இந்து அறநிலையத்துறைக்குப் பிறகு குடிசை மாற்று வாரியம் மூலம் கோவில் நிலங்களை ஆக்கிரமிக்க முயலும் நாத்திக அரசு!

இந்து அறநிலையத்துறைக்குப் பிறகு குடிசைமாற்றுவாரியம் மூலம் கோவில் நிலங்களை ஆக்கிரமிக்க முயலும் நாத்திக அரசு!

 

கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை இந்து அறநிலையத்துறை எப்படி சட்டத்திற்குப் புறம்பாக பட்டப் போட்டு விற்கப்பட்டது[1] என்பதை முன்பு எடுத்துக் காட்டப்பட்டது[2].  கோவில் நிலங்களை குத்தகைக்கு எடுத்து அனுபவிக்கின்றவர்களுக்கும் தாங்கள் கோவில் நிலங்களை அனுபவுக்கிறோம் என்ற எண்ணம் இல்லாமல், ஏதோ வாடகைக்கு விட்டது- வாடகைக்கு எடுத்தது, குத்தகைக்கு விட்டது- குத்தகைக்கு எடுத்தது, என்ற ரீதியில் வழக்குகளைத் தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்[3]. இத்தகைய வழக்குகள் ஏராளமாக இருக்கின்றன[4]. உதாரணத்திற்கு சில கொடுக்கப்படுகின்றன:

குத்தகைக்கு எடுத்தவர் குத்தகைக்கு கொடுத்த கோவில் காரணத்திற்காக கொடுக்கப் பட்டது நிலத்தின் அளவு
the Lions Club of South Madras represented by its President[5] Sri Marundeeswarar Temple, Thiruvanmiyur, Saidapet Taluk for setting up a charitable dispensary. lease of ten grounds of land of the temple
B.Shaji[6] Sree Pravaraswamy Devasthanam land of the temple
T.Rajendran illegally[7], encroached upon the suit property and he has been in enjoyment of the said property from the year 1980. Arulmigu Thiruneelakandeswara Swami Temple Patta No.166, is a vacant land.
Abdul Kadir and seven others Arulmigu Vedaraniyeswaraswamy Temple at Tiruthuraipoondi, Nagapattinam District. construction of a Mosque in the land belonging to Arulmigu Vedaraniyeswaraswamy Temple Survey No.544/5 (New Survey No.881/5)

இதையெல்லாம் கூர்ந்து படிப்பவர்களுக்கு, நிச்சயமாக என்ன தெரிகிறது என்றால், நாத்திக அரசு, இந்து மதத்திற்கு எதிராக உள்ள திராவிட அரசு, திட்டமிட்டே இப்படி கோவில் நிலங்களை தாரை வார்த்துக் கொடுத்து, கோடிகளை அள்ளியுள்ளது என்றுதான் சந்தேகிக்க வேண்டியுள்ளது. இதில்இந்து அறநிலையத்துறைக்குப் பிறகு குடிசை மாற்று வாரியம் மூலம் கோவில் நிலங்களை ஆக்கிரமிக்க முயல்கிறது போலும். ஒருவேளை அப்படி, அந்நிலத்தைக் கையகப்படுத்திக் கொண்டால், கிருத்துவ-முஸ்லீம்களுக்கு விற்று பிரச்சினையைக் கிலப்புவார்கள் என்பது திண்ணம்.

கோவில் நிலத்தை முஸ்லீம்கள் ஆக்கிரமித்துக் கொண்டு மசூதி கட்ட முயன்ற வழக்கு: K.Panneerselvam vs The Commissioner on 12 October, 2009[8]: இதில் கோவில் நிலத்தை முஸ்லீம்கள் ஆக்கிரமித்துக் கொண்டு, அங்கு மசூதி கட்ட ஆரம்பித்தபோது, வழக்கு போட்டது, வேடிக்கையாக உள்ளது. செற வருடம் இந்த தீர்ப்பு வெளிவந்தாலும், ஊடகங்களில் அறிவிக்கப்படாமல் இருப்பது அதைவிட வேடிக்கையான விஷயம் தான். 1982ம் வருடம், முஸ்லீம்கள் ரௌடிகளுடன் கோவில் நிலத்தில் அடவாடியாக நுழைந்து 16 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டு, மசூதி கட்ட முயன்றுள்ளனர். தடை விதித்தப் பிறகும் ஜைலானி ராவுத்தர் என்பவர், ஆக்கிரமிப்பு செய்த நிலத்தைச் சுற்றி சுவர் எழுப்ப முயற்ச்சித்துள்ளார்[9].

According to the petitioner, the temple is surrounded by five temples, viz., Mariamman Temple, Angalaparameshwari Temple, Kali Amman Temple, Throupathiamman Temple and Ayyanaar Temple. In the year 1982, some persons belonging to Muslim community, along with some rowdy elements, trespassed into the property, measuring about 19 cents, belonging to the Temple and they tried to construct a Mosque. Therefore, a suit in O.S.No.221 of 1982 was preferred by the trustee of the Temple before the District Munsif, Tiruthuraipoondi, for declaration and permanent injunction. The learned Judge, by judgment and decree dated 29.9.1986, granted permanent injunction in favour of the Temple observing that since the property is surrounded by five temples, there would be processions of idols of the said Temples during festival period and if the Mosque is constructed in the disputed area, then it would create problems to the surrounding Temples.

சுமார் 18 வருடங்களுக்குப் பிறகு, இவ்வாறான தீர்ப்பு வந்துள்ளது. அப்பொழுது கூட, தீர்ப்பில், கோவில் நிலத்தை முஸ்லீம்கள் ஆக்கிரமித்து உள்ளனர் என்று ஒரு இடத்தில் கூட இல்லாமல், “ஆக்கிரமிப்பாளர்கள்” என்ரு பொதுவாகத்தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

As there is a provision for removal of the act of encroachment made by group of persons on the land belonging to charitable religious institutions, we are of the view that the competent Joint Commissioner and the Commissioner of the H.R. & C.E. Department, shall take appropriate steps for removal of the encroachments/encroachers/group of persons from the land, which belongs to the Temple, in accordance with law aforesaid provisions of law. The officials of the H.R. & C.E. Department are further directed to obtain police protection to the Temple and its authorities, if required.

மேலும் கேவலம் என்னவென்றால், அந்த ஆக்கிரமிப்பு முஸ்லீம்களின் மீது நடவடிக்கை எடுக்க ஆணையிடாமல், தேவைப்பட்டால், போலீஸ் துணையுடன், அவர்களை வெளியேற்றுமாறு சொல்லப்பட்டுள்ளது!

கோவில்நிலத்தில்குறுக்கிடகுடிசைமாற்றுவாரியத்திற்குதடை[10]: கொளத்தூர் முத்துமாரியம்மன் கோவில் வசம் உள்ள நிலத்தில், குடிசை மாற்று வாரியம் குறுக்கிட சென்னை சிவில் கோர்ட் தடை விதித்துள்ளது. கொளத்தூர், ஜி.கே.எம்.காலனி சத்தியவாணிமுத்து தெருவில், முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலைச் சுற்றி, காலி இடங்கள் உள்ளன. இந்த இடத்தை பயன்படுத்த, குடிசை மாற்று வாரியம் தடை விதித்தது. மேலும், அந்த இடத்தை எடுத்துக் கொள்ளப் போவதாகவும் அறிவித்தது. இந்த அறிவிப்பை எதிர்த்து, முத்துமாரியம்மன் திருக்கோவில் குழுத் தலைவர் குமாரசாமி ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

குடிசைமாற்றுவாரியஅதிகாரிகளின் அடாவடித்தனம்: அதில் அவர் கூறியிருப்பதாவது: ஜி.கே.எம்.காலனி சத்தியவாணிமுத்து தெருவில் முத்துமாரியம்மன் கோவில், 1972ம் ஆண்டில் புதிதாக கட்டப்பட்டது. பக்தர்கள் தேர்ந்தெடுக்கும் குழுவானது, கோவிலை நிர்வகிக்கிறது. கோவிலைச் சுற்றியுள்ள காலியிடங்களை, முன்னாள் ராணுவத்தினர் சங்கத்திற்கு அரசு ஒதுக்கியுள்ளது. கோவில் வழிபாட்டுக்கு இந்த சங்கம் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. கோவில் அருகில் உள்ள இடத்தில், விழாக்கள் நடத்தப்படும். இந்நிலையில், இந்த நிலத்தை கோவில் நிர்வாகம் பயன்படுத்தக் கூடாது என்றும், இடத்தை எடுத்துக் கொள்வதாகவும், குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். கோவிலின் வடக்குப் புறம், பெரிய குளம் ஒன்று உள்ளது.

கோவில்நடவடிக்கைகளில்குடிசைமாற்றுவாரியஅதிகாரிகள்குறுக்கிடமுயற்சிக்கின்றனர்: கோவில் வசம் உள்ள நிலத்தில், கூழ்வார்த்தல், பவுர்ணமி பூஜை, பால் குடம் போன்ற சமய விழாக்கள் நடத்தப்படும். செவ்வாய், வெள்ளி கிழமைகளில் பொங்கல் வைத்து பெண்கள் வழிபடுவர். நிலத்தை குடிசை மாற்று வாரியம் எடுத்துக் கொண்டால், அங்கு கோவில் விழாக்கள் நடத்த முடியாமல் போகும். நிலத்தை தானமாகவோ, விற்பனைக்காகவோ அளிக்குமாறு குடிசை மாற்று வாரியத்திடம் முறையிட்டோம். அதற்கான கடிதத்தை நேரில் அளித்தோம். இதில் இன்னும் முடிவெடுக்கவில்லை. கோவில் நடவடிக்கைகளில் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் குறுக்கிட முயற்சிக்கின்றனர். எனவே, கோவில் வசம் உள்ள இடத்தில் குறுக்கிட குடிசை மாற்று வாரியத்துக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

குடிசைமாற்றுவாரியம்சார்பில்பதில்மனுதாக்கல்செய்யவில்லை: மனுவை முதலாவது உதவி சிவில் கோர்ட் விசாரித்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ்.பிரபாகரன் ஆஜரானார். மனுவை விசாரித்த சிவில் கோர்ட், “குடிசை மாற்று வாரியம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, மனு ஏற்கப்படுகிறது’ என உத்தரவிட்டது. அதாவது, பிரச்சினை ஆரம்பித்தவர்கள் கோர்ட்டிற்கு வரவில்லை மற்றும் குடிசை மாற்று வாரியம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இது நாத்திக அரசின், திராவிட அரசியல்வாதிகளின் யுக்தியே ஆகும். நீதிமன்றங்கலுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம் என்று வீராப்பு பேசுவது, ஆனால், வழக்கு என்றால், ஓடி ஒளிவது, பெரியாரின் இயல்பாகவே இருந்தது[11].

வேதபிரகாஷ்

10-09-2010


[1] http://dravidianatheism.wordpress.com/2008/09/02/tenants-of-mutt-and-temple-lands-seek-ownership-rights-the-tn-government-scam-to-grab-the-temple-lands/

[2] http://dravidianatheism.wordpress.com/category/temple-land-grabbing/

[3] R.Vinayaga Sengunder vs The Executive Officer on 31 July, 2009, http://indiankanoon.org/doc/743500/

[4] L.Kulasekaran vs The Government Of Tamil Nadu on 7 January, 2010; http://indiankanoon.org/doc/731782/

[5] R.Raghunathan vs The Executive Officer on 21 April, 2005 ; http://indiankanoon.org/doc/1409843/

[6] B.Shaji vs Sree Pravaraswamy Devasthanam on 19 April, 2010; http://indiankanoon.org/doc/656369/

[7] Arulmigu Thiruneelakandeswara vs T.Rajendran on 16 November, 2009; http://indiankanoon.org/doc/1419300/

[8] K.Panneerselvam vs The Commissioner on 12 October, 2009 ; http://indiankanoon.org/doc/1799401/

[9] Subsequently, one Jailani Rowthar, the 5th defendant in O.S.No.221 of 1982, made attempts to construct a compound wall in the above site, in spite of an order of injunction.

[10] தினமலர், கோவில்நிலத்தில்குறுக்கிடகுடிசைமாற்றுவாரியத்திற்குதடை, செப்டம்பர் 10, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=81635

[11] S. Veerabadran Chettiar vs E. V. Ramaswami Naicker & Others on 25 August, 1958; http://indiankanoon.org/doc/165707/ http://vedaprakash.indiainteracts.in/2008/08/09/old-judgments-and-new-thoughts-in-the-present-context-s-veerabadran-chettiar-vs-e-v-ramaswami-naicker-others/

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , ,

10 பதில்கள் to “இந்து அறநிலையத்துறைக்குப் பிறகு குடிசை மாற்று வாரியம் மூலம் கோவில் நிலங்களை ஆக்கிரமிக்க முயலும் நாத்திக அரசு!”

  1. முறைகேடாக குத்தகைக்கு விடப்பட்ட கோவில் நிலங்கள் கையகப்படுத்தப்படும்! « நாத்திகமும்-ஆலயநிர Says:

    […] [12] https://atheismtemples.wordpress.com/2010/09/10/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%… […]

  2. முறைகேடாக குத்தகைக்கு விடப்பட்ட கோவில் நிலங்கள் கையகப்படுத்தப்படும்! « நாத்திகமும்-ஆலயநிர Says:

    […] [12] https://atheismtemples.wordpress.com/2010/09/10/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%… […]

  3. கோவில் நிலங்களை இனி விற்பதில்லை: இந்து அறநிலையத்துறை முடிவு! « நாத்திகமும்-ஆலயநிர்வாகமும் Says:

    […] https://atheismtemples.wordpress.com/2010/09/10/atheist-rulers-encroach-temple-lands-through-slum-cle… […]

  4. S. K. Ambalavanan Says:

    The atheist temple administration has been only aiding and abetting the temple land grabbers.

    The HR&CE Board dilutes the legal provisions so that not only Hindu cheats and frauds, but also Muslim and Christian rogues to grab the temple-mutt properties and legalize such temple land grabbing.

    It is ironical that these gangs have belief in their respective gods.

  5. தமிழகத்தில் தொடரும் கோவில் கொள்ளைகள் – தாலிகள் அறுக்கப்படுகின்றன, காரணம், பின்னணி என்ன? « நாத Says:

    […] [2] https://atheismtemples.wordpress.com/2010/09/10/atheist-rulers-encroach-temple-lands-through-slum-cle… […]

  6. தமிழகத்தில் தொடரும் கோவில் கொள்ளைகள் – தாலிகள் அறுக்கப்படுகின்றன, காரணம், பின்னணி என்ன? « நாத Says:

    […] [2] https://atheismtemples.wordpress.com/2010/09/10/atheist-rulers-encroach-temple-lands-through-slum-cle… […]

  7. தமிழகத்தில் தொடரும் கோவில் கொள்ளைகள் – தாலிகள் அறுக்கப்படுகின்றன, காரணம், பின்னணி என்ன? « நாத Says:

    […] [2] https://atheismtemples.wordpress.com/2010/09/10/atheist-rulers-encroach-temple-lands-through-slum-cle… […]

  8. தமிழகத்தில் தொடரும் கோவில் கொள்ளைகள் – தாலிகள் அறுக்கப்படுகின்றன, காரணம், பின்னணி என்ன? « நாத Says:

    […] [2] https://atheismtemples.wordpress.com/2010/09/10/atheist-rulers-encroach-temple-lands-through-slum-cle… […]

  9. தமிழகத்தில் தொடரும் கோவில் கொள்ளைகள் – தாலிகள் அறுக்கப்படுகின்றன, காரணம், பின்னணி என்ன? « நாத Says:

    […] [2] https://atheismtemples.wordpress.com/2010/09/10/atheist-rulers-encroach-temple-lands-through-slum-cle… […]

  10. கோவில்குத்தகை, வாடகைபாக்கி: திராவிடக்கொள்ளை தொடர்கிறதா? « நாத்திகமும்-ஆலயநிர்வாகமும் Says:

    […] https://atheismtemples.wordpress.com/2010/09/10/atheist-rulers-encroach-temple-lands-through-slum-cle… […]

பின்னூட்டமொன்றை இடுக