Posts Tagged ‘கருணாநிதி’

ஆலயத் திருப்பணிகளில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் முதலியோர் தலையிடுவது! ஔரங்கசீப்பின் ஜெஸியா முறை ஆரம்பித்து விட்டது! (2)

ஒக்ரோபர்12, 2021

ஆலயத் திருப்பணிகளில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் முதலியோர் தலையிடுவது! ஔரங்கசீப்பின் ஜெஸியா முறை ஆரம்பித்து விட்டது! (2)

உழவாரப் பணியிலும் மூக்கை நுழைத்துள்ளது[1]: இவையெல்லாம், ஏதோ புதியதாக கண்டுபிடித்தவை போன்று அறிக்கைகளில் குறிப்பிட்டுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. அதாவாது, கோவில் சம்பந்தப் பட்ட எல்லா விசயங்களிலும் நுழைவது என்று தீர்மானமாக இருப்பது தெரிகிற்து. முன்னர் உழவாரப் பணிக்குக் கூட புதியதாக கன்டிஷன்களுடன் அறிக்கை வெளியிடப் பட்டது[2]. அவற்றைப் படித்துப் பார்த்தால், உழவாரப் பணியையே நிறுத்திவிட அத்தகைய திட்டம் போட்டுள்ளது போன்றிருந்தது. இத்தனை ஆண்டுகளாக, மனமார தொண்டு செய்ய வேண்டும் என்று சிறுவர்-பெரியவர், ஆண்கள்-பெண்கள்; படித்தவர்-படிக்காதவர் என்று எந்த வித்தியாசமு இல்லாமல், ஏல்லோரும் சேர்ந்து திருப்பணி செய்து வந்தனர். இதனால், ஆயிரக் கணக்கான கோவில்களின் உட்புறம்-வெளிப்புறம் சுத்தமடைந்து கொண்டிருந்தன. தொலைவில் இருக்கும்கோவில்களில் கூட பணி செய்யப் பட்டது. இனி, அவ்வாறு நடக்காது போலிருக்கிறது. ஏற்கெனவே சுமார் இரண்டு ஆண்டுகளாக, கொரோனா தொற்று பிரச்சினையால் உழவாரப் பணி நடௌபெறாமல் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

  1. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோவில்களில் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்றால், இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்குக் கொண்டாட்டம் தான். தினம்-தினம் கும்பாபிஷேகம் நடத்துவர்கள் வசூல் செய்வார்கள். ஆனால், ஆகமங்கள், விதிமுறைகள் தடுக்கின்றன.
  2. அஷ்டபந்தன சாந்து  12 வருடங்களில், தன் சக்தியை இழந்துவிடும், எனவே அதனை எடுத்துவிட்டு புதிதாக அஷ்டபந்தனம் சாற்றி கும்பாபிஷேகம் செய்வார்கள். இதற்கு ஜீர்ணோத்தாரணம் என்று பெயர்.
  3. பெரிய ஆலயங்களில் வெள்ளியை உருக்கி பந்தனம் செய்து பிரதிஷ்டை செய்திருப்பார்கள். இதற்கு ரஜிதபந்தனம் என்று பெயர். இந்த ஆலயங்களில் 25 வருடங்களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடக்கும்.
  4. மிகப்பிரமாண்டமான ஆலயங்களில் தங்கத்தை உருக்கி பந்தனம் செய்து பிரதிஷ்டை செய்திருப்பார்கள். இதற்கு ஸ்வர்ணபந்தனம் என்று பெயர். இந்தஆலயங்களில் 50 வருடங்களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெறும்.
  5. இப்படியெல்லாம் நடந்து கொண்டே இருந்தால், ஜாலியாகத்தான் இருக்கும். அதனால் தான், அதிகாரிகள், ஊழியர்கள் கழுத்துகளில் தொங்கும் நகைகளின் விட்டம் அதிகரித்துக் கொண்டே போகின்றன.
  6. நூதனம், கும்பாபிஷேகம், புனருத்தாரனம் முதல் மற்ற எந்த புனித காரியமாக இருந்தாலும் சரி, கமிஷனர் வரைக் கூட பார்த்து கவனிக்க வேண்டியுள்ளது. பலதடவை சென்று வர வேண்டியிருக்கும். குறிப்பிட்ட நாளில் வாருங்கள் என்று சொல்லி அவர் இல்லை என்றால், எதிர்பார்க்கிறார் என்று அர்த்தம். கவனிக்கப்படவில்லை என்றால் பலதடவை நடக்கவேண்டியிருக்க வேண்டும்.
  7. பிறகு அனுமதி ஆணை வாங்கவேண்டும், அதை வாங்குவதற்கு கீழுள்ள அதிகாரிகள் கவனிக்கப் படவேண்டும். சென்னை நுங்கம்பாக்கம் ஆணையர் அலுவலகத்திலிருந்து, கோவில் உள்ள இடம் வரை அறநிலயத்துறை ஆட்கள் தொந்தரவு செய்து கொண்டிருப்பார்கள்.
  8. யாரிடம் எப்படி வாங்குகிறீர்கள், என்றெல்லாம் கேட்பது, வாங்கும் லஞ்சத்தின் அளவை நிர்ணயிக்கும். அயல்நாட்டிலிருந்து நிதியுதவி கிடைக்கிறது என்றால், லஞ்சம் தவிர மற்ற எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் வெளிப்படும், வரும்.
  9. முன்பே விசாரிக்கவும் செய்வார்கள் – எவ்வளவு தேரும் என்ற கணக்கீடு. பழைய ஆவணங்களை, முந்தைய விண்ணப்பங்கள் முதலியவற்றையும் எடுத்துப் பார்த்து கணக்குப் போட்டு வைப்பார்கள்.
  10. கஷ்டப்பட்டு, லட்சங்கள் கோடிகள் வசூல் செய்து, வேலை ஆரம்பித்து முடிக்கும் வரையில் ஏகப்பட்ட இடையூறுகள், இடைஞல்கள்………உண்டாக்குவார்கள்.
  11. அந்தந்த வேலைகள் செய்ய, எங்கள் ஆட்களை வைக்க வேண்டும், கமிஷன் கொடுக்க வேண்டும் என்ற தொல்லை……..வட்டம், மாவட்டங்கள் தொல்லைகள் அதிகமாக இருக்கும்.
  12. கோவில் உள்ள கிராமத்தில், இடத்தில் உள்ளூர் கோஷ்டிகள் தொல்லைகள், மிரட்டல்கள்…..அங்கும் காசு கொடுக்க வேண்டும்…..
  13. சப்ளை செய்யும் மண், செங்கல், கம்பி, பெயின்ட் …….எல்லாவற்றிற்கும் பணமாக / கேஷாக கொடுத்துவிட வேண்டும்….பில்கள், இன்வாட்ஸ்கள் பற்றி சொல்ல வேண்டாம்…..
  14. இதற்கெல்லாம் ஒத்துழைக்கவில்லை என்றால், இரவோடு இரவாக கட்டுமானப் பொருட்கள் காணாமல் போய்விடும், கோவில் வேலைகளைப் பொறுபேற்று செய்யும் சேவகர்கள் மிரட்டப் படுவார்கள், அவர்கள் வீட்டில் திருடுகள் நடக்கும், பொய் வழக்குகள் போடப் படும். அந்த அளவுக்கு இடையூறுகள், பாதிப்புகள் இவற்றையெல்லாம் மீறி, சாமர்த்தியமாக, திருப்பணி செய்ய வேண்டும்.
  15. எல்லாம் முடிந்து விழா ஏற்பாடு என்றால், அந்த நோட்டிஸுகளில், சுவரொட்டிகளில், விழா அழைப்பிதழ்களில் உண்மையான / உண்மையாக உழைத்தவர்கள் பெயர்களை விட அந்த லஞ்சக்காரன், கொள்ளைக்காரன், ரௌடி, அரசியல்வாதி, சம்பந்தமே இல்லாத இதே வகையறாக்கள்…….. அதற்கும் மேலாக நாத்திக-இந்துவிரோதி அமைச்சர், முதலம்மைச்சர் படங்கள் முன் அட்டையில் பக்கத்தில் இருக்க வேண்டும், ஆனால், அக்கோவில் சாமி படம் பின்னால் இருக்க வேண்டும்.
  16. முதலமைச்சர் படம் இல்லையென்றால், அவ்வளவுதான், நிகழ்ச்சியே ரத்து செய்யப் படும் அளவுக்கு காரியங்கள் நடந்துள்ளன. மறுபடியும் அழைப்பிதழ்கள் அச்சடிக்கப் பட்டுள்ளன.
  17. விழா அன்றோ இவர்களுக்கு வண்டி ஏற்பாடு, சாப்பாடு செலவு எல்லாம் செய வேண்டும். கோவில் விழா என்றாலும் அசைவ சாப்பாடு கேட்பார்கள், ஏற்பாடு செய வேண்டும்….சில இடங்களில் மற்றவையும் கேட்பார்கள்…..
  18. பூஜாரிகள், குருக்கள், சிவாச்சாரியார்கள், பட்டர்கள், போன்றவர்களை ஒருமையில் பேசுவார்கள், விளிப்பார்கள், உரையாடல்களில் குறிப்பிடுவார்கள்.
  19. ஆக இத்தனை இடையூறுகள், அவமானங்கள், பாதிப்புகள் முதலிய கடந்த 70 ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும்போதும், கோவில்கள் நலம், ஆகமங்களைப் போற்றும் கடமை, அவற்றில் ஈடுபட்டுள்ளவர்கள், அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதைகள் முதலியவற்றைக் கவனத்தில் கொண்டு பொறுமையோடு கடமைகளை ஆயிரத்திற்கும் மேலானவர்கள் செய்து வருகின்றனர்.
  20. ஆனால், நாத்திகம், இந்துவிரோதம் மற்றும் ஆட்சியாளர்களின் சார்பு என்று கொண்டுள்ளவர்கள் உண்மைகளை மறைத்து பிரச்சாரம் செய்யும் வேலைகளையும் செய்து வருகிறார்கள்[3]. கருணாநிதி இந்துமதத்தின் நண்பன் என்றேல்லாம் எழுதுவதும் நடக்கத்தான் செய்கிறது. ஔரங்ஜசீப் கோவில்கள் கட்ட மானியம் கொடுத்தான் போன்ற கதைகள் தான்[4].

ஔரங்கசீப்பின் ஜெஸியாவை நோக்கி செல்லும் திமுகவின் நாத்திகஇந்துவிரோத ஆட்சி[5]: ஔரங்கசீப் ஆட்சியில் ஜெஸியா முறை பின்பற்றப் பட்டு வந்தது. அத்தகைய வரிமுறைப்படி, இந்துக்கள் கடுமையாக அடக்கி வைக்கப் பட்டனர். தங்களது தினசரி பூஜைகள், புனஸ்காரங்கள், விழாக்கள், பண்டிகைகள் எத்வும் பின்அர்ர முடியாத நிலை ஏற்பட்டது. அதன் படி, யாரும் (இந்துக்கள்) புதியக் கோவிலைக் கட்டக் கூடாது. இருக்கும் கோவில்களைப் புதுப்பிக்கக் கூடாது. பழுதடைந்தாலும், ரிப்பேர் செய்யக் கூடாது. இந்துக்கள் கோவில்களுக்குச் செல்லக் கூடாது, ஆனால், முகமதியர்களுக்கு அனுமதி கொடுக்கப் படவேண்டும்[6]. அவர்கள் தங்குவதானாலும், இடம் கொடுக்க வேண்டும். பக்தர்கள் அளிக்கும் காணிக்கை முழுவதும் அரசுக்கு வரவேண்டும். விலையுயர்ந்த சிலைகள், பொருட்கள் முதலியன, சுல்தான் கொள்ளையிட்டு செல்வான். யாரும்தடுக்கக் கூடாது. கூட்டம்சேர்க்கக் கூடாது, விழாக்கள் கொண்டாடக் கூடாது. 

© வேதபிரகாஷ்

12-10-2021


[1] இது நிச்சயமாக உள்நோக்கத்துடன் உண்டாக்கப் பட்ட தடை தான், இத்தகைய அடக்குமுறைகளில் உழவாரப் பணியே நடக்காமல் போய் விடும், ஒருவேளை அதுதான், ஆட்சியாளர்களின் திட்டம் போலும்.

[2] தமிழ்.இந்து, கோயில் உழவாரப் பணிக்கு இணையவழியில் பதிவு: புதிய வசதியை அமைச்சர் சேகர்பாபு, செய்திப்பிரிவு, Published : 28 Jul 2021 03:15 AM; Last Updated : 28 Jul 2021 06:19 AM.

https://www.hindutamil.in/news/tamilnadu/698129-minister-sekar-babu.html

[3] பாரி ஜோஸ்-சிவகுமார், கலைஞரே இந்துமதத்தின் உண்மை நண்பன், PARI JOSE; A Sivakumar,  JUNE 14, 2020.

[4]https://ilovedmk.wordpress.com/2020/06/14/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D/

[5] நிச்சயமாக ஔரங்கசீப்பின் அட்சிமுறை மக்களுக்குத் தெரிந்திருக்காது, ஆனால், இந்த இந்த ஆறாண்டு மாத கால ஆட்சி அனைத்தையும் தன்னுள் கொண்டு, எடுத்துக் காட்டிவிட்டது.

[6] இப்படித்தான் கருணாநிதி குடும்பத்தினர் கோவில்களுக்குச் சென்று வருகின்றனர், கிரிவலம் வருகின்றனர், நேர்த்திக்கடன் செல்லுத்தி வருகின்றனர்.

கோயில்களில் சிலைகள் சரியாக உள்ளதா என்று ஆய்வு செய்ய தொல்லியல் துறைகுழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன – இவற்றிற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு தொல்லியல் துறை ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்!

ஒக்ரோபர்4, 2021

கோயில்களில் சிலைகள் சரியாக உள்ளதா என்று ஆய்வு செய்ய தொல்லியல் துறைகுழுக்கள் அமைக்கப் பட்டுள்ளனஇவற்றிற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு தொல்லியல் துறை ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்!

கோயில்களில் சிலைகள் சரியாக உள்ளதா என்று ஆய்வு செய்ய தொல்லியல் துறைகுழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன: கோயில்களில் உள்ள சிலைகள் சரியாக உள்ளதா என்று ஆய்வுசெய்ய தொல்லியல் துறை சார்பில் 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன[1]. தமிழகம் முழுவதும் இந்து சமயஅறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன[2]. இவற்றில் சில கோயில்களுக்கு சொந்தமான சிலைகளை காணவில்லை[3]. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் சிலைகள் களவு போன வழக்கில், தொல்லியல் துறை ஆணையரும் 5-ஆவது பிரதிவாதியாக சோ்க்கப்பட்டார்[4]. அவற்றை கண்டறிந்து மீட்கும் பணியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கோயில்களில் சிலைகள் சரியாக உள்ளதா என்று ஆய்வு செய்ய தொல்லியல் துறைகுழுக்களை அமைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது[5]. இதன்படி, சென்னை மண்டலத்தில் தொல்லியல் அலுவலர்கள் பாக்கியலட்சுமி, சுபலட்சுமி, வேலூர் மண்டலத்தில் ரஞ்சித் சுபாஷினி உள்ளிட்ட 28 அலுவலர்களை கொண்ட 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன[6]. ஒரு குழுவுக்கு 2 முதல் 4 நபா்கள் வரை நியமிக்கப்பட்டுள்ளனா். கோயில்களில் உள்ள சிலைகள் சரியாக உள்ளதா என்று இந்த குழுவினர் மூலம் ஆய்வு செய்யப்பட உள்ளது.

இவற்றில் சில கோயில்களுக்கு சொந்தமான சிலைகளை காணவில்லை,என்பதே அப்பட்டமான பொய்: 36,000 கோவில்களில் சுமார் 10 என்றாலே 3,60,000 சிலைகள் வரும், ஆனால், உண்மையில், பெரும்பான்மையான கோவில்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள், சிற்பங்கள், விக்கிரங்கள் இருக்கின்றன. 100, 1000 கால் மண்டபங்களிலேயே 1000, 10,000 என்று சிலைகள் உள்ளன. தூண்கள் கொள்ளையடிக்கும் போது, அதனுடன் சிற்பங்களும் களாவாடப் படுகின்றன. தமிழகத்தில், தெரு, நெடுஞ்சாலைகள் என்ற பாதைகளில் பல லட்சக் கணக்கான மண்டபங்கள் உள்ளன. உண்மையில் அவை மண்டபங்கள் மட்டுமல்லாது, கொவிலையும் கொண்டிருக்கும் நிலையில் அமைக்கப் பட்டுள்ளன. ஆயிரக் கணக்கான ஆண்டுகளில், குறிப்பாக கடந்த 300 ஆண்டுகளில், சாலைகளின் விரிவாக்கம், நகர விரிவாக்கம் போன்றவற்றால், லட்சக் கணக்கான மண்டபங்கள் மாயமாகி விட்டன. மறுபடியும் வேறு இடங்களில் வைக்கிறோம் என்ற சரத்து இருந்தாலும், லாரிகளில் அப்புறப் படுத்துவதோடு சரி, பிறகு, அவை என்னவாகின என்று தெரியாமல் உள்ள நிலை தான் உள்ளது. ஆனால், விஜிபி, ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் போன்றவற்றில், பல கோவில் தூண்கள் இருப்பதைப் பார்க்கலாம். ஆயிரக் கணக்கில் இந்தியாவை விட்டும் வெளியேறியுள்ளன. அதாவது, 100 ஆண்டுகளுக்கு குறைவான காலத்தைக் கொண்டது என்று சான்றிதழ் பெறப் பட்டு, ஏற்றுமதி ஆகியுள்ளன. இதற்கும், நமது நாட்டு தொல்துறை அதிகாரிகள், சரித்திராசிரியர்கள் முதலியோர் தாராளமாக உதவியுள்ளனர். நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் அவற்றிற்கு தொடர்புடைய சமர்ப்பிக்கப் பட்ட ஆவணங்களே அதனை வெளிப்படுத்திக் காட்டுகின்றன.

இப்படி 24, 36, 48 என்று தொல்துறையினர் எப்படி ஆய்வு மேற்கொள்ள முடியும்?: ஒரு பக்கம் தொல்துறையில் ஆட்களே இல்லை, ஆள் எடுப்பதில்லை என்றெல்லாம் கூறிக் கொண்டு ஆர்பாட்டம் செய்கின்றனர். பிறகு, இத்தனை ஆட்கள் எப்படி திடீரென்று இந்த வேலைக்குக் கிளம்பியுள்ளனர் என்று தெரியவில்லை.

இந்த குழுவில் சென்னை மண்டலத்தில் தொல்லியல் அலுவலர்கள்[7]

  1. பாக்கியலட்சுமி,
  2. சுபலட்சுமி,
  3. வேலூர் மண்டலத்தில் ரஞ்சித்,
  4. சுபாஷினி,
  5. விழுப்புரம் மண்டலத்தில் காவியா,
  6. விக்டர் ஞானராஜ், விழுப்புரம் மண்டலம்
  7. திருச்சி மண்டலத்தில் சாய்பிரியா,
  8. பிரபாகரன், திருச்சி மண்டலம்
  9. சக்திவேல், திருச்சி மண்டலம்
  10. தஞ்சாவூர் மண்டலத்தில் தங்கத்துரை,
  11. உமையாள், தஞ்சாவூர் மண்டலம்
  12. காஞ்சிபுரம் மண்டலத்தில் லோகநாதன்,
  13. ஸ்ரீகுமார், காஞ்சிபுரம் மண்டலம்
  14. மற்றொரு சுபாஷினி, காஞ்சிபுரம் மண்டலம்
  15. மயிலாடுதுறை மண்டலத்தில் பாஸ்கர்,
  16. வசந்தகுமார், மயிலாடுதுறை மண்டலம்
  17. சேலம் மண்டலத்தில் வெங்க குரு பிரசன்னா,
  18. பரந்தாமன், சேலம் மண்டலம்
  19. கோவை மண்டலத்தில் நந்தகுமார்,
  20. ஜெயப்பிரியா, கோவை மண்டலம்
  21. சுரேஷ், கோவை மண்டலம்
  22. மதுரை மண்டலத்தில் பரத்குமார்,
  23. ரமேஷ், மதுரை மண்டலம்
  24. சிவகங்கை மண்டலத்தில் சுரேஷ்,
  25. அஜய்குமார், சிவகங்கை மண்டலம்
  26. சக்திவேல், சிவகங்கை மண்டலம்
  27. திருநெல்வேலி மண்டலத்தில் ஆசைதம்பி,
  28. பாஸ்கர், திருநெல்வேலி மண்டலம்
  29. காளீஸ்வரன், திருநெல்வேலி மண்டலம்
  30. ஹரிகோபாலகிருஷ்ணன் திருநெல்வேலி மண்டலம், ஆகியோர் உள்ளனர்[8].

பாதுகாப்பு மையங்களில் ஆய்வு: இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன், அனைத்து இணைஆணையர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: “தொல்லியல் துறை அலுவலர்களைக் கொண்ட குழு அமைத்து, பாதுகாப்பு மையங்கள் மற்றும் கோயில்களில் சிலைகள் சரியாகஉள்ளதா என்று ஆய்வு மேற்கொள்ளுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தொல்லியல் துறையால் குழு அமைக்கப்பட்டுள்ளது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையம், கோயில்களில் உள்ள சிலைகளை ஆய்வு செய்வதற்காக 28 அலுவலர்களைக் கொண்ட 12 குழுக்களாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆய்வுக் குழுவுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு தொல்லியல் துறை ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார். எனவே, குழுக்களின் ஆய்வுக்கு அனைத்து ஒத்துழைப்பையும் அளிக்க சார்நிலை அலுவலர்களுக்கு உத்தரவிடுமாறு இணைஆணையர்கள், உதவி ஆணையர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஆய்வு தொடர்பான அறிக்கையை உடனுக்குடன் அனுப்பி வைக்க வேண்டும்,” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இப்பிரச்சினையில் எழுகின்ற வினாக்கள்: நாத்திக அரசு,இப்படி திடீர்-திடீர் என்று ஏதோ அறிக்கை விட்டுக் கொண்டு, ஆர்பாட்டம் செய்து கொண்டிருக்கிறது. ஆனால், உண்மையில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.

  1. தொல்லியல் துறை சார்பில் அமைக்கப் பட்டுள்ள இவர்கள் யார், இவர்களுக்கு சிலைகளை ஆராய திறமை, அனுபம் உள்ளதா?
  2. இந்த ஆய்வுக் குழுவுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு தொல்லியல் துறை ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார் என்றால், யார் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்?
  3. ஒருவேளை சஸ்பென்ட் / கைது செய்யப் பட்ட அதிகாரிகள் மறுபடியும் அறநிலையத்துறையில் வேலை செய்து வருகிறார்கள். அத்தகைய அதிகாரிகள் மற்றும் அவர்களில் கூட்டாளிகள் தடுக்க முயற்சிப்பார்கள் போலும்.
  4. ஒரு வேளை, இத்தகைய ஆய்வு, ஆய்வு அறிக்கை என்று தயார் செய்து, 2021ல் என்ன உள்ளனவோ அவற்றை மட்டும் உள்ளன என்று அறிக்கைக் கொடுத்து, மாயமானவற்றை மறைத்து விடுவார்கள் போலும்.
  5. 2021 வரை, “கிளீன் சிட்” கொடுத்து விட்டார்கள் என்று கூட மார் தட்டிக் கொள்ளலாம். அந்த அளவிற்கு தப்பித்துக் கொள்ளலாம்.
  6. 12 குழுக்கள் – ஒரு குழுவுக்கு 2 முதல் 4 நபா்கள் வரை நியமிக்கப்பட்டுள்ளனா். 12 x 2 = 24 அல்லது 12 x 4 = 48 என்று இவர்கள் என்ன ஆய்வு /ஆராய்ச்சி செய்யப் போகின்றனர்?
  7. தொல்துறையில் ஆட்களே இல்லை, ஆள் எடுப்பதில்லை என்றெல்லாம் கூறிக் கொண்டு ஆர்பாட்டம் செய்கின்றனர். பிறகு, இத்தனை ஆட்கள் எப்படி திடீரென்று இந்த வேலைக்குக் கிளம்பியுள்ளனர் என்று தெரியவில்லை. இத்தனை நாட்கள் எந்த வேலையும் செய்யாமல் இருந்தார்களா என்றும் தெரியவில்லை.
  8. கோயில்களில் உள்ள சிலைகள் சரியாக உள்ளதா என்று சரி பார்க்க வேண்டும் என்றால், 36,000 கோவில்களில் எத்தனை சிலைகள் உள்ளன என்று என்ன ஆவணங்களை வைத்திருக்கின்றனர்?

© வேதபிரகாஷ்

04-10-2021


[1] தமிழ்.இந்து, சிலைகள் அனைத்தும் சரியாக உள்ளதா?- கோயில்களில் ஆய்வு செய்ய 12 குழுக்கள் அமைப்பு: உடனுக்குடன் அறிக்கை அனுப்ப ஆணையர் அறிவுறுத்தல், Published : 04 Oct 2021 03:11 AM; Last Updated : 04 Oct 2021 06:18 AM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/722761-statues-in-temples.html

[3] தினமணி, கோயில் சிலைகள்: ஆய்வு செய்ய குழுக்கள் அமைப்பு, By DIN  |   Published on : 04th October 2021 01:19 AM.

[4]https://www.dinamani.com/tamilnadu/2021/oct/04/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3711392.html

[5] மாலைமுரசு,  கோயில் சிலைகளை ஆய்வு செய்ய குழுதமிழ்நாடு தொல்லியல் துறை உத்தரவு, webteamwebteamOct 3, 2021 – 11:47.

[6] https://www.malaimurasu.com/posts/tamilnadu/Team-to-inspect-temple-idols

[7] தினகரன், கோயில்களில் சிலைகள் சரியாக உள்ளதா என ஆய்வு செய்ய 28 அலுவலர்கள் கொண்ட 12 குழு தொல்லியல் துறையில் அமைப்பு, 2021-10-03@ 00:38:07.

[8] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=709564

தலமரமும், ஸ்தலமரமும், ஸ்தலவிருக்ஷமும், கலைஞர் தலமரமும் – கருணாநிதி நினைவு நாளுக்கும், கோவில்களில் மரம் நடவு செய்வதற்கும் என்ன சம்பந்தம்?

செப்ரெம்பர்27, 2021

தலமரமும், ஸ்தலமரமும், ஸ்தலவிருக்ஷமும், கலைஞர் தலமரமும் கருணாநிதி நினைவு நாளுக்கும், கோவில்களில் மரம் நடவு செய்வதற்கும் என்ன சம்பந்தம்?

தலமரமும், ஸ்தலமரமும், ஸ்தலவிருக்ஷமும்: திராவிடம் என்னவெல்லாம் படுத்துகிறது, பாடு படுத்துகிறது, பாடுபடுகிறது என்பதனை இதிலிருந்து பார்க்கலாம். ஒவ்வொரு கோவிலிலும் ஸ்தல விருக்ஷம் இருப்பது தெரிந்த விசயமே. அதனை, அந்த பாரம்பரியத்தை இந்துக்கள் ஆயிரக் கணக்கான வருடங்களாக போற்றி, பாதுகாத்து வருகின்றனர். அதனை, “தலமரம்” என்று யாரும் சொல்வதில்லை. ஆனால், இந்த திராவிடப் போலிகள் இதை வைத்தும் மோசடி செய்ய, ஸ்தலமரம் என்பதற்குப் பதிலாக, “தலமரம்” ஆக்கி, “கலைஞர் தலமரம்” என்கின்றன. பிறகு கருணநிதி இறந்த நாளுடன் இணைத்து, இந்துக்களின் பணத்தை விரயம் செய்து, அதே நேரத்தில் அவர்களின் மனங்களைப் புண்படுத்தி, ஆலயங்களில் அந்த இந்துவிரோதியின் பெயரை நுழைக்க இந்த திட்டத்தைப் போட்டுள்ளது தெரிகிறது.  முன்பு, அண்ணாவின் இறந்த தினத்திற்கு, கோவில்களில் சாப்பாடு போட்டனர். ராமகோபாலன் அதனைக் கண்டித்து, “அண்ணா திவசத்திற்கு சாப்பாடா?,” என்று கேட்டுக் கண்டித்ததுடன், சிறுபுத்தகத்தையும் வெளியிட்டார்.

கருணாநிதிக்கும் ஸ்தலவிருக்ஷத்திற்கும் என்ன சம்பந்தம்?: கருணாநிதிக்கும் இந்து அறநிலையத் துறைக்கும் நிச்சயமாக சம்பந்தம் இல்லை. அதாவது, நாத்திகர், இந்துவிரோதி என்ற ரீதியில் அவருக்கும் கோவிலுக்கும், கோவில் காரியங்களுக்கும் எந்த பந்தமும் இல்லை என்றே சொல்லலாம். ஆனால், இப்பொழுது திமுக ஆட்சிக்கு வந்தவுடன், தின-தினம் அறநிலையத் துறையை வைத்துக் கொண்டு தமாஷா செய்து கொண்டிருப்பதைப் போன்று தெரிகிறது. இருப்பினும் அவற்றில் விவகாரத்துடன் செயல்படுவது தெரிகிறது. வந்தவுடன், “அன்னதானம்” என்று சொல்லிக் கொண்டு, பக்தர்களுக்குக் கொடுக்க வேண்டியதை தெருவில் போவோருக்கு எல்லாம் கொடுத்து, அந்த நிதியை காலி செய்து விட்டனர். பிறகு, நிதி கேட்டு வேண்டிக் கொண்டனர். ஆனால், விவரம் அறிந்தவர்கள் யாரும் கொடுக்கவில்லை போலும். இது தேரவில்லை என்றதும், கோவில் நிலம் என்று ஆரம்பித்தனர்.

கோவில் நிலம் மீட்கப் பட்டது என்ற நாடகத்தை ஆரம்பித்தது: கோவில், மடங்கள், மடாலயங்கள் முதலியவற்றின் சொத்துக்களை ஆக்கிரமித்து, அபகரித்து சட்டவிரோதமாக செய்து வரும் காரியங்கள், கடந்த 70 ஆண்டுகளில் அதிகமாகி விட்டது. ஏகப்பட்ட உச்சநீதி, உயர்நீதி, மாஜிஸ்ட்ரேட் தீர்ப்புகளில் இதைப் பற்றி விவரங்களைக் கொடுத்துள்ளது. ஒருவேளை ஆயிரக்கணக்கான வழக்குகள் இன்றும் நிலுவையில் இருந்து வருகின்றன.  இதில் அதிர்ச்சியடையும் விசயம் என்னவென்றால், துலுக்கர் / முஸ்லிம்கள், கிருத்துவர்கள் தான் கோவில் நிலங்கள், கடைகள் முதலியவற்றை ஆக்கிரமித்துக் கொண்டு, கோடிக்கணக்கில் குத்தகை-வாடகை பாக்கி வைத்துக் கொண்டுள்ளனர். ஆகவே, இவற்றை வசூல் செய்வதை விட்டு, சில பள்ளிகளைக் குறி வைத்து, அதன் குத்தகை நிலங்களை கையகப் படுத்தி, எதையோ சாதிப்பது போலக் காட்டிக் கொள்கிறார்கள். இதிலும், லயோலா கல்லூரி போன்ற கிருத்துவ கல்வி நிறுவனங்களை காப்பாற்றும் மற்ற அவர்களின் ஆக்கிரமிப்புகளை மறைக்கும் வகையில் நடவடிக்கைகள் இருக்கின்றன.

இப்பொழுது மரங்களை நடுகிறோம் என்ற இன்னொரு நாடகத்தை ஆரம்பித்துள்ளது: மு.க.ஸ்டாலின் அவர்கள் 07.08.2021 அன்று சென்னை, நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் ‘கலைஞர்’ தலமரக்கன்றுகள் நடும் திட்டத்தைத் தொடங்கும் முகமாக நாகலிங்க தலமரக்கன்றை நட்டு விழாவைத் தொடங்கி வைத்தார்[1]. அதாவது, கோவிலுக்குச் செல்லாமல், ஏதோ ஒரு “சிம்பாலிக்காக” அடையாள சடங்கு போன்று ஏமாற்றும் விதத்தில் உள்ளது. இதில் கனிமொழி கலந்து கொண்டாலும், அவர் மனைவி துர்கா கலந்து கொள்ளாதது கவனிக்கத்தக்கது. இந்து சமய அறநிலையத்துறை பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு நலத் திட்டங்களைச் சிறப்பாக விரைந்து செயல்படுத்தி வருகிறது[2], என்று செய்தி தொடர்கிறது.         இப்படி சொல்லிக் கொள்வதே மிகப் பெரிய பொய் என்பது எல்லொருக்குமே தெரிந்த விசயம் எனலாம். திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களில் ஒரு இலட்சம் தரமரக்கன்றுகள் நடுவதற்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது[3]. இங்கு கூடம் “திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களில்” என்று பொடி வைத்து சொல்வதை கவனிக்கலாம். ஏனெனில், ஆக்கிரமிக்க/அபகரிக்கப் பட்டுள்ள இடங்களில் போய் அந்த தலமரங்களை நடவு செய்யலாமே?

கருணாநிக்கு வேண்டுதலா, காரியமா, என்ன நடக்கிறது?: இத்திட்டத்தை மூன்று மாதக் காலத்திற்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது[4]. அதன்படி தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், திருநெல்வேலி, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, திருச்சி, சிவகங்கை, வேலூர் மாவட்டங்களில் உள்ள பல்வேறு திருக்கோயில்களில் அந்தந்த தலமரங்களான மாமரம், புன்னை, வில்வம், செண்பகம், மருதம், நாவல், சந்தனம், மகாக்கனி, இலுப்பை கொய்யா, மகிழம் போன்ற மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன[5]. பிறகு எதற்கு இந்த இழவு-தலமரங்களை நடவேண்டும்?

  1. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள கடம்ப மரத்தை வணங்கினால் கல்வியில் சிறந்து விளங்கலாம்[6].
  2. திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் உள்ள மூங்கில் மரத்தை வணங்கினால் இசை ஞானம் வளரும்[7],
  3. மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் உள்ள மாமரத்தை வணங்கினால் வெற்றி கிட்டும்[8],

 என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். சரி கலைஞர் தலமரம் நட்டால் என்ன கிடைக்கும்? இந்துக்கள் நாசமாகிப் போவார்களா?:

எத்தனை கோவில்களில் நட்டாலும் நன்மை யாருக்கு என்று தெரியவில்லை: இத்தகு பெருமைமிகு தலமரங்களைப்  மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் மேலப்பரங்கிரி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவில், திருவேற்காடு, அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், இருக்கண்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சிவகங்கை மாவட்டம் மடப்புரம் அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளி அம்மன் திருக்கோயில், திருநெல்வேலி மாவட்டம் அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில், அருள்மிகு பாபநாசம் சுவாமி திருக்கோயில். அம்பாசமுத்திரம் அருள்மிகு காசிநாத சுவாமி திருக்கோயில் உட்பட பல்வேறு திருக்கோயில்களில் தலமரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.

கருணாநிதியின் திவச நாளைக் கொண்டாட கோவில்கள் தான் கிடைத்ததா?: மற்ற ஊடகங்கள் மேலே குறிப்பிட்டபடி பாட்டு பாடிய வேளையில், “கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று (ஆகஸ்ட் 7) அனுசரிக்கப்பட்டுவருகிறது[9]. இதனை முன்னிட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத் துறை தலைமையிட வளாகத்தில் ஸ்டாலின் ஒரு லட்சம் தலமரக்கன்றுகள் (நாகலிங்க மரம்) நடும் திட்டத்தைத் தொடங்கிவைத்தார்,” என்று இடிவி.பாரத் என்ற செய்தி-தளம் டலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[10]. அதாவது, 07-08-2021 கருணாநிதி இறந்த நாள், திவச நாள், அதை கொண்டாட, அனுஷ்டிக்க, இத்தகைய போர்வையுடன், திட்டம்போட்டு இந்துவிரோதிகள் வேலை செய்துள்ளனர்.

© வேதபிரகாஷ்

27-09-2021


[1] தினகரன், கலைஞர்தலமரக்கன்று நடும் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் பல்வேறு திருக்கோயில்களில் தலமரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன!!, 2021-09-22@ 11:58:51

[2] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=706936

[3] மாலைமலர், அனைத்து கோவில்களிலும் 1 லட்சம் தலமரக்கன்று நடும் பணி தீவிரம்இந்துசமய அறநிலையத்துறை தகவல், பதிவு: செப்டம்பர் 22, 2021 15:14 ISTமாற்றம்: செப்டம்பர் 22, 2021 16:01 IST.

[4] https://www.maalaimalar.com/news/district/2021/09/22151423/3037617/Tamil-News-1-lakh-plants-in-temples.vpf

[5] தமிழ்.இந்து, தமிழக கோயில்களில்கலைஞர்தல மரக்கன்று நடும் பணி: இந்து சமய அறநிலையத் துறை தகவல், செய்திப்பிரிவு, Published : 23 Sep 2021 03:12 AM; Last Updated : 23 Sep 2021 06:35 AM

[6] https://www.hindutamil.in/news/tamilnadu/718961-kalaignar-saplings-in-tn-temples.html

[7] தினமுரசு, அனைத்து கோவில்களிலும் 1 லட்சம் தலமரக்கன்று நடும் பணி தீவிரம், இந்துசமய அறநிலையத்துறை தகவல், September 22, 2021 at 6:40 pm.

[8] http://dhinamurasu.in/news/7530/aQ6k

[9] கருணாநிதி நினைவுநாள்: தலமரக்கன்று நடும் திட்டம் தொடங்கிவைப்பு, Published on: Aug 7, 2021, 12:28 PM IST.

[10] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/tree-planting-scheme-on-late-ex-minister-karunanidhi-memorial-day/tamil-nadu20210807122833310

மு.க.ஸ்டாலின் உத்தரவு – பத்தாண்டுகளாக பயன்பாடு இல்லாத நகைகளை உருக்கி கட்டிகளாக்கி முதலீடு செய்யலாம் – பக்தர்களின் காணிக்கை நகைகளை உருக்க நீதிபதிகள் தேவையா?

செப்ரெம்பர்26, 2021

மு..ஸ்டாலின் உத்தரவுபத்தாண்டுகளாக பயன்பாடு இல்லாத நகைகளை உருக்கி கட்டிகளாக்கி முதலீடு செய்யலாம் – பக்தர்களின் காணிக்கை நகைகளை உருக்க நீதிபதிகள் தேவையா?

பக்தர்களின் காணிக்கை நகைகளை உருக்க நீதிபதிகள் தேவையா?: பொது மக்கள் கருத்தைக் கண்டுகொள்ளாமல், ஏற்கெனவே தீர்மானித்த படி, நாத்திக அரசு தொடர்ந்து, வேலைகளை செய்து வருகிறது. பயன்பாடில்லாத கோயில் நகைகளை உருக்கிப் பயன்படுத்தும் திட்டத்தைக் கண்காணித்துச் செயல்படுத்த மூன்று நீதிபதிகள் மூலம் குழு அமைக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தார்[1]. இந்த ஆண்டுக்குள் 500 கோயில்களில் திருப்பணிகள் செய்யப்படும். கோயில்கள் மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன[2]. அதில் –

  1. சென்னை மண்டலத்துக்கு நீதிபதி ராஜூ,
  2. மதுரை மண்டலத்துக்கு நீதிபதி ஆா்.மாலா,
  3. திருச்சி மண்டலத்துக்கு ரவிச்சந்திரபாபு ஆகியோர் தலைவா்களாக உள்ளனா்[3].

இவர்களுக்கும் காணிக்கை அளித்தபக்தர்களுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. அவா்களது தலைமையில் உள்ள குழுக்கள், கோயில்களில் பயன்பாட்டில் இல்லாத நகைகளை மத்திய அரசின் உருக்காலையில் உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றும்[4]. பக்தர்கள் தங்களது நகைகள் அவ்வாறு மாறும் என்று பக்தர்களுக்குத் தெரியுமா?

வைப்பு நிதியாக வைத்து அதில் கிடைக்கும் வட்டித் தொகையில் கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்: அவற்றை வைப்பு நிதியாக வைத்து அதில் கிடைக்கும் வட்டித் தொகையில் கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.  அந்த அளவுக்கு கோவில் நிதி இல்லையா, கஜானாவை காலி செய்தது யார்? இலவச உணவு என்று அன்னதானம் செய்தே அந்த நிதி காலியாகி விட்டது என்று அறிவிக்கப் பட்டது. அதுபோல, மற்ற நிதிகளையும் வந்தவுடன் காலி செய்து விட்டனரா? இதில் கோவில்களின் வருமானத்தை அதிகரிக்க உதவும், என்று இவர் கணக்கு போடுவது தமாஷாக உள்ளது. பாக்கி வைத்துள்ள கோடிக்கணக்கான குத்தகை-வாடகைகளை வட்டியுடன் வசூல் செய்வது தானே? இந்த நகைகள் பயன்படுத்தப்படாமல் உள்ளது. அதை முறையாக பயன்படுத்த உள்ளோம்[5]. அறநிலையத்துறைக்கு கூடுதல் வருமானம் ஈட்ட இது வழி செய்யும்[6]. இதில் யாருக்கும் எந்த லாப நோக்கமும் இல்லை. ஒவ்வொரு கோயிலும் எவ்வளவு தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் பெறப்பட்டதோ அதற்கேற்ப வரவு வைக்கப்படும். நகைகள் என்று இல்லை கோயில்களில் பயன்படாமல் உள்ள எதுவும் தெய்வத்திற்குப் பயன்படும் எனில் அதற்காக எந்த விமர்சனத்தையும் சந்திக்கத் தயாராகவே உள்ளேன்[7]. சட்டத்தின் ஆட்சி நடைபெறும் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை நேர்மையாக, உண்மையாக நடத்தப்படும்” என்று அவர் கூறினார்[8].

மு..ஸ்டாலின் உத்தரவுபத்தாண்டுகளாக பயன்பாடு இல்லாத நகைகளை உருக்கி கட்டிகளாக்கி முதலீடு செய்யலாம்: கோவில்களில் நன்கொடையாக வரும் தங்க நகைகளை மும்பையில் உள்ள தங்க உருக்கு ஆலையில் கொடுத்து உருக்கி, அதனை பிக்சர்டு டெபாசிட் முறையில் அந்த அந்த கோவில்களின் பெயரில் இருப்பு வைத்தால் ஆண்டு தேறும் வருமானம் கிடைக்கும், என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியிருந்தார்[9]. சேகர்பாபு, இவ்வாறு கூறி, அத்திட்டத்தை அமூல் படுத்த திட்டம் தீட்டியுள்ளது தெரிகிறது[10]. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக இந்த நகைகள் எந்தவித பயன்பாடு இல்லாமலும், பயன்படுத்தாமலும் அப்படியே இருக்கிறது. இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டது[11]. அவர், துறைச் சார்ந்த ஆய்வு கூட்டங்களை உடனடியாக நடத்தி, இதுகுறித்து பரிசீலித்து தங்க நகைகளை பிஸ்கெட்டுகளாக மாற்ற வேண்டும். அதுமட்டுமல்லாமல் மாற்றப்படும் தங்க பிஸ்கெட்டுகளை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தங்க வைப்புநிதியில் முதலீடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்[12]. ஆனான பட்ட, மோடியே, இத்தகைய ஆலோசனை சொன்ன போது, பெரும்பாலான கோவில்கள் ஒப்புக் கொள்ளவில்லை[13]. பக்தர்களின் காணிக்கைக்களை அவ்வாறு உருக்குவது, மிகப் பெரிய பாவம் என்றும் எடுத்துக் காட்டினர்[14]. ஏனெனில் நம்பிக்கைக்கு உகந்த விசயங்களில், நம்பிக்கை இல்லாதவர்களுக்குத் தலையிட உரிமை இல்லை.

சமயபுரம் மாரியம்மன் கோவில் தங்கத்தை விற்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது: சமயபுரம் மாரியம்மன் கோவில் ஏற்கெனவே இந்த வேலையை செய்து வருகிறது. ஆனால், வேறு விதத்தில் அதனைத் தட்டிக் கேட்டது, வணிகத்துறை, அதாவது விற்பனை வரி கட்டச் சொன்னது. வழக்கு நீதிமன்றத்திற்கும் சென்றது, ஆனால், வரி கட்ட வேண்டாம் என்று தீர்ப்புக் கொடுக்கப் பட்டது[15]. அதில், ஜி.தென்னரசு இருப்பதும் கவனிக்கத் தக்கது. எனவே, இது திட்டமிட்டு கொள்லை அடிக்கு திட்டம் என்றேயாகிறது.  கோவில் சொத்து, நகை, தங்கம் என்று இவற்றிலேயே குறியாக இருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது. நாத்திகம்-பெரியாரிஸம் பேசி, கோவில் நிர்வாகத்தை இவ்வாறு செய்து வருவது முரண்பாடாக இருக்கிறது. அவர்கள் எப்படி நாணயமாக இருக்க முடியும் என்று தெரியவில்லை. இருக்கும் கோடிக்கணக்கிலான பாக்கியை வசூலித்தாலே, 10 ஆண்டுகள்  கோவில்கள் சிறப்பாக இயங்கும். நடக்க வேண்டிய எல்லாமே ஒழுங்காக நடக்கும்.

பயன்பாடில்லாத கோயில் நகைகள், பயன்பாடுள்ள கோயில் நகைகள் என்று எப்படி பிரிக்க முடியும்?: பக்தர்கள் காணிக்கையாக, பற்பல வேண்டுதல்களுக்காக சிரத்தையாக அர்பணித்துள்ளனர். அவை நிச்சயமாக பக்தர்களுக்கான பயன்படும் நகைகள் தான். அவற்றை எந்த நீதிபதியும், அதிகாரியும் அறிய முடியாது. அந்தந்த வேண்டுதல்களுக்கு பலன் கிடைத்ததா, கிடைக்கவில்லையா என்று பக்தர்களுக்குத் தான் தெரியும். அந்நிலையில், அத்தகைய காணிக்கை-நகைகளை அழிப்பது, உருக்கி மாற்றுவது, அந்த பக்தர்களின் வேண்டுதல்களை அவமதிப்பதிப்பதாகும். அவர்களுக்கு கடவுளுக்கும் இடையேயுள்ள ஆத்மார்த்தமான முறையீட்டை (covenant, promise, pledge) மீறுவதாகும். இவ்வாறு நடக்கும் என்றால், அவர்கள் அத்தகைய காணிக்கையினையே செய்திருக்க மாட்டார்கள். நம்பிக்கை எனும் போது, அதில் எவருக்கும் எந்த உரிமையும் இல்லை.

திராவிடநாத்திகஇந்துவிரோதவிக்கிரங்களை உடைக்கும் ஆட்சியாளர்களுக்கு இதில் எந்த உரிமையும் இல்லை: பக்தர்கள் கடவுளுக்கு பிரியமுடன், பக்தியுடன் கொடுக்கும் நகைகள் பயன்பாட்டுடன் உள்ளது-இல்லை என்பதை ஆட்சியாளர் தீர்மானிக்க முடியாது. லட்சக் கணக்கான பக்தர்கள், ஏழை-பணக்காரன், படித்தவன்– படிக்காதவன் போன்ற நிலைகளைத் தாண்டி, பக்தியுடன் கடவுள்ளுக்குக் காணிக்கையாகக் கொடுக்கப் படும் நகைகளை அவ்வாறேல்லாம் மாற்றுவது, வியாபாரரீதியில் பயன்படுத்துவது, முதலீடு செய்வது, வட்டி பெறுவது, போன்றவற்றை செய்ய ஆட்சியாளர்களுக்கு, அதிலும், நாத்திகம் பேசி, இந்து மத்த்தைத் தொடர்ந்து பழித்து வரும் திராவிடத் தலைவர்கள் அத்தகைய விவகாரங்களில் மூக்கை உழைக்க எந்த முகாந்திரமோ, யோக்கியதையோ இல்லை என்பது மிக சாதாரணமாகத் தெரிகிறது.. தானம் கொடுத்த பக்தர்களின் உணர்வுகளை மீறிய செயல்களைச் செய்ய இவர்களுக்கு உரிமை இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

2000 கிலோ தங்க நகைகள் என்ற கணக்கு எங்கிருந்து, எவ்வாறு வந்தது?: 2000 கிலோ தங்கம் என்றால் சுமார் ரூ. 950-1000 கோடிகள் மதிப்பாகும். ஆனால், உருக்குகிறேன் என்று போகும் போது, சேதாரம், கற்கள் என்றெல்லாம் போனால், அது எத்தனை கிலோக்கள் குறையும், அதனால், எத்தனை கோடிகள் குறையும் என்பதெல்லாம் சந்தேகத்திற்கு உரிய விவகாரங்கள் ஆகும். உருக்கக் கொடுப்பதற்கு முன்பாகவே நடக்கும் குறைப்புகளில் நிச்சயமாக ஊழல்கள் இருக்கும். இருக்கும் கோவில்களில், எந்தந்த கோவில்களில் எத்தனை நகைகள் இருக்கின்றன என்ற கணக்கை இதுவரை பொது மக்களுக்குக் காட்டவில்லை. ஆகவே, இந்த 2000 கிலோ என்ற கணக்கு எப்படி, எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. கோவில் உண்டிகளை எண்ணும் போதே பற்பல ஊழல்கலை இந்த நாத்திக-இந்துவிரோதிகள் செய்துள்ளனர். திருச்செந்தூர் கோவில் அதிகாரி கொலையே இதற்கு சான்றாக உள்ளது. எனவே, மறுபடியும் நாத்திக-இந்துவிரோதி இத்தகைய தெய்வ காரியங்களில் தலையிட்டு பிரச்சினைகளை, ஊழல்களை, மோசடிகளை உண்டாக்க வேண்டாம்.

© வேதபிரகாஷ்

26-09-2021


[1] தினமலர், கோவில்களை 3 மண்டலங்களாக பிரித்து சிறப்பு குழு, மாற்றம் செய்த நாள்: செப் 25,2021 07:13. https://m.dinamalar.com/detail.php?id=2851645

[2] https://m.dinamalar.com/detail.php?id=2851645

[3] தினமணி, கோயில் நகைகளை உருக்கிப் பயன்படுத்தும் திட்டம்: 3 நீதிபதிகள் மூலம் கண்காணிப்பு; அமைச்சா் பி.கே.சேகா்பாபு தகவல், By DIN  |   Published on : 24th September 2021 12:05 AM.

[4]https://www.dinamani.com/tamilnadu/2021/sep/24/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-3705035.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, கோவில் நகைகளை உருக்கி.. அப்படியே பிஸ்கட்டுகளாக மாற்றும் சேகர் பாபு.. அரசின் பெரிய பிளான்.. என்ன?, By Shyamsundar I Updated: Friday, September 24, 2021, 9:26 [IST].

[6] https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-temple-golds-will-be-made-into-biscuits-in-invest-in-banks-says-minister-sekar-babu-433827.html

[7] தமிழ்.ஒன்.இந்தியா, கோயில் ஆபரணங்கள்.. தெய்வத்துக்காக எந்தவொரு விமர்சனத்தையும் சந்திக்க தயார்.. அமைச்சர் சேகர் பாபு பளிச், By Vigneshkumar, Updated: Saturday, September 25, 2021, 20:09 [IST]

[8] https://tamil.oneindia.com/news/chennai/minister-sekar-babu-says-ready-to-face-any-kind-of-accusation-for-god-433976.html

[9]தமிழ்.ஒன்.இந்தியா, கோவில் தங்க நகைகள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் வகுத்த திட்டம்.. புதிய தகவல் சொன்ன சேகர்பாபு!, By Rayar A Updated: Sunday, July 18, 2021, 10:19 [IST].

[10] https://tamil.oneindia.com/news/chennai/tn-minister-sekarbabu-has-said-that-more-than-rs-560-crore-of-temple-lands-have-been-recovered-durin-427355.html

[11]தினத்தந்தி, கோவில்களுக்கு பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய நகைகளை தங்க பிஸ்கெட்டுகளாக மாற்றி, அதனை வங்கியில்டெபாசிட்செய்து வருவாய் ஈட்டப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்., ஜூலை 27, 09:29 AM

[12] https://www.dailythanthi.com/amp/News/State/2021/07/27092913/Minister-Sekarbabu-informed-that-the-decision-was.vpf

[13] India Today, The Modi government wants gold idling in temple vaults to be part of the India growth story. The trusts aren’t enthusiastic, Amarnath K Menon, April 30, 2015; ISSUE DATE: May 11, 2015UPDATED: May 1, 2015 12:49 IST.

[14] https://www.indiatoday.in/magazine/religion/story/20150511-gold-akshaya-tritiya-world-gold-council-temple-818296-2015-04-30

[15] Madras High Court – Arulmighu Mariamman Thirukovil vs The Commercial Tax Officer on 23 July, 2018

BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT     – DATED: 23.07.2018 CORAM  

THE HONOURABLE MR.JUSTICE M.GOVINDARAJ  இன் W.P.(MD) No.21074 of 2014 and W.P.(MD)No.352 of 2015   and M.P.(MD)No.1,1 of 2014 & 2015 

Arulmighu Mariamman Thirukovil, Represented by Executive Officer   Joint Commissioner,G.Thennarasu,  Samayapuram,   Trichy District.                                        …     Petitioner (in both W.Ps) /Vs./

1.The Commercial Tax Officer,    Lalgudi Assessment Circle,    Lalgudi,    Trichy District.                                     …     1st Respondent (in both WPs). W.Ps)

ஆகம தந்திரமும் ஜாதி மந்திரமும் இல்லை, திராவிடத்துவ வன்மமும், நாத்திக இந்துவிரோதமும், தான் வெளிப்படுகின்றன – ஏதோ எதிர்மறையாக செய்ய வேண்டும் என்ற நோக்கமும் புரிகிறது (2)

செப்ரெம்பர்14, 2021

ஆகம தந்திரமும் ஜாதி மந்திரமும் இல்லை, திராவிடத்துவ வன்மமும், நாத்திக இந்துவிரோதமும், தான் வெளிப்படுகின்றன – ஏதோ எதிர்மறையாக செய்ய வேண்டும் என்ற நோக்கமும் புரிகிறது (2)

அதேபோலவே, இப்போதும், அறங்காவலர் உரிமையில் அரசு தலையிட்டிருக்கிறது:சுப்ரமணியசாமி  சொன்னது, “அதேபோலவே, இப்போதும், அறங்காவலர் உரிமையில் அரசு தலையிட்டிருக்கிறது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசின் முடிவு தவறானது. அதனால், ஏற்கனவே தெளிவாக இருக்கும் பல்வேறு சட்டங்களை, உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள் காட்டி, முதல் கட்டமாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போகிறேன். தேவையானால், உச்ச நீதிமன்றம் வரை செல்வேன். எனவே, இந்த உத்தரவை உடனடியாக, முதல்வர் ஸ்டாலின்வாபஸ்பெற வேண்டும். இல்லையென்றால், அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். அர்ச்சகர்களாக இருக்கும் பிராமணர்களுக்காக இதை செய்யவில்லை. அரசியல் சட்டத்தை ஸ்டாலின் மதிக்காமல், ஹிந்து மத கோட்பாடுகளில் தலையிடுகிறார்[1]. அதை தடுக்கவே போராடுகிறேன். புரிந்து கொண்டு, ஸ்டாலின் வாபஸ் பெற்றால், நீதிமன்ற கண்டனத்தில் இருந்து தப்பிப்பார்,” என அவர் தெரிவித்துள்ளார்[2].

ஆகம தந்திரமும் ஜாதி மந்திரமும்! –பேரா.முனைவர் வெ.சிவப்பிரகாசம்: இவற்றிற்கு எல்லாம் பதில் கொடுப்பதைப் போன்று, நக்கிரனில், ஒரு செய்தி வெளியாகியுள்ளது[3]. இதில் புதியதாக எதுவும் இல்லை. ஏற்கெனவே தள்ளுபடி செய்யப் பட்ட தீர்ப்புகளை வைத்துக் கொண்டு, அவற்றையும் அரைகுறையாகப் புரிந்து கொண்டு, ஸ்டாலினை, திமுகவை ஆதரிக்க வேண்டும் என்ற பிரச்சார ரீதியில் எழுதப் பட்டுள்ளது[4]. இவ்வாறு தான் பொய்களை வைத்டுக் கொண்டே திராவிடத்துவ கட்சிகள் 1960களிலிருந்து மக்களை ஏமாற்றி வருகின்றது. ஆட்சி-அதிகாரம் வைத்துக் கொண்டு, ஊடகங்களை துஷ்பிரயோகம் செய்து, கருத்துகளை, நிகழ்வுகளை மக்களின் மீது தீணித்து வருகின்றது. இப்பொழுது, சன் குழுமம், ஆட்சி-அதிகாரம், விளம்பர வியாபாரம்-வருமானம் அவற்றை பங்கு போட்டுக் கொள்ளும் கூட்டங்களாக மாறி விட்டதால், எல்லாமே, ஒரே பாட்டைப் பாடிக் கொண்டிருக்கின்றன.

திராவிடத்துவ, நாத்திகஇந்துவிரோதிகள் பல விசயங்களைக் கண்டுகொள்வதில்லை:

  1. அர்ச்சகர் பிரச்சினை நீதி மன்றத்திற்குச் சென்று வாத-விவாதங்களுக்கு உட்படுத்தப் படும் நிலையில், ஜாதிகளை மீறிய நிலை வருகின்றது.
  2. கோடிக் கணக்கான கோவில்கள், பலமுறைகளில், நிலைகளில், “மந்திர-தந்திர-யந்திர” வழிகளில், ஆகமங்கள்- ஆகமங்கள் இல்லாத என்ற வகைகளில் கட்டப் பட்டுள்ளன, மாற்றப் பட்டுள்ளது, மாற்றியமைக்கப் பட்டிருக்கின்றன.
  3. நேராக கருவறைக்குச் செல்லும் போன்ற கோவில்கள், கருவறையைச் சுற்றி வரும் கோவில்கள், எட்டி நின்று வழிபடும் கோவில்கள், என்று பல வகைகள் உள்ளன.
  4. மிருக பலி இடுதல், இடக்கூடாது என்றுள்ள கோவில்கள், இரண்டையும் தனித்தனியாக செய்து கொள்ளலாம் என்றுள்ள கோவில்கள் என்றெல்லாம் உள்ளன.
  5. வருடத்திற்கு, மாதத்திற்கு, பட்சத்திற்குத் திறக்கும் கோவில்கள் உள்ளன. இல்லை, கருவறை சிலைகளுக்கு / விக்கிரகங்களுக்கு அப்பொழுது தான் பூஜை என்ற நிலையும் உள்ளது.
  6. ஒரு கோவிலுக்கு பல மடங்கள் உரிமை கொண்டாடும் நிலையில், அம்மடங்கள் மாறி-மாறி பூஜை செய்து வரும் முறைகளும் உள்ளன.
  7. வேதங்களுக்கு, வேதாங்களுக்கு, ஆகமங்களுக்கு உட்பட்டது என்று கோவில்கள் இருக்கின்றன.
  8. ஜைன-பௌத்த இடையூறுகள், ஆக்கிரமிப்புகள், விக்கிரங்களை மாற்றி வைத்த நிலைகள் என்றெல்லாம் பிரச்சினை இருந்தன, அவை, இப்பொழுது ஆகமப் பிரச்சினைகளாக வெளிப்படுகின்றன.
  9. இந்துக்கள், ஜைனர்கள், பௌத்தர்களின் கோவில்கள் அவ்வாறே நிர்வகிக்கப் பட்டு வருகின்றன.
  10. இடைக் கால, முகமதியர்களின் கோவில் இடிப்புகள், கருவறை விக்கிரகங்கள் உடைப்பு, போன்ற அவமதிப்புகள், அநாச்சாரங்கள் முதலியவற்றிற்குப் பிறகு, பல விதிமுறைகள் சேர்க்கப் பட்டன, மாற்றியமைக்கப் பட்டுள்ளன.
  11. அத்தகைய கோவில்களில், அம்முறைகளிலேயே ஆராதனை, கொண்டாட்டங்கள், பூஜைகள், வழிபாடுகள் நடந்து வருகின்றன.

ஆனால், இவற்றையெல்லாம் ஒதுக்கி விட்டு, சட்டங்களை, நீதிமன்ற தீர்ப்புகளை, ஆகமங்களை, மெற்குறிப்பிடப் பட்ட பிரச்சினைகளை மறைத்து, அர்ச்சகர் நியமனத்தை அரசியல் ஆக்கப் பட்டுள்ளது.

நாத்திகர், ஆத்திக விசயங்களில் தலையிடும் மர்மங்கள்!: நாத்திகம், அதிலும் இந்துவிரோத நாத்திகம் பின்பற்றி வரும், இந்த திராவிடத்துவத் தலைவர்கள் பெயர்களைச் சொல்லி, அவர்களின் விருப்பு-வெறுப்புகளுக்கு ஏற்ப நாங்கள் அர்ச்சகர் நியமனத்தைச் செய்வோம் என்று பிடிவாதமாகச் செய்துள்ளனர். திக-திமுக-கம்யூனிஸ்டுகள் இந்துவிரோதிகள் ஆத்திக விசயத்தில் தலையிடுவது மூலம் தான் பிரச்சினைகள் கிளம்புகின்றன:

  1. எல்லா டாக்டர்களும் அறுவை சிகிச்சை செய்ய முடியுமா? மாட்டு டாக்டர் மனிதனுக்கு வைத்தியம் பார்க்க முடியுமா?
  2. ஏனெனில், எம்.பி.பி.எஸ் படித்திருந்தாலும், உடனடியாக டாக்டராகி, மருத்துவம் செய்து விட முடியாது, அறுவை சிகிச்சை செய்கிறேன் என்று, ஆபரேஷன் தியேட்டர்களில் நுழைந்து விட முடியாது.
  3. மருத்துவத்தில் உள்ள பல பிரிவுகளில் முறையாகப் படித்து, தேர்ச்சி பெற்று அனுபவம் பெற்றப் பிறகே, மருத்துவம் செய்யமுடியும். அவ்வாறில்லாமல், வேலையில் இறங்கமுடியாது. ஒரு வருடத்தில் சர்டிபிகேட் வாங்கிக் கொண்டு டாக்டர் ஆகிவிடமுடியாது.
  4. எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர் பதவிகளுக்கு, வேலைகளுக்கு டிப்ளோமா, சர்டிபிகேட், டிகிரி படிப்புகள் ஆரம்பித்து, ஒரு வருடம், இரண்டு வருடங்கள் என்று வைத்து, படித்து முடித்து சான்றிதழ் பெற்றுக் கொண்டால், அவர்கள் எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர் என்று ஆகி விட முடியுமா?
  5. எல்லா எம்.எல்.ஏக்கள் / எம்.பிக்களும் அமைச்சர் ஆக முடியுமா? அது-அதற்கு சட்டதிட்டங்களை வைத்திருக்கும் / பாரம்பரியம் இருக்கும் போது, மீறுவது ஏன்?
  6. துப்பாக்கி சுட முடியும், குண்டு வெடிக்கத் தெரியும் என்று தீவிரவாதிகள் ராணுவத்தில் சேர்ந்து விட முடியுமா?
  7. ஆர்.சி கிறிஸ்தவன் புரொடெஸ்ன்டென்ட் சர்ச்சுக்கு பாஸ்டர் ஆக முடியுமா? செவன்த்-டே-அட்வென்டிஸ்ட் சர்ச்-காரன், சிஎஸ்.ஐ பிஷப் ஆகமுடியுமா?
  8. சுன்னி துலுக்கன், ஷியா மசூதி இமாம் ஆக முடியும? போஹ்ரா முஸ்லிம், சுன்னி மசூதி இமாம் ஆகலாமா? அஹ்மதியாக்கள், சுன்னி அல்லது ஷியா மசூதி மௌலானா ஆகமுடியுமா?
  9. இது பிராமணர்-பிராமணர் அல்லாத பிரச்சினையே இல்லை. ஏனெனில், இருக்கும் லட்சக்கணக்கிலான கோவில்களில் பாதிக்கும் மேலான கோவில்களில் பிராமணர் அல்லாதவர் தான் அர்ச்சகராக இருக்கின்றனர். அங்கு பிராமணர் சர்டிபிகேட் வாங்கி வந்தாலும், அர்ச்சகராக முடியாது.
  10. ஒரு வருடத்தில் படித்து, சர்டிபிகேட் வாங்கிக் கொண்டு, அர்ச்சகர் ஆகி விடலாம் என்பது வேடிக்கையான விசயம் என்பது எல்லொருக்கும் தெரிந்துள்ளது.

கொரோனா காலம் நீங்கியதுடன், இந்த திட்டத்தின் பின்னனி வெளிப்பட்டு விடும்: ஆக, இவையெல்லாம், அவர்களுக்குப் புரியவில்லை என்பதில்லை. எனவே, இந்த சர்டிபிகேட் அர்ச்சகர்களை கோவில்களுக்குள் நுழைப்பது, பக்தியோ, சிரத்தையோ, கடவுளின் மீதான காதலோ, விக்கிரகங்க்ளைக் காக்க வேண்டும் என்ற உருகலோ இல்லை. கோவில்களுக்குள் நுழைந்து, விவரங்களை அறிந்து, நாத்திக ரீதியில், ஏதோ எதிமறையாக செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் நுழைப்பப் பட்டதே ஆகும். மாலிக்காபூர்-ஔரங்கசீப் போன்ற எண்ணங்களுடன் நுழைதால், நிச்சயமாக அதே விளைவுகள் தான் உண்டாகும். உலகமே உண்மை அறிய நேரிடும். உண்மையினை யாரும் மறைக்க முடியாது, அது சரித்திரமாகும்.

© வேதபிரகாஷ்

14-09-2021


[1] ஏசியா.நெட்.நியூஸ், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் சட்டத்தை வாபஸ் பெற்றால் ஸ்டாலின் தப்பிப்பார். சு.சாமி கடும் எச்சரிக்கை..!, Thiraviaraj RM, Tamil Nadu, First Published Aug 17, 2021, 9:20 AM IST; Last Updated Aug 17, 2021, 6:57 PM IST.

[2] https://tamil.asianetnews.com/politics/subramaniam-swamy-issued-a-stern-warning-to-stalin-qxytbo

[3] நக்கீரன், ஆகம தந்திரமும் ஜாதி மந்திரமும்! –பேரா.முனைவர் வெ.சிவப்பிரகாசம், Published on 08/09/2021 (06:07) | Edited on 08/09/2021 (07:27).

[4] https://www.nakkheeran.in/nakkheeran/agama-tantra-and-caste-mantra-peradr-v-sivaprakasam/agama-tantra-and-caste-mantra-peradr

ஆகம தந்திரமும் ஜாதி மந்திரமும் இல்லை, திராவிடத்துவ வன்மமும், நாத்திக இந்துவிரோதமும், தான் வெளிப்படுகின்றன (1)

செப்ரெம்பர்14, 2021

ஆகம தந்திரமும் ஜாதி மந்திரமும் இல்லை, திராவிடத்துவ வன்மமும், நாத்திக இந்துவிரோதமும், தான் வெளிப்படுகின்றன (1)

2015ல் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் சட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்: கடந்த 2006ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 36 ஆயிரம் கோயில்களில் தகுதியும் பயிற்சியும் பெற்ற இந்து மதத்தைச் சேர்ந்த எந்த சாதியினர் வேண்டுமானாலும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாம் என்ற நிலை உருவானது[1]. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நல சங்கம் மற்றும் தென்னிந்திய திருக்கோயில் பரிபாலன சபை ஆகியவற்றின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது[2]. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் ஆணைக்கு இடைக்காலத் தடை விதித்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் மீதான இறுதி விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த மே மாதம் நடைபெற்றது. இரு தரப்பிலும் வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு மறுதேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் சட்டத்தை ரத்து செய்துள்ள உச்ச நீதிமன்றம், ஆகம விதிக்கு உட்பட்டு அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

2015 முதல் 2021 வரை: இரட்டை வேடம் போட்டு வரும் திராவிட கட்சிகள், ஒரு வருட அர்ச்சகர் சான்றிதழ் பெற்றவர்களுக்கு அர்ச்சகர் வேலை கொடுக்கிறோம் என்று, விளம்பரத்திற்காக அரசியல் செய்து வருகின்றன. அதிமுக சட்டப் பிரச்சினையை அறிந்து, ஆகமங்கள் இல்லாத கோவில்களுக்கு இருவரை அர்ச்சகராக நியமித்து அமைதியானது. இப்பொழுது, திமுக ஆட்சிக்கு வந்தவுடன், வேண்டுமென்றே, சட்டமீறலைச் செய்ய, இவ்வாறு செய்துள்ளது. நீதிமன்றங்களுக்குச் சென்று, வருவதற்குள் ஆண்டுகள் ஆகிவிடும், அதுவரை பார்த்துக் கொள்ளலாம் என்ற வீம்புடன் வேலைக்கு வைத்துள்ளது தெரிகிறது. அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் மாநிலத்தில் உள்ள 38 கோவில்களில் புதிய அர்ச்சகர்கள் நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது[3]. இது தொடர்பான வேறு வழக்கு உயர் நீதிமன்றத்தின் முதல் அமர்வில் நிலுவையில் இருப்பதால், இம்மனுவை அவற்றோடு சேர்த்து விசாரிக்க கோரிக்கை வைத்தார். இந்த சமர்ப்பித்தலைப் ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மனுவை முதல் பெஞ்சிற்கு அனுப்புமாறு பதிவகத்திற்கு உத்தரவிட்டது[4].

ஸ்டாலின் அவருடைய தந்தை செய்த தவற்றைச் செய்ததால் நீதிமன்றத்துக்குச் செல்லவேண்டிய நிலை வந்துள்ளதுசுப்பிரமணியன் சுவாமி: “அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் விவகாரத்தில் ஸ்டாலின் அவருடைய தந்தை செய்த தவற்றைச் செய்ததால் நான் நீதிமன்றத்துக்குச் செல்லவேண்டிய நிலை வந்துள்ளது,” என்று ட்வீட் மூலம் தி.மு.க-வுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார் பாஜக-வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி[5]. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற சட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் செல்லப்போவதாகவம் அறிவித்திருக்கிறார்[6]. கடந்த தி.மு.க ஆட்சியின்போது சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தை தீட்சிதர்கள் வசமிருந்து அரசாங்கமே ஏற்று நடத்தும் என்று அன்றைக்கு முதல்வராக இருந்த கருணாநிதி அறிவித்தார். அதை எதிர்த்து சிதம்பரம் தீட்சிதர்கள் நீதிமன்றத்துக்குச் சென்றார்கள். உச்ச நீதிமன்றம் வரை சென்ற இந்த வழக்கில் தீட்சிதர்களுக்கு ஆதரவாக நீதிமன்றம் சென்றவர் சுவாமி. இறுதியாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தீட்சிதர்கள் வசமே நடராஜர் ஆலயம் செயல்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதன் பிறகு சுவாமிக்கு நெருக்கமானவர்கள் இது குறித்து நீண்ட ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். இந்த ஆலோசனையின் முடிவில், சென்னை நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தாக்கல் செய்ய முடிவாகியிருக்கிறது. வரும் 26-ம் தேதி சென்னை வரும் சுவாமி, இந்தத் திட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவிருக்கிறாராம். இதனால் இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து புதிய சர்ச்கைள் கிளம்பும் என்று தெரிகிறது!

முதல்வர் ஸ்டாலினுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?: சுப்ரமணியசாமி சொன்னது, “முதல்வர் ஸ்டாலினுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? சட்டம் மிக தெளிவாக இருக்கும் போது, தன்னிச்சையாக அர்ச்சகர் நியமனத்தை ஸ்டாலின் செய்திருப்பது அராஜகம். அர்ச்சகர்களாக இருக்கும் பிராமணர்களுக்காக இதை செய்யவில்லை. அரசியல் சட்டத்தை ஸ்டாலின் மதிக்காமல், ஹிந்து மத கோட்பாடுகளில் தலையிடுகிறார் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி எச்சரித்துள்ளார்……..சென்னை, கே.கே.நகர் பள்ளி விவகாரத்தில் தவறாக செயல்பட்டார். ஆசிரியர் ஒருவர் செய்த தவறுக்கு, அப்பள்ளியை அரசுடைமையாக்க முயல்கிறார் என்றதும், அந்த பிரச்னைக்குள் நுழைந்தேன். ‘சட்ட ரீதியில் நடவடிக்கை எடுப்பேன்; ஆட்சியைக் கலைப்பேன்’ என சொன்னதும், ஸ்டாலின் பின்வாங்கினார்”.

திக சொல்லி செய்யும் ஸ்டாலின்: சுப்ரமணியசாமி சொன்னது, “திடீரென, தி.க., சொன்னதை கேட்டு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற மந்திரத்தை கையில் எடுத்து, பயிற்சி முடித்த 58 பேருக்கு அவசரமாக பணி நியமன ஆணைகள் வழங்கியுள்ளார்.  இதை, தி.க., தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் போற்றி மகிழ்கின்றனர். 51 ஆண்டுகள் கழிந்த நிலையில், ஈ.வெ.ரா.,வின் கனவையும், கருணாநிதியின் லட்சியத்தையும், முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி இருக்கிறார் என, தி.க.,வினர் சொல்லி மகிழ்கின்றனர். இந்திய அரசியல் சட்டத்தின்படி தான், ஹிந்து அறநிலைய சட்டம் – 1959 இயற்றப்பட்டது. அந்த சட்டத்தின் பிரிவு, 55ன் படி, அறநிலையத் துறை கோவில்களில் பூசாரி, அர்ச்சகர், ஓதுவார் உள்ளிட்ட யாரை நியமனம் செய்ய வேண்டும் என்றாலும், அறங்காவலருக்கு தான் அதிகாரம். கோவிலை நிர்வகிக்கும் முழு அதிகாரமும் அவருக்கே உண்டு. அப்படி இருக்கும் போது, முதல்வர் ஸ்டாலினுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? சட்டம் மிக தெளிவாக இருக்கும் போது, தன்னிச்சையாக அர்ச்சகர் நியமனத்தை ஸ்டாலின் செய்திருப்பது அராஜகம்”.

இப்போதும், அறங்காவலர் உரிமையில் அரசு தலையிட்டிருக்கிறது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசின் முடிவு தவறானது: சுப்ரமணியசாமி  சொன்னது, “முதல்வர் என்பதால், அவர் இஷ்டத்துக்கு செய்ய முடியாது. இந்து அறநிலையத் துறை சட்டத்தின்படி, அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அர்ச்சகர், ஓதுவார், பூசாரிகளை நியமிக்கும் அதிகாரம் அறங்காவலருக்கு மட்டுமே உள்ளது[7]. கோயிலை நிர்வாகம் செய்யும் அதிகாரமும் அறங்காவலருக்கே உள்ளது. சட்டம் இப்படி இருக்க, கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதல்வர் ஸ்டாலின் கையில் எடுத்திருப்பது கண்டனத்துக்கு உரியது[8]. இந்து மத விவகாரங்களில் தலையிடும் அதிகாரத்தை முதல்வர் ஸ்டாலி னுக்கு யார் கொடுத்தது? இப்படித் தான், சிதம்பரம் நடராஜர் கோவிலில், தீட்ஷிதர்களிடம் இருந்து நிர்வாக உரிமையை அரசு பறித்தது. அதற்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தேன். பின், உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டு வழக்கிலும் வாதாடினேன். இறுதியில், நடராஜர் கோவிலை தீட்ஷிதர்களே நிர்வகிக்கலாம் என, நீதிபதிகள் உத்தரவிட்டனர். நடராஜர் கோவில் நிர்வாகம் என்பது, பல நுாற்றாண்டுகளாக, தீட்ஷிதர்கள் அனுபவித்து வரும் சிறப்பு உரிமை. அது, அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.

© வேதபிரகாஷ்

14-09-2021


[1] விகடன், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு, Published: 16 Dec 2015 11 AM; Updated:16 Dec 2015 11 AM.

[2] https://www.vikatan.com/spiritual/temples/56403-only-qualified-people-can-become-priests

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், முறையாக பயிற்சி பெற்றவர்கள் அர்ச்சகர்கள் ஆகலாம்; உயர் நீதிமன்றத்தில் அரசு விளக்கம், Written By WebDesk, Updated: August 17, 2021 11:51:03 am.

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/trained-persons-can-be-priest-tamilnadu-govt-said-to-high-court-333167/

[5] விகடன், ஸ்டாலினுடன் மல்லுக்கட்டும் சுவாமி’ – ஆகஸ்ட் 26-க்குப் பிறகு வெடிக்குமா சர்ச்சை?,  அ.சையது அபுதாஹிர், Published: 18 Aug 2021 7 AM; Updated:18 Aug 2021 7 AM.

[6] https://www.vikatan.com/government-and-politics/politics/stalin-vs-swamy-will-the-temple-priest-issue-will-spark-upcoming-days

[7] இந்து.தமிழ், அர்ச்சகர் நியமன விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடுவேன்; இந்து மதத்தில் தலையிடும் அதிகாரத்தை முதல்வருக்கு கொடுத்தது யார்?- பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கேள்வி, Published : 18 Aug 2021 03:12 am, Updated : 18 Aug 2021 05:39 am.

[8] https://www.hindutamil.in/news/tamilnadu/706252-subrmaniyan-swamy.html

இந்துவிரோத திமுகவின் அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமன நாடகம், சுப்ரமணிய சுவாமிக்கு முரசொலி மூலம் விளக்கம் கொடுத்தது, தினக்கூலி மூலம் பழைய அர்ச்சகர்களை வேலைக்கு அமர்த்த வேண்டிய அவசியம் என்ன? (4)

ஓகஸ்ட்21, 2021

இந்துவிரோத திமுகவின் அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமன நாடகம், சுப்ரமணிய சுவாமிக்கு முரசொலி மூலம் விளக்கம் கொடுத்தது, தினக்கூலி மூலம் பழைய அர்ச்சகர்களை வேலைக்கு அமர்த்த வேண்டிய அவசியம் என்ன? (4)

19-08-2021 முரசொலி தலையங்கம் –  தொடர்கிறது: இது தொடர்பாக பேட்டி அளித்த சுப்பிரமணியம் சுவாமி, “அர்ச்சகர் விவகாரத்தில் என்னைப் பொறுத்தவரையில் பிராமணர் – பிராமணர் அல்லாதார் என்று நான் பிரித்துப் பார்க்கவில்லை. யாருக்கு வேதம் குறித்த படிப்பு ஞானம், நம்பிக்கை இருக்கிறதோ அவர்கள் வரலாம்’’ (தினமணி) என்றுதான் சொல்லி இருக்கிறார். சுப்பிரமணியம் சுவாமி சொல்லும்படி ஞானமும், நம்பிக்கையும் உள்ளவர்கள்தான் அர்ச்சகர்கள் ஆக்கப்பட்டுள்ளார்கள். 2007-2008 கல்வி ஆண்டில் வேத ஆகம பயிற்சி பெற்றவர்கள் 207 பேர். அதில் 24 பேர் நேர்முகத் தேர்வுப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். 23-5-2006 அன்று தி.மு.க அரசால் அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது. அதன்படி தகுதியும், திறமையும் பெற்ற அனைத்து இந்துக்களும் சாதி வேறுபாடின்றி திருக்கோவில்களில் அர்ச்சகர்களாக ஆவதற்கு வழி வகை செய்யப்பட்டது. பழனி, திருச்செந்தூர், மதுரை, திருவண்ணாமலை ஆகிய நான்கு இடங்களில் சைவ அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும்; சென்னை, திருவரங்கம் ஆகிய இரண்டு இடங்களில் வைணவ அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும் தொடங்கப்பட்டன. பயிற்சி பெறும் மாணவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை இலவசமாக அளிக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் ரூபாய் 500 ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்த 34 மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 76 மாணவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 55 மாணவர்கள், இதர வகுப்பைச் சேர்ந்த 42 மாணவர்கள் உட்பட மொத்தம் 207 மாணவர்கள் பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்றனர்.

19-08-2021 முரசொலி தலையங்கம் –  தொடர்கிறதுஅர்ச்சகர் பயிற்சி: அந்த ஒன்றரை ஆண்டு காலப் பயிற்சியில் தமிழில் ஆகம முறைப்படி பயிற்சி தரப்பட்டது. தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட மந்திரங்கள் பயிற்றுவிக்கப்பட்டன. எல்லா கடவுளுக்கும் பூஜை செய்யும் முறைகள் தமிழ் ஆகம முறைப்படி பயிற்றுவிக்கப்பட்டன. சமஸ்கிருத ஆகம முறைப்படியும் பயிற்சி தரப்பட்டது. தங்களுக்கு என்னென்ன பயிற்சிகள் தரப்பட்டது என்பதை சென்னையில் பேட்டி அளித்த தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்க தலைவர் வா.அரங்கநாதன் விரிவாகக் கூறி இருக்கிறார். அரசு விதிப்படி முறையான அர்ச்சகர் பயிற்சி நிலையங்களில் பயின்று இருந்தால் அர்ச்சகர் ஆவதற்கு ஒருவர் தகுதி உடையவர் என்று இருக்கிறது. அதன்படி பயிற்சி பெற்றவர்கள்தான் அர்ச்சகர்கள் ஆக்கப்பட்டுள்ளார்கள். அரசு விதிப்படி, வயது வரம்பு 35 ஆகும். 35 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் அர்ச்சகர் ஆக்கப்பட்டுள்ளார்கள். இதில் விதி மீறல் எதுவும் இல்லையே? இப்படி வேலைக்கு எடுக்கப்பட்டதால் வேறு யாராவது வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளார்களா என்றால் அதுவும் இல்லை. 60 வயதுதான் உச்சவரம்பு.

19-08-2021 முரசொலி தலையங்கம் –  தொடர்கிறது: அதை மீறி 72 வயது வரையிலும் இருப்பவர்களையும் நீக்காமல் உபகோவில் பணிகள்தான் தரப்பட்டுள்ளது. உரிய வயதைத் தாண்டி ஒரு ஊழியர் வங்கியில் பணியாற்றினால் விட்டு விடுவார்களா? கோவிலில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் போது அதற்கு உரியவர்கள் அந்தப் பணியைச் செய்ய அனுமதிக்கப்படுவதுதானே முறையானது! ‘தினமலர்’ நாளிதழ் பக்கம் பக்கமாக எடுத்து வெளியிடும் பேட்டிகளில் கூட அர்ச்சகர்கள் என்ன பேட்டி தருகிறார்கள்?’ உடனே நியமிக்கக் கூடாது, உரிய பயிற்சி தந்து நியமிக்கலாம்’ என்கிறார் மாதவ பட்டர். அப்படித்தான் அரசு நியமித்துள்ளது. ‘வேளாளர் சமூகக் கோவிலில் அவர்கள் சமூகத்தவர்கள் அர்ச்சகர்களாக இருக்கிறார்களே’ என்கிறார் பாலாஜி குருக்கள். ‘குலதெய்வக் கோவில்களில் அனைத்துச் சாதியினரும் பூஜை செய்கிறார்கள்’ என்கிறார் கொங்கிலாச்சான் அப்பன்னாசி சுவாமி. அதைத்தான் அரசு தனது கொள்கை முடியாக ஏற்றுக்கொண்டுள்ளது. இது அரசின் கொள்கையானதில் என்ன தவறு?

19-08-2021 முரசொலி தலையங்கம் –  தொடர்கிறது: ‘புதிதாக இவர்கள் எதையும் செய்யவில்லை, காலம் காலமாக இருப்பதுதான்’ என்று ஒருவர் சொல்லி இருக்கிறார். புதிதாக எதுவும் செய்யவில்லை என்றால், புதிதாக எதற்காக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்? ‘நாத்திகர்களுக்கு இதைச் செய்ய என்ன உரிமை உள்ளது?’ என்று ஒருவர் கேட்கிறார். நாட்டை ஆண்ட முதலமைச்சர்களிலேயே பழுத்த ஆத்திகர் ஓமந்தூரார் என்று அழைக்கப்பட்ட ஓமந்தூர் இராமசாமி. இந்து சமய அறநிலையத்துறையின் அவர் சில சீர்திருத்தம் செய்த போது அவரையே எதிர்த்த கூட்டம்தான் இந்தக் கூட்டம். எனவே இவர்களது பிரச்சினை ஆத்திகர் – நாத்திகர் என்பது அல்ல. தங்களின் ஆதிக்கத்தை எதிர்ப்பவர்கள் எல்லாம் ‘நாத்திகர்கள்’ சொல்லி எதிர்ப்பதுதான் காலம் காலமாக அவர்களது வழக்கம். அதை அன்றும் செய்தார்கள். இன்றும் செய்கிறார்கள். ஆகமம் என்ற சொல்லுக்குப் பின்னால் இருப்பது ‘ஆரியமே’ தவிர வேறல்ல!

முரசொலியின் விளக்கம் ஏன்?: இது ஏதோ தினமலர், தினமணி, மாலைமலர் போன்ற நாளிதழ்களில் வந்த செய்தியாக நினைக்க வேண்டாம்! முரசொலியில், இவ்வளவு பெரிதாக செய்தி வெளிவந்துள்ளது!ன்அப்படியென்ன, ஆசிரியர்-நிறுவனர் ஆவி உருவத்தில் வந்து ஆணையிட்டாரா? இல்லை, விபூதி-குங்குமம் அழித்த தனயனுக்கு மனம் மாறி விட்டதா? பிறகு, எதற்கு இந்த மாயாஜால வித்தைகள், அதிலும் சம்பந்தமே இல்லாத விசயங்கள் முரசொலியில் வருகின்றன? நிச்சயமாக ஒரு திட்டத்துடன் செயல்பட ஆரம்பித்திருக்கும் இந்துவிரோத திராவிட அரசு, வேறொரு உள்நோக்கத்துடன், தனது ஆட்களை உள்ளே நுழைக்கிறது. அதனால், அர்ச்சகர் நியமன விவகாரம், அதற்கு விளக்கம் என்று விவரமாக செய்தி வந்துள்ளது. ஒரு வேளை அரசு தரப்பு விளக்கம் போல, இச்செய்தியை வெளியிட்டுள்ளார்கள் போலும்! “முரசொலியில்” வந்து விட்டதால், கழகக் கண்கமணிகளும் படித்துப் புரிந்து கொள்வார்கள்! ஒருவேளை, இந்துத்துவ வாதிகளும் வாங்கி படிக்க ஆரம்பித்து விடுவார்கள் போலும்!

நாத்திகர், ஆத்திக விசயங்களில் தலையிடும் மர்மங்கள்!: திக-திமுக-கம்யூனிஸ்டுகள் இந்துவிரோதிகள் ஆத்திக விசயத்தில் தலையிடுவது மூலம் தான் பிரச்சினைகள் கிளம்புகின்றன:

  1. எல்லா டாக்டர்களும் அறுவை சிகிச்சை செய்ய முடியுமா? மாட்டு டாக்டர் மனிதனுக்கு வைத்தியம் பார்க்க முடியுமா?
  2. எல்லா எம்.எல்.ஏக்கள் / எம்.பிக்களும் அமைச்சர் ஆக முடியுமா? அது-அதற்கு சட்டதிட்டங்களை வைத்திருக்கும் / பாரம்பரியம் இருக்கும் போது, மீறுவது ஏன்?
  3. துப்பாக்கி சுட முடியும், குண்டு வெடிக்கத் தெரியும் என்று தீவிரவாதிகள் ராணுவத்தில் சேர்ந்து விட முடியுமா?
  4. ஆர்.சி கிறிஸ்தவன் புரொடெஸ்ன்டென்ட் சர்ச்சுக்கு பாஸ்டர் ஆக முடியுமா? செவன்த்-டே-அட்வென்டிஸ்ட் சர்ச்-காரன், சிஎஸ்.ஐ பிஷப் ஆகமுடியுமா?
  5. சுன்னி துலுக்கன், ஷியா மசூதி இமாம் ஆக முடியும? போஹ்ரா முஸ்லிம், சுன்னி மசூதி இமாம் ஆகலாமா? அஹ்மதியாக்கள், சுன்னி அல்லது ஷியா மசூதி மௌலானா ஆகமுடியுமா?
  6. இது பிராமணர்-பிராமணர் அல்லாத பிரச்சினையே இல்லை. ஏனெனில், இருக்கும் லட்சக்கணக்கிலான கோவில்களில் பாதிக்கும் மேலான கோவில்களில் பிராமணர் அல்லாதவர் தான் அர்ச்சகராக இருக்கின்றனர். அங்கு பிராமணர் சர்டிபிகேட் வாங்கி வந்தாலும், அர்ச்சகராக முடியாது.

சர்டிபிகேட் அர்ச்சகர்களும், பாரம்பரிய அர்ச்சகர்களும்:

  1. 60 வயதான அர்ச்சகர்கள் ஓய்வு கொடுக்கப் பட்டாலும், அவர்கள் கோவிலுக்கு வந்து, இப்பொழுது சேர்க்கப் பட்டுள்ள அர்ச்சகர்களுக்கு உதவ வேண்டுமாம்!
  2. “இருவரும் சேர்ந்து பூஜைகளை செய்யுமாறு அறிவுரை கூறியுள்ளோம்,” என்றால், பிறகு, அவரது நிலை என்ன?
  3. இவர் தான் ISI / ISO 90002 ரேஞ்சில் சர்டிபிகேட் வாங்கி வந்துள்ளாரே, பிறகு, அவருக்கு, கற்றுக் கொடுக்க வேண்டியது என்ன உள்ளது?
  4. அவருக்கு அத்தகைய பணி நியமனம் கொடுக்கப் பட்டுள்ளதா? அவரது சம்பளம் என்ன?
  5. மடாலங்களில் சிறு வயதிலிருந்து, முறைப்படி பயிற்சி பெறுபவர்களை விட, ஓராண்டு படித்து, சர்டிபிகேட் வாங்கிக் கொண்டு வரும் இவர்கள், ஏதோ எல்லாம் தெரிந்தவர்கள் மாதிரியும், உடனே அர்ச்சகர் வேலை கொடுக்க வேண்டும் என்பது போல அலைகிறார்கள். நாத்திக-இந்துவிரோத அரசும் அதனை ஆதரிக்கிறது.
  6. எத்தனையோ, லட்சக் கணக்கில் பி.இ / பி.டெக் படித்து வேலை இல்லாமல் இருக்கிறார்கள், ஆனால், அவர்களுக்கு வேலை கொடுப்பதில்லை.
  7. இவர்களுக்கோ, லட்சத்தில் செலவு செய்து, விழா எடுத்து, வேலை கொடுக்கிறார்கள். இது எப்படி என்பது தான் புதிராக இருக்கிறது.
  8. உண்மையாக படித்து அறிகார்களோ, இல்லையோ, சர்டிபிகேட் வாங்கினால், வேலை உறுதி என்பது போன்ற நிலை உருவாக்கப் பட்டுள்ளது.
  9. அப்படி என்றால், இனி, இஞ்சினியரிங் கல்லூரிகள் எல்லாம் மூடிவிட்டு, அர்ச்சகர் பயிற்சி கல்லூரி என்று ஆரம்பித்து விடலாம் போலிருக்கிறது.
  10. தமிழகத்தில், அந்த அளவுக்கு, முதலமைச்சரே வேலை நியமணம் பத்திரம் கொடுத்து, விழா நடக்கிறது.

© வேதபிரகாஷ்

21-08-2021

70-100 வருடங்களாக இந்து மதத்தைத் தூஷித்து, சிலைகளை உடைத்து, திருடி, கோவில்களைக் கொள்ளையடித்து, இப்பொழுது, அர்ச்சகர் போர்வையில் உள்ளே நுழைவதேன்?
ஆகமங்கள் பற்றி அறியாமல், சக்திவேல் முருகன் போன்றோரை வைத்துக் கொண்டு, கோவில்களை சூரையாட திட்டம் போடப் பட்டுள்ளதா?
சர்டிபிகேட் வாங்கினவன் எல்லாம் அர்ச்சகர் ஆகி விடலாம் என்றால்,
பிஇ / பிடெக் படித்தவன் ஏன் இஞ்சினியர் ஆவதில்லை?
இவர்கள் சொல்வது உண்மை என்றால், அவ்வாறு செய்தவர்களின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

இந்துவிரோத திமுகவின் அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமன நாடகம், சுப்ரமணிய சுவாமிக்கு விளக்கம் கொடுத்து ஓய்வு பெற்ற அர்ச்சகரை தினக்கூலி முறையில் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன? (3)

ஓகஸ்ட்21, 2021

இந்துவிரோத திமுகவின் அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமன நாடகம், சுப்ரமணிய சுவாமிக்கு விளக்கம் கொடுத்து ஓய்வு பெற்ற அர்ச்சகரை தினக்கூலி முறையில் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன? (3)

அவதூறுகளுக்கு நெத்தியடி பதில் கொடுத்த முதலமைச்சர் மு..ஸ்டாலின்பின்வாங்கிய சுப்பிரமணியன் சுவாமி!: இந்நிலையில் ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ள சுப்பிரமணியன் சுவாமி[1], “தமிழ்நாடு அர்ச்சகர் தொடர்பான பிரச்சினை தீர்க்கப்பட்டதாகத் தெரிகிறது. முதலமைச்சர் மு..ஸ்டாலின் இன்று தமிழக சட்டசபையில் அர்ச்சகர்கள் யாரும் பணி நீக்கம் செய்யப்படவில்லை. அகற்றும் திட்டம் எதுவும் இல்லை. 60 வயதை கடந்து ஓய்வு பெறும் அர்ச்சகர்களுக்கு தகுந்த பணி வழங்கப்படும் என்று தெளிவுபடுத்தியுள்ளார். இதன் மூலம், பிரச்சினை தீர்க்கப்பட்டதாகத் தெரிகிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்[2]. இதைத்தான், “அவதூறுகளுக்கு நெத்தியடி பதில் கொடுத்த முதலமைச்சர் மு..ஸ்டாலின்பின்வாங்கிய சுப்பிரமணியன் சுவாமி! ,” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது. உண்மையில் ஈவேரா, அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் என்று எல்லோரும் இந்துமதத்தை தூஷித்து, 70 ஆண்டுகளுக்கு மேலாக பேசி, எழுதி வருகின்றனர். இவற்றை எல்லோரும் அறிந்த விசயமாக இருக்கிறது. இப்பொழுது, அரசியல் ஆட்சி, அதிகாரம், பலம் மற்றும் ஊடக அசுர பிரச்சாரம் எல்லாம் இருப்பதால், இத்தகைய யுக்திகளும் கையாளப் படுகின்றன.

பணியில் உள்ள அர்ச்சகர் வெளியேற்றப் பட்டனர்: பணி ஆணையை பெற்ற அவர்கள் 15-08-2021 அன்று முதல் பணியில் இணைந்துள்ளனர். அதன்படி இன்று கோவில்களில் பணி செய்து கொண்டிருந்த குருக்கள் சமூகம் வெளியேற்றப்பட்டு மற்ற சமூக அர்ச்சகர்கள் நியமனம் நடந்தேறி வருகிறது. இந்நிலையில் பிராமணர்கள் கோவில்களில் இருந்து வெளியேற்றப்படுவது குறித்து ஆடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது[3]. அதில் பேசும் குருக்கள் ஒருவர், “நான் திருச்சியில் இருந்து விக்னேஷ்வரன் சிவா பேசுகிறேன். மலைக்கோட்டை பிரச்சாரகம், நாகநாத சுவாமி கோயில் பற்றி கேட்டிருந்தேள். இன்று காலையிலே பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் பணியில் சேர்ந்து விட்டார்கள். மலைக்கோட்டை பிரச்சாரகத்திலே உள்ளே நுழைஞ்சிட்டா. நாகநாதர் கோயிலிலே காலை சந்தி முடிந்த உடனே நம்ம சிவாச்சாரியாரை வெளியே அனுப்பி விட்டு அவாளுக்கு ட்யூட்டி போட்டுட்டா[4]. சுப்பிரமணிய கோயிலிலும் 5 குருக்களை வெளியே அனுப்பி வைச்சுட்டா. நான் பிராமினை தூக்கி உள்ளே போட்டுட்டா. சமயபுரத்திலும் அதே நிலைமை தான் அண்ணா. இன்னைக்கு காலையிலேயே போலீஸை வைச்சு மாற்று சமுதயாத்தாளை உள்ளே விட்டு குருக்களை வெளியேற்றி விட்டார்கள்,” எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, கருத்து தெரிவித்துள்ள பலரும், சமூக நீதி வாழ்க! கோவில் கணக்கு வழக்குகளை சரிபார்க்க நியமிக்கப்பட்ட ஒரு துறை, ஒரு சமூகத்திற்கு அநீதி இழைத்துவிட்டது[5]. காஷ்மீரில் இருந்து எப்படி பண்டிட்டுகள் விரட்டியடிக்கப்பட்டார்களோ அதுபோல பிராமணர்களை தமிழகத்தில் இருந்து விரட்ட திராவிட சூழ்ச்சிதான் இந்த தூசிதட்டி எடுக்கப்பட்ட அனைவரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற செயல். அது சரி ஓதுவார்கள் அர்ச்சகர்களா? ஆகம விதிகளின்படி புதிதாக நியமிக்கப்பட்ட அர்ச்சகர்கள் செயல்படவில்லையென்றால் பக்தர்கள் அவர்களை புறக்கனிக்கவேண்டும். சில நாட்களில் ஒதுங்கிவிடுவார்கள். ஏனெனில் அவர்களால் இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த பூஜை முறைகளை கடைபிடிக்க முடியாது’’ எனத் தெரிவித்துள்ளனர்[6]. இது பிராமணர்-பிராமணர் அல்லாத பிரச்சினை போன்று விவரிக்கிறது. பிரச்சினை என்னவென்றால், “இந்துக்கள்” போர்வையில், நாத்திகர்-இந்துவிரோதிகள் “அர்ச்சகர்” போர்வையில் கோவிலுக்குள் நுழைவது தான்.

ஏற்கனவே பணியில் இருக்கின்ற ஓய்வு பெறாத எந்த அர்ச்சகரையும், எந்த திருக்கோயில்களிலிருந்து வெளியேற்றவில்லை: சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் 47 முதுநிலை திருக்கோயில்களின் அர்ச்சகர்கள் மற்றும் செயல் அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது[7]. அப்போது பேசிய அவர், ஏற்கனவே பணியில் இருக்கின்ற ஓய்வு பெறாத எந்த அர்ச்சகரையும், எந்த திருக்கோயில்களிலிருந்து வெளியேற்றவில்லை எனவும், அப்படி எங்காவது நடந்திருந்தால் கவனத்திற்கு கொண்டு வருமாறும் கேட்டுக்கொண்டார்[8]. காலிப் பணியிடங்களில் தான் பணியாளர்களை நியமிக்கின்றோம் என்றும், ஆகம விதிபடி பயிற்சி பெற்ற அர்ச்சகர்களை கொண்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறினார். இறைவனுக்கு பூஜை செய்கிற அர்ச்சகர்களை நாங்கள் வணங்குகிறோம். இப்போது நாங்கள் எடுத்துவரும் நடவடிக்கைள் கூட இறையன்போடு இறைப்பணி தொடர வேண்டும். அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகத்தான் என்றும் குறிப்பிட்டார். 60 வயதைக் கடந்தவர்கள் பல திருக்கோயில்களில் அர்ச்சகர்களாகப் பணியில் இருக்கும்போது 35 வயதிற்கு உட்பட்டவர்களை அர்ச்சகர்களாக நியமிப்பதில் என்ன தவறு என்றும் கேள்வி எழுப்பினார்.

19-08-2021 – கருணாநிதி –  கோவில்கள் ஆகம விதிப்படி நடக்க வேண்டும் என்பதைப் போலவே வர்ணா சிரமத்துக்கு வழிவகை செய்வதாக இருந்து விடவும் கூடாது[9]: முரசொலி நாளேட்டின் இன்றைய (ஆகஸ்ட் 19, 2021) தலையங்கம் வருமாறு: அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற புரட்சிகரமான திட்டத்தின் அடிப்படையில் தகுதியும், திறமையும், அதற்கான பயிற்சியும் பெற்றவர்கள் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள்.  ‘கோவில்கள் ஆகம விதிப்படி நடக்க வேண்டும் என்பதைப் போலவே வர்ணா சிரமத்துக்கு வழிவகை செய்வதாக இருந்து விடவும் கூடாது’ என்று சொன்னார் கருணாநிதி. அந்த அடிப்படையில்தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. அதை மனதில் கொண்டுதான் அர்ச்சகர் நியமனம் செய்யப்பட்டும் வருகிறது. இதைப்பார்த்து நேரடியாகக் கொந்தளிக்க முடியாத தினமலர், தினமணி போன்ற பத்திரிகைகள் சுப்பிரமணியம் சுவாமியின் பேட்டியைப் போட்டு அவரது முதுகுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள். ‘ஆகம விதி மீறப்பட்டால் உச்சநீதிமன்றம் செல்வேன்’ என்று சு.சுவாமி சொல்லி இருக்கிறார். ‘இந்த மிரட்டல்களுக்கெல்லாம் பயப்படும் அரசல்ல இது’ என்று கம்பீரமாகச் சொல்லி இருக்கிறார் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு. சுப்பிரமணியம் சுவாமி எந்த உச்சநீதிமன்றத்தைச் சொல்கிறாரோ அந்த உச்சநீதிமன்றமே, தமிழ்நாடு அரசின் அனைத்துச் சாதியினரும் சட்டத்தை அங்கீகரித்து விட்டது.

19-08-2021 முரசொலி தலையங்கம்அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற நியமனமே உச்சநீதிமன்றத்தின் அங்கீகாரத்தால்தான் நடந்திருகிறதுசேகர் பாபு:. 14.3.1972 ஆம் நாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், “கோவில் அர்ச்சகர்களை நியமிப்பது வகுப்பு வேறுபாடற்ற நடவடிக்கை. அந்த நடவடிக்கைகளிலோ விவகாரங்களிலோ தலையிட விரும்பவில்லை. எனவே தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தம் செல்லுபடியானதே,’’ என்று கூறப்பட்டது. 16.12.,2015 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “இந்துவாகப் பிறந்து தகுந்த பயிற்சியும், தேர்ச்சியும் இருக்குமானால் ஒருவரை அர்ச்சகராக நியமிக்கலாம் என்று தமிழக அரசின் அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இதனைப் புறக்கணிக்க முடியாது” என்று கூறப்பட்டது. இந்த அடிப்படையில் பார்த்தால் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற நியமனமே உச்சநீதிமன்றத்தின் அங்கீகாரத்தால்தான் நடந்திருகிறது[10].

© வேதபிரகாஷ்

21-08-2021


[1] கலைஞர் செய்திகள், அவதூறுகளுக்கு நெத்தியடி பதில் கொடுத்த முதலமைச்சர் மு..ஸ்டாலின்பின்வாங்கிய சுப்பிரமணியன் சுவாமி!, Vignesh Selvaraj, Aug 18, 2021 |11:58:20 am.

[2] https://m.kalaignarseithigal.com/article/tamilnadu/subramanian-swamy-on-dmk-govts-all-castes-become-priest/a83248fd-b108-4bc0-b7f4-a54a8a66bcc7/paytm

[3] தினசரி, திடீர் நயவஞ்சக வெளியேற்றம்: விடியலால் நொடிந்து போன சிவாச்சார்யர்கள் அர்ச்சகர்கள் கண்ணீர்க் குமுறல், செங்கோட்டை ஶ்ரீராம், 17-08-2021. 12.27 PM.

[4] https://dhinasari.com/latest-news/220137-temple-archagas-unlawfully-evacuated-from-temples-in-tamilnadu-hrnce.html

[5] ஏசியா.நெட்.நியூஸ், வெளியேற்றப்படும் பிராமணர்கள்கோயில் குருக்களின் வைரல் ஆடியோகுஷியில் பெரியாரிஸ்ட் மற்றும் இடதுசாரிகள்.!, Thiraviaraj RM, Tamil Nadu, First Published Aug 16, 2021, 1:04 PM IST; Last Updated Aug 16, 2021, 1:04 PM IST.

[6] https://tamil.asianetnews.com/politics/brahmins-to-be-expelled-viral-audio-of-temple-priests-qxx91w

[7] நியூஸ்.7.தமிழ், அர்ச்சகர்கள் வெளியேற்றப்படுகிறார்களா? அமைச்சர் சேகர்பாபு பதில், by EzhilarasanAugust 19, 2021

[8] https://news7tamil.live/not-the-intention-to-expel-priest-on-duty-minister-sekarbabu.html

[9] கலைஞர் செய்திகள், ஆகமம்பின்னால் இருப்பதுஆரியமே’.. சு.சுவாமி மிரட்டல்களுக்கெல்லாம் பயப்படும் அரசல்ல இது” : முரசொலி!, Prem Kumar – Aug 20, 2021 | 08:58:49 am.

[10] https://m.kalaignarseithigal.com/article/tamilnadu/murasoli-editorial-said-this-is-not-a-government-that-is-afraid-of-all-the-threats-of-subramaniam/24245a8d-23ee-4322-a4bf-1dfdc7d3ca62

இந்துவிரோத திமுகவின் அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமன நாடகம், சுப்ரமணிய சுவாமிக்கு ஸ்டாலின் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? (2)

ஓகஸ்ட்21, 2021

இந்துவிரோத திமுகவின் அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமன நாடகம், சுப்ரமணிய சுவாமிக்கு ஸ்டாலின் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? (2)

அரசியல் ஆக்கப் பட்டு விட்டதால் கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவிப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை: இந்நிலையில், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்ற துணையாக இருப்போம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது[1], “சமூக நீதியை விரும்பாத சுப்ரமணியன் சுவாமி போன்றோருக்கு இந்தத் திட்டம் எரிச்சலைத் தருகிறது. மனிதன் நிலவில் கால் வைத்தாலும் கோவில் கருவறையில் கால்வைக்க முடியாது என்ற நிலை நீடித்துவந்தது. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம் அகில இந்திய அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்ற துணையாக இருப்போம்,” என தெரிவித்துள்ளார்[2]. இதே போலத்தான், பெரியார் திடலில், வீரமணி தலைமையில் இந்துவிரோதிகள் எல்லாம் சேர்ந்து பேசியுள்ளார்கள். அதிலும், இந்த இந்துவிரோதி திருமா இருந்ததும் நோக்கத் தக்கது. அருள்மொழி, சுப.வீரப்பாண்டியன், கலி.பூங்குன்றன். சிகரம் செந்தில்நாதன், கலையரசி நடராசன் இருந்ததில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. இந்துவிரோதிகள் எவ்வாறு சேர்ந்து, இந்துமதத்திற்கு எதிராக செயல் படுகிறார்கள் என்பதை கவனிக்கலாம்.

ஸ்டாலின் அவருடைய தந்தை செய்த தவற்றைச் செய்ததால் நீதிமன்றத்துக்குச் செல்லவேண்டிய நிலை வந்துள்ளதுசுப்பிரமணியன் சுவாமி: “அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் விவகாரத்தில் ஸ்டாலின் அவருடைய தந்தை செய்த தவற்றைச் செய்ததால் நான் நீதிமன்றத்துக்குச் செல்லவேண்டிய நிலை வந்துள்ளது,” என்று ட்வீட் மூலம் தி.மு.க-வுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார் பாஜக-வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி[3]. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற சட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் செல்லப்போவதாகவம் அறிவித்திருக்கிறார்[4]. கடந்த தி.மு.க ஆட்சியின்போது சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தை தீட்சிதர்கள் வசமிருந்து அரசாங்கமே ஏற்று நடத்தும் என்று அன்றைக்கு முதல்வராக இருந்த கருணாநிதி அறிவித்தார். அதை எதிர்த்து சிதம்பரம் தீட்சிதர்கள் நீதிமன்றத்துக்குச் சென்றார்கள். உச்ச நீதிமன்றம் வரை சென்ற இந்த வழக்கில் தீட்சிதர்களுக்கு ஆதரவாக நீதிமன்றம் சென்றவர் சுவாமி. இறுதியாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தீட்சிதர்கள் வசமே நடராஜர் ஆலயம் செயல்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதன் பிறகு சுவாமிக்கு நெருக்கமானவர்கள் இது குறித்து நீண்ட ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். இந்த ஆலோசனையின் முடிவில், சென்னை நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தாக்கல் செய்ய முடிவாகியிருக்கிறது. வரும் 26-ம் தேதி சென்னை வரும் சுவாமி, இந்தத் திட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவிருக்கிறாராம். இதனால் இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து புதிய சர்ச்கைள் கிளம்பும் என்று தெரிகிறது!

முதல்வர் ஸ்டாலினுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?: சுப்ரமணியசாமி சொன்னது, “முதல்வர் ஸ்டாலினுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? சட்டம் மிக தெளிவாக இருக்கும் போது, தன்னிச்சையாக அர்ச்சகர் நியமனத்தை ஸ்டாலின் செய்திருப்பது அராஜகம். அர்ச்சகர்களாக இருக்கும் பிராமணர்களுக்காக இதை செய்யவில்லை. அரசியல் சட்டத்தை ஸ்டாலின் மதிக்காமல், ஹிந்து மத கோட்பாடுகளில் தலையிடுகிறார் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி எச்சரித்துள்ளார்……..சென்னை, கே.கே.நகர் பள்ளி விவகாரத்தில் தவறாக செயல்பட்டார். ஆசிரியர் ஒருவர் செய்த தவறுக்கு, அப்பள்ளியை அரசுடைமையாக்க முயல்கிறார் என்றதும், அந்த பிரச்னைக்குள் நுழைந்தேன். ‘சட்ட ரீதியில் நடவடிக்கை எடுப்பேன்; ஆட்சியைக் கலைப்பேன்’ என சொன்னதும், ஸ்டாலின் பின்வாங்கினார்”.

திக சொல்லி செய்யும் ஸ்டாலின்: சுப்ரமணியசாமி சொன்னது, “திடீரென, தி.க., சொன்னதை கேட்டு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற மந்திரத்தை கையில் எடுத்து, பயிற்சி முடித்த 58 பேருக்கு அவசரமாக பணி நியமன ஆணைகள் வழங்கியுள்ளார்.  இதை, தி.க., தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் போற்றி மகிழ்கின்றனர். 51 ஆண்டுகள் கழிந்த நிலையில், ஈ.வெ.ரா.,வின் கனவையும், கருணாநிதியின் லட்சியத்தையும், முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி இருக்கிறார் என, தி.க.,வினர் சொல்லி மகிழ்கின்றனர். இந்திய அரசியல் சட்டத்தின்படி தான், ஹிந்து அறநிலைய சட்டம் – 1959 இயற்றப்பட்டது. அந்த சட்டத்தின் பிரிவு, 55ன் படி, அறநிலையத் துறை கோவில்களில் பூசாரி, அர்ச்சகர், ஓதுவார் உள்ளிட்ட யாரை நியமனம் செய்ய வேண்டும் என்றாலும், அறங்காவலருக்கு தான் அதிகாரம். கோவிலை நிர்வகிக்கும் முழு அதிகாரமும் அவருக்கே உண்டு. அப்படி இருக்கும் போது, முதல்வர் ஸ்டாலினுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? சட்டம் மிக தெளிவாக இருக்கும் போது, தன்னிச்சையாக அர்ச்சகர் நியமனத்தை ஸ்டாலின் செய்திருப்பது அராஜகம்”.

இப்போதும், அறங்காவலர் உரிமையில் அரசு தலையிட்டிருக்கிறது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசின் முடிவு தவறானது: சுப்ரமணியசாமி  சொன்னது, “முதல்வர் என்பதால், அவர் இஷ்டத்துக்கு செய்ய முடியாது. இந்து அறநிலையத் துறை சட்டத்தின்படி, அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அர்ச்சகர், ஓதுவார், பூசாரிகளை நியமிக்கும் அதிகாரம் அறங்காவலருக்கு மட்டுமே உள்ளது[5]. கோயிலை நிர்வாகம் செய்யும் அதிகாரமும் அறங்காவலருக்கே உள்ளது. சட்டம் இப்படி இருக்க, கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதல்வர் ஸ்டாலின் கையில் எடுத்திருப்பது கண்டனத்துக்கு உரியது[6]. இந்து மத விவகாரங்களில் தலையிடும் அதிகாரத்தை முதல்வர் ஸ்டாலி னுக்கு யார் கொடுத்தது? இப்படித் தான், சிதம்பரம் நடராஜர் கோவிலில், தீட்ஷிதர்களிடம் இருந்து நிர்வாக உரிமையை அரசு பறித்தது. அதற்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தேன். பின், உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டு வழக்கிலும் வாதாடினேன். இறுதியில், நடராஜர் கோவிலை தீட்ஷிதர்களே நிர்வகிக்கலாம் என, நீதிபதிகள் உத்தரவிட்டனர். நடராஜர் கோவில் நிர்வாகம் என்பது, பல நுாற்றாண்டுகளாக, தீட்ஷிதர்கள் அனுபவித்து வரும் சிறப்பு உரிமை. அது, அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.

அதேபோலவே, இப்போதும், அறங்காவலர் உரிமையில் அரசு தலையிட்டிருக்கிறது:சுப்ரமணியசாமி  சொன்னது, “அதேபோலவே, இப்போதும், அறங்காவலர் உரிமையில் அரசு தலையிட்டிருக்கிறது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசின் முடிவு தவறானது. அதனால், ஏற்கனவே தெளிவாக இருக்கும் பல்வேறு சட்டங்களை, உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள் காட்டி, முதல் கட்டமாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போகிறேன். தேவையானால், உச்ச நீதிமன்றம் வரை செல்வேன். எனவே, இந்த உத்தரவை உடனடியாக, முதல்வர் ஸ்டாலின்வாபஸ்பெற வேண்டும். இல்லையென்றால், அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். அர்ச்சகர்களாக இருக்கும் பிராமணர்களுக்காக இதை செய்யவில்லை. அரசியல் சட்டத்தை ஸ்டாலின் மதிக்காமல், ஹிந்து மத கோட்பாடுகளில் தலையிடுகிறார்[7]. அதை தடுக்கவே போராடுகிறேன். புரிந்து கொண்டு, ஸ்டாலின் வாபஸ் பெற்றால், நீதிமன்ற கண்டனத்தில் இருந்து தப்பிப்பார்,” என அவர் தெரிவித்துள்ளார்[8].

© வேதபிரகாஷ்

21-08-2021


[1] நக்கீரன், சுப்ரமணியன் சுவாமி போன்றோருக்கு இது எரிச்சலை தருகிறது” – திருமாவளவன் கருத்து!, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 18/08/2021 (15:13) | Edited on 18/08/2021 (15:44).

[2] https://www.nakkheeran.in/24-by-7-news/politics/it-irritates-people-subramanian-swamy-thirumavalavan-comment

[3] விகடன், ஸ்டாலினுடன் மல்லுக்கட்டும் சுவாமி’ – ஆகஸ்ட் 26-க்குப் பிறகு வெடிக்குமா சர்ச்சை?,  அ.சையது அபுதாஹிர், Published: 18 Aug 2021 7 AM; Updated:18 Aug 2021 7 AM.

[4] https://www.vikatan.com/government-and-politics/politics/stalin-vs-swamy-will-the-temple-priest-issue-will-spark-upcoming-days

[5] இந்து.தமிழ், அர்ச்சகர் நியமன விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடுவேன்; இந்து மதத்தில் தலையிடும் அதிகாரத்தை முதல்வருக்கு கொடுத்தது யார்?- பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கேள்வி, Published : 18 Aug 2021 03:12 am, Updated : 18 Aug 2021 05:39 am.

[6] https://www.hindutamil.in/news/tamilnadu/706252-subrmaniyan-swamy.html

[7] ஏசியா.நெட்.நியூஸ், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் சட்டத்தை வாபஸ் பெற்றால் ஸ்டாலின் தப்பிப்பார். சு.சாமி கடும் எச்சரிக்கை..!, Thiraviaraj RM, Tamil Nadu, First Published Aug 17, 2021, 9:20 AM IST; Last Updated Aug 17, 2021, 6:57 PM IST.

[8] https://tamil.asianetnews.com/politics/subramaniam-swamy-issued-a-stern-warning-to-stalin-qxytbo

இந்துவிரோத திமுகவின் அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமன நாடகம், கோவில்களை மேம்படுத்தவா, சீரழிக்கவா? (1)

ஓகஸ்ட்21, 2021

இந்துவிரோத திமுகவின் அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமன நாடகம், கோவில்களை மேம்படுத்தவா, சீரழிக்கவா? (1)

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் 14-08-2021 அன்று தொடங்கி வைக்கப்பட்டது:  அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் சென்னையில் 14-08-2021 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.  இதில், சிறப்பு விருந்தினர்களாக குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சாந்தலிங்க மருதாசல அடிகள், குமரகுருபர சுவாமிகள் சிரவை ஆதீனம், ஆன்மீகச் சொற்பொழிவாளர் சுகி சிவம் மற்றும் அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், கே என் நேரு, சேகர் பாபு ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அர்ச்சகர் பயிற்சி முடித்த 29 ஒதுவார்கள் உள்பட 58 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இவர்கள் சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் உள்ளிட்ட 58 கோயில் பணியார்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது ஒரு அரசியல் விழா போன்று தான் இருந்தது, பேச்சாளர்களும் அவ்வாறே பேசினார்கள். அந்த மடாதிபதிகள் மடத்தின் நிலங்களை விற்றது போன்ற வழக்குகளில் சிக்கியவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. மேலும், அவர்களில் சிலர் நாங்கள் “இந்துக்கள் அல்ல,” என்றும் பேசியிருக்கிறார்கள். சுகி சிவம் பற்றியும் நிலைமை மாறி விட்டது. ஏனெனில், காசு வாங்கிக் கொண்டு, மேடைக்கு ஏற்றபடி பேசுகின்ற ஆளாகி விட்டதால், அவரை ஆன்மீகத்தில் சேர்க்க முடியாது. ஒரு அரசியல் ஏஜென்டாக செயல்பட ஆரம்பித்து விட்டார் என்று தெரிகிறது.முன்பு, இவரது புத்தகத்தை திக வெளியிட்டது, இப்பொழுது, திமுக, இந்நிகழ்ச்சிக்கு வரவேற்று பேச அனுமதித்துள்ளது.

19-08-2021 அன்று இந்து சமய அறநிலையத்துறை சுற்றறிக்கை: கோயில்களில் வயது மூப்பைத் தாண்டியோருக்கு தினக்கூலி அடிப்படையில் பணி வழங்க அனுமதி அளித்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது[1]. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் ஜெ. குமரகுருபரன் 19-08-2021 வியாழக்கிழமை அனுப்பிய சுற்றறிக்கை[2]: “கோயில்களில் ஏற்கெனவே பணியாற்றிக் கொண்டிருக்கும் அா்ச்சகா்கள் உள்ளிட்ட பணியாளா்கள் யாரும் விடுவிக்கப் படமாட்டார்கள் என்பதை சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார். கோயில்களில் அா்ச்சகா்கள் வயது மூப்பைத் தாண்டியும் தொடா்ந்து பணியாற்றி வரும் பட்சத்தில் அவரை தினக் கூலி அடிப்படையில் தொடா்ந்து அங்கேயே பணியாற்ற அனுமதிக்கலாம். புதிய பணியிடங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் அதுகுறித்த பரிந்துரைகளை இந்து சமய அறநிலையத்துறை ஆணையரக அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கலாம். பணிவரன்முறைகள் உள்ளிட்ட கோரிக்கைகள் இருந்தாலும் அதையும் உடனடியாக அனுப்பலாம். இது தொடா்பாக தேவையற்ற சிக்கல்கள் ஏற்படுத்தப்படுவது விரும்பத்தக்கதல்ல. வேறு ஏதேனும் தேவையற்ற சிக்கலான பிரச்னைகள் உருவாக்கப்பட்டால் அதற்கு கோயில் நிர்வாக அதிகாரிகளே பொறுப்பாவார்கள். அவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சூழ்நிலைகள் எழுந்தால் அதற்கு இணை ஆணையா்கள் அல்லது உதவி ஆணையா்கள் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும். தேவையற்ற சிக்கலான செய்திகள் உருவாவதற்கு எந்த இடமும் அளிக்க வேண்டாம். இதுகுறித்து கோயில் அலுவலா்களுக்கு உடனடியாக அறிவுறுத்தல்களை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.”

தினக்கூலி அர்ச்சகர் பிரச்சினைவேறு ஏதேனும் தேவையற்ற சிக்கலான பிரச்னைகள் உருவாக்கப்பட்டால் அதற்கு கோயில் நிர்வாக அதிகாரிகளே பொறுப்பாவார்கள்: “தினக்கூலி அர்ச்சகர் பிரச்சினை”யில் வேறு ஏதேனும் தேவையற்ற சிக்கலான பிரச்னைகள் உருவாகும் என்றால் என்னவென்று தெரியவில்லை. ஒருவேளை அந்த போர்வையிலும், ஆட்களை கூட்டி வந்து உள்ளே நுழைத்து விடுவார்களா? அடுத்தது, “தேவையற்ற சிக்கலான செய்திகள் உருவாவதற்கு எந்த இடமும் அளிக்க வேண்டாம்,” என்றால், இதில் என்ன தேவையற்ற சிக்கலான செய்திகள்அவை எப்படி உருவாகும், அவற்றை உருவாக்க யார் இருக்கின்றனர் போன்ற கேள்விகளும் எழும்.  “உருவாவதற்கு எந்த இடமும் அளிக்க வேண்டாம்,”  அத்தகையோர் உள்ளதை ஆணையர் அறிந்துள்ளார் போலும். ஐ.ஏ.எஸ் அதிகாரி இவ்வாறு சொதப்பலாக ஆணையிடுவதிலிருந்தே, இவர் அரசியல்வாதிகள் / ஆட்சியாளர்கள் / சித்தாந்தவாதிகள் சொல்வதைக் கேட்டு நடக்கிறார் என்பதும் தெரிகிறது. சட்டப் படி நடக்கிறது என்றால், சட்டப் படி நடக்காமல் இருக்கும்போது, இவர் தாராளமாக எடுத்துக் காட்டலாம். இதே போல “தினக்கூலி” முறையில் மற்றவர்களை, மற்ற துறையில் ஓய்வு பெற்றவர்களை, மூப்படைந்தவர்களை நியமிக்க முடியுமா?

கோயில்களில் அா்ச்சகா்கள் வயது மூப்பைத் தாண்டியும் தொடா்ந்து பணியாற்றி வரும் பட்சத்தில் அவரை தினக் கூலி அடிப்படையில் தொடா்ந்து அங்கேயே பணியாற்ற அனுமதிக்கலாம்: கோவில் அர்ச்சகர் பணியில் ஓய்வு, மூப்பைத் தாண்டியோர் போன்றவை உள்ளனவா என்று தெரியவில்லை. இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் ஜெ. குமரகுருபரன், ஏதோ கூலிக்கு வேலை செய்யும் தொழில் போன்று அர்ச்சகர் சேவையை மாற்றி இருப்பது அதிர்ச்சியாக உள்ளது. ஏதோ, நாட்கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் போன்று 40-60 வருடங்களாக சேவை செய்து வரும் அர்ச்சகர்களைக் கேவலப் படுத்தும் வகையில் ஆணையிட்டிருப்பது, மிக மோசமாக இருக்கிறது. “கோயில்களில் அா்ச்சகா்கள் வயது மூப்பைத் தாண்டியும் தொடா்ந்து பணியாற்றி வரும் பட்சத்தில் அவரை தினக் கூலி அடிப்படையில் தொடா்ந்து அங்கேயே பணியாற்ற அனுமதிக்கலாம்,” என்றதில், அது அப்பட்டமாக வெளிப்படுகிறது. விடியற்காலையில் எழுந்து, குளித்து, பூஜைக்கு ஏற்பாடு செய்து, காலை 4 மணி, 4 மணி என்று பூஜை செய்து வருபவர்கள், எதையும் பொருட்படுத்தாமல் செய்து வருகின்றனர். இனிமேல், புதியதாக வந்துள்ளவர்கள் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை. அத்தகையோர், வேலை செய்யும் போது, இவர்கள், அவர்களிடம் தினக் கூலிக்கு வேலை செய வேண்டும் என்றால், என்ன அது? இங்கு தான் இந்துவிரோதிகளின் திட்டம் வெளிப்படுகிறது. அந்த புதிய பூஜாரிகளின் நிலையும் புரிந்து கொள்ள முடிகிறது. உண்மையான பூஜை, சேவை என்றால், இத்தகைய, ப்ரித்துக் காட்டும் கீழ்த்தரமான எண்ணங்கள் வராது.

17-08-2021 – முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தது: ஸ்டாலின் கூறியது, “அமைச்சர் தெளிவாக விளக்கம் சொல்லி உள்ளார். அது குறித்து, நான் அதிகம் பேச விரும்பவில்லை. ஆனால், ஒன்றை மட்டும் உறுதியோடு சொல்கிறேன். .வெ.ரா., நெஞ்சிலே தைத்த முள் இது. அந்த முள்ளை எடுக்க வேண்டும் என்பதற்காக, ‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்என, கருணாநிதி சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினார். ஆனால், அது நடைமுறைக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், இப்போது அதை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறோம். அதற்கான பணி ஆணைகளை வழங்கி இருக்கிறோம். அதை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள், எப்படியாவது சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், திட்டமிட்டு, சில காரியங்களை செய்கின்றனர்[3]. கோயில்களில் ஏற்கெனவே பணியிலுள்ள அர்ச்சகர்கள் நீக்கப்பட்டதாகப் புகார் எழுந்தால் அரசு அதில் உரிய நடவடிக்கை எடுக்கும். ஆனால் தேவையில்லாமல், சமூகநீதியைப் பாழ்படுத்தும் வகையில் விஷம பிரசாரம் செய்யப்பட்டுவருகிறது[4]. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்திட்டத்தை சீர்குலைக்க சிலர் இவ்வாறு அவதூறு பரப்பி வருகின்றனர்[5]. சமூக நீதியைப் பாழ்படுத்தும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர்[6]. அமைச்சர் பேசும் போது, ‘சில ஊடகத்தில்என சொன்னார். நான் ஊடகத்தினரை குறை சொல்ல மாட்டேன். ஆனால், அதை பயன்படுத்தி, சமூக வலைதளத்தில் சிலர் திட்டமிட்டு செயல்படுகின்றனர். யாரையும் எந்தப் பணியிலிருந்தும் விடுவித்து, புதிதாக பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை[7]. அப்படி எங்காவது வழங்கப்பட்டிருந்தால், அவர்கள் ஆதாரத்தோடு சொன்னால், அதற்குரிய நடவடிக்கையை அசு நிச்சயமாக எடுக்கும்[8]; அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.எனவே, வேண்டுமென்றே அதை கொச்சைப்படுத்தி, அரசியலுக்காக அல்லது சமூக நீதியை பாழடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், சிலர் திட்டமிட்டு செய்து கொண்டிருப்பதை மக்கள் நன்றாக அறிவர்”.

© வேதபிரகாஷ்

21-08-2021


[1] தினமணி, கோயில்களில் வயது மூப்பைத் தாண்டியோருக்கு தினக் கூலி அடிப்படையில் பணி: இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு, By DIN  |   Published on : 20th August 2021 06:48 AM.

[2]https://www.dinamani.com/tamilnadu/2021/aug/20/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-3683294.html

[3] விகடன், `அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தைச் சீர்குலைக்க அவதூறு பரப்புகின்றனர்’ – ஸ்டாலின், ஜூனியர் விகடன் டீம், Published:17 Aug 2021 9 AMUpdated:17 Aug 2021 2 PM

[4] https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-17-08-2021-just-in-live-updates

[5] கலைஞர் செய்திகள், சமூக நீதியை சீர்குலைக்க அவதூறு பரப்புகின்றனர்; இது உண்மையில்லை” : தெளிவுபடுத்திய முதல்வர் மு..ஸ்டாலின்!, Vignesh Selvaraj, Updated on : 17 August 2021, 01:11 PM

[6] https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/08/17/some-people-trying-to-sabotage-all-caste-priest-scheme-says-cm-mk-stalin

[7] தினமலர், அர்ச்சகர் நியமன விஷயம்: குறைகளைஆதாரத்தோடு சொல்லுங்கள்!, Updated : ஆக 18, 2021  01:28 |  Added : ஆக 17, 2021

[8] https://www.dinamalar.com/news_detail.asp?id=2825317