Archive for the ‘பெரியாரிஸ நந்தியார்’ Category

சனிக்கு கோவில்கள் உருவாகும் விதம்–குச்சனூர் கோவில் பிரச்சினை – கோவிலை வைத்து நாத்திகர்கள் செய்யும் வியாபாரங்கள் (4)

ஜனவரி13, 2024

சனிக்கு கோவில்கள் உருவாகும்விதம் குச்சனூர் கோவில் பிரச்சினை கோவிலை வைத்து நாத்திகர்கள் செய்யும் வியாபாரங்கள் (4)

ரியல் எஸ்டேட்கோவில் வியாபாரம் உதலியவை: இத்தகைய சூழ்நிலையில் தான் இப்பொழுது இவ்வாறு புதிய கோவில்களை உருவாக்குவது அல்லது இருக்கின்ற கோவில்களை மாற்றுவது அதை வைத்து வியாபாரம் செய்வது, சாலைகளை போடுவது, அந்த குறிப்பிட்ட நிலங்களின் விலையை அதிகமாக்குவது, இதன் மூலம் ரியல் எஸ்டேட் வியாபாரத்தை பெருக்குவது, என்று பல வழிகளில் வணிகமயமாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் எத்தகைய குறிப்பிட்ட கோவில்களைத் தேர்ந்தெடுத்து அதை வைத்துக்கொண்டு எவ்வாறு ஒரு சங்கிலி போன்ற வியாபாரம் முறையில் திட்டங்கள் எல்லாம் செயல்பட்டு வருகின்றன என்பதையும் கவனிக்கலாம். கோவில் முக்கியத்துவம் பெற வேண்டும் என்றால், அதற்கு உண்டான வழிமுறைகள் அதாவது புதியதாக பக்தர்கள் வருவது, அவர்களை நம்பிக்கை அதிகமாகவது அல்லது அதிகமாக்குவது, அதற்கு உண்டான பிரச்சாரங்களை நடத்துவது போன்றவை வருகிறா அல்லது உண்மையிலேயே இருக்கும்கோவிலுக்கு எதையாவது செய்ய உதவுகிறார்களா என்று ஆராய்ந்தால், இந்த நாத்திக-பெரியாரிஸ கும்பல்களின் நோக்கம் தெரிந்து விடும்.

புதிய ஜோதிடர்கள்அர்ச்சகர்கள் உருவாக்கப் படுவது ஏன்?: நிச்சயமாக பகுத்தறிவு, பெரியாரிஸ சித்தாந்தம், திராவிட மாடல், இந்து விரோதம், சனாதன ஒழிப்பு என்பதெல்லாம் இவற்றிற்கு துணையாக இருக்காது. எந்த பலனையும் கொடுக்காது. ஆகவே இங்கு இத்தகைய ஆன்மீக பக்தி பரசத்துடன் வியாபாரத்திற்கு உண்டான முறையில் வழிமுறைகளை உருவாக்குவதற்கு நிச்சயமாக அதிக விவரங்கள் தெரிந்தவர்கள் தான் துணை போக வேண்டும். அதனால் தான் சில ஜோதிடர்கள், சில அர்ச்சகர்கள் என்றெல்லாம் உருவாக்கப்படுகிறார்கள். அவர்கள் புதிய-புதிய கதைகளை உருவாக்குகிறார்கள், ஆதாரமாக புராணங்களை உருவாகுகிறார்கள். இந்த பலன் வேண்டுமானால் இத்தகைய பூஜைகள் செய்ய வேண்டும் கஷ்டங்கள் நீங்க வேண்டுமானால்,  பரிகாரங்கள் செய்ய வேண்டும், இந்த கோவிலுக்கு எல்லாம் சென்று வர வேண்டும் என்றெல்லாம் புதிய புதிய வழக்கங்களை அறிமுகப்படுத்தப் படுகின்றன. ஆகவே ஒவ்வொரு வார இறுதியிலும் சனி ஞாயிறு விடுமுறை காலங்களில் தூரத்திலிருந்து கூட கார்கள், வேன்கள் என்று கூட்டம்- கூட்டமாக பக்தர்கள் வர ஆரம்பித்து விடுகிறார்கள்.

பக்தர்கள் கூட்டம் அதிகமாகும் பொழுது, அடவாடி வியாபாரமும் அதிகமாகிறது: ஏதோ ஒரு நாள் இரு நாள் அப்படியே குடும்பத்துடன் வந்து சென்று விடுகிறார்கள் என்றாலும், நாளுக்கு நாள் கூட்டம் 100, 200, 500, 1000 என்று அதிகமாக வரும் நிலையில் அவர்களுக்கு வேண்டிய உணவு, கழிவிடம் வசதிகள் எல்லாம் செய்து கொடுக்க வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. இங்குதான் வியாபாரமயமாக்கம்- உண்மையான பக்தர்கள் மற்றும் உள்ளூர் ஆட்கள், மக்களை சுரண்டும் கோஷ்டிகள் -இவர்களுக்குள் பிரச்சனை ஏற்படுகிறது. ஏனெனில் உள்ளூர் மக்ககள் உண்மையாக இத்தருணத்தை தங்களுக்கு உபயமாக கொண்டு வசதிகளை ஏற்படுத்து வருமானத்தை ஈட்டலாம். சுற்றுலா என்று வரும் பொழுதும் தீர்த்த யாத்திரை என்று வரும் பொழுதும் இது ஒரு சாதாரண விஷயமே. ஆனால் குறிப்பிட நாட்களில் ஆயிரக்கணக்கில், நூற்றுக்கணக்கில் மக்கள் வருவார்கள், அதனால் அதை வைத்து வியாபாரம் செய்யலாம், கொழுத்தலாபத்தை ஈட்டலாம் என்ற நோக்கத்துடன் ஏதோ வசதிகளை செய்கிறேன் என்று கழிப்பிடத்திற்கு ஐம்பது ரூபாய் -நூறு ரூபாய் என்றெல்லாம் வசூல் செய்வது, வாகங்களை நிறுத்துவதற்கு 50-100 ரூபாய் என்று ரசீது போட்டு அடாவடித்தனம் செய்வது, போன்றவற்றில் மனக்கசப்பு, வெறுப்பு முதலியவை பக்தர்களுக்கு ஏற்படுகின்றன.

பக்தர்களை, பக்தியை பாதிக்கும் அடாவடி அயோக்கியத் தனமான வியாபாரங்கள்: அதே மாதிரி பூஜைக்கு வேண்டிய பொருள்களை விற்பதிலும் இரண்டு, மூன்று மடங்குகள் வைத்து விற்பது போன்ற காரியங்களை நம் கண்கூடாக இத்தகைய இடங்களில் கவனிக்கலாம். அதிலும் பொதுவாக உபயோகப்படுத்தப்பட்ட பூக்கள், பழங்கள், எண்ணை போன்றவை, அதிலும் பரிகாரங்களுக்கு கொடுக்கப்படுகின்ற பொருட்கள் இவை எல்லாமே மறுபடியும் மறுபடியும் கடைகளுக்கு வருவது, அதனை திருப்பி கொடுப்பது போன்ற செயல்களையும் நாம் கவனிக்கலாம். இத்தகைய, “சுழற்சி” வியாபாரம் பக்தி, பக்தர்களின் நம்பிக்கை முதலியவை சோதனைக்குள்ளாகி புனிதமும் கெட்டு விடுகிறது. ஆக இதில் பூஜாரி முதல் கடைநிலை ஊழியர் வரை அனைவரின் புனிதமற்ற காரியங்களையும் கவனிக்கலாம். மனசாட்சிக்கு உகந்து அல்லது விரோதமாக செய்கிறார்களா இல்லையா என்று ஆராய வேண்டா, ஆனால், நிச்சயமாக இந்த பூஜை-புனஸ்காரர்களில் ஈடுபடுபவர்கள் செய்யக் கூடாது. செய்ஜுறார்கள் என்றால், அதையும், “கலிகாலம்,” என்று சொல்லி நியாயப் படுத்தி விடலாம்.

பக்தர்களுக்கு ஏற்படும் பாதிப்பு: ஒருவிதத்தில், உண்மையான சிரத்தையான பக்தர்கள் இவற்றையெல்லாம் கவனிக்கும் பொழுது அல்லது தெரிந்து கொள்ளும் பொழுது, மிகவும் மன வருத்தம் அடைகிறார்கள். இதனாலும், பக்தர்களுக்கு நாளடைவில் பாதிப்பு ஏற்படுகிறது. வெறுத்து விடுகிறார்கள். கிருபானந்தவாரியாரியே மிரட்டிய கும்பல்களும் இந்த தமிழகத்தில் இருந்தார்கள். ஆக, சாதாரணமான, அப்பாவி பக்தர்கள் என்ன செய்ய முடியும். ஒருவேளை அயோத்தியா மண்டபத்தில் தருப்பைப் புல் விற்றுக் கொண்டிருந்த எழை பிராமணர்களை கத்தியால் வெட்டியது போல, வெட்டவும் அந்த பெரியாரிஸ்டுகள் தயாராக இருக்கலாம். பாதி பக்தர்களுக்கு வேண்டுதல் நடக்கிறது, பாதி பக்தர்களுக்கு வேண்டியது நடக்கவில்லை என்றால், “நடக்கவில்லை,” என்று பக்தர் என்றும் சொல்ல மாட்டார், தனக்குக் கொடுப்பினை இல்லை என்று அமைதியாக இருப்பார். ஆனால், பலன் பெற்றவர் சொல்லும் பொழுது, சொல்ல வைக்கும் பொழுது, இதற்கு விளம்பரம் கொடுத்து பரப்பும் பொழுது, சுற்றியுள்ள வியாபாரிகளுக்கு வியாபாரம் வளர்கிறது.

இந்துவிரோத-பெரியாரிஸ்டுகள் வளரும் விதம்: கிராமங்களில், தொலைவில் இருக்குமிடங்களில் உள்ள கோவில்களுக்குச் செல்லும் பொழுது, இத்தகைய பெரியாரிஸ்டுகள், இந்துவிரோதிகள், முதலியவர்களை எதிர்த்து சாதாரண மக்கள் ஒன்றும் செய்ய முடியாது. ஒருவேளை அவர்களுக்கும் அர்சியல் பின்னணி இருந்தால், தட்டிக் கேட்கலாம், ஆனால், அவர்கள் தனியாகக் கவனிக்கப் பட்டு, அனுப்பப் படுவார்கள். கோவில்-வளர்க்கும் வியாபாரங்களும் இந்த மனிதர்களுக்குத் தான் கிடைக்கின்றன, கிடைக்கும். அரசியல் ஆதிக்கம் கொண்டவர்களுக்கு எல்லா “ஆர்டர்களும், டெண்ர்களும்” கிடைக்கின்றன. பிறகு, அக்கோவிலையே கட்ட்ப் படுத்தும் அளவுக்கு “தாதாவாகிறார்கள்.” சிறப்பு தரிசனத்திற்கு, விஐபிக்கள் அவர்களிடம் தான் செல்ல வேண்டும். அப்படித்தான், நடந்து வருகிறது. இதனால் தான், இவர்கள் எல்லோருமே இந்துக்களாகத் தான் இருக்கிறார்கள், இந்துவிரோதிகளாக இருந்தாலும் ஓட்டுப் போடுகிறார்கள். சனி இவர்களைப் பிடிப்பதில்லை, மற்றவர்களைத் தான் பிடிக்கிறது. அதையும் இந்நாத்திகர்கள் பெருமையாக சொல்லிக் காட்டுவார்கள்.

© வேதபிரகாஷ்

13-10-2024

சனிக்கு கோவில்கள் உருவாகும் விதம்–குச்சனூர் கோவில் பிரச்சினை – அறங்காவலர்களுக்கே ஒப்படைக்க நீதிமன்ற தீர்ப்பு (3)

ஜனவரி13, 2024

சனிக்கு கோவில்கள் உருவாகும்விதம் குச்சனூர் கோவில் பிரச்சினை அறங்காவலர்களுக்கே ஒப்படைக்க நீதிமன்ற தீர்ப்பு (3)

ஆடித் திருவிழாவும், நீதிமன்ற தீர்ப்பும் உணவு தரம் சோதனையும்:  ஆடித் திருவிழா ஜூலை 22ஆம் தேதி 2023 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இங்கு நவக்கிரக தெய்வங்களில் ஒருவரான சனி பகவான், சுயம்பு வடிவில் மூலவராகக் காட்சி தருவாதலும், திருநள்ளாற்றுக்கு அடுத்தபடியாக பிரசித்திபெற்ற கோயிலாக குச்சனூர் சனீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த சனீஸ்வர பகவான் கோயிலில் ஒவ்வொரு ஆடி சனிக்கிழமைகளிலும் கோலாகலமாக திருவிழா தொடங்கி வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி கடந்த சனிக்கிழமை (ஜூலை 22) ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும் இக்கோயிலின் ஆடித்திருவிழாவிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவது வழக்கம். இந்த ஆண்டு ஆடித்திருவிழா தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கோயில் பகுதி அருகே அமைக்கப்பட்டுள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால், பலர் கடை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

உணவு சோதனை உண்டாக்கிய கலவரம்: கோயிலைச் சுற்றியுள்ள பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் உணவு தரமானதாகவும் பாதுகாப்பாகவும் உள்ளதா என்பதை அறிய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்[1]. டீக்கடை, ஹோட்டல், பழக்கடை உள்ளிட்டப் பல்வேறு கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தனர்[2]. மேலும் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் புழக்கத்தில் உள்ளதா, காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா, லேபிள் ஒட்டப்பட்ட உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா, உரிய அனுமதி பெற்று உணவுப்பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து பல்வேறு ஆய்வுகளை அதிகாரிகள் மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளான சுரேஷ் கண்ணன், மணிமாறன் ஆகியோர் முறையாக விதிகளை பின்பற்றாத வியாபாரிகளை எச்சரித்ததோடு தரமற்ற உணவுப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் மிகவும் பிரசித்திபெற்ற திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

16-12-2023 ஆர்பாட்டம்: தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குச்சனூர் சனீஸ்வரன் திருக்கோயிலை பரம்பரை அறங்காவலர்களிடம் ஒப்படைக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை இந்து அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நிலையில் அந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்தி கோரி சனீஸ்வரன் கோயிலை பரம்பரை அறங்காவலர்களும் ஒப்படைக்க வலியுறுத்தியும், கோயிலில் நடைபெற்று வரும் முறைகேடுகளை சுட்டிக்காட்டியும் இந்து முன்னணி சார்பாக குச்சனூர் சனீஸ்வரன் கோயில் வாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து முன்னணியின் கோட்டச் செயலாளர் கோம்பைகணேசன் தலைமையில் நடத்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் சுந்தர். பாலமுருகன், ராம் செல்வா, சசிகுமார் , பாண்டியன், ஆட்டோ முன்னணி ஆச்சி கார்த்திக் உட்பட ஒன்றிய , நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்[3]. சின்னமனூர் காவல்துறை ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் ஆர்ப்பாட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கினர்[4].

23-12-2023 ஆர்பாட்டம்: நீதிமன்றம் உத்தரவின் பேரில் சனீஸ்வரா் கோயில் நிர்வாகத்தை அறங்காவலா் குழுவிடம் ஒப்படைக்க வலியுறுத்தி வெள்ளாளா் அமைப்பு சார்பில் 23-12-2023 சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாநில மாணவா் அணிச் செயலா் தினேஷ்குமார் தலைமை வகித்தார். மாநிலத் தலைவா் அண்ணா சரவணன் முன்னிலை வகித்தார். முன்னதாக, மாநில மகளிர் அணித் தலைவி தமிழ்செல்வி மணிகண்டன் வரவேற்றார். அதில், குச்சனூா் சனீஸ்வரா் கோயில் முன்பு ஊா்வலமாக சென்றவா்கள், சென்னை உயா்நீதி மன்றம் மதுரைக் கிளையின் உத்தரவின் பேரில் குச்சனூா் சனீஸ்வரா் கோயில் நிர்வாகத்தை அறங்காவலா் குழுவிடம் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன முழக்கம் எழுப்பினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் வெள்ளாளா் அமைப்பைச் சோ்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனா்[5]. சின்னமனூா் காவல் சார்பில் ஆய்வாளா் மாயன் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனா்[6].

2003 முதல் 2023 வரை: 2003 இல் இருந்து 2020 வரை இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இக்கோவில் இருந்தது. ஆனால் அக்காலகட்டத்தில் என்ன நடந்தது எதற்காக வேண்டி, மறுபடியும் 2023 இல் அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருந்து கோவில் மீட்கப்பட்டது, தனியார் நிர்வாகத்திற்கு வந்துள்ளது, என்பதை எல்லாம் கவனிக்க வேண்டிய உள்ளது. முன்னர், பரம்பரையாக இக்ககோவிலை பராமரித்து வந்துள்ளனர். அதேபோல இப்பொழுது 20 ஆண்டுகளுக்கு பிறகு மறுபடியும் அந்த குழுவிற்கு சென்றுள்ளது என்பது தெரிகிறது. இது அந்த குறிப்பிட்ட கோவிலும் பிரச்சனை ஆக எடுத்துக் கொள்வதால் அல்லது பொதுவாக கோவில்கள் எல்லாம் அறநிலையக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்ற நடக்கும் போராட்டத்தின் அம்சமாக எடுத்துக் கொள்வதா என்பது கவனிக்க வேண்டி உள்ளது. ஏனெனில் இங்கு பக்தர்களின் பலன்கள் அவர்களுக்கு வேண்டிய வசதிகள் விவரங்கள் என்பதை பற்றி யோசித்துப் பார்த்தால் அவையெல்லாம் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட விசேஷமான நாட்கள், காலம் என்ற வரையறுக்கப் பட்டதாக இருக்கிறது. மற்ற நேரங்களில் அவர்கள் இருக்க மட்டார்கள். ஆகவே, அவர்கள் இதில் தலையிட மாட்டார்கள் மற்றும் அவற்றிற்கும் அவர்களுக்கும் சம்பந்தமும் இல்லை என்பது நன்றாக தெரிந்த விஷயம் தான்.

இப்பொழுதெல்லாம் வியாபாரமயப்பாக்கம் என்பது கோவில்களை மையமாக வைத்து பெரும்பாலாக நடந்து வருகின்றன என்பது கவனிக்க முடிகிறது. தமிழகத்தை பொறுத்த வரைக்கும் திராவிடத்துவ சித்தாந்தம் திராவிட கட்சிகள், பெரியாரிஸம் என்று பேசி விடுகின்ற பகுத்தறிவு- நாத்திக கூட்டங்கள் எல்லாமே மதத்திற்கு எதிராக குறிப்பாக கடவுள் மறுப்பு, இந்துகளுக்கு எதிராக செயல்பட்டு வருகின்ற நிலை தான் உள்ளது. தமிழகத்தில் இருக்கின்ற லட்சுக்கணக்கான கோவில்கள் மற்றும் அவற்றிற்கு சொந்தமாக இருக்கின்ற பல கோடி ஏக்கர்கள் பரப்புள்ள விளைநிலங்கள், சொத்துகள், மடாலயங்கள் எல்லாம் எடுத்து ஆர்த்தால், அதனுடைய மதிப்பு எங்கோ செல்கிறது. கடந்த 70 ஆண்டுகள் ஆண்டுகள் கோவில் நிலங்களை பலரது ஆக்கிரமிப்பில் இருந்து வந்துள்ளன. தெய்வம் நம்பிக்கை இல்லாதவர், மேலும் இந்துக்களே இல்லாதவர் என்று இருப்பவர்களிடம் தான் நிலங்கள் குத்தகைக்கு  வாடகைக்கு சென்றுள்ளன. அவர்கள் தொடர்ந்து அனுபவித்து ஆனால், கோவில் நிலங்களுக்கு உண்டான வாடகை மற்றும் குத்தகை பணத்தை கூட கொடுக்காமல் ஏமாற்றி வருகின்றனர். மேலும், அந்நிலங்கள் தங்களுக்கே கொடுக்க வேண்டும் என்று பட்டா கேட்டும் வருகின்றனர் இன்னும் சொல்ல போனால் சில இடங்களில் அவ்வாறு அவர்கள் பட்டாக்களை கூட அதாவது கோவில் நிலங்களை இந்துக்கள் அல்லாதவர்களை ஆக்கமிருந்து கொண்டு அவர்கள் தங்களது சொந்த பயன்பாட்டிற்காக பட்டா போட்டு மாற்றிக் கொண்டுள்ளனர்.

© வேதபிரகாஷ்

13-10-2024


[1] இ.டிவி.பாரத், Kuchanur சனீஸ்வர பகவான் கோயில் ஆடித்திருவிழா: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு!, Published: Jul 24, 2023, 12:46 PM.

[2] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/theni/kuchanur-saneeswara-bhagavan-temple-aadi-festival-food-safety-department-officials-inspection/tamil-nadu20230724124623084084899

[3] தமிழ்.லோகல், குச்சனூர் சனீஸ்வரன் கோயில் முன்பு இந்து முன்னணி ஆர்ப்பாட்டம், By yasar, Dec 17, 2023, 19:12 IST.

[4] https://tamil.getlokalapp.com/tamilnadu-news/theni/andipatti/hindu-front-demonstration-in-front-of-kuchanur-saneeswaran-temple-12242854

[5] தினமணி, குச்சனூரில் வெள்ளாளா் அமைப்பு சார்பில் ஆா்ப்பாட்டம், By DIN  |   Published On : 26th December 2023 12:00 AM  |   Last Updated : 26th December 2023 12:00 AM.

[6] https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2023/dec/26/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D–%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-4128484.html

சனிக்கு கோவில்கள் உருவாகும் விதம் – குச்சனூர் கோவில் பிரச்சினை (1)

ஜனவரி13, 2024

சனிக்கு கோவில்கள் உருவாகும்விதம் குச்சனூர் கோவில் பிரச்சினை (1)

சனிசனீஸ்வரன் சனிபகவான் என்று மாறிவரும் நிலை: சமீப காலத்தில் சனி படுத்தும் பாடு அதிகமாகவே இருக்கிஅரது போலும், ஏனெனில், எங்கெல்லாம் சனீஸ்வரன் கோவில் இருக்கிறதோ அங்கெல்லாம் கூட்டம் அதிகரித்து வருகின்றது. 50 ஆண்டுகளுக்கு முன்னாள் கூட திருநள்ளாரில் சனீஸ்வரனை வழிபடுவதற்காக வரும் கூட்டம் கொஞ்சமாக தான் இருந்தது. ஆனால் பிறகு திடீரென்று கூட்டம் வர ஆரம்பித்தது. இதனால் சனீஸ்வரன் சிற்பமாக இருந்த நிலையிலிருந்து விக்கிரமாக மாற்றப்பட்டு, அதற்கு தனி சன்னதியும் கட்டப்பட்டு அதுவே தனியான கோவில் போன்று பக்தர்களுக்கு ஏற்றபடி மாற்றியமைக்கப் பட்டுள்ளது. கூட்டம் அதிகமாக அதிகமாக அந்த தனி கோவில் அல்லது பிரகாரம் என்பது விரிவுபடுத்திக் கொண்டே வருவதையும் கவனிக்கிறோம். உண்மையில் அது ஒரு பிரத்தியேகமான சிவன் கோவிலாகும். ஆனால் இப்பொழுது எல்லாம் சிவனை கூட வழிபடாமல் இது ஏதோ பிரயோகமான சனீஸ்வரன் கோவில் என்று நினைத்துக் கொண்டு சனீஸ்வரனை மட்டும் வழிபட்டு சென்று விடுகிறார்கள். இப்படியாகப் சனி “சனீஸ்வரனாகி” விட்டான் – விட்டார்.

நவகிரக க்ஷேத்திரம், சுற்றுலா, வணிகமயமாக்கல்: நவகிரக க்ஷேத்திரம் என்ற ஒரு புதிய முறையை உண்டாக்கி அதன்படி 9 கிரகங்கள் குடிகொண்டுள்ள கோவில்களுக்கு தீர்த்த யாத்திரையாக சென்று வருவது அறிமுக செய்யப்பட்டது. இதன் மூலமாக கார், வேன், பஸ் முதலியவற்றை வைத்திருக்கும் சுற்றுலா வியாபாரிகளுக்கு வருமானம் கிடைக்க ஆரம்பித்தது. அதற்கு ஏற்றபடி அந்த ஸ்தலங்களும் நாளுக்கு நாள் பெரிதாக்கப்பட்டன ஒவ்வொரு புதிதாக ஸ்தலத்திற்கும், புராணம் போன்ற கதைகளும் உருவாக்கப்பட்டன. பிறகு அந்தந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால். இந்த பலன்கள் கிடைக்கும் என்றும் விவரங்கள் சொல்லப்பட்டன. இதற்கு ஜோதிடர்களும் புதிய-புதிய பரிகாரங்கள், பலன்கள் தீர்க்கும் முறைகள் முதலியவற்றை புதியதாக உண்டாக்கி அறிமுகப்படுத்தினர். இவ்வாறு ஒரு நிலையில் கவனிக்கும் பொழுது, இத்தகைய பக்தர்களின் நம்பிக்கைகள் கூட எவ்வாறு வணிகமயமாக்கப்படுகிறது என்பதனை கவனிக்கலாம்.

புதிய சனீஸ்வரன் கோவில்கள் உருவாக்கல்: அது மட்டுமல்ல, புதிய சனீஸ்வரன் கோவில்களையும் உண்டாக்கலாம் என்ற திட்டமும் துவங்கியது போலிருக்கிறது. அதாவது திருநள்ளாரில் இருக்கும் சனீஸ்வரன் சன்னதியானது அல்லது அது ஒரு சிவன் கோவிலின் பகுதி என்று இருப்பதனால் சனீஸ்வரனுக்கு மற்ற இடங்களில் பிரகாரங்களுடன் சன்னதிகள் உள்ளன – இல்லை, தனியான கோவில்கள் உள்ளன என்பது போன்ற கருத்தை உருவாக்க ஆரம்பித்தார்கள். அதற்கேற்றபடி தெற்கில் இருக்கின்ற திருநள்ளாறு கோவிலுக்கு எதிராக அதாவது வடக்கில் ஒரு கோவிலை ஆரம்பித்து அதை வடத்திருநள்ளார் என்றும் கூற ஆரம்பித்தார்கள். அதாவது தெற்கில் இருக்கும் அந்த திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் என்று அழைக்கப்படுமானால், வடக்கில் இருக்கும் மற்ற சனீஸ்வரர் கோவில் வட-திருநள்ளார் என்றும் சொல்லி குறிப்பிடலாம் என்ற திட்டத்தை அமல் படுத்துகிறார்கள் போலும். இருப்பினும் புதிய-திருநள்ளார் கோவில், திருநள்ளாறு கோவில் போன்று பிரசித்தி அடைய முடியவில்லை. ஏனெனில் இக்காலங்களில் புதிதாக கட்டப்படுகின்ற இந்த கோவில்கள் எனது மிகச் சிறியவையாகவே இருக்க வேண்டியிருக்கிறது. அதிலும், நகருக்குள், ஒரு கோவில் கட்டுவது என்பது மிகக் கடினமானது. திருநள்ளாறு போன்று அத்தகைய பரந்த அளவில் இடமும் கிடைக்காது. அதிலும், பெரிய கோவிலை கட்டுவது என்பதும் சாத்தியமாகாது. அதனால் அந்த புதிதாக உருவாக்கப்படும் சனீஸ்வரன் கோவில் என்பது மிகச் சிறியதாக இருக்கிறது. அந்த அளவில் தான் கோவில்கள் நகருக்கு மத்தியில் அல்லது வீடு பல வீடுகள் இருக்கும் பொழுது அந்த வீடுகளுக்கு மத்தியில் ஏதாவது ஒரு தெருவில் சில இடம் கிடைத்தது என்றால் அதனை சனீஸ்வரன் கோவிலாக மாற்றும் முறை நடந்து வருகிறது.

தனியாக சனீஸ்வரன் கோவில் சந்நிதி, கோவில் உருவாகும் முறை: இவ்வாறுதான், இப்பொழுது புதிய சனீஸ்வரன் கோவில்கள் உருவாக்கி வருகின்றன. ஆகவே அந்த கோவில்களுக்கு சென்று பார்த்தால், எப்படி மிக சமீப காலத்தில் அதாவது ஒரு 20-30-40-50 ஆண்டுகளில் அவை மாற்றப்பட்டு, அவ்வாறு புதுப்பிக்கப்பட்டுள்ளன என்பதனை எளிதாக தெரிந்து கொள்ளலாம். திருக்காட்டுப்பள்ளியில் கூட, இவ்வாறு தான் அமைக்கப்பட்டுள்ளது என்பது முந்தைய ஒரு பதிவில் எடுத்துக்காட்டுப்பட்டுள்ளது. அதாவது நவகிரகங்களில் இருந்த அந்த சனீஸ்வரன் சிலையை தவறுதலாகவோ அல்லது வேண்டுமென்றோ கோவிலின் மூலையில் தனியாக பிரதிஸ்டை செய்யப்பட்டு அது சன்னிதியாக மாற்றப்பட்டு சனீஸ்வரன் கோவில் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். பிரதானமாக இருப்பது லிங்கம் தான் அதாவது மூலவர் லிங்கம், சிவன் கோவில் தான் உள்ளது. சனீஸ்வரன் சன்னிதி சிறியாதாகயிருக்கிறது. அத்துடன் மீதி அந்த எட்டு கிரகங்களும் தனியாக, “ப” வடிவத்தில், ஒரு சிறிய சந்நிதியில் வைக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து எளிதாக தெரிந்து கொள்ளலாம், அதாவது நவகிரகங்களில் இருந்த அந்த சனீஸ்வரன் சிலையை தனியாக எடுத்து வைத்து அதனை ஒரு சன்னிதியாக மாற்றி பிறகு, சில வருடங்களிலேயே அது ஏதோ சனீஸ்வரர், பிரத்தியேக சனீஸ்வரன் கோவில் போல உருவாக்கப்பட்டுள்லது. இப்பொழுது பொங்கு-சனீஸ்வரர் கோவில் என்று அழைக்கப்பட்டு பக்தர்கள் எல்லாம் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள்.

சனி, ஏழரை சனி முதலியன: நவகிரகங்களில் பொதுவாக சனி பகவான் என்றாலே ஒருவரை தண்டிக்கும் சனி பீடை என்றே நம்பப்படுகிறது. ஒருவருக்கு சனி பிடித்தால் பாடாய்படுத்துவார் என்றும் பல்வேறு சிரமங்களை கொடுப்பார் என்றும் நம்பப்படுகிறது. ஆனால் இங்கு கூறப்படுவதாவது.. சனி பகவான் நல்ல யோகத்தில் ஒருவருடைய ஜாதகத்தில் இருக்கும்போது அவர் பல்வேறு வெற்றிகளை அடைவார் என்றும், நல்ல நிலைக்கு செல்வார் என்றும் இங்கு நம்பப்படுகிறது. சனிபகவான் அனைவரையும் தண்டிக்கப்படுவதில்லை என்றும் சனி திசை அல்லது ஏழரை சனியின் காலத்தில் படும் கஷ்டமானது அவரது முன் வினை கர்மாவின் அடிப்படையே கொண்டே அமைகிறது என்று கூறப்படுகிறது. ஏழரை சனி திசை காலத்தை அல்லது சனி திசையின் காலத்தை குறைக்கும் வல்லமைகொண்ட, ஆலயமாக தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுயம்பு சனீஸ்வர பகவான் ஆலயம் உள்ளது. இந்த ஆலயமானது சுருளியாறு முல்லைப் பெரியாரும் இணைந்த கிளை நதியான சுரபி நதிக்கரையில் அமைந்துள்ளது.

தினகரன் மான்மியம் சொல்லும் குச்சனூர் சனீஸ்வரன் புராணம்: தினகரன் மான்மியம் இவ்விவரங்களைக் கொடுக்கின்றன என்று பக்தி ரீதியில் கொடுக்கப் பட்டுள்ளன. முன்பொரு காலத்தில் கலிங்க நாட்டை ஆட்சிசெய்த தினகரன் என்ற மன்னரின் மகனான சந்திரவதனன் என்பவரால் இந்த கோவில் நிறுவப்பட்டது என்று கூறப்படுகிறது. தினகரன் மன்னனுக்கு வெகுநாட்களாக குழந்தை பிறக்காமல் இருந்தது. குழந்தை வரம் வேண்டி இறைவனை தினம்தோறும் பூஜித்து வந்தான். அப்போது ஒரு அசரீரி குரல் ஒலித்தது. ‘உன் வீட்டிற்கு பிராமணச் சிறுவன் ஒருவன் வருவான். அவனை நீ பாராட்டி சீராட்டி வளர்த்து வந்தால் உனக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்று கூறியது’. மன்னனும் அவன் வீட்டிற்கு வந்த பிராமண சிறுவனினை வளர்த்து வந்தான். மன்னனுக்கு அசரீரி குரல் ஒலித்தபடி குழந்தை பிறந்தது. மன்னனுக்கு பிறந்த குழந்தைக்கு சதாகன் என்ற பெயரிட்டு வளர்த்து வந்தான். வளர்ப்பு மகனின் பெயர் சந்திரவதனன். ஆனால் மன்னனுக்கு பிறந்த குழந்தையை விட, வளர்ப்பு மகனான சந்திரவதனனுக்கு அதிகமான அறிவாற்றலும், திறமையும் இருந்தது. இதனால் மன்னனின் முதல் வாரிசான சந்திரவதனனுக்கே முடிச்சூட்டப்பட்டது.

குச்சனூர் சனி கோவில் பலன் உண்டான விதம்: அந்த சமயம் மன்னன் தினகரனுக்கு ஏழரைச்சனி பிடித்தது. ‘வளர்ப்பு மகனாக இருந்தாலும் எனக்கு முடிசூட்டிய என் தந்தைக்கு சனி பகவானின் தாக்கம் இருக்கக்கூடாது’ என்ற எண்ணம் சந்திரவதனனுக்கு தோன்றியது. இதனால் சந்திரவதனன் சுரபி நதிக்கரைக்குச் சென்று இரும்பால், சனியின் உருவத்தைப் வடிவமைத்து வழிபட்டான். ‘தன் தந்தைக்கு எந்தவிதமான துன்பமும் ஏற்படக் கூடாது என்றும், தன் தந்தைக்கு ஏற்பட இருக்கும் துன்பங்கள் அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்கின்றேன் என்றும், அந்த சனி பகவானிடம் வேண்டிக் கொண்டான்’ சந்திரவதனன். இந்த நியாயமான கோரிக்கையை ஏற்றுக் கொண்ட சனி பகவான் ஏழரை நாழிகை மட்டும் சந்திரவதனனை பிடித்துக் கொண்டார்.  வேண்டுதலை நிறைவேற்றி அதன்பின்பு, சந்திரவதனனின் முன்தோன்றிய சனி பகவான் ‘உன்னை போன்ற நியாயமாக நடந்து கொள்பவர்களை நான் பிடிக்க மாட்டேன் என்றும், இப்போது உன்னை பிடித்ததற்கு காரணம் உன் முன் ஜென்ம வினை தான் என்றும் கூறி’ மறைந்தார்.

© வேதபிரகாஷ்

13-10-2024

பிள்ளையார் சிலை உடைப்பு, சனாதன ஒழிப்பு, நவராத்திரி விழா துவக்கம் – திராவிட ஆட்சியில், திராவிட ஸ்டாக்குகளின், திராவிட மாடலா, அழிப்பு திட்டமா?

ஒக்ரோபர்17, 2023

பிள்ளையார் சிலை உடைப்பு, சனாதன ஒழிப்பு, நவராத்திரி விழா துவக்கம் – திராவிட ஆட்சியில், திராவிட ஸ்டாக்குகளின், திராவிட மாடலா, அழிப்பு திட்டமா?

பிள்ளையார் சிலை உடைப்பு முதல், “சனாதன ஒழிப்பு” மாநாடு வரை: பிள்ளையார் சிலைகள் தமிழகத்தில் உடைக்கப் பட்டிருக்கின்றன; ராமர் படங்களுக்கு செருப்பு மாலைகள் பாடப் பட்டிருக்கின்றன; சிவ-முருக தூஷ்ணங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன; திக வகையறாக்களின் இந்துவிரோத வெறுப்பு-காழ்ப்பு பேச்சுகள், எழுத்துகள், கோஷங்கள் ஆர்பாட்டங்கள், ஊர்வலங்கள் தொடர்கின்றன; கருப்புப் பரிவார் கும்பலில் திக-திமுக என்று எல்லா கோஷ்டிகளும் ஒன்றாகத் தான் வேலை செய்து வருகின்றன. அதில் கிருத்துவ-துலுக்க-கம்யூனிஸ்ட் இந்துவிரோதிகளும் அடக்கம், அது தான், இப்பொழுதைய “சனாதன ஒழிப்பு” மாநாட்டிலும் வெளிப்பட்டுள்ளது. இப்பொழுது, இவர்களது குரூர முகம் இந்தியா முழுவதும் தெரிந்து விட்டது. பிள்ளையார் சிலை உடைப்பு, சனாதன ஒழிப்பு, நவராத்திரி விழா துவக்கம் – திராவிட ஆட்சியில், திராவிட ஸ்டாக்குகளின், திராவிட மாடலா அழிப்பு திட்டமா? இப்படியெல்லாம் ஒரு அப்பாவியான, சாதுவான, பயந்தாங்கொள்ளி இந்துக்களுக்கு சந்தேகம் வருகிறது!

திமுக ஆட்சியில் நவராத்திரி கொலு நடப்பது: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மகா சிவராத்திரி பெருவிழா பக்தர்கள் பங்கேற்புடன் விமரிசையாக நடத்தப்பட்டது[1]. அந்த வகையில், உலகில் தீமைகளை அழித்து தர்மத்தை நிலை நாட்டுகின்ற சக்தி வழிபாட்டின் தத்துவங்களை உணர்த்துகின்ற தொடர் நிகழ்வாக கொண்டாடப்படும் நவராத்திரி பெருவிழா இந்த ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கோவில்கள் சார்பில் சென்னை, மயிலாப்பூர், கபாலீசுவரர் திருமண மண்டபத்தில் கொலுவுடன் 14-10-2023 அன்று தொடங்கியது[2]. ஹிமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இந்து அறநிலையத் துறை, அதன் மந்திரி மற்ற அதிகாரிகள் அதிகமாகவே செயல்படுவது போல காண்பித்துக் கொல்கிறார்கள். முதல்வர் வழக்கம் போல பெரியாரிஸ-நாத்திக-இந்துவிரோத பாணியில் கிருத்துவ-முஸ்லிம் கூட்டங்களில் கலந்து கொள்ளும் நிலையில், மகன் சமீபத்தில் “சனாதனத்தை ஒழிப்போம்,” என்று பேசி மாட்டிக் கொண்டுள்ளார். வழக்குகளும் நிலுவையில் உளளது. இந்து அறநிலையத் துறைறாமைச்சர் சேகர் பாபு, “அல்லேலூயா” என்று கோஷம் எல்லாம் போட்டுள்ளதை மக்கள் அரிவர். இப்பொழுது, நவராத்திரி கொலு என்று அதிலும் இந்த திராவிடக் கூட்டத்தினர் நுழைந்துள்ளனர்ர்.

இந்த விழா வருகிற 24-ந் தேதி வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது, இப்படி ஊடகங்கள் குறிப்பிடுவது தமாஷான விசயம் தான். ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக நடக்கும் இதைப் பற்றி இவர்கள் சொல்லித் தானா தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது, அவை-அவர்கள் இல்லாத காலங்களில் மக்களால் கொண்டாடப் பட்டு வந்த விழாக்கள்-பண்டிகைகள் இவை. விழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்[3]. அவருடன் அவரது உறவினரும் வந்திருந்தனர்[4]. சந்நிதி-சந்ந்தியாக எல்வதும், சாமி கும்பிடுவதும், அர்ச்சகர் பூஜை செய்து பிரசாதம் கொடுப்பதும், அதனை அவர் பவ்யமாக வாங்கிக் கொள்வதும்……..வீடியோக்களில் பதிவாகியுள்ளன. தலையில் தெளித்துக் கொண்டு, பரவசமாக கைகூப்பிக்கும்பிடுவதும் தெரிகிறது. தனிப்பட்ட முறையில் அந்த அம்மணி செய்வதை எதிர்க்கவில்லை என்றாலும், அவரது கணவரின் இந்துவிரோதம் மற்றும் அந்த அமைச்சர் முதலிய கும்பலுடன் செய்வது நிச்சயமாக இந்துக்களுக்கு எதையோ உண்டாக்குகிறது. கொலுவை பார்வையிட்டதோடு, சகலகலாவல்லி மாலை பூஜையில் கலந்து கொண்டார்[5]. பிறகு, மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களையும் வழங்கினார்[6]. அப்போது எடுத்த புகைப்படங்களை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தன் ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த சுய-விளம்பரம் ஏன் என்று புரியவில்லை.

நிறைவாக, மாம்பலம் சகோதரிகள் ஆர்.விஜயலட்சுமி மற்றும் ஆர்.சித்ரா இசை நிகழ்ச்சி நடைபெற்றது[7]. விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், எம்.எல்.ஏ. மயிலை த.வேலு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் அ.சங்கர், ந.திருமகள், சி.ஹரிப்ரியா, இணை ஆணையர்கள் கி.ரேணுகாதேவி, ஜ.முல்லை மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்[8]. இதில் திருமகள் ஏற்கெனவே கைதாகியுள்ளார். மற்ற அறந் இலைத் துறை அதிகாரிகளின் மீதும் ஊழல் போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்நிலையில் அத்தகைய அதிகாரிகளும் இதில் கலந்து கொள்வதும் வருத்தமாக இருக்கிறது. உண்மையில் அவர்களுக்கே மனசாட்சி இருக்க வேண்டும்.

நவராத்திரி விழாவையொட்டி தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது[9]. இதேபோல் வடபழனி முருகன் கோவிலிலும் நேற்று நவராத்திரி விழா கொலுவுடன் தொடங்கியது[10]. ‘சக்தி கொலு’ எனும் பெயரில் அமைக்கப்பட்ட பிரமாண்ட கொலுவை உபயதாரர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்[11]. நவராத்திரி விழா 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது[12]. விழாவையொட்டி, அம்மன் கொலு சன்னதியில் காலை 11 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை சிறப்பு பூஜை, தீபாராதனை நடத்தப்படுகிறது. கொலுவை பக்தர்கள் காலை 6.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்வையிடலாம். நவராத்திரியின் நிறைவு நாளான 24-ந் தேதி, விஜயதசமி அன்று வித்யாரம்பம் எனும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இத்ற்கெல்லாம் செலவு எப்படி, யார் செய்கிறார்கள் என்பதும் கவனிக்கத் தக்கது. 

ஒரு இந்துவின் பணிவான வேண்டுகோள்!!!: கடந்த 70-100 ஆண்டுகளாக தமிழகத்தில் திராவிட, திராவிடத்துவ, ஈவேராயிஸ, பெரியாரிஸ, பகுத்தறிவு, நாத்திக, இந்துவிரோத பேச்சுகள், எழுத்துகள், கோஷங்கள், தாக்குதல், என்று எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்கும் எந்த இந்துவும் இதைப் பார்த்து, மகிழ்சியடைய மாட்டான்,  மாறாக, ஒருவேளை பயப்படலாம்! சனாத ஒழிப்பு கோஷங்களுக்குப்பிறகு, இவ்வாறு நடப்பது, இந்துக்களுக்கு அந்தேகமும், அச்சமும் ஏற்படுகிறது. இந்துக்களைத் தொடர்ந்து தூஷித்து வரும் இவர்கள், விலகி இருப்பதே சாலச் சிறந்தது! கோவில்களில் அரசியல் செய்ய வேண்டாம்!! இந்து அறநிலையத்துறை என்று கூடக் குறிப்பிடத் தயங்கும் நிலையிலுள்ள, ஏற்கெனவே ஊழல் புகார், வழக்குகளில் சிக்கியவர்கள், .தார்மீக ரீதியில், இத்தகைய புனித பண்டிகைகளில் கலந்து கொள்ளாமல் இருந்தாலே
இந்துக்கள் நிம்மதியாக இருப்பார்கள்.

© வேதபிரகாஷ்

16-10-2023


[1] தினத்தந்தி, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் நவராத்திரி பெருவிழா, தினத்தந்தி அக்டோபர் 16, 9:55 am.

[2] https://www.dailythanthi.com/News/State/navratri-festival-at-kapaleeswarar-temple-mylapore-1073802

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், மயிலாப்பூரில் அறநிலையத் துறை சார்பில் நவராத்திரி கொலு: தொடங்கி வைத்த துர்கா ஸ்டாலின், WebDesk, Oct 16, 2023 12:11 IST.

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-durga-stalin-inaugurates-navratri-golu-festival-1559174

[5] தினமலர், பெண்கள், பள்ளி மாணவர்களை கவர்ந்த நவராத்திரி கொலு, மாற்றம் செய்த நாள்: அக் 16,2023 01:50…; https://m.dinamalar.com/detail.php?id=3458514

[6] https://m.dinamalar.com/detail.php?id=3458514

[7] தமிழ்.ஒன்.இந்தியா, நவராத்திரி.. ராஜ்பவனில் கொலு.. மயிலாப்பூரில் சக்தியை பார்த்து பூரித்துப்போன துர்கா ஸ்டாலின், By Jeyalakshmi C Updated: Monday, October 16, 2023, 8:38 [IST].

[8] https://tamil.oneindia.com/spirtuality/navaratri-kolu-at-raj-bhavan-laxmi-ravi-performed-navaratri-puja-durga-stalin-lighting-the-lamp-at-m-548553.html?story=2

[9] தமிழ்.ஒன்.இந்தியா, மயிலாப்பூரில் நவராத்திரி கோலாகலம்.. 10 நாட்கள் கொலு வைத்து கொண்டாடும் இந்து சமய அறநிலையத்துறை, By Jeyalakshmi C Updated: Sunday, October 15, 2023, 14:56 [IST].

[10] https://tamil.oneindia.com/news/chennai/10-days-navratri-festival-organized-by-hindu-religious-charities-department-in-mylapore-says-ministe-548393.html

[11] குற்றம்.குற்றமே, நவராத்திரி விழாவை தொடங்கி வைத்த முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின்..!, Web Desk, October 16, 2023 .

[12]  https://www.kuttramkuttrame.com/2023/10/16/chief-ministers-wife-durga-stalin-started-the-navratri-festival/

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்- அந்தந்த கோவில் ஆகம முறைப் படி சான்றிதழ் வைத்துக் கொண்டு அர்ச்சகர் ஆக முடியுமா?

ஓகஸ்ட்27, 2023

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்அந்தந்த கோவில் ஆகம முறைப்படி சான்றிதழ் வைத்துக் கொண்டு அர்ச்சகர் ஆக முடியுமா?

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டப்படியிலான பணி நியமனம் நடந்தது: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டப்படியிலான பணி நியமனத்தை ரத்து செய்து தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் தடை விதித்தது[1]. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தின்கீழ் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் குமாரவயலூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஜெயபாலன், பிரபு ஆகியோரை அர்ச்சகர்களாக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது[2]. அர்ச்சகர் நியமனம் தொடர்பான அறிவிப்பு 6.7.2021ல் வெளியானது[3]. இதில், முறைப்படி அர்ச்சகர் பயிற்சி பெற்ற ஜெயபாலன், பிரபு ஆகியோர் 12.8.2021ல் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர்[4]. இதை ரத்து செய்து, அந்த கோவிலில் நீண்ட காலமாக பணியாற்றும் தங்களை நியமிக்க வேண்டும் என்று கார்த்திக், பரமேஸ்வரன் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்[5]. இங்கு ஆகமம், பாரம்பரிய பயிற்சி மற்றும் ஆகம பயிற்சி சர்டிபிகேட் போன்றவற்றால், இச்சிக்கல் தொடர்கிறது[6].

புதிய சட்டத்தின் படி செய்யப் பட்ட நியமனம் நிறுத்தி வைக்கப் பட்டது: இந்த வழக்கை ஏற்கனவே நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் 24-02-2023 அன்று விசாரித்தார்[7]. அப்போது, கார்த்திக், பரமேஸ்வரன் ஆகியோரைப்போல தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கோவில்களில் பல்வேறு அர்ச்சகர்கள் சம்பளம் பெறாமலேயே, தங்களின் பணியை செய்து வருகின்றனர்[8]. அதாவது, அக்கோவிலில் முன்பே அர்ச்சகராக இருந்து வந்ததாலும், பூஜை-கிரியை முதலியவை நன்றாகத் தெரியும் என்பதாலும் அவர்கள் அவ்வாறு தொடர்வது தெரிகிறது. மேலும் புதிய அர்ச்சகர்கள் புதிய சட்டப் படி அர்ச்சாராக அந்து விட்டாலும், பழைய அர்ச்சகர்கள் உடன், ஒரு புரிதலில்-ஒப்புதலில் இருவரும் சேர்ந்து செயல்படுவதாகவும் தெரிகிறது. தனிநீதிபதி உத்தரவு எனவே ஆகம விதிகளுக்கு எதிராக ஜெயபாலன், பிரபு ஆகியோரை அர்ச்சகர்களாக தமிழக அரசு நியமித்தது ரத்து செய்யப்படுகிறது[9]. அந்த இடங்களில் கார்த்திக், பரமேஸ்வரன் ஆகியோரை நியமிப்பதை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்[10]. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யப்பட்டது[11]. அந்த மனுவில், இந்து சமய அறநிலையத்துறை சட்டங்களின்படியும், ஐகோர்ட்டு உத்தரவின்பேரிலும் தான் அர்ச்சகர்களை தமிழக அரசு நியமித்தது. இதை தனிநீதிபதி பரிசீலிக்காமல் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவரது உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

சர்டிபிகேட் / சான்றிதழ் இருந்தால் எந்த ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்: இடைக்கால தடை அந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு 11-08-2023 அன்று விசாரணைக்கு வந்தது. இவர்கள் [ஜெயபாலன், பிரபு] அர்ச்சகர்களாக இருந்தாலும் இவர்கள் முறையாக நியமிக்கப்படவில்லை. காமிக ஆகமத்தின்படி குமாரவயலூர் சுப்ரமணிய சுவாமி கோயில் நடக்கிறது. இங்கு நன்கு ஆகம விதிகளை பின்பற்றும் ஆதி வைசர், சிவாச்சாரியார் மற்றும் குருக்கள் தான் அர்ச்சகர்களாக முடியும். கோயிலின் ஆகம விதிகளுக்கு எதிராக அர்ச்சகர் நியமனம் நடந்துள்ளது என்பதால் அந்த நியமனங்களை ரத்து செய்தும், மனுதாரர்களை அர்ச்சகர்களாக நியமிப்பது குறித்து 8 வாரத்திற்குள் பரிசீலிக்க வேண்டும்,’’ என்றும் உத்தரவிட்டிருந்தார். குறிப்பிட்ட காலத்தில் அர்ச்சகர் பயிற்சி பெற்று, சர்டிபிகேட் / சான்றிதழ் பெற்று வேலைக்கு வந்து விடுகின்றனர். அதில் ஒரு-சிலரைத் தவிர மற்றவர்களால், அந்தந்த கோவில் ஆகமமுறைப்படி கிரியை-பூஜைகள் செய்ய முடியாத நிலையில், சான்றிதழ்-அர்ச்சகர்கள் இருக்கின்றனர். அந்நிலையில், பக்தர்களே அவர்களின் தரத்தை அறிந்து கொன்டு விடுகின்றனர்.

தடை விதிக்கக் கோரி மனுதாக்கல்: அப்போது அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ஏற்கனவே அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கும் சட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு வரவேற்றது. பாகுபாடின்றி அனைவரும் அர்ச்சகர் பணியை பெறும் நோக்கத்தில் இந்த நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது. ஆனால் தற்போது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும்தான் அந்த பதவிகளை பெற முடியும் என்ற ரீதியில் தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவு ஏற்புடையதல்ல. அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதாடினார். விசாரணை முடிவில், அர்ச்சகர் நியமனம் தொடர்பாக தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கிறோம். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உரிய பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர். நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரத சக்கரவர்த்தி அமர்வு: தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. குமாரவயலுார் கோயில் தக்கார், கார்த்திக், பரமேஸ்வரனுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது என உத்தரவிட்டது.

அந்தந்த கோவில் நியம ஆகமத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் போன்றவை பின்பற்ற முடியுமா?: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது சென்னை உயர்நீதி மன்ற தீர்ப்பில் தெளிவாக உள்ளது. அதே நெரத்தில் அந்தந்த கோவில்களில் நியமிக்கப்பட, அந்தந்த கோவில் நியம ஆகமத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், எல்லா பூஜைகளையும் செய்யக் கூடியவராக இருக்க வேண்டும் என்றுள்ளது. குறிப்பிட்ட ஒன்று-இரண்டு ஆண்டுகளில் எவ்வாறு கோவில் பூஜைகள் அனைத்தையும் கற்றுக் கொள்ல முடியும்? ஏதாவது, “பிராக்டிகல்ஸ்” போன்று வகுப்புகள் நடத்துவார்களா? அதே நேரத்தில், பாரம்பரியமாக அர்ச்சகராக உள்ளவர்களும் தொடரலாம் என்றும் உள்ளது. இவ்விசயத்தில் உச்சநீதி மன்றத்தில் சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருப்பினும், மாநில அளவில், தமிழக அரசு “அனைத்து ஜாதீனரும்” அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தின் படி, அர்ச்சகர் பயிற்சி பெற்று, சர்டிபிகேட்டுடன் வந்து, அர்ச்சகராகி விடுகின்றனர்.

சுகவனேஸ்வரர் கோவில் தீர்ப்பு: சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் அர்ச்சகர் நியமனத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்று கோவில் நிர்வாக அதிகாரி கடந்த 2018-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டார். இதை எதிர்த்து அங்கு பணிபுரிந்து வந்த முத்து சுப்பிரமணிய குருக்கள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, ஒரு கோவிலின் ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் தேர்ச்சிப் பெற்ற, எவராக இருந்தாலும் அர்ச்சகராக நியமிக்கலாம் என்று தீர்ப்பளித்திருந்தார். அந்த தீர்ப்பை எதிர்த்து முத்து சுப்பிரமணிய குருக்கள் சார்பில் மேல்முறையீடு தாக்கல் செய்த நிலையில், தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து முத்து சுப்ரமணிய குருக்கள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஸ்வர் மற்றும் பரிதிவாலா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது[12]. அப்போது, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடைவிதிக்க மறுத்த நீதிபதிகள், கோயில் ஆகம விதிப்படி தேர்ச்சி பெற்ற எந்த சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனக் கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்[13].

ஆகமமா, ஆகம பயிற்சியா, பரம்பரை நியமனமாபோன்றவை தொடர்பிரச்சினைகளாக இருப்பது: இன்றைக்கு பல படிப்புகளுக்கு, சர்டிபிகேட், டிப்ளோமோ, டிகிரி என்றெல்லாம் படித்தப் பிறகு கொடுக்கப் படுகிறது. ஆனால், அதை வைத்துக் கொண்டு வேலைக்கு போனால், எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அவர்கள் பலநிலைகளில் சோதிக்கப் பட்டு, உண்மையிலேயே அவ்வேலை செய்ய உகந்தவரா, செய்ய முடியுமா, திறமை உண்டா என்றெல்லாம் சோதனை செய்து தான், தேர்ந்தெடுக்கப் படுவர். ஆக, நிச்சயமாக, சமஸ்கிருதம் தெரியாமல், இந்த சான்றிதழை வாங்கிக் கொண்டு, நான் குறிப்பிட்ட ஆகமத்தில் தேர்ந்து விட்டேன், வித்வான் ஆகிவிட்டேன், ஆதலால், நான் அந்த ஆகமத்தின் படி, எல்லா கிரியைகள், சடங்குகள், பூஜைகள், சம்பிரதாயங்கல், விழாக்கள் என்று எல்லாமே செய்வேன் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டால், உண்மை தெரிந்து விடும். பி.எல் டிகிரி இருந்தால் எல்லோருமே வக்கீல், மாஜிஸ்ட்ரேட், நீதிபதி ஆகி விட முடியுமா என்று கேட்கலாம். MBBS படித்தவர்கள் எல்லோருமே டாக்டகராக / மருத்துவராக வேலை செய்வதில்லை. இன்றைக்கு அந்நிலையும் ஏற்பட்டுள்ளது. இது மற்ற துறைகளுக்கும் பொறுந்தும். அந்நிலையில்,இத்தகைய போக்கு, சட்டப் படி முறையாக அலச வேண்டியுள்ளது.

© வேதபிரகாஷ் 12-08-2023 / 27-08-2023


[1] தினத்தந்தி, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் சட்டப்படி பெற்ற பணி நியமனத்தை ரத்து செய்ததற்கு தடை, தினத்தந்தி ஆகஸ்ட் 12, 1:50 am

[2] https://www.dailythanthi.com/News/State/all-castes-are-ordained-priests-prohibition-against-cancellation-of-appointment-1028514

[3] தினகரன், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டப்படி நடந்த அர்ச்சகர்கள் நியமனத்தை ரத்து செய்த உத்தரவுக்கு தடை: ஐகோர்ட் கிளை அதிரடி, August 12, 2023, 12:54 am.

[4] https://www.dinakaran.com/allcaste_priest_cancel_icourtbranch/

[5] தினமலர், அர்ச்சகர்கள் நியமனத்தை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை உயர்நீதிமன்றம் உத்தரவு, பதிவு செய்த நாள்: ஆக 12,2023 06:10

[6] https://m.dinamalar.com/detail.php?id=3401950

[7] ஏபிபி.லைவ், Archakas Appointment: அர்ச்சகர் நியமனம் ரத்து உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி தடை, By: சுதர்சன் | Updated at : 11 Aug 2023 06:44 PM (IST), Published at : 11 Aug 2023 06:00 PM (IST).

[8] https://tamil.abplive.com/news/tamil-nadu/madras-high-court-sets-aside-single-judge-order-of-cancelling-archakas-appointment-under-tamil-nadu-govt-directive-134417

[9] இடிவி.பாரத், குமாரவயலூர் கோயில் அர்ச்சகர்களின் பணி நியமனத்தை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவிற்கு தடை..!, Published: Aug 11, 2023, 5:19 PM

[10] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/madurai/hc-madurai-bench-stays-order-of-single-judge-cancelling-appointment-of-kumaravayalur-temple-priests/tamil-nadu20230811171918018018770

[11] நக்கீரன், அர்ச்சகர் நியமனம்; சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 28/07/2023 (13:21) | Edited on 28/07/2023 (13:31),

https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/ordination-priests-madras-high-court-action

[12] தமிழ்.நியூஸ்.18,அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு, First published: August 23, 2023, 00:08 IST: LAST UPDATED : AUGUST 23, 2023, 00:08 IST.

[13] https://tamil.news18.com/national/supreme-court-disposes-of-cases-related-to-appointment-of-archakas-in-tamil-nadu-temples-1121582.html – gsc.tab=0

ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் தான் உயிர்த்தெழுந்து வந்து, இந்த போலி சைவர்கள மாற்றவேண்டும் – சத்தியவேல் முருகன், சுகி.சிவம் முதலியோர் இந்து-தூஷணம் செய்வது ஏன்?

பிப்ரவரி23, 2023

ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் தான் உயிர்த்தெழுந்து வந்து, இந்த போலி சைவர்கள மாற்றவேண்டும் – சத்தியவேல் முருகன், சுகி.சிவம் முதலியோர் இந்து-தூஷணம் செய்வது ஏன்?

.

திராவிடத்துவ ஆட்சியில், திராவிட மாடலில், திராவிட ஸ்டாக்குகளின் இந்துவிரோத செயல்பாடுகள் அதிகமாகவே வெளிப்பட்டு வருகின்றன:. பெயருக்கு “சமத்துவம்” என்றெல்லாம் கோஷமிட்டுக் கொண்டிருந்தாலும், நாத்திகம் / பகுத்தறிவு போர்வையில் இந்துக்களுக்கு எதிராக இருப்பது தெரிந்த விசயமே. பெரியாரிஸம் பேசிக் கொண்டும், இந்து மதத்தைத் தாக்கி வருகின்றனர். செக்யூலரிஸம் போர்வையில் சிறுபான்மையினர் என்ற ரீதியில், எப்பொழுதும் முஸ்லிம்கள் மற்றும் கிருத்துவர்களுக்கு ஜால்றா அடித்துக் கொண்டு காலம் தள்ளிக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களைத் தான் தமிழகத்தில் காணப் படுகிறது. இத்தகைய நிலையில், தொடர்ந்து இந்து அறநிலையத் துறையில் நுழைந்து, எப்படியாவது, கோவில்கள், கோவில் சொத்துகள், முதலியவற்றை முழுமையாக அபகரிக்க, பாரம்பரிய கோவில் கிரியைகள், பூஜைகள், கும்பாபிஷேகங்கள், முதலியவற்றில் இடையூறு செய்ய, அத்தகைய சித்தாந்தவாதிகளை நியமித்து, தங்களது திட்டத்தை நிறைவேற்ற சட்டமீறல்களிலும் ஈடுபட்டு வருவது தெரிகிறது. ஒரு புறம் வழக்குகள் நிலுவையில் இருக்கும் பொழுதே, தொட்ர்ந்து நியமனங்கள் செய்யப் படுவது, அத்தகைய அத்துமீறல்கள் மற்றும் சட்டத்தை வளைக்க முற்படும் செயல்களாகத் தான் தெரிகிண்ரன.

சத்தியவேல் முருகனை நியமித்ததை எதிர்த்து வழக்கு: கோவில்களில் அர்ச்சகர் நியமனங்களை எதிர்த்தும், அர்ச்சகர் நியமனம் தொடர்பான விதிகளை எதிர்த்தும், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது[1]. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்களில், ஆகமப்படி தான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டது[2]. ஆகம கோவில்களை கண்டறிய, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில், ஐந்து பேர் குழுவை அமைக்கவும் உத்தரவிட்டது[3]. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இருந்து, செயல்பட்டு வரும் கோவில்களின் நுலையை இப்பொழுதும் அறியப் படாத நிலையுள்ளதா என்பதே வியப்பிற்குரியதாக உள்ளது. குழு தலைவருடன் ஆலோசித்து, இருவரை குழுவில் நியமிக்க, அரசுக்கும் உத்தரவிட்டது[4]. இதையடுத்து, குழு உறுப்பினராக, அறநிலையத்துறை உயர்மட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் சத்தியவேல் முருகனை நியமித்து, அறநிலையத்துறை பிப்ரவரி 8ம் தேதி உத்தரவிட்டது[5]. சத்தியவேல் முருகன் என்பவர் “தமிழ்” போர்வையில், கோவில் வழிபாடு, முறை முதலியவற்றைத் திரித்து சமஸ்கிருத எதிர்ப்பு-விரோதம் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறார். இப்பொழுது, “திராவிட மாடல்” ஆட்சி வந்தவுடன் இவரைப் போன்றோரைத் தேர்ந்தெடுத்து, “திராவிட ஸ்டாக்கினர்” பற்பல குழுக்களில் உறுப்பினராக நியமித்து வருகின்றனர். இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்க பொதுச் செயலர் முத்துகுமார் மனு தாக்கல் செய்தார்[6]. ஆளும் திமுகவினர் வேண்டுமென்றே, சுகி.சிவம், சத்தியவேல் முருகன் போன்றோரை அறநிலையத் துறையில் நியமிப்பதை பொது மக்களும் கவனித்து வருகிறார்கள். ஏனெனில், அவர்களால் இந்துக்களுக்கு எந்த பலனும் இல்லை. முரண்பாடுகளுடன் பேசிக் கொண்டிருப்பதால், அவர்களைக் கண்டுகொள்வதும் இல்லை எனலாம்.

தாக்கல் செய்த மனுவில் உள்ளது[7]: “ஆகம கோவில்களை கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவருடன் ஆலோசித்து, உறுப்பினரை நியமிக்க வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை மீறும் வகையில், சத்தியவேல் முருகனை நியமித்து, உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. உத்தரவில், குழு தலைவருடன் ஆலோசித்ததாக எதுவும் இல்லை. ஆலோசனை நடத்தியிருந்தால், உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருக்கும். எந்த அடிப்படையில், குழு உறுப்பினராக நியமிக்க சத்தியவேல் முருகன் தகுதி பெறுகிறார் என்பதை வெளிப்படுத்தவில்லை. ஆகம விதிகளை பற்றி பொய் தகவலை பரப்புவதுதான், அவரது நோக்கம். இதை, அரசு பரிசீலிக்க தவறி விட்டது. சமஸ்கிருதம் பற்றி சத்தியவேல் முருகனுக்கு தெரியாது. ஆகமங்கள், சமஸ்கிருத மொழியில் தான் உள்ளன. எனவே, நியமன உத்தரவுக்கு, தடை விதிக்க வேண்டும்; ரத்து செய்ய வேண்டும்,” இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது[8]. சத்தியவேல் முருகன் பேசிவருவது எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான். இவ்விசயத்தில் அவர் வாயை மூடிக் கொன்டு இருப்பதையும் கவனிக்கலாம்.

விசாரணையில் நீதிமன்றம் தடை விதித்தது[9]: மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய ‘முதல் பெஞ்ச்’ முன், விசாரணைக்கு வந்தது[10]. குழுவில், சத்தியவேல்முருகனை நியமிக்கக் கூடாது என கோரிய வழக்கு, நிலுவையில் இருக்கும் நிலையில், அவரை நியமித்திருப்பதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது[11]. ஆகம விதிகளுக்கு எதிராக, அவர் பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டது[12]. இதையடுத்து, ஆகம கோவில்களை கண்டறியும் குழுவில், சத்தியவேல் முருகனை நியமித்த உத்தரவுக்கு, முதல் பெஞ்ச் தடை விதித்தது. மனுவுக்கு, நான்கு வாரங்களில் பதில் அளிக்கும்படி, அரசுக்கும், அறநிலையத்துறைக்கும், முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. இப்படியாக, இவ்வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலை தொடரும் எனலாம். மேலும், நீதிபதிகள் கட்சிகள் அதாவது அரசியல் கட்சிகளின் சிபாரிசுகள் மூலம் நியமிக்கப் பட்டு வரும் முறை இருக்கும் பொழுது, அத்தகையோர், ஆளும் கட்சியினரை மீறி, அவர்களது விருப்பங்களுக்கு எதிராக தீர்ப்புகள் வழங்குவார்களா என்ற சந்தேகமும் எழலாம்.

சத்தியவேல் முருகன் யார்? – தற்சிறப்புக் குறிப்பு[13]: விடுதலைப் போராட்ட தியாகி, அருட்பணிச் செல்வர், திருப்புகழ் சிவம் வேலூர் மு.பெருமாள் – காமாட்சி தம்பதிகளின் புதல்வர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்து மின்னியலில் பட்டம் பெற்ற பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 23 ஆண்டுகள் பொறியாளராகப் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றவர். தமிழ்மறை குடமுழுக்குகள் 1400-த்திற்கு மேலும், தமிழாகமத் திருமணங்கள் 3000-க்கு மேலும் ஆற்றியுள்ளார். அறநிலையைத் துறை மூலமாக ஓதுவார்கள், சிவாச்சாரியார்களுக்குப் பயிற்சி அளித்துள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். சைவ சித்தாந்த நுண்பொருளை உணர்ந்து மக்களிடையே சொற்பொழிவாற்றும் திறனும், தெய்வ வழிபாட்டின் வரனும் உடையவர், மிகச் சரளமாகச் செந்தமிழில் சிந்தை இனிக்கப் பேசுவதில் வல்லவர். தமிழகத்தில் தற்போது தமது தனித்திறன் கொண்ட சொல்லாற்றலால் தமிழ்வழிபாட்டைப் பரப்பி வரும் மிகப்பெரிய சைவசித்தாந்த அறிஞர், இவ்வாறு இவரது இணைதளம் கூறுகிறது. தவிர 66-பக்கம் “தற்குறிப்பு” புத்தகத்தை இங்கிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்[14].

சைவர் இந்து இல்லை என்று தூஷணங்களை செய்து வருவது: இவ்வளவு தம்மைப் பற்றி தற்புகழ்ச்சி செய்து விளம்பரப் படுத்திக் கொள்பவர் ஏன் இந்துக்களுக்கு எதிராக செயல்பட வேண்டும், இந்து விரோதிகளுக்குத் துணை போக வேண்டும்? இங்கு தான் ஏதோ விசயம் இருக்கிறது. அரசியல், அதிலும் திராவிட அரசியல், திராவிட நாத்திக அரசியல், திராவிட நாத்திக பெரியாரிஸம் பேசும் அரசியல், அப்படியே பார்ப்பன-விரோதம் என்றெல்லாம் சென்று, வேத எதிர்ப்பு, சனாதன அழிப்பு, கோவில் இடிப்பு, கோஇல் சொத்து கொள்ளை என்றெல்லாம் வளரும் பொழுது, இத்தகையோர் அத்தகைய குழுக்களில், கூட்டங்களில் சேர்கிறார்கள். திக-போன்றோர்களுடன் சேர்ந்து தூஷணங்களிலும் ஈடுபடுகிறார்கள். இத்தகைய போலித்தனத்தைக் கண்டுகொள்லவேண்டும். பட்டை-கொட்டைகளுடன், “நமசிவாய” என்று சொல்லிக் கொண்டு எவ்வாறு இந்து விரோதியாக இருக்க முடியும். அதனால் தான், ஒருநிலையில், “நாங்கள் சைவர், இந்துக்கள் அல்லர்,” என்று கூட சொல்லிக் கொள்ள ஆரம்பித்து விட்டனர். கிறிஸ்துவ-முஸ்லிம் கூட்டத்தினருடன் நட்பு கொண்டு, லட்சக் கணக்கான சிவாலங்களை துலுக்கர் இடித்துத் தள்ளியதையும் மறந்து, திப்பு ஜெயந்தியை கொண்டாட தயாரக இருக்கின்றனர். ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் தான் உயிர்த்தெழுந்து வந்து, இந்த போலி சைவர்கள மாற்றவேண்டும்.

© வேதபிரகாஷ்

23-02-2023.


[1] தினமலர், ஆகம கோவில்களை கண்டறியும் குழுவில் சத்தியவேல் முருகன், நியமனத்துக்கு தடை, Added : பிப் 16, 2023  00:01; https://www.dinamalar.com/news_detail.asp?id=3243236

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3243236

[3] தமிழ்.ஒன்.இந்தியா, கோயில்களின் ஆகமங்களை கண்டறியும் குழுவின் உறுப்பினர் சத்தியவேல் முருகன் நியமனத்திற்கு இடைக்காலத் தடை, By Vishnupriya R, Published: Wednesday, February 15, 2023, 14:00 [IST]

[4] https://tamil.oneindia.com/news/chennai/chennai-hc-interim-orders-for-appointment-of-sathiyavel-murugan-for-hindu-endowment-board-498833.html

[5] தினகரன், ஆகம அறிஞர் சத்தியவேல் முருகன் நியமனத்துக்கு ஐகோர்ட் தடை, 01:10 pm Feb 15, 2023 | dotcom@dinakaran.com(Editor)

[6] https://m.dinakaran.com/article/News_Detail/839115

[7] தினகரன், கோயில்களில் ஆகமங்களை கண்டறியும் குழுவில் ஆலோசனை குழு உறுப்பினர் நியமனத்துக்கு இடைக்கால தடை: ஐகோர்ட் உத்தரவு, 2023-02-16@ 00:56:10; https://www.dinakaran.com/news_detail.asp?Nid=839310

[8] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=839310

[9] மின்னம்பலம், ஆகமக்குழு: சத்தியவேல் முருகனார் நியமத்துக்கு இடைக்காலத் தடை!, February 15, 2023 19:35 PM IST.

[10] https://minnambalam.com/tamil-nadu/interim-stay-on-the-appointment-of-sathyavel-muruganar/

[11] செய்திசோலை, ஆகமங்களை கண்டறியும் சத்தியவேல் முருகன் நியமனத்திற்கு இடைக்கால தடைஉயர்நீதிமன்றம்.!!, February 15, 2023  MM SELVAM.

[12]https://www.seithisolai.com/%E0%AE%86%E0%AE%95%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4.php

[13] சத்தியவேல் முருகன்- ஆர் ? – தற்சிறப்புக் குறிப்பு, அவரது இண்னைத்தளத்திலிருந்து –

http://dheivathamizh.org/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/

[14] “தற்குறிப்பு” புத்தகம் – http://dheivathamizh.org/wp-content/uploads/2016/03/mu.pe_.sa-tharsirappu.pdf

சாத்தான் வேதம் ஓதும், பேய்கள் ஆட்சி செய்யும், சாத்திரங்கள் பிணங்கள் தின்னும், நெற்றியில் ரத்தம் சொரியும், குங்குமம்-விபூதி அழித்தவர்கள் பக்தி புத்தகங்கள் வெளியிடுவார்கள்! (2)

ஜனவரி20, 2023

சாத்தான் வேதம் ஓதும், பேய்கள் ஆட்சி செய்யும், சாத்திரங்கள் பிணங்கள் தின்னும், நெற்றியில் ரத்தம் சொரியும், குங்குமம்விபூதி அழித்தவர்கள் பக்தி புத்தகங்கள் வெளியிடுவார்கள்! (2)

பணிக்காலத்தில் இயற்கை எய்திய 10 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில், வேலை கொடுக்க தீர்மானிக்கப் பட்டது: ஒரு பக்கம் இந்து-அல்லாதவர்கள் எல்லாம் இந்து அறநிலையத் துறையில் வேலை செய்கிறார்கள் போன்ற குற்றச் சாட்டுகள் விவரங்களுடன் வெளியாகிக் கொன்டிருக்கின்றன. “இந்து” என்று இல்லாமலேயே சங்கங்கள் எல்லாம் செயல்பட்டு வந்து கொன்டிருக்கின்றன. பிறகு, திடீரென்று, இத்தகைய பணி நியமனங்கள் எவ்வாறு அமூல் படுத்தப் படுகின்றன என்ரு தெரியவில்லை[1]. மேலும், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள திருக்கோயில்களில் பணியாற்றி பணிக்காலத்தில் இயற்கை எய்திய 10 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில், வேலை கொடுக்க தீர்மானிக்கப் பட்டது[2]. அதனையும், இவ்விழாவுடன் இணைக்கப் பட்டு, இங்கு நடந்தேறியுள்ளது[3]. இளநிலை உதவியாளர், காவலர், கடைநிலை ஊழியர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான, பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார்[4]. அப்படியென்றால், இதை சாக்காக வைத்து, ஸ்டாலின் இங்கு வந்தார் அல்லது அங்கு வருவதற்கு இப்படியொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி / உருவாக்கப் பட்டுள்ளது என்றாகிறது. நாளைக்கு விமர்சனம் எழுந்தாலும், “காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது,” போன்ற நியாயப் படுத்தும், விளக்கமும் கொடுக்கலாம், என்று தீர்மானிக்கப் பட்டது போலும்.

திருமகள், ஹரிபிரியா முதலியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றல்…..

மற்ற அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றல்…..

பூணூல் போட்ட பார்ப்பனர்களின் பூர்ணகும்ப மரியாதை…………..

இந்நிகழ்ச்சி / நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்கள் யார்-யார்?: இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் விவரங்களையும், ஊடகங்கள் கொஞ்சம்-கொஞ்சமாகத்தான் வெளியிட்டு வருகின்றன[5]. வழக்கம் போல, தலைப்புகளை மாற்றி-மாற்றி, அதே செய்தியை வெளியிட்டுள்ளன. நிருபர் நேரில் செல்லும் பொழுது, விவரங்களை சேகரித்து சொந்தமாக, எந்த விவரத்தையும் கொடுக்க மாட்டாரா அல்லது கூடாதா என்று தெரியவில்லை[6]. டுவிட்டரில் உள்ள வீடியோவில் கலந்து கொண்டவர்களின் சில விவரங்கள் தெரிகின்றன[7]. தினத்தந்தி, மூன்று நேரங்களில், மூன்று முறை செய்திகளை வெளியிட்டுள்ளதை கவனிக்கலாம். சில அச்சு வடிவத்தில் உள்ளது மற்றும் இணைதளத்தில் உள்ளது, இரண்டிற்கு உள்ள வேறுபாட்டையும் கவனிக்கலாம். கீழே, அவை தொகுத்துக் கொடுக்கப் படுகிறது:

  • அமைச்சர் பி.கே.சேகர்பாபு[8],
  • ஆழ்வார்திருநகரி ஸ்ரீ மத் பரபஹம்ஸ ரெங்கராமானுஜ ஜீயர்,
  • குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்,
  • பேரூர் ஆதீனம், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள்,
  • ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர்[9],
  • திருவண்ணாமலை ஆதீனம் 46வது குரு மகாசன்னிதானம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்[10]
  • சட்டப்பேரவை உறுப்பினா் என்.எழிலன்[11],
  • பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்தர மோகன்[12]
  • இந்து அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன்
  • திருமகள், இந்து அறநிலையத் துறை ஆலோசனைக் குழு உறுப்பினர்.
  • ஹரிப்பிரியா, இந்து அறநிலையத் துறை ஆலோசனைக் குழு உறுப்பினர்
  • சத்தியவேல் முருகனார்.

உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சில எழுத்தாளர்கள் கௌரவிக்கப் பட்டதாகத் தெரிகிறது.

“108 அரிய பக்தி நூல்களை வெளியிட்ட முதலமைச்சர் – பின்னணி என்ன?” என்று ஏதோ பெரிய ரகசியத்தை சொல்வது போல, “இ.டிவி.பாரத்” தலைப்பிட்டாலும், உள்ளே, ஒன்றும் விசயத்தைக் காணோம்[13]. மற்ற நாளிதழ்களில் உள்ளது தான் இருக்கிறது[14].

  1. சிவபுராணம், கந்தப் புராணக் கதை, பதினெண் புராணங்கள் இவையெல்லாம் ஸ்டாலின் வெளியிட்டார் என்பதை நம்புகிறீர்களா?
  • இந்து மதம், நம்பிக்கைகள், பண்டிகைகள் என்றாலே, அவதூறு, ஆபாசம், தூஷணம் என்று செய்து வரும், இவர்களுக்கு, இது ஏன்?
  • இந்து அறநிலையத் துறையை வைத்துக் கொண்டு மிகவும் அதிகமாக அடிக்கடி விளையாடி வரும் இவர்களின் திட்டம் தான் என்ன?
  • பெரியாரிஸம், பகுத்தறிவு, திராவிடியன் ஸ்டாக், திராவிட மாடல் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு, இவ்வாறு செய்தால், இது எந்தவிதத்தில் வரும்?
  • முகமதிய, கிறிஸ்தவ கடவுள்கள் இருப்பதற்கு இந்த அளவுகள் வேலை செய்யாமல், இந்து மதத்திற்கு மட்டும் வேலை செய்யும் விதத்தைக் கவனிக்கலாம்!
  • தமிழக வக்ஃப் போர்டுக்குச் சென்று, இதே போல முகமதிய புத்தகங்கள், புராணங்கள் முதலியவற்றை புதுப்பொலிவுடன் வெளியிடுவாரா?
  • கிறிஸ்தவ பேரமைக்குச் சென்று கத்தோலிக்க, புருடெஸ்டென்ட் முதலிய புராணங்களை, பக்தி நூல்களை அப்படியே வெளியிடுவாரா?
  • அதற்கான செலவை, அந்தந்த போர்டுகள் ஏற்குமா? ஏற்றுக் கொண்டு அனுமதிப்பார்களா? அடுத்ததாகச் செய்ய முடியுமா?
  • செக்யூலரிஸம், சமத்துவம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எல்லாம் வேலை செய்யுமா, செய்யாதா என்பதை பார்ப்போம்!
  1. திருமகள், ஹரிப்பிரியா எல்லாம் இருந்தும், எந்த இந்துத்துவவாதிக்கும், எந்த சொரணையும் வரவில்லை, பிறகு ஸ்டாலின் ஜாலிதான்!

© வேதபிரகாஷ்

20-01-2023


[1] கருணை அடிப்படையில் பணி நியமனம் என்பது மத்திய அரசே கை விட்டு விட்டது. அநிலையில், தமிழக அரசு, இதிலும் எதிர்மறையாக செயல்பட இவ்வாறு செய்கிறதா, அல்லது வேறு விவகாரம் உள்ளதா என்று தெரியவில்லை.

[2] பதிரிக்கை.காம், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 108 பக்தி நூல்களை வெளியிட்டார் முதலமைச்சர் மு..ஸ்டாலின்..!, JAN 19, 2023

[3] https://patrikai.com/chief-minister-m-k-stalin-released-108-devotional-books-on-behalf-of-the-hindu-religious-charities-department/

[4] தினமணி, மறுபதிப்பு செய்யப்பட்ட 108 அரிய பக்தி நூல்கள்: முதல்வா் மு..ஸ்டாலின் வெளியிட்டார், By DIN  |   Published On : 20th January 2023 03:08 AM  |   Last Updated : 20th January 2023 03:33 AM.

[5] தமிழ்.ஒன்.இந்தியா, 108 அரிய பக்தி நூல்களை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்! தூள் கிளப்பும் இந்து சமய அறநிலையத்துறை! By Arsath Kan Published: Thursday, January 19, 2023, 12:44 [IST]

[6] https://tamil.oneindia.com/news/chennai/chief-minister-stalin-released-108-rare-devotional-books-494966.html

[7] அறிவாலயம், திமுக-இஐடி-விங்- https://twitter.com/i/status/1616020423535394816

[8]https://www.dinamani.com/tamilnadu/2023/jan/20/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-108-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-3986985.html

[9] தினகரன், புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்ட 108 பக்தி நூல்கள் வெளியீடு: முதல்வர் மு..ஸ்டாலின் வெளியிட்டார், 2023-01-20@ 00:33:10.

[10] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=831765

[11] மாலைமுரசு, தேவாரம், திருவாசகம் உட்பட 108 பக்தி நூல்களை வெளியிட்டார் முதலமைச்சர்…!, Tamil Selvi SelvakumarTamil Selvi SelvakumarJan 19, 2023 – 14:27038

[12] https://www.malaimurasu.com/posts/tamilnadu/eb-with-adhar-details

[13] இ.டிவி.பாரத், 108 அரிய பக்தி நூல்களை வெளியிட்ட முதலமைச்சர்பின்னணி என்ன?, Published on: Jan 19, 2023, 10:48 PM IST

[14] https://www.etvbharat.com/amp/tamil/tamil-nadu/state/chennai/chief-minister-mk-stalin-published-108-rare-devotional-books-in-chennai/tamil-nadu20230119224805573573653

தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை..

அறிக்கையில் விளக்கத்தைக் காணலாம்…

இப்புத்தகங்கள் விற்பனைக்கு…..

ஆகமங்கள் பற்றி திடீரென்று கேள்விகள் கேட்கும் திராவிடத்து வ அரசு, அதன் சார்புடைய பெரியாரிஸ முருகனார், சிவனார், நந்தியார் முதலியோர்! (1)

திசெம்பர்9, 2022

ஆகமங்கள் பற்றி திடீரென்று கேள்விகள் கேட்கும் திராவிடத்துவ அரசு, அதன் சார்புடைய பெரியாரிஸ முருகனார், சிவனார், நந்தியார் முதலியோர்! (1)

திமுக ஆட்சிக்கு வருதல், இந்து அறநிலையத் துறையில் திராவிடத்துவவாதிகளின் தலையீடு அதிகமாதல்: திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இந்து அறநிலையத் துறையில் திராவிடத்துவவாதிகள், பெரியாரிஸ்டுகள், பகுத்தறிவுவாதிகள் முதலியோர்களின் நுழைவு, மூக்கு நுழைப்பு முதலியன அதிகமாகிக் கொண்டு வருகின்றது. “அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர், தமிழ் அர்ச்சனை” என்று ஆரம்பித்து, தினசரி நடக்கும் பூஜைகள், கிரியைகள், சடங்குகள் முதலியவற்றுள் தலையிட ஆரம்பித்துள்ளனர். நீதிமன்றங்களில் பல வழக்குகளில் சிக்கியுள்ள நிலைகளில், அவற்றை நீர்க்க, பர்பல வழிகளில் வேறு விதமாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் தான், கோவில்கள் பற்றி ஸ்டாலினே பேசி வருவதும் தெரிகிறது. இல்லையெனில் இவர்களுக்ககிதைப் பற்றிப் பேச வேண்டிய தேவை-அவசியம் இல்லை. இந்து அறநிலையத் துறை, அரசு முதலியவற்றின் ஆதரவு, நிதியுதவி போன்றவை இல்லாமல் இருந்தாலும், பக்தர்களின் உதவியுடன் பல காரியங்கள் நடந்து கொண்டிருந்தன. ஆனால், இப்பொழுது, எல்லாவற்றிற்கும் அரசு அனுமதி தேவை, எல்லாமே, முதலமைச்சர் உத்தரவுடன் நடக்கின்றன, இந்து அறநிலையத் துறை அமைச்சரின் தயவில் நடக்கின்றன என்பது போலக் காட்டிக் கொண்டு, விளம்பரம் தேடும் வகையில் நடந்து கொண்டிருக்கின்றன.

கோவில் பாதுகாப்பு ஆர்வலர்கள் வழக்குத் தொடுத்தல்: இந்து அறநிலையத் துறை சார்பில்பல குழுக்கள் உருவாக்கப் பட்டு, அவற்றில், திராவிடத்துவவாதிகள், பெரியாரிஸ்டுகள், பகுத்தறிவுவாதிகள், கம்யூனிஸ்டுகள் என்று இந்துவிரோதிகளும் நுழைய ஆரம்பித்து விட்டார்கள். இவ்விசயம் தெரிய வரும் பொழுது, பக்தர்கள் சங்கடமடைகிறார்கள். அத்தகைய நுழைவுகள், சதாய்ப்புகள், அத்துமீறல்கள் எப்படி, ஏன் நடக்கின்றன என்பது திகைப்பாக இருக்கின்றன. எடுத்துக் காட்டும் போது, அரசியல் மயமாக்குகிறார்கள், கம்யூனலிஸமாக்குகிறர்கள், காவிமயம் ஆக்குகிறார்கள் என்றெல்லாம் திரிபு விளக்கம் கொடுத்து திசைத் திருப்பிவருகிறார்கள். அந்நிலையில், ஆலயங்கள் சம்பந்தப் பட்ட திருப்பணிகள், சேவைகள், கிரியைகள் முதலியவற்றில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் தலையிட்டு வருவதால், பக்தர்களுக்கு சந்தேகங்கள் அதிகமாகிக் கொண்டு வருகின்றன. இந்நிலையில், “ஆலயம் காப்போம்” போன்ற இயக்கங்களின் சார்பாக, சட்டப்படி செல்ல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

கோயில்களின் ஆகமங்களை கண்டறிவது தொடர்பாக 50 கேள்விகளுடன் அனுப்பப்பட்ட அறநிலையத்துறையின் சுற்றறிக்கை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் ஆகம விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து ஆணையர் குமரகுருபரன் மண்டல இணை ஆணையர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்[1]. இதுகுறித்து ஆணையர் குமரகுருபரன் மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை[2]:

  1. கோயில் அமைந்துள்ள ஊர்ப் பெயர் மற்றும் கோயிலின் பெயர், இறைவன் – இறைவியர் பெயர்,
  2. சைவக் கோயில் எனில் பாடல் பெற்ற கோயிலா, வைப்புத்தலம் பாடிய நாயன்மார்கள் பெயர்/பெயர்கள் யாவை.
  3. கோயில் வைணவக் கோயில் எனில் மங்களாசாசனம் பெற்ற கோயிலா. பாடிய ஆழ்வார்கள் பெயர்கள் யாவை.
  4. கோயில் முருகன் கோயிலா, படைவீட்டில் ஒன்றா திருப்புகழ், பிள்ளைத்தமிழ் போன்ற பாடல்கள்  பாடப்பெற்ற கோயிலா.
  5. கல்வெட்டுச் சான்றுகள் உள்ளனவா. கோயில் எத்தனை ஆண்டுகள் பழமையானது. வரலாற்றுக்கு முற்பட்டதா அல்லது பிற்பட்டதா.
  6. கோயில் வழிபாடு எந்த ஆகமத்தின்படி நடைபெறுகிறது. கட்டுமான ஆகமம் எதுவோ அதே ஆகமப்படி தான் வழிபாடுகளும் நடைபெறுகின்றனவா.
  7. கோயில் வழிபாடு குறிப்பிட்ட ஆகமப்படி நடைபெறவில்லை என்றால், வேறு ஏதேனும் ஆகமபந்ததியில் நடைபெறுகிறதா. 
  8. கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது? என்றால் எந்த நாளிலிருந்து எத்தனை நாட்கள் நடைபெறுகின்றன. அது எதில் தொடங்கி எதில் முடிகிறது.
  9. கோயிலில் தேவியுடன் சுவாமியா அல்லது, பிராட்டிக்குத் தனி சந்நிதி உள்ளதா.
  10. கோயிலில் பாஞ்சராத்ரப்படி பரம் வியூகம், விபவம், அந்தர்யாமித்யம், அரிச்சை ஆகிய இவ்வகை வழிபாடுகளும் நடைபெறுகின்றனவா.
  11. கோயில் வடகலையைச் சேர்ந்ததா அல்லது தென்கலையைச் சேர்ந்ததா.
  12. கோயில் வழிபாட்டில் மந்திராசனம், ஸ்நானாசனம், அலங்காராசனம். போசன ஆசனம். புனரி மந்த்ராசனம், பரியங்காசனம் ஆகிய ஆறு ஆசனங்களும் கற்பிக்கப்பட்டு முறைப்படி வழிபாடு நடைபெறுகிறதா.
  13. கோயில் அர்ச்சகர்கள் ஆகமப்படி தாபம் என்கிற வகை தீக்கையால் தோளில் சங்கு, சக்கரம் பொறிக்கப்பட்டவர்களா.
  14. எவ்வகைத் தீக்கை பெற்றவர்கள்.  கோயில் அகோபில மடத்தைச் சார்ந்ததா ஜீயர் மடத்தைச் சார்ந்ததா. மார்கழி மாதம் முன்பத்து, பின்பத்து விழா கடைப்பிடிக்கப்படுகிறதா? என்று விளக்கம் அளிக்க வேண்டும்[3].  

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது[4].

60-70 திராவிடத்துவ ஆட்சி காலத்தில் ஒன்றும் செய்யாமல் 2022ல் ஏன் கேள்விகள் கேட்க வேண்டும்?: ஏதோ இவற்றையெல்லாம் இப்பொழுது தான் புதியதாக அறியப் பட்டவை போல, கேள்விகள் எழுப்பப் பட்டுள்ளன். உண்மையில், ஆகமங்களின் படி, ஆகம விதிமுறைகளின் படி கட்டப் பட்ட கோவில்களின் நிலை இப்பொழுது ஏன், இவ்வாறு இருக்கின்றன; நன்றாக இயங்கிக் கொண்டிருந்த கோவில்கள் ஏன் சிதிலமடைந்து கிடக்கின்றன; கடந்த 60-70 திராவிடத்துவ ஆட்சிகாலத்தில் ஏன் கண்டு கொள்லாவில்லை; நடந்து கொண்டிருந்த பல கிரியைகள், சடங்குகள், பூஜைகள், விழாக்கள் ஏன் நடைபெறாமல் இருக்கின்றன, இப்பொழுது 2022ல் ஏன் இத்தனை கேள்விகளை எழுப்ப வேண்டும், இதன் பின்னணி என்ன என்றெல்லாம் ஆராய்ந்தல், அவர்களது, இந்துவிரோதம் தான் வெளிப்படும். அதை மறைக்கத்தான், இத்தனை வேடம் போட்டு, கோவில்களைப் பற்றி பேசி வருகின்றனர்.

சத்தியவேல் முருகன் மேற்குறிப்பிட்டவை உட்பட, 50 கேள்விகள் தயாரித்ததாகத் தெரிகிறது: கோயில்களின் ஆகமங்களை கண்டறிவது தொடர்பாக 50 கேள்விகளுடன் அனுப்பப்பட்ட அறநிலையத்துறையின் சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[5]. தமிழகத்தில் கோயில்களில் அர்ச்சகர் நியமனம் விதிகளை எதிர்த்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆகம விதிப்படி அர்ச்சர்களை நியமிக்க வேண்டும் என்பதால், எந்தெந்த கோயில்கள் எந்தெந்த ஆகமங்களை பின்பற்றுகின்றன என்பதை அடையாளம் காண உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில் ஐந்து பேர் குழுவை நியமித்து உத்தரவிட்டது[6]. இக்குழுவில், குழு தலைவர் ஒப்புதலுடன் இரு உறுப்பினர்களை அரசு  நியமிக்கவும் அறிவுறுத்தியிருந்தது[7]. இந்நிலையில், கோயில்களின் ஆகமங்களை அடையாளம் காண, அறநிலையத்துறை உயர்மட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் சத்தியவேல் முருகன் மேற்குறிப்பிட்டவை உட்பட, 50 கேள்விகள் தயாரித்ததாகத் தெரிகிறது. தயாரித்த கேள்விளுக்கு விடையளிக்கும்படி, அனைத்து கோயில்களுக்கும் அறநிலையத்துறை ஆணையர் சார்பில் அனுப்பப்பட்ட நவ.4-ம் தேதியிட்ட சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளது.

© வேதபிரகாஷ்

08-12-2022


[1] தினகரன், அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ஆகம விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா?: அறிக்கை அளிக்க ஆணையர் குமரகுருபரன் உத்தரவு, 2022-11-28@ 00:48:21

[2] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=817892

[3] தமிழ்.நியூஸ்.18, தமிழகத்தில் கோயில்களில் பின்பற்றப்படும் ஆகமங்கள் என்னென்ன? அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு, NEWS18 TAMIL, LAST UPDATED : NOVEMBER 24, 2022, 14:04 IST, Published by: Vaijayanthi S, First published: November 24, 2022, 14:04 IST.

[4] https://tamil.news18.com/news/spiritual/what-are-the-agamas-followed-in-temples-order-to-file-report-hrnc-843488.html

[5] காமதேனு, ஆகமம் கண்டறிவது தொடர்பான 50 கேள்விகள்: அறநிலையத் துறையின் சுற்றறிக்கைக்கு இடைக்காலத்தடை, Updated on : 8 Dec, 2022, 2:13 pm.

[6] https://kamadenu.hindutamil.in/national/hc-orders-interim-stay-on-circular-issued-by-hindu-religious-charities-department-to-locate-temple-agama

[7] தமிழ்.இந்து, 50 கேள்விகளுடன் அறநிலையத்துறை அனுப்பிய சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு, ஆர்.பாலசரவணக்குமார், Published : 08 Dec 2022 03:09 PM; Last Updated : 08 Dec 2022 03:09 PM.