பச்சைக் கல் சிவலிங்கம் பாலாற்றில் மீட்டெடுப்பு

பச்சைக் கல் சிவலிங்கம் பாலாற்றில் மீட்டெடுப்பு
மே 20,2010,00:00  IST

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=25276

வேலூர்: பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த, ஆறு அடி உயரமுள்ள பச்சைக்கல் சிவலிங்கம், வேலூர் அருகே பாலாற்றில் கண்டெடுக்கப்பட்டது. வேலூர் அடுத்த கந்தனேரி அருகே பாலாற்றில், அரசு மணல் குவாரி உள்ளது. இங்கு  மணல் அள்ளிக் கொண்டிருந்த போது, அதிகளவு எடை கொண்ட சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது.

வேலூர் தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது.  அருங்காட்சியக காப்பாட்சியாளர் சரவணன் கூறியதாவது:

இந்த பச்சைக்கல் சிவலிங்கம்,400 ஆண்டுகள் பழமையானது. 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்க மன்னர் காலத்தைச் சேர்ந்தது. சிலையின் உயரம் ஆறு அடி. அகலம் ஒன்பது அடி. சிலையின் எடை 1,500 கிலோ. சிலை, பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். இவ்வாறு சரவணன் கூறினார். சிலை கண்டெடுக்கப்பட்ட பகுதியில் மேலும் ஆய்வு செய்யப்பட உள்ளது.

 1. சமீக காலங்களில் சாலைகளை அகலப் படுத்துதல், பெரிய பலமாடி, அடுக்கு வீடுகள், கட்டடங்கள் கட்டப்படுதல், அதற்காக ஆழமாகத் தோண்டுதல்……………………………………….போன்ற வேலைகள் நடந்து வருகின்றன.
 2. பொதுவாக, அவ்வாறு ஆழமாகத் தோண்டும் போதுதான், அதுவும் பரவலாகத் தோண்டும் போது, பல தொல்பொருட்கள் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.
 3. ஆனால், இதுவரை அத்தகைய அறிக்கைகள் எதுவும் வெளிவந்ததாகத் தெரியவில்லை.
 4. உண்மையிலேயே எதுவும் கிடைக்கவில்லையா அல்லது கிடைத்தது, திருட்டுத்தனமாக விற்றுவிற்றார்களா, மறைக்கப்பட்டுவிட்டனவா அல்லது அழிக்கப்பட்டுவிட்டனவா?
 5. காலம் தான் பதில் சொல்லும்.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

3 பதில்கள் to “பச்சைக் கல் சிவலிங்கம் பாலாற்றில் மீட்டெடுப்பு”

 1. vedaprakash Says:

  நெய்வேத்ய பிரசாதம் காஸ் மூலம் தயாரிப்பு
  மே 20,2010,00:00 IST
  http://www.dinamalar.com/General_detail.asp?news_id=25280

  தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயிலில் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்க, நேற்று முதல் காஸ் அடுப்பு மூலம் சுவாமிக்கு நெய்வேத்ய பிரசாதம் தயாரிக்கும் முறை அமலுக்கு வந்தது. திருச்செந்தூர் கோயில் மூலவர் சுப்பிரமணியருக்கு, அங்குள்ள போர்த்தி மடப்பள்ளியிலும், உற்சவர் சண்முகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு பொதுமடப்பள்ளியிலும் கடந்த பல ஆண்டாக விறகு அடுப்பு மூலம், நெய்வேத்ய பிரசாதம் தயாரிக்கப்பட்டது. அதனால், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதால், காஸ் அடுப்பில் பிரசாதம் தயாரிக்க நிர்வாகம் முடிவெடுத்தது.

  அதன்படி, 85,000 ரூபாய் மதிப்பில் இரு காஸ் அடுப்புகள், சிலிண்டர்கள் வாங்கப்பட்டு, அவற்றின் மூலம் நேற்று முதல் அந்த இருமடப்பள்ளிகளிலும் நெய்வேத்ய பிரசாதம் தயாரிக்கப்படுகிறது. அதற்கான துவக்க நிகழ்ச்சியில் அறங்காவலர் குழுத்தலைவர் தேவதாச சுந்தரம், அறங்காவலர்கள், இணை ஆணையர் பாஸ்கரன் கலந்து கொண்டனர்.

 2. vedaprakash Says:

  நிர்வாகமே தேவையான பொருட்களை கொடுத்து மூலவருக்கு 11 வகை அபிஷேகம் செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும், ‘சிறப்பு அபிஷேக திட்டம்’ நேற்று முதல் அமலுக்கு வந்தது. அப்படியென்றால், பக்தர்கள் வாங்கிவருவது தடுக்கப் பட்டது என்றாகிறது! யார் அத்தகைய வியாபாரம் அல்லது விநியோகத்திற்கு குத்தகைக்கு எடுத்தது?
  ————————————————————————–
  திருச்செந்தூரில் சிறப்பு அபிஷேக திட்டம் அமல்
  மே 20,2010,00:00 IST
  http://www.dinamalar.com/General_detail.asp?news_id=25278

  தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோவிலில், நிர்வாகமே தேவையான பொருட்களை கொடுத்து மூலவருக்கு 11 வகை அபிஷேகம் செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும், ‘சிறப்பு அபிஷேக திட்டம்’ நேற்று முதல் அமலுக்கு வந்தது.

  திருச்செந்தூர் முருகன் கோவிலில், சாதாரண நாட்களில் தினமும் காலை 6.15, பகல் 10.30, இரவு 7.15 மணிக்கும், பிரதோஷ நாட்களில் மாலை 4 மணிக்கும் மூலவருக்கு அபிஷேகம் நடக்கிறது. இந்நிலையில், பக்தர்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று அறநிலையத்துறை உத்தரவுப்படி, மூலவருக்கு ‘சிறப்பு அபிஷேக திட்டம்’ நேற்று முதல் அமல்படுத்தப்ப1ட்டது. அதன்படி, அபிஷேகம் செய்ய விரும்புவோர் அந்த தேதியை குறிப்பிட்டு 1,500 ரூபாய் கட்டணத்தை கோவில் அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த தேதியில், சந்தனாதி தைலம், நல்லெண்ணெய், இளநீர், தேன், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 11 வகையான அபிஷேகங்கள் கோவில் நிர்வாகம் மூலம், மூலவருக்கு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். அந்த அபிஷேகத்தை, ஒரு ரசீதிற்கு ஐந்து பேர் வரை காணலாம். இத்திட்டப்படி, நேற்று காலை மூலவருக்கு நடந்த முதல், சிறப்பு அபிஷேகத்தில் அறங்காவலர்கள் உட்பட 10 பேர் கலந்து கொண்டனர்.

 3. sathi62 Says:

  பக்தர்கள் – நிர்வாகம்: உள்ளன. ஆனால் ஞாநிகள்(அஞ்ஞானம் கெடுக்கும்) தாம் இல்லை. வாயழுக்கு, மனமழுக்கு, செயலழுக்கு கழுவ வழி சொல்லுவாரில்லை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: