Posts Tagged ‘ஔரங்கசீப்’

மூன்று கோவில்களையும் இடித்தேன்- என்று டி.ஆர். பாலு பேசியது – ஔரங்கசீப், மாலிகாபூர் பாணியில், திமுகவினரின் கொக்கரிப்பு!

ஜனவரி30, 2023

மூன்று கோவில்களையும் இடித்தேன்என்று டி.ஆர். பாலு பேசியதுஔரங்கசீப், மாலிகாபூர் பாணியில், திமுகவினரின் கொக்கரிப்பு!

மூன்று கோவில்களையும் இடித்தேன்என்று டி.ஆர். பாலு பேசியது: வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற பல சமயங்களில் மத நம்பிக்கைகளை சமரசம் செய்ததாகக் கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார் திமுக பொருளாளரும், எம்பியுமான டி.ஆா்.பாலு[1]. 28-01-2023 அன்று மதுரையில் சேதுசமுத்திரத் திட்டத்துக்கு ஆதரவாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் டி.ஆர்.பாலு பேசுகையில்[2], “எனது தொகுதியில் 100 ஆண்டுகள் பழமையான சரஸ்வதி கோவில், லட்சுமி கோவில், ஜிஎஸ்டி சாலையில் உள்ள பார்வதி கோவில் என மூன்று கோவில்களையும் இடித்தேன். எனக்கு வாக்கு கிடைக்காது என்று தெரியும். ஆனால். எப்படி வாக்குகளை பெறுவது என்பதும் எனக்கு தெரியும். கோவில்களை இடித்தால் எனக்கு வாக்குகள் கிடைக்காது என கட்சி தோழர்கள் எச்சரித்தனர். ஆனால், வேறு வழியில்லை என்று நான் அவர்களிடம் கூறினேன். “கோயில் தேவை என்று கூறினேன். சிறந்த வசதிகளுடன் சிறந்த கோவில்களை கட்டினேன். இதுபோல் பல இடங்களில் மத நம்பிக்கைகளை சமரசம் செய்து திட்டங்களை நிறைவேற்றி உள்ளேன்,” என டி.ஆர் பாலு கூறினார்.

சேதுசமுத்திரம் கப்பல் கால்வாய்த் திட்டத்தை நிறுத்தும் மத்திய அரசின் முடிவு ரயிலை நடுவழியில் திடீரென நிறுத்துவது போன்றது:மேலும், தேசம் வளா்ச்சி பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு அரசியல் கட்சியினா் முன் மொழிந்ததன் பேரில் சேதுசமுத்திரம் கப்பல் கால்வாய்த் திட்டம் செயல்படுத்தப்பட்டது. சேதுசமுத்திரம் கப்பல் கால்வாய்த் திட்டத்தை நிறுத்தும் மத்திய அரசின் முடிவு ரயிலை நடுவழியில் திடீரென நிறுத்துவது போன்றது,” என்றார். அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், கி.வீரமணி, முதலியோர் இருந்தனர். “மத்திய அரசு அறிவியல் மற்றும் பகுத்தறிவு சிந்தனையைப் பயன்படுத்தாமல், மத வழிகளைப் பின்பற்றாமல் ராமா் பாலம் சேதமடைந்து விடும் என்பது போன்ற ஆன்மிக கருத்துக்களை கூறி சுமார் 23.5 கி.மீ பணிகள் மட்டுமே மேற்கொள்ள வேண்டிய நிலையில் திட்டத்தை நிறுத்துகிறது என்று பாலு குற்றம் சாட்டினார். இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் ஆண்டுக்கு ரூ.750 கோடி லாபம் கிடைத்திருக்கும். தென் மாநிலங்கள் வளா்ச்சி பெறும். குறிப்பாக தமிழகம் வளா்ச்சி பெறும். மக்கள் அனைவரும் பகுத்தறிவுடன் உள்ளனா். அவா்களை மதத்தின் பெயரால் இனி ஏமாற்ற முடியாது,” என்று டி.ஆர். பாலு கூறினார்.

திமுக சேது சமுத்திர திட்டத்தில் திடீரென்று ஆர்வம் காட்டுவது: இம்மாத தொடக்கத்தில், சேதுசமுத்திரத் திட்டத்தை மேலும் தாமதிக்காமல் மத்திய அரசை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டிற்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என்பதால், இத்திட்டத்தை மத்திய அரசு தாமதப்படுத்தக் கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றினார். இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே ஒரு பெரிய நீர்வழித் திட்டம், சேதுசமுத்திரம் திட்டம் பால்க் ஜலசந்தியை மன்னார் வளைகுடாவுடன் இணைக்க முன்மொழிகிறது. இந்த திட்டம் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பொருளாதார வளத்தை கொண்டுவருவதற்கான முக்கியமான திட்டமாகக் கருதப்படுகிறது. 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம், இலங்கையை அடைய ராமரால் கட்டப்பட்டதாக நம்பப்படும் ‘ராம் சேது’ பாலத்திற்கு தீங்கு விளைவித்துவிடும் என்பது போன்ற ஆன்மிக கருத்துக்களை கூறும் வலதுசாரிகளின் எதிர்ப்பால் இந்த திட்டம் நிறுத்தப்பட்டது. சேதுசமுத்திரம் திட்டத்தின் மூலம் கப்பலின் பயணத்தை கிட்டத்தட்ட 650 கி.மீ வரை குறையும். எவ்வித சான்றாவணமும் இல்லாமல், நாட்டின் தென்கோடி முனையான ராமேசுவரத்தில் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

டி.ஆர். பாலு பேசிய விடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தது: இந்நிலையில், டி.ஆர். பாலு பேசிய விடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது தனது ட்விட்டர் பக்கத்தில், “100 ஆண்டுகள் பழமையான இந்து கோவில்களை இடிப்பதில் திமுகவினர் பெருமை கொள்கின்றனர். இந்து சமய அறநிலையத் துறையை கலைத்து, கோவிலை அரசின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்”. வீடியோவில், பாலு நக்கலாகவும், திமிராகவும், பேசியது நன்றாகவே தெரிகிறது. இதைக் கேட்டு திமுகவினர் சிரிப்பதும் தெரிகிறது. அதாவது, அக்காரியத்தை பெரிய சாதனை போலத்தான் பேசியது தெரிகிறது.

100 வருட மசூதியையும் இடித்துள்ளோம்: அதில், நான்கு வழிச்சாலை அமைக்கிற நேரத்தில் 100 வருட கோவில், கொல்கத்தாவில் 100 வருட மசூதியை இடித்து இருக்கேன்[3]. கோவிலை இடித்து இருக்கேன், மசூதியை இடித்து இருக்கேன், மாதா கோவிலை இடித்து இருக்கேன்[4]. வழியில் இருக்கும் வீடுகளை எல்லாம் இடிக்கும் போது மக்கள் வந்தாங்க, இதுகுறித்து மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக இருந்த ஜோதிபாசு என்னை அழைத்து, இப்படி 100 வருட மசூதியை எல்லாம் இடித்தால் வாக்கு வங்கி பாதிக்கப்படுவது ஒருபுறம் இருந்தாலும், மத நம்பிக்கை எல்லாம் பாதிக்கும். இதெல்லாம் சரியான முடிவா எனக் கேட்டார். அதற்கு நான் சொன்னேன், எங்க ஊரில், என்னுடைய தொகுதியில் சரஸ்வதி கோவில், லெட்சுமி கோவில் , பார்வதி கோவில், இந்த கோவில்களும் என்னுடைய தொகுதியில் ஜிஎஸ்டி ரோட்டில் கட்டிருப்பாங்க.. இந்த மூன்று கோவிலை நான்தான் இடித்தேன்.

எனக்கு ஒட்டு வராதுன்னு தெரியும். ஆனா, ஒட்டு எப்படி வர வைக்குறதுனும் தெரியும்: எனக்கு ஒட்டு வராதுன்னு தெரியும். ஆனா, ஒட்டு எப்படி வர வைக்குறதுனும் தெரியும். ஒட்டு வராது, வராது, தயவு செய்து இடிக்காதீங்க என எனக்கு தோழர்களாம் சொன்னாங்க. ஆனால் எனக்கு வேறு வழி கிடையாது. அவர்களுக்கு என்ன வேற கோவில் கட்டி தர வேண்டும், இதை விட சிறந்ததாக, 100, 200 பேர் உட்கார்ந்து சாப்பிடக் கூடிய வகையில் மண்டபம் எல்லாம் செய்து தரேன்னு சொல்லி, அந்த இடத்தில் இருந்த கோவில்களை எல்லாம் இடித்து விட்டு பக்கத்தில் கோவில் கட்டி கொடுத்தேன்  என்று தான் டி.ஆர்.பாலு பேசியுள்ளதாக அந்த வீடியோவை வெளியிட்டு திமுகவினர் பாஜகவினருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்[5]. இப்படியாக அவருடைய முழுமையான வீடியோவில் அவர் பேசியுள்ள நிலையில், அதில் சிறு பகுதி மட்டும் எடிட் செய்யப் பட்டு பகிரப்பட்டு வருவது கண்டனத்திற்குள்ளாகி வருகிறது[6], என்று புதியதலைமுறை போன்ற ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஆனால், கோவில்கள் இடிக்கப் பட்ட உண்மையினை மறுக்கவில்லை.

அண்ணாமலை மறுப்பு: இதற்குள், திமுக அமைச்சர்களும் அந்த வீடியோ எடிட் செய்யப் பட்டது என்று பேசியுள்ளனர். அதற்கும், அண்ணாமலை, பதில் அளித்துள்ளார், “அமைச்சர் கே.என்.நேரு மற்றும் டி.ஆர்.பாலு பேசியவற்றை நான் எடிட் செய்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார், நிரூபிக்கவில்லை எனில் முதலமைச்சர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும்[7]. எடிட் செய்து வெளியிட்டதாக ..வேலு சொல்லியுள்ளார்[8]. கோயில் இடிப்பு தொடர்பாக டி.ஆர் பாலு பேசிய வீடியோ முழுமையானதுவீடியோ தடவியல் ஆய்வு செய்து டேப் எடிட் செய்யப்பட்டது என நிரூபணமானால் அரசியலைவிட்டு விலக தாயார் அவர் சொல்லும் இடத்தில் கே.என்.நேரு, .வி.கே.எஸ் பேசிய ஒரிஜினல் வீடியோவை தரத் தயார் அதனை முதலமைச்சர் தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தி கொள்ளலாம்[9]. தேர்தலுக்கு பணம் கொடுக்கிறார் என்பது ஒரு குற்றச்சாட்டு., உண்மை நிரூபிக்கப் பட்டால், ஸ்டாலின் பொது மன்னிப்புக் கேட்க வேண்டும்……” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்[10]. இந்த வீடியோவும் சுற்றில் உள்ளது.

© வேதபிரகாஷ்

30-01-2023.


[1] தினமணி, இந்து கோவில்களை இடிப்பதில் திமுகவினர் பெருமை கொள்கின்றனரா?, By DIN  |   Published On : 29th January 2023 07:23 PM  |   Last Updated : 29th January 2023 07:28 PM.

[2] https://www.dinamani.com/tamilnadu/2023/jan/29/demolished-temples-knew-wont-get-votes-dmks-tr-baalu-3992030.html

[3] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், 100 ஆண்டு கால கோயிலை இடித்ததாக பேசினாரா டி.ஆர்.பாலு.? அண்ணாமலையின் வீடியோவிற்க்கு பதிலடி கொடுக்கும் திமுக, Ajmal Khan, First Published Jan 30, 2023, 12:29 PM IST.

[4] https://tamil.asianetnews.com/politics/dmk-has-released-a-video-in-response-to-the-video-released-by-annamalai-in-which-tr-balu-spoke-about-the-demolition-of-temples-rpae2z

[5] FackCheck: புதியதலைமுறை, நூற்றாண்டு கோயிலை இடித்த டி.ஆர். பாலு?, இணையத்தில் உலா வரும் வீடியோவின் உண்மை நிலை, ஜனனி கோவிந்தன், Published: 30, Januay 2023 02:13 PM.

[6] https://www.puthiyathalaimurai.com/newsview/154754/fact-check-over-tr-baalu-speech-about-temple-demolition

[7] தமிழ்.ஏபிபி.லைவ், Annamalai Release Video: டி.ஆர்.பாலு பேசிய வீடியோவை வெட்டி ஒட்டவில்லைஅண்ணாமலை, By: செல்வகுமார் | Updated at : 30 Jan 2023 06:08 PM (IST), Published at : 30 Jan 2023 06:08 PM (IST).

[8]  https://tamil.abplive.com/news/tamil-nadu/t-r-baalu-s-video-was-not-cut-and-pasted-says-bjp-state-president-annamalai-attackdmk-99041

[9] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், அரசியலை விட்டு விலக நான் தயார்.. ஒரிஜினல் வீடியோ இருக்கு! திமுகவுக்கு சவால்அண்ணாமலை பரபரப்பு பேட்டி, Raghupati R, First Published Jan 30, 2023, 7:16 PM IST.

[10]https://tamil.asianetnews.com/politics/tn-bjp-president-annamalai-challenge-to-dmk-tr-baalu-controversy-video-matter-rpawx2

தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தொல்லைக் கொடுப்பது, 50 ஆண்டுகளில் இல்லாத சுறுசுறுப்பில் அறநிலையத்துறை அமைச்சர் இயங்குவது புதிய திட்டமா?:

ஜூலை9, 2022

தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தொல்லைக் கொடுப்பது, 50 ஆண்டுகளில் இல்லாத சுறுசுறுப்பில் அறநிலையத்துறை அமைச்சர் இயங்குவது புதிய திட்டமா?:

தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தொல்லைக் கொடுப்பது திட்டமா?: மதுரை ஆதீனம் இப்பொழுது, இந்துமதம் என்று ஆதரவாக கருத்துகளை சொல்லி வருகிறார். நிதர்சனமாக, பல விசயங்களையும் எடுத்துக் காட்டி பேசி வருகிறார். இதனால், திராவிடத்துவ மற்றும் அத்தகைய கொள்கை கொண்டவர்களுக்கு, அவரது கருத்துகள் சங்கடமாகின்றன என்பது தெரிகிறது. முன்பெல்லாம், குறிப்பிட்ட ஆதீனம் [குன்றக்குடி அடிகள்], திக-திமுகவினரின் நண்பராக இருந்து கொண்டு, ஆனால், அவர்கள் இந்துமதத்தைத் தாக்கும் போது, கண்டிக்காமல் இருந்து வந்தார். ஆனால், இப்பொழுது அந்நிலை மாறி விட்டது. மடாதிபதிகள் கேள்விகள் கேட்க ஆரம்பித்து விட்டனர். மேலும் பட்டினப் பிரவேச நிகழ்ச்சியில், திகவின் தூண்டுதலில், தடை விதிக்கப் பட்டு, பிரச்சினையாகி, பிறகு, தடை நீக்கப் பட்டது. இதனால், அச்செய்தி, இந்தியா முழுவதும் பரவியது. அயல்நாடுகளிலும் பேசப் பட்டது. அந்நிலையில், தொந்தரவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன், சிலர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஏதையாவது கேட்டிருப்பார்கள். அதன் விளைவு தான், இந்த மனு, தீர்ப்பு என்று தெரிந்து கொள்ளலாம்.

வழக்கும், தீர்ப்பும்: ஆதீனம், பொது நிறுவனம் அல்ல. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விபரங்கள் வழங்குமாறு, ஆதீன மடத்திடம் கோர முடியாது’ என, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது[1]. உயர்நீதிமன்ற மதுரை கிளையில், தருமபுரம் ஆதீனம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியர் தாக்கல் செய்த மனு[2]: “ஆதீனம், மடம் என்பது பொது நிறுவனம் அல்ல; அரசின் நிதி உதவியில் இயங்கவில்லை; சொந்த நிதியில் செயல்படுகிறது[3]. தமிழ் பக்தி இலக்கியம், ஆன்மிகப் பணியில் ஈடுபடுகிறது[4]. தமிழக அறநிலையத்துறை சட்டத்தின் சில விதிகள் ஆதீனத்திற்கு பொருந்தும். எனினும், விதிகள்படி ஆதீன நிர்வாகத்தில் எவ்வித தலையீடும் செய்ய முடியாது[5]. ஆதீனம் மற்றும் அதன் கீழ் செயல்படும் மத நிறுவனங்கள் பற்றி சிலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி விபரங்கள் கோரி தொந்தரவு செய்கின்றனர்[6]. அந்த சட்டப்படி அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பொது நிறுவனங்களிடம் மட்டுமே விபரங்கள் கோர முடியும்[7]. ஆதீனம் தன்னாட்சி பெற்ற அமைப்பு. மடங்கள், கோவில்கள் பொது நிறுவனங்கள் அல்ல[8]. அரசின் நிதி உதவி பெறாத தன்னாட்சி பெற்ற மத நிறுவனங்களுக்கு, தகவல் உரிமைச் சட்டம் பொருந்தாது என கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தகவல் உரிமைச் சட்டத்தின் விதிகள் ஆதீனம் அல்லது அதன் மத நிறுவனங்களுக்கு பொருந்தாது என உத்தரவிட வேண்டும்,” இவ்வாறு அவர் கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்[9],”ஆதீனம், மடம் பொது நிறுவனம் அல்ல. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விபரங்கள் வழங்குமாறு ஆதீன மடத்திடம் கோர முடியாது. மனு அனுமதிக்கப்படுகிறது,” என உத்தரவிட்டார்[10].

இந்துக்களுக்கு பாதகமாக செயல்பட திட்டமா?: தகவல் அறியும் சட்டத்தைப் பயன்படுத்தி, மடங்களைக் குறிவைத்து, அவற்றின் மூலம் விவரங்களை அறிந்து கொண்டு, கோவில்கள், கோவில் சொத்துக்களின் விவரங்களை தெரிந்து கொண்டு, பிரச்சினை உண்டாக்கலாம் என்ற திட்டமும் இருக்கலாம். நாத்திகம், பகுத்தறிவு, பெரியார்-போற்றி, கருணாநிதி போற்றி, காசுக்கு மேடைகளில் பேசும் ஆட்கள் இவர்களை வைத்து தான் ஆலோசனைக் குழுவே அமைக்கப் பட்டுள்ளது. இவ்வாறு படிப்படியாக, விவரங்கள் பெறுவது, ஆடகள் மூலம் தாக்கம் ஏற்டுத்துவது, ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் செய்வது, கோவில்களில் அரசுமுறையில் விளம்பரம் பெறுவது, என்று பன்முறைத் தாக்குதல்-திட்டத்துடன் செயல்படுவதாகத் தெரிகிறது. ஏனெனில், இத்தகைய வேகம், விளம்பரம் முதலியன கடந்த ஆட்சிகாலங்களில் எப்பொழுதும் கண்டதில்லை. நிச்சயமாக, அளவுக்கு மீறி செயல்படுவதில், நாத்திகம் பேசி-இந்துவிரோதிகளாக இருக்கும் இவர்களிடம், இந்துக்களுக்கு சாதகமாக, எதுவும் நடந்து விடாது என்றே தோன்றுகிறது. ஆகவே, மாறாக நடக்காமல், ஆண்டவன் தான் இந்துக்களைக் காப்பாற்ற வேண்டும்.

கோவில்களை வைத்து அரசியல் பிழைப்பா?: கோவில்கள், மடங்கள் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பலவிதங்களில் சதாய்க்கப் பட்டு வருகின்றன. கொரோனா காலத்தில், இலவச பிரசாதம் என்று அன்னதானம் போர்வையில், நிதி சுரண்டப் பட்டது. திமுக பெயரில், ஸ்டாலின் பெயரில் அன்னதானம் செய்யப் பட்டது. பிறகு, அன்னதானம் செய்ய நிதியளிக்குமாரும் கோரிக்கையும் விடப் பட்டது. தினம்-தினம் விளம்பர அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. கோவில் நிலம் மீட்பு, கும்பாபிஷேகம் சென்ற செய்திகள், ஆன்னால், எல்லாவற்றிலும் கருணாநிதி-ஸ்டாலின் புகைப் படங்க்கள் போற்றல்கள். ஏதோ இவர்கள் சொல்லித் தான், எல்லாமே நடக்கின்ற என்பது போன்ற விளம்பர. ஆனால், பொது மக்கள் யாரும், இவற்றை நம்புவதாக இல்லை.ஈவேரா விக்கிரங்களை உடைத்தது, தூஷித்தது யாரும் மறக்கவில்லை; அதேபோல கருணாநிதி, ஸ்டாலின் தூஷித்தது, வசைபாடினதையும் யாரும் மறக்கவில்லை;

50 ஆண்டுகளில் இல்லாத சுறுசுறுப்பில் அறநிலையத்துறை அமைச்சர் இயங்குவது: அறநிலையத்துறை அமைச்சர் 50 ஆண்டுகளாக இல்லாத முறையில், எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருந்து, கோவில்-கோவிலாக செல்வதும், அறிக்கை விடுவதும், ஏலங்கள் விடுவதும் வாடிக்கையாகி விட்டன. உண்டிகள் திருடப் படுகின்றன என்றால், ஏலத்திற்கும் விடப் படுகிறது. பக்தர்களுக்கு, திடீரென்று கோவிலுக்குச் செல்வதற்கே கொஞ்சம் தயக்கம், ஒருவித பயம் எல்லாம் கூட வந்து விட்டது. கரை வேட்டிகள் ஏதாவது கலாட்டா செய்வார்களா, மிரட்டுவார்களா என்ற அச்சங்களும் ஏற்படுகின்றன. கோவில்களின் மீது அந்த அளவுக்கு குறி வைத்திருப்பது திகைப்பாக இருக்கிறது. கோவில் நகரங்களில் திமுக கவனம் செல்லுத்தி வருகிறது. அங்கு மந்திரி, எம்.எல்.ஏ, வட்டம், மாவட்டம் என்று சுறுசுறுப்பாக வேலை செய்து வருகின்றனர். உடன் துர்கா ஸ்டாலினும் செல்கிறார். ஆனால், அவர் கோவில்களுக்குச் சென்று வருகிறார், இவர் கோவில் சம்பந்தப் பட்ட்டவர்களுடன் பேசிவருகின்றார்.

© வேதபிரகாஷ்

07-07-2022


[1] தினமலர், ஆதீனம் பொது நிறுவனம் அல்ல: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!, Updated : ஜூலை 07, 2022  05:47 |  Added : ஜூலை 07, 2022  05:19

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3070856

[3] மாலை மலர், ஆதீன மடங்கள் தகவல் அறியும் சட்டத்தின்கீழ் வராதுமதுரை ஐகோர்ட், By 7 ஜூலை 2022 8:51 AM.

[4] https://www.maalaimalar.com/news/state/aadheenam-madam-not-covered-by-freedom-of-information-act–482534

[5] தமிழ்.ஏபிபி.லைவ், Dharmapuram Adheenam Issue: தருமபுரம் ஆதீனம் மடம் ஆர்டிஐ சட்டத்தின் கீழ் வராதுஉயர் நீதிமன்ற மதுரைக்கிளை, By: மனோஜ் குமார் | Updated at : 07 Jul 2022 03:35 PM (IST); Published at : 07 Jul 2022 03:35 PM (IST)

[6] https://tamil.abplive.com/news/tamil-nadu/dharmapuram-adheenam-issue-judge-directed-petitioner-to-file-orders-of-madurai-court-regarding-teachers-appointment-60074

[7] தினகரன், ஆர்டிஐயின் கீழ் ஆதீனங்கள் வராது: ஐகோர்ட் கிளை உத்தரவு, 2022-07-07@ 00:32:27

[8] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=780474

[9] தினத்தந்தி, ஆதீன மடங்கள் தகவல் அறியும் சட்டத்தின்கீழ் வராது,  ஜூலை 7, 1:38 am; https://www.dailythanthi.com/News/State/court-order-739658

[10] https://www.dailythanthi.com/News/State/court-order-739658 – :~:text=%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81,%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%8E%E0%AE%A9%20%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.

முதல்வர் பிறந்தநாள் பால்குட ஊர்வலம் – இந்துவிரோத பெரியாரிஸ ஸ்டாலினுக்கு ஏன் பால்குடம்? பகுத்தறிவுகள் கண்டிக்கவில்லையே? மடாதிபதிகளைப் பிரித்து கோவில் சொத்துகளை அபகரிக்க திட்டமா?

மார்ச்24, 2022

முதல்வர் பிறந்தநாள் பால்குட ஊர்வலம் இந்துவிரோத பெரியாரிஸ ஸ்டாலினுக்கு ஏன் பால்குடம்? பகுத்தறிவுகள் கண்டிக்கவில்லையே? மடாதிபதிகளைப் பிரித்து கோவில் சொத்துகளை அபகரிக்க திட்டமா?

முதல்வர் பிறந்தநாள் பால்குட ஊர்வலம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி சென்னை மரகதாம்பாள் சமேத மல்லிகேசுவரர் கோவில் மற்றும் சென்னை காளிகாம்பாள் கமடேசுவரர் தேவஸ்தானம் கோவிலில் புதிய வெள்ளித்தேர் செய்யும் பணி தொடக்க விழா 22-03-2022 அன்று நடந்தது[1]. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமை தாங்கினார்[2]. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் சாந்தலிங்க சுவாமிகள் ஆகியோர் பால்குட ஊர்வலத்தை தொடங்கி வைத்ததுடன், புதிய வெள்ளி திருத்தேர் செய்யும் பணியையும் தொடங்கி வைத்தனர்[3]. காளிகாம்பாள் கோவிலில் சுமார் 2.5 கோடி மதிப்பீட்டில் வெள்ளி தேர் செய்வதற்கான பணிகளும் தொடங்கப்பட்டது. இது போன்ற செய்திகள் நாளிதழ்களில் வெளி வந்துள்ளன. ஆனால், “முதல்வர் பிறந்தநாள் பால்குட ஊர்வலம்”, என்ற தலைப்புடன் தினகரன் நாளிதழில் சிறியதாக செய்தி வெளிவந்துள்ளது[4]. “முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மண்ணடி மல்லிகேஸ்வரர் கோவிலில் இருந்து காளிகாம்பாள் கோவிலுக்கு பால் குடங்களுடன் பெண்கள் ஊர்வலமாக சென்று அபிஷேகம் செய்தன. அருகில், அமைச்சர் பி.கே. சேகர் பாபு, அறநிலயத்துறை ஆணையர் குமரகுருபரன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் சாந்தலிங்க சுவாமிகள் ஆகியோர் இருந்தனர்.” தமிழ் முரசு என்ற நாளிதழிலும் இச்செய்தி வந்துள்ளது[5]. முரசொலியில் முழுவதுமாக செய்தி வந்துள்ளது[6].

பக்தி பரவசத்துடன் விழாவில் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது[7]: “குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் சாந்தலிங்க சுவாமிகள் முன்னிலையில் காளிகாம்பாள் கோவிலில் ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் 11 அடி உயரம் 6 அடி அகலம் கொண்ட புதிய வெள்ளித்தேர் செய்யும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தற்போது 10-க்கும் மேற்பட்ட திட்டங்களை முதல்அமைச்சர் அடுத்த 2 வாரங்களில் தொடங்கி வைக்க உள்ளார். சிதம்பரம் கோவில் தொடர்பான பிரச்சினை குறித்து இணை கமிஷனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு விசாரணை செய்து அறிக்கை அளித்த பின்பு மேல் நடவடிக்கை எடுக்கப்படும். பக்தர்கள் எந்த வகையிலும் துன்புறுத்தப்படாமலும் இறைவனை மகிழ்ச்சியோடு காணுகின்ற சூழ்நிலையை உருவாக்குவது துறையின் நோக்கமாகும்,” இவ்வாறு அவர் பேசினார். ஒரு வேளை, துர்கா ஸ்டாலின் உத்தரவு கொடுத்திருப்பார் போலும்.

விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசியதாவது[8]: “காளிகாம்பாள் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவில் பால்குடபெருவிழா கோலாகலமாக பக்தி உணர்வுடன் இன்று நடைபெற்று இருக்கிறது, அதுமட்டுமல்லாமல் சுமார்  2.5 கோடி மதிப்பீட்டில் வெள்ளி தேர் செய்வதகான பணிகளும் இன்று தொடங்கப்பட்டுள்ளது. முதல்அமைச்சரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் அறநிலையத்துறையின் செயல்திட்டங்கள் அனைத்தையும் உடனுக்குடன் விரைவாக நிறைவேற்றுகிறார்கள். ஏராளமான கோவில்களில் கும்பாபிஷேகங்கள் நடந்து வருவதுடன், கோவில் விழாக்கள், ஆன்மிக நிகழ்ச்சிகள், திருப்பணிகள், கோவில் நிலங்கள் மீட்பு, பக்தர்களுக்கான எல்லா விதமான அடிப்படை வசதிகள் அனைத்தும் சிறப்பாக நடந்து வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை சிறப்பாக ஆன்மிக பணிகளை ஆற்றி வருவதை நாங்கள் அனைவரும் வாழ்த்தி வரவேற்று பாராட்டுகிறோம்,” என்றார்[9].

தொடர்ந்து பேரூர் சாந்தலிங்க சுவாமிகள் பேசியதாவது: “இந்து சமய அறநிலையத்துறை புதிதாக தொடங்கி உள்ள கல்லூரிகள் மூலமாக ஆன்மிக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது பாராட்டிற்குரியது. கோயில்களில் இருக்கக்கூடிய ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், கல்வெட்டுகள் படியெடுத்து ஒலி வருடல் செய்து பாதுகாக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது இதற்கு ஒரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. ஆகம விதிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்க குழு நியமிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அறநெறி பாடசாலை தொடங்க முயற்சி எடுத்துள்ள முதல்அமைச்சருக்கு நன்றி கூறுகிறேன்,”  இவ்வாறு அவர் பேசினார்.

500க்கும் மேலான பக்தர்கள் பால்குடம் எடுத்தது: முன்னதாக சென்னை மரகதாம்பாள் சமேத மல்லிகேசுவரர் கோவிலில் இருந்து 500 மேற்பட்ட பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்து சென்னை காளிகாம்பாள் கமடேஸ்வரர் கோவில் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், இணை கமிஷனர் தனபால், கோவில் அறங்காவலர் சர்வேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஈவேரா நாத்திகத்தில் ஊறி, பெரியாரிஸ போதையில் நனைந்து, இந்துவிரோத பேச்சுகளைப் பேசி, நெற்றியில் விபூதி என்றெல்லாம் வைத்தால் துடைத்தெறியும் ஸ்டாலினுக்கு எப்படி பால்குடம் எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. அதற்கு, இரண்டு மடாதிபதிகள் தலைமைத் தாங்குகிறார்கள் என்று தெரியவில்லை. முன்பு மதுரை ஆதீனம் திமுக ஆதரவாக இருந்தார். இப்பொழுதைய ஆதீனம் இந்து, தாமரை மலர வேண்டும் என்றெல்லாம் பேசி வருகிறார்..

கூடிய சீக்கிரத்தில், இந்து அறநிலையத் துறை, “ஸ்டாலின் போற்றும் துறையாக மாறப் போகிறது: இதில் வேடிக்கை என்னவென்றால், திக, வீரமணி போன்றோரும், இந்துத்துவ வாதிகளும் இதனைக் கண்டுகொள்ளவில்லை. சேகர் பாபு, தன்னை இந்து என்று காட்டிக் கொண்டு, அறநிலையத் துறையை ஒட்டு மொத்தமாக திமுக ஆதரவு கோஷ்டிகளை நிரப்பி, கோவில் சொத்து, குத்தகை, வாடகை என்று எல்லாவற்றையும் சுரட்ட திட்டம் போட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. பக்தர்களுக்கு மொட்டை அடிக்க இலவசம் என்பது உருவகமாகச் சொல்லப் பட்டுள்ளது. இதனால், கோடிக் கணக்கில் சொத்துக்களைக் கொண்ட மடாதிபதிகளைப் பிரித்து, திட்டத்தை அமூல் படுத்தி கொள்ள செயல்பாடுகள் ஆரம்பித்துள்ளன. இத்தகைய மடாதிபதிகள், திராவிடத்துவ போதையில் போற்றி………………….போற்றி அகவல் பாடப் போகிறார்கள்! முன்னால் ஒரு தடவை கருணாநிதிக்கு செய்தார்கள். முட்டாள் இந்துக்கள்,……..பிரஹஸ்பதி இந்துத்துவ வாதிகள்,……மற்ற காவி இத்யாதிகள்,……………….மேகதாது, டாஸ்மாக், ………….என்று பேசி காலந்தள்ளப் போகிறார்கள்! ஸ்டாலினுக்கு அரோகரா! வேல் பிடித்தவனுக்கு அரோஹரா!!!!!!! கருணாநிதி மைந்தனுக்கு அரோஹரா!!!!!!! முழக்கங்களும் அதிகமாகும்.

©  வேதபிரகாஷ்

24-03-2022


[1] தினத்தந்தி, காளிகாம்பாள் கோவிலுக்கு ரூ.2½ கோடியில் வெள்ளித்தேர்: ‘இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகளுக்கு பாராட்டு,” பதிவு: மார்ச் 23,  2022 16:00 PM.

[2] https://www.dailythanthi.com/News/Districts/2022/03/23160028/Rs-24-crore-silver-for-Kalikambal-temple-Praise-for.vpf

[3] தினகரன், இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகளை ஆன்மீக பெருமக்களாகிய நாங்கள் அனைவரும் வாழ்த்தி பாராட்டுகிறோம்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேரூர் சாந்தலிங்க சுவாமிகள், 2022-03-22@ 20:06:00.

[4] தினகரன், முதல்வர் பிறந்தநாள் பாகுட ஊர்வலம், நகரம், சென்னை 23-03-2022, பக்கம்.4.

[5]  தமிழ்முரசு, சென்னை 22-032022, பக்கம்.4

[6]  முரசொலி, 22-03-2022, பக்கம்.11.

[7] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=751780

[8] மாலைமலர், காளிகாம்பாள் கோவிலில் ரூ.2½ கோடி மதிப்பில் புதிய வெள்ளித்தேர்அமைச்சர் சேகர்பாபு பணிகளை தொடங்கி வைத்தார், பதிவு: மார்ச் 22, 2022 15:01 IST.

[9] https://www.maalaimalar.com/news/district/2022/03/22150127/3604654/tamil-news-minister-sekhar-babu-started-new-velli.vpf

பவுண்டரீகம் சோமநாதசுவாமி கோயில் சிதிலமடைந்து, சிற்பங்கள் உடைந்த நிலையில், கவனிப்பாரற்று இருப்பதேன்? (1)

ஜனவரி3, 2022

பவுண்டரீகம் சோமநாதசுவாமி கோயில் சிதிலமடைந்து, சிற்பங்கள் உடைந்த நிலையில், கவனிப்பாரற்று இருப்பதேன்? (1)

10ம் நூற்றாண்டு ஏனாதிமங்கலம் 17ம் நூற்றாண்டில் பவுண்டரீகம் ஆனது- அப்பெயர் என்ற பெயர் வர காரணம்: பவுண்டரீகபுரம் கும்பகோணம் தாலுகா, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. பவுண்டரீகபுரம் சோமநாதசுவாமி கோயில் கும்பகோணம்- அய்யாவாடி- முருக்கன்குடி என்ற ஊரில் இருந்து இரண்டு கிமீ தூரத்தில் உள்ளது[1]. தற்போது பவுண்டரீகபுரம் என்று அழைக்கப்பட்டாலும் இவ்வூருக்கு ஏனாதிமங்கலம் என்ற பெயரும் உண்டு இக்கோயில் பிற்கால சோழர் காலத்தைச் சேர்ந்ததாக விளங்குகிறது[2]. முதலாம் குலோத்துங்க சோழரின் (1070-1120 CE) காலத்தினை சேர்ந்ததாக இருக்கலாம்.  ஆனால், சிற்பங்கள், கோவில் அமைப்பு ராஜராஜன் (985-1014 CE) – ராஜேந்திரன் (1012-1044 CE) கோவில் அமைப்பைக் காட்டுகிறது. முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் (c.17th cent.CE), தஞ்சாவூரை ஆண்ட ராஜாக்களுக்கு, அய்யா குமார தத்தா தேசிகர் என்ற ராஜகுரு இருந்தார்[3]. அவர் வெண்ணார் நதிக்கரையில் பௌண்டிரிகம் என்ற விசேஷ யாகம் செய்தார். அந்த நினைவாக இக்கோவில் பௌண்டரிகபுரம் கோவில் என்று அழைக்கப் படுகிறது[4].

இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் வரும் இக்கோவில்[5]: இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் வரும் இக்கோவில் இந்நிலையில் கவனிப்பாரற்று சிதிலமடந்த நிலையில் உள்ளது[6]. செடி-கொடிகள் மண்டி, இடிந்துள்ள கோவில் கட்டிடங்களின் இடிபாடுகளில் வலர்ந்துள்ளன. அவ்வப்போது, உழவாரப் பணி என்று சுத்தம் செய்யப் பட்டு வந்தாலும், அவை வளர்ந்து விடுகின்றன. இது நிச்சயமாக திராவிடத்துவ நாத்திக ஆட்சியாளர்களின் அலட்சியம், வெறுப்பு மற்றும் துவேச குணாதசியங்களை எடுத்துக் காட்டுகின்றன. ஏனெனில், நிர்வாகம் என்ற முறையில் பாரபட்சமில்லாமல் மராமத்து, சரிசெய்தல், நிர்வாகம் என நடவடிக்கை எடுத்திருந்தாலே, ஒழுங்காக இருந்திருக்கும். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கோவிலாக இருந்தாலும், சொல்லி வைத்தால் போன்று சோழர்கால கோவில்கள் இவ்வாறு விடப் பட்டது, கேள்விக் குறியாக உள்ளது. ஒரு புறம் சோழர்களை போற்றுவது, இன்னொரு பக்கம் சோழர்களைத் தூற்றுவது என்று சித்தாந்த ரீதியில் பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருக்கின்றது. கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோவிலின் இணைக்கோவிலாக பவுண்டரீகபுரம் சோமநாத ஸ்வாமி கோவில் உள்ளது[7]. இக்கோவில் எமன் சிவபெருமானை வழிபட்ட தலமாகவும் சிறப்புபெற்று விளங்குகிறது.

சிலைகள் உடைந்திருப்பது மற்றும் கோவில் சிதிலம்டைந்த நிலை ஏன்?: பொதுவாக இக்கோவில் நிலைப் பற்றி பலருக்குத் தெரிந்துள்ளது. வருடத்திற்கு ஒரு முறை, சுற்றுலா செஒலவர்கள், உழ்வாரப் பணி செய்பவர்கள் வந்து செலிகிறார்கள், புகைப்படம் எடுக்கிறார்கள், இணைதளங்களில் போடுகிறார்கள். ஆனால், யாரும், அதற்கு மேலாக எதையும் செய்வதில்லை. அதாவது அரசாங்கம், கண்டு கொள்வதே இல்லை. ஒருவேளை துலுக்கர் வந்து, சிலைகளைச் சிதைத்துள்ளதால், அக்கோவில் வழிபாட்டிற்கு உகந்ததல்ல, என்று ஒதுக்கி வைத்தனரா என்ற கோணத்தில் யாரும் பதிவு செய்வதாகத் தெரியவில்லை. இவ்வாறு ஒதுக்கப் பட்ட கோவில் என்றால், இருக்கும் சிலைகளை அபகரிக்க கூட்டங்கள் தயாராக இருக்கின்றன. இணைதளத்தில் உள்ள குறிப்புகள் மற்றும் முந்தைய புத்தகங்களில் உள்ள விவரங்களை வைத்து கவனிக்கும் போது, இருக்கின்ற விவரங்களை திரும்ப-திரும்ப நாளிதழ்களிலும், இணைதளங்களிலும் விவரித்துள்ளனர். கல்வெட்டுகள் காணப்படவில்லை என்பதும் அதிர்ச்சியாக உள்ளது, ஏனெனில், சோழர்கால கோவில்களில் கல்வெட்டுகள் இல்லை என்பது பொய்யாகும். மேலும், இக்கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் யாவை போன்ற விவரங்களும் அறியப் படவேண்டும்.

கோவில், விக்கிரங்கள், சிலைகள் விவரங்கள்: தொன்மை மிக்க இக்கோவில் கருங்கல் திருப்பணி கொண்டது. சோழர்கால கலையம்சத்துடன் அழகு மிளிரும் கோஷ்டமூர்த்திகளை கொண்டு திகழ்கிறது[8]. நந்தி, பலிபீடம் மூலவரை நோக்கி பிரகாரத்தில் உள்ளன. கர்ப்பகிருகம் ஒரு அர்த்த மண்டபம், மஹா மண்டபம் மூலவர் உறையும் இடம் என்றுள்ளன. கோவிலின் பிரதான சுவாமி ஶ்ரீ சோமநாதர் ஆவார். லிங்க உருவத்தில் இருக்கும் விக்கிரகம் / லிங்கம் கிழக்கு பார்த்து இருக்கிறது. கர்ப்பகிருகத்திற்குச் செல்ல, இரண்டு பக்கம் படிகளும் இருக்கின்றன. கிழக்கு நோக்கிய கோயில் அர்த்த மண்டபம் முகப்பு மண்டபம் என உள்ளது. கோயிலின் சுற்று சுவர்கள் இல்லை, மண்டப மேல் தளங்களில் பெரும் விருட்சங்கள் வளர்ந்து, பின் வெட்டப்பட்டு அடிக்கட்டகள் மீண்டும் துளிர்த்து மண்டபங்களை பிளக்கும் காட்சி. இருபத்து இரண்டுக்கும் மேற்ப்படட கருவறை கோட்டங்கள் அதில் சிவனின் வெவ்வேறு மாகேஸ்வர வடிவங்கள் அத்தனையும் சிதைக்கப்பட்டு, உடைந்துபோய் உள்ளன. பல நூறு கிமீ தூரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கருங்கல் அதற்கு பலநாள் குருதியும் வியர்வையும் சிந்த உழைத்து உருவம் கொடுத்து உயிர் கொடுத்த சிற்பிகளுக்கு நாம் கொடுத்திருக்கும் மரியாதையை எண்ணி யாரை நோவது. மொத்தம் 22 கோஷ்ட விக்கிரங்கள் உள்ளன.

பொய்-பிரச்சாரங்களினின்று மக்கள் விழித்துக் கொண்ட நிலை: கங்கைகொண்ட சோழபுரம் போன்ற அபூர்வ சிற்பங்களின் கைகளை முழுவதுமாக இடித்து இருப்பது, இடித்தவர்களின் குரூரமான எண்ணங்கள், அரக்கக் குணங்கள் மற்றும் கலையழிப்பு தீவிரவாதங்களை அப்பட்டமாக எடுத்துக் காட்டுகிறது. துலுக்கரின் அத்தகைய மிகக்கொடிய அழிப்புகளை இந்தியா முழுவதும் பதிவாகி உள்ளது. அதேபோல, மாலிகாபூர் தெற்கே வந்தபோது, பற்பல கோவில்களை இடித்து செல்வத்தை சூரையாடியுள்ளான். ஆனால், அந்த உண்மைகளை சொல்ல தமிழக சரித்திராசிரியர்கள், தொல்லியல் வல்லுனர்கள், கோவில் வல்லுனர்கள் தயங்குகிறார்கள் மறைக்கிறார்கள். இளம்.முருகு, கிருஷ்ணவேல் போன்ற மறைப்பு சித்தாந்திகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். இவ்வாறு தான் தமிழக சரித்திரம், சரித்திரவரைவியல் உண்மை-பொய்மைகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டு தவிக்கிறது. போதாக்குறைக்கு, திராவிடத்துவ, நாத்திக, இந்துவிரோத, பெரியாரிஸ, பகுத்தறிவு, கம்யூனிஸ, இந்தியதேச விரோத சித்தாந்திகளும் இவர்களுடன் சேர்ந்து கொண்டு செயல் படுவதால்ணொருதலைப் பட்சமாகவே கடந்த 70 ஆண்டுகள் சரித்திரம் ஓடிக் கொண்டிருக்கிறது. இருப்பினும், கோடிக்கணக்கில் மக்கள் கோவில்களுக்கு செல்லும் போது, உடைந்த சிலைகள், சிற்பங்கள், விக்கிரங்கள் முதலியவற்றைப் பார்க்கும் போது, உண்மையினை அறியத்தான் செய்கின்றனர். அதனால் தான், இன்றைக்கு கொஞ்சம்-கொஞ்சமாக மக்களிடையே விழிப்புணர்வு அதிகமாகி வருகின்றது.

© வேதபிரகாஷ்

03-01-2022


[1] விகிமேபியா, பவுண்டரீகபுரம் சிவன் கோயில், India / Tamil Nadu / Tiruvidaimarudur / முருக்கன்குடி ரோடு.

[2]http://wikimapia.org/36155075/ta/%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

[3] Tamilnadu Tourism, Somanatha Swamy Temple, Poundarigapuram, Thanjavur, Thursday, September 12, 2019.

[4] https://tamilnadu-favtourism.blogspot.com/2019/09/somanatha-swamy-temple-poundarigapuram-thanjavur.html

[5] Ramanan P Ranganathan, Pundarikapuram Temple, Rare Temple in ruins uncared for – Somanatha Swamy Temple, Poundarigapuram, Tamilnadu, 9 July 2020,

[6] https://sites.google.com/site/reclaimtemplesindia/home/pundarikapuram-temple

[7] தினமணி, பவுண்டரீகபுரம் சிவன் கோயிலுக்கு வாருங்கள்!, – கடம்பூர் விஜயன், Published on : 17th January 2017 04:19 PM.

[8] https://www.dinamani.com/religion/religion-articles/2017/jan/17/%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2633857.html

100 ஆண்டுகள் பழமையான கோயில்கள் –  புனரமைக்க தொல்லியல் ஆலோசகர்கள் நியமனம்! ஆனால், அதே நேரத்தில் பல கோவில்கள் இடிக்கப் பட்டு விட்டன!!

திசெம்பர்25, 2021

100 ஆண்டுகள் பழமையான கோயில்கள் –  புனரமைக்க தொல்லியல் ஆலோசகர்கள் நியமனம்! ஆனால், அதே நேரத்தில் பல கோவில்கள் இடிக்கப் பட்டு விட்டன!!

தொல்லியல் ஆலோசகா்கள்  (Archaeological Advisor) நியமனம்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி திருக்கோயில் புனரமைப்பு மற்றும் பாதுகாத்தல் பணிக்கான பணித்தொகுதி ஏற்படுத்தப்பட்டு பொறியியல் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படுள்ளன[1]. சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்கள் பிறபிக்கப்பட்ட உத்தரவில் நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோயில்களின் தரவரிசைப்படுத்தி முறையாக பரமாரித்து புனரமைப்பது குறித்து பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது[2]. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில் புனரமைப்பு மற்றும் பாதுகாத்தல் பணிக்கான தொல்லியல் ஆலோசகா்கள்  (Archaeological Advisor) நியமனம் செய்யப்பட்டுள்ளனா்[3]. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு[4]:  “நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோயில்களின் தரவரிசைப்படுத்தி முறையாக பராமரித்து புனரமைப்பது குறித்து பல்வேறு உத்தரவுகளை சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்துள்ளதுஇந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் ஏறக்குறைய 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருக்கோயில்கள் நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டவையாகும். இத்திருக்கோயில்கள் கட்டடக் கலையின் சிறப்புகளை பறைசாற்றுவதுடன், தமிழா்களின் நாகரிகத்தை வெளிப்படுத்துபவையாக உள்ளன.

காஞ்சிபுரம், ஈரோடு, சேலம், தஞ்சாவூா், வேலூா், விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சி, மதுரை மற்றும் கடலூா் : அறிக்கை தொடர்கிறது[5], “மேலும் பல்வேறு திருக்கோயில்களின் மூலிகை ஓவியங்களை பழைமை மாறாமல் புதுப்பித்து பராமரிப்பது அவசியமாகும். இப்பணியை தொல்லியல் துறையினை சாா்ந்த வல்லுநா்களின் ஆலோசனை பெற்று அவா்களது மேற்பார்வையில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதன் மூலம் அதன் பழைமையினை பாதுகாக்க இயலும் என்ற நோக்கத்தில் தொல்லியல் ஆலோசகராக காஞ்சிபுரம், ஈரோடு, சேலம், தஞ்சாவூா், வேலூா், விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சி, மதுரை மற்றும் கடலூா்  ஆகிய இணை ஆணையா் மண்டலங்களுக்கு, நிபந்தனைகளுக்குட்பட்டு நியமனம் செய்யப் பட்டுள்ளனா்தொல்லியல் ஆலோசகா்களாக நியமனம் செய்யப்பட்டவா்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இணை ஆணையா் மண்டலத்திலுள்ள 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோயில்களை ஆய்வு செய்து அவற்றின் தொன்மை அடிப்படையில் தரவரிசைப்படுத்தி சம்பந்தப்பட்ட இணை ஆணையா் மூலம் ஆணையருக்கு அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும்,” என்று கூறுகிறது[6].

கோவிலை இடிக்க வந்தபோது, பெண்கள் சாமியாடி விரட்டினர். அதாவது, நாத்திக ஆட்சியாளர்கள் அந்த அளவுக்குக் கூட பெண்களின் உணர்வுகளை மதிக்கவில்லை

ஆலோசக வேலை செய்யவேண்டும்: அறிக்கை தொடர்கிறது[7],தொல்லியல் ஆலோசகா்கள், ஆணையா், இணை ஆணையா் மற்றும் உதவி ஆணையா்  ஆகியோர்களால் அறிவுறுத்தப்படும் திருக்கோயில்களை நேரில் ஆய்வு செய்து அவற்றை புனரமைப்பது குறித்து உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும். தங்கள் பகுதிகளின் பழைமை வாய்ந்த திருக்கோயில்களை அவ்வப்போது ஆய்வு செய்து திருக்கோயில்கள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என்பது குறித்து சம்பந்தப்பட்ட தொல்லியல்துறை ஆலோசகா்கள் அறிக்கை அனுப்ப வேண்டும். தொல்லியல்துறை ஆலோசகா்கள் மேற்கொள்ள  வேண்டிய மற்ற பணிகள் குறித்து ஆணையரால் அவ்வப்போது அறிவுரை வழங்கப்படும்,”என்று கூறுகிறது[8].

இதன்படி நியமிக்கப் பட்டுள்ள தொல்துறையினர் பின் வருமாறு[9]: யார்-யார் நியமிக்கப் பட்டுள்ளனர்?

  1. காஞ்சிபுரம் மண்டலத்துக்கு ஓய்வு பெற்ற மாநில தொல்லியல் துறை துணை கண்காணிப்பாளர் ஸ்ரீதரன்,
  2. ஈரோடு மண்டலத்துக்கு ஓய்வு பெற்ற மாநில தொல்லியல் துறை உதவி இயக்குனர் சுப்பிரமணியன்,
  3. சேலம் மண்டலத்துக்கு ஓய்வு பெற்ற மாநில தொல்லியல் துறை மண்டல உதவி இயக்குனர் செல்வராஜ்,
  4. தஞ்சாவூர் மண்டல அலுவலகத்துக்கு ஓய்வு பெற்ற ஒன்றிய தொல்லியல் துறை உதவி கண்காணிப்பாளர் வாசுதேவன்,
  5. வேலூர் மண்டலத்துக்கு ஓய்வு பெற்ற மாநில தொல்லியல்துறை பதிவு அலுவலர் கலைவாணன்,
  6. விழுப்புரம் மண்டலத்துக்கு ஓய்வு பெற்ற ஒன்றிய தொல்லியல்துறை துணை கண்காணிப்பாளர் தண்டபாணி,
  7. திருவண்ணாமலை மண்டலத்துக்கு ஓய்வு பெற்ற ஒன்றிய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் வெங்கடேசன்,
  8. திருச்சி மண்டலத்துக்கு மாநில தொல்லியல்துறை உதவி இயக்குனர் கணேசன்,
  9. மதுரை மண்டலத்துக்கு ஓய்வு பெற்ற மாநில தொல்லியல் துறை வல்லுநர் சாந்தலிங்கம்,
  10. கடலூர் மண்டலத்துக்கு ஓய்வு பெற்ற மாநில தொல்லியல் துறை காப்பாட்சியர் பரணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்[10].

ஆலோசகர்களின் வேலை என்ன?: * தொல்லியல் ஆலோசகர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இணை ஆணையர் மண்டலத்திலுள்ள 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோயில்களை ஆய்வு செய்து அவற்றின் தொன்மை அடிப்படையில் தரவரிசைப்படுத்திட சம்பந்தப்பட்ட இணை ஆணையர் மூலம் ஆணையருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

*  இந்த அலுவலர்கள் ஆணையர், இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் ஆகியோர்களால் அறிவுறுத்தப்படும் கோயில்களை நேரில் ஆய்வு செய்து அவற்றை புனரமைப்பது குறித்து உரிய ஆலோசனைகளை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்க வேண்டும்.

* அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய மற்ற பணிகள் குறித்து ஆணையரால் அவ்வப்போது வரையறை செய்ய வேண்டும்.

* மேலும் தங்கள் சரகத்திலுள்ள பழமைவாய்ந்த கோயில்கள் முறையாக பராமரிக்கப்படுகின்றவா என்பது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.

* தொல்லியல் ஆலோசகர்கள் ஓராண்டிற்கு அல்லது மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இதில் எது முன்னதோ அதுவரை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுகின்றனர்.

* வல்லுநர்களின் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்படுகிறது. வல்லுநர்களுக்கான மாதாந்திர தொகுப்பூதியத்தினை கோயிலின் நிதியிலிருந்து வழங்கிட அறிவுறுத்தப்படுகிறது. பின்னர் தொகுப்பூதியத்தினை ஆணையர் பொதுநல நிதியிலிருந்து பெற்று கோயிலுக்கு திரும்ப வழங்கிட விதிகளின்படி உரிய முன்மொழிவினை அனுப்ப சம்பந்தப்பட்ட அலுவலர்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது.

*  நிர்வாக நலன் கருதி இந்த தொல்லியல் ஆலோசகர்களை முன்அறிவிப்பின்றி ஆணையர் பணி நீக்கம் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பழமை வாய்ந்த கோயில்களை புனரமைப்பது தொடர்பான பணிகளை மேற்கொள்ள ஓய்வுபெற்ற தொல்லியல் துறை அலுவலர்கள் ‘தொல்லியல் ஆலோசகராக’ நியமிக்கப்பட்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி திருக்கோயில் புனரமைப்பு மற்றும் பாதுகாத்தல் பணி: இவையெல்லாம் ஏதோ புதியது போலவும், கட்ந்த ஆண்டுகளில் நடக்காதது போலவும் இருக்கிறது. இடைகாலத்தில், துலுக்கர்களின் கோவில் இடிப்புகள், அழிப்புகளுக்குப் பிறகு, விஜயநகர, நாயக்க மன்னர்கள், வணிகர்கள், செல்வந்தர்கள், பக்தர்கள் செய்யாத புனரமைப்பு சேவைகளை இவர்கள் செய்து விடப் போகிறார்களா என்று தெரியவில்லை இதை வைத்து கான்ட்ராக்ட் கொடுக்கும் போது கமிஷன் அடிக்க, கொள்ளையடிக்க திட்டம் போடுவது போல இருக்கிறது. ஏனெனில், கருணாநிதி காலத்தில் காஞ்சிபுரத்தில் புராதன மண்டங்கள் இடிக்கப் பட்டன. அதனை ஆர்.நாகசாமியே எடுத்துக் காட்டியுள்ளார். அவர் மகன் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன், பல கோவில்கள் இடிக்கப் பட்டு விட்டன. பிறகு, “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி திருக்கோயில் புனரமைப்பு மற்றும் பாதுகாத்தல் பணிக்கான பணித்தொகுதி ஏற்படுத்தப்பட்டு பொறியியல் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படுள்ளன[11],” என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

25-12-2021


[1] மாலைமலர், திருக்கோயில் புனரமைப்பு மற்றும் பாதுகாத்தல் பணிக்கு தொல்லியல் ஆலோசகர்கள் நியமனம், பதிவு: டிசம்பர் 12, 2021 15:43 IST.

[2] https://www.maalaimalar.com/news/district/2021/12/12154342/3282565/Archaeological-Consultants-Appointed-for-Temple-Renovation.vpf

[3] தினமணி, புனரமைப்பு பணிக்கான தொல்லியல் ஆலோசகா்கள் நியமனம், By DIN  |   Published on : 13th December 2021 05:39 AM.

[4]https://www.dinamani.com/tamilnadu/2021/dec/13/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-3753816.html

[5] தமிழ்.இந்து, பழைய கோயில்களை சீரமைக்க தொல்லியல் ஆலோசகர் நியமனம், செய்திப்பிரிவு, Published : 13 Dec 2021 03:07 AM; Last Updated : 13 Dec 2021 03:07 AM

[6] https://www.hindutamil.in/news/todays-paper/regional01/746484-.html

[7] இ.டிவி.பாரத், 100 ஆண்டுகள் பழமையான கோயில்கள் –  புனரமைக்க தொல்லியல் ஆலோசகர்கள் நியமனம்!, Published on: Dec 12, 2021, 7:40 PM IST.

[8] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/100-years-old-temples-hr-and-ce-department-appoints-archaeologists-to-restore-temples/tamil-nadu20211212194000330

[9] தினகரன், நூற்றாண்டு பழமையான 8 ஆயிரம் கோயில்கள் புனரமைப்பு பணி தொல்லியல் ஆலோசகர்கள் நியமனம்: ஆணையர் குமரகுருபரன் நடவடிக்கை, 2021-12-13@ 00:09:46. https://www.dinakaran.com/news_detail.asp?Nid=726978

[10] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=726978

[11] மாலைமலர், திருக்கோயில் புனரமைப்பு மற்றும் பாதுகாத்தல் பணிக்கு தொல்லியல் ஆலோசகர்கள் நியமனம், பதிவு: டிசம்பர் 12, 2021 15:43 IST.

ஆலயத் திருப்பணிகளில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் முதலியோர் தலையிடுவது! ஜெஸியா முறை ஆரம்பித்து விட்டது! (1)

ஒக்ரோபர்12, 2021

ஆலயத் திருப்பணிகளில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் முதலியோர் தலையிடுவது! ஜெஸியா முறை ஆரம்பித்து விட்டது! (1)

காலமுறை அறிக்கை சமர்ப்பிக்க அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு: அறநிலையத்துறை நிர்வாக நலன் கருதி ஒவ்வொரு மாதமும் 10ம் தேதிக்குள் காலமுறை அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று ஆணையர் குமரகுருபரன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்[1]. இது குறித்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது[2]:  அறநிலையத்துறை நிர்வாக நலன் கருதி இத்துறை அலுவலர்களின் செயல்பாடு குறித்து தலைமை அலுவலகத்திற்கு கால முறை அறிக்கைகள் அனுப்ப வேண்டும். மண்டல இணை ஆணையர்கள் தங்கள் மண்டலத்தில் உள்ள அனைத்து அலுவலர்களிடம் இருந்து கால முறை அறிக்கை பெற்று தொகுத்து சரிபார்த்து ஆணையருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிடப்படுகிறது. மேலும், காலமுறை அறிக்கையில் அளிக்கப்படும் விவரங்களுக்கு இணை ஆணையர்களே முற்றிலும் பொறுப்பாவார்கள். 2021 செப்டம்பர் மாதம் வரையிலான விவரங்களை இம்மாதம் 25ம் தேதிக்குள் அடுத்து வரும் மாதத்திற்கான கால முறை அறிக்கை விவரங்களை ஒவ்வொரு மாதமும் 10ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

பணியாளர் விவரங்கள்பணியில் உள்ளவர், ஊழலில் மாட்டிக் கொண்டவர், ஓய்வு பெறப் போகிறவர் முதலியன: அதில்,

  • எத்தனை மாவட்டங்களில் மாவட்ட குழு ஏற்படுத்தி உறுப்பினர்கள் நியமனம் செய்ய வேண்டியுள்ளது,
  • பரம்பரை உரிமை வழக்கு நிலுவையாக உள்ளவை எவ்வளவு,
  • நிர்வாக திட்டம் இல்லாத கோயில்களின் எண்ணிக்கை,
  • அறங்காவலர்கள் நியமனம் செய்ய வேண்டிய கோயில்களின் எண்ணிக்கை,
  • பரம்பரை அறங்காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட இனங்களின் எண்ணிக்கை,
  • கோயில்களில் பணியிடங்கள் விவரங்கள்,
  • எத்தனை பணியாளர்கள் ஓழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ளது.
  • பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள்,
  • 4 ஆண்டுகளில் ஓய்வு பெற உள்ளவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை விவரம்,
  • அடுத்த 5 ஆண்டுகளில் 50-55 வயது அல்லது 25/30 வருட பணி நிறைவு செய்யும் நபர் கட்டாய ஓய்வு பரிசீலினைக்கு உட்பட்ட பணியாளர் விவரம்,
  • ஆதிதிராவிடர், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி காலி பணியிட விவரம்,
  • 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்லது பணியில் சேர்ந்து 3 மாதங்களுக்கு சொத்து விவர பட்டியல் தாக்கல் செய்ய வேண்டிய பணியாளர்கள் எண்ணிக்கை, …….

கோவில் பணி, நிதி, திருப்பணி பற்றிய விவகாரங்கள்: கடந்த மாதம் (செப்டம்பர் 2021) வரை

  • -எத்தனை கோயில்களுக்கு அரசு மானியம் வழங்கப்பட்ட விவரம்,
  • கோயில்களின் திருப்பணிக்காக ஆசிய வளர்ச்சி வங்கி,
  • சுற்றுலாத்துறை,
  • திருப்பணி நிதி,
  • தேர் திருப்பணி நிதி,
  • ஆலய மேம்பாட்டு நிதி மூலம் வழங்கப்பட்ட விவரம்

உட்பட 485 விவரங்களைய அனுப்ப வேண்டும். உரிய காலத்திற்குள் கால முறை அறிக்கை விவரங்களை அனுப்பாத, அனுப்ப தவறும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவையெல்லாம் திடீரென்று கேட்கப் படவேண்டிய அவசியம் என்னவென்று தெரியவில்லை. அலுவலகத்தில், அந்தந்த பிரிவில் வேலைசெய்யும் அதிகாரிகள், உதவியாளர்கள், எழுத்தர்கள் என்று கோப்புகளை வைத்திருப்பவர்களுக்கு விவரங்கள் தெரிந்திருக்கும். மாதாந்திர, வருட அறிக்கைகள் மண்டலங்கள், கோவில்கள் அனுப்பாமல் இருக்காது. அவற்றைத் தொகுத்து முழு அறிக்கைத் தயாரிக்கவேண்டியது, நுங்கம்பாக்கம் தலைமை அலுவலகத்தின் பொறுப்பாகும். ஆகவே, இவையெல்லாம் இல்லை என்று சொல்ல முடியாது.

கோயில்களில் ஒரே மாதிரியான முறையில் திருப்பணிகளை செயல்படுத்தும் வகை: கோயில்களில் ஒரே மாதிரியான முறையில் திருப்பணிகளை செயல்படுத்தும் வகையில் புதிதாக விதிமுறைகளை அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது[3]. இது குறித்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது[4]: கோயில்களில் கட்டப்படவிருக்கும் மண்டபம், பக்தர்கள் தங்கும் மண்டபம் கட்டிட பணிக்கு முறையே மண் பரிசோதனை செய்யப்பட்டு வடிவமைப்பு கணக்கீடு தயார் செய்து கட்டப்படவிருக்கும் இடம் கோயிலுக்கு சொந்தமாக இருக்க வேண்டிய சர்வே எண்ணுடன் கூடிய சர்வே வரைபடம் இணைத்தல் வேண்டும்.

* அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீடு, ஒப்பந்த நகல் மற்றும் தொடர்புடைய வரைபடங்கள், வடிவமைப்பு கணக்கீடுகள் போன்றவற்றின் நகல்கள் தளத்தில் வைத்திருத்தல் வேண்டும். ஆணையர், தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர் ஆய்வின் போது பார்வையிட சமர்ப்பிக்க வேண்டும்.

* நடைபெற்றும் வரும் பணிகளை மாதம் ஒரு முறை செய்பொறியாளர் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். பணிகள் முடிவுற்ற பின் பணியின் மதிப்பீட்டு தொகை என்னவாக இருப்பினும் பணி முடிவடைந்ததற்கான சான்றினை செயற்பொறியாளரிடம் பெற்று பின்னரே இறுதியாக பணப்பட்டுவாடா செய்ய வேண்டும்.

* பணியின் மதிப்பு ரூ.2 கோடி வரை என்றால் 15 நாட்கள், ரூ.2 கோடிக்கு மேல் இருந்தால் ரூ.30 நாட்கள் வரை குறுகிய கால ஒப்பந்தப்புள்ளியாக அழைக்க ஆணையரின் ஒப்புதல் பெற வேண்டும்.

* ஒப்பந்தபுள்ளி திறப்பு முதல் பணி ஆணை வழங்கும் நாள் வரை கால அவகாசம் 90 நாட்களுக்கு அதிகமாக இருக்க கூடாது.

100 ஆண்டுகளுக்கு மேல் ஆன கோயில்களில் எந்த வகையிலான கட்டுமானங்களையும் ஏற்படுத்த கூடாது: இப்படி தினம்-தினம் ஆணைகள் பிரப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள்:

* கோயில் பணிகளான கோபுரம், விமானம் போன்ற ஸ்தபதிகள் தொடர்புடைய பணிகளை மேற்கொள்ளும்போது தொல்லியல் துறை, மாநில அளவிலான கமிட்டி, உயர் நீதிமன்ற கருத்து ஆகியவற்றின் கருத்துகளின் அடிப்படையிலும், வரைபட குழுவின் அங்கீகாரம் பெற்ற வரைபடத்தின் அடிப்படையிலும் திருப்பணிக்கான மதிப்பீட்டில் தொல்லியல் துறையினரால் அவ்வபோது வழங்கப்படும் கருத்துருவின் அடிப்படையில் தொன்மை மாறாமல் மதிப்பீடு தயார் செய்ய வேண்டும்.

* கட்டுமான பணிகளுக்கு சான்றினை பெற்று தரமுள்ள பொருட்களை பயன்படுத்த வேண்டும். இரும்பு கம்பிகள், ஜிஐ ஷீட், அலுமினியம் ஷீட் ஆகிய இனங்களுக்கு தொடர்புடைய தரச்சான்று பெற்று அவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

* 100 ஆண்டுகளுக்கு மேல் ஆன கோயில்களில் எந்த வகையிலான கட்டுமானங்களையும் ஏற்படுத்த கூடாது என இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் கோயில்களின் இணை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்[5].

* கோயில் கட்டுமானங்களில் சுண்ணாம்பு, வண்ணப்பூச்சு செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்[6].

இவையெல்லாம் கோவில் பணிகள் அனைத்தும் முடக்கும் செய்யும் திட்டம் போலத் தெரிகிறது.

© வேதபிரகாஷ்

12-10-2021


[1] தினகரன், கோயில்களின் திருப்பணி உட்பட 485 தலைப்புகளின் கீழ் விவரம் அளிக்க வேண்டும்: அறநிலையத்துறை ஆணையர் அதிரடி நடவடிக்கை, 2021-10-11@ 00:04:07.

[2]  https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=711498

[3] தினகரன், பணிகள் முழுவதும் முடிந்த பிறகே பணம் பட்டுவாடா கோயில்களில் திருப்பணிகளை செயல்படுத்த விதிமுறைகள் வெளியீடு: அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை, 2021-10-04@ 02:53:37.

[4] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=709797

[5] தினகரன், 100 ஆண்டுகளுக்கு மேல் ஆன கோயில்களில் எந்த வகையிலான கட்டுமானங்களையும் ஏற்படுத்த கூடாது: இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு, 2021-10-12@ 12:45:30.

[6] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=711977

ஆகம தந்திரமும் ஜாதி மந்திரமும் இல்லை, திராவிடத்துவ வன்மமும், நாத்திக இந்துவிரோதமும், தான் வெளிப்படுகின்றன – ஏதோ எதிர்மறையாக செய்ய வேண்டும் என்ற நோக்கமும் புரிகிறது (2)

செப்ரெம்பர்14, 2021

ஆகம தந்திரமும் ஜாதி மந்திரமும் இல்லை, திராவிடத்துவ வன்மமும், நாத்திக இந்துவிரோதமும், தான் வெளிப்படுகின்றன – ஏதோ எதிர்மறையாக செய்ய வேண்டும் என்ற நோக்கமும் புரிகிறது (2)

அதேபோலவே, இப்போதும், அறங்காவலர் உரிமையில் அரசு தலையிட்டிருக்கிறது:சுப்ரமணியசாமி  சொன்னது, “அதேபோலவே, இப்போதும், அறங்காவலர் உரிமையில் அரசு தலையிட்டிருக்கிறது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசின் முடிவு தவறானது. அதனால், ஏற்கனவே தெளிவாக இருக்கும் பல்வேறு சட்டங்களை, உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள் காட்டி, முதல் கட்டமாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போகிறேன். தேவையானால், உச்ச நீதிமன்றம் வரை செல்வேன். எனவே, இந்த உத்தரவை உடனடியாக, முதல்வர் ஸ்டாலின்வாபஸ்பெற வேண்டும். இல்லையென்றால், அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். அர்ச்சகர்களாக இருக்கும் பிராமணர்களுக்காக இதை செய்யவில்லை. அரசியல் சட்டத்தை ஸ்டாலின் மதிக்காமல், ஹிந்து மத கோட்பாடுகளில் தலையிடுகிறார்[1]. அதை தடுக்கவே போராடுகிறேன். புரிந்து கொண்டு, ஸ்டாலின் வாபஸ் பெற்றால், நீதிமன்ற கண்டனத்தில் இருந்து தப்பிப்பார்,” என அவர் தெரிவித்துள்ளார்[2].

ஆகம தந்திரமும் ஜாதி மந்திரமும்! –பேரா.முனைவர் வெ.சிவப்பிரகாசம்: இவற்றிற்கு எல்லாம் பதில் கொடுப்பதைப் போன்று, நக்கிரனில், ஒரு செய்தி வெளியாகியுள்ளது[3]. இதில் புதியதாக எதுவும் இல்லை. ஏற்கெனவே தள்ளுபடி செய்யப் பட்ட தீர்ப்புகளை வைத்துக் கொண்டு, அவற்றையும் அரைகுறையாகப் புரிந்து கொண்டு, ஸ்டாலினை, திமுகவை ஆதரிக்க வேண்டும் என்ற பிரச்சார ரீதியில் எழுதப் பட்டுள்ளது[4]. இவ்வாறு தான் பொய்களை வைத்டுக் கொண்டே திராவிடத்துவ கட்சிகள் 1960களிலிருந்து மக்களை ஏமாற்றி வருகின்றது. ஆட்சி-அதிகாரம் வைத்துக் கொண்டு, ஊடகங்களை துஷ்பிரயோகம் செய்து, கருத்துகளை, நிகழ்வுகளை மக்களின் மீது தீணித்து வருகின்றது. இப்பொழுது, சன் குழுமம், ஆட்சி-அதிகாரம், விளம்பர வியாபாரம்-வருமானம் அவற்றை பங்கு போட்டுக் கொள்ளும் கூட்டங்களாக மாறி விட்டதால், எல்லாமே, ஒரே பாட்டைப் பாடிக் கொண்டிருக்கின்றன.

திராவிடத்துவ, நாத்திகஇந்துவிரோதிகள் பல விசயங்களைக் கண்டுகொள்வதில்லை:

  1. அர்ச்சகர் பிரச்சினை நீதி மன்றத்திற்குச் சென்று வாத-விவாதங்களுக்கு உட்படுத்தப் படும் நிலையில், ஜாதிகளை மீறிய நிலை வருகின்றது.
  2. கோடிக் கணக்கான கோவில்கள், பலமுறைகளில், நிலைகளில், “மந்திர-தந்திர-யந்திர” வழிகளில், ஆகமங்கள்- ஆகமங்கள் இல்லாத என்ற வகைகளில் கட்டப் பட்டுள்ளன, மாற்றப் பட்டுள்ளது, மாற்றியமைக்கப் பட்டிருக்கின்றன.
  3. நேராக கருவறைக்குச் செல்லும் போன்ற கோவில்கள், கருவறையைச் சுற்றி வரும் கோவில்கள், எட்டி நின்று வழிபடும் கோவில்கள், என்று பல வகைகள் உள்ளன.
  4. மிருக பலி இடுதல், இடக்கூடாது என்றுள்ள கோவில்கள், இரண்டையும் தனித்தனியாக செய்து கொள்ளலாம் என்றுள்ள கோவில்கள் என்றெல்லாம் உள்ளன.
  5. வருடத்திற்கு, மாதத்திற்கு, பட்சத்திற்குத் திறக்கும் கோவில்கள் உள்ளன. இல்லை, கருவறை சிலைகளுக்கு / விக்கிரகங்களுக்கு அப்பொழுது தான் பூஜை என்ற நிலையும் உள்ளது.
  6. ஒரு கோவிலுக்கு பல மடங்கள் உரிமை கொண்டாடும் நிலையில், அம்மடங்கள் மாறி-மாறி பூஜை செய்து வரும் முறைகளும் உள்ளன.
  7. வேதங்களுக்கு, வேதாங்களுக்கு, ஆகமங்களுக்கு உட்பட்டது என்று கோவில்கள் இருக்கின்றன.
  8. ஜைன-பௌத்த இடையூறுகள், ஆக்கிரமிப்புகள், விக்கிரங்களை மாற்றி வைத்த நிலைகள் என்றெல்லாம் பிரச்சினை இருந்தன, அவை, இப்பொழுது ஆகமப் பிரச்சினைகளாக வெளிப்படுகின்றன.
  9. இந்துக்கள், ஜைனர்கள், பௌத்தர்களின் கோவில்கள் அவ்வாறே நிர்வகிக்கப் பட்டு வருகின்றன.
  10. இடைக் கால, முகமதியர்களின் கோவில் இடிப்புகள், கருவறை விக்கிரகங்கள் உடைப்பு, போன்ற அவமதிப்புகள், அநாச்சாரங்கள் முதலியவற்றிற்குப் பிறகு, பல விதிமுறைகள் சேர்க்கப் பட்டன, மாற்றியமைக்கப் பட்டுள்ளன.
  11. அத்தகைய கோவில்களில், அம்முறைகளிலேயே ஆராதனை, கொண்டாட்டங்கள், பூஜைகள், வழிபாடுகள் நடந்து வருகின்றன.

ஆனால், இவற்றையெல்லாம் ஒதுக்கி விட்டு, சட்டங்களை, நீதிமன்ற தீர்ப்புகளை, ஆகமங்களை, மெற்குறிப்பிடப் பட்ட பிரச்சினைகளை மறைத்து, அர்ச்சகர் நியமனத்தை அரசியல் ஆக்கப் பட்டுள்ளது.

நாத்திகர், ஆத்திக விசயங்களில் தலையிடும் மர்மங்கள்!: நாத்திகம், அதிலும் இந்துவிரோத நாத்திகம் பின்பற்றி வரும், இந்த திராவிடத்துவத் தலைவர்கள் பெயர்களைச் சொல்லி, அவர்களின் விருப்பு-வெறுப்புகளுக்கு ஏற்ப நாங்கள் அர்ச்சகர் நியமனத்தைச் செய்வோம் என்று பிடிவாதமாகச் செய்துள்ளனர். திக-திமுக-கம்யூனிஸ்டுகள் இந்துவிரோதிகள் ஆத்திக விசயத்தில் தலையிடுவது மூலம் தான் பிரச்சினைகள் கிளம்புகின்றன:

  1. எல்லா டாக்டர்களும் அறுவை சிகிச்சை செய்ய முடியுமா? மாட்டு டாக்டர் மனிதனுக்கு வைத்தியம் பார்க்க முடியுமா?
  2. ஏனெனில், எம்.பி.பி.எஸ் படித்திருந்தாலும், உடனடியாக டாக்டராகி, மருத்துவம் செய்து விட முடியாது, அறுவை சிகிச்சை செய்கிறேன் என்று, ஆபரேஷன் தியேட்டர்களில் நுழைந்து விட முடியாது.
  3. மருத்துவத்தில் உள்ள பல பிரிவுகளில் முறையாகப் படித்து, தேர்ச்சி பெற்று அனுபவம் பெற்றப் பிறகே, மருத்துவம் செய்யமுடியும். அவ்வாறில்லாமல், வேலையில் இறங்கமுடியாது. ஒரு வருடத்தில் சர்டிபிகேட் வாங்கிக் கொண்டு டாக்டர் ஆகிவிடமுடியாது.
  4. எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர் பதவிகளுக்கு, வேலைகளுக்கு டிப்ளோமா, சர்டிபிகேட், டிகிரி படிப்புகள் ஆரம்பித்து, ஒரு வருடம், இரண்டு வருடங்கள் என்று வைத்து, படித்து முடித்து சான்றிதழ் பெற்றுக் கொண்டால், அவர்கள் எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர் என்று ஆகி விட முடியுமா?
  5. எல்லா எம்.எல்.ஏக்கள் / எம்.பிக்களும் அமைச்சர் ஆக முடியுமா? அது-அதற்கு சட்டதிட்டங்களை வைத்திருக்கும் / பாரம்பரியம் இருக்கும் போது, மீறுவது ஏன்?
  6. துப்பாக்கி சுட முடியும், குண்டு வெடிக்கத் தெரியும் என்று தீவிரவாதிகள் ராணுவத்தில் சேர்ந்து விட முடியுமா?
  7. ஆர்.சி கிறிஸ்தவன் புரொடெஸ்ன்டென்ட் சர்ச்சுக்கு பாஸ்டர் ஆக முடியுமா? செவன்த்-டே-அட்வென்டிஸ்ட் சர்ச்-காரன், சிஎஸ்.ஐ பிஷப் ஆகமுடியுமா?
  8. சுன்னி துலுக்கன், ஷியா மசூதி இமாம் ஆக முடியும? போஹ்ரா முஸ்லிம், சுன்னி மசூதி இமாம் ஆகலாமா? அஹ்மதியாக்கள், சுன்னி அல்லது ஷியா மசூதி மௌலானா ஆகமுடியுமா?
  9. இது பிராமணர்-பிராமணர் அல்லாத பிரச்சினையே இல்லை. ஏனெனில், இருக்கும் லட்சக்கணக்கிலான கோவில்களில் பாதிக்கும் மேலான கோவில்களில் பிராமணர் அல்லாதவர் தான் அர்ச்சகராக இருக்கின்றனர். அங்கு பிராமணர் சர்டிபிகேட் வாங்கி வந்தாலும், அர்ச்சகராக முடியாது.
  10. ஒரு வருடத்தில் படித்து, சர்டிபிகேட் வாங்கிக் கொண்டு, அர்ச்சகர் ஆகி விடலாம் என்பது வேடிக்கையான விசயம் என்பது எல்லொருக்கும் தெரிந்துள்ளது.

கொரோனா காலம் நீங்கியதுடன், இந்த திட்டத்தின் பின்னனி வெளிப்பட்டு விடும்: ஆக, இவையெல்லாம், அவர்களுக்குப் புரியவில்லை என்பதில்லை. எனவே, இந்த சர்டிபிகேட் அர்ச்சகர்களை கோவில்களுக்குள் நுழைப்பது, பக்தியோ, சிரத்தையோ, கடவுளின் மீதான காதலோ, விக்கிரகங்க்ளைக் காக்க வேண்டும் என்ற உருகலோ இல்லை. கோவில்களுக்குள் நுழைந்து, விவரங்களை அறிந்து, நாத்திக ரீதியில், ஏதோ எதிமறையாக செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் நுழைப்பப் பட்டதே ஆகும். மாலிக்காபூர்-ஔரங்கசீப் போன்ற எண்ணங்களுடன் நுழைதால், நிச்சயமாக அதே விளைவுகள் தான் உண்டாகும். உலகமே உண்மை அறிய நேரிடும். உண்மையினை யாரும் மறைக்க முடியாது, அது சரித்திரமாகும்.

© வேதபிரகாஷ்

14-09-2021


[1] ஏசியா.நெட்.நியூஸ், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் சட்டத்தை வாபஸ் பெற்றால் ஸ்டாலின் தப்பிப்பார். சு.சாமி கடும் எச்சரிக்கை..!, Thiraviaraj RM, Tamil Nadu, First Published Aug 17, 2021, 9:20 AM IST; Last Updated Aug 17, 2021, 6:57 PM IST.

[2] https://tamil.asianetnews.com/politics/subramaniam-swamy-issued-a-stern-warning-to-stalin-qxytbo

[3] நக்கீரன், ஆகம தந்திரமும் ஜாதி மந்திரமும்! –பேரா.முனைவர் வெ.சிவப்பிரகாசம், Published on 08/09/2021 (06:07) | Edited on 08/09/2021 (07:27).

[4] https://www.nakkheeran.in/nakkheeran/agama-tantra-and-caste-mantra-peradr-v-sivaprakasam/agama-tantra-and-caste-mantra-peradr

ஆகம தந்திரமும் ஜாதி மந்திரமும் இல்லை, திராவிடத்துவ வன்மமும், நாத்திக இந்துவிரோதமும், தான் வெளிப்படுகின்றன (1)

செப்ரெம்பர்14, 2021

ஆகம தந்திரமும் ஜாதி மந்திரமும் இல்லை, திராவிடத்துவ வன்மமும், நாத்திக இந்துவிரோதமும், தான் வெளிப்படுகின்றன (1)

2015ல் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் சட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்: கடந்த 2006ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 36 ஆயிரம் கோயில்களில் தகுதியும் பயிற்சியும் பெற்ற இந்து மதத்தைச் சேர்ந்த எந்த சாதியினர் வேண்டுமானாலும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாம் என்ற நிலை உருவானது[1]. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நல சங்கம் மற்றும் தென்னிந்திய திருக்கோயில் பரிபாலன சபை ஆகியவற்றின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது[2]. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் ஆணைக்கு இடைக்காலத் தடை விதித்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் மீதான இறுதி விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த மே மாதம் நடைபெற்றது. இரு தரப்பிலும் வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு மறுதேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் சட்டத்தை ரத்து செய்துள்ள உச்ச நீதிமன்றம், ஆகம விதிக்கு உட்பட்டு அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

2015 முதல் 2021 வரை: இரட்டை வேடம் போட்டு வரும் திராவிட கட்சிகள், ஒரு வருட அர்ச்சகர் சான்றிதழ் பெற்றவர்களுக்கு அர்ச்சகர் வேலை கொடுக்கிறோம் என்று, விளம்பரத்திற்காக அரசியல் செய்து வருகின்றன. அதிமுக சட்டப் பிரச்சினையை அறிந்து, ஆகமங்கள் இல்லாத கோவில்களுக்கு இருவரை அர்ச்சகராக நியமித்து அமைதியானது. இப்பொழுது, திமுக ஆட்சிக்கு வந்தவுடன், வேண்டுமென்றே, சட்டமீறலைச் செய்ய, இவ்வாறு செய்துள்ளது. நீதிமன்றங்களுக்குச் சென்று, வருவதற்குள் ஆண்டுகள் ஆகிவிடும், அதுவரை பார்த்துக் கொள்ளலாம் என்ற வீம்புடன் வேலைக்கு வைத்துள்ளது தெரிகிறது. அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் மாநிலத்தில் உள்ள 38 கோவில்களில் புதிய அர்ச்சகர்கள் நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது[3]. இது தொடர்பான வேறு வழக்கு உயர் நீதிமன்றத்தின் முதல் அமர்வில் நிலுவையில் இருப்பதால், இம்மனுவை அவற்றோடு சேர்த்து விசாரிக்க கோரிக்கை வைத்தார். இந்த சமர்ப்பித்தலைப் ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மனுவை முதல் பெஞ்சிற்கு அனுப்புமாறு பதிவகத்திற்கு உத்தரவிட்டது[4].

ஸ்டாலின் அவருடைய தந்தை செய்த தவற்றைச் செய்ததால் நீதிமன்றத்துக்குச் செல்லவேண்டிய நிலை வந்துள்ளதுசுப்பிரமணியன் சுவாமி: “அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் விவகாரத்தில் ஸ்டாலின் அவருடைய தந்தை செய்த தவற்றைச் செய்ததால் நான் நீதிமன்றத்துக்குச் செல்லவேண்டிய நிலை வந்துள்ளது,” என்று ட்வீட் மூலம் தி.மு.க-வுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார் பாஜக-வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி[5]. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற சட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் செல்லப்போவதாகவம் அறிவித்திருக்கிறார்[6]. கடந்த தி.மு.க ஆட்சியின்போது சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தை தீட்சிதர்கள் வசமிருந்து அரசாங்கமே ஏற்று நடத்தும் என்று அன்றைக்கு முதல்வராக இருந்த கருணாநிதி அறிவித்தார். அதை எதிர்த்து சிதம்பரம் தீட்சிதர்கள் நீதிமன்றத்துக்குச் சென்றார்கள். உச்ச நீதிமன்றம் வரை சென்ற இந்த வழக்கில் தீட்சிதர்களுக்கு ஆதரவாக நீதிமன்றம் சென்றவர் சுவாமி. இறுதியாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தீட்சிதர்கள் வசமே நடராஜர் ஆலயம் செயல்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதன் பிறகு சுவாமிக்கு நெருக்கமானவர்கள் இது குறித்து நீண்ட ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். இந்த ஆலோசனையின் முடிவில், சென்னை நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தாக்கல் செய்ய முடிவாகியிருக்கிறது. வரும் 26-ம் தேதி சென்னை வரும் சுவாமி, இந்தத் திட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவிருக்கிறாராம். இதனால் இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து புதிய சர்ச்கைள் கிளம்பும் என்று தெரிகிறது!

முதல்வர் ஸ்டாலினுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?: சுப்ரமணியசாமி சொன்னது, “முதல்வர் ஸ்டாலினுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? சட்டம் மிக தெளிவாக இருக்கும் போது, தன்னிச்சையாக அர்ச்சகர் நியமனத்தை ஸ்டாலின் செய்திருப்பது அராஜகம். அர்ச்சகர்களாக இருக்கும் பிராமணர்களுக்காக இதை செய்யவில்லை. அரசியல் சட்டத்தை ஸ்டாலின் மதிக்காமல், ஹிந்து மத கோட்பாடுகளில் தலையிடுகிறார் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி எச்சரித்துள்ளார்……..சென்னை, கே.கே.நகர் பள்ளி விவகாரத்தில் தவறாக செயல்பட்டார். ஆசிரியர் ஒருவர் செய்த தவறுக்கு, அப்பள்ளியை அரசுடைமையாக்க முயல்கிறார் என்றதும், அந்த பிரச்னைக்குள் நுழைந்தேன். ‘சட்ட ரீதியில் நடவடிக்கை எடுப்பேன்; ஆட்சியைக் கலைப்பேன்’ என சொன்னதும், ஸ்டாலின் பின்வாங்கினார்”.

திக சொல்லி செய்யும் ஸ்டாலின்: சுப்ரமணியசாமி சொன்னது, “திடீரென, தி.க., சொன்னதை கேட்டு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற மந்திரத்தை கையில் எடுத்து, பயிற்சி முடித்த 58 பேருக்கு அவசரமாக பணி நியமன ஆணைகள் வழங்கியுள்ளார்.  இதை, தி.க., தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் போற்றி மகிழ்கின்றனர். 51 ஆண்டுகள் கழிந்த நிலையில், ஈ.வெ.ரா.,வின் கனவையும், கருணாநிதியின் லட்சியத்தையும், முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி இருக்கிறார் என, தி.க.,வினர் சொல்லி மகிழ்கின்றனர். இந்திய அரசியல் சட்டத்தின்படி தான், ஹிந்து அறநிலைய சட்டம் – 1959 இயற்றப்பட்டது. அந்த சட்டத்தின் பிரிவு, 55ன் படி, அறநிலையத் துறை கோவில்களில் பூசாரி, அர்ச்சகர், ஓதுவார் உள்ளிட்ட யாரை நியமனம் செய்ய வேண்டும் என்றாலும், அறங்காவலருக்கு தான் அதிகாரம். கோவிலை நிர்வகிக்கும் முழு அதிகாரமும் அவருக்கே உண்டு. அப்படி இருக்கும் போது, முதல்வர் ஸ்டாலினுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? சட்டம் மிக தெளிவாக இருக்கும் போது, தன்னிச்சையாக அர்ச்சகர் நியமனத்தை ஸ்டாலின் செய்திருப்பது அராஜகம்”.

இப்போதும், அறங்காவலர் உரிமையில் அரசு தலையிட்டிருக்கிறது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசின் முடிவு தவறானது: சுப்ரமணியசாமி  சொன்னது, “முதல்வர் என்பதால், அவர் இஷ்டத்துக்கு செய்ய முடியாது. இந்து அறநிலையத் துறை சட்டத்தின்படி, அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அர்ச்சகர், ஓதுவார், பூசாரிகளை நியமிக்கும் அதிகாரம் அறங்காவலருக்கு மட்டுமே உள்ளது[7]. கோயிலை நிர்வாகம் செய்யும் அதிகாரமும் அறங்காவலருக்கே உள்ளது. சட்டம் இப்படி இருக்க, கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதல்வர் ஸ்டாலின் கையில் எடுத்திருப்பது கண்டனத்துக்கு உரியது[8]. இந்து மத விவகாரங்களில் தலையிடும் அதிகாரத்தை முதல்வர் ஸ்டாலி னுக்கு யார் கொடுத்தது? இப்படித் தான், சிதம்பரம் நடராஜர் கோவிலில், தீட்ஷிதர்களிடம் இருந்து நிர்வாக உரிமையை அரசு பறித்தது. அதற்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தேன். பின், உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டு வழக்கிலும் வாதாடினேன். இறுதியில், நடராஜர் கோவிலை தீட்ஷிதர்களே நிர்வகிக்கலாம் என, நீதிபதிகள் உத்தரவிட்டனர். நடராஜர் கோவில் நிர்வாகம் என்பது, பல நுாற்றாண்டுகளாக, தீட்ஷிதர்கள் அனுபவித்து வரும் சிறப்பு உரிமை. அது, அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.

© வேதபிரகாஷ்

14-09-2021


[1] விகடன், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு, Published: 16 Dec 2015 11 AM; Updated:16 Dec 2015 11 AM.

[2] https://www.vikatan.com/spiritual/temples/56403-only-qualified-people-can-become-priests

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், முறையாக பயிற்சி பெற்றவர்கள் அர்ச்சகர்கள் ஆகலாம்; உயர் நீதிமன்றத்தில் அரசு விளக்கம், Written By WebDesk, Updated: August 17, 2021 11:51:03 am.

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/trained-persons-can-be-priest-tamilnadu-govt-said-to-high-court-333167/

[5] விகடன், ஸ்டாலினுடன் மல்லுக்கட்டும் சுவாமி’ – ஆகஸ்ட் 26-க்குப் பிறகு வெடிக்குமா சர்ச்சை?,  அ.சையது அபுதாஹிர், Published: 18 Aug 2021 7 AM; Updated:18 Aug 2021 7 AM.

[6] https://www.vikatan.com/government-and-politics/politics/stalin-vs-swamy-will-the-temple-priest-issue-will-spark-upcoming-days

[7] இந்து.தமிழ், அர்ச்சகர் நியமன விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடுவேன்; இந்து மதத்தில் தலையிடும் அதிகாரத்தை முதல்வருக்கு கொடுத்தது யார்?- பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கேள்வி, Published : 18 Aug 2021 03:12 am, Updated : 18 Aug 2021 05:39 am.

[8] https://www.hindutamil.in/news/tamilnadu/706252-subrmaniyan-swamy.html

மு.க.ஸ்டாலின் உத்தரவு – பத்தாண்டுகளாக பயன்பாடு இல்லாத நகைகளை உருக்கி கட்டிகளாக்கி முதலீடு செய்யலாம் – தயாராக இருக்கும் இந்து-அறநிலைய அமைச்சர்!

ஓகஸ்ட்11, 2021

மு..ஸ்டாலின் உத்தரவு – பத்தாண்டுகளாக பயன்பாடு இல்லாத நகைகளை உருக்கி கட்டிகளாக்கி முதலீடு செய்யலாம் – தயாராக இருக்கும் இந்து-அறநிலைய அமைச்சர்!

மு..ஸ்டாலின் உத்தரவு – பத்தாண்டுகளாக பயன்பாடு இல்லாத நகைகளை உருக்கி கட்டிகளாக்கி முதலீடு செய்யலாம்: கோவில்களில் நன்கொடையாக வரும் தங்க நகைகளை மும்பையில் உள்ள தங்க உருக்கு ஆலையில் கொடுத்து உருக்கி, அதனை பிக்சர்டு டெபாசிட் முறையில் அந்த அந்த கோவில்களின் பெயரில் இருப்பு வைத்தால் ஆண்டு தேறும் வருமானம் கிடைக்கும். என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியிருந்தார்[1]. சேகர்பாபு, இவ்வாறு கூறி, அத்திட்டத்தை அமூல் படுத்த திட்டம் தீட்டியுள்ளது தெரிகிறது[2]. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக இந்த நகைகள் எந்தவித பயன்பாடு இல்லாமலும், பயன்படுத்தாமலும் அப்படியே இருக்கிறது. இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டது[3]. அவர், துறைச் சார்ந்த ஆய்வு கூட்டங்களை உடனடியாக நடத்தி, இதுகுறித்து பரிசீலித்து தங்க நகைகளை பிஸ்கெட்டுகளாக மாற்ற வேண்டும். அதுமட்டுமல்லாமல் மாற்றப்படும் தங்க பிஸ்கெட்டுகளை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தங்க வைப்புநிதியில் முதலீடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்[4]. ஆனான பட்ட, மோடியே, இத்தகைய ஆலோசனை சொன்ன போது, பெரும்பாலான கோவில்கள் ஒப்புக் கொள்ளவில்லை[5]. பக்தர்களின் காணிக்கைக்களை அவ்வாறு உருக்குவது, மிகப் பெரிய பாவம் என்றும் எடுத்துக் காட்டினர்[6]. ஏனெனில் நம்பிக்கைக்கு உகந்த விசயங்களில், நம்பிக்கை இல்லாதவர்களுக்குத் தலையிட உரிமை இல்லை.

திராவிட-நாத்திக-இந்துவிரோத-விக்கிரங்களை உடைக்கும் ஆட்சியாளர்களுக்கு இதில் எந்த உரிமையும் இல்லை: பக்தர்கள் கடவுளுக்கு பிரியமுடன், பக்தியுடன் கொடுக்கும் நகைகள் பயன்பாட்டுடன் உள்ளது-இல்லை என்பதை ஆட்சியாளர் தீர்மானிக்க முடியாது. லட்சக் கணக்கான பக்தர்கள், ஏழை-பணக்காரன், படித்தவன்– படிக்காதவன் போன்ற நிலைகளைத் தாண்டி, பக்தியுடன் கடவுள்ளுக்குக் காணிக்கையாகக் கொடுக்கப் படும் நகைகளை அவ்வாறேல்லாம் மாற்றுவது, வியாபாரரீதியில் பயன்படுத்துவது, முதலீடு செய்வது, வட்டி பெறுவது, போன்றவற்றை செய்ய ஆட்சியாளர்களுக்கு, அதிலும், நாத்திகம் பேசி, இந்து மத்த்தைத் தொடர்ந்து பழித்து வரும் திராவிடத் தலைவர்கள் அத்தகைய விவகாரங்களில் மூக்கை உழைக்க எந்த முகாந்திரமோ, யோக்கியதையோ இல்லை என்பது மிக சாதாரணமாகத் தெரிகிறது.. தானம் கொடுத்த பக்தர்களின் உணர்வுகளை மீறிய செயல்களைச் செய்ய இவர்களுக்கு உரிமை இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

சேகர் பாபுவை புகழும் சில ஊடகங்கள்: சமயம் TOI (Times of India) என்று சொல்லிக் கொண்டாலும், அது சேகர் பாபு புகழ் பாடுவது வேடிக்கையாக உள்ளது. தமிழகத்தில் இந்துத்துவக் கொள்கைகளின் பரவலுக்கான தீவிர முயற்சிகளையும் பிரித்துப் பார்க்க முடியாது. இத்தகைய சூழலில், மிகுந்த இறை நம்பிக்கை கொண்ட சேகர் பாபு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அமைச்சராக பொறுப்பேற்றது முதல் பம்பரமாக சுழன்று சேகர் பாபு களப்பணியாற்றி வருகிறார். மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கோயில்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கோயில் நில ஆக்கிரமிப்புகளை மீட்பது, ஆகம பயிற்சி பெற்ற அனைவரும் அர்ச்சகர் பணியில் அமர்த்த நடவடிக்கை, கொரோனா காலத்தில் கோயில்களில் தயாரிக்கப்படும் உணவுகளை மருத்துவமனைகளுக்கு அளிப்பது என சேகர் பாபுவின் நடவடிக்கைகள் பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்த நிலையில், கோயில்களில் நன்கொடையாக வந்த நகைகளை உருக்கி தங்க கட்டியாக மாற்றி வைப்புநிதி மூலம் வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு தெரிவித்துள்ளார்[7]. மேலும், தமிழ்நாடு திருக்கோயில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகளை மீட்க விரைவில் முதலமைச்சர் புதிய திட்டம் ஒன்றை அறிவிப்பார் என்றும் சேகர் பாபு தகவல் தெரிவித்துள்ளார்[8].

2,000 கிலோ தங்க நகைகள் உருக்கப்படாமல் உள்ளன: ஒன்பது ஆண்டுகளாக கோவில்களுக்கு செலுத்தப்பட்டுள்ள, 2,000 கிலோ தங்க நகைகள் உருக்கப்படாமல் உள்ளன[9]. காணிக்கை நகைகளை, கோவில் பயன்பாட்டுக்கு போக, மீதியை உருக்கி தங்க பிஸ்கட்டுகளாக மாற்றி வைப்பு நிதியில் வைக்கப்படும்[10]. இதன் மூலம் ஆண்டுக்கு, 20 கோடி ரூபாய் வட்டி கிடைக்கும். இதனை உடனடியாக மேற்கொள்ளத் தொழில்நுட்பம் சார்ந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது, என, அமைச்சர் கூறியுள்ளார். இக்குழுக்களில் இந்துவிரோதிகள், ஏன் இந்துக்கள் அல்லாதவர்கள் கூட நியமிக்கப் படுவர். இப்பொழுது, தமிழ்நாடு பாடநூல் துறை நிறுவனமே அதனை மெய்ப்பித்துள்ளது. நமக்கு விபரம் தெரிந்த வரையில், வங்கியில் நகையை அடமானமாக பெற்று, வட்டிக்கு கடன் கொடுப்பர். தங்க நகையை, ‘டிபாசிட்’ ஆக பெற்று, அதற்கு வட்டி வழங்குவதாக தெரியவில்லை[11]. மேலும், தமிழக கோவில்களில் இருக்கும் ஆபரணங்களின் மதிப்பு 10 ஆயிரம் கிலோவுக்கும் அதிமாக இருக்கும் என்றும், 2,000 கிலோ எனக் குறிப்பிடுவதில், ஏதும் சூழ்ச்சி இருக்கிறதோ என்ற சந்தேகமும் வருகிறது[12]. இதற்கிடையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஹிந்து அறநிலைய துறை இயக்குனர் அலுவலகத்தில் உள்ள கல்வெட்டில், ‘ஹிந்து’ என்ற வார்த்தை மட்டும் நீக்கப்பட்டுள்ளது.

ஹிந்து விரோத கட்சியின் கைகளில் ஆட்சி சிக்கியுள்ளது: தினமலரில், இதனை விமர்சித்து, கருத்துத் தெரிவிக்கப் பட்டுள்ளது. “ஹிந்து விரோத கட்சியின் கைகளில் ஆட்சி சிக்கியுள்ளது. நடப்பதை பார்த்தால், மாநிலத்தில் உள்ள கோவில்கள் அனைத்தையும், ‘குளோஸ்செய்து விடுவரோ என்ற அச்சம் ஏற்படுகிறது. இன்னும் சில வாரங்களில் ஆயுத பூஜை வரவுள்ளது. இதை அரசு அலுவலகத்தில் கொண்டாட கூடாது என, தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பினாலும் ஆச்சரியமில்லை. வரும் 2022ம் ஆண்டு முதல் தமிழக அரசு அலுவலகங்களில் பொங்கல், தமிழ் ஆண்டு பிறப்பு, தீபாவளி போன்ற ஹிந்து பண்டிகைகளுக்கு விடுமுறை இருக்காது என்று கருதலாம். இரண்யன் ஆட்சியில், ‘இரண்யாய நமஹஎன்று தானே சொல்லியாக வேண்டும். ‘ஓம் நமோ நாராயணாஎன சொல்ல முடியுமா என்ன?” விபூதி-குங்குமம் வைத்தே இந்துக்கள ஏமாற்றி விடுவோம் என்று சொன்னவரும் இன்று அமைச்சராக இருக்கிறார். ஸ்டாலினைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, வீடியோ, புகைப் படங்கள், செய்திகள் எல்லாம் இன்றும் காணக் கிடைக்கின்றன. கருணாநிதியைப் பற்றியும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கோவில்களில் தங்க நகைகள், தங்க விக்கிரகம் முதலியவற்றில் எல்லாம் மோசடிகள் நடந்துள்ளன. ஆகவே, இந்நிலையில், தங்க அகைகளை உருக்குகிறேன் என்றால், அதில் கோடிகளில் ஊழல் செய்வர் என்பது திண்ணம். ஆகவே, இத்தகையோர், கோவில் விவகாரங்களிலிருந்து, தூரத்தில் இருப்பதே நல்லது.

© வேதபிரகாஷ்

11-08-2021


[1] தமிழ்.ஒன்.இந்தியா, கோவில் தங்க நகைகள்.. முதல்வர் மு..ஸ்டாலின் வகுத்த திட்டம்.. புதிய தகவல் சொன்ன சேகர்பாபு!, By Rayar A Updated: Sunday, July 18, 2021, 10:19 [IST].

[2] https://tamil.oneindia.com/news/chennai/tn-minister-sekarbabu-has-said-that-more-than-rs-560-crore-of-temple-lands-have-been-recovered-durin-427355.html

[3] தினத்தந்தி, கோவில்களுக்கு பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய நகைகளை தங்க பிஸ்கெட்டுகளாக மாற்றி, அதனை வங்கியில்டெபாசிட்செய்து வருவாய் ஈட்டப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்., ஜூலை 27, 09:29 AM

[4] https://www.dailythanthi.com/amp/News/State/2021/07/27092913/Minister-Sekarbabu-informed-that-the-decision-was.vpf

[5] India Today, The Modi government wants gold idling in temple vaults to be part of the India growth story. The trusts aren’t enthusiastic , Amarnath K Menon, April 30, 2015; ISSUE DATE: May 11, 2015UPDATED: May 1, 2015 12:49 IST.

[6] https://www.indiatoday.in/magazine/religion/story/20150511-gold-akshaya-tritiya-world-gold-council-temple-818296-2015-04-30

[7] சமயம், கோயில் நகைகளை உருக்கி தங்கக்கட்டி: தமிழக அரசிடம் புதிய திட்டம்!, Manikandaprabu S | Samayam TamilUpdated: 23 Jul 2021, 11:35:00 AM

[8] https://tamil.samayam.com/latest-news/state-news/new-money-earning-scheme-to-be-implemented-from-temple-gold-in-tamilnadu/articleshow/84669132.cms

[9] சமயம், கோயில்கள் வருவாய் பெருக்க திமுக அமைச்சர் சேகர்பாபு சூப்பர் திட்டம்!,  Akash G | Samayam TamilUpdated: 24 Jul 2021, 08:28:00 AM.

[10] https://tamil.samayam.com/latest-news/salem/hindu-temples-gold-will-be-made-as-biscuits-will-be-kept-deposit-which-generates-income-minister-sekar-babu-new-plan-salem-byte/articleshow/84677474.cms

[11] தினமலர், இது உங்கள் இடம் : ‘இரண்யாய நமஹசொல்லணுமோ!, Updated : ஆக 03, 2021  03:15 |  Added : ஆக 03, 2021  03:12.

[12] https://www.dinamalar.com/news_detail.asp?id=2815320

இப்படி வேடம் போட்டு, ஓட்டுக் கேட்டு இந்துக்களை ஏமாற்றி, ஆட்சியைப் பிடித்து விட்டனர். இதில் வேடிக்கை என்னவென்றால், இந்தியில் பேச்சு, உருதுவில் போஸ்டர் இத்யாதிகள்.
இன்றைக்கு இவர் அமைச்சராக உள்ளார்!

பக்தர்கள் போர்வையில் தனியார் மயக்கமாக்க முடியுமா? திலகவதி ஐ.பி.எஸ் எழுப்பும் கேள்விகள்! திராவிடத்துவத்தை ஆதரித்து எழுதிய போக்கு! எழுப்பப் பட்ட கேள்விகளுக்கு பதில் (3)

ஜூலை17, 2021

பக்தர்கள் போர்வையில் தனியார் மயக்கமாக்க முடியுமா? திலகவதி .பி.எஸ் எழுப்பும் கேள்விகள்! திராவிடத்துவத்தை ஆதரித்து எழுதிய போக்கு! எழுப்பப் பட்ட கேள்விகளுக்கு பதில் (3)

இந்து சமயத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே திருக்கோயில்களின் செயல் அலுவலர்களாக ஆக முடியும் என்றிருந்த நிலையும் ஒரு சட்டப் போராட்டத்தின் மூலம் மாற்றப்பட்டது:  அதாவது, இந்து சமயத்தைச் சேர்ந்த பெண்கள் திருக்கோயில்களின் செயல் அலுவலர்களாக சேர்க்கப் பட்டார்கள் என்கிறார் போலும். அவ்வாறே, பெண்களும் பூஜாரிகள் ஆகலாம் என்ற பீடிகை, தொணி புரிகிறது. அமைச்சரும் அதை வெளிப்படையாக சொல்லி விட்டார். அவர் சிக்ஸர் அடித்தார் என்று செய்தி வெளியிடப் பட்டது, இப்பொழுது திலகவதி சென்சுரி அடிக்கப் பார்க்கிறார் என்று தெரிகிறது. இதுவும் அதே, சட்டப் படி, அரசியல் நிர்ணய சாசனப் பிரிவுகளின் படி நடப்பதை யாரும் எதிர்க்க முடியாது. அதே போல ஆகமசாத்திர நெறிப்படி உள்ளவற்றையும் மாற்ற முடியாது, என்றவற்றிற்குப் பொருந்தும். செக்யூலரிஸத்தனமாக பார்த்தால் கூட, மற்ற மதங்களில் அவ்வாறு செய்ய முடியுமா போன்ற கேள்விகளை எழுப்பலாம். ஆகவே, இத்தகைய தேவை இல்லாத வாதங்கள், செய்திகள் முதலியவற்றை தவிர்க்கலாம்.

கடவுளின் முன் அனைவரும் சமம் என்பதும், அரசமைப்புச் சட்டத்தின் முன்பு அனைத்துக் குடிமக்களும் சமம் என்பதும் இதன் மூலம் நிலைநாட்டப்பட்டது: “கடவுளின் முன் அனைவரும் சமம்,” என்பதனை முதலமைச்சர் முதல், அறநிலையத் துறை கடை-ஊழியர் வரை, பற்பல முறை, பல கோவில்களில் அத்து மீறியிருக்கிறார்கள். சட்டப் படி, அரசியல் நிர்ணய சாசனப் பிரிவுகளின் படி, ஆகமசாத்திர நெறிப்படி உள்ளவற்றை மீறியிருக்கிறார்கள். மேலும், நாத்திக-திராவிடத்துவ வாதிகள் நிலை-நிலைகள் தான் இங்கு கேள்விக்குறியாக்கும். ஆத்திகர் போர்வையில் நாத்திகரும், இந்து போர்வையில் இந்து-அல்லாதோரும் கோவில்களில் நுழைந்துள்ளன. அவர்கள் “கடவுள் இல்லை,” “கடவுள் இருக்கிறார்” மற்றும் “எக்கடவுள்” போன்ற போலித் தனங்களில் வெளிப்படுகிறார்கள். இந்துவிரோத நாத்திகர், திராவிட நாத்திகர், துலுக்கர், கிருத்துவர் கம்யூனிஸ்டுகள் என்றும் அவர்கள் “இந்து கடவுள்” முன்பு சமமாக இருந்து, கோடிக்கணக்கான இந்துக்களை ஏமாற்றி வருகின்றனர். இதற்கு திலகவதி என்ன பதில் சொல்வார்?

ஆட்சியாளர்கள் இறைநம்பிக்கை உள்ளவரா, இல்லையா என்பது முக்கியமல்ல. ஆட்சியில் கோவில் சொத்துக்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா என்பதும், பக்தர்களின் உணர்வுகள் மதிக்கப் படுகிறதா என்பதும் முக்கியம்: அப்படியென்று சட்டப் படி, அரசியல் நிர்ணய சாசனப் பிரிவுகளின் படி, ஆகமசாத்திர நெறிப்படி எங்கும் சொல்லப் படவில்லை. அதனால் தான், ஔரங்கசீப் போல, கருணாநிதி காலத்தில் கோவில்கள், கோவில் மண்டபங்கள் இடிக்கப் பட்டன. மாலிக்காபூர் போல பல கோவில்கள் சிதைக்கப் பட்டன, கொள்ளையடிக்கப் பட்டன, சிலைகள் மாயமாகின.  இறைநம்பிக்கை கிஞ்சித்தும் இருந்திருக்குமேயானால்,ஆவன் அவ்வாறு செய்திருக்க மாட்டான். 100 கோவில்களை கொள்ளையடித்தாலும், 10 கோவில்களை விட்டிருப்பான். அடுத்தது, “ஆட்சியில் கோவில் சொத்துக்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா,” என்றால், இல்லை என்று நீதிமன்ற தீர்ப்புகள் கூறுகின்றன. “பக்தர்களின் உணர்வுகள் மதிக்கப் படுகிறதா,” என்றால், நிச்சயமாக இல்லை என்ற பதில்கள் தான் வந்து கொண்டிருக்கின்றன. அதனால் தான், “அறநிலையத் துறையிலிருந்து கோவில்களை மீட்போம்,” என்ற கோஷம் 40 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்து விட்டது, தொடர்கிறது. அதிகமாகியுள்ளது. மக்கள் ஆதரவு இல்லையென்றால் அவ்வ்வாறு நிலைமை மாறி இருக்க முடியாது. இப்பொழுது திலவதியும் இதைப் பற்றி, எழுதியிருக்க மாட்டார்.

இந்து அறநிலைத்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தி அத்துறையை வலுப்படுத்த வேண்டுமே தவிர, கோயில்களைத் தனியாருக்கு தாரை வார்ப்பது என்பது பகுத்தறிவுக்கு முரணானதும், பக்திக்கு தீங்கானதும் ஆகும்: 70 ஆண்டுகளாக அப்படி என்ன “இந்து அறநிலைத்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தப்,” படவில்லை என்று விளக்கவில்லை. அதேபோல, “அத்துறையை வலுப்படுத்தப்” படவில்லை என்று தெரியவில்லை. 70 ஆண்டுகளில், ஆண்கள்-பெண்கள் என்று அறநிலையதுறையில் நுழைந்தாலும், பெண்களும் ஆண்களுக்கு இணையாக ஊழல், குற்றம் புரிந்து கைதாகியுள்ளனர். சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளனர். எவ்வளவோ கணினிமயமாக்களில் முன்னேற்றம், ஏற்பட்டு விட்டப் பிறகு, இப்பொழுது, ஆவணங்களை இணைதளங்களில் ஏற்றுவோம் என்று வந்துள்ளனர். இவையெல்லாம் நிர்வாகம் மோசமடைந்துள்ளதை காட்டுகிறது. ஒருவேளை, அதைத்தான் குறிப்பிட்டு, “இந்து அறநிலைத்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தி அத்துறையை வலுப்படுத்த வேண்டும்,” என்கிறார் போலும்! அப்படியென்றால், அர்ச்சகர் பயிற்சிக்கு பதிலாக, இவர்களுக்கு நிர்வாக பயிற்சி கொடுத்திருக்க வேண்டும். கொடுத்திருந்தால், 70 ஆண்டுகளில் அவர்களது நிர்வாகத் திறமை, மேன்மை அடைந்த நிலை முதலியவை வெளிப்பட்டிருக்கும். ஆனால், ஊழல், திருட்டு, மோசடி, கைது, சஸ்பென்ட் என்று நடந்து வருவதால், நிலைமை வேறு விதமாக உள்ளது.

பக்தர்கள் தனியார் இல்லை: “கோவில் நிர்வாகத்தை அறநிலைத்துறையிடம் இருந்து விடுவித்து (பக்தர்கள் பெயரில்) தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற குரல்கள் தமிழ்நாட்டில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன[1]” என்று திலகவதி எழுதியிருப்பது தவறு. பக்தர்கள் பெயரில் தனியார் என்று குறிப்பிடுவது அபத்தமானது. இத்தகைய இயக்கங்களில் பொறுப்புள்ள ஆச்சாரியார்கள், அரசாங்க அதிகாரிகள், ஓய்வு பெற்ற நிபிணர்கள் மற்றுமல்லாது, லட்சக் கணக்கான மக்கள் ஆதரவும் சேர்ந்துள்ளது. முன்னமே குறிப்பிட்டபடி, அறநிலயத் துறை ஊழல், குற்றங்கள் முதலியனவே, அத்துறை அதிகாரிகளை வெளிப்படுத்தி விட்டது. வேலியே பயிரை மேய்கிறது என்பது மட்டுமல்லாது, வேலியை நீக்கி, நிலத்தையும் அபகரிக்க வேலைகள் நடந்து விட்டன, நடந்து கொண்டிருக்கின்றன. ஒருவேளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் கட்சிகளில் சேர்ந்து கொண்டிருப்பதால், திலகவதி இவ்வாறு அரசு சார்பாக, திராவிடத்துவத்தை ஆதரித்து, இடதுசாரிகள் பாணியில் வலதுசாரிகளை குறைசொல்லி, சட்டம் போர்வையில் பார்ப்பனத்தையும் தாக்கி, ஒட்டு மொத்தமாக, இத்தகைய கட்டுரை வெளியிட்டிருப்பது வியப்பாகத்தான் இருக்கிறது.  

  1. கோவில் நிர்வாகம் நிச்சயமாக இந்துக்கள், கடவுள் நம்பிக்கைக் கொண்டவர்கள் பொறுப்பில் இருக்க வேண்டும். கசாப்புக் காரன்கள் அஹிம்சைவாதிகளாக இருக்க முடியாது. இதற்கு மேலாகவும் இதனை விளக்க வேண்டிய அவசியம் இல்லை.
  2. செக்யூலரிஸம் எனும் போதே, மற்ற வழிபாட்டு ஸ்தல நிர்வாக போல, கோவில் நிர்வாகமும், இந்துக்களால் நிர்வகிக்கப் படவேண்டும்.
  3. திமுக அமைச்சர், திடீரென்று 24 x 7 திட்டத்தில் வேலை செய்வது போல தினம்-தினம் செய்திகள் வந்துள்ளதைக் கவனித்திருக்கலாம், கவனிக்கலாம்.
  4. அறநிலைய அமைச்சர் முதல், ஆணைய அதிகாரி மற்ற ஊழியர்கள், எறும்புகள் போல, சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருப்பது போன்ற பிரமிப்பை ஏற்படுத்தும் வண்ணம், கோவில்-கோவிலாக விசிட், டிவி செய்திகள் முதலியன.. வருகின்றன.
  5. கோவில் சொத்துக்கள் பற்றிய விவரங்களையெல்லாம் இணைதளத்தில் வெளியிடுவோம் என்று ஆரம்பித்தாலும், அவை முழுமையாக இல்லை.
  6. பிறகு உயர்நீதிமன்ற தீர்ப்புகள், ஆணைகள், உத்தரவுகள், அறநிலையத் துறை செயல்பாடுகளை கண்டிக்கும் வகையில் அமைந்திருந்தன.
  7. சிலைதிருட்டு, விக்கிரகக் கடத்தல், முதலியவை, வழக்குகள், கைதாகிய அதிகாரிகள், முதலியவற்றைப் பற்றி மூச்சுக் கூட விடக் காணோம்.
  8. ஆனால், குற்றஞ்சாட்டப் பட்ட, வழக்குகள் நிலைவையில் உள்ள, சஸ்பென்ட் செய்யப் பட்ட அதே அதிகாரிகள், கூட்டங்கள், விஜயங்கள் முதலியவற்றில் இருப்பது கனிக்கப் படுகிறது.
  9. இரண்டு வருடமாக கோரோனா, கோவில் அடைப்பு போன்ற விவகாரங்களினால், ஆறுகால பூஜைகள், தினசரி, பட்ச, மாத கிரியைகள், சடங்குகள், விழாக்கள் நடந்தனவா-இல்லையா என்று தெரியவில்லை.
  10. திராவிடத்துவ அரசியல்வாதிகள் அந்நிலையில் தான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர், பெண்கள் அர்ச்சகர் என்றெல்லாம் கிளப்பி விட்டு, வேடிக்கைப் பார்க்கின்றனர்.இக்கட்டுரையும், அதே பாணியில் இருக்கிறது.

. © வேதபிரகாஷ்

17-07-2021


[1] குங்குமம், அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலேயே கோயில்கள் இருக்க வேண்டும்!, திலகவதி ஐபிஎஸ் (முன்னாள் காவல்துறை அதிகாரி), 11 Jul 2021.