நாத்திக அறத்துறையின் வலை பெரிதாகிறது: இன்னுமொரு மடம் / கோவில் அபகரிக்கப் படுகிறது!

நாத்திக அறத்துறையின் வலை பெரிதாகிறது: இன்னுமொரு மடம் / கோவில் அபகரிக்கப் படுகிறது!
இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இம்முடி அகோர தர்ம சிவாச்சாரியார் மடம்
மே 03,2010,00:00  IST

கோவை: பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை கொண்ட, திருஆலங்காடு இம்முடி அகோர தர்ம சிவாச்சாரியார் ஆயிர வைசியர் மடம், அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி நெருஞ்சிப்பேட்டை அருகேயுள்ளது திருஆலங்காடு. இந்த கிராமத்தில், இம்முடி அகோர தர்ம சிவாச்சாரியார் ஆயிர வைசியர் மடம் உள்ளது. பழம்பெருமை வாய்ந்த இந்த மடம், 1800ம் ஆண்டு துவக்கப்பட்டது. 1978ல் மடத்தின் அறங்காவலர்கள் மற்றும் மடாதிபதிக்குமிடையே ஏற்பட்ட பிரச்னையால், கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, மடாதிபதி மடத்தைவிட்டு வெளியேறினார். மடத்துக்கு சொந்தமாக 612 ஏக்கர் 10 சென்ட் நன்செய் நிலம் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 482 ஏக்கர் நிலம் உள்ளது. மீதமுள்ள நிலம் மற்ற மாவட்டங்களில் உள்ளது. 21 கடைகள், இரண்டு திருமண மண்டபங்கள், ஏழு குடியிருப்புகள், மூன்று தங்கும் விடுதிகள், ஒரு மேல்நிலைப்பள்ளி, ஒரு கிரானைட் குவாரி, சுண்ணாம்புக்கல் குவாரியும், மடத்துக்கு சொந்தமாக உள்ளன. இப்படி பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பு வகித்த அறங்காவலர் குழு, நீண்ட நாட்களாக தேர்வு செய்யப்படவில்லை.பல்வேறு குளறுபடி களால், மடத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.மடத்தில் நடக்கும் முறைகேடுகளை களையவும், நிர்வாகத்தை முறைப்படுத்தவும் அறநிலையத்துறை கமிஷனர் சம்பத் கடந்த மாதம் 29ம் தேதி, கோவை மண்டல இணை கமிஷனருக்கு உத்தரவிட்டார்.

ஈரோடு அறநிலையத்துறை உதவி கமிஷனரை மடத்தின் பொறுப்பாளராக நியமிக்கவும் அறநிலையத்துறை உத்தரவிட்டது.இதையடுத்து, கோவை மண்டல அறநிலையத்துறை இணை கமிஷனர் அசோக் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் (ஆலய நில மீட்பு) சுப்ரமணியன், மருதமலை கோவில் துணை கமிஷனர் லட்சுமணன், கோவை மண்டல கோவில் செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள், நெருஞ்சிப்பேட்டை கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர், மடத்தை அறநிலையத்துறை வசம் கொண்டு வந்தனர். இதற்கான எச்சரிக்கை நோட்டீஸ், மடத்தின் வாயிலில் ஒட்டப்பட்டது.கோவை மண்டல அறநிலையத்துறை இணை கமிஷனர் அசோக் கூறியதாவது:நீண்டகால முயற்சிக்கு பின், நூற்றாண்டு பழமை வாய்ந்த மடம், அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் மடத்துக்கு வரும் வருவாய் சீராகும். அனைத்து வருவாய் இனங்களுக்கும் சரியான கணக்கு எழுதப்படும். ரசீது வழங்கப்படும். மடத்தின் கட்டுப்பாட்டில் ஏராளமான குத்தகைதாரர்கள், வாடகைதாரர்கள் உள்ளனர். நிலுவை வைத்துள்ள வாடகையை உடனடியாக மட நிர்வாகத்திடம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். இதன் மூலம் வருவாய் இழப்பை தடுக்க முடியும். மடத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு திருத்திய ஊதிய விகிதம் வழங்கப்படும். சம்பள பாக்கியும் வழங்கப்படும்.இவ்வாறு அசோக் கூறினார்.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , ,

3 பதில்கள் to “நாத்திக அறத்துறையின் வலை பெரிதாகிறது: இன்னுமொரு மடம் / கோவில் அபகரிக்கப் படுகிறது!”

  1. தமிழகத்தில் தொடரும் கோவில் கொள்ளைகள் – தாலிகள் அறுக்கப்படுகின்றன, காரணம், பின்னணி என்ன? « நாத Says:

    […] [11] https://atheismtemples.wordpress.com/2010/05/03/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B… […]

  2. தமிழகத்தில் தொடரும் கோவில் கொள்ளைகள் – தாலிகள் அறுக்கப்படுகின்றன, காரணம், பின்னணி என்ன? « நாத Says:

    […] [11] https://atheismtemples.wordpress.com/2010/05/03/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B… […]

  3. தமிழகத்தில் தொடரும் கோவில் கொள்ளைகள் – தாலிகள் அறுக்கப்படுகின்றன, காரணம், பின்னணி என்ன? « நாத Says:

    […] [11] https://atheismtemples.wordpress.com/2010/05/03/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B… […]

பின்னூட்டமொன்றை இடுக