தஞ்சை அரண்மனையில் மரகத லிங்கம் திருட்டு

தஞ்சை அரண்மனையில் மரகத லிங்கம் திருட்டு

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில்,இரண்டாம் சரபோஜி நினைவரங்கில், சதர் மகால் உள்ளது. இந்த மகாலில் மராட்டிய மன்னர்கள் பயன்படுத்திய ஆடைகள், சீன பீங்கான் பொருட்கள்,ஆபரணங்கள் உள்ளிட்டவை, சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்வைக்காக, கண்ணாடிப் பெட்டியில் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த மகாலில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள், நாள்தோறும், காலையிலும்,மாலையிலும் கணக்கெடுக்கப்படும்.இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை, நினைவரங்க நிர்வாக அறங்காவலர், சிவாஜி ராஜா பான்ஸ்லே கணக்கு எடுத்தார். அப்போது, மூன்று கண்ணாடிப் பெட்டிகளில் இருந்த, ஓர் அங்குல உயரமுடைய மரகத லிங்கம், மூன்று அங்குல உயரம் கொண்ட ஸ்படிகலிங்கம்,யானை தந்தத்தால் செய்யப்பட்ட, கால் அடி உயர முடைய சிறிய யானை சிலைகள், யாழிமுகம் கொண்ட கத்திகள், சீப்பு என, பல வகையான பொருட்களை காணவில்லை. இவை, பழங்காலத்து பொருட்கள் என்பதால்,விலை மதிப்பிடமுடியாதவை.

தஞ்சாவூர் அரண்மனையில் விலை மதிக்க முடியாத பழங்காலப் பொருள்களைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் இரண்டாம் சரபோஜி நினைவரங்கத்தில் சதர் மஹால் உள்ளது. இந்த மஹாலில் மராட்டிய மன்னர்கள் பயன்படுத்திய ஆடைகள், சீன பீங்கான் பொருள்கள், தந்தத்தால் செய்யப்பட்ட கலைப் பொருள்கள், ஆபரணங்கள் உள்ளிட்டவை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பார்வைக்காகக் கண்ணாடிப் பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இந்த மஹாலில் வைக்கப்பட்டுள்ள பொருள்கள் நாள்தோறும் காலையிலும், மாலையிலும் கணக்கெடுக்கப்படும். இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலையில் நினைவரங்க நிர்வாக அறங்காவலர் சிவாஜி ராஜா பான்ஸ்லே கணக்கு எடுத்தார்.

அப்போது, மூன்று கண்ணாடி பெட்டிகளில் இருந்த ஒரு அங்குல உயரமுடைய மரகதலிங்கம், 3 அங்குல உயரம் கொண்ட ஸ்படிக லிங்கம், யானை தந்தத்தால் செய்யப்பட்ட 4 அடி உயரம் கொண்ட கிருஷ்ணன் சிலை, யானை தந்தத்தால் செய்யப்பட்ட கால் அடி உயரமுடைய சிறிய யானை சிலைகள், யாழிமுகம் கொண்ட கத்திகள், சீப்பு என 14 வகையான பொருள்களைக் காணவில்லையாம்.

இதுகுறித்து சிவாஜி ராஜா பான்ஸ்லே தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நினைவரங்கத்தில் கண்காணிப்புக் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், மின்சாரம் இருந்தால்தான் அவை பதிவாகுமாம். எனவே, மின் வெட்டு நேரத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், பொருள்கள் இருந்ததாகக் கூறப்படும் கண்ணாடிப் பெட்டிகள் உடைக்கப்படாமல் இருந்தன. எனவே, இதுதொடர்பாக நன்கு விஷயம் தெரிந்த ஆள்கள்தான் திருடிச் சென்றிருக்க முடியும் எனப் போலீஸார் கருதுகின்றனர்.

இதனிடையே, சம்பவ இடத்தில் விரல்ரேகை நிபுணர்கள் ரேகைகளைப் பதிவு செய்தனர். மோப்ப நாயும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. ஆனால், இவற்றில் உறுதிப்படுத்தும் விதமான தடயங்கள் கிடைக்கவில்லை என போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து சிவாஜி ராஜா பான்ஸ்லே தெரிவித்தது:

தஞ்சை சரபோஜி நினைவரங்கம் பார்வையாளர்களுக்காக காலை 9 மணிக்கு திறந்து விடப்பட்டு மாலை 6 மணிக்கு மூடப்படும். நினைவரங்கம் திறக்கும் போதும், மூடும் போதும் அங்குள்ள பொருள்கள் கணக்கெடுக்கப்படும்.

அதுபோல் வெள்ளிக்கிழமை மாலை கணக்கெடுக்கப்பட்டது. அப்போது, 14 வகையான பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.  இவை, பழங்காலத்து பொருள்கள் என்பதால் விலை மதிப்பிட முடியாதவை என்றார் அவர்.

குறிச்சொற்கள்: , , , ,

3 பதில்கள் to “தஞ்சை அரண்மனையில் மரகத லிங்கம் திருட்டு”

 1. vedaprakash Says:

  தஞ்சை அரண்மனையில் மரகத திருட்டு
  பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2013,04:02 IST
  மாற்றம் செய்த நாள் : ஏப்ரல் 21,2013,10:12 IST
  http://www.dinamalar.com/news_detail.asp?id=695550

  தஞ்சாவூர்:தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில்,இரண்டாம் சரபோஜி நினைவரங்கில், சதர் மகால் உள்ளது. இந்த மகாலில் மராட்டிய மன்னர்கள் பயன்படுத்திய ஆடைகள், சீன பீங்கான் பொருட்கள்,ஆபரணங்கள் உள்ளிட்டவை, சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்வைக்காக, கண்ணாடிப் பெட்டியில் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த மகாலில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள், நாள்தோறும், காலையிலும்,மாலையிலும் கணக்கெடுக்கப்படும்.இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை, நினைவரங்க நிர்வாக அறங்காவலர், சிவாஜி ராஜா பான்ஸ்லே கணக்கு எடுத்தார். அப்போது, மூன்று கண்ணாடிப் பெட்டிகளில் இருந்த, ஓர் அங்குல உயரமுடைய மரகத லிங்கம், மூன்று அங்குல உயரம் கொண்ட ஸ்படிகலிங்கம்,யானை தந்தத்தால் செய்யப்பட்ட, கால் அடி உயர முடைய சிறிய யானை சிலைகள், யாழிமுகம் கொண்ட கத்திகள், சீப்பு என, பல வகையான பொருட்களை காணவில்லை. இவை, பழங்காலத்து பொருட்கள் என்பதால்,விலை மதிப்பிடமுடியாதவை.

 2. vedaprakash Says:

  தஞ்சை அரண்மனையில் மரகத லிங்கங்கள் திருட்டு
  By dn, தஞ்சாவூர்
  First Published : 21 April 2013 12:31 AM IST
  https://www.google.co.in/#output=search&sclient=psy-ab&q=%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4+%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&oq=%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4+%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&gs_l=hp.12…7335.17440.1.20170.68.31.24.6.10.9.371.7561.0j3j21j6.30.0…0.0…1c.1.9.hp.3tRSclYziM4&psj=1&bav=on.2,or.r_qf.&bvm=bv.45512109,d.bmk&fp=1f69e7226062f048&biw=1280&bih=709

  திருடு போன ஸ்படிக மற்றும் மரகத லிங்கங்கள்.
  தஞ்சாவூர் அரண்மனையில் விலை மதிக்க முடியாத பழங்காலப் பொருள்களைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

  தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் இரண்டாம் சரபோஜி நினைவரங்கத்தில் சதர் மஹால் உள்ளது. இந்த மஹாலில் மராட்டிய மன்னர்கள் பயன்படுத்திய ஆடைகள், சீன பீங்கான் பொருள்கள், தந்தத்தால் செய்யப்பட்ட கலைப் பொருள்கள், ஆபரணங்கள் உள்ளிட்டவை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பார்வைக்காகக் கண்ணாடிப் பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

  இந்த மஹாலில் வைக்கப்பட்டுள்ள பொருள்கள் நாள்தோறும் காலையிலும், மாலையிலும் கணக்கெடுக்கப்படும். இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலையில் நினைவரங்க நிர்வாக அறங்காவலர் சிவாஜி ராஜா பான்ஸ்லே கணக்கு எடுத்தார்.

  அப்போது, மூன்று கண்ணாடி பெட்டிகளில் இருந்த ஒரு அங்குல உயரமுடைய மரகதலிங்கம், 3 அங்குல உயரம் கொண்ட ஸ்படிக லிங்கம், யானை தந்தத்தால் செய்யப்பட்ட 4 அடி உயரம் கொண்ட கிருஷ்ணன் சிலை, யானை தந்தத்தால் செய்யப்பட்ட கால் அடி உயரமுடைய சிறிய யானை சிலைகள், யாழிமுகம் கொண்ட கத்திகள், சீப்பு என 14 வகையான பொருள்களைக் காணவில்லையாம்.

  இதுகுறித்து சிவாஜி ராஜா பான்ஸ்லே தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

  இந்த நினைவரங்கத்தில் கண்காணிப்புக் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், மின்சாரம் இருந்தால்தான் அவை பதிவாகுமாம். எனவே, மின் வெட்டு நேரத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

  மேலும், பொருள்கள் இருந்ததாகக் கூறப்படும் கண்ணாடிப் பெட்டிகள் உடைக்கப்படாமல் இருந்தன. எனவே, இதுதொடர்பாக நன்கு விஷயம் தெரிந்த ஆள்கள்தான் திருடிச் சென்றிருக்க முடியும் எனப் போலீஸார் கருதுகின்றனர்.

  இதனிடையே, சம்பவ இடத்தில் விரல்ரேகை நிபுணர்கள் ரேகைகளைப் பதிவு செய்தனர். மோப்ப நாயும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. ஆனால், இவற்றில் உறுதிப்படுத்தும் விதமான தடயங்கள் கிடைக்கவில்லை என போலீஸார் தெரிவித்தனர்.

  இதுகுறித்து சிவாஜி ராஜா பான்ஸ்லே தெரிவித்தது:

  தஞ்சை சரபோஜி நினைவரங்கம் பார்வையாளர்களுக்காக காலை 9 மணிக்கு திறந்து விடப்பட்டு மாலை 6 மணிக்கு மூடப்படும். நினைவரங்கம் திறக்கும் போதும், மூடும் போதும் அங்குள்ள பொருள்கள் கணக்கெடுக்கப்படும்.

  அதுபோல் வெள்ளிக்கிழமை மாலை கணக்கெடுக்கப்பட்டது. அப்போது, 14 வகையான பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இவை, பழங்காலத்து பொருள்கள் என்பதால் விலை மதிப்பிட முடியாதவை என்றார் அவர்.

 3. vedaprakash Says:

  தஞ்சை அரண்மனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத, ஸ்படிக லிங்கங்கள் திருட்டு; நூற்றாண்டு பழமை வாய்ந்த கலைப்பொருட்களும் மாயம்
  http://www.dailythanthi.com/node/247118

  -A+A
  பதிவு செய்த நாள் : Apr 20 | 07:28 pm
  தஞ்சாவூர்,

  தஞ்சை அரண்மனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத, ஸ்படிக லிங்கங்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

  தஞ்சை அரண்மனை

  தஞ்சை கீழராஜ வீதியில் அரண்மனை உள்ளது. இந்த அரண்மனை வளாகத்தில் மராட்டிய மன்னர் பரம்பரையைச் சேர்ந்த பாபாஜி ராஜாபோன்ஸ்லே, சிவாஜி ராஜாபோன்ஸ்லே ஆகியோர் தனித்தனியாக வசித்து வருகின்றனர். சிவாஜி ராஜாபோன்ஸ்லே வசித்துவரும் பகுதியில் மன்னர் சரபோஜி நினைவரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

  அதில் மன்னர் காலத்து ஓலைச்சுவடிகள், மரகதம் மற்றும் யானைத் தந்தங்களால் செய்யப்பட்ட சிலைகள், லிங்கங்கள், மன்னர்கள் பயன்படுத்திய வாள்கள், துப்பாக்கிகள், நாணயங்கள், அரிய நூல்கள், ஓவியங்கள், பொருட்கள், உடைகள், மன்னர்கள் வெளிநாடுகளில் இருந்து சேகரித்த சிலைகள், ஓவியங்கள் என விலை மதிப்பற்ற பழங்கால கலைப்பொருட்கள் வைக்கப்பட்டு உள்ளன.

  சுற்றுலா பயணிகள்

  கடந்த 1997–ம் ஆண்டு முதல் சுற்றுலா பயணிகள் அரண்மனையை பார்க்க அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதை கண்காணிக்க அங்கு 2 பெண் ஊழியர்களும் உள்ளனர். அங்கு 4 கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள், சுற்றுலா பயணிகள், வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் அரண்மனைக்கு வந்து அங்குள்ள நூலகம், நினைவரங்கத்திற்கு சென்று பார்த்துச் செல்கின்றனர்.

  நேற்று மாலையில் வழக்கம்போல் அங்கு பணிபுரியும் பெண் ஊழியர்கள் நினைவரங்கத்தை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.

  மரகத, ஸ்படிக லிங்கம் திருட்டு

  இன்று காலை நினைவரங்கத்திற்கு வந்த அறங்காவலர் சிவாஜி ராஜாபோன்ஸ்லே பார்த்தபோது, அங்கு சதர் மகாலில் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த ஒரு அங்குலம் உள்ள ஒரு மரகத லிங்கம், 2 ஸ்படிக லிங்கம், யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட ஒரு விநாயகர் சிலை, 4 அங்குல உயரம் உள்ள ஒரு கிருஷ்ணன் சிலை மற்றும் ஒரு அங்குலம் அளவிலான 5 யானை சிலைகள், பித்தளை கைப்பிடிகள் கொண்ட 5 கத்திகள் உள்ளிட்ட பொருட்களை காணவில்லை.

  கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த இந்த பொருட்களை யாரோ திருடிச் சென்று இருப்பது தெரியவந்தது. திருட்டுபோன கலைப் பொருட்களின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று தெரிகிறது.

  மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

  இதுகுறித்து அறங்காவலர் சிவாஜி ராஜாபோன்ஸ்லே தஞ்சை நகர மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகைகளை நிபுணர்கள் பதிவு செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கலைப்பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடிவருகிறார்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: