Archive for the ‘தரைமட்டமாக்கப்பட்ட சுப்ரமணியர் சன்னதி’ Category

அரசுக்கு சார்பாக அளிக்கப்படும் தீர்ப்புகளில் மக்களுக்குத் தீர்ப்பு கிடைக்குமா?

ஜூன்8, 2010

அரசுக்கு சார்பாக அளிக்கப்படும் தீர்ப்புகளில் மக்களுக்குத் தீர்ப்பு கிடைக்குமா?

இன்றைய சட்டத்துறை 90% மேலாக ஆளும் அரசியலின் ஆதிக்கத்தில் இருந்து வருகிறது. நீதிபதிகள், வழக்கறிஞகள், சட்ட அங்கத்தினர்கள், அரசுதரப்பு வக்கீல்கள், டிரிபுயூனல் அங்கத்தினர்கள், உறுப்பினர்கள்………………என எல்லொருமே அரசியல் ரீதியில், இந்த கட்சி சார்பாக இத்தனை பேர்கள் என்று பங்கீட்டின் கீழ் நியமிக்கப் படுகிறார்கள். வெளிப்படையாக, அரசியல் சார்பான, ஜாதிகள் சார்பாக, ஏன் மத சார்பாக, வழக்கறிஞர்கள் சங்கங்களை வைத்துக் கொண்டு அரசியல் நடத்துகிறார்கள். பிறகு அத்தகைஅவர்களிடமிருந்தி பாரபட்சமின்றி தீர்ப்புகளை எதிர்பார்க்க முடியுமா?

கோவில் சொத்தை பாதுகாக்க நடவடிக்கை:அரசின் பதில் மனுவில் ஐகோர்ட் திருப்தி
பதிவு செய்த நாள் : ஜூன் 08,2010,00:06 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=14556

கோவில்களின் பாதுகாப்பிற்காக தொடரப்பட்ட வழக்கு: சென்னை:கோவில் சொத்துக்களை பாதுகாக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளில் சென்னை ஐகோர்ட் திருப்தியடைந்துள்ளது. இதுதொடர்பாக, வக்கீல் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.சென்னை ஐகோர்ட் வக்கீல் ஞானேஸ்வரன் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் உள்ள கோவில் சிலைகள், நகைகள், விலைமதிப்புள்ள சொத்துக்கள் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு அளிக்க தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

மனுவுக்கு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு:

  1. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 38 ஆயிரத்து 465 மத அமைப்புகள் உள்ளன.
  2. கோவில்களை புனரமைக்கவும், பூஜை வழிபாடுகளுக்கும், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும் நிதி உதவி வழங்குவதற்கு பல்வேறு நலத் திட்டங்களை அரசு வகுத்துள்ளது.
  3. கோவில் சிலைகள், நகைகள் மற்றும் விலைமதிப்புடைய சொத்துக்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
  4. சொத்துக்களை பாதுகாக்க, தமிழகம் முழுவதும் 17 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
  5. ஆயிரம் போலீசார், 3,000 முன்னாள் ராணுவத்தினர் அடங்கிய கோவில் பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டுள்ளது.
  6. வருமானம் வரும் கோவில்களில் இருந்து நிதி பெற்று, ஐந்து கோடி ரூபாய்க்கு நிதியம் உருவாக்கப்பட்டு, அதில் இருந்து கிடைக்கும் வட்டிப் பணத்தில், குறைந்த வருவாய் உள்ள கோவில்களில் எச்சரிக்கை கருவிகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  7. போதிய நிதி உள்ள பெரிய கோவில்களில் பாதுகாப்பு நடவடிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளது.
  8. கண்காணிப்பு “டிவி’ , எச்சரிக்கை கருவிகள், பாதுகாப்பு பெட்டக வசதி என, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
  9. பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்த, போலீசாருடன், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆலோசித்து வருகின்றனர்.
  10. உண்டியல்கள், அசைக்க முடியாமல் நிரந்தரமாக இருக்கும் வகையில் பொருத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  11. கோவில் நகைகள், சொத்துக்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளன.
  12. கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
  13. வருமானத்தைப் பெருக்க வணிக கட்டடங்களை கட்டுவதற்கு நிதி உதவியும் வழங்கப்படுகிறது.

இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், நாங்கள் திருப்தியடைகிறோம்: இம்மனுவை விசாரித்த தற்காலிக தலைமை நீதிபதி தர்மாராவ், நீதிபதி சிவஞானம் அடங்கிய “முதல் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவில், “இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், நாங்கள் திருப்தியடைகிறோம். கோவில்களில் பாதுகாப்பு சாதனங்கள் வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி, பதில் மனுவில் விளக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தனை பாதுகாப்பு இருக்கும் போது, எப்படி இத்தனை கொலை, கொள்ளை, திருட்டுகள்……….எல்லாம் நடக்கின்றன? நீதிபதி ஏதோ வழக்கை விசாரிக்க வேண்டுமே என்ற போக்கில் விசாரித்து, அதனை தள்ளூபடி செய்யவேண்டும் என்ற முன்-தீர்மானத்தின்படியே தள்ளுபடி செய்திருப்பது தெரிகிறது. நாளிதழ்களில் இதைப் பற்றிய செய்திகள் தொடர்ந்து வருகின்றன. அந்நிலையில், அவையெல்லாம் வழக்கறிஞர்களுக்கு, நீதிபதிகளுக்குத் தெரியாமல் இருந்திருக்க முடியாது. ஆகவே இத்தகைய ஏனோ-தானோ விசாரணைகள், தீர்ப்புகள் மக்களின் மனங்களில் திருப்தியை ஏற்படுத்தாது.

நீதிபதிகளுக்குத் திருப்தி என்பது இல்லை, மக்கள் திருப்தியடையவேண்டும்: நாத்திக அரசின்கீழ், இந்து அறநிலையத் துறை இருக்கிறது. தொடர்ந்து இந்திக்களை இழிவு படுத்தும் ஒரு நபர் முதலமைச்சராக இருக்கிறார். இதைப் பற்றிய வழக்குகளே (இந்துக்களை தூஷித்து பேசியதற்கான வழக்குகள்), நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. அந்நிலையில், அத்தகைஅ அரசு நியமிக்கப் படும் நீதிபதிகள் அரசிற்கு எதிராக எந்த தீர்ப்பும் அளிக்கப் படக்கூடாது, என்று அறிவுறுத்தப் பட்டிருந்தால், மக்களுக்கு எப்படி நியாயமான தீர்ப்பு கிடைக்கும்.

Advertisements

கோவில் சம்பந்தமான விஷயங்களில் தகராறு, சண்டை, சச்சரவு பெருகிவருவது ஏன்?

மே31, 2010

கோவில் சம்பந்தமான விஷயங்களில் தகராறு, சண்டை, சச்சரவு பெருகிவருவது ஏன்?

கோவிலைச் சுற்றி இந்திய சமூகம் வாழ்கிறது, வளர்கிறது. எல்லா கலைகள், விஞ்ஞானம், தொழிற்நுட்பங்கள் முதலியனவும் அவ்வாறே இருந்து வந்தன. ஆனால், அந்நியர்களின் படையெடுப்புகள், ஆக்கிரமிப்புகள், இடிப்புகள் முதலியவற்றால் அத்தகைய பாரம்பரியம் பெரிதாகப் பாதித்தது. முகலாயர், ஐரோப்பியர், கிருத்துவர், ஆங்கிலேயர் என வந்த கூட்டங்களினால், நமது கோவில் செல்வங்கள், விழாக்கள், பாரமரியங்கள்…………..முதலியவை அதிகமாவே பாதித்தன.

சுதந்திரத்திற்குப் பிறகு, நாத்திகம் என்ற போர்வையில், அதே கூட்டங்களுடன் சேர்ந்து கொண்ட திக, திமுக போன்ற கருப்புப் பரிவார், அதைவிட குரூரமான, கொடுமையான தாக்குதல்களை, நம்பிக்கையாளர்களை, பக்தர்களை, …………….வைத்தே நடத்தி வருகின்றது.

திருச்செந்தூரில், ஒரு கொலையே செய்துள்ளது, அதில், கருணாநிதியும் சம்பந்தப் பட்டபோது, பால் கமிஷன் அறிக்கை முதலியன, அரசியல் ஆக்கப் பட்டு உண்மைகள் மரைக்கப் பட்டன. இப்பொழுதும், அதே திருச்செந்தூர் கோவிலில் பிரச்சினைகள் எழுகின்றன.

திருச்செந்தூர் கோயிலில் அர்ச்சகர்கள் – ஊழியர்கள் மோதல் (தினமலர்): திருச்செந்தூர் 30-05-2010 : திருச்செந்தூர் முருகன் கோயிலில் கோயில் அர்ச்சகர்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால், அங்கு அலுவலகப் பணிகள் முற்றிலும் பா‌திக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கோயில் உதவி பணியாளராக பணிபுரிபவர் சங்கரன்(52). இதே கோயிலில் அர்ச்சகராக பணியாற்றுபவர் ராஜா(31). இவர் கோயிலில் உள்ள பஞ்சலிங்க சன்னதிக்கு பக்தர்கள் சிலரை டிக்கெட் இன்றி அழைத்துச் செல்ல முயன்றுள்ளார். அப்போது சங்கரனை அவர்களை தடுத்து நிறுத்தி, டிக்கெட் இல்லாமல் உள்ளே அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சங்கரனுக்கும், ராஜாவுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது.

தனிநபர் சண்டையில் கோவில் பணி பாதிக்கப் பட்டுள்ளதாம்: இதனையடுத்து ராஜா தன்னை தாக்கியதாக சங்கரன், திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து சங்கரனுக்கு ஆதரவாக கோயில் பணியாளர்கள் தன்னை தாக்கியதாக ராஜாவும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதியாகி உள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கோயில் பணியாளர்கள் தங்களுக்கு பணியில் பாதுகாப்பு இல்லை என கூறி ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். இதனால் டிக்கெட் விற்பனை, விடுதி பணிகள் என கோயில் நிர்வாகப் பணிகள் அனைத்தும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

சாமி கும்பிட காசு வசூல், கட்டணம் செல்லுத்தத்தேவையா? முகமதியர் காலங்களில், கோவில்களை ஆக்கிரமித்துக் கொண்டு, இந்துக்கள் அதிகமாக உள்ள நிலையில், வளைந்து கொடுத்தும், குறைவாக உள்ல இடங்களில் ப்ணத்தைப் பறித்தும் வந்துள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சியில், கட்டணம் வசூலிக்கப் பட்டது. அத்தகைய பழக்கம் தான், இப்பொழுதும் தொடர்கிறது. கோவில்களைக் கட்டியவர்கள் அனைத்து சமூக மக்கள். அதில் எந்தவித வெஏறுபாடும் இல்லை. கே. ஆர். அனுமந்தன் எப்படி “தீண்டத்தகாதவர்கள்” எனப்படுபவர்கள், கோவில்களைக் கட்டியுள்ளனர், பல நிலங்களை தானமாகவு, மற்ற  மான்யங்களையும் தந்துள்ளனர் என்று எடுத்துக் காட்டியுள்ளார். ஆகவே, நிச்சயமாக முகலாயர்கள், ஆன்கிலேயர்கள் (கிருத்துவர்கள்) இத்தகைய வேறுபாட்டை உருவாக்கி வைத்தனர். இப்பொழுது, இந்த கருப்புப் பரிவார், அதை இன்னும் அதிகமாக்கி மக்கலைப் பிரிக்கப் பார்க்கிறது.

கருணாநிதியா, தீட்சிதர்களா: சிதம்பர கோவில்கள் படும்பாடு!

மே29, 2010

கருணாநிதியா, தீட்சிதர்களா: சிதம்பர கோவில்கள் படும்பாடு!

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது என்று பக்தர்களை ஏமாற்றவேண்டாம். இப்பொழுதையப் பிரச்சினை, இந்து அறநிலையத்துறை, சில கட்டிடங்களைக் கட்ட முற்பட்டதால்தான், வழக்கு போட்டு, இடைக்கால “நிறுத்தி வைப்பு” ஆணை பெறப்பட்டது. ஆகவே, இந்த பழைய கோவிலுக்கு இநெத ஆண்சை பொறுந்தாது.

சிதம்பரத்தில் தரைமட்டமாக்கப்பட்ட சுப்ரமணியர் சன்னதி கருவறை பூட்டியே கிடப்பது மக்களுக்கு ஆகாது:கடலூர்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=8680

சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில் பல நூற்றாண் டுகளை கடந்த பழமையான சுப்ரமணியர் சன்னதி கும்பாபிஷேகம் செய்யப் போவதாக கூறி தரைமட்டமாக்கப்பட்டு மூன்று ஆண் டுகள் ஆகியும் கட் டப்படவில்லை. பூஜைகூட நடத் தாமல் கருவறை பூட்டியே கிடப்பதால் நாட்டிற்கும், மக்களுக்கும் ஆகாது என தீட்சிதர் கடலூர் கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளதால் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

மாறவர்ம சுந்தரபாண்டியனால் கட்டப்பட்ட கோவில் எப்படி இடிக்கப் படலாம்? சிதம்பரம் நடராஜர் கோவில் வடக்கு ராஜகோபுரம் அருகே சிவகங்கை குளக்கரையில் பாண்டியநாயகம் என்றழைக்கப்படும் சுப்ரமணியர் கோவில் உள்ளது. கி.பி. 1216-1251 ஆண்டுகளில் மாறவர்ம சுந்தரபாண்டியன் என்ற மன்னனால் கட்டப்பட் டது. அழகான தேர் போன்று அமைந்த கோவிலில் வள்ளி தெய்வானையுடன் மயில்மீது அமர்ந்து சுப்ரமணியர் மூலவராக காட்சியளிப்பார்.இக்கோவிலின் முகப் பில் தேர் உருளைகள், யானைகள் வடிவமைக்கப் பட்டுள்ளன. மண்டப உட் புற மேல் விமானத்தில் கந்த புராண சித்திரங்கள், திருமுறை ஆசிரியரின் உருவங்கள் மற்றும் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள் செதுக்கப்பட்ட தூண்கள், ஓவியங்கள் பழங்கால கட் டட திறமைகளை வெளிப் படுத்தும் விதமாக அமைக் கப்பட்டிருக்கும்.

தீட்சிதர்கள் இடிக்க அதிகாரம் உள்ளதா? இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 10 நாட் கள் கொண்டாடப்பட்டு வந்தது. அத்துடன் சிதம்பரம் நகரை சுற்றியுள்ள கிராம பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு இங்கு தான் திருமணம் நடக்கும். இத் தனை சிறப்புகள் வாய்ந்த இக்கோவில் சிதலமைந்து விட்டதாகவும், புதியதாக கட்டி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என காரணம் கூறி மூன்று ஆண்டுகளுக்கு [2007?] முன் தீட்சிதர்கள் முழுமையாக இடித்து தரைமட்டமாக்கி விட்டனர். கோவில் கருவறை மட்டுமே எஞ்சியுள்ளது. அதுவும் திறந்து பூஜை செய்யாமல் அந்த இடம் முட்புதர்களாக மாறிவிட்டது.இடிக்கப்பட்ட கோவிலை தீட்சிதர்கள் தரப்பில் கட்ட முயற்சி மேற்கொள்ளாத நிலையில், கடந்த ஆண்டு நடராஜர் கோவிலை அறநிலையத்துறை கட்டுப்பாட் டிற்கு கொண்டுவரப்பட்ட பிறகு கோவில் இடிக்கப் பட்டது குறித்து முழு தகவலையும் அறநிலையத்துறைக்கு தெரியப்படுத்தினர்.

கருணாநிதி-தீட்சிதர் பிரச்சினை பக்தர்களுக்கு வேண்டாம்: இருந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோவில் அறநிலையத்துறை ஏற்றது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் டில் வழக்கு நடக்கிறது. வழக்கு முடியும் வரை கோவிலில் எந்தவித கட்டமைப்பு பணியோ, பழமை கட்டடங்கள் இடிக்கவோ கூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அப் படி அவசியம் ஏற்பட்டால் கோர்ட் அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவில் கட்டப்படாததற்கு பல காரணங்களை கூறி வந்த தீட்சிதர்கள் தரப்பு தற்போது, சுப்ரீம் கோர்ட் உத்தரவை காரணமாக கூறி வருகிறது. பழமையான கோவிலை காலம் கடத்தாது கோர்ட் அனுமதி பெற்றாவது கட்டி முடிக்க வேண்டும் என்பது பக்தர்களின் எதிர் பார்ப்பு.கோவில் கட்டப்படாதது குறித்து கலெக்டர் வரை கைலாச சங்கர தீட்சிதர் என்பவர் புகார் செய்திருப்பதால் வெளியில் தெரியாமல் இருந்து வந்த இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. கலெக்டரிடம் கைலாச சங்கர தீட்சிதர் கொடுத்துள்ள புகாரில், மூன்றாண் டுகள் கோவில் இடிக்கப் பட்டு பூஜை ஏதும் செய்யாமல் இருப்பது நாட்டிற் கும், மக்களுக்கும் ஆபத்து. கோவில் இடிக்கப்பட்ட பிறகு தான் நடராஜர் கோவிலிலும் பல பிரச்னைகள் ஏற்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

அறநிலையத்துறை விழாவில் செம்மொழி முத்திரை!

மே23, 2010

அறநிலையத்துறை விழாவில் செம்மொழி முத்திரை: கொந்தளிப்பு

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=3112

இந்து சமய அறநிலையத்துறையின் இந்துவிரோத செயல்: சேலம்: “சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் நடந்த தங்கத்தேர் வெள்ளோட்ட விழாவில், பாரம்பரியமிக்க அரசு முத்திரையை பயன்படுத்தாமல், செம்மொழி மாநாட்டுக்கான முத்திரையை இந்து சமய அறநிலையத்துறை பயன்படுத்தி உள்ளது. முத்திரையை மாற்ற வேண்டும் என்ற நோக்கில் அரசு மறைமுகமாக செயல்பட்டு வருகிறது’ என, பா.ஜ., நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.

இந்து விரோதிகளே கோவில் விழாக்களில் கலந்து கொல்வது: சேலம் சுகவனேஸ்வரர் திருக்கோவிலில் 1.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தங்கத்தேர் செய்யப்பட்டது. அதன் வெள்ளோட்ட விழா 16ம் தேதி நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பண் வெள்ளோட்டத்தை துவக்கி வைத்தார். உண்மையில் நாத்திகவாதியாக இருந்தால், இக்காரியத்தில் இந்த ஆள் செய்திருக்கக் கூடாது. முன்னம் கருணநிதி, ஒரு திமுக ஆள், குங்குமம் வைத்திருந்தபோது, “என்ன நெற்றியில் ரத்தமா?”, என்று கிண்டலாக-நக்கலாகக் கேட்டது ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். உண்மையிலேயே தைரியம் இருந்தால், தனது மனைவி-துணைவி-மகள்-சகோதரி-மற்ற சொந்தமான பெண்களை பார்த்து அப்படி கேட்பதுதானே? இல்லை, குங்குமத்தை அழிக்கவேண்டியதுதானே?

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பத்திரிகை விளம்பரங்கள், நோட்டீஸ்கள் போன்றவற்றில் அரசு முத்திரைக்கு பதில், செம்மொழி மாநாட்டு முத்திரை இடம் பெற்றிருந்தது. இதுவே அயோக்கியத்தனம்தாம். கடந்த 1946 முதல் தமிழ்நாட்டின் அரசு முத்திரையாக விளங்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுர சின்னத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் தி.மு.க., அரசு ஈடுபட்டுள்ளது. கூட்டணி கட்சியினரும், “ஒரு மதத்தை சார்ந்தவாறு முத்திரை இருப்பதால், செம்மொழி மாநாட்டில் இடம் பெற்றுள்ள திருவள்ளுவர் உருவம் கொண்ட முத்திரையை இனி அரசின் முத்திரையாக பயன்படுத்தலாம்’ என, கூறி வருகின்றனர். அதை நிறைவேற்றும் பொருட்டே அரசு விழாக்களிலும், வாகனங்களிலும் செம்மொழி முத்திரை ஸ்டிக்கர்கள் இடம் பெற்றுள்ளன என, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

இது ஒவ்வொரு இந்துவும் கேட்க வேண்டிய கேள்வி: இந்நிலையில், “அரசு முத்திரையை மாற்றாக பயன்படுத்தி, மக்களின் மனதை புண்படுத்தும் நோக்கில் செயல்பட்டுள்ளனர்’ என, கூறி சுகவனேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ஜோதி பழனிசாமி, உதவி ஆணையர் வரதராஜன், அறங்காவலர்கள் சந்திரசேகரன், பாலகிருஷ்ணன், சரஸ்வதி ஆகியோர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்’ என, பா.ஜ., தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. “தவறு என ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லாதபட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்’ என, அக்கட்சியின் மாவட்ட தலைவர் மோகன் கூறினார்.

தமிழகத்தின் அரசு முத்திரை மாற்ற சதி: பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கூறியதாவது: தமிழகத்தின் அரசு முத்திரையாக கோபுர சின்னம் உள்ளது. அதை மாற்ற வேண்டும் என்ற முயற்சியில் தான் தி.மு.க., அரசு ஈடுபட்டுள்ளது. செம்மொழி மாநாட்டு முத்திரையை அனைத்து தரப்பிலும் விளம்பரப்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. சுகவனேஸ்வரர் கோவில் தங்கரத விழாவில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செம்மொழி மாநாட்டு முத்திரையே அதிகம் இடம் பெற்றுள்ளது. அரசு விழாக்களிலும், வாகனங்களிலும் மறைமுகமாக விளம்பரப்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இது தமிழ்நாடு, பாகிஸ்தான் அல்ல: இது குறித்து அறங்காவலர் குழுத் தலைவர் ஜோதி பழனிசாமி கூறியதாவது: இது தமிழ்நாடு, பாகிஸ்தான் அல்ல. எந்த முத்திரையையும் நாங்கள் பயன்படுத்துவோம். கோவில் விழா தானே தவிர அரசு விழா அல்ல. யாரோ ஒருவரின் தூண்டுதலின்பேரில் தான் இதுபோன்று செய்து வருகின்றனர். செம்மொழி முத்திரைக்கு அரசு அங்கீகாரம் உள்ளது. கோவில் தங்கரத வெள்ளோட்டம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. அதை பாராட்டாமல் இதுபோன்று தேவையில்லாதவற்றை கூறி வருகின்றனர். யாருக்கும் நான் பயப்படமாட்டேன். வழக்கு போட்டாலும் அதை சந்திப்பேன். உதவி ஆணையர் வரதராஜனை தொடர்பு கொண்டபோது, “”தங்கரத விழா அரசு சார்ந்தது. செம்மொழி முத்திரையை உபயதாரர்கள் வழங்கியிருக்கலாம். எதுவாக இருந்தாலும் நேரில் பேசிக்கொள்ளலாம் வாருங்கள்,” என, கூறி முடித்துக் கொண்டார்.