Archive for the ‘கோவில்களுக்கு ISO சான்றிதழ் தேவையா?’ Category

கோவில்குத்தகை, வாடகைபாக்கி: திராவிடக்கொள்ளை தொடர்கிறதா?

ஒக்ரோபர்7, 2012

கோவில்குத்தகை, வாடகைபாக்கி: திராவிடக்கொள்ளை தொடர்கிறதா?

திராவிடக்கொள்ளைதொடர்வதுஏன்? பகுத்தறிவு-நாத்திகப் போர்வையில் தமிழர்களை “திராவிடர்களாக்கி”, இந்திய விரோதிகளாக்கி, இந்து விரோதிகளாக்கி, மற்ற இந்திய மொழி பேசும் மக்களுடனும் பிரச்சினையைக் கிளப்பி, அண்டை மாநிலங்களுடன் சண்டை போட்டுக் கொண்டு, “தெற்கு தேய்கிறது” என்று சொல்லி, இவர்களே நன்றாகத் தேய்த்து, கோடிகளில் சுருட்டிவிட்டு, மற்ற மாநிலங்களை விட பிற்படுத்தச் செய்தது தான் இவர்கள் ஆண்ட லட்சணம். அந்நிலையில் கோவில்களைக் கொள்ளையடித்ததில் இவர்கள் மாலிக்காபூர், ஔரங்கசீப் போன்றவர்களையும் மிஞ்சி விட்டனர்[1]. அவர்கள் மதவெறியால், கொள்ளையடித்ததை, இவர்கள் துவேஷத்தால், சட்டத்தை வளைத்து, விதிகளை மீறி, அதிகாரம் மூலம் கொள்ளையடித்து வருகின்றனர். “கருணாநிதி-ஜெயலலிதா” ஒன்றும் “திராவிட-ஆரிய” சின்னங்கள் அல்ல. திமுக-அதிமுகவும் அது போலத்தான். திராவிடப் பாரம்பரிய அரசியலில் ஊறிப் போனவர்களுக்கு, நெற்றியில் குங்குமம்-விபூதி-சந்தனம் வைத்துக் கொண்டாலும், வைத்துக் கொள்ளாவிட்டாலும், கொள்ளையடிப்பதில் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சித்தலைமை மாறினாலும், நடப்புகள், செயல்கள், முடிவுகள் எல்லாம் ஒரே மாதிரியாகத்தான் இருந்துள்ளன[2]. ஜெயலலிதா ஆட்சியில் கொஞ்சம் குறைந்துள்ளது எனலாம் அல்லது அவ்வாறு தோற்றமளிக்கலாம்[3].

 

இந்து அறநிலையத் துறையே கோவில் சொத்துக்களை விற்று மோசடி செய்து வந்த விவரங்களை கீழ் கண்ட கட்டுரைகளில் விவரித்துள்ளேன்:

எண்

தலைப்பு

இணைத்தள விவரம்

Tenants of mutt and temple lands seek ownership rights: The TN Government scam to grab the Temple lands (27-08-2008) http://vedaprakash.indiainteracts.in/2008/08/27/tenants-of-mutt-and-temple-lands-seek-ownership-rights-the-tn-government-scam-to-grab-the-temple-lands/
1 Tenants of mutt and temple lands seek ownership rights: The TN Government scam to grab the Temple lands (02-09-2008)) http://dravidianatheism.wordpress.com/2008/09/02/tenants-of-mutt-and-temple-lands-seek-ownership-rights-the-tn-government-scam-to-grab-the-temple-lands/
2 பல கட்டுரைகள் (குறிப்பாக கீழ்கண்டவை கொடுக்கப் பட்டுள்ளன) https://atheismtemples.wordpress.com
3 நாத்திக ஆட்சியாளர்களும், கோவில் நிர்வாகமும் https://atheismtemples.wordpress.com/2009/09/18/atheist-rulers-temple-administration/
4 இந்து அறநிலையத்துறைக்குப் பிறகுகுடிசைமாற்றுவாரியம் மூலம் கோவில் நிலங்களைஆக்கிரமிக்க முயலும் நாத்திக அரசு! https://atheismtemples.wordpress.com/2010/09/10/atheist-rulers-encroach-temple-lands-through-slum-clearance-board/
5 ரூ.5,000/- கோடி மதிப்புள்ள சிவன் கோயில்நிலம்ஆக்கிரமிப்புவிவகாரம்ரோசையா– கருணாநிதி சமரசம்! https://atheismtemples.wordpress.com/2010/08/09/%E0%AE%B0%E0%AF%82-5000-crores-valued-siva-temple-encroached-in-taamilnadu-belonging-to-andhrapradesh/
6 செஞ்சி கோவில் வழக்கு: இந்துக்களும்,கிருந்துவர்களும் தெரிந்து கொள்ள வேண்டியவைஎன்ன? https://atheismtemples.wordpress.com/2011/08/20/gingee-kothandaramar-temple-liberated-from-the-christians/
7 செஞ்சி கோவில் வழக்கு (2): இந்துக்களும்,கிருந்துவர்களும் தெரிந்து கொள்ள வேண்டியவைஎன்ன? https://atheismtemples.wordpress.com/2011/08/21/gingee-temple-liberated-duties-of-hindus/

முறைகேடாககுத்தகைக்குவிடப்பட்டகோவில்நிலங்கள்கையகப்படுத்தப்படும்[4]என்று அறிவித்தால் மட்டும் போதுமா, பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமே? இனி ஆளுங்கட்சியினர் பிரமிப்பை ஏற்படுத்தி, சில காரியங்களைச் செய்யலாம். ஆனால், பிறகு, ஊறிப்போன கோவில்-திருட்டுத் திராவிடம் பழையபடி, கமிஷன் வாங்கிக்கொண்டு வேலைக்கு இறங்கி விடும்.

அப்துல்லாவிற்கும்அகஸ்தீஸ்வரர்கோவிலுக்கும்என்னசம்பந்தம்?: அகஸ்தீஸ்வரர் கோவிலுக்கு அகஸ்திஸ்வரர் கோவிலுக்கு அதிகமாக அப்துல்லா என்பவர்[5] 32 லட்சம் பாக்கி வைத்துள்ளாறாம்! கலீல் உர் ரஹ்மான் 10 லட்சம் பாக்கியாம்! அதெப்படி இப்படி முஸ்லீம்கள் கோவில் சொத்தை அனுபவிக்க முடிகிறது? இந்த அழகில் இவர்கள் கோர்ட்டுக்கு வேறு போகிறார்கள். இந்துக்களை இன்னும் இழிவு பேசிவரும் முஸ்லீம்கள் இருக்கும் போது, முஸ்லீம்கள் இவ்வாறு கோவில் சொத்தைக் கொள்ளையடிக்கும் தொழிலை விடவேண்டும். இல்லையெனில் இவர்களை இக்கால ஔரங்கசீப்புகள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கும். தங்கள் கடவுள் தான் ஒசத்தி என்று தம்படாம் அடித்துக் கொள்ளும் இவர்களுக்கு இப்படி கோவில் சொத்தைக் கொள்ளையடிப்பதில் வெட்கம்கூடபடாமல், பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள் எனும்போது, இதுவும் ஜிஹாதின் ஒருவழியாகப் பின்பற்றுகிறார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது.

சென்னமல்லீஸ்வரர் கோவிலில் வாடகை பாக்கி 90 லட்சம் ரூபாய்[6]: சென்னமல்லீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான இடங்களில் வசிப்போர், தர வேண்டிய வாடகை பாக்கித் தொகை 90 லட்சம் ரூபாயை எட்டியுள்ளது. இதையடுத்து, பாக்கி வைத்திருப்போர் பெயர் அடங்கிய அறிவிப்பு பலகை கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. பாரிமுனை தேவராஜ முதலி தெருவில் உள்ளது பிரசித்திப்பெற்ற சென்ன மல்லீஸ்வரர் மற்றும் கேசவப் பெருமாள் கோவில். இக்கோவிலுக்கு சொந்தமான கட்டடங்களாக, 8 காணி 21 கிரவுண்ட் 1,323 சதுர அடி இடம் (1 காணி – 1.25 ஏக்கர்) உள்ளது. இதன் மொத்தப் பரப்பளவு ஐந்து லட்சம் சதுர அடி. அதே போல் மனைகளாக, ஐந்து காணி 3 கிரவுண்ட் 599 சதுர அடி இடம் உள்ளது. இதன் பரப்பளவு 4 லட்சம் சதுர அடி. 2001ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, இக்கோவிலுக்கு வாடகை பாக்கியாக 90 லட்ச ரூபாய் வரவேண்டியுள்ளது. இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தில் உள்ள பல கோவில்களில் வாடகை பாக்கி தற்போது “ஜரூராக” வசூல் செய்யப்படுவதை[7] அடுத்து, சென்னமல்லீஸ்வரர் கோவிலில் கட்டடங்களில் வசிப்போரில் அதிகபட்சமாக பாக்கி வைத்தவர்களில், முதல் பதினைந்து பேர்களின் பெயர்கள் மற்றும் பாக்கித் தொகை அடங்கிய அறிவிப்பு பலகை கோவில் வாசலில் வைக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, ஐவர் பாக்கித் தொகையை செலுத்தியுள்ளனர். விரைவில் மனை பிரிவில் தங்கியுள்ளவர்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலங்களின் மதிப்பு பல கோடி ரூபாயை தாண்டும் எனவும் நிர்வாகம் கூறியுள்ளது.

கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான, 180 கோடி ரூபாய் மதிப்பிலான, 30 “கிரவுண்ட்’: சென்னை, மயிலாப்பூர், கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான, 180 கோடி ரூபாய் மதிப்பிலான, 30 “கிரவுண்ட்’ இடத்தை மீட்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மயிலாப்பூர், கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோவி லுக்குச் சொந்தமாக சென்னை நகரின் பல்வேறு இடங்களில் சொத்துக்கள் உள்ளன. இவற்றில், பெரும்பாலானவை குத்தகை அடிப்படையில் தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. பல சொத்துக்கள், தனியாரின் பிடியில் சிக்கியுள்ளன. இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள கோவில் நிர்வாகம், கோவில் சொத்துக்களை மீட்கும் பணியில் இறங்கியுள்ளது. பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள், கடந்த மூன்று மாதங்களில் மீட்கப்பட்டுள்ளன.இந்த வகையில், தனியார் பள்ளியின் கட்டுப்பாட்டில் உள்ள, 30 “கிரவுண்ட்’ இடத்தையும் மீட்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து பக்தர் ஒருவர் கூறியதாவது: மயிலாப்பூர், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், 76 “கிரவுண்ட்’ சொத்து, கோவிலுக்குச் சொந்தமாக உள்ளது. இது, அங்குள்ள தனியார் பள்ளியின் விளையாட்டுத் திடலாக பயன்படுத்தப்படுகிறது. இதற்காக, குறைந்த தொகை, குத்தகை கட்டணமாக மாதந்தோறும் கொடுக்கப்படுகிறது. இதில், 30 “கிரவுண்ட்’ நிலத்தை, பள்ளியின், இணைப்பு பள்ளிக்கு குத்தகைக்கு வழங்க, முடிவு செய்யப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால், குத்தகை இடம் வழங்கப்படவில்லை.மொத்தம் உள்ள, 76 “கிரவுண்ட்’ இடத்தில், 46 “கிரவுண்ட்’ இடம், கோர்ட் விசாரணையில் உள்ளது. மீதம் உள்ள, 30 “கிரவுண்ட்’ இடத்தை கோவிலுக்கு ஒப்படைக்க, தனியார் பள்ளி நிர்வாகம் சம்மதித்தது. ஆனால், இதுவரை ஒப்படைக்கவில்லை. தொடர்ந்து, தனியார் பள்ளி வசத்திலேயே இடம் உள்ளது. இந்த இடத்தை மீட்டு, கோவில் சொத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு, அந்த பக்தர் கூறினார். இது குறித்து கோவில் நிர்வாகத்திடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:மொத்தம் உள்ள, 76 “கிரவுண்ட்’ இடத்தில், 30 “கிரவுண்ட்’ இடத்தை கோவிலுக்கு ஒப்படைப்பதாக பள்ளி நிர்வாகம், 1996ம் ஆண்டு, கடிதம் அளித்தது. 2005ம் ஆண்டு, ஒப்படைப்பு உறுதி செய்யப்பட்டது. குத்தகை நீட்டிப்பு செய்யப்படாத நிலையில், மீதம் உள்ள, 46 “கிரவுண்ட்’ இடத்திற்கு நஷ்ட ஈடாக, மாதம், 1,250 ரூபாயை பள்ளி செலுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, குறிப்பிட்ட இடத்திற்கு மாதம், ஐந்து லட்சம் ரூபாய் வாடகையாகச் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. கோவிலுக்கு ஒப்படைப்பதாகக் கூறப்பட்ட, 30 “கிரவுண்ட்’ இடத்தைக் கையகப்படுத்த, நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறித்த சட்ட நிபுணர்களின் கருத்துரு கேட்டபோது, “கோவில் இடத்தை, கோவில் நிர்வாகம் எடுத்து, மதில் சுவர் கட்டுவதில் சட்ட ரீதியான தடை ஏதும் இல்லை’ என்று கருத்து கூறப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள, 76 “கிரவுண்ட்’ இடத்தின் தற்போதைய சந்தை மதிப்பு, 456 கோடி ரூபாய். கோவிலுக்கு ஒப்படைக்கப்படுவதாகக் கூறப்பட்ட நிலத்தின் மதிப்பு, 180 கோடி ரூபாய். இவ்வாறு கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

456 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமித்துள்ளது ஏன் – எப்படி?: கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான, 76 “கிரவுண்ட்’ இடம், தனியார் பள்ளிக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது; குத்தகை, 1976ம் ஆண்டோடு முடிந்துவிட்டது; இருப்பினும், கோவில் இடத்தை, பள்ளி நிர்வாகம் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. 1994ம் ஆண்டில், குறிப்பிட்ட தனியார் பள்ளியின், இணைப்பு பள்ளியில் நடந்த விழாவில், முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டார்.அப்போது, தங்களின் இணைப்பு பள்ளிக்கு விளையாட்டுத் திடல் இல்லை என்றும், அதற்கான இடத்தைக் கொடுத்து உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது, “கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான இடம், விளையாட்டுத் திடலுக்காக வழங்கப்படும்’ என்று முதல்வர் அறிவித்தார். இதையடுத்து, 1995ம் ஆண்டு, தனியார் பள்ளியின் அனுபவத்தில் இருந்த, 76 “கிரவுண்ட்’ இடத்தில் இருந்து, 30 “கிரவுண்ட்’ இடத்தை, இணைப்பு பள்ளிக்கு, குத்தகை அடிப்படையில் ஒதுக்கி, இந்து அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து உத்தரவிடப்பட்டது. ஆனால், குறிப்பிட்ட இடத்திற்குச் செல்ல வழி இல்லை என்ற காரணத்தால், இணைப்பு பள்ளி நிர்வாகம், 30 “கிரவுண்ட்’ நிலத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இதைஅடுத்து, “இடத்தைப் பெற்றுக் கொள்ள இணைப்பு பள்ளி நிர்வாகம் முன்வரவில்லை’ என, அறநிலையத் துறை பதிவேட்டில், பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில், தனியார் பள்ளியின் பொறுப்பில் மீதம் உள்ள, 46 “கிரவுண்ட்’ இடத்தையும் திரும்ப எடுக்க, கோவில் நிர்வாகம் முயற்சி எடுத்தது. இது குறித்த வழக்கில், கோவில் நிர்வாகத்திற்கு பாதமாக தீர்ப்பு வந்த நிலையில், மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கோவில் தக்கார்கள் எப்படி வேலை செய்கிறார்கள்?: பி. விஜயகுமார் ரெட்டி என்பவர் கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்டு வருவதோடு, பாக்கியைச் செல்லுத்தாவிட்டால், காலிசெய்யுமாறு நோட்டீஸையும் கொடுத்துள்ளார்[8]. இவர் மீட்டுள்ள சொத்தின் மதிப்பு ரூ.230 கோடிகளுக்கு மேல் என்கிறார்[9]. இதேபோல மற்ற தக்கார்கள் ஏன் வேலை செய்வதில்லை? குறிப்பாக மேஎலேயுள்ள நிலத்தை ஏன் விட்டு வைத்தார்? கோர்ட் கேஸ் என்று சொல்லிவிடுவார், ஆனால், அது நியாயம் அல்லவே? திருமூலர் சொன்னதை, இந்துக்களும் மறக்கலாமோ? பிறகு, நாத்திகர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

திருத்தணியில் வரி பாக்கி செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு ‘சீல்’: கமிஷனர் அதிரடி நடவடிக்கை[10]: திருத்தணி நகராட்சிக்கு சொந்தமான 7 கடைகள் பஸ் நிலையம், சன்னதி தெருவில் உள்ளன. இதனை அதே பகுதியை சேர்ந்த தீனதயாளன், வெங்கடேசன், முருகேச ரெட்டி, ஜான்மனுவேல் கடந்த 15 ஆண்டுகளாக குத்தகை அடிப்படையில் நடத்தி வந்தனர்.  இதில் 6 கடைகளுக்கு அவர்கள் முறையாக வரி செலுத்தவில்லை. இதனால் ரூ.6 லட்சம் வரை நகராட்சிக்கு வரிபாக்கி ஏற்பட்டது. இதுகுறித்து பலமுறை நகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியும் வரிபாக்கியை செலுத்தாமல் அவர்கள் தொடர்ந்து கடை நடத்தி வந்தனர்.  இந்த நிலையில் நகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியம், என்ஜினீயர் சண்முகம், சுகாதார அதிகாரி லட்சுமி கணேசன், தலைமை எழுத்தர் அமராவதி பொன்மணி, பொதுப்பணி மேற்பார்வையாளர் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் வரிபாக்கி செலுத்தாத 6 கடைகளுக்கும் சென்று விசாரணை நடத்தினர்.  அதிரடியாக அவர்கள் 6 கடைகளுக்கும், சீல் வைத்தனர். இதனால் திருத்தணி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கமிஷனர் பாலசுப்பிரமணியம் கூறும்போது, 2011-12ம் ஆண்டு மட்டும் நகராட்சிக்கு ரூ.60 லட்சம் வரை வரிபாக்கி உள்ளது. வரிசெலுத்தாத தனியார் நிறுவனங்கள் மீதும் இந்த அதிரடி நடவடிக்கை தொடரும் என்றார். ஆனால், கோவில் குத்தகை, வாடகை பாக்கி என்றால் அதிகாரிகள் “சட்டப்படி நடவடிக்கை எடுத்து” அமைதி காத்துக் கொண்டிருப்பார்கள் போலும், அப்படியென்றால் திராவிடக் கொள்ளை தொடர்கிறதா?

நிர்வாக சீர்கேட்டால் ரூ.20 லட்சம் குத்தகை பணம் பாக்கி; கடும் நடவடிக்கை எடுக்க கவுன்சிலர்கள் வலியுறுத்தல்[11]: புதிய கட்சிகள் அதிகாரத்திற்கு வந்தாலும், பழைய புத்தி போகாது போலும்.திருவத்திபுரம் நகராட்சியில் நிர்வாக சீர்கேட்டால் 1 வருடங்களாக ரூ.20 லட்சம் குத்தகை பணம் வசூல் செய்யாமல் பாக்கியாக உள்ளது. கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தி உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் திருவத்திபுரம் நகராட்சியில் நகர மன்ற கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் ஏ.என்.சம்பத் தலைமை தாங்கினார். ஆணையாளர் உசேன் பாரூக் மன்னர், துப்பரவு அலுவலர் பாஸ்கர், துப்பரவு ஆய்வாளர் மதனராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் லோகநாதன், விஸ்வநாதன், எம்.எஸ்.செல்வ பாண்டியன், எல்.வி. நடேசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

திருவத்திபுரம் நகராட்சி கூட்டத்தில் நடந்த விவாதம் பின்வருமாறு:- பி.லோகநாதன் – தமிழகத்தில் 3 முறையாக ஜெயலலிதாவை முதல்வராக்கிய தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும்.

இல.ஆனந்தன்- தே.மு.தி.க வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெறசெய்து விஜயகாந்தை எதிர்கட்சி தலைவராக்கிய தமிழக வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

லோகநாதன்- சுகாதார பிரிவுக்கு 2011- 2012 ஆண்டிற்கு சுண்ணாம்பு நீருக்கு 3 லட்சம் தேவையா? கடந்த ஆண்டு 2 லட்சத்திற்கும் குறைவாக வாங்கியுள்ளீர்கள்.

சம்பத்(தலைவர்)-ஆடு அறுக்கும் தொட்டி குத்தகை பணம் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் பாக்கியுள்ளது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்.

ஆணையாளர்- குத்தகை பாக்கி வசூல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறேன்.

விஸ்வநாதன்-பஸ் நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பிட குத்தகை ரூ.5 லட்சத்து 66 ஆயிரம் பாக்கி உள்ளது ஏன் நகராட்சி நிர்வாகம் வசூல் செய்யவில்லை.

பி.லோகநாதன்-வார சந்தை குத்தகை ரூ. 7லட்சத்து 14 ஆயிரம் கடந்த 2009 ஆண்டு முதல் நிலுவையில் ஏன் வசூல் செய்யவில்லை.

சம்பத்(தலைவர்)- குத்தகை வசூல் செய்யாமல் ரூ.20 லட்சம் பாக்கியாக உள்ளது. இதற்கு காரணம் நிர்வாக சீர்கேடு தான்.

பச்சையப்பன் – இதற்கு காரணமான அதிகாரிகள் அனைவரும் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்வபாண்டியன்- பேருந்து நிலைய நுழைவு கட்டண குத்தகை ரூ.6 லட்சத்து 82 ஆயிரம் 500 குத்தகை வசூலில் பாக்கி உள்ளது என்ன நிர்வாகம் நடக்கிறது.

ஆணையாளர்- துறை அலுவலர் மீது விசாரணை நடத்தி வருகிறேன். அதில் முறைகேடு கண்டுபிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கபடும்.

சம்பத் (தலைவர்) -குத்தகை பணம் செலுத்தவில்லை என்றால் மறு டெண்டர் விட்டு விட்டு குத்தகை பாக்கி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது. ஆக, இப்படி பேசிக்கொண்டிருப்பார்கள் போலும். திருத்தணி நகராட்சி கமிஷனெர் போல, இங்குள்ள கமிஷனர் ஒன்றும் செய்யமாட்டார் போலும்.

ஊட்டியில் கோவில் சொத்துகளை அனுபவிப்பவர்கள்: 14 லட்சம் ரூபாய் வரை குத்தகை மற்றும் வாடகை பாக்கி வைத்துள்ளனர்.  ஊட்டி மாரியம்மன் கோவில், அதன் கட்டுப்பாட்டில் லோயர் பஜார் சுப்ரமணியசாமி, இரட்டை பிள்ளையார் கோவில்கள் உள்ளன. தவிர, ஆஞ்சநேயர், எல்க்ஹில் பாலதண்டாயுதபாணி, வேணுகோபால் சுவாமி, மூவுலகரசியம்மன் கோவில்களும் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளன. மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான எட்டு நிரந்தர, 3 தற்காலி கடைகள் குத்தகை, வாடகை அடிப்படையில் தனியாருக்கு விடப்பட்டுள்ளன.நிரந்தர கடைகள் மூலம் ஆண்டுக்கு 3 லட்சத்து 79 ஆயிரத்து 334 ரூபாய், தற்காலிக கடைகள் மூலம் 34 ஆயிரத்து 460 ரூபாய் வருமானம் ஈட்டப்படுகிறது. பிற கோவில்களுக்கு சொந்தமான கடை, வீடு, நிலங்கள் மூலமும் ஆண்டுக்கு சில லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது.

வாடகை பாக்கி: மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிரந்தர கடைகளை அனுபவித்து வருவோர் 3 லட்சத்து 15 ஆயிரத்து 390 ரூபாய், தற்காலிக கடைக்காரர்கள் 35 ஆயிரத்து 300 ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளனர். ஆஞ்சநேயர் கோவிலுக்கு சொந்தமான கடைகளை நடத்துவோர் 6 லட்சத்து 66 ஆயிரத்து 407 ரூபாய், வேணுகோபால் சுவாமி கோவிலுக்கு சொந்தமான கடைகளை நடத்துவோர் 2 லட்சத்து 5 ஆயிரத்து 82 ரூபாய், காந்தல் சுப்ரமணியர் கோவிலுக்கு சொந்தமான வீடுகளில் வசிப்போர் 64 ஆயிரத்து 124 ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளனர்.

காந்தல் மூவுலகரசியம்மன் கோவில் நில குத்தகைதாரர் 6 ஆயிரத்து780 ரூபாய், வீடுகளில் வசிப்போர் 1 லட்சத்து 17 ஆயிரத்து 173 ரூபாய் பாக்கி வைத்துள்ள நிலையில், கோவில் கஜானாவுக்கு செல்ல வேண்டிய 14லட்சத்து 10 ஆயிரத்து 256 ரூபாய் நிலுவையில் உள்ளது.

அரசாணையில்சலுகை 33.33லிருந்து 15%, கிட்டத்தட்ட 20% குறைப்பு[12]: கோவில்களுக்கு சொந்தமான வீடு, கடை, நிலத்தின் வாடகை, குத்தகை தொகையை மூன்றாண்டுக்கு ஒரு முறை 33.3 சதவீதம் உயர்வு செய்யப்பட்டு வந்தது; வாடகை உயர்வை குறைக்க வேண்டும் என்ற மாநிலம் முழுவதிலும் உள்ள கோவில் நிலங்களை அனுபவித்து வந்த குத்தகை, வாடகைதாரர்களின் கோரிக்கையை ஏற்று மாநில அரசு, மூன்றாண்டுக்கு ஒரு முறை 15 சதவீதம் வாடகை உயர்வு செய்து அரசாணை பிறப்பித்தது. இந்த உத்தரவு ஊட்டியில் அமலுக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்து முன்னணிக்குத்தான் இவ்விவரங்கள் தெரியும் போலும்: கோவை, நீலகிரி மாவட்ட இந்து முன்னணி அமைப்பாளர் செல்வகுமார், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில், கூறியுள்ளதாவது:மாநில இந்து சமய நலத்துறை குறிப்பிட்டுள்ள வாடகை, குத்தகை தொகை ஊட்டியில் வசூலிக்கப்படுவதில்லை; இதுதொடர்பான, அரசாணை தங்களுக்கு வரவில்லை, என ஊட்டி மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் கூறி வருகிறார். அரசாணை வெளியிடப்பட்டு நான்கரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், ஊட்டியில் மட்டும் இந்த அரசாணை கிடைக்கவில்லை, எனக் கூறி அரசின் சட்டத்தை பின்பற்ற காலம் தாழ்த்தும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தவிர, கோவில்களுக்கு சொந்தமான நிலம், வீடு, கடைகளை அனுபவித்து வருபவர்கள் பாக்கி வைத்துள்ள வாடகை, குத்தகை தொகையை உடனடியாக வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு செல்வகுமார் கூறியுள்ளார்.

ஆட்சி மாறினாலும், கதை தொடகிறது போலும்: தமிழகத்தில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 36,451 கோவில்கள் உள்ளன. புனித மடங்கள், 56 உள்ளன. கோவிலுடன் இணைந்த மடங்கள், 57 உள்ளன. ஜெயின் கோவில்கள், 17 உள்ளன. கோவிலுக்குச் சொந்தமான, 1,83,669 ஏக்கர் விளை நிலம், 2,18,226 ஏக்கர் தரிசு நிலம், 20,746 ஏக்கர் மானாவாரி நிலம் உள்ளது. இந்நிலங்கள், குறைந்த தொகைக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. பெரும்பாலான நிலம், ஆக்கிரமிப்பாளர்களிடம் சிக்கியுள்ளன. கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுத்தவர்கள், முறையாக, கோவிலுக்கு வாடகை செலுத்துவதில்லை. இதனால், கோவிலுக்கு வரும் வருமானம் பாதிக்கப்படுகிறது. கோவிலில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வது சிரமமாக உள்ளது. வாடகையை வசூலிக்க கோவில் நிர்வாகம், நடவடிக்கை எடுத்தால், சிலர் நீதிமன்றத்திற்கு சென்றுவிடுகின்றனர். சிலர் ஆளுங்கட்சியினர் உதவியை நாடுகின்றனர். இதனால், வாடகை வசூலிப்பது குதிரைக் கொம்பாக உள்ளது. ஆண்டுகணக்கில் வாடகை செலுத்தாமல், பல லட்சம் ரூபாய் பாக்கி வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் முக்கியப் பிரமுகர்களாக உள்ளனர். அவர்களிடமிருந்து வாடகை வசூலிப்பதற்காக, அதிக பாக்கி வைத்திருப்போரின் பெயர், அவர் செலுத்த வேண்டிய தொகை போன்ற விவரங்களை, கோவில் தகவல் பலகையில் எழுதி வைக்கும்படி, செயல் அலுவலர்களுக்கு அறநிலையத் துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தகவல் பலகையில் பெயர் இடம்பெற்று, பக்தர்களிடம் அசிங்கப்படுவதை தவிர்க்க, பாக்கித் தொகையை செலுத்துவர் என, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.

அண்ணா பிறந்த காஞ்சிபுரம் வழிகாட்டுகிறது: காஞ்சிபுரத்தில் கோவிலுக்குச் சொந்தமான நிலம் மற்றும் கட்டடத்தை அனுபவித்துக் கொண்டு, லட்சக்கணக்கில் பாக்கி வைத்துள்ளவர்கள் விவரங்களை, கோவில் தகவல் பலகையில் எழுதி வைக்கத் துவங்கி உள்ளனர். குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இருவருடைய பெயர் இடம் பெற்றுள்ளது. காங்கிரஸ் பிரமுகரான அரங்கநாதன், 19.61 லட்சம் ரூபாய் கடன் பாக்கி வைத்துள்ளார். நாராயணன், 3.12 லட்சம் ரூபாய் பாக்கி வைத்துள்ளார்[13]. இதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள பெரிய கோவில்களில், அறிவிப்புப் பலகைகளில் பெயர்களை எழுதி வைக்க, அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு, பாக்கி வைத்திருப்போர் பெயர்களை வெளியிடுவது, பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. பெயர் பலகையில் வெறும் பெயரை மட்டும் எழுதாமல், அவர்கள் என்னப் பதவியில் உள்ளனர், எந்த பொறுப்பில் உள்ளனர் என்ற விவரத்தையும் எழுதி வைத்தால், பாக்கி விரைவாக வசூலாக வாய்ப்புண்டு. காஞ்சிபுரம் மாவட்டத்தில், கோவில்களுக்கு, வாடகை பாக்கி வைத்திருப்போர் பெயர் பட்டியல் வெளியிடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. கோவில்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல், பாக்கி வைத்திருப்போர் பெயர் மற்றும் முகவரியை, கோவில் அறிவிப்பு பலகையில் வெளியிடும்படி, கோவில் செயல் அலுவலர்களுக்கு, உயர் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். அதன்படி காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பாக்கி வைத்திருப்போர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து பிற கோவில்களிலும், வாடகை பாக்கி வைத்திருப்போர் பட்டியலை வெளியிடும் பணி நடந்து வருகிறது. காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர்கோவில், வைகுண்ட பெருமாள் கோவில், பிள்ளையார்பாளையம் மகாஆனந்த ருத்ரேஸ்வரர் கோவில், அறம்வளத்தீஸ்வரர் கோவில், ஆகியவற்றில் வாடகை பாக்கி வைத்திருப்போர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது[14].

திருப்போரூர் என்ன சளைத்ததா?: திராவிடர் பாதை எல்லா ஊரிலும் பின்பற்றத்தான் செய்வார்கள். கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று தமிழன் சொன்னது அக்காலத்தில், இன்றோ, ஒரு கோவிலையும் கொள்ளையடிகாமல் இருக்கவேண்டாம் என்று திராவிடர்கள் செயல்பட்டு வருகின்றனர். கந்தசுவாமி கோவில் நிர்வாகம், கோவிலுக்கு மனை வரி, நிலம் குத்தகை, கட்டட வாடகை, என பாக்கி வைத்துள்ளவர்கள் பெயர் மற்றும் அவர்கள் செலுத்த வேண்டிய தொகை விவரம் அச்சிடப்பட்ட விளம்பரப் பதாகையை, கோவில் அலுவலகம் முன் வைத்துள்ளது.

கோவில்களில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும்: ராமகோபாலன்[15]: தரிசன கட்டணத்தை ரத்து செய்வதுடன் கோவில்களில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும் என இந்து முன்னணி நிறுவன தலைவர் கூறியுள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை விளக்குத்தூண் பகுதியில் இருந்து விநாயகர் சிலை நேற்று ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வைகை ஆற்றில் கரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி நிறுவன தலைவர் ராமகோபாலன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “’கோவில்களில் சுவாமி தரிசனத்துக்கு கட்டணம் வசூலிப்பது தமிழகத்தில் தான் நடக்கிறது. கேரளா மற்றும் வடமாநில கோவில்களில் இப்படி கட்டணம் வசூலிப்பது கிடையாது. காசு கொடுத்து சாமியை பார்க்க சாமி காட்சி பொருள் அல்ல. எனவே தரிசன கட்டணத்தை அரசு ரத்து செய்ய வேண்டும். மேலும் கோவில்களில் உள்ள கடைகள் அனைத்தையும் அரசு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள கோவில்களுக்கு குத்தகை பாக்கி ரூ.200 கோடி வரை உள்ளது. இவற்றை இந்து அறநிலையத்துறை முறையாக வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாக்கி தொகையை வசூலிக்க அரசு அவசர சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். இல்லை என்றால் கோவில் களை பாதுகாக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் போலீஸ் அதிகாரிகள், துறவிகள், இந்து அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் அடங்கிய ஒரு குழு அமைத்து அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்’’என்று பேசினார்.

வேதபிரகாஷ்

07-10-2012


[5] தினமலர், அக்டோபர் 6, 2012. சென்னைப் பதிப்பு.

[6] தினமலர், ஆகஸ்ட் 14,2012, http://www.dinamalar.com/district_detail.asp?id=529267

[7] இதிலென்ன “ஜரூராக” வசூல் செய்வது என்று தெரியவில்லை. கோவிலுக்கு பாக்கி செல்லுத்தாமல் இருப்பவர்கள் இந்துக்கள் என்றாலும் அவர்கள் இந்து மதத்தின் விரோதிகள் என்றுதான் ஆகிறார்கள். அவர்கள் நவீன கால இரண்யகசிபுகள் எனலாம். அனவே அவர்கள் பெருமைப்பட்டுக் கொள்வதில் ஒன்றும் விஷயமில்லை, மாறாக வெட்கப்பட்டு, கூனிக்குருக வேண்டும். நாத்திகர்கள் என்றோ, ககுத்தறிவுவாதிகள் என்றோ கூட சொல்லிக்கொள்ளமுடியாது, அப்படி செய்தால், அவர்கள் இந்து துரோகிகளைவிட மோசமானவர்கள் எனலாம்.

[9] “We have recovered a little more than 46 grounds from encroachers after starting our drive in March (2012). The property recovered is worth more than Rs 230 crore,” says P. Vijaykumar Reddy, the temple takkar (trustee).

[13] தினமலர், பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2012,23:46 IST; மாற்றம் செய்த நாள் : அக்டோபர் 01,2012,05:16 IST

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=557027

[14] தினமலர், அக்டோபர் 05,2012, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=560259

 

ரூ.5,000/- கோடி மதிப்புள்ள சிவன் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு விவகாரம்: ரோசையா- கருணாநிதி சமரசம்!

ஓகஸ்ட்9, 2010

ரூ.5,000/- கோடி மதிப்புள்ள சிவன் கோயில்நிலம் ஆக்கிரமிப்புவிவகாரம்: ரோசையாகருணாநிதி சமரசம்!

மாநிலங்களுக்கிடையில் உள்ள கோவில் நில பிரச்சினை: ஆந்திராவுக்கு சொந்தமான சிவன் கோயில் நிலம் தமிழகத்தில் உள்ளதால். இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் ரோசையா, தமிழக முதல்வர் கருணாநிதியை இன்ற சந்தித்து பேசுகிறார். ஆந்திராவில் குண்டூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி கோயிலுக்கு சொந்தமான நிலம் தமிழகத்தில் உள்ளது. இந்த நில விவகாரம் தொடர்பாக உரிய இழப்பீடு வழங்க கோரி அம்மாநில முதல்வர் ரோசையா ,தமிழக முதல்வர் கருணாநிதியை இன்று சந்தித்து பேசுகிறார்[1].

ரூ. 5,000 கோடி மதிப்பிலுள்ள கோவில் நிலம் ஆக்கிரமிப்பு: ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ளது அமராவதி கோயில் மிகவும் பழமைவாய்ந்த இந்த கோயிலுக்கு சொந்தமான 470 ஏக்கர் நிலம் 1850-ம் ஆண்டு வசியரெட்டி ராஜா என்பவரால் தானமாக வழங்கப்பட்டது. இதன் தற்போதைய சந்தையின் மதிப்பு ரூ. 5 ஆயிரம் கோடியாக இருக்கலாம் என தெரிகிறது. இந்த நிலம் தமிழகத்தில் சென்னை அருகே மாமல்லபுரம் சாலையில் அமைந்துள்ளது. தற்போது இந்த நிலப்பகுதியில் பல்வேறு தகவல் தொழில்நுட்ப மென்பொருள், நிறுவனங்கள், மெகா கட்டடங்கள் உள்ளன. இவற்றிற்காக நிலங்களை விற்கும்போது, கோடிகளில் பணத்தை அள்ளினர் குறிப்பிட்ட தனிநபர்கள்[2], அரசியல்வாதிகள், கோவில்நில ஆக்கிரமிப்பு திராவிட நாத்திக சக்திகள்.

ஆந்திரா தமிழ்நாட்டின் மீது தொடுத்துள்ள வழக்கு: காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்த நிலத்தின் மீது ஏற்கனவே ஆந்திர அரசு செங்கல்பட்டு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் உரிமையியல் வழக்கும் தொடர்ந்துள்ளது. கோவிலுக்கு சொந்தமானது 470 ஏக்கர் நிலம்[3], இதன் மதிப்பு ரூ. 5,000/- கோடிகளுக்கு மேல். இந்த நிலையில் ஆக்கிரமிக்கப்படாத நிலையில் எஞ்சிய 200 ஏக்கர் நிலத்தினை மீட்பதற்காக ஆந்திர மாநில அறநிலையத்துறை அமைச்சர் திவாகர் ரெட்டி தலைமையிலான குழவினர் துணை முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினர்.

ஸ்டாலின் பேச மறுத்த மர்மம் என்ன? ஸ்டாலினுடன் இந்த விஷயத்தைப் பற்றி பேசவேண்டும் என்று தெரிவித்தபோது, இதற்கு துணை முதல்வர் மறுத்துவிட்டார். ஒரு குறிப்பிட்ட நில அபகரிப்புக் கூட்டம், ஸ்டாலினுக்கு நெருக்கமானவர் அல்லது ஆளுங்கட்சிக்கு மிகவும் வேண்டப்பட்டவர் என்று தெரிகிறது. மேலும் ஏற்கெனெவே பல நிருவனங்கள் கட்டிடங்களைக் கட்டியாகிவிட்டது, பல மக்கள் வீடுகளையும் கட்டிக் கொண்டுள்ளனர், என்றெல்லாம் கூட பேசியாதாகத் தெரிகிறது. இந்த விவகாரம் குறித்து ஆந்திர முதல்வர் ரோசையா தமிழக முதல்வருக்கு எற்கெனெவே கடிதம் எழுதியுள்ளார். அதில் நிலத்திற்கு தற்போதைய அரசு நிர்ணயவிலையில் இழப்பீடு தர வேண்டும் எனகோரியுள்ளார். இப்படி இந்த விஷயம் வெளியே வர, சம்பந்தப்பட்டவர்கள் உஷாராகி விட்டனர். கருணாநிதியும் இது குறித்து ஆக.7-ம் தேதி (இன்ற) நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு கூறியுள்ளதை தொடர்ந்து முதல்வர் ரோசையா , தமிழக முதல்வர் கருணாநிதியை இன்று சந்தித்து பேசுகிறார்.

கருணாநிதி தெலுங்குக்காரர் என்று ரோசய்யா நினைத்தது தப்பாகி போய்விட்டது: கருணாநிதி ஆந்திராவிலிருந்து வந்து குடியேரியவர். இதனால், ஓரளவிற்காவது, ஆந்திர மக்கள் / தெலுங்கு பேசும் மக்களின் எஅலனில் அக்கரை இருக்கும் என்று ரொசய்யா எதிர்பார்த்ததாகத் தெரிந்தது. ஆனால், “முதலமைச்சர்” ரீதியிலேயே பேசியது, ரோசய்யாவிற்கும், மற்ற ஆந்திர மாநில அதிகார்களுக்கும் வியப்பாக இருந்தது. ஓசூரில் உள்ள தெலுங்கு பேசும் மக்களின் நிலை பற்றியும் பேசியுள்ளதாக தெரிகிறது[4].

நீதிமன்றத்திற்கு வெளியில் சமரசம்: அதாவது கோவில் நிலம் அம்பேல்: கடைசியில் விஷயம் வெளிவரக்கூடாது என்ற நிலையில், கருணாநிதி இவ்விஷயத்தை நீதிமன்றத்திற்கு வெளியே முடித்துக் கொள்வதாக அறிவித்தார். அதற்கு ரோசய்யாவும் ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. இதன்படி சிவன் கோவிலுக்கு சொந்தமான 470 ஏக்கர் நிலத்தில் ஏற்கெனெவே ஆக்கிரமித்த நிலத்தை விட்டுவிட்டு, பாக்கி 200 ஏக்கர் நிலத்திற்கு தமிழ்நாடு ஆந்திராவிற்கு இழப்பீடு கொடுக்கும்,  பதிலுக்கு, ஆந்திர இந்து ஆறநிலையத்துறை தனது வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொள்ளும்[5]. ஆக, சிவன் கோவில் நிலம் அம்பேல்! கருணாநிதி இந்து மதத்திற்கு இவ்வாறாக, மற்றொரு துரோகத்தையும், தனது கடைசி காலத்தில் செய்துள்ளார்.

தமிழகத்தில் நாத்திக அரசுதான் கோவில் நிர்வாகத்தை நடத்தி வருகிறது என்பது தெரிந்த விஷயமே. ஒவ்வொரு நாளைக்கும் ஒரு கோவிலில் திருட்டு முதலியன நடந்து வருவதும் தெரிந்த விஷயம்தான். மேலும் கருணாநிதியே கடவுள் என்று ஆஸ்தான கவிஞர்கள், வித்வான்கள், புலவர்கள் எல்லோரும் ஏற்கெனவே அறிவித்தாகி விட்டது. அரசு துறையில் கருணாநிதியை சிவனான உருவகப்படுத்தி விளம்பரங்களும் கொடுத்தாகி விட்டது. ஒருவர் கோவிலையும் கட்டிவிட்டார். தமிழகத்தை கருணை பூமியாக மாற்றப் போவதாக வேறு சொல்லிவிட்டார் கருணாநிதி! இந்நிலையில், ‘எல்லாம் அவன் செயல்”, என்று வீரமணி கிண்டல் அடிக்கிறாரா, அல்லது, “நாங்கள் சொல்லியதை செய்வோம், செய்வதைச் சொல்வோம்”, என்ற பாணியில், திகவினரே அறைகூவல் விடுகிறார்களா? கருணாநிதி சொல்வது போல, பெரியார்தான் இதற்கு பதில் சொல்லவேண்டும்!


[1] தினமலர், கோயில்நிலவிவகாரம் : ரோசையாகருணாநிதிஇன்றுசந்திப்பு, ஆகஸ்ட் 07, 2010; http://www.dinamalar.com/News_Detail.asp?Id=56974

[2] http://ibnlive.in.com/generalnewsfeed/news/tn-to-depute-official-to-discuss-ap-temple-land-encroachment/213565.html

[3] http://www.deccanchronicle.com/chennai/tn-officials-help-ap-resolve-land-row-740

[4] http://www.dinakaran.com/arasialdetail.aspx?id=12315&id1=10

[5] http://www.deccanchronicle.com/hyderabad/ap-settle-temple-land-row-tn-388

தமிழக கோவில்களில் பூஜை கட்டணம் ஐந்து மடங்கு உயர்வு!

ஓகஸ்ட்8, 2010

தமிழக கோவில்களில் பூஜை கட்டணம் ஐந்து மடங்கு உயர்வு

தமிழக கோவில்களில் வருமானத்தை பெருக்க மக்களிடம் எதற்கு கொள்ளை? தமிழக கோவில்களில், வருமானத்தை பெருக்க, பூஜை கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தமிழக கோவில்களில், இரண்டு ரூபாயாக இருந்த அர்ச்சனை கட்டணம், ஜூலை 9ம் தேதி முதல் ஐந்து ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சகஸ்ரநாம அர்ச்சனை, புதுக்கணக்கு பூஜை உள்ளிட்ட அனைத்து பூஜை கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளன.

பூஜை கட்டணம் உயர்வு செய்தி இந்து முன்னணி மூலம் வெளியிடுவது ஏன்? எல்லாவற்றிற்கும் கருணாநிதி முந்திக் கொண்டு வரும் போது, இதற்கு மட்டும் ஏன் இந்து முன்னணி வரவேண்டும்? திமுகவிற்கும், இந்து முன்னணிக்கும் ஏதாவது உடன்படிக்கை ஏற்பட்டு விட்டதா? நிலுவையில் இருக்கின்ற வாடகை, குத்தகை……………….இத்யாதி பாக்கிகளை வசூல் செய்தாலே கோடிகள் கிடைக்கும். அப்படியிருக்கும்போது, சாதாரண மக்களை சுரண்ட இப்படி கருணாநிதி இறங்கியுள்ளது, நிச்சயமாக இந்துக்களுக்கு தொந்தரவு செய்யத்தான் என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை.

இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் பூசப்பன் கூறியதாவது: அர்ச்சனை கட்டணம் இரண்டு ரூபாயிலிருந்து ஐந்து ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஐந்து ரூபாயாக இருந்த இரு சக்கர வாகன பூஜை டிக்கெட் 30, 10 ரூபாயாக இருந்த நான்கு சக்கர வாகன பூஜை 50, 15 ரூபாயாக இருந்த சகஸ்ரநாம அர்ச்சனை 50, 25 ரூபாயாக இருந்த புது கணக்கு பூஜை 100 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அறிவிப்பு வெளியிடாமல் திடீரென கட்டணம் ஐந்து மடங்கு உயர்த்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. மீண்டும் பழைய கட்டணத்தையே நிர்ணயிக்க வேண்டும். இது தொடர்பாக விரைவில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு பூசப்பன் கூறினார்.

தமிழக கோவில்களில் பூஜை கட்டணம் 5 மடங்கு உயர்வு, ஆகஸ்ட் 07,2010

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=56381&Print=1

தமிழகத்தில் ஒரு நாளைக்கு ஒரு கோவிலில் கலசம், நகை, பணம் முதலியவை கொள்ளையடிக்கப்படுகின்றன!

ஜூலை21, 2010

தமிழகத்தில் ஒரு நாளைக்கு ஒரு கோவிலில் கலசம், நகை, பணம் முதலியவை கொள்ளையடிக்கப்படுகின்றன

 

நாத்திக ஆட்சியில் நடக்கும் இவை திட்டமிட்ட நடப்பைவையா? நாத்திகர்கள் வளர்ந்துள்ளதால், இப்படி கோவில் நகை மற்றும் விலையுயர்ந்த பொருள் எதுவாக இருந்தாலும், திருடுவது, கொள்ளயடிப்பது என்பது தினம்-தினம் நடக்க்கும் திழாலாகி விட்டது. அவற்றில் குறிப்பிட்ட அமைப்பு, முறை காணப்படுவதால், அத்தகைய கொள்ளையர்கள் திட்டமிட்டு செய்கிறார்களா என்ற சந்தேகம் எழுகின்றது.

  1. கோவில் ஆட்களே சம்பந்தப்படுவது. இவர்கள் எல்லாமே ஆளும் கட்சிக்க்காரர்களாக இருக்கின்றனர், அல்லது உள்ளூர் எம்.எல்,ஏ, எம்.பி, எம்.எல்.சி, வட்டச்செயலாளர்………….போன்ற நிலையில் உள்ளனர்.
  2. அறநிலையத்துறை ஆட்களே ஈடுபடுகின்றனர் / சம்பந்தப் பட்டுள்ளனர்.
  3. திருடியவர்களே, மறுபடியும் திருடுகின்றனர்.
  4. புதியதாக கும்பாபிஷேகம் நடந்தவுடன் திருடப்படுகின்றது.
  5. புதியதாகப் புரளிக் கிளப்பிவிட்டுத் திருடுகின்றனர்.
  6. உண்டி எண்ணப்படுகின்ற ஒரு-சில நாட்களுக்கு முன்பு உண்டியல் உடைக்கப் பட்டுத் திருடப் படுகிறது.
  7. காவலாளி இல்லாத கோவிலாகத் தேர்ந்தெடுக்கப்படுவது.
  8. உண்மை நகைகளை எடுத்துவிட்டு, பொலிநகைகளை வைப்பது.
  9. அம்மன் தாலிகளை, நகைகளைத் திருடுகின்ற கூட்டம் – பொதுவாக, கிராமம், நகர்புறங்களில் முன்னரெல்லாம், அம்மன் கோவிலில் எந்தர்த் திருடனும் கை வைக்க மாட்டான். ஆனால், இப்பொழுது அதிகமாவதால், குறிப்பிட்டக் கூட்டம் அல்லது அத்தகைய மனப்பாங்குள்ள ஆட்கள் / கூட்டம் ஈடுபடுவது தெரிகிறது.

10.  சில நேரங்களில் கவலாளியைக் கொல்லவும் தயுஅங்குவதில்லை. இது திட்டம் போட்டு செய்யப்படும் கொலை, கொள்ளை என்றாகிறது.

 

புதுக்கோட்டை அருகே கோவில் உண்டியல் உடைத்து கொள்ளை (ஜூலை 21,2010)[1]: புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் பழமை வாய்ந்த பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு நாள்தோறும் மூன்று கால பூஜைகள் நடக்கிறது. இதில், இலுப்பூர் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமப்பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசிப்பது வழக்கம். நேற்றுமுன்தினம் இரவு கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கருவறை முன்பிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கோவில் அர்ச்சகர் அய்யாவு கொடுத்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்துள்ள இலுப்பூர் போலீஸார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இரண்டு கோவில்களில் தங்கம், வெள்ளி காணவில்லை
கோவில் நிருவாக அதிகாரி இடை நீக்கம்
[2]: சேலம், ஜூலை 21_ சேலத்தில் 2 கோவில்களில் தங்கம்வெள்ளி காணாமல்போன பிரச் சினையில் எல்லைப் பிடாரியம்மன் கோவில் நிருவாக அதிகாரியை தற்காலிக பணி நீக்கம் செய்து மாநில இந்து சமய அற நிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டார். சேலம் மாநகரில் செரிசாலையில் உள்ள எல்லைப்பிடாரியம்மன் கோவில், சின்னக்கடை வீதியில் உள்ள சின்னமாரியம்மன் கோவில், அயோத்தியாபட்டணம் ராமர் கோவில் உள்பட 6 கோவில்களுக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் நிருவாக அதிகாரியாக சந்திரபிரகாஷ் இருந்து வருகிறார். எல்லைப்பிடாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் உண்டியல் மூலம் காணிக்கையாக கொடுக்கும் தங்கம், வெள்ளி போன்றவை வங்கி லாக்கரில் வைத்து பாதுக்காக்கப்படுவது வழக்கம். அதற்கான சாவி கோவில் நிருவாக அதிகாரி வசம் இருப்பது வழக்கம். இந்த நிலையில் கோவில் நிருவாக அதிகாரி மற்றும் அறங்காவலர் குழுவினர் சமீபத்தில் கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக கொடுத்துள்ள தங்கம் மற்றும் வெள்ளி இனங்களை நகை பதிவேட்டில் உள்ளவாறு சரியாக இருக்கிறதா? என சரிபார்த்தனர். அப்போது எல்லைப்பிடாரி அம்மனுக்கு சொந்தமான 36 பவுன் தங்கம் மற்றும் 580 கிராம் வெள்ளி குறைந்தது[3].

சின்ன மாரியம்மன் கோவிலிலும் கொள்ளை: இதுபோல சேலம் சின்னக்கடை வீதியில் உள்ள சின்ன மாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான தங்கம் மற்றும் வெள்ளியை சரி பார்த்தபோது அங்கும் 12 பவுன் தங்கம் காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட உதவி ஆணை யாளர் வரதராஜன் மற்றும் இணை ஆணை யர் ராஜா ஆகியோரிடம் புகார் தெரிவிக்கப்பட் டது. எல்லைப்பிடாரியம்மன் கோவில், சின்ன மாரியம்மன் கோவிலில் உள்ள தங்கம், வெள்ளி காணா மல்போனது குறித்து சேலம் நகர குற்றப்பிரிவு காவல்துறை யில் கோவில் நிருவாக அதி காரியான சந்திரபிரகாஷ் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் காவல் நிலைய ஆய்வாளர் கபிலன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இது தொடர்பாக புகார் கொடுத்த நிருவாக அதிகாரி சந்திரபிரகாஷ் மற்றும் கோவில் நிருவாக அலுவலக உதவியாளர்களிடம் புலன் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தங்கம், வெள்ளியை பாதுகாக்கும் முழு பொறுப்பையும் நிருவாக அதிகாரியே கவனித்து வந்தார் என விசாரணையில் தெரியவந்தது.

கோவில் அதிகாரிகளே உடைந்தையா? காவல்துறையினர் விசாரணை ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் வேளையில், சென்னையில் உள்ள மாநில இந்து அறநிலையத்துறை ஆணையாளர் பி.ஆர்.சம்பத், சேலம் எல்லைப்பிடாரியம்மன் கோவில் நிருவாக அதிகாரி சந்திரபிரகாஷ் மீது துறை சார்பு நடவடிக்கையாக அவரை தற்காலிக நீக்கம் செய்து நேற்று உத்தரவு பிறப்பித்தார்.கோவில் சொத்தான தங்கம், வெள்ளியை பாதுகாக்கும் பொறுப்பில் கவனக்குறைவாக செயல்பட்டதால் இத்தகையை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. அதே வேளையில் பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த தங்கம்வெள்ளி எங்கே? போனது. அதற்கு காரணமானவர்களில் இன்னும் சிலர் இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினரின் புலன் விசாரணையும் தொடர்ந்து நடந்து வருகிறது.

17 Jul 2010 சிவன் கோவிலில் கலசங்கள் திருட்டு பாளையங்கோட்டையை அடுத்த மேலப்பாட்டம் கிராமத்தில் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது.
www.dailythanthi.com/article.asp

 

நெல்லை மாவட்டத்தில் பரபரப்பு 2 கோவில்களின் கோபுர கலசங்கள் கொள்ளை ; மர்மக் கும்பல் கைவரிசை ஜூலை.17, 2010: நெல்லை, ஜூலை. 16- பாளை அருகே உள்ள மேலப்பாட்டம் கிராமத்தில் புகழ்பெற்ற பழமையான சிவன் கோவில் உள்ளது. சுமார் 300 ஆண்டுகளுக்கும் முந்தைய பாரம்பரியமான இந்த கோவிலின் கோபுரத்தில் 3 கும்ப கலசங்கள் இருந்தது. இந்த கோவிலில் அதிக சக்தி இருப்பதால் வேண்டியது நடக்கும் என்று ஏராளமான பொது மக்கள் தினசரி சென்று சாமி தரிசனம் செய்து வந்தனர். பத்மநாபபட்டர் தினமும் பூஜை செய்து பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கி வந்தார்.  நேற்று இரவு பூஜை முடிந்து பத்மநாப பட்டர் கோவிலை சுற்றி வந்து ஆய்வு செய்தார். அப்போது கோவிலின் மேல்புறம் பளபளப்பாக மின்னும் கோபுர கலசம் இல்லாமல் வெறுமையாக காட்சி அளித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கோவில் நிர்வாக அதிகாரி முத்துராமனுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவர் விரைந்து வந்து ஊழியர்கள் மூலம் கோவிலின் மேல் பகுதியில் ஏறி ஆய்வு செய்தார். அப்போது ஒரு மர்மக் கும்பல் கோவில் மேல் ஏறி 3 கோபுர கலசத்தையும் அப்படியே பெயர்த்து எடுத்து கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. இந்த கும்ப கலசத்தின் மதிப்பு தற்போது பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து நிர்வாக அதிகாரி முத்துராமன் பாளை தாலுகா போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், சப்- இன்ஸ் பெக்டர்கள் சண்முகவேல், செந்தட்டியா பிள்ளை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இடிதாக்கிய பழமையான கோபுர கலசம் இரிடியமாக மாறி சக்தி வாய்ந்ததாக மாறிவிடும் என்று புரளி, கொள்ளை: இதுபோல தென்காசி அருகே உள்ள கீழப்புலியூர் குலசேகரநாதர் கோவிலிலும் நேற்று சக்தி வாய்ந்த 1 கோபுர கலசம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் சமீபத்தில்தான் கும்பா பிஷேகம் நடத்தப்பட்டு கோபுர கலசத்துக்கு தங்க முலாம் பூசி உள்ளனர். இந்த நிலையில் இந்த கோபுர கலசமும் கொள்ளை நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மிகவும் பழமையான கோபுர கலசத்தில் அபூர்வ சக்தி இருப்பதாக கருதி இந்த கொள்ளை சம்பவம் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் ஒரு கும்பல் இடிதாக்கிய பழமையான கோபுர கலசம் இரிடியமாக மாறி சக்தி வாய்ந்ததாக மாறிவிடும் என்று பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்டு வந்தது.

இசக்கி அம்மன் கோவில் உண்டியல் கொள்ளை: அந்த கும்பலைச் சேர்ந்த வர்கள் தான் தற்போது கோபுர கலசங்களை கொள்ளை அடித்துச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ராகார்க் மேற்பார்வையில் கோபுர கலச கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. இவர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள தென்னிமலையில் முப்பந்தல் இசக்கி அம்மன் கோவில் உள்ளது. சம்பவத்தன்று இங்கு வழக்கம் போல் பூஜையை முடித்துவிட்டு சென்று விட்டனர். நள்ளிரவு மர்மநபர் அந்த கோவிலுக்குள் புகுந்தான். அங்கு இருந்த உண்டியலை உடைத்து பணத்தை அள்ளியதோடு அம்மனுக்கு வைத்திருந்த சூலாயுதத்தையும் திருடி சென்றுவிட்டான். அதே வேளையில் அருகில் இருந்த உய்க்காட்டு சுடலை கோவிலிலும் உண்டியல் உடைத்து பணம் திருட்டு போனது. இந்த சம்பவங்கள் தொடர்பாக தென்னி மலையை சேர்ந்த வீரபெருமாள் (69), மாரியப் பன் ஆகியோர் நாங்குநேரி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி அருகே 2 கோவில்களில் நகை உண்டியல் கொள்ளை[4] ஜூலை 14, 2010: கும்மிடிப்பூண்டி அடுத்து உள்ளது தம்புரெட்டிபாளையம் இங்கு பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. நேற்று நள்ளிரவு இந்த கோவிலுக்கு வந்த கொள்ளையர்கள் முதலில் பின்பக்கமாக கரு வறையையொட்டி உள்ள சுவரை உடைக்க முயற்சி செய்தனர். அது பலன் அளிக்காததால் கோவிலின் முன்பக்க இரும்பு கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் கோவில் வனா கத்தில் உள்ள பழங்கால ராட்சத மரக்கதவின் பூட்டை உடைத்து கருவறைக்குள் புகுந்தனர். அங்கு அம்மன் கழுத்தில் கிடந்த தாலி சரடு, செயின், காப்பு போன்ற 10 பவுன் நகைகளையும், வெள்ளி பொருட்களையும் அள்ளிச் சென்றனர். இது தவிர கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த ரொக்க பணம் மற்றும் சில்லறை காசுகளை யும் அள்ளிச் சென்றனர்.

நத்தம் கிராமத்தில் எல்லையம்மன் கோவிலும் கொள்ளை: இக்கோவிலின் அருகே 100 மீட்டர் தொலைவில் நத்தம் கிராமத்தில் எல்லையம்மன் கோவில் உள்ளது. இங்கும் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து ரொக்கப்பணம் மற்றும் சில்லறை காசுகளை அள்ளிச் சென்றனர். 2 கோவில்களிலும் கொள்ளை போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும். ஒரே நாள் இரவில் அடுத் தடுத்து 2 அம்மன் கோவில் களில் கொள்ளை போன சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது. கடந்த 2 வருடத்திற்கு முன்னர்தான் தம்பிரெட்டிபாளையம் கிராமத்தில் உள்ள அங் காள பரமேஸ்வரி கோவி லில் கொள்ளை சம்பவம் நடந்தது. அப்போது 13 பவுன் நகையை கொள்ளை போனது குறிப்பிடத் தக்கது. கும்மிடிப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

சோழிங்கநல்லூர் அருகே கோவில் கலசம் கொள்ளை [5]ஜூலை.12, 2010: திருவான்மியூர், ஜூலை. 12- சென்னை சோழிங்கநல் லூர் அடுத்த செம்மஞ்சேரி ராஜீவ் காந்தி சாலை பழத்தோட்டம் பகுதியில் ஸ்ரீநிவாச பெருமாள்கோவில் உள்ளது. நேற்று இரவு 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் ஆட்டோவில் அங்கு வந்தது. அவர்கள் மதில்சுவர் ஏறி குதித்து கோவிலுக்குள் சென்றனர். பின்னர் பூட்டை உடைத்து கோவிலுக்குள் புகுந்தனர்.  அங்கிருந்த கோவில் கலசம், டி.வி.டி.பிளேயர் மற்றும் பொருட்களை கொள்ளையடித்தனர். அத்தனை பொருட்களையும் கோணிப்பையில் கட்டி ஆட்டோவில் ஏற்றினார் கள். பின்னர் மீண்டும் கோவிலுக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது செம்மஞ்சேரி போலீசார் ரோந்து சென்று கொண்டி ருந்தனர். இதனால் கொள்ளை யர்கள் 4 பேரும் மதில்சுவர் ஏறி குதித்து ஆட்டோவில் தப்பினார்கள்.

அய்யனார் கோவிலில் கொள்ளை, ஜூலை. 11, 2010[6]: ஒரத்தநாடு- ஒரத்தநாடு அருகே பெருமங்கல கோவில் கீழையூரில் அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மட்டுமே பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு பூஜை செய்ய வந்தபோது கோவிலில் பொருட்கள் திருட்டு போனதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதில் பூஜை பொருட்கள் மற்றும் குத்து விளக்கு வெண்கல பொருட்கள் என சுமார் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போனது. இதுகுறித்து பாப்பாநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

சூளகிரி அருகே மாரியம்மன் கோவிலில் உண்டியல் உடைத்து கொள்ளை[7] ஓசூர், ஜூலை. 10, 2019 (சனிக்கிழமை): சூளகிரி அருகே உள்ள எலசேப்பள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும், 50-க்கும் மேற்பட்ட பல்லக்கு உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த கோவிலுக்கு சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திரளாக வந்து செல்வார்கள். காணிக்கை பணமும் உண்டியலில் அதிகளவில் சேரும். இந்நிலையில் நேற்று நள்ளிரவு மர்மநபர்கள் யாரோ கோவிலின் உண்டியலை உடைத்து கொள்யைடித்து சென்று விட்டனர். இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதிராம்பட்டினத்தில் துணிகரம் பெருமாள் கோவிலில் நகை கொள்ளை (ஜூன்.26, 2010)[8]:  பட்டுக்கோட்டை, – தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டினம் உள்ளது. இங்கு பிரசித்திபெற்ற ரெங்கநாதர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பூசாரி பூஜையை முடித்து விட்டு பூட்டி விட்டு சென்றார். பின்னர் இன்று காலை வந்து பார்த்த போது கோவிலில் இருந்த பொருட்கள் கொள்ளை போய் இருந்தது.  இதை கண்டு பூசாரி அதிர்ச்சியடைந்தார். கோவில் கருவறை அருகே இருந்த 80 கிலோ எடை கொண்ட வெண்கல விளக்கு, 2 அடி குத்து விளக்கு மற்றும் அம்பாள் கழுத்தில் கிடந்த 1 பவுன் தாலி உள்பட பல பொருட்கள் திருட்டு போய் இருந்தது. இதன் மதிப்பு ரூ. 50 ஆயிரம் ஆகும். இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் ஜெயராமன் அதிராம் பட்டினம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் நாராயணசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அதிராம்பட்டினத்தில் பெருமாள் கோவிலில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவில்கலசம்திருட்டு[9] ஜூன் 16, 2010: அரியலூர்: குழுமூர் பெருமாள் கோவில் கலசத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, குழுமூர் கிராமத்திலுள்ள வரதராஜ பெருமாள் கோவிலின் தாயார் சன்னதியிலுள்ள கோபுர கலசம் திருட்டு போயுள்ளது. இரண்டடி உயரமும், மூன்றரை கிலோ எடையும் கொண்ட இந்த வெண்கல கலசம் திருட்டு போனது குறித்து, கோவில் நிர்வாக அலுவலர் மணி கொடுத்த புகாரின் பேரில், செந்துறை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கண்டமானடி கோவிலில் திருட்டு Dinamalar

23 Jun 2010 கண்டமானடி கோவிலில் திருட்டு. அதிகம் படித்தவை கோவிலில் புகுந்த மர்ம ஆசாமிகள் கோவில் கலசத்தை திருடிச் சென்றனர்.

சிதம்பரம் அருகே கோவில் கலசம் திருட்டு

13 Jan 2010 சிதம்பரம் அருகே கோவில் கலசம் திருட்டு. சிதம்பரம் : சிதம்பரம் அருகே கோவில் செப்பு கலசங்கள் திருடிய மர்ம ஆசாமியை
cuddalore-news.blogspot.com/…/blog-post_5697.html

ஈரோடுகோவிலில்கோபுரகலசம்திருட்டு[10] ஜூன் 9, 2010: ஈரோடு: ஈரோடு அக்ரஹாரம் வீதியில் பழமை வாய்ந்த பெருமாள் ஐயர் கோயில் உள்ளது. கோவில் கோபுரக் கலசம் நேற்று காணாமல் போனது. கோவில் நிர்வாகி முரளி கூறியதாவது: இக்கோவில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. நாள்தோறும் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறந்து, இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படும். இரண்டாண்டுக்கு முன் இதே கோவிலில் விமானக் கலசம் திருட்டு போனது. திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருடனை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மே 15ம் தேதி அக்ஷய திருதியையன்று கோவில் விமானக் கலசம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து டவுன் போலீஸாருக்கு புகார் செய்துள்ளோம். திருட்டுபோன கலசம் சுத்தமான செம்பாலானது. இதன் மதிப்பு 7,000 ரூபாய் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். எனினும் டவுன் போலீஸார் இதுபற்றி வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை.

நாமக்கல் கோவிலில் கொள்ளை[11], ப.வேலூர் :மே 22, 2010:பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் உண்டியலை உடைத்து, ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் அருகே பாண்டமங்கலத்தில் உள்ள பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவிலில், நேற்று காலை கோவில் துப்புரவு பணியாளர் சுப்ரமணி, சுத்தம் செய்ய வந்தார்.அப்போது, கோவில் பூட்டு உடைக்கப்பட்டு, கோவில் வளாகத்தில் இருந்த உண்டியலும் மாயமாகியிருந்தது. இதை, கோவில் அர்ச்சகர் ஸ்ரீராம், அலுவலர் சிவசண்முகமிடம், சுப்ரமணி தெரிவித்தார். கோவில் அலுவலர் சிவசண்முகம், போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தினர். கைரேகை பதிவு செய்யப்பட்டது. கோவிலில் திருடப்பட்ட உண்டியல், கோவிலுக்கு பின்புறம் வீசப்பட்டிருந்தது. அதில் இருந்த நகை, பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. உண்டியலில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் இருந்திருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

வேதபிரகாஷ்

21-07-2010


[1] தினமலர், புதுக்கோட்டை அருகே கோவில் உண்டியல் உடைத்து கொள்ளை, ஜூலை 21,2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=44176

[2] http://www.viduthalai.periyar.org.in/20100721/news13.html

[3] http://www.dailythanthi.com/article.asp?NewsID=581642&disdate=7/21/2010&advt=2

[4] மாலைமலர், http://www.maalaimalar.com/2010/07/14125553/gold-robbery-in-Gummidipoondi.html

[5] மாலைமலர், http://www.maalaimalar.com/2010/07/12131716/robbery-in-temple.html

[6] மாலைமலர் நாளிதழ் , சென்னை 21-07-2010 (புதன்கிழமை)

http://www.maalaimalar.com/2010/07/11134707/temple.html

[7]மாலைமலர்,  http://www.maalaimalar.com/2010/07/10161958/mariamman-temple.html

[8] மாலைமலர், சென்னை 26-06-2010 (சனிக்கிழமை), http://www.maalaimalar.com/2010/06/26160958/gold-robbery-in-tanjore.html

[9] http://thinamalar.net/News_Detail.asp?Id=20089

[10] http://www.dinamalar.com/News_Detail.asp?Id=15488

[11] தினமலர், http://www.dinamalar.com/News_Detail.asp?id=7828

நடராஜர் கோவில் நுழைவு மற்றும் கபாலீஸ்வரர் கோவில் நுழைவு போராட்டத்தின் பின்னணியும் ஒன்றே: அது இக்காலத்தைய கிருத்துவ-முஸ்லீம்-நாத்திக கோஷ்டிகளின் படையெடுப்புதான்

ஜூலை16, 2010

நடராஜர் கோவில் நுழைவு மற்றும் கபாலீஸ்வரர் கோவில் நுழைவு போராட்டத்தின் பின்னணியும் ஒன்றே: அது இக்காலத்தைய கிருத்துவ-முஸ்லீம்-நாத்திக கோஷ்டிகளின் படையெடுப்புதான்

கோவில்களைப்பற்றி இன்று யார்-யாரோ கவலைப்படுவது வினோதமாக இருக்கிறது! இந்துக்களைப் பற்றி அவதூறு பேசுவது, தூஷிப்பது, அவர்களுடைய சடங்குகள், கிரியைகள், விழாக்கள் முதலியவற்றைக் கேவலமாக, ஆபாசமாக, அசிங்கமாக பேசுவது, மத-நூல்கள்-வேதம், உபநிஷத்,வேதாந்தம் முதலியவற்றைப் படித்துப் பார்க்காமலேயே எல்லாம் தெரிந்தது போல விமர்சிப்பது[1], குறைகூறுவது ஏன் குற்றாஞ்ச்சாட்டுவது, அடிப்படை ஞானம் கூட தெரிந்து கொள்ளாமல், அதிகப்பிரசங்கித்தனமாக மாமேதைப் போல பேசுவது-எழுதுவது[2], என்ற நிலையில் தமிழகத்தில் அடிகமான அறிவு ஜீவிகள் உள்ளனர் என்பது தெரிந்ததே. ஆனால், தமிழ்-தமிழர்கள் என்ற போர்வையில், இந்திய-விரோதிகள் இணைத்தளங்களில் இந்துக்களுக்கு எதிராகச் செயல்படுவதும் தொடர்ந்த்கு நடந்து வருகிறது. அந்நிலையில் அவர்களுடைய ஆர்வம், பரிவு, கவலை, அக்கரை முதலியன கோவில்களின்மீது திரும்பியிருப்பது ஆன்மீக மர்மமாக, திராவிட ரகசியமாக, தமிழ்ப்புதிராக உள்ளது எனலாம்.

கிருத்துவ-முஸ்லீம்-நாத்திக கோஷ்டிகளின் படையெடுப்புதான்: இடைக்காலத்தில் முகமதியர்கள், 16-17 நூற்றாண்டுகளில் ஐரோப்பியல்க் கிருத்துவர்கள், 19 நூற்றாண்டில் இருவரும் சேர்ந்து செயல்பட்டது, 20ம் நூற்றாண்டில் சித்தாந்த ரீதியில் இணந்து செயல்பட்டது, இப்பொழுது  குறிப்பாக இவ்வாறு வகைப்படுத்திக் கொண்டு தாக்குகின்றனர். காலம் மாறியதால் ஆயுதங்கள், முறைகள், வழிகள், உடைகள், பேச்சசுகள், எழுத்துகள் முதலியன மாறியுள்ளன –

  • நாத்திக கோஷ்டிகள் (திராவிடம், தமிழ், ஸ்ரீலங்கைத் தமிழர் என்றேல்லாம் கொடிபிடித்துக் கொண்டு அலையும் கூட்டங்கள்)
  • கிருத்துவக் கூட்டங்கள் (மனித-உரிமைகள், பெண்கள்-உரிமை, சிறுவர்-உரிமை…………..என்ற பல போர்வையில் வேலை செய்யும் முழுக்கள்)
  • முஸ்லீம் இயக்கங்கள் (அடிப்படைவாத, பயங்கரவாத, தீவிரவாத, ஜிஹாதி கோஷ்டிகள்)
  • கம்யூனிஸ்ட் காம்ரேடுகள் (சீனா, ருஷ்யா மற்ற நாடுகளின் அடிவருடிகளாக இந்தியாவிற்கு எதிராக வேலைசெய்யும் தேசவிரோதிகள்)
  • மாவோயிஸ்ட்டுகள் (இதில் மேற்குறிப்பிட்ட எல்லாமே முகமூடிகளை அணிந்துகொண்டு வேலைசெய்யும்)
  • செக்யூலரிஸ்ட்டுகள் (இதில் மேற்குறிப்பிட்ட எல்லாமே வேலைசெய்யும், ஆனால், கொஞ்சம் படித்தவர்கள் போலக் காட்டிக்கொண்டு கழுதை அறுக்கும் நயவஞ்சகர்கள்)

இதில் வேடிக்கை என்னவென்றால், பார்ப்பனர்களும் இதில் இருப்பார்கள். அவர்களை மற்றவர்கள் மனதிற்குள் கருவிக்கொண்டிருந்தாலும், வெளியில் மதிப்பதாகக் காட்டிக் கொள்வார்கள். சமீபத்தில் வரதராஜனுக்கு நேர்ந்த கதியை இங்குக் குறிப்பிடலாம்[3].

நடராஜர் கோவில் தெற்கு வாயில் திறக்க வழக்கு (ஏப்ரல் 11,2010)[4]: சிதம்பரம் நடராஜர் கோவிலில் நந்தனார் நுழைந்த தெற்கு வாயிலை திறக்கக் கோரி, ஏழைகள் முன்னேற்றக் கழகம்[5] சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்[6]. சிதம்பரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், ஏழைகள் முன்னேற்றக்கழக மாநில பொதுச் செயலர் அர்ச்சுனன், உரிமை கோருவோர் ஒருங்கிணைப்பு கமிட்டி[7] தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், ‘நந்தனார் தாழ்த்தப்பட்டவர் என்பதால், அவர் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்து விட்டனர். எனவே, ஆதிதிராவிட, பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என கூறியுள்ளனர்[8]. இப்படியெல்லாம் “ஐடியா” கொடுப்பது யார் என்று பார்த்தால் இவர்களுடைய சித்தாந்தம் எல்லாம் வெளுத்துவிடுகிறது. ஏனெனில், அடிப்படையில் உள்ள சட்டநிலைக்கூட தெரியாமல் வழக்குப் போட்டுள்ளதாகக் கூறிக்கொள்வது வேடிக்கைத்தான்.

நடராஜர் கோவில் நுழைவு போராட்டம்எம்.எல்.ஏ., உள்ளிட்ட 473 பேர் கைது (ஜூலை 15,2010): சிதம்பரம் நடராஜர் கோவில் தெற்கு வாயில் நுழைவு போராட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்ட மா.கம்யூ., எம்.எல்.ஏ., மகேந்திரன் உள் ளிட்ட 473 பேர் கைது செய்யப் பட்டனர்[9]. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் நந்தனார் சென்ற தெற்கு வாயில் அடைக்கப்பட்டு கிடப்பதை கண்டித்து, தெற்கு வாயில் வழியாக கோவிலுக்குள் செல்லும் போராட்டம் நடத்தப் போவதாக, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி[10]யினர் அறிவித்தனர்.

சிதம்பரம் கோவிலில் இன்று ஆலைய நுழைவுப் போராட்டம்[11]: சிதம்பரம் நடராஜர் கோவிலில் நந்தன் நடந்து சென்ற பாதை வழியாக[12] இன்று புதன்கிழமை (14-07-2010) ஆலய நுழைவு நடைபெறவுள்ளது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் நடைபெறவுள்ள இந்த ஆலய நுழைவு போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர். சிதம்பரம் கோவிலில் தீண்டாமையின் அடையாளமாக நந்தன் நடந்த பாதை தற்போது அடைக்கப்பட்டுள்ளது. சமூக நீதியை நிலை நாட்டும் வகை யிலும் தீண்டாமையின் அடையாளத்தை அகற்றும் வகையிலும் நந்தனார் நடந்து சென்ற அந்த பாதையின் வழியாக பெருந்திரளான மக்கள் புதனன்று ஆலய நுழைவு நடத்திட உள்ளனர். இந்த எழுச்சிமிகு இயக்கத்தில் தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத்தலைவர் பி.சம்பத், பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் மற்றும் விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் கே.பால கிருஷ்ணன், பொதுச் செயலாளர் பெ.சண்முகம், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் பி. செல்வசிங், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

பங்கேற்றக் கூட்டங்கள், நபர்கள், அவர்களின் பின்னணி: அதன்படி நேற்று சிதம்பரம் வடக்கு மெயின் ரோடு அருகில் இருந்து –

  • மாநில தலைவர் சம்பத் தலைமையில்
  • பெரம்பூர் எம்.எல்.ஏ., மகேந்திரன்,
  • விவசாயிகள் சங்க செய லாளர் பாலகிருஷ்ணன்,
  • மா.கம்யூ., மாநிலக் குழு உறுப்பினர்கள் தனசேகரன்,
  • மூசா,
  • மாவட்ட செயலாளர் ஆறுமுகம்,
  • தீண்டாமை ஒழிப்பு மாவட்ட அமைப்பாளர் துரைராஜ்,
  • தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ்,
  • அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி ஸ்ரீரங்கன் பிரகாஷ்,
  • மனித உரிமை கட்சி விஸ்வநாதன்

உள்ளிட்டோர் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அவர்களை நடராஜர் கோவில் தெற்கு வாயிலில் டி.எஸ்.பி., மூவேந்தன் தலைமையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இருப்பினும், தடையை மீறி கோவிலுக்குள் செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து கோவில் வாயிலில் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்.டி.ஓ., ராமராஜ், தாசில்தார் காமராஜ் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.தீர்வு ஏற்படாத நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென தெற்கு வீதியில் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்ததை தொடர்ந்து, மறியலில் ஈடுபட்ட 57 பெண்கள் உள்ளிட்ட 473 பேரை போலீசார் கைது செய்து, போக்குவரத்தை சரி செய்தனர்.

இந்த பிரச்சினையைப் பற்றி மற்றவர்களும் விவாதிக்கின்றது வியப்பாக உள்ளது[13]. இனி அவர்களுடைய சார்புடைய தளத்தில் காண்ப்படுவதைக் காண்போம்.

சிதம்பரம் நந்தன் நடந்த பாதையைத் திறக்க போராட்டம்- 600 பேர் கைது: சிதம்பரம் நடராசர் ஆல யத்திற்கு தலித் சமூகத்தின் நந்தன் சென்ற பாதையை மறைத்து அடைக்கப்பட் டுள்ள கதவைத் திறந்திட வும், தடுப்புச் சுவரை அகற் றிடவும் வலியுறுத்தி புத னன்று (ஜூலை 14) எழுச்சி மிகு போராட்டம் நடை பெற்றது. அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்கும் அரசமைப்பு சாசனத்திற்கு விரோதமாக ஆலயத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடைப்பை அகற்றுவதற்கு மாறாக, தமிழக அரசின் காவல்துறையினர் அந்தக் கதவை திறக்கக்கோரி போராடியவர்களைக் கைது செய்தனர். நந்தன் சென்ற பாதையில் தாங்களும் நடந்து சென்று இப்போராட்டத் தில் பங்கேற்ற சுமார் 600 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிதம்பரம் நடராசர் ஆலயத்தில் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என நான்கு கோபுர வாயில்கள் உள்ளன. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நந்தன், நடராசரை தரிசிக்க தெற்கு கோபுர வாயில் அருகே உள்ள வழியில் சென்றார். அந்தணர்கள் அன்று, ஆலயம் தீட்டுப்பட்டுவிட்டது என்று கூறி நந்தனை தீக்கிரையாக்கி, பின்னர் அவர் நெருப்பில் இறங்கி தன்னை புனிதப் படுத்திக்கொண்டு நடராச ரோடு ஐக்கியமாகிவிட்டதாக கதை கட்டி விட்டனர். மேலும், நந்தன் சென்ற வாயில் கதவை மூடி, அதன் பின்னணியில் சுவர் எழுப்பி அடைத்துவிட்டனர். தீண்டாமைக் கொடு மையின் மூலஸ்தானம்போல் இருக்கும் இந்தச் சுவரை இடித்து, கதவைத் திறக்க, ஆலயத்தை தனது பொறுப் பில் எடுத்துக் கொண்டுள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி புதனன்று போராட்டம் நடைபெற்றது. தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத் திருந்தது.நகரில் உள்ள அம்பேத்கர் சிலை அருகிலிருந்து, பேரணி புறப்பட்டது. சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்ற பேரணிக்கு முன்னணியின் மாநிலத் தலைவர் பி. சம்பத் தலைமை தாங்கினார். தடுப்புச்சுவரை அகற்றக்கோரி ஊர்வலமாகச் சென்றவர்கள், தெற்கு கோபுர வாயில் அருகில் வந்தபோது காவல்துறை யினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். அங்கே கயிற்றுத் தடுப்புகள் அமைக்கப் பட்டிருந்தன. சிறிது நேரம் அங்கே பதட்டமான சூழல் உருவானது. பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அனைவரும் அங்கேயே சாலையில் அமர்ந்தனர்.

மூசா, சாமுவேல் முதலியோருக்கு இதில் என்ன சம்பந்தம்? பின்னர், கோட்டாட்சி யர் ராமராஜ், வட்டாட்சியர் காமராஜ், செயல் அலுவலர் சிவகுமார் உள்ளிட்டோர் போராட்டத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டம் குறித்து முன் கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தும், சம்பந்தப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை சார்பில்[14] உயர் அதிகாரிகள்[15] யாரும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது[16]. பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரிகள் தடுப்புச் சுவர் அகற்றப்படுவது குறித்து வாக்குறுதி எதுவும் அளிக்க மறுத்தனர்[17]. இதனால், அதிருப்தி அடைந்த ஊர்வலத்தினர், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து நின்றது. சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னணியின் தலைவர்களையும், தொண்டர்களை யும் காவல்துறையினர் கைது செய்தனர். 60 பெண் கள் உட்பட சுமார் 600 பேரை கைது செய்தனர்.

சம்பந்தமேயில்லாத ஆட்களின் போராட்டம் விஷமத்தனமேயன்றி நன்மைக்காக இல்லை: இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே. பாலகிருஷ்ணன், பி. செல்வசிங், பெ.சண்முகம், மாவட்டச் செயலாளர் டி. ஆறுமுகம், மாநில குழு உறுப்பினர்கள் எஸ். தனசேகரன், மூசா, சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே. மகேந்திரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் கே. சாமுவேல் ராஜ், தமுஎகச மாநில பொதுச் செயலாளர் ச. தமிழ்ச்செல்வன், அம்பேத்கர், இந்திய குடியரசு கட்சி சார்பில் அ.த.ஸ்ரீரங்கன் பிரகாஷ், மனித உரிமை கட்சியின் எல்.ஆர்.விஸ்வநா தன், ஆதி தமிழர் பேரவை மாநில தொண்டரணி தலைவர் வீரமுருகு, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கடலூர் மாவட்ட அமைப்பாளர் எஸ்.துரைராஜ் உள் ளிட்டோர் கலந்து கொண் டனர்.

“சுவரை அகற்றுவோம்” –சுவர்களை அகற்றுவோம் என்றால், பிறகு சுவர்களே எங்குமே தேவையிலையே: நடராசர் ஆலயத்தில் இருக்கும் தீண்டாமைச் சுவரை அரசு அப்புறப்படுத்தாவிட்டால் தீண்டாமை ஒழிப்பு முன்னணியே அதனை அப்புறப்படுத்தும் என்று பி. சம்பத் கூறினார். சிதம்பரத்தில் நடை பெற்ற போராட்டத்தை யொட்டி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “நந்தனார் சென்ற தெற்குவாயில் தீட்டுப்பட்டு விட்டது என்று ஆதிக்க சக்தியினரால் தீண்டாமைச் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இது வெட்கக் கேடானது. இதை அப்புறப்படுத்தக் கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் போராட்டம் நடத்துகிறோம்,” என்றார். கே. பாலகிருஷ்ணன் போராட்டம் பற்றி கூறுகையில், “சாதிக் கொடுமைக்கு உள்ளான நந்தனார் ஆலயத்தில் நுழைந்தான் என்ற காரணத்திற்காக அடைத்து வைப்பது, அறுசுவை உணவின் நடுவே மலத்தை அள்ளி வைப்பது போன்றதாகும்,” என்றார். “புனிதமான நடராசர் ஆலயத்தில் தீண்டாமையின் கோரவடிவமாக சுவர் நீடிப்பது அவமானத்திற்கு எடுத்துக் காட்டாகும். தமிழக அரசு அப்புறப்படுத்தவில்லை என்றால் தில்லை நடராசர் ஆலயத்தில் உள்ள தீண்டாமைச் சுவரை நாங்களே அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும்”, என்றும் அவர் கூறினார்.

“நந்தன் நடந்து சென்ற பாதை வழியாக” செல்கிறார்களா மாலிக்காஃபூர் பாதையில் செல்கிறார்களா?: நந்தன் / நந்தனார் / நாயன்மார் ஒரு மாபெரும் சிவபக்தர். ஆனால், இவர்கள் எல்லோரும் யார்? கிருத்துவர்கள், முஸ்லீம்கள், நாத்திகர்கள், இந்திய-விரோதிகள், இந்து-விரோதிகள், தமிழ்-துரோகிகள் இப்படியுள்ளனர். கோவில்களை இடிக்கும், கொள்ளயெடிக்கும் கூட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். அதாவது அந்த ஔரங்கசீப்புகள், மாலிக்காஃபூர்கள், ஜீஜன்பால்குகள், பெஸ்கிகள், கால்டுவெல்கள் முதலியோரையும் மிஞ்சும் வகையில் உள்ளனர். ஆக, இவர்கள் உள்ளே நுழைந்தால் என்னா ஆகும்?

நடராஜர் கோவிலில் 8வது முறையாக உண்டியல் திறப்பு : ரூ.25 லட்சம் உண்டியல் வருமானம்[18] (ஜூலை 15,2010): சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்த ஒன்றரை ஆண்டுகளில், எட்டாவது முறையாக நேற்று உண்டியல் திறக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் உண்டியல் காணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நேற்று வரை 25 லட்சத்து 12 ஆயிரத்து 485 ரூபாய் உண்டியல் மூலம் வருமானம் கிடைத்துள்ளது[19]. உண்டியல் வருமானம் அதிகரித்ததால் கோவிலில் அடுத்தடுத்து பல இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டது. தற்போது கோவிலில் மொத்தம் ஒன்பது உண்டியல்கள் உள்ளன. ஐந்தாவது முறையாக கடந்த ஜனவரி 9ம் தேதி உண்டியல் திறந்தபோது, 2009 வரை மொத்தம் 12 லட்சத்து 87 ஆயிரத்து 281 ரூபாய் வருமானம் கிடைத்தது[20]. நேற்று எட்டாவது முறையாக உண்டியல் திறக்கப்பட்டது. அறநிலையத்துறை ஊழியர்கள், தன்னார்வலர்கள் உட்பட 30 பேர் எண்ணினர். இதில் 3 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் வசூலாகி இருந்தது. கோவில், அரசு கட்டுப்பாட்டிற்கு வந்து ஒன்றரை ஆண்டுகளில், உண்டியல் மூலம் மட்டும் 25 லட்சத்து 12 ஆயிரத்து 485 ரூபாய் (வெளிநாட்டு கரன்சி மற்றும் வெள்ளி, தங்க நகைகள் போக) வருமானம் கிடைத்துள்ளது.

மாலிக்காஃபூர் பாதை செல்ல திட்டமா, சதியா? ஆக ஒருவேளை இதை மனதில் வைத்துக் கொண்டுதான் மாலிக்காஃபூர் போல அதே பாதையில் உள்ளே செல்வோம் என்று மிரட்டியதும் அந்த ஔரங்கசீப்பே நடவடிக்கை எடித்துவிட்டான் போலும்! ஒன்று ஒன்பதாக ஆகும்போது, வரும்படியும் அதிகமாகத்தானே ஆகும். இனி கோவில் பணத்தை நாத்திக அரசு எவ்வாறெல்லாம் உபயோகிக்கும் என்று யாருக்குத்தெரியும்?

வேதபிரகாஷ்

16-07-2010


[1] தமிழகத்தில் பெரும்பாலான பேச்சாளர்கள், எழுத்தாளர்களிடையே இந்த போக்கு உள்ளது. மாநாடுகளில், கருத்தரங்களில் மனுஸ்மிருதியைப் பற்றி அளந்து கொட்டுவர், ஆனால் எத்தனையாவது சுலோகத்தில் அது உள்ளது என்று கேட்டால் முழிப்பார்கள்; எந்த மூலத்ட்தைப் படித்தீர்கள் என்றால், இது எல்லொருக்கும் தெரிந்த விஷயம்தானே என்பார்கள். ஆக மூலத்தைக் கூடப் படிக்காமல் அல்லது அடிப்படை விஷயங்களைக்கூடத் தெரிந்து கொள்ளமால், தொடர்ந்து அரைத்தமாவையே அரைத்துக் கொண்டு 40-60 ஆண்டுகளைக் கழித்து வருகிறார்கள்.

[2] அம்பேத்கர் புத்தகங்களைப் படிக்காமல், மற்றவர்கள் சொல்வதை வைத்துக் கொண்டு அல்லது இரண்டாம்தர எழுத்துக்களை ஆதாரமாக வைத்துக் கொண்டு இந்துமதத்தை விமர்ஷிக்கும் போக்கு கேவலமானது.

[3] இதைத் தவிர பல ஐயர்கள் மாட்டியுள்ளர்கள். அவற்றைப் பற்றிய செய்திகளும் வந்துள்ளன, சில மறைக்கப்பட்டுள்ளன.

[4] இதே நடவடிக்கை-முறை சிதம்பரம் கோவில் அறத்துறைக்குள் வருவதற்கும், ஆறுமுகசாமி போர்வையில் நடந்தேரியுள்ளதை காணலாம்.

[5] இப்படி புதியதாக உருவாக்கப்பட்டுள்ள இயக்கங்களின் பின்னணி “ஏழைகளாக” இல்லை, கிருத்துவர்கள்தாம் உள்ளனர்.

[6] தினமலர், நடராஜர் கோவில் தெற்கு வாயில் திறக்க வழக்கு, http://www.dinamalar.com/General_detail.asp?news_id=23942

[7] ஏதோ பல இயக்கங்கள் உள்ளது மாதிரியும், அவற்றின் ஒட்டு மொத்தமான பிரதிநிதிகளின் பிரதிநிதியே இவர்கள்தாம் என்ற பொலித்தனத்துடன் செயல்படும் போக்கு. இதை தெய்வநாயகம் செயல்பாட்டில் காணலாம்.

[8] பல கோவில்களின் நான்கு பிரதான கதவுகளில் ஒன்று அல்லது இரண்டுதான் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன. இது சாஸ்திரங்களுக்கு விரோதமானது என்றாலும், பாதுகாப்பு என்று அடைத்துவைத்துள்ளர்கள். மதுரை போன்ற கோவில்களில் உண்மையான பக்தர்கள் உள்ளே நுழௌயவே, ஏகப்பட்ட கெடுபிடிகள் செய்கிறார்கள். ஆகவே, இவ்வழக்கு கருப்பு-சிவப்பு-பச்சைப் பரிவாரங்களின் கூட்டுச்செயலாகத் தெரிகிறது.

[9] தினமலர், நடராஜர் கோவில் நுழைவு போராட்டம்எம்.எல்.., உள்ளிட்ட 473 பேர் கைது, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=39956

[10] தமிழ்நாட்டில் எத்தனை முன்னணிகள் உள்ளன என்று பார்த்தால் தெரிந்து விடும், இவர்களின் தோத்ற்ற்ம், பதிவு, செயல்பாடு, பணப்போக்குவரத்து முதலியன.

[11] http://inioru.com/?p=15047

[12] அதற்கு இவர்களுக்கு யோக்கியதை இருக்கிறதா என்று தெரிவவில்லை. பெரியபுராணத்தை ஒழுங்காக தமிழில் படித்து அர்த்தம் தெரிந்து கொண்டிருந்தால், இவ்வாறான தமாழாக்கள் எல்லாம் செய்யமாட்டார்கள்.

[13] http://thamilislam.wordpress.com

[14] இந்து சமய அறநிலையத்துறை ஒன்றும் இந்துக்களுக்காக செய்படுவதில்லை. ஆக, இந்துக்களின் கோவிலைப் பற்றி இப்படி மற்றவர்கள் எல்லோருமே மூக்கைநுழைத்துக் கொண்டு வந்துள்ளது வேடிக்கைதான்.

[15] இதிலென்ன “உயர் அதிகாரிகள்”, “தாழ் அதிகாரிகள்” என்ற பேதமெல்லாம்? சித்தாந்த குழப்பவாதிகள் என்று அவர்களது எழுத்துகளிலேயே தெரிகிறது. மேலும், துறையே இந்து-விரோதமாக செயல்பட்ம்போது, அதிகாரிகள் வெறும் கைப்பாவைகளே.

[16] இங்கு தெய்வநாயகம் போக்கு, திட்டம், செயல்முறை முதலியன அப்படியே வெளிப்படுகிறது, அதாவது அந்த கபாலீஸ்வரர் நுழைவு போராட்டம் என்கின்ற கிருத்துவ-நாத்திக விஷமிக் கூட்டத்திற்கும் இதற்கும் தொடர்பு இருக்கிறது என்று தெரிகிறது.

[17] இவர்கள் என்ன, இந்திய சமுதாயத்தினர் ஒட்டுமொத்த பிரதிநிதிகளா, காவலர்களா, யார்? திடீரென்று இப்படி பெயர்களை வைத்துக் கொண்டு, கூட்டத்தைக் கூட்டிக் கொண்டு, ஒட்டுமொத்தமாக எல்லா இந்தியர்களையும், இந்துக்களையும் ஏமாற்றிவிடமுடியுமா?

[18] நடராஜர் கோவிலில் 8வது முறையாக உண்டியல் திறப்பு : ரூ.25 லட்சம் உண்டியல் வருமானம், ஜூலை 15,2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=39584

[19] கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில், கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி தமிழக அரசு அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பிப்ரவரி 5ம் தேதி அறநிலையத்துறை சார்பில் முதல் முறையாக நடராஜர் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த ஒரு உண்டியல் வைக்கப்பட்டது.

[20] கடந்த மார்ச் 10ம் தேதி ஆறாவது முறையாக உண்டியல் திறந்ததில் 4 லட்சத்து 15 ஆயிரத்து 453 ரூபாயும், ஏழாவது முறையாக மே 13ம் தேதி திறந்தபோது 4 லட்சத்து 17 ஆயிரத்து 751 ரூபாய் இருந்தது.

11ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாணிக்கவாசகர் சிலை திருட்டு: செம்மொழி மக்களின் அனுக்கிரகம்!

ஜூலை16, 2010

11ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாணிக்கவாசகர் சிலை திருட்டு: செம்மொழி மக்களின் அனுக்கிரகம்!

தமிழன்ம, செம்மொழி தமிழன் சிலை திருருவது, கோவிலைக் கொள்ளையெடிப்பது ஏன்? தமிழ், செம்மொழி தமிழ் பேசும் தமிழ் மக்களின் இப்படிப்பட்ட திருட்டுகள், கொள்ளைகள், கோவில் இடிப்புகள் முதலியவற்றை தொடர்ந்து செய்வதைப் பார்க்கும்போது, அந்த முகமது கோரி, முகமது கில்ஜி, ஔரங்கசீப், மாலிக்காஃபூர்………………பரவாயில்லை என்று தோன்றுகிறது. ஆனால், இப்படி செம்மொழி தமிழ் பேசிக்கொண்டு, கடவுள் நம்பிக்கையில்லாமல், பெரியார் நாத்திகம் பேசிக்கொண்டு, கருணாநிதி வழியில் கோவில் கொள்ளையடிக்கும் திராவிடத் தமிழர்களை என்னசெய்வது என்றே தெரியவில்லை.

கோவில் கொள்ளைக்கு சான்றிதழ் தேவையா? இப்பொழுது கோவில்களுக்கெல்லாம் ISO சான்றிதழ் வேறு வாங்குகிறார்கள், நாத்திக-கேடுகெட்டவர்கள். இப்படி கொளை, திருட்டு, நம்பிக்கையின்மை, நாத்திகம்………….என்றெல்லாம் வைத்துக் கொண்டு எந்த யோக்கியதையில் சான்றிதழ் வாங்குகிறார்கள்? அல்லது தாங்கள் இப்படியெல்லாம் கொள்ளையேடிக்கலாம் என்று அந்த சான்றிதழில் உள்ளதா?

மர்மமான முறையில் சிலை திருடப்பட்டுள்ளது: மன்னார்குடி : திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே, 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாணிக்கவாசகர் சிலை திருடு போனது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே திருக்களம்புதூரில் அறநிலையத்துறைக்கு உட்பட்ட சவுந்திரவள்ளியம்மன் உடனுறை வில்வாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. மிகவும் பழமையான இக்கோவிலில், 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாணிக்கவாசகர் வெண்கலச் சிலை இருந்தது. இச்சிலை, ஒரு அடி ஏழு அங்குல உயரம், 11.5 கிலோ எடை கொண்டது. கோவிலில் தனி இடத்தில் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இச்சிலை, நேற்று காலை மாயமாகி இருந்தது, கோவில் நடை திறந்து பார்த்தபோது தெரிந்தது. இக்கோவிலில் உள்ள கதவுகள், பூட்டுகள் ஏதும் உடைக்கப்படவில்லை. மர்மமான முறையில் சிலை திருடப்பட்டுள்ளது.

கோவில் செயல் அலுவலர் மாரியப்பன் கொடுத்த புகாரின்படி குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், எஸ்.ஐ., நடராஜன் ஆகியோர் விசாரிக்கின்றனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர். திருவாரூர், திருத்துறைப்பூண்டி, திருக்களம்புதூர் என இப்பகுதியில் உள்ள பழமையான கோவில்களில் படிகலிங்கம், மரகத லிங்கம், பஞ்சலோகச் சிலைகள் தொடர்ந்து திருட்டுப் போகின்றன. இங்குள்ள பழமையான, பாதுகாப்பற்ற கோவில் சிலைகளை காக்க அறநிலையத்துறை மற்றும் போலீசார், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவில்களுக்கு ISO சான்றிதழ் தேவையா?

நவம்பர்13, 2009

கோவில்களுக்கு ISO சான்றிதழ் தேவையா?

கோவில் நிர்வாகத் தரம் பார்க்கும் நிறுவனங்கள், முயற்ச்சிகள்: திடீரென்று இப்பொழுது கோவில்கள் எல்லாம் ISO தரச்சான்றிதழ் (ISO Certification) பெற்றாகிவிட்டன என்று தெரிவிக்கப் படுகின்றன. உடனே கோவில் டிரஸ்ட் அதிகாரிகள், தலைவர்கள், “இப்பொழுதெல்லாம் கோவில்கள் மிகவும் நன்றக நிர்வகிக்கப்படுவதாகவும், வெளியாட்களின் சேவையால் கோவிலின் பாதுகாப்பு மற்றும் தூய்மை நன்றாக இருப்பதாகவும் வைத்திருப்பதாகவும்“ அறிக்கைகள் விடப்படுகின்றன, செய்திகள் வருகின்றன. உடனே மற்றவர்களும் அப்பாதையைப் பின்பற்றுவோம் என்று கிளம்பிவிட்டர்கள்.

கோவில்களை சுத்தப்படுத்த வெளியாட்கள் வரவேண்டும் என்றால் இந்துக்கள் வெட்கப்பட வேண்டும்: இந்துக்களுக்கு என்ன கொஞ்சம் கூட சூடு, சொரணை, தன்மானம்…..  ….  ….  …இவையெல்லாம் இல்லையா, அல்லது மறந்து விட்டதா? “இந்துக்களாக” சாமி கும்பிட உள்ளே வரும்வரும் அவர்களுக்கு கொஞ்சம்கூட புத்தியில்லையா? மனத்திற்குள் இருக்கும் மாசை, அழிக்கை, குப்பைகளை அழிக்கத்தானே இந்துக்கள் கோவில்களுக்கு வருகிறார்கள்? ஒருவேளை, இத்தனை ஆண்டுகளாக கோவில்களுக்கு வந்து அங்கேயே இவையெல்லாவற்றையும் கொட்டிவிட்டுச் சென்றதால்தானோ, இந்த பெறுக்கிகள் இன்று தூய்மை செய்கிறேன் என்று கிளம்பி விட்டர்கள்? பாருங்களேன், கோவில்களுக்கு உள்ளயேயும், வெளியேயும்! [மனிதனால் வெளியேற்றப் பட்ட குப்பைகள், நாகரிக குப்பைகள், விஞ்ஞானமுறையில் கொட்டப்பட்டக் குப்பைகள்] அத்தகைய “பக்திகரமான” ஊழலை, அசிங்கத்தை ஏன் செய்ய வேண்டும்? இதையேல்லாம் தான் ஆழ்வார்களும், நாயன்மார்களும் சொல்லிக் கொடுத்தார்களா?

உழவாரப்பணி எங்கே போயிற்று? நமது திருமூலர் சொல்லியதைவிடவா, இவர்கள் நமக்கு ஆலய நிர்வாகத்தைப் பற்றி சொல்லிவிட போகின்றனர்? நினைவிருக்கிறதா? திருநாவுக்கரசர் / அப்பர் அடிகள் அந்த தள்ளாடும் வயதினிலும் எப்படியிருந்தார்? குவாலிஸ் காரில் சென்றாரா? கையிலே உழவாரப்ப்டை வைத்துக் கொண்டுதானே கோவில்களில் சுத்தம் செய்துகொண்டிருந்தார். ஆமாம், “பெருசு” பற்றியெல்லாம் கதை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் என்று ஏளனம் பேசி திசைத் திருப்பும் காலமிது! இந்துக்கள் விழித்துக் கொள்ளவேண்டும். எப்படி தங்களது மீதான தாக்குதல்கள் அதி-நவீன முறையில் பிரயோகிக்கப் படுகிறது, செயல்படுகிறது என்பதனை உணர்ந்து, அறிந்து காரியத்தில் இறங்கவேண்டும் [ஏனெனில் படித்த நண்பர்களே அத்தகைய நவீன நிர்வாகமுறை நல்லதிற்காகத்தானே என்று வாதிட தோன்றும்]

கோவில்களைக் கட்டியவர்களுக்கு நிர்வாகம் தெரியாதா? கோவில் நிர்வாகம் என்பது ஒன்றும் புதிய கலையல்ல, அதை இந்தியர்களுக்கோ, இந்துக்களுக்கோ புதியதாகச் சொல்லிக் கொடுக்க. கோவிகளைக் கட்டத் தெரியும், ஆனால் நிர்வகிக்கத் தெரியாது என்பன போல சித்தரித்துக் காட்டும் இந்த முயற்ச்சிகள் கோவில்களில் உண்மையான அக்கரை இல்லாத “கருப்புப் பரிவார்”, “சிகப்புப் பரிவார்” கோஷ்டிகள், மறைமுகமாக கோவில் பணத்தை சட்டரீதியாக உறுஞ்சுவதற்கு என்றுதான் தெரிகிறது. மேலும் அத்தகைய எண்ணத்தை உருவாக்குவதே நச்சுத்தனமானது.

“குருகுலங்கள்” அழிக்கப்பட்டு வியாபாரக் கூடங்கள் வளர்ந்தமை: எப்படி “குருகுலங்கள்” அழிக்கப்பட்டு, இன்று கல்வி வியாபாரமாக்கப் பட்டு அதிலும், சிறுபான்மையினர் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு இந்திய நாகரிகம், கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் முதலியவற்றை அழித்துக் கொண்டிருக்கிறார்களோ, அதுபொல, நேரிடையாக கோவில்களில் நுழைந்து, இந்தியநாகரிகம், கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் முதலியவற்றை அழிக்கப் போடும் வேடமோ என்ரு எண்ணத் தோன்றுகிறது. விஜயநகர காலத்திற்குப் பிறகு வந்த மேனாட்டு வியாபாரக் கம்பெனிகளும், இனிமேல் வரப்போகும் வியாபாரக் கம்பெனிகளும் ஆலயங்களைக் காக்காது, நிச்சயமாகக் கொள்ளைத் தான் அடிக்கும்.

கோவில்கள் வியாபாரக் கம்பெனிகள் அல்ல: இப்படியே விட்டுவிடால், எப்படி “குருகுலங்கள்” அழிக்கப்பட்டு, இன்று கல்வி வியாபாரமாகி போய்விட்டதோ, அதுபோல, கோவில்களும் கம்பனிகளாகிவிடும்! பிறகென்ன, லாபம்-நஷ்டம் பார்க்கவேண்டியிருக்கும்! ஒரு பொருளை / சேவையை விற்ப்பவன் மற்றும் வாங்குபவன் என்ற நிலையில் கோவில்கலின் நிலையைக் குறைத்துவிட்டால், அத்தகைத் தரம், தரமாகாது. அது கோவில்களுக்கு(ள்) வரும் “நம்பிக்கையாளர்களின்” திறம் குறைந்துவிட்டது என்பதுதான் பொருள்! பிறகு எந்த கோவில்கள் லாபத்துடன் இயங்குகிறது-இல்லை, எந்த கோவில்கள் வேவை செய்யும் கம்பெனிகளுக்கு சம்பளம் / போனஸ் கொடுக்கிறது-இல்லை, அத்தகைய கோவில்களின் மீது வழக்குகள், அத்தகைய குற்ரங்களை மீறியதற்கு கோவில்களின் மீது அபராதங்கங்கள், திவாலா நோட்டீஸுகள், ஜப்தி…………………அல்லது அடுத்த கோவில் ”தத்தெடுத்து”க் கொள்வது (takeover)………..  …  … இப்படியெல்லாம் நடக்கும். அது இந்துக்களுக்குத் தேவையா? அதுமட்டுமா, வேவை செய்யும் வேலையாட்கள் இந்த கோவில் சங்கம் . அந்த கோவில் சங்கம் என்று ஆரம்பித்துவிட்டு, கோவில் முன்பே கொடியேற்றி விடுவர்! அவை அரசியல் சார்புடையாதாக இருக்கும். திடீரென்று “ஸ்டிரைக்”கும் நடக்கும்! இதெல்லாம் தேவையா?

கோவில்களை பாதுகாப்பது யார்? “வெளியாட்களை நியமித்தல்” (Outsourcing) என்ற ரீதியில், இவர்களே புதிய கம்பெனிகளைத் தோற்றுவித்து அல்லது உள்ல கம்பெனிகளையே காசு கொடுத்து வாங்கிவிட்டு, அதன் மூலம் தமது அதிகாரத்தை பலப்படுத்திக் கொள்ள ஆரம்பிப்பார்கள். செக்யூரிடி கம்பெனிகள் பாதுகாப்பு அளிக்குமாம். பிறகு, யாராக இருக்கும் இந்த செக்யூரிடி கம்பெனிகள்? யார் அதில் பயிற்ச்சி கொண்டு, கோவில்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வருவர்? அதில் இந்துக்கள் அல்லாதவர்கள் கூட வரலாமே? ஏன் இத்தகைய வாய்ப்பு உள்ளது என்று தெரிந்தவுடனே “ஜிஹாதி தீவிரவாதிகள்” இன்று முதலே “இந்துக்கள்” போர்வையில் பயிற்ச்சி பெற்று கழகங்களின் கம்பெனிகள் மூலம் கோவில்களுக்குள் நுழைந்து விடுவார்களே? பிறகு, கோவில்களினின்று குண்டுகள் வெடிக்கும்! உடனே நம்முடைய செக்யூலரிஸ சித்தாந்திகள் மற்றவர்கள் “இந்து தீவிரவாதிகளே, குண்டு வைத்துவிட்டு” மற்றவர்கள்மீது பழி போடுகிறார்கள் என்ற பிரச்சாரத்தை ஆரம்பித்து விடுவார்கள். கோவிகளில் “ரையிட்” நடக்கும். ஞாபகம் இருக்கிறதா, “Operation Bluestar”!

இந்து அறநிலையத்துறை சான்று பெற்றுவிட்டதா? நாத்திகக் கூட்டங்கள் கோவில் சொத்துகளைக் கொள்ளையடித்து, ஔரங்கசீப்புகள், மாலிக்காஃபுர்களையும் வென்றுவிட்ட இவர்கள், இன்று கோவில் நிர்வாகத்தைப் பற்றி பேசுகின்றனர். கோடிக்கணக்கான கோவில் பணம் நிலுவையுள்ளதை வசூல் செய்ய இவர்களுக்குத் துப்பில்லை, நாதியில்லை. கோவில் நிலங்களையே பட்டாப் போட்டு கொடுத்து விட்டபிறகு, தவறு என்று “சர்க்குலர்” விடும் நிர்வாகம் இந்த கொள்ளையடிக்கும் நிர்வாகம். “இந்து அறநிலையத்துறை”யில் சம்பந்தமே இல்லாதவர்கள் வேலையில் இருந்து கொண்டு கோடிக்கணக்கான இந்துக்களை ஆட்டிப் படைக்கிறார்கள். கும்பாபிஷேகம் நடத்துகிறோம் என்று லட்சக்கணக்கில் வசூல் பணத்தை விழுங்கிவிடுகிறார்கள். ஆனால், அதே நேரத்தில், பல்லாயிரக் கணக்கான வழக்குகள் போட்டு, நல்ல காரியங்களை முடக்கி வைத்துள்ளார்கள்.

படித்த இந்து இளைஞர்கள் முன்னே வரவேண்டும்: இன்று ஓரளவிற்கு இந்து இளைஞர்களுக்கு விழிப்பு வந்துயிருக்கிறது [சித்தாந்தங்களினால் குழம்பியுள்ளனர் என்பது வேறு விஷயம்]. ஆகவே எப்படி கோவில்களைக் காப்பது என்பது பற்றி அவர்கள் தீவிரமான சிந்தனையுடன் அவர்கள் இத்தகைய பிரச்சினைகளை நுண்ணமாக யோசித்து, அலசி முடிவிற்கு வரவேண்டும். வாரத்திற்கு ஒருநாள் அங்கங்குள்ள இளைஞர்கள் கோவில்களுக்குச் சென்று சுத்தப்படுத்த ஆரம்பித்தாலே போதும், அந்த குப்பைகளை அள்ள, இன்னொரு டென்டர் விட்டுவிடுவார்கள்! கோடிக்கணக்கான “இந்துக்கள்” உள்ளனரே, அப்படி ஒருநாள் வந்து புல்லைப் பிடுங்கி, களையெடுக்க ஆரம்பித்துவிட்டலே போதும், இத்தகைய அதி-நவீன-யுக்திக்காரர்கள் அடங்கி விடுவர்கள்.

எழுமின், விழுமின்: விவேகானந்தர் சொல்லியபடி இந்துக்கள் விழித்துக் கொள்ளவும், எழுந்துக் கொள்ளவேண்டிய நேரம் வந்தாகிவிட்டது! இனி வெட்கப் படாமல், பாரபட்சம் பார்க்காமல், தைரியம்மாகப் புல்லைப் பிடுங்க வேண்டும், களையெடுக்க வேண்டும், நச்சுண்ணிகள், சாருண்ணிகள், ஒப்புண்ணிகளை அழித்துவிட வேண்டும். புறப்படுங்கள், எழுமின், விழுமின்!