Posts Tagged ‘அறநிலையத்துறை’

அரசுக்கு சார்பாக அளிக்கப்படும் தீர்ப்புகளில் மக்களுக்குத் தீர்ப்பு கிடைக்குமா?

ஜூன்8, 2010

அரசுக்கு சார்பாக அளிக்கப்படும் தீர்ப்புகளில் மக்களுக்குத் தீர்ப்பு கிடைக்குமா?

இன்றைய சட்டத்துறை 90% மேலாக ஆளும் அரசியலின் ஆதிக்கத்தில் இருந்து வருகிறது. நீதிபதிகள், வழக்கறிஞகள், சட்ட அங்கத்தினர்கள், அரசுதரப்பு வக்கீல்கள், டிரிபுயூனல் அங்கத்தினர்கள், உறுப்பினர்கள்………………என எல்லொருமே அரசியல் ரீதியில், இந்த கட்சி சார்பாக இத்தனை பேர்கள் என்று பங்கீட்டின் கீழ் நியமிக்கப் படுகிறார்கள். வெளிப்படையாக, அரசியல் சார்பான, ஜாதிகள் சார்பாக, ஏன் மத சார்பாக, வழக்கறிஞர்கள் சங்கங்களை வைத்துக் கொண்டு அரசியல் நடத்துகிறார்கள். பிறகு அத்தகைஅவர்களிடமிருந்தி பாரபட்சமின்றி தீர்ப்புகளை எதிர்பார்க்க முடியுமா?

கோவில் சொத்தை பாதுகாக்க நடவடிக்கை:அரசின் பதில் மனுவில் ஐகோர்ட் திருப்தி
பதிவு செய்த நாள் : ஜூன் 08,2010,00:06 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=14556

கோவில்களின் பாதுகாப்பிற்காக தொடரப்பட்ட வழக்கு: சென்னை:கோவில் சொத்துக்களை பாதுகாக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளில் சென்னை ஐகோர்ட் திருப்தியடைந்துள்ளது. இதுதொடர்பாக, வக்கீல் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.சென்னை ஐகோர்ட் வக்கீல் ஞானேஸ்வரன் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் உள்ள கோவில் சிலைகள், நகைகள், விலைமதிப்புள்ள சொத்துக்கள் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு அளிக்க தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

மனுவுக்கு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு:

  1. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 38 ஆயிரத்து 465 மத அமைப்புகள் உள்ளன.
  2. கோவில்களை புனரமைக்கவும், பூஜை வழிபாடுகளுக்கும், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும் நிதி உதவி வழங்குவதற்கு பல்வேறு நலத் திட்டங்களை அரசு வகுத்துள்ளது.
  3. கோவில் சிலைகள், நகைகள் மற்றும் விலைமதிப்புடைய சொத்துக்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
  4. சொத்துக்களை பாதுகாக்க, தமிழகம் முழுவதும் 17 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
  5. ஆயிரம் போலீசார், 3,000 முன்னாள் ராணுவத்தினர் அடங்கிய கோவில் பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டுள்ளது.
  6. வருமானம் வரும் கோவில்களில் இருந்து நிதி பெற்று, ஐந்து கோடி ரூபாய்க்கு நிதியம் உருவாக்கப்பட்டு, அதில் இருந்து கிடைக்கும் வட்டிப் பணத்தில், குறைந்த வருவாய் உள்ள கோவில்களில் எச்சரிக்கை கருவிகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  7. போதிய நிதி உள்ள பெரிய கோவில்களில் பாதுகாப்பு நடவடிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளது.
  8. கண்காணிப்பு “டிவி’ , எச்சரிக்கை கருவிகள், பாதுகாப்பு பெட்டக வசதி என, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
  9. பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்த, போலீசாருடன், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆலோசித்து வருகின்றனர்.
  10. உண்டியல்கள், அசைக்க முடியாமல் நிரந்தரமாக இருக்கும் வகையில் பொருத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  11. கோவில் நகைகள், சொத்துக்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளன.
  12. கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
  13. வருமானத்தைப் பெருக்க வணிக கட்டடங்களை கட்டுவதற்கு நிதி உதவியும் வழங்கப்படுகிறது.

இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், நாங்கள் திருப்தியடைகிறோம்: இம்மனுவை விசாரித்த தற்காலிக தலைமை நீதிபதி தர்மாராவ், நீதிபதி சிவஞானம் அடங்கிய “முதல் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவில், “இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், நாங்கள் திருப்தியடைகிறோம். கோவில்களில் பாதுகாப்பு சாதனங்கள் வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி, பதில் மனுவில் விளக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தனை பாதுகாப்பு இருக்கும் போது, எப்படி இத்தனை கொலை, கொள்ளை, திருட்டுகள்……….எல்லாம் நடக்கின்றன? நீதிபதி ஏதோ வழக்கை விசாரிக்க வேண்டுமே என்ற போக்கில் விசாரித்து, அதனை தள்ளூபடி செய்யவேண்டும் என்ற முன்-தீர்மானத்தின்படியே தள்ளுபடி செய்திருப்பது தெரிகிறது. நாளிதழ்களில் இதைப் பற்றிய செய்திகள் தொடர்ந்து வருகின்றன. அந்நிலையில், அவையெல்லாம் வழக்கறிஞர்களுக்கு, நீதிபதிகளுக்குத் தெரியாமல் இருந்திருக்க முடியாது. ஆகவே இத்தகைய ஏனோ-தானோ விசாரணைகள், தீர்ப்புகள் மக்களின் மனங்களில் திருப்தியை ஏற்படுத்தாது.

நீதிபதிகளுக்குத் திருப்தி என்பது இல்லை, மக்கள் திருப்தியடையவேண்டும்: நாத்திக அரசின்கீழ், இந்து அறநிலையத் துறை இருக்கிறது. தொடர்ந்து இந்திக்களை இழிவு படுத்தும் ஒரு நபர் முதலமைச்சராக இருக்கிறார். இதைப் பற்றிய வழக்குகளே (இந்துக்களை தூஷித்து பேசியதற்கான வழக்குகள்), நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. அந்நிலையில், அத்தகைஅ அரசு நியமிக்கப் படும் நீதிபதிகள் அரசிற்கு எதிராக எந்த தீர்ப்பும் அளிக்கப் படக்கூடாது, என்று அறிவுறுத்தப் பட்டிருந்தால், மக்களுக்கு எப்படி நியாயமான தீர்ப்பு கிடைக்கும்.

Advertisements

கருணாநிதியா, தீட்சிதர்களா: சிதம்பர கோவில்கள் படும்பாடு!

மே29, 2010

கருணாநிதியா, தீட்சிதர்களா: சிதம்பர கோவில்கள் படும்பாடு!

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது என்று பக்தர்களை ஏமாற்றவேண்டாம். இப்பொழுதையப் பிரச்சினை, இந்து அறநிலையத்துறை, சில கட்டிடங்களைக் கட்ட முற்பட்டதால்தான், வழக்கு போட்டு, இடைக்கால “நிறுத்தி வைப்பு” ஆணை பெறப்பட்டது. ஆகவே, இந்த பழைய கோவிலுக்கு இநெத ஆண்சை பொறுந்தாது.

சிதம்பரத்தில் தரைமட்டமாக்கப்பட்ட சுப்ரமணியர் சன்னதி கருவறை பூட்டியே கிடப்பது மக்களுக்கு ஆகாது:கடலூர்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=8680

சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில் பல நூற்றாண் டுகளை கடந்த பழமையான சுப்ரமணியர் சன்னதி கும்பாபிஷேகம் செய்யப் போவதாக கூறி தரைமட்டமாக்கப்பட்டு மூன்று ஆண் டுகள் ஆகியும் கட் டப்படவில்லை. பூஜைகூட நடத் தாமல் கருவறை பூட்டியே கிடப்பதால் நாட்டிற்கும், மக்களுக்கும் ஆகாது என தீட்சிதர் கடலூர் கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளதால் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

மாறவர்ம சுந்தரபாண்டியனால் கட்டப்பட்ட கோவில் எப்படி இடிக்கப் படலாம்? சிதம்பரம் நடராஜர் கோவில் வடக்கு ராஜகோபுரம் அருகே சிவகங்கை குளக்கரையில் பாண்டியநாயகம் என்றழைக்கப்படும் சுப்ரமணியர் கோவில் உள்ளது. கி.பி. 1216-1251 ஆண்டுகளில் மாறவர்ம சுந்தரபாண்டியன் என்ற மன்னனால் கட்டப்பட் டது. அழகான தேர் போன்று அமைந்த கோவிலில் வள்ளி தெய்வானையுடன் மயில்மீது அமர்ந்து சுப்ரமணியர் மூலவராக காட்சியளிப்பார்.இக்கோவிலின் முகப் பில் தேர் உருளைகள், யானைகள் வடிவமைக்கப் பட்டுள்ளன. மண்டப உட் புற மேல் விமானத்தில் கந்த புராண சித்திரங்கள், திருமுறை ஆசிரியரின் உருவங்கள் மற்றும் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள் செதுக்கப்பட்ட தூண்கள், ஓவியங்கள் பழங்கால கட் டட திறமைகளை வெளிப் படுத்தும் விதமாக அமைக் கப்பட்டிருக்கும்.

தீட்சிதர்கள் இடிக்க அதிகாரம் உள்ளதா? இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 10 நாட் கள் கொண்டாடப்பட்டு வந்தது. அத்துடன் சிதம்பரம் நகரை சுற்றியுள்ள கிராம பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு இங்கு தான் திருமணம் நடக்கும். இத் தனை சிறப்புகள் வாய்ந்த இக்கோவில் சிதலமைந்து விட்டதாகவும், புதியதாக கட்டி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என காரணம் கூறி மூன்று ஆண்டுகளுக்கு [2007?] முன் தீட்சிதர்கள் முழுமையாக இடித்து தரைமட்டமாக்கி விட்டனர். கோவில் கருவறை மட்டுமே எஞ்சியுள்ளது. அதுவும் திறந்து பூஜை செய்யாமல் அந்த இடம் முட்புதர்களாக மாறிவிட்டது.இடிக்கப்பட்ட கோவிலை தீட்சிதர்கள் தரப்பில் கட்ட முயற்சி மேற்கொள்ளாத நிலையில், கடந்த ஆண்டு நடராஜர் கோவிலை அறநிலையத்துறை கட்டுப்பாட் டிற்கு கொண்டுவரப்பட்ட பிறகு கோவில் இடிக்கப் பட்டது குறித்து முழு தகவலையும் அறநிலையத்துறைக்கு தெரியப்படுத்தினர்.

கருணாநிதி-தீட்சிதர் பிரச்சினை பக்தர்களுக்கு வேண்டாம்: இருந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோவில் அறநிலையத்துறை ஏற்றது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் டில் வழக்கு நடக்கிறது. வழக்கு முடியும் வரை கோவிலில் எந்தவித கட்டமைப்பு பணியோ, பழமை கட்டடங்கள் இடிக்கவோ கூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அப் படி அவசியம் ஏற்பட்டால் கோர்ட் அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவில் கட்டப்படாததற்கு பல காரணங்களை கூறி வந்த தீட்சிதர்கள் தரப்பு தற்போது, சுப்ரீம் கோர்ட் உத்தரவை காரணமாக கூறி வருகிறது. பழமையான கோவிலை காலம் கடத்தாது கோர்ட் அனுமதி பெற்றாவது கட்டி முடிக்க வேண்டும் என்பது பக்தர்களின் எதிர் பார்ப்பு.கோவில் கட்டப்படாதது குறித்து கலெக்டர் வரை கைலாச சங்கர தீட்சிதர் என்பவர் புகார் செய்திருப்பதால் வெளியில் தெரியாமல் இருந்து வந்த இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. கலெக்டரிடம் கைலாச சங்கர தீட்சிதர் கொடுத்துள்ள புகாரில், மூன்றாண் டுகள் கோவில் இடிக்கப் பட்டு பூஜை ஏதும் செய்யாமல் இருப்பது நாட்டிற் கும், மக்களுக்கும் ஆபத்து. கோவில் இடிக்கப்பட்ட பிறகு தான் நடராஜர் கோவிலிலும் பல பிரச்னைகள் ஏற்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

கோவில்களை இடிக்கச் சொல்லும் வீரமணி (ஔரங்கசீப்பும், மாலிக்காஃபூரும்)!

மே28, 2010

முதல்வர் கலைஞரின் கனிவான கவனத்திற்கு…..கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள கோவில்களை அகற்ற நடவடிக்கை தேவை

1973 அரசு ஆணை என்று 2010ல் குறிப்பிடும் வீரமணி: கன்னியாகுமரி, மே 28_ குமரி மாவட்டத்தில் அரசு அலுவலங்களில் இருக்கும் கோவில்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குமரி மாவட்ட கழக தோழர்-கள் மாவட்ட ஆட்சியர் இராஜேந்திர ரத்னூ-விடம் கோரிக்கை மனு கொடுத்தனர். கன்னியாகுமரி மாவட்-டத்-தில் அரசு அலுவல-கங்-களில் இருக்கும் கோவில்-களையும், கடவுள் சிலைகள், படங்களையும் அகற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி குமரி மாவட்ட திராவிடர் கழக தோழர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு. அரசு அலுவலங்களில் கோவில்களோ, கடவுள் சிலைகளோ படங்களோ இருக்கக் கூடாது அப்படி இருந்தால் அதை அகற்ற வேண்டும் என்று தமிழ்-நாடு அரசாணை உள்-ளது. (அரசு குறிப்பு ஆணை எண்.7553/66_2 பொது_எம் துறை நாள்: 29.4.1973)

சிலைகளை வைத்துக் கும்பிடும் திக, சிலைகள் அகற்ற மனு கொடுக்கிறதாம்: இந்நிலையில் குமரி மாவட்டம் நாகர்கோவில் நகரில் காவல்துறை பொருளாதார குற்றப்-பிரிவு அலுவலகம், ஒழு-கினசேரியில் தமிழ்நாடு மின்சார வாரிய அலு-வலக வளாகத்தில் ஒரு விநாயகன் சிலை, நாகர்-கோவிலில் உள்ள அகஸ்-தீவரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஒரு விநாயகன் கோவில் (அந்த விநாயகனுக்கு சிறீ ஆதி விநாயகன் என்று பெயராம். அரசு அலு-வலக செலவில் அவ-னுக்கு மின்சார விளக்கு) கோட்டாறு ஆயுர் வேத மருத்துவ கல்லூரி (பழைய கோட்டாறு மருத்துவமனை) வளாகத்-தில் ஒரு கோவில், ஆசாரி பள்ளத்தில் அமைந்-துள்ள குமரி மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்-லூரி வளாகத்தில் மூன்று கோவில்கள் அமைக்கப்-பட்டு அங்கு தினமும் பார்ப்பனர்களுடைய பூசை நடைபெற்று வரு-கின்றன. இந்தநிலையில் அரசு ஆணைப்படி அந்த கோவில்களை அகற்ற வேண்டும். அரசு அலுவ-லகங்களில் கடவுள்கள் சிலைகள் படங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை மனுவாக எழுதி அதில் அந்த கோவில்களின் ஒளிப்-படங்கள், கடவுள் பட நீக்கம் ஆணை நகல் ஆகியவற்றை இணைத்து குமரி மாவட்ட திராவி-டர் கழக மாவட்ட செய-லாளர் கோ.வெற்றிவேந்-தன், மாவட்ட தி.க அமைப்பாளர் ஞா.பிரான்-சிஸ், தி.க பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன், மாவட்ட தி.க இளை-ஞ-ரணி தலைவர் த.சுரேஷ் கழக தோழர் வே.சதா ஆகியோர் 27.5.2010 வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு நாகர்கோ-விலில் அமைந்துள்ள குமரி மாவட்ட ஆட்-சியர் அலுவலகத்திற்கு சென்று மாவட்ட ஆட்-சியர் இராஜேந்திர ரத்-னூவை சந்தித்து அந்த கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

மாவட்டா ஆட்சியரா, மாலிக்காப்பூரா? கழக தோழர்களின் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் இராஜேந்திர ரத்னூ அந்த மனுவை படித்து-விட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப் போவதாக கழக தோழர்-களிடம் உறுதியளித்தார். நான் எனது அய்ந்து வயது முதல் தந்தை பெரியாரைப் பற்றி நன்கு அறிந்துள்ளேன். அரசு அலு-வலகங்களில் கோவில்–களோ பூசைகளோ, மதவிழாக்களோ நடத்தக் கூடாது என்று மாவட்-டத்-தில் உள்ள அனைத்து அரசு அதிகாரிகளிடமும் நான் நேரில் கூறியுள்-ளேன் என்று மாவட்ட ஆட்சியர் கழக தோழர்-களிடம் கூறினார். கழக தோழர்கள் ஆங்கிலத்-தில் உள்ள தந்தை பெரியார் நூல்களை மாவட்ட ஆட்-சியரிடம் வழங்கினர்.

பட்டியல் போட்டு இடிக்க கிளம்பியுள்ள ஔரங்கசீப்: பின்னர் கழக தோழர்-கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நாகர்கோவில் வருவாய் கோட்டாட்-சியர் அலுவலகத்திற்கு சென்று கோட்டாட்சியர் நடராஜனிடம் அந்த மனு-வின் நகலை வழங்கினர்.

தமிழக முதலமைச்சர் தமிழக அரசு தலைமை செயலாளர், குமரி மாவட்ட வருவாய் அலு-வலர், மாவட்ட காவ-ல்துறை கண்காணிப்பா-ளர், நெடுஞ்சாலைத்-துறை கோட்டப் பொறியாளர், ஆயுர்வேத மருத்துவ கல்லூரி முதல்வர், குமரி மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி முதல்வர், குமரி மாவட்ட மின்சார வாரிய மேற்-பார்வை பொறியாளர் ஆகிய அதிகாரிகளுக்கு குமரி மாவட்ட கழக தோழர்கள் அந்த மனு-வின் நகலை அனுப்பியுள்-ளனர்.

1. நாகர்கோவில் பொரு-ளாதார குற்றப்பிரிவு அலுவலக வளாகத்தில் உள்ள கோவில்

2. நாகர்கோவில் வட-சேரி மின்சார வாரியம் அலுவலகத்தில் உள்ள விநாயகன் கோவில்

3. நாகர்கோவில் வட்-டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறீ ஆதிவிநாயகன் கோவில்

4. கோட்டாறு மருத்-துவமனை வளாகத்தில் உள்ள கோவில்

5. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள கோவிலில் பூசை 6. ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரியில் இரண்டாவது கோவில்

7. ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி-யில் மூன்றாவது கோவில்

8. நாகர்கோவில் நெடுஞ்-சாலைத்துறை அலுவலக வளாகத்தில் உள்ள கோவில்.

நாத்திக அறத்துறையின் வலை பெரிதாகிறது: இன்னுமொரு மடம் / கோவில் அபகரிக்கப் படுகிறது!

மே3, 2010
நாத்திக அறத்துறையின் வலை பெரிதாகிறது: இன்னுமொரு மடம் / கோவில் அபகரிக்கப் படுகிறது!
இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இம்முடி அகோர தர்ம சிவாச்சாரியார் மடம்
மே 03,2010,00:00  IST

கோவை: பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை கொண்ட, திருஆலங்காடு இம்முடி அகோர தர்ம சிவாச்சாரியார் ஆயிர வைசியர் மடம், அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி நெருஞ்சிப்பேட்டை அருகேயுள்ளது திருஆலங்காடு. இந்த கிராமத்தில், இம்முடி அகோர தர்ம சிவாச்சாரியார் ஆயிர வைசியர் மடம் உள்ளது. பழம்பெருமை வாய்ந்த இந்த மடம், 1800ம் ஆண்டு துவக்கப்பட்டது. 1978ல் மடத்தின் அறங்காவலர்கள் மற்றும் மடாதிபதிக்குமிடையே ஏற்பட்ட பிரச்னையால், கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, மடாதிபதி மடத்தைவிட்டு வெளியேறினார். மடத்துக்கு சொந்தமாக 612 ஏக்கர் 10 சென்ட் நன்செய் நிலம் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 482 ஏக்கர் நிலம் உள்ளது. மீதமுள்ள நிலம் மற்ற மாவட்டங்களில் உள்ளது. 21 கடைகள், இரண்டு திருமண மண்டபங்கள், ஏழு குடியிருப்புகள், மூன்று தங்கும் விடுதிகள், ஒரு மேல்நிலைப்பள்ளி, ஒரு கிரானைட் குவாரி, சுண்ணாம்புக்கல் குவாரியும், மடத்துக்கு சொந்தமாக உள்ளன. இப்படி பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பு வகித்த அறங்காவலர் குழு, நீண்ட நாட்களாக தேர்வு செய்யப்படவில்லை.பல்வேறு குளறுபடி களால், மடத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.மடத்தில் நடக்கும் முறைகேடுகளை களையவும், நிர்வாகத்தை முறைப்படுத்தவும் அறநிலையத்துறை கமிஷனர் சம்பத் கடந்த மாதம் 29ம் தேதி, கோவை மண்டல இணை கமிஷனருக்கு உத்தரவிட்டார்.

ஈரோடு அறநிலையத்துறை உதவி கமிஷனரை மடத்தின் பொறுப்பாளராக நியமிக்கவும் அறநிலையத்துறை உத்தரவிட்டது.இதையடுத்து, கோவை மண்டல அறநிலையத்துறை இணை கமிஷனர் அசோக் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் (ஆலய நில மீட்பு) சுப்ரமணியன், மருதமலை கோவில் துணை கமிஷனர் லட்சுமணன், கோவை மண்டல கோவில் செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள், நெருஞ்சிப்பேட்டை கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர், மடத்தை அறநிலையத்துறை வசம் கொண்டு வந்தனர். இதற்கான எச்சரிக்கை நோட்டீஸ், மடத்தின் வாயிலில் ஒட்டப்பட்டது.கோவை மண்டல அறநிலையத்துறை இணை கமிஷனர் அசோக் கூறியதாவது:நீண்டகால முயற்சிக்கு பின், நூற்றாண்டு பழமை வாய்ந்த மடம், அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் மடத்துக்கு வரும் வருவாய் சீராகும். அனைத்து வருவாய் இனங்களுக்கும் சரியான கணக்கு எழுதப்படும். ரசீது வழங்கப்படும். மடத்தின் கட்டுப்பாட்டில் ஏராளமான குத்தகைதாரர்கள், வாடகைதாரர்கள் உள்ளனர். நிலுவை வைத்துள்ள வாடகையை உடனடியாக மட நிர்வாகத்திடம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். இதன் மூலம் வருவாய் இழப்பை தடுக்க முடியும். மடத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு திருத்திய ஊதிய விகிதம் வழங்கப்படும். சம்பள பாக்கியும் வழங்கப்படும்.இவ்வாறு அசோக் கூறினார்.

கருணாநிதியின் ஆட்சியில் தொடரும் கோவில் கொள்ளை!

திசெம்பர்24, 2009
கருணாநிதியின் ஆட்சியில் தொடரும் கோவில் கொள்ளை!

ஏற்கெனவே பலதடவைக் குறிப்பிட்டப்படி, இந்த கருணாநிதியின் ஆட்சியில், நாத்திகம் மற்றும் இந்து எதிரிப்பு கொள்கையில், சம-தர்மம் என்பதெல்லாம் ஒன்றும் இல்லாம் கோவில்களை இடிப்பதும், கோவில் சொத்துகளை அபகரிப்பதும்,  உண்டியல்கள் திட்டமிட்டபடி உடைத்து பணம் திருடுவதும் நிரந்தர தொழிலாகிவிட்ட நேரத்தில், இப்படி கோவில் சொத்துக்களை – நிலங்களை கொள்ளையடுப்பதும் தொடர்கிறது!

ஒருபக்கம் மரகதலிங்கத்தைக் கண்டுபிடித்துவிட்டோம் என்று ஊர்வலம் நடத்தி அந்த லிங்கத்தையே ஏன் சைவத்தையே கேலி செய்து, கேவலப்படுத்துகின்றனர்!

ஆனால் கோடிக்கணக்கில் மரகதலிங்கங்கள் திருடப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது!

எதெல்லாம் மக்களைத் திசைத் திருப்பும் நாடகங்கள்.

இவர்கள் ஏதோ கோவில்களுக்க்காக உயிரையேவிடும் மாதிரியான நடிப்பு!

கலைஞர் டிவியிலேயோ தொடர்ந்து காசியைக் காவலப்படுத்திகின்றனர்.

இவர்களா சைவத்தை / இந்து மதத்தைக் காப்பாற்றாப் போகிறார்ள்?


கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
தினமலர், 24-05-2010

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=5510

திருவண்ணாமலை: களம்பூர் வேணுகோபால் ஸ்வாமி கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இக்கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடித்துவிட்டு அர்ச்சகர் கோவிலை பூட்டி சென்றார். நேற்று அதிகாலை வழக்கம்போல் கோவிலை அர்ச்சகர் திறக்க வந்த போது, கோவில் வளாகத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது. களம்பூர் போலீஸார் விசாரித்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
அறநிலையத்துறையின் 148 ஏக்கர் நிலம் கபளீகரம்
டிசம்பர் 23,2009,00:00  IST

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=20028&ncat=TN&archive=1&showfrom=12/23/2009

கோவை:அறநிலையத்துறை வசமிருந்த 148 ஏக்கர் நன்செய் நிலம், தனியார் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் தங்களது வசமாக்கி, மனையிடங்களாக விற்பனை செய்தனர். அங்கு கட்டுமானப் பணி துவங்கிய நிலையில் கோவிலிற்கு சொந்தமான நிலம் என்பது தெரிய வந்ததால், பல லட்சம் கொடுத்து இடம் வாங்கியவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.சூலூருக்கு அருகே உள்ள திருவேங்கடநாத பெருமாள் கோவிலிற்கு சொந்தமாக 148.18 ஏக்கர் நிலம் உள்ளது. இதில், தேவதாசி மானியத்தின் அடிப்படையில், இனாம் ஒழிப்பு சட்டத்தின் கீழ் 1963ல் கோவில் பூமியை, ஊழியம் செய்து வந்தவர்களுக்கு நிபந்தனை அடிப்படையில் பட்டா வழங்கப்பட்டது.

இந்த பட்டா அடிப்படையில், பல்லடம் செட்டில்மென்ட் தாசில்தாராக பணிபுரிந்த நாகராஜன் என்பவர், கோவில் ஊழியம் செய்து வந்தவர்களுக்கு நிபந்தனை பட்டா என்று குறிப்பிடாமல், வழக்கமாக வழங்கப்படும் பட்டாவை போல வழங்கினார்.இதை அடிப்படையாக வைத்து 148.18 ஏக்கர் நிலத்தை, ஊழியம் செய்து வந்தவர்கள் பலருக்கும் பல அளவுகளில் விற்பனை செய்தனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், இந்நிலங்களை சிலரிடம் இருந்து வாங்கிய மேரிலேண்ட் புரோமோட்டர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம், அதே இடத்தை பலருக்கும் காலிமனையிடமாக பிரித்து விற்பனை செய்தது. காலிமனையிடங்களை 200க்கும் மேற்பட்டவர்கள் வாங்கினர்.இவர்களில் சிலர், வீடு கட்டுவதற்கு, கடன் பெறுவதற்காக, வில்லங்கச் சான்று, மூலபத்திர நகல், பட்டா ஆகியவற்றை பெறுவதற்காக சூலூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு வந்தனர்.கிராம நிர்வாக அலுவலர் பட்டா வழங்குவதற்காக, பழைய பதிவேடுகளை தூசு தட்டினார். அப்போது தேவதாசி முறையில் வழங்கப்பட்ட, இந்நிலம் கோவிலுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

இது குறித்து கோவில் செயல் அலுவலர் கோபால் கூறியதாவது: இனாம் ஒழிப்பு சட்டத்திற்கு பிறகு, மைனர் இனாம் ஒழிப்பு சட்டம் வந்தது. அதன்படி கோவில் ஊழியம் செய்து வருபவர்கள் வசம் இருக்கும் நிலத்தை பயன்படுத்திக்கொள்ளலாமே தவிர, சொந்தம் கொண்டாட முடியாது. நிபந்தனை அடிப்படையில் ஊழிய பூமிதாரர்களுக்கு பட்டா வழங்கப்பட வேண்டும். ஆனால், இதை மாற்றி நிரந்தர பட்டாவாக வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறை பரிந்துரை செய்துள்ளது.

நிலத்தை வாங்கியவர்கள் எவ்விதத்திலும் தவறு செய்யவில்லை. ஆனால், இது போன்ற நிலத்தை விலைக்கு வாங்கி, அதில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்படுவர்.அறநிலையத்துறை வசம் உள்ள இது போன்ற நிலங்கள் கணக்கீடு செய்யப்பட்டு, அவை குறித்த தகவல் பத்திர பதிவுத்துறைக்கு அனுப்பப்பட்டு வருகிறது, என்று அறநிலையத்துறை அதிகாரிகள் கூறினர்.அறநிலையத்துறை இணை கமிஷனர் அசோக் கூறுகையில், “கோவை மண்டலத்தில் மட்டும் இது போன்ற நிலங்கள் 700 ஏக்கர் வரை தனியார் வசமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. இதில் தவறு செய்தவர்கள் மீது கடுமையான தண்டனை வழங்க அறநிலையத்துறை பரிந்துரை செய்துள்ளது’ என்றார்.

தாமதம் ஏன்?:கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், பதிவுத்துறைக்கும், வருவாய்த்துறைக்கும் மிகப்பெரிய இடைவெளி இருந்தது. வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்.டி.ஓ. (வருவாய் கோட்டாட்சியர்) பதவிக்கு கீழே இருக்கும் தாசில்தார்கள், பட்டா வழங்கியது குறித்து ஆவணங்களில் பதிவு செய்தாலும், அவை பதிவுத்துறைக்கு முறையாக அனுப்பி வைக்கவில்லை.இதனால் எந்த நிலங்களுக்கு, பட்டா வழங்கப்பட்டது, எதற்கு பட்டா வழங்கப்படவில்லை என்பது தெரியாமல் பத்திர பதிவுத்துறை யார் வந்தாலும் எளிதாக பத்திரப்பதிவை மட்டும் செய்து கொடுத்தது.தற்போது இந்நிலை மாறி பத்திர பதிவுத்துறை, வருவாய்த்துறை ஆகியன இரண்டும் ஆவணங்களை சரியான முறையில் பதிவு செய்துகொள்கிறது. இதனால் இந்த முறைகேடு அன்றே வெளிச்சத்துக்கு வரவில்லை.

இப்படி, கொலை, கொள்ளை……..!

கோவில்களுக்கு ஐ.எஸ்.ஓ., சான்று : அமைச்சர் பெரியகருப்பன் தகவல்!

நவம்பர்12, 2009
கோவில்களுக்கு ஐ.எஸ்.ஓ., சான்று : அமைச்சர் பெரியகருப்பன் தகவல்
நவம்பர் 12,2009,00:00  IST

http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=14932

Latest indian and world political news informationசிவகங்கை : சென்னை கபாலீஸ்வரர், பார்த்தசாரதி, வடபழனி கோவில்களுக்கு உலக தரச்சான்று பெற (ஐ.எஸ்.ஓ.,) முயற்சி எடுத்து வருவதாக அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறினார். சிவகங்கையில் அவர் கூறியதாவது: அறநிலையத்துறையின் கீழ், 38 ஆயிரத்து 645 கோவில்கள் உள்ளன. கடந்த ஆட்சியில் கோவில் திருப்பணிக்காக 147 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 360 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளோம். பழநி கோவிலில் பக்தர்கள் பாதுகாப்பாக செல்ல, இரண்டாவது “ரோப் கார்’ (மோனோ கேபிள் ஜிப் பேக் முறை) அமைக்கப்பட உள்ளது. சோளிங்கரில் புதிதாக “ரோப் கார்’அமைக்கப்படும். இதற்கு 12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, ஒரு மாதத்திற்குள் டெண்டர் விடப்படும். நடப்பு ஆண்டில் பயிற்சி பெற்ற 207 பேர் அர்ச்சகராகியுள்ளனர்.பழநி, திருச்செந்தூர், ராமேஸ்வரம், மதுரை மீனாட்சியம்மன் உட்பட 10 கோவில்கள் சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.

உலகத்தர சான்று: சென்னை கபாலீஸ்வரர், பார்த்தசாரதி, வடபழனி முருகன் கோவில்களுக்கு உலகத்தர சான்று (ஐ.எஸ்.ஓ.,) பெற முயற்சிக்கிறோம். இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைத்து விடும். திருத்தணி முருகன் கோவில் கோபுரம் கட்டுமானப் பணிக்கு மூன்று கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டு விழா, ஒரு சில நாட்களில் நடக்கும். ஆதிதிராவிடர்கள் பகுதியில் உள்ள 1,000 கோவில் திருப்பணிக்காக, தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதுவரை 20 ஆயிரம் ஆதிதிராவிடர் கோவில்களுக்கு திருப்பணி செய்ய நிதி தரப்பட்டுள்ளது, என்றார். அறநிலையத்துறை கமிஷனர் சம்பத், கலெக்டர் மகேசன்காசிராஜன், ராஜசேகரன் எஸ்.பி., உடனிருந்தனர்.

விமர்சனம்:

1. கடந்த ஆட்சியில் கோவில் திருப்பணிக்காக 147 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 360 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளோம்: இப்படி சொல்வதைவிட, இந்த ஆட்சியில் இந்துக்களுக்கு மேலாக என்ன செய்துவிட்டீர்கள் என்று சொல்லவில்லையே?
2. அந்த 360 கோடி எங்கிருந்து வந்தது, எங்கே போகப் போகிறது?
3. பழநி கோவிலில் பக்தர்கள் பாதுகாப்பாக செல்ல, இரண்டாவது “ரோப் கார்’ (மோனோ கேபிள் ஜிப் பேக் முறை) அமைக்கப்பட உள்ளது. சோளிங்கரில் புதிதாக “ரோப் கார்’அமைக்கப்படும். இதற்கு 12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, ஒரு மாதத்திற்குள் டெண்டர் விடப்படும். இவ்வாறு டெண்டர் பணம் எங்கே போகும்? இங்கு ஏன் தமிழ் கலாச்சாரம், பண்பாடு, நாகரிகல் மறந்து விட்டது?
4. உழவாரப் பணியைச் செய்யவேண்டியதுதானே? அதுதானே தமிழ் கலாச்சாரம்? எதஏகு டெண்டர் போட்டு கொள்ளை?
5. நடப்பு ஆண்டில் பயிற்சி பெற்ற 207 பேர் அர்ச்சகராகியுள்ளனர். கோர்ட்டில் வழஜ்க்குள்ள போதிலேயே வேலைக்கு அமர்த்தப் பட்டுள்ளனரா?
6. பழநி, திருச்செந்தூர், ராமேஸ்வரம், மதுரை மீனாட்சியம்மன் உட்பட 10 கோவில்கள் சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.அத்தனை குப்பையை ஏன் தமிழர்கள் கொட்டுகிறார்கள்?
7. சென்னை கபாலீஸ்வரர், பார்த்தசாரதி, வடபழனி முருகன் கோவில்களுக்கு உலகத்தர சான்று (ஐ.எஸ்.ஓ.,) பெற முயற்சிக்கிறோம். ஐயோ, இதென்ன கூத்து? எதோ “பத்மஸ்ரீ” விவேக் அடிக்கும் ஜோக் மாதிரி இருக்கின்றதே?
8. இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைத்து விடும். ஓஹோ, அப்படியா விஷயம்! அதற்குள் எத்தனை கம்பெனிகளை “திராவிடர்கள்” / “கழகங்கள்” பதிவி செய்துவிட்டனவோ தெரியவில்லை!
9. திருத்தணி முருகன் கோவில் கோபுரம் கட்டுமானப் பணிக்கு மூன்று கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டு விழா, ஒரு சில நாட்களில் நடக்கும்.டெண்டெர் எடுத்தவர்களின் “ஒதுக்கிடு” என்னவோ தெரியவில்லை!
10. ஆதிதிராவிடர்கள் பகுதியில் உள்ள 1,000 கோவில் திருப்பணிக்காக, தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதுவரை 20 ஆயிரம் ஆதிதிராவிடர் கோவில்களுக்கு திருப்பணி செய்ய நிதி தரப்பட்டுள்ளது, என்றார். அறநிலையத்துறை கமிஷனர் சம்பத், கலெக்டர் மகேசன்காசிராஜன், ராஜசேகரன் எஸ்.பி., உடனிருந்தனர். இதுவும் ஒதுக்கீடா அல்லது அரசியல் ரீதியில் ஜாதி உணர்வுகளை காப்பாற்றிவைக்கும் சூழ்ச்சியா?

திருவாரூர் கோவிலில் திருட்டு!!!

ஒக்ரோபர்13, 2009
திருவாரூர் கோவிலில் திருட்டு: மர்ம நபர்களை தேடும் தனிப்படை
அக்டோபர் 13,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=13342

Important incidents and happenings in and around the world

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவில் உண்டியலை உடைத்து தங்கம், வெள்ளி மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த 12ம் தேதி அதிகாலை, திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் இரண்டு உண்டியல்களை கடப்பாரையால் உடைத்து, ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். கோவில் நிர்வாக அதிகாரி கஜேந்திரன் புகாரின் பேரில், திருவாரூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். கைரேகை பதிவு செய்யப்பட்டதில், பழைய குற்றவாளிகளின் கைரேகையுடன் ஒத்துவரவில்லை.

இதையடுத்து, மூன்று சிறப்பு தனிப்படைகளை போலீசார் அமைத்து, குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். பழைய குற்றவாளிகள் குறித்தும் தீவிர விசாரணை நடக்கிறது. தனிப்படையினர் சந்தேகப்படும் படியான நபர்களின் கைரேகை எடுத்து, சோதனை செய்து வருகின்றனர். இதுவரை 50க்கும் மேற்பட்டவர்களின் கைரேகை பதிவு செய்து சோதனை செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உண்டியல் உடைத்து கொள்ளை
[ ஞாயிற்றுக்கிழமை, 11 ஒக்ரோபர் 2009, 02:12.04 PM GMT +05:30 ]
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தியாகராஜர் சன்னதி, நவக்கிரக சன்னதிகள் முன்பு இருந்த உண்டியல்கள் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதனால் கோயில் நடை அடைக்கப்பட்டதால் வெளியூர் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் திரும்பிச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சைவ தலங்களில் பழமையானதும் வரலாற்று சிறப்பு மிக்கதுமான திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்கு சனி, ஞாயிறு கிழமைகளில் பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வந்து செல்வார்கள். நேற்று சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. இரவு 10 மணிக்கு கோயில் குருக்கள் மற்றும் ஊழியர்கள் கோயில் உள்பிரகார கதவை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டனர்.
இன்று அதிகாலை 5.30 மணிக்கு குருக்கள் மற்றும் ஊழியர்கள் கோயிலை திறக்க வந்தனர். அப்போது கோயில் உள்பிரகார கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது தியாகராஜர் சன்னதி முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது. நவக்கிரக சன்னதி முன்பு இருந்த 4 அடி உயர உண்டியலும் உடைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து கோயில் ஊழியர்கள் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையரும், கோயில் நிர்வாக அதிகாரியுமான கஜேந்திரனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் திருவாரூர் நகர போலீசில் புகார் செய்தார். டிஎஸ்பி சீனிவாசன், இன்ஸ்பெக்டர் இமயவரம்பன் மற்றும் போலீசார் கோயிலுக்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை, தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. 2 மோப்பநாய்களும் வரவழைக்கப்பட்டது.

கடந்த மாதம் 2-வது வாரத்தில் உண்டியல் திறக்கப்பட்டது. அதன்பின்னர், காலாண்டு விடுமுறை, புரட்டாசி உற்சவம் என்பதால் உள்ளூர், வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சென்றனர். இதனால் உடைக்கப்பட்ட 2 உண்டியல்களில் ரூ.50ஆயிரத்துக்கு மேல் பணம், சில்லரை காசுகள் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. சிலைகள் எதுவும் திருட்டுபோனதா என்று தீவிர சோதனை நடத்திவருகின்றனர்.

போலீசாரின் சோதனையை தொடர்ந்து கோயில் வெளிப்பிரகார 4 வாயில்களும் அடைக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். கொள்ளை குறித்து போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோயிலில் திருட்டு நடந்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.