கோவில்களுக்கு ஏன் தொடர்ந்து சீல் வைக்கப்படுகின்றன?

கோவில்களுக்கு ஏன் தொடர்ந்து சீல் வைக்கப்படுகின்றன?

தொடர்ந்து கோவிகளுக்கு சீல் வைக்கும் போக்கு இந்துக்களை அவமதிப்பாகிறது: : செஞ்சியில் ஜனவரி 5ம் தேதி புகழ் பெற்ற வெங்கடரமணர் கோவில் சீல் வைக்கப் பட்டது.
இப்பொழுது, பிப்ரவரி 4ம் தேதி இன்னொரு கோவொலுக்கு சீல் வைக்கப்படுகிறது!
நிச்சயமாக, இது கலெக்டர், போலீஸ், அரசு அதிகாரிகள் முதலியோர் பாரபட்சமாக செயல்படுகின்றனர் என்பது நன்றாகவேத் தெரிகின்றது.
குறிப்பாக இந்துக்களின் உரிமைகள் நசுக்கப்படுகின்றன என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.
செஞ்சி கோதண்டராமர் கோவிலுக்குசப்- கலெக்டர் முன்னிலையில் ‘சீல்’ வைப்பு
பிப்ரவரி 05,2010,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=15973

Important incidents and happenings in and around the world

பிரச்சினை செய்பவர்களை விடுத்து கோவிலுக்கு சீ வைக்கும் மர்மம் புரியவில்லை: செஞ்சி:செஞ்சியில் பூட்டப்பட்டிருந்த கோதண்டராமர் கோவிலை சப்- கலெக்டர் முன்னிலையில் சீல் வைத்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள பழமையான கோதண்டராமர் கோவிலுக்கு கிறிஸ்தவர்கள் உரிமை கோரியதால் கடந்த 1ம் தேதி கோவிலுக்கு தாசில்தார் முன்னிலையில் பூட்டு போடப்பட்டது. இது குறித்து, நேற்று முன்தினம் சப் -கலெக்டர் மஞ்சுளா தலைமையில் நடந்த சமாதான கூட்டம் வரும் 15ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அதுவரையில் கோவிலை பூட்டி வைப்பது என்ற முடிவுக்கு எதிர்ப்புதெரிவித்து, இந்து முன்னணி மற்றும் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் வெளி நடப்பு செய்தனர். அத்துடன் இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் காஞ்சி கண்ணன் தலைமையில் கோவில் பூட்டை திறந்து வழிபாடு செய்ய முயன்றனர். இவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தினர். இச்சம்பவம் நடந்த சில மணி நேரத்திற்கு பிறகு சப் -கலெக்டர் மஞ்சுளா முன்னிலையில், தாசில்தார் சங்கரன் கோவிலின் பூட்டிற்கு சீல் வைத்தார்.இந்து முன்னணியினர் மீண்டும் கோவிலின் பூட்டை திறந்து வழிபாடு நடத்தக்கூடும் என்பதால், அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
செஞ்சிக்கோட்டை வெங்கட்ரமணர் கோவிலுக்கு ‘சீல்’
ஜனவரி 06,2010,00:00  IST

http://www.dinamalar.com/Tnspl_districtdetail.asp?news_id=284125&ncat=Viluppuram

Top City news update

இங்கும் பிரச்சினை செய்பவர்கலை விடுத்து, கோவிலின் மீது பாய்ந்துள்ளனர்: செஞ்சி, 05-01-2010: செஞ்சிக்கோட்டை வெங்கட்ர மணர் கோவிலில் சுற்றுலா பயணி களை அனுமதிக்காமல் போலீசாரை பாதுகாப்புக்காக நிறுத்தி இருந்தனர்.செஞ்சிக்கோட்டை வளாகத்தில் உள்ள தாதாபீர் தர்கா நிர்வாகியாக இருந்தவர் சையத்காசிம் (72). இவர் கடந்த ஜனவரி 2ம் தேதி இறந்தார். இவரது உடலை 3ம் தேதி இதே தர்காவின் அருகே அடக்கம் செய்தனர். இதற்கு இந்து முன்னனி மற்றும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் செஞ்சியில் பதட்டமான நிலை ஏற்பட்டது.மூலவர் இல்லாமல் உள்ள செஞ்சிக்கோட்டை வெங்கட்ரம ணர் கோவிலில் சிலை வைத்து வழிபாடு நடத்த இந்து அமைப் பினர் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

திடீரென இந்து அமைப்பினர் வெங்கட்ர மணர் கோவிலில் சிலை வைத்து வழிபாடு நடத்தக்கூடும் என போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து நேற்று முன்தினம் காலை வெங்கட்ரமணர் கோவிலை பூட்டி வைத்து, போலீ சார் பாது காப்பு பணியில் ஈடுபட் டனர். இதனால் த சுற்றுலா பயணிகள் பலர் வெங்கட்ரமணர் கோவிலின் உள்ளே சென்று காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரும் பினர்.

குறிச்சொற்கள்: , , , , ,

ஒரு பதில் to “கோவில்களுக்கு ஏன் தொடர்ந்து சீல் வைக்கப்படுகின்றன?”

 1. vedaprakash Says:

  கலெக்டர் சமாதான கூட்டம் நடத்தினால் பங்கேற்க இந்து முன்னணி முடிவு
  பிப்ரவரி 05,2010,00:00 IST
  http://www.dinamalar.com/General_detail.asp?news_id=21584

  செஞ்சி:செஞ்சியில் அடுத்து நடக்க உள்ள சமாதான கூட்டம் கலெக்டர் தலைமையில் நடத்தினால் மட்டுமே பங்கேற்போம் என்று இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் காஞ்சி கண்ணன் கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோதண்டராமர் கோவில் பிரச்னை குறித்த சமாதான கூட்டத்தில், சப் -கலெக்டர் மஞ்சுளா, தான் ஒரு கிறிஸ்தவர் என்பதை வெளிப்படுத்தும் விதமாகவே நடந்து கொண்டார். பிரச்னையை நடுநிலைமையோடு கையாளாமல் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக, இந்துக்களுக்கு எதிராக அவர் நடந்து கொண்டார்.

  இந்துக்கள் தரப்பில் வைத்த கோரிக்கைகளில் ஒன்றைக்கூட சப்- கலெக்டர் ஏற்கவில்லை. கிராம நிர்வாக அலுவலர் மார்க்க சகாயம் சிட்டா புத்தகத்தை திருத்தி தவறான தகவல்களை தந்துள்ளார்.கோதண்டராமர் கோவிலை பூட்டிய ஜோசப் ஆல்பர்ட்டையும், செல்வராஜையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். பெரும்பான்மை இந்துக்களின் ஓட்டுக்களை பெற்று வெற்றி பெற்றுள்ள சேர்மன் மஸ்தான், இந்துகளுக்கும், கோவிலுக்கும் எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். நேற்று முன்தினம் வெறும் பூட்டு மட்டும் போட்டிருந்த கோவிலில், சப் கலெக்டர் மஞ்சுளா கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக பூட்டின் மீது சீல் வைத்துள்ளார்.செஞ்சி கோதண்டராமர் கோவில் இடத்தில் எள் அளவும் விட்டுக் கொடுக்க மாட்டோம். இதற்காக விரைவில் செஞ்சியில் மாநில மாநாடு நடத்த முடிவு செய்துள்ளோம்.

  இதுவரை நடந்த மூன்று சமாதான கூட்டங்களும் அரசு அதிகாரியின் சமாதான கூட்டமாக இல்லாமல் கட்டப்பஞ்சாயத்தை போல் சமாதானக் கூட்டத்தை சப்- கலெக்டர் மஞ்சுளா நடத்தி வருவதால், இவர் மூலம் இந்துக்களுக்கு நீதி கிடைக்காது.எனவே, அடுத்து நடத்த உள்ள கூட்டத்தை கலெக்டர் தலைமையில் நடத்த வேண்டும். அப்படி நடத்தினால் மட்டுமே இந்துக்கள் அடுத்த சமாதான கூட்டத்தில் கலந்து கொள்வர். இத்தகவலை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: