கோயில் நிலம், கட்டிட, சொத்து விவரங்கள் கணினியில் பதிவேற்றம்: 2014லிருந்து 2021 வரை நடந்தது என்ன, அரசாணை ஏன் பின்பற்றப் படவில்லை, இப்பொழுது, நீதிமன்றத்தின் ஆணை ஏன்? (2)

கோயில் நிலம், கட்டிட, சொத்து விவரங்கள் கணினியில் பதிவேற்றம்: 2014லிருந்து 2021 வரை நடந்தது என்ன, அரசாணை ஏன் பின்பற்றப் படவில்லை, இப்பொழுது, நீதிமன்றத்தின் ஆணை ஏன்? (2)

நீண்டகாலம் யார் அனுபவித்து வருகிறார்களோ அவா்களுக்கே பகிர்ந்து கொடுத்தல் அல்லது பெயா் மாற்றம் செய்து கொள்ளுதல் ஆகியவற்றிற்கு அனுமதி கொடுக்கும் வகையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை: இத்திட்டமும், கடந்த 60 ஆண்டுகளாக நடந்து வருகிறது. அத்தகையோர் சங்கங்களைத் தோற்றுவித்து, நீதிமன்றங்களுக்குச் சென்றுள்ளனர். எல்லாவற்றையும் விட மிக்கப்பெரிய மோசடி என்னவென்றால், அவ்வாறு பலன் பெற்று வருவது, துலுக்கர், கிருத்துவர் மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாத திராவிடக் கட்சியினர் தான். இவர்களுக்குத் தான், அறநிலைய அதிகாரிகள், எல்லா நிலையிலும், எல்லா வழிகளிலிலும் உதவி பெற்று வருகிறார்கள். இது, ஒரு வியாபாரமாக்கவே ஆகி விட்டது. அதனால், தான் கோடிக் கணக்கில் லஞ்சம் வாங்குவது, ஏமாற்றுவது, வழக்குகளில் சிக்குவது போன்றவை தொடர்ந்து நடந்து வருகின்றன. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், கடந்த 60-70 ஆண்டுகளில் இந்நிலை மேன்மேலும் மோசமடைந்து வருவதை கவனிக்கலாம். இஹ்தகைய ஊழல்களை ஒழிப்போம், கோவில் நிலங்கள்-சொத்துக்களைக் காப்போம் என்று பலர் கிளம்பியிருந்தும், நிலைமை மாறவில்லை. அவர்கள் எடுத்துக் காட்டும் ஓட்டைகள், முதலியவற்றை, சட்ட நெளிவு-சுளிவுகளை அறிந்து கொண்டு, அதற்கேற்ற முறையில் மாற்றியமைத்துக் கொள்கிறார்கள்.

இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யவும் உத்தரவிட வேண்டும் என்ற மனு: மதுரையைச் சேர்ந்த ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் கட்டண விவரங்களை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அந்தந்த கோவில்களில் பட்டியல் வைக்க வேண்டும்[1]. பூஜை கட்டணங்கள், வாடகை விவரம், நன்கொடை, செலவினங்கள் ஆகியவற்றை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யவும் உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்[2]. இந்த மனுவை நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் விசாரித்தனர். அப்போது, அறநிலையத்துறை கமிஷனர் சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், “கோவில் சொத்துகளை கண்டறிய அடையாள குழுவும், பரிசீலனை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் நில குத்தகை மற்றும் வாடகைதாரர்கள், குடியிருப்போரிடம் இருந்து வரவேண்டிய ரூ.297.63 கோடி பாக்கியை கேட்டு 42,818 பேருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டதில், 14 ஆயிரத்து 26 பேரிடம் இருந்து ரூ.32.49 கோடி வசூலாகியுள்ளது,” என கூறப்பட்டிருந்தது. இதையடுத்து நீதிபதிகள், ‘‘கோவில் சொத்துக்களை ஆக்கிரமித்துள்ள நபர்களின் விவரம், அசையும் அசையா சொத்துக்கள் விவரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் 8 மாதங்களில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

முழுவிவரங்களை இணைதளத்தில் வெளியிட மதுரைக்கிளை உயர்நீதி மன்றம் ஆணை: ஆக்கிரமிப்புகள், சட்டத்திற்குப் புறம்பாக விற்பனை, சொத்து பெயர் மற்றல், போன்ற மோசடிகளும் நடந்து வருகின்றன. குத்தகை மற்றும் வாடகைதார்களான 14,026 பேரிடமிருந்து ரூ.32,49,00,000/- வசூலிக்கப் பட்டுள்ளது[3]. இருப்பினும், பாக்கி பல நூறு கோடிகளில் நிலுவையில் உள்ளது. இதனால், முழுவிவரங்களை இணைதளத்தில் வெளியிட மதுரைக்கிளை உயர்நீதி மன்றம் ஆணையிட்டுள்ளது[4]. தமிழகம் முழுதும் உள்ள கோவில் நிலங்கள், கட்டடங்களின் விவரங்களை, பொதுமக்கள் எளிதாக பார்க்கும் வகையில், புவிசார் குறியீடு செய்து, இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என, அறநிலையத் துறை அலுவலர்களுக்கு, அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்[5]. கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு, விதிமுறைகளை மீறி, கோவில் இடங்களை அரசுப் பணிக்கு வகை மாற்றுதல், கோவில் சொத்துக்கள் குத்தகை குளறுபடி என, பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் வரிசை கட்டி நிற்கின்றன[6]. பல கோவில்களின் சொத்துக்கள் எங்கே இருக்கிறது என, தேடும் நிலை தொடர்கிறது. இது தொடர்பான வழக்குகளில், அரசு சிறப்புக்கவனம் செலுத்தும்படி, நீதிமன்றங்கள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளன. இந்நிலையில், கோவில் சொத்துக்கள் பாதுகாப்பு, நிர்வாகம் தொடர்பான பல்வேறு குளறுபடிகளுக்கு தீர்வு காணும் வகையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, நடவடிக்கை எடுக்க துவங்கியுள்ளது. ஆலோசனைகோவில்களில் மேற்கொள்ள வேண்டிய இணைய பதிவேற்றம் குறித்து, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ஆலோசனை கூட்டம், பிறப்பித்த உத்தரவு: இக்கூட்டத்தில், கமிஷனர் குமரகுருபரன், கூடுதல் கமிஷனர் ரமண சரஸ்வதி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, துறை சார்ந்த அலுவலர்களுக்கு அமைச்சர் பிறப்பித்த உத்தரவு:

* கோவில் நிர்வாகம், அலுவலர்கள், திருப்பணிகள், விழாக்கள் போன்ற தகவல்களை இணைய தளத்தில் வெளியிட வேண்டும்

* கோவில்களில் தற்போது நடைமுறையில் உள்ள பல்வேறு பதிவேடுகளை, ‘ஸ்கேன்’ செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்

* கோவில் நிலங்கள், கட்டடங்களின் விபரங்களை, பொதுமக்கள் எளிதாக காணும் வகையில், புவிசார் குறியீடு செய்து, இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

* அசையும், அசையா சொத்துக்களின் உரிமை ஆவணங்களை, ‘ஸ்கேன்’ செய்து, இணையத் தளத்தில் பதிவேற்ற வேண்டும்

* கோவில் சொத்துக்களில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றல், நியாய வாடகை வசூலித்தல் மற்றும் கோவில் வருவாயினங்களை பெருக்கும் வகையில் செயல்பட வேண்டும்,” இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். எல்லாமே, படா ஜோராக்கத்தான் இருக்கிறது, ஆனால், என்ன நடக்கப் போகிறது என்று பார்க்க வேண்டும்.

முழு ஊரடங்கு முடிந்த பிறகு கோயில் விவரங்களை தருகிறோம்: திருக்கோயில் தொழிலாளர் யூனியன் சார்பில் ஆணையர் குமரகுருபரனுக்கு வேண்டுகோள்: தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர் யூனியன் சார்பில் அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது[7]: “இந்து சமய அறநிலையத்துறை மூலம் அனுப்பபடும் மின்னஞ்சல்கள் அனைத்தும் தமிழக முழுவதும் உள்ள அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படும் செயல் அலுவலர்கள் பணியாற்றும் அனைத்து முதன்மை கோயில்களிலும் கணினி வசதி  ஏற்படுத்தாததால் அனைத்து கோயில்களில் இருந்தும் முழுமையான விவரம் கிடைக்கப் பெறப்படுவதில்லை. செயல் அலுவலர்கள் பணியாற்றும் அனைத்து முதன்மை கோயில்களிலும் கணினி வசதி ஏற்படுத்தி, கணினி இயக்குபவர் பணியிடம்  உருவாக்கி, அப்பணியிடத்தில் ஒருவரை நியமிக்க வேண்டும்[8]. கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், துறையில் இருந்து கோயில் பற்றிய விவரங்களை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என கோயில் செயல் அலுவலர்களுக்கு தொடர்ந்து பல முறை மின்னஞ்சல்  மூலமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த உத்தரவை செயல்படுத்த வேண்டுமென்றால் கோயில் பணியாளர்கள் பணிக்கு வந்து விவரங்கள் வழங்க வேண்டி உள்ளது. தற்போது பேருந்து வசதி இல்லாத நிலையில் கோயிலில் இருந்து  சுமார் 20 கிலோ மீட்டருக்கு அப்பால் வருகை தரும் பணியாளர்கள், சிரமத்திற்கிடையே கோயிலுக்கு வருகை தந்து விவரங்கள் தர வேண்டியுள்ளது. தற்போது கேட்கப்பட்டு வரும் கோயில் பற்றிய மின்னஞ்சல் விவரங்களை ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்ட பிறகு கேட்கும் போது முழுமையாக அளிக்க தயாராக உள்ளோம்”. பல்லாயிரக்கணக்கான, ஏன் லட்சக்கணக்கான ஊழியர்கள், வீட்டிலிருந்தே வேலை செய்யும் போது, அத்தகையோர், ஏன் வேலை செய்யக் கூடாது என்று தெரியவில்லை.

நீதிமன்ற தீர்ப்புகள் ஆணைகள், கட்டளைகள் நிறைவேற்றப் படுகின்றனவா?: ஆக இவையெல்லாமே, ஆணைகள், காகிதங்களில் உள்ள கட்டளைகள் ஆனால், பின்பற்றப் படுகின்றனவா, பின்பற்றப் பட்டதா, பின்பற்றப் படப் போகிறதா, என்று பார்க்க வேண்டும். முந்தைய ஆணைகளிலேயே, பல விசயங்கள் உள்ளன, ஆனால், பின்பற்றப் படவில்லை. பின்பற்றியிருந்தால், ஊழல் இந்த அளவிற்கு நாறாது, மோசமாகியிருக்காது, இவையெல்லாம், பேச்சுப் பொருளாகி இருக்காது. ஆனால், நடந்து கொண்டே இருக்கின்றன. உச்சநீதி மன்ற தீர்ப்புகளே, பல அமூல் படுத்தாமல், கந்த 50 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கின்றன. “இவ்வாணை, தீர்ப்பு, உடனடியாக பின்பற்றப் படவேண்டும், நிறைவேற்றப் படவேண்டும்,” என்று சுற்றறிக்கை, ஆணை வெளியிட்டு அமைச்சர், உயர் அதிகாரி அமைதியாக இருந்து விடுவர். ஒன்றும் நடக்காது, மறுபடியும் அதே ஊழல், அதே மோசடி, அதே திருட்டுத் திட்டம், களவாணி முறை என்று தொடரும்-தொடர்கின்றன. ஏதோ சிலர் வழக்குகள் போட்டு அமைதியாகி விடுவர். அத்துடன், எல்லாமே சமாதிகட்டிய நிலைக்குச் சென்று விடும். “வேகமாக / தீவிரமாக இறங்கி விட்டோம்,” (proactive) என்று செயலில் இறங்கி, மோசடிகளை, ஊழல்களை, ஏமாற்று வேலைகளைத் தீர்க்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

21-05-2021


[1] தினத்தந்தி, கோவில் சொத்து விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும், பதிவு: பிப்ரவரி 19,  2021 02:03 AM.

[2] https://www.dailythanthi.com/Districts/Chennai/2021/02/19020308/Temple-property-details-websiteTo-be-uploaded.vpf

[3] பாலிமர்.செய்தி, கோவில் சொத்துக்கள், ஆக்கிரமிப்பாளர் விவரங்களை இணையதளத்தில் வெளியிட உத்தரவு, பிப்ரவரி 18, 2021, 05:14:32 PM.

[4] https://www.polimernews.com/dnews/138329

[5] தினமலர், கோவில் சொத்துக்களை இணையதளத்தில் பதிவேற்ற அமைச்சர் சேகர்பாபு உத்தரவு, Added : மே 20, 2021  00:42.

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2770512

[7] தினகரன், ஊரடங்கால் பணியாளர்கள் வருவதில் சிக்கல்: முழு ஊரடங்கு முடிந்த பிறகு கோயில் விவரங்களை தருகிறோம்: திருக்கோயில் தொழிலாளர் யூனியன் சார்பில் ஆணையர் குமரகுருபரனுக்கு வேண்டுகோள், DOTCOM@DINAKARAN.COM(EDITOR) | MAY 19, 2021.

[8] https://m.dinakaran.com/article/news-detail/678258/amp?ref=entity&keyword=Thirumannamalai%20Annamalaiyar%20Temple

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

ஒரு பதில் to “கோயில் நிலம், கட்டிட, சொத்து விவரங்கள் கணினியில் பதிவேற்றம்: 2014லிருந்து 2021 வரை நடந்தது என்ன, அரசாணை ஏன் பின்பற்றப் படவில்லை, இப்பொழுது, நீதிமன்றத்தின் ஆணை ஏன்? (2)”

  1. vedaprakash Says:

    பெறுநர்:
    மாண்புமிகு பி.கே. சேகர்பாபு அவர்கள்,
    இந்து அறநிலையத் துறை அமைச்சர்,
    தலைமைச் செயலகம்,
    சென்னை.

    அன்புடையீர், வணக்கம்!

    பொருள் :
    இந்து அறநிலையத்துறை கோவில்களின் அனைத்து அசையும், அசையா சொத்துக்கள் குறித்து கோவில் வாரியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டி.

    தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள தங்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். தாங்கள் பொறுப்பேற்றவுடன் இந்து அறநிலையத் துறையில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டமைக்கு எனது பாராட்டுக்கள்.
    தமிழகத்தின் அடையாளங்களாகவும், பூர்வீக சின்னங்களாகவும் விளங்கக்கூடிய பிரசித்திப் பெற்ற இந்து அறநிலையத்துறையின் கீழ் 36,000-க்கும் மேற்பட்ட கோவில்களில் பல முறையான பராமரிப்பின்றி சுரண்டல் நிறுவனங்களாக மட்டுமே இருந்து வரும் அவல நிலையை தங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
    இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களின் வருமானங்கள் குறித்து இணையதளத்தில் வெளிப்படையாக வெளியிட ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளீர்கள். அது மிகவும் வரவேற்க தகுந்த செய்தி ஆகும். இதுபோன்ற ஒரு கோரிக்கையை ஊடகங்கள் வாயிலாக ஏற்கனவே முன் வைத்தேன். மேலும், 06.05.2021 அன்று இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு எழுதிய கடிதத்திலும் வலியுறுத்தி உள்ளேன்.
    ஏழை, எளிய விவசாய மக்களின் விளை நிலங்களை அந்தந்த காலகட்டத்தில் ஆட்சியிலிருந்தவர்களும், ஆன்மீக பற்றுக் கொண்டவர்களும் கோவில்கள் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு அவற்றை எழுதி வைத்தனர். அதேபோல தமிழகம் தழுவி இந்து கோவில்களுக்கு இருக்கக்கூடிய விளை நிலங்கள் மட்டும் ஏறக்குறைய 5 ½ லட்சம் ஏக்கர் எனத் தகவல்கள் வருகின்றன. அதைப் போன்று கோவில்களின் உள்ளேயும், வெளியேயும் எண்ணற்ற வணிக வளாகங்கள் தோன்றியிருக்கின்றன. பல கல்விக் கூடங்களும், மருத்துவமனைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. பல கோவில்கள் பெயரளவில் மட்டும் இந்து அறநிலையத்துறையின் கீழும், நடைமுறையில் சில தனியார் வசமும் உள்ளன. உதாரணத்திற்கு, சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை தேவஸ்தானத்திற்குச் சொந்தமான 135 கோவில்களின் வருமானங்கள் முழுமைக்கும் ஒரு குடும்பத்திற்கு மட்டுமே செல்கிறது. தமிழக கோவில்களின் எண்ணற்ற சொத்துக்கள் சட்ட விரோதமாக விற்கப்பட்டுள்ளன.
    வணிக முக்கியத்துவம் வாய்ந்த பல கட்டிடங்களும், நிலங்களும் அற்ப சொற்ப மதிப்பிற்கு 99 வருடக் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. தெய்வங்களின் சிலைகளுக்கு சூட்டப்படும் தங்க, வெள்ளி ஆபரணங்களின் உண்மையான அளவும், மதிப்பும் தெரிவதில்லை. உண்டியல் எண்ணிக்கையில் வெளிப்படை தன்மை இல்லாமல் முறைகேடுகளும், பெரும் கொள்ளையும் நடைபெறுகின்றன. முக்கியமான விழாக் காலங்களில் வசூலிக்கப்படும் நுழைவு கட்டணங்களுக்கு முறையான கணக்குகள் வைப்பதில்லை, கோவில்களின் பாதுகாப்பிற்கும், சுகாதாரத்திற்கும் கேடு விளைவிக்கக் கூடிய வகையில் கோவிலுக்குள்ளேயே வணிக நிறுவனங்கள் துவக்க அனுமதிக்கப்படுகிறது. மிக உயர்ந்த நோக்கத்தில் உருவாக்கப்பட்ட அந்த கோவில் வளாகங்கள் சுகாதாரமற்ற உணவுப் பொருட்களையும், தரமற்ற போலியான பொருட்களையும் விற்கும் தலங்களாக மாற்றப்பட்டுள்ளன. அந்த வணிக நிறுவனங்களுக்கு வெளிப்படையாக ஒரு வாடகையும், மறைமுகமாகப் பன்மடங்கு கட்டணமும் வசூலித்துக் கொள்கிறார்கள். இத்தனை வருமானங்கள் இருந்தும், பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில், நெல்லையப்பர் கோவில், திருச்செந்தூர், பழனி, கோவை பேரூர், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட கோவில்களில் முறையாக சுகாதாரம் பேணப்படுவதில்லை, அங்குள்ள தெப்பக்குளங்கள் பாசி பிடித்து துர்நாற்றம் வீசுகின்றன. தமிழ்நாட்டின் கலைக் களஞ்சியங்களாகவும், பூர்வீக சின்னங்களாகவும் விளங்கக்கூடிய இந்த கோவில்களை முறையாகப் பராமரிக்கப்படாதது வேதனை அளிக்கிறது.
    எனவே,

    1.இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்கள் அனைத்தையும் எல்லாவிதமான தனியார் பிடிகளிலிருந்தும் விடுவிக்க வேண்டும்.

    2.கோவில்களுக்கு சொந்தமான விளை நிலங்கள்; மனைகள்; வணிக, மருத்துவமனை, கல்வி கட்டிடங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் திரட்டப்பட வேண்டும்.

    3.விளை நிலங்கள், வணிக கட்டிடங்களிலிருந்து வரக்கூடிய வருமானங்கள் குறித்தும், அவற்றை யாரெல்லாம் பல தலைமுறைகளாக அனுபவிக்கிறார்கள் என்ற தகவலும் வெளிக்கொணரப்பட வேண்டும்.

    4.கோவில்களின் அழகையும், மாண்பையும், சுகாதாரத்தையும் கெடுக்கக்கூடிய வணிக நிறுவனங்கள் கோவிலின் உள்ளேயும், அருகாமையிருந்தும் அகற்றப்பட வேண்டும்.

    5.களவு போன சிலைகள், பறிபோன அனைத்து கோவில் சொத்துக்களையும் மீட்டெடுக்க வேண்டும்.

    6.கோவில் சொத்துக்கள் சம்பந்தமான வழக்குகளை விசாரிக்க பிரேத்யேக நீதிமன்றங்கள் அமைத்திட வேண்டும்.

    7.இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் சொத்துக்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, அபகரிப்பவர்களாக மாறி விடுகிறார்கள். எனவே, அனைத்து அதிகாரிகளின் நடவடிக்கைகளும் பல்வேறு விதமான கண்காணிப்புகளுக்கு ஆட்படுத்தப்பட வேண்டும்.

    8.இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நியமனத்தில் முழுமையான வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும்.

    9.இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களின் விவசாய நிலங்களும், கட்டிடங்களும் தொடர்ந்து ஒருவரிடத்தில் இல்லா வண்ணம் சட்டம் கொண்டுவரப்பட்டு, சுழற்சி முறையில் அதில் அனைத்து பிரிவு மக்களும் பங்கேற்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    10.இந்து அறநிலையத்துறையின் சொத்துக்கள் முறையாக பராமரிக்கப்பட்டாலே அதன் வருமானத்தைக் கொண்டு தமிழக அரசினுடைய நிதிநிலையை எவ்வித வரிவிதிப்புக்கள் இல்லாமல் ஈடுகட்டிக்கொள்ள முடியும். இதன் மூலம் தமிழக மக்களுடைய உடலுக்கு கேடு விளைவிக்கும் டாஸ்மாக் கடைகளை கூட மூடி விட மூடியும்.

    11.இயற்கையான மலை குன்றுகள் எங்கிருந்தாலும் அதை கோவில்களாக்கி சிலர் தங்களுக்கான வருமான ஈட்டும் நிறுவனங்களாக மாற்றிக் கொள்கின்றனர். எனவே இது போன்ற முறைகேடுகளையும் தடுத்திட வேண்டும்.

    12.கோவில்களை வணிக நிறுவனங்களின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவித்தாலே அவை மிகப்பெரிய சுற்றுலாத்தலங்களாக மாறிவிடும்.
    எனவே, இந்து அறநிலையத்துறையின் கோவில்களின் அனைத்து அசையும், அசையா சொத்துக்கள் மற்றும் அதன் வருமானம் குறித்து கோவில் வாரியாக வெள்ளை அறிக்கையாகவும், அதை இணையத்தில் வெளியிடவும், ஒவ்வொரு கோவிலிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.

    டாக்டர் க.கிருஷ்ணசாமி,
    புதிய தமிழகம் கட்சி.
    20.05.2021

பின்னூட்டமொன்றை இடுக