Posts Tagged ‘கருணாநிதி-ராமதாஸ்’

திமுக-பாமக குடுமி சண்டையில் மாட்டிய கோவில் நிலம்: திராவிடக் கட்சிகளின் கூட்டுக் கொள்ளையின் நாடகம்!

ஜூலை31, 2010

திமுக-பாமக குடுமி சண்டையில் மாட்டிய கோவில் நிலம்: திராவிடக் கட்சிகளின் கூட்டுக் கொள்ளையின் நாடகம்!

கருணாநிதி-ராமதாஸ் சண்டை: மத்தியில் கூட்டணி உடைந்து, பாமக வெளியேறிய பிறகு, அன்புமணி பதவி விலக நேர்ந்தது. அதுமுதல் திமுக-பாமக சண்டை ஆரம்பித்துவிட்டது. சமீபத்தில், ராமதாஸ் வெளிப்படையாக திமுக கூட்டணியில் சேர விருப்பம் தெரிவித்தார், ஆனால், கருணாநிதி கிண்டலடித்தார். உடனே ராமதாஸ் வன்னியருக்குத் தனி இட-ஒதுக்கீடு தேவை என ஆரம்பித்தார். அடுத்தது மதுவிலக்கு பாணத்தை பிரயோகித்தார். பிறகு காங்கிரஸ் மாதிரி, பழைய வழக்குகளை தூசி தட்டி, அவசரம்-அவசரமாக தீர்ப்புகள் கொடுக்கப்படுகின்றன. விளைவு அரசியல் கட்சிகளின் விபரீதபோக்குதன் வெளிப்படுகிறது.

இந்து அறநிலையத்துறை ஊழியர்கள் மீது தாக்மாஜி பா.ம.க., அமைச்சர் உட்பட 100 பேர் மீது வழக்குகுதல், ஜூலை 31,2010

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=51222

தினமலர், இலங்கை தமிழர் பிரச்னையை கருணாநிதி கைகழுவி விட்டார்ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டு , அக்டோபர் 08,2009

http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=14289

சட்டசபை: திமுக எம்எல்ஏவை அடிக்கப் பாய்ந்த பாமக எம்எல்ஏக்கள்!

வெள்ளிக்கிழமை, ஜூலை 10, 2009, 14:08[IST]

http://thatstamil.oneindia.in/news/2009/07/10/tn-pmk-mlas-try-to-manhandle-dmk-member-assembly.html

இதே மாதிரி மற்ற நிலங்களை ஏன் அறநிலையத் துறை துணை கமிஷனர் முதலியோர் பாய்ந்து சென்று மீட்கச் செல்வதில்லை?: ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் சொத்தை மீட்கச் சென்ற அறநிலையத் துறை துணை கமிஷனர் உள்ளிட்ட அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்து, அடித்து விரட்டிய பா.ம.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ., சண்முகம் உள்ளிட்ட 100 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏதோ திமுக ஆட்சியில் அதிசயம் நடப்பதாக நினைத்துக் கொள்ளவேண்டாம். பாமகவிடமிருந்து அள்ளவேண்டும் என்ற எண்ணத்தில்தான், இந்த மீட்பு நாடகங்கள் நடக்கின்றனவேயன்றி, கோவில் நிலத்தை மீட்க என்ற எண்ணத்தில் நடக்கவில்லை.

கோவில் நிலத்தைக் கொள்ளையடிப்பதில் திராவிட கட்சிகள் களைத்தவை அல்ல: வடபழனி ஆண்டவர் கோவிலுடன் இணைந்த காசி விஸ்வநாதசுவாமி கோவில் பரங்கிமலையில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமாக 39 ஆயிரத்து 782 சதுரடி நிலப்பரப்பு பரங்கிமலை பட்ரோட்டில் அமைந்துள்ளது. அதில் 3,000 சதுரடிக்கு கட்டடம் உள்ளது. கட்டடத்தின் வாடகைதாரர் சுகந்தமணி என்பவருக்கு, கடந்த 1989 முதல் ஐந்து ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.

உள்குத்தகைக்கு விடப்பட்டது என்றாலே கூட்டுக்கொள்ளைதானே? இந்நிலையில், வன்னியர் சங்கம் என்ற அமைப்புக்கு கோவில் மற்றும் துறை அனுமதியின்றி உள்குத்தகைக்கு விடப்பட்டதாக தெரிகிறது. கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக வன்னியர் சங்கம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இது தொடர்பாக கோவில் நிர்வாகம், கடந்த 1991ம் ஆண்டு பூந்தமல்லி கோர்ட்டில் வெளியேற்று வழக்கை தொடுத்தது. இவ்வெளியேற்று வழக்கில், அச்சங்கத்தின் சார்பில் ஆஜராகி பல்வேறு காரணங்களுக்காக வெளியேற்று மனுவை நிறைவேற்ற இயலாதபடி, பல வாய்தாக்கள் சென்றன. போதுமான அவகாசம் கோர்ட் அளித்தும் வன்னியர் சங்கம் தரப் பில் ஆதாரங்கள் இல்லாததால், இறுதியாக வெளியேற்று நடவடிக்கையை நிறைவேற்றுமாறு ஆலந்தூர் கோர்ட் உத்தரவிட்டது.

திடீர் உத்தரவு, சீல், சண்டை, இத்யாதி: ஆலந்தூர் முனிசிபல் கோர்ட் உத்தரவை செயலாக்குவதற்காக, இந்து சமய அறநிலையத்துறையின் துணை கமிஷனர் காவேரி தலைமையில், திருவேற்காடு கோவில் துணை கமிஷனர் ஜெயராமன் மற்றும் வடபழனி ஆண்டவர் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் கண்மணி, கோவில் ஊழியர்கள், வன்னியர் சங்கத்திற்கு சென்றனர். வன்னியர் சங்கம் பெயரில் இயங்கிய கட்டடத்தை ஆலந்தூர் கோர்ட் அமீனா மூலம் மீட்டு, பின் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

அறநிலையத்துறை ஊழியர்கள் ஏன் அறமற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்?: இதையறிந்த, பா.ம.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ., சண்முகம் ஆகியோர் வன்னியர் சங்க கட்டடத்திற்கு வந்து, பூட்டிய சீலை உடைத்து கோவில் பணியாளர்களை கற்கள் மற்றும் கம்புகளை கொண்டு தாக்கினர். அறநிலையத் துறை  துணை கமிஷனர் காவேரியின் காரை கல்லால் அடித்து சேதப்படுத்தினர். மேலும், கார் டிரைவர் அஜய்,  துணை கமிஷனர் காவேரி மற்றும் அறநிலையத்துறை  ஊழியர்களை பா.ம.க.,வினர் சரமாரியாக தாக்கினர். இது குறித்து துணை கமிஷனர் காவேரி, பரங்கிமலை போலீஸ் ஸ்டேஷனில், “அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்து, அவர்களை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து, அரசு வாகனத்தையும் சேதப்படுத்திய முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ., சண்முகம் உட்பட 100 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என குறிப்பிட்டு புகார் மனு அளித்தார். இதையடுத்து, முன்னாள்  மத்திய ரயில்வே அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ., சண்முகம் உள்ளிட்ட 100 பேர் மீது ஐ.பி.சி., பிரிவு 147, 148, 332, 506/2, 427 ஆகிய பிரிவுகளில் பரங்கிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.