிவு செய்து ஒவ்வொருவரும் உரிமை கொண்டாடி வருகின்றனர்.

இச்சூழலில் இது குறித்த செய்தி, தினமலரில் கடந்த ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி வெளியானது. இதையடுத்து, சொத்தை மீட்பதற்கான ஆவணங்களை தயாரிக்க, அறநிலையத்துறை இணை கமிஷனர் அசோக், அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.அதன்படி, உக்கடம் மாகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான, குனியமுத்தூர் பிருந்தாவன் சர்க்கிள் பகுதியிலுள்ள மூன்றரை ஏக்கர் நிலத்தை அறநிலையத்துறை மீட்டது. மீட்கப்பட்ட நிலத்தின் தற்கால மதிப்பு 10.5 கோடி ரூபாய்.இந்நிலத்தை குத்தகைக்கு எடுத்திருந்த ராஜலட்சுமி என்பவர் போலி ஆவணங்கள் தயாரித்து, கோவையைச் சேர்ந்த ஜெயராமன் என்பவருக்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்தார். செய்தியை பார்த்த ஜெயராமன், விற்பனை ஒப்பந்தத்தை ரத்து செய்தார்.இதையடுத்து, அறநிலையத்துறை சார்பில் தேடி எடுக்கப்பட்ட ஆவணங்களை கொண்டும், கோர்ட் உத்தரவை வைத்தும், கிராம நிர்வாக அலுவலர், நில அளவையர் ஆகியோரை கொண்டு அறநிலையத்துறை அதிகாரிகள், குனியமுத்தூர் பிருந்தாவன் சர்க்கிள் பகுதியில் உள்ள மூன்றரை ஏக்கர் நன்செய் நிலத்தை மீட்டனர்.

இது குறித்து அறநிலையத்துறை இணை கமிஷனர் அசோக் கூறியதாவது: மாகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமாக ஏராளமான சொத்துகள் இருப்பதாக அறநிலையத்துறை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதற்கு தகுந்த சட்டரீதியான உத்தரவுகள் பெறப்பட்டு, அதன் பின்பு கோவிலுக்கு சொந்தமான நிலம், கடை, வர்த்தக நிறுவனங்கள், குடோன்கள் என்று அனைத்தும் கைப்பற்றப்படும்.ஆக்கிரமிப்பாளர்கள், கோவிலுக்கு சொந்தமான இடத்தை சொந்தம் கொண்டாட வேண்டாம். தாங்களாக முன் வந்து கோவிலுக்கு சேர வேண்டிய சொத்தை, அறநிலையத்துறை வசம் ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு அசோக் கூறினார்.

சமுதாயத்துக்கு வழிகாட்டியாக விளங்கியவர் திருஞானசம்பந்தர்: திருவாவடுதுறை ஆதீனம்

ஜனவரி18, 2010
சமுதாயத்துக்கு வழிகாட்டியாக விளங்கியவர் திருஞானசம்பந்தர்: திருவாவடுதுறை ஆதீனம்
First Published : 18 Jan 2010 02:13:48 AM IST

http://www.dinamani.com/edition/story.aspx?S

மயிலாடுதுறை, ஜன. 17: உழைப்பின்றி வரும் பொருளுக்கு ஆசைப்படக் கூடாது என்று கூறி, சமுதாயத்துக்கு வழிகாட்டியாக விளங்கியவர் திருஞானசம்பந்தர் என்றார் திருவாவடுதுறை ஆதீன கர்த்தர் 23-வது குரு மகா சன்னிதானம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள். நாகை மாவட்டம், குத்தாலம் வட்டம், திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான அருள்மிகு கோமுத்தீசுவரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருஞானசம்பந்தர் பெருமானுக்கு பொற்கிழி வழங்கும் ஐதீக விழா, நிகழாண்டில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.இதையொட்டி, கோமுத்தீசுவரர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்று, ஓதுவார் ஒருவருக்கு விருது வழங்கி திருவாவடுதுறை ஆதீனம், தனது ஆசியுரையில் கூறியது:
இன்றைய காலத்தில் மக்களில் பலர் உழைக்காமல் பொருள்களைப் பெற்றுவிடலாம் என்ற எண்ணத்தில், குறுக்கு வழியில் செல்வத்தைச் சம்பாதிக்க ஆசைப்படுகின்றனர். இதைத் தவிர்க்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல், பல்வேறு தரப்பினராலும் இலவசமாக அளிக்கப்படும் பொருள்களை வாங்கும் பழக்கத்தை மக்கள் கைவிட வேண்டும். உழைப்பால் கிடைக்கும் பொருள்களையே அடுத்தவர்களுக்குத் தானமாக அளிக்கும் பழக்கத்தையும் மக்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். கிடைத்த பொருளை அனைவருக்கும் கொடுப்பவரே அருளாளர் என அழைக்கப்படுகிறார்.
இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற மதங்களிலும் அருளாளர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அடுத்தவர் நலனுக்காக வேள்வி செய்வதற்கு பொருள் வேண்டும் என்ற நோக்கில் பெருமானைப் பாடிய திருஞானசம்பந்தர், 11 பதிகங்களை பாடித்தான் பொருளைப் பெற்றாரே தவிர, உழைக்காமல் பொருளை பெறவில்லை. இதிலிருந்து மக்கள் உழைத்துதான் பொருளைப் பெற வேண்டும் என்பதை சமுதாயத்தின் முன்னோடியாக இருந்து வழிகாட்டியுள்ளார் திருஞானசம்பந்தர் என்பது தெரிய வருகிறது என்றார் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர்.முன்னதாக, அருள்மிகு கோமுத்தீசுவரர் கோயிலில் நடைபெற்ற திருஞானசம்பந்தர் பொற்கிழி பெறும் விழாவையொட்டி, திருஞானசம்பந்தர் பஞ்சமூர்த்திகளுடன் பல்லக்கில் ஊர்வலமாக  வீதியுலா வந்தார். இதைத் தொடர்ந்து, கோயிலில் 15-க்கும் மேற்பட்ட ஒதுவார்கள் திருப்பதிகம் பாடினர்.பின்னர், கோயிலின் உள்ளிருந்து பூதத்தின் கையில் வைத்து எடுத்து வரப்பட்ட பொற்காசுகளை கோயில் பலிபீடத்தில் வைத்து சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து, திருஞானசம்பந்தர் உலவாக்கிழி பெறும் காட்சி நடைபெற்றது.
விருது அளிப்பு: விழாவின் நிறைவாக, பழனி தேவார இசைமணி ப. சண்முகசுந்தரத்துக்கு  உருத்திராக்கம், பொன்னாடை அணிவித்து, ரூ. 3,000-த்துக்கான  பொற்கிழி வழங்கி, “திருமுறைத் தமிழிசைச் செல்வர்’ என்னும்  விருதை வழங்கி திருவாவடுதுறை ஆதீன கர்த்தர் ஆசி வழங்கினார்.இந்த நிகழ்ச்சிகளில் ஆதீனத்து கட்டளை தம்பிரான் சுவாமிகள், ஆதீனப் புலவர்கள், தமிழ் ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

மக்களிடையே நாட்டுப்பற்று குறைந்து வருகிறது: திருவாவடுதுறை ஆதீனம்!

ஜனவரி8, 2010
மக்களிடையே நாட்டுப்பற்று குறைந்து வருகிறது: திருவாவடுதுறை ஆதீனம்
First Published : 03 Jan 2010 01:36:00 AM IST

http://dinamani.com/edition/story.aspx?Title=%u0bae%u0b95%u…………

திருவாவடுதுறை ஆதீன திருமடத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற மார்கழி திருவாதிரை விழாவில் ஓதுவார்கள் மற்றும் தமிழறிஞருக்கு விருதுகளை வழங்கி, ஆசி வழங்குக

மயிலாடுதுறை,  ஜன. 2:     போராட்டம் என்ற பெயரில் பொது சொத்துகள் சேதப்படுத்தப்படுவதன் மூலம், மக்களிடையே நாட்டுப்பற்று குறைந்து வருவது தெரிய வருகிறது என்றார் திருவாவடுதுறை ஆதீனம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்.நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம் வட்டம், திருவாவடுதுறை ஆதீன திருமடத்தில் மார்கழித் திருவாதிரை, ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள், சொற்பொழிவுகள், விருது வழங்குதல், நூல் வெளியீடு, நலத் திட்ட உதவிகள் வழங்குதல், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு திருவாவடுதுறை ஆதினம் மேலும் பேசியது:

2010-ம் ஆண்டு நாட்டில் அமைதி நிலவும். மக்கள் சுபிட்சமாக வாழ்வர். மழை குறையாது. உலகம் அழியும் எனக் கூறப்படுவதை யாரும் நம்பக் கூடாது. ஜாதி, மத பேதங்களை மறந்து, மக்கள் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும். இதன் மூலம் கிடைக்கும் பலன், அனைத்து மக்களையும் சென்றடையும்.சுப காரியங்கள், திருமணங்களில் மரக்கன்றுகளைப் பரிசளிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். மரம் வளர்த்தால், புவி வெப்பமயமாதலைத் தடுக்கலாம். பாவங்களையும், தாகத்தையும் போக்கும் கோயில் குளங்களை மாசுபடாமல், தூய்மையாகப் பாதுகாக்க வேண்டும்.வெளி நாடுகளிலிருந்து வழிபாட்டுக்காக இந்தியா வரும் பக்தர்களுக்கு விசா வழங்கும் முறையில் சலுகை அளிக்க வேண்டும். இதில், பாதுகாப்பு அம்சத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.உரிமைக்காகப் போராடும் மக்கள், வன்முறைகளைக் கைவிடவேண்டும். போராட்டங்கள் என்ற பெயரில் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தக் கூடாது. பொது சொத்துகள் சேதப்படுவதால் நாட்டின் வளம் குறைகிறது. நாட்டுப்பற்று குறைந்து வருவதால்தான் வன்முறைகள், பொது சொத்துகள் சேதம் ஆகியவை நிகழ்கின்றன என்றார் திருவாவடுதுறை ஆதீனம்.

சிறப்புச் சொற்பொழிவுகள்: முன்னதாக, வெள்ளிக்கிழமை மாலை ஆதீனத் திருமடம் வேணுவனலிங்க விலாச அரங்கில் இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, கோவை அரசு கலைக் கல்லூரி தமிழ்த் துறை இணைப் பேராசிரியர் முனைவர் கி. சுப்பிரமணியன், கடலூர் புலவர் ஞானப்பிரகாசம் ஆகியோர் சிறப்புச் சொற்பொழிவாற்றினர்.

ஓதுவார்களுக்கு பட்டம்: இதைத் தொடர்ந்து, இரவு நேர வழிபாடு முடிந்த பின்னர், காரைக்குடி கொப்புடைநாயகியம்மன் திருக்கோயில் ஓய்வு பெற்ற ஓதுவார் டி. ஆர். நாராயணன், சூரியனார்கோயில் அருள்மிகு சிவசூரியப்பெருமாள் திருக்கோயில் ஓதுவார் சிவ. மோகனசுந்தரம், மதுரை திருப்புவனம் அருள்மிகு திருப்பூவணநாதர் திருக்கோயில் ஓதுவார் அ. முத்துக்குமார் ஆகியோருக்கு தலா ரூ. 3 ஆயிரம் பண முடிப்பு, “தெய்வத்தழிசைச் செல்வர்’ விருது, கோவை தமிழறிஞர் கி. சுப்பிரமணியனுக்கு ரூ.  3 ஆயிரம் பண முடிப்பு, “திருநெறிய தமிழ்ச் செல்வர்” விருது ஆகியவற்றை திருவாவடுதுறை ஆதீனம் வழங்கினார்.

நூல் வெளியீடு: பின்னர், “சைவ அனுட்டான விதி” என்ற விழா மலரை திருவாவடுதுறை ஆதீனம் வெளியிட, அதன் முதல் பிரதியை வேளைக்குறிச்சி ஆதீனம் இளவரசு சீர்மிகு அஜபா நடேஸ்வரர் பெற்றுக் கொண்டார்.அதைத்தொடர்ந்து, “திருத் தில்லை நீரோட்டக யமக அந்தாதி’ என்ற நூலை ஆதீனம் வெளியிட்டார். இதன் முதல் பிரதியை நாமக்கல் அரசு கலைக் கல்லூரி முன்னாள் முதல்வர் உ. சிவசாமியும், 2-ம் பிரதியை நூலாசிரியர் கடலூர் புலவர் வ. ஞானப்பிகாசமும் பெற்றுக் கொண்டனர்.பின்னர், திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.இந்த நிகழ்ச்சிகளில் கட்டளை தம்பிரான் சுவாமிகள், தமிழ் ஆர்வலர்கள், ஆதீனப் புலவர்கள், ஆதீனப் பள்ளிகளின் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

ரூ. 10 கோடி மதிப்புள்ள விநாயகர் சிலை விற்க முயன்ற 6 பேர் கைது

ஜனவரி6, 2010

ரூ. 10 கோடி மதிப்புள்ள விநாயகர் சிலை விற்க முயன்ற 6 பேர் கைது
ஜனவரி 06,2010,00:00 IST
http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=15220

கொச்சி:ஐம்பொன்னால் ஆன அபூர்வ நர்த்தன விநாயகர் சிலையை விற்க முயன்ற, ஆறு பேர் கொண்ட கும்பலை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 10 கோடி ரூபாய் மதிப்பிலான சிலையை கைப்பற்றினர்.கேரள மாநிலம், கொச்சி துறைமுகம் மற்றும் மட்டாஞ்சேரி பகுதிகளுக்குச் செல்லும் சுற்றுலா பயணிகளிடம் சில புரோக்கர்கள், ஐம்பொன்னால் ஆன விநாயகர் சிலையை விற்க முயல்வதாக, போலீஸ் கமிஷனருக்கு தகவல் கிடைத்தது.

ஸ்பெஷல் பிராஞ்ச் போலீஸ் உதவி கமிஷனர் மற்றும் தனிப்படையினர், ரகசிய விசாரணையில் இறங்கினர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைப் போல், போலீசார் மாறுவேடம் அணிந்து, அப்பகுதியில் சுற்றித் திரிந்தனர்.அப்போது புரோக்கர்கள், “ஐம்பொன்னால் செய்யப்பட்ட அபூர்வ நர்த்தன விநாயகர் சிலை உள்ளது. 300 ஆண்டு பழமையான, 23 கிலோ எடை கொண்டது. அதன் விலை, ஏழு கோடி ரூபாய்’ என, சுற்றுலாப் பயணிகள் போல் வந்த போலீசாரிடம் கூறினர்.

பேரம் பேசி ஐந்தரை கோடி ரூபாய்க்கு முடிவானதும், “சிலை எங்கே?’ என கேட்டதற்கு, “திருச்சூரில் ரகசிய இடத்தில், சிலை வைக்கப்பட்டு உள்ளது; அங்கு நான்கு பேர் உள்ளனர்; பணம் கொடுத்தவுடன் சிலையை தருவோம்’ என, புரோக்கர்கள் கூறினர்.”சிலையை எர்ணாகுளத்திற்கு கொண்டு வந்து தரவேண்டும்’ என போலீசார் கூறியதையடுத்து, “பணம் முழுவதும் கொடுத்தால் தான், இங்கு கொண்டு வரமுடியும்’ என்றனர்.

அவர்களை ஆடம்பர ஓட்டலுக்கு அழைத்துச் சென்று, பணத்தை காட்டியதும், நேற்று முன்தினம் காலை, காரில் சிலையை கொண்டு வந்தனர். ஆனால், தங்களிடம் சிலை வாங்க வந்தவர்கள் போலீசார் என்பதை அக்கும்பல் அறிந்து கொண்டு, காரிலேயே தப்பி ஓடி விட்டது.அனைத்து போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்ததையடுத்து, தோவரா போலீஸ் நிலைய பகுதியில், ஆறு பேர் கும்பலும், காரும் சிக்கியது.அவர்களை கைது செய்த போலீசார், எங்கிருந்து சிலையை கொள்ளை அடித்தனர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்

சர்வசக்தி கதை இனி எடுபடாது! கடவுள்கள் கண்முன்னே படுகொலைகள்!!

ஜனவரி4, 2010

சர்வசக்தி கதை இனி எடுபடாது! கடவுள்கள் கண்முன்னே படுகொலைகள், முருகன், வள்ளி, தெய்வானை கடவுள்களையும் கடத்தினர்

http://viduthalai.periyar.org.in/20100104/news11.html

ஆரணி அருகேயுள்ள மலைக்கோயிலுக்குள் பூசாரியைக் கொலை செய்து, கடவுளர்கள் சிலைகளும் கொள்ளையடிக்கப்பட்டன. சுங்குவார் சத்திரம் அருகே உள்ள ஒரு கோயிலில் கொள்ளையை தடுக்க முயன்ற காவலாளி கொலை செய்யப்பட்டார்.

சென்னை, ஜன. 4_ சுங்-குவார் சத்திரம், ஆரணி கோயில்களில் உள்ள கடவுளர்கள் கண்முன்-னேயே அவனது பக்தர்-கள் கொலை செய்யப்-பட்-டனர். இது மட்டுமல்-லாமல், முருகன், வள்ளி, தெய்வானையையும் கடத்திக் கொண்டு சென்று-விட்டனர் பலே ஆசாமிகள்.

சுங்குவார் சத்திரம்: சுங்குவார்சத்திரம் அருகே கோவில் உண்டி-யலை உடைத்து நகை, பணம் கொள்ளை-யடிக்-கப்பட்டது. தடுக்க முயன்-றவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து, காவல்துறை-யினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சுங்குவார்சத்-திரம் அடுத்துள்ளது திருமங்க-லம் கண்டிகை கிராமம். இக்கிராமத்தில் வசித்து வந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி அமுலு. இவர்-களுக்கு 17 வயதில் ராஜசேகர் என்ற மகனும், 14 வயதில் குஷ்பு என்ற மகளும் உள்ளனர். இவர், தினக்-கூலி வேலை செய்து வந்தார். கடந்த இரண்டு வருடங்களாக தினமும் கிராமத்தில் உள்ள பொன்னி-யம்மன் கோவில் வளாகத்தில் படுத்து தூங்குவது வழக்க-மாம்.

கோயிலில் கொள்ளை: அதன்படி நேற்று முன் தினம் இரவு 9 மணிக்கு வீட்டில் சாப்-பிட்ட பின் தூங்க சென்-றார். நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவிலுக்கு சென்ற பொது மக்கள் கோவில் கதவு, கோவில் இரும்பு கேட் உடைக்கப்பட்டு இருந்-தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கோவில் வளாகத்தில் படுத்திருந்த சுப்பிரமணி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இது குறித்து, தகவல் தெரிந்ததும், சிறீபெரும்புதூர் காவல்துறை ஆய்வாளர் தலைமை-யில் காவலர்கள் கோவில் உள்ளே சென்று பார்த்தபோது கோவில் உண்-டியல், அம்மன் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க நகைகள் கொள்-ளையடித்து சென்றது தெரியவந்தது.

இது குறித்து, கிராம மக்கள் கூறியதாவது: இக்கிராமத்தில் அமைந்துள்ள பொன்னியம்மன் கோவில் மிகவும் பழமையானது. ஜன. 1ஆம் தேதி, புத்தாண்டையொட்டி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு, வெள்ளிக் கவசம், தங்க நகைகள் அணிவித்திருந்தோம். இதை, நோட்ட-மிட்ட சில நபர்கள் கோவில் பூட்டு, கிரில் கேட்டில் உள்ள பூட்டுக்களை உடைத்து கோவில் உண்டியலையும், தங்க நகைகளையும் கொள்ளையடிக்க முயன்றுள்ளார். இதைப் பார்த்த சுப்பிரமணி கொள்ளையை தடுக்க முயன்றுள்ளார். இதனால், ஆத்திர-மடைந்த கொள்ளையர்கள் இரும்பு கம்பியால் சுப்பிரமணியனின் தலை-யில் அடித்துள்ளனர். ரத்த வெள்ளத்-தில் சரிந்து விழுந்த சுப்பிரமணியன், அதே இடத்திலேயே துடிதுடித்து இறந்திருக்கலாம் என கிராம மக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து, சுங்கு-வார்ச் சத்திரம் காவல்துறை ஆய்வாளர் மோகன் வழக்குப் பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வருகிறார். கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் பிரவுனி அதே இடத்திற்கு வரவழைத்தனர். கோவில் வளாகத்தில் இருந்து மோப்ப நாய் அருகே உள்ள மைதானத்-தில் சிறிது தூரம் ஓடி நின்றதாம்.

ஆரணி: ஆரணி அருகே உள்ள மலைக்-கோயி-லுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்-கிருந்த பூசாரியை அடித்துக் கொலை செய்து-விட்டு ரூ.2 லட்சம் மதிப்புள்ள பஞ்சலோக சாமி சிலைகளை கொள்ளை-யடித்து சென்றுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி ஒன்றியத்தில் ஒண்ணு-புரம் கிராமத்தையொட்டி சுமார் 700 அடி உயர மலை உள்ளது. இந்த குன்றின் மீது முருகன் கோயில் உள்ளது. விசேஷ நாட்களில் மட்டும் இங்கு பக்தர்கள் கூட்டம் காணப்படும். இந்த கோயில் பூசாரி ஜீவன்தாஸ், கோயிலை ஒட்டிய அறையில் தங்கி, கோயிலுக்கு காவலாளி-யாகவும் இருந்தார். மார்கழி மாதம் என்பதால் தினமும் அதிகாலையிலும், மாலை-யிலும் ஒலிபெருக்கியில் பக்தி பாடல்களை போட்டு வந்தார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் பாடல்கள் ஒலிக்காததால், மலையடிவார மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனால் சிலர் மலை ஏறி கோயி-லுக்கு சென்றனர். அங்கு கோயில் கதவு-கள் வெளிப்-புறமாக பூட்டப்பட்டிருந்தது. பக்கத்து அறையில் பூசாரி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ந்தனர். இதுகுறித்து கோயில் நிருவாகிகளுக்கு தகவல் கொடுத்தனர். கோயில் நிருவாகிகள் வந்து பார்த்த-போது பஞ்சலோகத்-தாலான முருகன், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட 4 சாமி சிலை-கள் கொள்ளை போனது தெரிய வந்-தது. அவற்றின் மதிப்பு சுமார் ரூ.2 லட்-சம். இதுகுறித்து கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

தீட்சிதர்களும்: கல்வெட்டு, செப்பேடுகள் பெயரில் திராவிடப் புரட்டு!

ஜனவரி2, 2010

தில்லையும் தீட்சிதர்களும்: கல்வெட்டு, செப்பேடுகள் பெயரில் திராவிடப் புரட்டு!

தில்லையும் தீட்சிதர்களும்

கட்டுரை ஆக்கம்: புலர் செ.இராசு எம்.ஏ., பிஎச்.டி., முன்னாள் தலைவர், கல்வெட்டியல் – தொல்லியல் துறை தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், தொலைபேசி: 0424 2262664.

http://viduthalai.periyar.org.in/20100102/snews07.html

“புலர்” இல்லை “புலவர்” ராசு, பாவம், என்ன கோபமோ, அவரை “புலர்” ஆக்கிவிட்டனர்! கருப்பில் இருப்பது “விடுதலையில்” வெளிவந்தது. சிவப்பில் இருப்பது என்னுடைய “கமென்ட்ஸ்” / விமர்சனம்.

தில்லை மரங்கள் அடர்ந்த வனம் நகராக மாறியபின் ஊருக்கும் தில்லை என்றே பெயர் ஏற்பட்டது. தில்லை-யில் அமைந்த கோயில் சிற்றம்பலம் என்று பெயர் பெற்றது. சிற்றம்பலம் என்ற பெயரே மருவி சிதம்பரம் என்றாகி ஊருக்கும் அதே பெயர் அமைந்துவிட்டது. மதுரை மாநகரில் உள்ள கோயில் பெயர் ஆலவாய் என்றே முன்னாளில் அழைக்கப்பட்டது.

சோழ மன்னர்கள் சிற்றம்பல நடராசரை தங்களின் குலதெய்வம் என்பர். அவர்கள் தன் குல நாயகன் தாண்-டவம் பயிலும் தில்லையம்பலம் பொன் வேய்ந்தனர். முதலாம் ஆதித்த சோழன் கொங்கிற் கனகம் அணிந்த ஆதித்தன் என்று அதனால் புகழப்பட்-டான். சைவர்கள் இயல்பாக அடை-மொழி எதுவும் இல்-லாமல் கோயில் என்றே சிதம்-பரத்தை அழைத்தனர். இரணிய-வர்மன் என்ற மன்னன் முதல் முதல் கோயில் கட்டினான். பின் வந்த தமிழக அரசர்கள், வள்ளல்கள், பொது-மக்கள் எனப்பலரும் கோயிலை விரிவாகக் கட்டினர் என்று நூல்கள் கூறுகின்றன.

தமிழக மண்ணில் சிற்பிகளான தமிழர்களால் தமிழ் மக்களுக்கென்று உருவாக்கப்பட்டுத் தமிழில் வழிபாடு நடத்திய தில்லைச் சிற்றம்பலத்தில்-தான் பாரம்பரியத் தொடர்பு ஏதும் இல்லாத ஒரு கூட்டத்தால் இன்று பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கோயில் சொத்துக்கள், நிலங்கள், விலை-யுயர்ந்த அணிகலன்கள், சில தனியார் வசம் போகக்கூடாது என்ற எண்ணத்-தால்தான் பெரிய கோயில்களின் நிருவாகத்தை அரசு மேற்கொண்-டுள்ளது. தமிழ்நாட்டில் திருவரங்-கம், பழனி, மதுரை, திருச்-செந்தூர்க் கோயில்கள், கேரள அய்-யப்பன் கோயில் குருவாயூர்க் கோயில், ஆந்திரத்தில் திருப்பதிக் கோயில் போன்றவை அரசு நிர்வாகத்தில்தான் உள்ளன. மிகத் தாமதமாகவே தீட்சிதர்கள் வசம் இருந்த சிதம்பரம் கோயில் நிருவாகத்தை தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டது. இதை எதிர்த்துத் தீட்சிதர்கள் வழக்கு மன்றம் சென்-றுள்ளனர். சிதம்பரம் கோயில் தங்கள் வசம் அளிக்கப்பட வேண்டும் என்று வாதாடுகின்றனர்.

பண்டைக்கால வரலாறு என்ன சொல்லுகிறது என்று கல்வெட்டு, செப்பேடுகளை ஆய்வு செய்து சான்றுகள் அடிப்படையில் இக்-கட்டுரை எழுதப்படுகிறது. இந்த ஆவணங்கள் அனைத்தும் [கிழே கொடுக்கப்பட்டுள்ள காலம் கி.பி. 1888 முதல் 1963 வரை என்றுமே சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் நிருவாகத்தில் இருந்ததில்லை என்றே தெரிவிக்கின்றன.

சிதம்பரம் நடராசர் கோயிலில் தமிழ்நாட்டு மன்னர்கள், அரசு அலுவலர்கள், வணிகர்கள், வள்ளல்-கள், பொதுமக்கள் கொடைகொடுத்த கல்வெட்டுகள் பல உள்ளன.

315 கல்வெட்-டுகள் சிதம்பரம் கோயிலில் படி எடுக்கப்பட்டுள்ளன. 20_க்கும் மேற்-பட்ட சிதம்பரம் கோயில் செப்-பேடுகள் உள்ளன. அவை காலந்-தோறும் நடைபெற்று வந்த நிர்வாக முறையை நமக்குத் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறது.

இடைக்காலச் சோழர், பாண்டியர் பேரரசுக் காலத்திலும், விசயநகர அரசர்கள் காலங்களிலும், போசளர் [கன்னடக்காரர்], நாயக்கர் [தெலுங்கர்], மராட்டியர் [மராத்தியர்] ஆட்சிக் காலத்-திலும் அந்தந்த அரசு அலுவலர்களே கோயிலின் அனைத்து நிர்வாகத்-தையும் அரசுக்காக மேற்கொண்டுள்-ளனர் [இவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையே!]. ஸ்ரீ மகேசுவரக் கண்காணி செய்வார், கோயில் நாயகம் செய்வார், திரு-மாளிகைக் கூறு செய்வார், ஸ்ரீ கார்யம் செய்வார், சமுதாயம் செய்வார், கோயில் கணக்கர் முதலிய பல அலுவல் பெயர்களைக் கல்வெட்-டில் காணு-கிறோம். இவர்கட்கே அரசர், அலுவ-லர்-கள், சபையார், நாட்-டார் -ஓலை (கடிதம்) அனுப்பியுள்-ளனர். இவர்கள் யாரும் சிவப்பிரா-மணரோ, தீட்சிதர்-களோ இல்லை என்பது குறிப்பிடத்-தக்கது.

கோயில் பூசை செய்வோர் [அவர்களுக்கு பெயர் இல்லையா?] கோயில் நிர்வாகிகளிடமிருந்து அன்பர்களின் அறக்கொடைகள் மூலம் வரும் பிராமண போசனம், தளிகை, சட்டிச்சோறு, பிரசாதம் பெற்று தங்கள் வாழ்க்கையை நடத்தியுள்-ளனர்.

கி.பி.14_ஆம் நூற்றாண்டுத் தொடக்-கத்தில் மாலிக்காபூர் நடையெடுத்த-போது நிகழ்ந்த கலவரத்தில் கி.பி. 1311 முதல் 76 ஆண்டுகள் சிதம்பரத்தில் பூசை இல்லை [மாலிக்காஃபூரின் கொடுமைகளை ராசு ஏன் சொல்லவில்லை? ஒருவேலை அவர் எழுதியதை விடுதலைக்காரர்கள் நீக்கிவிட்டனரா? பொன்வேய்ந்தது பற்றியும், அதனை கொள்ளயடித்தது பற்றியும் மௌனமாக இருப்பது வியப்பான விஷயமே]. நடராசர் கோயிலை விட்டு வெளியேறி ஒரு பெரிய புளியமரப் பொந்தில் இருந்தார் [பாருங்கள், நாத்திகத்தின் போலித்தனத்தை! நடசாசர் என்ன கோவிலைவிட்டு நடந்தே சென்றாரா? இங்கு ஏன் பகுத்தறிவு தூங்குகிறது, துலுக்கனின் கோரக்கொடூரங்களை மறைக்க இப்படி கதை விடுகிறர்களா? புளியமரப் பொந்து என்றால் துலுக்கபுக்கு பயமா?இல்லை]. இரண்டாம் அரிகரனின் அமைச்சர் முத்தய்யத் தண்டநாயகன் மீண்டும் நடராசரைச் சிதம்பரத்திற்குக் கொண்டு வந்து பூசைக்குத் தக்க ஏற்பாடுகளைச் செய்தார் [ஏன் தமிழன் கூப்பிட்டால் நடராசர் வரமாட்டாரா, தெலுங்கன்தான் கொண்டு வரவேண்டுமா?]. இதனைச் சோழ மண்டல சதகம் என்ற நூல் மிகத் தெளிவாகக் கூறுகிறது (பாடல் எண் 99).

திருவாவடுதுறை ஆதின வரலா-றாகிய அரசவனத்து அறநிலையம் என்ற நூலிலும் இவ்விவரம் கூறப்-பட்டுள்ளது (பக்கம் 43). கோயில் கல்வெட்டும் இதனைத் தெரிவிக்கிறது.

கி.பி.17_ஆம் நூற்றாண்டுத் தொடக்-கத்தில் 1610_ஆம் ஆண்டு லிங்கமநாயக்-கர் என்ற வீரசைவர் அளித்த உதவியால் கும்பகோணம் சைவ வேளாளர் சிவப்பிரகாசர் என்பவர் சிதம்பரம் கோயில் பரா-மரிப்பையும் நிர்வாகத்தை-யும் மேற்கொண்டார். கி.பி. 1648 வரை துறை-யூர்ப் பாளையக்காரர் ரெட்டி-யார்களின் நிர்வாகத்தில் கோயில் இருந்தது [ஆஹா, பாவம் இங்கு ஒப்புக் கொள்கிறார், தெலுங்கர்கள் தாம் என்று].

பீஜப்பூர் சுல்தான் படைத்-தலை-வர்கள் படையெடுப்பின் போது பாது-காப்புக் கருதி அன்பர்கள் சிதம்பரம் நடராசரை 24.12.1648 அன்று குடுமியாமலைக்கு எடுத்துச் சென்றனர்.[அதென்ன நடராசருக்குத் தன்னைக் காத்துக் கொள்ளத் தெரியாதா? துலுக்கனுக்கு என்ன அப்படி நடராசனின் மீது ஆசை? யாரந்த அன்பர்கள், நடராசனை எடுத்துச் சென்றது?]. குடுமியாமலையில் 40 மாதம் நடராசர் இருந்தார் [அதெப்படி மூன்று வருடங்கள் மேலே அங்கிருந்தார்! அப்பொழுது, யார் பூசை செய்தது? யார் காத்தது?]. அங்கு பாதுகாப்புக் குறைவு ஏற்பட்டதால் நடராசரை மதுரைக்குக் கொண்டு சென்று 37 வருடம் 10 மாதம் 20 நாட்கள் வைத்திருந்தனர் [அதெப்படி, துலுக்கன் அங்கும் வந்துவிடாடானா?]. 1647 ஆம் ஆண்டும் அதைத் தொடர்ந்தும் சிதம்பரம் பகுதியில் ஏற்பட்ட பஞ்சத்தின் காரணமாக மக்கள் குடிப்பெயர்ச்சி ஏற்பட்டபோது நடராசர் இடம் மாறுதல் செய்யப்-பட்டார் என்ற கருத்தும் உண்டு [ஆஹா, இப்படியும் ஒன்று உண்டுபொல இருக்கிறது. ஏன் இந்த கதையை எந்த கல்வெட்டோ-பட்டயமோ சொல்லவில்லையா?].

அப்போது செஞ்சியிலும், தஞ்சை-யிலும் மராட்டியர் ஆட்சி நடை-பெற்றது. செஞ்சியில் ஆட்சி செய்தவர் வீர சிவாசியின் மூத்த மகன் சாம்பாசி. பறங்கிப் பேட்டை மராட்டிய அலுவலர் கோபால தாதாசி வேண்டிக் கொள்ளவே சாம்பாசி தஞ்சையில் ஆட்சி செய்த தன் சிறிய தந்தையார் மகன் சகசி உதவியோடு மதுரையி-லிருந்து நடராசரை சிதம்பரம் கொண்டு வர ஏற்பாடு செய்தார் [இந்த மரத்தியரைத் தான் கோவிலைவிட்டு வெளியெஏறு என்று தமிழ் பெரியரில் ஒரு கூட்டம் ரகளை செய்கிறது. அதைத் தட்டிக் கேட்க எந்த தமிழனிஉக்கோ, சைவனுக்கோ துப்பு இல்லை]. இப்பணியை மேற்கொண்டு நடராசரை 21.11.1684 இல் சிதம்பரம் கொண்டு வந்து மீண்டும் எழுந்தருளச் செய்து குடமுழுக்கு விழாவையும் நடத்தியவர் சிதம்பரம் திருச்சிற்றம்பலத் தவமுனிவர் என்பவர். (இச்செய்திகள் திருவாரூர்க் கோயிலி-லிருந்து மைய அரசின் தொல்லியல் துறை படியெடுத்த 4 செப்பேடுகளில் விரி-வாகக் கூறப்படுகிறது. கிஸீஸீணீறீ ஸிமீஜீஷீக்ஷீ ஷீயீ ணிஜீவீரீக்ஷீணீஜீலீஹ் 21–_23 ஷீயீ 1947)

கி.பி.1702_ஆம் ஆண்டு சிதம்பரம் கோயில் நிரு-வாகியாக இருந்து திருப்-பணி, வழிபாடு முதலிய-வைகளை மேற்பார்வை செய்தவர் பாதபூசை அம்-பலத்தாடும் பண்-டாரம் என்பவராவார்.

21.1.1711 அன்று சிதம்பரம் கோயில்-களின் நிருவாகியாக வேளூர் அம்பல-வாணத் தம்பிரான் என்பவர் இருந்த-போது சிதம்பரம் கோயிலைச் சேர்ந்த புதுமடத்தில் வழிபாட்-டுக்காக சீர்காழிச் சீமை ஏழு மாகாணத்தார் மற்றும் பெரிய வகுப்பு, சிறிய வகுப்புகளைச் சேர்ந்த குடி-யானபேர் அனைவரும் நெல் கொடையளித்தனர். இதற்காக எழுதப்-பட்ட செப்பேட்டில் நடராசர் சிவகாமியம்மை உருவத்துடன் வேளூர் அம்பலவாணத் தம்பிரான் பெயரையும் உருவத்தையும் பொறித்-துள்ளனர்.

31.12.1747 அன்று பரங்கிப்-பேட்-டையைச் சேர்ந்த ஊரவர், வர்த்தகர், புடவைக்காரர், நீலக்காரர், மளிகைக்-காரர் [இவர்கள் எல்லாம் யார் என்று ஏன் குறிப்பிடப்படவில்லை] முதலிய அனைவரும் சிதம்பரம் கோயிலில் நிர்வாகியாக இருந்து, ஆயிரங்கால் மண்டபம், நாலு கோபுரம், பஞ்சாட்சர மதில் ஆகியவைகளைத் திருப்பணி செய்த சண்முகத்தம்பிரான் என்பவரிடம் கொடை கொடுத்தனர். அதே நாளில் பறங்கிப்பேட்டையில் வணிகம் செய்த ஆலந்து நாட்டைச் சேர்ந்த வணிகர்களும் (உலாந்தா கம்பெனி) சண்முகத் தம்பிரானிடம் மகமைக் கொடை கொடுத்துள்ளனர் [அதாவது ஐரோப்பியருடன் வியாபாரம் செய்து கொழுத்த பணம் / லாபம் சம்பாதித்த வணிகர்கள் அவ்வாறு கொடை கொடுத்தனர்].

முத்தையத் தம்பிரான் என்பவர் நெடுங்காலம் திருப்பணி செய்யப் பெறாமலிருந்த இராசசபையைத் திருப்பணி செய்தார். பெரும் பொருட்-செலவில் நிருவாகி முத்தை-யத் தம்பிரான் திருப்பணிக்குத் தில்லை மூவாயிரவர் தினம் அரக்கால் காசு, கொடுத்த விவரம் ஒரு செப்பேட்டில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் கோயில் நிருவாகமும் திருப்பணியும் தீட்சிதர் வசம் இல்லை என்பது தெரிகிறது [அதாவது நேரிடை அத்தாட்சிகள் / ஆதரங்கள் எதுவும் இல்லை, எல்லாமே மறைமுக குறிப்புகள்தாம். அவற்றை வலியப் பொருள்கொண்டு ராசுத் தருகிறார் என்று நன்றாகவே தெரிகின்றது]. மேற்கண்ட செய்திகள் கூறும் நான்கு செப்-பேடுகள் திருப்பனந்தாள் காசி-மடத்தில் உள்ளன. இதேபோல் சிதம்-பரம் கோயிலுக்குரிய பத்துச் செப்பேடுகள் திருவாரூர்க் கோயிலில் உள்ளன. இச்செப்பேடுகள் எதுவுமே தில்லை தீட்சிதர்களிடம் இல்லை என்பதால் அவர்கட்குத் திருப்பணி-யிலும் நிர்வாகத்திலும் அக்காலத்தில் பங்கு இல்லை என்பது தெளிவா-கிறது. அரியலூர் மழவராயரி-டமும் சில சிதம்பரம் செப்பேடுகள் உள்ளன.

சிதம்பரம் கோயில் வழிபாடு, விழாக்களில் பங்கு பெறவும், விழாக்-களுக்கு வரும் அடியார்கட்கு உதவிகள் செய்யவும் சிதம்பரத்தில் புதுமடம், நாற்பத் தெண்ணாயிரவர் மடம், அம்பலப் பெருந்தெரு திருநாவுக்கரசு தேவன் திருமடம், அறுபத்து மூவர் மடம், அம்பலத்தடிகள் மடம், கந்ததேசிகள் மடம், முதலிய பல மடங்கள் இருந்தன, எப்போழுதுமே இம்மடங்களில் உப்பு, ஊறுகாய், நீராகாரம் வழங்கப்பட்டது. குழந்தை-கட்குப் பாலும், தலைக்கு எண்ணெய்யும் வழங்கப்பட்டது. அன்னதானம் நடை-பெற்றது. அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் என்பது தேவாரத் தொடர்.

19 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம் முதல் 20 ஆம் நூற்றாண்டின் இடைப்-பகுதி வரை சிதம்பரத்தை அடுத்துள்ள பிச்சாவரம் சமீன்தார்கள் நிருவாகத்தில் சிதம்பரம் கோயில் இருந்துள்ளது [அதெப்படி திட்டிரென்று பிச்சாவரம் ஜமீந்தார்கல் வந்து முளைத்தார்கள்? இங்கு எதையோ மறைக்கிறார் ராசு]. சாமிதுரை சூரப்ப சோழனார், தில்லைக்கண்ணு சூரப்ப சோழனார், ஆண்டியப்ப சூரப்ப சோழனார் ஆகியோர் சிதம்பரம் கோயில் நிர்வாகி-களாக இருந்துள்ளனர். அவர்கள் வீட்டு ஆவணங்கள் இதைத் தெரிவிக்-கின்றன [இவை வெளியிடப்பட்டவையா இல்லையா?].

கோயில் அணிகலன்களும், சாவியும் பிச்சாவரம் சமீன்தார் வசமே இருந்தன. கோயிலில் அர்த்த சாம பூசை முடிந்த பின் தீட்சிதர்கள் கோயிலைப் பூட்டிச் சாவியைப் பல்லக்கில் வைத்துக் கொண்டுசென்று பிச்சாவரம் சமீன்-தாரிடம் ஒப்படைப்பர். அதுபோல் அதிகாலையில் சென்று சாவியை வாங்கி வருவர்.

தீட்சிதர்களிடையே வழக்கு ஏதேனும் ஏற்பட்டால் பிச்சாவரம் சமீன்தார் தீர்த்து வைப்பார். 5.11.1911 அன்று தில்லை தீட்சிதர்கள் பன்னிரண்டு பேர் சேர்ந்து எழுதிய கடிதம் ஒன்றில் மகா.ரா.ரா.ஸ்ரீ சக்கரவர்த்தியவர்கள் என்றே சமீன்தாரைக் குறிப்பிட்டுள்-ளனர்.

தேவாரம் பாடிய மூவர் தாங்கள் பாடிய 11 பதிகங்களில் தில்லை இறை-வனைச் சிறப்பித்துப் பாடியுள்ளனர். தில்லைக்கூத்தன் காலிங்கராயன் என்பவர் எல்லாத் தேவாரப் பாடல்-களையும் செப்பேட்டில் பொறித்துச் சிதம்பரம் கோயிலில் வைத்தார். ஆனால் மூவர் தமிழ்த் தேவாரப் பாடலைச் சிற்றம்பல மேடையில் பாடக்கூடாது என்று தீட்சிதர்கள் தடுத்தனர். வடமொழிக்கு நிகராகத் தமிழ் இருக்கக் கூடாது என்றனர் [செப்பேட்டில் உள்ளதா, இல்லை ராசுவே கதைவிடுகிறாரா? ஏன் செப்பேடு எண் முதலியக்  குறிப்புகளைக் குறிப்பிடாமல் எழுதுகிறார்? முதலில், இதுவரை இல்லாத இந்த தமிழ்-வடமொழி பிரச்சினை எங்கிருந்து வந்தது?].

சேக்கிழார் பெரியபுராணம் பாட உலகெலாம் என்ற முதற்சொல்லை அடியெடுத்துக் கொடுத்தவர் சிதம்-பரம் நடராசர் என்பது மக்கள் நம்-பிக்கை. ஆனால் சிதம்பரம் ஆயிரக்கால் மண்டபத்தில் சேக்கிழார் விழாவை அரசு நடத்துவதைத் தீட்சிதர்கள் தடுத்தனர் [இதென்ன இப்படி விவரம் தெரிந்த ராசு குழப்புகிறார்? ஏனெப்படி காலநிலையைக் கொலைசெய்கிறார்?].

ஆனந்தத் தாண்டவமாடும் நடராசர் கோயிலில் நாட்டியாஞ்சலி நடத்தத் தடை விதித்தனர். அத்தடைகளை-யெல்லாம் உடைத்து தமிழக அரசு சிதம்பரம் கோயிலை இன்று நிர்வகித்து வருகிறது [இதுவும் கால முரண்பாடு, திரித்து விளக்கம் அளிக்கும் போகுத் தெரிகிறது]. தமிழ்நாட்டுப் பக்தர்கள் அனைவரும் மகிழ்ந்தனர். தமிழக அரசின் நிர்வாகத்தை நீக்க தீட்சிதர்கள் நீதிமன்றப் படியேறுகின்றனர். இதைப் பஞ்சாட்சரப் படிக்கு மேல் பக்தர்கட்குக் காட்சியளிக்கும் நடராசர்கூடப் பொறுத்துக் கொள்ள மாட்டார்.

சில ஆண்டுகட்கு முன் சிதம்பரம் கோயில் யாருக்குச் சொந்தம்? மக்களுக்கா_ தீட்சிதர்களுக்கா? என்ற கருத்தரங்கு ஒன்று சென்னையில் நடைபெற்றது. அருட்செல்வர் நா. மகாலிங்கம், ம.பொ.சி, நீதியரசர்கள் கிருஷ்ணசாமி ரெட்டியார், சதாசிவம், முன்னாள் துணை வேந்தர் சிட்டிபாபு, பேராசிரியர் வெள்ளைவாரணம், அன்புகணபதி போன்ற பலர் கலந்து கொண்டனர்.

அனைவரும் ஒருமனதாக மக்க-ளுக்கே சொந்தம் என்று தீர்மானம் நிறைவேற்றி மாநில, மத்திய அரசுக்கு அனுப்பினர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முத்துசாமி சிதம்பரம் கோயில் மக்களுக்கே சொந்தம் என்று தீர்ப்பு வழங்கியதையும் சுட்டிக்காட்டியுள்ள-னர். நிர்வாகத்தில் என்றும் தீட்சி-தர்கட்குப் பங்கு சிறிதும் இல்லை, பூசை செய்வது மட்டுமே அவர்கள் பணி என்று அனைவரும் கூறினர்.

செப்பேடு, கல்வெட்டு, வரலாற்று ஆவணங்களின் படி என்றுமே தீட்சி-தர்கள் வசம் இருந்திராத சிதம்பரம் கோயில் நிருவாகத்தை எப்படியோ சூழ்ச்சிகளால் அபகரித்துக் கொண்ட தில்லை தீட்சிதர்கள் அதன்மூலம் பல சுகம் கண்டதால் மீண்டும் நிரு-வாகத்தைப் பெற முயல்கின்றனர். அந்த முயற்சியை முறியடிக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறைக்கும், தமிழக அரசிற்கும் ஆதரவாக தமிழகப் பக்தர்கள், தமிழ் ஆர்வலர்கள், ஆதினத் தலைவர்கள் ஆகியோர் உடனே ஒன்று திரள வேண்டும். தீட்சிதர்களை வழக்-கைத் திரும்பப் பெறவைக்க வேண்டும் [ஹோ, இங்குதான் ராசு  வேலை நாசுக்காகத் தெரிகிறது. தன்னுடைய படிப்பை இவ்வாறு கடன் வைக்கவேண்டாம். ஏற்கெனவே உள்ள செப்பேடுகளை முகமதியருக்குச் சாதகமாக படித்து (அதாவது அவர்களுக்கு சாதகமாக இலாதவற்றை மறைத்து), இஸ்லாமியக் கல்லூர்களில் கட்டுரைப் படித்து வருகிறார். பாவ சஹாப்புத்தீன். இப்பொழுது இப்படி பல உண்மைகளை மறைத்து இப்படி கட்டுரை “ஆக்கி”யுள்ளார்! பாவம் “புலர்” ராசு, இல்லை “புலவர்” ராசு! இப்படியே போனால், நிச்சயமாக “கலைமாமணி”யாவது கிடைக்கும்].

கட்டுரை ஆக்கம்:
புலர் செ.இராசு எம்.ஏ., பிஎச்.டி.,
முன்னாள் தலைவர்
கல்வெட்டியல் – தொல்லியல் துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
தொலைபேசி: 0424 2262664.