Posts Tagged ‘குத்தகை’

பக்தர்கள் போர்வையில் தனியார் மயக்கமாக்க முடியுமா? திலகவதி ஐ.பி.எஸ் எழுப்பும் கேள்விகள்! திராவிடத்துவத்தை ஆதரித்து எழுதிய போக்கு! (2)

ஜூலை17, 2021

பக்தர்கள் போர்வையில் தனியார் மயக்கமாக்க முடியுமா? திலகவதி .பி.எஸ் எழுப்பும் கேள்விகள்! திராவிடத்துவத்தை ஆதரித்து எழுதிய போக்கு! (2)

திராவிடர் இயக்க ஆட்சிக் காலத்தில் இந்து அறநிலையத் துறை உருவாக்கப்படவில்லை (திலவதியின் கட்டுரை): வலதுசாரி ஆதரவாளர்கள் உருவாக்கிய போலி பிம்பம் போல திராவிடர் இயக்க ஆட்சிக் காலத்தில் இந்து அறநிலையத் துறை உருவாக்கப்படவில்லை. அரசுத் துறைகளின் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டதன் விளைவாக இந்து சமய அறநிலையத்துறையிலும் பிராமணர் அல்லாதார் ஏராளமானோர் பணியில் சேர்ந்தனர். இந்து சமயத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே திருக்கோயில்களின் செயல் அலுவலர்களாக ஆக முடியும் என்றி ருந்த நிலையும் ஒரு சட்டப் போராட்டத்தின் மூலம் மாற்றப்பட்டது. கடவுளின் முன் அனைவரும் சமம் என்பதும், அரசமைப்புச் சட்டத்தின் முன்பு அனைத்துக் குடிமக்களும் சமம் என்பதும் இதன் மூலம் நிலைநாட்டப்பட்டது. ஆட்சியாளர் இறை நம்பிக்கை உள்ளவரா, இல்லையா என்பது முக்கியமல்ல. ஆட்சியில் கோயில் சொத்துகளுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா என்பதும், பக்தர்களின் உணர்வுகள் மதிக்கப்படுகிறதா என்பதுமே முக்கியம். இந்து அறநிலையத்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தி அத்துறையை வலுப்படுத்த வேண்டுமே தவிர, கோயில்களைத் தனியாருக்கு தாரை வார்ப்பது என்பது பகுத்தறிவுக்கு முரணானதும், பக்திக்குத் தீங்கானதும் ஆகும், என்று திலகவதி முடித்திருக்கிறார்.

திலவதி முடிவாகக் கொடுத்துள்ள அம்சங்களை, கீழ்கண்டவாறு பட்டியல் இடப் பட்டு, அலசப் படுகிறது:

  1. வலதுசாரி ஆதரவாளர்கள் உருவாக்கிய போலி பிம்பம் போல திராவிடர் இயக்க ஆட்சிக் காலத்தில் இந்து அறநிலைத்துறை உருவாக்கப் படவில்லை.
  2. அரசுத் துறைகளின் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டதன் விளைவாக இந்து சமய அறநிலையத்துறையிலும் பிராமணர் அல்லாதார் ஏராளமானோர் பணியில் சேர்ந்தனர்.
  3. இந்து சமயத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே திருக்கோயில்களின் செயல் அலுவலர்களாக ஆக முடியும் என்றிருந்த நிலையும் ஒரு சட்டப் போராட்டத்தின் மூலம் மாற்றப்பட்டது.
  4. கடவுளின் முன் அனைவரும் சமம் என்பதும், அரசமைப்புச் சட்டத்தின் முன்பு அனைத்துக் குடிமக்களும் சமம் என்பதும் இதன் மூலம் நிலைநாட்டப்பட்டது.
  5. ஆட்சியாளர்கள் இறைநம்பிக்கை உள்ளவரா, இல்லையா என்பது முக்கியமல்ல. ஆட்சியில் கோவில் சொத்துக்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா என்பதும், பக்தர்களின் உணர்வுகள் மதிக்கப் படுகிறதா என்பதும் முக்கியம்.
  6. இந்து அறநிலைத்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தி அத்துறையை வலுப்படுத்த வேண்டுமே தவிர, கோயில்களைத் தனியாருக்கு தாரை வார்ப்பது என்பது பகுத்தறிவுக்கு முரணானதும், பக்திக்கு தீங்கானதும் ஆகும்.

இனி, இந்த குறிப்பிட்ட அம்சங்கள் கீழ்கண்டவாறு அலசப் படுகின்றன.

சிலை கடத்தல்கள் நடந்திருக்கிறதுதான். ஆயினும் அவை கண்டுபிடிக்கப்பட்டதும் அறநிலையத் துறை பொறுப்பில் இருக்கும்போதுதான்: சிலை கடத்தல்கள் நடந்திருக்கிறதுதான், என்று ஒப்புக் கொண்டுள்ளது நல்லது தான். “ஆயினும் அவை கண்டுபிடிக்கப்பட்டதும் அறநிலையத் துறை பொறுப்பில் இருக்கும்போதுதான்”, என்று நியாயப் படுத்த முடியுமா? அறநிலையத் துறை பொறுப்பில் இருக்கும்போதுதான் சிலை கடத்தல்கள் நடந்திருக்கிறது என்பது பெருமை அல்லவே. “பொருளாதாரக் குற்றப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் ராஜசேகரன் நாயர் இருந்தபோதும், பிரதீப் வி பிலீப் இருந்தபோதும், ராஜேந்திரன் இருந்தபோதும், நான் இருந்தபோதும் களவு போயிருந்த ஏராளமான சிலைகளை மீட்டுக் கொண்டு வந்திருக்கிறோம். அறநிலையத்துறை எங்கள் கைகளைக் கட்டிப் போட்டதில்லையே”, என்று வாதிடும் போது, மற்றவர்களை ஏன் குறிப்பிடவில்லை என்று தெரியவில்லை.  ஐஜி பொன் மாணிக்கவேல் பற்றி மூச்சுக் கூட விடவில்லை. துறை சார்ந்தவர் எனும்போது, அவரைக் குறிப்பிடாமல், அவரது பணியைப் போறாமல், அமைதி காத்தது, பாரபட்சத்தைத் தான் காட்டுகிறது. .  ஐஜி பொன் மாணிக்கவேல் பொறுபெடுத்த போது, அவரை வேலை செய விடாமல், ஏன் வழக்குக் கூட போடப் பட்டது.  ஒருநிலையில், அவரது பதவிக் காலம் முடிந்தவுடன், நீட்டிக்காமல், அப்படியே, அவ்வேலை முடக்கப் பட்டது. அமைதியானது. இப்பொழுது, ஸ்டாலின் என்ன செவார் என்று பார்ப்போம்.

1817 ஆங்கிலேயர் காலம் முதல் திராவிடர் ஆட்சி 2021 வரை கோயில் நிர்வாகத்தில் ஊழல் நடப்பது ஒப்புக்கொள்ளப் படுகிறது: ஆங்கிலேயர் காலத்திலிருந்து, சுதந்திரம் பெற்ற பிறகு கருணாநிதி ஆட்சிவரை இருந்த கோவில்-மடங்கள் நிர்வாக சட்டங்களைப் பற்றி விவரிப்பதில் எந்த புதிய விசயமும் இல்லை. அப்பொழுது ஊழல் இருந்தது என்றாதால், இப்பொழுதும் ஊழல் இருக்கிறது என்கிறாரா என்று தெரியவில்லை. பிறகு, அதைப் பற்றிக் குறிப்பிட்டு, எழுத வேண்டிய அவசியமும் இல்லை. குறிப்பிட்டதால், ஊழல் பிரச்சினை இந்து அறநிலையத் துறையில் அதிகமாகியுள்ளது அவரை உருத்துவது புரிகிறது. அப்பொழுது தர்மகர்த்தாக்கள் ஊழல் செய்தார்கள் என்றால், இன்றும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் திக-திமுக-அதிமுக என்றுதான் இருக்கிறார்கள். ஓமந்தூரர் குத்தகையை நிறுத்தினார் என்றால், பிறகு ஏன் வந்தது என்று விளக்கவில்லை. திருச்செந்தூர் வேல், கோவிலில் கொலை, பால் கமிஷன்  போன்றவை மறைக்கப் பட்டன. வாடகை-குத்தகைகளில் கோடானு கோடிகள் ஏய்ப்பு, நீதிமன்ற வழக்குகள் பற்றி அவருக்குத் தெரிந்திருந்தாலும் குறிப்பிடவில்லை.

அர்ச்சகரை குறைகூறும் திலகவதி: திலகவதி சொல்கிறார், “பருத்தியூர் நடராஜர் சிலை மாற்றி வைக்கப்பட்டு அசல் சிலை வெளிநாட்டுக்குக் கடத்தப்பட்டது. அன்றாடம் அந்தச் சிலையைத் தொட்டு அபிஷேகம் செய்த அர்ச்சகர் அதைச் சொல்லவில்லை. ஆராய்ச்சிக்காக வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவர்தான் (ஒரிஜினல் சிலையின் போட்டோ அவரிடம் இருந்தது) சிலை மாற்றப்பட்டிருப்பதை அம்பலப்படுத்தினார்”. அர்ச்சகருக்கு ஆகமங்களின் படி பூஜை, அபிஷேகம் முதலியவற்றைத் தான் செய்ய முடியுமே தவிர, சிலை மாற்றப் பட்டதா-இல்லையா என்று ஆராய்ச்சி செய்ய முடியாது. மாக்ரோ போட்டோ பார்த்து கண்டு பிடிக்கும், தடயவியல் நிபுணர் அல்லர். மேலும், இங்கு பதூர் என்பதனை பருத்தியூர் என்கிறார் போலும். ஏனெனில், பதூர் நடராஜர் சிலை தான், கடத்தப்பட்டு, பிரிடிஷ் மியூஸியத்திற்கு விற்க்கப் பட்டது. டாக்டர் ஆர். நாகசாமி, அப்பொழுது லண்டன் கோர்ட்டுக்குச் சென்று, ஆதாரம் கண்பித்து, 1991ல் அவ்விக்கிரகம் திரும்பக் கொடுக்கப் பட்டது[1].

வலதுசாரி ஆதரவாளர்கள் உருவாக்கிய போலி பிம்பம் போல திராவிடர் இயக்க ஆட்சிக் காலத்தில் இந்து அறநிலைத்துறை உருவாக்கப் படவில்லை: இது போல யாரும், எப்பொழுதும் சொன்னதில்லை. 1970லிருந்து 2021 வரை திராவிட-நாத்திக ஆட்சி காலத்தில் கோவில்களில் ஊழல் பெருகியது, சிலைகள் என்பதைத் தான் எடுத்துக் காட்டப் பட்டது. இக்காலகட்டத்தில் வலதுசாரிகள் இல்லை, அதாவது, இப்பொழுது போன்ற பிஜேபி கட்சி-ஆதிக்கம் என்றெல்லாம் இல்லை. இவ்விவரங்கள், விவகாரங்கள், வழக்குகள் பற்றி அவருக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும். ஆக, இவ்வாறெல்லாம், திலகவதி வாதிப்பது, அவர்களுக்கு ஆதரித்து, பேசுவது போலிருக்கிறது. “வலதுசாரி ஆதரவாளர்கள்” என்று குறிப்பிட்டுள்ளதும், அரசியலாக்கும் நோக்கு வெளிப்படுகிறது. பிறகு “இடதுசாரி ஆதரவாளர்கள்” நிலை என்ன என்றும் கேட்கலாம்.மறைந்தது, இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் அத்தகைய மோசடிகளில் ஈடுபட்டது, கைதானது, சஸ்பெண்ட் செய்யப் பட்டது, சிறைக்கு போனது என்பன நடந்துள்ளன

அரசுத் துறைகளின் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டதன் விளைவாக இந்து சமய அறநிலையத்துறையிலும் பிராமணர் அல்லாதார் ஏராளமானோர் பணியில் சேர்ந்தனர்: சட்டப் படி, அரசியல் நிர்ணய சாசனப் பிரிவுகளின் படி நடப்பதை யாரும் எதிர்க்க முடியாது. அதே போல ஆகமசாத்திர நெறிப்படி உள்ளவற்றையும் மாற்ற முடியாது. “இந்து சமய அறநிலையத்துறையிலும் பிராமணர் அல்லாதார் ஏராளமானோர் பணியில் சேர்ந்தனர்,” என்பது வேறு, கோவில்களில் அர்ச்சகர் வேலைகளுக்கு, “பிராமணர் அல்லாதார் ஏராளமானோர் பணியில் சேர்வது,” என்பது வேறு. இது பிராமணர்-பிராமணர் அல்லலாதோர் பிரச்சினை அல்ல. சிதம்பர தீக்ஷிதர் வழக்கில் உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு அளிக்கப் பட்டுள்ளது. இருக்கின்ற லட்சக் கணக்கான கோவில்களில் ஆகமங்கள் மற்றும் ஆகமங்கள் அல்லாது செயல்படு கோவில்களில் பிராமணர்-பிராமணர் அல்லலாதோர் பாரம்பரியம்-பரம்பரை வழக்கம்-உரிமைகளோடு பூஜாரிகளாக இருந்து வந்துள்ளனர்-வருகின்றனர். அதையும் யாராலும் மாற்ற முடியாது. இட-ஒதுக்கீடு போர்வையில் இந்துக்கள்-அல்லாதவர்களும் வரமுடியாது. இதெல்லாம் திகவதிக்கு தெரிந்திருக்கும்.

© வேதபிரகாஷ்

17-07-2021


[1] In 1991, Tamil Nadu retrieved a Pathur Nataraja idol, which had ended up at the British Museum, London, for restoration, en route to a private buyer in Canada. The idol is under lock and key in a temple vault in Tiruvarur district. Sand particles sticking to the idol were the clinching evidence to prove that the idol belonged to the Pathur temple. Chandrasekaran said macro photography of idols and careful documentation it with details of age and weight will be the best way to prevent theft. Macro photography captures minute details of the object and is especially useful when trying to differentiate between two similar idols.

கோயில் நிலம், கட்டிட, சொத்து விவரங்கள் கணினியில் பதிவேற்றம்: 2014லிருந்து 2021 வரை நடந்தது என்ன, அரசாணை ஏன் பின்பற்றப் படவில்லை, இப்பொழுது, நீதிமன்றத்தின் ஆணை ஏன்? (2)

மே22, 2021

கோயில் நிலம், கட்டிட, சொத்து விவரங்கள் கணினியில் பதிவேற்றம்: 2014லிருந்து 2021 வரை நடந்தது என்ன, அரசாணை ஏன் பின்பற்றப் படவில்லை, இப்பொழுது, நீதிமன்றத்தின் ஆணை ஏன்? (2)

நீண்டகாலம் யார் அனுபவித்து வருகிறார்களோ அவா்களுக்கே பகிர்ந்து கொடுத்தல் அல்லது பெயா் மாற்றம் செய்து கொள்ளுதல் ஆகியவற்றிற்கு அனுமதி கொடுக்கும் வகையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை: இத்திட்டமும், கடந்த 60 ஆண்டுகளாக நடந்து வருகிறது. அத்தகையோர் சங்கங்களைத் தோற்றுவித்து, நீதிமன்றங்களுக்குச் சென்றுள்ளனர். எல்லாவற்றையும் விட மிக்கப்பெரிய மோசடி என்னவென்றால், அவ்வாறு பலன் பெற்று வருவது, துலுக்கர், கிருத்துவர் மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாத திராவிடக் கட்சியினர் தான். இவர்களுக்குத் தான், அறநிலைய அதிகாரிகள், எல்லா நிலையிலும், எல்லா வழிகளிலிலும் உதவி பெற்று வருகிறார்கள். இது, ஒரு வியாபாரமாக்கவே ஆகி விட்டது. அதனால், தான் கோடிக் கணக்கில் லஞ்சம் வாங்குவது, ஏமாற்றுவது, வழக்குகளில் சிக்குவது போன்றவை தொடர்ந்து நடந்து வருகின்றன. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், கடந்த 60-70 ஆண்டுகளில் இந்நிலை மேன்மேலும் மோசமடைந்து வருவதை கவனிக்கலாம். இஹ்தகைய ஊழல்களை ஒழிப்போம், கோவில் நிலங்கள்-சொத்துக்களைக் காப்போம் என்று பலர் கிளம்பியிருந்தும், நிலைமை மாறவில்லை. அவர்கள் எடுத்துக் காட்டும் ஓட்டைகள், முதலியவற்றை, சட்ட நெளிவு-சுளிவுகளை அறிந்து கொண்டு, அதற்கேற்ற முறையில் மாற்றியமைத்துக் கொள்கிறார்கள்.

இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யவும் உத்தரவிட வேண்டும் என்ற மனு: மதுரையைச் சேர்ந்த ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் கட்டண விவரங்களை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அந்தந்த கோவில்களில் பட்டியல் வைக்க வேண்டும்[1]. பூஜை கட்டணங்கள், வாடகை விவரம், நன்கொடை, செலவினங்கள் ஆகியவற்றை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யவும் உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்[2]. இந்த மனுவை நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் விசாரித்தனர். அப்போது, அறநிலையத்துறை கமிஷனர் சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், “கோவில் சொத்துகளை கண்டறிய அடையாள குழுவும், பரிசீலனை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் நில குத்தகை மற்றும் வாடகைதாரர்கள், குடியிருப்போரிடம் இருந்து வரவேண்டிய ரூ.297.63 கோடி பாக்கியை கேட்டு 42,818 பேருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டதில், 14 ஆயிரத்து 26 பேரிடம் இருந்து ரூ.32.49 கோடி வசூலாகியுள்ளது,” என கூறப்பட்டிருந்தது. இதையடுத்து நீதிபதிகள், ‘‘கோவில் சொத்துக்களை ஆக்கிரமித்துள்ள நபர்களின் விவரம், அசையும் அசையா சொத்துக்கள் விவரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் 8 மாதங்களில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

முழுவிவரங்களை இணைதளத்தில் வெளியிட மதுரைக்கிளை உயர்நீதி மன்றம் ஆணை: ஆக்கிரமிப்புகள், சட்டத்திற்குப் புறம்பாக விற்பனை, சொத்து பெயர் மற்றல், போன்ற மோசடிகளும் நடந்து வருகின்றன. குத்தகை மற்றும் வாடகைதார்களான 14,026 பேரிடமிருந்து ரூ.32,49,00,000/- வசூலிக்கப் பட்டுள்ளது[3]. இருப்பினும், பாக்கி பல நூறு கோடிகளில் நிலுவையில் உள்ளது. இதனால், முழுவிவரங்களை இணைதளத்தில் வெளியிட மதுரைக்கிளை உயர்நீதி மன்றம் ஆணையிட்டுள்ளது[4]. தமிழகம் முழுதும் உள்ள கோவில் நிலங்கள், கட்டடங்களின் விவரங்களை, பொதுமக்கள் எளிதாக பார்க்கும் வகையில், புவிசார் குறியீடு செய்து, இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என, அறநிலையத் துறை அலுவலர்களுக்கு, அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்[5]. கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு, விதிமுறைகளை மீறி, கோவில் இடங்களை அரசுப் பணிக்கு வகை மாற்றுதல், கோவில் சொத்துக்கள் குத்தகை குளறுபடி என, பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் வரிசை கட்டி நிற்கின்றன[6]. பல கோவில்களின் சொத்துக்கள் எங்கே இருக்கிறது என, தேடும் நிலை தொடர்கிறது. இது தொடர்பான வழக்குகளில், அரசு சிறப்புக்கவனம் செலுத்தும்படி, நீதிமன்றங்கள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளன. இந்நிலையில், கோவில் சொத்துக்கள் பாதுகாப்பு, நிர்வாகம் தொடர்பான பல்வேறு குளறுபடிகளுக்கு தீர்வு காணும் வகையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, நடவடிக்கை எடுக்க துவங்கியுள்ளது. ஆலோசனைகோவில்களில் மேற்கொள்ள வேண்டிய இணைய பதிவேற்றம் குறித்து, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ஆலோசனை கூட்டம், பிறப்பித்த உத்தரவு: இக்கூட்டத்தில், கமிஷனர் குமரகுருபரன், கூடுதல் கமிஷனர் ரமண சரஸ்வதி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, துறை சார்ந்த அலுவலர்களுக்கு அமைச்சர் பிறப்பித்த உத்தரவு:

* கோவில் நிர்வாகம், அலுவலர்கள், திருப்பணிகள், விழாக்கள் போன்ற தகவல்களை இணைய தளத்தில் வெளியிட வேண்டும்

* கோவில்களில் தற்போது நடைமுறையில் உள்ள பல்வேறு பதிவேடுகளை, ‘ஸ்கேன்’ செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்

* கோவில் நிலங்கள், கட்டடங்களின் விபரங்களை, பொதுமக்கள் எளிதாக காணும் வகையில், புவிசார் குறியீடு செய்து, இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

* அசையும், அசையா சொத்துக்களின் உரிமை ஆவணங்களை, ‘ஸ்கேன்’ செய்து, இணையத் தளத்தில் பதிவேற்ற வேண்டும்

* கோவில் சொத்துக்களில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றல், நியாய வாடகை வசூலித்தல் மற்றும் கோவில் வருவாயினங்களை பெருக்கும் வகையில் செயல்பட வேண்டும்,” இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். எல்லாமே, படா ஜோராக்கத்தான் இருக்கிறது, ஆனால், என்ன நடக்கப் போகிறது என்று பார்க்க வேண்டும்.

முழு ஊரடங்கு முடிந்த பிறகு கோயில் விவரங்களை தருகிறோம்: திருக்கோயில் தொழிலாளர் யூனியன் சார்பில் ஆணையர் குமரகுருபரனுக்கு வேண்டுகோள்: தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர் யூனியன் சார்பில் அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது[7]: “இந்து சமய அறநிலையத்துறை மூலம் அனுப்பபடும் மின்னஞ்சல்கள் அனைத்தும் தமிழக முழுவதும் உள்ள அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படும் செயல் அலுவலர்கள் பணியாற்றும் அனைத்து முதன்மை கோயில்களிலும் கணினி வசதி  ஏற்படுத்தாததால் அனைத்து கோயில்களில் இருந்தும் முழுமையான விவரம் கிடைக்கப் பெறப்படுவதில்லை. செயல் அலுவலர்கள் பணியாற்றும் அனைத்து முதன்மை கோயில்களிலும் கணினி வசதி ஏற்படுத்தி, கணினி இயக்குபவர் பணியிடம்  உருவாக்கி, அப்பணியிடத்தில் ஒருவரை நியமிக்க வேண்டும்[8]. கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், துறையில் இருந்து கோயில் பற்றிய விவரங்களை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என கோயில் செயல் அலுவலர்களுக்கு தொடர்ந்து பல முறை மின்னஞ்சல்  மூலமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த உத்தரவை செயல்படுத்த வேண்டுமென்றால் கோயில் பணியாளர்கள் பணிக்கு வந்து விவரங்கள் வழங்க வேண்டி உள்ளது. தற்போது பேருந்து வசதி இல்லாத நிலையில் கோயிலில் இருந்து  சுமார் 20 கிலோ மீட்டருக்கு அப்பால் வருகை தரும் பணியாளர்கள், சிரமத்திற்கிடையே கோயிலுக்கு வருகை தந்து விவரங்கள் தர வேண்டியுள்ளது. தற்போது கேட்கப்பட்டு வரும் கோயில் பற்றிய மின்னஞ்சல் விவரங்களை ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்ட பிறகு கேட்கும் போது முழுமையாக அளிக்க தயாராக உள்ளோம்”. பல்லாயிரக்கணக்கான, ஏன் லட்சக்கணக்கான ஊழியர்கள், வீட்டிலிருந்தே வேலை செய்யும் போது, அத்தகையோர், ஏன் வேலை செய்யக் கூடாது என்று தெரியவில்லை.

நீதிமன்ற தீர்ப்புகள் ஆணைகள், கட்டளைகள் நிறைவேற்றப் படுகின்றனவா?: ஆக இவையெல்லாமே, ஆணைகள், காகிதங்களில் உள்ள கட்டளைகள் ஆனால், பின்பற்றப் படுகின்றனவா, பின்பற்றப் பட்டதா, பின்பற்றப் படப் போகிறதா, என்று பார்க்க வேண்டும். முந்தைய ஆணைகளிலேயே, பல விசயங்கள் உள்ளன, ஆனால், பின்பற்றப் படவில்லை. பின்பற்றியிருந்தால், ஊழல் இந்த அளவிற்கு நாறாது, மோசமாகியிருக்காது, இவையெல்லாம், பேச்சுப் பொருளாகி இருக்காது. ஆனால், நடந்து கொண்டே இருக்கின்றன. உச்சநீதி மன்ற தீர்ப்புகளே, பல அமூல் படுத்தாமல், கந்த 50 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கின்றன. “இவ்வாணை, தீர்ப்பு, உடனடியாக பின்பற்றப் படவேண்டும், நிறைவேற்றப் படவேண்டும்,” என்று சுற்றறிக்கை, ஆணை வெளியிட்டு அமைச்சர், உயர் அதிகாரி அமைதியாக இருந்து விடுவர். ஒன்றும் நடக்காது, மறுபடியும் அதே ஊழல், அதே மோசடி, அதே திருட்டுத் திட்டம், களவாணி முறை என்று தொடரும்-தொடர்கின்றன. ஏதோ சிலர் வழக்குகள் போட்டு அமைதியாகி விடுவர். அத்துடன், எல்லாமே சமாதிகட்டிய நிலைக்குச் சென்று விடும். “வேகமாக / தீவிரமாக இறங்கி விட்டோம்,” (proactive) என்று செயலில் இறங்கி, மோசடிகளை, ஊழல்களை, ஏமாற்று வேலைகளைத் தீர்க்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

21-05-2021


[1] தினத்தந்தி, கோவில் சொத்து விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும், பதிவு: பிப்ரவரி 19,  2021 02:03 AM.

[2] https://www.dailythanthi.com/Districts/Chennai/2021/02/19020308/Temple-property-details-websiteTo-be-uploaded.vpf

[3] பாலிமர்.செய்தி, கோவில் சொத்துக்கள், ஆக்கிரமிப்பாளர் விவரங்களை இணையதளத்தில் வெளியிட உத்தரவு, பிப்ரவரி 18, 2021, 05:14:32 PM.

[4] https://www.polimernews.com/dnews/138329

[5] தினமலர், கோவில் சொத்துக்களை இணையதளத்தில் பதிவேற்ற அமைச்சர் சேகர்பாபு உத்தரவு, Added : மே 20, 2021  00:42.

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2770512

[7] தினகரன், ஊரடங்கால் பணியாளர்கள் வருவதில் சிக்கல்: முழு ஊரடங்கு முடிந்த பிறகு கோயில் விவரங்களை தருகிறோம்: திருக்கோயில் தொழிலாளர் யூனியன் சார்பில் ஆணையர் குமரகுருபரனுக்கு வேண்டுகோள், DOTCOM@DINAKARAN.COM(EDITOR) | MAY 19, 2021.

[8] https://m.dinakaran.com/article/news-detail/678258/amp?ref=entity&keyword=Thirumannamalai%20Annamalaiyar%20Temple

கோயில் நிலம், கட்டிட, சொத்து விவரங்கள் கணினியில் பதிவேற்றம்: 2014லிருந்து 2021 வரை நடந்தது என்ன, இப்பொழுது, நீதிமன்றத்தின் ஆணை ஏன்? (1)

மே22, 2021

கோயில் நிலம், கட்டிட, சொத்து விவரங்கள் கணினியில் பதிவேற்றம்: 2014லிருந்து 2021 வரை நடந்தது என்ன, நீதிமன்றத்தின் இப்பொழுது ஆணை ஏன்? (1)

2014லிலேயே கோவில் சொத்து விவரங்களை இணைய தளத்தில் வெளியிடுமாறு இந்து சமய அறநிலையத் துறைக்கு அரசு உத்தரவிட்டிருந்தது: தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 36 ஆயிரத்து 488 கோயில்கள், 56 திருமடங்கள், திருமடத்துடன் இணைந்தபடி 58 திருக்கோயில்கள் உள்ளன. இவை தவிர, 17 சமணக் கோயில்கள் உள்ளன[1]. இந்த கோயில்கள் மற்றும் திருமடங்களுக்கு சொந்தமாக நன்செய், புன்செய், மானாவாரி என்று 4 லட்சத்து 78 ஆயிரத்து (348 4,78,348) ஏக்கர் நிலங்கள் உள்ளன. அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் 22,600 கட்டிடங்கள், 33,665 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன[2]. இதுதவிர 1 லட்சத்து 23 ஆயிரத்து 729 பேருக்கு (1,23,729) விவசாய நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. இவை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.58.68 கோடி வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் பல கோயில்களின் சொத்து விவரங்கள் சரியானபடி பராமரிக்கப்படாததால் இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சமூக விரோதிகள் சிலர், கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பது, போலியாக பட்டா போட்டு விற்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து கோயில் சொத்துக்களின் விவரங்கள் திரட்டப்பட்டு அதை இணைய தளத்தில் வெளியிடுமாறு இந்து சமய அறநிலையத் துறைக்கு அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கோயில் சொத்துக்களின் விவரம் முழுமையாக திரட்டப் பட்டது. 

சமூக விரோதிகள் சிலர், கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பது, போலியாக பட்டா போட்டு விற்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டது தெரியவந்தது:இவ்வாறு குறிப்பிடுவதே அபத்தமானது, ஏனெனில், அவர்கள் “சமூக விரோதிகள்” மட்டுமல்ல, இந்து அறநிலையைத் துறை துரோகிகள், குற்றவாளிகள்,  கைதாகி பதவியில் தொடாரும் ஊழல் அதிகாரிகள் என்ற பலரால் ஆதரிக்கப் பட்டு, பரஸ்பர பலன்கள்-ஆதாரங்கள் பெற்று நடத்திய மிகப்பெரிய ஊழல்-மோசடி ஆகும். அவ்வாறு ஈடுபட்டவர்களும் “சிலர்” அல்ல, பலர், நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளில் உள்ள பெயர்களைப் பட்டியல் இட்டாலே நூற்றுக் கணக்கில் செல்லும். 1,23,729 குத்தகைகாரகளில் பெரும்பாலோனோர் கோவில்களை, கடவுளர்களை ஏமாற்றித் தான் வந்துள்ளார்கள், வருகிறார்கள். இப்பொழுது, கரோனாவால் இறக்கிறார்கள் என்றால், ஒருவேளை, அது கடவுள் தண்டனையாகக் கூட இருக்கலாம். எனவே, ஊடகங்களும், இந்த மோசடிகளுக்கு ஒத்து ஊதிவருவது, நன்றாகவே புலப்படுகிறது.

2016ல் முடிக்க திட்டமும் இருந்தது: அதன்பேரில் கோயில் சொத்து விவரங்களை சேகரிக்கும் பணியில்  ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அந்த சொத்து விவரங்கள் கடந்த 2016ல் கணினியில் பதிவேற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது[3]. இதையடுத்து ஒவ்வொரு கோயில்களில் கட்டுப்பாட்டில் உள்ள  சொத்துக்கள் விவரங்கள் தனித்தனியாக கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வந்தது. தொடர்ந்து அதன்விவரங்களை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ஆனால், இந்த சொத்து  விவரங்கள் முழுமையாக இல்லை என்று புகார் வந்தது[4]. குறிப்பாக, பெரும்பாலான கோயில்களில் சொத்துக்களில் பல ஏக்கர் நிலங்கள் கணக்கில் எடுத்து கொள்ளாமல் விடுபட்டு இருந்தது.இதையடுத்து ஒவ்வொரு கோயில்களின் முழுமையான சொத்து விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் ஆவணங்களின்  அடிப்படையில் கோயில் சொத்துகள் என்று உறுதி செய்யப்பட்டவைகளில் விவரங்கள் மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதில், நிலம், கட்டிடங்கள் என அனைத்தையும்  பதிவேற்றும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் முடிக்கவும் அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. அறநிலையத்துறை சொத்து விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது. வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது.

2014லிருந்து 2021 வரை ஆவணங்கள் கணினிமயமாக்கி இணைதளத்தில் ஏற்றப்படவில்லை: இவ்வாறு தெரிவது, நிதர்சனமாக இருப்பதே, பெரிய ஊழல் என்றாகிறது. ஏனெனில், லட்சக் கணக்கில், கோடிக் கணக்கில் ஆவணங்கள் scan செய்யப்பட்டு pdf  வடிவில் இணைதளங்களில் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளது, படுகின்றன. இவற்றில், பல லட்ச ஆவணங்கள் சில மாதங்களில் செய்யப் படுகின்றன. அந்நிலையில், கடந்த 7 வருடங்களில், 2555 நாட்களில், ஒரு நாளைக்கு 100 என்றால் கூட, 2,55,500 ஆவணங்களை, ஒரு நபர் செய்திருக்கலாம். 10 பேர் வேலை செய்கிறார்கள் என்றால், 25,55,000 செய்யப் பட்டிருக்கும். இப்படி எளிதாகக் கணக்கிட்டாலே, அதில் உள்ள ஊழல், மோசடி முதலியவை வெளி வரும், ஆகவே, “பதிவேற்றும் பணி நடந்து வருகிறது,” என்பதே, தகுதியற்ற, முறையற்ற பேச்சாகும். அப்பணியை தடுக்கிறார்கள், தாமதப் படுத்துகிறார்கள், அவ்வாறு செய்வதன் மூலம், ஆவணங்கள் திருத்தப் படுகின்றன, மாற்றப் படுகின்றன, என்றெல்லாம் புரிந்து கொள்வது எளிதான விசயம் தான். ஆகவே, அரசு ஆணையிட்டது, “பதிவேற்றும் பணி நடந்து வருகிறது,” என்று சொல்வது, நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது, உடனே “செய்” என்ற ஆணை. ஆனால், நாளைக்கு ஏன் செய்யவில்லை என்றால், “பதிவேற்றும் பணி நடந்து வருகிறது,” என்று தான் பதில் வரும்.

2019ல் வேறு மாதிரி ஆணையிட்டது: இந்து கோயில் சொத்துக்கள் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் மாநிலச் செயலா் ஜெ. சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: “இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இந்து கோயில்கள் மற்றும் திருமடங்களின் சொத்துக்கள், விவசாய விளை நிலங்கள், கட்டடங்கள், காலி மனைகள் ஆகியவற்றை நீண்டகாலம் யார் அனுபவித்து வருகிறார்களோ அவா்களுக்கே பகிர்ந்து கொடுத்தல் அல்லது பெயா் மாற்றம் செய்து கொள்ளுதல் ஆகியவற்றிற்கு அனுமதி கொடுக்கும் வகையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை அமைந்துள்ளது[5]. இது கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளா்களுக்கே தாரை வார்த்துக் கொடுக்கும் முயற்சியாகும். ஏற்கெனவே, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள இந்து கோயில்களின் சொத்துக்கள், நிலங்கள் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. சுவாமி பெயரில் உள்ள சொத்துக்களை பட்டா மாறுதல் செய்ய முடியாது. ஆனால், நீண்ட கால குத்தகை, வாடகை ஆகியவற்றிற்கு விடமுடியும். ஏற்கெனவே குத்தகைதாரா்கள், வாடகைதாரா்கள் கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்களை அறநிலையத் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சிலரின் துணையுடன் மோசடி ஆவணங்களை தயார் செய்து அபகரித்து உள்ளனா். தங்களது பெயரில் உள்ள ஒப்பந்தங்களை நீட்டித்தும், அனுபவித்தும் வருகின்றனா். இந்நிலையில் தமிழக அரசின் இந்த உத்தரவு ஆக்கிரமிப்பாளா்களுக்கே சாதகமாக அமையும். மேலும் இந்த உத்தரவு சட்ட விரோதமானது. எனவே தமிழக முதல்வா் இது விஷயத்தில் தலையிட்டு இந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெற்று, தமிழா்களின் கோயில் சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என அதில் கூறப்பட்டுள்ளது[6].

© வேதபிரகாஷ்

21-05-2021


[1] தமிழ்.இந்து, அறநிலையத்துறை சொத்துக்கள் விவரம் வெளியீடு: 7 மாவட்ட விவரங்கள் வெளியாகவில்லை, Published : 13 May 2014 11:00 AM; Last Updated : 13 May 2014 01:07 PM

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/5023-7-2.html

[3] தினகரன், கோயில் நிலம், கட்டிட விவரங்கள் கணினியில் பதிவேற்றம்: „ டிசம்பர் 31ம் தேதிக்குள் முடிக்க திட்ட சொத்து விவரங்களை இணையதளத்தில் வெளியிடவும் முடிவு, 2018-10-01@ 01:07:35.

[4] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=439787

[5] தினமணி, கோயில் சொத்துக்கள்: அரசாணையை திரும்பப்பெற வலியுறுத்தல், By DIN  |   Published on : 09th October 2019 07:08 AM.

[6] https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/oct/09/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3250313.html

திருவாடுதுறை ஆதீன மடத்திற்கு சொந்தமான சொத்துக்கள் – குத்தகை, வாடகை, வசூல் முதலியவற்றில் உண்டாகும் அதர்மங்கள் (3)

ஒக்ரோபர்29, 2020

திருவாடுதுறை ஆதீன மடத்திற்கு சொந்தமான சொத்துக்கள் –  குத்தகை, வாடகை, வசூல் முதலியவற்றில் உண்டாகும் அதர்மங்கள் (3)

ஜூன் 2020, குரு பூஜையின் போது, விவரம் தெரிந்தவர் சொன்னது[1]: மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவையின் நிறுவனர் வழக்கறிஞர் டாக்டர் ராம. சேயோன்  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “…………ராமநாதபுரம் மன்னன் ஆதீன சீடராக விளங்கி, ஆதீனத்திற்கு பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை தானமாக வழங்கினார்…அவற்றின் மூலம் கோவில் திருப் பணிகள் நடைபெற்றன….,”என்றெல்லாம் நடந்தன என்று விவரித்தார்[2]. ஆனால், அத்தகைய சொத்துகள் இன்றும் இருந்தும், திருப்பணிகள் நடக்காமல், நிலங்கள் ஆக்கிரமிக்கப் பட்டு, தெய்வீகப் பணிக்கு எதிரான வேலைகள் நடைபெறுகின்றன என்பதை மறைமுகமாக உணர்த்துகிறார் போலும். வழக்கறிஞர் என்ற நிலையில், அதெல்லாம் அதெல்லாம் அவருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். நிச்சயமாக, ஏனெனில், இவர் பலவித விவகாரங்களுக்குக் குரல் கொடுத்து வருகிறார்[3]

அக்டோபர் 2019- திருவாவடுதுறை ஆதீன மட சொத்துக்களை மீட்கக்கோரிய வழக்கில் நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது[4]:  மதுரை மாவட்டம், சின்ன உலகாணியைச் சேர்ந்த மயில், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: “திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான நிலங்கள் பல இடங்களில் உள்ளன. மதுரை மாவட்டம், சின்ன உலகாணியிலுள்ள சில நிலங்களில்  குத்தகை அடிப்படையில் சிலர் விவசாயம் செய்கின்றனர். தற்போது குத்தகைதாரர்களின் வாரிசுகள் விவசாயம் செய்கின்றனர். இது குத்தகை விதிக்கு எதிரானது[5].  இந்த நிலங்கள் 1972-ல் குருசாமி, பகவதி, ராமு, மற்றொரு குருசாமி என 4 பேருக்கு குத்தகைக்கு விடப்பட்டது. இவர்கள் இறந்த நிலையில் குத்தகை ஒப்பந்தம் செல்லாது[6]. ஆனால் குத்தகை ஒப்பந்தத்துக்கு மாறாக அந்த 4 பேரின் வாரிசுகளும், அவர்களின் வாரிசுகளும் நிலத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் ஆதீன நிலங்களை சட்டவிரோதமாக ரூ.5 லட்சத்துக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளனர்[7]. இதற்கு அறநிலையத்துறை அதிகாரிகள் உடந்தையாக உள்ளனர். இவர்களிடம் இருந்து சம்பந்தப்பட்ட நிலத்தை மீட்க யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட நிலத்தை மீட்கவும், இதுவரை உபயோகப்படுத்தியதற்கான தொகையை வசூலிக்கவும் உத்தரவிட வேண்டும்,” இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர். தாரணி ஆகியோர் மனு குறித்து, அறநிலையத்துறை இணை ஆணையர், மதுரை  கலெக்டர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை 2019, நவ. 12க்கு தள்ளி வைத்தனர். ஆக, இவ்விசயங்கள் நன்றாகவே தெரிந்திருக்கின்றன.

2018- ஆதீனத்துக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி வானதி உத்தரவு: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சைவ வேளாளர் சமுதாயத் தலைவர் சேதுராமலிங்கம் பிள்ளை ராஜபாளையம் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ராஜபாளையம் அருகே உள்ள மடத்துப் பட்டியில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த 40 வருடங்களாக இந்த நிலம் தனி நபர் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது[8]. இங்கு நூலகம் அமைக்க அன்று இருந்த 23-வது குருமகா சன்னி தானத்தை அணுகினோம். அப்போது அவர் தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து நிலத்தை சட்டப்படி நீங்கள் மீட்டால் நூலகம் அமைக்க இடம் அளிக்கிறேன் என்று உறுதி கூறினார். இதைத் தொடர்ந்து நாங்கள் சட்டப்போராட்டம் நடத்தி மடத்துப்பட்டியில் இருந்த ஆதீன இடத்தை மீட்டோம். இதனிடையே 23-வது மகா சன்னிதானம் இறந்து விட்டார். இதைத்தொடர்ந்து 24-வது திருவாவடுதுறை சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணர் தேசிக பரமாச்சாரி சுவாமிகள் பொறுப்பேற்றார். அவரிடம் மடத்துப்பட்டியில் உள்ள நிலத்தில் நூலகம் அமைக்க இடம் கேட்டோம். அவர் இடம் தர முடியாது என தெரிவித்து விட்டார். அந்த நிலத்தை மீட்க ரூ. 20 லட்சத்திற்கு மேல் செலவு செய்துள்ளோம். தற்போது ஆதீனம் நிலத்தை தர மறுக்கிறார். எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு கடந்த 29-ந் தேதி ஜூன் 2018, விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பாக திருவாவடுதுறை ஆதீனம் ஜூன். 3-ந் தேதி (03-07-2018 அன்று) ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஆதீனம் ஆஜராகவில்லை. இதையடுத்து ஆதீனத்துக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி வானதி உத்தரவிட்டார்[9].


கோயில், ஆதீனங்களுக்குச் சொந்தமான “தரும சாசன சொத்து”களை வாங்கலாமா?[10]: இந்து சமய அறநிலையத்துறை கொள்கைவிளக்கக் குறிப்பேட்டில் தமிழகத்தில் மொத்தம் 56 ஆதீன மடங்களும், அதற்குக் கீழே 57 கோயில்கள் இருப்பதாகவும் குறிப்பு இருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் 36,590 கோயில்களுக்குக் கீழே 4,22,000 ஏக்கர் நிலங்களும்; 56 மடங்களுக்குக் கீழே கிட்டத்தட்ட 56,000 ஏக்கர் நிலங்களும் இருப்பதாக அறநிலையத்துறையின் தகவல் தெரிவிக்கிறது. திருவாவடுதுறை ஆதீனம், வானமாமலை ஆதீனம், திருக்குறுங்குடி ஜீயர் மடம், தர்மபுரம் ஆதீனம், மதுரை ஆதீனம், திருப்பனந்தாள் காசி மடம், அகோபில மடம், காஞ்சி சங்கர மடம் போன்ற சில ஆதீன மடங்களுக்குச் சொந்தமாகத்தான் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் குவிந்துகிடக்கின்றன. திருவாவடுதுறை ஆதீனத்துக்கு மட்டும் சுமார் 19,000 ஏக்கர் நிலம் சொந்தமாக இருக்கிறது. ஆதீனத்துக்குச் சொந்தமான இந்த நிலங்கள் மக்களுக்குக் குத்தகைவிடப்படுகின்றன; வாடகைக்கும் விடப்படுகின்றன; இவற்றின் மூலமாக வருமானம் வருகிறது.

திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தது: இந்தச் சூழலில் அண்மைக்காலமாக கோயில்கள், ஆதீனங்கள், மடங்களுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதாகவும், சட்ட விரோதமாக விற்கப்படுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இது தொடர்பாக திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் இப்படிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது… `தூத்துக்குடி மாவட்டம் நெடுங்குளத்தில் இருக்கிறது `செங்கோல் ஆதீனம்.’ இந்த ஆதீனத்துக்குச் சொந்தமான நிலங்கள் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் முறைகேடாக ஆக்கிரமிப்பு செய்யப் பட்டிருக்கின்றன. இதனால் அரசுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை உடனடியாக மீட்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். ‘இந்த வழக்கு விசாரணையில், `தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீனங்கள் மற்றும் மடங்களையும் இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக இணைக்க’ உத்தரவிட்டிருக்கிறது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. மேலும், `தமிழகத்திலுள்ள ஆதீனங்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான சொத்துகள் மற்றும் நிலங்கள், இதரச் சொத்துகள், குத்தகை மற்றும் வாடகைக்கு விடப்பட்டுள்ள விவரங்களை அறநிலையத்துறை உடனடியாகத் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி அனைத்து ஆதீனம் மற்றும் மடங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

© வேதபிரகாஷ்

28-10-2020


[1] கொற்றவை செய்தி, திருவாவடுதுறை ஆதீனத்தில் இன்று சைவ குல எத்திராஜர் குருபூஜை விழா நடைபெற்றது, 17 June 2020

[2] http://www.kotravainews.com/news/thiruvaduthurai-adheenam-today-kotravai-news/

[3]  டாஸ்மார்க கடை திறப்பு, பொது மக்கள் பாதுகாப்பு போலீஸ், கோவில்கள் திறப்பு என்று பல விசயங்களில் குரல் கொடுப்பதாக, ஊடகங்கள் எடுத்துக் காட்டுகின்றன. ஆனால், இவ்விசயத்தில் அமைதி காக்கிறார் போலும்.

[4] தினகரன், திருவாவடுதுறை ஆதீன மடம் சொத்துக்களை மீட்க வழக்கு, 2019-10-01@ 00:38:21.

[5] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=530262

[6] தமிழ்.இந்து, திருவாவடுதுறை ஆதீன நிலங்களை மீட்கக் கோரும் வழக்கு: மதுரை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு, கி.மகாராஜன், Published : 30 Sep 2019 05:50 PM Last Updated : 30 Sep 2019 05:50 PM.

[7] https://www.hindutamil.in/news/tamilnadu/518079-high-court-order-to-madurai-collector-1.html

[8] மாலை மலர், நில விவகாரம்: திருவாவடுதுறை ஆதீனத்துக்கு பிடிவாரண்டுராஜபாளையம் கோர்ட்டு அதிரடி, பதிவு: ஜூலை 04, 2018 14:04 IST.

[9] https://www.maalaimalar.com/news/district/2018/07/04140445/1174378/Rajapalayam-court-warrant-to-thiruvavaduthurai-adheenam.vpf

[10] விகடன், கோயில், ஆதீனங்களுக்குச் சொந்தமான `தரும சாசன சொத்துகளை வாங்கலாமா?, சி.வெற்றிவேல், Published:12 Jun 2018 4 PMUpdated:12 Jun 2018 4 PM

https://www.vikatan.com/spiritual/temples/127470-can-we-convert-temple-land-as-a-sales-land

திருவாடுதுறை ஆதீன மடத்திற்கு சொந்தமான நஞ்சை, புஞ்சை சுமார் 6000 ஏக்கர் நிலம்: துலுக்கர் சொந்தம் கொண்டாடுவது எப்படி? (1)

ஒக்ரோபர்29, 2020

திருவாடுதுறை ஆதீன மடத்திற்கு சொந்தமான நஞ்சை, புஞ்சை சுமார் 6000 ஏக்கர் நிலம்: துலுக்கர் சொந்தம் கொண்டாடுவது எப்படி? (1)

“சிவன் சொத்து, குலம் நாசம்,” – திராவிடத்தால் மறைந்தது: மடம்-கோவில் சொத்துக்களை, நிலங்களை இந்துமதம் அல்லாத துலுக்கர், கிருத்துவர் முதலியோர் ஆக்கிரமித்துக் கொண்டு, நளடைவில் தமதாக்கிக்கிக் கொள்ளும் நிலை, அதிர்ச்சியடையச் செய்கிறது. கடந்த 70 ஆண்டுகளாக, இந்துவிரோத, நாத்திக திராவிட ஆட்சியால், இவ்வாறு நடக்கிறது என்றால் மிகையாகாது. 1970ல் ஆட்சிக்கு வந்த அரசியல்வாதிகள், அதிகாரத்திற்கு வந்த சித்தாந்த அதிகாரிகள், ஊழியர்கள் தங்களை “இந்துக்கள்” அல்லது “சைவர்” என்றெல்லாம் சொல்லிக் கொண்டால் கூட, அவர்கள் தான் பலநிலைகளில், பலதுறைகளில் வேலைகளில் இருந்து கொண்டு, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுக்காக, சட்டங்களை வளைத்து, தெய்வத்திற்குப் புறம்பான நியாயமற்ற-தர்மமற்ற காரியங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.  என்னத்தான், “சிவன் சொத்து, குலம் நாசம்,” என்றெல்லாம் அறிந்திருந்தாலும், திராவிடத் தலைவர்களின் வெளிப்படையான, இந்து-சைவ விரோத காரியங்களினால், மடாதிபதிகளே, சிவனை மறந்து, சொத்துக்களுக்கு-பணத்திற்கு ஆசைப் பட்ட நிலயில், சாதாரண பக்தர்கள் என்னாவது. ஆகவே, பக்தர்கள் இல்லாத, இதுவிரோதிகளைப் பற்றி சொல்ல வேண்டியே அவசியமே இல்லையே? அதனால் தான், “சிவன் சொத்து,” கூறு போடப் படுகிறது.

24-10-2020 சனிக்கிழமை முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஆதின அதிகாரியைச் சந்தித்தது[1]: கடையநல்லூர் தொகுதி அச்சன்புதூர் பேரூராட்சி மேக்கரையில் திருவாடுதுறை ஆதீன மடத்திற்கு சொந்தமான நஞ்சை, புஞ்சை சுமார் 6000 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு பரம்பரை பரம்பரையாக அடைவோலை தாரர்களாகவும், குத்தகைதாரர்களாகவும், விவசாயம் செய்தும் மற்றும் வீடுகள் அமைத்தும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆதீன மடத்தின் நிர்வாகம் விதித்த நியாயமான குத்தகைக்குண்டான வரித்தொகையை புன்செய்க்கு பணமாகவும், நன்செய்க்கு மகசூல் இடுபொருளாகவும் விவசாயிகள் செலுத்தி வந்தனர். ஆனால், தற்போது, மடத்தின் நிர்வாகம் வரிதொகையை பலமடங்கு உயர்த்தி உள்ளதாகவும் அதனை முறைப்படுத்தி தருமாறு கடையநல்லூர் எம்.எல்.ஏ அபூபக்கரிடம் மனு அளித்தனர். இதனடிப்படையில் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ 24-10-2020 சனிக்கிழமை பகல் 4 மணியளவில் திருநெல்வேலி டவுனில் உள்ள திருவாடுதுறை ஆதீன மடத்திற்கு நேரில் சென்று தென்மண்டல மேலாளர் இராமச்சந்திரனை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

முஸ்லிம் எம்.எல்.ஏ கூறியது: சுமார் ஒரு மணி நேரம் நீடித்த சந்திப்பின் முடிவில் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ கூறியதாவது:- “மேக்கரையில் உள்ள விவசாயிகள் அளித்த மனுவின் அடிப்படையில் திருவாடுதுறை ஆதீன மடத்தின் மேலாளரை நேரில் சந்தித்தேன். அன்போடு வரவேற்றார். விவசாயிகளின் கோரிக்கையான வரித்தொகை உயர்வை பரிசீலினை செய்யுமாறு கேட்டுக்கொண்டேன். பரம்பரையாக வாழும் விவசாய மக்களுக்கு சலுகை வழங்குவதாக கூறினார். மேலும் அவர்களின் வாரிசுகளுக்கு உரிய சான்றிதழ் வழங்கினால் புதிய வீடு, மின்சார இணைப்பு பெற தடை இல்லா சான்றிதழ் வழங்குவதாகவும் உறுதி அளித்தார். திருவாடுதுறை ஆதீன மடத்திற்கு சொந்தமான இடத்தில் அனைத்து சமுதாய மக்களும் வாழ்கின்றனர். சமய நல்லிணத்திற்கு எடுத்து காட்டாக விளங்கும் மடத்திற்கும்,, நிர்வாகிகளுக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்,” இவ்வாறு கூறினார். இச்சந்திப்பின் போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ. இப்ராஹிம் மக்கீ, தென் மண்டல முஸ்லிம் யூத் லீக் அமைப்பாளர் பாட்டப்பத்து எம்.கடாபி, செங்கோட்டை ஒன்றிய திமுக துணைச் செயலாளர் வாசுதேவன், மேக்கரை ஷாகுல் ஹமீது, ராஜா ஷெரிப், இ.யூ. முஸ்லிம் லீக் நெல்லை டவுன் பிரிமரி தலைவர் குலாம் மொய்தீன், பிரைமரி செயலாளர் கரிக்காதோப்பு சௌதுராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

முஸ்லிம்கள் எப்படி கோவில் நிலத்தைக் கேட்க முடியும்?- இந்த மோசடியில் எழும் கேள்விகள்: இப்படி துலுக்கத் தலைவர்கள், அரசியல்வாதிகள், திமுகவினர் என்று எல்லோரும், ஏதோ அவர்கள் பிரச்சினைப் போன்று, ஆதீன அலுவலத்திற்குச் சென்று பேச்சு வார்த்தைப் போன்ற மிரட்டல்களை விடுவதை கவனிக்க வேண்டும். ஏனெனில், இது ஏதோ எம்.எல்.ஏக்கு உண்டான பிரச்சினை போன்று ஜோடிக்கப் பட்டுள்ளது.

  1. மடத்திற்கு / கோவிலுக்கு சொந்தமான நிலத்திற்கு எப்படி முஸ்லிம்கள்/ துருக்கர்/ துலுக்கர் குத்தகைகாரர்களாக வர முடியும்?
  2. இந்துக்கள் குத்தகைகாரர்களாக இருந்தாலும், குத்தகை காலம் முடிந்தாலோ, குத்தகைக் காரர் இறந்தாலோ, சட்டப் படி அவ்வுரிமை போய் விடுகிறது.
  3. பரம்பரை பரம்பரையாக அடைவோலை தாரர்களாகவும், குத்தகைதாரர்களாகவும், விவசாயம் செய்தும் மற்றும் வீடுகள் அமைத்தும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பதே சட்டவிரோதமானது.
  4. வீடுகள் அமைத்தும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பது முழுவதுமான சட்டவிரோதம் மற்றும் குற்றமாகும்
  5. மேலும் அவர்களின் வாரிசுகளுக்கு உரிய சான்றிதழ் வழங்கினால் புதிய வீடு, மின்சார இணைப்பு பெற தடை இல்லா சான்றிதழ் வழங்குவதாகவும் உறுதி அளித்தார்..” என்று கூறுவது, சட்டத்தை வளைக்கும் வேலையாகும்.
  6. ஆகவே, கோவில் / மடம் இவற்றிற்கு எதிராக இவர்கள் செயல்படுகின்றனர் என்றாகிறது. அதில், துலுக்கர் நுழைவது மிகமோசமானது.
  7. மடத்திற்கு / கோவிலுக்கு சொந்தமான நிலத்தை இவ்வாறு மாற்றுவது, ஆதீனத்திற்கே கேவலமானது. இந்துக்கள் இவ்வாறு செய்வது நினைத்துப் பார்க்க முடியாதது. ஆனால், நடந்து வருகிறது.

மார்ச் 2020 – கட்டளைத் தம்பிரானாக இருந்த சுவாமிநாதன் பதவி நீக்கம் செய்யப் பட்டார்: வெள்ளை வேட்டிகளின் பிடியில் ஆதீனம் இருப்பதாக, கட்டளைத் தம்பிரானாக இருந்த சுவாமிநாதன் கருத்துத் தெரிவித்தார்[2]. திருவாவடு ஆதினத்தின் நிலங்கள் சட்டத்திற்குப் புறம்பாக, குத்தகைக்கு விட்டவர்களுக்கு விற்பதாக, பட்டா பதவி செய்து கொள்வதாக, ஏகப் பட்ட புகார்கள் எழுந்துள்ளன. அத்தகைய வழக்குகள் நீதிமன்றங்களுக்கும் சென்றுள்ளன. இந்நிலையில், கருத்து சொன்ன சுவாமிநாதன் பதவி நீக்கம் செய்யப் பட்டார்[3]. அவர் பேச்சுத் திறனற்ற ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார் என்பது தான், பதவி நீக்கம் செய்யப்பட காரணம் என்று சொல்லப் பட்டது, வியப்பாக இருந்தது. இதெல்லாமும் சரியில்லை. ஏற்கெனவே முன்பு, கொலை திட்டம் போட்ட விவகாரங்கள் எல்லாம் இருக்கின்றன. ஆகவே, முதலில் இவர்கள் ஆன்மீகத்தை விட்டு மற்ற விவகாரங்களில் ஈடுபடக் கூடாது. ஈடுபட வைப்பது, திராவிட அரசியல்வாதிகளின் தலையீடு, அவர்களைச் சார்ந்த கான்ராக்டர்களின் அடாவடித்தனம், கொள்ளையெடுக்கும் நோக்கம் முதலியன. இவற்றில் மடாதிபதிகள் ஒத்துழைப்பது தெய்வம் பொறுக்காது.

திருவாவடுதுறை ஆதீன மடத்தில் வெள்ளை வேட்டிகளின் ஆதிக்கம் உள்ளது என்ற தம்பிரான் நீக்கம்[4]: திருவாவடுதுறை ஆதீனத்துக் குச் சொந்தமான திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயிலில் கட்டளைத் தம்பிரானாக கடந்த 4 ஆண்டுகளாக இருந்த சுவாமிநாத தம்பிரான், திருவாவடு துறை ஆதீனத்தில் இருந்து விடுவிக்கப்பட்டதால், கடந்த 16-ம் தேதி செப்டம்பர் காசி யாத்திரை சென்றார். இந்நிலையில், சுவாமிநாத தம்பிரான் காசியில் இருந்து தொலைபேசி மூலம் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது[5]: “ஆன்மிக பற்றால் நான் குடும்ப உறவைத் துறந்து திருவாவடுதுறை ஆதீனத்துக்கு வந்தேன். தம்பிரானாக நியமிக்கப்பட்டேன். மகாலிங்கசுவாமி கோயில் கட்டளை தம்பிரானாக இருந்து எந்த செயலையும் ஆதீன குருமகா சந்நிதானத்தின் உத்தரவு பெற்றுத்தான் முறையாக செய்தேன். இந்நிலையில் கடந்த 15-ம் தேதி செப்டம்பர் தலைமை மடத்துக்கு வர உத்தரவு வந்தது. அதன்படி, மடத்துக்குச் சென்றபோது, குருமகாசன்னி தானம் என்னை தம்பிரான் பொறுப்பில் இருந்து விடுவிப்பதாக கூறினர். அதை குருவின் உத்தரவாக எண்ணி ஏற்றுக்கொண்டேன். அப்போது, எனக்கு உடல்நிலை சரியில்லை. எனவே, தம்பிரான் பொறுப்பில் இருந்து விலகுவதாக கடிதம் எழுதித் தந்தேன். நான் ஆன்மிகம், ஆதீன சம்பிரதாயத்துக்கு புறம்பாக என்றும் நடந்து கொண்டதில்லை. என்னை விடுவித்த விதம் தான் சற்று மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது. மடத்தில் உள்ள ஒருசிலவெள்ளை வேட்டிகளின் ஆதிக்கம்தான் அதற்கு காரணம். நான் மீண்டும் திருவாவடுதுறை ஆதீனம் தம்பிரான் என்று கூறி உரிமை கோர மாட்டேன். யாருக்கும் எவ்வித அச்சமும் வேண்டாம். வெள்ளை உடையுடன் காசிக்கு வந்த நான் கங்கையில் புனிதநீராடி மீண்டும் காவி உடையை அணிந்து கொண்டேன். நான் தொடர்ந்து சந்நியாச வாழ்க்கையைத்தான் வாழ்வேன்.சுவாமிநாத பரதேசியாக பல்வேறு தலங்களுக்கு யாத்திரை செல்கிறேன். பரதேசி என்பவர் யாசித்து வாழ்பவர். யாருக்கும் கட்டுப்பட்டவர் அல்ல,” என்றார்.

© வேதபிரகாஷ்

28-10-2020


[1] மணிச்சுடர், திருவாடுதுறை ஆதீன மேலாளருடன் கே..எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல். சந்திப்பு, 27/28 அக்டோபர் 2020.

[2] விகடன், சூழ்நிலைக்கைதியாக ஆதீனகர்த்தர்சொத்துகளை அபகரிக்க முயற்சி, மு.இராகவன்பா; பிரசன்ன வெங்கடேஷ், Published: 28 Mar 2020 5 AM; Updated: 28 Mar 2020 5 AM.

[3] https://www.vikatan.com/spiritual/news/thiruvavaduthurai-adheenam-issue-april-01-2020

[4] இந்து.தமிழ், திருவாவடுதுறை ஆதீன மடத்தில் வெள்ளை வேட்டிகள் ஆதிக்கம்: காசி யாத்திரை சென்ற சுவாமிநாதன் தகவல், Published : 19 Sep 2019 10:13 AM; Last Updated : 19 Sep 2019 10:13 AM.

[5] https://www.hindutamil.in/news/tamilnadu/516268-swaminathan-interview-about-aathinam.html

முறைகேடாக குத்தகைக்கு விடப்பட்ட கோவில் நிலங்கள் கையகப்படுத்தப்படும்!

செப்ரெம்பர்1, 2011

முறைகேடாக குத்தகைக்கு விடப்பட்ட கோவில் நிலங்கள் கையகப்படுத்தப்படும்!

 சட்டசபையில் வழக்கமாக நடக்கும் விவாதம்: திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்ததும், இதைப் பற்றி “மாற்றித்தான் யோசிப்பார்கள்”, ஏனெனில் அவர்களுக்கும் பங்கு வேண்டுமே என்ற எண்ணத்தில்தானெயொழிய, உண்மையில் ஆண்டவனுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல. புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள சட்டசபை உறுப்பினர்கள் பேசியுள்ள விதத்திலிருந்தே அதனை அறிந்து கொள்ளலாம். கோவில் நிலம் என்ரு ஆரம்பித்து, சுற்றுலா என்று சென்று, அதில் எப்படி சம்பாதிக்கலாம் என்ற எண்னத்துடன் தான் விவாதம் உள்ளதே  தவிர, கோவில் நிலங்களை மீட்டு, அவை எதற்காக பக்தர்களால் தானமாகக் கொடுக்கப்படது என்று பார்த்து அத்ற்கேற்ற முறையில் செயல்படவேண்டும் என்ற நினைப்பு கொஞ்சம் கூட இல்லை எனலாம். “கடந்த ஆட்சியில் முறைகேடாக குத்தகைக்கு விடப்பட்ட கோவில் நிலங்களை கையகப்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்,” என்று அறநிலையத் துறை அமைச்சர் சண்முகநாதன் தெரிவித்தார்[1].

சட்டசபையில் நேற்று முன்தினம் நடந்த விவாதம்:

கோவிலிலிருந்து ஆரம்பித்து நீலகிரி சென்ற தேமுதிக உறுப்பினர்: உதாரணத்திற்கு தினமலரில் வந்துள்ளபடி, சிலருடைய பேச்சுகளை எடுத்துக் கொள்ளலாம்.

சம்பத்குமார் – தே.மு.தி.க: தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களை மண்டலங்களாக பிரித்து, பக்தர்கள் சிரமமின்றி சுற்றிப் பார்க்க பஸ் வசதி செய்ய வேண்டும். ஒரே நாளில் அப்பகுதியில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் சென்று வரும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்[2]. நீலகிரியில் ஹெலிகாப்டர் மூலம் சுற்றிப் பார்க்கவும், கேபிள் கார் வசதியும் செய்ய வேண்டும். நீலகிரியில் மலைரயில் அடிக்கடி பழுது ஏற்பட்டு, நடுக்காட்டில் நின்று விடுகிறது. இதனால், வெளிநாட்டு பயணிகள், நம் தமிழகத்தின் நிலையை பற்றி தவறாக பேசுவர்[3].

அமைச்சர் கோகுல இந்திரா: மலை ரயில், மத்திய அரசின் ரயில்வே துறையால் இயக்கப்படுவது. எனினும், இதுபற்றி முதல்வரின் அனுமதியோடு, ரயிலை சீரமைக்கும்படி மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்[4]. கேபிள் கார் வசதியை பொறுத்தவரை, அதற்கான முயற்சி அல்லது ஆய்வு செய்யும் போது, அவை வனப்பகுதியில் உள்ள இடங்களாக உள்ளன. அவற்றை கேட்டு மத்திய அரசிடம் அனுமதி பெற நீண்டகாலமாகிறது.

அன்னதானத்திலிருந்து திரைப்பட மான்யத்திற்கு சென்ற அதிமுக உறுப்பினர்: கிருஷ்ணமூர்த்தி – அ.தி.மு.க: இந்த சட்டசபையில், நிதி அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம், 95 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்துவிட்டு, முயன்று முயன்று பார்த்தேன் சதம் போட முடியவில்லை என்றார். ஆனால், இன்று ஒரு லட்சத்து 18 ஆயிரம் கோடிக்கு போட்டுள்ள பட்ஜெட்டில் உள்ள திட்டங்களை பார்த்து, இந்திய துணைக் கண்டமே மலைத்துப் போய் இருக்கிறது[5]. பெண்கள் முன்னேற்றத்துக்காக எடுக்கப்படும் படங்களுக்கு சிறப்பு மானியம் வழங்க வேண்டும்[6]. அன்னதான திட்டத்தை மீண்டும் புதுப்பொலிவோடு, புத்துணர்வுடன் செயல்படுத்த உத்தரவிட வேண்டும்.

கோவில் நிலத்தில் பல ஆண்டுகளாக வாழ்ந்தவர்களது இடத்தை அவர்களுக்கே சொந்தமாக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும்: அதாவது, அப்படி ஆக்கிரமித்துக் கொண்டால், சில காலத்தில் அந்நிலத்தை சட்டப்படி அபேஸ் செய்துவிடலாம் என்று சொல்லிக் கொடுக்கிறார். இதில் கம்யூனிஸ்ட்டுகள் மிகவும் வல்லவர்கள் தாம்.

உலகநாதன் – இந்திய கம்யூனிஸ்ட்: கோவில் நிலத்தில் வாடகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக வாழ்ந்தவர்களது இடத்தை அவர்களுக்கே சொந்தமாக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும்[7]. கோவில் நிலங்களில் குடியிருப்போரை வெளியேற்ற பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்படுகிறது[8].

அமைச்சர் சண்முகநாதன்: யார் யார் எந்தெந்த இடத்தில் குடியிருக்கின்றனர் என்று கண்டறிந்து, அவற்றை வரன்முறை செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

செஞ்சி கோதண்டராமர் கோவில் ஞாபகம் வரவில்லை[9] ஆனால் கோட்டையைப் பற்றி பேசும் தேதிமுக உறுப்பினர்: பாவம், தேதிமுக உறுப்பினர், அவரே பேசினாரா அல்லது வேறு யாராவது அவ்வாறு பேசச் சொன்னார்களா என்று தெரியவில்லை. முதலில் கோட்டையைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை அவர் விரட்டியடித்து நிலத்தை மீட்பாரா? இந்திய தொல்துறை அறிப்புப் பலகைகளையும் மதிக்காமல் ஆக்கிரமிப்பு செய்துள்ளனரே அது ஏன் அவருடைய கண்களுக்குத் தெரியவில்லை அல்லது யாரும் சொல்லவில்லை?

சுரேஷ் குமார் – தே.மு.தி.க: சாத்தனூர் அணை பராமரிப்பின்றி உள்ளது. செஞ்சிக்கோட்டைக்கு, மாநில அரசு மூலம் அடிப்படை வசதிகள் செய்து, அதிகளவு சுற்றுலா பயணிகள் வரும் வகையில் மேம்படுத்த வேண்டும். கடந்த ஆட்சியில், சுற்றுலா பகுதிகளில் வாகன நிறுத்துமிடங்களுக்கு ஏலம் விடப்பட்டது. வாகனம் நிறுத்த அதிக கட்டணம் வசூலித்ததால், சுற்றுலா பயணிகளுக்கும், குத்தகைக்காரர்களுக்கும் இடையே பிரச்னைகள் ஏற்பட்டன. இதனால், பயணிகள் வரவே தயங்கினர். நியாயமான கட்டணம் வசூலிக்க வேண்டும். திருச்செந்தூர் கோவில் பணிகளில் வேகமில்லை.

அமைச்சர் சண்முகநாதன்: திருசெந்தூர் கோவிலில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் ஜெயலலிதா பணிகளை துவக்கினார். ஆனால், இதுவரை முடிக்காமல், கடந்த ஆட்சியில் இழுத்தடித்தனர். தற்போது பணிகளை துரிதப்படுத்தியதால், முடியும் நிலையில் உள்ளது. அனைத்து கோவில்களுக்கும் குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.

குத்தகைப் பற்றியுள்ள வேகம், கோவில் ஆக்கிரமிப்பில் இல்லாதது தெரிகிறது: சுரேஷ் குமார்: எங்களது தொகுதியில் கோவில் நிலம் ஒன்று, தனி நபருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. அவர் தனது சொந்த நிலம் போல, வணிக வளாகங்கள் கட்டி, கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார். கோவில் கோபுரத்தை விட, அவரது கட்டடம் உயரமாக உள்ளது.

அமைச்சர் சண்முகநாதன்: கடந்த ஆட்சியில் கோவில் நிலங்கள் தவறான வழியில் குத்தகைக்கு விடப்பட்டிருந்தால், அவற்றை கையகப்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்[10]. சில நிலங்களின் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவ்வாறு விவாதம் நடந்தது.

“மீண்டும் நான் வெற்றிபெற்றால் கோவில் நிலங்களில் குடியிருப்பவர்கள் அனைவருக்கும் பட்டா வழங்குவேன்”: தமிழகத்து நாத்திக அமைச்சர் பகுத்தறிவோடு பேசியது, “மீண்டும் நான் வெற்றிபெற்றால் கோவில் நிலங்களில் குடியிருப்பவர்கள் அனைவருக்கும் பட்டா வழங்குவேன்”, என்று திருவொற்றியூர் தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் கே.பி.பி.சாமி மார்ச் மாதம் திருவொற்றியூர் பஸ்நிலையம், ஜீவன்லால் நகர், மாணிக்கம் நகர், திரு நகர், பாரதி நகர் மற்றும் வடிவுடையம்மன் கோவில் சன்னதி தெருக்களில் தெருதெருவாக சென்று வாக்கு சேகரிக்கச் சென்றபோது வாக்களித்தார்[11]. ஆறு மாதங்கள் ஆகின்றன, அந்த பழமை வாய்ந்த திருவொற்றியூர் மக்கள் மற்ரும் தமிழக மக்கள், ஏன் இந்தியர்கள் இதை ஞாபகத்தில் வைத்திருக்கிறார்களா? செக்யூலரிஸத்துடன், “சர்ச்-மசூதி நிலங்களில் குடியிருப்பவர்கள் அனைவருக்கும் பட்டா வழங்குவேன்”, என்று பேசவில்லையே? ஆமாம், கோவில் நிலங்களில் கிருத்துவர்களும், முஸ்லீம்களே ஆக்கிரமித்துக் கொண்டு, வாங்கவும் செய்கிறார்களே?

திராவிடக் கட்சிகள் நாத்திகத்தைக் கடைப்பிடிப்பதால் கோவில் நிர்வாகம் செய்ய அவர்களுக்கு அருஜதை இல்லை: முதலில் இதை தமிழக ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும். குங்குமம்-விபூதி வைத்துக் கொண்டே அல்லது இல்லாமலேயோ நாத்திகம், பகுத்தறிவு, பெரியாரிஸம் பேசுபவர்கள் கோவில்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது என்பது கடந்த 60 ஆண்டு நாத்திக ஆட்சி தெள்ளத்தெளிவாக மெய்ப்பித்து விட்டது. ஆகவே, அவர்கள், உடனடியாக விலகி நிற்க்க வேண்டும், இல்லையென்றால் இருக்கின்ற  கோவில்களும் உருப்படாமல் போய் விடும். திருமூலர் சொன்னது நடந்து விடும்.

திராவிட கட்சிகள் பலவழிகளில் கோவில் நிலங்களைக் கொள்ளையடித்து வருகின்றன.

  1. இந்து அறநிலையத்துறைக்குப் பிறகு குடிசை மாற்றுவாரியம் மூலம்[12] கோவில் நிலங்களை ஆக்கிரமிக்க முயலும் நாத்திக அரசு!
  1. இப்பொழுதுள்ள ஆட்சியிலும் கொள்ளை தொடர்கிறது[13]. அதன் மர்மங்களை யார் விலக்குவார்கள் / விளக்குவார்கள்?
  1. மிரட்டப்படும் மடாதிபதிகள் – அதன் மூலம் அவர்களது / மடங்களது நிலம் அபகரிக்கப் படுவது[14].
  1. இந்து அறநிலையத் துறையே கோவில் நிலங்களைக் கொள்ளையடிப்பது[15].
  1. அறநிலைய மந்திரி ஒத்துப் போவது[16].

இப்படி அடுக்குக் கொண்டு போகலாம். அவர்கள் மாறா விட்டால் மக்கள் மாற்ற வேண்டும், மக்களும் அவர்களோடு ஒத்துழைத்தல் மக்களைத்தான் மாற்ற வேண்டும் அல்லது அவர்கள் தம்மையே மாற்றிக் கொள்ள வேண்டும், இல்லையென்றால், மாலிக்காபூர்,-ஔரங்கசீப் போன்று இவர்களே இருக்கின்ற கோவில்களை இடித்து விடலாம், ஒரேயடியாக பிரச்சினைகள் தீர்ந்து விடும்.

வேதபிரகாஷ்

01-09-2011


[1] தினமலர், முறைகேடாக குத்தகைக்கு விடப்பட்ட கோவில் நிலங்கள் கையகப்படுத்தப்படும், http://www.dinamalar.com/News_Detail.asp?Id=304950

[2] அதாவது “பிக்னிக்” ஏற்பாடு செய்ய பேசுகிறாரே தவிர, கோவிலைப் பற்றி பேசுவதாகத் தெரியவில்லை. அப்படி செய்தால், கோவில்கள் எப்பொழுதுமே திறந்து வைத்திருப்பார்களா அல்லது அதே மாதிரி ஆகம முறைகளை மீறி செயல்படுவர்களா?

[3] கோவில்களை சீரழிக்கின்றனரே, அதைப் பற்றி வெளிநாட்டவர் கவலைப் படமாட்டார்கல் போலும். கோவில் சிலைகளை, விக்கிரங்களை வெளிநாட்டவர்களுக்கு விற்க்கின்ரனரே, அதற்கு தமிழர்கள் வெட்கப்படவில்லையே?

[4] ஆமாம், இதுவும் தூக்குத் தண்டனை விவாதம் போல ஆகிவிட்டது.

[5] நக்கல் அடிக்கிறாரா இல்லை பெருமை பேசுகிறாரா என்று தெரியவில்லை, அம்மாவிற்குத் தெரிந்தால், அதோகதிதான்!

[6] அதென்ன அப்படி “பெண்கள் முன்னேற்றத்தை”ப் பற்றி இப்படி கவலை படுகிறார் என்று தெரியவில்லை. சினிமா எடுப்பதினால், பல பெண்களின் கற்பு தான் விலைபோகிறது, சமுதாயம் சீரழிகிறது. அதைத் தெரிந்தும் தெரியாதது போல பேசியுள்ளது வேடிக்கைத்தான்! ஒருவேளை, இவரே படங்களை எடுப்பார் போலும்!

[7] சேர-சோழ-பாண்டியர்கள் எல்கோரையும் வென்று விடுவார்கள் இவர்கள். அயல்நாட்டு சித்தாந்த்தை வைத்துக் கொண்டு செயல்படும், இவர்களது தாய்ப்பாற்றே வினோதமானது தான். ஆகையால் தான் இப்படி தாறுமாறாக பேசுகிறார் போலும்!

[8] அதாவது அவ்வாறு செய்யாதே, அவர்களுக்கே பட்டா போட்டுக் கொடுத்து விடு என்கிறார், தாராளப் பிரபு!

[9] https://atheismtemples.wordpress.com/2011/08/20/gingee-kothandaramar-temple-liberated-from-the-christians/

https://atheismtemples.wordpress.com/2011/08/21/gingee-temple-liberated-duties-of-hindus/

http://christianityindia.wordpress.com/2010/05/19/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-https://atheismtemples.wordpress.com/2010/02/08/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/

http://christianityindia.wordpress.com/2010/02/03/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%8A/

[10] இவர் என்ன செய்யப்போகிறார் என்று ஒன்றும் சொல்லவில்லை. தலையாட்டி அமைச்சர்கள் இப்படியிருந்தால், என்ன வேலை நடக்கும்?

[15] திராவிட ஆட்சியில் அவர்களுக்கு இதெல்லாம் கைவந்த கலை – “இந்து” அறநிலைத்துறையே அத்தகைய அநியாயத்தைச் செய்துள்ளது: இதோ இங்கு படிக்கவும்:

http://vedaprakash.indiainteracts.in/2008/08/27/tenants-of-mutt-and-temple-lands-seek-ownership-rights-the-tn-government-scam-to-grab-the-temple-lands/

இவ்வாறு விற்பது, சங்கம் உருவாக்குவது, கோர்ட்டுக்குச் செல்வது, இடைக்காலத் தடை வாங்குவது, காலம் கடத்துவது, அதற்குள் கட்டிடங்கள் கட்டி அனுபவிப்பது….இருக்கும் அதிகார வர்க்கமெல்லாம் நாத்திகவாதிகள்தாமே? எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை!

மதுரை ஆதீனத்திடம் தகராறு செய்ததாக 3 பேர் கைது!

மே26, 2010
மதுரை ஆதீனத்திடம் தகராறு செய்ததாக 3 பேர் கைது
First Published : 26 May 2010 03:16:39 AM IST
Last Updated : 26 May 2010 05:59:31 AM IST
கும்பகோணம், மே 25, 2010: ஆயுதங்களுடன் வந்து, மதுரை ஆதீனத்திடம் தகராறு செய்ததாக 3 பேரை போலீஸôர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். மதுரை ஆதீனத்திற்கு உள்பட்ட கும்பகோணம் அருகே உள்ள கஞ்சனூர் சுக்கிரன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய மதுரை ஆதீனம் அருணகிரி ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் அவரது மேலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை வந்தனர். அவர்கள் தரிசனம் முடித்துவிட்டு ஆதீனத்திற்குச் சொந்தமான தங்கும் விடுதியில் தங்கியிருந்தனர்.
மரியாதை இல்லாமல் ஆதீனத்திடம் தகராறு: அப்போது கஞ்சனூரைச் சேர்ந்த மோகன், ரமேஷ், கார்த்திக் உள்ளிட்ட 10 பேர் ஆயுதங்களுடன் வந்து ஆதீனத்திடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. மடாதிபதிகள் நாத்திக அரசியல்வாதிகளுடன் கொஞ்சிக் குலாவுவதால், மக்களுக்கு மரியாதை குறைந்து விடுகிறது. இதனால், அண்ட வந்தவர்கள் எல்லாம், மடாதிபதிகளையே இப்படி மிரட்டும் அளவுற்கு வந்து விட்டனர். இதுகுறித்து திருப்பனந்தாள் போலீஸார் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்து விசாரித்தனர்.
கோவில் சொத்தை அபகரிப்பது என்பது தான் நோக்கம்: விசாரணையில் அந்த மூவரும் கோயிலுக்குச் சொந்தமான வாழைத் தோப்பை பராமரித்து வருவதாகவும், அந்த இடத்தில் திருமண மண்டபம் கட்ட அனுமதிக்குமாறும் கேட்டிருந்தனராம். அதற்கு கோயிலுக்கு கட்ட வேண்டிய தொகையைக் கட்டுமாறு கோயில் நிர்வாகம் கூறியதாம். மேலும், அந்த இடத்தின் உரிமத்தை அவர்கள் மூவர் பெயருக்கும் மாற்றித் தரவும் கோயில் நிர்வாகம் மறுத்ததால், ஆதீனத்திடம் அவர்கள் தகராறு செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
முஸ்லீம்கள் மிரட்டியது: இதே மாதிரி முஸ்லீம்கள் வேறு விசயமாக மிரட்டிச் சென்றுள்ளது நினைவிருக்கலாம். தேவையேயில்லாமல், முஸ்லீம்கள் முன்னம், நபி பற்றி பிரச்சினை செய்தனர். இந்த ஆதினத்தை மிரட்டினர். ஆனால், இன்று நபி பெயராலேயே மசூதிகள் இடிக்கப் படும்போது, முஸ்லீம்கள் கொல்லப் படும் போது, அதே முஸ்லீம்கள் மௌனிகளாக இருக்கின்றனர்!
யார் இவர்களுக்கு இத்தகைய தைரியத்தைக் கொடுப்பது? இப்படி ஆதினத்தையே எதிர்த்து, மிரட்டும் அளவிற்கு எப்படி குத்தகைக் காரர்களுக்கு தைரியம் வரும்? நாத்திகம் மக்களின் அறிவை மழுங்க வைத்து விட்டது. நாத்திகர்களான கருணாநிதி ஆட்சி செய்து கொண்டு இந்துக்கள் (திருடர்கள், பர   தேசிகள் என்று பேசுவது), கோவில்கள், சம்பிரதாயங்கள்……………முதலியவற்றை கேலி செய்தும் (அதுவும் துலுக்கன் கஞ்சி குடித்துக் கொண்டு அவதூறு பேசுவது), கோவில்கள்-மண்டபங்கள் முதலியவற்றை இடிக்கச் செய்தும், கோவில் நிலங்களை விற்றும்……………….இத்தகைய அடாவடித்தனமான, திருமூலருக்கு எதிராக, திருவள்ளுவருக்கு விரோதமாக……………..குரூரக்கொடிய காரியங்களை செய்து வரும் போது, “தமிழர்கள்” கண்ணிருந்தும் குருடர்களாக, காதிருந்தும் செவிடர்களாக, வாயிருந்தும் ஊமைகளாக, கை-கால்கள் இருந்தும் முடவர்களாக இருந்து வருகின்றனர். போலீஸார் புகார்களை பதிவு செய்வதில்லை, உள்ள வழக்குகளை விசாரிப்பதில்லை;  நீதிபதிகளோ தூங்குகின்றனர்; அந்நிலையில் தான், முஸ்லீம்கள், கிருத்துவர்கள், நாத்திகர்கள் மற்றும் இந்த போர்வையில் உள்ள எல்லா இந்து-இந்திய விரோதிகள் செயல்படுகின்றனர்.