Archive for the ‘ஆனித்திருமஞ்சன விழா’ Category

தில்லை நடராஜர் கோவில் கனக சபை நுழைவு போராட்டம், போலீஸார் குவிப்பு, பூணூல் அறுப்பு–கோவில் கையகப்படுத்த முடிவு முதலியன (2)

ஜூலை4, 2023

தில்லை நடராஜர் கோவில் கனக சபை நுழைவு போராட்டம், போலீஸார் குவிப்பு, பூணூல் அறுப்பு கோவில் கையகப் படுத்த முடிவு முதலியன (2)

தில்லைகாளி கோவில் செயல் அலுவலர் சரண்யா வாதத்தில் ஈடுபட்டது; சிதம்பரம்-கனகசபையில் ஏறி சுவாமி தரிசனம் செய்யும் பிரச்னையில், இரு கோஷ்டியினர் போராட்டம் நடத்தியதால், சிதம்பரம் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பக்தர்கள் புகாரின் பேரில், 25ம் தேதி அறிவிப்பு பலகையை அகற்ற சென்ற தில்லைகாளி கோவில் செயல் அலுவலர் சரண்யாவிடம், தீட்சிதர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தடுத்து நிறுத்தினர். இந்த பெண் அதிகாரியும் திட்டமிட்டு பிரச்சினை பெரிதாக்க, தீக்ஷிதர்களுடன் வாதம் புரிவது ஈடியோ மூலம் தெரிகிறது. ஆனி மஞ்சன விழா நேரத்தில் அமைதியாக, கோவில் இருக்க வேண்டிய நிலையில் இவ்வாறாக, அமைதி குலைந்து, கோவிலில் ஏதோ நடந்து விட்டது போல கூச்சல், குழப்பம், போலீஸார் குவிப்பு என்றிருந்தால், பக்தர்கள் எப்படி மன-அமைதியுடம் சாமி தரிசனம் செய்ய முடியும். சிறுவர் முதலியோர் அச்சப்படவும் நீரிடும். அதனை தொடர்ந்து 26ம் தேதி மாலை தரிசன விழா முடிந்த பின், 100க் கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் அறநிலையத்துறையினர் அதிரடியாக கோவிலுக்குள் சென்று, நடராஜர் சன்னதியில் மாட்டப்படிருந்த அறிவிப்பு பலகையை அகற்றினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கனக சபையுள் நுழைய போராட்டம்: அறநிலையத்துறை துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் கோவில் பொது தீட்சிதர்களிடம் பக்தர்களை கனகசபையில் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். தீட்சிதர்கள் அதனை ஏற்காமல், நடராஜ சன்னதியின் உள்ள இரண்டு நுழைவு வாயிலையும் மூடினர். இந்நிலையில், கனகசபையில் ஏறி நின்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வேண்டி போலீசில் புகார் அளித்த ராதாகிருஷ்ணன் தலைமையில், 15க்கும் மேற்பட்டோர் நடை கதவை திறக்க கோரி கனகசபை வாயிற்படியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த பா.ஜ.,வினர் மாவட்ட தலைவர் மருதை தலைமையில் கோவிலுக்குள் வந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், எல்லோருமே இந்துக்கள் என்றால், அவர்களே பேசி, பிரச்சினையைத் தீர்த்துக் கொண்டிருக்கலாம். இருப்பினும், கனக சபைக்கு செல்வது குறித்து கோவிலுக்குள்ளேயே போராட்டம் நடத்துவது, அமைதி குலைப்பதாகத் தான் இருந்தது.,

இன்னொரு கதவு வழியாக உள்ளே நுழைதல்: பக்தர்கள் ஏறி செல்லும் படி அருகே போராட்டம் நடந்து கொண்டிருந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், திடீரென மற்றொரு கதவு மூலமாக அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட பக்தர்கள் அதிரடியாக கனகசபை மீது ஏறி சென்று, நடராஜரை தரிசனம் செய்தனர்[1]. இச்சம்பவத்தால் கோவில் வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்[2]. இது குறித்து நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செயலாளர் சிவராமன் தீட்சிதர் மற்றும் கோவில் வழக்கறிஞர் சந்திரசேகர் கூறியதாவது: .நடராஜர் சன்னதியின் கீழ் பக்கம் உள்ள நுழைவு வாயிலின் ஆறு கால பூஜையின் போது நடக்கும் அபிஷேகத்தை பார்க்கும் இடத்தில் உள்ள கதவை திறந்து கொண்டு, அறநிலைய துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பத்துக்கும் மேற்பட்டோர் நேற்று அதிரடியாக நுழைந்தனர்.

கணேச தீக்ஷிதர் தாக்கப் படுதல்: பூஜை செய்து கொண்டிருந்த கற்பக கணேச தீட்சிதரை அவரது வேட்டி, பூணூல் கீழே விழும் வகையில் தள்ளி விட்டு சாமி தரிசனம் செய்து விட்டு சென்று விட்டனர். பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீசாரே இது போல் செய்தால் நாங்கள் எங்கே போய் முறையிடுவது. தமிழக முதல்வர், அத்து மீறி செயல்பட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இனி வரும் காலங்களில் நடராஜர் கோவிலில் நடக்கும் முக்கிய விழாக்களுக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு கேட்பது என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். இது குறித்து நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செயலாளர் சிவராமன் தீட்சதர் மற்றும் கோவில் வழக்கறிஞர் சந்திரசேகர் கூறியதாவது: நடராஜர் சன்னதியின் கீழ் பக்கம் உள்ள நுழைவு வாயிலின் ஆறு கால பூஜையின் போது நடக்கும் அபிஷேகத்தை பார்க்கும் இடத்தில் உள்ள கதவை திறந்து கொண்டு, அறநிலைய துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பத்துக்கும் மேற்பட்டோர் நேற்று அதிரடியாக நுழைந்தனர். பூஜை செய்து கொண்டிருந்த கற்பக கணேச தீட்சதரை தள்ளிவிட்டு அவரது வேஷ்டி, பூணூல் கீழே விழும் வகையில் தள்ளி விட்டு சாமி தரிசனம் செய்து விட்டு சென்று விட்டனர். பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீசாரே இது போல் செய்தால் நாங்கள் எங்கே போய் முறையிடுவது. தமிழக முதல்வர் அத்துமீறி செயல்பட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வரும் காலங்களில் நடராஜர் கோவிலில் நடக்கும் முக்கிய விழாக்களுக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு கேட்பது என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் மறுத்தது: இதற்கு மறுப்பு தெரிவித்த இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள், “தமிழ்நாடு அரசின் அரசாணையை நிறைவேற்றும் வகையில், இந்து சமய அறநிலைத்துறை அலுவலர்கள் அமைதியான முறையில் கனகசபையில் ஏறி வழிபாடு செய்துவிட்டு உடனே கீழே இறங்கிவிட்டனர்[3]. அப்போது தீட்சிதர்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் கூச்சலில் ஈடுபட்டு, வாக்குவாதம் செய்தனர்[4]. காவல் துறையினர் மற்றும் அறநிலையத் துறையினரின் விரல் கூட தீட்சிதர்கள் மீது படவில்லை. அவர்கள் கூறுவது தவறானது[5]. தீட்சிதரை தள்ளிவிட்ட காட்சிகள் இருந்தால் அதனை வெளியிட வேண்டும். சம்பந்தப்பட்ட தீட்சிதர் அமர்ந்த இடத்தில் வீடியோ பதிவுகள் உள்ளன.‘கனகசபையில் தீட்சிதர்கள் அல்லாதவர்கள் ஏறக்கூடாதுஎன்று அவர்கள் தரப்பில் கூறப்பட்ட நிலையில், போலீஸாரும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் ஏறி வழிபட்டதால், தீட்டு என கருதி[6], அந்த தீட்சிதர் அணிந்திருந்த உடைகளை மாற்றிவிட்டு, புது துணியை போட்டுக் கொண்டு, மீண்டும் அவர் நல்ல நிலையில் பூஜைக்கு சென்றுவிட்டார் என்பதுதான் உண்மை,” என்று கூறினர்[7].

ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு கோயிலை இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்: முன்னதாக சிதம்பரம் கோயில் விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, “சிதம்பரம் கோயிலை தீட்சிதர்கள் தங்கள் சொந்த நிறுவனமாக நினைக்கின்றனர். ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு கோயிலை இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார். “ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு கோயிலை இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்,” என்பதிலும் ஏதோ பொடி வைத்துப் பேசியுள்ளது தெரிகிறது, என்ன ஆவணங்கள் தயாரிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. ஆக இவர் எப்படி கோவிலை கையகப் படுத்தாலாம் என்ற எண்ணத்திலேயே இருப்பதாகத் தெரிகிறது. மற்ற விவரங்களைப் பற்றி கண்டுகொள்ளாதது கவனிக்கத் தக்கது.

© வேதபிரகாஷ்

04-07-2023


[1] தினமலர், சிதம்பரம் நடராஜர் கோவிலில் இரு கோஷ்டி போராட்டத்தால் பரபரப்பு,பதிவு செய்த நாள்: ஜூன் 28,2023 04:02; https://m.dinamalar.com/detail.php?id=3360242

[2] https://m.dinamalar.com/detail.php?id=3360242

[3] https://tamil.asianetnews.com/tamilnadu-cuddalore/chidambaram-nataraja-temple-deekshithar-attack-poonal-is-cut-rx02m2

[4] சிதம்பரம் கனகசபை விவகாரம்: தீட்சிதரின் பூணூல் அறுப்பு? அறநிலையத் துறை மறுப்பு, Written by WebDesk, June 29, 2023 09:40 IST.

[5] https://tamil.indianexpress.com/tamilnadu/chidambaram-dikshitharas-accused-officials-allegadely-cutting-poonool-sacred-threat-709568/

[6] விகடன், கனகசபை விவகாரம்: மறுக்கும் சிதம்பரம் தீட்சிதர்கள்அரசுநிதானம்காட்டுகிறதா?!, லெ. ராம்சங்கர், Published:26 Jun 2023 4 PMUpdated:26 Jun 2023 4 PM

[7] https://www.vikatan.com/government-and-politics/governance/chidambaram-temple-issue-why-government-is-showing-restraint

தில்லை நடராஜர் கோவில் கனக சபை நுழைவு போராட்டம், போலீஸார் குவிப்பு, பூணூல் அறுப்பு முதலியன (1)

ஜூலை4, 2023

தில்லை நடராஜர் கோவில் கனக சபை நுழைவு போராட்டம், போலீஸார் குவிப்பு, பூணூல் அறுப்பு முதலியன (1)

ஜூன் 24 முதல் 27 வரை அனுமதி இல்லை என்றது: சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது[1]. சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன விழாவையொட்டி,  ஜூன் 24, 25, 26, 27 ஆகிய நாள்களில் கனகசபை மண்டபத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என கோயில் தீட்சிதர்கள் பதாகை வைத்தனர்[2]. ஆனால், அறநிலையத்துறை பெண் அதிகாரி தீக்ஷிதர்களுடன் வாதிக்கும் வீடியோ ஊடகங்களில் காண்பிக்கப் பட்டது. சுற்றிலும் போலீசார் பலர் இருந்தனர். இத்தகைய சாதாரண தரிசன விசயங்களுக்கு இத்தனை போலீஸார் ஏன் என்று தெரியவில்லை. 24-06-2023 அன்றே,  வாதிக்கும் பொழுதே, ஒருவர், சட்டை இல்லாமல், மேலே ஏறி, அப்பலகையை எடுத்து விட்டார், பிறகு, போலீஸார் துணையும் அது எடுத்துச் செல்லப் பட்டது. அதை அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்றியதால் பிரச்சினை எழுந்தது. இந்நிலையில், கனக சபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கி கடந்த 2022 மே 17 என்றுதமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

17-05-2023 அரசாணை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது: இந்நிலையில் இந்த அரசாணையை எதிர்த்து சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ‘‘சிதம்பரம் கோயிலில் உள்ள கனகசபையில் 7 முதல் 10 பேர் வரை மட்டுமே தரிசனம் செய்யமுடியும். ஆனால் தினமும் ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனத்துக்காக கோயிலுக்கு வரும் சூழலில் 300 முதல் 500 பேரை மட்டும் கனகசபையில் தரிசனம் மேற்கொள்ள அனுமதித்தால் அது பாரபட்சம் பார்ப்பது போலாகிவிடும். கோயிலில் அன்றாடம் நடைபெறும் கால பூஜைகள், அபிஷேகங்கள் கனகசபையில் நடைபெறும் சூழலில் பக்தர்களை தரிசனத்துக்காக அனுமதித்தால் வழிபாட்டு நடைமுறைகள் பாதிக்கப்படும். எனவே தமிழக அரசின் அரசாணை உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணாக உள்ளது. கோயில் வழிபாட்டு முறைகளில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை. எனவே இந்த அரசாணை சட்டவிரோதமானது என்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டும்,” என அதில் கோரியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

26-06-2023 திங்கட்கிழமைசரண்யா கொடுத்த புகார்: கோவிலில், அதிலும், விஷேசமான நாட்களில் எதற்க்கா பிரச்சினை என்று இத்தனை போலீசார் கோவிலில் நுழைவது, இருப்பது, நிச்சயமாக பக்தர்களுக்கு சங்கடமாக, தொந்தரவாக, திகைப்பாகத்தான் இருக்கும். ஏதோ குற்றம் நடந்தது போல போலீசார் குவிக்கப் பட்டிருப்பது, கோவில் ஆன்மீக நிலையினையே பாதிக்கும் முறைக்கு கொண்டு சென்றுள்ளது. 26-06-2023 திங்கட்கிழமை – சரண்யா கொடுத்த புகாரின் பேரில் 11 தீக்ஷிதர்களின் மீது போலீஸார் வழக்குத் தொடுத்துள்ளனர்[3]. இதற்கு மட்டும் போலீஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்தது போலும். தீக்ஷிதர்கள் அவரை தொந்தரவு செய்தனர் என்று புகார் கொடுத்துள்ளார். 19-06-2023 முதல் கனகசபையில் தரிசனம் அனுமதிக்கப் பட்டு வந்தது. 24-27 தேதிகளில் கூட்டம் அதிகம் என்பதனால் தடுக்கப் பட்டது. இதனை பிரச்சினை ஆக்கியிருக்கிறார்கள். 27-06-2023 செவ்வாய்கிழமை ஆனித்திருமஞ்சனம் பலகை எடுத்த பிறகு, படிகளில் பெண் போலீஸார் பலர் வேக-வேகமாக படிகட்டுகள் ஏறிச் செல்வது போன்று வீடியோ காட்டப் பட்டன. பிறகு அவர்கள் இறங்குவதும் தெரிந்தது. பிறகு என நடந்தது என்று தெரியவில்லை. பலகை எடுத்த பிறகு எத்தனை பேர் தரிசனத்திற்குச் சென்றனர்[4], என்னவாயிற்று என்றெல்லாமும் தெரியவில்லை. தீக்ஷிதர் சம்பிராதத்தை மீறியது தான் தெரிகிறது[5].

27-06-2023 கற்பக கணேச தீக்ஷிதர் புகார்: இந்த நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயிலின் கற்பக கணேச தீட்சிதர், பூஜையில் இருந்த தன்னை, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை பெண் அதிகாரிகள் தள்ளிவிட்டு நிலைகுலையச் செய்ததாக, நகர காவல் ஆய்வாளருக்கு பதிவு தபாலில் புகார் அனுப்பியுள்ளார்[6]. அதில் அவர் கூறியிருப்பதாவது[7]: “சிதம்பர் நடராஜர் கோயிலில் நான் கடந்த 27-ம் தேதி செவ்வாய் கிழமை, பூஜைக்காரராக தினப்படி கோயில் பூஜை செய்யும் பணியில் இருந்தேன். மாலை 6.45 மணி அளவில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் துறையினர் திடீரென கனகசபையில் அத்துமீறி நுழைய முயன்றனர். அப்போது, எனது ஆடை மற்றும் பூணூல் அறுந்துபோகும் வகையில் என்னை தள்ளிவிட்டு, நிலைகுலைய வைத்து, கனகசபைக்குள் நுழைந்து, என் பூஜை பணிக்கு இடையூறு செய்து எதிர்பாராத வகையில் என் மீது தாக்குதல் நடத்தினர். என் தந்தை எஸ்.எஸ்.ராஜா தீட்சிதர் உள்ளிட்ட சிலர் எனக்கு உதவ முன்வந்தனர். எதிர்பாராத தாக்குதலால் மயக்கமாகி விட்டேன். பூஜை பணியை தொடர்ந்து செய்ய வேண்டிய கடமை உள்ளதால், உடல் வலி, மன வலியை பொறுத்துக் கொண்டு, தெய்வ பணியை இரவு 10 மணிக்கு முடித்தேன். மறுநாள் காலையில் வலியுடன் பொறுப்பை அன்றைய பூஜைக்காரரிடம் ஒப்படைத்து, மருத்துவரிடம் சிகிச்சை பெற்றேன். என் மீது தாக்குதல் நடத்திய ஸ்ரீதேவி, வேல்விழி, சரஸ்வதி, பொன்மகரம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு அதிர்ச்சி, உடல் வலி உள்ளதாலும், நேரில் வந்து புகார் கொடுக்க மன தைரியம் இல்லாததாலும், புகாரை பதிவு தபாலில் அனுப்பியுள்ளேன்.” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்[8]. புகார் மனுவின் நகல்களை விழுப்புரம் சரக டிஐஜி, கடலூர் எஸ்.பி., சிதம்பரம் ஏஎஸ்பி ஆகியோருக்கும் அவர் அனுப்பியுள்ளார்[9].ஆனால், இதனை தீட்சிதர்கள் தெரிவித்த புகாரை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்[10].

28-06-2023 – அனுமதிக்கப் பட்டது. தெய்வத் தமிழ் பேரவையைச் சேர்ந்த சுப்ரமணிய சிவா, வேந்தன் சுரேஷ், எல்லாளன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் சிவ வாத்தியங்களுடன் கீழ வீதியில் இருந்து ஊர்வலமாக வந்து, கனகசபையில் ஏறி தேவாரம், திருவாசகம் பாடி தரிசனம் செய்தனர். சிதம்பரம் நடராஜர் கோவில் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது[11]., என்று ஊடகங்கள் வர்ணிக்கின்றன. இதெல்லாம் முன்னர் ஆறுமுகசாமி என்ற ஒருவர் போராட்டம் என்றெல்லாம் செய்து வந்தது ஞாபகம் இருக்கலாம். 2017ல் அவர் காலமாகியப் பிறகு அத்தகைய பிரச்சினை இல்லாமல் இருந்தது. இப்பொழுது, இந்த கனக சபை தரிசனம் பிரச்சினை எழுப்பப் பட்டுள்ளது போலும். தெய்வத் தமிழ் பேரவையும் ஆறுமுகசாமி போல பிரச்சினை உண்டாக்க  தோற்றுவிக்கப் பட்ட இயக்கம் போலிருக்கிறது.

© வேதபிரகாஷ்

04-07-2023


[1] தமிழ்.இந்து,  சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்: பூணூலை அறுத்ததாக போலீஸில் தீட்சிதர் புகார், செய்திப்பிரிவு, Published : 30 Jun 2023 08:00 AM; Last Updated : 30 Jun 2023 08:00 AM

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/1031660-chidambaram-nataraja-temple-issue-dikshithar-complains-to-the-police-about-cutting-poonool.html

[3] On Monday night, police filed a case against 11 dikshithars based on a complaint received from Saranya. The case was filed under four sections of the IPC and section 4 of the Tamil Nadu Prohibition of Harassment of Women Act. However, the officials’ attempt to negotiate with the dikshithars for permission to allow devotees to Kanagasabai failed.

https://www.newindianexpress.com/states/tamil-nadu/2023/jun/27/hrce-dept-removes-dikshithars-board-from-chidambaram-temple-2588890.html

[4] கல்கி, அறநிலையத்துறை அதிகாரிகள் அத்துமீறல். சிதம்பரம் தீட்சிதர்கள் பரபரப்பு புகார்!, கல்கி, Published on : 29 Jun, 2023, 11:46 am

[5] https://kalkionline.com/news/tamilnadu/charity-department-officials-trespass-chidambaram-dikshidar-complains-of-excitement

[6] தினத்தந்தி, , “ஆடை மற்றும் பூணூல் அறுந்துபோகும் வகையில் தாக்குதல்” – சிதம்பரம் தீட்சிதர் பரபரப்பு புகார், By தந்தி டிவி, 29 ஜூன் 2023 2:13 PM

[7] https://www.thanthitv.com/latest-news/attack-to-cut-off-clothes-and-wool-chidambaram-dikshithar-complains-196056

[8] தமிழ்.இந்து,  சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்: பூணூலை அறுத்ததாக போலீஸில் தீட்சிதர் புகார், செய்திப்பிரிவு, Last Updated : 30 Jun, 2023 08:00 AM.

[9] https://www.hindutamil.in/news/tamilnadu/1031660-chidambaram-nataraja-temple-issue-dikshithar-complains-to-the-police-about-cutting-poonool.html

[10] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், நடராஜர் கோவில் தீட்சிதரின் பூணூல் அறுக்கப்பட்டு தாக்கப்பட்டாரா? நடந்தது என்ன? மறுக்கும் அறநிலையத்துறை.!, vinoth kumar, First Published Jun 29, 2023, 11:14 AM IST,   Last Updated Jun 29, 2023, 11:18 AM IST

[11] தமிழ்.ஒன்.இந்தியா, கனகசபை கலாட்டா.. நடராஜர் கோவில் தீட்சிதரின் பூணூல் அறுக்கப்பட்டதா? நடந்தது என்ன?, By Jeyalakshmi C Published: Thursday, June 29, 2023, 10:09 [IST]

https://tamil.oneindia.com/news/cuddalore/chidambaram-natarajar-temple-deekshithars-poonal-is-cut-what-happened-in-kanagasabai-518851.html