Posts Tagged ‘அதிகாரிகள் தங்குவது’

கோயில் விடுதிகளில் இலவச அனுமதி எதிர்த்து மனு: ஐகோர்ட் கிளை உத்தரவு

பிப்ரவரி12, 2010

கோயில் விடுதிகளில் இலவச அனுமதி எதிர்த்து மனு: ஐகோர்ட் கிளை உத்தரவு
பிப்ரவரி 12,2010,00:00 IST
http://www.dinamalar.com/court_detail.asp?news_id=5162

ஒன்றரை வருடத்திற்கு ஒன்றரை ரூ. லட்சம் ஏப்பம்: மதுரை:தூத்துக்குடி மாவட்ட இந்து முன்னணி பொது செயலாளர் சக்திவேல் தாக்கல் செய்த மனு: திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சொந்தமான விடுதிகளில், யாரும் இலவசமாக தங்க அனுமதிக்கப்படுவதில்லை. இலவசமாக எத்தனை பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்? என்பதை, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டேன். அதற்கு அதிகாரிகள், “292 பேர் இலவசமாக தங்கியதாக’ தெரிவித்தனர். அதன்படி, 2007 மார்ச் 1 முதல் 2009 மே 25 வரை ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 450 தொகை இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அதை சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து வசூலித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டது.

அரசு அதிகாரிகளுக்கு இலவசமாக கோவில் விடுதிகள் அளிக்கப்படுகின்றனவாம்: மனு நீதிபதிகள் பிரபா ஸ்ரீதேவன், பி.ராஜேந்திரன் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. கோயில் இணை கமிஷனர் பாஸ்கரன் பதில் மனு செய்தார். மனுவுடன் இணைக்கப்பட்ட கடிதத்தில் கூறியுள்ளதாவது: மத்திய, மாநில ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள், நீதிபதிகள், உயரதிகாரிகள் தெரிவிக்கும் அயல்நாட்டினர், உபயதாரர்கள், அறங்காவலர்கள் ஆகியோர் உட்பட இதர துறையினருக்கு விடுதியில் அறை இலவசமாக ஒதுக்கப்படுகிறது.

மற்றதுறைகள் வசூலிக்கும்போது, கோவில்-விடுதிகள் மட்டும் ஏன் இலவசம்? நெடுஞ்சாலை, பொதுப்பணி துறைகளுக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில், குறைந்தளவு வாடகை வசூலிக்கப்படுகிறது. கோயில் விடுதிகளில் தங்க, வாடகை வசூலிப்பது குறித்து அரசால் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இங்கு மட்டுமின்றி, மற்ற கோயில்களிலும் இந்த நடைமுறை உள்ளது. வாடகை சம்பந்தமாக ஒரு முடிவு எடுக்கும்படி அறநிலையத்துறை கமிஷனருக்கு கடிதம் அனுப்பப் பட்டுள்ளது, என குறிப்பிடப்பட்டது.பிறகு நீதிபதிகள், “அறநிலையத்துறை கமிஷனருக்கு இணை கமிஷனர் கடிதம் எழுதியுள்ளார். இதை தொடர்ந்து, வேறு எந்த உத்தரவும் மனு மீது பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை,’ என உத்தரவிட்டனர்.

திருச்செந்தூர் என்றாலே நமது திராவிட நாத்திகர்களுக்குப் பிரச்சினை வந்து விடும் போலிருக்கிறது! வேலாகட்டும், வெங்காயம் ஆகட்டும், பிரச்சினைதான். முன்பு கொலை வேறு நடந்திருக்கிறது.

  • ஆமாம் இந்த அதிகாரிகள் எல்லாம் எல்லாம் காசில்லா பிச்சைக்காரர்களா?
  • லட்சம்-லட்சமாக சம்பாதிப்பவர் தாமே?
  • பிறகெப்படி, ஓசியில் வெட்கமில்லாமல் தங்கினார்கள்?