Archive for the ‘சட்டம்’ Category

சனிக்கு கோவில்கள் உருவாகும் விதம்–குச்சனூர் கோவில் பிரச்சினை – கோவிலை வைத்து நாத்திகர்கள் செய்யும் வியாபாரங்கள் (4)

ஜனவரி13, 2024

சனிக்கு கோவில்கள் உருவாகும்விதம் குச்சனூர் கோவில் பிரச்சினை கோவிலை வைத்து நாத்திகர்கள் செய்யும் வியாபாரங்கள் (4)

ரியல் எஸ்டேட்கோவில் வியாபாரம் உதலியவை: இத்தகைய சூழ்நிலையில் தான் இப்பொழுது இவ்வாறு புதிய கோவில்களை உருவாக்குவது அல்லது இருக்கின்ற கோவில்களை மாற்றுவது அதை வைத்து வியாபாரம் செய்வது, சாலைகளை போடுவது, அந்த குறிப்பிட்ட நிலங்களின் விலையை அதிகமாக்குவது, இதன் மூலம் ரியல் எஸ்டேட் வியாபாரத்தை பெருக்குவது, என்று பல வழிகளில் வணிகமயமாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் எத்தகைய குறிப்பிட்ட கோவில்களைத் தேர்ந்தெடுத்து அதை வைத்துக்கொண்டு எவ்வாறு ஒரு சங்கிலி போன்ற வியாபாரம் முறையில் திட்டங்கள் எல்லாம் செயல்பட்டு வருகின்றன என்பதையும் கவனிக்கலாம். கோவில் முக்கியத்துவம் பெற வேண்டும் என்றால், அதற்கு உண்டான வழிமுறைகள் அதாவது புதியதாக பக்தர்கள் வருவது, அவர்களை நம்பிக்கை அதிகமாகவது அல்லது அதிகமாக்குவது, அதற்கு உண்டான பிரச்சாரங்களை நடத்துவது போன்றவை வருகிறா அல்லது உண்மையிலேயே இருக்கும்கோவிலுக்கு எதையாவது செய்ய உதவுகிறார்களா என்று ஆராய்ந்தால், இந்த நாத்திக-பெரியாரிஸ கும்பல்களின் நோக்கம் தெரிந்து விடும்.

புதிய ஜோதிடர்கள்அர்ச்சகர்கள் உருவாக்கப் படுவது ஏன்?: நிச்சயமாக பகுத்தறிவு, பெரியாரிஸ சித்தாந்தம், திராவிட மாடல், இந்து விரோதம், சனாதன ஒழிப்பு என்பதெல்லாம் இவற்றிற்கு துணையாக இருக்காது. எந்த பலனையும் கொடுக்காது. ஆகவே இங்கு இத்தகைய ஆன்மீக பக்தி பரசத்துடன் வியாபாரத்திற்கு உண்டான முறையில் வழிமுறைகளை உருவாக்குவதற்கு நிச்சயமாக அதிக விவரங்கள் தெரிந்தவர்கள் தான் துணை போக வேண்டும். அதனால் தான் சில ஜோதிடர்கள், சில அர்ச்சகர்கள் என்றெல்லாம் உருவாக்கப்படுகிறார்கள். அவர்கள் புதிய-புதிய கதைகளை உருவாக்குகிறார்கள், ஆதாரமாக புராணங்களை உருவாகுகிறார்கள். இந்த பலன் வேண்டுமானால் இத்தகைய பூஜைகள் செய்ய வேண்டும் கஷ்டங்கள் நீங்க வேண்டுமானால்,  பரிகாரங்கள் செய்ய வேண்டும், இந்த கோவிலுக்கு எல்லாம் சென்று வர வேண்டும் என்றெல்லாம் புதிய புதிய வழக்கங்களை அறிமுகப்படுத்தப் படுகின்றன. ஆகவே ஒவ்வொரு வார இறுதியிலும் சனி ஞாயிறு விடுமுறை காலங்களில் தூரத்திலிருந்து கூட கார்கள், வேன்கள் என்று கூட்டம்- கூட்டமாக பக்தர்கள் வர ஆரம்பித்து விடுகிறார்கள்.

பக்தர்கள் கூட்டம் அதிகமாகும் பொழுது, அடவாடி வியாபாரமும் அதிகமாகிறது: ஏதோ ஒரு நாள் இரு நாள் அப்படியே குடும்பத்துடன் வந்து சென்று விடுகிறார்கள் என்றாலும், நாளுக்கு நாள் கூட்டம் 100, 200, 500, 1000 என்று அதிகமாக வரும் நிலையில் அவர்களுக்கு வேண்டிய உணவு, கழிவிடம் வசதிகள் எல்லாம் செய்து கொடுக்க வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. இங்குதான் வியாபாரமயமாக்கம்- உண்மையான பக்தர்கள் மற்றும் உள்ளூர் ஆட்கள், மக்களை சுரண்டும் கோஷ்டிகள் -இவர்களுக்குள் பிரச்சனை ஏற்படுகிறது. ஏனெனில் உள்ளூர் மக்ககள் உண்மையாக இத்தருணத்தை தங்களுக்கு உபயமாக கொண்டு வசதிகளை ஏற்படுத்து வருமானத்தை ஈட்டலாம். சுற்றுலா என்று வரும் பொழுதும் தீர்த்த யாத்திரை என்று வரும் பொழுதும் இது ஒரு சாதாரண விஷயமே. ஆனால் குறிப்பிட நாட்களில் ஆயிரக்கணக்கில், நூற்றுக்கணக்கில் மக்கள் வருவார்கள், அதனால் அதை வைத்து வியாபாரம் செய்யலாம், கொழுத்தலாபத்தை ஈட்டலாம் என்ற நோக்கத்துடன் ஏதோ வசதிகளை செய்கிறேன் என்று கழிப்பிடத்திற்கு ஐம்பது ரூபாய் -நூறு ரூபாய் என்றெல்லாம் வசூல் செய்வது, வாகங்களை நிறுத்துவதற்கு 50-100 ரூபாய் என்று ரசீது போட்டு அடாவடித்தனம் செய்வது, போன்றவற்றில் மனக்கசப்பு, வெறுப்பு முதலியவை பக்தர்களுக்கு ஏற்படுகின்றன.

பக்தர்களை, பக்தியை பாதிக்கும் அடாவடி அயோக்கியத் தனமான வியாபாரங்கள்: அதே மாதிரி பூஜைக்கு வேண்டிய பொருள்களை விற்பதிலும் இரண்டு, மூன்று மடங்குகள் வைத்து விற்பது போன்ற காரியங்களை நம் கண்கூடாக இத்தகைய இடங்களில் கவனிக்கலாம். அதிலும் பொதுவாக உபயோகப்படுத்தப்பட்ட பூக்கள், பழங்கள், எண்ணை போன்றவை, அதிலும் பரிகாரங்களுக்கு கொடுக்கப்படுகின்ற பொருட்கள் இவை எல்லாமே மறுபடியும் மறுபடியும் கடைகளுக்கு வருவது, அதனை திருப்பி கொடுப்பது போன்ற செயல்களையும் நாம் கவனிக்கலாம். இத்தகைய, “சுழற்சி” வியாபாரம் பக்தி, பக்தர்களின் நம்பிக்கை முதலியவை சோதனைக்குள்ளாகி புனிதமும் கெட்டு விடுகிறது. ஆக இதில் பூஜாரி முதல் கடைநிலை ஊழியர் வரை அனைவரின் புனிதமற்ற காரியங்களையும் கவனிக்கலாம். மனசாட்சிக்கு உகந்து அல்லது விரோதமாக செய்கிறார்களா இல்லையா என்று ஆராய வேண்டா, ஆனால், நிச்சயமாக இந்த பூஜை-புனஸ்காரர்களில் ஈடுபடுபவர்கள் செய்யக் கூடாது. செய்ஜுறார்கள் என்றால், அதையும், “கலிகாலம்,” என்று சொல்லி நியாயப் படுத்தி விடலாம்.

பக்தர்களுக்கு ஏற்படும் பாதிப்பு: ஒருவிதத்தில், உண்மையான சிரத்தையான பக்தர்கள் இவற்றையெல்லாம் கவனிக்கும் பொழுது அல்லது தெரிந்து கொள்ளும் பொழுது, மிகவும் மன வருத்தம் அடைகிறார்கள். இதனாலும், பக்தர்களுக்கு நாளடைவில் பாதிப்பு ஏற்படுகிறது. வெறுத்து விடுகிறார்கள். கிருபானந்தவாரியாரியே மிரட்டிய கும்பல்களும் இந்த தமிழகத்தில் இருந்தார்கள். ஆக, சாதாரணமான, அப்பாவி பக்தர்கள் என்ன செய்ய முடியும். ஒருவேளை அயோத்தியா மண்டபத்தில் தருப்பைப் புல் விற்றுக் கொண்டிருந்த எழை பிராமணர்களை கத்தியால் வெட்டியது போல, வெட்டவும் அந்த பெரியாரிஸ்டுகள் தயாராக இருக்கலாம். பாதி பக்தர்களுக்கு வேண்டுதல் நடக்கிறது, பாதி பக்தர்களுக்கு வேண்டியது நடக்கவில்லை என்றால், “நடக்கவில்லை,” என்று பக்தர் என்றும் சொல்ல மாட்டார், தனக்குக் கொடுப்பினை இல்லை என்று அமைதியாக இருப்பார். ஆனால், பலன் பெற்றவர் சொல்லும் பொழுது, சொல்ல வைக்கும் பொழுது, இதற்கு விளம்பரம் கொடுத்து பரப்பும் பொழுது, சுற்றியுள்ள வியாபாரிகளுக்கு வியாபாரம் வளர்கிறது.

இந்துவிரோத-பெரியாரிஸ்டுகள் வளரும் விதம்: கிராமங்களில், தொலைவில் இருக்குமிடங்களில் உள்ள கோவில்களுக்குச் செல்லும் பொழுது, இத்தகைய பெரியாரிஸ்டுகள், இந்துவிரோதிகள், முதலியவர்களை எதிர்த்து சாதாரண மக்கள் ஒன்றும் செய்ய முடியாது. ஒருவேளை அவர்களுக்கும் அர்சியல் பின்னணி இருந்தால், தட்டிக் கேட்கலாம், ஆனால், அவர்கள் தனியாகக் கவனிக்கப் பட்டு, அனுப்பப் படுவார்கள். கோவில்-வளர்க்கும் வியாபாரங்களும் இந்த மனிதர்களுக்குத் தான் கிடைக்கின்றன, கிடைக்கும். அரசியல் ஆதிக்கம் கொண்டவர்களுக்கு எல்லா “ஆர்டர்களும், டெண்ர்களும்” கிடைக்கின்றன. பிறகு, அக்கோவிலையே கட்ட்ப் படுத்தும் அளவுக்கு “தாதாவாகிறார்கள்.” சிறப்பு தரிசனத்திற்கு, விஐபிக்கள் அவர்களிடம் தான் செல்ல வேண்டும். அப்படித்தான், நடந்து வருகிறது. இதனால் தான், இவர்கள் எல்லோருமே இந்துக்களாகத் தான் இருக்கிறார்கள், இந்துவிரோதிகளாக இருந்தாலும் ஓட்டுப் போடுகிறார்கள். சனி இவர்களைப் பிடிப்பதில்லை, மற்றவர்களைத் தான் பிடிக்கிறது. அதையும் இந்நாத்திகர்கள் பெருமையாக சொல்லிக் காட்டுவார்கள்.

© வேதபிரகாஷ்

13-10-2024

சனிக்கு கோவில்கள் உருவாகும் விதம்–குச்சனூர் கோவில் பிரச்சினை – அறங்காவலர்களுக்கே ஒப்படைக்க நீதிமன்ற தீர்ப்பு (3)

ஜனவரி13, 2024

சனிக்கு கோவில்கள் உருவாகும்விதம் குச்சனூர் கோவில் பிரச்சினை அறங்காவலர்களுக்கே ஒப்படைக்க நீதிமன்ற தீர்ப்பு (3)

ஆடித் திருவிழாவும், நீதிமன்ற தீர்ப்பும் உணவு தரம் சோதனையும்:  ஆடித் திருவிழா ஜூலை 22ஆம் தேதி 2023 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இங்கு நவக்கிரக தெய்வங்களில் ஒருவரான சனி பகவான், சுயம்பு வடிவில் மூலவராகக் காட்சி தருவாதலும், திருநள்ளாற்றுக்கு அடுத்தபடியாக பிரசித்திபெற்ற கோயிலாக குச்சனூர் சனீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த சனீஸ்வர பகவான் கோயிலில் ஒவ்வொரு ஆடி சனிக்கிழமைகளிலும் கோலாகலமாக திருவிழா தொடங்கி வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி கடந்த சனிக்கிழமை (ஜூலை 22) ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும் இக்கோயிலின் ஆடித்திருவிழாவிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவது வழக்கம். இந்த ஆண்டு ஆடித்திருவிழா தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கோயில் பகுதி அருகே அமைக்கப்பட்டுள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால், பலர் கடை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

உணவு சோதனை உண்டாக்கிய கலவரம்: கோயிலைச் சுற்றியுள்ள பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் உணவு தரமானதாகவும் பாதுகாப்பாகவும் உள்ளதா என்பதை அறிய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்[1]. டீக்கடை, ஹோட்டல், பழக்கடை உள்ளிட்டப் பல்வேறு கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தனர்[2]. மேலும் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் புழக்கத்தில் உள்ளதா, காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா, லேபிள் ஒட்டப்பட்ட உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா, உரிய அனுமதி பெற்று உணவுப்பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து பல்வேறு ஆய்வுகளை அதிகாரிகள் மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளான சுரேஷ் கண்ணன், மணிமாறன் ஆகியோர் முறையாக விதிகளை பின்பற்றாத வியாபாரிகளை எச்சரித்ததோடு தரமற்ற உணவுப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் மிகவும் பிரசித்திபெற்ற திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

16-12-2023 ஆர்பாட்டம்: தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குச்சனூர் சனீஸ்வரன் திருக்கோயிலை பரம்பரை அறங்காவலர்களிடம் ஒப்படைக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை இந்து அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நிலையில் அந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்தி கோரி சனீஸ்வரன் கோயிலை பரம்பரை அறங்காவலர்களும் ஒப்படைக்க வலியுறுத்தியும், கோயிலில் நடைபெற்று வரும் முறைகேடுகளை சுட்டிக்காட்டியும் இந்து முன்னணி சார்பாக குச்சனூர் சனீஸ்வரன் கோயில் வாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து முன்னணியின் கோட்டச் செயலாளர் கோம்பைகணேசன் தலைமையில் நடத்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் சுந்தர். பாலமுருகன், ராம் செல்வா, சசிகுமார் , பாண்டியன், ஆட்டோ முன்னணி ஆச்சி கார்த்திக் உட்பட ஒன்றிய , நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்[3]. சின்னமனூர் காவல்துறை ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் ஆர்ப்பாட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கினர்[4].

23-12-2023 ஆர்பாட்டம்: நீதிமன்றம் உத்தரவின் பேரில் சனீஸ்வரா் கோயில் நிர்வாகத்தை அறங்காவலா் குழுவிடம் ஒப்படைக்க வலியுறுத்தி வெள்ளாளா் அமைப்பு சார்பில் 23-12-2023 சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாநில மாணவா் அணிச் செயலா் தினேஷ்குமார் தலைமை வகித்தார். மாநிலத் தலைவா் அண்ணா சரவணன் முன்னிலை வகித்தார். முன்னதாக, மாநில மகளிர் அணித் தலைவி தமிழ்செல்வி மணிகண்டன் வரவேற்றார். அதில், குச்சனூா் சனீஸ்வரா் கோயில் முன்பு ஊா்வலமாக சென்றவா்கள், சென்னை உயா்நீதி மன்றம் மதுரைக் கிளையின் உத்தரவின் பேரில் குச்சனூா் சனீஸ்வரா் கோயில் நிர்வாகத்தை அறங்காவலா் குழுவிடம் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன முழக்கம் எழுப்பினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் வெள்ளாளா் அமைப்பைச் சோ்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனா்[5]. சின்னமனூா் காவல் சார்பில் ஆய்வாளா் மாயன் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனா்[6].

2003 முதல் 2023 வரை: 2003 இல் இருந்து 2020 வரை இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இக்கோவில் இருந்தது. ஆனால் அக்காலகட்டத்தில் என்ன நடந்தது எதற்காக வேண்டி, மறுபடியும் 2023 இல் அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருந்து கோவில் மீட்கப்பட்டது, தனியார் நிர்வாகத்திற்கு வந்துள்ளது, என்பதை எல்லாம் கவனிக்க வேண்டிய உள்ளது. முன்னர், பரம்பரையாக இக்ககோவிலை பராமரித்து வந்துள்ளனர். அதேபோல இப்பொழுது 20 ஆண்டுகளுக்கு பிறகு மறுபடியும் அந்த குழுவிற்கு சென்றுள்ளது என்பது தெரிகிறது. இது அந்த குறிப்பிட்ட கோவிலும் பிரச்சனை ஆக எடுத்துக் கொள்வதால் அல்லது பொதுவாக கோவில்கள் எல்லாம் அறநிலையக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்ற நடக்கும் போராட்டத்தின் அம்சமாக எடுத்துக் கொள்வதா என்பது கவனிக்க வேண்டி உள்ளது. ஏனெனில் இங்கு பக்தர்களின் பலன்கள் அவர்களுக்கு வேண்டிய வசதிகள் விவரங்கள் என்பதை பற்றி யோசித்துப் பார்த்தால் அவையெல்லாம் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட விசேஷமான நாட்கள், காலம் என்ற வரையறுக்கப் பட்டதாக இருக்கிறது. மற்ற நேரங்களில் அவர்கள் இருக்க மட்டார்கள். ஆகவே, அவர்கள் இதில் தலையிட மாட்டார்கள் மற்றும் அவற்றிற்கும் அவர்களுக்கும் சம்பந்தமும் இல்லை என்பது நன்றாக தெரிந்த விஷயம் தான்.

இப்பொழுதெல்லாம் வியாபாரமயப்பாக்கம் என்பது கோவில்களை மையமாக வைத்து பெரும்பாலாக நடந்து வருகின்றன என்பது கவனிக்க முடிகிறது. தமிழகத்தை பொறுத்த வரைக்கும் திராவிடத்துவ சித்தாந்தம் திராவிட கட்சிகள், பெரியாரிஸம் என்று பேசி விடுகின்ற பகுத்தறிவு- நாத்திக கூட்டங்கள் எல்லாமே மதத்திற்கு எதிராக குறிப்பாக கடவுள் மறுப்பு, இந்துகளுக்கு எதிராக செயல்பட்டு வருகின்ற நிலை தான் உள்ளது. தமிழகத்தில் இருக்கின்ற லட்சுக்கணக்கான கோவில்கள் மற்றும் அவற்றிற்கு சொந்தமாக இருக்கின்ற பல கோடி ஏக்கர்கள் பரப்புள்ள விளைநிலங்கள், சொத்துகள், மடாலயங்கள் எல்லாம் எடுத்து ஆர்த்தால், அதனுடைய மதிப்பு எங்கோ செல்கிறது. கடந்த 70 ஆண்டுகள் ஆண்டுகள் கோவில் நிலங்களை பலரது ஆக்கிரமிப்பில் இருந்து வந்துள்ளன. தெய்வம் நம்பிக்கை இல்லாதவர், மேலும் இந்துக்களே இல்லாதவர் என்று இருப்பவர்களிடம் தான் நிலங்கள் குத்தகைக்கு  வாடகைக்கு சென்றுள்ளன. அவர்கள் தொடர்ந்து அனுபவித்து ஆனால், கோவில் நிலங்களுக்கு உண்டான வாடகை மற்றும் குத்தகை பணத்தை கூட கொடுக்காமல் ஏமாற்றி வருகின்றனர். மேலும், அந்நிலங்கள் தங்களுக்கே கொடுக்க வேண்டும் என்று பட்டா கேட்டும் வருகின்றனர் இன்னும் சொல்ல போனால் சில இடங்களில் அவ்வாறு அவர்கள் பட்டாக்களை கூட அதாவது கோவில் நிலங்களை இந்துக்கள் அல்லாதவர்களை ஆக்கமிருந்து கொண்டு அவர்கள் தங்களது சொந்த பயன்பாட்டிற்காக பட்டா போட்டு மாற்றிக் கொண்டுள்ளனர்.

© வேதபிரகாஷ்

13-10-2024


[1] இ.டிவி.பாரத், Kuchanur சனீஸ்வர பகவான் கோயில் ஆடித்திருவிழா: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு!, Published: Jul 24, 2023, 12:46 PM.

[2] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/theni/kuchanur-saneeswara-bhagavan-temple-aadi-festival-food-safety-department-officials-inspection/tamil-nadu20230724124623084084899

[3] தமிழ்.லோகல், குச்சனூர் சனீஸ்வரன் கோயில் முன்பு இந்து முன்னணி ஆர்ப்பாட்டம், By yasar, Dec 17, 2023, 19:12 IST.

[4] https://tamil.getlokalapp.com/tamilnadu-news/theni/andipatti/hindu-front-demonstration-in-front-of-kuchanur-saneeswaran-temple-12242854

[5] தினமணி, குச்சனூரில் வெள்ளாளா் அமைப்பு சார்பில் ஆா்ப்பாட்டம், By DIN  |   Published On : 26th December 2023 12:00 AM  |   Last Updated : 26th December 2023 12:00 AM.

[6] https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2023/dec/26/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D–%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-4128484.html

சனிக்கு கோவில்கள் உருவாகும் விதம் – குச்சனூர் கோவில் பிரச்சினை (1)

ஜனவரி13, 2024

சனிக்கு கோவில்கள் உருவாகும்விதம் குச்சனூர் கோவில் பிரச்சினை (1)

சனிசனீஸ்வரன் சனிபகவான் என்று மாறிவரும் நிலை: சமீப காலத்தில் சனி படுத்தும் பாடு அதிகமாகவே இருக்கிஅரது போலும், ஏனெனில், எங்கெல்லாம் சனீஸ்வரன் கோவில் இருக்கிறதோ அங்கெல்லாம் கூட்டம் அதிகரித்து வருகின்றது. 50 ஆண்டுகளுக்கு முன்னாள் கூட திருநள்ளாரில் சனீஸ்வரனை வழிபடுவதற்காக வரும் கூட்டம் கொஞ்சமாக தான் இருந்தது. ஆனால் பிறகு திடீரென்று கூட்டம் வர ஆரம்பித்தது. இதனால் சனீஸ்வரன் சிற்பமாக இருந்த நிலையிலிருந்து விக்கிரமாக மாற்றப்பட்டு, அதற்கு தனி சன்னதியும் கட்டப்பட்டு அதுவே தனியான கோவில் போன்று பக்தர்களுக்கு ஏற்றபடி மாற்றியமைக்கப் பட்டுள்ளது. கூட்டம் அதிகமாக அதிகமாக அந்த தனி கோவில் அல்லது பிரகாரம் என்பது விரிவுபடுத்திக் கொண்டே வருவதையும் கவனிக்கிறோம். உண்மையில் அது ஒரு பிரத்தியேகமான சிவன் கோவிலாகும். ஆனால் இப்பொழுது எல்லாம் சிவனை கூட வழிபடாமல் இது ஏதோ பிரயோகமான சனீஸ்வரன் கோவில் என்று நினைத்துக் கொண்டு சனீஸ்வரனை மட்டும் வழிபட்டு சென்று விடுகிறார்கள். இப்படியாகப் சனி “சனீஸ்வரனாகி” விட்டான் – விட்டார்.

நவகிரக க்ஷேத்திரம், சுற்றுலா, வணிகமயமாக்கல்: நவகிரக க்ஷேத்திரம் என்ற ஒரு புதிய முறையை உண்டாக்கி அதன்படி 9 கிரகங்கள் குடிகொண்டுள்ள கோவில்களுக்கு தீர்த்த யாத்திரையாக சென்று வருவது அறிமுக செய்யப்பட்டது. இதன் மூலமாக கார், வேன், பஸ் முதலியவற்றை வைத்திருக்கும் சுற்றுலா வியாபாரிகளுக்கு வருமானம் கிடைக்க ஆரம்பித்தது. அதற்கு ஏற்றபடி அந்த ஸ்தலங்களும் நாளுக்கு நாள் பெரிதாக்கப்பட்டன ஒவ்வொரு புதிதாக ஸ்தலத்திற்கும், புராணம் போன்ற கதைகளும் உருவாக்கப்பட்டன. பிறகு அந்தந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால். இந்த பலன்கள் கிடைக்கும் என்றும் விவரங்கள் சொல்லப்பட்டன. இதற்கு ஜோதிடர்களும் புதிய-புதிய பரிகாரங்கள், பலன்கள் தீர்க்கும் முறைகள் முதலியவற்றை புதியதாக உண்டாக்கி அறிமுகப்படுத்தினர். இவ்வாறு ஒரு நிலையில் கவனிக்கும் பொழுது, இத்தகைய பக்தர்களின் நம்பிக்கைகள் கூட எவ்வாறு வணிகமயமாக்கப்படுகிறது என்பதனை கவனிக்கலாம்.

புதிய சனீஸ்வரன் கோவில்கள் உருவாக்கல்: அது மட்டுமல்ல, புதிய சனீஸ்வரன் கோவில்களையும் உண்டாக்கலாம் என்ற திட்டமும் துவங்கியது போலிருக்கிறது. அதாவது திருநள்ளாரில் இருக்கும் சனீஸ்வரன் சன்னதியானது அல்லது அது ஒரு சிவன் கோவிலின் பகுதி என்று இருப்பதனால் சனீஸ்வரனுக்கு மற்ற இடங்களில் பிரகாரங்களுடன் சன்னதிகள் உள்ளன – இல்லை, தனியான கோவில்கள் உள்ளன என்பது போன்ற கருத்தை உருவாக்க ஆரம்பித்தார்கள். அதற்கேற்றபடி தெற்கில் இருக்கின்ற திருநள்ளாறு கோவிலுக்கு எதிராக அதாவது வடக்கில் ஒரு கோவிலை ஆரம்பித்து அதை வடத்திருநள்ளார் என்றும் கூற ஆரம்பித்தார்கள். அதாவது தெற்கில் இருக்கும் அந்த திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் என்று அழைக்கப்படுமானால், வடக்கில் இருக்கும் மற்ற சனீஸ்வரர் கோவில் வட-திருநள்ளார் என்றும் சொல்லி குறிப்பிடலாம் என்ற திட்டத்தை அமல் படுத்துகிறார்கள் போலும். இருப்பினும் புதிய-திருநள்ளார் கோவில், திருநள்ளாறு கோவில் போன்று பிரசித்தி அடைய முடியவில்லை. ஏனெனில் இக்காலங்களில் புதிதாக கட்டப்படுகின்ற இந்த கோவில்கள் எனது மிகச் சிறியவையாகவே இருக்க வேண்டியிருக்கிறது. அதிலும், நகருக்குள், ஒரு கோவில் கட்டுவது என்பது மிகக் கடினமானது. திருநள்ளாறு போன்று அத்தகைய பரந்த அளவில் இடமும் கிடைக்காது. அதிலும், பெரிய கோவிலை கட்டுவது என்பதும் சாத்தியமாகாது. அதனால் அந்த புதிதாக உருவாக்கப்படும் சனீஸ்வரன் கோவில் என்பது மிகச் சிறியதாக இருக்கிறது. அந்த அளவில் தான் கோவில்கள் நகருக்கு மத்தியில் அல்லது வீடு பல வீடுகள் இருக்கும் பொழுது அந்த வீடுகளுக்கு மத்தியில் ஏதாவது ஒரு தெருவில் சில இடம் கிடைத்தது என்றால் அதனை சனீஸ்வரன் கோவிலாக மாற்றும் முறை நடந்து வருகிறது.

தனியாக சனீஸ்வரன் கோவில் சந்நிதி, கோவில் உருவாகும் முறை: இவ்வாறுதான், இப்பொழுது புதிய சனீஸ்வரன் கோவில்கள் உருவாக்கி வருகின்றன. ஆகவே அந்த கோவில்களுக்கு சென்று பார்த்தால், எப்படி மிக சமீப காலத்தில் அதாவது ஒரு 20-30-40-50 ஆண்டுகளில் அவை மாற்றப்பட்டு, அவ்வாறு புதுப்பிக்கப்பட்டுள்ளன என்பதனை எளிதாக தெரிந்து கொள்ளலாம். திருக்காட்டுப்பள்ளியில் கூட, இவ்வாறு தான் அமைக்கப்பட்டுள்ளது என்பது முந்தைய ஒரு பதிவில் எடுத்துக்காட்டுப்பட்டுள்ளது. அதாவது நவகிரகங்களில் இருந்த அந்த சனீஸ்வரன் சிலையை தவறுதலாகவோ அல்லது வேண்டுமென்றோ கோவிலின் மூலையில் தனியாக பிரதிஸ்டை செய்யப்பட்டு அது சன்னிதியாக மாற்றப்பட்டு சனீஸ்வரன் கோவில் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். பிரதானமாக இருப்பது லிங்கம் தான் அதாவது மூலவர் லிங்கம், சிவன் கோவில் தான் உள்ளது. சனீஸ்வரன் சன்னிதி சிறியாதாகயிருக்கிறது. அத்துடன் மீதி அந்த எட்டு கிரகங்களும் தனியாக, “ப” வடிவத்தில், ஒரு சிறிய சந்நிதியில் வைக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து எளிதாக தெரிந்து கொள்ளலாம், அதாவது நவகிரகங்களில் இருந்த அந்த சனீஸ்வரன் சிலையை தனியாக எடுத்து வைத்து அதனை ஒரு சன்னிதியாக மாற்றி பிறகு, சில வருடங்களிலேயே அது ஏதோ சனீஸ்வரர், பிரத்தியேக சனீஸ்வரன் கோவில் போல உருவாக்கப்பட்டுள்லது. இப்பொழுது பொங்கு-சனீஸ்வரர் கோவில் என்று அழைக்கப்பட்டு பக்தர்கள் எல்லாம் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள்.

சனி, ஏழரை சனி முதலியன: நவகிரகங்களில் பொதுவாக சனி பகவான் என்றாலே ஒருவரை தண்டிக்கும் சனி பீடை என்றே நம்பப்படுகிறது. ஒருவருக்கு சனி பிடித்தால் பாடாய்படுத்துவார் என்றும் பல்வேறு சிரமங்களை கொடுப்பார் என்றும் நம்பப்படுகிறது. ஆனால் இங்கு கூறப்படுவதாவது.. சனி பகவான் நல்ல யோகத்தில் ஒருவருடைய ஜாதகத்தில் இருக்கும்போது அவர் பல்வேறு வெற்றிகளை அடைவார் என்றும், நல்ல நிலைக்கு செல்வார் என்றும் இங்கு நம்பப்படுகிறது. சனிபகவான் அனைவரையும் தண்டிக்கப்படுவதில்லை என்றும் சனி திசை அல்லது ஏழரை சனியின் காலத்தில் படும் கஷ்டமானது அவரது முன் வினை கர்மாவின் அடிப்படையே கொண்டே அமைகிறது என்று கூறப்படுகிறது. ஏழரை சனி திசை காலத்தை அல்லது சனி திசையின் காலத்தை குறைக்கும் வல்லமைகொண்ட, ஆலயமாக தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுயம்பு சனீஸ்வர பகவான் ஆலயம் உள்ளது. இந்த ஆலயமானது சுருளியாறு முல்லைப் பெரியாரும் இணைந்த கிளை நதியான சுரபி நதிக்கரையில் அமைந்துள்ளது.

தினகரன் மான்மியம் சொல்லும் குச்சனூர் சனீஸ்வரன் புராணம்: தினகரன் மான்மியம் இவ்விவரங்களைக் கொடுக்கின்றன என்று பக்தி ரீதியில் கொடுக்கப் பட்டுள்ளன. முன்பொரு காலத்தில் கலிங்க நாட்டை ஆட்சிசெய்த தினகரன் என்ற மன்னரின் மகனான சந்திரவதனன் என்பவரால் இந்த கோவில் நிறுவப்பட்டது என்று கூறப்படுகிறது. தினகரன் மன்னனுக்கு வெகுநாட்களாக குழந்தை பிறக்காமல் இருந்தது. குழந்தை வரம் வேண்டி இறைவனை தினம்தோறும் பூஜித்து வந்தான். அப்போது ஒரு அசரீரி குரல் ஒலித்தது. ‘உன் வீட்டிற்கு பிராமணச் சிறுவன் ஒருவன் வருவான். அவனை நீ பாராட்டி சீராட்டி வளர்த்து வந்தால் உனக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்று கூறியது’. மன்னனும் அவன் வீட்டிற்கு வந்த பிராமண சிறுவனினை வளர்த்து வந்தான். மன்னனுக்கு அசரீரி குரல் ஒலித்தபடி குழந்தை பிறந்தது. மன்னனுக்கு பிறந்த குழந்தைக்கு சதாகன் என்ற பெயரிட்டு வளர்த்து வந்தான். வளர்ப்பு மகனின் பெயர் சந்திரவதனன். ஆனால் மன்னனுக்கு பிறந்த குழந்தையை விட, வளர்ப்பு மகனான சந்திரவதனனுக்கு அதிகமான அறிவாற்றலும், திறமையும் இருந்தது. இதனால் மன்னனின் முதல் வாரிசான சந்திரவதனனுக்கே முடிச்சூட்டப்பட்டது.

குச்சனூர் சனி கோவில் பலன் உண்டான விதம்: அந்த சமயம் மன்னன் தினகரனுக்கு ஏழரைச்சனி பிடித்தது. ‘வளர்ப்பு மகனாக இருந்தாலும் எனக்கு முடிசூட்டிய என் தந்தைக்கு சனி பகவானின் தாக்கம் இருக்கக்கூடாது’ என்ற எண்ணம் சந்திரவதனனுக்கு தோன்றியது. இதனால் சந்திரவதனன் சுரபி நதிக்கரைக்குச் சென்று இரும்பால், சனியின் உருவத்தைப் வடிவமைத்து வழிபட்டான். ‘தன் தந்தைக்கு எந்தவிதமான துன்பமும் ஏற்படக் கூடாது என்றும், தன் தந்தைக்கு ஏற்பட இருக்கும் துன்பங்கள் அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்கின்றேன் என்றும், அந்த சனி பகவானிடம் வேண்டிக் கொண்டான்’ சந்திரவதனன். இந்த நியாயமான கோரிக்கையை ஏற்றுக் கொண்ட சனி பகவான் ஏழரை நாழிகை மட்டும் சந்திரவதனனை பிடித்துக் கொண்டார்.  வேண்டுதலை நிறைவேற்றி அதன்பின்பு, சந்திரவதனனின் முன்தோன்றிய சனி பகவான் ‘உன்னை போன்ற நியாயமாக நடந்து கொள்பவர்களை நான் பிடிக்க மாட்டேன் என்றும், இப்போது உன்னை பிடித்ததற்கு காரணம் உன் முன் ஜென்ம வினை தான் என்றும் கூறி’ மறைந்தார்.

© வேதபிரகாஷ்

13-10-2024

தமிழக அரசு நிர்வகிக்கும் கோவில் கருவறையில் சாமி சிலை மீது பெட்ரோல் குண்டு வீசியது ஒரு தொடர்-குற்றவாளி! ஆகவே உண்மை மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும் (2)

நவம்பர்11, 2023

தமிழக அரசு நிர்வகிக்கும் கோவில் கருவறையில் சாமி சிலை மீது பெட்ரோல் குண்டு வீசியது ஒரு தொடர்குற்றவாளி! ஆகவே உண்மை மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும் (2)

குற்றங்களுக்கு லாப-நஷ்டங்களுக்கு சாமி காரணமா?; குற்றத்தை செய்வதற்கு இப்படியெல்லாம் நியாயப் படுத்தப் படுவது ஏன் என்றும் கவனிக்க வேண்டியுள்ளது. உண்மையில் வியாபாரத்தில் நஷ்டம் என்றால், அதற்கான காரணமானவர் மீது தான் தாக்குதல் இருக்க வேண்டும். கோவிலோ, கர்ப்பகிரகமோ, உள்ளே இருக்கும் மூலவரோ குறியாக இருக்க முடியாது[1]. “சாமி தான், சிலை தான்” என்று குறியாக பாம் போடுகிறான்[2] என்றால், அத்தகைய மனப்பாங்கு, குற்ற மனபாங்கு என்னவென்று போலீஸார் தான் ஆராய வேண்டும். அப்படியென்றால், இத்தகைய குற்றவாளிகளை வேண்டுமென்றே இவ்வாறு செய்கிறார்களா அல்லது செய்விக்கப் படுகிறார்களா போன்ற சந்தேகங்களும் எழலாம். குற்றவாளிகளை, அவ்வாறே நடத்தாமல், ஏதோ தியாகி, சித்தாந்தி போன்று சித்தரித்திக் காட்டுவது, பிறகு மனநோயாளி என்பது முதலியவை முறையான விசாரணையாகத் தெரியவில்லை. பெட்ரோல் குண்டு வீசப்பட்ட கோவில், சென்னை உயர் நீதிமன்றத்தின் அறக்கட்டளையின் கீழ் நிர்வகிக்கப்படுவதால், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, நீதிபதி நிரஞ்சன் ஆய்வு செய்தார். தடய அறிவியல் துறை நிபுணர்களும் ஆய்வு செய்தனர்.

முதலில் குண்டு போட்டவனின் பெயரைக் குறிப்பிடாமல், பிறகு குறிப்பிட்டது: ஹிந்து கோவில் கருவறைக்குள் பெட்ரோல் குண்டு வீசிய முரளிகிருஷ்ணன், கழுத்தில் அணிந்திருந்த மாலைகள், போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர், கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவரா, பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்திற்கு பின், ஏதேனும் மதவாத சக்திகள் உள்ளனரா என்ற கோணத்திலும், போலீசார் விசாரித்து வருகின்றனர். சமீபத்தில், ரவுடி கருக்கா வினோத் என்பவர் கவர்னர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசினார். சில நாட்களில் அடுத்த சம்பவம் நடந்துள்ளதால், காவல் துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீ வீரபத்ரா சுவாமி கோவில் முன், ‘டீ கடை’ ஒன்றில் அமர்ந்து, சாகவாசமாக பெட்ரோல் குண்டு தயாரித்துள்ளார் முரளிகிருஷ்ணன்[3]. கடையில் இருந்தோர் பார்த்தும், அவரிடம் எதுவும் கேட்கவில்லை[4]. ஆனாலும், அங்கிருந்த ‘சிசிடிவி’ கேமரா பதிவில், தெளிவாக தெரிகிறது[5]. இது, இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக சேகரிக்கப்பட்டுள்ளது[6]. கோவை உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், கடந்தாண்டு, அக்., 23ல், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த, ஜமேஷா முபின், 29, என்பவர் கார் குண்டு வெடிப்பை நடத்தினார். ஜூலையில், சிவகங்கை மாவட்டத்தில், நில தகராறு தொடர்பாக, மதுரை விராதனுார் பகுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தப்பட்டது.சமீபத்தில், பள்ளிக்கரணையில், பா.ஜ., நிர்வாகியும், ரவுடியுமான பல்லு மதன் வீட்டில், ரவுடிகள் மண்ணெணெய் குண்டு வீசினர்.அதேபோல, நந்தனம் எஸ்.எம்., நகரைச் சேர்ந்த ‘சி’ பிரிவு ரவுடி கருக்கா வினோத், 42, கவர்னர் மாளிகையான ராஜ்பவன் மீது, இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசினார். சென்னை மட்டுமல்ல, தமிழகத்தின் பல பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு கலாசாரம் பரவி வருவது பொதுமக்களை பீதியடைச் செய்துள்ளது.

அரசு நிர்வாகத்தில் உள்ள கோவில் என்பதால் நீதிபதி ஆய்வு பிரச்சினையை மறைக்கக் கூட்டாது: சென்னையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வீரபத்ர சுவாமி கோவில், அரசு சொத்தாட்சியர் மற்றும் அதிகாரபூர்வ அறங்காவலரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது[7]. அதனாலேயே, பெட்ரோல் குண்டு வீசப்பட்டதும், நீதிபதி நிரஞ்சன் விசாரணை நடத்தி வருகிறார்[8]. கைது செய்யப்பட்ட முரளிகிருஷ்ணன், தெளிவான மனநிலையில் இல்லை என, போலீசார் கூறுகின்றனர். உள்ளுக்குள் ஆழமான விஷயங்கள் இருக்கலாம் என்றெல்லாம் செய்திகள் கூறுகின்றன. பண்டிகை காலங்களில் கூட்டம் மிகுந்த இடங்களில் கோவிலுக்கு அருகில், கோவிலுக்குள் இத்தகைய குண்டுவெடிப்புகள் நடக்கின்றன என்பதைக் கவனிக்கலாம். கூட்டநெரிசலிலேயே அதிக பாதிப்பு ஏற்படலாம். ஆகவே, இத்தகைய குண்டுவெடிப்புகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. “நீட், சாமி உதவவில்லை, மனநோயாளி,….” என்றெல்லாம் கூறி பிரச்சினையை மறைத்து விட முடியாது. உண்மையினை மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

உளவுத் துறை அதிகாரிகள் கூறுவது: போலீஸ் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என, உளவுத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்கள் மேலும் கூறியதாவது: “தமிழகத்தில் ஒரு மாத காலத்துக்குள், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன. கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து, தமிழக பா.., தரப்பில், 30 கேள்விகள் கேட்கப்பட்டன; அவை மிக நுட்பமானவை. தமிழகத்துக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கிறது. .எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு, தமிழகத்தில் இருந்து மூளை சலவை செய்து, ஆட்கள் அனுப்பப்படுவது, தேசிய புலனாய்வு அமைப்பு எனும் என்..., விசாரணையில் தெரியவந்துள்ளது. .எஸ்., அமைப்பில் சேர்க்கப்படும் நபர்கள், பயங்கரவாத பயிற்சிக்கு பின், பல்வேறு திட்டங்களோடு திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஹிந்து மற்றும் பிற மதங்களைச் சேர்ந்த இளைஞர்களை, .எஸ்., பயங்கரவாதியாக மாற்றும்போது, பெயர் மாற்றம் செய்யப்படுகின்றனர். அவர்கள் போலீசிடம் சிக்கும்போது, மதத்துக்கு கெட்ட பெயர் ஏற்படுவதால் நடைமுறையில் மாற்றம் கொண்டு வந்துள்ளனர். தற்போது, .எஸ்., அமைப்புக்கு அழைத்து செல்லப்படுபவர் பெயர்கள் மாற்றப்படுவதில்லை. ஹிந்துவாக இருந்தால், அதே பெயருடனே இருப்பர். அதனால், பயங்கரவாத செயலில் ஈடுபட்டு சிக்கினாலும், ஹிந்துவாகவே அடையாளம் காட்டப்படுவர்.எனவே, வழக்கமான நடைமுறையை விட்டு, ஆழமான விசாரணை மேற்கொள்ள வேண்டும்; கிடைக்கும் தகவல்களை மறைக்காமல் பதிவு செய்ய வேண்டும்,” இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவித்துள்ளது: இந்த சம்பவம் தொடர்பாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது[9]: “சென்னை பாரிமுனை கோவிந்தப்ப நாயக்கன் தெரு, ஸ்ரீவீரபத்ர சுவாமி கோயில் கருவறைக்குள்ளே, சுவாமி சிலையின் மீதே பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதள பாதாளத்திற்குப் போய்விட்டது. போலி மதச்சார்பின்மையும், அரைகுறை நாத்திகமும் பேசித் திரியும் பிரிவினைவாத அமைப்புக்களை கட்டுப்படுத்த, தி.மு.., தவறியதன் விளைவு, இன்று கோயிலுக்குள்ளேயே பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்குக் கொண்டு வந்திருக்கிறது,” இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்[10]. அதிமுக தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

© வேதபிரகாஷ்

11-11-2023.


[1] தமிழ்.ஒன்.இந்தியா, ‛சிலை தான் குறி’.. சென்னை கோவில் மீதான பெட்ரோல் குண்டு வீச்சின் பரபர பின்னணி.. போலீஸ் விளக்கம், By Nantha Kumar R Published: Friday, November 10, 2023,

[2] https://tamil.oneindia.com/news/chennai/what-happened-in-petrol-bomb-thrown-on-kothavaalchavadi-temple-chennai-police-explains-556071.html

[3] தினமலர், சென்னையில் மீண்டும் பெட்ரோல் குண்டு வீச்சு அதிர்ச்சி! கோவில் கருவறைக்குள் வீசப்பட்டதால் பதற்றம், பதிவு செய்த நாள்: நவ 10,2023 22:52.

[4] https://m.dinamalar.com/detail.php?id=3478549

[5] நக்கீரன், டீக்கடையில் சாவகாசமாக அமர்ந்து பெட்ரோல் குண்டு தயாரித்த நபர்; அதிர வைக்கும் சிசிடிவி காட்சி, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 10/11/2023 (15:11) | Edited on 10/11/2023 (15:26)

[6] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/person-sitting-tea-shop-casually-made-petrol-bomb-shocking-cctv-footage

[7] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், சென்னை பாரிமுனை கோயிலில் பெட்ரோல் குண்டு வீச்சு: ஐகோர்ட் நீதிபதி நேரில் ஆய்வு, WebDesk, Nov 10, 2023 15:44 IST

[8] https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-parrys-corner-temple-petrol-bombing-high-court-judge-inspects-in-person-tamil-news-1692013

[9] தினமலர், சென்னையில் கோயிலுக்குள் மதுபோதையில் பெட்ரோல் குண்டு வீசியவர் கைது: அண்ணாமலை கண்டனம், மாற்றம் செய்த நாள்: நவ 10,2023 15:4.

[10] https://m.dinamalar.com/detail.php?id=3478443

சென்னிமலை இந்துக்களின் அறப்போராட்டம், இந்துக்களின் விழிப்புணர்ச்சி, எழுச்சி தொடர்ந்து இருக்க வேண்டும்–உரிமைகள் காக்கப் படவேண்டும்!

ஒக்ரோபர்14, 2023

சென்னிமலை இந்துக்களில் அறப் போராட்டம், இந்துக்களின் விழிப்புணர்ச்சி, எழுச்சி தொடர்ந்து இருக்கவேண்டும் உரிமைகள் காக்கப் படவேண்டும்!

இந்துவிரோத கூட்டத்தினரின் பாரபட்ச செயல்பாடு……

இதை யாரும் தட்டிக் கேட்கவில்லையே?

25-09-2023 கிறிஸ்தவர்களுக்கு சாதமாக, அரசியல் கட்சிகள் ஆர்பாட்டம்: மேலே குறிப்பிட்டப் படி, இதற்கிடையே கிறிஸ்தவ போதகரை தாக்கிய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கிறிஸ்தவ முன்னணி சார்பில் கடந்த மாதம் 25-ந் தேதி 25-09-2023  சென்னிமலை பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஒருவர் சென்னிமலையை பற்றி தவறாக பேசியதாக கூறப்படுகிறது, என்று தான் ஊடகம் குறிப்பிடுகிறது. பிறகு ஏன் அத்தகைய மறைப்புத் தனம் என்று தெரியவில்லை. இதும் ஊடகங்களின் பாரபட்சத்தை எடுத்துக் காட்டுகிறது.. இந்நிலையில் 26ம் தேதி சென்னிமலையில் நடந்த கிறிஸ்தவ முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் கந்த சஷ்டி அரங்கேற்ற தலமாக விளங்கும் சென்னிமலை முருகன் கோயில் மலையை கல்வாரி மலையாக எனும் கிறிஸ்துவ மலையாக மாற்றுவோம் என்று பேசியபோது, இதே கட்சிகள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. போலீஸாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஹிந்துக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

13-10-2023 அறப்போராட்டம் அறிவிப்பு………………………..

இந்துக்கள் கைது, ஆனால் கிறிஸ்துவர்களின் மீது நடவடிக்கை இல்லை: இதற்குள் புகார் கொடுத்ததின் அடிப்படையில், தொடர்பாக ஹிந்து முன்னணி அமைப்பை சேர்ந்த இருவரை கைது செய்து சிறையிலும் அடைத்தனர். இந்நிலையில் பல்வேறு கிறிஸ்தவ அமைப்பினர், புரட்சிகர இளைஞர் முன்னணியினர், விடுதலை சிறுத்தை, ம.தி.மு.க., உட்பட அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால், ஜான் பீட்டர் கொடுத்த புகாரின்படி, சின்னச்சாமி, அவரது மகன் கோகுல் மற்றும் அடையாளம் தெரியாத இரண்டு பேர் மீது, கொலை முயற்சி உள்ளிட்ட ஆறு பிரிவுகளில், சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்[1]. இதை தொடர்ந்து ஹிந்து முன்னணி அமைப்பை சேர்ந்த அரச்சலுார், அண்ணா நகர் பூபதி, 38; தமிழரசன், 30, ஆகியோரை, கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்[2]. போலீசாரின் ஒரு தரப்பு நடவடிக்கையால் பா.ஜ., மற்றும் ஹிந்து முன்னணி அமைப்பினர் அதிர்ச்சி அடைந்தனர். ஆக, இவையெல்லாமே இந்துக்களுக்கு எதிராகவே நடந்த் கொண்டிருக்கின்றன, ஆளும் திமுகவின் கூட்டணி கட்சிகளே இந்த போராட்டங்களில் கலந்து கொள்வதால், செக்யூலரிஸ ரீதியில் பாரபட்சம் இருப்பது வெளிப்படுகிறது.

தானாகக் கூடியக் கூட்டம்…

இந்துக்களின் எழுச்சி……

13-10-2023 அன்று கண்டன ஆர்பாட்டம் நடத்த முடிவு: சென்னிமலை முருகன் கோயில் அமைந்துள்ள மலையை கல்வாரி மலையாக மாற்றுவோம்’ என்ற கிறிஸ்துவ முன்னணி அமைப்பினரின் மிரட்டல் பேச்சை கண்டித்து, இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இந்தநிலையில் சென்னிமலையை பற்றி தவறாக பேசியதை கண்டித்து இந்து முன்னணி சார்பில் 13-10-2023 அன்று மாலை சென்னிமலையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து போலீசாரிடம் அனுமதி கேட்கப் பட்டது[3]. போலீசாரும் அனுமதி கொடுத்துள்ளனர்[4]. அதனால், திட்டமிட்டப் படி, 13-10-2023 அன்று அற-போராட்டம் நடைபெற்றது. எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகமாகவே சேர்ந்து விட்டது. முருக பக்தர்கள், இந்துக்கள் என்ற ரீதியில் தாமாகவே ஆயிரக்கணக்கில் வந்து சேர்ந்துள்ளனர். ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமை தாங்கினார்.  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ. முருகன் வரவேற்றார். மற்றும் அரச்சலூர் புலவர். கி. தமிழரசன், விவசாயி பேச்சாளர் தூரன் மஞ்சுநாதன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். அப்போது சென்னிமலையை பற்றி தவறாக பேசியவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. முன்னதாக முருகப்பெருமானின் புகழ் குறித்து பெண்கள் பாடல்கள் பாடினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்[5].

கட்டுப்பாட்டுடன் அமைதியாக நடந்துள்ள அறப்போராட்டம்: சுமார் 25,000 வந்திருக்கலாம் என்று தெரிகிறது. போலீஸாரும் உடனடியாக, பாதுகாப்பு ஏற்பாட்டில் இறங்கினர். சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் 350-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்[6]. ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு இருந்ததால், பள்ளி வாகனங்கள் சென்னிமலை வழியாக செல்ல முடியாது என சென்னிமலை பகுதியில் சில பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தன[7]. மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டுவிட்டதால் சென்னிமலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருந்தது[8]. இருப்பினும், இந்துக்கள் அமைதியாக, அறவழி சத்தியாகிரக போராட்டமாக நடத்தியுள்ளனர். அத்தனை கூட்டத்திலும், கட்டுப்பாட்டுடன், செயல்பட்டுள்ளர். கூட்டத்திற்கு வேண்டிய நீர் முதலிய ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். நிச்சயமாக, இக்கூட்டம் இந்து மக்களின் எழுச்சியாகக் காணப் படுகிறது.

இந்து முன்னணி தலைவர்கள்……

மக்களின் – இந்துக்களின் எழுச்சிக் கூட்டம்

இந்த இந்து எழுச்சி-விழிப்புணர்வு தொடர்ந்து இருக்க வேண்டும்; இது வரை நமக்கு எதற்கு இப்பிரச்சினை, எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொள்வார் என்றெல்லாம் இருந்து வந்த இந்துக்களுக்கு இப்பொழுது விழிப்ப்புணர்வு ஏற்பட்டு விட்டது. அத்தகைய உணர்வுகளை அவர்கள் தொட்ர்ந்து கடைபிடித்தால், அவர்களது உரிமைகளை யாரு பறிக்க முடியாது. சட்டம் எல்லோருக்கும் சமம் என்று செக்யூலரிஸ ரீதியில் பேசினால் மட்டும் போதாது, அதன் படி தேர்ந்தெடுக்கப் பட்ட அரசு, ஆளும் பொழுது, அத்தகைய நெறிமுறைகளைப் பின்பற்றவேண்டும். ஆனால், 1970களிலிருந்து, திராவிட, திராவிடத்துவ, பெரியாரிஸ, நாத்திக கட்சிகள் அத்தகைய சட்ட-ஒழுக்கத்தைப் பின்பற்றவில்லை. அரசியல் தலைவர்களே, இந்துக்களுக்கு எதிராக பேசி வந்துள்ளனர். அவையெல்லாம் இந்துவிரோதமாகவும் இருந்து வந்துள்ளன. அங்குதான் பிரச்சினை எழுகிறது.

25,000 இந்துக்கள் பங்கு கொண்டனர்……………………

கிறிஸ்தவர்கள் ஒழுங்காக இருக்க வேண்டும்: கிறிஸ்தவர்களின் வக்கிர எதிர்ப்பு, பலாத்கார ஆக்கிரமிப்பு, வன்முறை அபகரிப்பு போன்ற சட்டவிரோத காரியங்களை அரசு முறைப்ப் படி தண்டிக்க வேண்டும். அவற்றை ஏதோ “சிறுபான்மை” சமாசாரம் போல அணுகக் கூடாது. இந்த சட்டவிரோத காரணங்களுக்கு பல வழக்குகள் நிலுவைகள் உள்ளன என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். அரசியல் காரணங்களுக்காக அவை கிடப்பில் போடப் பட்டிருக்கலாம், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் காலம் தாழ்த்தலாம். ஆனால், சில நேரங்களில் அவை நிச்சயமாக விசாரிக்கப் படும், அப்பொழுது நியாயமான தீர்ப்புகள் அளிக்கப் படும். ஆகவே, கிறிஸ்தவர்களும் இத்தகைய அடாவடி, அபகரிப்பு, ஆக்கிரமிப்பு செயல்களில் ஈடுபடாமல் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். மதவிவகாரங்களில் ஒழுக்கம்-கட்டுப்பாடு இருக்கவேண்டும். அவர்களிடையே பற்பல சீர்கேடுகள் இருக்கும் பொழுது, முதலில் அவற்றை சரிசெய்து கொள்ளாமல், இந்துக்களை சதாய்ப்பதில் எந்த பலனும் ஏற்படப் பொவதில்லை. எத்ர்மறை விளைவுகள் தாம் ஏற்படும்.

© வேதபிரகாஷ்

14-10-2023


[1] தினமலர், சென்னிமலை முருகன் கோவிலை கல்வாரி மலையாக மாற்றுவோம் எனப் பேசிய அமைப்பினரை கைது செய்யக்கோரி 13ல் ஆர்ப்பாட்டம், மாற்றம் செய்த நாள்: அக் 10,2023 15.

[2] https://m.dinamalar.com/detail.php?id=3453240

[3] தினமணி, இந்து முன்னணி சார்பில் அக்டோபா் 13 இல் ஆா்ப்பாட்டம், By DIN  |   Published On : 01st October 2023 11:37 PM  |   Last Updated : 01st October 2023 11:37 PM

[4] https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2023/oct/01/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AF%8D-13-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-4081779.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, என்னது ஏசு மலையா? “சென்னிமலை எங்கள் மலை“- பல்லாயிரக்கணக்கில் திரண்டுமுருகர்கூட்டம் முழக்கம்!, By Mathivanan Maran, Published: Saturday, October 14, 2023, 7:22 [IST].

[6] https://tamil.oneindia.com/news/tamilnadu/murugan-devotees-protest-against-rename-demand-on-chennimalai-as-jesus-malai-547997.html

[7] தினத்தந்தி, சென்னிமலையில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், தினத்தந்தி, அக்டோபர் 14, 7:12 am

[8] https://www.dailythanthi.com/News/State/in-chennimalaicondemnation-protest-of-hindu-munnani-1072464

ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் தான் உயிர்த்தெழுந்து வந்து, இந்த போலி சைவர்கள மாற்றவேண்டும் – சத்தியவேல் முருகன், சுகி.சிவம் முதலியோர் இந்து-தூஷணம் செய்வது ஏன்?

பிப்ரவரி23, 2023

ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் தான் உயிர்த்தெழுந்து வந்து, இந்த போலி சைவர்கள மாற்றவேண்டும் – சத்தியவேல் முருகன், சுகி.சிவம் முதலியோர் இந்து-தூஷணம் செய்வது ஏன்?

.

திராவிடத்துவ ஆட்சியில், திராவிட மாடலில், திராவிட ஸ்டாக்குகளின் இந்துவிரோத செயல்பாடுகள் அதிகமாகவே வெளிப்பட்டு வருகின்றன:. பெயருக்கு “சமத்துவம்” என்றெல்லாம் கோஷமிட்டுக் கொண்டிருந்தாலும், நாத்திகம் / பகுத்தறிவு போர்வையில் இந்துக்களுக்கு எதிராக இருப்பது தெரிந்த விசயமே. பெரியாரிஸம் பேசிக் கொண்டும், இந்து மதத்தைத் தாக்கி வருகின்றனர். செக்யூலரிஸம் போர்வையில் சிறுபான்மையினர் என்ற ரீதியில், எப்பொழுதும் முஸ்லிம்கள் மற்றும் கிருத்துவர்களுக்கு ஜால்றா அடித்துக் கொண்டு காலம் தள்ளிக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களைத் தான் தமிழகத்தில் காணப் படுகிறது. இத்தகைய நிலையில், தொடர்ந்து இந்து அறநிலையத் துறையில் நுழைந்து, எப்படியாவது, கோவில்கள், கோவில் சொத்துகள், முதலியவற்றை முழுமையாக அபகரிக்க, பாரம்பரிய கோவில் கிரியைகள், பூஜைகள், கும்பாபிஷேகங்கள், முதலியவற்றில் இடையூறு செய்ய, அத்தகைய சித்தாந்தவாதிகளை நியமித்து, தங்களது திட்டத்தை நிறைவேற்ற சட்டமீறல்களிலும் ஈடுபட்டு வருவது தெரிகிறது. ஒரு புறம் வழக்குகள் நிலுவையில் இருக்கும் பொழுதே, தொட்ர்ந்து நியமனங்கள் செய்யப் படுவது, அத்தகைய அத்துமீறல்கள் மற்றும் சட்டத்தை வளைக்க முற்படும் செயல்களாகத் தான் தெரிகிண்ரன.

சத்தியவேல் முருகனை நியமித்ததை எதிர்த்து வழக்கு: கோவில்களில் அர்ச்சகர் நியமனங்களை எதிர்த்தும், அர்ச்சகர் நியமனம் தொடர்பான விதிகளை எதிர்த்தும், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது[1]. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்களில், ஆகமப்படி தான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டது[2]. ஆகம கோவில்களை கண்டறிய, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில், ஐந்து பேர் குழுவை அமைக்கவும் உத்தரவிட்டது[3]. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இருந்து, செயல்பட்டு வரும் கோவில்களின் நுலையை இப்பொழுதும் அறியப் படாத நிலையுள்ளதா என்பதே வியப்பிற்குரியதாக உள்ளது. குழு தலைவருடன் ஆலோசித்து, இருவரை குழுவில் நியமிக்க, அரசுக்கும் உத்தரவிட்டது[4]. இதையடுத்து, குழு உறுப்பினராக, அறநிலையத்துறை உயர்மட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் சத்தியவேல் முருகனை நியமித்து, அறநிலையத்துறை பிப்ரவரி 8ம் தேதி உத்தரவிட்டது[5]. சத்தியவேல் முருகன் என்பவர் “தமிழ்” போர்வையில், கோவில் வழிபாடு, முறை முதலியவற்றைத் திரித்து சமஸ்கிருத எதிர்ப்பு-விரோதம் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறார். இப்பொழுது, “திராவிட மாடல்” ஆட்சி வந்தவுடன் இவரைப் போன்றோரைத் தேர்ந்தெடுத்து, “திராவிட ஸ்டாக்கினர்” பற்பல குழுக்களில் உறுப்பினராக நியமித்து வருகின்றனர். இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்க பொதுச் செயலர் முத்துகுமார் மனு தாக்கல் செய்தார்[6]. ஆளும் திமுகவினர் வேண்டுமென்றே, சுகி.சிவம், சத்தியவேல் முருகன் போன்றோரை அறநிலையத் துறையில் நியமிப்பதை பொது மக்களும் கவனித்து வருகிறார்கள். ஏனெனில், அவர்களால் இந்துக்களுக்கு எந்த பலனும் இல்லை. முரண்பாடுகளுடன் பேசிக் கொண்டிருப்பதால், அவர்களைக் கண்டுகொள்வதும் இல்லை எனலாம்.

தாக்கல் செய்த மனுவில் உள்ளது[7]: “ஆகம கோவில்களை கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவருடன் ஆலோசித்து, உறுப்பினரை நியமிக்க வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை மீறும் வகையில், சத்தியவேல் முருகனை நியமித்து, உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. உத்தரவில், குழு தலைவருடன் ஆலோசித்ததாக எதுவும் இல்லை. ஆலோசனை நடத்தியிருந்தால், உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருக்கும். எந்த அடிப்படையில், குழு உறுப்பினராக நியமிக்க சத்தியவேல் முருகன் தகுதி பெறுகிறார் என்பதை வெளிப்படுத்தவில்லை. ஆகம விதிகளை பற்றி பொய் தகவலை பரப்புவதுதான், அவரது நோக்கம். இதை, அரசு பரிசீலிக்க தவறி விட்டது. சமஸ்கிருதம் பற்றி சத்தியவேல் முருகனுக்கு தெரியாது. ஆகமங்கள், சமஸ்கிருத மொழியில் தான் உள்ளன. எனவே, நியமன உத்தரவுக்கு, தடை விதிக்க வேண்டும்; ரத்து செய்ய வேண்டும்,” இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது[8]. சத்தியவேல் முருகன் பேசிவருவது எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான். இவ்விசயத்தில் அவர் வாயை மூடிக் கொன்டு இருப்பதையும் கவனிக்கலாம்.

விசாரணையில் நீதிமன்றம் தடை விதித்தது[9]: மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய ‘முதல் பெஞ்ச்’ முன், விசாரணைக்கு வந்தது[10]. குழுவில், சத்தியவேல்முருகனை நியமிக்கக் கூடாது என கோரிய வழக்கு, நிலுவையில் இருக்கும் நிலையில், அவரை நியமித்திருப்பதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது[11]. ஆகம விதிகளுக்கு எதிராக, அவர் பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டது[12]. இதையடுத்து, ஆகம கோவில்களை கண்டறியும் குழுவில், சத்தியவேல் முருகனை நியமித்த உத்தரவுக்கு, முதல் பெஞ்ச் தடை விதித்தது. மனுவுக்கு, நான்கு வாரங்களில் பதில் அளிக்கும்படி, அரசுக்கும், அறநிலையத்துறைக்கும், முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. இப்படியாக, இவ்வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலை தொடரும் எனலாம். மேலும், நீதிபதிகள் கட்சிகள் அதாவது அரசியல் கட்சிகளின் சிபாரிசுகள் மூலம் நியமிக்கப் பட்டு வரும் முறை இருக்கும் பொழுது, அத்தகையோர், ஆளும் கட்சியினரை மீறி, அவர்களது விருப்பங்களுக்கு எதிராக தீர்ப்புகள் வழங்குவார்களா என்ற சந்தேகமும் எழலாம்.

சத்தியவேல் முருகன் யார்? – தற்சிறப்புக் குறிப்பு[13]: விடுதலைப் போராட்ட தியாகி, அருட்பணிச் செல்வர், திருப்புகழ் சிவம் வேலூர் மு.பெருமாள் – காமாட்சி தம்பதிகளின் புதல்வர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்து மின்னியலில் பட்டம் பெற்ற பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 23 ஆண்டுகள் பொறியாளராகப் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றவர். தமிழ்மறை குடமுழுக்குகள் 1400-த்திற்கு மேலும், தமிழாகமத் திருமணங்கள் 3000-க்கு மேலும் ஆற்றியுள்ளார். அறநிலையைத் துறை மூலமாக ஓதுவார்கள், சிவாச்சாரியார்களுக்குப் பயிற்சி அளித்துள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். சைவ சித்தாந்த நுண்பொருளை உணர்ந்து மக்களிடையே சொற்பொழிவாற்றும் திறனும், தெய்வ வழிபாட்டின் வரனும் உடையவர், மிகச் சரளமாகச் செந்தமிழில் சிந்தை இனிக்கப் பேசுவதில் வல்லவர். தமிழகத்தில் தற்போது தமது தனித்திறன் கொண்ட சொல்லாற்றலால் தமிழ்வழிபாட்டைப் பரப்பி வரும் மிகப்பெரிய சைவசித்தாந்த அறிஞர், இவ்வாறு இவரது இணைதளம் கூறுகிறது. தவிர 66-பக்கம் “தற்குறிப்பு” புத்தகத்தை இங்கிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்[14].

சைவர் இந்து இல்லை என்று தூஷணங்களை செய்து வருவது: இவ்வளவு தம்மைப் பற்றி தற்புகழ்ச்சி செய்து விளம்பரப் படுத்திக் கொள்பவர் ஏன் இந்துக்களுக்கு எதிராக செயல்பட வேண்டும், இந்து விரோதிகளுக்குத் துணை போக வேண்டும்? இங்கு தான் ஏதோ விசயம் இருக்கிறது. அரசியல், அதிலும் திராவிட அரசியல், திராவிட நாத்திக அரசியல், திராவிட நாத்திக பெரியாரிஸம் பேசும் அரசியல், அப்படியே பார்ப்பன-விரோதம் என்றெல்லாம் சென்று, வேத எதிர்ப்பு, சனாதன அழிப்பு, கோவில் இடிப்பு, கோஇல் சொத்து கொள்ளை என்றெல்லாம் வளரும் பொழுது, இத்தகையோர் அத்தகைய குழுக்களில், கூட்டங்களில் சேர்கிறார்கள். திக-போன்றோர்களுடன் சேர்ந்து தூஷணங்களிலும் ஈடுபடுகிறார்கள். இத்தகைய போலித்தனத்தைக் கண்டுகொள்லவேண்டும். பட்டை-கொட்டைகளுடன், “நமசிவாய” என்று சொல்லிக் கொண்டு எவ்வாறு இந்து விரோதியாக இருக்க முடியும். அதனால் தான், ஒருநிலையில், “நாங்கள் சைவர், இந்துக்கள் அல்லர்,” என்று கூட சொல்லிக் கொள்ள ஆரம்பித்து விட்டனர். கிறிஸ்துவ-முஸ்லிம் கூட்டத்தினருடன் நட்பு கொண்டு, லட்சக் கணக்கான சிவாலங்களை துலுக்கர் இடித்துத் தள்ளியதையும் மறந்து, திப்பு ஜெயந்தியை கொண்டாட தயாரக இருக்கின்றனர். ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் தான் உயிர்த்தெழுந்து வந்து, இந்த போலி சைவர்கள மாற்றவேண்டும்.

© வேதபிரகாஷ்

23-02-2023.


[1] தினமலர், ஆகம கோவில்களை கண்டறியும் குழுவில் சத்தியவேல் முருகன், நியமனத்துக்கு தடை, Added : பிப் 16, 2023  00:01; https://www.dinamalar.com/news_detail.asp?id=3243236

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3243236

[3] தமிழ்.ஒன்.இந்தியா, கோயில்களின் ஆகமங்களை கண்டறியும் குழுவின் உறுப்பினர் சத்தியவேல் முருகன் நியமனத்திற்கு இடைக்காலத் தடை, By Vishnupriya R, Published: Wednesday, February 15, 2023, 14:00 [IST]

[4] https://tamil.oneindia.com/news/chennai/chennai-hc-interim-orders-for-appointment-of-sathiyavel-murugan-for-hindu-endowment-board-498833.html

[5] தினகரன், ஆகம அறிஞர் சத்தியவேல் முருகன் நியமனத்துக்கு ஐகோர்ட் தடை, 01:10 pm Feb 15, 2023 | dotcom@dinakaran.com(Editor)

[6] https://m.dinakaran.com/article/News_Detail/839115

[7] தினகரன், கோயில்களில் ஆகமங்களை கண்டறியும் குழுவில் ஆலோசனை குழு உறுப்பினர் நியமனத்துக்கு இடைக்கால தடை: ஐகோர்ட் உத்தரவு, 2023-02-16@ 00:56:10; https://www.dinakaran.com/news_detail.asp?Nid=839310

[8] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=839310

[9] மின்னம்பலம், ஆகமக்குழு: சத்தியவேல் முருகனார் நியமத்துக்கு இடைக்காலத் தடை!, February 15, 2023 19:35 PM IST.

[10] https://minnambalam.com/tamil-nadu/interim-stay-on-the-appointment-of-sathyavel-muruganar/

[11] செய்திசோலை, ஆகமங்களை கண்டறியும் சத்தியவேல் முருகன் நியமனத்திற்கு இடைக்கால தடைஉயர்நீதிமன்றம்.!!, February 15, 2023  MM SELVAM.

[12]https://www.seithisolai.com/%E0%AE%86%E0%AE%95%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4.php

[13] சத்தியவேல் முருகன்- ஆர் ? – தற்சிறப்புக் குறிப்பு, அவரது இண்னைத்தளத்திலிருந்து –

http://dheivathamizh.org/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/

[14] “தற்குறிப்பு” புத்தகம் – http://dheivathamizh.org/wp-content/uploads/2016/03/mu.pe_.sa-tharsirappu.pdf

சாத்தான் வேதம் ஓதும், பேய்கள் ஆட்சி செய்யும், சாத்திரங்கள் பிணங்கள் தின்னும், குங்குமம்-விபூதி அழித்தவர்கள் பக்தி புத்தகங்கள் வெளியிடுவார்கள்! (1)

ஜனவரி20, 2023

சாத்தான் வேதம் ஓதும், பேய்கள் ஆட்சி செய்யும், சாத்திரங்கள் பிணங்கள் தின்னும், குங்குமம்விபூதி அழித்தவர்கள் பக்தி புத்தகங்கள் வெளியிடுவார்கள்! (1)

படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில் என்பது திராவிடியன் மாடலா?: சிவபுராணம், கந்தப் புராணக் கதை, பதினெண் புராணங்கள் இவையெல்லாம் ஸ்டாலின் வெளியிட்டார் என்பதை நம்புகிறீர்களா? ஆனால், நடந்திருக்கிறது என்பது, சென்னையில் அதிசயமான நிகழ்வு எனலாம். திமுகவினர் இந்து அறநிலையத் துறையை வைத்துக் கொண்டு விளையாடுகின்றனர் என்று தெரிகிறது. அதனால், அது இந்துக்களுக்கு ஆபத்தாகவும் போகலாம். இந்து மதம், நம்பிக்கைகள், பண்டிகைகள் என்றாலே, அவதூறு, ஆபாசம், தூஷணம் என்று செய்தும், வக்கிரத்துடன் தூற்றும் இவர்களுக்கு, ஏன் இத்தகைய முரண்பாடுகளை செய்து வருகின்றனர் என்று தான் கவனிக்க வேண்டியுள்ளது. ஸ்டாலின் மனைவி துர்கா கோவில் விஜயங்கள் செய்வது, பூஜை அறை வைத்திருப்பது, பூஜைகள் செய்வது, முதலியவை தொடர்ந்தாலும், ஸ்டாலினின் இந்துவிரோத நாத்திகம் மாறாமல் தான் உள்ளது. அந்நிலையில் இந்த விழாக்கள் எல்லாமே அறநிலையத்துறைக்கு செலவு தான். லட்சக்கணக்கில் செலவைக் காட்டப் போகிறார்கள். ஆனால், எல்லாமே, இவர்களது நாடகங்களுக்கு, விளம்பரங்களுக்கு பிரச்சாரங்களுக்கு உபயோகப் படுகின்றன. படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில் என்பது திராவிடியன் மாடல் போலும்!

அறநிலையத்துறையில் அதீத ஈடுபாடு கொள்ளும் திமுக: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த ஆண்டு 2022ல் நடந்த இந்து அறநிலையத்துறை ஆலோசனைக்குழு கூட்டத்தில் –

  • இந்து அறநிலையத்துறை கோவில்களின் தலவரலாறு,
  • தலபுராணங்கள்,
  • கோவில் தொடர்பான ஆகமங்கள் –
  • ஆகியவற்றை ஆவணப்படுத்தி தமிழில் புத்தகமாக வெளியிடுதல், நாட்டுடைமையாக்கப்பட்ட பக்தி இலக்கியங்கள்,
  • பழமையான அரிய நூல்கள்,
  • கோவில் கட்டிடக்கலை,
  • செந்தமிழ் இலக்கியங்களை மறுபதிப்பு செய்வதுடன், புதிய சமய நூல்கள் மற்றும்
  • கோவில்களில் கண்டறியப்படும் பழமையான ஓலைச்சுவடிகளை திரட்டி நூலாக்கம் செய்திடவும்,
  • அந்த நூல்களை கோவில்கள் மற்றும் மடங்கள் வாயிலாக பக்தர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்திடவும் தீர்மானிக்கப்பட்டது[1].

அதன்படி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் பதிப்பகப்பிரிவு புதிதாக தொடங்கப்பட்டது[2]. இதன்மூலம் முதற்கட்டமாக, தமிழ் மொழி வல்லுனர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருப்பாவை, திருவெம்பாவை, அபிராமி அந்தாதி, நாலாயிர திவ்யபிரபந்தம், தமிழகக் கலைகள், சைவமும் தமிழும், இந்தியக் கட்டிடக் கலை வரலாறு, அவ்வையார் வரலாறு, பதினெண் புராணங்கள் உள்ளிட்ட 108 அரிய நூல்கள் மறுபதிப்பு செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் நூலாக்கம் செய்யப்பட்டுள்ளது[3]. திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே, அறநிலையத் துறையில் கொள்ளும் அதீத ஈடுபாடு, ஆர்வம் முதலியவை திகைப்பாக இருக்கிறது. இப்பொழுது, பக்தி புத்தகங்களை ஸ்டாலின் வெளியிடும் வரைக்கு வந்துள்ளது.

ஊடகங்கள் வர்ணித்துத் தள்ளின……….

செய்திகள் முழுவதும் ஸ்டாலின் மயம் தான்…….

நாத்திகபெரியாரிஸ, திராவிடயன் ஸ்டாக் ஸ்டாலின் இப்புத்தகங்களை வெளியிடும் ரகசியம், அர்த்தம் அல்லது தேவை என்ன?: புத்தகக் கண்காட்சி எல்லாம் நடந்து முடிந்துள்ள வேளையில், இப்புத்தகங்கள் ஏன் இப்பொழுது வெளியிடப் பட்டு, விழா நடத்துகின்றனர் என்பது வியப்பாக இருக்கிறது. ஜீயர்-மடாதிபதிகள் முதலியோரை வைத்து அல்லது வரவழைத்து, நாத்திக-பெரியாரிஸ குறிப்பாக இந்துவிரோத சித்தந்தம் கொண்ட அரசியல்வாதியை வைத்து நடத்த வேண்டிய அவசியம், கட்டாயம் மற்றும் தேவை என்னவென்றும் தெரியவில்லை. இதை திமுகத் தலைவர், “திராவியன் ஸ்டாக்” என்று மார் தட்டி பேசும் ஸ்டாலின், ஏன் ஒப்புக் கொண்டு அல்லது தீர்மானமாக கலந்து கொண்டு அத்தகைய தனக்குத் தேவையில்லாத புத்தகங்களை வெளியிட்டார் என்பதும் புதிராக உள்ளது[4]. இந்த புத்தக வெளியீட்டு விழா நுங்கம்பாக்கம் இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 9-01-2023 அன்று நடந்தது[5]. அதாவது, அந்த இடம் தேர்ந்தெடுக்கப் பட்டது என்று தெரிகிறது. சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன் வரவேற்றார்[6]. சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புத்தக விற்பனை நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்[7]. பின்னர், இந்து சமய அறநிலையத்துறையின் பதிப்பகப் பிரிவின் மூலம் மறுபதிப்பு செய்து புதுப்பொலிவுடன் நூலாக்கம் செய்யப்பட்டுள்ள 108 அரிய பக்தி நூல்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்[8].

ஓலைச் சுவடிகள்கண்டறியப் பட்டனவாஅல்லது ஏற்கெனவே இருந்தனவா?: அதனைத் தொடர்ந்து, 9 திருக்கோயில்களில் கண்டறிப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள 61, 600 சுருணை ஓலைகள், 10 செப்புப் பட்டயங்கள் மற்றும் 20 பிற ஓலைச்சுவடிகளையும், அவற்றை பராமரித்துப் பாதுகாக்கும் பணிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்[9]. பல்வேறு கோவில்களில் கண்டறியப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுருணை ஓலைகள், செப்புப் பட்டயங்கள் மற்றும் பிற ஓலைச்சுவடிகளையும், அவற்றை பராமரித்து பாதுகாக்கும் பணிகளையும், ஆணையர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது[10]. திடீரென்று, “கண்டறியப்பட்டு” என்று குறிப்பிடுவதும் விசித்திரமாக இருக்கிறது. அப்படியென்றால், இவற்றைப் பற்ரிய செய்திகள் வராதது நோக்கத் தக்கது. உண்மையில், பல ஓலைச் சுவடிகள் சரஸ்வதி மஹால் போன்ற ஊலகங்களிலிருந்து காணாமல் போனது, என்று தான் செய்திகள் வந்துள்ளன. செயல்பட்டு வரும் பதிப்பக பிரிவும் பல்லாண்டுகளாக உள்ளது. ரூ.15 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டிட பணி தொடர்கிறது[11]. இவற்றை எண்மியப்படுத்தி நூலாக்கம் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று இந்து சமய அறநிலையத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்ககப்பட்டு உள்ளது[12].

© வேதபிரகாஷ்

20-01-2023


[1] தினத்தந்தி, 108 பக்தி நூல்கள் புதுப்பொலிவுடன் மறுபதிப்பு: முதல்அமைச்சர் மு..ஸ்டாலின் வெளியிட்டார், தினத்தந்தி ஜனவரி 20, 5:43 am

[2] https://www.dailythanthi.com/News/State/108-bhakti-texts-reprinted-with-new-editions-published-by-prime-minister-mkstalin-882191

[3] மாலைமலர், தேவாரம், திருவாசகம், திருப்புகழ் உள்ளிட்ட 108 அரிய பக்தி நூல்களை முதலமைச்சர் வெளியிட்டார், By மாலை மலர்19 ஜனவரி 2023 3:29 PM.

தினத்தந்தி, மறுபதிப்பு செய்யப்பட்டுள்ள 108 அரிய பக்தி நூல்களை முதல்அமைச்சர் மு..ஸ்டாலின் வெளியிட்டார், ஜனவரி 19, 4:32 pm

[4] https://www.maalaimalar.com/news/state/cm-mk-stalin-released-108-rare-devotional-books-562418

மாலைமலர், தேவாரம், திருவாசகம், திருப்புகழ் உள்ளிட்ட 108 அரிய பக்தி நூல்களை முதலமைச்சர் வெளியிட்டார், By மாலை மலர்19 ஜனவரி 2023 3:29 PM.

[5] தினத்தந்தி, மறுபதிப்பு செய்யப்பட்டுள்ள 108 அரிய பக்தி நூல்களை முதல்அமைச்சர் மு..ஸ்டாலின் வெளியிட்டார், ஜனவரி 19, 4:32 pm.

[6] https://www.dailythanthi.com/News/State/chief-minister-mkstalin-released-108-rare-devotional-texts-which-have-been-reprinted-881552

[7] தினத்தந்தி, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 108 பக்தி நூல்களை வெளியிட்டார் முதல்வர் மு. ஸ்டாலின், By தந்தி டிவி, 19 ஜனவரி 2023 1:49 PM

[8] https://www.thanthitv.com/latest-news/cm-stalin-released-108-devotional-books-on-the-behalf-of-hindu-religious-endowments-department-162790

[9] தினமலர், 108 பக்தி நுால்கள் வெளியீடு Added : ஜன 20, 2023 00:19 …

[10] https://www.dinamalar.com/news_detail.asp?id=3221907

[11] தமிழ்.இந்து, புதுப்பொலிவுடன் 108 அரிய பக்தி நூல்கள்: முதல்வர் மு..ஸ்டாலின் வெளியிட்டார், செய்திப்பிரிவு, Published : 20 Jan 2023 05:49 AM, Last Updated : 20 Jan 2023 05:49 AM.

[12] https://www.hindutamil.in/news/tamilnadu/931352-108-rare-bhakti-books-with-new-editions.html

திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்: கோவில் நிலங்களுக்காக சட்டப்படி போராடும் பிரமிக்க வைக்கும் வீரர்! (2)

திசெம்பர்15, 2022

திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்: கோவில் நிலங்களுக்காக சட்டப்படி போராடும் பிரமிக்க வைக்கும் வீரர்! (2)

06-12-2022 அன்று பிறப்பிக்க்கப் பட்ட ஆணை – திருச்செந்தூர் ஆக்கிரமிப்பு: திருச்செந்தூரில் ஆக்கிரமிப்பில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்துக்கு ரூ.100 கோடி மதிப்பிலான சொந்தமான 3.5 ஏக்கர் நிலத்தை 12 வாரத்தில் மீட்க வேண்டும் என அறநிலையத் துறை ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[1]. ராமநாதபுரத்தைச் சேர்ந்த மார்கண்டன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு[2]: “திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே தருமபுரம் ஆதீன மடத்துக்கு சொந்தமான 3.5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். ஆதீன நிலத்தை மீட்கவும், அந்த சொத்தை பாதுகாக்கவும் அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும்,” இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு இன்று நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தருமபுர ஆதீன மடத்திற்கு சொந்தமான சொத்து ஆக்கிரமிப்பு தொடர்பான ஆதாரங்கள், போலி பத்திரப்பதிவு ஆவணங்கள் ஆகியன தாக்கல் செய்யப்பட்டன. திருச்செந்தூர் கோயில் உதவி ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு[3]: ”திருச்செந்தூரில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆதினத்திற்கு சொந்தமான சொத்துகளுக்கு 1971 வரை வாடகை செலுத்தி வந்தனர். அதன்பிறகு, முறைகேடாக பத்திரப் பதிவு செய்துள்ளனர். ….ஆதீன மடத்துக்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் வசமிருக்கும் ஆதீன மடத்தின் சொத்துக்களை அறநிலையத் துறை ஆணையர் உடனடியாக மீட்டு ஆதீன மடத்திடம் ஒப்படைக்க வேண்டும். இப்பணியை 12 வாரத்தில் முடிக்க வேண்டும்,” என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்[4]. அதற்குள் இன்னொரு வழக்கு வந்து விட்டது போலும்.

12-12-2022 அன்று மறுபடியும் விசாரணைக்கு வந்தது: திருத்தொண்டர் சபை நிறுவனர்  ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்[5]. அதில் மதுரை ஆதீன மடம் மிகவும் பழமையான, பிரசித்திபெற்ற மடமாக இருந்து வருகிறது[6]. இந்த மடத்திற்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சொத்துக்கள் உள்ளது[7]. இதன் தற்போதைய மதிப்பு பல நூறு கோடி ரூபாய் ஆகும்[8]. இந்நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு அப்போது இருந்த மதுரை 292 அருணகிரி ஆதீனம் தரப்பில் சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் தாலுகா மதுரை விமான நிலையம் அருகில் உள்ள 1191 ஏக்கர் நிலங்களை பாண்டிச்சேரியைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களுக்கு 99 வருட ஒத்திக்கு (பவர் ஒப்பந்தம்) செய்யப்பட்டுள்ளது[9]. இதை வைத்து 2018 ஆம் ஆண்டு பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது[10]. இது சட்டவிரோதமானது[11]. ஆதீன மடங்களுக்கு சொந்தமான சொத்தை தனியாருக்கு விற்பனை செய்ய முடியாது என சட்டம் உள்ளது[12]. மேலும் நீதிமன்ற தீர்ப்புகளும் உள்ளது. இந்நிலையில் ஆதீன மடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலம் தனியார் நிறுவனத்திற்கு சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது[13]. எனவே சட்ட விரோதமாக பதியப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்[14]. இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போதைய 293 வது ஆதீனமான ஞான சம்பந்தர் தரப்பில் வழக்கறிஞர் அருண் சாமிநாதன் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் மறைந்த 292 வது ஆதீனம் இருந்த போது, இந்த  ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தற்போது இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் சட்டவிரோதமாக பத்திர பதிவு செய்தவர்கள் வெளியேற மறுக்கின்றனர். அவர்கள் பண பலமிக்கவர்களாக உள்ளனர். எனவே நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பித்து சட்ட விரோதமாக பத்திரப்பதிவு செய்தவர்களை வெளியேற்ற வேண்டும் என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், மதுரை விமான நிலையம் அருகில் உள்ள மதுரை ஆதின மடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலத்தை மீட்க இந்து அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தேவைப்படும் பட்சத்தில் காவல்துறையினர் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

2016ல் மேல்நிலை நீர் தேக்க தொட்டிநாகப்பட்டினம் மாவட்டத்தில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டது: நாகப்பட்டினம் மாவட்டத்தில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை இடிக்கக் கோரி சென்னை உயர் நிதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது[15]. மதுரை ஆதீனத்தின் மேலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், மதுரைஆதீனத்துக்குச் சொந்தமாக மதுரை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நிலங்கள் உள்ளதாகவும், நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகேயுள்ள பன்னத்தெரு கிராமத்தில் உள்ள நிலத்தில் தங்களிடம் அனுமதி பெறமலேயே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியில் அரசு ஈடுப்பட்டடிருப்பதாக குறிப்பிடப்பட்டது. இது தொடர்பாக பன்னத்தெரு பஞ்சாயத்து தலைவரிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லையென குற்றம்சாட்டப்பட்டது. தங்களது நிலத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு இடைக்கால விதிப்பதோடு அதனை இடிக்க உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கூறப்பட்டது.இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்த போது,  நாகை மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகளை எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டு,  விசாரணையை வரும் 22ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது..

15-11-2022 – கோவில் நிலத்தை மீட்க ஒத்துழைக்காவிடில் சிறை! அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை: கோவில்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்கும் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்க மறுத்தால் சிறை செல்ல நேரிடும்’ என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரித்துள்ளது[16]. திருச்சி சாவித்ரி துரைசாமி என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது[17]: மயிலாடுதுறை மாவட்டம் தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமாக பல பகுதிகளில் சொத்துக்கள் உள்ளன. திருச்சி மற்றும் திருக்கற்குடியில் ஆதீனத்திற்கு சொந்தமான நிலத்தை சில மூன்றாம் நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் ஆதீனத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அறநிலையத்துறைக்கு புகார் அனுப்பினோம். நிலத்தை மீட்டு ஆதீனத்திடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். அந்த மனுவை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்தியநாராயணபிரசாத் அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: கோவில்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்கும் விவகாரத்தில் மெத்தனமாக செயல்படக் கூடாது. மீட்பு பணியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்க மறுத்தால் சிறை செல்ல நேரிடும். இவ்வழக்கில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அறநிலையத்துறை தரப்பில் வரம் 23ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.

© வேதபிரகாஷ்

15-12-2022.


[1] தமிழ்.இந்து,திருச்செந்தூரில் தருமபுரம் ஆதீன மடத்துக்கு சொந்தமான நிலங்களை மீட்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு, கி.மகாராஜன், Published : 07 Dec 2022 06:32 PM, Last Updated : 07 Dec 2022 06:32 PM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/911413-lands-of-darumapuram-atheena-mutt-in-tiruchendur-to-be-recovered-high-court-orders-charities-department-1.html

[3] பத்திரிக்கை.காம், தருமபுர ஆதீன மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான திருச்செந்தூர் நிலம் ஆக்கிரமிப்பு! மீட்டு ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு, By A.T.S Pandian, December 7, 2022.

[4] https://patrikai.com/thiruchendur-land-worth-rs-100-crore-belonging-to-dharmapura-aadheena-mutt-encroached-high-court-order-to-recover/

[5] மாலை முரசு, மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான நிலத்தை சட்ட விரோதமாக பதிவு செய்த தனியார் நிறுவனம்…! ரத்து செய்யகோரிய வழக்கு..!, webteam webteam, Dec 13, 2022.,19:26.

[6] https://www.malaimurasu.com/posts/tamilnadu/A-private-company-illegally-registered-the-land-belonging-to-Madurai-Adheenam–Cancellation-of-the-case

[7] தினகரன், மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான 1,191 ஏக்கர் நிலத்தை மீட்க ஐகோர்ட் கிளை உத்தரவு, 2022-12-14@ 00:11:35

[8] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=822214

[9] தினத்தந்தி, மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான 1200 ஏக்கர் நிலங்களை மீட்க வேண்டும்- அறநிலையத்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு, தினத்தந்தி டிசம்பர் 14, 1:40 am.

[10] https://www.dailythanthi.com/News/State/madurai-belongs-to-adeena1200-acres-of-land-should-be-recovered-madurai-high-court-orders-the-charities-department-857420

[11] தினகரன், மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான 1,191 ஏக்கர் நிலத்தை மீட்க ஐகோர்ட் கிளை உத்தரவு, 2022-12-13@ 17:19:26.

[12] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=822113

[13] தமிழ்.ஒன்.இந்தியா, 1191 ஏக்கர் நிலம்.. தனியார் நிறுவனத்திடம் வழங்கிய மதுரை முன்னாள் ஆதீனம்! மீட்க உயர்நீதிமன்றம் ஆர்டர், By Noorul Ahamed Jahaber Ali, Updated: Tuesday, December 13, 2022, 20:14 [IST]

[14] https://tamil.oneindia.com/amphtml/news/madurai/high-court-orders-to-seize-1191-acre-land-of-madurai-aadheenam-489467.html

[15] மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டு வரும் நீர்தேக்க தொட்டியை இடிக்கக் கோரி வழக்கு, NEWS18 TAMIL, LAST UPDATED : AUGUST 15, 2022, 22:06 IST  , Published by: Raj Kumar, First published: August 15, 2022, 22:06 IST

https://tamil.news18.com/news/tamil-nadu/madurai-adeenam-files-case-on-construction-of-water-tank-786692.html

[16] தினமலர், கோவில் நிலத்தை மீட்க ஒத்துழைக்காவிடில் சிறை! அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை, Updated : நவ 16, 2022  07:12 |  Added : நவ 16, 2022  07:11.

[17] https://www.dinamalar.com/news_detail.asp?id=3171654

திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்: கோவில் நிலங்களுக்காக சட்டப்படி போராடும் பிரமிக்க வைக்கும் வீரர்! (1)

திசெம்பர்15, 2022

திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்: கோவில் நிலங்களுக்காக சட்டப்படி போராடும் பிரமிக்க வைக்கும் வீரர்! (1)

திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்: திருக்கோவில் நிலங்களை ஆக்கிரமிப்புகளில்ருந்து மீட்கப் போராடி வருகிறவர்களில், சமீபத்தில், பல வழக்குகள், தீர்ப்புகள், நீதிபதி ஆணைகள், செய்திகள் என்று பலவற்றை வாசிக்கும் பொழுது, “திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்,” என்று தோன்றும் போது, பிரமிப்பாக இருக்கிறது. திருமூலர் சொல்லியபடி, “கோவில் மதிற்சுவரிலிருந்து ஒரு செங்கல் விழுந்தாலும், அரசாட்சி வீழும்,” என்பது போல, இவரது வழக்குகளிலிருந்து, நீதி வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆக்கிரமிப்பார்கள், குத்தகையாளர்கள், ஆட்சியாளர்கள் முதலியோர் அஞ்சுவார்களா, இல்லை, “கடவுள் இல்லை,” என்று ஈவேராவை நம்பி, திராவிடத்துவாதிகள் துணை கொண்டு, தொடர்ந்து, சட்டங்களை வளைப்பார்களா என்றெல்லாம் பொறுத்து தான் பார்க்க வேண்டும். ஆனால், நிச்சயமாக கடவுள் இருக்கிறார், “தெய்வம் நின்றுதான் கொல்லும்”! வாழ்க அவரது பணி!

36,590 கோயில்களுக்குக் கீழே 4,22,000 ஏக்கர் நிலங்களும் 56 மடங்களுக்குக் கீழே கிட்டத்தட்ட 56,000 ஏக்கர் நிலங்களும் இருக்கிறது: இந்து சமய அறநிலையத்துறை கொள்கைவிளக்கக் குறிப்பேட்டில் தமிழகத்தில் மொத்தம் 56 ஆதீன மடங்களும், அதற்குக் கீழே 57 கோயில்கள் இருப்பதாகவும் குறிப்பு இருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் 36,590 கோயில்களுக்குக் கீழே 4,22,000 ஏக்கர் நிலங்களும்; 56 மடங்களுக்குக் கீழே கிட்டத்தட்ட 56,000 ஏக்கர் நிலங்களும் இருப்பதாக அறநிலையத்துறையின் தகவல் தெரிவிக்கிறது. திருவாவடுதுறை ஆதீனம், வானமாமலை ஆதீனம், திருக்குறுங்குடி ஜீயர் மடம், தர்மபுரம் ஆதீனம், மதுரை ஆதீனம், திருப்பனந்தாள் காசி மடம், அகோபில மடம், காஞ்சி சங்கர மடம் போன்ற சில ஆதீன மடங்களுக்குச் சொந்தமாகத்தான் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் குவிந்துகிடக்கின்றன. திருவாவடுதுறை ஆதீனத்துக்கு மட்டும் சுமார் 19,000 ஏக்கர் நிலம் சொந்தமாக இருக்கிறது. ஆதீனத்துக்குச் சொந்தமான இந்த நிலங்கள் மக்களுக்குக் குத்தகைவிடப்படுகின்றன; வாடகைக்கும் விடப்படுகின்றன; இவற்றின் மூலமாக வருமானம் வருகிறது.

2018ல் திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் தொடுத்த வழக்கு: இந்தச் சூழலில் அண்மைக் காலமாக கோயில்கள், ஆதீனங்கள், மடங்களுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப் படுவதாகவும், சட்ட விரோதமாக விற்கப் படுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இது தொடர்பாக திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்[1]. அந்த மனுவில் இப்படிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது[2]… “தூத்துக்குடி மாவட்டம் நெடுங்குளத்தில் இருக்கிறது `செங்கோல் ஆதீனம்.’ இந்த ஆதீனத்துக்குச் சொந்தமான நிலங்கள் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் முறைகேடாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கின்றன. இதனால் அரசுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை உடனடியாக மீட்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.’ 

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீனங்கள் மற்றும் மடங்களையும் இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக இணைக்கஉத்தரவிட்டது: இந்த வழக்கு விசாரணையில், `தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீனங்கள் மற்றும் மடங்களையும் இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக இணைக்க’ உத்தரவிட்டிருக்கிறது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. மேலும், `தமிழகத்திலுள்ள ஆதீனங்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான சொத்துகள் மற்றும் நிலங்கள், இதரச் சொத்துகள், குத்தகை மற்றும் வாடகைக்கு விடப்பட்டுள்ள விவரங்களை அறநிலையத்துறை உடனடியாகத் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி அனைத்து ஆதீனம் மற்றும் மடங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.   

மனுதாரர் ராதாகிருஷ்ண சொன்னது: இது தொடர்பாக வழக்கை தாக்கல் செய்த திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனர் மற்றும் தலைவரான ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்… “உயர் நீதிமன்றம், `தமிழகத்திலிருக்கும் கோயில், ஆதீனங்கள் மற்றும் மடங்களின் நிலங்களை அளந்து ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை மீட்க வேண்டும்என்று அறநிலையத்துறையினருக்கு உத்தரவிட்டது. ஆனால், எந்த ஆக்கிரமிப்பு மீட்பு நடவடிக்கையையும் யாரும் மேற்கொள்ளவில்லை. மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் `செங்கோல் ஆதீனத்துக்கு உரிய நிலங்களை மீட்க வேண்டும் என்று கூறி பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தோம். நீதிமன்றமே மற்ற ஆதீன நிலங்களின் ஆக்கிரமிப்பு தகவல்களைக் கேட்டறிந்து, அனைத்து ஆதீன மடங்களையும் வழக்கில் எதிர் மனுதாரர்களாக இணைத்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை, 55,820 ஏக்கர் நிலங்கள் ஆதீனங்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. ஆனால், ஆதீன மடங்களுக்கு உரிய நிலத்தை அளந்தால் இதன் மதிப்பு இன்னும் அதிகமாகும். தனிப்பட்டவர்களின் சுயநலத்தால் நிலங்களை மீட்க முடியாத சூழல் நிலவிக்கொண்டிருக்கிறது. கண்துடைப்புக்காக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அனைவரையும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் அனைத்து நிலங்களையும் மீட்டு வருவாயை ஒழுங்குபடுத்தினால், பல்வேறு நலத்திட்டப் பணிகளை மேற்கொள்ள முடியும்.

கோயில் மற்றும் ஆதீன, மட நிலங்களை விற்பவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். வாங்கும் நடுத்தர மக்கள் சிக்கிக்கொள்கிறார்கள்; கோயில் மற்றும் ஆதீன, மட நிலங்களை விற்பவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். ஆனால், அதை வாங்கும் நடுத்தர மக்கள்தாம் சிக்கிக்கொள்கிறார்கள். திருக்கோயில், ஆதீன, மடங்களின் பட்டா, புறம்போக்கு நிலங்களுக்கு `தரும சாசன சொத்துகள்’ என்று பெயர். `இந்த தரும சாசனச் சொத்துகளை யார் வாங்கி பட்டா போட்டுக்கொண்டாலும், அது செல்லாது’ என்று உச்ச நீதிமன்றமே அறிவித்திருக்கிறது. பொது மக்கள் யாரும் கோயில் மற்றும் ஆதீன, மட நிலங்களை வாங்கி ஏமாற வேண்டாம். அந்த நிலங்கள் மீண்டும் தன்னிச்சையாக திருக்கோயில் வசம் வந்துவிடும். தர்ம சாசன நிலங்களை விற்பவர்கள் மீதும், வாங்குபவர்கள் மீதும் குண்டர் சட்டம் பாயும்படி சட்டம் இயற்றப்பட வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில் மக்களுக்கும் இது தொடர்பாக விழிப்புஉணர்வு அதிகம் வந்திருக்கிறது.. ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் தொடர்பாக வழக்கு, நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது. நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம்…,” என நம்பிக்கையுடன் பேசுகிறார் ராதாகிருஷ்ணன்.

`சிவன் சொத்து குல நாசம்என்றாலும், விற்கிறார்கள், வாங்குகிறார்கள்: `சிவன் சொத்து குல நாசம்’ என்பார்கள். பல்வேறு காலகட்டங்களில் நம் முன்னோர்களால் தானமாக, புனித காரியங்களுக்காக அளிக்கப்பட்ட இந்த நிலங்களை அத்துமீறி அனுபவிப்பது என்பது தவறான செயல். தர்ம சாசன சொத்துகளை முறைகேடாக வாங்கியவர்களே கோயிலுக்குத் திருப்பிக் கொடுக்க முன்வர வேண்டும். இந்து சமய அறநிலையத்துறையும் ஆக்கிரமிக்கப்பட்ட மற்றும் முறைகேடாக விற்கப்பட்ட நிலங்களை விரைந்து மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்..!

18-10-2022 அன்று விசாரணைக்கு வந்தது, 28-10-2022 தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டது: சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு, அக்டோபர் 18, 2022 அன்று  நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது[3]. அப்போது நீதிபதிகள், “ஆதீன மடத்தின் சொத்துகள் தனியாருக்கு குத்தகைக்கு வழங்கியது அதிர்ச்சி அளிக்கிறது. ஆதீன மடங்கள் மடங்களாக செயல்படுகிறதா? இல்லை, வியாபார நிறுவனங்களாக செயல்படுகிறதா? ஆதீன மடத்தின் சொத்துகளை குத்தகைக்கு விடுவதை எந்தச் சட்டம் அனுமதிக்கிறது? ஆதீன மடங்கள் அனைத்தும் இந்து சமய அறநிலைத்துறைக்கு கட்டுப்பட்டவை. இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் மடத்தின் மீது நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு அதிகாரம் உள்ளது. அதிகாரம் உள்ள நிலையில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?, ” என கேள்வி எழுப்பினர்[4]. தொடர்ந்து, மனுதாரர் கோரிக்கை தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் விசாரித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த நிலங்களில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு வந்தால் உடனடியாக நிறுத்த வேண்டும். வழக்கு விசாரணை அக்டோபர் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

© வேதபிரகாஷ்

15-12-2022.


[1] விகடன், கோயில், ஆதீனங்களுக்குச் சொந்தமான `தரும சாசன சொத்துகளை வாங்கலாமா?, சி.வெற்றிவேல், Published:12 Jun 2018 4 PM;; Updated:12 Jun 2018 4 PM.

[2] https://www.vikatan.com/news/agriculture/customers-are-on-the-waiting-list-for-our-ghee-amazing-youth-in-ghee-production?pfrom=latest-infinite

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், ஆதீன மடங்கள் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பட்டவைஉயர் நீதிமன்ற மதுரை கிளை, Written by WebDesk, Updated: October 20, 2022 7:20:27 am.

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/pil-plea-to-protect-and-safeguard-properties-of-madurai-adheenam-527641/

ஆகமங்கள் பற்றி திடீரென்று கேள்விகள் கேட்கும் திராவிடத்துவ அரசு, அதன் சார்புடைய பெரியாரிஸ முருகனார், சிவனார், நந்தியார் முதலியோர்! இந்துமதத்தைக் காக்கவா? (2)

திசெம்பர்9, 2022

ஆகமங்கள் பற்றி திடீரென்று கேள்விகள் கேட்கும் திராவிடத்துவ அரசு, அதன் சார்புடைய பெரியாரிஸ முருகனார், சிவனார், நந்தியார் முதலியோர்! இந்து மதத்தைக் காக்கவா? (2)

யார் இந்த சத்தியவேல் முருகனார்?: இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் அன்னைத் தமிழ் வழிபாடு குறித்து கோவில்களில் பணிபுரியும் புலவர்களுக்கான பயிலரங்கத்தில் சுகிசிவம், சத்தியவேல் முருகனார் ஆகியோர் புலவர்களுக்கு பயிற்சி அளித்தனர். தமிழகத்தில் உள்ள கோயில்களில் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்தவும் பராமரிப்புகளை செம்மைப்படுத்தவும் ஏற்படுத்தப் பட்ட, 17 பேர் இக்குழுவின் தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், துணைத் தலைவராக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவும் செயல்படுவர் மற்றும், பதவிவழி அலுவல் வழி உறுப்பினர்களாக இந்து சமய அறநிலையத்துறை செயலர், ஆணையர் ஆகியோர் செயல்படுவர். இந்தக்குழுவில் அலுவல் சாரா உறுப்பினர்களாக குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சுகி சிவம், சத்தியவேல் முருகனார், ஆகியோரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்[1]. இவ்வாறு இவர் திராவிடத்துவவாதியாக “தமிழ்,” “சைவம்” போர்வையில் ஆதிக்கம் செல்லுத்தி வருகிறார். வள்ளலார் போர்வையில், நாத்திகத்தை ஆதரிப்பது போல, ஈவேராவைத் தூக்கிப் பிடித்து, திரிபு விளக்கம் கொடுத்தார். சுகிசிவமும் அதே பாணியில் இருக்கிறார். சமஸ்கிருத எதிர்ப்பு, வேதங்கள் மறுப்பு முதலியவை அவற்றுடன் சேர்ந்து வருகின்றன. இவர்களது யூ-டியூப் உரைகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

காசுக்காகப் பேசுபவர்களை இந்து அறநிலையத் துறையில் இருக்கக் கூடாது: கட்டண பேச்சாளர், காசுக்காக பேசுபவர் மற்றும் இருக்கின்ற கூட்டத்தைத் திருப்தி படுத்தும் வகையில் சொற்பொழிவு செய்பவர் என்பது பொதுவாக அந்த பார்வையாளர்களுக்கு பொருத்தமான ஒரு குறிப்பிட்ட தலைப்பில் மக்கள் குழுக்களுடன் பேசுவதற்கு பணம் பெறுபவர் ஆவார். அதில் சித்தாந்தங்களில் ஊறியவர் பதவி, அந்தஸ்து, பிரபலம் போன்றவற்றிற்கும் ஆசை, பேராசை, மோகம் கொண்டு, தமது கொள்கைகளை மறந்து, எந்த நியாமும் இல்லாமல் மேடைக்கு ஏற்றபடி திரித்துப் பேசவும் தயாராகி விடுவர். தமிழகத்தைப் பொறுத்த வரையில் பெரும்பாலான பேச்சாளர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். 2013ல், “இனி, வரும் காலங்களில், கோவிலுக்குச் சொந்தமான திருமண மண மண்டபங்கள், கோவிலை சுற்றியுள்ள வளாகத்தில், இந்து சமயம் வளர்ச்சி சம்பந்தப்படாத கொள்கை உடையவர்களுக்கும், நாத்திகவாதத்தை கொள்கையாக கொண்டவர்களுக்கும் இடம் அளிக்க கூடாது. மது, மாமிசம் பயன்படுத்தும் கூட்டங் களுக்கும் இது பொருந்தும். மண்டபங்களை சமய வழிபாடு, தெய்வீக தன்மைக்கும், வளர்ச்சிக்கும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் மட்டுமே, அனுமதிக்க வேண்டும்; வாடகைக்கு கொடுக்க வேண்டும்,” என்று, சுற்றறிக்கை விடப்பட்டது. அதே போல பேச்சாளர்களுக்கும் பொறுந்தும் வகையில் வரைமுறை இருக்க வேண்டும்.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர் அறங்காவலலாக நியமிக்கக் கூடாது: சுப வீரபாண்டியன், அருணன், சத்தியவேல் முருகன் ஆகியோர் அறங்காவலர் பொறுப்பின் எல்லை கோயில் வருமானத்தையும் செலவுகளையும் மேற்பார்வை செய்யும் நிதி நிர்வாகத்தோடு மட்டுமே தொடர்புடையது என்பதால் அவர் கடவுள் நம்பிக்கை உடையவரா இல்லையா என்பதற்கும் அவரது பணிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், அவர் நேர்மையானவராகவும், நன்னடத்தை உடையவராகவும் இருந்தால் போதும் என்றும் அதனால் இந்தச் சட்டத் திருத்த முன்வடிவு தேவையற்றது என்ற கருத்தை சத்தியவேல் முருகன் சொன்னது நினைவில் கொள்ளவேண்டும். இத்தகைய பிழைப்பிற்காக ஆன்மீகப் போர்வையில் பேசுபவர் தான், பெரியாரையும் நியாயப் படுத்தி, ஏதோ சீர்திருத்தவாதி போன்று திரிபு விளக்கம் கொடுத்து வருகிறார்கள். திராவிடத்துவவாதிகள் ஆட்சி, அதிகாரம், முதலிய பதவிகளில் வந்த பிறகு தான் சமூகம் சீரழிந்து, பற்பல குற்றங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்து அறநிலைத் துறையை விட்டு விலக வேண்டும் அல்லது தாம் அப்பதவிகளுக்கு ஒவ்வாதவர்கள் என்றதால் ஏற்றக் கொள்ளவே கூடாது: இன்றுள்ள அறங்காவலர்களில் பெரும்பாலானோர் பரம்பரை அறங்காவலர்கள். அவர்களிலும் பாதிக்கு மேல் அரசியல் சார்புடையவர்கள். ஏதோ ஒரு வகையில் ஒரு கட்சியின் சார்புடையவர்களாகவும், சட்டமன்ற, நாடாளுமன்ற, மாநகராட்சி, வட்டார ஆட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் தாம். வேறு சிலர் கட்சி சார்பில்லாமல் பரம்பரை செல்வாக்கு காரணமாக அறங்காவலராகப் பணியாற்றுபவர்கள். பரம்பரை அறங்காவலர்கள் இல்லாத அல்லது அமையாத இடங்களில் அரசாங்கம் புதிதாக அறங்காவலர்களை நியமிக்கிறது. அதுவும் அநேகமாக ஆளுங் கட்சியின் சார்பானவர்களாகவே அமைந்து விடுகிறது. ஆகையால், இவர்களால் கோவில்களுக்கு தொடர்ந்து கேடு தான் விளையும். நாத்திகர், பெரியாரிஸவாதிகள் பகுத்தறிவுவாதிகள் வந்ததாலும் இதே சீர்கேடுகள் தான் 1970லிருந்து ஏற்பட்டு வருகிறது. உண்மையில் அவர்கள் தான் இந்து அறநிலைத் துறையை விட்டு விலக வேண்டும் அல்லது தாம் அப்பதவிகளுக்கு ஒவ்வாதவர்கள் என்றதால் ஏற்றக் கொள்ளவே கூடாது. மீறி வருவதால் தான் கொள்ளை, கொலை, சிலை கடத்தல் என்று எல்லாவித குற்றங்களும் நடந்து வருகின்றன. 

மேற்கண்ட அறிக்கையை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கு: இந்த சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரி டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்[2]. அவரது மனுவில், கோயில்களின் ஆகமத்தை கண்டறிய உயர் நீதிமன்றம் நியமித்த குழுவின் அதிகாரத்தை பறித்துக் கொள்ளும் வகையில், சம்பந்தமில்லாத கேள்விகளுடன் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது[3], உயர் நீதிமன்ற உத்தரவின்படி இரு பிரதிநிதிகளை நியமிக்காத அரசு, அறநிலையத்துறை உயர்மட்ட ஆலோசனைக்குழு தலைவருக்கு அதிக அதிகாரம் வழங்கியுள்ளது[4].  இது நீதிமன்ற அவமதிப்பு செயல் என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது[5]. ஆகமங்கள் பற்றி ஏதும் தெரியாத சத்தியவேல் முருகன், நடைமுறையில் இல்லாத தமிழ் ஆகமம் பற்றி தவறான பரப்புரை மேற்கொண்டு வருவதாகவும்[6], ஆகமங்களை அறியாத அவர் தயாரித்த கேள்விகளுடன் கூடிய சுற்றறிக்கையை ரத்து செய்வதுடன், அவரை உயர் நீதிமன்றம் நியமித்த குழுவில் உறுப்பினராக நியமிக்க தடை விதிக்க வேண்டும் எனவும்  அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சத்தியவேல் முருகன் ஏன் ஐவர் குழுவில் இருக்கக் கூடாது?: உயர் நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் இந்த சுற்றறிக்கை உள்ளது. ஆகமம் பற்றி கூறவும் கேள்விப் பட்டியலை தயாரிக்கவும் சத்தியவேல் முருகனுக்கு தகுதி இல்லை[7]. குழுவில் உறுப்பினராக அவரை நியமிக்கவும் தகுதி இல்லை. சமஸ்கிருதம் குறித்து சத்தியவேல் முருகனுக்கு தெரியாது[8]. சமஸ்கிருதத்தில் தான் ஆகமம் இருக்கும். ஆகமத்தையும் ஹிந்து பாரம்பரியத்தையும் நீர்த்து போகும் விதமாக விஷமத்தனமாக கேள்விகளை சத்தியவேல் முருகன் கேட்டுள்ளார். எனவே சத்தியவேல் முருகன் தயாரித்த கேள்வி பட்டியலையும் அறநிலையத்துறை அனுப்பிய சுற்றறிக்கையையும் ரத்து செய்ய வேண்டும். விசாரணை முடியும் வரை தடை விதிக்க வேண்டும். ஐவர் குழுவில் சத்தியவேல் முருகனை நியமிக்கவும் தடை விதிக்க வேண்டும்.

ஆகமங்களைக் கண்டறிவது தொடர்பாக அனுப்பப்பட்ட சுற்றறிக்கைக்கு தடை விதித்து உத்தரவு: இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று  விசாரணைக்கு வந்தது[9].  “உயர் நீதிமன்ற உத்தரவின்படி, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படாத நிலையில், குறிப்பிட்ட நபரை நியமிக்கக் கூடாது என முன்கூட்டியே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், கடந்த நவ. 4-ம் தேதி சுற்றறிக்கை வேறு பயன்பாட்டுக்காக அனுப்பப்பட்டதாகவும் தமிழக அரசுத்தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது[10]. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், குறிப்பிட்ட அந்த சுற்றறிக்கை ஆகம விவரங்களை கோரும் வகையில் உள்ளதாக கூறி, ஆகமங்களைக் கண்டறிவது தொடர்பாக 50 கேள்விகள் எழுப்பி அனுப்பப்பட்ட சுற்றறிக்கைக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், இந்து சமய அறநிலையத் துறைக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்தனர்.

© வேதபிரகாஷ்

09-12-2022


[1] இந்தக்குழுவில் அலுவல் சாரா உறுப்பினர்களாக குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சுகி சிவம், சத்தியவேல் முருகனார், தேச மங்கையர்க்கரசி, ஸ்ரீமத் வராக மகாதேசிகன், ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், ஓய்வுபெற்ற நீதிபதி டி.மதிவாணன், முனைவர் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார், கருமுத்து கண்ணன், இராமசுப்பிரமணியன், தரணிபதி ராஜ்குமார், ஸ்ரீமதி சிவசங்கர், மல்லிகார்ஜூன சந்தான கிருஷ்ணன் ஆகியோரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/911921-interim-stay-on-circular-sent-by-hr-ce-department-with-50-questions-high-court.html

[3] இ.டிவி.பாரத், அறநிலையத்துறை சுற்றறிக்கைக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை, டிசம்பர் 8, 2022.

[4] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/madras-high-court-granted-an-interim-stay-on-the-circular-of-the-department-of-charities/tamil-nadu20221208143021430430154

[5]  தினகரன், கோயில்களில்ஆகமவிதிகளை கண்டறிவது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அனுப்பிய சுற்றறிக்கைக்கு ஐகோர்ட் தடை, 2022-12-08@ 13:30:33

[6]  https://www.dinakaran.com/news_detail.asp?Nid=820711

[7] தினமலர், ஆகமம் தொடர்பாக 50 கேள்விகள்,  Added : டிச 09, 2022  02:05.

[8] https://www.dinamalar.com/news_detail.asp?id=3189738

[9] தினமணி, ஆகம விதிகள் தொடா்பான அறநிலையத்துறை சுற்றறிக்கைக்கு உயா் நீதிமன்றம் இடைக்காலத் தடை, By DIN  |   Published On : 09th December 2022 12:52 AM  |   Last Updated : 09th December 2022 12:52 AM

[10]https://www.dinamani.com/tamilnadu/2022/dec/09/%E0%AE%86%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-3963778.html