Archive for the ‘காணிக்கை’ Category

திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்: கோவில் நிலங்களுக்காக சட்டப்படி போராடும் பிரமிக்க வைக்கும் வீரர்! (1)

திசெம்பர்15, 2022

திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்: கோவில் நிலங்களுக்காக சட்டப்படி போராடும் பிரமிக்க வைக்கும் வீரர்! (1)

திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்: திருக்கோவில் நிலங்களை ஆக்கிரமிப்புகளில்ருந்து மீட்கப் போராடி வருகிறவர்களில், சமீபத்தில், பல வழக்குகள், தீர்ப்புகள், நீதிபதி ஆணைகள், செய்திகள் என்று பலவற்றை வாசிக்கும் பொழுது, “திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்,” என்று தோன்றும் போது, பிரமிப்பாக இருக்கிறது. திருமூலர் சொல்லியபடி, “கோவில் மதிற்சுவரிலிருந்து ஒரு செங்கல் விழுந்தாலும், அரசாட்சி வீழும்,” என்பது போல, இவரது வழக்குகளிலிருந்து, நீதி வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆக்கிரமிப்பார்கள், குத்தகையாளர்கள், ஆட்சியாளர்கள் முதலியோர் அஞ்சுவார்களா, இல்லை, “கடவுள் இல்லை,” என்று ஈவேராவை நம்பி, திராவிடத்துவாதிகள் துணை கொண்டு, தொடர்ந்து, சட்டங்களை வளைப்பார்களா என்றெல்லாம் பொறுத்து தான் பார்க்க வேண்டும். ஆனால், நிச்சயமாக கடவுள் இருக்கிறார், “தெய்வம் நின்றுதான் கொல்லும்”! வாழ்க அவரது பணி!

36,590 கோயில்களுக்குக் கீழே 4,22,000 ஏக்கர் நிலங்களும் 56 மடங்களுக்குக் கீழே கிட்டத்தட்ட 56,000 ஏக்கர் நிலங்களும் இருக்கிறது: இந்து சமய அறநிலையத்துறை கொள்கைவிளக்கக் குறிப்பேட்டில் தமிழகத்தில் மொத்தம் 56 ஆதீன மடங்களும், அதற்குக் கீழே 57 கோயில்கள் இருப்பதாகவும் குறிப்பு இருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் 36,590 கோயில்களுக்குக் கீழே 4,22,000 ஏக்கர் நிலங்களும்; 56 மடங்களுக்குக் கீழே கிட்டத்தட்ட 56,000 ஏக்கர் நிலங்களும் இருப்பதாக அறநிலையத்துறையின் தகவல் தெரிவிக்கிறது. திருவாவடுதுறை ஆதீனம், வானமாமலை ஆதீனம், திருக்குறுங்குடி ஜீயர் மடம், தர்மபுரம் ஆதீனம், மதுரை ஆதீனம், திருப்பனந்தாள் காசி மடம், அகோபில மடம், காஞ்சி சங்கர மடம் போன்ற சில ஆதீன மடங்களுக்குச் சொந்தமாகத்தான் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் குவிந்துகிடக்கின்றன. திருவாவடுதுறை ஆதீனத்துக்கு மட்டும் சுமார் 19,000 ஏக்கர் நிலம் சொந்தமாக இருக்கிறது. ஆதீனத்துக்குச் சொந்தமான இந்த நிலங்கள் மக்களுக்குக் குத்தகைவிடப்படுகின்றன; வாடகைக்கும் விடப்படுகின்றன; இவற்றின் மூலமாக வருமானம் வருகிறது.

2018ல் திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் தொடுத்த வழக்கு: இந்தச் சூழலில் அண்மைக் காலமாக கோயில்கள், ஆதீனங்கள், மடங்களுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப் படுவதாகவும், சட்ட விரோதமாக விற்கப் படுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இது தொடர்பாக திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்[1]. அந்த மனுவில் இப்படிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது[2]… “தூத்துக்குடி மாவட்டம் நெடுங்குளத்தில் இருக்கிறது `செங்கோல் ஆதீனம்.’ இந்த ஆதீனத்துக்குச் சொந்தமான நிலங்கள் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் முறைகேடாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கின்றன. இதனால் அரசுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை உடனடியாக மீட்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.’ 

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீனங்கள் மற்றும் மடங்களையும் இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக இணைக்கஉத்தரவிட்டது: இந்த வழக்கு விசாரணையில், `தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீனங்கள் மற்றும் மடங்களையும் இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக இணைக்க’ உத்தரவிட்டிருக்கிறது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. மேலும், `தமிழகத்திலுள்ள ஆதீனங்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான சொத்துகள் மற்றும் நிலங்கள், இதரச் சொத்துகள், குத்தகை மற்றும் வாடகைக்கு விடப்பட்டுள்ள விவரங்களை அறநிலையத்துறை உடனடியாகத் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி அனைத்து ஆதீனம் மற்றும் மடங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.   

மனுதாரர் ராதாகிருஷ்ண சொன்னது: இது தொடர்பாக வழக்கை தாக்கல் செய்த திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனர் மற்றும் தலைவரான ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்… “உயர் நீதிமன்றம், `தமிழகத்திலிருக்கும் கோயில், ஆதீனங்கள் மற்றும் மடங்களின் நிலங்களை அளந்து ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை மீட்க வேண்டும்என்று அறநிலையத்துறையினருக்கு உத்தரவிட்டது. ஆனால், எந்த ஆக்கிரமிப்பு மீட்பு நடவடிக்கையையும் யாரும் மேற்கொள்ளவில்லை. மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் `செங்கோல் ஆதீனத்துக்கு உரிய நிலங்களை மீட்க வேண்டும் என்று கூறி பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தோம். நீதிமன்றமே மற்ற ஆதீன நிலங்களின் ஆக்கிரமிப்பு தகவல்களைக் கேட்டறிந்து, அனைத்து ஆதீன மடங்களையும் வழக்கில் எதிர் மனுதாரர்களாக இணைத்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை, 55,820 ஏக்கர் நிலங்கள் ஆதீனங்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. ஆனால், ஆதீன மடங்களுக்கு உரிய நிலத்தை அளந்தால் இதன் மதிப்பு இன்னும் அதிகமாகும். தனிப்பட்டவர்களின் சுயநலத்தால் நிலங்களை மீட்க முடியாத சூழல் நிலவிக்கொண்டிருக்கிறது. கண்துடைப்புக்காக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அனைவரையும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் அனைத்து நிலங்களையும் மீட்டு வருவாயை ஒழுங்குபடுத்தினால், பல்வேறு நலத்திட்டப் பணிகளை மேற்கொள்ள முடியும்.

கோயில் மற்றும் ஆதீன, மட நிலங்களை விற்பவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். வாங்கும் நடுத்தர மக்கள் சிக்கிக்கொள்கிறார்கள்; கோயில் மற்றும் ஆதீன, மட நிலங்களை விற்பவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். ஆனால், அதை வாங்கும் நடுத்தர மக்கள்தாம் சிக்கிக்கொள்கிறார்கள். திருக்கோயில், ஆதீன, மடங்களின் பட்டா, புறம்போக்கு நிலங்களுக்கு `தரும சாசன சொத்துகள்’ என்று பெயர். `இந்த தரும சாசனச் சொத்துகளை யார் வாங்கி பட்டா போட்டுக்கொண்டாலும், அது செல்லாது’ என்று உச்ச நீதிமன்றமே அறிவித்திருக்கிறது. பொது மக்கள் யாரும் கோயில் மற்றும் ஆதீன, மட நிலங்களை வாங்கி ஏமாற வேண்டாம். அந்த நிலங்கள் மீண்டும் தன்னிச்சையாக திருக்கோயில் வசம் வந்துவிடும். தர்ம சாசன நிலங்களை விற்பவர்கள் மீதும், வாங்குபவர்கள் மீதும் குண்டர் சட்டம் பாயும்படி சட்டம் இயற்றப்பட வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில் மக்களுக்கும் இது தொடர்பாக விழிப்புஉணர்வு அதிகம் வந்திருக்கிறது.. ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் தொடர்பாக வழக்கு, நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது. நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம்…,” என நம்பிக்கையுடன் பேசுகிறார் ராதாகிருஷ்ணன்.

`சிவன் சொத்து குல நாசம்என்றாலும், விற்கிறார்கள், வாங்குகிறார்கள்: `சிவன் சொத்து குல நாசம்’ என்பார்கள். பல்வேறு காலகட்டங்களில் நம் முன்னோர்களால் தானமாக, புனித காரியங்களுக்காக அளிக்கப்பட்ட இந்த நிலங்களை அத்துமீறி அனுபவிப்பது என்பது தவறான செயல். தர்ம சாசன சொத்துகளை முறைகேடாக வாங்கியவர்களே கோயிலுக்குத் திருப்பிக் கொடுக்க முன்வர வேண்டும். இந்து சமய அறநிலையத்துறையும் ஆக்கிரமிக்கப்பட்ட மற்றும் முறைகேடாக விற்கப்பட்ட நிலங்களை விரைந்து மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்..!

18-10-2022 அன்று விசாரணைக்கு வந்தது, 28-10-2022 தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டது: சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு, அக்டோபர் 18, 2022 அன்று  நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது[3]. அப்போது நீதிபதிகள், “ஆதீன மடத்தின் சொத்துகள் தனியாருக்கு குத்தகைக்கு வழங்கியது அதிர்ச்சி அளிக்கிறது. ஆதீன மடங்கள் மடங்களாக செயல்படுகிறதா? இல்லை, வியாபார நிறுவனங்களாக செயல்படுகிறதா? ஆதீன மடத்தின் சொத்துகளை குத்தகைக்கு விடுவதை எந்தச் சட்டம் அனுமதிக்கிறது? ஆதீன மடங்கள் அனைத்தும் இந்து சமய அறநிலைத்துறைக்கு கட்டுப்பட்டவை. இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் மடத்தின் மீது நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு அதிகாரம் உள்ளது. அதிகாரம் உள்ள நிலையில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?, ” என கேள்வி எழுப்பினர்[4]. தொடர்ந்து, மனுதாரர் கோரிக்கை தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் விசாரித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த நிலங்களில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு வந்தால் உடனடியாக நிறுத்த வேண்டும். வழக்கு விசாரணை அக்டோபர் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

© வேதபிரகாஷ்

15-12-2022.


[1] விகடன், கோயில், ஆதீனங்களுக்குச் சொந்தமான `தரும சாசன சொத்துகளை வாங்கலாமா?, சி.வெற்றிவேல், Published:12 Jun 2018 4 PM;; Updated:12 Jun 2018 4 PM.

[2] https://www.vikatan.com/news/agriculture/customers-are-on-the-waiting-list-for-our-ghee-amazing-youth-in-ghee-production?pfrom=latest-infinite

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், ஆதீன மடங்கள் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பட்டவைஉயர் நீதிமன்ற மதுரை கிளை, Written by WebDesk, Updated: October 20, 2022 7:20:27 am.

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/pil-plea-to-protect-and-safeguard-properties-of-madurai-adheenam-527641/

கோவில் திருப்பணிகளுக்கு இந்து அறநிலையத் துறையினால் அமைக்கப் பட்ட வல்லுநர் குழு நிபுணர், லஞ்சம் கேட்டது, மாட்டிக் கொண்டு, கைதானது!

ஒக்ரோபர்18, 2022

கோவில் திருப்பணிகளுக்கு இந்து அறநிலையத் துறையினால் அமைக்கப் பட்ட வல்லுநர் குழு நிபுணர், லஞ்சம் கேட்டது, மாட்டிக் கொண்டு, கைதானது!

நாத்திகர் மற்றும் இந்துவிரோத திராவிடத்துவ வாதிகளின் கட்டுப் பாட்டில் கோவில்கள்: திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அளவுக்கு அதிகமாக, தினம்-தினம் கோவில் பற்றிய செய்திகள் ஏதாவது வந்து கொண்டே இருக்கின்றன. அதாவது, நாத்திகர்கள், பெரியாரிஸ்டுகள், திராவிட ஸ்டாக்குகள், என்றெல்லாம் பறைச் சாட்டிக் கொண்டு, இந்துவிரோதிகளாகத் தான் செயல்பட்டு வருகிறார்கள். இந்துக்களுக்கும் இதில் ஒன்று சந்தேகம் இல்லை. கோவில் திருப்பணிகளுக்கு வல்லுநர் குழு அமைத்தது. வல்லுநர் குழுவின் பரிந்துரையின்பேரில் தமிழகம் முழுவதும் 551 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: “ஆகமவிதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு, குடமுழுக்கு நடத்த வேண்டும். பழமை வாய்ந்த கோயில்களில், அவற்றின் பழமை மாறாது சீரமைத்தல், புதுப்பித்தல், பாதுகாத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள தொல்லியல் துறை வல்லுநர்கள் கருத்துரு பெற்று, மண்டலஅளவிலான வல்லுநர் குழு மற்றும் மாநில அளவிலான வல்லுநர் குழுவின் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் திருப்பணி மேற்கொள்ள அனுமதி வழங்கப் பட்டு வருகிறது”.

அரசு தனது கட்டுப்பாட்டை அதிகமாக்கி, அறிக்கைகள் விடுவது: “திருப்பணிகள் முடிவடைந்தவுடன், குடமுழுக்கு நடத்தப்படும். பக்தர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கோயில்களின் திருப்பணிகள் குறித்த விவரங்களை http://www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில்திருப்பணி வல்லுநர் குழு ஒப்புதல்என்ற பகுதிக்குச் சென்று, மாவட்டம் வாரியாக கோயில்களைத் தேர்வு செய்து, விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். இதன் மூலம் தங்கள் பகுதிகளில் உள்ள கோயில்களின் திருப்பணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்துகொண்டு, திருப்பணிக்கான வேலைகள் முடிவுற்றபின், குடமுழுக்கு நடத்துவதற்குபக்தர்கள் தங்கள் ஒத்துழைப்பை நல்கலாம்,” இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அரசின் கட்டுப்பாடுகள் அதிகமாக்கப் பட்டு, எல்லா விசயங்களிலும் தலையிட்டு, திராவிடக் கட்சிக்காரர்கள் தங்களது ஆதிக்கம், அதிகாரம், முதலியவற்றைக் காட்ட் வருகிறார்கள். ஊழலில் கைதான அறநிலையத் துறை அதிகாரிகள் மறுபடியும் பதவியில் அமர்த்தப் பட்டுள்ளார்கள். இதனால், ஊழல் ஒன்றும் பெரிய விசயம் இல்லை என்ற மனப்பாங்கும் வளர்ந்து விட்டது.

கோவில் திருப்பணிக்கு லஞ்சம் வாங்க வேண்டு என்ற மனோதத்துவம் என்ன?: இந்நிலையில் தான், கோவில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய அறநிலையத்துறை பெண் அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்[1] என்று செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. திருச்சி கோவில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய அறநிலையத்துறை பெண் அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்[2]. கோயில் திருப்பணி தொடங்குவதற்கு உரிய ஆய்வறிக்கை அளிக்க வேண்டிய குழுவில் உள்ள தொல்லியல் துறை வல்லுநர்,  அதற்காக 10 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட நிலையில் அவரை பொறி வைத்து பிடித்துள்ளனர் லஞ்ச ஒழிப்புத்துறையினர், என்றெல்லாம் விவரிக்கவும் செய்கின்றன. கோவில் திருப்பணி சேவை செய்ய, அரசு மாதம் சம்பளம் கொடுக்கிறது. ஓய்வு பெற்ற இவர்கள் பென்சனும் பெற்று வருகின்றனர். அதனால், பணம் இல்லை என்ற நிலை இல்லை. ஆகையால், லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்க வேண்டும், அதிலும், கோவில் சேவைக்கு வாங்க வேண்டும் என்ற இவர்களின் அனோதத்துவம் ஆராய வேண்டியுள்ளது.

பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் திருப்பணிகள் ஆரம்பம்: கோவில் திருப்பணிகள் திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் குணசீலத்தில் அமைந்துள்ளது பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில்[3]. மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோயிலில் இருந்து எடுத்துவரப்பட்ட தீர்த்தம் காலை, மாலை இருவேளையிலும் மருந்தாக தரப்படும். இந்த கோவில் அறங்காவலர்கள் குழுவினர் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டனர்[4]. இந்த கோவிலுக்கு திருப்பணி வேலைகள் நடந்து 12 ஆண்டுகளுக்கு மேலானதால் தற்போது உபயதாரர்கள் மூலமாக திருப்பணி நடத்த உத்தேசித்துள்ளார்கள்[5]. அதனால் அது சம்பந்தமாக முறையான அனுமதியை இந்து அறநிலையத்துறையில் பெற்றுள்ளார்கள்[6]. இதையடுத்து கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் பிச்சுமணி ஐயங்கார், இந்து அறநிலையத்துறையில் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார்[7]. இதில் கோவில் திருப்பணிகளுக்கு அனுமதி வழங்கும் பணிகளை மாநில அளவிலான நிபுணர் குழு பரிசீலித்து வழங்கி வருகிறது[8]. இந்த குழுவில் இந்து அறநிலையத்துறையில் பணியாற்றும் அலுவலர் தலைமையில் பலர் உறுப்பினர்களாக உள்ளனர்.

02-06-2022 மற்றும் 12-10-2022 தேதிகளில் மூர்த்தீஸ்வரி வந்தது: இது தொடர்பாக அந்த நிபுணர் குழு கடந்த ஜூன் மாதம் 2-ந்தேதி கோவிலில் ஆய்வு செய்தனர். அறநிலையத்துறை அதிகாரி இந்த நிபுணர் குழுவில் திண்டுக்கல் மாவட்டம் பழனி ராஜா நகர் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த தொல்லியல் துறை வல்லுனரான மூர்த்தீஸ்வரி உள்ளார். இவர் ஓய்வு பெற்ற அறநிலையத்துறை அதிகாரி ஆவார். அதற்குப் பிறகும் ஆய்வு அறிக்கை கோவில் நிர்வாகத்திற்கு கிடைக்கப்பெறாதால் நிர்வாகத்தினர் மேற்படி கமிட்டியினரை தொடர்பு கொண்டுள்ளனர். இவர் கடந்த 12-ந்தேதி மீண்டும் கோவிலுக்கு வந்து அறங்காவலர் குழுவினரை சந்தித்து ஆய்வு அறிக்கை வழங்க ரூ.10 லட்சம் கேட்டுள்ளார். அதற்கு பிச்சுமணி ஐயங்கார் ரூ.10 லட்சம் அதிகமாக உள்ளது என்றார். இதனை உபயதாரர்களிடம் கேட்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார். அதற்கு மூர்த்தீஸ்வரி, ரூ.5 லட்சம் தாருங்கள், ஆய்வறிக்கை வழங்குகிறேன் என்று கூறினார். “இதனையடுத்து ஐந்து லட்ச ரூபாய்  குறைத்துக் கொண்டு மீதி ஐந்து லட்ச ரூபாயாவது  கொடுத்தால் தான் ஆய்வறிக்கை வழங்க முடியும் என்று கறார் காட்டிய மூர்த்தீஸ்வரி  முன்பணமாக ஒரு லட்ச ரூபாய் கொடுக்குமாறு  கேட்டுள்ளார்,” என்கிறது காமதேனு[9]

புகாரின் பேரில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை  கொடுத்தது, மூர்த்தீஸ்வரி மாட்டிக் கொண்டது: போலீசார் அதிரடி கைது அதற்கு முன்பணமாக ரூ.1 லட்சம் கொடுக்குமாறும் பிச்சுமணி ஐயங்காரிடம் கேட்டுள்ளார்[10]. லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டனிடம் புகார் அளித்தார்[11]. இதனையடுத்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பிச்சுமணி ஐயங்காரிடம் கொடுத்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதனை மூர்த்தீஸ்வரியிடம்  கொடுக்குமாறு கூறினர்.  அதன் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் ஆலோசனைபடி திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் வைத்து மூர்த்தீஸ்வரியிடம் ரூ.1 லட்சம் கொடுத்தார்[12]. அப்போது அங்கு மறைந்திருந்த போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன், இன்ஸ்பெக்டர் சக்திவேல், சேவியர் மேரி உள்ளிட்ட போலீசார் மூர்த்தீஸ்வரியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்[13]. தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூர்த்தீஸ்வரி காரில் ரூ ஐந்து லட்சம் இருந்தது: அவரிடம் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறையினரின் விசாரணையில் தமிழகத்தில் இது போன்ற பல கோயில்களுக்கு இந்த கமிட்டியினரால் ஆய்வறிக்கை வழங்கப்படாமல் கோயில்களின் திருப்பணி வேலைகள் நடைபெறாமல் நிலுவையில் உள்ளது என்பதும் தெரிய வந்திருக்கிறது[14].   மேலும் மூர்த்தீஸ்வரியின் காரை சோதனை செய்தபோது அதில்  கணக்கில் வராத ஐந்து லட்ச ரூபாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதுவும் கைப்பற்றப்பட்டது. ஒருவேளை மற்ற இடங்களுக்குச் சென்று வசூல் செய்த பணம் போலிருக்கிறது. எது எப்படியாகிலும், கோவில் என்றும் பார்க்காமல், இவ்வாறு பலர் நேரிடையாகவும், மறைமுகமாகவும் கோவில் பணத்தை, அதாவது பக்தர்களின் காணிக்கையை இவ்வாறு பலவிதங்களில் கொள்ளையடிப்பது, பங்கு போட்டுக் கொள்வது, முதலியவற்றை நிச்சயமாக, கடவுள் பார்த்துக் கொன்டிருக்கிறார், மற்றும் அவர்களுக்கு உரிய தண்டனை கொடுப்பார் என்று ஒவ்வொரு பக்தனும் நம்பிக் கொண்டிருக்கிறான். அது உண்மை.

© வேதபிரகாஷ்

18-10-2022.


[1] தினத்தந்தி, ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய அறநிலையத்துறை பெண் அதிகாரி கைது, தினத்தந்தி அக்டோபர் 18, 1:40 am.

[2] https://www.dailythanthi.com/News/State/charity-department-woman-officer-arrested-for-accepting-bribe-of-rs1-lakh-817094

[3] நக்கீரன், கோவில் ஆய்வறிக்கைக்கு லஞ்சம்! பிடிபட்ட தொல்லியல் துறை வல்லுநர்!, மகேஷ்,Published on 18/10/2022 (12:34) | Edited on 18/10/2022 (12:51).

[4] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/bribe-temple-thesis-arrested-archeologist

[5] குணசீலம் கோயில் திருப்பணிகள் மேற்கொள்ள லட்ச ரூபாய் லஞ்சம்… பெண் அதிகாரி அதிரடி கைது…, NEWS18 TAMIL, LAST UPDATED : OCTOBER 18, 2022, 15:50 IST, TIRUCHIRAPPALLI, INDIA

[6] https://tamil.news18.com/news/trichy/female-officer-arrested-for-bribe-lakhs-of-rupees-to-carry-out-repairs-of-gunaselam-temple-820666.html

[7] தினமலர், கோயில் திருப்பணிக்கு ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்ட வல்லுனர் குழு பெண் உறுப்பினர் கைது, Updated : அக் 18, 2022  10:41 |  Added : அக் 18, 2022  10:34.

[8]  https://www.dinamalar.com/news_detail.asp?id=3148843

[9] காமதேனு, 5 லட்சம் கொடுத்தால்தான் ஆய்வறிக்கை; பேரம் பேசிய பெண் தொல்லியல் வல்லுநர் கையும் களவுமாக சிக்கினார்!, காமதேனு, Updated on : 18 Oct, 2022, 9:33 am

[10] தினகரன், ரூ1 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது, 2022-10-18@ 14:58:17

[11] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=807670

[12] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், திருச்சி கோயில் திருப்பணிக்காக ஆய்வறிக்கை வழங்க ரூ.10 லட்சம் லஞ்சம்: தொல்லியல் பெண் நிபுணர் கைது, Written by WebDesk, Updated: October 18, 2022 10:30:34 am.

[13] https://tamil.indianexpress.com/tamilnadu/trichy-woman-archaeologist-arrested-for-taking-rs-10-lakh-bribe-for-temple-restoration-527004/?utm_source=newsstand&utm_medium=Referral

[14] https://kamadenu.hindutamil.in/national/archaeologist-arrested-by-anti-bribery-police-for-demanding-bribe-at-gunaselam-temple

மாணிக்கவாசகர் கட்டிய சின்ன ஆவுடையார் கோவில் கோவில் சிதிலமடைந்து விழும் நிலையில் விடப் பட்டது ஏன்? தமிழகத்தில் ஏன் இப்படி நடக்கிறது? (2)

திசெம்பர்31, 2021

மாணிக்கவாசகர் கட்டிய சின்ன ஆவுடையார் கோவில் கோவில் சிதிலமடைந்து விழும் நிலையில் விடப் பட்டது ஏன்? தமிழகத்தில் ஏன் இப்படி நடக்கிறது? (2)

சின்ன ஆவுடையார் கோவி ல் ஒரு முக்கியமான இடத்தில் கடற்கரையில் அமைந்துள்ளது.
சின்ன ஆவுடையார் கோவி ல் ஒரு முக்கியமான இடத்தில் கடற்கரையில் அமைந்துள்ளது. வடக்கில் கும்பகோணம், தெற்கில் ராமேஸ்வரம், கிழக்கில் கடல் மற்றும் இலங்கை, மேற்கில் மதுரை என்றுள்ளது.
கொள்ளுக்காடு (Kollukkadu) இந்தியா, தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டத்தில், பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள கிராமமாகும். கடற்கரைக்கு அருகில் உள்ளதால் உப்பளங்கள் அதிகமாக உள்ளன.
கோவில் இருப்பிடம் – கூகுள் மேப் – நன்றி

அதிகளவில் மணல் தேங்கி கடலின் முகத்துவாரத்தை அடைத்து விடுவதால் திட்டுபோல் காட்சியளிக்கிறது: சேதுபாவாசத்திரம்[1] அருகே அக்னியாறு முகத்துவாரத்தில் அடிக்கடி மணல் திட்டுகள் உருவாவதால் படகுகளை கடலுக்குள் செலுத்த முடியாமல் மீனவர்கள் தவித்து வருகின்றனர். எனவே மணல் திட்டுகள் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே கொள்ளுக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட அந்தோணியார்புரம், அம்பேத்கர் நகர் மற்றும் சின்ன ஆவுடையார் கோயில் பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இதில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மீன்பிடி தொழிலை மட்டுமே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இந்த பகுதிகளில் இருந்து 80 பைபர் படகுகள் மூலம் மீன்பிடி தொழிலில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அக்னியாற்றில் இருந்து வரும் நீரோட்டத்தின் காரணமாக அதிகளவில் மணல் தேங்கி கடலின் முகத்துவாரத்தை அடைத்து விடுவதால் திட்டுபோல் காட்சியளிக்கிறது. இதனால் படகுகளை கடலுக்குள் செலுத்தவும், கடலுக்குள் மீன் பிடிக்க சென்று விட்டு மீண்டும் கரை திரும்பும்போது துறைமுக வாய்க்காலுக்கு படகுகளை எடுத்து வருவதிலும் மீனவர்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

கூரை இடிந்துள்ள நியையில் பண்டபம்……
கூரை இடிந்து கீழே விழுந்துள்ள கற்களைப் பார்க்கலாம்..

மணல் திட்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்: இதனால் மிக குறைந்த நாட்களே அதாவது மாதத்துக்கு 10 நாட்களுக்கு மட்டுமே தொழில் செய்ய வேண்டிய நிலை உள்ளது. வாரத்துக்கு ஒருமுறை உடல் உழைப்போடு அதிகப்படியான தொகை செலவு செய்து மணல் திட்டுகளை மீனவர்களே அகற்றி வருகின்றனர். இதனால் மீன்பிடி தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டு இவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது[2]. எனவே மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மீன் பிடிக்க செல்ல ஏதுவாக மணல் திட்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்[3]. போலி மதுபான விற்பனை முதலியவையும் இங்கு நடைபெறுவதாகத் தெரிகிறது[4]. சம்பந்தப் பட்ட நபர்கள் அழுத்தம் கொண்டவர்களுடன் தொடர்புடைவர்கள் மற்றும் வித்தியாசமான பெயர்களைக் கொண்டுள்ளனர்[5].

தூண்களுடன் உள்ள இன்னொரு மண்டபம்…….
இக்காலத்தில் வண்ணம் பூசியடாக தெரிகிறது……

சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகத்திற்கு ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு[6]: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகத்தில், சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார், சட்டமன்றத்தில் விடுத்த கோரிக்கையை ஏற்று, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுப்படி, சேதுபாவாசத்திரம் மீன்பிடி இறங்குதளத்தை மேம்படுத்த ரூ. 10 கோடி நிதியை, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஒதுக்கீடு செய்தார்[7]. உண்மையில் மத்திய அரசின் பிரதான மந்திரி திட்டங்களின் கீழ் நிதி பெற்று அதிலிருந்து கொடுப்பது[8]. பிறகு அருகில் இருக்கும் அந்த கோவிலுக்கு சில லட்சங்கள் கூட ஒதுக்க முடியாதா? கொரோனா காலத்தில் இந்து அறநிலையத் துறை பணத்தில் ஆஸ்பத்திரிகளில் “அன்னதானம்” கொடுக்கப் பட்டது. ஆகவே, இந்த துறைமுகத்தால் யார் பலனடையப் போகின்றனர் என்பதும் கவனிக்கத் தக்கது.

இடிந்து விழுந்துள்ள பாகங்கள்……….அவற்றில் சிற்பங்களைக் காணலாம்……
இடிந்து விழுந்துள்ள பாகங்கள்……….அவற்றில் சிற்பங்களைக் காணலாம்……இதில் மீன்………
இடிந்து விழுந்துள்ள பாகங்கள்……இதில் ஒரு கல்வெட்டு வரிவடிவங்கள் காணப் படுகின்றன…. உடைந்துள்ளதாகத் தெரிகிறது……

யார் கோவில்களைக் காக்கப் போகின்றனர்?: தமிழ்-தமிழ் என்று பேசுகின்றவர்களுக்கு மாணிக்கவாசகர் கட்டிய கோவில் மீது ஏன் கரிசனம் வரவில்லை. அப்படியே உடைந்து விழுந்து மறைந்து விடவேண்டும் என்று தீர்மானித்து விட்டார்களா? உழவாரப் பணி செய்யும் குழுக்களும் அறிக்கைகள் விட்டு மௌனமாக இருப்பதாகத் தெரிகிறது. ஒருவேளை நாளைக்கு கோவில் சிறக்க ஆரம்பித்தால், சுற்றியுள்ளவர்கள் வியாபாரத்திற்காக, கடைகள் வைக்க வந்து விடுவார்கள் போலும். “கோவிலை காப்போம்,” “ஆலயங்களை விடுவிப்போம்” என்றே சமூக ஊடகங்களில் நிறைய பேர், இயக்கங்கள் இருப்பதாக சொல்லிக் கொள்கிறார்கள். சிலர் உண்மையான சேவை செய்தாலும், பலர் திடீரென்று தோன்றி மறைந்து விடுகிறார்கள்! “கோவில் அடிமை நிறுத்து” என்று ஆரம்பிக்கப் பட்டது, இப்பொழுது என்னவாயிற்று என்று தெரியவில்லை, ஒரு சில மாதங்களிலேயே மறைந்து விட்டது.

நாத்திக புற்றுநோயா, ஆத்திக புது நோயா?: தமிழகத்தில் அடிக்கடி இத்தகைய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.  பொதுவாக 60 ஆண்டுகால நாத்திக திகவினர் ஆட்சியினால் தான் இந்நிலை ஏற்பட்டது என்று சொல்லிவந்தாலும், ஏன் “இந்துக்கள்,” என்ற ரீதியில் நம்பிக்கையாளர்கள், பக்தர்கள், சிவனடியார்கள் மற்றவர்கள் இவ்விவகாரங்களில் ஈடுபடவில்லை என்று தெரியவில்லை. லட்சங்களைக் கொட்டி, நிதி வாங்கிக் கொண்டு, கலை ஆராய்ச்சியாளர்கள்,  சிற்பக்கலை வல்லுனர்கள், சித்திரங்கள் ஆய்வு வல்லுனர்கள் என்றெல்லாம் அறிவித்துக் கொண்டு,  புகைப்படங்களைப் பிடித்துச் சென்று, சொற்பொழிவுகள் நடத்தி, பிரபல ஆங்கில நாளிதழ்களில் எழுதி,  ஏன் புத்தகங்களையும் வெளியிட்டு புகழ், பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால்,  சிதிலமடையும் இக்கோவில்களைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. அழகை ரசிக்கிறேன், கலையை ஆராதிக்கிறேன் என்று சொல்லிவிட்டு, அதே அழகு-கலை முதலியன மற்ற கொடுங்கோலர்களால் கற்பழிக்கப்படும் போது, “நமக்கேன் வம்பு” என்று இருந்து விடுகிறார்கள்.  ஆனால், இவ்விவகாரங்களிலும் ஒரு அமைப்பு தென்படுகிறது. அதாவது கோவில்கள் இவ்வா றுகாணமல் போனால்,  சிலைகளை விற்றுப் பிழைத்துக் கொள்கின்றனர்;  குளங்களைத் தூர்த்து நிலங்களைப் பட்டாப் போட்டு விற்று கோடீஸ்வரர்கள் ஆகின்றனர்; கோவில் நிலங்களை தரிசு நிலங்கள் என்று சொல்லி விற்று கொள்ளை அடிக்கின்றனர்.  இதனால், மற்றவர்களும் கண்டு கொள்ளவில்லை, கண்டு கொள்கிறவர்கள் அமுக்கப் படுகின்றனர்.

© வேதபிரகாஷ்

31-12-2021


[1]  மன்னார்குடியில் இருந்த அனந்தமௌனி சுவாமிகளின் இரு சீடர்களில் ஒருவரான மேரு சுவாமிகளுக்கு சியாமராசர், சேது சுவாமிகள் ஆகிய இரு சீடர்கள் இருந்தனர். சேது சுவாமிகள் சேதுபாவா சுவாமிகள் என்றும் அழைக்கப்படுகின்றார். தஞ்சையை 1739 முதல் 1763 வரை ஆட்சி செய்த பிரதாப சிம்மன் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு, அங்கிருந்த பீமராஜ சுவாமிகளிடம் சென்று தனக்கு அருளும்படி வேண்டியபோது அவர் தான் உலக வாழ்க்கையில் இருந்து விடுபட முடிவு செய்துள்ளதாகவும், மன்னார்குடியில் இருக்கும் சேதுபாவா சுவாமிகளிடம் சென்று ஆசி பெறவும் கூறினார். அதன்படி மன்னர் சேதுபாவா சுவாமிகளிடம் சென்று ஆசி பெற்று, தன் குருவிற்குத் தஞ்சாவூரின் கீழ ராஜவீதியில், தன் அரண்மனைக்கு எதிரில் ஒரு மடம் கட்டிக்கொடுத்து தங்கச் செய்து, குரு காணிக்கையாக பொன்னும், பொருளும் கொடுத்து கௌரவித்தார். சுவாமிகளின் நினைவாக மன்னார்குடியில் அன்ன சத்திரமும், அரித்ரா நதி என்னும் குளமும், அக்குளத்தின் கரையில் உள்ள கோயிலும், பட்டுக்கோட்டை வட்டத்தில் சேதுபாவா சத்திரம் என்னும் ஊரும், தஞ்சாவூர் பிரதாபவீர அனுமார் (மூலை அனுமார்) கோயிலும் விளங்கி இவரது பெயரையும், புகழையும் இன்றும் நிலைநிறுத்தி வருகின்றன. இவரது சமாதி கும்பகோணம் அருகேயுள்ள குத்தாலத்தில் உள்ளது.

[2] தினகரன், கடலுக்குள் படகுகளை செலுத்த முடியாமல் மீனவர்கள் தவிப்பு, 3/11/2020 5:49:53 AM.

[3] https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=992895

[4] Consumer Complaints , sale of illegal and duplicate liquor, JeevanR from Attingal, Kerala, Apr 12, 2019.

[5] The person jaisankar s/o nagooran chinna avudayar koil, kollukkadu panjayat, rajamadam po, pattukkottai tk, thanjavur dt, tamilnadu, pin: 624701 who is selling illegal sales of duplicate liquor on 24/7 with local person name edin s/o sourimuthu, andivayal, rajamadam po, pattukottai tk thanjavur dt. Please take severe action and stop this illegal act.The person Edin is supporting this illegal act and he is doing lot of illegal act by giving brief to local administration and He has earned lot of assets regardless of his legal income and he never have legal income. Due to his local influence he is threatening to public peoples. Then number of people died since having this duplicate liquor Illegal Trade Of Duplicate Alcohol…— sale of illegal and duplicate liquor, JeevanR from Attingal, Kerala, Apr 12, 2019.

https://www.consumercomplaints.in/illegal-trade-of-duplicate-alcohol-sale-of-illegal-and-duplicate-liquor-c2298287

[6] தினமணி, சேதுபாவாசத்திரம் மீன்பிடி இறங்குதளம் ரூ 10 கோடியில் மேம்பாடு அமைச்சா் அறிவிப்புக்குமீனவா்கள் மகிழ்ச்சி, By DIN  |   Published on : 29th August 2021 01:53 AM.

[7] https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2021/aug/29/sethupavasathiram-fishing-landing-site-at-rs-10-crore-3689094.html

[8]துறைமுகம், மீந்துறை பற்றி வெட்டுவேன், புரட்டுவேன் போன்று கொடுக்கப் பட்டுள்ள விவரங்களை, இங்கே படிக்கலாம். கடந்த 50 ஆண்டுகளாக சொல்லி வருகின்றனர், ஆனால், பிரச்சினைகள் தீரவில்லை.

இந்துவிரோத திமுகவின் அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமன நாடகம், சுப்ரமணிய சுவாமிக்கு முரசொலி மூலம் விளக்கம் கொடுத்தது, தினக்கூலி மூலம் பழைய அர்ச்சகர்களை வேலைக்கு அமர்த்த வேண்டிய அவசியம் என்ன? (4)

ஓகஸ்ட்21, 2021

இந்துவிரோத திமுகவின் அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமன நாடகம், சுப்ரமணிய சுவாமிக்கு முரசொலி மூலம் விளக்கம் கொடுத்தது, தினக்கூலி மூலம் பழைய அர்ச்சகர்களை வேலைக்கு அமர்த்த வேண்டிய அவசியம் என்ன? (4)

19-08-2021 முரசொலி தலையங்கம் –  தொடர்கிறது: இது தொடர்பாக பேட்டி அளித்த சுப்பிரமணியம் சுவாமி, “அர்ச்சகர் விவகாரத்தில் என்னைப் பொறுத்தவரையில் பிராமணர் – பிராமணர் அல்லாதார் என்று நான் பிரித்துப் பார்க்கவில்லை. யாருக்கு வேதம் குறித்த படிப்பு ஞானம், நம்பிக்கை இருக்கிறதோ அவர்கள் வரலாம்’’ (தினமணி) என்றுதான் சொல்லி இருக்கிறார். சுப்பிரமணியம் சுவாமி சொல்லும்படி ஞானமும், நம்பிக்கையும் உள்ளவர்கள்தான் அர்ச்சகர்கள் ஆக்கப்பட்டுள்ளார்கள். 2007-2008 கல்வி ஆண்டில் வேத ஆகம பயிற்சி பெற்றவர்கள் 207 பேர். அதில் 24 பேர் நேர்முகத் தேர்வுப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். 23-5-2006 அன்று தி.மு.க அரசால் அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது. அதன்படி தகுதியும், திறமையும் பெற்ற அனைத்து இந்துக்களும் சாதி வேறுபாடின்றி திருக்கோவில்களில் அர்ச்சகர்களாக ஆவதற்கு வழி வகை செய்யப்பட்டது. பழனி, திருச்செந்தூர், மதுரை, திருவண்ணாமலை ஆகிய நான்கு இடங்களில் சைவ அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும்; சென்னை, திருவரங்கம் ஆகிய இரண்டு இடங்களில் வைணவ அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும் தொடங்கப்பட்டன. பயிற்சி பெறும் மாணவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை இலவசமாக அளிக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் ரூபாய் 500 ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்த 34 மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 76 மாணவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 55 மாணவர்கள், இதர வகுப்பைச் சேர்ந்த 42 மாணவர்கள் உட்பட மொத்தம் 207 மாணவர்கள் பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்றனர்.

19-08-2021 முரசொலி தலையங்கம் –  தொடர்கிறதுஅர்ச்சகர் பயிற்சி: அந்த ஒன்றரை ஆண்டு காலப் பயிற்சியில் தமிழில் ஆகம முறைப்படி பயிற்சி தரப்பட்டது. தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட மந்திரங்கள் பயிற்றுவிக்கப்பட்டன. எல்லா கடவுளுக்கும் பூஜை செய்யும் முறைகள் தமிழ் ஆகம முறைப்படி பயிற்றுவிக்கப்பட்டன. சமஸ்கிருத ஆகம முறைப்படியும் பயிற்சி தரப்பட்டது. தங்களுக்கு என்னென்ன பயிற்சிகள் தரப்பட்டது என்பதை சென்னையில் பேட்டி அளித்த தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்க தலைவர் வா.அரங்கநாதன் விரிவாகக் கூறி இருக்கிறார். அரசு விதிப்படி முறையான அர்ச்சகர் பயிற்சி நிலையங்களில் பயின்று இருந்தால் அர்ச்சகர் ஆவதற்கு ஒருவர் தகுதி உடையவர் என்று இருக்கிறது. அதன்படி பயிற்சி பெற்றவர்கள்தான் அர்ச்சகர்கள் ஆக்கப்பட்டுள்ளார்கள். அரசு விதிப்படி, வயது வரம்பு 35 ஆகும். 35 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் அர்ச்சகர் ஆக்கப்பட்டுள்ளார்கள். இதில் விதி மீறல் எதுவும் இல்லையே? இப்படி வேலைக்கு எடுக்கப்பட்டதால் வேறு யாராவது வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளார்களா என்றால் அதுவும் இல்லை. 60 வயதுதான் உச்சவரம்பு.

19-08-2021 முரசொலி தலையங்கம் –  தொடர்கிறது: அதை மீறி 72 வயது வரையிலும் இருப்பவர்களையும் நீக்காமல் உபகோவில் பணிகள்தான் தரப்பட்டுள்ளது. உரிய வயதைத் தாண்டி ஒரு ஊழியர் வங்கியில் பணியாற்றினால் விட்டு விடுவார்களா? கோவிலில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் போது அதற்கு உரியவர்கள் அந்தப் பணியைச் செய்ய அனுமதிக்கப்படுவதுதானே முறையானது! ‘தினமலர்’ நாளிதழ் பக்கம் பக்கமாக எடுத்து வெளியிடும் பேட்டிகளில் கூட அர்ச்சகர்கள் என்ன பேட்டி தருகிறார்கள்?’ உடனே நியமிக்கக் கூடாது, உரிய பயிற்சி தந்து நியமிக்கலாம்’ என்கிறார் மாதவ பட்டர். அப்படித்தான் அரசு நியமித்துள்ளது. ‘வேளாளர் சமூகக் கோவிலில் அவர்கள் சமூகத்தவர்கள் அர்ச்சகர்களாக இருக்கிறார்களே’ என்கிறார் பாலாஜி குருக்கள். ‘குலதெய்வக் கோவில்களில் அனைத்துச் சாதியினரும் பூஜை செய்கிறார்கள்’ என்கிறார் கொங்கிலாச்சான் அப்பன்னாசி சுவாமி. அதைத்தான் அரசு தனது கொள்கை முடியாக ஏற்றுக்கொண்டுள்ளது. இது அரசின் கொள்கையானதில் என்ன தவறு?

19-08-2021 முரசொலி தலையங்கம் –  தொடர்கிறது: ‘புதிதாக இவர்கள் எதையும் செய்யவில்லை, காலம் காலமாக இருப்பதுதான்’ என்று ஒருவர் சொல்லி இருக்கிறார். புதிதாக எதுவும் செய்யவில்லை என்றால், புதிதாக எதற்காக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்? ‘நாத்திகர்களுக்கு இதைச் செய்ய என்ன உரிமை உள்ளது?’ என்று ஒருவர் கேட்கிறார். நாட்டை ஆண்ட முதலமைச்சர்களிலேயே பழுத்த ஆத்திகர் ஓமந்தூரார் என்று அழைக்கப்பட்ட ஓமந்தூர் இராமசாமி. இந்து சமய அறநிலையத்துறையின் அவர் சில சீர்திருத்தம் செய்த போது அவரையே எதிர்த்த கூட்டம்தான் இந்தக் கூட்டம். எனவே இவர்களது பிரச்சினை ஆத்திகர் – நாத்திகர் என்பது அல்ல. தங்களின் ஆதிக்கத்தை எதிர்ப்பவர்கள் எல்லாம் ‘நாத்திகர்கள்’ சொல்லி எதிர்ப்பதுதான் காலம் காலமாக அவர்களது வழக்கம். அதை அன்றும் செய்தார்கள். இன்றும் செய்கிறார்கள். ஆகமம் என்ற சொல்லுக்குப் பின்னால் இருப்பது ‘ஆரியமே’ தவிர வேறல்ல!

முரசொலியின் விளக்கம் ஏன்?: இது ஏதோ தினமலர், தினமணி, மாலைமலர் போன்ற நாளிதழ்களில் வந்த செய்தியாக நினைக்க வேண்டாம்! முரசொலியில், இவ்வளவு பெரிதாக செய்தி வெளிவந்துள்ளது!ன்அப்படியென்ன, ஆசிரியர்-நிறுவனர் ஆவி உருவத்தில் வந்து ஆணையிட்டாரா? இல்லை, விபூதி-குங்குமம் அழித்த தனயனுக்கு மனம் மாறி விட்டதா? பிறகு, எதற்கு இந்த மாயாஜால வித்தைகள், அதிலும் சம்பந்தமே இல்லாத விசயங்கள் முரசொலியில் வருகின்றன? நிச்சயமாக ஒரு திட்டத்துடன் செயல்பட ஆரம்பித்திருக்கும் இந்துவிரோத திராவிட அரசு, வேறொரு உள்நோக்கத்துடன், தனது ஆட்களை உள்ளே நுழைக்கிறது. அதனால், அர்ச்சகர் நியமன விவகாரம், அதற்கு விளக்கம் என்று விவரமாக செய்தி வந்துள்ளது. ஒரு வேளை அரசு தரப்பு விளக்கம் போல, இச்செய்தியை வெளியிட்டுள்ளார்கள் போலும்! “முரசொலியில்” வந்து விட்டதால், கழகக் கண்கமணிகளும் படித்துப் புரிந்து கொள்வார்கள்! ஒருவேளை, இந்துத்துவ வாதிகளும் வாங்கி படிக்க ஆரம்பித்து விடுவார்கள் போலும்!

நாத்திகர், ஆத்திக விசயங்களில் தலையிடும் மர்மங்கள்!: திக-திமுக-கம்யூனிஸ்டுகள் இந்துவிரோதிகள் ஆத்திக விசயத்தில் தலையிடுவது மூலம் தான் பிரச்சினைகள் கிளம்புகின்றன:

  1. எல்லா டாக்டர்களும் அறுவை சிகிச்சை செய்ய முடியுமா? மாட்டு டாக்டர் மனிதனுக்கு வைத்தியம் பார்க்க முடியுமா?
  2. எல்லா எம்.எல்.ஏக்கள் / எம்.பிக்களும் அமைச்சர் ஆக முடியுமா? அது-அதற்கு சட்டதிட்டங்களை வைத்திருக்கும் / பாரம்பரியம் இருக்கும் போது, மீறுவது ஏன்?
  3. துப்பாக்கி சுட முடியும், குண்டு வெடிக்கத் தெரியும் என்று தீவிரவாதிகள் ராணுவத்தில் சேர்ந்து விட முடியுமா?
  4. ஆர்.சி கிறிஸ்தவன் புரொடெஸ்ன்டென்ட் சர்ச்சுக்கு பாஸ்டர் ஆக முடியுமா? செவன்த்-டே-அட்வென்டிஸ்ட் சர்ச்-காரன், சிஎஸ்.ஐ பிஷப் ஆகமுடியுமா?
  5. சுன்னி துலுக்கன், ஷியா மசூதி இமாம் ஆக முடியும? போஹ்ரா முஸ்லிம், சுன்னி மசூதி இமாம் ஆகலாமா? அஹ்மதியாக்கள், சுன்னி அல்லது ஷியா மசூதி மௌலானா ஆகமுடியுமா?
  6. இது பிராமணர்-பிராமணர் அல்லாத பிரச்சினையே இல்லை. ஏனெனில், இருக்கும் லட்சக்கணக்கிலான கோவில்களில் பாதிக்கும் மேலான கோவில்களில் பிராமணர் அல்லாதவர் தான் அர்ச்சகராக இருக்கின்றனர். அங்கு பிராமணர் சர்டிபிகேட் வாங்கி வந்தாலும், அர்ச்சகராக முடியாது.

சர்டிபிகேட் அர்ச்சகர்களும், பாரம்பரிய அர்ச்சகர்களும்:

  1. 60 வயதான அர்ச்சகர்கள் ஓய்வு கொடுக்கப் பட்டாலும், அவர்கள் கோவிலுக்கு வந்து, இப்பொழுது சேர்க்கப் பட்டுள்ள அர்ச்சகர்களுக்கு உதவ வேண்டுமாம்!
  2. “இருவரும் சேர்ந்து பூஜைகளை செய்யுமாறு அறிவுரை கூறியுள்ளோம்,” என்றால், பிறகு, அவரது நிலை என்ன?
  3. இவர் தான் ISI / ISO 90002 ரேஞ்சில் சர்டிபிகேட் வாங்கி வந்துள்ளாரே, பிறகு, அவருக்கு, கற்றுக் கொடுக்க வேண்டியது என்ன உள்ளது?
  4. அவருக்கு அத்தகைய பணி நியமனம் கொடுக்கப் பட்டுள்ளதா? அவரது சம்பளம் என்ன?
  5. மடாலங்களில் சிறு வயதிலிருந்து, முறைப்படி பயிற்சி பெறுபவர்களை விட, ஓராண்டு படித்து, சர்டிபிகேட் வாங்கிக் கொண்டு வரும் இவர்கள், ஏதோ எல்லாம் தெரிந்தவர்கள் மாதிரியும், உடனே அர்ச்சகர் வேலை கொடுக்க வேண்டும் என்பது போல அலைகிறார்கள். நாத்திக-இந்துவிரோத அரசும் அதனை ஆதரிக்கிறது.
  6. எத்தனையோ, லட்சக் கணக்கில் பி.இ / பி.டெக் படித்து வேலை இல்லாமல் இருக்கிறார்கள், ஆனால், அவர்களுக்கு வேலை கொடுப்பதில்லை.
  7. இவர்களுக்கோ, லட்சத்தில் செலவு செய்து, விழா எடுத்து, வேலை கொடுக்கிறார்கள். இது எப்படி என்பது தான் புதிராக இருக்கிறது.
  8. உண்மையாக படித்து அறிகார்களோ, இல்லையோ, சர்டிபிகேட் வாங்கினால், வேலை உறுதி என்பது போன்ற நிலை உருவாக்கப் பட்டுள்ளது.
  9. அப்படி என்றால், இனி, இஞ்சினியரிங் கல்லூரிகள் எல்லாம் மூடிவிட்டு, அர்ச்சகர் பயிற்சி கல்லூரி என்று ஆரம்பித்து விடலாம் போலிருக்கிறது.
  10. தமிழகத்தில், அந்த அளவுக்கு, முதலமைச்சரே வேலை நியமணம் பத்திரம் கொடுத்து, விழா நடக்கிறது.

© வேதபிரகாஷ்

21-08-2021

70-100 வருடங்களாக இந்து மதத்தைத் தூஷித்து, சிலைகளை உடைத்து, திருடி, கோவில்களைக் கொள்ளையடித்து, இப்பொழுது, அர்ச்சகர் போர்வையில் உள்ளே நுழைவதேன்?
ஆகமங்கள் பற்றி அறியாமல், சக்திவேல் முருகன் போன்றோரை வைத்துக் கொண்டு, கோவில்களை சூரையாட திட்டம் போடப் பட்டுள்ளதா?
சர்டிபிகேட் வாங்கினவன் எல்லாம் அர்ச்சகர் ஆகி விடலாம் என்றால்,
பிஇ / பிடெக் படித்தவன் ஏன் இஞ்சினியர் ஆவதில்லை?
இவர்கள் சொல்வது உண்மை என்றால், அவ்வாறு செய்தவர்களின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

இந்துவிரோத திமுகவின் அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமன நாடகம், சுப்ரமணிய சுவாமிக்கு ஸ்டாலின் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? (2)

ஓகஸ்ட்21, 2021

இந்துவிரோத திமுகவின் அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமன நாடகம், சுப்ரமணிய சுவாமிக்கு ஸ்டாலின் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? (2)

அரசியல் ஆக்கப் பட்டு விட்டதால் கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவிப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை: இந்நிலையில், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்ற துணையாக இருப்போம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது[1], “சமூக நீதியை விரும்பாத சுப்ரமணியன் சுவாமி போன்றோருக்கு இந்தத் திட்டம் எரிச்சலைத் தருகிறது. மனிதன் நிலவில் கால் வைத்தாலும் கோவில் கருவறையில் கால்வைக்க முடியாது என்ற நிலை நீடித்துவந்தது. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம் அகில இந்திய அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்ற துணையாக இருப்போம்,” என தெரிவித்துள்ளார்[2]. இதே போலத்தான், பெரியார் திடலில், வீரமணி தலைமையில் இந்துவிரோதிகள் எல்லாம் சேர்ந்து பேசியுள்ளார்கள். அதிலும், இந்த இந்துவிரோதி திருமா இருந்ததும் நோக்கத் தக்கது. அருள்மொழி, சுப.வீரப்பாண்டியன், கலி.பூங்குன்றன். சிகரம் செந்தில்நாதன், கலையரசி நடராசன் இருந்ததில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. இந்துவிரோதிகள் எவ்வாறு சேர்ந்து, இந்துமதத்திற்கு எதிராக செயல் படுகிறார்கள் என்பதை கவனிக்கலாம்.

ஸ்டாலின் அவருடைய தந்தை செய்த தவற்றைச் செய்ததால் நீதிமன்றத்துக்குச் செல்லவேண்டிய நிலை வந்துள்ளதுசுப்பிரமணியன் சுவாமி: “அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் விவகாரத்தில் ஸ்டாலின் அவருடைய தந்தை செய்த தவற்றைச் செய்ததால் நான் நீதிமன்றத்துக்குச் செல்லவேண்டிய நிலை வந்துள்ளது,” என்று ட்வீட் மூலம் தி.மு.க-வுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார் பாஜக-வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி[3]. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற சட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் செல்லப்போவதாகவம் அறிவித்திருக்கிறார்[4]. கடந்த தி.மு.க ஆட்சியின்போது சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தை தீட்சிதர்கள் வசமிருந்து அரசாங்கமே ஏற்று நடத்தும் என்று அன்றைக்கு முதல்வராக இருந்த கருணாநிதி அறிவித்தார். அதை எதிர்த்து சிதம்பரம் தீட்சிதர்கள் நீதிமன்றத்துக்குச் சென்றார்கள். உச்ச நீதிமன்றம் வரை சென்ற இந்த வழக்கில் தீட்சிதர்களுக்கு ஆதரவாக நீதிமன்றம் சென்றவர் சுவாமி. இறுதியாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தீட்சிதர்கள் வசமே நடராஜர் ஆலயம் செயல்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதன் பிறகு சுவாமிக்கு நெருக்கமானவர்கள் இது குறித்து நீண்ட ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். இந்த ஆலோசனையின் முடிவில், சென்னை நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தாக்கல் செய்ய முடிவாகியிருக்கிறது. வரும் 26-ம் தேதி சென்னை வரும் சுவாமி, இந்தத் திட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவிருக்கிறாராம். இதனால் இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து புதிய சர்ச்கைள் கிளம்பும் என்று தெரிகிறது!

முதல்வர் ஸ்டாலினுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?: சுப்ரமணியசாமி சொன்னது, “முதல்வர் ஸ்டாலினுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? சட்டம் மிக தெளிவாக இருக்கும் போது, தன்னிச்சையாக அர்ச்சகர் நியமனத்தை ஸ்டாலின் செய்திருப்பது அராஜகம். அர்ச்சகர்களாக இருக்கும் பிராமணர்களுக்காக இதை செய்யவில்லை. அரசியல் சட்டத்தை ஸ்டாலின் மதிக்காமல், ஹிந்து மத கோட்பாடுகளில் தலையிடுகிறார் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி எச்சரித்துள்ளார்……..சென்னை, கே.கே.நகர் பள்ளி விவகாரத்தில் தவறாக செயல்பட்டார். ஆசிரியர் ஒருவர் செய்த தவறுக்கு, அப்பள்ளியை அரசுடைமையாக்க முயல்கிறார் என்றதும், அந்த பிரச்னைக்குள் நுழைந்தேன். ‘சட்ட ரீதியில் நடவடிக்கை எடுப்பேன்; ஆட்சியைக் கலைப்பேன்’ என சொன்னதும், ஸ்டாலின் பின்வாங்கினார்”.

திக சொல்லி செய்யும் ஸ்டாலின்: சுப்ரமணியசாமி சொன்னது, “திடீரென, தி.க., சொன்னதை கேட்டு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற மந்திரத்தை கையில் எடுத்து, பயிற்சி முடித்த 58 பேருக்கு அவசரமாக பணி நியமன ஆணைகள் வழங்கியுள்ளார்.  இதை, தி.க., தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் போற்றி மகிழ்கின்றனர். 51 ஆண்டுகள் கழிந்த நிலையில், ஈ.வெ.ரா.,வின் கனவையும், கருணாநிதியின் லட்சியத்தையும், முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி இருக்கிறார் என, தி.க.,வினர் சொல்லி மகிழ்கின்றனர். இந்திய அரசியல் சட்டத்தின்படி தான், ஹிந்து அறநிலைய சட்டம் – 1959 இயற்றப்பட்டது. அந்த சட்டத்தின் பிரிவு, 55ன் படி, அறநிலையத் துறை கோவில்களில் பூசாரி, அர்ச்சகர், ஓதுவார் உள்ளிட்ட யாரை நியமனம் செய்ய வேண்டும் என்றாலும், அறங்காவலருக்கு தான் அதிகாரம். கோவிலை நிர்வகிக்கும் முழு அதிகாரமும் அவருக்கே உண்டு. அப்படி இருக்கும் போது, முதல்வர் ஸ்டாலினுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? சட்டம் மிக தெளிவாக இருக்கும் போது, தன்னிச்சையாக அர்ச்சகர் நியமனத்தை ஸ்டாலின் செய்திருப்பது அராஜகம்”.

இப்போதும், அறங்காவலர் உரிமையில் அரசு தலையிட்டிருக்கிறது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசின் முடிவு தவறானது: சுப்ரமணியசாமி  சொன்னது, “முதல்வர் என்பதால், அவர் இஷ்டத்துக்கு செய்ய முடியாது. இந்து அறநிலையத் துறை சட்டத்தின்படி, அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அர்ச்சகர், ஓதுவார், பூசாரிகளை நியமிக்கும் அதிகாரம் அறங்காவலருக்கு மட்டுமே உள்ளது[5]. கோயிலை நிர்வாகம் செய்யும் அதிகாரமும் அறங்காவலருக்கே உள்ளது. சட்டம் இப்படி இருக்க, கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதல்வர் ஸ்டாலின் கையில் எடுத்திருப்பது கண்டனத்துக்கு உரியது[6]. இந்து மத விவகாரங்களில் தலையிடும் அதிகாரத்தை முதல்வர் ஸ்டாலி னுக்கு யார் கொடுத்தது? இப்படித் தான், சிதம்பரம் நடராஜர் கோவிலில், தீட்ஷிதர்களிடம் இருந்து நிர்வாக உரிமையை அரசு பறித்தது. அதற்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தேன். பின், உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டு வழக்கிலும் வாதாடினேன். இறுதியில், நடராஜர் கோவிலை தீட்ஷிதர்களே நிர்வகிக்கலாம் என, நீதிபதிகள் உத்தரவிட்டனர். நடராஜர் கோவில் நிர்வாகம் என்பது, பல நுாற்றாண்டுகளாக, தீட்ஷிதர்கள் அனுபவித்து வரும் சிறப்பு உரிமை. அது, அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.

அதேபோலவே, இப்போதும், அறங்காவலர் உரிமையில் அரசு தலையிட்டிருக்கிறது:சுப்ரமணியசாமி  சொன்னது, “அதேபோலவே, இப்போதும், அறங்காவலர் உரிமையில் அரசு தலையிட்டிருக்கிறது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசின் முடிவு தவறானது. அதனால், ஏற்கனவே தெளிவாக இருக்கும் பல்வேறு சட்டங்களை, உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள் காட்டி, முதல் கட்டமாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போகிறேன். தேவையானால், உச்ச நீதிமன்றம் வரை செல்வேன். எனவே, இந்த உத்தரவை உடனடியாக, முதல்வர் ஸ்டாலின்வாபஸ்பெற வேண்டும். இல்லையென்றால், அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். அர்ச்சகர்களாக இருக்கும் பிராமணர்களுக்காக இதை செய்யவில்லை. அரசியல் சட்டத்தை ஸ்டாலின் மதிக்காமல், ஹிந்து மத கோட்பாடுகளில் தலையிடுகிறார்[7]. அதை தடுக்கவே போராடுகிறேன். புரிந்து கொண்டு, ஸ்டாலின் வாபஸ் பெற்றால், நீதிமன்ற கண்டனத்தில் இருந்து தப்பிப்பார்,” என அவர் தெரிவித்துள்ளார்[8].

© வேதபிரகாஷ்

21-08-2021


[1] நக்கீரன், சுப்ரமணியன் சுவாமி போன்றோருக்கு இது எரிச்சலை தருகிறது” – திருமாவளவன் கருத்து!, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 18/08/2021 (15:13) | Edited on 18/08/2021 (15:44).

[2] https://www.nakkheeran.in/24-by-7-news/politics/it-irritates-people-subramanian-swamy-thirumavalavan-comment

[3] விகடன், ஸ்டாலினுடன் மல்லுக்கட்டும் சுவாமி’ – ஆகஸ்ட் 26-க்குப் பிறகு வெடிக்குமா சர்ச்சை?,  அ.சையது அபுதாஹிர், Published: 18 Aug 2021 7 AM; Updated:18 Aug 2021 7 AM.

[4] https://www.vikatan.com/government-and-politics/politics/stalin-vs-swamy-will-the-temple-priest-issue-will-spark-upcoming-days

[5] இந்து.தமிழ், அர்ச்சகர் நியமன விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடுவேன்; இந்து மதத்தில் தலையிடும் அதிகாரத்தை முதல்வருக்கு கொடுத்தது யார்?- பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கேள்வி, Published : 18 Aug 2021 03:12 am, Updated : 18 Aug 2021 05:39 am.

[6] https://www.hindutamil.in/news/tamilnadu/706252-subrmaniyan-swamy.html

[7] ஏசியா.நெட்.நியூஸ், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் சட்டத்தை வாபஸ் பெற்றால் ஸ்டாலின் தப்பிப்பார். சு.சாமி கடும் எச்சரிக்கை..!, Thiraviaraj RM, Tamil Nadu, First Published Aug 17, 2021, 9:20 AM IST; Last Updated Aug 17, 2021, 6:57 PM IST.

[8] https://tamil.asianetnews.com/politics/subramaniam-swamy-issued-a-stern-warning-to-stalin-qxytbo

மு.க.ஸ்டாலின் உத்தரவு – பத்தாண்டுகளாக பயன்பாடு இல்லாத நகைகளை உருக்கி கட்டிகளாக்கி முதலீடு செய்யலாம் – தயாராக இருக்கும் இந்து-அறநிலைய அமைச்சர்!

ஓகஸ்ட்11, 2021

மு..ஸ்டாலின் உத்தரவு – பத்தாண்டுகளாக பயன்பாடு இல்லாத நகைகளை உருக்கி கட்டிகளாக்கி முதலீடு செய்யலாம் – தயாராக இருக்கும் இந்து-அறநிலைய அமைச்சர்!

மு..ஸ்டாலின் உத்தரவு – பத்தாண்டுகளாக பயன்பாடு இல்லாத நகைகளை உருக்கி கட்டிகளாக்கி முதலீடு செய்யலாம்: கோவில்களில் நன்கொடையாக வரும் தங்க நகைகளை மும்பையில் உள்ள தங்க உருக்கு ஆலையில் கொடுத்து உருக்கி, அதனை பிக்சர்டு டெபாசிட் முறையில் அந்த அந்த கோவில்களின் பெயரில் இருப்பு வைத்தால் ஆண்டு தேறும் வருமானம் கிடைக்கும். என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியிருந்தார்[1]. சேகர்பாபு, இவ்வாறு கூறி, அத்திட்டத்தை அமூல் படுத்த திட்டம் தீட்டியுள்ளது தெரிகிறது[2]. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக இந்த நகைகள் எந்தவித பயன்பாடு இல்லாமலும், பயன்படுத்தாமலும் அப்படியே இருக்கிறது. இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டது[3]. அவர், துறைச் சார்ந்த ஆய்வு கூட்டங்களை உடனடியாக நடத்தி, இதுகுறித்து பரிசீலித்து தங்க நகைகளை பிஸ்கெட்டுகளாக மாற்ற வேண்டும். அதுமட்டுமல்லாமல் மாற்றப்படும் தங்க பிஸ்கெட்டுகளை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தங்க வைப்புநிதியில் முதலீடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்[4]. ஆனான பட்ட, மோடியே, இத்தகைய ஆலோசனை சொன்ன போது, பெரும்பாலான கோவில்கள் ஒப்புக் கொள்ளவில்லை[5]. பக்தர்களின் காணிக்கைக்களை அவ்வாறு உருக்குவது, மிகப் பெரிய பாவம் என்றும் எடுத்துக் காட்டினர்[6]. ஏனெனில் நம்பிக்கைக்கு உகந்த விசயங்களில், நம்பிக்கை இல்லாதவர்களுக்குத் தலையிட உரிமை இல்லை.

திராவிட-நாத்திக-இந்துவிரோத-விக்கிரங்களை உடைக்கும் ஆட்சியாளர்களுக்கு இதில் எந்த உரிமையும் இல்லை: பக்தர்கள் கடவுளுக்கு பிரியமுடன், பக்தியுடன் கொடுக்கும் நகைகள் பயன்பாட்டுடன் உள்ளது-இல்லை என்பதை ஆட்சியாளர் தீர்மானிக்க முடியாது. லட்சக் கணக்கான பக்தர்கள், ஏழை-பணக்காரன், படித்தவன்– படிக்காதவன் போன்ற நிலைகளைத் தாண்டி, பக்தியுடன் கடவுள்ளுக்குக் காணிக்கையாகக் கொடுக்கப் படும் நகைகளை அவ்வாறேல்லாம் மாற்றுவது, வியாபாரரீதியில் பயன்படுத்துவது, முதலீடு செய்வது, வட்டி பெறுவது, போன்றவற்றை செய்ய ஆட்சியாளர்களுக்கு, அதிலும், நாத்திகம் பேசி, இந்து மத்த்தைத் தொடர்ந்து பழித்து வரும் திராவிடத் தலைவர்கள் அத்தகைய விவகாரங்களில் மூக்கை உழைக்க எந்த முகாந்திரமோ, யோக்கியதையோ இல்லை என்பது மிக சாதாரணமாகத் தெரிகிறது.. தானம் கொடுத்த பக்தர்களின் உணர்வுகளை மீறிய செயல்களைச் செய்ய இவர்களுக்கு உரிமை இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

சேகர் பாபுவை புகழும் சில ஊடகங்கள்: சமயம் TOI (Times of India) என்று சொல்லிக் கொண்டாலும், அது சேகர் பாபு புகழ் பாடுவது வேடிக்கையாக உள்ளது. தமிழகத்தில் இந்துத்துவக் கொள்கைகளின் பரவலுக்கான தீவிர முயற்சிகளையும் பிரித்துப் பார்க்க முடியாது. இத்தகைய சூழலில், மிகுந்த இறை நம்பிக்கை கொண்ட சேகர் பாபு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அமைச்சராக பொறுப்பேற்றது முதல் பம்பரமாக சுழன்று சேகர் பாபு களப்பணியாற்றி வருகிறார். மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கோயில்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கோயில் நில ஆக்கிரமிப்புகளை மீட்பது, ஆகம பயிற்சி பெற்ற அனைவரும் அர்ச்சகர் பணியில் அமர்த்த நடவடிக்கை, கொரோனா காலத்தில் கோயில்களில் தயாரிக்கப்படும் உணவுகளை மருத்துவமனைகளுக்கு அளிப்பது என சேகர் பாபுவின் நடவடிக்கைகள் பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்த நிலையில், கோயில்களில் நன்கொடையாக வந்த நகைகளை உருக்கி தங்க கட்டியாக மாற்றி வைப்புநிதி மூலம் வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு தெரிவித்துள்ளார்[7]. மேலும், தமிழ்நாடு திருக்கோயில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகளை மீட்க விரைவில் முதலமைச்சர் புதிய திட்டம் ஒன்றை அறிவிப்பார் என்றும் சேகர் பாபு தகவல் தெரிவித்துள்ளார்[8].

2,000 கிலோ தங்க நகைகள் உருக்கப்படாமல் உள்ளன: ஒன்பது ஆண்டுகளாக கோவில்களுக்கு செலுத்தப்பட்டுள்ள, 2,000 கிலோ தங்க நகைகள் உருக்கப்படாமல் உள்ளன[9]. காணிக்கை நகைகளை, கோவில் பயன்பாட்டுக்கு போக, மீதியை உருக்கி தங்க பிஸ்கட்டுகளாக மாற்றி வைப்பு நிதியில் வைக்கப்படும்[10]. இதன் மூலம் ஆண்டுக்கு, 20 கோடி ரூபாய் வட்டி கிடைக்கும். இதனை உடனடியாக மேற்கொள்ளத் தொழில்நுட்பம் சார்ந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது, என, அமைச்சர் கூறியுள்ளார். இக்குழுக்களில் இந்துவிரோதிகள், ஏன் இந்துக்கள் அல்லாதவர்கள் கூட நியமிக்கப் படுவர். இப்பொழுது, தமிழ்நாடு பாடநூல் துறை நிறுவனமே அதனை மெய்ப்பித்துள்ளது. நமக்கு விபரம் தெரிந்த வரையில், வங்கியில் நகையை அடமானமாக பெற்று, வட்டிக்கு கடன் கொடுப்பர். தங்க நகையை, ‘டிபாசிட்’ ஆக பெற்று, அதற்கு வட்டி வழங்குவதாக தெரியவில்லை[11]. மேலும், தமிழக கோவில்களில் இருக்கும் ஆபரணங்களின் மதிப்பு 10 ஆயிரம் கிலோவுக்கும் அதிமாக இருக்கும் என்றும், 2,000 கிலோ எனக் குறிப்பிடுவதில், ஏதும் சூழ்ச்சி இருக்கிறதோ என்ற சந்தேகமும் வருகிறது[12]. இதற்கிடையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஹிந்து அறநிலைய துறை இயக்குனர் அலுவலகத்தில் உள்ள கல்வெட்டில், ‘ஹிந்து’ என்ற வார்த்தை மட்டும் நீக்கப்பட்டுள்ளது.

ஹிந்து விரோத கட்சியின் கைகளில் ஆட்சி சிக்கியுள்ளது: தினமலரில், இதனை விமர்சித்து, கருத்துத் தெரிவிக்கப் பட்டுள்ளது. “ஹிந்து விரோத கட்சியின் கைகளில் ஆட்சி சிக்கியுள்ளது. நடப்பதை பார்த்தால், மாநிலத்தில் உள்ள கோவில்கள் அனைத்தையும், ‘குளோஸ்செய்து விடுவரோ என்ற அச்சம் ஏற்படுகிறது. இன்னும் சில வாரங்களில் ஆயுத பூஜை வரவுள்ளது. இதை அரசு அலுவலகத்தில் கொண்டாட கூடாது என, தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பினாலும் ஆச்சரியமில்லை. வரும் 2022ம் ஆண்டு முதல் தமிழக அரசு அலுவலகங்களில் பொங்கல், தமிழ் ஆண்டு பிறப்பு, தீபாவளி போன்ற ஹிந்து பண்டிகைகளுக்கு விடுமுறை இருக்காது என்று கருதலாம். இரண்யன் ஆட்சியில், ‘இரண்யாய நமஹஎன்று தானே சொல்லியாக வேண்டும். ‘ஓம் நமோ நாராயணாஎன சொல்ல முடியுமா என்ன?” விபூதி-குங்குமம் வைத்தே இந்துக்கள ஏமாற்றி விடுவோம் என்று சொன்னவரும் இன்று அமைச்சராக இருக்கிறார். ஸ்டாலினைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, வீடியோ, புகைப் படங்கள், செய்திகள் எல்லாம் இன்றும் காணக் கிடைக்கின்றன. கருணாநிதியைப் பற்றியும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கோவில்களில் தங்க நகைகள், தங்க விக்கிரகம் முதலியவற்றில் எல்லாம் மோசடிகள் நடந்துள்ளன. ஆகவே, இந்நிலையில், தங்க அகைகளை உருக்குகிறேன் என்றால், அதில் கோடிகளில் ஊழல் செய்வர் என்பது திண்ணம். ஆகவே, இத்தகையோர், கோவில் விவகாரங்களிலிருந்து, தூரத்தில் இருப்பதே நல்லது.

© வேதபிரகாஷ்

11-08-2021


[1] தமிழ்.ஒன்.இந்தியா, கோவில் தங்க நகைகள்.. முதல்வர் மு..ஸ்டாலின் வகுத்த திட்டம்.. புதிய தகவல் சொன்ன சேகர்பாபு!, By Rayar A Updated: Sunday, July 18, 2021, 10:19 [IST].

[2] https://tamil.oneindia.com/news/chennai/tn-minister-sekarbabu-has-said-that-more-than-rs-560-crore-of-temple-lands-have-been-recovered-durin-427355.html

[3] தினத்தந்தி, கோவில்களுக்கு பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய நகைகளை தங்க பிஸ்கெட்டுகளாக மாற்றி, அதனை வங்கியில்டெபாசிட்செய்து வருவாய் ஈட்டப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்., ஜூலை 27, 09:29 AM

[4] https://www.dailythanthi.com/amp/News/State/2021/07/27092913/Minister-Sekarbabu-informed-that-the-decision-was.vpf

[5] India Today, The Modi government wants gold idling in temple vaults to be part of the India growth story. The trusts aren’t enthusiastic , Amarnath K Menon, April 30, 2015; ISSUE DATE: May 11, 2015UPDATED: May 1, 2015 12:49 IST.

[6] https://www.indiatoday.in/magazine/religion/story/20150511-gold-akshaya-tritiya-world-gold-council-temple-818296-2015-04-30

[7] சமயம், கோயில் நகைகளை உருக்கி தங்கக்கட்டி: தமிழக அரசிடம் புதிய திட்டம்!, Manikandaprabu S | Samayam TamilUpdated: 23 Jul 2021, 11:35:00 AM

[8] https://tamil.samayam.com/latest-news/state-news/new-money-earning-scheme-to-be-implemented-from-temple-gold-in-tamilnadu/articleshow/84669132.cms

[9] சமயம், கோயில்கள் வருவாய் பெருக்க திமுக அமைச்சர் சேகர்பாபு சூப்பர் திட்டம்!,  Akash G | Samayam TamilUpdated: 24 Jul 2021, 08:28:00 AM.

[10] https://tamil.samayam.com/latest-news/salem/hindu-temples-gold-will-be-made-as-biscuits-will-be-kept-deposit-which-generates-income-minister-sekar-babu-new-plan-salem-byte/articleshow/84677474.cms

[11] தினமலர், இது உங்கள் இடம் : ‘இரண்யாய நமஹசொல்லணுமோ!, Updated : ஆக 03, 2021  03:15 |  Added : ஆக 03, 2021  03:12.

[12] https://www.dinamalar.com/news_detail.asp?id=2815320

இப்படி வேடம் போட்டு, ஓட்டுக் கேட்டு இந்துக்களை ஏமாற்றி, ஆட்சியைப் பிடித்து விட்டனர். இதில் வேடிக்கை என்னவென்றால், இந்தியில் பேச்சு, உருதுவில் போஸ்டர் இத்யாதிகள்.
இன்றைக்கு இவர் அமைச்சராக உள்ளார்!