Posts Tagged ‘கோடி ரூபாய் மோசடி’

எல்லாம் அவன் செயலா? இது எவன் செயல்? வீரமணி கருணாநிதியை கேட்கும் கேள்வி!

ஓகஸ்ட்8, 2010

எல்லாம் அவன் செயலா? இது எவன் செயல்?வீரமணி கருணாநிதியை கேட்கும் கேள்வி!
நாகை: திருமருகல் கோவிலில் பல லட்சம் மதிப்புள்ள 3 கடவுள் சிலைகள் கடத்தல்

http://www.viduthalai.periyar.org.in/20100808/news08.html

தமிழகத்தில் நாத்திக அரசுதான் கோவில் நிர்வாகத்தை நடத்தி வருகிறது என்பது தெரிந்த விஷயமே.

ஒவ்வொரு நாளைக்கும் ஒரு கோவிலில் திருட்டு முதலியன நடந்து வருவதும் தெரிந்த விஷயம்தான்.

மேலும் கருணாநிதியே கடவுள் என்று ஆஸ்தான கவிஞர்கள், வித்வான்கள், புலவர்கள் எல்லோரும் ஏற்கெனவே அறிவித்தாகி விட்டது.

அரசு துறையில் கருணாநிதியை சிவனான உருவகப்படுத்தி விளம்பரங்களும் கொடுத்தாகி விட்டது.

ஒருவர் கருணாநிதிக்குக் கோவிலையும் கட்டிவிட்டார்.

தமிழகத்தை கருணை பூமியாக மாற்றப் போவதாக வேறு சொல்லிவிட்டார் கருணாநிதி!

இந்நிலையில், ‘எல்லாம் அவன் செயல்”, என்று வீரமணி கிண்டல் அடிக்கிறாரா, அல்லது, “நாங்கள் சொல்லியதை செய்வோம், செய்வதைச் சொல்வோம்”, என்ற பாணியில், திகவினரே அறைகூவல் விடுகிறார்களா?

கருணாநிதி சொல்வது போல, பெரியார்தான் இதற்கு பதில் சொல்லவேண்டும்!

திருமருகல், ஆக.8- நாகை மாவட்டம், திரு மருகல் ஒன்றியம், திருப்பு களூர் கிராமத்தில் அமைந் துள்ளது அக்னீஸ்வரர் கோயில். இக்கோயிலில் பல்வேறு மாவட்டங் களிலிருந்தும் வெளி மாநிலங்களி லிருந்தும் சில நேரங்களில் வெளி நாட்டினரும் இக்கோ யிலுக்கு வந்து செங்கற் களை வைத்து வாஸ்து பூஜை என்ற பெயரில் பூசைகள் நடத்தி அந்த செங்கற்களை சாக்கில் வைத்து கட்டி எடுத்துச் செல்வது வழக்கமாம்.

மேலும் இக்கோயிலில் நேற்று (7.8.2010) மகா பிரதோஷம் என்ற பெயரில் பூஜைகள் நடந்த தாம். இந் நிலையில் இக்கோயி லில் கடந்த 2003 ஆம் ஆண்டு கோயில் வளாகத் திலேயே கண் டெடுக்கப் பட்ட 27 அய்ம் பொன் சிலைகள் இரும்புக் கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டு கோயில் நிருவாகத்தினரால் பாது காக்கப்பட்டு வருகிறது.

இச்சிலைகளில் மூன்று சிலைகள் மட்டும் திடீ ரென காணாமல் போய் விட்டதாக கோயில் நிரு வாகம் கூறுகிறது. இந்தச் சிலைகளின் மதிப்பு பல லட்சம் இருக்குமென கூறப்படுகிறது. இதுபற்றி இப்பகுதியில் பொது மக்கள் கூறும் போது இக்கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பாக வைத்திருக்கும் இடம் இரும்பு கம்பிகளால் தடுக்கப்பட்டு இரண்டு பூட்டுகள் கோயில் நிரு வாகத்தால் போடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வரு கிறது. இந்த கோயில் பூட்டு கள் உடைக்கப்பட்டோ, அல்லது சேதப்படுத்தப் பட்டோ இல்லையாம். ஆனால் இரண்டு பூட்டு களும் எவ்வித சேதாரமும் இல்லாமல் பூட்டப்பட்ட நிலையி லேயே உள்ளதாம். எனவே இந்த சாமி சிலை கள் வெளியூரில் இருந்து எவரேனும் எடுத் திருக்க முடியாது என்றும், கோயில் நிருவாகமே இதனை செய்துவிட்டு திருட்டுப் போனதாக அறிவிக்கிறது எனவும் பொது மக்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக திட்டச்சேரி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவனின்றி ஓரணுவும் அசையாதே அப்படி யானால் இந்த 3 பகவான் களையும் கடத்தியது எவன் செயல்?

Advertisements

அரசுக்கு சார்பாக அளிக்கப்படும் தீர்ப்புகளில் மக்களுக்குத் தீர்ப்பு கிடைக்குமா?

ஜூன்8, 2010

அரசுக்கு சார்பாக அளிக்கப்படும் தீர்ப்புகளில் மக்களுக்குத் தீர்ப்பு கிடைக்குமா?

இன்றைய சட்டத்துறை 90% மேலாக ஆளும் அரசியலின் ஆதிக்கத்தில் இருந்து வருகிறது. நீதிபதிகள், வழக்கறிஞகள், சட்ட அங்கத்தினர்கள், அரசுதரப்பு வக்கீல்கள், டிரிபுயூனல் அங்கத்தினர்கள், உறுப்பினர்கள்………………என எல்லொருமே அரசியல் ரீதியில், இந்த கட்சி சார்பாக இத்தனை பேர்கள் என்று பங்கீட்டின் கீழ் நியமிக்கப் படுகிறார்கள். வெளிப்படையாக, அரசியல் சார்பான, ஜாதிகள் சார்பாக, ஏன் மத சார்பாக, வழக்கறிஞர்கள் சங்கங்களை வைத்துக் கொண்டு அரசியல் நடத்துகிறார்கள். பிறகு அத்தகைஅவர்களிடமிருந்தி பாரபட்சமின்றி தீர்ப்புகளை எதிர்பார்க்க முடியுமா?

கோவில் சொத்தை பாதுகாக்க நடவடிக்கை:அரசின் பதில் மனுவில் ஐகோர்ட் திருப்தி
பதிவு செய்த நாள் : ஜூன் 08,2010,00:06 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=14556

கோவில்களின் பாதுகாப்பிற்காக தொடரப்பட்ட வழக்கு: சென்னை:கோவில் சொத்துக்களை பாதுகாக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளில் சென்னை ஐகோர்ட் திருப்தியடைந்துள்ளது. இதுதொடர்பாக, வக்கீல் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.சென்னை ஐகோர்ட் வக்கீல் ஞானேஸ்வரன் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் உள்ள கோவில் சிலைகள், நகைகள், விலைமதிப்புள்ள சொத்துக்கள் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு அளிக்க தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

மனுவுக்கு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு:

  1. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 38 ஆயிரத்து 465 மத அமைப்புகள் உள்ளன.
  2. கோவில்களை புனரமைக்கவும், பூஜை வழிபாடுகளுக்கும், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும் நிதி உதவி வழங்குவதற்கு பல்வேறு நலத் திட்டங்களை அரசு வகுத்துள்ளது.
  3. கோவில் சிலைகள், நகைகள் மற்றும் விலைமதிப்புடைய சொத்துக்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
  4. சொத்துக்களை பாதுகாக்க, தமிழகம் முழுவதும் 17 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
  5. ஆயிரம் போலீசார், 3,000 முன்னாள் ராணுவத்தினர் அடங்கிய கோவில் பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டுள்ளது.
  6. வருமானம் வரும் கோவில்களில் இருந்து நிதி பெற்று, ஐந்து கோடி ரூபாய்க்கு நிதியம் உருவாக்கப்பட்டு, அதில் இருந்து கிடைக்கும் வட்டிப் பணத்தில், குறைந்த வருவாய் உள்ள கோவில்களில் எச்சரிக்கை கருவிகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  7. போதிய நிதி உள்ள பெரிய கோவில்களில் பாதுகாப்பு நடவடிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளது.
  8. கண்காணிப்பு “டிவி’ , எச்சரிக்கை கருவிகள், பாதுகாப்பு பெட்டக வசதி என, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
  9. பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்த, போலீசாருடன், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆலோசித்து வருகின்றனர்.
  10. உண்டியல்கள், அசைக்க முடியாமல் நிரந்தரமாக இருக்கும் வகையில் பொருத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  11. கோவில் நகைகள், சொத்துக்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளன.
  12. கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
  13. வருமானத்தைப் பெருக்க வணிக கட்டடங்களை கட்டுவதற்கு நிதி உதவியும் வழங்கப்படுகிறது.

இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், நாங்கள் திருப்தியடைகிறோம்: இம்மனுவை விசாரித்த தற்காலிக தலைமை நீதிபதி தர்மாராவ், நீதிபதி சிவஞானம் அடங்கிய “முதல் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவில், “இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், நாங்கள் திருப்தியடைகிறோம். கோவில்களில் பாதுகாப்பு சாதனங்கள் வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி, பதில் மனுவில் விளக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தனை பாதுகாப்பு இருக்கும் போது, எப்படி இத்தனை கொலை, கொள்ளை, திருட்டுகள்……….எல்லாம் நடக்கின்றன? நீதிபதி ஏதோ வழக்கை விசாரிக்க வேண்டுமே என்ற போக்கில் விசாரித்து, அதனை தள்ளூபடி செய்யவேண்டும் என்ற முன்-தீர்மானத்தின்படியே தள்ளுபடி செய்திருப்பது தெரிகிறது. நாளிதழ்களில் இதைப் பற்றிய செய்திகள் தொடர்ந்து வருகின்றன. அந்நிலையில், அவையெல்லாம் வழக்கறிஞர்களுக்கு, நீதிபதிகளுக்குத் தெரியாமல் இருந்திருக்க முடியாது. ஆகவே இத்தகைய ஏனோ-தானோ விசாரணைகள், தீர்ப்புகள் மக்களின் மனங்களில் திருப்தியை ஏற்படுத்தாது.

நீதிபதிகளுக்குத் திருப்தி என்பது இல்லை, மக்கள் திருப்தியடையவேண்டும்: நாத்திக அரசின்கீழ், இந்து அறநிலையத் துறை இருக்கிறது. தொடர்ந்து இந்திக்களை இழிவு படுத்தும் ஒரு நபர் முதலமைச்சராக இருக்கிறார். இதைப் பற்றிய வழக்குகளே (இந்துக்களை தூஷித்து பேசியதற்கான வழக்குகள்), நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. அந்நிலையில், அத்தகைஅ அரசு நியமிக்கப் படும் நீதிபதிகள் அரசிற்கு எதிராக எந்த தீர்ப்பும் அளிக்கப் படக்கூடாது, என்று அறிவுறுத்தப் பட்டிருந்தால், மக்களுக்கு எப்படி நியாயமான தீர்ப்பு கிடைக்கும்.

போலி ஆவணங்கள் தயாரித்து கோயில் நிலம் விற்பனை : 3.14 கோடி ரூபாய் மோசடி!

மார்ச்3, 2010
போலி ஆவணங்கள் தயாரித்து கோயில் நிலம் விற்பனை : 3.14 கோடி ரூபாய் மோசடி
மார்ச் 03,2010,00:00  IST

மதுரை : மதுரை வண்டியூரில், அழகர்கோயிலுக்கு சொந்தமான நிலத்திற்கு, போலி ஆவணங்கள் தயார் செய்து, 3.14 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி போல்பேட்டை பகுதியை சேர்ந்தவர் எடிசன். இவரிடம் மதுரை அண்ணாநகரை சேர்ந்த கே.ராமர், தூத்துக்குடி கீழசண்முகநாதபுரத்தை சேர்ந்த அந்தோணி, மதுரை கூடல்நகர் தட்சணாமூர்த்தி, எச்.எம்.எஸ்.,காலனியை சேர்ந்த முத்துசாமி ஆகியோர், வண்டியூரில் சில பகுதிகளை காட்டி 3.14 கோடி ரூபாய்க்கு நிலம் விற்பனை செய்துள்ளனர். இந்த நிலம் அழகர்கோயிலுக்கு சொந்தமானது எனத் தெரிந்ததும், கொடுத்த பணத்தை எடிசன் திருப்பி கேட்டுள்ளார். பணத்தை கொடுக்காததால், தன்னை ஏமாற்றியதாக, மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் எடிசன் புகார் செய்தார். போலீசார் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து, கே.ராமரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மூன்று பேரையும் தேடுகின்றனர்.