தமிழக கோவில்களில் பூஜை கட்டணம் ஐந்து மடங்கு உயர்வு
தமிழக கோவில்களில் வருமானத்தை பெருக்க மக்களிடம் எதற்கு கொள்ளை? தமிழக கோவில்களில், வருமானத்தை பெருக்க, பூஜை கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தமிழக கோவில்களில், இரண்டு ரூபாயாக இருந்த அர்ச்சனை கட்டணம், ஜூலை 9ம் தேதி முதல் ஐந்து ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சகஸ்ரநாம அர்ச்சனை, புதுக்கணக்கு பூஜை உள்ளிட்ட அனைத்து பூஜை கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளன.
பூஜை கட்டணம் உயர்வு செய்தி இந்து முன்னணி மூலம் வெளியிடுவது ஏன்? எல்லாவற்றிற்கும் கருணாநிதி முந்திக் கொண்டு வரும் போது, இதற்கு மட்டும் ஏன் இந்து முன்னணி வரவேண்டும்? திமுகவிற்கும், இந்து முன்னணிக்கும் ஏதாவது உடன்படிக்கை ஏற்பட்டு விட்டதா? நிலுவையில் இருக்கின்ற வாடகை, குத்தகை……………….இத்யாதி பாக்கிகளை வசூல் செய்தாலே கோடிகள் கிடைக்கும். அப்படியிருக்கும்போது, சாதாரண மக்களை சுரண்ட இப்படி கருணாநிதி இறங்கியுள்ளது, நிச்சயமாக இந்துக்களுக்கு தொந்தரவு செய்யத்தான் என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை.
இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் பூசப்பன் கூறியதாவது: அர்ச்சனை கட்டணம் இரண்டு ரூபாயிலிருந்து ஐந்து ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஐந்து ரூபாயாக இருந்த இரு சக்கர வாகன பூஜை டிக்கெட் 30, 10 ரூபாயாக இருந்த நான்கு சக்கர வாகன பூஜை 50, 15 ரூபாயாக இருந்த சகஸ்ரநாம அர்ச்சனை 50, 25 ரூபாயாக இருந்த புது கணக்கு பூஜை 100 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அறிவிப்பு வெளியிடாமல் திடீரென கட்டணம் ஐந்து மடங்கு உயர்த்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. மீண்டும் பழைய கட்டணத்தையே நிர்ணயிக்க வேண்டும். இது தொடர்பாக விரைவில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு பூசப்பன் கூறினார்.
தமிழக கோவில்களில் பூஜை கட்டணம் 5 மடங்கு உயர்வு, ஆகஸ்ட் 07,2010
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=56381&Print=1