Archive for the ‘பெரியகருப்பண்’ Category

விக்கிரங்கள், காதர்பாட்சா, ஜஸ்டின்: நாத்திக-செக்யுலார் அரசு!

ஓகஸ்ட்20, 2010

விக்கிரங்கள், காதர்பாட்சா, ஜஸ்டின்: நாத்திக-செக்யுலார் அரசு!

ஐபொன் விக்கிரங்களை சிலைகள் என்பானேன்? தமிழில் சிலை, விக்கிரகம் என்ற சொற்களுக்கு பொருள் வித்தியாசம் உள்ளது. சிலைகள் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். கோவிலில் பூஜிக்கப்படக்கூடிய விக்கிரங்கள் இருக்கிம். அவை பெரும்பாலும் ஐம்பொன் உலோகத்தினால் செய்ய்யப்பட்டவையாக இருக்கும். ஆகவே ஊடகங்கள், விக்கிரங்களை சிலைகள் என்று குறிப்பிடுவது வேடிக்கையாக உள்ளது.

திருவையாறில் திருடியவர்கள் சென்னையில் கைது: இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் இயக்குனர் (ஏடிஜிபி) டோக்ரா, ஐ.ஜி. ராஜேந்திரன் மற்றும் எஸ்.பி. ராதிகா ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது[1]:  “சிலை திருட்டை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்ஸ் பெக்டர் காதர்பாட்ஷா, சப்இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் ரகசிய தகவல் கிடைத்ததின் பேரில் மெரினா கடற்கரையில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வந்தனர். அப்போது உழைப்பாளர் சிலை அருகே இரண்டு பேர் சந்தேகிக்கப்படும்படி நடமாடுவது தெரியவந்தது. அவர்களிடம் பை ஒன்றும் இருந்தது. உடனே போலீசார் அவர்களை கைது செய்து விசாரித்தனர். விசாரணையின் போது அவர்கள் வைத்திருந்த பையில் ஐம்பொன் சாமி சிலை ஒன்று இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது, சாமி சிலைகளை கொள்ளை அடித்து வந்ததை ஒப்புக் கொண்டனர்.

ஐம்பொன் விக்கிரங்களைத் திருடும் ஜஸ்டின், ஆல்ரின்: “அவர்களில் ஒருவர் பெயர் ஜஸ்டின், லால்குடியைச் சேர்ந்தவர். மற்றொருவர் ஆல்ரின் பிரபு, அரியலூரைச் சேர்ந்தவர். இந்த இருவரும் சிலை திருடி விற்கும் செயலில் ஈடுபட்டு வந்தனர். புதுக்கோட்டையில் உள்ள ஒரு கோயிலில் இவர்கள் கைவரிசை காட்ட முயன்று பின்னர் சூழ்நிலை சரியில்லாதததால் அதனை கைவிட்டனர். இதனையடுத்து தஞ்சை மாவட்டம் திருவையாறில் உள்ள தில்லைஸ்தானம் எனும் ஊரை தேர்வு செய்தனர். இந்த ஊரில் உள்ள கிரிதபுரீஸ்வரர் ஆலயத்தில் பின்புறமாக மரத்திலிருந்து கயிறு கட்டி உள்ளே இறங்கி பூட்டை உடைத்து அங்கிருந்து நடராஜர் உள்பட 6 சாமி சிலைகளை கொள்ளையடித்துச் சென்றனர். அப்போது இவர்களோடு மேலும் 2 கூட்டாளிகள் இருந்தனர். கொள்ளையடித்த சாமி சிலைகளை புரோக்கர் மூலம் விற்க முயன்றவர்கள், காவிரி ஆற்றில் அதனை புதைத்து வைத்தனர். இதனிடையே, அம்மன் சிலையை கூட்டாளிகளில் ஒருவர் எடுத்துச் சென்றுவிட்டார். இரண்டு சிலைகளை விற்க முயன்றபோது மாட்டிக் கொள்ளும் நிலை ஏற்பட்டதால் அவற்றை சாக்கடையில் வீசி விட்டனர். பிரதோஷ அம்மன் சிலையை புரோக்கர் மூலம் விற்பதற்காக சென்னை வந்துள்ளனர். இந்த நிலையில்தான் தனிப்படை போலீசாரிடம் பிடிபட்டனர். இவர்கள் அளித்த புகாரின் பேரில் காவிரி ஆற்றில் புதைக்கப்பட்டிருந்த நடராஜர், சிவகாமி அம்மன் மற்றும் சந்திரசேகர் ஆகிய சாமி சிலைகள் மீட்கப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.25 லட்சமாகும்.

ஐம்பொன் சிலைகள் ஆன்மீக அடையாளமாக விளங்குவதோடு நம் நாட்டின் பாரம்பரியத்தையும் பறை சாற்றுகின்றன: “ஐம்பொன் சிலைகள் ஆன்மீக அடையாளமாக விளங்குவதோடு நம் நாட்டின் பாரம்பரியத்தையும் பறை சாற்றுகின்றன. இவற்றை திருடி விற்க முயலும் கும்பலை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 7 சிலை தடுப்பு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன”, இவ்வாறு அவர்கள் கூறினர். “சிலைகளை திருடுவது பொருளாதார குற்றம் மட்டுமல்ல; கலாசாரத்தின் மீதான தாக்குதல். சிலை திருட்டை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி., டோக்ரா தெரிவித்தார்[2].


[1] மாலைச்சுடர், ரூ.25 லட்சம் சிலைகள் மீட்பு, Friday, 20 August, 2010   01:25 PM

http://www.maalaisudar.com/newsindex.php?id=35187%20&%20section=1.

[2] தினமலர், சிலை திருடர்கள் கைது: நான்கு சிலைகள் மீட்பு, ஆகஸ்ட் 20, 2010,

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=66581

தமிழகத்தில் ஒரு நாளைக்கு ஒரு கோவிலில் கலசம், நகை, பணம் முதலியவை கொள்ளையடிக்கப்படுகின்றன!

ஜூலை21, 2010

தமிழகத்தில் ஒரு நாளைக்கு ஒரு கோவிலில் கலசம், நகை, பணம் முதலியவை கொள்ளையடிக்கப்படுகின்றன

 

நாத்திக ஆட்சியில் நடக்கும் இவை திட்டமிட்ட நடப்பைவையா? நாத்திகர்கள் வளர்ந்துள்ளதால், இப்படி கோவில் நகை மற்றும் விலையுயர்ந்த பொருள் எதுவாக இருந்தாலும், திருடுவது, கொள்ளயடிப்பது என்பது தினம்-தினம் நடக்க்கும் திழாலாகி விட்டது. அவற்றில் குறிப்பிட்ட அமைப்பு, முறை காணப்படுவதால், அத்தகைய கொள்ளையர்கள் திட்டமிட்டு செய்கிறார்களா என்ற சந்தேகம் எழுகின்றது.

  1. கோவில் ஆட்களே சம்பந்தப்படுவது. இவர்கள் எல்லாமே ஆளும் கட்சிக்க்காரர்களாக இருக்கின்றனர், அல்லது உள்ளூர் எம்.எல்,ஏ, எம்.பி, எம்.எல்.சி, வட்டச்செயலாளர்………….போன்ற நிலையில் உள்ளனர்.
  2. அறநிலையத்துறை ஆட்களே ஈடுபடுகின்றனர் / சம்பந்தப் பட்டுள்ளனர்.
  3. திருடியவர்களே, மறுபடியும் திருடுகின்றனர்.
  4. புதியதாக கும்பாபிஷேகம் நடந்தவுடன் திருடப்படுகின்றது.
  5. புதியதாகப் புரளிக் கிளப்பிவிட்டுத் திருடுகின்றனர்.
  6. உண்டி எண்ணப்படுகின்ற ஒரு-சில நாட்களுக்கு முன்பு உண்டியல் உடைக்கப் பட்டுத் திருடப் படுகிறது.
  7. காவலாளி இல்லாத கோவிலாகத் தேர்ந்தெடுக்கப்படுவது.
  8. உண்மை நகைகளை எடுத்துவிட்டு, பொலிநகைகளை வைப்பது.
  9. அம்மன் தாலிகளை, நகைகளைத் திருடுகின்ற கூட்டம் – பொதுவாக, கிராமம், நகர்புறங்களில் முன்னரெல்லாம், அம்மன் கோவிலில் எந்தர்த் திருடனும் கை வைக்க மாட்டான். ஆனால், இப்பொழுது அதிகமாவதால், குறிப்பிட்டக் கூட்டம் அல்லது அத்தகைய மனப்பாங்குள்ள ஆட்கள் / கூட்டம் ஈடுபடுவது தெரிகிறது.

10.  சில நேரங்களில் கவலாளியைக் கொல்லவும் தயுஅங்குவதில்லை. இது திட்டம் போட்டு செய்யப்படும் கொலை, கொள்ளை என்றாகிறது.

 

புதுக்கோட்டை அருகே கோவில் உண்டியல் உடைத்து கொள்ளை (ஜூலை 21,2010)[1]: புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் பழமை வாய்ந்த பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு நாள்தோறும் மூன்று கால பூஜைகள் நடக்கிறது. இதில், இலுப்பூர் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமப்பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசிப்பது வழக்கம். நேற்றுமுன்தினம் இரவு கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கருவறை முன்பிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கோவில் அர்ச்சகர் அய்யாவு கொடுத்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்துள்ள இலுப்பூர் போலீஸார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இரண்டு கோவில்களில் தங்கம், வெள்ளி காணவில்லை
கோவில் நிருவாக அதிகாரி இடை நீக்கம்
[2]: சேலம், ஜூலை 21_ சேலத்தில் 2 கோவில்களில் தங்கம்வெள்ளி காணாமல்போன பிரச் சினையில் எல்லைப் பிடாரியம்மன் கோவில் நிருவாக அதிகாரியை தற்காலிக பணி நீக்கம் செய்து மாநில இந்து சமய அற நிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டார். சேலம் மாநகரில் செரிசாலையில் உள்ள எல்லைப்பிடாரியம்மன் கோவில், சின்னக்கடை வீதியில் உள்ள சின்னமாரியம்மன் கோவில், அயோத்தியாபட்டணம் ராமர் கோவில் உள்பட 6 கோவில்களுக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் நிருவாக அதிகாரியாக சந்திரபிரகாஷ் இருந்து வருகிறார். எல்லைப்பிடாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் உண்டியல் மூலம் காணிக்கையாக கொடுக்கும் தங்கம், வெள்ளி போன்றவை வங்கி லாக்கரில் வைத்து பாதுக்காக்கப்படுவது வழக்கம். அதற்கான சாவி கோவில் நிருவாக அதிகாரி வசம் இருப்பது வழக்கம். இந்த நிலையில் கோவில் நிருவாக அதிகாரி மற்றும் அறங்காவலர் குழுவினர் சமீபத்தில் கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக கொடுத்துள்ள தங்கம் மற்றும் வெள்ளி இனங்களை நகை பதிவேட்டில் உள்ளவாறு சரியாக இருக்கிறதா? என சரிபார்த்தனர். அப்போது எல்லைப்பிடாரி அம்மனுக்கு சொந்தமான 36 பவுன் தங்கம் மற்றும் 580 கிராம் வெள்ளி குறைந்தது[3].

சின்ன மாரியம்மன் கோவிலிலும் கொள்ளை: இதுபோல சேலம் சின்னக்கடை வீதியில் உள்ள சின்ன மாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான தங்கம் மற்றும் வெள்ளியை சரி பார்த்தபோது அங்கும் 12 பவுன் தங்கம் காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட உதவி ஆணை யாளர் வரதராஜன் மற்றும் இணை ஆணை யர் ராஜா ஆகியோரிடம் புகார் தெரிவிக்கப்பட் டது. எல்லைப்பிடாரியம்மன் கோவில், சின்ன மாரியம்மன் கோவிலில் உள்ள தங்கம், வெள்ளி காணா மல்போனது குறித்து சேலம் நகர குற்றப்பிரிவு காவல்துறை யில் கோவில் நிருவாக அதி காரியான சந்திரபிரகாஷ் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் காவல் நிலைய ஆய்வாளர் கபிலன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இது தொடர்பாக புகார் கொடுத்த நிருவாக அதிகாரி சந்திரபிரகாஷ் மற்றும் கோவில் நிருவாக அலுவலக உதவியாளர்களிடம் புலன் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தங்கம், வெள்ளியை பாதுகாக்கும் முழு பொறுப்பையும் நிருவாக அதிகாரியே கவனித்து வந்தார் என விசாரணையில் தெரியவந்தது.

கோவில் அதிகாரிகளே உடைந்தையா? காவல்துறையினர் விசாரணை ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் வேளையில், சென்னையில் உள்ள மாநில இந்து அறநிலையத்துறை ஆணையாளர் பி.ஆர்.சம்பத், சேலம் எல்லைப்பிடாரியம்மன் கோவில் நிருவாக அதிகாரி சந்திரபிரகாஷ் மீது துறை சார்பு நடவடிக்கையாக அவரை தற்காலிக நீக்கம் செய்து நேற்று உத்தரவு பிறப்பித்தார்.கோவில் சொத்தான தங்கம், வெள்ளியை பாதுகாக்கும் பொறுப்பில் கவனக்குறைவாக செயல்பட்டதால் இத்தகையை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. அதே வேளையில் பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த தங்கம்வெள்ளி எங்கே? போனது. அதற்கு காரணமானவர்களில் இன்னும் சிலர் இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினரின் புலன் விசாரணையும் தொடர்ந்து நடந்து வருகிறது.

17 Jul 2010 சிவன் கோவிலில் கலசங்கள் திருட்டு பாளையங்கோட்டையை அடுத்த மேலப்பாட்டம் கிராமத்தில் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது.
www.dailythanthi.com/article.asp

 

நெல்லை மாவட்டத்தில் பரபரப்பு 2 கோவில்களின் கோபுர கலசங்கள் கொள்ளை ; மர்மக் கும்பல் கைவரிசை ஜூலை.17, 2010: நெல்லை, ஜூலை. 16- பாளை அருகே உள்ள மேலப்பாட்டம் கிராமத்தில் புகழ்பெற்ற பழமையான சிவன் கோவில் உள்ளது. சுமார் 300 ஆண்டுகளுக்கும் முந்தைய பாரம்பரியமான இந்த கோவிலின் கோபுரத்தில் 3 கும்ப கலசங்கள் இருந்தது. இந்த கோவிலில் அதிக சக்தி இருப்பதால் வேண்டியது நடக்கும் என்று ஏராளமான பொது மக்கள் தினசரி சென்று சாமி தரிசனம் செய்து வந்தனர். பத்மநாபபட்டர் தினமும் பூஜை செய்து பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கி வந்தார்.  நேற்று இரவு பூஜை முடிந்து பத்மநாப பட்டர் கோவிலை சுற்றி வந்து ஆய்வு செய்தார். அப்போது கோவிலின் மேல்புறம் பளபளப்பாக மின்னும் கோபுர கலசம் இல்லாமல் வெறுமையாக காட்சி அளித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கோவில் நிர்வாக அதிகாரி முத்துராமனுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவர் விரைந்து வந்து ஊழியர்கள் மூலம் கோவிலின் மேல் பகுதியில் ஏறி ஆய்வு செய்தார். அப்போது ஒரு மர்மக் கும்பல் கோவில் மேல் ஏறி 3 கோபுர கலசத்தையும் அப்படியே பெயர்த்து எடுத்து கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. இந்த கும்ப கலசத்தின் மதிப்பு தற்போது பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து நிர்வாக அதிகாரி முத்துராமன் பாளை தாலுகா போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், சப்- இன்ஸ் பெக்டர்கள் சண்முகவேல், செந்தட்டியா பிள்ளை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இடிதாக்கிய பழமையான கோபுர கலசம் இரிடியமாக மாறி சக்தி வாய்ந்ததாக மாறிவிடும் என்று புரளி, கொள்ளை: இதுபோல தென்காசி அருகே உள்ள கீழப்புலியூர் குலசேகரநாதர் கோவிலிலும் நேற்று சக்தி வாய்ந்த 1 கோபுர கலசம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் சமீபத்தில்தான் கும்பா பிஷேகம் நடத்தப்பட்டு கோபுர கலசத்துக்கு தங்க முலாம் பூசி உள்ளனர். இந்த நிலையில் இந்த கோபுர கலசமும் கொள்ளை நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மிகவும் பழமையான கோபுர கலசத்தில் அபூர்வ சக்தி இருப்பதாக கருதி இந்த கொள்ளை சம்பவம் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் ஒரு கும்பல் இடிதாக்கிய பழமையான கோபுர கலசம் இரிடியமாக மாறி சக்தி வாய்ந்ததாக மாறிவிடும் என்று பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்டு வந்தது.

இசக்கி அம்மன் கோவில் உண்டியல் கொள்ளை: அந்த கும்பலைச் சேர்ந்த வர்கள் தான் தற்போது கோபுர கலசங்களை கொள்ளை அடித்துச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ராகார்க் மேற்பார்வையில் கோபுர கலச கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. இவர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள தென்னிமலையில் முப்பந்தல் இசக்கி அம்மன் கோவில் உள்ளது. சம்பவத்தன்று இங்கு வழக்கம் போல் பூஜையை முடித்துவிட்டு சென்று விட்டனர். நள்ளிரவு மர்மநபர் அந்த கோவிலுக்குள் புகுந்தான். அங்கு இருந்த உண்டியலை உடைத்து பணத்தை அள்ளியதோடு அம்மனுக்கு வைத்திருந்த சூலாயுதத்தையும் திருடி சென்றுவிட்டான். அதே வேளையில் அருகில் இருந்த உய்க்காட்டு சுடலை கோவிலிலும் உண்டியல் உடைத்து பணம் திருட்டு போனது. இந்த சம்பவங்கள் தொடர்பாக தென்னி மலையை சேர்ந்த வீரபெருமாள் (69), மாரியப் பன் ஆகியோர் நாங்குநேரி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி அருகே 2 கோவில்களில் நகை உண்டியல் கொள்ளை[4] ஜூலை 14, 2010: கும்மிடிப்பூண்டி அடுத்து உள்ளது தம்புரெட்டிபாளையம் இங்கு பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. நேற்று நள்ளிரவு இந்த கோவிலுக்கு வந்த கொள்ளையர்கள் முதலில் பின்பக்கமாக கரு வறையையொட்டி உள்ள சுவரை உடைக்க முயற்சி செய்தனர். அது பலன் அளிக்காததால் கோவிலின் முன்பக்க இரும்பு கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் கோவில் வனா கத்தில் உள்ள பழங்கால ராட்சத மரக்கதவின் பூட்டை உடைத்து கருவறைக்குள் புகுந்தனர். அங்கு அம்மன் கழுத்தில் கிடந்த தாலி சரடு, செயின், காப்பு போன்ற 10 பவுன் நகைகளையும், வெள்ளி பொருட்களையும் அள்ளிச் சென்றனர். இது தவிர கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த ரொக்க பணம் மற்றும் சில்லறை காசுகளை யும் அள்ளிச் சென்றனர்.

நத்தம் கிராமத்தில் எல்லையம்மன் கோவிலும் கொள்ளை: இக்கோவிலின் அருகே 100 மீட்டர் தொலைவில் நத்தம் கிராமத்தில் எல்லையம்மன் கோவில் உள்ளது. இங்கும் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து ரொக்கப்பணம் மற்றும் சில்லறை காசுகளை அள்ளிச் சென்றனர். 2 கோவில்களிலும் கொள்ளை போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும். ஒரே நாள் இரவில் அடுத் தடுத்து 2 அம்மன் கோவில் களில் கொள்ளை போன சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது. கடந்த 2 வருடத்திற்கு முன்னர்தான் தம்பிரெட்டிபாளையம் கிராமத்தில் உள்ள அங் காள பரமேஸ்வரி கோவி லில் கொள்ளை சம்பவம் நடந்தது. அப்போது 13 பவுன் நகையை கொள்ளை போனது குறிப்பிடத் தக்கது. கும்மிடிப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

சோழிங்கநல்லூர் அருகே கோவில் கலசம் கொள்ளை [5]ஜூலை.12, 2010: திருவான்மியூர், ஜூலை. 12- சென்னை சோழிங்கநல் லூர் அடுத்த செம்மஞ்சேரி ராஜீவ் காந்தி சாலை பழத்தோட்டம் பகுதியில் ஸ்ரீநிவாச பெருமாள்கோவில் உள்ளது. நேற்று இரவு 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் ஆட்டோவில் அங்கு வந்தது. அவர்கள் மதில்சுவர் ஏறி குதித்து கோவிலுக்குள் சென்றனர். பின்னர் பூட்டை உடைத்து கோவிலுக்குள் புகுந்தனர்.  அங்கிருந்த கோவில் கலசம், டி.வி.டி.பிளேயர் மற்றும் பொருட்களை கொள்ளையடித்தனர். அத்தனை பொருட்களையும் கோணிப்பையில் கட்டி ஆட்டோவில் ஏற்றினார் கள். பின்னர் மீண்டும் கோவிலுக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது செம்மஞ்சேரி போலீசார் ரோந்து சென்று கொண்டி ருந்தனர். இதனால் கொள்ளை யர்கள் 4 பேரும் மதில்சுவர் ஏறி குதித்து ஆட்டோவில் தப்பினார்கள்.

அய்யனார் கோவிலில் கொள்ளை, ஜூலை. 11, 2010[6]: ஒரத்தநாடு- ஒரத்தநாடு அருகே பெருமங்கல கோவில் கீழையூரில் அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மட்டுமே பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு பூஜை செய்ய வந்தபோது கோவிலில் பொருட்கள் திருட்டு போனதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதில் பூஜை பொருட்கள் மற்றும் குத்து விளக்கு வெண்கல பொருட்கள் என சுமார் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போனது. இதுகுறித்து பாப்பாநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

சூளகிரி அருகே மாரியம்மன் கோவிலில் உண்டியல் உடைத்து கொள்ளை[7] ஓசூர், ஜூலை. 10, 2019 (சனிக்கிழமை): சூளகிரி அருகே உள்ள எலசேப்பள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும், 50-க்கும் மேற்பட்ட பல்லக்கு உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த கோவிலுக்கு சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திரளாக வந்து செல்வார்கள். காணிக்கை பணமும் உண்டியலில் அதிகளவில் சேரும். இந்நிலையில் நேற்று நள்ளிரவு மர்மநபர்கள் யாரோ கோவிலின் உண்டியலை உடைத்து கொள்யைடித்து சென்று விட்டனர். இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதிராம்பட்டினத்தில் துணிகரம் பெருமாள் கோவிலில் நகை கொள்ளை (ஜூன்.26, 2010)[8]:  பட்டுக்கோட்டை, – தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டினம் உள்ளது. இங்கு பிரசித்திபெற்ற ரெங்கநாதர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பூசாரி பூஜையை முடித்து விட்டு பூட்டி விட்டு சென்றார். பின்னர் இன்று காலை வந்து பார்த்த போது கோவிலில் இருந்த பொருட்கள் கொள்ளை போய் இருந்தது.  இதை கண்டு பூசாரி அதிர்ச்சியடைந்தார். கோவில் கருவறை அருகே இருந்த 80 கிலோ எடை கொண்ட வெண்கல விளக்கு, 2 அடி குத்து விளக்கு மற்றும் அம்பாள் கழுத்தில் கிடந்த 1 பவுன் தாலி உள்பட பல பொருட்கள் திருட்டு போய் இருந்தது. இதன் மதிப்பு ரூ. 50 ஆயிரம் ஆகும். இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் ஜெயராமன் அதிராம் பட்டினம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் நாராயணசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அதிராம்பட்டினத்தில் பெருமாள் கோவிலில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவில்கலசம்திருட்டு[9] ஜூன் 16, 2010: அரியலூர்: குழுமூர் பெருமாள் கோவில் கலசத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, குழுமூர் கிராமத்திலுள்ள வரதராஜ பெருமாள் கோவிலின் தாயார் சன்னதியிலுள்ள கோபுர கலசம் திருட்டு போயுள்ளது. இரண்டடி உயரமும், மூன்றரை கிலோ எடையும் கொண்ட இந்த வெண்கல கலசம் திருட்டு போனது குறித்து, கோவில் நிர்வாக அலுவலர் மணி கொடுத்த புகாரின் பேரில், செந்துறை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கண்டமானடி கோவிலில் திருட்டு Dinamalar

23 Jun 2010 கண்டமானடி கோவிலில் திருட்டு. அதிகம் படித்தவை கோவிலில் புகுந்த மர்ம ஆசாமிகள் கோவில் கலசத்தை திருடிச் சென்றனர்.

சிதம்பரம் அருகே கோவில் கலசம் திருட்டு

13 Jan 2010 சிதம்பரம் அருகே கோவில் கலசம் திருட்டு. சிதம்பரம் : சிதம்பரம் அருகே கோவில் செப்பு கலசங்கள் திருடிய மர்ம ஆசாமியை
cuddalore-news.blogspot.com/…/blog-post_5697.html

ஈரோடுகோவிலில்கோபுரகலசம்திருட்டு[10] ஜூன் 9, 2010: ஈரோடு: ஈரோடு அக்ரஹாரம் வீதியில் பழமை வாய்ந்த பெருமாள் ஐயர் கோயில் உள்ளது. கோவில் கோபுரக் கலசம் நேற்று காணாமல் போனது. கோவில் நிர்வாகி முரளி கூறியதாவது: இக்கோவில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. நாள்தோறும் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறந்து, இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படும். இரண்டாண்டுக்கு முன் இதே கோவிலில் விமானக் கலசம் திருட்டு போனது. திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருடனை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மே 15ம் தேதி அக்ஷய திருதியையன்று கோவில் விமானக் கலசம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து டவுன் போலீஸாருக்கு புகார் செய்துள்ளோம். திருட்டுபோன கலசம் சுத்தமான செம்பாலானது. இதன் மதிப்பு 7,000 ரூபாய் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். எனினும் டவுன் போலீஸார் இதுபற்றி வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை.

நாமக்கல் கோவிலில் கொள்ளை[11], ப.வேலூர் :மே 22, 2010:பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் உண்டியலை உடைத்து, ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் அருகே பாண்டமங்கலத்தில் உள்ள பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவிலில், நேற்று காலை கோவில் துப்புரவு பணியாளர் சுப்ரமணி, சுத்தம் செய்ய வந்தார்.அப்போது, கோவில் பூட்டு உடைக்கப்பட்டு, கோவில் வளாகத்தில் இருந்த உண்டியலும் மாயமாகியிருந்தது. இதை, கோவில் அர்ச்சகர் ஸ்ரீராம், அலுவலர் சிவசண்முகமிடம், சுப்ரமணி தெரிவித்தார். கோவில் அலுவலர் சிவசண்முகம், போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தினர். கைரேகை பதிவு செய்யப்பட்டது. கோவிலில் திருடப்பட்ட உண்டியல், கோவிலுக்கு பின்புறம் வீசப்பட்டிருந்தது. அதில் இருந்த நகை, பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. உண்டியலில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் இருந்திருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

வேதபிரகாஷ்

21-07-2010


[1] தினமலர், புதுக்கோட்டை அருகே கோவில் உண்டியல் உடைத்து கொள்ளை, ஜூலை 21,2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=44176

[2] http://www.viduthalai.periyar.org.in/20100721/news13.html

[3] http://www.dailythanthi.com/article.asp?NewsID=581642&disdate=7/21/2010&advt=2

[4] மாலைமலர், http://www.maalaimalar.com/2010/07/14125553/gold-robbery-in-Gummidipoondi.html

[5] மாலைமலர், http://www.maalaimalar.com/2010/07/12131716/robbery-in-temple.html

[6] மாலைமலர் நாளிதழ் , சென்னை 21-07-2010 (புதன்கிழமை)

http://www.maalaimalar.com/2010/07/11134707/temple.html

[7]மாலைமலர்,  http://www.maalaimalar.com/2010/07/10161958/mariamman-temple.html

[8] மாலைமலர், சென்னை 26-06-2010 (சனிக்கிழமை), http://www.maalaimalar.com/2010/06/26160958/gold-robbery-in-tanjore.html

[9] http://thinamalar.net/News_Detail.asp?Id=20089

[10] http://www.dinamalar.com/News_Detail.asp?Id=15488

[11] தினமலர், http://www.dinamalar.com/News_Detail.asp?id=7828

நடராஜர் கோவில் நுழைவு மற்றும் கபாலீஸ்வரர் கோவில் நுழைவு போராட்டத்தின் பின்னணியும் ஒன்றே: அது இக்காலத்தைய கிருத்துவ-முஸ்லீம்-நாத்திக கோஷ்டிகளின் படையெடுப்புதான்

ஜூலை16, 2010

நடராஜர் கோவில் நுழைவு மற்றும் கபாலீஸ்வரர் கோவில் நுழைவு போராட்டத்தின் பின்னணியும் ஒன்றே: அது இக்காலத்தைய கிருத்துவ-முஸ்லீம்-நாத்திக கோஷ்டிகளின் படையெடுப்புதான்

கோவில்களைப்பற்றி இன்று யார்-யாரோ கவலைப்படுவது வினோதமாக இருக்கிறது! இந்துக்களைப் பற்றி அவதூறு பேசுவது, தூஷிப்பது, அவர்களுடைய சடங்குகள், கிரியைகள், விழாக்கள் முதலியவற்றைக் கேவலமாக, ஆபாசமாக, அசிங்கமாக பேசுவது, மத-நூல்கள்-வேதம், உபநிஷத்,வேதாந்தம் முதலியவற்றைப் படித்துப் பார்க்காமலேயே எல்லாம் தெரிந்தது போல விமர்சிப்பது[1], குறைகூறுவது ஏன் குற்றாஞ்ச்சாட்டுவது, அடிப்படை ஞானம் கூட தெரிந்து கொள்ளாமல், அதிகப்பிரசங்கித்தனமாக மாமேதைப் போல பேசுவது-எழுதுவது[2], என்ற நிலையில் தமிழகத்தில் அடிகமான அறிவு ஜீவிகள் உள்ளனர் என்பது தெரிந்ததே. ஆனால், தமிழ்-தமிழர்கள் என்ற போர்வையில், இந்திய-விரோதிகள் இணைத்தளங்களில் இந்துக்களுக்கு எதிராகச் செயல்படுவதும் தொடர்ந்த்கு நடந்து வருகிறது. அந்நிலையில் அவர்களுடைய ஆர்வம், பரிவு, கவலை, அக்கரை முதலியன கோவில்களின்மீது திரும்பியிருப்பது ஆன்மீக மர்மமாக, திராவிட ரகசியமாக, தமிழ்ப்புதிராக உள்ளது எனலாம்.

கிருத்துவ-முஸ்லீம்-நாத்திக கோஷ்டிகளின் படையெடுப்புதான்: இடைக்காலத்தில் முகமதியர்கள், 16-17 நூற்றாண்டுகளில் ஐரோப்பியல்க் கிருத்துவர்கள், 19 நூற்றாண்டில் இருவரும் சேர்ந்து செயல்பட்டது, 20ம் நூற்றாண்டில் சித்தாந்த ரீதியில் இணந்து செயல்பட்டது, இப்பொழுது  குறிப்பாக இவ்வாறு வகைப்படுத்திக் கொண்டு தாக்குகின்றனர். காலம் மாறியதால் ஆயுதங்கள், முறைகள், வழிகள், உடைகள், பேச்சசுகள், எழுத்துகள் முதலியன மாறியுள்ளன –

  • நாத்திக கோஷ்டிகள் (திராவிடம், தமிழ், ஸ்ரீலங்கைத் தமிழர் என்றேல்லாம் கொடிபிடித்துக் கொண்டு அலையும் கூட்டங்கள்)
  • கிருத்துவக் கூட்டங்கள் (மனித-உரிமைகள், பெண்கள்-உரிமை, சிறுவர்-உரிமை…………..என்ற பல போர்வையில் வேலை செய்யும் முழுக்கள்)
  • முஸ்லீம் இயக்கங்கள் (அடிப்படைவாத, பயங்கரவாத, தீவிரவாத, ஜிஹாதி கோஷ்டிகள்)
  • கம்யூனிஸ்ட் காம்ரேடுகள் (சீனா, ருஷ்யா மற்ற நாடுகளின் அடிவருடிகளாக இந்தியாவிற்கு எதிராக வேலைசெய்யும் தேசவிரோதிகள்)
  • மாவோயிஸ்ட்டுகள் (இதில் மேற்குறிப்பிட்ட எல்லாமே முகமூடிகளை அணிந்துகொண்டு வேலைசெய்யும்)
  • செக்யூலரிஸ்ட்டுகள் (இதில் மேற்குறிப்பிட்ட எல்லாமே வேலைசெய்யும், ஆனால், கொஞ்சம் படித்தவர்கள் போலக் காட்டிக்கொண்டு கழுதை அறுக்கும் நயவஞ்சகர்கள்)

இதில் வேடிக்கை என்னவென்றால், பார்ப்பனர்களும் இதில் இருப்பார்கள். அவர்களை மற்றவர்கள் மனதிற்குள் கருவிக்கொண்டிருந்தாலும், வெளியில் மதிப்பதாகக் காட்டிக் கொள்வார்கள். சமீபத்தில் வரதராஜனுக்கு நேர்ந்த கதியை இங்குக் குறிப்பிடலாம்[3].

நடராஜர் கோவில் தெற்கு வாயில் திறக்க வழக்கு (ஏப்ரல் 11,2010)[4]: சிதம்பரம் நடராஜர் கோவிலில் நந்தனார் நுழைந்த தெற்கு வாயிலை திறக்கக் கோரி, ஏழைகள் முன்னேற்றக் கழகம்[5] சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்[6]. சிதம்பரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், ஏழைகள் முன்னேற்றக்கழக மாநில பொதுச் செயலர் அர்ச்சுனன், உரிமை கோருவோர் ஒருங்கிணைப்பு கமிட்டி[7] தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், ‘நந்தனார் தாழ்த்தப்பட்டவர் என்பதால், அவர் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்து விட்டனர். எனவே, ஆதிதிராவிட, பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என கூறியுள்ளனர்[8]. இப்படியெல்லாம் “ஐடியா” கொடுப்பது யார் என்று பார்த்தால் இவர்களுடைய சித்தாந்தம் எல்லாம் வெளுத்துவிடுகிறது. ஏனெனில், அடிப்படையில் உள்ள சட்டநிலைக்கூட தெரியாமல் வழக்குப் போட்டுள்ளதாகக் கூறிக்கொள்வது வேடிக்கைத்தான்.

நடராஜர் கோவில் நுழைவு போராட்டம்எம்.எல்.ஏ., உள்ளிட்ட 473 பேர் கைது (ஜூலை 15,2010): சிதம்பரம் நடராஜர் கோவில் தெற்கு வாயில் நுழைவு போராட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்ட மா.கம்யூ., எம்.எல்.ஏ., மகேந்திரன் உள் ளிட்ட 473 பேர் கைது செய்யப் பட்டனர்[9]. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் நந்தனார் சென்ற தெற்கு வாயில் அடைக்கப்பட்டு கிடப்பதை கண்டித்து, தெற்கு வாயில் வழியாக கோவிலுக்குள் செல்லும் போராட்டம் நடத்தப் போவதாக, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி[10]யினர் அறிவித்தனர்.

சிதம்பரம் கோவிலில் இன்று ஆலைய நுழைவுப் போராட்டம்[11]: சிதம்பரம் நடராஜர் கோவிலில் நந்தன் நடந்து சென்ற பாதை வழியாக[12] இன்று புதன்கிழமை (14-07-2010) ஆலய நுழைவு நடைபெறவுள்ளது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் நடைபெறவுள்ள இந்த ஆலய நுழைவு போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர். சிதம்பரம் கோவிலில் தீண்டாமையின் அடையாளமாக நந்தன் நடந்த பாதை தற்போது அடைக்கப்பட்டுள்ளது. சமூக நீதியை நிலை நாட்டும் வகை யிலும் தீண்டாமையின் அடையாளத்தை அகற்றும் வகையிலும் நந்தனார் நடந்து சென்ற அந்த பாதையின் வழியாக பெருந்திரளான மக்கள் புதனன்று ஆலய நுழைவு நடத்திட உள்ளனர். இந்த எழுச்சிமிகு இயக்கத்தில் தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத்தலைவர் பி.சம்பத், பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் மற்றும் விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் கே.பால கிருஷ்ணன், பொதுச் செயலாளர் பெ.சண்முகம், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் பி. செல்வசிங், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

பங்கேற்றக் கூட்டங்கள், நபர்கள், அவர்களின் பின்னணி: அதன்படி நேற்று சிதம்பரம் வடக்கு மெயின் ரோடு அருகில் இருந்து –

  • மாநில தலைவர் சம்பத் தலைமையில்
  • பெரம்பூர் எம்.எல்.ஏ., மகேந்திரன்,
  • விவசாயிகள் சங்க செய லாளர் பாலகிருஷ்ணன்,
  • மா.கம்யூ., மாநிலக் குழு உறுப்பினர்கள் தனசேகரன்,
  • மூசா,
  • மாவட்ட செயலாளர் ஆறுமுகம்,
  • தீண்டாமை ஒழிப்பு மாவட்ட அமைப்பாளர் துரைராஜ்,
  • தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ்,
  • அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி ஸ்ரீரங்கன் பிரகாஷ்,
  • மனித உரிமை கட்சி விஸ்வநாதன்

உள்ளிட்டோர் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அவர்களை நடராஜர் கோவில் தெற்கு வாயிலில் டி.எஸ்.பி., மூவேந்தன் தலைமையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இருப்பினும், தடையை மீறி கோவிலுக்குள் செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து கோவில் வாயிலில் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்.டி.ஓ., ராமராஜ், தாசில்தார் காமராஜ் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.தீர்வு ஏற்படாத நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென தெற்கு வீதியில் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்ததை தொடர்ந்து, மறியலில் ஈடுபட்ட 57 பெண்கள் உள்ளிட்ட 473 பேரை போலீசார் கைது செய்து, போக்குவரத்தை சரி செய்தனர்.

இந்த பிரச்சினையைப் பற்றி மற்றவர்களும் விவாதிக்கின்றது வியப்பாக உள்ளது[13]. இனி அவர்களுடைய சார்புடைய தளத்தில் காண்ப்படுவதைக் காண்போம்.

சிதம்பரம் நந்தன் நடந்த பாதையைத் திறக்க போராட்டம்- 600 பேர் கைது: சிதம்பரம் நடராசர் ஆல யத்திற்கு தலித் சமூகத்தின் நந்தன் சென்ற பாதையை மறைத்து அடைக்கப்பட் டுள்ள கதவைத் திறந்திட வும், தடுப்புச் சுவரை அகற் றிடவும் வலியுறுத்தி புத னன்று (ஜூலை 14) எழுச்சி மிகு போராட்டம் நடை பெற்றது. அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்கும் அரசமைப்பு சாசனத்திற்கு விரோதமாக ஆலயத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடைப்பை அகற்றுவதற்கு மாறாக, தமிழக அரசின் காவல்துறையினர் அந்தக் கதவை திறக்கக்கோரி போராடியவர்களைக் கைது செய்தனர். நந்தன் சென்ற பாதையில் தாங்களும் நடந்து சென்று இப்போராட்டத் தில் பங்கேற்ற சுமார் 600 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிதம்பரம் நடராசர் ஆலயத்தில் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என நான்கு கோபுர வாயில்கள் உள்ளன. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நந்தன், நடராசரை தரிசிக்க தெற்கு கோபுர வாயில் அருகே உள்ள வழியில் சென்றார். அந்தணர்கள் அன்று, ஆலயம் தீட்டுப்பட்டுவிட்டது என்று கூறி நந்தனை தீக்கிரையாக்கி, பின்னர் அவர் நெருப்பில் இறங்கி தன்னை புனிதப் படுத்திக்கொண்டு நடராச ரோடு ஐக்கியமாகிவிட்டதாக கதை கட்டி விட்டனர். மேலும், நந்தன் சென்ற வாயில் கதவை மூடி, அதன் பின்னணியில் சுவர் எழுப்பி அடைத்துவிட்டனர். தீண்டாமைக் கொடு மையின் மூலஸ்தானம்போல் இருக்கும் இந்தச் சுவரை இடித்து, கதவைத் திறக்க, ஆலயத்தை தனது பொறுப் பில் எடுத்துக் கொண்டுள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி புதனன்று போராட்டம் நடைபெற்றது. தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத் திருந்தது.நகரில் உள்ள அம்பேத்கர் சிலை அருகிலிருந்து, பேரணி புறப்பட்டது. சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்ற பேரணிக்கு முன்னணியின் மாநிலத் தலைவர் பி. சம்பத் தலைமை தாங்கினார். தடுப்புச்சுவரை அகற்றக்கோரி ஊர்வலமாகச் சென்றவர்கள், தெற்கு கோபுர வாயில் அருகில் வந்தபோது காவல்துறை யினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். அங்கே கயிற்றுத் தடுப்புகள் அமைக்கப் பட்டிருந்தன. சிறிது நேரம் அங்கே பதட்டமான சூழல் உருவானது. பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அனைவரும் அங்கேயே சாலையில் அமர்ந்தனர்.

மூசா, சாமுவேல் முதலியோருக்கு இதில் என்ன சம்பந்தம்? பின்னர், கோட்டாட்சி யர் ராமராஜ், வட்டாட்சியர் காமராஜ், செயல் அலுவலர் சிவகுமார் உள்ளிட்டோர் போராட்டத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டம் குறித்து முன் கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தும், சம்பந்தப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை சார்பில்[14] உயர் அதிகாரிகள்[15] யாரும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது[16]. பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரிகள் தடுப்புச் சுவர் அகற்றப்படுவது குறித்து வாக்குறுதி எதுவும் அளிக்க மறுத்தனர்[17]. இதனால், அதிருப்தி அடைந்த ஊர்வலத்தினர், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து நின்றது. சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னணியின் தலைவர்களையும், தொண்டர்களை யும் காவல்துறையினர் கைது செய்தனர். 60 பெண் கள் உட்பட சுமார் 600 பேரை கைது செய்தனர்.

சம்பந்தமேயில்லாத ஆட்களின் போராட்டம் விஷமத்தனமேயன்றி நன்மைக்காக இல்லை: இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே. பாலகிருஷ்ணன், பி. செல்வசிங், பெ.சண்முகம், மாவட்டச் செயலாளர் டி. ஆறுமுகம், மாநில குழு உறுப்பினர்கள் எஸ். தனசேகரன், மூசா, சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே. மகேந்திரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் கே. சாமுவேல் ராஜ், தமுஎகச மாநில பொதுச் செயலாளர் ச. தமிழ்ச்செல்வன், அம்பேத்கர், இந்திய குடியரசு கட்சி சார்பில் அ.த.ஸ்ரீரங்கன் பிரகாஷ், மனித உரிமை கட்சியின் எல்.ஆர்.விஸ்வநா தன், ஆதி தமிழர் பேரவை மாநில தொண்டரணி தலைவர் வீரமுருகு, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கடலூர் மாவட்ட அமைப்பாளர் எஸ்.துரைராஜ் உள் ளிட்டோர் கலந்து கொண் டனர்.

“சுவரை அகற்றுவோம்” –சுவர்களை அகற்றுவோம் என்றால், பிறகு சுவர்களே எங்குமே தேவையிலையே: நடராசர் ஆலயத்தில் இருக்கும் தீண்டாமைச் சுவரை அரசு அப்புறப்படுத்தாவிட்டால் தீண்டாமை ஒழிப்பு முன்னணியே அதனை அப்புறப்படுத்தும் என்று பி. சம்பத் கூறினார். சிதம்பரத்தில் நடை பெற்ற போராட்டத்தை யொட்டி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “நந்தனார் சென்ற தெற்குவாயில் தீட்டுப்பட்டு விட்டது என்று ஆதிக்க சக்தியினரால் தீண்டாமைச் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இது வெட்கக் கேடானது. இதை அப்புறப்படுத்தக் கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் போராட்டம் நடத்துகிறோம்,” என்றார். கே. பாலகிருஷ்ணன் போராட்டம் பற்றி கூறுகையில், “சாதிக் கொடுமைக்கு உள்ளான நந்தனார் ஆலயத்தில் நுழைந்தான் என்ற காரணத்திற்காக அடைத்து வைப்பது, அறுசுவை உணவின் நடுவே மலத்தை அள்ளி வைப்பது போன்றதாகும்,” என்றார். “புனிதமான நடராசர் ஆலயத்தில் தீண்டாமையின் கோரவடிவமாக சுவர் நீடிப்பது அவமானத்திற்கு எடுத்துக் காட்டாகும். தமிழக அரசு அப்புறப்படுத்தவில்லை என்றால் தில்லை நடராசர் ஆலயத்தில் உள்ள தீண்டாமைச் சுவரை நாங்களே அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும்”, என்றும் அவர் கூறினார்.

“நந்தன் நடந்து சென்ற பாதை வழியாக” செல்கிறார்களா மாலிக்காஃபூர் பாதையில் செல்கிறார்களா?: நந்தன் / நந்தனார் / நாயன்மார் ஒரு மாபெரும் சிவபக்தர். ஆனால், இவர்கள் எல்லோரும் யார்? கிருத்துவர்கள், முஸ்லீம்கள், நாத்திகர்கள், இந்திய-விரோதிகள், இந்து-விரோதிகள், தமிழ்-துரோகிகள் இப்படியுள்ளனர். கோவில்களை இடிக்கும், கொள்ளயெடிக்கும் கூட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். அதாவது அந்த ஔரங்கசீப்புகள், மாலிக்காஃபூர்கள், ஜீஜன்பால்குகள், பெஸ்கிகள், கால்டுவெல்கள் முதலியோரையும் மிஞ்சும் வகையில் உள்ளனர். ஆக, இவர்கள் உள்ளே நுழைந்தால் என்னா ஆகும்?

நடராஜர் கோவிலில் 8வது முறையாக உண்டியல் திறப்பு : ரூ.25 லட்சம் உண்டியல் வருமானம்[18] (ஜூலை 15,2010): சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்த ஒன்றரை ஆண்டுகளில், எட்டாவது முறையாக நேற்று உண்டியல் திறக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் உண்டியல் காணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நேற்று வரை 25 லட்சத்து 12 ஆயிரத்து 485 ரூபாய் உண்டியல் மூலம் வருமானம் கிடைத்துள்ளது[19]. உண்டியல் வருமானம் அதிகரித்ததால் கோவிலில் அடுத்தடுத்து பல இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டது. தற்போது கோவிலில் மொத்தம் ஒன்பது உண்டியல்கள் உள்ளன. ஐந்தாவது முறையாக கடந்த ஜனவரி 9ம் தேதி உண்டியல் திறந்தபோது, 2009 வரை மொத்தம் 12 லட்சத்து 87 ஆயிரத்து 281 ரூபாய் வருமானம் கிடைத்தது[20]. நேற்று எட்டாவது முறையாக உண்டியல் திறக்கப்பட்டது. அறநிலையத்துறை ஊழியர்கள், தன்னார்வலர்கள் உட்பட 30 பேர் எண்ணினர். இதில் 3 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் வசூலாகி இருந்தது. கோவில், அரசு கட்டுப்பாட்டிற்கு வந்து ஒன்றரை ஆண்டுகளில், உண்டியல் மூலம் மட்டும் 25 லட்சத்து 12 ஆயிரத்து 485 ரூபாய் (வெளிநாட்டு கரன்சி மற்றும் வெள்ளி, தங்க நகைகள் போக) வருமானம் கிடைத்துள்ளது.

மாலிக்காஃபூர் பாதை செல்ல திட்டமா, சதியா? ஆக ஒருவேளை இதை மனதில் வைத்துக் கொண்டுதான் மாலிக்காஃபூர் போல அதே பாதையில் உள்ளே செல்வோம் என்று மிரட்டியதும் அந்த ஔரங்கசீப்பே நடவடிக்கை எடித்துவிட்டான் போலும்! ஒன்று ஒன்பதாக ஆகும்போது, வரும்படியும் அதிகமாகத்தானே ஆகும். இனி கோவில் பணத்தை நாத்திக அரசு எவ்வாறெல்லாம் உபயோகிக்கும் என்று யாருக்குத்தெரியும்?

வேதபிரகாஷ்

16-07-2010


[1] தமிழகத்தில் பெரும்பாலான பேச்சாளர்கள், எழுத்தாளர்களிடையே இந்த போக்கு உள்ளது. மாநாடுகளில், கருத்தரங்களில் மனுஸ்மிருதியைப் பற்றி அளந்து கொட்டுவர், ஆனால் எத்தனையாவது சுலோகத்தில் அது உள்ளது என்று கேட்டால் முழிப்பார்கள்; எந்த மூலத்ட்தைப் படித்தீர்கள் என்றால், இது எல்லொருக்கும் தெரிந்த விஷயம்தானே என்பார்கள். ஆக மூலத்தைக் கூடப் படிக்காமல் அல்லது அடிப்படை விஷயங்களைக்கூடத் தெரிந்து கொள்ளமால், தொடர்ந்து அரைத்தமாவையே அரைத்துக் கொண்டு 40-60 ஆண்டுகளைக் கழித்து வருகிறார்கள்.

[2] அம்பேத்கர் புத்தகங்களைப் படிக்காமல், மற்றவர்கள் சொல்வதை வைத்துக் கொண்டு அல்லது இரண்டாம்தர எழுத்துக்களை ஆதாரமாக வைத்துக் கொண்டு இந்துமதத்தை விமர்ஷிக்கும் போக்கு கேவலமானது.

[3] இதைத் தவிர பல ஐயர்கள் மாட்டியுள்ளர்கள். அவற்றைப் பற்றிய செய்திகளும் வந்துள்ளன, சில மறைக்கப்பட்டுள்ளன.

[4] இதே நடவடிக்கை-முறை சிதம்பரம் கோவில் அறத்துறைக்குள் வருவதற்கும், ஆறுமுகசாமி போர்வையில் நடந்தேரியுள்ளதை காணலாம்.

[5] இப்படி புதியதாக உருவாக்கப்பட்டுள்ள இயக்கங்களின் பின்னணி “ஏழைகளாக” இல்லை, கிருத்துவர்கள்தாம் உள்ளனர்.

[6] தினமலர், நடராஜர் கோவில் தெற்கு வாயில் திறக்க வழக்கு, http://www.dinamalar.com/General_detail.asp?news_id=23942

[7] ஏதோ பல இயக்கங்கள் உள்ளது மாதிரியும், அவற்றின் ஒட்டு மொத்தமான பிரதிநிதிகளின் பிரதிநிதியே இவர்கள்தாம் என்ற பொலித்தனத்துடன் செயல்படும் போக்கு. இதை தெய்வநாயகம் செயல்பாட்டில் காணலாம்.

[8] பல கோவில்களின் நான்கு பிரதான கதவுகளில் ஒன்று அல்லது இரண்டுதான் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன. இது சாஸ்திரங்களுக்கு விரோதமானது என்றாலும், பாதுகாப்பு என்று அடைத்துவைத்துள்ளர்கள். மதுரை போன்ற கோவில்களில் உண்மையான பக்தர்கள் உள்ளே நுழௌயவே, ஏகப்பட்ட கெடுபிடிகள் செய்கிறார்கள். ஆகவே, இவ்வழக்கு கருப்பு-சிவப்பு-பச்சைப் பரிவாரங்களின் கூட்டுச்செயலாகத் தெரிகிறது.

[9] தினமலர், நடராஜர் கோவில் நுழைவு போராட்டம்எம்.எல்.., உள்ளிட்ட 473 பேர் கைது, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=39956

[10] தமிழ்நாட்டில் எத்தனை முன்னணிகள் உள்ளன என்று பார்த்தால் தெரிந்து விடும், இவர்களின் தோத்ற்ற்ம், பதிவு, செயல்பாடு, பணப்போக்குவரத்து முதலியன.

[11] http://inioru.com/?p=15047

[12] அதற்கு இவர்களுக்கு யோக்கியதை இருக்கிறதா என்று தெரிவவில்லை. பெரியபுராணத்தை ஒழுங்காக தமிழில் படித்து அர்த்தம் தெரிந்து கொண்டிருந்தால், இவ்வாறான தமாழாக்கள் எல்லாம் செய்யமாட்டார்கள்.

[13] http://thamilislam.wordpress.com

[14] இந்து சமய அறநிலையத்துறை ஒன்றும் இந்துக்களுக்காக செய்படுவதில்லை. ஆக, இந்துக்களின் கோவிலைப் பற்றி இப்படி மற்றவர்கள் எல்லோருமே மூக்கைநுழைத்துக் கொண்டு வந்துள்ளது வேடிக்கைதான்.

[15] இதிலென்ன “உயர் அதிகாரிகள்”, “தாழ் அதிகாரிகள்” என்ற பேதமெல்லாம்? சித்தாந்த குழப்பவாதிகள் என்று அவர்களது எழுத்துகளிலேயே தெரிகிறது. மேலும், துறையே இந்து-விரோதமாக செயல்பட்ம்போது, அதிகாரிகள் வெறும் கைப்பாவைகளே.

[16] இங்கு தெய்வநாயகம் போக்கு, திட்டம், செயல்முறை முதலியன அப்படியே வெளிப்படுகிறது, அதாவது அந்த கபாலீஸ்வரர் நுழைவு போராட்டம் என்கின்ற கிருத்துவ-நாத்திக விஷமிக் கூட்டத்திற்கும் இதற்கும் தொடர்பு இருக்கிறது என்று தெரிகிறது.

[17] இவர்கள் என்ன, இந்திய சமுதாயத்தினர் ஒட்டுமொத்த பிரதிநிதிகளா, காவலர்களா, யார்? திடீரென்று இப்படி பெயர்களை வைத்துக் கொண்டு, கூட்டத்தைக் கூட்டிக் கொண்டு, ஒட்டுமொத்தமாக எல்லா இந்தியர்களையும், இந்துக்களையும் ஏமாற்றிவிடமுடியுமா?

[18] நடராஜர் கோவிலில் 8வது முறையாக உண்டியல் திறப்பு : ரூ.25 லட்சம் உண்டியல் வருமானம், ஜூலை 15,2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=39584

[19] கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில், கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி தமிழக அரசு அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பிப்ரவரி 5ம் தேதி அறநிலையத்துறை சார்பில் முதல் முறையாக நடராஜர் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த ஒரு உண்டியல் வைக்கப்பட்டது.

[20] கடந்த மார்ச் 10ம் தேதி ஆறாவது முறையாக உண்டியல் திறந்ததில் 4 லட்சத்து 15 ஆயிரத்து 453 ரூபாயும், ஏழாவது முறையாக மே 13ம் தேதி திறந்தபோது 4 லட்சத்து 17 ஆயிரத்து 751 ரூபாய் இருந்தது.

11ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாணிக்கவாசகர் சிலை திருட்டு: செம்மொழி மக்களின் அனுக்கிரகம்!

ஜூலை16, 2010

11ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாணிக்கவாசகர் சிலை திருட்டு: செம்மொழி மக்களின் அனுக்கிரகம்!

தமிழன்ம, செம்மொழி தமிழன் சிலை திருருவது, கோவிலைக் கொள்ளையெடிப்பது ஏன்? தமிழ், செம்மொழி தமிழ் பேசும் தமிழ் மக்களின் இப்படிப்பட்ட திருட்டுகள், கொள்ளைகள், கோவில் இடிப்புகள் முதலியவற்றை தொடர்ந்து செய்வதைப் பார்க்கும்போது, அந்த முகமது கோரி, முகமது கில்ஜி, ஔரங்கசீப், மாலிக்காஃபூர்………………பரவாயில்லை என்று தோன்றுகிறது. ஆனால், இப்படி செம்மொழி தமிழ் பேசிக்கொண்டு, கடவுள் நம்பிக்கையில்லாமல், பெரியார் நாத்திகம் பேசிக்கொண்டு, கருணாநிதி வழியில் கோவில் கொள்ளையடிக்கும் திராவிடத் தமிழர்களை என்னசெய்வது என்றே தெரியவில்லை.

கோவில் கொள்ளைக்கு சான்றிதழ் தேவையா? இப்பொழுது கோவில்களுக்கெல்லாம் ISO சான்றிதழ் வேறு வாங்குகிறார்கள், நாத்திக-கேடுகெட்டவர்கள். இப்படி கொளை, திருட்டு, நம்பிக்கையின்மை, நாத்திகம்………….என்றெல்லாம் வைத்துக் கொண்டு எந்த யோக்கியதையில் சான்றிதழ் வாங்குகிறார்கள்? அல்லது தாங்கள் இப்படியெல்லாம் கொள்ளையேடிக்கலாம் என்று அந்த சான்றிதழில் உள்ளதா?

மர்மமான முறையில் சிலை திருடப்பட்டுள்ளது: மன்னார்குடி : திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே, 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாணிக்கவாசகர் சிலை திருடு போனது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே திருக்களம்புதூரில் அறநிலையத்துறைக்கு உட்பட்ட சவுந்திரவள்ளியம்மன் உடனுறை வில்வாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. மிகவும் பழமையான இக்கோவிலில், 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாணிக்கவாசகர் வெண்கலச் சிலை இருந்தது. இச்சிலை, ஒரு அடி ஏழு அங்குல உயரம், 11.5 கிலோ எடை கொண்டது. கோவிலில் தனி இடத்தில் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இச்சிலை, நேற்று காலை மாயமாகி இருந்தது, கோவில் நடை திறந்து பார்த்தபோது தெரிந்தது. இக்கோவிலில் உள்ள கதவுகள், பூட்டுகள் ஏதும் உடைக்கப்படவில்லை. மர்மமான முறையில் சிலை திருடப்பட்டுள்ளது.

கோவில் செயல் அலுவலர் மாரியப்பன் கொடுத்த புகாரின்படி குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், எஸ்.ஐ., நடராஜன் ஆகியோர் விசாரிக்கின்றனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர். திருவாரூர், திருத்துறைப்பூண்டி, திருக்களம்புதூர் என இப்பகுதியில் உள்ள பழமையான கோவில்களில் படிகலிங்கம், மரகத லிங்கம், பஞ்சலோகச் சிலைகள் தொடர்ந்து திருட்டுப் போகின்றன. இங்குள்ள பழமையான, பாதுகாப்பற்ற கோவில் சிலைகளை காக்க அறநிலையத்துறை மற்றும் போலீசார், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசுக்கு சார்பாக அளிக்கப்படும் தீர்ப்புகளில் மக்களுக்குத் தீர்ப்பு கிடைக்குமா?

ஜூன்8, 2010

அரசுக்கு சார்பாக அளிக்கப்படும் தீர்ப்புகளில் மக்களுக்குத் தீர்ப்பு கிடைக்குமா?

இன்றைய சட்டத்துறை 90% மேலாக ஆளும் அரசியலின் ஆதிக்கத்தில் இருந்து வருகிறது. நீதிபதிகள், வழக்கறிஞகள், சட்ட அங்கத்தினர்கள், அரசுதரப்பு வக்கீல்கள், டிரிபுயூனல் அங்கத்தினர்கள், உறுப்பினர்கள்………………என எல்லொருமே அரசியல் ரீதியில், இந்த கட்சி சார்பாக இத்தனை பேர்கள் என்று பங்கீட்டின் கீழ் நியமிக்கப் படுகிறார்கள். வெளிப்படையாக, அரசியல் சார்பான, ஜாதிகள் சார்பாக, ஏன் மத சார்பாக, வழக்கறிஞர்கள் சங்கங்களை வைத்துக் கொண்டு அரசியல் நடத்துகிறார்கள். பிறகு அத்தகைஅவர்களிடமிருந்தி பாரபட்சமின்றி தீர்ப்புகளை எதிர்பார்க்க முடியுமா?

கோவில் சொத்தை பாதுகாக்க நடவடிக்கை:அரசின் பதில் மனுவில் ஐகோர்ட் திருப்தி
பதிவு செய்த நாள் : ஜூன் 08,2010,00:06 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=14556

கோவில்களின் பாதுகாப்பிற்காக தொடரப்பட்ட வழக்கு: சென்னை:கோவில் சொத்துக்களை பாதுகாக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளில் சென்னை ஐகோர்ட் திருப்தியடைந்துள்ளது. இதுதொடர்பாக, வக்கீல் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.சென்னை ஐகோர்ட் வக்கீல் ஞானேஸ்வரன் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் உள்ள கோவில் சிலைகள், நகைகள், விலைமதிப்புள்ள சொத்துக்கள் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு அளிக்க தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

மனுவுக்கு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு:

  1. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 38 ஆயிரத்து 465 மத அமைப்புகள் உள்ளன.
  2. கோவில்களை புனரமைக்கவும், பூஜை வழிபாடுகளுக்கும், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும் நிதி உதவி வழங்குவதற்கு பல்வேறு நலத் திட்டங்களை அரசு வகுத்துள்ளது.
  3. கோவில் சிலைகள், நகைகள் மற்றும் விலைமதிப்புடைய சொத்துக்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
  4. சொத்துக்களை பாதுகாக்க, தமிழகம் முழுவதும் 17 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
  5. ஆயிரம் போலீசார், 3,000 முன்னாள் ராணுவத்தினர் அடங்கிய கோவில் பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டுள்ளது.
  6. வருமானம் வரும் கோவில்களில் இருந்து நிதி பெற்று, ஐந்து கோடி ரூபாய்க்கு நிதியம் உருவாக்கப்பட்டு, அதில் இருந்து கிடைக்கும் வட்டிப் பணத்தில், குறைந்த வருவாய் உள்ள கோவில்களில் எச்சரிக்கை கருவிகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  7. போதிய நிதி உள்ள பெரிய கோவில்களில் பாதுகாப்பு நடவடிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளது.
  8. கண்காணிப்பு “டிவி’ , எச்சரிக்கை கருவிகள், பாதுகாப்பு பெட்டக வசதி என, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
  9. பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்த, போலீசாருடன், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆலோசித்து வருகின்றனர்.
  10. உண்டியல்கள், அசைக்க முடியாமல் நிரந்தரமாக இருக்கும் வகையில் பொருத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  11. கோவில் நகைகள், சொத்துக்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளன.
  12. கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
  13. வருமானத்தைப் பெருக்க வணிக கட்டடங்களை கட்டுவதற்கு நிதி உதவியும் வழங்கப்படுகிறது.

இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், நாங்கள் திருப்தியடைகிறோம்: இம்மனுவை விசாரித்த தற்காலிக தலைமை நீதிபதி தர்மாராவ், நீதிபதி சிவஞானம் அடங்கிய “முதல் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவில், “இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், நாங்கள் திருப்தியடைகிறோம். கோவில்களில் பாதுகாப்பு சாதனங்கள் வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி, பதில் மனுவில் விளக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தனை பாதுகாப்பு இருக்கும் போது, எப்படி இத்தனை கொலை, கொள்ளை, திருட்டுகள்……….எல்லாம் நடக்கின்றன? நீதிபதி ஏதோ வழக்கை விசாரிக்க வேண்டுமே என்ற போக்கில் விசாரித்து, அதனை தள்ளூபடி செய்யவேண்டும் என்ற முன்-தீர்மானத்தின்படியே தள்ளுபடி செய்திருப்பது தெரிகிறது. நாளிதழ்களில் இதைப் பற்றிய செய்திகள் தொடர்ந்து வருகின்றன. அந்நிலையில், அவையெல்லாம் வழக்கறிஞர்களுக்கு, நீதிபதிகளுக்குத் தெரியாமல் இருந்திருக்க முடியாது. ஆகவே இத்தகைய ஏனோ-தானோ விசாரணைகள், தீர்ப்புகள் மக்களின் மனங்களில் திருப்தியை ஏற்படுத்தாது.

நீதிபதிகளுக்குத் திருப்தி என்பது இல்லை, மக்கள் திருப்தியடையவேண்டும்: நாத்திக அரசின்கீழ், இந்து அறநிலையத் துறை இருக்கிறது. தொடர்ந்து இந்திக்களை இழிவு படுத்தும் ஒரு நபர் முதலமைச்சராக இருக்கிறார். இதைப் பற்றிய வழக்குகளே (இந்துக்களை தூஷித்து பேசியதற்கான வழக்குகள்), நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. அந்நிலையில், அத்தகைஅ அரசு நியமிக்கப் படும் நீதிபதிகள் அரசிற்கு எதிராக எந்த தீர்ப்பும் அளிக்கப் படக்கூடாது, என்று அறிவுறுத்தப் பட்டிருந்தால், மக்களுக்கு எப்படி நியாயமான தீர்ப்பு கிடைக்கும்.

கோவில் சம்பந்தமான விஷயங்களில் தகராறு, சண்டை, சச்சரவு பெருகிவருவது ஏன்?

மே31, 2010

கோவில் சம்பந்தமான விஷயங்களில் தகராறு, சண்டை, சச்சரவு பெருகிவருவது ஏன்?

கோவிலைச் சுற்றி இந்திய சமூகம் வாழ்கிறது, வளர்கிறது. எல்லா கலைகள், விஞ்ஞானம், தொழிற்நுட்பங்கள் முதலியனவும் அவ்வாறே இருந்து வந்தன. ஆனால், அந்நியர்களின் படையெடுப்புகள், ஆக்கிரமிப்புகள், இடிப்புகள் முதலியவற்றால் அத்தகைய பாரம்பரியம் பெரிதாகப் பாதித்தது. முகலாயர், ஐரோப்பியர், கிருத்துவர், ஆங்கிலேயர் என வந்த கூட்டங்களினால், நமது கோவில் செல்வங்கள், விழாக்கள், பாரமரியங்கள்…………..முதலியவை அதிகமாவே பாதித்தன.

சுதந்திரத்திற்குப் பிறகு, நாத்திகம் என்ற போர்வையில், அதே கூட்டங்களுடன் சேர்ந்து கொண்ட திக, திமுக போன்ற கருப்புப் பரிவார், அதைவிட குரூரமான, கொடுமையான தாக்குதல்களை, நம்பிக்கையாளர்களை, பக்தர்களை, …………….வைத்தே நடத்தி வருகின்றது.

திருச்செந்தூரில், ஒரு கொலையே செய்துள்ளது, அதில், கருணாநிதியும் சம்பந்தப் பட்டபோது, பால் கமிஷன் அறிக்கை முதலியன, அரசியல் ஆக்கப் பட்டு உண்மைகள் மரைக்கப் பட்டன. இப்பொழுதும், அதே திருச்செந்தூர் கோவிலில் பிரச்சினைகள் எழுகின்றன.

திருச்செந்தூர் கோயிலில் அர்ச்சகர்கள் – ஊழியர்கள் மோதல் (தினமலர்): திருச்செந்தூர் 30-05-2010 : திருச்செந்தூர் முருகன் கோயிலில் கோயில் அர்ச்சகர்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால், அங்கு அலுவலகப் பணிகள் முற்றிலும் பா‌திக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கோயில் உதவி பணியாளராக பணிபுரிபவர் சங்கரன்(52). இதே கோயிலில் அர்ச்சகராக பணியாற்றுபவர் ராஜா(31). இவர் கோயிலில் உள்ள பஞ்சலிங்க சன்னதிக்கு பக்தர்கள் சிலரை டிக்கெட் இன்றி அழைத்துச் செல்ல முயன்றுள்ளார். அப்போது சங்கரனை அவர்களை தடுத்து நிறுத்தி, டிக்கெட் இல்லாமல் உள்ளே அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சங்கரனுக்கும், ராஜாவுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது.

தனிநபர் சண்டையில் கோவில் பணி பாதிக்கப் பட்டுள்ளதாம்: இதனையடுத்து ராஜா தன்னை தாக்கியதாக சங்கரன், திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து சங்கரனுக்கு ஆதரவாக கோயில் பணியாளர்கள் தன்னை தாக்கியதாக ராஜாவும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதியாகி உள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கோயில் பணியாளர்கள் தங்களுக்கு பணியில் பாதுகாப்பு இல்லை என கூறி ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். இதனால் டிக்கெட் விற்பனை, விடுதி பணிகள் என கோயில் நிர்வாகப் பணிகள் அனைத்தும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

சாமி கும்பிட காசு வசூல், கட்டணம் செல்லுத்தத்தேவையா? முகமதியர் காலங்களில், கோவில்களை ஆக்கிரமித்துக் கொண்டு, இந்துக்கள் அதிகமாக உள்ள நிலையில், வளைந்து கொடுத்தும், குறைவாக உள்ல இடங்களில் ப்ணத்தைப் பறித்தும் வந்துள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சியில், கட்டணம் வசூலிக்கப் பட்டது. அத்தகைய பழக்கம் தான், இப்பொழுதும் தொடர்கிறது. கோவில்களைக் கட்டியவர்கள் அனைத்து சமூக மக்கள். அதில் எந்தவித வெஏறுபாடும் இல்லை. கே. ஆர். அனுமந்தன் எப்படி “தீண்டத்தகாதவர்கள்” எனப்படுபவர்கள், கோவில்களைக் கட்டியுள்ளனர், பல நிலங்களை தானமாகவு, மற்ற  மான்யங்களையும் தந்துள்ளனர் என்று எடுத்துக் காட்டியுள்ளார். ஆகவே, நிச்சயமாக முகலாயர்கள், ஆன்கிலேயர்கள் (கிருத்துவர்கள்) இத்தகைய வேறுபாட்டை உருவாக்கி வைத்தனர். இப்பொழுது, இந்த கருப்புப் பரிவார், அதை இன்னும் அதிகமாக்கி மக்கலைப் பிரிக்கப் பார்க்கிறது.

பக்தர்கள் கொடுக்கும் பணத்தை ஏன் ஸ்டாலினிடம் கொடுக்கவேண்டும்?

மே26, 2010

பக்தர்கள் கொடுக்கும் பணத்தை ஏன் ஸ்டாலினிடம் கொடுக்கவேண்டும்?

  • அப்பனோ இந்துக்களை வசைமாரி பொழிகிறான்,
  • பிள்ளைகளோ நாத்திகம் பாடிக்கொண்டு அலைகின்றன,
  • பெண்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்
  • மனைவி-துணைவிகளோ ………..
  • கோவிகள் இடிக்கப்படுகின்றன…………
  • கோவில் மண்டபங்கள் தரைமட்டமாக்கப் படுகின்றன………..
  • கோவில் நிலங்களை நிது அறநிலையத் துறையே விற்கிறதாம்………….

அந்நிலையில் இந்து அறநிலையை நாத்திக ஆட்சியாளர்களின் கீழ் வைத்துக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. எல்லாமே பக்தர்களே செய்யும்போது, பணத்தை மட்டும் கோடி-கோடியாக வசூலித்து, அதை அந்த இந்து-விரோத நாத்திகர்களுக்கே கொடுக்கும் விந்தையை என்னவென்பது?

சோளிங்கர் கோவிலுக்கு ரூ.5 கோடி : துணை முதல்வரிடம் ஒப்படைப்பு : சோளிங்கர், லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் விமானங்களுக்கு தங்கத் தகடுகள் பொறுத்த ஐந்து கோடி ரூபாய்க்கான காசோலை, துணை முதல்வர் ஸ்டாலினிடம் நேற்று வழங்கப்பட்டது. அதை வாங்கிக் கொள்ள ஸ்டாலினிற்கு எந்த அருகதை உள்ளது? உண்மையில் நாத்திகம் பேசும் ஸ்டாலின், அதைத் திரும்பக் கொடுத்திருக்க வேண்டும்.

கூட்டுக் கொள்ளையா, கூட்டு உபயமா? வேலூர் மாவட்டம், சோளிங்கர், லட்சுமி நரசிம்மர் கோவில், 750 அடி உயரத்தில் உள்ள மலை மீது 1,305 படிக்கட்டுகளைக் கொண்டு அமைந்துள்ளது. கோவிலின் ஆண்டு வருமானம் 1.35 கோடி ரூபாய். இக்கோவிலில் குடமுழுக்கு செய்து, விமானங்களுக்கு 20 கோடி ரூபாய் மதிப்பில் 110 கிலோ தங்கத்தில் தங்கத் தகடுகள் போர்த்தப்படுமென, அறநிலையத் துறை அமைச்சர் அறிவித்து இருந்தார். இப்பணிகளை மேற்கொள்ள காந்தி எம்.எல்.ஏ., தலைமையில் அமைக்கப்பட்ட குழு, இதுவரை உபயதாரர் மூலமும், காணிக்கையாகவும் கிடைத்த 38 கிலோ தங்கத்தை பயன்படுத்தி, 5.44 கோடி ரூபாய் செலவில் 30 சதவீத பணிகள் முடிக்கப்பட்டன. மேலும், தேவைப்படும் 72 கிலோ தங்கத்துக்காக உபயதாரர்கள் வரவேற்கப்பட்டனர்.

பக்தர்கள், ஆத்திகர்களின் பனத்தை வாங்க இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? சோளிங்கர் அருகில் உள்ள எரும்பி என்ற ஊரைச் சொந்த ஊராகக் கொண்ட பெங்களூரு தொழிலதிபர் பூபாலன், அவரது மனைவி பூங்கொடி மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கடந்த 9ம் தேதியன்று மூன்று கோடியே ஏழு லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கினர். அப்போதே, சில உபயதாரர்களிடம் இருந்து ஒரு கோடியே இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நன்கொடையாக பெறப்பட்டது. மேலும், இப்பணிக்குத் தேவைப்படும் தங்கத்தை வாங்க, ஐந்து கோடி ரூபாய்க்கான காசோலையை, பூபாலன், பூங்கொடி மற்றும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் சேர்ந்து நன்கொடையாக, துணை முதல்வர் ஸ்டாலினிடம் தலைமைச் செயலகத்தில் நேற்று வழங்கினர். இந்த காசோலையை, கோவில் உதவி ஆணையர் வீரபத்ரனிடம், துணை முதல்வர் வழங்கினார். கோவிலில் பணிகள் முடிக்கப்பட்டு, வரும் செப்டம்பர் 10ம் தேதியன்று குடமுழுக்கு நடக்குமென, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அறநிலையத்துறை விழாவில் செம்மொழி முத்திரை!

மே23, 2010

அறநிலையத்துறை விழாவில் செம்மொழி முத்திரை: கொந்தளிப்பு

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=3112

இந்து சமய அறநிலையத்துறையின் இந்துவிரோத செயல்: சேலம்: “சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் நடந்த தங்கத்தேர் வெள்ளோட்ட விழாவில், பாரம்பரியமிக்க அரசு முத்திரையை பயன்படுத்தாமல், செம்மொழி மாநாட்டுக்கான முத்திரையை இந்து சமய அறநிலையத்துறை பயன்படுத்தி உள்ளது. முத்திரையை மாற்ற வேண்டும் என்ற நோக்கில் அரசு மறைமுகமாக செயல்பட்டு வருகிறது’ என, பா.ஜ., நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.

இந்து விரோதிகளே கோவில் விழாக்களில் கலந்து கொல்வது: சேலம் சுகவனேஸ்வரர் திருக்கோவிலில் 1.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தங்கத்தேர் செய்யப்பட்டது. அதன் வெள்ளோட்ட விழா 16ம் தேதி நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பண் வெள்ளோட்டத்தை துவக்கி வைத்தார். உண்மையில் நாத்திகவாதியாக இருந்தால், இக்காரியத்தில் இந்த ஆள் செய்திருக்கக் கூடாது. முன்னம் கருணநிதி, ஒரு திமுக ஆள், குங்குமம் வைத்திருந்தபோது, “என்ன நெற்றியில் ரத்தமா?”, என்று கிண்டலாக-நக்கலாகக் கேட்டது ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். உண்மையிலேயே தைரியம் இருந்தால், தனது மனைவி-துணைவி-மகள்-சகோதரி-மற்ற சொந்தமான பெண்களை பார்த்து அப்படி கேட்பதுதானே? இல்லை, குங்குமத்தை அழிக்கவேண்டியதுதானே?

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பத்திரிகை விளம்பரங்கள், நோட்டீஸ்கள் போன்றவற்றில் அரசு முத்திரைக்கு பதில், செம்மொழி மாநாட்டு முத்திரை இடம் பெற்றிருந்தது. இதுவே அயோக்கியத்தனம்தாம். கடந்த 1946 முதல் தமிழ்நாட்டின் அரசு முத்திரையாக விளங்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுர சின்னத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் தி.மு.க., அரசு ஈடுபட்டுள்ளது. கூட்டணி கட்சியினரும், “ஒரு மதத்தை சார்ந்தவாறு முத்திரை இருப்பதால், செம்மொழி மாநாட்டில் இடம் பெற்றுள்ள திருவள்ளுவர் உருவம் கொண்ட முத்திரையை இனி அரசின் முத்திரையாக பயன்படுத்தலாம்’ என, கூறி வருகின்றனர். அதை நிறைவேற்றும் பொருட்டே அரசு விழாக்களிலும், வாகனங்களிலும் செம்மொழி முத்திரை ஸ்டிக்கர்கள் இடம் பெற்றுள்ளன என, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

இது ஒவ்வொரு இந்துவும் கேட்க வேண்டிய கேள்வி: இந்நிலையில், “அரசு முத்திரையை மாற்றாக பயன்படுத்தி, மக்களின் மனதை புண்படுத்தும் நோக்கில் செயல்பட்டுள்ளனர்’ என, கூறி சுகவனேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ஜோதி பழனிசாமி, உதவி ஆணையர் வரதராஜன், அறங்காவலர்கள் சந்திரசேகரன், பாலகிருஷ்ணன், சரஸ்வதி ஆகியோர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்’ என, பா.ஜ., தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. “தவறு என ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லாதபட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்’ என, அக்கட்சியின் மாவட்ட தலைவர் மோகன் கூறினார்.

தமிழகத்தின் அரசு முத்திரை மாற்ற சதி: பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கூறியதாவது: தமிழகத்தின் அரசு முத்திரையாக கோபுர சின்னம் உள்ளது. அதை மாற்ற வேண்டும் என்ற முயற்சியில் தான் தி.மு.க., அரசு ஈடுபட்டுள்ளது. செம்மொழி மாநாட்டு முத்திரையை அனைத்து தரப்பிலும் விளம்பரப்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. சுகவனேஸ்வரர் கோவில் தங்கரத விழாவில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செம்மொழி மாநாட்டு முத்திரையே அதிகம் இடம் பெற்றுள்ளது. அரசு விழாக்களிலும், வாகனங்களிலும் மறைமுகமாக விளம்பரப்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இது தமிழ்நாடு, பாகிஸ்தான் அல்ல: இது குறித்து அறங்காவலர் குழுத் தலைவர் ஜோதி பழனிசாமி கூறியதாவது: இது தமிழ்நாடு, பாகிஸ்தான் அல்ல. எந்த முத்திரையையும் நாங்கள் பயன்படுத்துவோம். கோவில் விழா தானே தவிர அரசு விழா அல்ல. யாரோ ஒருவரின் தூண்டுதலின்பேரில் தான் இதுபோன்று செய்து வருகின்றனர். செம்மொழி முத்திரைக்கு அரசு அங்கீகாரம் உள்ளது. கோவில் தங்கரத வெள்ளோட்டம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. அதை பாராட்டாமல் இதுபோன்று தேவையில்லாதவற்றை கூறி வருகின்றனர். யாருக்கும் நான் பயப்படமாட்டேன். வழக்கு போட்டாலும் அதை சந்திப்பேன். உதவி ஆணையர் வரதராஜனை தொடர்பு கொண்டபோது, “”தங்கரத விழா அரசு சார்ந்தது. செம்மொழி முத்திரையை உபயதாரர்கள் வழங்கியிருக்கலாம். எதுவாக இருந்தாலும் நேரில் பேசிக்கொள்ளலாம் வாருங்கள்,” என, கூறி முடித்துக் கொண்டார்.