ஶ்ரீ பத்மாவதி தாயாருக்கு கோவில் கட்டப்பட்டதும், கும்பாபிஷேகம் நடந்ததும் – 2023ல் பகுத்தறிவு மண்ணில், திராவிட மாடல் ஆட்சியில் நடந்த அதிசயம்! (2)
17-03-2923 – காஞ்சனா மனநிறைவுடன் கூறியது: காஞ்சனா, கும்பாபிஷேகம் நடந்த பிறகு[1], “அந்த காலத்தில் நான் பிரபல நடிகையாக இருந்தாலும் அவருடன் நானும் திருப்பதி செல்வதை வழக்கமாக கொண்டிருந்தேன். என் தங்கை கடவுளுக்காக தன்னையே அர்ப்பணித்தவர். சில காரணங்களால் பெற்றோர், எனக்கு எதுவும் செய்யவில்லை. அவர்களின் சொத்துக்கள் எல்லாம் கைவிட்டு போகும் நிலை ஏற்பட்டது. நான் சம்பாதித்த சொத்துக்கள் கூட பறிபோகும் நிலை வந்தது. இந்த சூழலில்தான் தி.நகர் சொத்துக்களை கோவிலுக்கு எழுதி வைக்க நான், என் தங்கை, மைத்துனர் மூவரும் ஒருமனதாக தீர்மானித்து கோவிலுக்கு தானமாக வழங்கினோம். தற்போது அந்த இடத்தில் பத்மாவதி தாயார் கோவில் எழுப்பப்பட்டுள்ளது. இதன்மூலம் எங்களின் ஜென்மம் சாபல்யம் அடைந்து விட்டது. என்னை ஒவ்வொரு நொடியும் பெருமாள்தான காப்பாற்றி வருகிறார். வாழ்நாள் முழுவதும் அவர் நினைவு ஒன்றே போதும்…,” இவ்வாறு கூறினார்[2].
காஞ்சனா ஏன் நிலத்தை தானமாகக் கொடுத்தார்?: காஞ்சனாவும், கிரிஜா பாண்டேவும் 15 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, திருமலையில் உள்ள புகழ்பெற்ற மலைக்கோயிலான வெங்கடேஸ்வராவை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கியுள்ளனர்[3]. காஞ்சனாவும் அவரது சகோதரி கிரிஜா பாண்டேவும் நிலத்தின் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை TTD நிர்வாக அதிகாரி I.Y.R-யிடம் ஒப்படைத்ததாக கோயில் வட்டாரங்கள் PTI இடம் தெரிவித்தன[4].. நிலமும் அதில் உள்ள ஒரு பழைய அமைப்பும் ஜி.என். சென்னையில் உள்ள செட்டி தெருவில் உள்ள அந்த இடத்தில் கல்யாண மண்டபம்/திருமண மண்டபம் கட்ட TTDயிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன[5]. ஆனால், காஞ்சனா எப்படி திடீரென இறைவனின் இருப்பிடத்திற்கு ஒரு பெரிய காணிக்கையை அளித்தார் என்பது மர்மமாகவே உள்ளது. நடிகை சில ஆண்டுகளுக்கு முன்பு மன உளைச்சலில் இருந்ததை நினைவுகூரலாம், மேலும் அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் குடும்ப உறுப்பினர்கள் அவரை வெளியேற்றியதால் அவருக்கு வீடு இல்லை என்று செய்திகள் வந்தன. டிடிடிகளின் இணைச் செயல் அலுவலர் டாக்டர் என்.யுவராஜ், எஸ்டேட் அலுவலர் ஸ்ரீ சேஷய்யா கிருஷ்ணா ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்[6].வழக்கைத் தாக்கல் செய்யும் போது அவருக்கு வயது 41 மற்றும் வழக்கில் வெற்றி பெறும் போது 72 வயது. சொத்து அவர்களின் பெற்றோரால் வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டது, பின்னர், அவர்கள் இறந்த பிறகு, அவர்களின் உயில் செல்லாது, அது சட்டப்பூர்வ வாரிசுகளான காஞ்சனா மற்றும் அவரது சகோதரிக்கு வந்தது. இந்த 31 ஆண்டுகளில், இது பலரால் கைப்பற்றப்பட்டு தவறாக பயன்படுத்தப்பட்டது. இறுதியாக, சகோதரிகள் வழக்கை வென்றனர், அவர்கள் அதை TTDக்கு நன்கொடையாக வழங்கினர்.
2012 முதல் 2018 வரை ஆக்கிரமிப்பில் இருந்தது: காஞ்சனாவும், கிரிஜா பாண்டேவும் அருள்மிகு சித்தி விநாயகர் ஸ்வாமி அறக்கட்டளைக்கு வாடகைக்கு விட்டபோது, 11.7.2012 தேதியிட்ட குத்தகைப் பத்திரத்தை, குடியிருப்பு நோக்கங்களுக்காக வாடகைக்கு விடுவதாகவும், தினசரி பூஜை செய்யும் பூசாரி, அந்த குடியிருப்பில் குடியிருந்ததாகவும் தெரிகிறது. , இது சுமார் 600 சதுர அடி அளவிலான ஒற்றை படுக்கையறை பிளாட் ஆகும். அறக்கட்டளையின் தற்காலிக அலுவலகம் குடியிருப்பில் இருப்பதாக அறக்கட்டளை பத்திரம் காட்டினாலும், அந்த குடியிருப்பை குடியிருப்பு அல்லாத பயன்பாட்டிற்கு வைத்தது போல் எடுக்க முடியாது. இதனால், அந்த இடம் 11-07-2012 மற்றும் 10-04-2018 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில், அந்த அறக்கட்டளையால் ஆக்கிரமிக்கப்பட்டது என்பது தெளிவாகிறது[7].
இந்நிலம் ஆக்கிரமிப்பு பற்றிய சரிபார்க்க முடியாத செவிவழி கதைகள்: ஆக்கிரமிப்பு பற்றி சொல்லப் படும் செவிவழி செய்திகள், இதற்கு ஆதாரங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனனில் அவையெல்லாம் மறைக்கப் பட்டு விட்டன போலிருக்கிறது. ஆட்டோ டிரைவர்கள் மற்றவர் இத்தகைய கதைகளை அளந்து விடுகிறார்கள்……………நாயுடு டீக்கடை வைத்திருந்தார்……….சசிகலா கூட்டம் அபகரித்துக் கொண்டது……….மூவேந்தர் கட்சி, சேதுராமன் அபகரித்து (மீனாக்ஷி மருத்துவமனை, காஞ்சிபுரம்), மீனாக்ஷி ஹோடல் கட்டினார்……………முன்பே கோவில் இருந்தது…………பிறகு நீதிமன்ற ஆணை மூலம் அது இடிக்கப் பட்டது. இருப்பினும், மீனாட்சி பவன், மற்றும் சம்பந்தப் பட்ட கம்பெனிகள் அவ்விடத்தில் இருந்திருக்கின்றன[8]. ஜூலை 3ம்தேதி, 2011 அன்று, “பொன்னியின் செல்வன்” கூட்டமும் நடந்திருக்கிறடது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்தது ந.சேதுராமனின் அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகம். இது பற்றியும் ஒரு வழக்கு உள்ளது. காஞ்சனா போன்ற நிலை அவருக்கு ஏற்பட்டது போலிருக்கிறது. தியாகராயநகர் தான் சம்பந்தப் படுகிறது.
சேதுராமன் குடும்பம் சம்பந்தப்பட்ட நிலவழக்கு: மதுரையில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை எஸ்.ஆர்.டிரஸ்ட் மூலம் செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனராக டாக்டர் சேதுராமன் இருந்து வருகிறார். இவருக்கு பிரதீபா என்ற மகளும், ரமேஷ், குருசங்கர் ஆகிய மகன்களும் உள்ளனர். கடந்த 2005ம் ஆண்டு முதல் டாக்டர் சேதுராமனின் இளைய மகன் டாக்டர் குருசங்கர் மருத்துவமனையின் துணை தலைவராகவும், எஸ்.ஆர் டிரஸ்டின் தலைமை நிர்வாகியாகவும் உள்ளார். இந்த நிலையில், அவர்களது குடும்ப பிரச்சினை தொடர்பாக டாக்டர் சேதுராமனின் மூத்த மகன் ரமேஷ், மகள் பிரதீபா, மருமகன் மாரியப்பசாய்ராம் ஆகியோர் டாக்டர் சேதுராமனின் கையெழுத்தை தாங்களாகவே போட்டு ஒரு போலி பத்திரத்தை தயார் செய்து பின்பு, அதனை சென்னை தியாகராயநகரில் உள்ள பத்திரபதிவு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது[9]. இந்த நிலையில், இது குறித்து தகவல் அறிந்த டாக்டர் சேதுராமன் சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் போலி ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் செய்தார்[10]. அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சைதாப்பேட்டை போலீசார், டாக்டர் சேதுராமனின் கையெழுத்து உண்மைதானா என்பதை கண்டறிய அந்த கையெழுத்தை தடய அறிவியல் துறைக்கு பத்திரத்துடன் அனுப்பி வைத்தனர். ஆனால், அந்த கையெழுத்து போலி என தடய அறிவியல் துறை அறிவித்தது. இதனையடுத்து, மகன் ரமேஷ், மகள் பிரதீபா, மருமகன் மாரியப்ப சாய்ராம் ஆகியோர் மீது சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிமன்ற நீதிபதி போலியாக கையெழுத்திட்ட சேதுராமனின் மூத்த மகன் ரமேஷ், மகள் பிரதீபா மற்றும் மருமகன் மாரியப்ப சாய்ராம் ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். இந்த நிலையில், இந்த விவகாரத்தின் ஒரு திருப்பமாக, மீனாட்சி மிஷன் மருத்துவமனையை நிர்வகிப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதில், டாக்டர் சேதுராமனின் இளையமகன் டாக்டர் குருசங்கர் மருத்துவமனையை நிர்வகிக்க அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடப்பிடதக்கது.
கோவில் நிலங்கள் அபகரிப்பு, ஆக்கிரமிப்பு முதலியவை தடுக்கப் படுமா அல்லது தொடருமா?: எது எப்படியாகிலும், சமீப காலங்களிலும் கோவிலுக்கு நிலத்தை தானமாக அளிக்கும் சேவை தொடர்கிறது. முன்பு கல்வெட்டுகளில் பதிவாகி, பிறகு முகமதியர், கிருத்துவர், விடுதலைக்குப் பிறகு பகுத்தறிவு பெரியாரிஸ்ட், அண்ணாயிஸ நாத்திகர் போன்றோர் ஆக்கிரமிப்புகளையும் கடந்து இருக்கும் நிலங்கள் முறையாகப் பயன்படுத்தினால், அந்நிலங்கள் மூலம் வருவாயும் கிடைக்கும், கோடிக்கணக்கில் மக்கள் பயனடைவ்வார்கள். சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி என்றெல்ல்லாம் பேசும் அரசியல்வாதிகள் இவ்விசயத்தைப் பற்றி பேசுவதில்லை. அதாவாது, எங்கெல்லாம் பெரும்பான்மையில் நன்மை பொது மக்களுக்குச் சென்றடையுமே, அங்கெல்லாம் அவர்கள் மட்டும் பலனடைய வேண்டு, சம்பாதிக்க வேண்டும், கொள்ளையடிக்க வேண்டும் என்று தான் காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்நிலையில் நடிகை காஞ்சனாவாக இருந்தாலும், ஓய்வு பெற்ற கர்நாடக முதன்மை செயலாளருமான கிரிஜா பாண்டேயாக இருந்தாலும், நீதி மன்றங்களில் போராடத்தான் வேண்டியிருக்கும் போலிருக்கிறது!
© வேதபிரகாஷ்
03-4-2023
[1] பத்திரிக்கை.காம், ‘எனது ஜென்மம் சாபல்யம் அடைந்தது’! பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகத்தில் நடிகை காஞ்சனா உருக்கம்…, MAR 18, 2023
[2] https://patrikai.com/my-birth-has-come-to-an-end-said-actress-kanchana-at-padmavathi-mother-temple-kumbabishekam/
[3] Indian Express, Kanchana donates Rs 15 cr land to Tirumala Tirupati Devasthanam, Written by Agencies, Tirupati | First published on: 26-10-2010 at 12:11 IST; October 26, 2010 12:11 IST.
[4]https://indianexpress.com/article/india/india-others/kanchana-donates-rs-15-cr-land-to-tirumala-tirupati-devasthanam/
[5] Times of India, Actor Kanchana donates Rs 15 cr worth land to TTD, TNN / Oct 26, 2010, 03:54 IST.
[6] TTD.News, Donation of land to TTD by Smt. Girija Pandey and Ms Kanchana,
[7] Madras High Court – Mrs.Girija Pandey vs The Commissioner on 10 April, 2018
In the High Court of Judicature at Madras Dated : 10.4.2018; Coram :
The Honourable Mr.Justice T.S.SIVAGNANAM
Writ Petition Nos.7847 & 7848 of 2018 & WMP.Nos.9791 to 9794 of 2018
1. Mrs.Girija Pandey
2. Ms.Vasundhara Devi (a) Kanchana …Petitioners
Vs
1.The Commissioner, Corporation of Greater Chennai, Ripon Buildings, Chennai-3.
2.The Assistant Revenue Officer, Zone-9, Corporation of Greater Chennai, No.1, Lake Area, 4th Cross Street, Nungambakkam, Chennai-34. …Respondents
https://indiankanoon.org/doc/39110800/
[8] MEENAKSHI BHAWAN at 44/1 GN Chetty Road, T. Nagar, The Place is located between the Jain Temple and Residency Towers in GN Chetty Road. 3rd July 2011, 28155155
MEENAKSHI HOTELS & ENTERTAINMENT PRIVATE LIMITED’s Corporate Identification Number (CIN) is U55101TN1992PTC022336.- Nalliah Servai Sethuraman and Ramesh Sethuraman – Directors.
Smile Amusement & Hospitality private limited was at the first floor; directors are – Sethuraman Gurushankar, Chandrasekharan Kamini and Nalliah Servai Sethuraman.
[9] தமிழ்.ஒன்.இந்தியா, டாக்டர் சேதுராமனின் மூத்த மகன், மகள், மருமகனுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்!, By Jayachitra Updated: Friday, June 28, 2013, 17:55 [IST]
[10] https://tamil.oneindia.com/news/2013/06/28/tamilnadu-arrest-warrant-son-madurai-meenakshi-hospital-owner-178070.html?story=1