முறைகேடாக குத்தகைக்கு விடப்பட்ட கோவில் நிலங்கள் கையகப்படுத்தப்படும்!

முறைகேடாக குத்தகைக்கு விடப்பட்ட கோவில் நிலங்கள் கையகப்படுத்தப்படும்!

 சட்டசபையில் வழக்கமாக நடக்கும் விவாதம்: திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்ததும், இதைப் பற்றி “மாற்றித்தான் யோசிப்பார்கள்”, ஏனெனில் அவர்களுக்கும் பங்கு வேண்டுமே என்ற எண்ணத்தில்தானெயொழிய, உண்மையில் ஆண்டவனுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல. புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள சட்டசபை உறுப்பினர்கள் பேசியுள்ள விதத்திலிருந்தே அதனை அறிந்து கொள்ளலாம். கோவில் நிலம் என்ரு ஆரம்பித்து, சுற்றுலா என்று சென்று, அதில் எப்படி சம்பாதிக்கலாம் என்ற எண்னத்துடன் தான் விவாதம் உள்ளதே  தவிர, கோவில் நிலங்களை மீட்டு, அவை எதற்காக பக்தர்களால் தானமாகக் கொடுக்கப்படது என்று பார்த்து அத்ற்கேற்ற முறையில் செயல்படவேண்டும் என்ற நினைப்பு கொஞ்சம் கூட இல்லை எனலாம். “கடந்த ஆட்சியில் முறைகேடாக குத்தகைக்கு விடப்பட்ட கோவில் நிலங்களை கையகப்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்,” என்று அறநிலையத் துறை அமைச்சர் சண்முகநாதன் தெரிவித்தார்[1].

சட்டசபையில் நேற்று முன்தினம் நடந்த விவாதம்:

கோவிலிலிருந்து ஆரம்பித்து நீலகிரி சென்ற தேமுதிக உறுப்பினர்: உதாரணத்திற்கு தினமலரில் வந்துள்ளபடி, சிலருடைய பேச்சுகளை எடுத்துக் கொள்ளலாம்.

சம்பத்குமார் – தே.மு.தி.க: தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களை மண்டலங்களாக பிரித்து, பக்தர்கள் சிரமமின்றி சுற்றிப் பார்க்க பஸ் வசதி செய்ய வேண்டும். ஒரே நாளில் அப்பகுதியில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் சென்று வரும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்[2]. நீலகிரியில் ஹெலிகாப்டர் மூலம் சுற்றிப் பார்க்கவும், கேபிள் கார் வசதியும் செய்ய வேண்டும். நீலகிரியில் மலைரயில் அடிக்கடி பழுது ஏற்பட்டு, நடுக்காட்டில் நின்று விடுகிறது. இதனால், வெளிநாட்டு பயணிகள், நம் தமிழகத்தின் நிலையை பற்றி தவறாக பேசுவர்[3].

அமைச்சர் கோகுல இந்திரா: மலை ரயில், மத்திய அரசின் ரயில்வே துறையால் இயக்கப்படுவது. எனினும், இதுபற்றி முதல்வரின் அனுமதியோடு, ரயிலை சீரமைக்கும்படி மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்[4]. கேபிள் கார் வசதியை பொறுத்தவரை, அதற்கான முயற்சி அல்லது ஆய்வு செய்யும் போது, அவை வனப்பகுதியில் உள்ள இடங்களாக உள்ளன. அவற்றை கேட்டு மத்திய அரசிடம் அனுமதி பெற நீண்டகாலமாகிறது.

அன்னதானத்திலிருந்து திரைப்பட மான்யத்திற்கு சென்ற அதிமுக உறுப்பினர்: கிருஷ்ணமூர்த்தி – அ.தி.மு.க: இந்த சட்டசபையில், நிதி அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம், 95 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்துவிட்டு, முயன்று முயன்று பார்த்தேன் சதம் போட முடியவில்லை என்றார். ஆனால், இன்று ஒரு லட்சத்து 18 ஆயிரம் கோடிக்கு போட்டுள்ள பட்ஜெட்டில் உள்ள திட்டங்களை பார்த்து, இந்திய துணைக் கண்டமே மலைத்துப் போய் இருக்கிறது[5]. பெண்கள் முன்னேற்றத்துக்காக எடுக்கப்படும் படங்களுக்கு சிறப்பு மானியம் வழங்க வேண்டும்[6]. அன்னதான திட்டத்தை மீண்டும் புதுப்பொலிவோடு, புத்துணர்வுடன் செயல்படுத்த உத்தரவிட வேண்டும்.

கோவில் நிலத்தில் பல ஆண்டுகளாக வாழ்ந்தவர்களது இடத்தை அவர்களுக்கே சொந்தமாக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும்: அதாவது, அப்படி ஆக்கிரமித்துக் கொண்டால், சில காலத்தில் அந்நிலத்தை சட்டப்படி அபேஸ் செய்துவிடலாம் என்று சொல்லிக் கொடுக்கிறார். இதில் கம்யூனிஸ்ட்டுகள் மிகவும் வல்லவர்கள் தாம்.

உலகநாதன் – இந்திய கம்யூனிஸ்ட்: கோவில் நிலத்தில் வாடகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக வாழ்ந்தவர்களது இடத்தை அவர்களுக்கே சொந்தமாக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும்[7]. கோவில் நிலங்களில் குடியிருப்போரை வெளியேற்ற பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்படுகிறது[8].

அமைச்சர் சண்முகநாதன்: யார் யார் எந்தெந்த இடத்தில் குடியிருக்கின்றனர் என்று கண்டறிந்து, அவற்றை வரன்முறை செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

செஞ்சி கோதண்டராமர் கோவில் ஞாபகம் வரவில்லை[9] ஆனால் கோட்டையைப் பற்றி பேசும் தேதிமுக உறுப்பினர்: பாவம், தேதிமுக உறுப்பினர், அவரே பேசினாரா அல்லது வேறு யாராவது அவ்வாறு பேசச் சொன்னார்களா என்று தெரியவில்லை. முதலில் கோட்டையைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை அவர் விரட்டியடித்து நிலத்தை மீட்பாரா? இந்திய தொல்துறை அறிப்புப் பலகைகளையும் மதிக்காமல் ஆக்கிரமிப்பு செய்துள்ளனரே அது ஏன் அவருடைய கண்களுக்குத் தெரியவில்லை அல்லது யாரும் சொல்லவில்லை?

சுரேஷ் குமார் – தே.மு.தி.க: சாத்தனூர் அணை பராமரிப்பின்றி உள்ளது. செஞ்சிக்கோட்டைக்கு, மாநில அரசு மூலம் அடிப்படை வசதிகள் செய்து, அதிகளவு சுற்றுலா பயணிகள் வரும் வகையில் மேம்படுத்த வேண்டும். கடந்த ஆட்சியில், சுற்றுலா பகுதிகளில் வாகன நிறுத்துமிடங்களுக்கு ஏலம் விடப்பட்டது. வாகனம் நிறுத்த அதிக கட்டணம் வசூலித்ததால், சுற்றுலா பயணிகளுக்கும், குத்தகைக்காரர்களுக்கும் இடையே பிரச்னைகள் ஏற்பட்டன. இதனால், பயணிகள் வரவே தயங்கினர். நியாயமான கட்டணம் வசூலிக்க வேண்டும். திருச்செந்தூர் கோவில் பணிகளில் வேகமில்லை.

அமைச்சர் சண்முகநாதன்: திருசெந்தூர் கோவிலில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் ஜெயலலிதா பணிகளை துவக்கினார். ஆனால், இதுவரை முடிக்காமல், கடந்த ஆட்சியில் இழுத்தடித்தனர். தற்போது பணிகளை துரிதப்படுத்தியதால், முடியும் நிலையில் உள்ளது. அனைத்து கோவில்களுக்கும் குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.

குத்தகைப் பற்றியுள்ள வேகம், கோவில் ஆக்கிரமிப்பில் இல்லாதது தெரிகிறது: சுரேஷ் குமார்: எங்களது தொகுதியில் கோவில் நிலம் ஒன்று, தனி நபருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. அவர் தனது சொந்த நிலம் போல, வணிக வளாகங்கள் கட்டி, கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார். கோவில் கோபுரத்தை விட, அவரது கட்டடம் உயரமாக உள்ளது.

அமைச்சர் சண்முகநாதன்: கடந்த ஆட்சியில் கோவில் நிலங்கள் தவறான வழியில் குத்தகைக்கு விடப்பட்டிருந்தால், அவற்றை கையகப்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்[10]. சில நிலங்களின் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவ்வாறு விவாதம் நடந்தது.

“மீண்டும் நான் வெற்றிபெற்றால் கோவில் நிலங்களில் குடியிருப்பவர்கள் அனைவருக்கும் பட்டா வழங்குவேன்”: தமிழகத்து நாத்திக அமைச்சர் பகுத்தறிவோடு பேசியது, “மீண்டும் நான் வெற்றிபெற்றால் கோவில் நிலங்களில் குடியிருப்பவர்கள் அனைவருக்கும் பட்டா வழங்குவேன்”, என்று திருவொற்றியூர் தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் கே.பி.பி.சாமி மார்ச் மாதம் திருவொற்றியூர் பஸ்நிலையம், ஜீவன்லால் நகர், மாணிக்கம் நகர், திரு நகர், பாரதி நகர் மற்றும் வடிவுடையம்மன் கோவில் சன்னதி தெருக்களில் தெருதெருவாக சென்று வாக்கு சேகரிக்கச் சென்றபோது வாக்களித்தார்[11]. ஆறு மாதங்கள் ஆகின்றன, அந்த பழமை வாய்ந்த திருவொற்றியூர் மக்கள் மற்ரும் தமிழக மக்கள், ஏன் இந்தியர்கள் இதை ஞாபகத்தில் வைத்திருக்கிறார்களா? செக்யூலரிஸத்துடன், “சர்ச்-மசூதி நிலங்களில் குடியிருப்பவர்கள் அனைவருக்கும் பட்டா வழங்குவேன்”, என்று பேசவில்லையே? ஆமாம், கோவில் நிலங்களில் கிருத்துவர்களும், முஸ்லீம்களே ஆக்கிரமித்துக் கொண்டு, வாங்கவும் செய்கிறார்களே?

திராவிடக் கட்சிகள் நாத்திகத்தைக் கடைப்பிடிப்பதால் கோவில் நிர்வாகம் செய்ய அவர்களுக்கு அருஜதை இல்லை: முதலில் இதை தமிழக ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும். குங்குமம்-விபூதி வைத்துக் கொண்டே அல்லது இல்லாமலேயோ நாத்திகம், பகுத்தறிவு, பெரியாரிஸம் பேசுபவர்கள் கோவில்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது என்பது கடந்த 60 ஆண்டு நாத்திக ஆட்சி தெள்ளத்தெளிவாக மெய்ப்பித்து விட்டது. ஆகவே, அவர்கள், உடனடியாக விலகி நிற்க்க வேண்டும், இல்லையென்றால் இருக்கின்ற  கோவில்களும் உருப்படாமல் போய் விடும். திருமூலர் சொன்னது நடந்து விடும்.

திராவிட கட்சிகள் பலவழிகளில் கோவில் நிலங்களைக் கொள்ளையடித்து வருகின்றன.

 1. இந்து அறநிலையத்துறைக்குப் பிறகு குடிசை மாற்றுவாரியம் மூலம்[12] கோவில் நிலங்களை ஆக்கிரமிக்க முயலும் நாத்திக அரசு!
 1. இப்பொழுதுள்ள ஆட்சியிலும் கொள்ளை தொடர்கிறது[13]. அதன் மர்மங்களை யார் விலக்குவார்கள் / விளக்குவார்கள்?
 1. மிரட்டப்படும் மடாதிபதிகள் – அதன் மூலம் அவர்களது / மடங்களது நிலம் அபகரிக்கப் படுவது[14].
 1. இந்து அறநிலையத் துறையே கோவில் நிலங்களைக் கொள்ளையடிப்பது[15].
 1. அறநிலைய மந்திரி ஒத்துப் போவது[16].

இப்படி அடுக்குக் கொண்டு போகலாம். அவர்கள் மாறா விட்டால் மக்கள் மாற்ற வேண்டும், மக்களும் அவர்களோடு ஒத்துழைத்தல் மக்களைத்தான் மாற்ற வேண்டும் அல்லது அவர்கள் தம்மையே மாற்றிக் கொள்ள வேண்டும், இல்லையென்றால், மாலிக்காபூர்,-ஔரங்கசீப் போன்று இவர்களே இருக்கின்ற கோவில்களை இடித்து விடலாம், ஒரேயடியாக பிரச்சினைகள் தீர்ந்து விடும்.

வேதபிரகாஷ்

01-09-2011


[1] தினமலர், முறைகேடாக குத்தகைக்கு விடப்பட்ட கோவில் நிலங்கள் கையகப்படுத்தப்படும், http://www.dinamalar.com/News_Detail.asp?Id=304950

[2] அதாவது “பிக்னிக்” ஏற்பாடு செய்ய பேசுகிறாரே தவிர, கோவிலைப் பற்றி பேசுவதாகத் தெரியவில்லை. அப்படி செய்தால், கோவில்கள் எப்பொழுதுமே திறந்து வைத்திருப்பார்களா அல்லது அதே மாதிரி ஆகம முறைகளை மீறி செயல்படுவர்களா?

[3] கோவில்களை சீரழிக்கின்றனரே, அதைப் பற்றி வெளிநாட்டவர் கவலைப் படமாட்டார்கல் போலும். கோவில் சிலைகளை, விக்கிரங்களை வெளிநாட்டவர்களுக்கு விற்க்கின்ரனரே, அதற்கு தமிழர்கள் வெட்கப்படவில்லையே?

[4] ஆமாம், இதுவும் தூக்குத் தண்டனை விவாதம் போல ஆகிவிட்டது.

[5] நக்கல் அடிக்கிறாரா இல்லை பெருமை பேசுகிறாரா என்று தெரியவில்லை, அம்மாவிற்குத் தெரிந்தால், அதோகதிதான்!

[6] அதென்ன அப்படி “பெண்கள் முன்னேற்றத்தை”ப் பற்றி இப்படி கவலை படுகிறார் என்று தெரியவில்லை. சினிமா எடுப்பதினால், பல பெண்களின் கற்பு தான் விலைபோகிறது, சமுதாயம் சீரழிகிறது. அதைத் தெரிந்தும் தெரியாதது போல பேசியுள்ளது வேடிக்கைத்தான்! ஒருவேளை, இவரே படங்களை எடுப்பார் போலும்!

[7] சேர-சோழ-பாண்டியர்கள் எல்கோரையும் வென்று விடுவார்கள் இவர்கள். அயல்நாட்டு சித்தாந்த்தை வைத்துக் கொண்டு செயல்படும், இவர்களது தாய்ப்பாற்றே வினோதமானது தான். ஆகையால் தான் இப்படி தாறுமாறாக பேசுகிறார் போலும்!

[8] அதாவது அவ்வாறு செய்யாதே, அவர்களுக்கே பட்டா போட்டுக் கொடுத்து விடு என்கிறார், தாராளப் பிரபு!

[9] https://atheismtemples.wordpress.com/2011/08/20/gingee-kothandaramar-temple-liberated-from-the-christians/

https://atheismtemples.wordpress.com/2011/08/21/gingee-temple-liberated-duties-of-hindus/

http://christianityindia.wordpress.com/2010/05/19/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-https://atheismtemples.wordpress.com/2010/02/08/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/

http://christianityindia.wordpress.com/2010/02/03/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%8A/

[10] இவர் என்ன செய்யப்போகிறார் என்று ஒன்றும் சொல்லவில்லை. தலையாட்டி அமைச்சர்கள் இப்படியிருந்தால், என்ன வேலை நடக்கும்?

[15] திராவிட ஆட்சியில் அவர்களுக்கு இதெல்லாம் கைவந்த கலை – “இந்து” அறநிலைத்துறையே அத்தகைய அநியாயத்தைச் செய்துள்ளது: இதோ இங்கு படிக்கவும்:

http://vedaprakash.indiainteracts.in/2008/08/27/tenants-of-mutt-and-temple-lands-seek-ownership-rights-the-tn-government-scam-to-grab-the-temple-lands/

இவ்வாறு விற்பது, சங்கம் உருவாக்குவது, கோர்ட்டுக்குச் செல்வது, இடைக்காலத் தடை வாங்குவது, காலம் கடத்துவது, அதற்குள் கட்டிடங்கள் கட்டி அனுபவிப்பது….இருக்கும் அதிகார வர்க்கமெல்லாம் நாத்திகவாதிகள்தாமே? எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை!

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , ,

5 பதில்கள் to “முறைகேடாக குத்தகைக்கு விடப்பட்ட கோவில் நிலங்கள் கையகப்படுத்தப்படும்!”

 1. vedaprakash Says:

  தமிழகம்ஆக்கிரமிப்பில் ரூ.300 கோடி கோயில் நிலம்!

  என்.தமிழ்ச்செல்வன்First Published : 04 Aug 2011 03:40:28 AM IST
  Last Updated : 04 Aug 2011 04:46:31 PM IST
  http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%20%E0%AE%B0%E0%AF%82.300%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%20%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D!&artid=455921&SectionID=129&MainSectionID=129&SectionName=Tamilnadu&SEO=
  விஸ்வேஸ்வரர் கோவிலின் முகப்புத் தோற்றம் திருப்பூர் நகரில் மையத்திலுள்ள விஸ்வேஸ்வரர் கோவில்
  திருப்பூர், ஆக.3: திருப்பூர் நகரின் மத்தியில் உள்ள விஸ்வேஸ்வரர், வீரராகவபெருமாள் கோயில்களுக்குச் சொந்தமான ரூ.300 கோடி மதிப்புள்ள 16 ஏக்கர் நிலம் பல நூற்றாண்டுகளாக ஆக்கிரமிப்பில் உள்ளது.
  பழமைவாய்ந்த இக் கோயில்களுக்கு நட்டுவாங்கம் சேவைக்காக 7.68 ஏக்கர் இனாம் நிலம் கடந்த 1800ம் ஆண்டுக்கு முன்பு வழங்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு மேற்கே பழைய பஸ் நிலையத்தையொட்டிய இந் நிலம் குறித்த விவரங்கள் ஆங்கிலேயர் ஆட்சியில் 1812-1863ல் கணக்கெடுப்பு செய்தபோது தெரியவந்தது. தொடர்ந்து, 1963ல் இனாம் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் இனாம் நிலங்களை ஒழுங்குபடுத்த உத்தரவிடப்பட்டது.
  அதன்படி, இந் நிலம் மீது விசாரணை நடத்திய அப்போதைய கோபி செட்டில்மென்ட் தாசில்தார், அந் நிலத்தை ஆக்கிரமித்திருந்த 102 பேருக்கு ரைத்வாரி பட்டா வழங்கிவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோயில் தேவஸ்தானம் சார்பில் கடந்த 1990ல் கோவை சார்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதன்மீது விசாரணை நடத்திய சார்பு நீதிமன்றம், காலங்கடந்த மனு தாக்கல் எனக்கூறி 1995ல் அவ்வழக்கை ரத்து செய்தது.
  தொடர்ந்து, தேவஸ்தானம் 1997ல் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் 2000 நவம்பர் 28ல் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், அந் நிலங்கள் கோயிலுக்குச்
  சொந்தமானது தான் என்று உறுதியளித்ததுடன், கோவை சார்பு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கை மறுவிசாரணைக்கு எடுத்துக்கொண்டு நிலங்களை கோயிலுக்கு சேர்க்கவும் உத்தரவிட்டது.
  ஆனால், 11 ஆண்டுகளாகியும் அவ்வழக்கு இதுவரை விசாரணைக்கு வரவில்லை. அதற்கான முயற்சிகளை கோயில் நிர்வாகம் மேற்கொண்டதாகவும் தெரியவில்லை.
  இதற்கிடையே, 102ஆக இருந்த பட்டாக்கள் 500 பட்டாக்களாக மாறியதுடன், தற்போது அப்பகுதியில் ஏராளமான ஜவுளி, நகைக் கடைகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களும், நூற்றுக்கணக்கான குடியிருப்புகளும் உருவாகிவிட்டன.
  அந் நிலத்திலுள்ள வாடகைக் கட்டடத்தில் ஜவுளி வியாபாரம் செய்து வரும் இடுவாயைச் சேர்ந்த ராமமூர்த்திக்கு அந்நிலம் (1826 சதுர அடி டவுன்சர்வே எண்.174) கோயிலுக்குச் சொந்தமானது என்பது தெரியவந்ததை அடுத்து கடந்த 2010ம் ஆண்டில் வாடகைத் தொகையாக ரூ.3000ஐ கோயில் செயல் அலுவலகத்தில் அளித்துள்ளார். அதற்கு, ஆணையர் ஒப்புதலுடன் வாடகை பெறுவதாகத் தெரிவித்து ரசீது அளித்துள்ளது செயல்அலுவலகம். ஆனால், சில மாதங்களில் அப்பணம்
  திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.
  இந்நிலையில் அக்கடை நிலத்தை ஆக்கிரமித்திருந்தவர்கள் மீதும், அது கோயில் நிலம்தான் என்றும் தெரிவித்து சார்பு நீதிமன்றத்தில் ராமமூர்த்தி வழக்குத் தொடர்ந்தார். ஆனால், அந்நிலம் கோயிலுக்குச் சொந்தமானதுதான் என்பதற்கான ஆதார ஆவணங்களை கோயில் நிர்வாகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாததால் வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது.
  அத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ராமமூர்த்தி தொடர்ந்த வழக்கிலும் இதே நிலையே ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இவ்விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.
  இதேபோல், விஸ்வேஸ்வரர் கோயிலுக்கு கிழக்குப் புறத்தில் ஸ்தானிகம் சேவைக்காக வழங்கப்பட்ட 8.34 ஏக்கர் நிலமும் ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது ஏராளமான குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், பள்ளி, காவல் நிலையம், பனியன் நிறுவனங்கள் உள்ளிட்டவைகள் உருவாகியுள்ளன. அந் நிலமும் கோயில் நிலம்தான் என உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தி மறு விசாரணைக்கு உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது. கோயில் நிர்வாகத்தின் தொடர் முயற்சி இல்லாததால் அவ்வழக்கும் 20 ஆண்டுகளாகக் கிடப்பில் உள்ளது.
  இந்த நில ஆக்கிரமிப்பு விவகாரம் குறித்து இந்து அறநிலையத்துறையின் திருப்பூர் மாவட்ட உதவி ஆணையர் என்.பழனிக்குமார் கூறுகையில், விஸ்வேஸ்வரர், வீரராகவப் பெருமாள் கோயிலுக்கு உட்பட்ட ஆக்கிரமிப்பு நிலங்கள் மற்றும் பிற ஆக்கிரமிப்பு நிலங்கள் குறித்து மாநில அரசு விவரங்கள் கோரியுள்ளது. இதுதொடர்பாக அந்தந்த செயல்அலுவலர்கள் மூலம் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அந்நிலங்கள் குறித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார். விரைவில் திருப்பூர் நகரின் மையத்திலுள்ள இந்த ஆக்கிரமிப்பு நிலங்கள் மீது தகுந்த தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 2. vedaprakash Says:

  ஆக்ரமிப்பு கோவில் நிலங்களை மீட்கணும்: மதுரை ஆதீனம் கருத்து
  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=299700

  கும்பகோணம்: “”தமிழகத்தில் திருக்கோவில் நிலங்களை யார் ஆக்ரமிப்பு செய்திருந்தாலும் அதை மீட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்,” என மதுரை ஆதீனம் தெரிவித்தார். மதுரை ஆதீனம் 292ஆவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நேற்று கும்பகோணத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான கோவில்களில் கும்பகோணம் அருகே குருதலமாக போற்றப்படும் திருப்புறம்பியம் சாட்சிநாதசுவாமி சுவாமி திருக்கோயில் திருப்பணி ஒரு கோடியில் நடைபெற்றிருக்கிறது. மேலும் ஒன்றரை கோடிக்கு திருப்பணி செய்ய வேண்டியுள்ளது. அதற்கு உபயதாரர்கள் முன்வரவேண்டும். செப்டம்பர் 1ம் தேதி விநாயகர் சதுர்த்தி நடக்கிறது. அன்றைய தினம் இக்கோவிலில் பிரளயங்காத்த விநாயகருக்கு தேனபிஷேகம் நடக்கிறது. கஞ்சனூரில் அன்னதானம் கூடத்திற்கு மேல் யாத்ரீகர் நிவாஸ் கட்டப்படும். அனைத்து பணிகளுமே ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்படும். அன்னாõஹாசரே போராட்டம் நியாயமானது வரவேற்கத்தக்கது. நாட்டில் ஊழலற்ற, லஞ்சமில்லாத நாடாக வரவேண்டும் என்ற அவரது கருத்தை முழுமையாக நாம் ஆதரிக்கிறோம். மத்திய, மாநில அரசுகள் நிலையை உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும். வருங்காலத்தை செம்மையாக ஆக்க பெரிய விழிப்புணர்வை நாட்டில் உள்ள மக்களிடம் அன்னாஹாசரே பரப்பியுள்ளார். தமிழகத்தில் புதிய தலைமை செயலகம் மருத்துவமனையாக மாற்றப்படும்’ என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கதாகும். டில்லி மருத்துவமனைக்கு இணையாக இந்த மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. சர்வதேச தரத்திற்கு இணையாக அங்கு மருத்துவமனை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் திருக்கோவில் நிலங்களை யார் ஆக்ரமிப்பு செய்திருந்தாலும் அதை மீட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். குத்தகை சரியாக அளக்காதவர்களிடம் இருந்து மீட்கவேண்டும். இவ்வாறு மதுரை ஆதீனம் கூறினார்.

 3. vedaprakash Says:

  கோவில் நிலத்தை விற்கக்கூடாது
  ராம.கோபாலன் அறிக்கை
  http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=58405

  சென்னை விமான நிலைய விரிவாக்க திட்டத்துக்காக, ஸ்ரீபெரும்புதூர் தாலுகா, கொளப்பாக்கம் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் மற்றும் கரியமாணிக்கப்பெருமாள் கோவில்களுக்குச் சொந்தமான 2.82 ஏக்கர் நன்செய் நிலத்தை, அங்கு குடியிருந்துவரும் குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்கிடும் பொருட்டு, இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்டத்தின் கீழ் விற்பனை செய்யப்படுவது குறித்து கடந்த 16-ந் தேதி அறநிலையத்துறை சார்பில் பத்திரிகைகளில் விளம்பரம் வெளிவந்தது.

  இந்த நிலையில், கோவில் நிலத்தை விற்கக்கூடாது என்று, இந்து முன்னணி நிறுவனர் அமைப்பாளர் ராம.கோபாலன் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளார்.

  இது தொடர்பாக, ராம.கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

  ’’கோவில் நிலத்தை விற்பது தொடர்பாக, பத்திரிகைகளில் அண்மையில் ஒரு விளம்பரம் வெளியாகி இருந்தது. கோவில் நிலம் என்பது பொது செத்து. அதை தனியாருக்கு விற்கமுடியாது. விற்கவும் கூடாது. கோவில் நிலத்தை விற்று பணத்தை வங்கியில் போடுவதை எதிர்க்கிறோம்.

  நிலமாகவே இருக்கும் வரை மதிப்பு உயராவிட்டாலும் அதன் மதிப்பு குறையாது. கோவில் நிலத்தை விற்பதை ஆட்சேபிக்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

 4. கோவில்குத்தகை, வாடகைபாக்கி: திராவிடக்கொள்ளை தொடர்கிறதா? « நாத்திகமும்-ஆலயநிர்வாகமும் Says:

  […] [4] https://atheismtemples.wordpress.com/2011/09/01/temple-lands-encroached-occupied-sold-illegally/ […]

 5. திராவிட கழகத்தினர், நாத்திகர்கள், இந்துவிரோதிகள் கோவில் இடங்களில் நுழைவதே வேவு பார்ப்பதற்கு, Says:

  […] [8] https://atheismtemples.wordpress.com/2011/09/01/temple-lands-encroached-occupied-sold-illegally/ […]

vedaprakash க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: