மக்களிடையே நாட்டுப்பற்று குறைந்து வருகிறது: திருவாவடுதுறை ஆதீனம்!

மக்களிடையே நாட்டுப்பற்று குறைந்து வருகிறது: திருவாவடுதுறை ஆதீனம்
First Published : 03 Jan 2010 01:36:00 AM IST

http://dinamani.com/edition/story.aspx?Title=%u0bae%u0b95%u…………

திருவாவடுதுறை ஆதீன திருமடத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற மார்கழி திருவாதிரை விழாவில் ஓதுவார்கள் மற்றும் தமிழறிஞருக்கு விருதுகளை வழங்கி, ஆசி வழங்குக

மயிலாடுதுறை,  ஜன. 2:     போராட்டம் என்ற பெயரில் பொது சொத்துகள் சேதப்படுத்தப்படுவதன் மூலம், மக்களிடையே நாட்டுப்பற்று குறைந்து வருவது தெரிய வருகிறது என்றார் திருவாவடுதுறை ஆதீனம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்.நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம் வட்டம், திருவாவடுதுறை ஆதீன திருமடத்தில் மார்கழித் திருவாதிரை, ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள், சொற்பொழிவுகள், விருது வழங்குதல், நூல் வெளியீடு, நலத் திட்ட உதவிகள் வழங்குதல், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு திருவாவடுதுறை ஆதினம் மேலும் பேசியது:

2010-ம் ஆண்டு நாட்டில் அமைதி நிலவும். மக்கள் சுபிட்சமாக வாழ்வர். மழை குறையாது. உலகம் அழியும் எனக் கூறப்படுவதை யாரும் நம்பக் கூடாது. ஜாதி, மத பேதங்களை மறந்து, மக்கள் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும். இதன் மூலம் கிடைக்கும் பலன், அனைத்து மக்களையும் சென்றடையும்.சுப காரியங்கள், திருமணங்களில் மரக்கன்றுகளைப் பரிசளிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். மரம் வளர்த்தால், புவி வெப்பமயமாதலைத் தடுக்கலாம். பாவங்களையும், தாகத்தையும் போக்கும் கோயில் குளங்களை மாசுபடாமல், தூய்மையாகப் பாதுகாக்க வேண்டும்.வெளி நாடுகளிலிருந்து வழிபாட்டுக்காக இந்தியா வரும் பக்தர்களுக்கு விசா வழங்கும் முறையில் சலுகை அளிக்க வேண்டும். இதில், பாதுகாப்பு அம்சத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.உரிமைக்காகப் போராடும் மக்கள், வன்முறைகளைக் கைவிடவேண்டும். போராட்டங்கள் என்ற பெயரில் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தக் கூடாது. பொது சொத்துகள் சேதப்படுவதால் நாட்டின் வளம் குறைகிறது. நாட்டுப்பற்று குறைந்து வருவதால்தான் வன்முறைகள், பொது சொத்துகள் சேதம் ஆகியவை நிகழ்கின்றன என்றார் திருவாவடுதுறை ஆதீனம்.

சிறப்புச் சொற்பொழிவுகள்: முன்னதாக, வெள்ளிக்கிழமை மாலை ஆதீனத் திருமடம் வேணுவனலிங்க விலாச அரங்கில் இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, கோவை அரசு கலைக் கல்லூரி தமிழ்த் துறை இணைப் பேராசிரியர் முனைவர் கி. சுப்பிரமணியன், கடலூர் புலவர் ஞானப்பிரகாசம் ஆகியோர் சிறப்புச் சொற்பொழிவாற்றினர்.

ஓதுவார்களுக்கு பட்டம்: இதைத் தொடர்ந்து, இரவு நேர வழிபாடு முடிந்த பின்னர், காரைக்குடி கொப்புடைநாயகியம்மன் திருக்கோயில் ஓய்வு பெற்ற ஓதுவார் டி. ஆர். நாராயணன், சூரியனார்கோயில் அருள்மிகு சிவசூரியப்பெருமாள் திருக்கோயில் ஓதுவார் சிவ. மோகனசுந்தரம், மதுரை திருப்புவனம் அருள்மிகு திருப்பூவணநாதர் திருக்கோயில் ஓதுவார் அ. முத்துக்குமார் ஆகியோருக்கு தலா ரூ. 3 ஆயிரம் பண முடிப்பு, “தெய்வத்தழிசைச் செல்வர்’ விருது, கோவை தமிழறிஞர் கி. சுப்பிரமணியனுக்கு ரூ.  3 ஆயிரம் பண முடிப்பு, “திருநெறிய தமிழ்ச் செல்வர்” விருது ஆகியவற்றை திருவாவடுதுறை ஆதீனம் வழங்கினார்.

நூல் வெளியீடு: பின்னர், “சைவ அனுட்டான விதி” என்ற விழா மலரை திருவாவடுதுறை ஆதீனம் வெளியிட, அதன் முதல் பிரதியை வேளைக்குறிச்சி ஆதீனம் இளவரசு சீர்மிகு அஜபா நடேஸ்வரர் பெற்றுக் கொண்டார்.அதைத்தொடர்ந்து, “திருத் தில்லை நீரோட்டக யமக அந்தாதி’ என்ற நூலை ஆதீனம் வெளியிட்டார். இதன் முதல் பிரதியை நாமக்கல் அரசு கலைக் கல்லூரி முன்னாள் முதல்வர் உ. சிவசாமியும், 2-ம் பிரதியை நூலாசிரியர் கடலூர் புலவர் வ. ஞானப்பிகாசமும் பெற்றுக் கொண்டனர்.பின்னர், திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.இந்த நிகழ்ச்சிகளில் கட்டளை தம்பிரான் சுவாமிகள், தமிழ் ஆர்வலர்கள், ஆதீனப் புலவர்கள், ஆதீனப் பள்ளிகளின் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதில் to “மக்களிடையே நாட்டுப்பற்று குறைந்து வருகிறது: திருவாவடுதுறை ஆதீனம்!”

  1. vedaprakash Says:

    இதற்கு “தினமணி”யில் பதிவு செய்தது:

    http://dinamani.com/edition/story.aspx?Title=%……………&SEO=&SectionName=Tamilnadu

    இதைப் படித்தபோது, எனக்கு இரண்டுவிதங்களில் வருத்தம். ஒன்று ஆங்கிலத்தில் எழுதுகிறோம் என்று “மடத்தை” (mutt)”மண்ணாக்கி” (mud)விட்டனர்,நமது தமிழ் போராளிகள்! “பாஷையை”, “பாடை”யாக்கியதைப்போல! செம்மொழிப்பொராளிகள் இவருக்கு “கலைமாமணி” தருவது நிச்சயம்! சிவனேசன் குறிப்பிட்டதைப்போல நடக்கும் கொள்ளையை தமிழர்கள் தட்டிக்கேட்காமல் தூங்குவதும் வருத்தம்தான். நாத்திகம் பேசி, தார்மீக எண்ணங்கள், செயல்பாடுகள், உறவுகள் முதலியவற்றைச் சிதைத்துள்ளதை யாரும் கவலைபடுவதாக / கண்டிப்பதாகத் தெரியவில்லை. இந்த சாமிகள் கூட சொல்ல வேண்டியதை சொல்லாமல் “நவீன மூட நம்பிக்கைகளை”ப் பிடித்துக் கொண்டு, “மரம் வளர்த்தால், புவி வெப்பமயமாதலைத் தடுக்கலாம். பாவங்களையும், தாகத்தையும் போக்கும் கோயில் குளங்களை மாசுபடாமல், தூய்மையாகப் பாதுகாக்க வேண்டும்:, என்றெல்லாம் பேசுகிறார். இந்த மடாதிபதிகள் முதலில் செய்யவேண்டியது நாத்திகவாதிகளை, குறிப்பாக திராவிட போர்வையில் உலா வரும் இந்து விரோதிகளை எதிர்க்கவேண்டும். அப்பொழுதுதான் மாசு நீங்கும். பாவம் தொலையும்!
    By Vedaprakash
    1/8/2010 6:53:00 AM

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: