இந்து விரோத திமுகவிற்கு இந்து கோவில் பூசாரிகள் சங்கம் ஆதரவு!

இந்து விரோத திமுகவிற்கு இந்து கோவில் பூசாரிகள் சங்கம் ஆதரவு!

 

பாரம்பரியம், கலாச்சாரம், ஆன்மீகம், என்றெல்லாம் வளர்த்து வரும் கோவில்கள் சீரழையும், சீரழைந்து வருகின்ற நேரத்தில், எப்படி அரசியல் மற்றும் நாத்திகக் கொள்கைகள் சார்ந்த மனிதர்கள், புற்றுநோய் கிருமிகள் போல நுழைந்து, உடலைக் கெடுத்து, இறப்பினை நோக்கி அழைத்துசெல்லும்,

திமுக, கருணாநிதி, கருப்புப் பரிவார் முதலிய என்றுமே இந்துக்களுக்கு விரோதிகளாகத்தான் இருக்கின்றன. நாத்திகப் போர்வையில், இந்துவிரோத சக்த்களுடன் சேர்ந்து கொண்டு கோவில்களை கொள்ளையடித்து வருகின்றன. அந்நுஇலையில் கோவில் பூசாரி சங்கம் திமுகவை ஆதரிப்பதில் வியப்பில்லைதான்!

எமதூதர்களாக மாற நேரிடும் என்பதனை மெய்ப்பிக்கும் விதமாக உள்ளது, இந்து விரோத திமுகவிற்கு இந்து கோவில் பூசாரிகள் சங்கம் ஆதரவு! முன்னுக்கு முரணாக தமிழகத்தில் நடந்து வரும் பல நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று என்று நினைத்துவிட முடியாது. ஏனெனில், மக்கள் தேவநாதனுக்கும் இந்த வாசுவிற்கும் உள்ள ஒப்புமை அல்லது வேற்றுமை உணர வேண்டிய நிலையுள்ளது.

 

திமுகவுக்கு ஆதரவு: கோவில் பூசாரிகள் சங்கம்[1]: இந்து விரோத திமுகவிற்கு இந்து கோவில் பூசாரிகள் சங்கம் ஆதரவு என்பதே விநோதமாக உள்ளது. ஏற்கெனெவே கற்ப்பைப் பற்றி நடிகைகள் விளக்கம் கொடுத்துள்ளதால், இனி கருணாநிதியிடமிருந்துதான், கோவில்களைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டிய நிலையும் வரலாம். தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு,

மகளிர் சுய-உதவிக்குழு மாதிரி கோவில் சங்கங்களிலும் திமுக தனது வேலையை ஆரம்பித்துவிட்டது என்று தெரிகின்றது[2]. வரிசையாக மாவட்டங்களில் சங்கக்கூட்டங்கள் நடந்ததின் பின்னணி இதுதான் போலிருக்கிறது.

 

தமிழ்நாடு கோவில் பூசாரிகள் நலச்சங்கம் ஆதரவு தெரிவிக்கிறது என்று அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.வாசு கூறினார். தமிழ்நாடு கோவில் பூசாரிகள் நலச்சங்க 33வது மாவட்ட மாநாடு காஞ்சீபுரத்தில் நடந்தது. திருக்கோவில் மற்றும் வருவாய் துறை ஆவணங்களில் பயன்படுத்தப்படும் பசலி என்ற சொல்லுக்கு பதிலாக நிலவரி ஆண்டு, நில வருவாய் ஆண்டு என்று மாற்றம் செய்து நடைமுறைப்படுத்த வேண்டும், வறுமை நிலையில் உள்ள பூசாரிகளுக்கு மாதம் ரூ.500 உதவித்தொகை, குடியுரிமை பட்டா, கலைஞர் வீடு வழங்கும் திட்ட வீடுகள் ஆகியவை வழங்க வேண்டும், பூசாரி நலவாரியத்தில் திருமண நிதியுதவியை ரூ.25 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கோவில் பூசாரிகள் நல சங்கத்தின் கோரிக்கையை ஏற்று ஓய்வூதியத்தை ரூ.1000 ஆக உயர்த்தி வழங்கிய தமிழக முதல் அமைச்சர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிப்பது,

 

கோவில்களில் பெண் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும்‘: தமிழக இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பெண் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும்’ போன்ற தீர்மானங்களும் நிறைவேறின. மாநாட்டிற்கு பிறகு சங்க மாநிலத் தலைவர் பி.வாசு கூறியதாவது:  “கோவில் பூசாரிகளுக்கு

இனி தேவநாதனுக்கும், வாசு போன்றவர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறதா இல்லையா என்று ஆராய்ச்சி செய்ய வேண்டியுள்ளது. பெண்கள் பூசாரிகளாக நியமிக்கப் பட்ட பிறகு, மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கு கொள்ளவேண்டும் என்று பணித்தாலும், அவர்கள் செல்லவேண்டியிருக்கும் என்பதனை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்!

நலவாரியம், ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என பல நலத்திட்டங்களை அள்ளி வழங்கிய தமிழக முதல் அமைச்சருக்கும், திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான பூசாரிகள் குடும்பத்தோடு வாக்களிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வரை 6 வது முறையாக முதல் அமைச்சராக தேர்ந்தெடுத்து தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சியை கொண்டு வர தமிழ்நாடு கோவில் பூசாரிகள் நலச்சங்கம் பாடுபடும்”, என்றார்[3].

 

எல்லா வழிபாட்டு ஸ்தலங்களில் இனி பெண்கள் சம-உரிமையோடு வேலை செய்வார்கள்: அதே செக்யூலரிஸ அடிப்படையில் இனி சர்ச், மசூதிகளிலும் பெண்கள் பிஷப்புகளாக, இம்மாம்களாக பவனி வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம்! பாராளுமன்றத்தில் 33% ஒதுக்கீடு செய்கிறார்களோ இல்லையோ, கோவில்களில் பெண்களை பூசாரிகளாக நியமிக்கலாம் என்று தமிழகத்தில் மக்கள் தீர்மானங்களைப் போடுகின்றனர். இப்படி செய்து விட்டால், பிஷப்புகள், பாஸ்டர்கள் மற்ற கிருத்துவ குருமார்கள் இனிமேல் அடிக்கடி செக்ஸ் களியாட்டங்களில் ஈடுபடுவது குறையுமா அல்லது அதிகமாகுமா என்பதை ஆராயலாம். மசூதிகளில் பெண்களே நுழையக் கூடாது என்ற நிலையில், பெண்கள் எப்படி காஜியாக, இமாம்களாக வேலை செய்வர் என்பதையெல்லாம் இனி வரப்போகின்ற கருணாநிதி ஆட்சியில் பார்க்கலாம்!

 

வேதபிரகாஷ்

14-03-2011


[2] கோவில் பூசாரிகள் நலச் சங்க கூட்டம்: பிப்ரவரி 28,2011,, கள்ளக்குறிச்சி : விழுப்புரம் மாவட்ட கோவில் பூசாரிகள் நலச் சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி துர்க்கை அம்மன் கோவிலில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பழனி தலைமை தாங்கினார். செயலாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தமிழ்நாடு கோவில் பூசாரி ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயாக உயர்த்தியதற்கும், கோவில் திருப்பணிக்கு அரசு மானியம் 3 கோடியிலிருந்து 5 கோடியாக உயர்த்தியதற்கு முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், அறநிலைத் துறை அமைச்சர் மற்றும் மாநில தலைவர் வாசுவிற்கு விழுப்புரம் மாவட்ட பூசாரிகள் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. மாவட்ட ஆலோசனைக்குழு தலைவர் வெங்கடேசன் உட்பட பலர்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=196483

 

குறிச்சொற்கள்: , , ,

3 பதில்கள் to “இந்து விரோத திமுகவிற்கு இந்து கோவில் பூசாரிகள் சங்கம் ஆதரவு!”

  1. S. Villalan Says:

    கலிகாலம் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் ஒன்றும் தேவையில்லை

    • S. K. Ambalavanan Says:

      Tamils cannot keep quite by telling that Kali has done done it or the cause for such act.

      in Sri Lanka, the TYemple culture has been completely destroyed under the guise of eliminating LTTE.

      Even today, Tamils have been harping upon the UN resilution instead of the culrtural rape that has taken place leading to killing bof innocent Tamil people.

      Without understanding the nature of the Mohammedans and the Christians, the Tamil joined them in fighting, but they had let down.

      Now the movent has been shattered.

  2. vedaprakash Says:

    தினமலர், கோவில் பூசாரிகள் நலச் சங்க கூட்டம்
    Added : பிப் 28, 2011 00:06
    https://www.dinamalar.com/News_Detail.asp?Id=196483
    கள்ளக்குறிச்சி : விழுப்புரம் மாவட்ட கோவில் பூசாரிகள் நலச் சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி துர்க்கை அம்மன் கோவிலில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பழனி தலைமை தாங்கினார். செயலாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தமிழ்நாடு கோவில் பூசாரி ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயாக உயர்த்தியதற்கும், கோவில் திருப்பணிக்கு அரசு மானியம் 3 கோடியிலிருந்து 5 கோடியாக உயர்த்தியதற்கு முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், அறநிலைத் துறை அமைச்சர் மற்றும் மாநில தலைவர் வாசுவிற்கு விழுப்புரம் மாவட்ட பூசாரிகள் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. மாவட்ட ஆலோசனைக்குழு தலைவர் வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

S. K. Ambalavanan -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி