தமிழகத்தில் ஒரு நாளைக்கு ஒரு கோவிலில் கலசம், நகை, பணம் முதலியவை கொள்ளையடிக்கப்படுகின்றன!

தமிழகத்தில் ஒரு நாளைக்கு ஒரு கோவிலில் கலசம், நகை, பணம் முதலியவை கொள்ளையடிக்கப்படுகின்றன

 

நாத்திக ஆட்சியில் நடக்கும் இவை திட்டமிட்ட நடப்பைவையா? நாத்திகர்கள் வளர்ந்துள்ளதால், இப்படி கோவில் நகை மற்றும் விலையுயர்ந்த பொருள் எதுவாக இருந்தாலும், திருடுவது, கொள்ளயடிப்பது என்பது தினம்-தினம் நடக்க்கும் திழாலாகி விட்டது. அவற்றில் குறிப்பிட்ட அமைப்பு, முறை காணப்படுவதால், அத்தகைய கொள்ளையர்கள் திட்டமிட்டு செய்கிறார்களா என்ற சந்தேகம் எழுகின்றது.

  1. கோவில் ஆட்களே சம்பந்தப்படுவது. இவர்கள் எல்லாமே ஆளும் கட்சிக்க்காரர்களாக இருக்கின்றனர், அல்லது உள்ளூர் எம்.எல்,ஏ, எம்.பி, எம்.எல்.சி, வட்டச்செயலாளர்………….போன்ற நிலையில் உள்ளனர்.
  2. அறநிலையத்துறை ஆட்களே ஈடுபடுகின்றனர் / சம்பந்தப் பட்டுள்ளனர்.
  3. திருடியவர்களே, மறுபடியும் திருடுகின்றனர்.
  4. புதியதாக கும்பாபிஷேகம் நடந்தவுடன் திருடப்படுகின்றது.
  5. புதியதாகப் புரளிக் கிளப்பிவிட்டுத் திருடுகின்றனர்.
  6. உண்டி எண்ணப்படுகின்ற ஒரு-சில நாட்களுக்கு முன்பு உண்டியல் உடைக்கப் பட்டுத் திருடப் படுகிறது.
  7. காவலாளி இல்லாத கோவிலாகத் தேர்ந்தெடுக்கப்படுவது.
  8. உண்மை நகைகளை எடுத்துவிட்டு, பொலிநகைகளை வைப்பது.
  9. அம்மன் தாலிகளை, நகைகளைத் திருடுகின்ற கூட்டம் – பொதுவாக, கிராமம், நகர்புறங்களில் முன்னரெல்லாம், அம்மன் கோவிலில் எந்தர்த் திருடனும் கை வைக்க மாட்டான். ஆனால், இப்பொழுது அதிகமாவதால், குறிப்பிட்டக் கூட்டம் அல்லது அத்தகைய மனப்பாங்குள்ள ஆட்கள் / கூட்டம் ஈடுபடுவது தெரிகிறது.

10.  சில நேரங்களில் கவலாளியைக் கொல்லவும் தயுஅங்குவதில்லை. இது திட்டம் போட்டு செய்யப்படும் கொலை, கொள்ளை என்றாகிறது.

 

புதுக்கோட்டை அருகே கோவில் உண்டியல் உடைத்து கொள்ளை (ஜூலை 21,2010)[1]: புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் பழமை வாய்ந்த பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு நாள்தோறும் மூன்று கால பூஜைகள் நடக்கிறது. இதில், இலுப்பூர் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமப்பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசிப்பது வழக்கம். நேற்றுமுன்தினம் இரவு கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கருவறை முன்பிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கோவில் அர்ச்சகர் அய்யாவு கொடுத்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்துள்ள இலுப்பூர் போலீஸார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இரண்டு கோவில்களில் தங்கம், வெள்ளி காணவில்லை
கோவில் நிருவாக அதிகாரி இடை நீக்கம்
[2]: சேலம், ஜூலை 21_ சேலத்தில் 2 கோவில்களில் தங்கம்வெள்ளி காணாமல்போன பிரச் சினையில் எல்லைப் பிடாரியம்மன் கோவில் நிருவாக அதிகாரியை தற்காலிக பணி நீக்கம் செய்து மாநில இந்து சமய அற நிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டார். சேலம் மாநகரில் செரிசாலையில் உள்ள எல்லைப்பிடாரியம்மன் கோவில், சின்னக்கடை வீதியில் உள்ள சின்னமாரியம்மன் கோவில், அயோத்தியாபட்டணம் ராமர் கோவில் உள்பட 6 கோவில்களுக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் நிருவாக அதிகாரியாக சந்திரபிரகாஷ் இருந்து வருகிறார். எல்லைப்பிடாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் உண்டியல் மூலம் காணிக்கையாக கொடுக்கும் தங்கம், வெள்ளி போன்றவை வங்கி லாக்கரில் வைத்து பாதுக்காக்கப்படுவது வழக்கம். அதற்கான சாவி கோவில் நிருவாக அதிகாரி வசம் இருப்பது வழக்கம். இந்த நிலையில் கோவில் நிருவாக அதிகாரி மற்றும் அறங்காவலர் குழுவினர் சமீபத்தில் கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக கொடுத்துள்ள தங்கம் மற்றும் வெள்ளி இனங்களை நகை பதிவேட்டில் உள்ளவாறு சரியாக இருக்கிறதா? என சரிபார்த்தனர். அப்போது எல்லைப்பிடாரி அம்மனுக்கு சொந்தமான 36 பவுன் தங்கம் மற்றும் 580 கிராம் வெள்ளி குறைந்தது[3].

சின்ன மாரியம்மன் கோவிலிலும் கொள்ளை: இதுபோல சேலம் சின்னக்கடை வீதியில் உள்ள சின்ன மாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான தங்கம் மற்றும் வெள்ளியை சரி பார்த்தபோது அங்கும் 12 பவுன் தங்கம் காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட உதவி ஆணை யாளர் வரதராஜன் மற்றும் இணை ஆணை யர் ராஜா ஆகியோரிடம் புகார் தெரிவிக்கப்பட் டது. எல்லைப்பிடாரியம்மன் கோவில், சின்ன மாரியம்மன் கோவிலில் உள்ள தங்கம், வெள்ளி காணா மல்போனது குறித்து சேலம் நகர குற்றப்பிரிவு காவல்துறை யில் கோவில் நிருவாக அதி காரியான சந்திரபிரகாஷ் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் காவல் நிலைய ஆய்வாளர் கபிலன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இது தொடர்பாக புகார் கொடுத்த நிருவாக அதிகாரி சந்திரபிரகாஷ் மற்றும் கோவில் நிருவாக அலுவலக உதவியாளர்களிடம் புலன் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தங்கம், வெள்ளியை பாதுகாக்கும் முழு பொறுப்பையும் நிருவாக அதிகாரியே கவனித்து வந்தார் என விசாரணையில் தெரியவந்தது.

கோவில் அதிகாரிகளே உடைந்தையா? காவல்துறையினர் விசாரணை ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் வேளையில், சென்னையில் உள்ள மாநில இந்து அறநிலையத்துறை ஆணையாளர் பி.ஆர்.சம்பத், சேலம் எல்லைப்பிடாரியம்மன் கோவில் நிருவாக அதிகாரி சந்திரபிரகாஷ் மீது துறை சார்பு நடவடிக்கையாக அவரை தற்காலிக நீக்கம் செய்து நேற்று உத்தரவு பிறப்பித்தார்.கோவில் சொத்தான தங்கம், வெள்ளியை பாதுகாக்கும் பொறுப்பில் கவனக்குறைவாக செயல்பட்டதால் இத்தகையை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. அதே வேளையில் பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த தங்கம்வெள்ளி எங்கே? போனது. அதற்கு காரணமானவர்களில் இன்னும் சிலர் இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினரின் புலன் விசாரணையும் தொடர்ந்து நடந்து வருகிறது.

17 Jul 2010 சிவன் கோவிலில் கலசங்கள் திருட்டு பாளையங்கோட்டையை அடுத்த மேலப்பாட்டம் கிராமத்தில் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது.
www.dailythanthi.com/article.asp

 

நெல்லை மாவட்டத்தில் பரபரப்பு 2 கோவில்களின் கோபுர கலசங்கள் கொள்ளை ; மர்மக் கும்பல் கைவரிசை ஜூலை.17, 2010: நெல்லை, ஜூலை. 16- பாளை அருகே உள்ள மேலப்பாட்டம் கிராமத்தில் புகழ்பெற்ற பழமையான சிவன் கோவில் உள்ளது. சுமார் 300 ஆண்டுகளுக்கும் முந்தைய பாரம்பரியமான இந்த கோவிலின் கோபுரத்தில் 3 கும்ப கலசங்கள் இருந்தது. இந்த கோவிலில் அதிக சக்தி இருப்பதால் வேண்டியது நடக்கும் என்று ஏராளமான பொது மக்கள் தினசரி சென்று சாமி தரிசனம் செய்து வந்தனர். பத்மநாபபட்டர் தினமும் பூஜை செய்து பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கி வந்தார்.  நேற்று இரவு பூஜை முடிந்து பத்மநாப பட்டர் கோவிலை சுற்றி வந்து ஆய்வு செய்தார். அப்போது கோவிலின் மேல்புறம் பளபளப்பாக மின்னும் கோபுர கலசம் இல்லாமல் வெறுமையாக காட்சி அளித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கோவில் நிர்வாக அதிகாரி முத்துராமனுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவர் விரைந்து வந்து ஊழியர்கள் மூலம் கோவிலின் மேல் பகுதியில் ஏறி ஆய்வு செய்தார். அப்போது ஒரு மர்மக் கும்பல் கோவில் மேல் ஏறி 3 கோபுர கலசத்தையும் அப்படியே பெயர்த்து எடுத்து கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. இந்த கும்ப கலசத்தின் மதிப்பு தற்போது பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து நிர்வாக அதிகாரி முத்துராமன் பாளை தாலுகா போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், சப்- இன்ஸ் பெக்டர்கள் சண்முகவேல், செந்தட்டியா பிள்ளை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இடிதாக்கிய பழமையான கோபுர கலசம் இரிடியமாக மாறி சக்தி வாய்ந்ததாக மாறிவிடும் என்று புரளி, கொள்ளை: இதுபோல தென்காசி அருகே உள்ள கீழப்புலியூர் குலசேகரநாதர் கோவிலிலும் நேற்று சக்தி வாய்ந்த 1 கோபுர கலசம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் சமீபத்தில்தான் கும்பா பிஷேகம் நடத்தப்பட்டு கோபுர கலசத்துக்கு தங்க முலாம் பூசி உள்ளனர். இந்த நிலையில் இந்த கோபுர கலசமும் கொள்ளை நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மிகவும் பழமையான கோபுர கலசத்தில் அபூர்வ சக்தி இருப்பதாக கருதி இந்த கொள்ளை சம்பவம் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் ஒரு கும்பல் இடிதாக்கிய பழமையான கோபுர கலசம் இரிடியமாக மாறி சக்தி வாய்ந்ததாக மாறிவிடும் என்று பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்டு வந்தது.

இசக்கி அம்மன் கோவில் உண்டியல் கொள்ளை: அந்த கும்பலைச் சேர்ந்த வர்கள் தான் தற்போது கோபுர கலசங்களை கொள்ளை அடித்துச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ராகார்க் மேற்பார்வையில் கோபுர கலச கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. இவர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள தென்னிமலையில் முப்பந்தல் இசக்கி அம்மன் கோவில் உள்ளது. சம்பவத்தன்று இங்கு வழக்கம் போல் பூஜையை முடித்துவிட்டு சென்று விட்டனர். நள்ளிரவு மர்மநபர் அந்த கோவிலுக்குள் புகுந்தான். அங்கு இருந்த உண்டியலை உடைத்து பணத்தை அள்ளியதோடு அம்மனுக்கு வைத்திருந்த சூலாயுதத்தையும் திருடி சென்றுவிட்டான். அதே வேளையில் அருகில் இருந்த உய்க்காட்டு சுடலை கோவிலிலும் உண்டியல் உடைத்து பணம் திருட்டு போனது. இந்த சம்பவங்கள் தொடர்பாக தென்னி மலையை சேர்ந்த வீரபெருமாள் (69), மாரியப் பன் ஆகியோர் நாங்குநேரி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி அருகே 2 கோவில்களில் நகை உண்டியல் கொள்ளை[4] ஜூலை 14, 2010: கும்மிடிப்பூண்டி அடுத்து உள்ளது தம்புரெட்டிபாளையம் இங்கு பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. நேற்று நள்ளிரவு இந்த கோவிலுக்கு வந்த கொள்ளையர்கள் முதலில் பின்பக்கமாக கரு வறையையொட்டி உள்ள சுவரை உடைக்க முயற்சி செய்தனர். அது பலன் அளிக்காததால் கோவிலின் முன்பக்க இரும்பு கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் கோவில் வனா கத்தில் உள்ள பழங்கால ராட்சத மரக்கதவின் பூட்டை உடைத்து கருவறைக்குள் புகுந்தனர். அங்கு அம்மன் கழுத்தில் கிடந்த தாலி சரடு, செயின், காப்பு போன்ற 10 பவுன் நகைகளையும், வெள்ளி பொருட்களையும் அள்ளிச் சென்றனர். இது தவிர கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த ரொக்க பணம் மற்றும் சில்லறை காசுகளை யும் அள்ளிச் சென்றனர்.

நத்தம் கிராமத்தில் எல்லையம்மன் கோவிலும் கொள்ளை: இக்கோவிலின் அருகே 100 மீட்டர் தொலைவில் நத்தம் கிராமத்தில் எல்லையம்மன் கோவில் உள்ளது. இங்கும் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து ரொக்கப்பணம் மற்றும் சில்லறை காசுகளை அள்ளிச் சென்றனர். 2 கோவில்களிலும் கொள்ளை போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும். ஒரே நாள் இரவில் அடுத் தடுத்து 2 அம்மன் கோவில் களில் கொள்ளை போன சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது. கடந்த 2 வருடத்திற்கு முன்னர்தான் தம்பிரெட்டிபாளையம் கிராமத்தில் உள்ள அங் காள பரமேஸ்வரி கோவி லில் கொள்ளை சம்பவம் நடந்தது. அப்போது 13 பவுன் நகையை கொள்ளை போனது குறிப்பிடத் தக்கது. கும்மிடிப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

சோழிங்கநல்லூர் அருகே கோவில் கலசம் கொள்ளை [5]ஜூலை.12, 2010: திருவான்மியூர், ஜூலை. 12- சென்னை சோழிங்கநல் லூர் அடுத்த செம்மஞ்சேரி ராஜீவ் காந்தி சாலை பழத்தோட்டம் பகுதியில் ஸ்ரீநிவாச பெருமாள்கோவில் உள்ளது. நேற்று இரவு 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் ஆட்டோவில் அங்கு வந்தது. அவர்கள் மதில்சுவர் ஏறி குதித்து கோவிலுக்குள் சென்றனர். பின்னர் பூட்டை உடைத்து கோவிலுக்குள் புகுந்தனர்.  அங்கிருந்த கோவில் கலசம், டி.வி.டி.பிளேயர் மற்றும் பொருட்களை கொள்ளையடித்தனர். அத்தனை பொருட்களையும் கோணிப்பையில் கட்டி ஆட்டோவில் ஏற்றினார் கள். பின்னர் மீண்டும் கோவிலுக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது செம்மஞ்சேரி போலீசார் ரோந்து சென்று கொண்டி ருந்தனர். இதனால் கொள்ளை யர்கள் 4 பேரும் மதில்சுவர் ஏறி குதித்து ஆட்டோவில் தப்பினார்கள்.

அய்யனார் கோவிலில் கொள்ளை, ஜூலை. 11, 2010[6]: ஒரத்தநாடு- ஒரத்தநாடு அருகே பெருமங்கல கோவில் கீழையூரில் அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மட்டுமே பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு பூஜை செய்ய வந்தபோது கோவிலில் பொருட்கள் திருட்டு போனதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதில் பூஜை பொருட்கள் மற்றும் குத்து விளக்கு வெண்கல பொருட்கள் என சுமார் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போனது. இதுகுறித்து பாப்பாநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

சூளகிரி அருகே மாரியம்மன் கோவிலில் உண்டியல் உடைத்து கொள்ளை[7] ஓசூர், ஜூலை. 10, 2019 (சனிக்கிழமை): சூளகிரி அருகே உள்ள எலசேப்பள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும், 50-க்கும் மேற்பட்ட பல்லக்கு உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த கோவிலுக்கு சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திரளாக வந்து செல்வார்கள். காணிக்கை பணமும் உண்டியலில் அதிகளவில் சேரும். இந்நிலையில் நேற்று நள்ளிரவு மர்மநபர்கள் யாரோ கோவிலின் உண்டியலை உடைத்து கொள்யைடித்து சென்று விட்டனர். இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதிராம்பட்டினத்தில் துணிகரம் பெருமாள் கோவிலில் நகை கொள்ளை (ஜூன்.26, 2010)[8]:  பட்டுக்கோட்டை, – தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டினம் உள்ளது. இங்கு பிரசித்திபெற்ற ரெங்கநாதர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பூசாரி பூஜையை முடித்து விட்டு பூட்டி விட்டு சென்றார். பின்னர் இன்று காலை வந்து பார்த்த போது கோவிலில் இருந்த பொருட்கள் கொள்ளை போய் இருந்தது.  இதை கண்டு பூசாரி அதிர்ச்சியடைந்தார். கோவில் கருவறை அருகே இருந்த 80 கிலோ எடை கொண்ட வெண்கல விளக்கு, 2 அடி குத்து விளக்கு மற்றும் அம்பாள் கழுத்தில் கிடந்த 1 பவுன் தாலி உள்பட பல பொருட்கள் திருட்டு போய் இருந்தது. இதன் மதிப்பு ரூ. 50 ஆயிரம் ஆகும். இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் ஜெயராமன் அதிராம் பட்டினம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் நாராயணசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அதிராம்பட்டினத்தில் பெருமாள் கோவிலில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவில்கலசம்திருட்டு[9] ஜூன் 16, 2010: அரியலூர்: குழுமூர் பெருமாள் கோவில் கலசத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, குழுமூர் கிராமத்திலுள்ள வரதராஜ பெருமாள் கோவிலின் தாயார் சன்னதியிலுள்ள கோபுர கலசம் திருட்டு போயுள்ளது. இரண்டடி உயரமும், மூன்றரை கிலோ எடையும் கொண்ட இந்த வெண்கல கலசம் திருட்டு போனது குறித்து, கோவில் நிர்வாக அலுவலர் மணி கொடுத்த புகாரின் பேரில், செந்துறை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கண்டமானடி கோவிலில் திருட்டு Dinamalar

23 Jun 2010 கண்டமானடி கோவிலில் திருட்டு. அதிகம் படித்தவை கோவிலில் புகுந்த மர்ம ஆசாமிகள் கோவில் கலசத்தை திருடிச் சென்றனர்.

சிதம்பரம் அருகே கோவில் கலசம் திருட்டு

13 Jan 2010 சிதம்பரம் அருகே கோவில் கலசம் திருட்டு. சிதம்பரம் : சிதம்பரம் அருகே கோவில் செப்பு கலசங்கள் திருடிய மர்ம ஆசாமியை
cuddalore-news.blogspot.com/…/blog-post_5697.html

ஈரோடுகோவிலில்கோபுரகலசம்திருட்டு[10] ஜூன் 9, 2010: ஈரோடு: ஈரோடு அக்ரஹாரம் வீதியில் பழமை வாய்ந்த பெருமாள் ஐயர் கோயில் உள்ளது. கோவில் கோபுரக் கலசம் நேற்று காணாமல் போனது. கோவில் நிர்வாகி முரளி கூறியதாவது: இக்கோவில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. நாள்தோறும் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறந்து, இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படும். இரண்டாண்டுக்கு முன் இதே கோவிலில் விமானக் கலசம் திருட்டு போனது. திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருடனை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மே 15ம் தேதி அக்ஷய திருதியையன்று கோவில் விமானக் கலசம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து டவுன் போலீஸாருக்கு புகார் செய்துள்ளோம். திருட்டுபோன கலசம் சுத்தமான செம்பாலானது. இதன் மதிப்பு 7,000 ரூபாய் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். எனினும் டவுன் போலீஸார் இதுபற்றி வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை.

நாமக்கல் கோவிலில் கொள்ளை[11], ப.வேலூர் :மே 22, 2010:பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் உண்டியலை உடைத்து, ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் அருகே பாண்டமங்கலத்தில் உள்ள பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவிலில், நேற்று காலை கோவில் துப்புரவு பணியாளர் சுப்ரமணி, சுத்தம் செய்ய வந்தார்.அப்போது, கோவில் பூட்டு உடைக்கப்பட்டு, கோவில் வளாகத்தில் இருந்த உண்டியலும் மாயமாகியிருந்தது. இதை, கோவில் அர்ச்சகர் ஸ்ரீராம், அலுவலர் சிவசண்முகமிடம், சுப்ரமணி தெரிவித்தார். கோவில் அலுவலர் சிவசண்முகம், போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தினர். கைரேகை பதிவு செய்யப்பட்டது. கோவிலில் திருடப்பட்ட உண்டியல், கோவிலுக்கு பின்புறம் வீசப்பட்டிருந்தது. அதில் இருந்த நகை, பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. உண்டியலில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் இருந்திருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

வேதபிரகாஷ்

21-07-2010


[1] தினமலர், புதுக்கோட்டை அருகே கோவில் உண்டியல் உடைத்து கொள்ளை, ஜூலை 21,2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=44176

[2] http://www.viduthalai.periyar.org.in/20100721/news13.html

[3] http://www.dailythanthi.com/article.asp?NewsID=581642&disdate=7/21/2010&advt=2

[4] மாலைமலர், http://www.maalaimalar.com/2010/07/14125553/gold-robbery-in-Gummidipoondi.html

[5] மாலைமலர், http://www.maalaimalar.com/2010/07/12131716/robbery-in-temple.html

[6] மாலைமலர் நாளிதழ் , சென்னை 21-07-2010 (புதன்கிழமை)

http://www.maalaimalar.com/2010/07/11134707/temple.html

[7]மாலைமலர்,  http://www.maalaimalar.com/2010/07/10161958/mariamman-temple.html

[8] மாலைமலர், சென்னை 26-06-2010 (சனிக்கிழமை), http://www.maalaimalar.com/2010/06/26160958/gold-robbery-in-tanjore.html

[9] http://thinamalar.net/News_Detail.asp?Id=20089

[10] http://www.dinamalar.com/News_Detail.asp?Id=15488

[11] தினமலர், http://www.dinamalar.com/News_Detail.asp?id=7828

குறிச்சொற்கள்: , , , , , , , , , ,

11 பதில்கள் to “தமிழகத்தில் ஒரு நாளைக்கு ஒரு கோவிலில் கலசம், நகை, பணம் முதலியவை கொள்ளையடிக்கப்படுகின்றன!”

  1. vedaprakash Says:

    உண்டியல் திருட்டு
    பதிவு செய்த நாள் : ஜூலை 24,2010,02:54 IST
    http://www.dinamalar.com/News_Detail.asp?Id=46355

    கீழவளவு: தனியாமங்கலத்தில் உள்ளது காளிகோயில் மற்றும் பெரிய பனையன் கோயில். இங்குள்ள உண்டியலை உடைத்து பணம் திருடப் பட்டது. இது குறித்து கோயில் நிர்வாகி கிருஷ்ணன் கீழவளவு போலீசில் புகார் செய்தார். போலீசார் தனியாமங்கலத்தை சேர்ந்த முனியாண்டி மகன் சேவுக பெருமாளை(23) கைது செய்து அவரிடமிருந்து பணத்தை மீட்டனர்.

  2. vedaprakash Says:

    பெருமாள் கோவிலில் வெள்ளி பொருட்கள் திருட்டு
    பதிவு செய்த நாள் : ஜூலை 28,2010,03:07 IST
    http://www.dinamalar.com/News_Detail.asp?Id=49187

    காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டணத்தில் பெருமாள் கோவிலில் பட்டப்பகலில் வெள்ளிப்பொருட்களை திருடி சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.காவேரிப்பட்டணம் கோவிந்தசெட்டி தெருவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமண ஸ்வாமி கோவில் உள்ளது. நேற்று முன்தினம் கோவிலில் ஸ்வாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு ஆசி வழங்க வெள்ளி ஜடாரி தட்டு ஆகியவை ஸ்வாமி முன் உள்ள மேஜையில் வைக்கப்பட்டிருந்தது.
    கோவில் குருக்கள் கோவில் பிரகாரத்திற்கு சென்றுவிட்டு திரும்பிய போது அங்கிருந்த பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அதிர்ச்சி அடைந்த கோவில் குருக்கள் காவேரிப்பட்டணம் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் விசாரிக்கின்றனர்.

  3. vedaprakash Says:

    அம்மன் தாலியை திருடிய வாலிபர் கைது
    பதிவு செய்த நாள் : ஜூலை 28,2010,03:09 IST
    http://www.dinamalar.com/News_Detail.asp?Id=49199

    ஓசூர்: சூளகிரி அருகே அம்மன் தாலியை திருடிய வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.சூளகிரி அடுத்த இலசேபள்ளி கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள அம்மன் தாலியை கடந்த 9ம் தேதி மர்ம நபர் கொள்ளையடித்து சென்றார். சூளகிரி போலீஸார் விசாரித்து, அம்மன் தாலியை கொள்ளையடித்து சென்றவரை விசாரித்து தேடினர். விசாரணையில், இலசேபள்ளியை சேர்ந்த நஞ்சுண்டப்பா (30) என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் அம்மன் தாலியை கொள்ளையடித்தது தெரிந்தது. போலீஸார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து அம்மன் தாலியை பறிமுதல் செய்தனர்.

  4. Kuppswamy Says:

    Sir,

    LAW AND Order is out of control.

    What is Governor doing?

    Can 144 can be thought on this government

  5. K. Venkatraman Says:

    Really, the incidences have been shocking and the other media has been keeping quite.

    Perhaps, what is known to the press is reported and what is known to the police are recorded, but what about the unreported cases by the media and the Police?

    Who is having the full details of such atrocities, as it has become vavation, avocation and profession for some trained groups.

    The otherday, there is report that Christian priest, Musalmans, of course they act as agents / carriers, smugglers and above all the certifying academicians, facilitating the exports.

  6. கோவில் கொள்ளை ஜெயலலிதா ஆட்சியிலும் தொடர்வது ஏன்? « நாத்திகமும்-ஆலயநிர்வாகமும் Says:

    […] [1] வேதபிரகாஷ்,தமிழகத்தில் ஒரு நாளைக்கு ஒரு கோவிலில் கலசம், நகை, பணம் முதலியவை கொள்ளையடிக்கப்படுகின்றன, https://atheismtemples.wordpress.com/2010/07/21/temples-looted-daily-basis-in-tamilnadu/ […]

  7. தமிழகத்தில் தொடரும் கோவில் கொள்ளைகள் – தாலிகள் அறுக்கப்படுகின்றன, காரணம், பின்னணி என்ன? « நாத Says:

    […] https://atheismtemples.wordpress.com/2010/07/21/temples-looted-daily-basis-in-tamilnadu/ […]

  8. தமிழகத்தில் தொடரும் கோவில் கொள்ளைகள் – தாலிகள் அறுக்கப்படுகின்றன, காரணம், பின்னணி என்ன? « நாத Says:

    […] https://atheismtemples.wordpress.com/2010/07/21/temples-looted-daily-basis-in-tamilnadu/ […]

  9. தமிழகத்தில் தொடரும் கோவில் கொள்ளைகள் – தாலிகள் அறுக்கப்படுகின்றன, காரணம், பின்னணி என்ன? « நாத Says:

    […] https://atheismtemples.wordpress.com/2010/07/21/temples-looted-daily-basis-in-tamilnadu/ […]

பின்னூட்டமொன்றை இடுக