நாத்திக அரசியல் மயமாக்கப் பட்ட அர்ச்சகர் கல்வி, பணி, வழக்குகள்!

207 மாணவர்கள் ஓராண்டு கால இளநிலை அர்ச்சகர் சான்றிதழ் பயிற்சி முடித்துள்ளனர்
சட்டமன்றத்தில் அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

http://www.viduthalai.com/20100513/news10.html

சென்னை, மே 13_ சட்டமன்றத்தில் இன்று இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறைக்கான மானிய கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய இத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்ததாவது:

பொது வழிபாட்டு தளங்களில் பூசைகள் செய்வதில் ஜாதியை ஒரு தகுதியாக வைத்து பாகு-பாடு காட்டுதல் சரியல்ல என்ற கருத்தின் அடிப்-படையில் தேவையான தகுதியும் உரிய பயிற்சியும் பெற்ற இந்து சமயத்தைச் சார்ந்த அனைத்து ஜாதியினரும் இந்து சமய திருக்கோயில்களின் அர்ச்சகர் ஆகலாம் என அரசாணை பிறப்பிக்ப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் மதுரை, பழனி, திருச்செந்தூர், திருவண்ணாமலை ஆகிய நான்கு இடங்களில் சைவ சமய அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும் சென்னை மற்றும் திருவரங்கம் ஆகிய இரண்டு இடங்களில் வைணவ சமய அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 34 மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 74 மாணவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 55 மாணவர்கள் உள்பட மொத்தம் 207 மாணவர்கள் ஓராண்டு கால இளநிலை அர்ச்சகர் சான்றி-தழ் பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்றுள்ளனர் என்று சட்டமன்றத்தில் இன்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் உண்ணாவிரதம்

 
First Published : 08 Apr 2010 02:48:36 AM IST
Last Updated : 08 Apr 2010 10:44:08 AM IST

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Vellore&artid=224064&SectionID=140&MainSectionID=140……….

திருவண்ணாமலை, ஏப்.7: அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்துக்கு  உச்சநீதிமன்றத்தில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் திருவண்ணாமலையில் புதன்கிழமை உண்ணாவிரதம் நடத்தினர்.  தமிழக அரசு அனைத்து சாதியினரையும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை கடந்த 2006-ம் ஆண்டு சட்டப் பேரவையில் நிறைவேற்றியது. இதையடுத்து சென்னை, திருவண்ணாமலை, திருச்சி, பழனி, மதுரை, திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன.   பள்ளிகளில் ஏராளமானோர் சேர்ந்து பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றுள்ளனர். ஆனால் மதுரை கோயிலைச் சேர்ந்த சில அர்ச்சகர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  சுவாமி சிலைகளை தொட்டு பூஜை செய்யும் உரிமை சிவாச்சாரியார்கள்,  பட்டாச்சாரியார்களுக்கு மட்டுமே உள்ளது எனக் கூறி நீதிமன்றத்தில் இடைக் கால தடை உத்தரவு பெற்றுள்ளனர்.  இதனால் அர்ச்சகர் பயிற்சி பெற்ற 206 பேரை தமிழக அரசால் பணி நியமனம் செய்ய முடியவில்லை. ஒன்றரை ஆண்டுகள் முறையான பயிற்சி பெற்றவர்களும்பாதிப்பை சந்தித்துள்ளனர். அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. எனவே உடனடியாக தமிழக அரசு இந்த தடை உத்தரவை விலக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.  மனித உரிமை பாதுகாப்பு மையம், அர்ச்சகர்கள் பயிற்சி பெற்றவர்கள் சங்கம் சார்பில் நடந்த இப்போராட்டத்துக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.ராஜூ தலைமை  தாங்கினார்.

திருப்பதி-திருமலை தேவஸ்தானம், பல ஆண்டுகளாக எஸ்.சி, எஸ்.டி முதலிய எல்லொருக்கும் அர்ச்சகர் பயிற்சி அளித்து பூசாரிகள் ஆக்கி வருகிறது. அங்கு எந்தபிரச்சினையும் இல்லை. ஆனால், தமிழகத்தில், தேவையில்லாமல் நாத்திக ஆட்சியாளர்கள் தலையிட்டுக் குழப்பி வருகிறார்கள். போதாகுறைக்கு கிருத்துவர்கள், முஸ்லீம்கள், கம்யூனிஸ்டுகள் மற்ற கடவுள் நம்பிக்கையில்லாத கோஷ்டிகள், எல்லாவற்றிற்கும் மேலாக இந்து-விரோத கயவர் பட்டாளங்கள், இதில் நுழைந்து கெடுக்கப் பார்க்கின்றனர். இன்னும் சொல்லப் போனால், “சான்றிதழ்” பெற்றுவிட்டேன் என்ற போர்வையில், அத்தகைய இந்து-விரோதிகளும் உள்ளே நுழையப் பார்க்கின்றனர். இதனால்தான், மற்றவர்கள் எதிர்க்கின்றனர்.

Archaka training starts for SC/STs
Tirupathi , April 20, 2010:

http://www.omnamovenkatesaya.com/english/ttddailynews/april_2010/apr21_eng.htmThe Tirumala Tirupati Devasthanams (TTD) on Tuesday inaugurated the special Archaka training camp to the Schedule Castes and Scheduled Tribes with an objective to make the community members thorough with the essential knowledge about pujas and ceremonies to be conducted in the temples.

The TTD joint executive officer, Dr N. Yuvaraj, who inaugurated the training camp at SVETA Bhavan here, said that the main objective is to popularise and spread the Sanathana Hindu Dharma and inspire the weaker sections to become partners in the propagation of the ancient tradition.

Addressing the gathering of the Archaka trainees from the target group from all over the state, he exhorted them to focus not only on the religious practices but also on the socially relevant issues in their region while they undertake practicing the tenets of Archaka profession.

He said that the TTD had already trained two batches of Archakas hailing from the tribal and Dalit communities.

The third batch will bring the total of trained non-Brahmin archakas to almost 500.

அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் வேலை கேட்டு கமிஷனரிடம் மனு
பிப்ரவரி 20,2009,00:00  IST

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=11131

General India news in detail

சென்னை: “அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்ற அரசின் உத்தரவுப்படி பயிற்சி பெற்றவர்கள் சான்றிதழ் மற்றும் வேலை கேட்டு இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தமிழக அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று அறிவித்ததோடு மதுரை, பழனி, திருச்செந்தூர், திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம், சென்னையில் திருவல்லிக்கேணி ஆகிய ஆறு இடங்களில் பயிற்சி மையங்களை ஏற்படுத்தியது. அனைத்து சாதியினரும் இந்த ஆறு பயிற்சி மையங்களில் தங்கி அர்ச்சகர் பயிற்சி முடித்தனர். பயிற்சி முடித்து எட்டு மாதங்களாகியும் இதுவரை பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ், பணி உத்தரவாதம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை கமிஷனரை சந்தித்து மனு கொடுக்க தமிழகத்தில் இருந்து அர்ச்சகர் பயிற்சி முடித்த 30க்கும் மேற்பட்டோர் நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். கமிஷனர் விடுமுறையில் சென்றுள்ளதால், இணை கமிஷனரிடம் மனு கொடுத்தனர். இதுகுறித்து, பயிற்சி முடித்த அர்ச்சகர்கள் கூறியதாவது: தமிழக அரசின் “அனைவரும் அர்ச்சகராகலாம்’ எனும் திட்டத்தின் கீழ் ஆறு மையங்களில் 200க்கும் மேற்பட்டோர் அர்ச்சகர் பயிற்சி முடித்தோம். பயிற்சி மையங்களிலேயே தங்கி,பயிற்சி பெற்ற எங்களுக்கு மாத ஊக்கத் தொகையாக 500 ரூபாய் வழங்கப்பட்டது. ஓராண்டு பயிற்சிக்குப் பிறகு மூன்று மாதங்கள் பல்வேறு கோவில்களில் நடந்த கும்பாபிஷேகம் உள்ளிட்ட விசேஷங்களில் நேரடியாக கலந்து கொண்டு பயிற்சியை முடித்தோம். பயிற்சி முடித்து எட்டு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை சான்றிதழ் வழங்கப்படவில்லை. எங்கள் பெற்றோரைப் பாதுகாக்கவும், வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும் தமிழக திருக்கோவில்களில் அர்ச்சகராக பணியமர்த்துமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். “இது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. தீர்ப்பு வரும் பட்சத்தில் தான் சான்றிதழ் மற்றும் வேலை கொடுக்க இயலும்’ என்று இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

செந்தில்குமார் எனும் தலித் மாணவர், பிருந்தாரண்ய ஷேத்திரம் என்று போற்றப்படும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் உள்ள வைணவ அர்ச்சக பயிற்சி மையத்தில் பயின்று, தனது ஒரு வருட ஜூனியர் அர்ச்சகர் சான்றிதழ் படிப்பை முடித்துள்ளார். ஆனால், கோயில் அர்ச்சகர் எதிர்ப்பு காரணமாக, கர்ப்பகிருகத்தில் (Sanctum Sanctorum) பிராக்டிகல் பயிற்சி பெற அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது!! அதனால் அவரும் இன்னும் சிலரும் “மாடல்” ஒன்றை உருவாக்கி, பிராக்டிகல் பயிற்சியை முடித்துள்ளனர்!

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , ,

4 பதில்கள் to “நாத்திக அரசியல் மயமாக்கப் பட்ட அர்ச்சகர் கல்வி, பணி, வழக்குகள்!”

  1. vedaprakash Says:

    கோவில் சொத்தை பாதுகாக்க நடவடிக்கை:அரசின் பதில் மனுவில் ஐகோர்ட் திருப்தி
    பதிவு செய்த நாள் : ஜூன் 08,2010,00:06 IST
    http://www.dinamalar.com/News_Detail.asp?Id=14556

    சென்னை:கோவில் சொத்துக்களை பாதுகாக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளில் சென்னை ஐகோர்ட் திருப்தியடைந்துள்ளது. இதுதொடர்பாக, வக்கீல் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.சென்னை ஐகோர்ட் வக்கீல் ஞானேஸ்வரன் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் உள்ள கோவில் சிலைகள், நகைகள், விலைமதிப்புள்ள சொத்துக்கள் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு அளிக்க தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

    மனுவுக்கு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு:தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 38 ஆயிரத்து 465 மத அமைப்புகள் உள்ளன. கோவில்களை புனரமைக்கவும், பூஜை வழிபாடுகளுக்கும், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும் நிதி உதவி வழங்குவதற்கு பல்வேறு நலத் திட்டங்களை அரசு வகுத்துள்ளது.

    கோவில் சிலைகள், நகைகள் மற்றும் விலைமதிப்புடைய சொத்துக்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சொத்துக்களை பாதுகாக்க, தமிழகம் முழுவதும் 17 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆயிரம் போலீசார், 3,000 முன்னாள் ராணுவத்தினர் அடங்கிய கோவில் பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டுள்ளது.வருமானம் வரும் கோவில்களில் இருந்து நிதி பெற்று, ஐந்து கோடி ரூபாய்க்கு நிதியம் உருவாக்கப்பட்டு, அதில் இருந்து கிடைக்கும் வட்டிப் பணத்தில், குறைந்த வருவாய் உள்ள கோவில்களில் எச்சரிக்கை கருவிகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    போதிய நிதி உள்ள பெரிய கோவில்களில் பாதுகாப்பு நடவடிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு “டிவி’ , எச்சரிக்கை கருவிகள், பாதுகாப்பு பெட்டக வசதி என, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்த, போலீசாருடன், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆலோசித்து வருகின்றனர்.உண்டியல்கள், அசைக்க முடியாமல் நிரந்தரமாக இருக்கும் வகையில் பொருத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவில் நகைகள், சொத்துக்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளன. கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வருமானத்தைப் பெருக்க வணிக கட்டடங்களை கட்டுவதற்கு நிதி உதவியும் வழங்கப்படுகிறது.இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இம்மனுவை விசாரித்த தற்காலிக தலைமை நீதிபதி தர்மாராவ், நீதிபதி சிவஞானம் அடங்கிய “முதல் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவில், “இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், நாங்கள் திருப்தியடைகிறோம். கோவில்களில் பாதுகாப்பு சாதனங்கள் வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி, பதில் மனுவில் விளக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

  2. பெரியார் சிலைக்கு மாலை போட்டால் “அர்ச்சகர்” வேலை கிடைத்துவிடுமா? « atheism Says:

    […] [1] வேதபிரகாஷ், நாத்திக அரசியல் மயமாக்கப் பட்ட அர்ச்சகர் கல்வி, பணி, வழக்குகள்!, https://atheismtemples.wordpress.com/2010/05/13/118/ […]

  3. பெரியார் சிலைக்கு மாலை போட்டால் “அர்ச்சகர்” வேலை கிடைத்துவிடுமா? (2) « atheism Says:

    […] [1] வேதபிரகாஷ், நாத்திக அரசியல் மயமாக்கப் பட்ட அர்ச்சகர் கல்வி, பணி, வழக்குகள்!, https://atheismtemples.wordpress.com/2010/05/13/118/ […]

  4. இந்து-விரோதிகள், நாத்திகர்கள், கிருத்துவர்கள், முஸ்லிம்கள் முதலியோர் “அனைவரும் அர்ச்சகர்” என Says:

    […] [14] https://atheismtemples.wordpress.com/2010/05/13/118-politicized-archaka-training-atheist-imposition-l… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: