Archive for the ‘கோவில் நிலத்தை இந்து அறநிலையத்துறையே விஏப்பது’ Category

கோவில்குத்தகை, வாடகைபாக்கி: திராவிடக்கொள்ளை தொடர்கிறதா?

ஒக்ரோபர்7, 2012

கோவில்குத்தகை, வாடகைபாக்கி: திராவிடக்கொள்ளை தொடர்கிறதா?

திராவிடக்கொள்ளைதொடர்வதுஏன்? பகுத்தறிவு-நாத்திகப் போர்வையில் தமிழர்களை “திராவிடர்களாக்கி”, இந்திய விரோதிகளாக்கி, இந்து விரோதிகளாக்கி, மற்ற இந்திய மொழி பேசும் மக்களுடனும் பிரச்சினையைக் கிளப்பி, அண்டை மாநிலங்களுடன் சண்டை போட்டுக் கொண்டு, “தெற்கு தேய்கிறது” என்று சொல்லி, இவர்களே நன்றாகத் தேய்த்து, கோடிகளில் சுருட்டிவிட்டு, மற்ற மாநிலங்களை விட பிற்படுத்தச் செய்தது தான் இவர்கள் ஆண்ட லட்சணம். அந்நிலையில் கோவில்களைக் கொள்ளையடித்ததில் இவர்கள் மாலிக்காபூர், ஔரங்கசீப் போன்றவர்களையும் மிஞ்சி விட்டனர்[1]. அவர்கள் மதவெறியால், கொள்ளையடித்ததை, இவர்கள் துவேஷத்தால், சட்டத்தை வளைத்து, விதிகளை மீறி, அதிகாரம் மூலம் கொள்ளையடித்து வருகின்றனர். “கருணாநிதி-ஜெயலலிதா” ஒன்றும் “திராவிட-ஆரிய” சின்னங்கள் அல்ல. திமுக-அதிமுகவும் அது போலத்தான். திராவிடப் பாரம்பரிய அரசியலில் ஊறிப் போனவர்களுக்கு, நெற்றியில் குங்குமம்-விபூதி-சந்தனம் வைத்துக் கொண்டாலும், வைத்துக் கொள்ளாவிட்டாலும், கொள்ளையடிப்பதில் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சித்தலைமை மாறினாலும், நடப்புகள், செயல்கள், முடிவுகள் எல்லாம் ஒரே மாதிரியாகத்தான் இருந்துள்ளன[2]. ஜெயலலிதா ஆட்சியில் கொஞ்சம் குறைந்துள்ளது எனலாம் அல்லது அவ்வாறு தோற்றமளிக்கலாம்[3].

 

இந்து அறநிலையத் துறையே கோவில் சொத்துக்களை விற்று மோசடி செய்து வந்த விவரங்களை கீழ் கண்ட கட்டுரைகளில் விவரித்துள்ளேன்:

எண்

தலைப்பு

இணைத்தள விவரம்

Tenants of mutt and temple lands seek ownership rights: The TN Government scam to grab the Temple lands (27-08-2008) http://vedaprakash.indiainteracts.in/2008/08/27/tenants-of-mutt-and-temple-lands-seek-ownership-rights-the-tn-government-scam-to-grab-the-temple-lands/
1 Tenants of mutt and temple lands seek ownership rights: The TN Government scam to grab the Temple lands (02-09-2008)) http://dravidianatheism.wordpress.com/2008/09/02/tenants-of-mutt-and-temple-lands-seek-ownership-rights-the-tn-government-scam-to-grab-the-temple-lands/
2 பல கட்டுரைகள் (குறிப்பாக கீழ்கண்டவை கொடுக்கப் பட்டுள்ளன) https://atheismtemples.wordpress.com
3 நாத்திக ஆட்சியாளர்களும், கோவில் நிர்வாகமும் https://atheismtemples.wordpress.com/2009/09/18/atheist-rulers-temple-administration/
4 இந்து அறநிலையத்துறைக்குப் பிறகுகுடிசைமாற்றுவாரியம் மூலம் கோவில் நிலங்களைஆக்கிரமிக்க முயலும் நாத்திக அரசு! https://atheismtemples.wordpress.com/2010/09/10/atheist-rulers-encroach-temple-lands-through-slum-clearance-board/
5 ரூ.5,000/- கோடி மதிப்புள்ள சிவன் கோயில்நிலம்ஆக்கிரமிப்புவிவகாரம்ரோசையா– கருணாநிதி சமரசம்! https://atheismtemples.wordpress.com/2010/08/09/%E0%AE%B0%E0%AF%82-5000-crores-valued-siva-temple-encroached-in-taamilnadu-belonging-to-andhrapradesh/
6 செஞ்சி கோவில் வழக்கு: இந்துக்களும்,கிருந்துவர்களும் தெரிந்து கொள்ள வேண்டியவைஎன்ன? https://atheismtemples.wordpress.com/2011/08/20/gingee-kothandaramar-temple-liberated-from-the-christians/
7 செஞ்சி கோவில் வழக்கு (2): இந்துக்களும்,கிருந்துவர்களும் தெரிந்து கொள்ள வேண்டியவைஎன்ன? https://atheismtemples.wordpress.com/2011/08/21/gingee-temple-liberated-duties-of-hindus/

முறைகேடாககுத்தகைக்குவிடப்பட்டகோவில்நிலங்கள்கையகப்படுத்தப்படும்[4]என்று அறிவித்தால் மட்டும் போதுமா, பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமே? இனி ஆளுங்கட்சியினர் பிரமிப்பை ஏற்படுத்தி, சில காரியங்களைச் செய்யலாம். ஆனால், பிறகு, ஊறிப்போன கோவில்-திருட்டுத் திராவிடம் பழையபடி, கமிஷன் வாங்கிக்கொண்டு வேலைக்கு இறங்கி விடும்.

அப்துல்லாவிற்கும்அகஸ்தீஸ்வரர்கோவிலுக்கும்என்னசம்பந்தம்?: அகஸ்தீஸ்வரர் கோவிலுக்கு அகஸ்திஸ்வரர் கோவிலுக்கு அதிகமாக அப்துல்லா என்பவர்[5] 32 லட்சம் பாக்கி வைத்துள்ளாறாம்! கலீல் உர் ரஹ்மான் 10 லட்சம் பாக்கியாம்! அதெப்படி இப்படி முஸ்லீம்கள் கோவில் சொத்தை அனுபவிக்க முடிகிறது? இந்த அழகில் இவர்கள் கோர்ட்டுக்கு வேறு போகிறார்கள். இந்துக்களை இன்னும் இழிவு பேசிவரும் முஸ்லீம்கள் இருக்கும் போது, முஸ்லீம்கள் இவ்வாறு கோவில் சொத்தைக் கொள்ளையடிக்கும் தொழிலை விடவேண்டும். இல்லையெனில் இவர்களை இக்கால ஔரங்கசீப்புகள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கும். தங்கள் கடவுள் தான் ஒசத்தி என்று தம்படாம் அடித்துக் கொள்ளும் இவர்களுக்கு இப்படி கோவில் சொத்தைக் கொள்ளையடிப்பதில் வெட்கம்கூடபடாமல், பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள் எனும்போது, இதுவும் ஜிஹாதின் ஒருவழியாகப் பின்பற்றுகிறார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது.

சென்னமல்லீஸ்வரர் கோவிலில் வாடகை பாக்கி 90 லட்சம் ரூபாய்[6]: சென்னமல்லீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான இடங்களில் வசிப்போர், தர வேண்டிய வாடகை பாக்கித் தொகை 90 லட்சம் ரூபாயை எட்டியுள்ளது. இதையடுத்து, பாக்கி வைத்திருப்போர் பெயர் அடங்கிய அறிவிப்பு பலகை கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. பாரிமுனை தேவராஜ முதலி தெருவில் உள்ளது பிரசித்திப்பெற்ற சென்ன மல்லீஸ்வரர் மற்றும் கேசவப் பெருமாள் கோவில். இக்கோவிலுக்கு சொந்தமான கட்டடங்களாக, 8 காணி 21 கிரவுண்ட் 1,323 சதுர அடி இடம் (1 காணி – 1.25 ஏக்கர்) உள்ளது. இதன் மொத்தப் பரப்பளவு ஐந்து லட்சம் சதுர அடி. அதே போல் மனைகளாக, ஐந்து காணி 3 கிரவுண்ட் 599 சதுர அடி இடம் உள்ளது. இதன் பரப்பளவு 4 லட்சம் சதுர அடி. 2001ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, இக்கோவிலுக்கு வாடகை பாக்கியாக 90 லட்ச ரூபாய் வரவேண்டியுள்ளது. இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தில் உள்ள பல கோவில்களில் வாடகை பாக்கி தற்போது “ஜரூராக” வசூல் செய்யப்படுவதை[7] அடுத்து, சென்னமல்லீஸ்வரர் கோவிலில் கட்டடங்களில் வசிப்போரில் அதிகபட்சமாக பாக்கி வைத்தவர்களில், முதல் பதினைந்து பேர்களின் பெயர்கள் மற்றும் பாக்கித் தொகை அடங்கிய அறிவிப்பு பலகை கோவில் வாசலில் வைக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, ஐவர் பாக்கித் தொகையை செலுத்தியுள்ளனர். விரைவில் மனை பிரிவில் தங்கியுள்ளவர்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலங்களின் மதிப்பு பல கோடி ரூபாயை தாண்டும் எனவும் நிர்வாகம் கூறியுள்ளது.

கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான, 180 கோடி ரூபாய் மதிப்பிலான, 30 “கிரவுண்ட்’: சென்னை, மயிலாப்பூர், கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான, 180 கோடி ரூபாய் மதிப்பிலான, 30 “கிரவுண்ட்’ இடத்தை மீட்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மயிலாப்பூர், கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோவி லுக்குச் சொந்தமாக சென்னை நகரின் பல்வேறு இடங்களில் சொத்துக்கள் உள்ளன. இவற்றில், பெரும்பாலானவை குத்தகை அடிப்படையில் தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. பல சொத்துக்கள், தனியாரின் பிடியில் சிக்கியுள்ளன. இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள கோவில் நிர்வாகம், கோவில் சொத்துக்களை மீட்கும் பணியில் இறங்கியுள்ளது. பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள், கடந்த மூன்று மாதங்களில் மீட்கப்பட்டுள்ளன.இந்த வகையில், தனியார் பள்ளியின் கட்டுப்பாட்டில் உள்ள, 30 “கிரவுண்ட்’ இடத்தையும் மீட்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து பக்தர் ஒருவர் கூறியதாவது: மயிலாப்பூர், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், 76 “கிரவுண்ட்’ சொத்து, கோவிலுக்குச் சொந்தமாக உள்ளது. இது, அங்குள்ள தனியார் பள்ளியின் விளையாட்டுத் திடலாக பயன்படுத்தப்படுகிறது. இதற்காக, குறைந்த தொகை, குத்தகை கட்டணமாக மாதந்தோறும் கொடுக்கப்படுகிறது. இதில், 30 “கிரவுண்ட்’ நிலத்தை, பள்ளியின், இணைப்பு பள்ளிக்கு குத்தகைக்கு வழங்க, முடிவு செய்யப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால், குத்தகை இடம் வழங்கப்படவில்லை.மொத்தம் உள்ள, 76 “கிரவுண்ட்’ இடத்தில், 46 “கிரவுண்ட்’ இடம், கோர்ட் விசாரணையில் உள்ளது. மீதம் உள்ள, 30 “கிரவுண்ட்’ இடத்தை கோவிலுக்கு ஒப்படைக்க, தனியார் பள்ளி நிர்வாகம் சம்மதித்தது. ஆனால், இதுவரை ஒப்படைக்கவில்லை. தொடர்ந்து, தனியார் பள்ளி வசத்திலேயே இடம் உள்ளது. இந்த இடத்தை மீட்டு, கோவில் சொத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு, அந்த பக்தர் கூறினார். இது குறித்து கோவில் நிர்வாகத்திடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:மொத்தம் உள்ள, 76 “கிரவுண்ட்’ இடத்தில், 30 “கிரவுண்ட்’ இடத்தை கோவிலுக்கு ஒப்படைப்பதாக பள்ளி நிர்வாகம், 1996ம் ஆண்டு, கடிதம் அளித்தது. 2005ம் ஆண்டு, ஒப்படைப்பு உறுதி செய்யப்பட்டது. குத்தகை நீட்டிப்பு செய்யப்படாத நிலையில், மீதம் உள்ள, 46 “கிரவுண்ட்’ இடத்திற்கு நஷ்ட ஈடாக, மாதம், 1,250 ரூபாயை பள்ளி செலுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, குறிப்பிட்ட இடத்திற்கு மாதம், ஐந்து லட்சம் ரூபாய் வாடகையாகச் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. கோவிலுக்கு ஒப்படைப்பதாகக் கூறப்பட்ட, 30 “கிரவுண்ட்’ இடத்தைக் கையகப்படுத்த, நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறித்த சட்ட நிபுணர்களின் கருத்துரு கேட்டபோது, “கோவில் இடத்தை, கோவில் நிர்வாகம் எடுத்து, மதில் சுவர் கட்டுவதில் சட்ட ரீதியான தடை ஏதும் இல்லை’ என்று கருத்து கூறப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள, 76 “கிரவுண்ட்’ இடத்தின் தற்போதைய சந்தை மதிப்பு, 456 கோடி ரூபாய். கோவிலுக்கு ஒப்படைக்கப்படுவதாகக் கூறப்பட்ட நிலத்தின் மதிப்பு, 180 கோடி ரூபாய். இவ்வாறு கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

456 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமித்துள்ளது ஏன் – எப்படி?: கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான, 76 “கிரவுண்ட்’ இடம், தனியார் பள்ளிக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது; குத்தகை, 1976ம் ஆண்டோடு முடிந்துவிட்டது; இருப்பினும், கோவில் இடத்தை, பள்ளி நிர்வாகம் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. 1994ம் ஆண்டில், குறிப்பிட்ட தனியார் பள்ளியின், இணைப்பு பள்ளியில் நடந்த விழாவில், முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டார்.அப்போது, தங்களின் இணைப்பு பள்ளிக்கு விளையாட்டுத் திடல் இல்லை என்றும், அதற்கான இடத்தைக் கொடுத்து உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது, “கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான இடம், விளையாட்டுத் திடலுக்காக வழங்கப்படும்’ என்று முதல்வர் அறிவித்தார். இதையடுத்து, 1995ம் ஆண்டு, தனியார் பள்ளியின் அனுபவத்தில் இருந்த, 76 “கிரவுண்ட்’ இடத்தில் இருந்து, 30 “கிரவுண்ட்’ இடத்தை, இணைப்பு பள்ளிக்கு, குத்தகை அடிப்படையில் ஒதுக்கி, இந்து அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து உத்தரவிடப்பட்டது. ஆனால், குறிப்பிட்ட இடத்திற்குச் செல்ல வழி இல்லை என்ற காரணத்தால், இணைப்பு பள்ளி நிர்வாகம், 30 “கிரவுண்ட்’ நிலத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இதைஅடுத்து, “இடத்தைப் பெற்றுக் கொள்ள இணைப்பு பள்ளி நிர்வாகம் முன்வரவில்லை’ என, அறநிலையத் துறை பதிவேட்டில், பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில், தனியார் பள்ளியின் பொறுப்பில் மீதம் உள்ள, 46 “கிரவுண்ட்’ இடத்தையும் திரும்ப எடுக்க, கோவில் நிர்வாகம் முயற்சி எடுத்தது. இது குறித்த வழக்கில், கோவில் நிர்வாகத்திற்கு பாதமாக தீர்ப்பு வந்த நிலையில், மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கோவில் தக்கார்கள் எப்படி வேலை செய்கிறார்கள்?: பி. விஜயகுமார் ரெட்டி என்பவர் கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்டு வருவதோடு, பாக்கியைச் செல்லுத்தாவிட்டால், காலிசெய்யுமாறு நோட்டீஸையும் கொடுத்துள்ளார்[8]. இவர் மீட்டுள்ள சொத்தின் மதிப்பு ரூ.230 கோடிகளுக்கு மேல் என்கிறார்[9]. இதேபோல மற்ற தக்கார்கள் ஏன் வேலை செய்வதில்லை? குறிப்பாக மேஎலேயுள்ள நிலத்தை ஏன் விட்டு வைத்தார்? கோர்ட் கேஸ் என்று சொல்லிவிடுவார், ஆனால், அது நியாயம் அல்லவே? திருமூலர் சொன்னதை, இந்துக்களும் மறக்கலாமோ? பிறகு, நாத்திகர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

திருத்தணியில் வரி பாக்கி செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு ‘சீல்’: கமிஷனர் அதிரடி நடவடிக்கை[10]: திருத்தணி நகராட்சிக்கு சொந்தமான 7 கடைகள் பஸ் நிலையம், சன்னதி தெருவில் உள்ளன. இதனை அதே பகுதியை சேர்ந்த தீனதயாளன், வெங்கடேசன், முருகேச ரெட்டி, ஜான்மனுவேல் கடந்த 15 ஆண்டுகளாக குத்தகை அடிப்படையில் நடத்தி வந்தனர்.  இதில் 6 கடைகளுக்கு அவர்கள் முறையாக வரி செலுத்தவில்லை. இதனால் ரூ.6 லட்சம் வரை நகராட்சிக்கு வரிபாக்கி ஏற்பட்டது. இதுகுறித்து பலமுறை நகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியும் வரிபாக்கியை செலுத்தாமல் அவர்கள் தொடர்ந்து கடை நடத்தி வந்தனர்.  இந்த நிலையில் நகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியம், என்ஜினீயர் சண்முகம், சுகாதார அதிகாரி லட்சுமி கணேசன், தலைமை எழுத்தர் அமராவதி பொன்மணி, பொதுப்பணி மேற்பார்வையாளர் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் வரிபாக்கி செலுத்தாத 6 கடைகளுக்கும் சென்று விசாரணை நடத்தினர்.  அதிரடியாக அவர்கள் 6 கடைகளுக்கும், சீல் வைத்தனர். இதனால் திருத்தணி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கமிஷனர் பாலசுப்பிரமணியம் கூறும்போது, 2011-12ம் ஆண்டு மட்டும் நகராட்சிக்கு ரூ.60 லட்சம் வரை வரிபாக்கி உள்ளது. வரிசெலுத்தாத தனியார் நிறுவனங்கள் மீதும் இந்த அதிரடி நடவடிக்கை தொடரும் என்றார். ஆனால், கோவில் குத்தகை, வாடகை பாக்கி என்றால் அதிகாரிகள் “சட்டப்படி நடவடிக்கை எடுத்து” அமைதி காத்துக் கொண்டிருப்பார்கள் போலும், அப்படியென்றால் திராவிடக் கொள்ளை தொடர்கிறதா?

நிர்வாக சீர்கேட்டால் ரூ.20 லட்சம் குத்தகை பணம் பாக்கி; கடும் நடவடிக்கை எடுக்க கவுன்சிலர்கள் வலியுறுத்தல்[11]: புதிய கட்சிகள் அதிகாரத்திற்கு வந்தாலும், பழைய புத்தி போகாது போலும்.திருவத்திபுரம் நகராட்சியில் நிர்வாக சீர்கேட்டால் 1 வருடங்களாக ரூ.20 லட்சம் குத்தகை பணம் வசூல் செய்யாமல் பாக்கியாக உள்ளது. கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தி உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் திருவத்திபுரம் நகராட்சியில் நகர மன்ற கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் ஏ.என்.சம்பத் தலைமை தாங்கினார். ஆணையாளர் உசேன் பாரூக் மன்னர், துப்பரவு அலுவலர் பாஸ்கர், துப்பரவு ஆய்வாளர் மதனராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் லோகநாதன், விஸ்வநாதன், எம்.எஸ்.செல்வ பாண்டியன், எல்.வி. நடேசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

திருவத்திபுரம் நகராட்சி கூட்டத்தில் நடந்த விவாதம் பின்வருமாறு:- பி.லோகநாதன் – தமிழகத்தில் 3 முறையாக ஜெயலலிதாவை முதல்வராக்கிய தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும்.

இல.ஆனந்தன்- தே.மு.தி.க வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெறசெய்து விஜயகாந்தை எதிர்கட்சி தலைவராக்கிய தமிழக வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

லோகநாதன்- சுகாதார பிரிவுக்கு 2011- 2012 ஆண்டிற்கு சுண்ணாம்பு நீருக்கு 3 லட்சம் தேவையா? கடந்த ஆண்டு 2 லட்சத்திற்கும் குறைவாக வாங்கியுள்ளீர்கள்.

சம்பத்(தலைவர்)-ஆடு அறுக்கும் தொட்டி குத்தகை பணம் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் பாக்கியுள்ளது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்.

ஆணையாளர்- குத்தகை பாக்கி வசூல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறேன்.

விஸ்வநாதன்-பஸ் நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பிட குத்தகை ரூ.5 லட்சத்து 66 ஆயிரம் பாக்கி உள்ளது ஏன் நகராட்சி நிர்வாகம் வசூல் செய்யவில்லை.

பி.லோகநாதன்-வார சந்தை குத்தகை ரூ. 7லட்சத்து 14 ஆயிரம் கடந்த 2009 ஆண்டு முதல் நிலுவையில் ஏன் வசூல் செய்யவில்லை.

சம்பத்(தலைவர்)- குத்தகை வசூல் செய்யாமல் ரூ.20 லட்சம் பாக்கியாக உள்ளது. இதற்கு காரணம் நிர்வாக சீர்கேடு தான்.

பச்சையப்பன் – இதற்கு காரணமான அதிகாரிகள் அனைவரும் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்வபாண்டியன்- பேருந்து நிலைய நுழைவு கட்டண குத்தகை ரூ.6 லட்சத்து 82 ஆயிரம் 500 குத்தகை வசூலில் பாக்கி உள்ளது என்ன நிர்வாகம் நடக்கிறது.

ஆணையாளர்- துறை அலுவலர் மீது விசாரணை நடத்தி வருகிறேன். அதில் முறைகேடு கண்டுபிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கபடும்.

சம்பத் (தலைவர்) -குத்தகை பணம் செலுத்தவில்லை என்றால் மறு டெண்டர் விட்டு விட்டு குத்தகை பாக்கி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது. ஆக, இப்படி பேசிக்கொண்டிருப்பார்கள் போலும். திருத்தணி நகராட்சி கமிஷனெர் போல, இங்குள்ள கமிஷனர் ஒன்றும் செய்யமாட்டார் போலும்.

ஊட்டியில் கோவில் சொத்துகளை அனுபவிப்பவர்கள்: 14 லட்சம் ரூபாய் வரை குத்தகை மற்றும் வாடகை பாக்கி வைத்துள்ளனர்.  ஊட்டி மாரியம்மன் கோவில், அதன் கட்டுப்பாட்டில் லோயர் பஜார் சுப்ரமணியசாமி, இரட்டை பிள்ளையார் கோவில்கள் உள்ளன. தவிர, ஆஞ்சநேயர், எல்க்ஹில் பாலதண்டாயுதபாணி, வேணுகோபால் சுவாமி, மூவுலகரசியம்மன் கோவில்களும் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளன. மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான எட்டு நிரந்தர, 3 தற்காலி கடைகள் குத்தகை, வாடகை அடிப்படையில் தனியாருக்கு விடப்பட்டுள்ளன.நிரந்தர கடைகள் மூலம் ஆண்டுக்கு 3 லட்சத்து 79 ஆயிரத்து 334 ரூபாய், தற்காலிக கடைகள் மூலம் 34 ஆயிரத்து 460 ரூபாய் வருமானம் ஈட்டப்படுகிறது. பிற கோவில்களுக்கு சொந்தமான கடை, வீடு, நிலங்கள் மூலமும் ஆண்டுக்கு சில லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது.

வாடகை பாக்கி: மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிரந்தர கடைகளை அனுபவித்து வருவோர் 3 லட்சத்து 15 ஆயிரத்து 390 ரூபாய், தற்காலிக கடைக்காரர்கள் 35 ஆயிரத்து 300 ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளனர். ஆஞ்சநேயர் கோவிலுக்கு சொந்தமான கடைகளை நடத்துவோர் 6 லட்சத்து 66 ஆயிரத்து 407 ரூபாய், வேணுகோபால் சுவாமி கோவிலுக்கு சொந்தமான கடைகளை நடத்துவோர் 2 லட்சத்து 5 ஆயிரத்து 82 ரூபாய், காந்தல் சுப்ரமணியர் கோவிலுக்கு சொந்தமான வீடுகளில் வசிப்போர் 64 ஆயிரத்து 124 ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளனர்.

காந்தல் மூவுலகரசியம்மன் கோவில் நில குத்தகைதாரர் 6 ஆயிரத்து780 ரூபாய், வீடுகளில் வசிப்போர் 1 லட்சத்து 17 ஆயிரத்து 173 ரூபாய் பாக்கி வைத்துள்ள நிலையில், கோவில் கஜானாவுக்கு செல்ல வேண்டிய 14லட்சத்து 10 ஆயிரத்து 256 ரூபாய் நிலுவையில் உள்ளது.

அரசாணையில்சலுகை 33.33லிருந்து 15%, கிட்டத்தட்ட 20% குறைப்பு[12]: கோவில்களுக்கு சொந்தமான வீடு, கடை, நிலத்தின் வாடகை, குத்தகை தொகையை மூன்றாண்டுக்கு ஒரு முறை 33.3 சதவீதம் உயர்வு செய்யப்பட்டு வந்தது; வாடகை உயர்வை குறைக்க வேண்டும் என்ற மாநிலம் முழுவதிலும் உள்ள கோவில் நிலங்களை அனுபவித்து வந்த குத்தகை, வாடகைதாரர்களின் கோரிக்கையை ஏற்று மாநில அரசு, மூன்றாண்டுக்கு ஒரு முறை 15 சதவீதம் வாடகை உயர்வு செய்து அரசாணை பிறப்பித்தது. இந்த உத்தரவு ஊட்டியில் அமலுக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்து முன்னணிக்குத்தான் இவ்விவரங்கள் தெரியும் போலும்: கோவை, நீலகிரி மாவட்ட இந்து முன்னணி அமைப்பாளர் செல்வகுமார், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில், கூறியுள்ளதாவது:மாநில இந்து சமய நலத்துறை குறிப்பிட்டுள்ள வாடகை, குத்தகை தொகை ஊட்டியில் வசூலிக்கப்படுவதில்லை; இதுதொடர்பான, அரசாணை தங்களுக்கு வரவில்லை, என ஊட்டி மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் கூறி வருகிறார். அரசாணை வெளியிடப்பட்டு நான்கரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், ஊட்டியில் மட்டும் இந்த அரசாணை கிடைக்கவில்லை, எனக் கூறி அரசின் சட்டத்தை பின்பற்ற காலம் தாழ்த்தும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தவிர, கோவில்களுக்கு சொந்தமான நிலம், வீடு, கடைகளை அனுபவித்து வருபவர்கள் பாக்கி வைத்துள்ள வாடகை, குத்தகை தொகையை உடனடியாக வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு செல்வகுமார் கூறியுள்ளார்.

ஆட்சி மாறினாலும், கதை தொடகிறது போலும்: தமிழகத்தில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 36,451 கோவில்கள் உள்ளன. புனித மடங்கள், 56 உள்ளன. கோவிலுடன் இணைந்த மடங்கள், 57 உள்ளன. ஜெயின் கோவில்கள், 17 உள்ளன. கோவிலுக்குச் சொந்தமான, 1,83,669 ஏக்கர் விளை நிலம், 2,18,226 ஏக்கர் தரிசு நிலம், 20,746 ஏக்கர் மானாவாரி நிலம் உள்ளது. இந்நிலங்கள், குறைந்த தொகைக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. பெரும்பாலான நிலம், ஆக்கிரமிப்பாளர்களிடம் சிக்கியுள்ளன. கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுத்தவர்கள், முறையாக, கோவிலுக்கு வாடகை செலுத்துவதில்லை. இதனால், கோவிலுக்கு வரும் வருமானம் பாதிக்கப்படுகிறது. கோவிலில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வது சிரமமாக உள்ளது. வாடகையை வசூலிக்க கோவில் நிர்வாகம், நடவடிக்கை எடுத்தால், சிலர் நீதிமன்றத்திற்கு சென்றுவிடுகின்றனர். சிலர் ஆளுங்கட்சியினர் உதவியை நாடுகின்றனர். இதனால், வாடகை வசூலிப்பது குதிரைக் கொம்பாக உள்ளது. ஆண்டுகணக்கில் வாடகை செலுத்தாமல், பல லட்சம் ரூபாய் பாக்கி வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் முக்கியப் பிரமுகர்களாக உள்ளனர். அவர்களிடமிருந்து வாடகை வசூலிப்பதற்காக, அதிக பாக்கி வைத்திருப்போரின் பெயர், அவர் செலுத்த வேண்டிய தொகை போன்ற விவரங்களை, கோவில் தகவல் பலகையில் எழுதி வைக்கும்படி, செயல் அலுவலர்களுக்கு அறநிலையத் துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தகவல் பலகையில் பெயர் இடம்பெற்று, பக்தர்களிடம் அசிங்கப்படுவதை தவிர்க்க, பாக்கித் தொகையை செலுத்துவர் என, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.

அண்ணா பிறந்த காஞ்சிபுரம் வழிகாட்டுகிறது: காஞ்சிபுரத்தில் கோவிலுக்குச் சொந்தமான நிலம் மற்றும் கட்டடத்தை அனுபவித்துக் கொண்டு, லட்சக்கணக்கில் பாக்கி வைத்துள்ளவர்கள் விவரங்களை, கோவில் தகவல் பலகையில் எழுதி வைக்கத் துவங்கி உள்ளனர். குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இருவருடைய பெயர் இடம் பெற்றுள்ளது. காங்கிரஸ் பிரமுகரான அரங்கநாதன், 19.61 லட்சம் ரூபாய் கடன் பாக்கி வைத்துள்ளார். நாராயணன், 3.12 லட்சம் ரூபாய் பாக்கி வைத்துள்ளார்[13]. இதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள பெரிய கோவில்களில், அறிவிப்புப் பலகைகளில் பெயர்களை எழுதி வைக்க, அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு, பாக்கி வைத்திருப்போர் பெயர்களை வெளியிடுவது, பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. பெயர் பலகையில் வெறும் பெயரை மட்டும் எழுதாமல், அவர்கள் என்னப் பதவியில் உள்ளனர், எந்த பொறுப்பில் உள்ளனர் என்ற விவரத்தையும் எழுதி வைத்தால், பாக்கி விரைவாக வசூலாக வாய்ப்புண்டு. காஞ்சிபுரம் மாவட்டத்தில், கோவில்களுக்கு, வாடகை பாக்கி வைத்திருப்போர் பெயர் பட்டியல் வெளியிடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. கோவில்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல், பாக்கி வைத்திருப்போர் பெயர் மற்றும் முகவரியை, கோவில் அறிவிப்பு பலகையில் வெளியிடும்படி, கோவில் செயல் அலுவலர்களுக்கு, உயர் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். அதன்படி காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பாக்கி வைத்திருப்போர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து பிற கோவில்களிலும், வாடகை பாக்கி வைத்திருப்போர் பட்டியலை வெளியிடும் பணி நடந்து வருகிறது. காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர்கோவில், வைகுண்ட பெருமாள் கோவில், பிள்ளையார்பாளையம் மகாஆனந்த ருத்ரேஸ்வரர் கோவில், அறம்வளத்தீஸ்வரர் கோவில், ஆகியவற்றில் வாடகை பாக்கி வைத்திருப்போர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது[14].

திருப்போரூர் என்ன சளைத்ததா?: திராவிடர் பாதை எல்லா ஊரிலும் பின்பற்றத்தான் செய்வார்கள். கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று தமிழன் சொன்னது அக்காலத்தில், இன்றோ, ஒரு கோவிலையும் கொள்ளையடிகாமல் இருக்கவேண்டாம் என்று திராவிடர்கள் செயல்பட்டு வருகின்றனர். கந்தசுவாமி கோவில் நிர்வாகம், கோவிலுக்கு மனை வரி, நிலம் குத்தகை, கட்டட வாடகை, என பாக்கி வைத்துள்ளவர்கள் பெயர் மற்றும் அவர்கள் செலுத்த வேண்டிய தொகை விவரம் அச்சிடப்பட்ட விளம்பரப் பதாகையை, கோவில் அலுவலகம் முன் வைத்துள்ளது.

கோவில்களில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும்: ராமகோபாலன்[15]: தரிசன கட்டணத்தை ரத்து செய்வதுடன் கோவில்களில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும் என இந்து முன்னணி நிறுவன தலைவர் கூறியுள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை விளக்குத்தூண் பகுதியில் இருந்து விநாயகர் சிலை நேற்று ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வைகை ஆற்றில் கரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி நிறுவன தலைவர் ராமகோபாலன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “’கோவில்களில் சுவாமி தரிசனத்துக்கு கட்டணம் வசூலிப்பது தமிழகத்தில் தான் நடக்கிறது. கேரளா மற்றும் வடமாநில கோவில்களில் இப்படி கட்டணம் வசூலிப்பது கிடையாது. காசு கொடுத்து சாமியை பார்க்க சாமி காட்சி பொருள் அல்ல. எனவே தரிசன கட்டணத்தை அரசு ரத்து செய்ய வேண்டும். மேலும் கோவில்களில் உள்ள கடைகள் அனைத்தையும் அரசு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள கோவில்களுக்கு குத்தகை பாக்கி ரூ.200 கோடி வரை உள்ளது. இவற்றை இந்து அறநிலையத்துறை முறையாக வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாக்கி தொகையை வசூலிக்க அரசு அவசர சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். இல்லை என்றால் கோவில் களை பாதுகாக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் போலீஸ் அதிகாரிகள், துறவிகள், இந்து அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் அடங்கிய ஒரு குழு அமைத்து அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்’’என்று பேசினார்.

வேதபிரகாஷ்

07-10-2012


[5] தினமலர், அக்டோபர் 6, 2012. சென்னைப் பதிப்பு.

[6] தினமலர், ஆகஸ்ட் 14,2012, http://www.dinamalar.com/district_detail.asp?id=529267

[7] இதிலென்ன “ஜரூராக” வசூல் செய்வது என்று தெரியவில்லை. கோவிலுக்கு பாக்கி செல்லுத்தாமல் இருப்பவர்கள் இந்துக்கள் என்றாலும் அவர்கள் இந்து மதத்தின் விரோதிகள் என்றுதான் ஆகிறார்கள். அவர்கள் நவீன கால இரண்யகசிபுகள் எனலாம். அனவே அவர்கள் பெருமைப்பட்டுக் கொள்வதில் ஒன்றும் விஷயமில்லை, மாறாக வெட்கப்பட்டு, கூனிக்குருக வேண்டும். நாத்திகர்கள் என்றோ, ககுத்தறிவுவாதிகள் என்றோ கூட சொல்லிக்கொள்ளமுடியாது, அப்படி செய்தால், அவர்கள் இந்து துரோகிகளைவிட மோசமானவர்கள் எனலாம்.

[9] “We have recovered a little more than 46 grounds from encroachers after starting our drive in March (2012). The property recovered is worth more than Rs 230 crore,” says P. Vijaykumar Reddy, the temple takkar (trustee).

[13] தினமலர், பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2012,23:46 IST; மாற்றம் செய்த நாள் : அக்டோபர் 01,2012,05:16 IST

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=557027

[14] தினமலர், அக்டோபர் 05,2012, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=560259

 

கோவில் நிலங்களை இனி விற்பதில்லை: இந்து அறநிலையத்துறை முடிவு!

நவம்பர்12, 2011

கோவில் நிலங்களை இனி விற்பதில்லை:  இந்து அறநிலையத்துறை முடிவு!

பகுத்தறிவு-நாத்திகப் போர்வையில் தமிழர்களை “திராவிடர்களாக்கி”[1], இந்திய விரோதிகளாக்கி[2], இந்து விரோதிகளாக்கி[3], மற்ற இந்திய மொழி பேசும் மக்களுடனும் பிரச்சினையைக் கிளப்பி[4], அண்டை மாநிலங்களுடன் சண்டை போட்டுக் கொண்டு[5], “தெற்கு தேய்கிறது” என்று சொல்லி, இவர்களே நன்றாகத் தேய்த்து, கோடிகளில் சுருட்டிவிட்டு[6], மற்ற மாநிலங்களை விட பிற்படுத்தச் செய்தது தான் இவர்கள் ஆண்ட லட்சணம். அந்நிலையில் கோவில்களைக் கொள்ளையடித்ததில் இவர்கள் மாலிக்காபூர், ஔரங்கசீப் போன்றவர்களையும் மிஞ்சி விட்டனர். அவர்கள் மதவெறியால், கொள்ளையடித்ததை, இவர்கள் துவேஷத்தால், சட்டத்தை வளைத்து, விதிகளை மீறி, அதிகாரம் மூலம் கொள்ளையடித்து வருகின்றனர். “கருணாநிதி-ஜெயலலிதா” ஒன்றும் “திராவிட-ஆரிய” சின்னங்கள் அல்ல. திமுக-அதிமுகவும் அது போலத்தான். திராவிடப் பாரம்பரிய அரசியலில் ஊறிப் போனவர்களுக்கு, நெற்றியில் குங்குமம்-விபூதி-சந்தனம் வைத்துக் கொண்டாலும், வைத்துக் கொள்ளாவிட்டாலும், கொள்ளையடிப்பதில் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சித்தலைமை மாறினாலும், நடப்புகள், செயல்கள், முடிவுகள் எல்லாம் ஒரே மாதிரியாகத்தான் இருந்துள்ளன. ஜெயலலிதா ஆட்சியில் கொஞ்சம் குறைந்துள்ளது எனலாம் அல்லது அவ்வாறு தோற்றமளிக்கலாம்.

இந்து அறநிலையத் துறையே கோவில் சொத்துக்களை விற்று மோசடி செய்து வந்த விவரங்களை கீழ் கண்ட கட்டுரைகளில் விவரித்துள்ளேன்:

எண்

தலைப்பு

இணைத்தள விவரம்

Tenants of mutt and temple lands seek ownership rights: The TN Government scam to grab the Temple lands (27-08-2008)  http://vedaprakash.indiainteracts.in/2008/08/27/tenants-of-mutt-and-temple-lands-seek-ownership-rights-the-tn-government-scam-to-grab-the-temple-lands/
1 Tenants of mutt and temple lands seek ownership rights: The TN Government scam to grab the Temple lands (02-09-2008))  http://dravidianatheism.wordpress.com/2008/09/02/tenants-of-mutt-and-temple-lands-seek-ownership-rights-the-tn-government-scam-to-grab-the-temple-lands/
2 பல கட்டுரைகள் (குறிப்பாக கீழ்கண்டவை கொடுக்கப் பட்டுள்ளன) https://atheismtemples.wordpress.com 
3 நாத்திக ஆட்சியாளர்களும், கோவில் நிர்வாகமும் https://atheismtemples.wordpress.com/2009/09/18/atheist-rulers-temple-administration/ 
4 இந்து அறநிலையத்துறைக்குப் பிறகு குடிசைமாற்றுவாரியம் மூலம் கோவில் நிலங்களை ஆக்கிரமிக்க முயலும் நாத்திக அரசு! https://atheismtemples.wordpress.com/2010/09/10/atheist-rulers-encroach-temple-lands-through-slum-clearance-board/
5 ரூ.5,000/- கோடி மதிப்புள்ள சிவன் கோயில்நிலம் ஆக்கிரமிப்புவிவகாரம்: ரோசையா கருணாநிதி சமரசம்! https://atheismtemples.wordpress.com/2010/08/09/%E0%AE%B0%E0%AF%82-5000-crores-valued-siva-temple-encroached-in-taamilnadu-belonging-to-andhrapradesh/
6 செஞ்சி கோவில் வழக்கு: இந்துக்களும், கிருந்துவர்களும் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன? https://atheismtemples.wordpress.com/2011/08/20/gingee-kothandaramar-temple-liberated-from-the-christians/
7 செஞ்சி கோவில் வழக்கு (2): இந்துக்களும், கிருந்துவர்களும் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன? https://atheismtemples.wordpress.com/2011/08/21/gingee-temple-liberated-duties-of-hindus/

இந்து சமய அறநிலையத் துறை எடுத்துள்ள முடிவு[7]: கோவில் சொத்துக்களை, குடியிருப்போருக்கு விற்பது, ஓர் ஆபத்தான முயற்சியாகவே கருதப்படுகிறது. எனவே,

தினமலர் 12-11-2011 தேதியிட்ட நாளிதழில் வெளியாகியுள்ள இக்கட்டுரையில் (சென்னைப் பதிப்பு, பக்கம்.2) இவ்வாறு செய்தி இருந்தாலும், ஏற்கெனவே விற்றது, விற்றதுதான் என்றாகிறது. அதனையும் சட்டரீதியாக அரசு மீகவேண்டும். கோவில் நிலத்தை அடாவடியாக வாங்கியவர்கள் நிச்சயமாக ஏழைகள் அல்லர். ஆகவே, சிவன் சொத்தை அவர்கள் தாராளமாக திருப்பிக் கொடுத்து கைலாசத்திற்குச் செல்ல தயாராக இருக்கலாம்.

இனி, கோவில் நிலங்களை விற்பதில்லை என, இந்து சமய அறநிலையத் துறை, அதிரடி முடிவை எடுத்துள்ளது. கோவில் நிலத்தை விற்பனை செய்யலாமா, கூடாதா என முடிவு செய்யும் அதிகாரத்தை, அறநிலையத் துறைச் சட்டம், 1959ன் பிரிவு 34, அத்துறை ஆணையருக்கு அளிக்கிறது. அந்த விற்பனையும், கோவிலின் நலன் கருதி, மிக மிக அவசியமாகக் கருதப்பட்டால் மட்டுமே, மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், எப்போதுமே, சட்டத்துக்கு மாறாகத் தானே நடைமுறை இருக்கும். உள்ளூர் பலம், அரசியல் பின்புலம் மூலம், சட்ட ரீதியாகவே வாங்கி, கோவில் சொத்துக்களை, “ஸ்வாகா’ செய்வோர் அதிகரித்து வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், முக்கியத்துவம் வாய்ந்த முடிவை, இந்து சமய அறநிலையத் துறை எடுத்துள்ளது.
திருவல்லீஸ்வரர் கோவில் நிலத்தை குறைந்த விலையில் 1984ல் விற்றது: சென்னையின் பிரபலமான கோவில்களில் ஒன்று, பாடி திருவல்லீஸ்வரர் கோவில்; பல்லவர்கள் காலத்துக்கும் முந்தையது. புண்ணியாத்மாக்கள் பலரின் முயற்சியால்,

அப்பொழுதெல்லாம் புண்ணிய ஆத்மாக்கள் கோவில்களுக்கு நிலம், வீடு என்று எழுதி வைத்து விட்டு சாகும். ஆனால், இப்பொழுதுள்ள தினமலர் 12-11-2011 தேதியிட்ட நாளிதழில் வெளியாகியுள்ள இக்கட்டுரையில் (சென்னைப் பதிப்பு, பக்கம்.2) இவ்வாறு செய்தி இருந்தாலும், ஏற்கெனவே விற்றது, விற்றதுதான் என்றாகிறது.

இந்தக் கோவிலுக்கு, பாடியிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், 55 ஏக்கருக்கும் மேல் நிலம் உள்ளது. இதில், 125 கிரவுண்டு மற்றும் 751.75 சதுர அடி நிலத்தில், 126 பேர் வரை குடியிருந்து வந்தனர். இவர்கள் அனைவரும், “ஜெகதாம்பிகை நகர் கூட்டுறவு வீட்டு மனை சங்கம்’ என்ற பெயரில் ஒரு சங்கத்தைத் துவக்கி, “நாங்கள் குடியிருக்கும் அடிமனையை எங்களுக்கே விற்று விடுங்கள்’ என, கோரிக்கை வைத்தனர். அப்போதிருந்த கோவில் நிர்வாகமும், அறநிலையத் துறையும் அதை ஏற்று, 66 பேருக்கு, அடிமனையை கிரையம் செய்து கொடுத்துவிட்டன. இது நடந்தது 1984ல். அப்போது, ஒரு கிரவுண்டு, வெறும் 12 ஆயிரம், 15 ஆயிரம் மற்றும் 16 ஆயிரம் என விற்கப்பட்டது.
நிலம் கிடைக்காதவர் வழக்குத் தொடுக்க ஆரம்பித்தது பிரச்னை: ஒரு பாதிப் பேருக்குக் கிடைத்துவிட்டால், மறு பாதியினர் விடுவரா? தங்களுக்கும் விற்பனை செய்ய வேண்டும் என, விடுபட்டவர்களுடன் புதிதாகச் சிலரும் சேர்ந்து, மொத்தம் 135 பேர், சட்டப் போராட்டத்தைத் துவக்கினர். சென்னை ஐகோர்ட்டில் வழக்கு, தள்ளுபடி,

சட்டத்தை அரசியல்வாதிகள் தாம் வளைப்பார்களா, அதற்கென வக்கீல்களும் உள்ளனரே. குங்குமம் / விபூதி / சந்தனம் வைத்துக் கொண்டால் என்ன, காசு என்றால், பக்தன்னான வக்கீலும் வாதிட வந்து விடுகிறார்களே? வென்றால் 1% என்றால் கூட லட்சங்களில் கிடைக்கும் எனும்போது, சிவனாவது, சொத்தாவது, தானே சிவனாகிவிட மாட்டானா?

உத்தரவு, ரத்து என, அத்தனை அத்தியாயங்களும் அரங்கேறின. கடைசியாக, கடந்த ஜூலையில், “இவர்களுடைய கோரிக்கைகளை ஏற்பதா, மறுப்பதா என்பது குறித்து, பரம்பரை அறங்காவலர் மற்றும் பொதுமக்களின் ஆலோசனை, ஆட்சேபனைகளைப் பெற்று, எட்டு வாரத்துக்குள், அறநிலையத் துறை ஆணையர் இறுதி முடிவெடுக்க வேண்டும்’ என, ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்பிய அறநிலையத் துறை அதிகாரிகளும், ஆணையரும், விரிவான ஆலோசனை மேற்கொண்டனர். வழக்கு யுத்தம் துவங்கிய 25 ஆண்டுகளில், எல்லாமே தலைகீழாக மாறிவிட்டிருந்தது. பாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள அம்பத்தூர், முகப்பேர், அண்ணா நகர் மேற்கு, கிழக்கு போன்ற பகுதிகளில், ஒரு கிரவுண்டு நிலத்தின் விலை, ஒரு கோடி ரூபாயை எட்டிவிட்டது. வாடகை, பூஜை கட்டணங்கள், உண்டியல் வருவாய், நன்கொடைகள் என, கோவிலின் வருவாயும் அதிகரித்து விட்டது. திருவல்லீஸ்வரரின் அருளால், வங்கியில் ஒரு கோடி ரூபாய் வைப்புத் தொகை இருக்குமளவு, கோவிலின் நிதிநிலை உயர்ந்து விட்டது. “”முன்னோர், கோவிலைப் பரிபாலனம் செய்வதற்குக் கொடுத்த சொத்துக்களை அபிவிருத்தி செய்யலாமே தவிர, விற்கக் கூடாது” என, அக்கோவிலின் பரம்பரை அறங்காவலர் சண்முகசுந்தரம், கடுமையாக வாதிட்டார்.

கோவில் நிலத்தை இனி விற்பதிலை – உருப்படியான முடிவு: நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, அறநிலையத் துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவு: “கோவில் இடத்தில் குடியிருந்து வருவோருக்கு, அந்த நிலத்தை விற்பனை செய்வது, ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்து, தமிழகம் எங்கும் உள்ள கோவில் சொத்துக்கள், பராதீனம் அடையும் சூழ்நிலையை ஏற்படுத்தும். மேலும்,

யார் தானமாகக் கொடுத்ததை யார் விற்பது? அறநிலையத் துறைக்கு அத்தகைய அதிகாரம் இருந்தால், அதுவே சட்டத்திற்குப் புறம்பானது. கொடையாக பக்தர்கள் கொடுத்த நம்பிக்கையை / பிணையை அறுப்பதற்கு எந்த சட்டத்திற்கும் உரிமை இல்லை. நூறு / ஆயிரம் ஆண்டுகளாக இருக்கும் கோவில் சொத்துகளை, வாங்க-விற்க யாருக்கும் அதிகாரம் இல்லை.

பணவீக்கத்தின் காரணமாக, ரூபாயின் மதிப்பு ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகிறது; அசையாச் சொத்துக்களின் மதிப்பு உயர்ந்து கொண்டே போகிறது. இன்றைய நில விற்பனைத் தொகை, நாளை எவ்விதத்திலும் கோவிலுக்குப் பயன்படாத நிலையாக மாறும். எனவே, கோவில் சொத்துக்களை, குடியிருப்போருக்கு ஒட்டுமொத்தமாக விற்பது, ஓர் ஆபத்தான முயற்சியாகவே கருதப்படுகிறது. எதிர்காலத்தில், கோவில்களின் நலன் பாதிக்கும் என்பது, தொலைநோக்குப் பார்வையில் புலப்படும். இவ்வாறான விற்பனை முடிவுகள், இதர கோவில்களுக்குச் சொந்தமான நிலங்களில் குடியிருப்போருக்கும், ஒரு தூண்டுகோலாக அமைந்து, கோவில் நிலங்களுக்கு, ஒரு பொதுவான ஆபத்து ஏற்படும். எனவே, திருவல்லீஸ்வரர் கோவில் மனைகளை விற்க முடியாது”, இவ்வாறு, ஆணையர் உத்தரவிட்டார். அறநிலையத் துறை ஆணையரின் இந்த அதிரடி உத்தரவால், இனி, தமிழகத்தில் உள்ள எந்தக் கோவிலின் சொத்துக்களும், விற்பனை செய்யப்பட முடியாத, ஆரோக்கியமான நிலை உருவாகியுள்ளது.

சிவன் சொத்து குலநாசம் / தெய்வம் நின்று கொல்லும்: 1968ல் குத்தகைக்கு என்று இந்நிலம் கொடுக்கப்பட்டது[8]. 1984ல் ஆணை போட்டு விற்கப்பட்டது[9]. 1984லிருந்து அனுபவித்து வந்த நிலையில், சிலர் 1987ல் அறத்துறை ஆணையை எதிர்த்து வழக்குப் போட[10], 1994ல் வழக்கு போல, உயர்நீதி மன்றம் தீர்ப்பை மறுபரிசீலினை செய்ய அறத்துறைக்கு திரும்ப அனுப்பியது[11]. 29.8.1997 to 8.6.2000. காலகட்டத்தில் நடந்ததை விசாரிக்கப்பட்டது. 2004ல் தீர்ப்பு வழங்க[12], 2007ல் உயர்நீதி மன்றம் ஆணையிட[13] இப்பொழுது நடவடிக்கை எடுக்கிறார்கள் போலும்.  இவ்வாறு 1968ல் அண்ணாதுரை காலத்தில் இருந்து, ஜெயலலிதா காலம் வரை இழுத்தடிக்க முயன்ரவர்களுக்கு, இன்னும் இழுத்தடிக்கவா தெரியாது. சட்ட ரீதியாக மேல் முறையீடு என்றெல்லாம் இருப்பதால், வாங்கியவர்கள் பழுத்த “சிவபக்தர்களாகவே” இருந்தாலும் விட்டுவிடப் போவதில்லை. ஆகவே இவர்கள் மறுபடியும், உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம் என்று போய்கொண்டுதான் இருப்பார்கள். அதற்கு அந்த வக்கீல்கள் உதவி செய்து கொண்டுதான் இருப்பார்கள். இறைவன் “திருவிளையாடல்” புரிந்து இவர்களை மாற்றினால் தான் உண்டு. இல்லையெனில், இவர்கள் எல்லாவற்றையும் மாற்றி விடுவார்கள். எப்படி கருணாநிதி / ஜெயலலிதா வாழ்க்கைகள்[14] இப்பொழுது உள்ளனவோ அல்லது முந்தைய ஆட்சியாளர்கள் இறந்து மறைந்தார்களோ, அதே நிலை தான் எல்லோருக்கும் ஏற்படும். தெய்வம் நின்று கொல்லும் என்பது தப்பாமல் நடக்கும்.
வேதபிரகாஷ்

12-11-2011


[1] சரித்திர ரீதியில் இல்லாத “ஆரிய-திராவிட” இனவாத கட்டுக்கதைகளை, இனவெறியோடு இன்றும் அத்தகைய மாயைகளை கட்டிப் பிடுத்துக் கொண்டு, மக்களை முட்டாளக்கி வருகின்ற மாநிலல் தமிழ்நாடு தான் அல்லது அவ்வறு உலகர்ட் உலகதிலேயே நம்பி வரும் கூட்டமும் இங்குதான் உள்ளது.

[2] 1969களில் அண்ணதுரை “அந்தர் பல்டி” அடித்து பயந்து இந்திய அரசியல் சட்டத்திற்கு பணிந்தாலும், தமிழ்நாட்டில், இன்னும் கூட சில “அறிவு ஜீவிகள்” தமிழ்நாடு, தனிநாடு என்றெல்லாம் பேசி-எழுதிக்கொண்டுதான் இருக்கின்றன.

[3] இங்குதான் மற்ற இந்து விரோதிகளும் சேந்து கொள்கின்றனர். அதனால் தான் கோவில் சொத்துகளை கிருத்துவர்கள், முஸ்லீம்கள் கூட வாங்கிக் கொள்கிறார்கள், திருடுகிறர்கள், கொள்ளையெடிக்கிறார்கள். அந்தகால சேவியர், மாலிக்காபூர், ஔரங்கசீப் போல நடந்து கொள்கிறார்கள். அநியாயம், அக்கிரமம், கொடுமை, கொடூரங்களை செய்து வருகிறார்கள்.

[4] ஹிந்து ஒழிக, ஹிந்திகாரர்கள் ஒழிக, வந்தேரிகள், உறிஞ்சிகள். என்றெல்லாம் பேசுவது, அவர்களைத் தாக்குவது, ஆனால் மறைமுகமாக அவர்களுடனே உறவுகள் வைத்துக் கொண்டு அல்லது பணத்தை வாங்கிக் கொண்டு மக்களை ஏமாற்றி வருவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே தான்! அப்பொழுது அவர்கள் ஹிந்தியில் பேசுவார்கள் பாருங்கள், அப்பொழுது தமிழர்களே முழிப்பார்கள், “”எப்படி இந்த திராவிடர்கள் இந்தி பேசுகிறார்கள் இல்லை இந்தி பாடையில் செல்கிறார்கள்?” என்று!

[5] எப்பொழுது பார்த்தாலும் நதி நீர் பிரச்சினை என்று வைத்த்க் கொண்டு கேரளா, கர்நாடகா, ஆந்திரா என்று பிரச்சினைகளை வைத்துக் கொண்டிருப்பதை காணலாம். மற்ற நேரங்களில் அதைப் பற்ரி பேச மாட்டார்கள். தொழிற்சாலைகள் அங்கு சென்றுள்ளதை கவனிக்கலாம். உற்பத்தி செய்யும் தொழிர்சாலைகள் இங்கு இருந்தாலும், விற்பனை செய்வது தமிழகத்திற்கு வெளியில் நடபதைப் பார்க்கலாம்.

[6] கான்டிரேக்டுகளில், டென்டர்களில் கொள்ளையெடித்ததை, இப்பொழுது 2-ஜி என்று, “ஆரியர்களுடன்” செந்து கொண்டு கொள்ளையெடித்திருக்கிறார்கள்.

[7] தினமலர் சிறப்பு நிருபர், கோவில் நிலங்களை இனி விற்பதில்லை: அறநிலையத்துறை முடிவு, பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2011,23:32 IST, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=347526

[8] மிக்கப்படித்த அறிஞர் அண்ணாதுரை எப்படி அப்படி 1968ல் குத்தகைக்குக் கொடுத்தார் என்று தெரியவில்லை. ஒருவேளை, பீரங்கியால் பிளக்க முடியாதத்தை இப்படி பிளந்து விடலாம் என்ற சாதுரியத்தில் கொடுத்தார் போலும்!

[9] Na.Ka.No.11/76 R2, dated 7.12.1984 followed with Government Order dated 7.12.1984.

[10] The said order dated 7.12.1984 was challenged by some of the individuals interested in the welfare of the temple in W.P.No.286 of 1986.

[11] The Court by order dated 11.1.1994 set aside the order of the second respondent dated 7.12.1984 and remitted the matter back to the Commissioner, HR&CE for fresh disposal by following the provisions of the Act and Rules.

[12] EXECUTIVE OFFICER versus JAGATHAMBIGAI NAGAR- High Court of Madras

http://www.rishabhdara.com/sc/view.php?case=75110

http://indiankanoon.org/doc/1730914/

[13] தீர்ப்புகளின் படி, வேலைசெய்ய எவ்வளவு காலத்தை எடுத்த்க் கொள்கின்றனர், அதற்கேற்றபடி, எப்படி கோவில் நிலம் அனுபவிக்கப் படுகிறது என்பதையெலாம் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

27Mar2007 (GJX) 0009 MAD

Madras High Court

THE EXECUTIVE OFFICER, CHENNAI & ANOTHER

Vs.

JAGATHAMBIGAI NAGAR CO-OPERATIVE HOUSE SITE SOCIETY, REP BY ITS PRESIDENT, CHENNAI & OTHERS

Decided on: March 27, 2007

http://www.ejurix.in/Cases/MAD/MAD-2007/27Mar2007%20(GJX)%200009%20MAD.htm

(2007) 4 MLJ 476 (Mad)

http://mljlibrary.com/nominal-index/C1MF4PC1MH6RF4P.htm

[14] இங்கு எந்த தனிப்பட்ட நபர்களைப் பற்றி குறைசொல்லவில்லை. ஆட்சியாளர்களாக இருக்கும் போது, எவ்வாறு கோவில் நிலம் விற்கப்படுகிறது, அக்காரியம் சாதாரணமாக நீதிமன்றங்களில் குறிப்பிட்ட சட்டப்பிரிவுகளில் அலசப்படுகின்றன என்ருதான் எடுத்துக் காட்டப்படுகிறது. ஏனெனில், அந்நிலத்தை கோவிலுக்கு தானமாகக் கொடுத்த போது, எந்த சட்டத்திற்கும் உட்பட்டு கொடுக்கவில்லை என்பத்கு தான் உண்மை. அதாவது அந்நிலத்தை யாரும் விற்கவும் முடியாது, வாங்கவும் முடியாது.

செஞ்சி கோவில் வழக்கு: இந்துக்களும், கிருந்துவர்களும் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன?

ஓகஸ்ட்20, 2011

செஞ்சி கோவில் வழக்கு: இந்துக்களும், கிருந்துவர்களும் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன?


தமது மூலங்களை-வேர்களை மறந்த மதம் மாறிய முகமதியர்கள், கிருத்துவர்கள்: முகமதியர்-ஐரோப்பியர்கள் வந்தபோது, இந்நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம் முதலியவற்றை அழித்துவிட பலவழிகளில் முயன்றனர். துரதிருஷ்டவசமாக, மதம் மாறிய இந்துக்கள் அதாவது இப்பொழுது முகமதியர் / முஸ்லீம்கள், கிருத்துவர்கள் என்று உலாவரும் இந்தியர்கள், தமது நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிக மூலங்களை அறிந்து அறியாதவாறு, வேர்களை வெட்டிவிட்டு, ஏதோ தாம் மத்தியத்தரைகடல் நாடுகளிலிருந்து வந்தது போல நடித்துக் கொண்டு, இந்தியாவை வெறுத்து வருகின்றனர். ஆகவே, அவர்கள் தமது மூலங்கள்-வேர்களை அறிந்து கொண்டு, இந்திய பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம் முதலிய காரணிகளுடன் பிணைத்துக் கொண்டு வாழவேண்டும். சமீபத்தைய செஞ்சி கோவில் வழக்கு அந்த உண்மையினை எடுத்துக் காட்டுகிறது.

செஞ்சியின் சுருக்கமான சரித்திரம்: செஞ்சியின் கடந்த 500-600 வருட கால சரித்திரம், அந்நிலையை அதிகமாகவே எடுத்துக் காட்டுகிறது. பல்லவ, சோழ, பாண்டிய, விஜயநகர, நாயக்கர் காலங்களைச் சேர்ந்த கல்வெட்டுகள் செஞ்சியில் காணப்படுகின்றன[1]. 15ம் நூற்றாண்டிலிருந்து நாயக்க மன்னர்கள் செஞ்சியின் முன்னேற்றத்திற்கு பல காரியங்களை செய்துள்ளனர்.ஆனால், 1564ல் முகமதியர்களால் விஜயநகர ராஜா விரட்டப்பட்டு, செஞ்சி  ஆக்கிரமிக்கப்பட்டது. அவர்களது ஆட்சிக் காலத்தில் கோவில்கள் பெரும்பாலும் கொள்ளையடிக்கப்பட்டன, இடிக்கப்பட்டன, அவ்விடங்களில் மசூதிகள் கட்டப்பட்டன. 1712ல் செஞ்சி ராஜாவிற்கும், ஆங்கிலேயர்களுக்கும் இடையே, டேவிட் கோட்டையில் சண்டை நடந்தது[2]. 1721ல் ராஜா தேசிங் கப்பம் கட்டாததால் ஆர்காட் நவாப் படையெடுத்தான். சதத்துல்லா என்பவனின் கீழ் முகமதிய படை செஞ்சியை முற்றுகையிட்டது. போரில் கொல்லப்பட்டான். தேசிங்குவின் பெயர் தேஜ் சிங் என்பதாகும். ராஜஸ்தான் கவர்னர், சவரூப் சிங் என்பவரின் மகன். ராஜா தேசிங்கின் உடல் செட்டிக்குளத்தில் உள்ள மண்டபத்தில் தகனம் செய்யப்பட்டு அந்த இடத்தில் ஒரு கல்வெட்டும் பதிக்கப்பட்டது. ஆனால் அது 1878லேயே காணவில்லை என்று ஆர்காடு கெசட்டியர் குறிப்பிடுகிறது[3]. 1749ல் அன்வருத்தூன் ஆம்பூர் போரில் கொல்லப்பட்டவுடன், முறைதவறிய வழியில் பிறந்தவனான முஹம்மது அலி செஞ்சியைப்பிடித்துக் கொண்டான்[4]. பிரெஞ்சுக்காரர்களும், சந்தாசாகிப் (முகலாயர்களும்) சேந்து கொண்டு, கோவில்கள் தாக்கப்படக்கூடாது என்றால், பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டி பணம் சம்பாதித்தனர்[5].

செஞ்சியில் இந்து கோவில்களின் நிலை: நாயக்க மன்னர்களும், விஜயநகர மன்னர்களும் கட்டிய மிகப்பெரிய கோவில்கள், முகலாயர்-ஐரோப்பியர் நடத்திய போர்களில் சேதப்படுத்தப்பட்டன. கலைநயம்மிக்க பட்டாபிராமர் கோவிலில் இருந்த உயரமான துண்களை பிரெஞ்சு ஆட்சியின் போது, புதுச்சேரி கடற்கரையை அழகு படுத்த எடுத்துச் சென்றனர்[6]. 1860ல் பலியா என்ற ஜைன அதிகாரி மற்றும் சென்னை மாகாண அரசு உறுப்பினர், செஞ்சியிலிருந்து சித்தாமீர் என்ற இடத்திற்கு நிறைய சிற்பங்களையும், கற்தூண்கள் முதலியவற்றை எடுத்துச் சென்றுள்ளார்[7]. ஆங்கிலேயர்களும் இந்த விஷயத்தில் சளைத்தவர்கள் இல்லை. 1858ல் ஆர்க்காடு கலெக்டர், ஸ்ரீ பட்டாபி ராமஸ்வாமி கோவிலின் அழகுமிகு தூண்களை எடுத்து கால். நீல் சிலையின் பீடத்துக்குக் கீழ் வைக்க “ஐடியா” கொடுத்தார்[8] (அதாவது கோவில் தூண்களை அந்த அளவிற்கு இழிவு படுத்தவேண்டும் என்பதுதான் அவர்களது எண்ணம்). இன்றும் சிறப்பான கட்டுமானத்துடன் காணப்படும் செஞ்சிக் கோட்டை வெங்கடரமணர் கோவிலை வழிபாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்த கோவில்களில் மீதமிருக்கும் மண்டபங்கள், கோபுரங்கள், இதில் உள்ள சிற்பங்களும், பாரம்பரியத்தின் மீதும், கலையின் மீதும் அக்கறை உள்ள ஒவ்வொருவரையும் வருத்தமடையச் செய்யும். கோடிக்கணக்கில் செலவு செய்து புதிய கோவில்களை கட்டுவதற்கு முன், பழமையான கோவில்களை பராமரிப்பதும், அழிவில் இருந்து தடுப்பதும் ஒவ்வொருவரின் கடமையாகும்

செஞ்சி ஶ்ரீ கோதண்டராமர் கோவில்: இவ்விதமாக சுதந்திரத்திற்கு முந்தைய சரித்திரம் இருக்கும்போது, சுதந்திரத்திற்குப் பிறகு, திடீரென்று ஒரு கிருத்துவ பாதிரி, சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள ஸ்ரீகோதண்டராம கோவிலுடன் சேர்ந்த இடம் முழுவதும் தமக்குச் சொந்தம் என்று ஆரம்பித்தபோது, இன்னொரு புதிய பிரச்சினை தோன்றியது. இப்பிரச்சினையைப் பற்றிய என்னுடைய முந்தைய பதிவுகள்[9].

நாத்திக ஆட்சியாளர்கள் காலத்திலும் முகமதியர் போன்ற நிலை தொடரும் விதம் (பிப்ரவரி 2010)[10]: செஞ்சியில் உள்ள கோதண்டராமர் கோவில் பிரச்னையில் தமிழக அரசு தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள புராதன நகரங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியும் ஒன்று. 13ம் நூற்றாண்டில் தமிழ் மன்னர்கள் இங்கு கட்டத் துவங்கிய கோட்டையை விஜயநகர மன்னர்கள், நாயக்க மன்னர்கள் தொடர்ந்து பலம் பொருந்திய கோட்டையாக கட்டினர். ஒரு ராஜ்ஜியத்தின் தலைமையிடமாக விளங்கிய செஞ்சிக் கோட்டையை சுற்றி பல கோவில்கள் உருவாக்கப்பட்டன. இந்தியர்களின் பண்பாடு, கலை, கலாசாரத்தை விளக்கும் நகரங்களில் ஒன்றாக 18ம் நூற்றாண்டு வரை வெகு சிறப்போடு செஞ்சி விளங்கியது. இந்து மன்னர்களின் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு செஞ்சிக்கு சரிவு ஏற்படத் துவங்கியது. தெய்வ வழிபாட்டின் மூலம் ஒழுக்கத்தையும், நற்பண்புகளையும், கலையையும் வளர்க்க முன்னோர் உருவாக்கிய கலைப் பொக்கிஷமாக விளங்கிய கோவில்கள், சிலைகள் சீரழிக்கப்பட்டன. விலைமதிப்பு மிக்க பஞ்சலோக சிலைகள் திருடப்பட்டன. இப்போது பல கோவில்கள், சுவாமி சிலைகள் இல்லாத வெற்றிடமாக காட்சி தருகின்றன.
மதப்பிரச்சினையான கோவில் இடம் (டிசம்பர், 2009): இது போன்ற கோவில்களில் செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள கோதண்டராமர் கோவிலும் ஒன்று. நாயக்கர்கள் காலத்தை சேர்ந்த 500 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் வழிபாடு நின்றிருந்த காலத்திலும், சிங்கவரம் அரங்கநாதர், பீரங்கி மேடு ஏகாம்பரேஸ்வரர் கலந்து கொண்ட மாசி மக தீர்த்தவாரி தடையின்றி நடந்தது. ஏகாம்பரேஸ்வரர், கோதண்டராமர் கோவில் உள்ளே படித்துறை வழியாக சென்று சங்கராபரணி ஆற்றில் இறங்கி தீர்த்தவாரி நடக்கும். பின், ஆற்றின் நடுவே உள்ள நீராழி மண்டபத்தில் பக்தர்களுக்கு சுவாமி காட்சி தருவார். சிங்கவரம் ரங்கநாதர் சுவாமி, திண்டிவனம் ரோட்டில் உள்ள நெடுஞ்சாலைத் துறை பயணியர் விடுதி வழியாக சங்கராபரணி ஆற்றில் இறங்கி தீர்த்தவாரி நடக்கும். பின், பாலத்தின் அருகிலுள்ள மண்டபத்தில் சுவாமி எழுந்தருள்வார். இதன் பிறகு, கோதண்டராமர் கோவிலில் வழிபாட்டை ஏற்படுத்த அறக்கட்டளை துவக்கி பஜனை, யாகம், பாகவத சொற்பொழிவுகள் நடத்தினர். பின், சிலை வைத்து வழிபாடு நடத்தினர். கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி 2009, கோவில் இடத்தில் அறக்கட்டளைக்கு தொடர்பில்லாத நபர், தனது டிராக்டரில் பொருத்திய புதிய ஏர் கலப்பையை சரிபார்க்க கோவில் அருகில் இருந்த இடத்தை உழுதார். இதன் பிறகே பிரச்னை உருவாகி டிச., 7ம் தேதி கோவில் இடம் கிறிஸ்தவர்களுக்கு சொந்தமானது என செஞ்சி பங்கு தந்தை ஜோசப் ஆல்பர்ட், போலீசில் புகார் செய்தார். மதம் சம்பந்தமான பிரச்னை என்பதால் போலீசார் பிரச்னையை தாசில்தார் சங்கரனுக்கு பரிந்துரைத்தனர். பிறகு டிச., 16ம் தேதி முதல் சமாதான கூட்டம் திண்டிவனம் சப் -கலெக்டர் மஞ்சுளா தலைமையில் நடந்தது.
கிருத்துவர்கள் வைணவ கோவில் நிலத்தை சைவ மடாதிபதியிடமிருந்து 1878ல் வாங்கினாராம்! கோதண்டராமர் கோவில் உள்ள சர்வே எண் 67-1 உள்ள 1.70 ஏக்கர் நிலத்தை கடந்த 1878ம் ஆண்டு விழுப்புரம் தாலுகா மயிலம் தேவஸ்தான ஆதீனம் பரம்பரை தர்மகர்த்தா சிவாக்கியா பாலய சுவாமிகளிடம் இருந்து, திண்டிவனம் தாலுகா செம்மேடு மதுரா வேலந்தாங்கல் ரெவரெண்டு எப். டாருஸ் என்பவர் 500 ரூபாய்க்கு கிரயம் வாங்கியதாக பத்திரத்தை, கிறிஸ்தவர்கள் தாக்கல் செய்தனர். இந்துக்கள் தரப்பில் ஆவணங்களை தாக்கல் செய்ய ஒரு மாத கால அவகாசம் கேட்டதால் ஜன., 20ம் தேதிக்கு கூட்டத்தை தள்ளி வைத்தனர். அதுவரையில் இரு தரப்பினரும் பிரச்னைக்குரிய இடத்திற்கு செல்லக் கூடாது. சம்பந்தப்பட்ட இடத்தில் எந்த மாற்றமும், மாறுதலும் செய்யாமல் இருக்க தீர்மானம் நிறைவேற்றினர். கிருத்துவர்கள் வைணவ கோவில் நிலத்தை சைவ மடாதிபதியிடமிருந்து 1878ல் வாங்கினார் என்ற விஷயமே சர்சசைக்குரியதாக உள்ளது. இது ஆங்கிலேயர்களின் சைவ-வைணவ வேறுபாட்டை வளர்க்க ஏற்படுத்தப்பட்ட சதியாகக் கூட இருக்கலாம்.
பூஜை நிறுத்தப்படலும், நிலம் அளக்கப்படலும்: பின், ஜன., 20, 2010ல் கூடிய கூட்டத்தில் இரு தரப்பிலும் சமர்ப்பித்த ஆவணங்களின் உண்மை தன்மையை வருவாய்த் துறையினர் ஆய்வு செய்வது, பிப்., 1ம் தேதி கோவில் இடத்தை இருதரப்பினர் முன்னிலையில் சர்வேயர்களை கொண்டு அளப்பது. பின், பிப்., 3ம் தேதி மீண்டும் சமாதானக் கூட்டம் நடத்துவது என தீர்மானித்தனர். இதன்படி கடந்த 1ம் தேதி கோவில் இடத்தை அளப்பதை கண்காணிக்க அதிகாரிகள் வருவதற்கு முன், பங்கு தந்தை ஜோசப் ஆல்பர்ட், சொத்து பாதுகாப்பு குழுத் தலைவர் ஆசிரியர் செல்வராஜ், பிரச்னைக்குரிய இடத்திற்கு வந்தனர். அப்போது கோவிலில் அர்ச்சகர் சரவணன், பூஜைகளை செய்து கொண்டிருந்தார். பூஜையை நிறுத்தி கோவிலை பூட்டுமாறு ஜோசப் ஆல்பர்ட்டும், செல்வராஜூம் கூறியதால் பதட்டம் ஏற்பட்டது. அங்கு வந்த தாசில்தார் சங்கரன், கோவிலை பூட்டி சாவியை வாங்கினார். இவ்விதமாக, இந்தியக் கிருத்துவர்கள், ஆட்சியாளர்கள் நடந்து கொண்டர்கள் என்றால், அவர்கள் எந்த அளவிற்கு, இந்துக்களின் அடிப்படை உரிமகளை மதிக்கிறார்கள் என்பதனை அறிந்து கொள்ளலாம்.
இந்து-கிருத்துவ பேச்சுவார்த்தைக் கூட்டங்கள்: இதன் பிறகு இந்துக்கள் தரப்பில் பதட்டம் ஏற்பட்டது. அதுவரை நடந்த சமாதான கூட்டத்தில் உள்ளூர் பிரமுகர்கள் மட்டும் கலந்து கொண்ட நிலையில், 3ம் தேதி நடந்த மூன்றாவது கூட்டத்தில் கலந்து கொள்ள இந்து முன்னணி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் காஞ்சி கண்ணன், மாவட்ட பொதுச் செயலர் நேரு ஆகியோரும், கிறிஸ்தவர்கள் தரப்பில் புதுச்சேரி மாவட்ட சொத்து பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த அருட்தந்தை அருள்புஷ்பம் வந்தனர். இரு தரப்பிலும் பலர், தாசில்தார் அலுவலகம் முன் திரண்டதால், விழுப்புரத்தில் இருந்து அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். வெளியூரில் இருந்து வந்தவர்களைக் கொண்டு கூட்டம் நடத்தினால் சிக்கலாகி விடும் என கருதிய போலீசார், மூன்று கட்டமாக கூட்டத்தை நடத்த சப்- கலெக்டர் மஞ்சுளாவிடம் கேட்டனர். இதனால், முதலில் இந்துக்களை மட்டும் அழைத்து கூட்டம் நடத்தி கருத்து கேட்டனர். அடுத்து கிறிஸ்தவர்களிடம் கருத்து கேட்டனர். மூன்றாவதாக நடந்த கூட்டத்தில் ஏற்கனவே நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட உள்ளூர் நபர்களை மட்டும் அனுமதித்தனர். மற்றவர்களை தாசில்தார் அலுவலக வளாகத்தில் இருந்து வெளியேற்றினர். இந்துக்கள் தரப்பில் எட்டு பேரும், கிறிஸ்தவர்கள் தரப்பில் ஒன்பது பேரும் கலந்து கொண்டனர். இந்துக்களுக்கு இடம் ஒதுக்குவது சம்பந்தமாக, பேராயரை கேட்டு முடிவு தெரிவிப்பதாக கிறிஸ்தவர்கள் தரப்பில் கூறப்பட்டது. இதற்கு ஒப்புக் கொண்டு 15ம் தேதிக்கு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்துக்களுக்கு இடம் ஒதுக்குவது சம்பந்தமாக, பேராயரை கேட்டு முடிவு தெரிவிப்பதாக கூறிய கிறிஸ்தவர்கள்: இந்துக்களுக்கு இடம் ஒதுக்குவது சம்பந்தமாக, பேராயரை கேட்டு முடிவு தெரிவிப்பதாக கிறிஸ்தவர்கள் தரப்பில் கூறப்பட்டது வேடிக்கையிலும், வேடிக்கை. இதில் எங்கு பேராயர் வந்தார், அல்லது அவருக்கு என்ன இதில் வேலை என்றதெல்லாம் மர்மமாக உள்ளது. இது சாதாரண நிலப்பிரச்சினை போலல்லாது, வேறோதோ திட்டமிட்ட ஒரு பெரிய பிரச்சினையை உண்டாக்க மனத்தில் வைத்துக் கொண்ட செயல்பட்ட முறை நன்றாகத் தெரிகிறது. ஏனெனில், இந்துக்களும் அவ்வாறு நினைத்திருந்தால், தங்களது மதத்தலைவர்களை அழைத்து வருவோம் என்று பிரச்சினையை வளர்த்திருக்கலாம். ஆனால், உள்ளூரிலேயே அவர்கள் அமைதியாக போராடிய நிலை போற்றுவதாக உள்ளது.
இந்துக்களின் மீது அடிப்படை உரிமைகளையும் மீறி கட்டுப்பாடு விதித்தது: அதுவரை கோவிலில் வழிபாடு நடத்தாமல் இருக்க வேண்டும் என்ற பாரபட்சமான முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி மாவட்ட செயலர் சிவசுப்ரமணி, கோதண்டராமர் கோவில் அறக்கட்டளை நிறுவனர் ரங்க ராமானுஜதாசர், கணேசன், பழனி, தமிழ்ச்செல்வி வெளிநடப்பு செய்தனர். கோபிநாத், அரங்க ஏழுலை, ஏழுமலை தீர்மானத்தில் கையெழுத்திட்டனர். கூட்டம் முடிந்த சிறிது நேரத்தில், காஞ்சி கண்ணன் தலைமையில் இந்துக்கள், கோவிலில் வழிபாடு நடத்தச் சென்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின், கோவிலுக்கு வெளியே தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டு கலைந்து சென்றனர். கோதண்டராமர் கோவிலை பூட்டியதற்காக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னனியினர் அறிவித்துள்ளனர்.
பிரச்சினைத் தீர்ப்பதற்கு பதிலாக கோவிலைப் பூட்டிய கலெக்டர்: சப் – கலெக்டர் மஞ்சுளா தலைமையில் கூட்டம் நடத்த இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கலெக்டர் தலைமையில் கூட்டம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு அரசு தரப்பில் இதுவரை பதில் இல்லை. இந்த பிரச்னையில் அடுத்த கட்டமாக, இந்து அறநிலையத்துறை தலையிட வேண்டும் என்று செஞ்சி அருணாச்சலேஸ்வரர் கோவில் வழிபாட்டுக் குழு உறுப்பினர் லோகஜெயராமன், சிங்கவரம் ரங்கநாதர் கோவில் தேர் திருப்பணிக் குழு உறுப்பினர் ஏழுமலை கோரிக்கை விடுத்துள்ளனர். 500-600 வருடகாலத்தைய கோவிலை யாரும் விற்க்கவோ வாங்கவோ முடியாது என்ற அடிப்படையைக் கூடத் தெரிந்தும், தெரியாதது மாதிரி நடித்து செயல்பட்ட கலெக்டர், கோவிலை பூட்டி, போலீஸாரையும் காவலுக்கு வைத்தது தான், உச்சக்கட்ட தமாஷா எனலாம்.
நிலவிலை உயர்ந்து வருகிறது என்று காரணம் கூறுவது – பிரச்னைக்கான காரணம்: இந்துக்களும், கிறிஸ்தவர்களும் ஒற்றுமையாக இருந்த செஞ்சியில் இப்போதைய பிரச்னைக்கு இப்பகுதி விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாறி வருவதே முக்கிய காரணம்.பிரச்னைக்குரிய இடத்தை ஒட்டிய பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் இரண்டு கோடி ரூபாய்க்கு விலை போகிறது. பிரச்னைக்குரிய இடத்தின் மதிப்பு மூன்று கோடிக்கு உயர்ந்துள்ளது. இதனால் இந்த இடம் யாருக்கு சொந்தம் என்பதில் இரு தரப்பிலும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த இடத்தில் இந்து கோவில் உள்ளது என்பதற்கு கோபுரங்களும், மண்டபங்களும் மறுக்க முடியாத சாட்சி. இந்த இடம் தாங்கள் கிரயம் பெற்றது என கிறிஸ்தவர்கள் ஆவணங்கள் சமர்ப்பித்துள்ளனர். எனவே, இந்த இடத்தை இரு தரப்பினரும் இழக்க தயாராக இல்லை.இரு தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் விதமான தீர்க்கமான, முடிவான திட்டத்தை தமிழக அரசு எடுக்க வேண்டும். இப்பிரச்னையை தொடரச் செய்வதும்; காலம் கடத்துவதும் செஞ்சி பகுதியின் அமைதி கெடுவதற்கு வழி வகுக்கும்.
சமாதான கூட்டத்தில் நடந்தது என்ன? செஞ்சி கோதண்டராமர் கோவில் பிரச்னை கூறித்து மூன்று கட்டமாக சமாதானக் கூட்டம் நடந்தது. முதல் கூட்டத்தில் இந்துக்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். இதில் காஞ்சி கண்ணன் பேசுகையில், “இந்து கோவில் என்பதற்கு மண்டபங்கள், ராஜகோபுரம், கருவறையே சாட்சி. இந்து கோவில்கள் இந்துக்களுக்கு சொந்தமானது. இதை வாங்கியதும், விற்பனை செய்ததும் செல்லாது. கோவிலை பூட்டியவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். கோவில் இடத்திற்கான அரசு ஆவணங்களை முறைகேடாக திருத்தி உள்ளனர். இதை ஆய்வு செய்து திருத்தியவர்கள் மீது தேசிய ஒழுங்கு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கிரய பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளதை போல் சொத்தின் மூலப்பத்திரம், டிரஸ்டி பத்திரத்தை ஏன் ஒப்படைக்கவில்லை. இப்போது பட்டாவில் உள்ள காண்டியார் என்பவர் யார், அவரின் தந்தை பெயர் என்ன? கிரயம் பெற்ற டாரூசுக்கும், காண்டியாருக்கும் என்ன உறவு, என கேள்வி எழுப்பினார். அடுத்து கிறிஸ்தவர்களுக்கு மட்டும் நடந்த கூட்டத்தில், அவர்கள் தரப்பில் வக்கீல் பாலசுப்பிரமணியன் பேசுகையில், இந்துக்கள் தரப்பில் இந்து கோவில் தான் என்பதற்கும், அதில் தங்களுக்கு உள்ள உரிமைக்கும் எந்தவிதமான ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை என்றார். பங்கு குரு ஜோசப் ஆல்பர்ட் பேசுகையில், காண்டியார் என்பது பிரெஞ்ச் பெயர், செஞ்சி செயின்ட் மிக்கேல் சர்ச்சில் பாதிரியாராக இருந்தவர். இவரது கல்லறை சர்ச்சின் பின்புறம் உள்ளது. இந்த விஷயங்கள் எதற்கு என்று தெரியவில்லை.
2000 வருடத்தில் நடந்த வழக்கை தள்ளுபடி செய்தது: “காண்டியாருக்கு கொடுத்த பட்டாவை ரத்து செய்யக் கோரி 2000வது ஆண்டு, செஞ்சி கோர்ட்டில் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து வழக்கு தொடர்ந்தவருக்கு கோர்ட்டில் 250 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். போலீசார் நாங்கள் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் சொத்தில் பிரவேசித்தவர்களை தடுத்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த சமாதானக் கூட்டம் தேவையில்லை. சொத்துக்கான ஆதாரத்தை கொடுத்துள்ளோம். சொத்தை எங்களிடம் ஒப்படையுங்கள். கிரய பத்திரத்தை தவிர வேறு மூலப் பத்திரங்கள் கிடையாது. முதல் கூட்டத்தில் கோவிலுக்கு இடம் ஒதுக்கித் தர அவகாசம் கேட்டோம். இப்போது அதை தரமுடியாது. வேண்டுமானால் மார்க்கெட் மதிப்பிற்கு கிரயம் பெற்றுக் கொள்ளுங்கள் என்றார். பிறகு உள்ளூர் பிரமுகர்களை கொண்டு நடந்த மூன்றாவது கூட்டத்தில், இரு கூட்டங்களிலும் என்ன கோரிக்கை விடுத்தனர் என்பது குறித்து முழுமையாக அரசு தரப்பில் தெரிவிக்கவில்லை.
பத்திரம் உண்மையென்றால், நிலத்துடன் பழமையான கோவிலை விற்க்கமுடியுமா? இரண்டாவது கூட்டத்தில், பத்திரத்தின் உண்மை தன்மையை ஆய்வு செய்ததில் அது உண்மையானது என்று தெரிய வந்துள்ளதாக அரசு தரப்பில் அறிவித்தனர். இந்துக்கள் வழிபாட்டிற்கு கோரிக்கை விடுப்பது பற்றி கிறிஸ்தவர்கள் தான் முடிவு சொல்ல வேண்டும் என்று பொறுப்பை கிறிஸ்தவர்கள் மீது அரசு அதிகாரிகள் திணித்தனர். அவர்கள் தங்களின் பேராயரை கேட்டு முடிவை அறிவிப்பதாக தெரிவித்தனர். அதற்காக 10 நாள் அவகாசம் கேட்கப்பட்டது. இந்த அவகாசத்தை வழங்கி 15ம் தேதிக்கு கூட்டத்தை, சப்-கலெக்டர் மஞ்சுளா ஒத்தி வைத்தார். இரண்டு நாளில் கோவிலில் வழிபாடு நடத்த அனுமதிப்பதாக கூறித்தான் தாசில்தார், கோவில் சாவியை வாங்கினார். 15ம் தேதி வரை கோவிலில் பூஜைகள் நடத்தாமல் மூடிவைக்க முடியாது. வழிபட்டிற்கும், அபிஷேகம் செய்யவும் கோவிலை திறந்து விட வேண்டும் என, இந்துக்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. இது குறித்து கிறிஸ்தவர்கள் கருத்தை கேட்காமல், தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்று சப்-கலெக்டர் மஞ்சுளா அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துக்களின் ஒரு பகுதியினர் வெளிநடப்பு செய்தனர்.
செஞ்சியில் விஸ்வரூபம் எடுக்கும் கோவில் பிரச்னை : கிறிஸ்தவர்களுக்கு பட்டா வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்த செஞ்சி வக்கீல் பூபதி கூறுகையில்,“பீரங்கி மேட்டை சேர்ந்த கணேசன் சார்பாக, கடந்த 2000ம் ஆண்டு இந்து கோவில் உள்ள இடத்தின் பட்டா, கிறிஸ்தவரான காண்டியாருக்கு கொடுத்தது செல்லாது என்று வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கில் கலெக்டர், தாசில்தார், வி.ஏ.ஓ., காண்டியார் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டனர். வழக்கு நடந்த ஐந்து ஆண்டும் எந்த அடிப்படையில் பட்டா மாற்றம் செய்யப்பட்டது என்ற தகவலை அரசு தரப்பில், கோர்ட்டில் தெரிவிக்கவில்லை. அதிகாரிகள் ஆஜராகவும் இல்லை. காண்டியார் தரப்பில் சம்மனை இறுதிவரை பெறவில்லை. பேப்பரில் விளம்பரம் செய்து எக்ஸ்-பார்ட்டியாக வழக்கு முடிய வேண்டிய நிலையில், வழக்கு தொடர்ந்த கணேசன் உடல் நலம் இல்லாமல் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர், வழக்கில் ஆஜராகாமல் போனதால் வழக்கை தள்ளுபடி செய்தனர். வழக்கில் சம்மன் அனுப்பிய தொகையைத்தான் அவரிடம் வசூலிக்க உத்தரவிட்டனர். இது அபராதம் கிடையாது. கிறிஸ்தவர்கள், மயிலம் ஆதினத்திடம் இருந்து 1878ல் கிரயம் பெற்று இருந்தாலும் செஞ்சி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த 2000ம் ஆண்டு வரை இதை அனுபவித்ததற்கான ஆதாரம் கிடையாது.
130 வருடங்களாக உபயோகப்படுத்தாத நிலைத்தை வாங்கிய கிருத்துவர்: கிரயம் பெற்று இருந்தாலும், கிரயம் பெற்றவர் வேறு, பட்டா பெற்றவர் வேறு. கிரயப்பத்திரத்திலோ, பட்டா ரசீதிலோ கிறிஸ்தவர்களுக்கு சொந்தமானது என்று எந்த ஆதாரமும் கிடையாது. கிரையம் வாங்கியவர் தனிப்பட்ட நபர். அவரின் வாரிசுகள் யாரும் இதில் உரிமை கோரவில்லை. சொத்து யாருக்கு என்றும் அவர் எழுதி வைக்கவும் இல்லை. காண்டியார் பெயரில் பட்டா வழங்கி இருந்தாலும் அதை குறிப்பிட்ட காலத்திற்குள் டெலிவரி எடுக்க வேண்டும். (அனுபவத்திற்கு கொண்டு வர வேண்டும்) அதுவும் நடக்கவில்லை. இந்த சொத்தை, கிறிஸ்தவர்கள் உரிமை கொண்டாட எந்த முகாந்திரமும் இல்லை’ என்றார்.
மனதை புண்படுத்துகின்றனர் – வழக்கம்போல பரஸ்பர குற்றச்சாட்டுகள்: கிறிஸ்தவர்கள் சொத்து பாதுகாப்பு குழு தலைவர் செல்வராஜ், சமாதான கூட்டத்தில் பேசுகையில், “கிறிஸ்தவர்கள் கோவிலை பூட்டியதாக வரும் செய்திகள், கிறிஸ்தவர்கள் மனதை புண்படுத்துவதாக உள்ளது. நாங்கள் பிரச்னைக்கு உரிய இடத்திற்கு சென்ற போது அங்கே சரவணன், வெங்கடேசன் என இருவர் இருந்தனர். கோவிலில் பூஜை நடந்து கொண்டிருந்தது. முதல் கூட்டத்தில் யாரும் பிரவேசிக்கக் கூடாது என்று கூறியிருந்த போது, ஏன் வந்தீர்கள் கோவில் பூட்டையும், சாவியையும் என்னிடம் தாருங்கள் என வாங்கினேன். இதற்குள் அங்கு வந்தவர்கள் எங்களை மிரட்டினர். அப்போது அங்கு வந்த தாசில்தார், இந்துக்களை விட்டே கோவிலை பூட்டி சாவியை வாங்கினார். நாங்கள் வழிபாட்டை நிறுத்தியதாக கூறுவது தவறு”, என்றார். இந்துக்களின் கோவில், புராதனமான கோவில் என்ற எண்ணம் அவருக்கி இல்லாதது எதனைக்காட்டுகிறது? ஆனால், கிருத்துவ பாதிரி இந்துக்களை மிரட்டிய விவரங்களை பத்திரிக்கைகள் வெளியிடவில்லை. இந்த பிரச்னை தொடர்பாக இந்து முன்னணி மாவட்டச் செயலர் சிவசுப்பிரமணி கூறுகையில், “இதன் மூலம் இந்துக்களை பணிய வைக்க அரசு முயல்கிறது. எந்த அடிப்படையில் காண்டியார் பெயருக்கு பட்டா வங்கப்பட்டது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டதற்கு, அரசிடம் எந்த ஆவணமும் இல்லை என பதில் கொடுத்துள்ளனர். இது குறித்து மேல் முறையீடு செய்ய உள்ளேன்’ என்றார்.

செஞ்சி கோதண்டராமர் கோவில் விவகாரம் அனைத்து கட்சிகள் குரல் கொடுக்க வேண்டுகோள் (மார்ச் 2010)[11]: செஞ்சிக்கோட்டை கோதண்டராமர் கோவிலுக்காக தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்என, பா.ஜ., மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: “செஞ்சி கோதண்டராமர் கோவிலை விலைக்கு வாங்கியதாக சொல்கின்றனர். இது, வெள்ளைக்காரன் விலைக்கு வாங்கியதை போல் உள்ளது. விலை போகும் அதிகாரிகளால், தவறான ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இது திட்டமிட்ட சதி வேலை. நாளைக்கு என்னுடைய பெயரில் எக்மோரை விலைக்கு வாங்கினேன் என்றால், அங்கு ரயில்கள் போக முடியாது என உரிமை கொண்டாட முடியாது. அந்தக் கால மன்னர்கள் இடத்தை பிடித்ததை போல், இடம் பிடிக்கின்றனர். மத மாற்ற முயற்சிகளில் வெற்றி பெற முடியும் என்பது பகல் கனவு. அந்தந்த மத உரிமைகளில் தலையிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது. சர்ச், மசூதி இடங்களை விலை கொடுத்து வாங்கியது என்றால் ஏற்று கொள்வார்களா… செஞ்சி கோதண்டராமர் கோவில் கை விடப்பட்ட சொத்தா? தமிழகத்தில் தி.மு.க., முதல் அனைத்து கட்சிகளும் கோதண்டராமர் கோவிலுக்காக உரிமை குரல் கொடுத்து நியாயம் கேட்க வேண்டும். அப்படி நியாயம் கேட்கவில்லை என்றாலும் பா.ஜ., பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. மதமாற்றங்களை அரசு தடுக்க வேண்டும். இப்பிரச்னையில் வெளிநாடு சதி உள்ளதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது”, இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.


[1] C. S. Srinivasachari, Gingee and its Rulers, Annamalai University, Chidambaram, 1940, p.x.

[2] K. A. Nilakanta Sastri, History of India, Part.III, S. Viswanathan & Co, Madras, 1952, p.415.

[3] Arcot Gazetteer, 1848, p.420.

P. V. Jadadisa Ayyar, South Indian Shrines, AES, 1993,  p.186-187.

[4] K. A. Nilakanta Sastri, History of India, Part.III, Ibid, p. 80.

[5] Soon after this the French and Chanda Sahib marched out and began ravaging and levying contributions on the country. They captured Tiruvati and sent a party to Chidambaram where they plundered the suburbs and negotiated for a large contribution in return for their non-molestation of the temple at the place.

C. S. Srinivasachari, Gingee and its Rulers, Annamalai University, Chidambaram, 1940, p. 475.

[6] C. S. Srinivasachari, Gingee and its Rulers, Annamalai University, Chidambaram, 1940, p.7

[7] In 1860 a Jain official and a member of the Madras Provincial Service, Sri Baliah, took away a number of stone pieces from Gingee to Sittamiir; among them the great stone elephants placed at the foot ofthe Termutti (car-stand), are noteworthy. The most admirable carvings in theVenkataramanaswamitemple are found in the panels on either side of the gateway under the entrance ; and they depict well known scenes from the Ramayana, from the different incarnations of Vishnu and the Puranic legend of the churning of the ocean of milk by the Devas and the Asuras.

C. S. Srinivasachari, Gingee and its Rulers, Annamalai University, Chidambaram, 1940, p.7

[8] The Fattabhi Ramaswami temple is also deemed to be architecturally as important as, and perhaps even more than, the Venkataramanaswami temple. The twelve-pillared mautapam in it constitutes its most conspicuous feature. In 1858 the Collector of South Arcot suggested the removal of its pillars to Madras and their utilisation as a base for the statue of General Neill, (theMadras hero of the Indian Mutiny) at Madras, which was then in process of manufacture.

C. S. Srinivasachari, Gingee and its Rulers, Annamalai University, Chidambaram, 1940, p.8.

[9]  வேதபிரகாஷ், கிருத்துவர்கள்செஞ்சியைத்தாக்கும்மர்மம்என்ன?,

http://christianityindia.wordpress.com/2010/05/19/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-https://atheismtemples.wordpress.com/2010/02/08/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/

http://christianityindia.wordpress.com/2010/02/03/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%8A/

[10] தினமலர், செஞ்சியில் விஸ்வரூபம் எடுக்கும் கோவில் பிரச்னை : அரசின் நடவடிக்கை தேவை[10] பிப்ரவரி 08,2010,00:00  IST,

[11] தினமலர், செஞ்சி கோதண்டராமர் கோவில் விவகாரம் அனைத்து கட்சிகள் குரல் கொடுக்க வேண்டுகோள், மார்ச் 18,2010,00:00  IST

http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=17237

ஸ்டாலின் விளக்கம் கொடுக்கவேண்டிய அளவிற்கு பெரிய கோவில் வந்து விட்டதா?

செப்ரெம்பர்25, 2010

ஸ்டாலின் விளக்கம் கொடுக்கவேண்டிய அளவிற்கு பெரிய கோவில் வந்து விட்டதா?

தஞ்சாவூர் : “”பெரிய கோவில் குறித்த, அரிய தகவல்களை ஆய்வரங்கங்களில் பங்கேற்பவர்கள் ஆய்வு செய்து, வெளிக்கொணர வேண்டும்,” என, துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

தஞ்சை பெரிய கோவில் 1000மாவது ஆண்டு விழாவையொட்டி, தஞ்சை தமிழ் பல்கலையில் நேற்று காலை, “இந்திய பெருமைக்கு தஞ்சையில் பங்களிப்பு’ என்ற பொருண்மையில் ஆய்வரங்கம் நடந்தது. “சோழர் கால ஓவியம்’ குறித்த நூலை வெளியிட்டு, ஆய்வரங்கத்தை துவக்கி வைத்து, துணை முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ராஜராஜ சோழன் 1006ல் பெரிய கோவில் கட்டுமானப் பணியை துவங்கி, 1010ல் முடித்து, குடமுழுக்கு நடத்தினார். 1,000 ஆண்டுக்குப் பிறகும் தமிழனின் கட்டடக்கலை உலகுக்கு பறைசாற்றுகிறது. கோவில் கருவறையில் 81 நாட்டிய சிற்பம் இடம் பெற்றுள்ளது. தேவார, திருமுறைகளை தேடித்தொகுத்து ஓதச்செய்தார். அதற்காக 48 ஓதுவார்கள், மத்தளம் வாசிப்போரை நியமித்தார்.  சிற்பம், ஓவியம், கட்டடம் மற்றும் கலை என, ஒரு பல்கலையாக அமைத்தார். இக்கோவில் பல கோவில்களுக்கு வழிகாட்டுகிறது. இந்த அடிப்படையிலான ஆய்வை மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

நாம், நம்மவர், நம்முடைய என்ற உணர்வு குறைவதால், நம் உரிமையை இழக்கிறோம். அதற்கு ஓர் உதாரணத்தைக் கூற வேண்டும். பிரமாண்டமான பெரிய கோவிலை கட்டியது யார் என்பதில், பல கதை உள்ளது. “கிருமி கண்ட சோழன் என்ற கரிகாலனால் கட்டப்பட்டது. அவர் இக்கோவிலைக்கட்டி, சிவகங்கை குளத்தில் குளித்து தனது குஷ்ட நோய் நீங்கப் பெற்றார்’ என, ஒரு கல்வெட்டு கூறுகிறது. “காடுவெட்டி சோழன் என்பவர் கட்டினார்’ என, ஜி.யூ.போப் குறிப்பிட்டுள்ளார். உண்மைக்குப் புறம்பான பல செய்திகளை கூறுகின்றனர். கடந்த 1886ல், சென்னை அரசாங்கம் நியமித்த ஜெர்மன் நாட்டு கல்வெட்டு ஆராய்ச்சியாளர், பெரிய கோவில் குறித்து ஆய்வு செய்தபோது கிடைத்த ஒரு கல்வெட்டுச் செய்தியில், “பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர் கூற்றத்து தஞ்சாவூர் நாம் எழுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீஸ்வரம்’ என, இருந்ததை கண்டுபிடித்தார். இதன் மூலம் ராஜராஜ சோழன் தான் பெரிய கோவிலை கட்டினார் என்பதை உறுதிப்படுத்தினார்.

இக்கோவிலைக் கட்டி தினமும் வழிபாடு நடத்தி, திருமுறை இசையுடன், பாட வழி செய்து, நிதி ஒதுக்கீடும் செய்தார். தமிழில் ஓதப்பட்ட வழிபாட்டு முறைகள், பிறகு வடமொழிக்கு மாறின. 20ம் நூற்றாண்டில், “தமிழிலும்’ அர்ச்சனை செய்யப்படும் என்றிருந்தது, முதல்வர் கருணாநிதி அரசால் “தமிழில்’ அர்ச்சனை செய்யப்படும் என்று மாற்றப்பட்டது. இதுபோன்று ஆய்வரங்கில் பங்கேற்பவர்கள், பெரிய கோவில் வழிபாடு, நாட்டியம், கலை, நிர்வாகம் போன்றவற்றை ராஜராஜ சோழன் வளர்த்ததை ஆய்வு செய்து, தெளிவுபடுத்த வேண்டும். பெரிய கோவில் குறித்த அரிய தகவல்களை வெளிக் கொண்டு வர வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

ரூ.5,000/- கோடி மதிப்புள்ள சிவன் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு விவகாரம்: ரோசையா- கருணாநிதி சமரசம்!

ஓகஸ்ட்9, 2010

ரூ.5,000/- கோடி மதிப்புள்ள சிவன் கோயில்நிலம் ஆக்கிரமிப்புவிவகாரம்: ரோசையாகருணாநிதி சமரசம்!

மாநிலங்களுக்கிடையில் உள்ள கோவில் நில பிரச்சினை: ஆந்திராவுக்கு சொந்தமான சிவன் கோயில் நிலம் தமிழகத்தில் உள்ளதால். இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் ரோசையா, தமிழக முதல்வர் கருணாநிதியை இன்ற சந்தித்து பேசுகிறார். ஆந்திராவில் குண்டூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி கோயிலுக்கு சொந்தமான நிலம் தமிழகத்தில் உள்ளது. இந்த நில விவகாரம் தொடர்பாக உரிய இழப்பீடு வழங்க கோரி அம்மாநில முதல்வர் ரோசையா ,தமிழக முதல்வர் கருணாநிதியை இன்று சந்தித்து பேசுகிறார்[1].

ரூ. 5,000 கோடி மதிப்பிலுள்ள கோவில் நிலம் ஆக்கிரமிப்பு: ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ளது அமராவதி கோயில் மிகவும் பழமைவாய்ந்த இந்த கோயிலுக்கு சொந்தமான 470 ஏக்கர் நிலம் 1850-ம் ஆண்டு வசியரெட்டி ராஜா என்பவரால் தானமாக வழங்கப்பட்டது. இதன் தற்போதைய சந்தையின் மதிப்பு ரூ. 5 ஆயிரம் கோடியாக இருக்கலாம் என தெரிகிறது. இந்த நிலம் தமிழகத்தில் சென்னை அருகே மாமல்லபுரம் சாலையில் அமைந்துள்ளது. தற்போது இந்த நிலப்பகுதியில் பல்வேறு தகவல் தொழில்நுட்ப மென்பொருள், நிறுவனங்கள், மெகா கட்டடங்கள் உள்ளன. இவற்றிற்காக நிலங்களை விற்கும்போது, கோடிகளில் பணத்தை அள்ளினர் குறிப்பிட்ட தனிநபர்கள்[2], அரசியல்வாதிகள், கோவில்நில ஆக்கிரமிப்பு திராவிட நாத்திக சக்திகள்.

ஆந்திரா தமிழ்நாட்டின் மீது தொடுத்துள்ள வழக்கு: காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்த நிலத்தின் மீது ஏற்கனவே ஆந்திர அரசு செங்கல்பட்டு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் உரிமையியல் வழக்கும் தொடர்ந்துள்ளது. கோவிலுக்கு சொந்தமானது 470 ஏக்கர் நிலம்[3], இதன் மதிப்பு ரூ. 5,000/- கோடிகளுக்கு மேல். இந்த நிலையில் ஆக்கிரமிக்கப்படாத நிலையில் எஞ்சிய 200 ஏக்கர் நிலத்தினை மீட்பதற்காக ஆந்திர மாநில அறநிலையத்துறை அமைச்சர் திவாகர் ரெட்டி தலைமையிலான குழவினர் துணை முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினர்.

ஸ்டாலின் பேச மறுத்த மர்மம் என்ன? ஸ்டாலினுடன் இந்த விஷயத்தைப் பற்றி பேசவேண்டும் என்று தெரிவித்தபோது, இதற்கு துணை முதல்வர் மறுத்துவிட்டார். ஒரு குறிப்பிட்ட நில அபகரிப்புக் கூட்டம், ஸ்டாலினுக்கு நெருக்கமானவர் அல்லது ஆளுங்கட்சிக்கு மிகவும் வேண்டப்பட்டவர் என்று தெரிகிறது. மேலும் ஏற்கெனெவே பல நிருவனங்கள் கட்டிடங்களைக் கட்டியாகிவிட்டது, பல மக்கள் வீடுகளையும் கட்டிக் கொண்டுள்ளனர், என்றெல்லாம் கூட பேசியாதாகத் தெரிகிறது. இந்த விவகாரம் குறித்து ஆந்திர முதல்வர் ரோசையா தமிழக முதல்வருக்கு எற்கெனெவே கடிதம் எழுதியுள்ளார். அதில் நிலத்திற்கு தற்போதைய அரசு நிர்ணயவிலையில் இழப்பீடு தர வேண்டும் எனகோரியுள்ளார். இப்படி இந்த விஷயம் வெளியே வர, சம்பந்தப்பட்டவர்கள் உஷாராகி விட்டனர். கருணாநிதியும் இது குறித்து ஆக.7-ம் தேதி (இன்ற) நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு கூறியுள்ளதை தொடர்ந்து முதல்வர் ரோசையா , தமிழக முதல்வர் கருணாநிதியை இன்று சந்தித்து பேசுகிறார்.

கருணாநிதி தெலுங்குக்காரர் என்று ரோசய்யா நினைத்தது தப்பாகி போய்விட்டது: கருணாநிதி ஆந்திராவிலிருந்து வந்து குடியேரியவர். இதனால், ஓரளவிற்காவது, ஆந்திர மக்கள் / தெலுங்கு பேசும் மக்களின் எஅலனில் அக்கரை இருக்கும் என்று ரொசய்யா எதிர்பார்த்ததாகத் தெரிந்தது. ஆனால், “முதலமைச்சர்” ரீதியிலேயே பேசியது, ரோசய்யாவிற்கும், மற்ற ஆந்திர மாநில அதிகார்களுக்கும் வியப்பாக இருந்தது. ஓசூரில் உள்ள தெலுங்கு பேசும் மக்களின் நிலை பற்றியும் பேசியுள்ளதாக தெரிகிறது[4].

நீதிமன்றத்திற்கு வெளியில் சமரசம்: அதாவது கோவில் நிலம் அம்பேல்: கடைசியில் விஷயம் வெளிவரக்கூடாது என்ற நிலையில், கருணாநிதி இவ்விஷயத்தை நீதிமன்றத்திற்கு வெளியே முடித்துக் கொள்வதாக அறிவித்தார். அதற்கு ரோசய்யாவும் ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. இதன்படி சிவன் கோவிலுக்கு சொந்தமான 470 ஏக்கர் நிலத்தில் ஏற்கெனெவே ஆக்கிரமித்த நிலத்தை விட்டுவிட்டு, பாக்கி 200 ஏக்கர் நிலத்திற்கு தமிழ்நாடு ஆந்திராவிற்கு இழப்பீடு கொடுக்கும்,  பதிலுக்கு, ஆந்திர இந்து ஆறநிலையத்துறை தனது வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொள்ளும்[5]. ஆக, சிவன் கோவில் நிலம் அம்பேல்! கருணாநிதி இந்து மதத்திற்கு இவ்வாறாக, மற்றொரு துரோகத்தையும், தனது கடைசி காலத்தில் செய்துள்ளார்.

தமிழகத்தில் நாத்திக அரசுதான் கோவில் நிர்வாகத்தை நடத்தி வருகிறது என்பது தெரிந்த விஷயமே. ஒவ்வொரு நாளைக்கும் ஒரு கோவிலில் திருட்டு முதலியன நடந்து வருவதும் தெரிந்த விஷயம்தான். மேலும் கருணாநிதியே கடவுள் என்று ஆஸ்தான கவிஞர்கள், வித்வான்கள், புலவர்கள் எல்லோரும் ஏற்கெனவே அறிவித்தாகி விட்டது. அரசு துறையில் கருணாநிதியை சிவனான உருவகப்படுத்தி விளம்பரங்களும் கொடுத்தாகி விட்டது. ஒருவர் கோவிலையும் கட்டிவிட்டார். தமிழகத்தை கருணை பூமியாக மாற்றப் போவதாக வேறு சொல்லிவிட்டார் கருணாநிதி! இந்நிலையில், ‘எல்லாம் அவன் செயல்”, என்று வீரமணி கிண்டல் அடிக்கிறாரா, அல்லது, “நாங்கள் சொல்லியதை செய்வோம், செய்வதைச் சொல்வோம்”, என்ற பாணியில், திகவினரே அறைகூவல் விடுகிறார்களா? கருணாநிதி சொல்வது போல, பெரியார்தான் இதற்கு பதில் சொல்லவேண்டும்!


[1] தினமலர், கோயில்நிலவிவகாரம் : ரோசையாகருணாநிதிஇன்றுசந்திப்பு, ஆகஸ்ட் 07, 2010; http://www.dinamalar.com/News_Detail.asp?Id=56974

[2] http://ibnlive.in.com/generalnewsfeed/news/tn-to-depute-official-to-discuss-ap-temple-land-encroachment/213565.html

[3] http://www.deccanchronicle.com/chennai/tn-officials-help-ap-resolve-land-row-740

[4] http://www.dinakaran.com/arasialdetail.aspx?id=12315&id1=10

[5] http://www.deccanchronicle.com/hyderabad/ap-settle-temple-land-row-tn-388

அரசுக்கு சார்பாக அளிக்கப்படும் தீர்ப்புகளில் மக்களுக்குத் தீர்ப்பு கிடைக்குமா?

ஜூன்8, 2010

அரசுக்கு சார்பாக அளிக்கப்படும் தீர்ப்புகளில் மக்களுக்குத் தீர்ப்பு கிடைக்குமா?

இன்றைய சட்டத்துறை 90% மேலாக ஆளும் அரசியலின் ஆதிக்கத்தில் இருந்து வருகிறது. நீதிபதிகள், வழக்கறிஞகள், சட்ட அங்கத்தினர்கள், அரசுதரப்பு வக்கீல்கள், டிரிபுயூனல் அங்கத்தினர்கள், உறுப்பினர்கள்………………என எல்லொருமே அரசியல் ரீதியில், இந்த கட்சி சார்பாக இத்தனை பேர்கள் என்று பங்கீட்டின் கீழ் நியமிக்கப் படுகிறார்கள். வெளிப்படையாக, அரசியல் சார்பான, ஜாதிகள் சார்பாக, ஏன் மத சார்பாக, வழக்கறிஞர்கள் சங்கங்களை வைத்துக் கொண்டு அரசியல் நடத்துகிறார்கள். பிறகு அத்தகைஅவர்களிடமிருந்தி பாரபட்சமின்றி தீர்ப்புகளை எதிர்பார்க்க முடியுமா?

கோவில் சொத்தை பாதுகாக்க நடவடிக்கை:அரசின் பதில் மனுவில் ஐகோர்ட் திருப்தி
பதிவு செய்த நாள் : ஜூன் 08,2010,00:06 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=14556

கோவில்களின் பாதுகாப்பிற்காக தொடரப்பட்ட வழக்கு: சென்னை:கோவில் சொத்துக்களை பாதுகாக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளில் சென்னை ஐகோர்ட் திருப்தியடைந்துள்ளது. இதுதொடர்பாக, வக்கீல் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.சென்னை ஐகோர்ட் வக்கீல் ஞானேஸ்வரன் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் உள்ள கோவில் சிலைகள், நகைகள், விலைமதிப்புள்ள சொத்துக்கள் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு அளிக்க தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

மனுவுக்கு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு:

  1. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 38 ஆயிரத்து 465 மத அமைப்புகள் உள்ளன.
  2. கோவில்களை புனரமைக்கவும், பூஜை வழிபாடுகளுக்கும், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும் நிதி உதவி வழங்குவதற்கு பல்வேறு நலத் திட்டங்களை அரசு வகுத்துள்ளது.
  3. கோவில் சிலைகள், நகைகள் மற்றும் விலைமதிப்புடைய சொத்துக்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
  4. சொத்துக்களை பாதுகாக்க, தமிழகம் முழுவதும் 17 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
  5. ஆயிரம் போலீசார், 3,000 முன்னாள் ராணுவத்தினர் அடங்கிய கோவில் பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டுள்ளது.
  6. வருமானம் வரும் கோவில்களில் இருந்து நிதி பெற்று, ஐந்து கோடி ரூபாய்க்கு நிதியம் உருவாக்கப்பட்டு, அதில் இருந்து கிடைக்கும் வட்டிப் பணத்தில், குறைந்த வருவாய் உள்ள கோவில்களில் எச்சரிக்கை கருவிகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  7. போதிய நிதி உள்ள பெரிய கோவில்களில் பாதுகாப்பு நடவடிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளது.
  8. கண்காணிப்பு “டிவி’ , எச்சரிக்கை கருவிகள், பாதுகாப்பு பெட்டக வசதி என, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
  9. பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்த, போலீசாருடன், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆலோசித்து வருகின்றனர்.
  10. உண்டியல்கள், அசைக்க முடியாமல் நிரந்தரமாக இருக்கும் வகையில் பொருத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  11. கோவில் நகைகள், சொத்துக்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளன.
  12. கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
  13. வருமானத்தைப் பெருக்க வணிக கட்டடங்களை கட்டுவதற்கு நிதி உதவியும் வழங்கப்படுகிறது.

இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், நாங்கள் திருப்தியடைகிறோம்: இம்மனுவை விசாரித்த தற்காலிக தலைமை நீதிபதி தர்மாராவ், நீதிபதி சிவஞானம் அடங்கிய “முதல் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவில், “இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், நாங்கள் திருப்தியடைகிறோம். கோவில்களில் பாதுகாப்பு சாதனங்கள் வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி, பதில் மனுவில் விளக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தனை பாதுகாப்பு இருக்கும் போது, எப்படி இத்தனை கொலை, கொள்ளை, திருட்டுகள்……….எல்லாம் நடக்கின்றன? நீதிபதி ஏதோ வழக்கை விசாரிக்க வேண்டுமே என்ற போக்கில் விசாரித்து, அதனை தள்ளூபடி செய்யவேண்டும் என்ற முன்-தீர்மானத்தின்படியே தள்ளுபடி செய்திருப்பது தெரிகிறது. நாளிதழ்களில் இதைப் பற்றிய செய்திகள் தொடர்ந்து வருகின்றன. அந்நிலையில், அவையெல்லாம் வழக்கறிஞர்களுக்கு, நீதிபதிகளுக்குத் தெரியாமல் இருந்திருக்க முடியாது. ஆகவே இத்தகைய ஏனோ-தானோ விசாரணைகள், தீர்ப்புகள் மக்களின் மனங்களில் திருப்தியை ஏற்படுத்தாது.

நீதிபதிகளுக்குத் திருப்தி என்பது இல்லை, மக்கள் திருப்தியடையவேண்டும்: நாத்திக அரசின்கீழ், இந்து அறநிலையத் துறை இருக்கிறது. தொடர்ந்து இந்திக்களை இழிவு படுத்தும் ஒரு நபர் முதலமைச்சராக இருக்கிறார். இதைப் பற்றிய வழக்குகளே (இந்துக்களை தூஷித்து பேசியதற்கான வழக்குகள்), நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. அந்நிலையில், அத்தகைஅ அரசு நியமிக்கப் படும் நீதிபதிகள் அரசிற்கு எதிராக எந்த தீர்ப்பும் அளிக்கப் படக்கூடாது, என்று அறிவுறுத்தப் பட்டிருந்தால், மக்களுக்கு எப்படி நியாயமான தீர்ப்பு கிடைக்கும்.

கருணாநிதியா, தீட்சிதர்களா: சிதம்பர கோவில்கள் படும்பாடு!

மே29, 2010

கருணாநிதியா, தீட்சிதர்களா: சிதம்பர கோவில்கள் படும்பாடு!

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது என்று பக்தர்களை ஏமாற்றவேண்டாம். இப்பொழுதையப் பிரச்சினை, இந்து அறநிலையத்துறை, சில கட்டிடங்களைக் கட்ட முற்பட்டதால்தான், வழக்கு போட்டு, இடைக்கால “நிறுத்தி வைப்பு” ஆணை பெறப்பட்டது. ஆகவே, இந்த பழைய கோவிலுக்கு இநெத ஆண்சை பொறுந்தாது.

சிதம்பரத்தில் தரைமட்டமாக்கப்பட்ட சுப்ரமணியர் சன்னதி கருவறை பூட்டியே கிடப்பது மக்களுக்கு ஆகாது:கடலூர்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=8680

சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில் பல நூற்றாண் டுகளை கடந்த பழமையான சுப்ரமணியர் சன்னதி கும்பாபிஷேகம் செய்யப் போவதாக கூறி தரைமட்டமாக்கப்பட்டு மூன்று ஆண் டுகள் ஆகியும் கட் டப்படவில்லை. பூஜைகூட நடத் தாமல் கருவறை பூட்டியே கிடப்பதால் நாட்டிற்கும், மக்களுக்கும் ஆகாது என தீட்சிதர் கடலூர் கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளதால் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

மாறவர்ம சுந்தரபாண்டியனால் கட்டப்பட்ட கோவில் எப்படி இடிக்கப் படலாம்? சிதம்பரம் நடராஜர் கோவில் வடக்கு ராஜகோபுரம் அருகே சிவகங்கை குளக்கரையில் பாண்டியநாயகம் என்றழைக்கப்படும் சுப்ரமணியர் கோவில் உள்ளது. கி.பி. 1216-1251 ஆண்டுகளில் மாறவர்ம சுந்தரபாண்டியன் என்ற மன்னனால் கட்டப்பட் டது. அழகான தேர் போன்று அமைந்த கோவிலில் வள்ளி தெய்வானையுடன் மயில்மீது அமர்ந்து சுப்ரமணியர் மூலவராக காட்சியளிப்பார்.இக்கோவிலின் முகப் பில் தேர் உருளைகள், யானைகள் வடிவமைக்கப் பட்டுள்ளன. மண்டப உட் புற மேல் விமானத்தில் கந்த புராண சித்திரங்கள், திருமுறை ஆசிரியரின் உருவங்கள் மற்றும் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள் செதுக்கப்பட்ட தூண்கள், ஓவியங்கள் பழங்கால கட் டட திறமைகளை வெளிப் படுத்தும் விதமாக அமைக் கப்பட்டிருக்கும்.

தீட்சிதர்கள் இடிக்க அதிகாரம் உள்ளதா? இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 10 நாட் கள் கொண்டாடப்பட்டு வந்தது. அத்துடன் சிதம்பரம் நகரை சுற்றியுள்ள கிராம பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு இங்கு தான் திருமணம் நடக்கும். இத் தனை சிறப்புகள் வாய்ந்த இக்கோவில் சிதலமைந்து விட்டதாகவும், புதியதாக கட்டி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என காரணம் கூறி மூன்று ஆண்டுகளுக்கு [2007?] முன் தீட்சிதர்கள் முழுமையாக இடித்து தரைமட்டமாக்கி விட்டனர். கோவில் கருவறை மட்டுமே எஞ்சியுள்ளது. அதுவும் திறந்து பூஜை செய்யாமல் அந்த இடம் முட்புதர்களாக மாறிவிட்டது.இடிக்கப்பட்ட கோவிலை தீட்சிதர்கள் தரப்பில் கட்ட முயற்சி மேற்கொள்ளாத நிலையில், கடந்த ஆண்டு நடராஜர் கோவிலை அறநிலையத்துறை கட்டுப்பாட் டிற்கு கொண்டுவரப்பட்ட பிறகு கோவில் இடிக்கப் பட்டது குறித்து முழு தகவலையும் அறநிலையத்துறைக்கு தெரியப்படுத்தினர்.

கருணாநிதி-தீட்சிதர் பிரச்சினை பக்தர்களுக்கு வேண்டாம்: இருந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோவில் அறநிலையத்துறை ஏற்றது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் டில் வழக்கு நடக்கிறது. வழக்கு முடியும் வரை கோவிலில் எந்தவித கட்டமைப்பு பணியோ, பழமை கட்டடங்கள் இடிக்கவோ கூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அப் படி அவசியம் ஏற்பட்டால் கோர்ட் அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவில் கட்டப்படாததற்கு பல காரணங்களை கூறி வந்த தீட்சிதர்கள் தரப்பு தற்போது, சுப்ரீம் கோர்ட் உத்தரவை காரணமாக கூறி வருகிறது. பழமையான கோவிலை காலம் கடத்தாது கோர்ட் அனுமதி பெற்றாவது கட்டி முடிக்க வேண்டும் என்பது பக்தர்களின் எதிர் பார்ப்பு.கோவில் கட்டப்படாதது குறித்து கலெக்டர் வரை கைலாச சங்கர தீட்சிதர் என்பவர் புகார் செய்திருப்பதால் வெளியில் தெரியாமல் இருந்து வந்த இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. கலெக்டரிடம் கைலாச சங்கர தீட்சிதர் கொடுத்துள்ள புகாரில், மூன்றாண் டுகள் கோவில் இடிக்கப் பட்டு பூஜை ஏதும் செய்யாமல் இருப்பது நாட்டிற் கும், மக்களுக்கும் ஆபத்து. கோவில் இடிக்கப்பட்ட பிறகு தான் நடராஜர் கோவிலிலும் பல பிரச்னைகள் ஏற்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

மதுரை ஆதீனத்திடம் தகராறு செய்ததாக 3 பேர் கைது!

மே26, 2010
மதுரை ஆதீனத்திடம் தகராறு செய்ததாக 3 பேர் கைது
First Published : 26 May 2010 03:16:39 AM IST
Last Updated : 26 May 2010 05:59:31 AM IST
கும்பகோணம், மே 25, 2010: ஆயுதங்களுடன் வந்து, மதுரை ஆதீனத்திடம் தகராறு செய்ததாக 3 பேரை போலீஸôர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். மதுரை ஆதீனத்திற்கு உள்பட்ட கும்பகோணம் அருகே உள்ள கஞ்சனூர் சுக்கிரன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய மதுரை ஆதீனம் அருணகிரி ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் அவரது மேலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை வந்தனர். அவர்கள் தரிசனம் முடித்துவிட்டு ஆதீனத்திற்குச் சொந்தமான தங்கும் விடுதியில் தங்கியிருந்தனர்.
மரியாதை இல்லாமல் ஆதீனத்திடம் தகராறு: அப்போது கஞ்சனூரைச் சேர்ந்த மோகன், ரமேஷ், கார்த்திக் உள்ளிட்ட 10 பேர் ஆயுதங்களுடன் வந்து ஆதீனத்திடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. மடாதிபதிகள் நாத்திக அரசியல்வாதிகளுடன் கொஞ்சிக் குலாவுவதால், மக்களுக்கு மரியாதை குறைந்து விடுகிறது. இதனால், அண்ட வந்தவர்கள் எல்லாம், மடாதிபதிகளையே இப்படி மிரட்டும் அளவுற்கு வந்து விட்டனர். இதுகுறித்து திருப்பனந்தாள் போலீஸார் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்து விசாரித்தனர்.
கோவில் சொத்தை அபகரிப்பது என்பது தான் நோக்கம்: விசாரணையில் அந்த மூவரும் கோயிலுக்குச் சொந்தமான வாழைத் தோப்பை பராமரித்து வருவதாகவும், அந்த இடத்தில் திருமண மண்டபம் கட்ட அனுமதிக்குமாறும் கேட்டிருந்தனராம். அதற்கு கோயிலுக்கு கட்ட வேண்டிய தொகையைக் கட்டுமாறு கோயில் நிர்வாகம் கூறியதாம். மேலும், அந்த இடத்தின் உரிமத்தை அவர்கள் மூவர் பெயருக்கும் மாற்றித் தரவும் கோயில் நிர்வாகம் மறுத்ததால், ஆதீனத்திடம் அவர்கள் தகராறு செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
முஸ்லீம்கள் மிரட்டியது: இதே மாதிரி முஸ்லீம்கள் வேறு விசயமாக மிரட்டிச் சென்றுள்ளது நினைவிருக்கலாம். தேவையேயில்லாமல், முஸ்லீம்கள் முன்னம், நபி பற்றி பிரச்சினை செய்தனர். இந்த ஆதினத்தை மிரட்டினர். ஆனால், இன்று நபி பெயராலேயே மசூதிகள் இடிக்கப் படும்போது, முஸ்லீம்கள் கொல்லப் படும் போது, அதே முஸ்லீம்கள் மௌனிகளாக இருக்கின்றனர்!
யார் இவர்களுக்கு இத்தகைய தைரியத்தைக் கொடுப்பது? இப்படி ஆதினத்தையே எதிர்த்து, மிரட்டும் அளவிற்கு எப்படி குத்தகைக் காரர்களுக்கு தைரியம் வரும்? நாத்திகம் மக்களின் அறிவை மழுங்க வைத்து விட்டது. நாத்திகர்களான கருணாநிதி ஆட்சி செய்து கொண்டு இந்துக்கள் (திருடர்கள், பர   தேசிகள் என்று பேசுவது), கோவில்கள், சம்பிரதாயங்கள்……………முதலியவற்றை கேலி செய்தும் (அதுவும் துலுக்கன் கஞ்சி குடித்துக் கொண்டு அவதூறு பேசுவது), கோவில்கள்-மண்டபங்கள் முதலியவற்றை இடிக்கச் செய்தும், கோவில் நிலங்களை விற்றும்……………….இத்தகைய அடாவடித்தனமான, திருமூலருக்கு எதிராக, திருவள்ளுவருக்கு விரோதமாக……………..குரூரக்கொடிய காரியங்களை செய்து வரும் போது, “தமிழர்கள்” கண்ணிருந்தும் குருடர்களாக, காதிருந்தும் செவிடர்களாக, வாயிருந்தும் ஊமைகளாக, கை-கால்கள் இருந்தும் முடவர்களாக இருந்து வருகின்றனர். போலீஸார் புகார்களை பதிவு செய்வதில்லை, உள்ள வழக்குகளை விசாரிப்பதில்லை;  நீதிபதிகளோ தூங்குகின்றனர்; அந்நிலையில் தான், முஸ்லீம்கள், கிருத்துவர்கள், நாத்திகர்கள் மற்றும் இந்த போர்வையில் உள்ள எல்லா இந்து-இந்திய விரோதிகள் செயல்படுகின்றனர்.

அறநிலையத்துறை விழாவில் செம்மொழி முத்திரை!

மே23, 2010

அறநிலையத்துறை விழாவில் செம்மொழி முத்திரை: கொந்தளிப்பு

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=3112

இந்து சமய அறநிலையத்துறையின் இந்துவிரோத செயல்: சேலம்: “சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் நடந்த தங்கத்தேர் வெள்ளோட்ட விழாவில், பாரம்பரியமிக்க அரசு முத்திரையை பயன்படுத்தாமல், செம்மொழி மாநாட்டுக்கான முத்திரையை இந்து சமய அறநிலையத்துறை பயன்படுத்தி உள்ளது. முத்திரையை மாற்ற வேண்டும் என்ற நோக்கில் அரசு மறைமுகமாக செயல்பட்டு வருகிறது’ என, பா.ஜ., நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.

இந்து விரோதிகளே கோவில் விழாக்களில் கலந்து கொல்வது: சேலம் சுகவனேஸ்வரர் திருக்கோவிலில் 1.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தங்கத்தேர் செய்யப்பட்டது. அதன் வெள்ளோட்ட விழா 16ம் தேதி நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பண் வெள்ளோட்டத்தை துவக்கி வைத்தார். உண்மையில் நாத்திகவாதியாக இருந்தால், இக்காரியத்தில் இந்த ஆள் செய்திருக்கக் கூடாது. முன்னம் கருணநிதி, ஒரு திமுக ஆள், குங்குமம் வைத்திருந்தபோது, “என்ன நெற்றியில் ரத்தமா?”, என்று கிண்டலாக-நக்கலாகக் கேட்டது ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். உண்மையிலேயே தைரியம் இருந்தால், தனது மனைவி-துணைவி-மகள்-சகோதரி-மற்ற சொந்தமான பெண்களை பார்த்து அப்படி கேட்பதுதானே? இல்லை, குங்குமத்தை அழிக்கவேண்டியதுதானே?

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பத்திரிகை விளம்பரங்கள், நோட்டீஸ்கள் போன்றவற்றில் அரசு முத்திரைக்கு பதில், செம்மொழி மாநாட்டு முத்திரை இடம் பெற்றிருந்தது. இதுவே அயோக்கியத்தனம்தாம். கடந்த 1946 முதல் தமிழ்நாட்டின் அரசு முத்திரையாக விளங்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுர சின்னத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் தி.மு.க., அரசு ஈடுபட்டுள்ளது. கூட்டணி கட்சியினரும், “ஒரு மதத்தை சார்ந்தவாறு முத்திரை இருப்பதால், செம்மொழி மாநாட்டில் இடம் பெற்றுள்ள திருவள்ளுவர் உருவம் கொண்ட முத்திரையை இனி அரசின் முத்திரையாக பயன்படுத்தலாம்’ என, கூறி வருகின்றனர். அதை நிறைவேற்றும் பொருட்டே அரசு விழாக்களிலும், வாகனங்களிலும் செம்மொழி முத்திரை ஸ்டிக்கர்கள் இடம் பெற்றுள்ளன என, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

இது ஒவ்வொரு இந்துவும் கேட்க வேண்டிய கேள்வி: இந்நிலையில், “அரசு முத்திரையை மாற்றாக பயன்படுத்தி, மக்களின் மனதை புண்படுத்தும் நோக்கில் செயல்பட்டுள்ளனர்’ என, கூறி சுகவனேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ஜோதி பழனிசாமி, உதவி ஆணையர் வரதராஜன், அறங்காவலர்கள் சந்திரசேகரன், பாலகிருஷ்ணன், சரஸ்வதி ஆகியோர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்’ என, பா.ஜ., தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. “தவறு என ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லாதபட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்’ என, அக்கட்சியின் மாவட்ட தலைவர் மோகன் கூறினார்.

தமிழகத்தின் அரசு முத்திரை மாற்ற சதி: பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கூறியதாவது: தமிழகத்தின் அரசு முத்திரையாக கோபுர சின்னம் உள்ளது. அதை மாற்ற வேண்டும் என்ற முயற்சியில் தான் தி.மு.க., அரசு ஈடுபட்டுள்ளது. செம்மொழி மாநாட்டு முத்திரையை அனைத்து தரப்பிலும் விளம்பரப்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. சுகவனேஸ்வரர் கோவில் தங்கரத விழாவில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செம்மொழி மாநாட்டு முத்திரையே அதிகம் இடம் பெற்றுள்ளது. அரசு விழாக்களிலும், வாகனங்களிலும் மறைமுகமாக விளம்பரப்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இது தமிழ்நாடு, பாகிஸ்தான் அல்ல: இது குறித்து அறங்காவலர் குழுத் தலைவர் ஜோதி பழனிசாமி கூறியதாவது: இது தமிழ்நாடு, பாகிஸ்தான் அல்ல. எந்த முத்திரையையும் நாங்கள் பயன்படுத்துவோம். கோவில் விழா தானே தவிர அரசு விழா அல்ல. யாரோ ஒருவரின் தூண்டுதலின்பேரில் தான் இதுபோன்று செய்து வருகின்றனர். செம்மொழி முத்திரைக்கு அரசு அங்கீகாரம் உள்ளது. கோவில் தங்கரத வெள்ளோட்டம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. அதை பாராட்டாமல் இதுபோன்று தேவையில்லாதவற்றை கூறி வருகின்றனர். யாருக்கும் நான் பயப்படமாட்டேன். வழக்கு போட்டாலும் அதை சந்திப்பேன். உதவி ஆணையர் வரதராஜனை தொடர்பு கொண்டபோது, “”தங்கரத விழா அரசு சார்ந்தது. செம்மொழி முத்திரையை உபயதாரர்கள் வழங்கியிருக்கலாம். எதுவாக இருந்தாலும் நேரில் பேசிக்கொள்ளலாம் வாருங்கள்,” என, கூறி முடித்துக் கொண்டார்.

நாத்திக அறத்துறையின் வலை பெரிதாகிறது: இன்னுமொரு மடம் / கோவில் அபகரிக்கப் படுகிறது!

மே3, 2010
நாத்திக அறத்துறையின் வலை பெரிதாகிறது: இன்னுமொரு மடம் / கோவில் அபகரிக்கப் படுகிறது!
இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இம்முடி அகோர தர்ம சிவாச்சாரியார் மடம்
மே 03,2010,00:00  IST

கோவை: பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை கொண்ட, திருஆலங்காடு இம்முடி அகோர தர்ம சிவாச்சாரியார் ஆயிர வைசியர் மடம், அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி நெருஞ்சிப்பேட்டை அருகேயுள்ளது திருஆலங்காடு. இந்த கிராமத்தில், இம்முடி அகோர தர்ம சிவாச்சாரியார் ஆயிர வைசியர் மடம் உள்ளது. பழம்பெருமை வாய்ந்த இந்த மடம், 1800ம் ஆண்டு துவக்கப்பட்டது. 1978ல் மடத்தின் அறங்காவலர்கள் மற்றும் மடாதிபதிக்குமிடையே ஏற்பட்ட பிரச்னையால், கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, மடாதிபதி மடத்தைவிட்டு வெளியேறினார். மடத்துக்கு சொந்தமாக 612 ஏக்கர் 10 சென்ட் நன்செய் நிலம் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 482 ஏக்கர் நிலம் உள்ளது. மீதமுள்ள நிலம் மற்ற மாவட்டங்களில் உள்ளது. 21 கடைகள், இரண்டு திருமண மண்டபங்கள், ஏழு குடியிருப்புகள், மூன்று தங்கும் விடுதிகள், ஒரு மேல்நிலைப்பள்ளி, ஒரு கிரானைட் குவாரி, சுண்ணாம்புக்கல் குவாரியும், மடத்துக்கு சொந்தமாக உள்ளன. இப்படி பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பு வகித்த அறங்காவலர் குழு, நீண்ட நாட்களாக தேர்வு செய்யப்படவில்லை.பல்வேறு குளறுபடி களால், மடத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.மடத்தில் நடக்கும் முறைகேடுகளை களையவும், நிர்வாகத்தை முறைப்படுத்தவும் அறநிலையத்துறை கமிஷனர் சம்பத் கடந்த மாதம் 29ம் தேதி, கோவை மண்டல இணை கமிஷனருக்கு உத்தரவிட்டார்.

ஈரோடு அறநிலையத்துறை உதவி கமிஷனரை மடத்தின் பொறுப்பாளராக நியமிக்கவும் அறநிலையத்துறை உத்தரவிட்டது.இதையடுத்து, கோவை மண்டல அறநிலையத்துறை இணை கமிஷனர் அசோக் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் (ஆலய நில மீட்பு) சுப்ரமணியன், மருதமலை கோவில் துணை கமிஷனர் லட்சுமணன், கோவை மண்டல கோவில் செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள், நெருஞ்சிப்பேட்டை கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர், மடத்தை அறநிலையத்துறை வசம் கொண்டு வந்தனர். இதற்கான எச்சரிக்கை நோட்டீஸ், மடத்தின் வாயிலில் ஒட்டப்பட்டது.கோவை மண்டல அறநிலையத்துறை இணை கமிஷனர் அசோக் கூறியதாவது:நீண்டகால முயற்சிக்கு பின், நூற்றாண்டு பழமை வாய்ந்த மடம், அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் மடத்துக்கு வரும் வருவாய் சீராகும். அனைத்து வருவாய் இனங்களுக்கும் சரியான கணக்கு எழுதப்படும். ரசீது வழங்கப்படும். மடத்தின் கட்டுப்பாட்டில் ஏராளமான குத்தகைதாரர்கள், வாடகைதாரர்கள் உள்ளனர். நிலுவை வைத்துள்ள வாடகையை உடனடியாக மட நிர்வாகத்திடம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். இதன் மூலம் வருவாய் இழப்பை தடுக்க முடியும். மடத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு திருத்திய ஊதிய விகிதம் வழங்கப்படும். சம்பள பாக்கியும் வழங்கப்படும்.இவ்வாறு அசோக் கூறினார்.