ரூ. 10 கோடி மதிப்புள்ள விநாயகர் சிலை விற்க முயன்ற 6 பேர் கைது

ரூ. 10 கோடி மதிப்புள்ள விநாயகர் சிலை விற்க முயன்ற 6 பேர் கைது
ஜனவரி 06,2010,00:00 IST
http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=15220

கொச்சி:ஐம்பொன்னால் ஆன அபூர்வ நர்த்தன விநாயகர் சிலையை விற்க முயன்ற, ஆறு பேர் கொண்ட கும்பலை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 10 கோடி ரூபாய் மதிப்பிலான சிலையை கைப்பற்றினர்.கேரள மாநிலம், கொச்சி துறைமுகம் மற்றும் மட்டாஞ்சேரி பகுதிகளுக்குச் செல்லும் சுற்றுலா பயணிகளிடம் சில புரோக்கர்கள், ஐம்பொன்னால் ஆன விநாயகர் சிலையை விற்க முயல்வதாக, போலீஸ் கமிஷனருக்கு தகவல் கிடைத்தது.

ஸ்பெஷல் பிராஞ்ச் போலீஸ் உதவி கமிஷனர் மற்றும் தனிப்படையினர், ரகசிய விசாரணையில் இறங்கினர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைப் போல், போலீசார் மாறுவேடம் அணிந்து, அப்பகுதியில் சுற்றித் திரிந்தனர்.அப்போது புரோக்கர்கள், “ஐம்பொன்னால் செய்யப்பட்ட அபூர்வ நர்த்தன விநாயகர் சிலை உள்ளது. 300 ஆண்டு பழமையான, 23 கிலோ எடை கொண்டது. அதன் விலை, ஏழு கோடி ரூபாய்’ என, சுற்றுலாப் பயணிகள் போல் வந்த போலீசாரிடம் கூறினர்.

பேரம் பேசி ஐந்தரை கோடி ரூபாய்க்கு முடிவானதும், “சிலை எங்கே?’ என கேட்டதற்கு, “திருச்சூரில் ரகசிய இடத்தில், சிலை வைக்கப்பட்டு உள்ளது; அங்கு நான்கு பேர் உள்ளனர்; பணம் கொடுத்தவுடன் சிலையை தருவோம்’ என, புரோக்கர்கள் கூறினர்.”சிலையை எர்ணாகுளத்திற்கு கொண்டு வந்து தரவேண்டும்’ என போலீசார் கூறியதையடுத்து, “பணம் முழுவதும் கொடுத்தால் தான், இங்கு கொண்டு வரமுடியும்’ என்றனர்.

அவர்களை ஆடம்பர ஓட்டலுக்கு அழைத்துச் சென்று, பணத்தை காட்டியதும், நேற்று முன்தினம் காலை, காரில் சிலையை கொண்டு வந்தனர். ஆனால், தங்களிடம் சிலை வாங்க வந்தவர்கள் போலீசார் என்பதை அக்கும்பல் அறிந்து கொண்டு, காரிலேயே தப்பி ஓடி விட்டது.அனைத்து போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்ததையடுத்து, தோவரா போலீஸ் நிலைய பகுதியில், ஆறு பேர் கும்பலும், காரும் சிக்கியது.அவர்களை கைது செய்த போலீசார், எங்கிருந்து சிலையை கொள்ளை அடித்தனர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்

குறிச்சொற்கள்: ,

3 பதில்கள் to “ரூ. 10 கோடி மதிப்புள்ள விநாயகர் சிலை விற்க முயன்ற 6 பேர் கைது”

 1. vedaprakash Says:

  ரூ.7 கோடி பஞ்சலோக சிலைகள்விற்க முயன்ற 5 பேர் கைது
  ஜனவரி 13,2010,00:00 IST
  http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=15369

  பெரிந்தல்மண்ணா:இரு பஞ்சலோக சிலைகளை விற்க முயன்ற, ஐந்து பேர் கொண்ட கும்பலை கைது செய்த போலீசார், மேலும் சிலரை தேடி வருகின்றனர்.கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மண்ணா பகுதியில், வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே சென்ற வேனை நிறுத்தி சோதனையிட்டதில், பஞ்சலோகத்தால் ஆன இரு சிலைகளை கடத்தியது தெரிந்தது. சிலையை கடத்திய ஐந்து பேர் கும்பலை கைது செய்த போலீசார், இவ்வழக்கில் தலைமறைவாகி விட்ட மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

  இச்சிலை குறித்து திருச்சூர் தொல்லியல் துறை வல்லுனர்கள் கூறியதாவது:நூற்றாண்டு பழமை வாய்ந்த இவ்விரு சிலைகளை, தமிழக கோவில்களில் இருந்தோ அல்லது வட கேரள மாநில பகுதிகளில் இருந்தோ கொள்ளையடித்திருக்கலாம். உமாதேவி சிலை 9.5 கிலோவும், நேமிநாத தீர்த்தங்கரா சிலை, நான்கு கிலோவும் உள்ளது. தென்னிந்தியாவில் அபூர்வ வகை சிலைகளில் ஒன்றாக, நேமிநாத தீர்த்தங்கரா சிலை கருதப்படுகிறது. இவை, ஏழுகோடி ரூபாய் மதிப்புள்ளவை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 2. vedaprakash Says:

  மரகத விநாயகர் சிலை வழக்கில் கோவை நபர் கைது
  ஜனவரி 13,2010,00:00 IST
  http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=15370

  வடக்காஞ்சேரி:மரகத வலம்புரி விநாயகர் சிலையை விற்க முயன்ற வழக்கில், கோவையைச் சேர்ந்த ஒருவர், கைது செய்யப்பட்டார்.திருச்சூர் மாவட்டம் வடக்காஞ்சேரியில் தனியார் லாட்ஜில், மரகத கல்லால் ஆன வலம்புரி விநாயகர் சிலையை விற்க முயன்ற மூவரை, போலீசார் கைது செய்தனர். அச்சிலை வைக்கப்பட்டிருந்த சந்தனப் பேழையில், தமிழ் வார இதழ்கள் இருந்ததால், தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கொண்டு வந்திருக்கலாம் என சந்தேகித்தனர்.இதையடுத்து, கோவையை சேர்ந்த அருள்செல்வன் (37) என்பவரை நேற்று முன்தினம், போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்ததில், அச்சிலை சென்னையில் இருந்து வாங்கியதும், கொள்ளை அடிக்கப்பட்ட சிலைகளை வாங்கி, பிற மாநிலங்களுக்கு கடத்தி விற்கும் கும்பலின் முக்கிய நபராக செயல்படுவதும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 3. vedaprakash Says:

  கோவில் சிலைகள் திருட்டு:வங்கியில் ரூ.4 கோடி தப்பியது
  ஜனவரி 13,2010,00:00 IST
  http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=15362

  திருவாரூர்:கூத்தாநல்லூர் அருகே திரவுபதியம்மன் கோவிலில் மூன்று மர சுவாமி சிலைகளை, மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். அதே போல் வடபாதிமங்கலம் ஸ்டேட் பாங்கில் லாக்கரை உடைக்கும் முயற்சியில் கொள்ளையர்கள் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அடுத்த நாகங்குடி திரவுபதியம்மன் கோவில் பூசாரி நேற்று காலை கோவில் மண்டபத்தில் பார்த்த போது அங்கிருந்த மூன்று மரச் சிலைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின் கிராம தலைவர்களுக்கு தகவல் அளித்தார்.

  மண்டபத்தில் இருந்த தர்மர், கிருஷ்ணன், திரவுபதி அம்மன் சிலைகள் திருட்டு போயிருந்தது. இச்சிலைகள் ஒவ்வொன்றும் மூன்றடி உயரம் கொண்டவை. பின்பக்க மதில் சுவர் வழியாக உள்ளே நுழைந்து சிலைகளை திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது.கூத்தாநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.மற்றொரு சம்பவம்: திருவாரூர் மாவட்டம், வடபாதிமங்கலத்தில் ஸ்டேட் பாங்க் கிளை ஊழியர்கள் நேற்று முன்தினம் காலை வங்கியை திறந்த போது, கட்டடத்தின் பின் பக்க கிரில் கேட் திறந்து கிடந்தது.பதிவேடு அறை கதவு உடைக்கப்பட்டு பதிவேடுகள் சிதறி கிடந்தன. வங்கி லாக்கரை உடைக்க முயற்சி செய்துள்ளனர். ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் பாதியில் கைவிட்டு சென்றுள்ளனர். இதனால், வங்கி லாக்கரில்,நான்கு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் தப்பியது.இதே வங்கியில் கடந்த அக்டோபர் மாதம் கொள்ளையடிக்க முயற்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.வங்கி கிளை மேலாளர் சிவா கொடுத்த புகாரின் பேரில், வடபாதிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: