Archive for the ‘எம்.ஜி.ஆர்’ Category

திராவிட கழகத்தினர், நாத்திகர்கள், இந்துவிரோதிகள் கோவில் இடங்களில் நுழைவதே வேவு பார்ப்பதற்கு, “ஔரங்கசீப் வேலை” செய்வதற்கு என்று இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டாமோ?

செப்ரெம்பர்7, 2013

திராவிட கழகத்தினர், நாத்திகர்கள், இந்துவிரோதிகள் கோவில் இடங்களில் நுழைவதே வேவு பார்ப்பதற்கு, “ஔரங்கசீப் வேலை” செய்வதற்கு என்று இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டாமோ?

Raghavendra Brindavan attacked - Rama idol uprooted and thrown

நாத்திகவாதம் பேசுபவர்களுக்கு கோவில்களில் நிகழ்ச்சி நடத்த தடை[1]: இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ், 38 ஆயிரத்துக்கும் அதிகமான கோவில்கள் உள்ளன. இவற்றில், ஆண்டு வருமானம், 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக உள்ள கோவில்கள் எண்ணிக்கை, 234.கோவில்களுக்கு, சொந்தமாக திருமண மண்டபங்கள், பொது நிகழ்ச்சிக்கான மண்டபங்கள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்படுகின்றன. இதில், நிகழ்ச்சிகள் நடத்த எந்த கட்டுப்பாடும் இல்லை. கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்களுக்கு, தமிழகத்தில் உள்ள, கோவில் நிலங்களை வாடகைக்கு கொடுப்பதற்கும், மண்டபங்களில் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்குவதற்கும், தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்படி செய்தி வர, உடனே அதனை அப்படியே “கட்-அன்ட்-பேஸ்ட்” செய்து இணைதளத்தில் பரப்பியிருக்கிறார்கள்.

DK attacked Ayodhya mantap with petrol bombs

பெரியார் திடல் அரங்கத்தில் எல்லாமே நடைபெறுகிறதே: பகுத்தறிவு பகலவனின் “பெரியார் திடலில்” அவரது சமாதியோடு, ஒரு அரங்கமும் இருக்கிறது. அதில் எல்லாவிதமான கூட்டங்களும் நடைபெறுகின்றனவே? கிறிஸ்தவ ஆவிகள் எழுப்பும் கூட்டங்களினின்று, திருமணங்களும் நடைபெறுகின்றன. வழக்கம் போல, இனமான வீரர் வீரமணி இந்துவிரோத தூஷண சொற்பொழிவுகலும் செய்து கொண்டிருப்பார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அனைத்துலக நாத்திக மாநாடும் நடந்தது. ஆனால், இந்துக்களும் அங்கு  திருமணங்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனை முரண்பாடணென்பதா அல்லது வீட்டிற்கு அருகில் அரங்கம் இருக்கிறது, அதனால் நடத்துகிறோம் என்ற வாதத்தை ஏற்றுக் கொள்வதா?

A devotee just started crying - that was all he could do

கோவில்களில் அண்ணாதுரை திவசத்திற்குக் கூட சாப்பாடு போடப்படுகிறது: கோவில்களில் நல்ல நாட்களில் மட்டுமல்ல, மனிதன் இறந்த நாளில் கூட சாப்பாடு போடும் நிகழ்சி நடந்து வருகிறது. முன்பு, இந்து முன்னணி இதனை எதிர்த்து, ஒரு குறும்புத்தகத்தை வெலியிட்டது. ஆனால், திராவிட கட்சிகள் மாறி-மாறி ஆட்சி செய்து வரும்போது, இவையெல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பகுத்தறிவு-நாத்திகவாதம் பேசும் முதலமைச்சர் மற்றும் அவ்வாரில்லாத முதலமைச்சர் அல்லது இப்பொழுது போல “பார்ப்பன” முதலமைச்சர் என்று யாரிருந்தாலும், இவையெல்லாம் நடப்பதைத் தடுக்கமுடியாது. முன்னாள் முதல்வரும் திமுக நிறுவனருமான பேரரிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் தமிழக அரசு கோயில்களில் சமபந்தி போஜனம் நடத்துவதற்கு இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் கண்டனம் தெரிவித்துள்ளார்[2]. “அண்ணாதுரை ஆழ்வாரோ, நாயன்மாரோ அல்லது இறையடியாரோ இல்லை. அவர் வாழ்நாள் எல்லாம் இறை நம்பிக்கைக்கு எதிராக நாத்திகம் பேசியவர். அவரது பிறந்தநாள், நினைவுநாளில் சமபந்தி போஜன விழாவை முன்னாள் முதல்வர் கருணாநிதி தந்திரமாக இந்துக் கோவில்களின் தலையில் கட்டி, ஆலயத்தில் நாத்திகத் தலைவருக்கு விழா எடுக்க வைத்தார், இதனை எதிர்த்து இந்து முன்னணி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. அண்ணாதுரைக்கு திவசம் செய்வதானால் அதன் செலவை அவரால் உருவான, அவரது புகழ்பாடும் கழகங்களோ, அவரால் பயனடைந்தவர்களோ ஏற்க முன்வரட்டும், அதற்கு பதில் ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல, இந்து ஆலயங்கள் அரசின் பிடியில் இருப்பதால் அதிலிருந்து செலவு செய்வது அடாவடியானது. அவரது பிறந்த நாள், இறந்த நாளுக்கு ஆலயத்திலிருந்து ஏன் செலவு செய்ய வேண்டும்? இத்தகைய விழாக்களை ஆலயத்தின் மீது திணிப்பதைக் கைவிட முதல்வரை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது”, என்று கூறியுள்ளார் ராம.கோபாலன்[3]. சுதந்திநாள் தினத்தில் சாப்படு போடும் நிகழ்சியும் அப்படித்தான்[4].

Meals feeding at temples

ஜோதிமலை இறைபணி திருக்கூடம் முதல்வருக்கு அளித்த மனு: கடந்த மாதம் (ஆகஸ்ட், 2013), திருவாரூர் அருகே உள்ள கிராமத்தில், தி.க.,வினர் நிகழ்ச்சிக்கு கோவில் மண்டபம் அளிக்கப்பட்டது பெரும் பிரச்னையை ஏற்படுத்தியது.இது குறித்து, “ஜோதிமலை இறைபணி திருக்கூடம் சார்பில், முதல்வருக்கு மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில் உள்ள தகவல் குறித்து, அதன் நிர்வாகிகள் கூறியதாவது: “திருவாரூர் மாவட்டம், கமலாபுரம் அருகிலுள்ள கண்கொடுத்தவனிதம் கிராமத்தில் உள்ள சிவாலயத்துக்கு உட்பட்ட திருமண மண்டபத்தில், திராவிடர் கழக கூட்டம், சமீபத்தில் நடந்தது. இப்பகுதியில் மட்டுமல்ல, தமிழகத்தின் பல இடங்களில், கோவில்களுக்குச் சொந்தமான இடங்களில், கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்களுக்கு, இடம் தரப்படுகிறது. ஆன்மிகத்துக்கு இழுக்கான இச்செயலை, அறநிலையத்துறை அனுமதிப்பது தவறு. இதுபோன்ற மண்டபங்களை, பக்தர்கள் பயன்பெறும் வகையில் வாடகைக்கு விட வேண்டும்”, இவ்வாறு, அவர்கள் கூறினர். இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அனைத்து, கோவில் செயல் அலுவலர்களுக்கும், புது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை[5]:

Nedunchezhiyan_Karunanidhi_MGR-eating together

கோவில் செயல் அலுவலர்களுக்கு பிறப்பிக்கப் பட்டுள்ள புது உத்தரவு:  உத்தரவில், “இனி, வரும் காலங்களில், கோவிலுக்குச் சொந்தமான திருமண மண மண்டபங்கள், கோவிலை சுற்றியுள்ள வளாகத்தில், இந்து சமயம் வளர்ச்சி சம்பந்தப்படாத கொள்கை உடையவர்களுக்கும், நாத்திகவாதத்தை கொள்கையாக கொண்டவர்களுக்கும் இடம் அளிக்க கூடாது. மது, மாமிசம் பயன்படுத்தும் கூட்டங்களுக்கும் இது பொருந்தும். மண்டபங்களை சமய வழிபாடு, தெய்வீக தன்மைக்கும், வளர்ச்சிக்கும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் மட்டுமே, அனுமதிக்க வேண்டும்; வாடகைக்கு கொடுக்க வேண்டும்”, இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது[6]. இந்த உத்தரவின் வார்த்தைகளே கேவலமாக இருக்கின்றன. கோவில் நிலங்களை இனி விற்பதில்லை என்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது[7]. அப்படியென்றால், இதுவரை விற்றது என்னாயிற்று என்ற கேள்வி எழுகிறது[8].

MGR with Variyaar

இந்து சமயம் வளர்ச்சி சம்பந்தப்படாத கொள்கை உடையவர்களுக்கு கொடுக்கப் படாது: முதலில் “இந்து சமயம் வளர்ச்சி சம்பந்தப்படாத கொள்கை” என்று யார் வறையரைத்துள்ளது? அத்தகைய சித்தாந்தம் அல்லது கொள்கை “உடையவர்கள்” என்று எப்படி அடையாளம் காணுவது? கோவில் சொத்துகள் என்று வரும் போது திராவிட கட்சிகள் எல்லாமே ஒரே மாதிரியாகத்தான் இருந்து வருகின்றன. இதைப்பற்றிய இடுகைகளை இங்கு காணலாம்[9]. நடைபெற்று வரும் வழக்குகள், முடிவுகள் முதலியன அவற்றை தெளிவாகக் காட்டி வருகின்றன. பெரியார் சிலைக்கு மாலை போட்டு, அர்ச்சகர் வேலை கேட்கும் காலமாகி விட்டது.

karunanidhi-with-kulla-eating-kanji

மது,  மாமிசம் பயன்படுத்தும் கூட்டங்களுக்கு கொடுக்கப் படாது: இப்படி குறிப்பிடுவதால், இதுவரை அத்தகைய காரியங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பது போலாகிறது. எதிர்மறை உபதேசம், அறிவுரை, எச்சரிக்கை எனலாம், ஆனால், இதையே நாளைக்கு ஒரு உரிமையாக எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில், விதண்டாவாதம் என்பது திராவிடவாதிகளின் தர்க்கமுறையாகி விட்டதால், அவர்கள் அவ்வாறு பேசுவதற்கு, எழுதுவதற்கு உள்ளது. உண்ணாவிரதம் என்றபோது, “உண்ணும் விரதம்” கொண்டாடிய பகுத்தறிவுவாதிகள், ஆகவே, இந்துக்கள் விசயத்தில் அவர்கள் என்னவேண்டுமானாலும் செய்வார்கள். “நோன்பு துறக்கும் / திறக்கும்” விழாக்களில் மட்டும் ஆனந்தமாக தின்றுவிட்டு வருவார்கள். இர்அற்கு கஞ்சி குடிக்கும் முதலமைச்சரே சாட்சியாக இருந்து வந்துள்ளார்.

Karu-with-Saibaba-in his house

இந்துக்கள் இந்துக்களாக உணரும் வரை இந்துக்கள் ஏமாற்றப் பட்டு வருவார்கள்: தமிழகத்தைப் பொறுத்த வரைக்கும், விண்ணப்பதாளில் தான் “இந்து” என்ரு போட்டுக் கொள்ளும் வழக்கம் இருக்கிறது. ஆனால், அதனை கிறிஸ்தவர்கள் கூட இடவொதிக்கீட்டிற்காக செய்து வருகிறார்கள். இரு கூட்டங்களும் இந்துக்களை ஏமாற்றித்தான் வருகின்றன. “உள்-உதுக்கீடு” என்று ஒன்று ஆரம்பிக்கப் பட்டதால், அதில் முஸ்லிம்களும் நுழைந்து விட்டனர். இப்படித்தான் இந்துக்கள் ஏமாற்ரப்பட்டு வருகிறார்கள். திராவிட கழகத்தினருக்கு, நாத்திகர்களுக்கு, இந்துவிரோதிகளுக்கு கோவில் இடங்களில் நுழைவதே வேவு பார்ப்பதற்கு, ஔரங்கசீப் வேலை செய்வதற்கு என்று இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

 

© வேதபிரகாஷ்

06-09-2013


[1] தினமலர், நாத்திகவாதம்பேசுபவர்களுக்குகோவில்களில்நிகழ்ச்சிநடத்ததடை, சென்னை பதிப்பு, 07-09-2013, பக்கம்.2