கோவில் நிலங்களை இனி விற்பதில்லை: இந்து அறநிலையத்துறை முடிவு!
பகுத்தறிவு-நாத்திகப் போர்வையில் தமிழர்களை “திராவிடர்களாக்கி”[1], இந்திய விரோதிகளாக்கி[2], இந்து விரோதிகளாக்கி[3], மற்ற இந்திய மொழி பேசும் மக்களுடனும் பிரச்சினையைக் கிளப்பி[4], அண்டை மாநிலங்களுடன் சண்டை போட்டுக் கொண்டு[5], “தெற்கு தேய்கிறது” என்று சொல்லி, இவர்களே நன்றாகத் தேய்த்து, கோடிகளில் சுருட்டிவிட்டு[6], மற்ற மாநிலங்களை விட பிற்படுத்தச் செய்தது தான் இவர்கள் ஆண்ட லட்சணம். அந்நிலையில் கோவில்களைக் கொள்ளையடித்ததில் இவர்கள் மாலிக்காபூர், ஔரங்கசீப் போன்றவர்களையும் மிஞ்சி விட்டனர். அவர்கள் மதவெறியால், கொள்ளையடித்ததை, இவர்கள் துவேஷத்தால், சட்டத்தை வளைத்து, விதிகளை மீறி, அதிகாரம் மூலம் கொள்ளையடித்து வருகின்றனர். “கருணாநிதி-ஜெயலலிதா” ஒன்றும் “திராவிட-ஆரிய” சின்னங்கள் அல்ல. திமுக-அதிமுகவும் அது போலத்தான். திராவிடப் பாரம்பரிய அரசியலில் ஊறிப் போனவர்களுக்கு, நெற்றியில் குங்குமம்-விபூதி-சந்தனம் வைத்துக் கொண்டாலும், வைத்துக் கொள்ளாவிட்டாலும், கொள்ளையடிப்பதில் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சித்தலைமை மாறினாலும், நடப்புகள், செயல்கள், முடிவுகள் எல்லாம் ஒரே மாதிரியாகத்தான் இருந்துள்ளன. ஜெயலலிதா ஆட்சியில் கொஞ்சம் குறைந்துள்ளது எனலாம் அல்லது அவ்வாறு தோற்றமளிக்கலாம்.
இந்து அறநிலையத் துறையே கோவில் சொத்துக்களை விற்று மோசடி செய்து வந்த விவரங்களை கீழ் கண்ட கட்டுரைகளில் விவரித்துள்ளேன்:
இந்து சமய அறநிலையத் துறை எடுத்துள்ள முடிவு[7]: கோவில் சொத்துக்களை, குடியிருப்போருக்கு விற்பது, ஓர் ஆபத்தான முயற்சியாகவே கருதப்படுகிறது. எனவே,
தினமலர் 12-11-2011 தேதியிட்ட நாளிதழில் வெளியாகியுள்ள இக்கட்டுரையில் (சென்னைப் பதிப்பு, பக்கம்.2) இவ்வாறு செய்தி இருந்தாலும், ஏற்கெனவே விற்றது, விற்றதுதான் என்றாகிறது. அதனையும் சட்டரீதியாக அரசு மீகவேண்டும். கோவில் நிலத்தை அடாவடியாக வாங்கியவர்கள் நிச்சயமாக ஏழைகள் அல்லர். ஆகவே, சிவன் சொத்தை அவர்கள் தாராளமாக திருப்பிக் கொடுத்து கைலாசத்திற்குச் செல்ல தயாராக இருக்கலாம். |
இனி, கோவில் நிலங்களை விற்பதில்லை என, இந்து சமய அறநிலையத் துறை, அதிரடி முடிவை எடுத்துள்ளது. கோவில் நிலத்தை விற்பனை செய்யலாமா, கூடாதா என முடிவு செய்யும் அதிகாரத்தை, அறநிலையத் துறைச் சட்டம், 1959ன் பிரிவு 34, அத்துறை ஆணையருக்கு அளிக்கிறது. அந்த விற்பனையும், கோவிலின் நலன் கருதி, மிக மிக அவசியமாகக் கருதப்பட்டால் மட்டுமே, மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், எப்போதுமே, சட்டத்துக்கு மாறாகத் தானே நடைமுறை இருக்கும். உள்ளூர் பலம், அரசியல் பின்புலம் மூலம், சட்ட ரீதியாகவே வாங்கி, கோவில் சொத்துக்களை, “ஸ்வாகா’ செய்வோர் அதிகரித்து வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், முக்கியத்துவம் வாய்ந்த முடிவை, இந்து சமய அறநிலையத் துறை எடுத்துள்ளது.
திருவல்லீஸ்வரர் கோவில் நிலத்தை குறைந்த விலையில் 1984ல் விற்றது: சென்னையின் பிரபலமான கோவில்களில் ஒன்று, பாடி திருவல்லீஸ்வரர் கோவில்; பல்லவர்கள் காலத்துக்கும் முந்தையது. புண்ணியாத்மாக்கள் பலரின் முயற்சியால்,
அப்பொழுதெல்லாம் புண்ணிய ஆத்மாக்கள் கோவில்களுக்கு நிலம், வீடு என்று எழுதி வைத்து விட்டு சாகும். ஆனால், இப்பொழுதுள்ள தினமலர் 12-11-2011 தேதியிட்ட நாளிதழில் வெளியாகியுள்ள இக்கட்டுரையில் (சென்னைப் பதிப்பு, பக்கம்.2) இவ்வாறு செய்தி இருந்தாலும், ஏற்கெனவே விற்றது, விற்றதுதான் என்றாகிறது. |
இந்தக் கோவிலுக்கு, பாடியிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், 55 ஏக்கருக்கும் மேல் நிலம் உள்ளது. இதில், 125 கிரவுண்டு மற்றும் 751.75 சதுர அடி நிலத்தில், 126 பேர் வரை குடியிருந்து வந்தனர். இவர்கள் அனைவரும், “ஜெகதாம்பிகை நகர் கூட்டுறவு வீட்டு மனை சங்கம்’ என்ற பெயரில் ஒரு சங்கத்தைத் துவக்கி, “நாங்கள் குடியிருக்கும் அடிமனையை எங்களுக்கே விற்று விடுங்கள்’ என, கோரிக்கை வைத்தனர். அப்போதிருந்த கோவில் நிர்வாகமும், அறநிலையத் துறையும் அதை ஏற்று, 66 பேருக்கு, அடிமனையை கிரையம் செய்து கொடுத்துவிட்டன. இது நடந்தது 1984ல். அப்போது, ஒரு கிரவுண்டு, வெறும் 12 ஆயிரம், 15 ஆயிரம் மற்றும் 16 ஆயிரம் என விற்கப்பட்டது.
நிலம் கிடைக்காதவர் வழக்குத் தொடுக்க ஆரம்பித்தது பிரச்னை: ஒரு பாதிப் பேருக்குக் கிடைத்துவிட்டால், மறு பாதியினர் விடுவரா? தங்களுக்கும் விற்பனை செய்ய வேண்டும் என, விடுபட்டவர்களுடன் புதிதாகச் சிலரும் சேர்ந்து, மொத்தம் 135 பேர், சட்டப் போராட்டத்தைத் துவக்கினர். சென்னை ஐகோர்ட்டில் வழக்கு, தள்ளுபடி,
சட்டத்தை அரசியல்வாதிகள் தாம் வளைப்பார்களா, அதற்கென வக்கீல்களும் உள்ளனரே. குங்குமம் / விபூதி / சந்தனம் வைத்துக் கொண்டால் என்ன, காசு என்றால், பக்தன்னான வக்கீலும் வாதிட வந்து விடுகிறார்களே? வென்றால் 1% என்றால் கூட லட்சங்களில் கிடைக்கும் எனும்போது, சிவனாவது, சொத்தாவது, தானே சிவனாகிவிட மாட்டானா? |
உத்தரவு, ரத்து என, அத்தனை அத்தியாயங்களும் அரங்கேறின. கடைசியாக, கடந்த ஜூலையில், “இவர்களுடைய கோரிக்கைகளை ஏற்பதா, மறுப்பதா என்பது குறித்து, பரம்பரை அறங்காவலர் மற்றும் பொதுமக்களின் ஆலோசனை, ஆட்சேபனைகளைப் பெற்று, எட்டு வாரத்துக்குள், அறநிலையத் துறை ஆணையர் இறுதி முடிவெடுக்க வேண்டும்’ என, ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்பிய அறநிலையத் துறை அதிகாரிகளும், ஆணையரும், விரிவான ஆலோசனை மேற்கொண்டனர். வழக்கு யுத்தம் துவங்கிய 25 ஆண்டுகளில், எல்லாமே தலைகீழாக மாறிவிட்டிருந்தது. பாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள அம்பத்தூர், முகப்பேர், அண்ணா நகர் மேற்கு, கிழக்கு போன்ற பகுதிகளில், ஒரு கிரவுண்டு நிலத்தின் விலை, ஒரு கோடி ரூபாயை எட்டிவிட்டது. வாடகை, பூஜை கட்டணங்கள், உண்டியல் வருவாய், நன்கொடைகள் என, கோவிலின் வருவாயும் அதிகரித்து விட்டது. திருவல்லீஸ்வரரின் அருளால், வங்கியில் ஒரு கோடி ரூபாய் வைப்புத் தொகை இருக்குமளவு, கோவிலின் நிதிநிலை உயர்ந்து விட்டது. “”முன்னோர், கோவிலைப் பரிபாலனம் செய்வதற்குக் கொடுத்த சொத்துக்களை அபிவிருத்தி செய்யலாமே தவிர, விற்கக் கூடாது” என, அக்கோவிலின் பரம்பரை அறங்காவலர் சண்முகசுந்தரம், கடுமையாக வாதிட்டார்.
கோவில் நிலத்தை இனி விற்பதிலை – உருப்படியான முடிவு: நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, அறநிலையத் துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவு: “கோவில் இடத்தில் குடியிருந்து வருவோருக்கு, அந்த நிலத்தை விற்பனை செய்வது, ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்து, தமிழகம் எங்கும் உள்ள கோவில் சொத்துக்கள், பராதீனம் அடையும் சூழ்நிலையை ஏற்படுத்தும். மேலும்,
யார் தானமாகக் கொடுத்ததை யார் விற்பது? அறநிலையத் துறைக்கு அத்தகைய அதிகாரம் இருந்தால், அதுவே சட்டத்திற்குப் புறம்பானது. கொடையாக பக்தர்கள் கொடுத்த நம்பிக்கையை / பிணையை அறுப்பதற்கு எந்த சட்டத்திற்கும் உரிமை இல்லை. நூறு / ஆயிரம் ஆண்டுகளாக இருக்கும் கோவில் சொத்துகளை, வாங்க-விற்க யாருக்கும் அதிகாரம் இல்லை. |
பணவீக்கத்தின் காரணமாக, ரூபாயின் மதிப்பு ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகிறது; அசையாச் சொத்துக்களின் மதிப்பு உயர்ந்து கொண்டே போகிறது. இன்றைய நில விற்பனைத் தொகை, நாளை எவ்விதத்திலும் கோவிலுக்குப் பயன்படாத நிலையாக மாறும். எனவே, கோவில் சொத்துக்களை, குடியிருப்போருக்கு ஒட்டுமொத்தமாக விற்பது, ஓர் ஆபத்தான முயற்சியாகவே கருதப்படுகிறது. எதிர்காலத்தில், கோவில்களின் நலன் பாதிக்கும் என்பது, தொலைநோக்குப் பார்வையில் புலப்படும். இவ்வாறான விற்பனை முடிவுகள், இதர கோவில்களுக்குச் சொந்தமான நிலங்களில் குடியிருப்போருக்கும், ஒரு தூண்டுகோலாக அமைந்து, கோவில் நிலங்களுக்கு, ஒரு பொதுவான ஆபத்து ஏற்படும். எனவே, திருவல்லீஸ்வரர் கோவில் மனைகளை விற்க முடியாது”, இவ்வாறு, ஆணையர் உத்தரவிட்டார். அறநிலையத் துறை ஆணையரின் இந்த அதிரடி உத்தரவால், இனி, தமிழகத்தில் உள்ள எந்தக் கோவிலின் சொத்துக்களும், விற்பனை செய்யப்பட முடியாத, ஆரோக்கியமான நிலை உருவாகியுள்ளது.
சிவன் சொத்து குலநாசம் / தெய்வம் நின்று கொல்லும்: 1968ல் குத்தகைக்கு என்று இந்நிலம் கொடுக்கப்பட்டது[8]. 1984ல் ஆணை போட்டு விற்கப்பட்டது[9]. 1984லிருந்து அனுபவித்து வந்த நிலையில், சிலர் 1987ல் அறத்துறை ஆணையை எதிர்த்து வழக்குப் போட[10], 1994ல் வழக்கு போல, உயர்நீதி மன்றம் தீர்ப்பை மறுபரிசீலினை செய்ய அறத்துறைக்கு திரும்ப அனுப்பியது[11]. 29.8.1997 to 8.6.2000. காலகட்டத்தில் நடந்ததை விசாரிக்கப்பட்டது. 2004ல் தீர்ப்பு வழங்க[12], 2007ல் உயர்நீதி மன்றம் ஆணையிட[13] இப்பொழுது நடவடிக்கை எடுக்கிறார்கள் போலும். இவ்வாறு 1968ல் அண்ணாதுரை காலத்தில் இருந்து, ஜெயலலிதா காலம் வரை இழுத்தடிக்க முயன்ரவர்களுக்கு, இன்னும் இழுத்தடிக்கவா தெரியாது. சட்ட ரீதியாக மேல் முறையீடு என்றெல்லாம் இருப்பதால், வாங்கியவர்கள் பழுத்த “சிவபக்தர்களாகவே” இருந்தாலும் விட்டுவிடப் போவதில்லை. ஆகவே இவர்கள் மறுபடியும், உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம் என்று போய்கொண்டுதான் இருப்பார்கள். அதற்கு அந்த வக்கீல்கள் உதவி செய்து கொண்டுதான் இருப்பார்கள். இறைவன் “திருவிளையாடல்” புரிந்து இவர்களை மாற்றினால் தான் உண்டு. இல்லையெனில், இவர்கள் எல்லாவற்றையும் மாற்றி விடுவார்கள். எப்படி கருணாநிதி / ஜெயலலிதா வாழ்க்கைகள்[14] இப்பொழுது உள்ளனவோ அல்லது முந்தைய ஆட்சியாளர்கள் இறந்து மறைந்தார்களோ, அதே நிலை தான் எல்லோருக்கும் ஏற்படும். தெய்வம் நின்று கொல்லும் என்பது தப்பாமல் நடக்கும்.
வேதபிரகாஷ்
12-11-2011
[1] சரித்திர ரீதியில் இல்லாத “ஆரிய-திராவிட” இனவாத கட்டுக்கதைகளை, இனவெறியோடு இன்றும் அத்தகைய மாயைகளை கட்டிப் பிடுத்துக் கொண்டு, மக்களை முட்டாளக்கி வருகின்ற மாநிலல் தமிழ்நாடு தான் அல்லது அவ்வறு உலகர்ட் உலகதிலேயே நம்பி வரும் கூட்டமும் இங்குதான் உள்ளது.
[2] 1969களில் அண்ணதுரை “அந்தர் பல்டி” அடித்து பயந்து இந்திய அரசியல் சட்டத்திற்கு பணிந்தாலும், தமிழ்நாட்டில், இன்னும் கூட சில “அறிவு ஜீவிகள்” தமிழ்நாடு, தனிநாடு என்றெல்லாம் பேசி-எழுதிக்கொண்டுதான் இருக்கின்றன.
[3] இங்குதான் மற்ற இந்து விரோதிகளும் சேந்து கொள்கின்றனர். அதனால் தான் கோவில் சொத்துகளை கிருத்துவர்கள், முஸ்லீம்கள் கூட வாங்கிக் கொள்கிறார்கள், திருடுகிறர்கள், கொள்ளையெடிக்கிறார்கள். அந்தகால சேவியர், மாலிக்காபூர், ஔரங்கசீப் போல நடந்து கொள்கிறார்கள். அநியாயம், அக்கிரமம், கொடுமை, கொடூரங்களை செய்து வருகிறார்கள்.
[4] ஹிந்து ஒழிக, ஹிந்திகாரர்கள் ஒழிக, வந்தேரிகள், உறிஞ்சிகள். என்றெல்லாம் பேசுவது, அவர்களைத் தாக்குவது, ஆனால் மறைமுகமாக அவர்களுடனே உறவுகள் வைத்துக் கொண்டு அல்லது பணத்தை வாங்கிக் கொண்டு மக்களை ஏமாற்றி வருவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே தான்! அப்பொழுது அவர்கள் ஹிந்தியில் பேசுவார்கள் பாருங்கள், அப்பொழுது தமிழர்களே முழிப்பார்கள், “”எப்படி இந்த திராவிடர்கள் இந்தி பேசுகிறார்கள் இல்லை இந்தி பாடையில் செல்கிறார்கள்?” என்று!
[5] எப்பொழுது பார்த்தாலும் நதி நீர் பிரச்சினை என்று வைத்த்க் கொண்டு கேரளா, கர்நாடகா, ஆந்திரா என்று பிரச்சினைகளை வைத்துக் கொண்டிருப்பதை காணலாம். மற்ற நேரங்களில் அதைப் பற்ரி பேச மாட்டார்கள். தொழிற்சாலைகள் அங்கு சென்றுள்ளதை கவனிக்கலாம். உற்பத்தி செய்யும் தொழிர்சாலைகள் இங்கு இருந்தாலும், விற்பனை செய்வது தமிழகத்திற்கு வெளியில் நடபதைப் பார்க்கலாம்.
[6] கான்டிரேக்டுகளில், டென்டர்களில் கொள்ளையெடித்ததை, இப்பொழுது 2-ஜி என்று, “ஆரியர்களுடன்” செந்து கொண்டு கொள்ளையெடித்திருக்கிறார்கள்.
[7] தினமலர் சிறப்பு நிருபர், கோவில் நிலங்களை இனி விற்பதில்லை: அறநிலையத்துறை முடிவு, பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2011,23:32 IST, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=347526
[8] மிக்கப்படித்த அறிஞர் அண்ணாதுரை எப்படி அப்படி 1968ல் குத்தகைக்குக் கொடுத்தார் என்று தெரியவில்லை. ஒருவேளை, பீரங்கியால் பிளக்க முடியாதத்தை இப்படி பிளந்து விடலாம் என்ற சாதுரியத்தில் கொடுத்தார் போலும்!
[9] Na.Ka.No.11/76 R2, dated 7.12.1984 followed with Government Order dated 7.12.1984.
[10] The said order dated 7.12.1984 was challenged by some of the individuals interested in the welfare of the temple in W.P.No.286 of 1986.
[11] The Court by order dated 11.1.1994 set aside the order of the second respondent dated 7.12.1984 and remitted the matter back to the Commissioner, HR&CE for fresh disposal by following the provisions of the Act and Rules.
[12] EXECUTIVE OFFICER versus JAGATHAMBIGAI NAGAR- High Court of Madras
[13] தீர்ப்புகளின் படி, வேலைசெய்ய எவ்வளவு காலத்தை எடுத்த்க் கொள்கின்றனர், அதற்கேற்றபடி, எப்படி கோவில் நிலம் அனுபவிக்கப் படுகிறது என்பதையெலாம் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
27Mar2007 (GJX) 0009 MAD |
Madras High Court |
THE EXECUTIVE OFFICER, CHENNAI & ANOTHER |
Vs. |
JAGATHAMBIGAI NAGAR CO-OPERATIVE HOUSE SITE SOCIETY, REP BY ITS PRESIDENT, CHENNAI & OTHERS |
Decided on: March 27, 2007 |
http://www.ejurix.in/Cases/MAD/MAD-2007/27Mar2007%20(GJX)%200009%20MAD.htm
(2007) 4 MLJ 476 (Mad)
[14] இங்கு எந்த தனிப்பட்ட நபர்களைப் பற்றி குறைசொல்லவில்லை. ஆட்சியாளர்களாக இருக்கும் போது, எவ்வாறு கோவில் நிலம் விற்கப்படுகிறது, அக்காரியம் சாதாரணமாக நீதிமன்றங்களில் குறிப்பிட்ட சட்டப்பிரிவுகளில் அலசப்படுகின்றன என்ருதான் எடுத்துக் காட்டப்படுகிறது. ஏனெனில், அந்நிலத்தை கோவிலுக்கு தானமாகக் கொடுத்த போது, எந்த சட்டத்திற்கும் உட்பட்டு கொடுக்கவில்லை என்பத்கு தான் உண்மை. அதாவது அந்நிலத்தை யாரும் விற்கவும் முடியாது, வாங்கவும் முடியாது.