Archive for the ‘அறநிலையத்துறை கட்டுப்பாடு’ Category

வீரசோழபுரம், கோவில்கள், சிலைகள், நிலங்கள்: தமிழக அரசு என்ன செய்கிறது? கோவில் சொத்துப் பிரச்சினைகள் நீதிமன்றங்களுக்கு செல்வதேன்?

திசெம்பர்17, 2020

வீரசோழபுரம், கோவில்கள், சிலைகள், நிலங்கள்: தமிழக அரசு என்ன செய்கிறது? கோவில் சொத்துப் பிரச்சினைகள் நீதிமன்றங்களுக்கு செல்வதேன்?

வீரசோழபுரத்தில் திராவிட அரசு பழைய யுக்தியைத் தான் பயன்படுத்தியுள்ளது: திராவிட அரசு, வீரசோழபுரம் கோவில் நிலத்தை, சட்டத்தை வளைத்து அபகரித்தது, கடந்த 70 ஆண்டுகளில் உபயோகப் படுத்தப் பட்டு வரும் யுக்தி-திட்டமே. இதில், புதியதாக ஒன்றும் இல்லை. அறநிலையத் துறை, தமிழக அரசின் யாதாவது ஒரு துறைக்கு குத்தகைக்கு விடுவது, விற்பது, பிறகு அத்துறை தனதாக்கிக் கொண்டு, கோவில்களை ஏமாற்றுவது என்று தான் நடந்து வருகிறது. இது தான் இங்கும் நடந்துள்ளது. கள்ளக்குறிச்சி அருகே வீரசோழபுரம் கிராமத்தில் 1,500 ஆண்டுகள் பழமையான, ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இவரது பரம்பரையை சேர்ந்தவர்கள் தெற்கு நோக்கி ராஜகோபுரம் கட்டுவதற்கு முற்பட்டனர். ஆனால் அப்போது இந்த பணியில் ஈடுபட்டவர் இறந்ததால், ராஜகோபுரம் கட்டும் பணி நிறைவடையாமல் போனது. வரலாற்று சிறப்பு மிக்க அர்த்தநாரீஸ்வரர் கோவில் கடந்த 200 ஆண்டுகளாக புனரமைக்கப்படாமலும், குடமுழுக்கு நடத்தப்படாமலும் கோவில் முழுவதும் சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்நிலையில் வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 75 ஏக்கர் நிலம் சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ளது. ஏற்கெனவே இக்கோவிலிலிருந்து, சிலைகள் மாயமாது குறித்து, 2018லேயே புகார் கொடுக்கப் பட்டுள்ளது.  

சிதிலமடைந்த வீரசோழியம் கோவில்களில் சிலைகள் கொள்ளை: இக்கோவிலில் இருந்த முருகன் சிலை கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோனது[1]. இதையடுத்து இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. தற்போது இக்கோவில் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதன் காரணமாக சிலைகளின் பாதுகாப்பு கருதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இக்கோவிலில் உள்ள 12 ஐம்பொன் சிலைகள் மற்றும் அதே கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலில் இருந்த 5 ஐம்பொன் சிலைகள் என மொத்தம் 17 ஐம்பொன் சிலைகளை கெங்கையம்மன் கோவிலில் வைத்து பாதுகாத்து வந்தனர்[2]. இந்நிலையில் இந்த சிலைகளை விழுப்புரத்துக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெயா உத்தரவின் பேரில் விழுப்புரம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி தலைமையிலான அதிகாரிகள் கெங்கையம்மன் கோவிலில் வைக்கப்பட்டிருந்த 17 ஐம்பொன் சிலைகளையும், விழுப்புரம் திரு.வி.க. சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் உள்ள உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்துக்கு கொண்டு வந்து, அங்கு பாதுகாப்பாக வைத்தனர். 2016ல் அறநிலையத் துறை ஆய்வாளர் சரவணன், ஆய்வு செய்தார்[3]. வரதராஜ பெருமாள் கோவிலில், சந்தான கோபாலகிருஷ்ணன் ஐம்பொன் சிலை காணாமல் போனது பற்றி, தியாகதுருகம் போலீஸில் புகார் கொடுத்தார்[4].

நாளிதழ்களில் விளம்பரம், 19-09-2020 அன்று ஆணை பிறப்பிக்கப் பட்டது, 23-10-2020 அன்று அடிக்கல் நாட்டப் பட்டது: கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரசோழபுரத்தில் அமைந்துள்ளது, அர்த்தநாரீஸ்வரர் கோவில். 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் உள்ள சிவலிங்கத்தை, சித்தர்கள் பிரதிஷ்டை செய்து பூஜித்துள்ளனர்[5]. இக்கோவிலுக்கு சொந்தமாக, வீரசோழபுரத்தில், 70 ஏக்கர் நிலமும், வி.பாளையம் கிராமத்தில், 10 ஏக்கர் நிலமும் உள்ளன. கோவில் நிலங்களை குத்தகைக்கு விட்டு, அதில் கிடைக்கும் வருவாயை வைத்து, மாசி மகம் தீர்த்தவாரி உற்சவம், கோவில் பூஜைகள் செய்யப்படுகின்றன. கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக உதயமான பின், ஒருங்கிணைந்த பெருந்திட்ட வளாகம் கட்ட, பல இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், வீரசோழபுரத்தில் சிவன் கோவிலுக்கு சொந்தமான, 35 ஏக்கர் புன்செய் நிலமும் அடங்கும். அந்த நிலத்தினை, வருவாய் துறைக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதற்கான அரசாணை, செப்., 19ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. அதற்கான விளம்பரம், அறநிலைய துறையால் வெளியிடப்பட்டது. இம்மாதம், 23ம் தேதி, கோவில் நிலத்தில் கலெக்டர் அலுவலக கட்டுமான பணிக்கு, முதல்வர் இ.பி.எஸ்., அடிக்கல் நாட்டினார்.இதற்கு, ஆன்மிக நல விரும்பிகள், பக்தர்கள், உள்ளூர் மக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது. 

முதலில் மக்கள் ஆர்பாட்டம், புகார்: கோவிலுக்கு சொந்தமான, 35 ஏக்கர் நிலத்தை, தமிழக அரசு தேர்ந்தெடுத்து, கையகப்படுத்தியது[6]. இதையடுத்து புதிய கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் கட்டுவதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது[7]. பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 23-ந் தேதி சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி புதிய கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். இந்நிலையில் புதிய கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் கட்டுவதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு குறைவான மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக வீரசோழபுரத்தைச் சேர்ந்த பொது மக்கள் புகார் தெரிவித்தனர். அதாவது குறிப்பிட்ட 35 ஏக்கர் நிலத்துக்கு சந்தை மதிப்பு ரூ.29 கோடியே 17 லட்சம் என அறநிலையத்துறை கூறி உள்ளது. ஆனால் மாவட்ட கலெக்டரின் மதிப்பீட்டில் ரூ.1 கோடியே 98 லட்சத்து 97 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே கோவில் நிலம் விற்பனையில் ஏதேனும் கருத்து, மறுப்பு தெரிவிப்பதாக இருந்தால் வருகிற 29-ந்தேதிக்குள் (29-11-2020) சென்னையில் இந்து அறநிலையத்துறை ஆணையரிடம் எழுத்து மூலமாக புகார் தெரிவிக்கலாம் என கூறப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கு முன்னதாக அவசர அவசரமாக கடந்த 23-ந் தேதி கலெக்டர் அலுவலக கட்டுமான பணி தொடங்கப்பட்டுள்ளது. வருவாய் துறைக்கு விற்பனை செய்வது தொடர்பாக நடந்த கூட்டத்தில், அரசின் முடிவுக்கு, ஆன்மிகவாதிகள், ஊர் மக்கள், பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்[8].

நீதிமன்றத்தில் வழக்கு, தள்ளி வைப்பு: சென்னை உயர்நீதிமன்றத்தில் திருச்சியைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் மனு தாக்கல் செய்தார்[9]. இந்த மனு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் அமைக்க கோவில் நிலத்தை அரசுக்கு வழங்குவது தொடர்பாக கடந்த அக்டோபர் 29ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், கருத்துக் கேட்புக் கூட்டம் நடப்பதற்கு 6 நாட்களுக்கு முன்பே முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகள் தொடங்கி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டது[10]. மேலும், 100 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசுக்கு 1.98 கோடி ரூபாய்க்கு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய மனுதாரர் தரப்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்கும் கட்டுமான பணிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் வாதிட்டார்[11]. இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கருத்துக் கேட்புக் கூட்டத்தின் அடிப்படையில் கோவில் நிலத்தை அரசுக்குச் சொந்தமாக வழங்குவதற்கு பதிலாக குத்தகைக்கு நிலத்தை வழங்க தற்போது அறநிலையத்துறை ஆணையர் பரிந்துரை செய்துள்ளதாகவும், பரிந்துரையின் மீது அரசின் முடிவுக்கு காத்திருப்பதாக விளக்கமளிக்கப்பட்டது[12]. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக டிசம்பர் 9ம் தேதிக்குள் / ஜனவரி 22- ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசு மற்றும் அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டனர்[13]. அதுவரை ஆட்சியர் அலுவலகம் அமைப்பது தொடர்பான பணிகளை நிறுத்தி வைக்கும்படி இடைக்கால உத்தரவிட்டனர்[14].

70 ஆண்டு சட்ட முன்மாதிரி தீர்ப்புகளை மீறி, நீதிபதிகள் புதிய தீர்ப்புகள் கொடுக்க முடியுமா?: 19-09-2020 – தமிழக அரசு ஆணை பிறப்பித்து, கோவில் நிலத்தை கையகப் படுத்திக்கொண்டது.

23-10-2020 – முதலமைச்சர், கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டியது.

29-10-2020 – அறநிலையத் துறை கூட்டம் கூட்டியது.

2-12-2020 – நீதிமன்றம் கட்டிட வேலையை நிறுத்தி, பதில் சொல்ல ஆணையிட்டது. விசாரணையைத் தள்ளி வைத்தது.

வழக்குகள் நீதிமன்றங்களுக்குச் செல்லும் நிலையில், அரசு கோவில் நிலத்தை விற்கும் சட்டமீறல்கள், வளைப்புகள் முதலியவை நாளடைவில், சரிபடுத்தப் பட்டு விடும் போலிருக்கிறது. இத்தனை ஆண்டுகள் இல்லாத அளவுக்கு, நீதிபதிகள் பற்பல கேள்விகளைக் கேட்க ஆரம்பித்துள்ளனர். ஆனால், ஏற்கெனவே உள்ள சட்ட முன்மாதிரியான தீர்ப்புகளுக்கு உட்பட்டுதான், இவர்கள் தீர்ப்புகள் கொடுக்கப் போகிறார்கள். அதாவது, அவை அரசுக்கு சாதகமாகத்தான் இருக்கும். ஆக, இத்தீர்ப்புகளை எதிர்த்து, மறு-ஆய்வு, பரிசீலினை என்றோ, உச்சநீதி மன்றம் வரை, செல்வதற்கு வாதிகள் தயாராக உள்ளனரா என்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

17-12-2020


[1] தினத்தந்தி, வீரசோழபுரம் கோவில்களில் இருந்த 17 ஐம்பொன் சிலைகள் விழுப்புரம் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டன, ஜூலை 01, 2018, 03:15 AM

[2] https://www.dailythanthi.com/amp/News/Districts/2018/07/01014702/Vimasolapuram-temples-were-the-fifty-statuesVillupuram.vpf

[3] தினமலர், சிலை கடத்தல் தடுப்பு போலீசார் வீரசோழபுரம் கோவிலில் ஆய்வு, Added : மே 23, 2018 01:04

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2026307

[5] https://www.dinamalar.com/news_detail.asp?id=2642621

[6] தினத்தந்தி, கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கு கையகப்படுத்தப்பட்ட கோவில் நிலத்துக்கு கூடுதல் மதிப்பீடு வழங்க வேண்டும்கிராம மக்கள் கோரிக்கை, பதிவு: அக்டோபர் 29,  2020 18:15 PM மாற்றம்: அக்டோபர் 29,  2020 19:11 PM.

[7] https://www.dailythanthi.com/Districts/Chennai/2020/10/29191151/Kallakurichi-collectors-office-building-To-the-acquired.vpf

[8] தினமலர், கோவில் நிலம் விவகாரம்: அரசு முடிவுக்கு ஆன்மிகவாதிகள் எதிர்ப்பு, Updated : அக் 30, 2020 00:33 | Added : அக் 29, 2020 23:17.

[9] நியூஸ்.18.தமிழ், கள்ளக்குறிச்சி: கோவில் நிலத்தில் புதிதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்கும் பணிக்கு நீதிமன்றம் இடைக்கால தடை, NEWS18 TAMIL, LAST UPDATED: NOVEMBER 27, 2020, 7:15 PM IST

[10] https://tamil.news18.com/news/tamil-nadu/kallakurichi-chennai-hc-restricts-construction-of-new-collector-office-on-temple-land-riz-md-374475.html

[11] தமிழ்.இந்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு கோயில் நிலத்தில் ஆட்சியர் அலுவலகம்: பணிகளை நிறுத்தி வைக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவு, ஆர்.பாலசரவணக்குமார், Published : 27 Nov 2020 04:01 PM Last Updated : 27 Nov 2020 04:01 PM.

[12] https://www.hindutamil.in/news/tamilnadu/605816-highcourt-order-on-kallakurichi-collectorate-office.html

[13] நக்கீரன், கோவில் நிலத்தில் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் கட்ட எதிர்ப்பு!- தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!, அதிதேஜா, Published on 16/12/2020 (08:34) | Edited on 16/12/2020 (09:03)

[14] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/temple-land-district-collector-office-chennai-high-court-tn-govt

70 வருடங்களுக்கு முன்னர் 1965ல் கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப் பட்டன, இப்பொழுது பட்டா கொடுத்து குற்றங்களை மறைத்து, சட்டத்தை வளைக்க முயற்சி! (3)

நவம்பர்7, 2020

70 வருடங்களுக்கு முன்னர் 1965ல் கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப் பட்டன, இப்பொழுது பட்டா கொடுத்து குற்றங்களை மறைத்து, சட்டத்தை வளைக்க முயற்சி! (3)

22-11-2019 – கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் எவ்வளவு ஆக்கிரமிப்பில் உள்ளது என்ற விவரங்கள் இல்லாமல் பட்டா வழங்கும் அரசாணையை அமல்படுத்த முடியாது[1]: கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் எவ்வளவு ஆக்கிரமிப்பில் உள்ளது என்ற விவரங்கள் இல்லாமல் பட்டா வழங்கும் அரசாணையை அமல்படுத்த முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது[2]. அரசு புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி, 2019 தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது[3]. சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமிப்பவர்களுக்கு உதவும் வகையில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அரசாணையை ரத்து செய்யக் கோரி சேலம், கன்னன்குறிச்சியைச் சேர்ந்த,ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்[4]. இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆட்சேபம் இல்லாத அரசு புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் வகையில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்கள் அடையாளம் காணப்பட்டு அதில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என கூறப்பட்டிருந்தது.

கோவிலுக்கு தேவைப்படாத நிலைங்களை ஏழை மக்களுக்கு பட்டா வழங்குவது குறித்தும் அந்த நிலத்துக்கான விலையை கோவிலுக்கு வழங்குவது குறித்து: கோவில் நிலங்களை பொறுத்தவரை மாவட்ட வாரியாக, கோவில் வாரியாக கருத்துருக்கள் வகுக்கப்பட்டு, அறநிலையத்துறை ஆணையர் மூலமாக அரசுக்கு அனுப்பி அதன் பிறகே முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. கோவிலுக்கு தேவைப்படாத நிலைங்களை ஏழை மக்களுக்கு பட்டா வழங்குவது குறித்தும் அந்த நிலத்துக்கான விலையை கோவிலுக்கு வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தும் இந்த நலத்திட்ட அரசாணை மத உணர்வுகளுக்கோ, பக்தர்களுக்கோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆஜராக கோரிக்கை விடுக்கப்பட்டது[5]. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில், அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், அறநிலையத்துறை சார்பில், சிறப்பு பிளீடர் மகாராஜாவும் ஆஜராகினர். அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆஜராக உள்ளதால், விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்றனர்[6].

அரசாணையை அமல்படுத்த முடியாது: இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், பல கேள்விகளை எழுப்பினர்[7]:

 1. அரசு பிறப்பித்த அரசாணை ஒரு மதத்திற்கான வழிப்பாட்டு தளங்களுக்கு மட்டும் தான் பொருந்துமா?
 2.  மற்ற மத வழிபாட்டு தளங்களுக்கு கிடையாதா? என கேள்வி எழுப்பினர்.
 3. இந்த அரசாணை மூலம் கோவில் நிலங்களை விற்க அறநிலைய துறையை அரசு வற்புறுத்துகிறதா? இந்த அரசாணை எப்படி கோவில்களுக்கு பலனை அளிக்கும்?

இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் அரசுக்கு ஊதுகுழலாகவும், ரிமோட் கன்ரோல் மூலம் இயக்கப்படும் பொம்மைகளாகவும் தான் இருக்கிறார்கள் என வேதனை தெரிவித்தனர்[8]. மேலும், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 38,000 கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் எவ்வளவு, அதில் ஆக்கிரமிப்பில் இருக்கும் நிலங்கள் தொடர்பான விவரங்கள் இல்லாமல் அரசாணையை அமல்படுத்த முடியாது என தெரிவித்த நீதிபதிகள், அரசாணைக்கு தடை கோரிய மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

திராவிட கட்சிகளின் ஆட்சியில் ஹிந்து கோயில்களின் சொத்துக்கள் படிப்படியாக அரசியல்வாதிகளால் கபளீகரம் செய்யப்பட்டு வருகிறது: உள்நோக்கம் கொண்ட இந்த உத்தரவால் உண்மையில் பயனடையப் போவது திராவிட கட்சிகளின் பினாமிகளும், ரவுடிகளும் தான்[9]. தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆட்சியில் ஹிந்து கோயில்களின் சொத்துக்கள் படிப்படியாக அரசியல்வாதிகளால் கபளீகரம் செய்யப்பட்டு வருகிறது[10]. கட்சி பிரமுகர்கள் தங்களின் தாதாக்கள், கூலிப்படைகள், ரவுடிகளை ஏவி கோயில் நிலங்களில் அத்துமீறி புகுந்து ஆக்கிரமிக்க வைத்து பல ஆண்டுகளாக கோயில் சொத்துக்களையும், அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் சுரண்டி ஏப்பம் விட்டு வருகின்றனர். இவர்களின் கைக்கு சென்ற ரூ.பல லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை மீட்க முடியாமல் அறநிலையத்துறை நீதிமன்றங்களை நாடி வரும் நிலையில், அரசின் இந்த அறிவிப்பு பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது. ஏற்கனவே பலகோயில்கள் ஒரு நேர பூஜைக்கு கூட நிதி இல்லை. சொத்துக்கள் உள்ள கோயில்களின் வருமானத்தையும் தனியாருக்கு தந்தால் பூஜைகள் செய்வது எப்படி? அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஹிந்து கோயில்களை மீட்டு, தனி அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ள நிலையில் அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆக்கிரமிப்பாளர்களுக்கே சொத்துக்களை வாரி வழங்குவதன் மூலம், படிப்படியாக கோயில் சொத்துக்களை அழிக்கும் சதியில் ஆட்சியாளர்களே ஈடுபட்டு வருகிறார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் ஹிந்துக்களின் ஓட்டு இனிதிராவிட கட்சிகளுக்கு விழாது என்பது நிதர்சனம்.

சட்டப்படி தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம்: சட்டமீறல்களுடன் தான் கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன. வ்திமுறைகளுக்கு மீறி பட்டாக்களும் கொடுக்கப் பட்டுள்ளன. ஏற்கெனவே முஸ்லிம்கள் கோவில் நிலங்களை, சொத்துகளை அனுபவித்து வருகிறார்கள். கிருத்துவர்களும் அவ்வாறே செய்து வருகிறார்கள். நாத்திகர்களும், இந்துவிரோதிகளும் இருக்கிறார்கள். இவர்களின் ஆக்கிரமிப்பில் இருக்கும் கோவில் சொத்துகளை நீதிபதிகள் பிடுங்குவதற்கு ஆணையிடுவார்களா? நீதிபதிகள் என்பவர்களும், மனிதர்களே, தமிழ் ஆட்டில் வாழ்ந்து வரும் பிரஜைகளே. தனிப்பட்ட முறையில் நம்பிக்கையாளர்களாகவும் இருப்பார்கள் / இருக்கிறாகள். 10-20-30 ஆண்டுகளாக தமிழ் நாட்டில் இருக்கின்ற பட்சத்தில், அவர்களுக்கு, கோவில் நிலங்கள்-சொத்துகள் பற்றியெல்லாம் நன்றாகவே தெரியும். மேலும், தீர்ப்பு அளிக்கின்ற நேரத்தில், முன்னர் சம்பந்தமுள்ள தீர்ப்புகளை எல்லாம், அவர்கள் படிக்கத்தான் செய்வர். இவ்வளவு அக்கறையாக இருக்கும் பட்சத்தில், அவர்கள் அறநிலையத் துறை மற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை, ஆவணங்களுடன் வந்து ஆஜராகச் சொல்லி, வேண்டிய விவரங்களை அவர்களிடமிருந்தே பெறலாம். ஆகவே, முதலில் ஆக்கிரமிப்பாளர்களை, குத்தகைகாரர்களை, இந்துவிரோதிகளை வெளியேற்றினாலே, பாதி குற்றங்கள், சட்டமீறல்கல் முதலியவை குறையும்.

© வேதபிரகாஷ்

05-11-2020


[1] தமிழ்.எக்ஸ்பிரஸ்,கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு எவ்வளவு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி , By: WebDesk, November 18, 2019, 10:19:36 PM.

[2] https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-high-court-raised-questions-to-tamilnadu-govt-on-temple-land-issues/

[3] தினத்தந்தி, தமிழகத்தில் கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்குபட்டா வழங்கும் அரசாணைக்கு தடை ஐகோர்ட்டு உத்தரவு, பதிவு: நவம்பர் 23,  2019 05:45 AM.

[4] https://www.dailythanthi.com/News/State/2019/11/23045022/For-those-who-live-in-temple-landsProhibition-of-government.vpf

[5] தினமலர், கோயில் நிலத்தில் வசித்தால் பட்டா இல்லை, Updated : நவ 22, 2019 10:59 | Added : நவ 22, 2019 10:51.

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2417436

[7] கோவில் நிலங்களை விற்க அறநிலைய துறையை அரசு வற்புறுத்துகிறதா?.. ஹைகோர்ட் நீதிபதிகள் சரமாரி கேள்வி, By Priya R, | Published: Monday, November 18, 2019, 19:23 [IST]

[8] https://tamil.oneindia.com/news/chennai/how-many-temples-land-occupied-by-private-high-court-asked-tn-govt-368929.html

[9] தினமலர், கோயில் சொத்துக்களை தனியாருக்கு தாரைவார்ப்பதா பக்தர்கள் கொதிப்பு, Updated : நவ 03, 2019 06:56 | Added : நவ 03, 2019 06:51

[10] https://www.dinamalar.com/news_detail.asp?id=2403015

70 வருடங்களுக்கு முன்னர் 1965ல் கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப் பட்டன, பட்டா கொடுக்கப் பட்டன, கட்டிடங்கள் கட்டப் பட்டன, இப்பொழுது மற்றவர்களுக்கும் புறம்போக்குகளுக்கும் பட்டா கொடுக்க அரசு ஆணை! (2)

நவம்பர்7, 2020

70 வருடங்களுக்கு முன்னர் 1965ல் கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப் பட்டன, பட்டா கொடுக்கப் பட்டன, கட்டிடங்கள் கட்டப் பட்டன, இப்பொழுது மற்றவர்களுக்கும் புறம்போக்குகளுக்கும் பட்டா கொடுக்க அரசு ஆணை! (2)

ரங்கராஜன் நரசிம்மன் புகைப்படங்களை அனுப்புங்கள்![1]: மோசமான நிலையில் உள்ள, கோவில்களின் புகைப்படங்களை அனுப்பி வைக்கும்படி, திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் வேண்டுகோள் விடுத்துள்ளார்[2]. அவரது அறிக்கை: “மிகவும் மோசமான நிலையில் உள்ள கோவில்களின் புகைப்படங்களை, எனக்கு, ‘SaveTemples@OurTemplesOurPrideOurRight.in’ என்ற, ‘மெயில்முகவரிக்கு அனுப்பி வைக்கவும். கோவிலின் நான்கு பக்கங்களிலிருந்தும், முடிந்தால் மேலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்; கோவில் எத்தனை ஆண்டுகள் பழமையானது; எந்த பெருமானுடைய கோவில்; எத்தனை விக்ரஹங்கள் உள்ளன; அந்த கோவில் செயல் அலுவலர் யார்; இன்னும் தகவல்கள் ஏதேனும் இருப்பின் அனுப்பி வைத்தால், வரும், நவம்பர் 18ம் தேதி, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறேன்,” இவ்வாறு, ரங்கராஜன் நரசிம்மன் கூறியுள்ளார். 38,000 கோவில்களின் நிலை அறநிலையத் துறைக்கு தெரியாமலா இருக்கும்?


டி.ஆர்.ரமேஷ்சொத்துக்கள் பாதுகாக்கப்படும்!‘: ”உயர்நீதிமன்ற தீர்ப்பு, கோவில் சொத்துக்கள்; கோவில் வருமானத்தையும் பாதுகாக்க வழிவகுக்கும்,” என, ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவர் டி.ஆர்.ரமேஷ் கூறினார். இதுகுறித்த, அவர் கூறியதாவது: “ஹிந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின், 23வது பிரிவில், கோவில் சொத்துக்கள், வருவாய் நிர்வாகத்தில், கமிஷனரின் அதிகாரம் வரையறுக்கப்பட்டுள்ளது. இதன்படி, கோவிலுக்கு என்ன நோக்கத்துக்காக சொத்துக்கள் கொடுக்கப்பட்டதோ, அந்த பொது நோக்கத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த அடிப்படை நோக்கத்துக்கு மாறாக, வேறு பொது திட்டங்களுக்கு கோவில் சொத்துக்களையும், வருவாயையும் பயன்படுத்தக் கூடாது என்று தெளிவாக உள்ளது. இதை உறுதி செய்யும் விதமாக உயர் நீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது.சட்டப்படி, தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரம் தவறாக பயன்படுத்துவதற்கு முற்றுப்புள்ளி வைக்க, இந்த தீர்ப்பு வழிவகுக்கும். இதனால், கோவில் சொத்துக்களும், வருமானமும் பாதுகாக்கப்படும்,” இவ்வாறு, டி.ஆர்.ரமேஷ் கூறினார்.


02-11-2020 – ‘கோவில் நிலம் கோவிலுக்கே!’ திரண்ட பொதுமக்கள்; அதிர்ந்த போலீசார்: கோவில் நிலத்தை ஒப்படைக்காவிட்டால், சட்டசபை தேர்தலை புறக்கணிப்போம் என, ஏழு கிராமங்களை சேர்ந்த மக்கள் உறுதிமொழி எடுத்தனர். திருப்பூர், மங்கலம் ரோடு, ஆண்டிபாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவில் நிலம் ஒன்பது ஏக்கரில், மாநகர போலீசாருக்கு ஆயுதப்படை அலுவலகம் கட்டப்பட உள்ளது[3]. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து பல கட்டங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்[4]. அவ்வகையில், 02-11-2020 அன்று காலை, 9:00 மணி முதல், பெரியாண்டிபாளையம் பிரிவு மங்கலம் ரோட்டில், ஆண்டிபாளையம், சின்னாண்டிபாளையம், சின்ன கவுண்டன் புதுார், குள்ளே கவுண்டன் புதுார், குளத்துப்புதுார் உட்பட ஏழு கிராமங்களை சேர்ந்த, பல ஆயிரக்கணக்கான மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கோவில் நிலத்தை திரும்ப ஒப்படைக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், சிறியவர் முதல் பெரியவர் வரை போராட்டத்தில் பங்கேற்றனர்.

02-11-2020- ஆறு மணி நேரம் போராட்டம் நடந்தது அதன்பின், தற்காலிகமாக போராட்டம் வாபஸ் பெறப்பட்டது: தொடர்ந்து ஆறு மணி நேரம் போராட்டம் நடந்தது. ‘கோவிலுக்கு சொந்தமான இடத்தை, ஊர் மக்களுக்கு தெரியாமல், எவ்விதகருத்தும் கேட்காமல், ஏழு ஆண்டுக்கு முன்னரே, இந்து சமய அறநிலையத்துறையினர் மாற்று துறைகளுக்கு மாற்ற நடடிக்கையை மேற்கொண்டு உள்ளனர். உடனடியாக, நிலத்தை கோவிலுக்கே ஒப்படைக்க வேண்டும். இல்லாவிடில், இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முற்றுகை போராட்டம், கலெக்டர் அலுவலகத்தில், ரேஷன், ஆதார், வாக்காளர் அட்டை ஒப்படைக்கப்படும். வரும் தேர்தலையும், மக்கள் ஒன்றிணைந்து புறக்கணிப்போம்,’ என்று நிலமீட்பு குழுவினர் பேசினர். சாலை மறியல் போராட்டத்தை தொடர்ந்து, கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், பண்டிகையை சம்பந்தப்பட்ட இடத்தில் கொண்டாடி கொள்ள எவ்வித தடையும் இல்லை.நிலம் தொடர்பான முத்தரப்பு பேச்சு, கலெக்டர் அலுவலகத்தில் நடக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பின், தற்காலிகமாக போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. போராட்டத்தில், பங்கேற்ற பொதுமக்களுக்கு, தண்ணீர் பாட்டில், பிஸ்கெட் மற்றும் மதிய சாப்பாடு, போராட்டம் நடந்த இடத்திலேயே வழங்கப்பட்டது.

30-09-2020- அரசு ஆணைபுறம்போக்கு மற்றும் கோயில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா[5]: அரசு புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கும் வகையில் கடந்த ஆண்டு ஆக. 30-ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து ராதாகிருஷ்ணன் மற்றும் சத்தியநாராயணன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கோயில் நிலங்களுக்கு பட்டா வழங்கும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் இந்த வழக்கு 02-03-2020 அன்று நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஸ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. ராதாகிருஷ்ணன் மற்றும் சத்தியநாராயணன் மனுதாரர்கள் தரப்பில் ஏன் பதிலளிக்கப் படவில்லை என்று தெரியவில்லை.  அஃபிடெவிட், கவுன்டர்- அஃபிடெவிட் தாக்கல் செய்வது என்பதெல்லாம் சாதாரண விசயம், ஆகவே, வழக்கறிஞர்கள் தாக்கல் செய்யவில்லை என்பதே திகைப்பாக உள்ளது.

02-03-2020 அன்று அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞரின் வாதம்[6]: அப்போது அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, –

 1. ‘‘தமிழகம் முழுவதும் உள்ள 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்களில், 600 ஏக்கர் நிலங்கள் மட்டுமே நீண்டகாலமாக அந்த இடங்களில் வசிக்கும் நிலமற்ற, வறுமைக்கோட்டுக்குகீழ் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளது.
 2. இதன்மூலம் 19,627 ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும்.
 3. இவர்கள் ஏற்கெனவே கோயில் நிலங்களை ஆக்கிரமித்து அந்த இடங்களில் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
 4. வீட்டுமனைப் பட்டா இருந்தால் மட்டுமே வீடு கட்டுவதற்கான மத்திய அரசின் நலத் திட்டங்களை இவர்களால் பெற முடியும்.
 5. ஒவ்வொரு குடும்பத்துக்கும் 600 முதல் 700 சதுர அடி என கணக்கீடு செய்யப்பட்டு 600 ஏக்கர் நிலம் மட்டுமே இதற்காக கையகப்படுத்தப்படும்.
 6. இது தமிழகம் முழுவதும் உள்ள மொத்த கோயில் நிலங்களில் வெறும் 0.125 சதவீதம் மட்டுமே.
 7. இந்த நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பை விட 3 மடங்கு கூடுதலாக இழப்பீட்டுத் தொகை, சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாகத்துக்கு அரசு சார்பில் வழங்கப்படும்.
 8. மேலும் இந்து சமய அறநிலையத் துறை ஆணையரிடம் ஆட்சேபணையில்லா சான்று பெற்ற பிறகே இந்த அரசாணைப்படி நிலமற்ற ஏழைக் குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும்.

எனவே இந்த அரசாணைக்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை நீக்க வேண்டும்,” என வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவுக்கு, மனுதாரர்கள் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை இறுதி விசாரணைக்காக வரும் 2020 மார்ச் 16-க்கு தள்ளிவைத்துள்ளனர்.

© வேதபிரகாஷ்

05-11-2020


[1] தினமலர், புகைப்படங்களை அனுப்புங்கள், Added : நவ 05, 2020 13:19.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2646663

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=2646663

[3] தினமலர், கோவில் நிலம் கோவிலுக்கே!’ திரண்ட பொதுமக்கள்; அதிர்ந்த போலீசார், Updated : நவ 03, 2020 08:46 | Added : நவ 03, 2020 01:07

https://www.dinamalar.com/news_detail.asp?id=2645210

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2645210

[5] தமிழ்.இந்து, கோயில் நிலங்களில் வசிக்கும் நிலமற்ற எளியோருக்கு பட்டா வழங்க வகை செய்யும் அரசாணை மூலம் 19,627 குடும்பங்கள் பயன்பெறும்: உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் வாதம்,Published : 03 Mar 2020 07:48 AM’ Last Updated : 03 Mar 2020 07:48 AM.

[6] https://www.hindutamil.in/news/tamilnadu/542369-temple-land.html

திருவாடுதுறை ஆதீன மடத்திற்கு சொந்தமான சொத்துக்கள் – மதம், தர்மம் மற்றும் ஆன்மீகம் விடுத்து அரசியல் சார்ந்த காரியங்களில் ஈடுபடக் கூடாது (4)

ஒக்ரோபர்29, 2020

திருவாடுதுறை ஆதீன மடத்திற்கு சொந்தமான சொத்துக்கள் –  மதம், தர்மம் மற்றும் ஆன்மீகம் விடுத்து அரசியல் சார்ந்த காரியங்களில் ஈடுபடக் கூடாது (4)

இந்து சமய அறநிலையத்துறை, 55,820 ஏக்கர் நிலங்கள் ஆதீனங்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது: இது தொடர்பாக வழக்கை தாக்கல் செய்த திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனர் மற்றும் தலைவரான ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்… “உயர் நீதிமன்றம், `தமிழகத்திலிருக்கும் கோயில், ஆதீனங்கள் மற்றும் மடங்களின் நிலங்களை அளந்து ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை மீட்க வேண்டும்’ என்று அறநிலையத்துறையினருக்கு உத்தரவிட்டது. ஆனால், எந்த ஆக்கிரமிப்பு மீட்பு நடவடிக்கையையும் யாரும் மேற்கொள்ளவில்லை. மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் `செங்கோல் ஆதீன’த்துக்கு உரிய நிலங்களை மீட்க வேண்டும் என்று கூறி பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தோம். நீதிமன்றமே மற்ற ஆதீன நிலங்களின் ஆக்கிரமிப்பு தகவல்களைக் கேட்டறிந்து, அனைத்து ஆதீன மடங்களையும் வழக்கில் எதிர் மனுதாரர்களாக இணைத்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை, 55,820 ஏக்கர் நிலங்கள் ஆதீனங்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. ஆனால், ஆதீன மடங்களுக்கு உரிய நிலத்தை அளந்தால் இதன் மதிப்பு இன்னும் அதிகமாகும். தனிப்பட்டவர்களின் சுயநலத்தால் நிலங்களை மீட்க முடியாத சூழல் நிலவிக் கொண்டிருக்கிறது. கண்துடைப்புக்காக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அனைவரையும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் அனைத்து நிலங்களையும் மீட்டு வருவாயை ஒழுங்குபடுத்தினால், பல்வேறு நலத்திட்டப் பணிகளை மேற்கொள்ள முடியும்.கோயில் மற்றும் ஆதீன, மட நிலங்களை விற்பவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள். ஆனால், அதை வாங்கும் நடுத்தர மக்கள்தாம் சிக்கிக் கொள்கிறார்கள்.

திருக்கோயில், ஆதீன, மடங்களின் பட்டா, புறம்போக்கு நிலங்களுக்கு “தரும சாசன சொத்துகள்” ஆகுமா?: திருக்கோயில், ஆதீன, மடங்களின் பட்டா, புறம்போக்கு நிலங்களுக்கு “தரும சாசன சொத்துகள்” என்று பெயர். `இந்த தரும சாசனச் சொத்துகளை யார் வாங்கி பட்டா போட்டுக்கொண்டாலும், அது செல்லாது’ என்று உச்ச நீதிமன்றமே அறிவித்திருக்கிறது. பொது மக்கள் யாரும் கோயில் மற்றும் ஆதீன, மட நிலங்களை வாங்கி ஏமாற வேண்டாம். அந்த நிலங்கள் மீண்டும் தன்னிச்சையாக திருக்கோயில் வசம் வந்துவிடும். தர்ம சாசன நிலங்களை விற்பவர்கள் மீதும், வாங்குபவர்கள் மீதும் குண்டர் சட்டம் பாயும்படி சட்டம் இயற்றப்பட வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில் மக்களுக்கும் இது தொடர்பாக விழிப்புஉணர்வு அதிகம் வந்திருக்கிறது.. ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் தொடர்பாக வழக்கு, நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது. நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம்…” என நம்பிக்கையுடன் பேசுகிறார் ராதாகிருஷ்ணன்.`சிவன் சொத்து குல நாசம்’ என்பார்கள். பல்வேறு காலகட்டங்களில் நம் முன்னோர்களால் தானமாக, புனித காரியங்களுக்காக அளிக்கப்பட்ட இந்த நிலங்களை அத்துமீறி அனுபவிப்பது என்பது தவறான செயல். தர்ம சாசன சொத்துகளை முறைகேடாக வாங்கியவர்களே கோயிலுக்குத் திருப்பிக் கொடுக்க முன்வர வேண்டும். இந்து சமய அறநிலையத்துறையும் ஆக்கிரமிக்கப்பட்ட மற்றும் முறைகேடாக விற்கப்பட்ட நிலங்களை விரைந்து மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்..!

திருவாடுவதுரை மடாதிபதி ஆக, இளையபெரிய சட்டங்கள் சண்டைப் போட்டுக் கொண்ட விவகாரங்கள்[1]: இளைய தம்பிரான், பெரிய தம்பிரான், கொலைத் திட்ட வழக்கு என்றெல்லாம் கூட இருக்கின்றன. அவ்வழக்கின் சுருக்கம்[2]:

மார்ச் 24, 1997 – மீனாக்ஷு சுந்தரம் தம்பிரான் இளைய பண்டார சந்நிதியாக நியமிக்கப் படல்.

ஜூலை 6, 2002 – இளைய பண்டார சந்நிதியை கொலைசெய்ய திட்டம் போட்டதாக, கிரிமினல் வழக்கு பதிவு செய்யப் பட்டது.

15.7.2002 – நோட்டீஸ் அனுப்பப் பட்டது.

ஜூலை 24,  2002 – பதவிலிருந்து நீக்கப் பட்டார்.

24-12-2004 – நீக்கப் பட்டதற்கு எதிராகத் தொடுக்கப் பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப் பட்டது.

ஆகஸ்ட் 1, 2011 – உயர்நீதி மன்றத்தில் குற்ற வழக்கிலிருந்து விடுவிக்கப் பட்டார்.

நவம்பர் 22, 2012 – பெரிய பண்டார சந்நிதி காலமானார்.

நவம்பர் 22, 2012 ஆணை – மீனாக்ஷு சுந்தரம் தம்பிரான் திருவாவடுதுரை 24வது மடாதிபதி ஆனார்.

05-06-2018 – இவ்விவகாரங்களில் கோர்ட் தலையிட முடியாது என்று உயர்நீதி மன்ற  தீர்ப்பு[3]

அதாவது, ஆன்மீகத்தில் ஈடுபட வேண்டிய மடாதிபதிகள் இவ்வாறெல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்றால், அடிப்படையிலேயே பல்லாண்டுகளாக ஏதோ தவறு இருந்து வருகிறது. கடவுளை மீறி நீதிமன்றங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமே, அவர்களது போலித்தனத்தை வெளிப்படுத்தி விட்டது[4]. அதிகாரத்திற்காக, பட்டத்திற்கு வரவேண்டும் என்பதற்காக, ஒரு தம்பிரான், இன்னொரு தம்பிரானை கொலைசெய்யத் துணிகிறார் என்றால், திராவிட அரசியல்வாதிகளுக்கும் இவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அங்கு அரசியல் நுழைந்து விட்டது, இவர்கள் அரசியல்வாதிகளின் பிடியில் உள்ளார்கள் என்பது உறுதியாகின்றன. இதனால் தான், மடம்-கோவில் சொத்துகள் சட்டங்களை மீறி குத்தகைக்கு விடுவது, ஆக்கிரமிப்பது, விற்பது, பாட்டா போடுவது என்றெல்லாம் நடந்து வருகின்றன.

கோவில்மடங்கள் இடங்கள் எவ்வாறு ஆக்கிரமிக்கப் படுகின்றன?: குத்தகைகாரர்களாக இருந்து, எப்படி மடத்தை ஏமாற்றி வருகின்றனர் என்பதை, நீதிமன்ற தீர்ப்புகளே வெளிபடுத்திக் காட்டுகின்றன[5]. அதில் பல விவரங்கள் பெயர்களுடன், வெளியாகியுள்ளன[6]. இது உதாரணத்திற்குக் கொடுக்கப் படுகிறது. இது போன்று நூற்றுக் கணக்காண தீர்ப்புகள் உள்ளன. இருப்பினும், இவற்றையெல்லாம், ஒதுக்கி விட்டு, மறுபடி-மறுபடி சட்டமீறல்களை செய்து வருவது, ஒரு திட்டமிட்ட சதிவேலை எனலாம். திரும்ப-திரும்ப கோவில்-மடங்கள் நிலங்களையே குறி வைத்து, இவர்கள் வேலை செய்வதால், நிச்சயமாக அவை இந்துவிரோதமாகிறது. முதலில் திராவிடக் கட்சிகள் இந்திவிரோதிகளாக இருந்து கொண்டு செய்து வந்தன. இப்பொழுது, மற்ற கட்சிகள், குழுக்கள், முதலியவை அதே வேலையை செய்து வருகின்றன. நாளுக்கு நாள் நிலத்தின் விலை உயர்ந்து வருவதால், இத்தகைய மோசடிகள் அரசியல் பலத்தினால், சுலபமாக செய்யலாம் என்றாதால், எல்லோரும் இறங்கியுள்ளன. துலுக்கர், கிருத்துவர், மற்ற இந்துவிரோதிகள் இதில் இறங்கி கடந்த நூறாண்டுகளாக, இவ்வாறு செயல்பட்டு வருகின்றன. ஆக்கிரமிப்பு, சொத்தை அனுபவித்தல், பிறகு சொத்தே தனது என்பது, பட்டாவிற்கு விண்ணப்பித்தல், ஊழல் அதிகாரிகள் முதலியவர்களின் உதவியால் பட்டா பெறுதல், பிறகு நீதிமன்றங்களுக்குச் சென்றாக் கூட, இழுத்தடிப்பது, போலி ஆவணங்களை உண்டாக்குவது, கைமாற்றி விற்பது என்ற ரீதியில், இழுத்தடித்து, சொத்துகளை அனபவித்து வருகின்றனர்.                                            

© வேதபிரகாஷ்

28-10-2020


[1] Madras High Court – His Holiness Kasiviswanatha … vs State Of Tamil Nadu, IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS,   Reserved on :  22.03.2018,       Delivered on :      05-06-2018

CORAM              THE HONOURABLE THIRU JUSTICE V. PARTHIBAN

W.P.No.31714 of 2012 and    W.M.P.No.2672 and 2673 of 2018

His Holiness Kasiviswanatha Pandara Sannidhi,  The Adheena Head of  Thiruvavaduthurai Adheenam,

Mayiladuthurai taluk, Nagapattinam District.                                                                        ..                  Petitioner

versus

1. State of Tamil Nadu, represented by the Secretary, Hindu Religious and Charitable Endowments Department, Fort St.George, Chennai.

2. The Commissioner, Hindu  Religious and Charitable Endowments Department,                    Chennai.

3. The Assistant Commission Hindu  Religious and Charitable Endowments Department, Kumbakonam.                                   

4. Sri Meenakshisundara Thambiran, Kattalai Thambiran at Thiruvidaimarthur Temple, now self declared as Head of Thiruvavaduthirai Adheenam, Mayiladuthurai taluk, Nagapattinam District. ..   …Respondents

[2] https://indiankanoon.org/doc/26044699/

[3] Indian Express, Madras HC refuses to interfere in mutt matter, Published: 06th June 2018 04:39 AM  |   Last Updated: 06th June 2018 04:39 AM

[4] https://www.newindianexpress.com/states/tamil-nadu/2018/jun/06/madras-hc-refuses-to-interfere-in-mutt-matter-1824354.html

[5] Madras High Court – Thiruvavaduthurai Adheenam vs The Commissioner on 17 October, 2012

BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT- DATED: 17/10/2012

CORAM – THE HONOURABLE MR.JUSTICE S.MANIKUMAR, W.P.(MD).No.1278 of 2006

And W.P.M.P.Nos.1433, 242 of 2006 and M.P.Nos.1 and 2 of 2012

Thiruvavaduthurai Adheenam, Thiruvavaduthurai, Through its Adheenakarthar, Sri La.Sri.Siva Prakasa Pandara Sannidhi Avargal, Mayiladuthurai Taluk, Nagapattinam District.            … Petitioner

Vs.

1.The Commissioner,    Land Revenue, Survey and Settlement,    Chepauk, Chennai 600 005.

2.The Assistant Settlement Officer,    (South – incharge),    The Office of the Director of Land Revenue,

   Survey and Settlement, Chepauk, Chennai 5.

3.The Assistant Director,    Survey and Settlement,    Tirunelveli District, Tirunelveli.

4. The Inspector of Survey,    Cheranmahadevi, Tirunelveli District.

5.A.Gnanakani,    S/o.Arulappa Nadar,    President, Sivanthipuram Vivasaya Sangam,

   Sivanthipuram Village, Vickramasingapuram Post,    Ambasamudram Taluk, Tirunelveli District.

6.P.Jeyaraj [R-5 impleaded as per order dated 13.02.2007 made in W.P.M.P.(MD).No.2870 of

2006.] [R-6 impleaded as per order dated 10.08.2012 made in M.P.(MD).No.1278 of 2006]

                                                                                                      … Respondents

[6] https://indiankanoon.org/doc/18428519/

கோவில் நிலங்களை இனி விற்பதில்லை: இந்து அறநிலையத்துறை முடிவு!

நவம்பர்12, 2011

கோவில் நிலங்களை இனி விற்பதில்லை:  இந்து அறநிலையத்துறை முடிவு!

பகுத்தறிவு-நாத்திகப் போர்வையில் தமிழர்களை “திராவிடர்களாக்கி”[1], இந்திய விரோதிகளாக்கி[2], இந்து விரோதிகளாக்கி[3], மற்ற இந்திய மொழி பேசும் மக்களுடனும் பிரச்சினையைக் கிளப்பி[4], அண்டை மாநிலங்களுடன் சண்டை போட்டுக் கொண்டு[5], “தெற்கு தேய்கிறது” என்று சொல்லி, இவர்களே நன்றாகத் தேய்த்து, கோடிகளில் சுருட்டிவிட்டு[6], மற்ற மாநிலங்களை விட பிற்படுத்தச் செய்தது தான் இவர்கள் ஆண்ட லட்சணம். அந்நிலையில் கோவில்களைக் கொள்ளையடித்ததில் இவர்கள் மாலிக்காபூர், ஔரங்கசீப் போன்றவர்களையும் மிஞ்சி விட்டனர். அவர்கள் மதவெறியால், கொள்ளையடித்ததை, இவர்கள் துவேஷத்தால், சட்டத்தை வளைத்து, விதிகளை மீறி, அதிகாரம் மூலம் கொள்ளையடித்து வருகின்றனர். “கருணாநிதி-ஜெயலலிதா” ஒன்றும் “திராவிட-ஆரிய” சின்னங்கள் அல்ல. திமுக-அதிமுகவும் அது போலத்தான். திராவிடப் பாரம்பரிய அரசியலில் ஊறிப் போனவர்களுக்கு, நெற்றியில் குங்குமம்-விபூதி-சந்தனம் வைத்துக் கொண்டாலும், வைத்துக் கொள்ளாவிட்டாலும், கொள்ளையடிப்பதில் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சித்தலைமை மாறினாலும், நடப்புகள், செயல்கள், முடிவுகள் எல்லாம் ஒரே மாதிரியாகத்தான் இருந்துள்ளன. ஜெயலலிதா ஆட்சியில் கொஞ்சம் குறைந்துள்ளது எனலாம் அல்லது அவ்வாறு தோற்றமளிக்கலாம்.

இந்து அறநிலையத் துறையே கோவில் சொத்துக்களை விற்று மோசடி செய்து வந்த விவரங்களை கீழ் கண்ட கட்டுரைகளில் விவரித்துள்ளேன்:

எண்

தலைப்பு

இணைத்தள விவரம்

Tenants of mutt and temple lands seek ownership rights: The TN Government scam to grab the Temple lands (27-08-2008)  http://vedaprakash.indiainteracts.in/2008/08/27/tenants-of-mutt-and-temple-lands-seek-ownership-rights-the-tn-government-scam-to-grab-the-temple-lands/
1 Tenants of mutt and temple lands seek ownership rights: The TN Government scam to grab the Temple lands (02-09-2008))  http://dravidianatheism.wordpress.com/2008/09/02/tenants-of-mutt-and-temple-lands-seek-ownership-rights-the-tn-government-scam-to-grab-the-temple-lands/
2 பல கட்டுரைகள் (குறிப்பாக கீழ்கண்டவை கொடுக்கப் பட்டுள்ளன) https://atheismtemples.wordpress.com 
3 நாத்திக ஆட்சியாளர்களும், கோவில் நிர்வாகமும் https://atheismtemples.wordpress.com/2009/09/18/atheist-rulers-temple-administration/ 
4 இந்து அறநிலையத்துறைக்குப் பிறகு குடிசைமாற்றுவாரியம் மூலம் கோவில் நிலங்களை ஆக்கிரமிக்க முயலும் நாத்திக அரசு! https://atheismtemples.wordpress.com/2010/09/10/atheist-rulers-encroach-temple-lands-through-slum-clearance-board/
5 ரூ.5,000/- கோடி மதிப்புள்ள சிவன் கோயில்நிலம் ஆக்கிரமிப்புவிவகாரம்: ரோசையா கருணாநிதி சமரசம்! https://atheismtemples.wordpress.com/2010/08/09/%E0%AE%B0%E0%AF%82-5000-crores-valued-siva-temple-encroached-in-taamilnadu-belonging-to-andhrapradesh/
6 செஞ்சி கோவில் வழக்கு: இந்துக்களும், கிருந்துவர்களும் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன? https://atheismtemples.wordpress.com/2011/08/20/gingee-kothandaramar-temple-liberated-from-the-christians/
7 செஞ்சி கோவில் வழக்கு (2): இந்துக்களும், கிருந்துவர்களும் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன? https://atheismtemples.wordpress.com/2011/08/21/gingee-temple-liberated-duties-of-hindus/

இந்து சமய அறநிலையத் துறை எடுத்துள்ள முடிவு[7]: கோவில் சொத்துக்களை, குடியிருப்போருக்கு விற்பது, ஓர் ஆபத்தான முயற்சியாகவே கருதப்படுகிறது. எனவே,

தினமலர் 12-11-2011 தேதியிட்ட நாளிதழில் வெளியாகியுள்ள இக்கட்டுரையில் (சென்னைப் பதிப்பு, பக்கம்.2) இவ்வாறு செய்தி இருந்தாலும், ஏற்கெனவே விற்றது, விற்றதுதான் என்றாகிறது. அதனையும் சட்டரீதியாக அரசு மீகவேண்டும். கோவில் நிலத்தை அடாவடியாக வாங்கியவர்கள் நிச்சயமாக ஏழைகள் அல்லர். ஆகவே, சிவன் சொத்தை அவர்கள் தாராளமாக திருப்பிக் கொடுத்து கைலாசத்திற்குச் செல்ல தயாராக இருக்கலாம்.

இனி, கோவில் நிலங்களை விற்பதில்லை என, இந்து சமய அறநிலையத் துறை, அதிரடி முடிவை எடுத்துள்ளது. கோவில் நிலத்தை விற்பனை செய்யலாமா, கூடாதா என முடிவு செய்யும் அதிகாரத்தை, அறநிலையத் துறைச் சட்டம், 1959ன் பிரிவு 34, அத்துறை ஆணையருக்கு அளிக்கிறது. அந்த விற்பனையும், கோவிலின் நலன் கருதி, மிக மிக அவசியமாகக் கருதப்பட்டால் மட்டுமே, மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், எப்போதுமே, சட்டத்துக்கு மாறாகத் தானே நடைமுறை இருக்கும். உள்ளூர் பலம், அரசியல் பின்புலம் மூலம், சட்ட ரீதியாகவே வாங்கி, கோவில் சொத்துக்களை, “ஸ்வாகா’ செய்வோர் அதிகரித்து வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், முக்கியத்துவம் வாய்ந்த முடிவை, இந்து சமய அறநிலையத் துறை எடுத்துள்ளது.
திருவல்லீஸ்வரர் கோவில் நிலத்தை குறைந்த விலையில் 1984ல் விற்றது: சென்னையின் பிரபலமான கோவில்களில் ஒன்று, பாடி திருவல்லீஸ்வரர் கோவில்; பல்லவர்கள் காலத்துக்கும் முந்தையது. புண்ணியாத்மாக்கள் பலரின் முயற்சியால்,

அப்பொழுதெல்லாம் புண்ணிய ஆத்மாக்கள் கோவில்களுக்கு நிலம், வீடு என்று எழுதி வைத்து விட்டு சாகும். ஆனால், இப்பொழுதுள்ள தினமலர் 12-11-2011 தேதியிட்ட நாளிதழில் வெளியாகியுள்ள இக்கட்டுரையில் (சென்னைப் பதிப்பு, பக்கம்.2) இவ்வாறு செய்தி இருந்தாலும், ஏற்கெனவே விற்றது, விற்றதுதான் என்றாகிறது.

இந்தக் கோவிலுக்கு, பாடியிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், 55 ஏக்கருக்கும் மேல் நிலம் உள்ளது. இதில், 125 கிரவுண்டு மற்றும் 751.75 சதுர அடி நிலத்தில், 126 பேர் வரை குடியிருந்து வந்தனர். இவர்கள் அனைவரும், “ஜெகதாம்பிகை நகர் கூட்டுறவு வீட்டு மனை சங்கம்’ என்ற பெயரில் ஒரு சங்கத்தைத் துவக்கி, “நாங்கள் குடியிருக்கும் அடிமனையை எங்களுக்கே விற்று விடுங்கள்’ என, கோரிக்கை வைத்தனர். அப்போதிருந்த கோவில் நிர்வாகமும், அறநிலையத் துறையும் அதை ஏற்று, 66 பேருக்கு, அடிமனையை கிரையம் செய்து கொடுத்துவிட்டன. இது நடந்தது 1984ல். அப்போது, ஒரு கிரவுண்டு, வெறும் 12 ஆயிரம், 15 ஆயிரம் மற்றும் 16 ஆயிரம் என விற்கப்பட்டது.
நிலம் கிடைக்காதவர் வழக்குத் தொடுக்க ஆரம்பித்தது பிரச்னை: ஒரு பாதிப் பேருக்குக் கிடைத்துவிட்டால், மறு பாதியினர் விடுவரா? தங்களுக்கும் விற்பனை செய்ய வேண்டும் என, விடுபட்டவர்களுடன் புதிதாகச் சிலரும் சேர்ந்து, மொத்தம் 135 பேர், சட்டப் போராட்டத்தைத் துவக்கினர். சென்னை ஐகோர்ட்டில் வழக்கு, தள்ளுபடி,

சட்டத்தை அரசியல்வாதிகள் தாம் வளைப்பார்களா, அதற்கென வக்கீல்களும் உள்ளனரே. குங்குமம் / விபூதி / சந்தனம் வைத்துக் கொண்டால் என்ன, காசு என்றால், பக்தன்னான வக்கீலும் வாதிட வந்து விடுகிறார்களே? வென்றால் 1% என்றால் கூட லட்சங்களில் கிடைக்கும் எனும்போது, சிவனாவது, சொத்தாவது, தானே சிவனாகிவிட மாட்டானா?

உத்தரவு, ரத்து என, அத்தனை அத்தியாயங்களும் அரங்கேறின. கடைசியாக, கடந்த ஜூலையில், “இவர்களுடைய கோரிக்கைகளை ஏற்பதா, மறுப்பதா என்பது குறித்து, பரம்பரை அறங்காவலர் மற்றும் பொதுமக்களின் ஆலோசனை, ஆட்சேபனைகளைப் பெற்று, எட்டு வாரத்துக்குள், அறநிலையத் துறை ஆணையர் இறுதி முடிவெடுக்க வேண்டும்’ என, ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்பிய அறநிலையத் துறை அதிகாரிகளும், ஆணையரும், விரிவான ஆலோசனை மேற்கொண்டனர். வழக்கு யுத்தம் துவங்கிய 25 ஆண்டுகளில், எல்லாமே தலைகீழாக மாறிவிட்டிருந்தது. பாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள அம்பத்தூர், முகப்பேர், அண்ணா நகர் மேற்கு, கிழக்கு போன்ற பகுதிகளில், ஒரு கிரவுண்டு நிலத்தின் விலை, ஒரு கோடி ரூபாயை எட்டிவிட்டது. வாடகை, பூஜை கட்டணங்கள், உண்டியல் வருவாய், நன்கொடைகள் என, கோவிலின் வருவாயும் அதிகரித்து விட்டது. திருவல்லீஸ்வரரின் அருளால், வங்கியில் ஒரு கோடி ரூபாய் வைப்புத் தொகை இருக்குமளவு, கோவிலின் நிதிநிலை உயர்ந்து விட்டது. “”முன்னோர், கோவிலைப் பரிபாலனம் செய்வதற்குக் கொடுத்த சொத்துக்களை அபிவிருத்தி செய்யலாமே தவிர, விற்கக் கூடாது” என, அக்கோவிலின் பரம்பரை அறங்காவலர் சண்முகசுந்தரம், கடுமையாக வாதிட்டார்.

கோவில் நிலத்தை இனி விற்பதிலை – உருப்படியான முடிவு: நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, அறநிலையத் துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவு: “கோவில் இடத்தில் குடியிருந்து வருவோருக்கு, அந்த நிலத்தை விற்பனை செய்வது, ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்து, தமிழகம் எங்கும் உள்ள கோவில் சொத்துக்கள், பராதீனம் அடையும் சூழ்நிலையை ஏற்படுத்தும். மேலும்,

யார் தானமாகக் கொடுத்ததை யார் விற்பது? அறநிலையத் துறைக்கு அத்தகைய அதிகாரம் இருந்தால், அதுவே சட்டத்திற்குப் புறம்பானது. கொடையாக பக்தர்கள் கொடுத்த நம்பிக்கையை / பிணையை அறுப்பதற்கு எந்த சட்டத்திற்கும் உரிமை இல்லை. நூறு / ஆயிரம் ஆண்டுகளாக இருக்கும் கோவில் சொத்துகளை, வாங்க-விற்க யாருக்கும் அதிகாரம் இல்லை.

பணவீக்கத்தின் காரணமாக, ரூபாயின் மதிப்பு ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகிறது; அசையாச் சொத்துக்களின் மதிப்பு உயர்ந்து கொண்டே போகிறது. இன்றைய நில விற்பனைத் தொகை, நாளை எவ்விதத்திலும் கோவிலுக்குப் பயன்படாத நிலையாக மாறும். எனவே, கோவில் சொத்துக்களை, குடியிருப்போருக்கு ஒட்டுமொத்தமாக விற்பது, ஓர் ஆபத்தான முயற்சியாகவே கருதப்படுகிறது. எதிர்காலத்தில், கோவில்களின் நலன் பாதிக்கும் என்பது, தொலைநோக்குப் பார்வையில் புலப்படும். இவ்வாறான விற்பனை முடிவுகள், இதர கோவில்களுக்குச் சொந்தமான நிலங்களில் குடியிருப்போருக்கும், ஒரு தூண்டுகோலாக அமைந்து, கோவில் நிலங்களுக்கு, ஒரு பொதுவான ஆபத்து ஏற்படும். எனவே, திருவல்லீஸ்வரர் கோவில் மனைகளை விற்க முடியாது”, இவ்வாறு, ஆணையர் உத்தரவிட்டார். அறநிலையத் துறை ஆணையரின் இந்த அதிரடி உத்தரவால், இனி, தமிழகத்தில் உள்ள எந்தக் கோவிலின் சொத்துக்களும், விற்பனை செய்யப்பட முடியாத, ஆரோக்கியமான நிலை உருவாகியுள்ளது.

சிவன் சொத்து குலநாசம் / தெய்வம் நின்று கொல்லும்: 1968ல் குத்தகைக்கு என்று இந்நிலம் கொடுக்கப்பட்டது[8]. 1984ல் ஆணை போட்டு விற்கப்பட்டது[9]. 1984லிருந்து அனுபவித்து வந்த நிலையில், சிலர் 1987ல் அறத்துறை ஆணையை எதிர்த்து வழக்குப் போட[10], 1994ல் வழக்கு போல, உயர்நீதி மன்றம் தீர்ப்பை மறுபரிசீலினை செய்ய அறத்துறைக்கு திரும்ப அனுப்பியது[11]. 29.8.1997 to 8.6.2000. காலகட்டத்தில் நடந்ததை விசாரிக்கப்பட்டது. 2004ல் தீர்ப்பு வழங்க[12], 2007ல் உயர்நீதி மன்றம் ஆணையிட[13] இப்பொழுது நடவடிக்கை எடுக்கிறார்கள் போலும்.  இவ்வாறு 1968ல் அண்ணாதுரை காலத்தில் இருந்து, ஜெயலலிதா காலம் வரை இழுத்தடிக்க முயன்ரவர்களுக்கு, இன்னும் இழுத்தடிக்கவா தெரியாது. சட்ட ரீதியாக மேல் முறையீடு என்றெல்லாம் இருப்பதால், வாங்கியவர்கள் பழுத்த “சிவபக்தர்களாகவே” இருந்தாலும் விட்டுவிடப் போவதில்லை. ஆகவே இவர்கள் மறுபடியும், உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம் என்று போய்கொண்டுதான் இருப்பார்கள். அதற்கு அந்த வக்கீல்கள் உதவி செய்து கொண்டுதான் இருப்பார்கள். இறைவன் “திருவிளையாடல்” புரிந்து இவர்களை மாற்றினால் தான் உண்டு. இல்லையெனில், இவர்கள் எல்லாவற்றையும் மாற்றி விடுவார்கள். எப்படி கருணாநிதி / ஜெயலலிதா வாழ்க்கைகள்[14] இப்பொழுது உள்ளனவோ அல்லது முந்தைய ஆட்சியாளர்கள் இறந்து மறைந்தார்களோ, அதே நிலை தான் எல்லோருக்கும் ஏற்படும். தெய்வம் நின்று கொல்லும் என்பது தப்பாமல் நடக்கும்.
வேதபிரகாஷ்

12-11-2011


[1] சரித்திர ரீதியில் இல்லாத “ஆரிய-திராவிட” இனவாத கட்டுக்கதைகளை, இனவெறியோடு இன்றும் அத்தகைய மாயைகளை கட்டிப் பிடுத்துக் கொண்டு, மக்களை முட்டாளக்கி வருகின்ற மாநிலல் தமிழ்நாடு தான் அல்லது அவ்வறு உலகர்ட் உலகதிலேயே நம்பி வரும் கூட்டமும் இங்குதான் உள்ளது.

[2] 1969களில் அண்ணதுரை “அந்தர் பல்டி” அடித்து பயந்து இந்திய அரசியல் சட்டத்திற்கு பணிந்தாலும், தமிழ்நாட்டில், இன்னும் கூட சில “அறிவு ஜீவிகள்” தமிழ்நாடு, தனிநாடு என்றெல்லாம் பேசி-எழுதிக்கொண்டுதான் இருக்கின்றன.

[3] இங்குதான் மற்ற இந்து விரோதிகளும் சேந்து கொள்கின்றனர். அதனால் தான் கோவில் சொத்துகளை கிருத்துவர்கள், முஸ்லீம்கள் கூட வாங்கிக் கொள்கிறார்கள், திருடுகிறர்கள், கொள்ளையெடிக்கிறார்கள். அந்தகால சேவியர், மாலிக்காபூர், ஔரங்கசீப் போல நடந்து கொள்கிறார்கள். அநியாயம், அக்கிரமம், கொடுமை, கொடூரங்களை செய்து வருகிறார்கள்.

[4] ஹிந்து ஒழிக, ஹிந்திகாரர்கள் ஒழிக, வந்தேரிகள், உறிஞ்சிகள். என்றெல்லாம் பேசுவது, அவர்களைத் தாக்குவது, ஆனால் மறைமுகமாக அவர்களுடனே உறவுகள் வைத்துக் கொண்டு அல்லது பணத்தை வாங்கிக் கொண்டு மக்களை ஏமாற்றி வருவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே தான்! அப்பொழுது அவர்கள் ஹிந்தியில் பேசுவார்கள் பாருங்கள், அப்பொழுது தமிழர்களே முழிப்பார்கள், “”எப்படி இந்த திராவிடர்கள் இந்தி பேசுகிறார்கள் இல்லை இந்தி பாடையில் செல்கிறார்கள்?” என்று!

[5] எப்பொழுது பார்த்தாலும் நதி நீர் பிரச்சினை என்று வைத்த்க் கொண்டு கேரளா, கர்நாடகா, ஆந்திரா என்று பிரச்சினைகளை வைத்துக் கொண்டிருப்பதை காணலாம். மற்ற நேரங்களில் அதைப் பற்ரி பேச மாட்டார்கள். தொழிற்சாலைகள் அங்கு சென்றுள்ளதை கவனிக்கலாம். உற்பத்தி செய்யும் தொழிர்சாலைகள் இங்கு இருந்தாலும், விற்பனை செய்வது தமிழகத்திற்கு வெளியில் நடபதைப் பார்க்கலாம்.

[6] கான்டிரேக்டுகளில், டென்டர்களில் கொள்ளையெடித்ததை, இப்பொழுது 2-ஜி என்று, “ஆரியர்களுடன்” செந்து கொண்டு கொள்ளையெடித்திருக்கிறார்கள்.

[7] தினமலர் சிறப்பு நிருபர், கோவில் நிலங்களை இனி விற்பதில்லை: அறநிலையத்துறை முடிவு, பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2011,23:32 IST, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=347526

[8] மிக்கப்படித்த அறிஞர் அண்ணாதுரை எப்படி அப்படி 1968ல் குத்தகைக்குக் கொடுத்தார் என்று தெரியவில்லை. ஒருவேளை, பீரங்கியால் பிளக்க முடியாதத்தை இப்படி பிளந்து விடலாம் என்ற சாதுரியத்தில் கொடுத்தார் போலும்!

[9] Na.Ka.No.11/76 R2, dated 7.12.1984 followed with Government Order dated 7.12.1984.

[10] The said order dated 7.12.1984 was challenged by some of the individuals interested in the welfare of the temple in W.P.No.286 of 1986.

[11] The Court by order dated 11.1.1994 set aside the order of the second respondent dated 7.12.1984 and remitted the matter back to the Commissioner, HR&CE for fresh disposal by following the provisions of the Act and Rules.

[12] EXECUTIVE OFFICER versus JAGATHAMBIGAI NAGAR- High Court of Madras

http://www.rishabhdara.com/sc/view.php?case=75110

http://indiankanoon.org/doc/1730914/

[13] தீர்ப்புகளின் படி, வேலைசெய்ய எவ்வளவு காலத்தை எடுத்த்க் கொள்கின்றனர், அதற்கேற்றபடி, எப்படி கோவில் நிலம் அனுபவிக்கப் படுகிறது என்பதையெலாம் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

27Mar2007 (GJX) 0009 MAD

Madras High Court

THE EXECUTIVE OFFICER, CHENNAI & ANOTHER

Vs.

JAGATHAMBIGAI NAGAR CO-OPERATIVE HOUSE SITE SOCIETY, REP BY ITS PRESIDENT, CHENNAI & OTHERS

Decided on: March 27, 2007

http://www.ejurix.in/Cases/MAD/MAD-2007/27Mar2007%20(GJX)%200009%20MAD.htm

(2007) 4 MLJ 476 (Mad)

http://mljlibrary.com/nominal-index/C1MF4PC1MH6RF4P.htm

[14] இங்கு எந்த தனிப்பட்ட நபர்களைப் பற்றி குறைசொல்லவில்லை. ஆட்சியாளர்களாக இருக்கும் போது, எவ்வாறு கோவில் நிலம் விற்கப்படுகிறது, அக்காரியம் சாதாரணமாக நீதிமன்றங்களில் குறிப்பிட்ட சட்டப்பிரிவுகளில் அலசப்படுகின்றன என்ருதான் எடுத்துக் காட்டப்படுகிறது. ஏனெனில், அந்நிலத்தை கோவிலுக்கு தானமாகக் கொடுத்த போது, எந்த சட்டத்திற்கும் உட்பட்டு கொடுக்கவில்லை என்பத்கு தான் உண்மை. அதாவது அந்நிலத்தை யாரும் விற்கவும் முடியாது, வாங்கவும் முடியாது.

முறைகேடாக குத்தகைக்கு விடப்பட்ட கோவில் நிலங்கள் கையகப்படுத்தப்படும்!

செப்ரெம்பர்1, 2011

முறைகேடாக குத்தகைக்கு விடப்பட்ட கோவில் நிலங்கள் கையகப்படுத்தப்படும்!

 சட்டசபையில் வழக்கமாக நடக்கும் விவாதம்: திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்ததும், இதைப் பற்றி “மாற்றித்தான் யோசிப்பார்கள்”, ஏனெனில் அவர்களுக்கும் பங்கு வேண்டுமே என்ற எண்ணத்தில்தானெயொழிய, உண்மையில் ஆண்டவனுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல. புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள சட்டசபை உறுப்பினர்கள் பேசியுள்ள விதத்திலிருந்தே அதனை அறிந்து கொள்ளலாம். கோவில் நிலம் என்ரு ஆரம்பித்து, சுற்றுலா என்று சென்று, அதில் எப்படி சம்பாதிக்கலாம் என்ற எண்னத்துடன் தான் விவாதம் உள்ளதே  தவிர, கோவில் நிலங்களை மீட்டு, அவை எதற்காக பக்தர்களால் தானமாகக் கொடுக்கப்படது என்று பார்த்து அத்ற்கேற்ற முறையில் செயல்படவேண்டும் என்ற நினைப்பு கொஞ்சம் கூட இல்லை எனலாம். “கடந்த ஆட்சியில் முறைகேடாக குத்தகைக்கு விடப்பட்ட கோவில் நிலங்களை கையகப்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்,” என்று அறநிலையத் துறை அமைச்சர் சண்முகநாதன் தெரிவித்தார்[1].

சட்டசபையில் நேற்று முன்தினம் நடந்த விவாதம்:

கோவிலிலிருந்து ஆரம்பித்து நீலகிரி சென்ற தேமுதிக உறுப்பினர்: உதாரணத்திற்கு தினமலரில் வந்துள்ளபடி, சிலருடைய பேச்சுகளை எடுத்துக் கொள்ளலாம்.

சம்பத்குமார் – தே.மு.தி.க: தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களை மண்டலங்களாக பிரித்து, பக்தர்கள் சிரமமின்றி சுற்றிப் பார்க்க பஸ் வசதி செய்ய வேண்டும். ஒரே நாளில் அப்பகுதியில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் சென்று வரும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்[2]. நீலகிரியில் ஹெலிகாப்டர் மூலம் சுற்றிப் பார்க்கவும், கேபிள் கார் வசதியும் செய்ய வேண்டும். நீலகிரியில் மலைரயில் அடிக்கடி பழுது ஏற்பட்டு, நடுக்காட்டில் நின்று விடுகிறது. இதனால், வெளிநாட்டு பயணிகள், நம் தமிழகத்தின் நிலையை பற்றி தவறாக பேசுவர்[3].

அமைச்சர் கோகுல இந்திரா: மலை ரயில், மத்திய அரசின் ரயில்வே துறையால் இயக்கப்படுவது. எனினும், இதுபற்றி முதல்வரின் அனுமதியோடு, ரயிலை சீரமைக்கும்படி மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்[4]. கேபிள் கார் வசதியை பொறுத்தவரை, அதற்கான முயற்சி அல்லது ஆய்வு செய்யும் போது, அவை வனப்பகுதியில் உள்ள இடங்களாக உள்ளன. அவற்றை கேட்டு மத்திய அரசிடம் அனுமதி பெற நீண்டகாலமாகிறது.

அன்னதானத்திலிருந்து திரைப்பட மான்யத்திற்கு சென்ற அதிமுக உறுப்பினர்: கிருஷ்ணமூர்த்தி – அ.தி.மு.க: இந்த சட்டசபையில், நிதி அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம், 95 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்துவிட்டு, முயன்று முயன்று பார்த்தேன் சதம் போட முடியவில்லை என்றார். ஆனால், இன்று ஒரு லட்சத்து 18 ஆயிரம் கோடிக்கு போட்டுள்ள பட்ஜெட்டில் உள்ள திட்டங்களை பார்த்து, இந்திய துணைக் கண்டமே மலைத்துப் போய் இருக்கிறது[5]. பெண்கள் முன்னேற்றத்துக்காக எடுக்கப்படும் படங்களுக்கு சிறப்பு மானியம் வழங்க வேண்டும்[6]. அன்னதான திட்டத்தை மீண்டும் புதுப்பொலிவோடு, புத்துணர்வுடன் செயல்படுத்த உத்தரவிட வேண்டும்.

கோவில் நிலத்தில் பல ஆண்டுகளாக வாழ்ந்தவர்களது இடத்தை அவர்களுக்கே சொந்தமாக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும்: அதாவது, அப்படி ஆக்கிரமித்துக் கொண்டால், சில காலத்தில் அந்நிலத்தை சட்டப்படி அபேஸ் செய்துவிடலாம் என்று சொல்லிக் கொடுக்கிறார். இதில் கம்யூனிஸ்ட்டுகள் மிகவும் வல்லவர்கள் தாம்.

உலகநாதன் – இந்திய கம்யூனிஸ்ட்: கோவில் நிலத்தில் வாடகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக வாழ்ந்தவர்களது இடத்தை அவர்களுக்கே சொந்தமாக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும்[7]. கோவில் நிலங்களில் குடியிருப்போரை வெளியேற்ற பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்படுகிறது[8].

அமைச்சர் சண்முகநாதன்: யார் யார் எந்தெந்த இடத்தில் குடியிருக்கின்றனர் என்று கண்டறிந்து, அவற்றை வரன்முறை செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

செஞ்சி கோதண்டராமர் கோவில் ஞாபகம் வரவில்லை[9] ஆனால் கோட்டையைப் பற்றி பேசும் தேதிமுக உறுப்பினர்: பாவம், தேதிமுக உறுப்பினர், அவரே பேசினாரா அல்லது வேறு யாராவது அவ்வாறு பேசச் சொன்னார்களா என்று தெரியவில்லை. முதலில் கோட்டையைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை அவர் விரட்டியடித்து நிலத்தை மீட்பாரா? இந்திய தொல்துறை அறிப்புப் பலகைகளையும் மதிக்காமல் ஆக்கிரமிப்பு செய்துள்ளனரே அது ஏன் அவருடைய கண்களுக்குத் தெரியவில்லை அல்லது யாரும் சொல்லவில்லை?

சுரேஷ் குமார் – தே.மு.தி.க: சாத்தனூர் அணை பராமரிப்பின்றி உள்ளது. செஞ்சிக்கோட்டைக்கு, மாநில அரசு மூலம் அடிப்படை வசதிகள் செய்து, அதிகளவு சுற்றுலா பயணிகள் வரும் வகையில் மேம்படுத்த வேண்டும். கடந்த ஆட்சியில், சுற்றுலா பகுதிகளில் வாகன நிறுத்துமிடங்களுக்கு ஏலம் விடப்பட்டது. வாகனம் நிறுத்த அதிக கட்டணம் வசூலித்ததால், சுற்றுலா பயணிகளுக்கும், குத்தகைக்காரர்களுக்கும் இடையே பிரச்னைகள் ஏற்பட்டன. இதனால், பயணிகள் வரவே தயங்கினர். நியாயமான கட்டணம் வசூலிக்க வேண்டும். திருச்செந்தூர் கோவில் பணிகளில் வேகமில்லை.

அமைச்சர் சண்முகநாதன்: திருசெந்தூர் கோவிலில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் ஜெயலலிதா பணிகளை துவக்கினார். ஆனால், இதுவரை முடிக்காமல், கடந்த ஆட்சியில் இழுத்தடித்தனர். தற்போது பணிகளை துரிதப்படுத்தியதால், முடியும் நிலையில் உள்ளது. அனைத்து கோவில்களுக்கும் குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.

குத்தகைப் பற்றியுள்ள வேகம், கோவில் ஆக்கிரமிப்பில் இல்லாதது தெரிகிறது: சுரேஷ் குமார்: எங்களது தொகுதியில் கோவில் நிலம் ஒன்று, தனி நபருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. அவர் தனது சொந்த நிலம் போல, வணிக வளாகங்கள் கட்டி, கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார். கோவில் கோபுரத்தை விட, அவரது கட்டடம் உயரமாக உள்ளது.

அமைச்சர் சண்முகநாதன்: கடந்த ஆட்சியில் கோவில் நிலங்கள் தவறான வழியில் குத்தகைக்கு விடப்பட்டிருந்தால், அவற்றை கையகப்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்[10]. சில நிலங்களின் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவ்வாறு விவாதம் நடந்தது.

“மீண்டும் நான் வெற்றிபெற்றால் கோவில் நிலங்களில் குடியிருப்பவர்கள் அனைவருக்கும் பட்டா வழங்குவேன்”: தமிழகத்து நாத்திக அமைச்சர் பகுத்தறிவோடு பேசியது, “மீண்டும் நான் வெற்றிபெற்றால் கோவில் நிலங்களில் குடியிருப்பவர்கள் அனைவருக்கும் பட்டா வழங்குவேன்”, என்று திருவொற்றியூர் தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் கே.பி.பி.சாமி மார்ச் மாதம் திருவொற்றியூர் பஸ்நிலையம், ஜீவன்லால் நகர், மாணிக்கம் நகர், திரு நகர், பாரதி நகர் மற்றும் வடிவுடையம்மன் கோவில் சன்னதி தெருக்களில் தெருதெருவாக சென்று வாக்கு சேகரிக்கச் சென்றபோது வாக்களித்தார்[11]. ஆறு மாதங்கள் ஆகின்றன, அந்த பழமை வாய்ந்த திருவொற்றியூர் மக்கள் மற்ரும் தமிழக மக்கள், ஏன் இந்தியர்கள் இதை ஞாபகத்தில் வைத்திருக்கிறார்களா? செக்யூலரிஸத்துடன், “சர்ச்-மசூதி நிலங்களில் குடியிருப்பவர்கள் அனைவருக்கும் பட்டா வழங்குவேன்”, என்று பேசவில்லையே? ஆமாம், கோவில் நிலங்களில் கிருத்துவர்களும், முஸ்லீம்களே ஆக்கிரமித்துக் கொண்டு, வாங்கவும் செய்கிறார்களே?

திராவிடக் கட்சிகள் நாத்திகத்தைக் கடைப்பிடிப்பதால் கோவில் நிர்வாகம் செய்ய அவர்களுக்கு அருஜதை இல்லை: முதலில் இதை தமிழக ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும். குங்குமம்-விபூதி வைத்துக் கொண்டே அல்லது இல்லாமலேயோ நாத்திகம், பகுத்தறிவு, பெரியாரிஸம் பேசுபவர்கள் கோவில்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது என்பது கடந்த 60 ஆண்டு நாத்திக ஆட்சி தெள்ளத்தெளிவாக மெய்ப்பித்து விட்டது. ஆகவே, அவர்கள், உடனடியாக விலகி நிற்க்க வேண்டும், இல்லையென்றால் இருக்கின்ற  கோவில்களும் உருப்படாமல் போய் விடும். திருமூலர் சொன்னது நடந்து விடும்.

திராவிட கட்சிகள் பலவழிகளில் கோவில் நிலங்களைக் கொள்ளையடித்து வருகின்றன.

 1. இந்து அறநிலையத்துறைக்குப் பிறகு குடிசை மாற்றுவாரியம் மூலம்[12] கோவில் நிலங்களை ஆக்கிரமிக்க முயலும் நாத்திக அரசு!
 1. இப்பொழுதுள்ள ஆட்சியிலும் கொள்ளை தொடர்கிறது[13]. அதன் மர்மங்களை யார் விலக்குவார்கள் / விளக்குவார்கள்?
 1. மிரட்டப்படும் மடாதிபதிகள் – அதன் மூலம் அவர்களது / மடங்களது நிலம் அபகரிக்கப் படுவது[14].
 1. இந்து அறநிலையத் துறையே கோவில் நிலங்களைக் கொள்ளையடிப்பது[15].
 1. அறநிலைய மந்திரி ஒத்துப் போவது[16].

இப்படி அடுக்குக் கொண்டு போகலாம். அவர்கள் மாறா விட்டால் மக்கள் மாற்ற வேண்டும், மக்களும் அவர்களோடு ஒத்துழைத்தல் மக்களைத்தான் மாற்ற வேண்டும் அல்லது அவர்கள் தம்மையே மாற்றிக் கொள்ள வேண்டும், இல்லையென்றால், மாலிக்காபூர்,-ஔரங்கசீப் போன்று இவர்களே இருக்கின்ற கோவில்களை இடித்து விடலாம், ஒரேயடியாக பிரச்சினைகள் தீர்ந்து விடும்.

வேதபிரகாஷ்

01-09-2011


[1] தினமலர், முறைகேடாக குத்தகைக்கு விடப்பட்ட கோவில் நிலங்கள் கையகப்படுத்தப்படும், http://www.dinamalar.com/News_Detail.asp?Id=304950

[2] அதாவது “பிக்னிக்” ஏற்பாடு செய்ய பேசுகிறாரே தவிர, கோவிலைப் பற்றி பேசுவதாகத் தெரியவில்லை. அப்படி செய்தால், கோவில்கள் எப்பொழுதுமே திறந்து வைத்திருப்பார்களா அல்லது அதே மாதிரி ஆகம முறைகளை மீறி செயல்படுவர்களா?

[3] கோவில்களை சீரழிக்கின்றனரே, அதைப் பற்றி வெளிநாட்டவர் கவலைப் படமாட்டார்கல் போலும். கோவில் சிலைகளை, விக்கிரங்களை வெளிநாட்டவர்களுக்கு விற்க்கின்ரனரே, அதற்கு தமிழர்கள் வெட்கப்படவில்லையே?

[4] ஆமாம், இதுவும் தூக்குத் தண்டனை விவாதம் போல ஆகிவிட்டது.

[5] நக்கல் அடிக்கிறாரா இல்லை பெருமை பேசுகிறாரா என்று தெரியவில்லை, அம்மாவிற்குத் தெரிந்தால், அதோகதிதான்!

[6] அதென்ன அப்படி “பெண்கள் முன்னேற்றத்தை”ப் பற்றி இப்படி கவலை படுகிறார் என்று தெரியவில்லை. சினிமா எடுப்பதினால், பல பெண்களின் கற்பு தான் விலைபோகிறது, சமுதாயம் சீரழிகிறது. அதைத் தெரிந்தும் தெரியாதது போல பேசியுள்ளது வேடிக்கைத்தான்! ஒருவேளை, இவரே படங்களை எடுப்பார் போலும்!

[7] சேர-சோழ-பாண்டியர்கள் எல்கோரையும் வென்று விடுவார்கள் இவர்கள். அயல்நாட்டு சித்தாந்த்தை வைத்துக் கொண்டு செயல்படும், இவர்களது தாய்ப்பாற்றே வினோதமானது தான். ஆகையால் தான் இப்படி தாறுமாறாக பேசுகிறார் போலும்!

[8] அதாவது அவ்வாறு செய்யாதே, அவர்களுக்கே பட்டா போட்டுக் கொடுத்து விடு என்கிறார், தாராளப் பிரபு!

[9] https://atheismtemples.wordpress.com/2011/08/20/gingee-kothandaramar-temple-liberated-from-the-christians/

https://atheismtemples.wordpress.com/2011/08/21/gingee-temple-liberated-duties-of-hindus/

http://christianityindia.wordpress.com/2010/05/19/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-https://atheismtemples.wordpress.com/2010/02/08/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/

http://christianityindia.wordpress.com/2010/02/03/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%8A/

[10] இவர் என்ன செய்யப்போகிறார் என்று ஒன்றும் சொல்லவில்லை. தலையாட்டி அமைச்சர்கள் இப்படியிருந்தால், என்ன வேலை நடக்கும்?

[15] திராவிட ஆட்சியில் அவர்களுக்கு இதெல்லாம் கைவந்த கலை – “இந்து” அறநிலைத்துறையே அத்தகைய அநியாயத்தைச் செய்துள்ளது: இதோ இங்கு படிக்கவும்:

http://vedaprakash.indiainteracts.in/2008/08/27/tenants-of-mutt-and-temple-lands-seek-ownership-rights-the-tn-government-scam-to-grab-the-temple-lands/

இவ்வாறு விற்பது, சங்கம் உருவாக்குவது, கோர்ட்டுக்குச் செல்வது, இடைக்காலத் தடை வாங்குவது, காலம் கடத்துவது, அதற்குள் கட்டிடங்கள் கட்டி அனுபவிப்பது….இருக்கும் அதிகார வர்க்கமெல்லாம் நாத்திகவாதிகள்தாமே? எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை!

மாலிக்காஃபூரின் தஞ்சாவூரின் மீதான இரண்டாவது படையெடுப்பு!

செப்ரெம்பர்23, 2010

மாலிக்காஃபூரின் தஞ்சாவூரின் மீதான இரண்டாவது படையெடுப்பு!

மாலிக்காஃபூர் 1311ல் படையெடுத்தபோது, வீரப்பாண்டியன் எல்லாம் துண்டை காணோம், துணியைக் காணோம் என்று பெண்டாட்டிகளைக் கூட விட்டு-விட்டு ஓடியே போய் விட்டானாம். பெரியகோவில் மண்ணில் புதைந்து, மரங்கள் மறைத்த்கிருந்தது[1]. தெரிந்தவர்கள் மட்டும்தான் அங்கு சென்று வழிபட்டு வந்தனர். அவனுக்குப் பிறகு கருணாநிதிக்கு இதன் மெலே ஒரு கண். சிறுவயதில் அங்கு வந்து விளையாடுவாராம். இளைஞனாக வந்து தனது கவிதைத்தனத்தை சிற்பங்களைப் பார்த்து வளர்த்துக் கொண்டாரம். நாத்திகத்தில் ஊறியதால், அவருக்கு தெய்வீகம் தெரியவில்லையாம்[2]. இருப்பினும் ராஜராஜனின்மீது பொறாமை, எப்படியடா இத்தனை பெரிய கோவில் கட்டியுள்ளான் என்ற அதிசய கேள்வி உருத்துமாம். இப்பொழுது, தாமே ராஜாவாகி விட்டார். ஆனால், ராஜராஜனின் புகழையடைய கோவிலைக் கட்டவில்லை. பலகோவில்களை நாசமாக்குவதற்கு, சில கோவில்களை இடிப்பதற்கு சம்பந்தப்பட்டிருக்கிறார்[3]. கடைசியாக இப்பொழுது நுழைய ஆசைப்பட்டதால், கருணாநிதிக்காக தஞ்சை பெரிய கோவிலின் சுற்றுச்சுவர் உடைக்கபடுகின்றன என்று செய்திகள் வந்துள்ளன.

ராஜராஜன் பெயரை வைத்து எப்படி புகழ் பெறுவது? திராவிட அரசியல்வாதிகளுக்கு இதெல்லாம் சொல்லித் தரவேண்டுமா? “தில்லை நடராஜனையும், ஸ்ரீரங்கராதனையும் பீரங்கி வைத்து பிளப்பதென்னாளோ, அந்நாளே நன்னாள்” என்று முழக்கமிட்டு படையெடுத்தவர்கள் ஆயிற்றே? இப்பொழுது, இக்கோவிலைப் பிடித்துள்ளர்கள்! தஞ்சை பெரிய கோவிலின் 1,000வது ஆண்டு விழாவில், முதல்வர் உட்பட வி..பி.,க்கள், சிவகங்கை பூங்கா வழியாக உள்ளே வர வழி அமைக்கப்படுகிறது. இதற்காக, சுற்றுச்சுவர் உடைக்கப்பட்டு, பூங்கா செடிகள் அழிக்கப்படுகின்றன. தஞ்சை பெரியகோவில் 1,000வது ஆண்டு விழா, வரும் 22 முதல் 26ம் தேதி வரை நடக்கிறது. தமிழ் பல்கலையில் 24ம் தேதி, முதல்வர் கருணாநிதி பங்கேற்கும் ஆய்வரங்கமும், 26ம் தேதி மாலை, ஆயுதப்படை மைதானத்தில் முதல்வர் கருணாநிதி பங்கேற்கும் அஞ்சல் தலை வெளியீட்டு விழாவும் நடக்கிறது.

நாத்திகர்களுக்கு ஏன் இத்தகைய நம்பிக்கை: பதவி, ஆயுளுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் காரணமாக, பெரிய கோவிலின் பிரதான வாயிலான கேரளந்தான் வாயில் வழியாக, வி..பி.,க்கள் எவரும் வந்து செல்வதை விரும்புவதில்லை. இந்திரா காந்தி, சங்கர்தயாள் சர்மா, எம்.ஜி.ஆர்., உட்பட பலரை, இதற்கு சாட்சியாகக் கூறுவர். பெரிய கோவில் தீ விபத்து சமயத்தில், ஜி. கே. மூப்பனார் பிரதான வாயிலை தவிர்த்தார். முதல்வர் கருணாநிதி, சிவகங்கை பூங்கா வழியாக கோவிலுக்குள் வந்து, அதே வழியில் திரும்பினார். முதல்வர் உட்பட வி.ஐ.பி.,க்கள் பிரதான வாயில் வழியாக வராமல், சிவகங்கை பூங்கா வழியாக உள்ளே செல்ல ஏற்பாடு நடக்கிறது. அதற்காக சிவகங்கை பூங்கா நுழைவாயிலில் இருந்து தளம் அமைத்தல், பெரிய கோவிலுக்குள் நுழையும் பகுதியில் உள்ள சுவரை அகற்றி பாதை அமைத்தல், அவ்வழியில் உள்ள பூங்காவில் செடி அகற்றுதல் போன்ற பணி நடக்கிறது. இவர்கள், சிவகங்கை பூங்கா வழியாக நுழைந்து, மகா வராகி சன்னிதி மற்றும் தொல்லியல் ஆய்வுத்துறை கண்காட்சியகத்துக்கு அருகிலுள்ள வாயில் வழியாக உள்ளே நுழைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உலக மகா நாத்திகருக்கு ஏன் இப்படியொரு நம்பிக்ககை? பகுத்தறிவு பாசரையில் பிறந்து, பெரியார் பால் குடித்து, உலக மகா நாத்தினாகனாகி, வேண்டுமென்றால் ரம்ஜான்-நறமலான்–றமஷான் என்று விதவிதமான கஞ்சிக் குடித்து பெரியவராகி விட்ட முதறிஞர். அத்தகைய பகுத்தறிவு அவருக்கு, எதிலும் நம்பிக்கையில்லை, அதாவது மூட நம்பிக்கைக்குப் பேச்சேயில்லை, அப்படி வளர்ந்தவர்! பிறகுக் கூட இப்படியொரு நம்பிக்கையா? இது மூட நம்பிக்கையா, மட நம்பிக்கையா, என்னத்தில் சேர்த்தி? அல்லது வீரமணி சொல்லும் முடநாற்ற நம்பிக்கையா?

திருமூலரை மறுபடியும் ஏமாற்றும் கருணாநிதி: பெரிய கோவில் வளாகத்தில், ஒரு சிறிய கல்லை நகர்த்தி வைக்கக்கூட இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை அனுமதி பெற்றே செய்யப்படும். ஆனால், இப்படி சுவரை இடிப்பது கண்டு, பெரிய கோவிலுக்கு அடிக்கடி வந்து செல்வோர் மத்தியில் இது வியப்பை ஏற்படுத்தி உள்ளதாம். ஆனால், என்ன, திருமூலரையே எமாற்றியவருக்கு, தொல்துறையை எமாற்ற முடியாதா என்ன? பாவம் அந்த சத்தியபாமா, ஸ்ரீதர் போன்றோர் என்ன செய்வர்? ஓய்விற்கே ஓய்வு கொடுக்கமுடியுமா? அதாவது சட்டத்தின் முன்னேயே சட்டம் பேசமுடியுமா? பாவம், திருமூலர், திருமந்திரத்தை மாற்றித்தான் எழுத வேண்டும். அதுமட்டுமா, “தில்லை நடராஜனையும், ஸ்ரீரங்கராதனையும் பீரங்கி வைத்து பிளப்பதென்னாளோ, அந்நாளே நன்னாள்” என்றவர்களும் இவர்கள் தானே, எப்படி அவர்கள் பிளப்பார்கள்? கோவிலுக்குள் நுழைந்து தானே பிளப்பார்கள்? அதனால்தான், முன்னோட்டமாக, மதில்சுவர்கள் பிளக்கப்படுகின்றன போலும்!

நாத்திக நம்பிக்கைகள்: வயது 80ஐத் தாண்டியவர் ஆயுசு பற்றிக் கவலைப்படவேண்டுமா? ஐந்து மூரை முதல்வராக இருந்து, ஆறாவதாகவும் தான் தான் முதல்வர் என்று தீர்மானம் செய்த பிறகு, பதவியைப் பற்றி ஏன் கவலைப்படவேண்டும்?


[1] ஆதாரம்: இந்திய தொல்துறை புகைப்படத்தைப் பார்க்கவும்.

[2] இதையெல்லாம் கருணாநிதியே எழுதியுள்ளார். அத்தகைய பகுத்தறிவு அவருக்கு, எதிலும் நம்பிக்கையில்லை, அதாவது மூட நம்பிக்கைக்குப் பேச்சேயில்லை, அப்படி வளர்ந்தவர்!

[3] வேதபிரகாஷ்,,

http://vedaprakash.indiainteracts.com/2008/07/29/karunanidhi-the-auranazeb-in-action-demolishes-a-temple-mantap/

தமிழக கோவில்களில் பூஜை கட்டணம் ஐந்து மடங்கு உயர்வு!

ஓகஸ்ட்8, 2010

தமிழக கோவில்களில் பூஜை கட்டணம் ஐந்து மடங்கு உயர்வு

தமிழக கோவில்களில் வருமானத்தை பெருக்க மக்களிடம் எதற்கு கொள்ளை? தமிழக கோவில்களில், வருமானத்தை பெருக்க, பூஜை கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தமிழக கோவில்களில், இரண்டு ரூபாயாக இருந்த அர்ச்சனை கட்டணம், ஜூலை 9ம் தேதி முதல் ஐந்து ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சகஸ்ரநாம அர்ச்சனை, புதுக்கணக்கு பூஜை உள்ளிட்ட அனைத்து பூஜை கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளன.

பூஜை கட்டணம் உயர்வு செய்தி இந்து முன்னணி மூலம் வெளியிடுவது ஏன்? எல்லாவற்றிற்கும் கருணாநிதி முந்திக் கொண்டு வரும் போது, இதற்கு மட்டும் ஏன் இந்து முன்னணி வரவேண்டும்? திமுகவிற்கும், இந்து முன்னணிக்கும் ஏதாவது உடன்படிக்கை ஏற்பட்டு விட்டதா? நிலுவையில் இருக்கின்ற வாடகை, குத்தகை……………….இத்யாதி பாக்கிகளை வசூல் செய்தாலே கோடிகள் கிடைக்கும். அப்படியிருக்கும்போது, சாதாரண மக்களை சுரண்ட இப்படி கருணாநிதி இறங்கியுள்ளது, நிச்சயமாக இந்துக்களுக்கு தொந்தரவு செய்யத்தான் என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை.

இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் பூசப்பன் கூறியதாவது: அர்ச்சனை கட்டணம் இரண்டு ரூபாயிலிருந்து ஐந்து ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஐந்து ரூபாயாக இருந்த இரு சக்கர வாகன பூஜை டிக்கெட் 30, 10 ரூபாயாக இருந்த நான்கு சக்கர வாகன பூஜை 50, 15 ரூபாயாக இருந்த சகஸ்ரநாம அர்ச்சனை 50, 25 ரூபாயாக இருந்த புது கணக்கு பூஜை 100 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அறிவிப்பு வெளியிடாமல் திடீரென கட்டணம் ஐந்து மடங்கு உயர்த்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. மீண்டும் பழைய கட்டணத்தையே நிர்ணயிக்க வேண்டும். இது தொடர்பாக விரைவில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு பூசப்பன் கூறினார்.

தமிழக கோவில்களில் பூஜை கட்டணம் 5 மடங்கு உயர்வு, ஆகஸ்ட் 07,2010

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=56381&Print=1

தமிழகத்தில் ஒரு நாளைக்கு ஒரு கோவிலில் கலசம், நகை, பணம் முதலியவை கொள்ளையடிக்கப்படுகின்றன (2)

ஓகஸ்ட்3, 2010

தமிழகத்தில் ஒரு நாளைக்கு ஒரு கோவிலில் கலசம், நகை, பணம் முதலியவை  கொள்ளையடிக்கப்படுகின்றன (2)

சாமி சிலைகளை திருடி விற்க முயன்ற மூவர் கைது:

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=53938

Idol-theft-regulat-in-TN

Idol-theft-regulat-in-TN

சென்னை, ஆகஸ்ட் 03,2010: மதுரை, நெல்லை பகுதிகளில் திருடிய சாமி சிலைகளை விற்க முயன்றவர்களை சென்னையில் போலீசார் கைது செய்தனர். சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சிலை திருட்டு தடுப்புப்பிரிவு தனிப்படைக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, எழும்பூர் ரயில் நிலையத்திற்கு எதிரேயுள்ள பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படி நிற்றுக் கொண்டிருந்த மருதுபாண்டி, ரவிச்சந்திரன் கைப்பைகளை சோதித்தனர். அதில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் திருடப்பட்ட ஒரு அடி அம்மன் உலோக சிலை மற்றும் கேரளாவிலிருந்து கொண்டு வந்த பள்ளிகொண்ட பெருமாள் சிலை இருந்தது. கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில் பிடிப்பட்ட நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணனிடமிருந்து ஒன்றரை அடி உயரமுள்ள புத்தர் சிலை கைப்பற்றப்பட்டது. இந்த மூவரும் கைது செய்யப்பட்டு சிலைகள் மீட்கப்பட்டன. பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள இச்சிலைகளை விற்க முயன்ற புரோக்கர்களை கைது செய்ய தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரு நாளைக்கு ஒரு கோவிலில் கலசம், நகை, பணம் முதலியவை கொள்ளையடிக்கப்படுகின்றன!

ஜூலை21, 2010

தமிழகத்தில் ஒரு நாளைக்கு ஒரு கோவிலில் கலசம், நகை, பணம் முதலியவை கொள்ளையடிக்கப்படுகின்றன

 

நாத்திக ஆட்சியில் நடக்கும் இவை திட்டமிட்ட நடப்பைவையா? நாத்திகர்கள் வளர்ந்துள்ளதால், இப்படி கோவில் நகை மற்றும் விலையுயர்ந்த பொருள் எதுவாக இருந்தாலும், திருடுவது, கொள்ளயடிப்பது என்பது தினம்-தினம் நடக்க்கும் திழாலாகி விட்டது. அவற்றில் குறிப்பிட்ட அமைப்பு, முறை காணப்படுவதால், அத்தகைய கொள்ளையர்கள் திட்டமிட்டு செய்கிறார்களா என்ற சந்தேகம் எழுகின்றது.

 1. கோவில் ஆட்களே சம்பந்தப்படுவது. இவர்கள் எல்லாமே ஆளும் கட்சிக்க்காரர்களாக இருக்கின்றனர், அல்லது உள்ளூர் எம்.எல்,ஏ, எம்.பி, எம்.எல்.சி, வட்டச்செயலாளர்………….போன்ற நிலையில் உள்ளனர்.
 2. அறநிலையத்துறை ஆட்களே ஈடுபடுகின்றனர் / சம்பந்தப் பட்டுள்ளனர்.
 3. திருடியவர்களே, மறுபடியும் திருடுகின்றனர்.
 4. புதியதாக கும்பாபிஷேகம் நடந்தவுடன் திருடப்படுகின்றது.
 5. புதியதாகப் புரளிக் கிளப்பிவிட்டுத் திருடுகின்றனர்.
 6. உண்டி எண்ணப்படுகின்ற ஒரு-சில நாட்களுக்கு முன்பு உண்டியல் உடைக்கப் பட்டுத் திருடப் படுகிறது.
 7. காவலாளி இல்லாத கோவிலாகத் தேர்ந்தெடுக்கப்படுவது.
 8. உண்மை நகைகளை எடுத்துவிட்டு, பொலிநகைகளை வைப்பது.
 9. அம்மன் தாலிகளை, நகைகளைத் திருடுகின்ற கூட்டம் – பொதுவாக, கிராமம், நகர்புறங்களில் முன்னரெல்லாம், அம்மன் கோவிலில் எந்தர்த் திருடனும் கை வைக்க மாட்டான். ஆனால், இப்பொழுது அதிகமாவதால், குறிப்பிட்டக் கூட்டம் அல்லது அத்தகைய மனப்பாங்குள்ள ஆட்கள் / கூட்டம் ஈடுபடுவது தெரிகிறது.

10.  சில நேரங்களில் கவலாளியைக் கொல்லவும் தயுஅங்குவதில்லை. இது திட்டம் போட்டு செய்யப்படும் கொலை, கொள்ளை என்றாகிறது.

 

புதுக்கோட்டை அருகே கோவில் உண்டியல் உடைத்து கொள்ளை (ஜூலை 21,2010)[1]: புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் பழமை வாய்ந்த பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு நாள்தோறும் மூன்று கால பூஜைகள் நடக்கிறது. இதில், இலுப்பூர் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமப்பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசிப்பது வழக்கம். நேற்றுமுன்தினம் இரவு கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கருவறை முன்பிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கோவில் அர்ச்சகர் அய்யாவு கொடுத்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்துள்ள இலுப்பூர் போலீஸார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இரண்டு கோவில்களில் தங்கம், வெள்ளி காணவில்லை
கோவில் நிருவாக அதிகாரி இடை நீக்கம்
[2]: சேலம், ஜூலை 21_ சேலத்தில் 2 கோவில்களில் தங்கம்வெள்ளி காணாமல்போன பிரச் சினையில் எல்லைப் பிடாரியம்மன் கோவில் நிருவாக அதிகாரியை தற்காலிக பணி நீக்கம் செய்து மாநில இந்து சமய அற நிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டார். சேலம் மாநகரில் செரிசாலையில் உள்ள எல்லைப்பிடாரியம்மன் கோவில், சின்னக்கடை வீதியில் உள்ள சின்னமாரியம்மன் கோவில், அயோத்தியாபட்டணம் ராமர் கோவில் உள்பட 6 கோவில்களுக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் நிருவாக அதிகாரியாக சந்திரபிரகாஷ் இருந்து வருகிறார். எல்லைப்பிடாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் உண்டியல் மூலம் காணிக்கையாக கொடுக்கும் தங்கம், வெள்ளி போன்றவை வங்கி லாக்கரில் வைத்து பாதுக்காக்கப்படுவது வழக்கம். அதற்கான சாவி கோவில் நிருவாக அதிகாரி வசம் இருப்பது வழக்கம். இந்த நிலையில் கோவில் நிருவாக அதிகாரி மற்றும் அறங்காவலர் குழுவினர் சமீபத்தில் கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக கொடுத்துள்ள தங்கம் மற்றும் வெள்ளி இனங்களை நகை பதிவேட்டில் உள்ளவாறு சரியாக இருக்கிறதா? என சரிபார்த்தனர். அப்போது எல்லைப்பிடாரி அம்மனுக்கு சொந்தமான 36 பவுன் தங்கம் மற்றும் 580 கிராம் வெள்ளி குறைந்தது[3].

சின்ன மாரியம்மன் கோவிலிலும் கொள்ளை: இதுபோல சேலம் சின்னக்கடை வீதியில் உள்ள சின்ன மாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான தங்கம் மற்றும் வெள்ளியை சரி பார்த்தபோது அங்கும் 12 பவுன் தங்கம் காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட உதவி ஆணை யாளர் வரதராஜன் மற்றும் இணை ஆணை யர் ராஜா ஆகியோரிடம் புகார் தெரிவிக்கப்பட் டது. எல்லைப்பிடாரியம்மன் கோவில், சின்ன மாரியம்மன் கோவிலில் உள்ள தங்கம், வெள்ளி காணா மல்போனது குறித்து சேலம் நகர குற்றப்பிரிவு காவல்துறை யில் கோவில் நிருவாக அதி காரியான சந்திரபிரகாஷ் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் காவல் நிலைய ஆய்வாளர் கபிலன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இது தொடர்பாக புகார் கொடுத்த நிருவாக அதிகாரி சந்திரபிரகாஷ் மற்றும் கோவில் நிருவாக அலுவலக உதவியாளர்களிடம் புலன் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தங்கம், வெள்ளியை பாதுகாக்கும் முழு பொறுப்பையும் நிருவாக அதிகாரியே கவனித்து வந்தார் என விசாரணையில் தெரியவந்தது.

கோவில் அதிகாரிகளே உடைந்தையா? காவல்துறையினர் விசாரணை ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் வேளையில், சென்னையில் உள்ள மாநில இந்து அறநிலையத்துறை ஆணையாளர் பி.ஆர்.சம்பத், சேலம் எல்லைப்பிடாரியம்மன் கோவில் நிருவாக அதிகாரி சந்திரபிரகாஷ் மீது துறை சார்பு நடவடிக்கையாக அவரை தற்காலிக நீக்கம் செய்து நேற்று உத்தரவு பிறப்பித்தார்.கோவில் சொத்தான தங்கம், வெள்ளியை பாதுகாக்கும் பொறுப்பில் கவனக்குறைவாக செயல்பட்டதால் இத்தகையை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. அதே வேளையில் பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த தங்கம்வெள்ளி எங்கே? போனது. அதற்கு காரணமானவர்களில் இன்னும் சிலர் இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினரின் புலன் விசாரணையும் தொடர்ந்து நடந்து வருகிறது.

17 Jul 2010 சிவன் கோவிலில் கலசங்கள் திருட்டு பாளையங்கோட்டையை அடுத்த மேலப்பாட்டம் கிராமத்தில் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது.
www.dailythanthi.com/article.asp

 

நெல்லை மாவட்டத்தில் பரபரப்பு 2 கோவில்களின் கோபுர கலசங்கள் கொள்ளை ; மர்மக் கும்பல் கைவரிசை ஜூலை.17, 2010: நெல்லை, ஜூலை. 16- பாளை அருகே உள்ள மேலப்பாட்டம் கிராமத்தில் புகழ்பெற்ற பழமையான சிவன் கோவில் உள்ளது. சுமார் 300 ஆண்டுகளுக்கும் முந்தைய பாரம்பரியமான இந்த கோவிலின் கோபுரத்தில் 3 கும்ப கலசங்கள் இருந்தது. இந்த கோவிலில் அதிக சக்தி இருப்பதால் வேண்டியது நடக்கும் என்று ஏராளமான பொது மக்கள் தினசரி சென்று சாமி தரிசனம் செய்து வந்தனர். பத்மநாபபட்டர் தினமும் பூஜை செய்து பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கி வந்தார்.  நேற்று இரவு பூஜை முடிந்து பத்மநாப பட்டர் கோவிலை சுற்றி வந்து ஆய்வு செய்தார். அப்போது கோவிலின் மேல்புறம் பளபளப்பாக மின்னும் கோபுர கலசம் இல்லாமல் வெறுமையாக காட்சி அளித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கோவில் நிர்வாக அதிகாரி முத்துராமனுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவர் விரைந்து வந்து ஊழியர்கள் மூலம் கோவிலின் மேல் பகுதியில் ஏறி ஆய்வு செய்தார். அப்போது ஒரு மர்மக் கும்பல் கோவில் மேல் ஏறி 3 கோபுர கலசத்தையும் அப்படியே பெயர்த்து எடுத்து கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. இந்த கும்ப கலசத்தின் மதிப்பு தற்போது பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து நிர்வாக அதிகாரி முத்துராமன் பாளை தாலுகா போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், சப்- இன்ஸ் பெக்டர்கள் சண்முகவேல், செந்தட்டியா பிள்ளை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இடிதாக்கிய பழமையான கோபுர கலசம் இரிடியமாக மாறி சக்தி வாய்ந்ததாக மாறிவிடும் என்று புரளி, கொள்ளை: இதுபோல தென்காசி அருகே உள்ள கீழப்புலியூர் குலசேகரநாதர் கோவிலிலும் நேற்று சக்தி வாய்ந்த 1 கோபுர கலசம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் சமீபத்தில்தான் கும்பா பிஷேகம் நடத்தப்பட்டு கோபுர கலசத்துக்கு தங்க முலாம் பூசி உள்ளனர். இந்த நிலையில் இந்த கோபுர கலசமும் கொள்ளை நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மிகவும் பழமையான கோபுர கலசத்தில் அபூர்வ சக்தி இருப்பதாக கருதி இந்த கொள்ளை சம்பவம் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் ஒரு கும்பல் இடிதாக்கிய பழமையான கோபுர கலசம் இரிடியமாக மாறி சக்தி வாய்ந்ததாக மாறிவிடும் என்று பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்டு வந்தது.

இசக்கி அம்மன் கோவில் உண்டியல் கொள்ளை: அந்த கும்பலைச் சேர்ந்த வர்கள் தான் தற்போது கோபுர கலசங்களை கொள்ளை அடித்துச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ராகார்க் மேற்பார்வையில் கோபுர கலச கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. இவர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள தென்னிமலையில் முப்பந்தல் இசக்கி அம்மன் கோவில் உள்ளது. சம்பவத்தன்று இங்கு வழக்கம் போல் பூஜையை முடித்துவிட்டு சென்று விட்டனர். நள்ளிரவு மர்மநபர் அந்த கோவிலுக்குள் புகுந்தான். அங்கு இருந்த உண்டியலை உடைத்து பணத்தை அள்ளியதோடு அம்மனுக்கு வைத்திருந்த சூலாயுதத்தையும் திருடி சென்றுவிட்டான். அதே வேளையில் அருகில் இருந்த உய்க்காட்டு சுடலை கோவிலிலும் உண்டியல் உடைத்து பணம் திருட்டு போனது. இந்த சம்பவங்கள் தொடர்பாக தென்னி மலையை சேர்ந்த வீரபெருமாள் (69), மாரியப் பன் ஆகியோர் நாங்குநேரி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி அருகே 2 கோவில்களில் நகை உண்டியல் கொள்ளை[4] ஜூலை 14, 2010: கும்மிடிப்பூண்டி அடுத்து உள்ளது தம்புரெட்டிபாளையம் இங்கு பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. நேற்று நள்ளிரவு இந்த கோவிலுக்கு வந்த கொள்ளையர்கள் முதலில் பின்பக்கமாக கரு வறையையொட்டி உள்ள சுவரை உடைக்க முயற்சி செய்தனர். அது பலன் அளிக்காததால் கோவிலின் முன்பக்க இரும்பு கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் கோவில் வனா கத்தில் உள்ள பழங்கால ராட்சத மரக்கதவின் பூட்டை உடைத்து கருவறைக்குள் புகுந்தனர். அங்கு அம்மன் கழுத்தில் கிடந்த தாலி சரடு, செயின், காப்பு போன்ற 10 பவுன் நகைகளையும், வெள்ளி பொருட்களையும் அள்ளிச் சென்றனர். இது தவிர கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த ரொக்க பணம் மற்றும் சில்லறை காசுகளை யும் அள்ளிச் சென்றனர்.

நத்தம் கிராமத்தில் எல்லையம்மன் கோவிலும் கொள்ளை: இக்கோவிலின் அருகே 100 மீட்டர் தொலைவில் நத்தம் கிராமத்தில் எல்லையம்மன் கோவில் உள்ளது. இங்கும் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து ரொக்கப்பணம் மற்றும் சில்லறை காசுகளை அள்ளிச் சென்றனர். 2 கோவில்களிலும் கொள்ளை போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும். ஒரே நாள் இரவில் அடுத் தடுத்து 2 அம்மன் கோவில் களில் கொள்ளை போன சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது. கடந்த 2 வருடத்திற்கு முன்னர்தான் தம்பிரெட்டிபாளையம் கிராமத்தில் உள்ள அங் காள பரமேஸ்வரி கோவி லில் கொள்ளை சம்பவம் நடந்தது. அப்போது 13 பவுன் நகையை கொள்ளை போனது குறிப்பிடத் தக்கது. கும்மிடிப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

சோழிங்கநல்லூர் அருகே கோவில் கலசம் கொள்ளை [5]ஜூலை.12, 2010: திருவான்மியூர், ஜூலை. 12- சென்னை சோழிங்கநல் லூர் அடுத்த செம்மஞ்சேரி ராஜீவ் காந்தி சாலை பழத்தோட்டம் பகுதியில் ஸ்ரீநிவாச பெருமாள்கோவில் உள்ளது. நேற்று இரவு 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் ஆட்டோவில் அங்கு வந்தது. அவர்கள் மதில்சுவர் ஏறி குதித்து கோவிலுக்குள் சென்றனர். பின்னர் பூட்டை உடைத்து கோவிலுக்குள் புகுந்தனர்.  அங்கிருந்த கோவில் கலசம், டி.வி.டி.பிளேயர் மற்றும் பொருட்களை கொள்ளையடித்தனர். அத்தனை பொருட்களையும் கோணிப்பையில் கட்டி ஆட்டோவில் ஏற்றினார் கள். பின்னர் மீண்டும் கோவிலுக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது செம்மஞ்சேரி போலீசார் ரோந்து சென்று கொண்டி ருந்தனர். இதனால் கொள்ளை யர்கள் 4 பேரும் மதில்சுவர் ஏறி குதித்து ஆட்டோவில் தப்பினார்கள்.

அய்யனார் கோவிலில் கொள்ளை, ஜூலை. 11, 2010[6]: ஒரத்தநாடு- ஒரத்தநாடு அருகே பெருமங்கல கோவில் கீழையூரில் அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மட்டுமே பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு பூஜை செய்ய வந்தபோது கோவிலில் பொருட்கள் திருட்டு போனதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதில் பூஜை பொருட்கள் மற்றும் குத்து விளக்கு வெண்கல பொருட்கள் என சுமார் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போனது. இதுகுறித்து பாப்பாநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

சூளகிரி அருகே மாரியம்மன் கோவிலில் உண்டியல் உடைத்து கொள்ளை[7] ஓசூர், ஜூலை. 10, 2019 (சனிக்கிழமை): சூளகிரி அருகே உள்ள எலசேப்பள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும், 50-க்கும் மேற்பட்ட பல்லக்கு உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த கோவிலுக்கு சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திரளாக வந்து செல்வார்கள். காணிக்கை பணமும் உண்டியலில் அதிகளவில் சேரும். இந்நிலையில் நேற்று நள்ளிரவு மர்மநபர்கள் யாரோ கோவிலின் உண்டியலை உடைத்து கொள்யைடித்து சென்று விட்டனர். இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதிராம்பட்டினத்தில் துணிகரம் பெருமாள் கோவிலில் நகை கொள்ளை (ஜூன்.26, 2010)[8]:  பட்டுக்கோட்டை, – தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டினம் உள்ளது. இங்கு பிரசித்திபெற்ற ரெங்கநாதர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பூசாரி பூஜையை முடித்து விட்டு பூட்டி விட்டு சென்றார். பின்னர் இன்று காலை வந்து பார்த்த போது கோவிலில் இருந்த பொருட்கள் கொள்ளை போய் இருந்தது.  இதை கண்டு பூசாரி அதிர்ச்சியடைந்தார். கோவில் கருவறை அருகே இருந்த 80 கிலோ எடை கொண்ட வெண்கல விளக்கு, 2 அடி குத்து விளக்கு மற்றும் அம்பாள் கழுத்தில் கிடந்த 1 பவுன் தாலி உள்பட பல பொருட்கள் திருட்டு போய் இருந்தது. இதன் மதிப்பு ரூ. 50 ஆயிரம் ஆகும். இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் ஜெயராமன் அதிராம் பட்டினம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் நாராயணசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அதிராம்பட்டினத்தில் பெருமாள் கோவிலில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவில்கலசம்திருட்டு[9] ஜூன் 16, 2010: அரியலூர்: குழுமூர் பெருமாள் கோவில் கலசத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, குழுமூர் கிராமத்திலுள்ள வரதராஜ பெருமாள் கோவிலின் தாயார் சன்னதியிலுள்ள கோபுர கலசம் திருட்டு போயுள்ளது. இரண்டடி உயரமும், மூன்றரை கிலோ எடையும் கொண்ட இந்த வெண்கல கலசம் திருட்டு போனது குறித்து, கோவில் நிர்வாக அலுவலர் மணி கொடுத்த புகாரின் பேரில், செந்துறை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கண்டமானடி கோவிலில் திருட்டு Dinamalar

23 Jun 2010 கண்டமானடி கோவிலில் திருட்டு. அதிகம் படித்தவை கோவிலில் புகுந்த மர்ம ஆசாமிகள் கோவில் கலசத்தை திருடிச் சென்றனர்.

சிதம்பரம் அருகே கோவில் கலசம் திருட்டு

13 Jan 2010 சிதம்பரம் அருகே கோவில் கலசம் திருட்டு. சிதம்பரம் : சிதம்பரம் அருகே கோவில் செப்பு கலசங்கள் திருடிய மர்ம ஆசாமியை
cuddalore-news.blogspot.com/…/blog-post_5697.html

ஈரோடுகோவிலில்கோபுரகலசம்திருட்டு[10] ஜூன் 9, 2010: ஈரோடு: ஈரோடு அக்ரஹாரம் வீதியில் பழமை வாய்ந்த பெருமாள் ஐயர் கோயில் உள்ளது. கோவில் கோபுரக் கலசம் நேற்று காணாமல் போனது. கோவில் நிர்வாகி முரளி கூறியதாவது: இக்கோவில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. நாள்தோறும் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறந்து, இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படும். இரண்டாண்டுக்கு முன் இதே கோவிலில் விமானக் கலசம் திருட்டு போனது. திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருடனை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மே 15ம் தேதி அக்ஷய திருதியையன்று கோவில் விமானக் கலசம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து டவுன் போலீஸாருக்கு புகார் செய்துள்ளோம். திருட்டுபோன கலசம் சுத்தமான செம்பாலானது. இதன் மதிப்பு 7,000 ரூபாய் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். எனினும் டவுன் போலீஸார் இதுபற்றி வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை.

நாமக்கல் கோவிலில் கொள்ளை[11], ப.வேலூர் :மே 22, 2010:பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் உண்டியலை உடைத்து, ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் அருகே பாண்டமங்கலத்தில் உள்ள பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவிலில், நேற்று காலை கோவில் துப்புரவு பணியாளர் சுப்ரமணி, சுத்தம் செய்ய வந்தார்.அப்போது, கோவில் பூட்டு உடைக்கப்பட்டு, கோவில் வளாகத்தில் இருந்த உண்டியலும் மாயமாகியிருந்தது. இதை, கோவில் அர்ச்சகர் ஸ்ரீராம், அலுவலர் சிவசண்முகமிடம், சுப்ரமணி தெரிவித்தார். கோவில் அலுவலர் சிவசண்முகம், போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தினர். கைரேகை பதிவு செய்யப்பட்டது. கோவிலில் திருடப்பட்ட உண்டியல், கோவிலுக்கு பின்புறம் வீசப்பட்டிருந்தது. அதில் இருந்த நகை, பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. உண்டியலில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் இருந்திருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

வேதபிரகாஷ்

21-07-2010


[1] தினமலர், புதுக்கோட்டை அருகே கோவில் உண்டியல் உடைத்து கொள்ளை, ஜூலை 21,2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=44176

[2] http://www.viduthalai.periyar.org.in/20100721/news13.html

[3] http://www.dailythanthi.com/article.asp?NewsID=581642&disdate=7/21/2010&advt=2

[4] மாலைமலர், http://www.maalaimalar.com/2010/07/14125553/gold-robbery-in-Gummidipoondi.html

[5] மாலைமலர், http://www.maalaimalar.com/2010/07/12131716/robbery-in-temple.html

[6] மாலைமலர் நாளிதழ் , சென்னை 21-07-2010 (புதன்கிழமை)

http://www.maalaimalar.com/2010/07/11134707/temple.html

[7]மாலைமலர்,  http://www.maalaimalar.com/2010/07/10161958/mariamman-temple.html

[8] மாலைமலர், சென்னை 26-06-2010 (சனிக்கிழமை), http://www.maalaimalar.com/2010/06/26160958/gold-robbery-in-tanjore.html

[9] http://thinamalar.net/News_Detail.asp?Id=20089

[10] http://www.dinamalar.com/News_Detail.asp?Id=15488

[11] தினமலர், http://www.dinamalar.com/News_Detail.asp?id=7828