சிலைகளைத் திருடும் பாதிரியார்!

சிலைகளைத் திருடும் பாதிரியார்!

இன்று மாலை (திங்கட்கிழமை 01-02-2010), “தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் திருடப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள 11 சிலைகள் திருட்டு கும்பலிடமிருந்து மீட்கப்பட்டன. இது தொடர்பாக பாதிரியார் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்”[1], என்று செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன! திலகவதி ஒரேரேடியாக சிலைத் திருடர்களைப் பிடிக்க ஆரம்பித்துவிட்டார்! அதுவும் எல்லாமே கோட்க்க்கணக்கில்தான், அவை மதிப்பு!

சிலைகளைத் திருடும் பாதிரியார்! தமிழ் நாட்டிற்கு இதொன்றும் புதியது இல்லை. கோவில்களை உடைப்பது, சிலைகளை உடைப்பது, பீயைக் கரைத்து கோவிலில் ஊற்றுவது ………………….முதலியவை அவர்களுக்கு சகஜமே. ஆனந்த ரங்கம் பிள்ளை டைரி என்று இருக்கிறது. அதனைப் படித்தால், அவர்களது அத்தகையச் செயல்களை அறிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்ல, கிருத்துவ பாதிரிகளுக்கு அதுதான் முக்கியமான வேலையாக இருந்தது. போர்ச்சுகீசிய பாதிரிகளைப் பற்றிக் கேட்கவே வேண்க்டாம்.

இம்மானுவேலால் ஏற்றுமதி செய்யவிருந்த சிலைகள்

இம்மானுவேலால் ஏற்றுமதி செய்யவிருந்த சிலைகள்

பாதிரியைச் சுற்றி வளைத்துப் பிடித்தனராம்! சென்னை பெரியமேட்டில் உள்ள ஒரு விடுதியில் சிலை திருட்டு கும்பல் தங்கியிருப்பதாக போலீசுக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் விடுதியை முற்றுகையிட்டனர். விடுதியில் தங்கியிருந்த வேலூர் மாவட்டம் பள்ளூரைச் சேர்ந்த இம்மானுவேல் என்கிற பாதிரியார், திருநெல்வேலி மாவட்டம் செல்லிய நல்லூரைச் சேர்ந்த மாடசாமி, ராஜபாளையத்தைச் சேர்ந்த பிச்சை மணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையின்போது, ஜகந்நாதன் மற்றும் வேலு என்பவர்கள் திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் முதலிய இடங்களில் சிலைகள், விக்கிரங்கள் முதலியவற்றைத் திருடி, ஆற்றுப்படுகையில் புதைத்து வருவார்களாம். இம்மானுவேல் சொல்லும்போது, அவற்றை எடுத்துச் சென்று கொடுப்பார்களாம்[2].

சிலைகளைப் பிடித்துவரும் திலகவதி IPS

சிலைகளைப் பிடித்துவரும் திலகவதி IPS

11 சிலைகள் பிடிப்பட்டன: அங்கிருந்த ஐம்பொன்னால் செய்யப்பட்ட கிருஷ்ணர் சிலையை போலீசார் மீட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் சிலைகளை திருடியது தெரியவந்தது. தமிழகத்தில் திருடப்படும் சிலைகளை பாதிரியார் இம்மானுவேல், புதுச்சேரி கோட்டங்குப்பத்தைச் சேர்ந்த மாரிசாமி மூலம் வெளி நாடுகளுக்கு விற்று வந்ததும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மாரிசாமியும் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 5 மகாவீரர் ஐம்பொன் சிலைகள் கைப்பற்றப்பட்டன. இவை திருவண்ணாமலை, ஈசா குளம் என்ற இடத்தில் உள்ள புகழ்பெற்ற திகம்பரர் ஜெயின் கோயிலிருந்து திருடப்பட்டுள்ளது. இதேபோல சிற்றுடையூர் லட்சுமி நாராயணன் பெருமாள் கோயிலிருந்து திருடப்பட்ட நாராயணன், விநாயகர் ஆகிய சிலைகளையும் போலீசார் மீட்டுள்ளனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள மொத்தம் 11 விலை உயர்ந்த சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மாரிசாமி, இம்மானு வேல், ஜெகன்நாதன், வேலு, மாடசாமி, பிச்சுமணி, கங்காஜலம் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்பு கூடுதல் டிஜிபி திலகவதி இத்தகவலை தெரிவித்தார்.

இம்மானுவேலின் பின்னணி (3): வேலூர், பள்ளூரைச் சேர்ந்தவர் இமானுவேல். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் சசிகுமார். பத்தாம் வகுப்பு படித்துள்ள இவர், கிறிஸ்தவ மதத்திற்கு மாறி, பள்ளூர் சர்ச்சில் மதபோதகராக உள்ளார்.இமானுவேல், தனது சொந்தக்காரர்களான ஜெகநாதன், வேலு மற்றும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சிவா, செல்வம் ஆகியோருடன் சேர்ந்து, சிலை திருட்டில் ஈடுபட்டு வந்தார். இவரது கூட்டாளி மாடசாமி. இவருடன், இமானுவேலுக்கு பழக்கம் ஏற்பட்டது.இக்கும்பல் காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, வந்தவாசி ஆகிய பகுதிகளில் கவனிப்பாரற்று கிடக்கும் கோவில்களில், சிலைகளை திருடினர். சிவா, செல்வம் இருவரும், பகல் நேரங்களில் மிட்டாய், சர்பத், ஐஸ் விற்பவர்கள் போல சிறு கிராமங்களில் உள்ள கோவில்களுக்கு சென்று நோட்டம் பார்த்தனர். பின், இமானுவேலிடம் தகவல் கொடுத்து, அங்குள்ள சிலைகளை திருடினர்.வேலூர் ஈராளச்சேரியில் உள்ள பஜனை கோவிலில் கிருஷ்ணர், ருக்மணி, ராதா, விநாயகர் சிலைகளை, கடந்த 2007ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி, கொள்ளையடித்தனர். நான்கு சிலைகளை, ஜெகநாதன் வீடு முன், விருத்தசீரா ஆற்று மணலில் புதைத்து வைத்தனர். இந்த கும்பல், அமெரிக்கா, ஐரோப்பியா ஆகிய வெளிநாடுகளுக்கு, திருட்டு சிலைகளை விற்பனை செய்ததாக தெரிகிறது. பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழர்கள் இந்த கலாச்சாரக் கொள்ளையைத் தடுத்தே ஆகவேண்டும்: நாத்திக ஆட்சியாளர்களின் சித்தாந்தத்தினால், நிச்சயமாக தமிழர்கள் செட்டுச் சீரழிந்து போயிருக்கிறர்கள் என்று அவர்களது செயல்பாடுகள், செயல்கள், நடத்தைகள், பேச்சுகள் (பொது இடங்களில் மரியாதை இல்லாமல் பேசுவது, கெட்ட வார்த்தைகளில் திட்டுவது, அடிக்க வருவது போன்ற அநாகரிகமான செய்கைகள், பெரியவர்களை, பெண்களை கேலி பேசுவது, கிண்டல் செய்வது, சினிமா-மாதிரி கமன்ட் அடிப்பது………..முதலியன) மூலம் ஆரிந்து கொள்ளலாம். இவையெல்லாம் கௌரமான நாகரிக உச்சக்கட்டநிலை அல்ல. இதற்கு ஆஸ்கர், கிராம்மி பரிசுகளளெல்லாம் கொடுக்க முடியாது. ஆகவே, அத்தகைய திராவிட மாயையிலிருந்து தமிழர்கள் விழித்தெழுந்து கோவில்களைக் காக்கவேண்டும்.


[1] சிக்கியது சிலை திருட்டுக்கும்பல்: பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் மீட்பு, திங்கள்கிழமை, பிப்ரவரி 1, 2010; http://thatstamil.oneindia.in/news/2010/02/01/gang-arrested-stolen-idols-recover.html

[2] Newstoday,  Monday, 1 February, 2010; http://newstodaynet.com/newsindex.php?id=21185%20&%20section=7

[3] தினமலர், 02-02-2010, 11 ஐம்பொன் சிலைகள் மீட்பு: 7 பேர் கைது, விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்: http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=15877

குறிச்சொற்கள்: , ,

3 பதில்கள் to “சிலைகளைத் திருடும் பாதிரியார்!”

 1. vedaprakash Says:

  தினமணிக்கு அனுப்பிய பதில்:

  இம்மானுவேலின் குடும்பமே இதிலில் ஈடுபட்டிருப்பதாலும், “ஏற்கெனவே, இந்த கும்பல், அமெரிக்கா, ஐரோப்பியா ஆகிய வெளிநாடுகளுக்கு, திருட்டு சிலைகளை விற்பனை செய்ததாக தெரிகிறது”, என்பதாலும், இதில் சம்பந்தப் பட்டுள்ள மற்றவர்களையும் வெளிப்படுத்த வேண்டும். அச்சிலைகளுக்கு சான்றிதழ் கொடுத்தவர்கள் யார் (ஏற்றுமதிக்கு முன்பு தரப்படவேண்டியது), சுங்கத்துறையில் பில் ஆஃப் லேடிங், பாக்கிங் சிலிப் முதலிய ஆவணங்களைத் தயாரித்தவர்கள் (சிப்பிங் ஏஜென்டுகள்), வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் (ஆவணங்களிலிருந்து முகவரிகளைத் தெரிந்து கொள்ளலாம்), அவர்களது முகவரிகள் அனைத்தும் வெளியிட்டால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும்.தமிழ்-தமிழ் கலாச்சாரம், பண்பாடு என்றெல்லாம் பேசிக் கொண்டு இப்படி சரித்திர ஆதாரங்களைத் தெரிந்தேத் தொலைத்துக் கொண்டிருந்தால், அவை எப்படி வாழும்? கோடிகள் கொட்டி மாநாடுகள் நடத்தினாலும் இப்படி தமிழர்கள் திருடுவார்கள், கடத்துவார்கள், ஏற்றுமதி செய்வார்கள்!

  http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=190853&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=%u0b95%u0bcb%u0baf%u0bbf%u0bb2%u0bcd%u0b95%u0bb3%u0bbf%u0bb2%u0bcd+%u0ba4%u0bbf%u0bb0%u0bc1%u0b9f%u0bc1%u0baa%u0bcb%u0ba9+11+%u0b90%u0bae%u0bcd%u0baa%u0bca%u0ba9%u0bcd+%u0b9a%u0bbe%u0bae%u0bbf+%u0b9a%u0bbf%u0bb2%u0bc8%u0b95%u0bb3%u0bcd+%u0bae%u0bc0%u0b9f%u0bcd%u0baa%u0bc1%3a%u200b+7+%u0baa%u0bc7%u0bb0%u0bcd+%u0b95%u0bc8%u0ba4%u0bc1

 2. vedaprakash Says:

  மாரிச்சாமி புதுச்சேரியில் கலைப்பொருட்கள் விற்பனைச் செய்யும் கடையே வைத்திருக்கிறாராம்!

  பிறகென்ன ஜோறான தொழில்தான்!

  சோனியா மெய்னோ கூட இம்மாதிரி தனது சகோதரி இத்தாலியில் அத்தகைய கடை வைத்திருந்து, இவர் இங்கிருந்து கலைப்பொருட்களை அனுப்பிவைத்தார் என்ற செய்திகள் முன்பு வெளிவந்தன, சுப்ரமணிய சுவாமிக் கூட ஏதோ வழக்கெல்லாம் போட்டிருக்கிறர்! என்னவாயிற்று என்று ஸ்வாமிதான் சொல்லவேண்டும்!

 3. vedaprakash Says:

  “விடுதலை” தனக்கே உரித்தான முறையில், இதே செய்தியை இப்படி வெளியிட்டுள்ளது:

  கடவுள் சக்தி வெறும் வெத்து வேட்டே!
  அமெரிக்கா, அய்ரோப்பிய நாடுகளுக்கு கடவுளர்கள் கடத்தல்
  http://viduthalai.periyar.org.in/20100202/news01.html

  சென்னை, பிப். 2_ அமெரிக்கா அய்-ரோப்-பிய நாடுகளுக்கு கட-வுளர்களை கடத்திய-வர்-களை காவல்துறையினர் கைது செய்தனர்.

  திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டம் கோவில்களி-லிருந்து திருடப்பட்ட, பல கோடி ரூபாய் மதிப்பிலான 11 அய்ம்-பொன் கடவுளர் சிலை-கள் மீட்கப்பட்டுள்ளன. கடவுளர்களை கடத்திய நான்கு பேர் மற்றும் பகவான்களை விலைக்கு வாங்கும் வியா-பாரிகள் மூவரை, பொரு-ளாதாரக் குற்றப்பிரிவு காவல்-துறையினர் கைது செய்-தனர்.

  இதுபற்றிய தகவலை பொருளாதாரக் குற்றப்-பிரிவு ஏ.டி.ஜி.பி., திலகவதி தெரிவித்துள்ள செய்தி வருமாறு:

  வேலூர், பள்ளூரைச் சேர்ந்தவர் இமானுவேல். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் சசிகுமார். பத்தாம் வகுப்பு படித்-துள்ள இவர், கிறிஸ்தவ மதத்திற்கு மாறி, பள்ளூர் சர்ச்சில் மதபோதகராக உள்ளார். இமானுவேல், தனது சொந்தக்காரர்-களான ஜெகநாதன், வேலு மற்றும் காஞ்சி-புரத்-தைச் சேர்ந்த சிவா, செல்வம் ஆகியோருடன் சேர்ந்து, கடவுளர் சிலை திருட்டில் ஈடுபட்டு வந்-தார். சஞ்சீவி அசோகன் என்பவர், அய்ம்பொன்-னால் ஆன கடவுளர்-களை திருடி வெளிநாட்-டிற்கு விற்ற வழக்கில், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இவரது கூட்டாளி மாட-சாமி. இவருடன், இமானு-வேலுக்கு பழக்கம் ஏற்பட்-டது. இக்கும்பல் காஞ்சி-புரம், வேலூர், திருவண்-ணாமலை, வந்தவாசி ஆகிய பகுதிகளில் உள்ள கோவில்களில் கடவுளர்-களை கடத்தினர். சிவா, செல்வம் இருவரும், பகல் நேரங்களில் மிட்டாய், சர்பத், அய்ஸ் விற்பவர்-கள் போல சிறு கிராமங்-களில் உள்ள கோவில்-களுக்கு சென்று நோட்-டம் பார்த்தனர். பின், இமானுவேலிடம் தகவல் கொடுத்து, அங்குள்ள கடவுள்களைக் கடத்தினர் வேலூர் ஈராளச்சேரியில் உள்ள பஜனை கோவி-லில் கிருஷ்ணர், ருக்மணி, ராதா, விநாயகர் ஆகிய பல கடவுள்களை, கடந்த 2007ஆம் ஆண்டு ஜன-வரி 23ஆம் தேதி கடத்-தினர். ஜெகநாதன் வீடு முன், விருத்தசீரா ஆற்று மணலில் கடவுளர்களை புதைத்து வைத்தனர்.

  இதில், கிருஷ்ணரை கடவுளர்களை சிலையை மட்டும், சென்னையில் பிச்சைமணி என்பவரிடம் விற்க, இமானுவேலும், மாடசாமியும் முயன்றனர். இதுகுறித்து எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்-தது. கடந்த ஜனவரி 30, மாலை 6 மணிக்கு சென்னை பெரியமேட்-டில் ஒரு தனியார் விடு-தியில், கிருஷ்ணர் பக-வானை கண்டுபிடிக்கப்-பட்டு, பறிமுதல் செய்யப்-பட்டது. இம்மானுவேல், மாடசாமியும் முயன்றனர். இதுகுறித்து ரகசிய தகவல் கிடைத்தது. கடந்த ஜனவரி 30, மாலை 6 மணிக்கு சென்னை பெரியமேட்டில் ஒரு தனியார் விடுதியில், கிருஷ்ணர் பகவானை கண்டுபிடிக்-கப்-பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. இம்மானுவேல், மாட-சாமி, பிச்சைமணி ஆகியோரும், வேலூரில் ஜெக-நாதன், வேலு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். ஆற்று மணலில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ராதா, ருக்மணி, விநாயகர் ஆகிய கடவுளர் சிலைகள் மீட்கப்-பட்டன.

  திருவண்ணாமலை இசாகுளத்தூரில் திகம்பர ஜெயின் கோவிலில் அய்ந்து மகாவீர் அய்ம்பொன் சிலை-கள், பிச்சைமணி மூலம், புதுச்சேரியில் மாரி-சாமி என்பவரிடம் விற்கப்பட்டன. தற்போது, அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ஜெயின் சிலைகள் 1,000 ஆண்டுகள் பழமையானவை. மாரிசாமி-யிட-மிருந்து மேலும் பல சிலைகள் கைப்பற்றப்பட்டு உள்ளன. மாரிசாமி சொன்னதன் அடிப்படையில், கங்காச்சலம் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இக்கும்பலைச் சேர்ந்த செல்வம், வைத்தி ஆகியோரை தேடி வருகிறார்களாம். இந்த கும்பல், அமெரிக்கா, அய்ரோப்பியா ஆகிய வெளிநாடுகளுக்கு கடவுளர்-களை கடத்தி விற்பனை செய்ததாக தெரிகிறது. பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: