Posts Tagged ‘இந்து விரோதி’

தமிழக அரசு நிர்வகிக்கும் கோவில் கருவறையில் சாமி சிலை மீது பெட்ரோல் குண்டு வீசியது ஒரு தொடர்-குற்றவாளி! ஆகவே உண்மை மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும் (2)

நவம்பர்11, 2023

தமிழக அரசு நிர்வகிக்கும் கோவில் கருவறையில் சாமி சிலை மீது பெட்ரோல் குண்டு வீசியது ஒரு தொடர்குற்றவாளி! ஆகவே உண்மை மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும் (2)

குற்றங்களுக்கு லாப-நஷ்டங்களுக்கு சாமி காரணமா?; குற்றத்தை செய்வதற்கு இப்படியெல்லாம் நியாயப் படுத்தப் படுவது ஏன் என்றும் கவனிக்க வேண்டியுள்ளது. உண்மையில் வியாபாரத்தில் நஷ்டம் என்றால், அதற்கான காரணமானவர் மீது தான் தாக்குதல் இருக்க வேண்டும். கோவிலோ, கர்ப்பகிரகமோ, உள்ளே இருக்கும் மூலவரோ குறியாக இருக்க முடியாது[1]. “சாமி தான், சிலை தான்” என்று குறியாக பாம் போடுகிறான்[2] என்றால், அத்தகைய மனப்பாங்கு, குற்ற மனபாங்கு என்னவென்று போலீஸார் தான் ஆராய வேண்டும். அப்படியென்றால், இத்தகைய குற்றவாளிகளை வேண்டுமென்றே இவ்வாறு செய்கிறார்களா அல்லது செய்விக்கப் படுகிறார்களா போன்ற சந்தேகங்களும் எழலாம். குற்றவாளிகளை, அவ்வாறே நடத்தாமல், ஏதோ தியாகி, சித்தாந்தி போன்று சித்தரித்திக் காட்டுவது, பிறகு மனநோயாளி என்பது முதலியவை முறையான விசாரணையாகத் தெரியவில்லை. பெட்ரோல் குண்டு வீசப்பட்ட கோவில், சென்னை உயர் நீதிமன்றத்தின் அறக்கட்டளையின் கீழ் நிர்வகிக்கப்படுவதால், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, நீதிபதி நிரஞ்சன் ஆய்வு செய்தார். தடய அறிவியல் துறை நிபுணர்களும் ஆய்வு செய்தனர்.

முதலில் குண்டு போட்டவனின் பெயரைக் குறிப்பிடாமல், பிறகு குறிப்பிட்டது: ஹிந்து கோவில் கருவறைக்குள் பெட்ரோல் குண்டு வீசிய முரளிகிருஷ்ணன், கழுத்தில் அணிந்திருந்த மாலைகள், போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர், கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவரா, பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்திற்கு பின், ஏதேனும் மதவாத சக்திகள் உள்ளனரா என்ற கோணத்திலும், போலீசார் விசாரித்து வருகின்றனர். சமீபத்தில், ரவுடி கருக்கா வினோத் என்பவர் கவர்னர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசினார். சில நாட்களில் அடுத்த சம்பவம் நடந்துள்ளதால், காவல் துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீ வீரபத்ரா சுவாமி கோவில் முன், ‘டீ கடை’ ஒன்றில் அமர்ந்து, சாகவாசமாக பெட்ரோல் குண்டு தயாரித்துள்ளார் முரளிகிருஷ்ணன்[3]. கடையில் இருந்தோர் பார்த்தும், அவரிடம் எதுவும் கேட்கவில்லை[4]. ஆனாலும், அங்கிருந்த ‘சிசிடிவி’ கேமரா பதிவில், தெளிவாக தெரிகிறது[5]. இது, இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக சேகரிக்கப்பட்டுள்ளது[6]. கோவை உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், கடந்தாண்டு, அக்., 23ல், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த, ஜமேஷா முபின், 29, என்பவர் கார் குண்டு வெடிப்பை நடத்தினார். ஜூலையில், சிவகங்கை மாவட்டத்தில், நில தகராறு தொடர்பாக, மதுரை விராதனுார் பகுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தப்பட்டது.சமீபத்தில், பள்ளிக்கரணையில், பா.ஜ., நிர்வாகியும், ரவுடியுமான பல்லு மதன் வீட்டில், ரவுடிகள் மண்ணெணெய் குண்டு வீசினர்.அதேபோல, நந்தனம் எஸ்.எம்., நகரைச் சேர்ந்த ‘சி’ பிரிவு ரவுடி கருக்கா வினோத், 42, கவர்னர் மாளிகையான ராஜ்பவன் மீது, இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசினார். சென்னை மட்டுமல்ல, தமிழகத்தின் பல பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு கலாசாரம் பரவி வருவது பொதுமக்களை பீதியடைச் செய்துள்ளது.

அரசு நிர்வாகத்தில் உள்ள கோவில் என்பதால் நீதிபதி ஆய்வு பிரச்சினையை மறைக்கக் கூட்டாது: சென்னையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வீரபத்ர சுவாமி கோவில், அரசு சொத்தாட்சியர் மற்றும் அதிகாரபூர்வ அறங்காவலரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது[7]. அதனாலேயே, பெட்ரோல் குண்டு வீசப்பட்டதும், நீதிபதி நிரஞ்சன் விசாரணை நடத்தி வருகிறார்[8]. கைது செய்யப்பட்ட முரளிகிருஷ்ணன், தெளிவான மனநிலையில் இல்லை என, போலீசார் கூறுகின்றனர். உள்ளுக்குள் ஆழமான விஷயங்கள் இருக்கலாம் என்றெல்லாம் செய்திகள் கூறுகின்றன. பண்டிகை காலங்களில் கூட்டம் மிகுந்த இடங்களில் கோவிலுக்கு அருகில், கோவிலுக்குள் இத்தகைய குண்டுவெடிப்புகள் நடக்கின்றன என்பதைக் கவனிக்கலாம். கூட்டநெரிசலிலேயே அதிக பாதிப்பு ஏற்படலாம். ஆகவே, இத்தகைய குண்டுவெடிப்புகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. “நீட், சாமி உதவவில்லை, மனநோயாளி,….” என்றெல்லாம் கூறி பிரச்சினையை மறைத்து விட முடியாது. உண்மையினை மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

உளவுத் துறை அதிகாரிகள் கூறுவது: போலீஸ் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என, உளவுத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்கள் மேலும் கூறியதாவது: “தமிழகத்தில் ஒரு மாத காலத்துக்குள், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன. கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து, தமிழக பா.., தரப்பில், 30 கேள்விகள் கேட்கப்பட்டன; அவை மிக நுட்பமானவை. தமிழகத்துக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கிறது. .எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு, தமிழகத்தில் இருந்து மூளை சலவை செய்து, ஆட்கள் அனுப்பப்படுவது, தேசிய புலனாய்வு அமைப்பு எனும் என்..., விசாரணையில் தெரியவந்துள்ளது. .எஸ்., அமைப்பில் சேர்க்கப்படும் நபர்கள், பயங்கரவாத பயிற்சிக்கு பின், பல்வேறு திட்டங்களோடு திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஹிந்து மற்றும் பிற மதங்களைச் சேர்ந்த இளைஞர்களை, .எஸ்., பயங்கரவாதியாக மாற்றும்போது, பெயர் மாற்றம் செய்யப்படுகின்றனர். அவர்கள் போலீசிடம் சிக்கும்போது, மதத்துக்கு கெட்ட பெயர் ஏற்படுவதால் நடைமுறையில் மாற்றம் கொண்டு வந்துள்ளனர். தற்போது, .எஸ்., அமைப்புக்கு அழைத்து செல்லப்படுபவர் பெயர்கள் மாற்றப்படுவதில்லை. ஹிந்துவாக இருந்தால், அதே பெயருடனே இருப்பர். அதனால், பயங்கரவாத செயலில் ஈடுபட்டு சிக்கினாலும், ஹிந்துவாகவே அடையாளம் காட்டப்படுவர்.எனவே, வழக்கமான நடைமுறையை விட்டு, ஆழமான விசாரணை மேற்கொள்ள வேண்டும்; கிடைக்கும் தகவல்களை மறைக்காமல் பதிவு செய்ய வேண்டும்,” இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவித்துள்ளது: இந்த சம்பவம் தொடர்பாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது[9]: “சென்னை பாரிமுனை கோவிந்தப்ப நாயக்கன் தெரு, ஸ்ரீவீரபத்ர சுவாமி கோயில் கருவறைக்குள்ளே, சுவாமி சிலையின் மீதே பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதள பாதாளத்திற்குப் போய்விட்டது. போலி மதச்சார்பின்மையும், அரைகுறை நாத்திகமும் பேசித் திரியும் பிரிவினைவாத அமைப்புக்களை கட்டுப்படுத்த, தி.மு.., தவறியதன் விளைவு, இன்று கோயிலுக்குள்ளேயே பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்குக் கொண்டு வந்திருக்கிறது,” இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்[10]. அதிமுக தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

© வேதபிரகாஷ்

11-11-2023.


[1] தமிழ்.ஒன்.இந்தியா, ‛சிலை தான் குறி’.. சென்னை கோவில் மீதான பெட்ரோல் குண்டு வீச்சின் பரபர பின்னணி.. போலீஸ் விளக்கம், By Nantha Kumar R Published: Friday, November 10, 2023,

[2] https://tamil.oneindia.com/news/chennai/what-happened-in-petrol-bomb-thrown-on-kothavaalchavadi-temple-chennai-police-explains-556071.html

[3] தினமலர், சென்னையில் மீண்டும் பெட்ரோல் குண்டு வீச்சு அதிர்ச்சி! கோவில் கருவறைக்குள் வீசப்பட்டதால் பதற்றம், பதிவு செய்த நாள்: நவ 10,2023 22:52.

[4] https://m.dinamalar.com/detail.php?id=3478549

[5] நக்கீரன், டீக்கடையில் சாவகாசமாக அமர்ந்து பெட்ரோல் குண்டு தயாரித்த நபர்; அதிர வைக்கும் சிசிடிவி காட்சி, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 10/11/2023 (15:11) | Edited on 10/11/2023 (15:26)

[6] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/person-sitting-tea-shop-casually-made-petrol-bomb-shocking-cctv-footage

[7] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், சென்னை பாரிமுனை கோயிலில் பெட்ரோல் குண்டு வீச்சு: ஐகோர்ட் நீதிபதி நேரில் ஆய்வு, WebDesk, Nov 10, 2023 15:44 IST

[8] https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-parrys-corner-temple-petrol-bombing-high-court-judge-inspects-in-person-tamil-news-1692013

[9] தினமலர், சென்னையில் கோயிலுக்குள் மதுபோதையில் பெட்ரோல் குண்டு வீசியவர் கைது: அண்ணாமலை கண்டனம், மாற்றம் செய்த நாள்: நவ 10,2023 15:4.

[10] https://m.dinamalar.com/detail.php?id=3478443

சாத்தான் வேதம் ஓதும், பேய்கள் ஆட்சி செய்யும், சாத்திரங்கள் பிணங்கள் தின்னும், நெற்றியில் ரத்தம் சொரியும், குங்குமம்-விபூதி அழித்தவர்கள் பக்தி புத்தகங்கள் வெளியிடுவார்கள்! (2)

ஜனவரி20, 2023

சாத்தான் வேதம் ஓதும், பேய்கள் ஆட்சி செய்யும், சாத்திரங்கள் பிணங்கள் தின்னும், நெற்றியில் ரத்தம் சொரியும், குங்குமம்விபூதி அழித்தவர்கள் பக்தி புத்தகங்கள் வெளியிடுவார்கள்! (2)

பணிக்காலத்தில் இயற்கை எய்திய 10 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில், வேலை கொடுக்க தீர்மானிக்கப் பட்டது: ஒரு பக்கம் இந்து-அல்லாதவர்கள் எல்லாம் இந்து அறநிலையத் துறையில் வேலை செய்கிறார்கள் போன்ற குற்றச் சாட்டுகள் விவரங்களுடன் வெளியாகிக் கொன்டிருக்கின்றன. “இந்து” என்று இல்லாமலேயே சங்கங்கள் எல்லாம் செயல்பட்டு வந்து கொன்டிருக்கின்றன. பிறகு, திடீரென்று, இத்தகைய பணி நியமனங்கள் எவ்வாறு அமூல் படுத்தப் படுகின்றன என்ரு தெரியவில்லை[1]. மேலும், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள திருக்கோயில்களில் பணியாற்றி பணிக்காலத்தில் இயற்கை எய்திய 10 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில், வேலை கொடுக்க தீர்மானிக்கப் பட்டது[2]. அதனையும், இவ்விழாவுடன் இணைக்கப் பட்டு, இங்கு நடந்தேறியுள்ளது[3]. இளநிலை உதவியாளர், காவலர், கடைநிலை ஊழியர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான, பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார்[4]. அப்படியென்றால், இதை சாக்காக வைத்து, ஸ்டாலின் இங்கு வந்தார் அல்லது அங்கு வருவதற்கு இப்படியொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி / உருவாக்கப் பட்டுள்ளது என்றாகிறது. நாளைக்கு விமர்சனம் எழுந்தாலும், “காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது,” போன்ற நியாயப் படுத்தும், விளக்கமும் கொடுக்கலாம், என்று தீர்மானிக்கப் பட்டது போலும்.

திருமகள், ஹரிபிரியா முதலியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றல்…..

மற்ற அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றல்…..

பூணூல் போட்ட பார்ப்பனர்களின் பூர்ணகும்ப மரியாதை…………..

இந்நிகழ்ச்சி / நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்கள் யார்-யார்?: இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் விவரங்களையும், ஊடகங்கள் கொஞ்சம்-கொஞ்சமாகத்தான் வெளியிட்டு வருகின்றன[5]. வழக்கம் போல, தலைப்புகளை மாற்றி-மாற்றி, அதே செய்தியை வெளியிட்டுள்ளன. நிருபர் நேரில் செல்லும் பொழுது, விவரங்களை சேகரித்து சொந்தமாக, எந்த விவரத்தையும் கொடுக்க மாட்டாரா அல்லது கூடாதா என்று தெரியவில்லை[6]. டுவிட்டரில் உள்ள வீடியோவில் கலந்து கொண்டவர்களின் சில விவரங்கள் தெரிகின்றன[7]. தினத்தந்தி, மூன்று நேரங்களில், மூன்று முறை செய்திகளை வெளியிட்டுள்ளதை கவனிக்கலாம். சில அச்சு வடிவத்தில் உள்ளது மற்றும் இணைதளத்தில் உள்ளது, இரண்டிற்கு உள்ள வேறுபாட்டையும் கவனிக்கலாம். கீழே, அவை தொகுத்துக் கொடுக்கப் படுகிறது:

  • அமைச்சர் பி.கே.சேகர்பாபு[8],
  • ஆழ்வார்திருநகரி ஸ்ரீ மத் பரபஹம்ஸ ரெங்கராமானுஜ ஜீயர்,
  • குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்,
  • பேரூர் ஆதீனம், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள்,
  • ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர்[9],
  • திருவண்ணாமலை ஆதீனம் 46வது குரு மகாசன்னிதானம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்[10]
  • சட்டப்பேரவை உறுப்பினா் என்.எழிலன்[11],
  • பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்தர மோகன்[12]
  • இந்து அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன்
  • திருமகள், இந்து அறநிலையத் துறை ஆலோசனைக் குழு உறுப்பினர்.
  • ஹரிப்பிரியா, இந்து அறநிலையத் துறை ஆலோசனைக் குழு உறுப்பினர்
  • சத்தியவேல் முருகனார்.

உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சில எழுத்தாளர்கள் கௌரவிக்கப் பட்டதாகத் தெரிகிறது.

“108 அரிய பக்தி நூல்களை வெளியிட்ட முதலமைச்சர் – பின்னணி என்ன?” என்று ஏதோ பெரிய ரகசியத்தை சொல்வது போல, “இ.டிவி.பாரத்” தலைப்பிட்டாலும், உள்ளே, ஒன்றும் விசயத்தைக் காணோம்[13]. மற்ற நாளிதழ்களில் உள்ளது தான் இருக்கிறது[14].

  1. சிவபுராணம், கந்தப் புராணக் கதை, பதினெண் புராணங்கள் இவையெல்லாம் ஸ்டாலின் வெளியிட்டார் என்பதை நம்புகிறீர்களா?
  • இந்து மதம், நம்பிக்கைகள், பண்டிகைகள் என்றாலே, அவதூறு, ஆபாசம், தூஷணம் என்று செய்து வரும், இவர்களுக்கு, இது ஏன்?
  • இந்து அறநிலையத் துறையை வைத்துக் கொண்டு மிகவும் அதிகமாக அடிக்கடி விளையாடி வரும் இவர்களின் திட்டம் தான் என்ன?
  • பெரியாரிஸம், பகுத்தறிவு, திராவிடியன் ஸ்டாக், திராவிட மாடல் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு, இவ்வாறு செய்தால், இது எந்தவிதத்தில் வரும்?
  • முகமதிய, கிறிஸ்தவ கடவுள்கள் இருப்பதற்கு இந்த அளவுகள் வேலை செய்யாமல், இந்து மதத்திற்கு மட்டும் வேலை செய்யும் விதத்தைக் கவனிக்கலாம்!
  • தமிழக வக்ஃப் போர்டுக்குச் சென்று, இதே போல முகமதிய புத்தகங்கள், புராணங்கள் முதலியவற்றை புதுப்பொலிவுடன் வெளியிடுவாரா?
  • கிறிஸ்தவ பேரமைக்குச் சென்று கத்தோலிக்க, புருடெஸ்டென்ட் முதலிய புராணங்களை, பக்தி நூல்களை அப்படியே வெளியிடுவாரா?
  • அதற்கான செலவை, அந்தந்த போர்டுகள் ஏற்குமா? ஏற்றுக் கொண்டு அனுமதிப்பார்களா? அடுத்ததாகச் செய்ய முடியுமா?
  • செக்யூலரிஸம், சமத்துவம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எல்லாம் வேலை செய்யுமா, செய்யாதா என்பதை பார்ப்போம்!
  1. திருமகள், ஹரிப்பிரியா எல்லாம் இருந்தும், எந்த இந்துத்துவவாதிக்கும், எந்த சொரணையும் வரவில்லை, பிறகு ஸ்டாலின் ஜாலிதான்!

© வேதபிரகாஷ்

20-01-2023


[1] கருணை அடிப்படையில் பணி நியமனம் என்பது மத்திய அரசே கை விட்டு விட்டது. அநிலையில், தமிழக அரசு, இதிலும் எதிர்மறையாக செயல்பட இவ்வாறு செய்கிறதா, அல்லது வேறு விவகாரம் உள்ளதா என்று தெரியவில்லை.

[2] பதிரிக்கை.காம், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 108 பக்தி நூல்களை வெளியிட்டார் முதலமைச்சர் மு..ஸ்டாலின்..!, JAN 19, 2023

[3] https://patrikai.com/chief-minister-m-k-stalin-released-108-devotional-books-on-behalf-of-the-hindu-religious-charities-department/

[4] தினமணி, மறுபதிப்பு செய்யப்பட்ட 108 அரிய பக்தி நூல்கள்: முதல்வா் மு..ஸ்டாலின் வெளியிட்டார், By DIN  |   Published On : 20th January 2023 03:08 AM  |   Last Updated : 20th January 2023 03:33 AM.

[5] தமிழ்.ஒன்.இந்தியா, 108 அரிய பக்தி நூல்களை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்! தூள் கிளப்பும் இந்து சமய அறநிலையத்துறை! By Arsath Kan Published: Thursday, January 19, 2023, 12:44 [IST]

[6] https://tamil.oneindia.com/news/chennai/chief-minister-stalin-released-108-rare-devotional-books-494966.html

[7] அறிவாலயம், திமுக-இஐடி-விங்- https://twitter.com/i/status/1616020423535394816

[8]https://www.dinamani.com/tamilnadu/2023/jan/20/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-108-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-3986985.html

[9] தினகரன், புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்ட 108 பக்தி நூல்கள் வெளியீடு: முதல்வர் மு..ஸ்டாலின் வெளியிட்டார், 2023-01-20@ 00:33:10.

[10] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=831765

[11] மாலைமுரசு, தேவாரம், திருவாசகம் உட்பட 108 பக்தி நூல்களை வெளியிட்டார் முதலமைச்சர்…!, Tamil Selvi SelvakumarTamil Selvi SelvakumarJan 19, 2023 – 14:27038

[12] https://www.malaimurasu.com/posts/tamilnadu/eb-with-adhar-details

[13] இ.டிவி.பாரத், 108 அரிய பக்தி நூல்களை வெளியிட்ட முதலமைச்சர்பின்னணி என்ன?, Published on: Jan 19, 2023, 10:48 PM IST

[14] https://www.etvbharat.com/amp/tamil/tamil-nadu/state/chennai/chief-minister-mk-stalin-published-108-rare-devotional-books-in-chennai/tamil-nadu20230119224805573573653

தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை..

அறிக்கையில் விளக்கத்தைக் காணலாம்…

இப்புத்தகங்கள் விற்பனைக்கு…..

இந்துவிரோத திமுகவின் அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமன நாடகம், சுப்ரமணிய சுவாமிக்கு விளக்கம் கொடுத்து ஓய்வு பெற்ற அர்ச்சகரை தினக்கூலி முறையில் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன? (3)

ஓகஸ்ட்21, 2021

இந்துவிரோத திமுகவின் அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமன நாடகம், சுப்ரமணிய சுவாமிக்கு விளக்கம் கொடுத்து ஓய்வு பெற்ற அர்ச்சகரை தினக்கூலி முறையில் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன? (3)

அவதூறுகளுக்கு நெத்தியடி பதில் கொடுத்த முதலமைச்சர் மு..ஸ்டாலின்பின்வாங்கிய சுப்பிரமணியன் சுவாமி!: இந்நிலையில் ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ள சுப்பிரமணியன் சுவாமி[1], “தமிழ்நாடு அர்ச்சகர் தொடர்பான பிரச்சினை தீர்க்கப்பட்டதாகத் தெரிகிறது. முதலமைச்சர் மு..ஸ்டாலின் இன்று தமிழக சட்டசபையில் அர்ச்சகர்கள் யாரும் பணி நீக்கம் செய்யப்படவில்லை. அகற்றும் திட்டம் எதுவும் இல்லை. 60 வயதை கடந்து ஓய்வு பெறும் அர்ச்சகர்களுக்கு தகுந்த பணி வழங்கப்படும் என்று தெளிவுபடுத்தியுள்ளார். இதன் மூலம், பிரச்சினை தீர்க்கப்பட்டதாகத் தெரிகிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்[2]. இதைத்தான், “அவதூறுகளுக்கு நெத்தியடி பதில் கொடுத்த முதலமைச்சர் மு..ஸ்டாலின்பின்வாங்கிய சுப்பிரமணியன் சுவாமி! ,” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது. உண்மையில் ஈவேரா, அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் என்று எல்லோரும் இந்துமதத்தை தூஷித்து, 70 ஆண்டுகளுக்கு மேலாக பேசி, எழுதி வருகின்றனர். இவற்றை எல்லோரும் அறிந்த விசயமாக இருக்கிறது. இப்பொழுது, அரசியல் ஆட்சி, அதிகாரம், பலம் மற்றும் ஊடக அசுர பிரச்சாரம் எல்லாம் இருப்பதால், இத்தகைய யுக்திகளும் கையாளப் படுகின்றன.

பணியில் உள்ள அர்ச்சகர் வெளியேற்றப் பட்டனர்: பணி ஆணையை பெற்ற அவர்கள் 15-08-2021 அன்று முதல் பணியில் இணைந்துள்ளனர். அதன்படி இன்று கோவில்களில் பணி செய்து கொண்டிருந்த குருக்கள் சமூகம் வெளியேற்றப்பட்டு மற்ற சமூக அர்ச்சகர்கள் நியமனம் நடந்தேறி வருகிறது. இந்நிலையில் பிராமணர்கள் கோவில்களில் இருந்து வெளியேற்றப்படுவது குறித்து ஆடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது[3]. அதில் பேசும் குருக்கள் ஒருவர், “நான் திருச்சியில் இருந்து விக்னேஷ்வரன் சிவா பேசுகிறேன். மலைக்கோட்டை பிரச்சாரகம், நாகநாத சுவாமி கோயில் பற்றி கேட்டிருந்தேள். இன்று காலையிலே பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் பணியில் சேர்ந்து விட்டார்கள். மலைக்கோட்டை பிரச்சாரகத்திலே உள்ளே நுழைஞ்சிட்டா. நாகநாதர் கோயிலிலே காலை சந்தி முடிந்த உடனே நம்ம சிவாச்சாரியாரை வெளியே அனுப்பி விட்டு அவாளுக்கு ட்யூட்டி போட்டுட்டா[4]. சுப்பிரமணிய கோயிலிலும் 5 குருக்களை வெளியே அனுப்பி வைச்சுட்டா. நான் பிராமினை தூக்கி உள்ளே போட்டுட்டா. சமயபுரத்திலும் அதே நிலைமை தான் அண்ணா. இன்னைக்கு காலையிலேயே போலீஸை வைச்சு மாற்று சமுதயாத்தாளை உள்ளே விட்டு குருக்களை வெளியேற்றி விட்டார்கள்,” எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, கருத்து தெரிவித்துள்ள பலரும், சமூக நீதி வாழ்க! கோவில் கணக்கு வழக்குகளை சரிபார்க்க நியமிக்கப்பட்ட ஒரு துறை, ஒரு சமூகத்திற்கு அநீதி இழைத்துவிட்டது[5]. காஷ்மீரில் இருந்து எப்படி பண்டிட்டுகள் விரட்டியடிக்கப்பட்டார்களோ அதுபோல பிராமணர்களை தமிழகத்தில் இருந்து விரட்ட திராவிட சூழ்ச்சிதான் இந்த தூசிதட்டி எடுக்கப்பட்ட அனைவரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற செயல். அது சரி ஓதுவார்கள் அர்ச்சகர்களா? ஆகம விதிகளின்படி புதிதாக நியமிக்கப்பட்ட அர்ச்சகர்கள் செயல்படவில்லையென்றால் பக்தர்கள் அவர்களை புறக்கனிக்கவேண்டும். சில நாட்களில் ஒதுங்கிவிடுவார்கள். ஏனெனில் அவர்களால் இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த பூஜை முறைகளை கடைபிடிக்க முடியாது’’ எனத் தெரிவித்துள்ளனர்[6]. இது பிராமணர்-பிராமணர் அல்லாத பிரச்சினை போன்று விவரிக்கிறது. பிரச்சினை என்னவென்றால், “இந்துக்கள்” போர்வையில், நாத்திகர்-இந்துவிரோதிகள் “அர்ச்சகர்” போர்வையில் கோவிலுக்குள் நுழைவது தான்.

ஏற்கனவே பணியில் இருக்கின்ற ஓய்வு பெறாத எந்த அர்ச்சகரையும், எந்த திருக்கோயில்களிலிருந்து வெளியேற்றவில்லை: சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் 47 முதுநிலை திருக்கோயில்களின் அர்ச்சகர்கள் மற்றும் செயல் அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது[7]. அப்போது பேசிய அவர், ஏற்கனவே பணியில் இருக்கின்ற ஓய்வு பெறாத எந்த அர்ச்சகரையும், எந்த திருக்கோயில்களிலிருந்து வெளியேற்றவில்லை எனவும், அப்படி எங்காவது நடந்திருந்தால் கவனத்திற்கு கொண்டு வருமாறும் கேட்டுக்கொண்டார்[8]. காலிப் பணியிடங்களில் தான் பணியாளர்களை நியமிக்கின்றோம் என்றும், ஆகம விதிபடி பயிற்சி பெற்ற அர்ச்சகர்களை கொண்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறினார். இறைவனுக்கு பூஜை செய்கிற அர்ச்சகர்களை நாங்கள் வணங்குகிறோம். இப்போது நாங்கள் எடுத்துவரும் நடவடிக்கைள் கூட இறையன்போடு இறைப்பணி தொடர வேண்டும். அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகத்தான் என்றும் குறிப்பிட்டார். 60 வயதைக் கடந்தவர்கள் பல திருக்கோயில்களில் அர்ச்சகர்களாகப் பணியில் இருக்கும்போது 35 வயதிற்கு உட்பட்டவர்களை அர்ச்சகர்களாக நியமிப்பதில் என்ன தவறு என்றும் கேள்வி எழுப்பினார்.

19-08-2021 – கருணாநிதி –  கோவில்கள் ஆகம விதிப்படி நடக்க வேண்டும் என்பதைப் போலவே வர்ணா சிரமத்துக்கு வழிவகை செய்வதாக இருந்து விடவும் கூடாது[9]: முரசொலி நாளேட்டின் இன்றைய (ஆகஸ்ட் 19, 2021) தலையங்கம் வருமாறு: அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற புரட்சிகரமான திட்டத்தின் அடிப்படையில் தகுதியும், திறமையும், அதற்கான பயிற்சியும் பெற்றவர்கள் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள்.  ‘கோவில்கள் ஆகம விதிப்படி நடக்க வேண்டும் என்பதைப் போலவே வர்ணா சிரமத்துக்கு வழிவகை செய்வதாக இருந்து விடவும் கூடாது’ என்று சொன்னார் கருணாநிதி. அந்த அடிப்படையில்தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. அதை மனதில் கொண்டுதான் அர்ச்சகர் நியமனம் செய்யப்பட்டும் வருகிறது. இதைப்பார்த்து நேரடியாகக் கொந்தளிக்க முடியாத தினமலர், தினமணி போன்ற பத்திரிகைகள் சுப்பிரமணியம் சுவாமியின் பேட்டியைப் போட்டு அவரது முதுகுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள். ‘ஆகம விதி மீறப்பட்டால் உச்சநீதிமன்றம் செல்வேன்’ என்று சு.சுவாமி சொல்லி இருக்கிறார். ‘இந்த மிரட்டல்களுக்கெல்லாம் பயப்படும் அரசல்ல இது’ என்று கம்பீரமாகச் சொல்லி இருக்கிறார் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு. சுப்பிரமணியம் சுவாமி எந்த உச்சநீதிமன்றத்தைச் சொல்கிறாரோ அந்த உச்சநீதிமன்றமே, தமிழ்நாடு அரசின் அனைத்துச் சாதியினரும் சட்டத்தை அங்கீகரித்து விட்டது.

19-08-2021 முரசொலி தலையங்கம்அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற நியமனமே உச்சநீதிமன்றத்தின் அங்கீகாரத்தால்தான் நடந்திருகிறதுசேகர் பாபு:. 14.3.1972 ஆம் நாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், “கோவில் அர்ச்சகர்களை நியமிப்பது வகுப்பு வேறுபாடற்ற நடவடிக்கை. அந்த நடவடிக்கைகளிலோ விவகாரங்களிலோ தலையிட விரும்பவில்லை. எனவே தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தம் செல்லுபடியானதே,’’ என்று கூறப்பட்டது. 16.12.,2015 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “இந்துவாகப் பிறந்து தகுந்த பயிற்சியும், தேர்ச்சியும் இருக்குமானால் ஒருவரை அர்ச்சகராக நியமிக்கலாம் என்று தமிழக அரசின் அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இதனைப் புறக்கணிக்க முடியாது” என்று கூறப்பட்டது. இந்த அடிப்படையில் பார்த்தால் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற நியமனமே உச்சநீதிமன்றத்தின் அங்கீகாரத்தால்தான் நடந்திருகிறது[10].

© வேதபிரகாஷ்

21-08-2021


[1] கலைஞர் செய்திகள், அவதூறுகளுக்கு நெத்தியடி பதில் கொடுத்த முதலமைச்சர் மு..ஸ்டாலின்பின்வாங்கிய சுப்பிரமணியன் சுவாமி!, Vignesh Selvaraj, Aug 18, 2021 |11:58:20 am.

[2] https://m.kalaignarseithigal.com/article/tamilnadu/subramanian-swamy-on-dmk-govts-all-castes-become-priest/a83248fd-b108-4bc0-b7f4-a54a8a66bcc7/paytm

[3] தினசரி, திடீர் நயவஞ்சக வெளியேற்றம்: விடியலால் நொடிந்து போன சிவாச்சார்யர்கள் அர்ச்சகர்கள் கண்ணீர்க் குமுறல், செங்கோட்டை ஶ்ரீராம், 17-08-2021. 12.27 PM.

[4] https://dhinasari.com/latest-news/220137-temple-archagas-unlawfully-evacuated-from-temples-in-tamilnadu-hrnce.html

[5] ஏசியா.நெட்.நியூஸ், வெளியேற்றப்படும் பிராமணர்கள்கோயில் குருக்களின் வைரல் ஆடியோகுஷியில் பெரியாரிஸ்ட் மற்றும் இடதுசாரிகள்.!, Thiraviaraj RM, Tamil Nadu, First Published Aug 16, 2021, 1:04 PM IST; Last Updated Aug 16, 2021, 1:04 PM IST.

[6] https://tamil.asianetnews.com/politics/brahmins-to-be-expelled-viral-audio-of-temple-priests-qxx91w

[7] நியூஸ்.7.தமிழ், அர்ச்சகர்கள் வெளியேற்றப்படுகிறார்களா? அமைச்சர் சேகர்பாபு பதில், by EzhilarasanAugust 19, 2021

[8] https://news7tamil.live/not-the-intention-to-expel-priest-on-duty-minister-sekarbabu.html

[9] கலைஞர் செய்திகள், ஆகமம்பின்னால் இருப்பதுஆரியமே’.. சு.சுவாமி மிரட்டல்களுக்கெல்லாம் பயப்படும் அரசல்ல இது” : முரசொலி!, Prem Kumar – Aug 20, 2021 | 08:58:49 am.

[10] https://m.kalaignarseithigal.com/article/tamilnadu/murasoli-editorial-said-this-is-not-a-government-that-is-afraid-of-all-the-threats-of-subramaniam/24245a8d-23ee-4322-a4bf-1dfdc7d3ca62

கோவில்களே நிலங்களை ஆக்கிரமித்துள்ளனவாம் – கோவில் நிலங்கள் ஆக்கிரமித்துள்ளவர்களை இடிக்கவில்லை! ஆனால், கோவில்கள் இடிக்கப் பட்டுள்ளன!

ஜூலை15, 2021

கோவில்களே நிலங்களை ஆக்கிரமித்துள்ளனவாம் – கோவில் நிலங்கள் ஆக்கிரமித்துள்ளவர்களை இடிக்கவில்லை! ஆனால், கோவில்கள் இடிக்கப் பட்டுள்ளன!

ஸ்மார்ட் சிட்டிதிட்டத்தில் கோவில்கள் இருக்கக் கூடாதா?: “ஸ்மார்ட் சிட்டி” என்று நகரங்களில் குறிப்பிட்ட இடங்களைத் தேர்ந்தெடுத்து, சில தனியார் கம்பெனிகள் அரசு ஒப்புதலுடன் நடைமுறைப் படுத்தி வருகிறது. உண்மையில் சாதாரண மக்களுக்கு, இந்த கோடிகள் செலவழிக்கும் திட்டங்களினால் பலன் இருக்கின்றனவா என்று தெரியவில்லி. ஆனால், இதில் கான்ட்ராக்ட் எடுத்து வேலை செய்யும் நூற்றுக் கணக்கான கம்பெனிகளுக்கு நல்ல வருமானம், லாபம் கிடைத்து வருகின்றன. இத்திட்டங்களில் முக்கியமாக கோவில்கள் இடிக்கப் படுவது தெரிகிறது. சென்னை, பாண்டி பஜாரில், ஒரு விநாயகர் கோவில் இருந்த இடம் தெரியாமல் இடிக்கப் பட்டு, பெரிய பிளாபார்ம் கட்டியுள்ளனர். அங்கு, இன்றும் காலியாகத் தான் உள்ளது. அதனால், அந்த பெரிய பிளாபாரம் மக்களுக்கு உதவியா என்றால், இல்லை என்றே சொல்லலாம். பிறகு, அக்கோவில் ஏன் இடிக்கப் பட்டது என்ற கேள்வி எழுகின்றது. “ஸ்மார்ட் சிட்டி” திட்டம் தான். “ஸ்மார்ட் சிட்டி” என்றால், கோவில் இருக்கக் கூடாதா என்று தெரியவில்லை. ஒருவேளை, செக்யூலரிஸத் தனமாக, அவ்வாறு இருக்க வேண்டும் என்று, “ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தில்  இருக்கிறது போலும். இப்பொழுது, கோயம்புத்தூரிலும் இதே மாதிரி பல கோவில்கள் இடிக்கப் பட்டுள்ளன.

செவ்வாய்க்கிழமை 13-07-2021 ஒன்பது கோவில்கள் இடிக்கப் பட்டன: கோவை முத்தண்ணன் குளக்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 9 கோயில்களை மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை 13-07-2021 இடித்து அகற்றினா். இதற்கு எதிர்பப்பு தெரிவித்து, போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 150 போ் கைது செய்யப்பட்டனா். கோவை, தடாகம் சாலையில் உள்ள முத்தண்ணன் குளக்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 2,000க்கும் மேற்பட்ட வீடுகள், கோயில்களை பொலிவுறு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் இடித்து அகற்ற மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டது[1]. இதற்கிடையே அங்கு வசித்த மக்களுக்கு மலுமிச்சம்பட்டி, கீரணத்தம், காபி கடை, வெள்ளலூா், உக்கடம் புல்காடு ஆகிய பகுதிகளில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்பட்டன[2]. இதில், சில மாதங்களுக்கு முன்பு 1,600 போ் தங்களது வீடுகளை காலி செய்துவிட்டு அரசால் ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளில் குடியேறினா். இதையடுத்து, முதல் கட்டமாக அவா்களது வீடுகள் இடிக்கப்பட்டன.

வீடுகள், கட்டிடங்கள், கோவில்கள் இடிக்கப் பட்டு, அதே இடத்தில் மறுபடியும் கட்டிடங்கள் கட்டப் படும் திட்டம்ஸ்மார்ட் சிட்டி: கட்சி பாகுபாடு பார்க்காமல், அ.தி.மு.க., – தி. மு.க., – கம்யூ., கட்சி அலுவலகங்களும் இடிக்கப்பட்டன[3]. ஐகோர்ட் உத்தரவு மீறல்நீர் நிலைகளில் எவ்வித கட்டுமானங்களும் இருக்கக் கூடாது என, ஐகோர்ட் அறிவுறுத்தியிருக்கிறது[4]. அதன்படி, வீடுகள், கட்சி அலுவலகங்கள் மற்றும் கோவில்களை இடிக்க முன்வரும் மாநகராட்சி நிர்வாகம், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் மீண்டும், கான்கிரீட் கட்டுமானங்களை உருவாக்கி வருவது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இடிக்கப்பட்ட வீடுகளின் கட்டட கழிவுகளை அப்புறப்படுத்தாமல், அதே இடத்தில் சமப்படுத்தி, கரையை அகலப்படுத்தியிருக்கிறது; குளத்தில் தண்ணீர் தேங்கும் பரப்பை சுருக்கியிருக்கிறது.தற்போது குளத்தில் மண் தீவு உருவாக்கிய பகுதி வரை, மண் கரை அமைத்து, குளத்தில் தண்ணீர் தேங்கும் பரப்பு, சூறையாடப்பட்டு இருக்கிறது. ஐகோர்ட் உத்தரவை, மாநகராட்சி நிர்வாகம் அப்பட்டமாக மீறி செயல்படுகிறது.கோவில்களுக்கு அருகாமையில் குளத்துக்குள், உணவு தானிய கிடங்கு கட்டப்பட்டுள்ளது. அக்கட்டுமானத்தை அகற்ற, மாநகராட்சி எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது.கரையில் இருக்கும் கான்கிரீட் கழிவுகளை அகற்றி, கரையை பலப்படுத்தி, குளத்தை துார்வாரி, தண்ணீர் தேக்கும் பரப்பை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

எதிர்ப்புத் தெரிவித்த மக்களை அப்புறப் படுத்தி, கோவில்கள் இடிக்கப் பட்டன: இந்நிலையில், முத்தண்ணன் குளக்கரை பகுதியில் இருந்த 40 ஆண்டுகள் பழமைவாய்ந்த முத்து மாரியம்மன் கோயிலை இடிக்க உள்ளதாக அப்பகுதியில் திங்கள்கிழமை 12-07-2021 தகவல் பரவியது. இதனைத் தொடா்ந்து, கோயில் முன் மக்கள் அமா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடா்ந்து கலைந்து சென்றனா். இந்நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் 3 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அப்பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோயில், அங்காளம்மன் கோயில், கருப்பசாமி கோயில் உள்ளிட்ட 9 கோயில்களை போலீஸ் பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை காலை 13-07-2021 அன்று இடித்து அகற்றினா்[5]. முன்னதாக கோயில்களில் இருந்த சுவாமி சிலைகள், பூஜை பொருள்கள் உள்ளிட்டவை லாரியில் ஏற்றப்பட்டன[6]. இது குறித்து தகவலறிந்து அப்பகுதி மக்கள், ஹிந்து அமைப்பினா் ஏராளமானோர் அங்கு குவிந்தனா். அவா்கள் கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது, லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னா் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 150 பேரை போலீஸார் கைது செய்து அங்குள்ள தனியார் மண்டபத்தில் தங்கவைத்தனா்[7]. இதைத் தொடா்ந்து, அப்பகுதியில் பதற்றத்தைத் தடுக்க ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனா்[8].

இன்னொரு புறம், கோவில் இடத்தை ஆக்கிரமித்த ஓட்டல் இடிப்பு: காந்திபார்க் சுக்ரவார்பேட்டை பகுதியில், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பாலதண்டாயுதபாணி கோயிலுக்கு சொந்தமான ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை ஆக்கிரமித்து தனியார் உணவகம் செயல்பட்டு வந்தது[9]. கோயில் நிலம் ஆக்கிரமி்பு செய்யப்பட்டு இருப்பதாக வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலம் அறநிலையத்துறைக்குச் சொந்தமானது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது[10]. இதையடுத்து ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த உணவகம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜயலட்சுமி தலைமையில், தெற்கு தாசில்தார் முன்னிலையில் இடிக்கப்பட்டு அந்த இடம் மீட்கப்பட்டது.

கோவில் நிலங்கள் ஆக்கிரமித்துள்ளவர்களை இடிக்கவில்லை! ஆனால், கோவில்கள் இடிக்கப் பட்டுள்ளன!: தமிழகத்தில் கோடானு கோடி மதிப்புள்ள கோவில்கள் சூரையாடப் பட்டுள்ளன, இது மாலிக்காப்பூரை அடுத்து, சமீபத்தில் 70-150 ஆண்டுகளில் நடந்தவை. லட்சோபலட்சம் ஏக்கர் கோவில் நிலங்களை, நாத்திகர்கள், துலுக்கர், கிருத்துவர் என்று ஆக்கிரமிக்கப் பட்டுள்ளனர். இவற்றை 70 வருடங்களாக, நீதிமன்ற தீர்ப்புகள் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இப்பொழுதைய அரசு, கோவில்களே நிலத்தை ஆக்கிரமித்துள்ளதைக் கண்டுபிடித்துள்ளது! அத்தகைய நிலைமை, நிச்சயமாக பொய் என்றே சொல்லலாம். ஏனெனில், பெரும்பாலும், ஆங்கிலேயர் காலம் வரை கோவில்களுக்குத் தான் நிலங்கள் சொந்தமாக இருக்கின்றன.  நீர்நிலைகளை ஆக்கிரமித்தது கோவில்களா, அரசியல்வாதிகளா? யார்? அக்கோவில்களுக்கு மின்சாரம், தண்ணீர் மற்ற இணைப்புகளை, யார்-எப்படி கொடுத்தார்கள் என்றேல்லாம் கேள்விகள் கேட்க முடியுமா?

© வேதபிரகாஷ்

15-07-2021


[1] தினகரன், கோவை முத்தண்ணன் குளக்கரையில் கோயில் இடிக்க எதிர்ப்பு; பொதுமக்கள் தர்ணா, 2020-10-13@ 12:09:59.

[2] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=623883

[3] தமிழ்.இந்தியம்.எக்ஸ்பிரஸ், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் இடிக்க கோவையில் இந்து முன்னணி எதிர்ப்பு, ஆன்மீகம்செய்திகள் News Express Tamil July 13, 2021.

[4] https://www.newsexpresstamil.com/public-protest-in-coimbatore-over-demolition-of-100-year-old-temple/

[5] தினமணி, முத்தண்ணன் குளக்கரையில் கட்டப்பட்டிருந்த 9 கோயில்கள் இடிப்பு, By DIN  |   Published on : 14th July 2021 06:39 AM.

[6] https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2021/jul/14/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-9-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3659734.html

[7] தமிழ்.நியூஸ்.18, 40 ஆண்டு கால பழமையான கோயில்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடிப்பு!, July 14, 2021, 16:53 IST.

[8] https://tamil.news18.com/news/local-news/coimbatore/coimbatore-40-year-old-temples-demolished-with-heavy-police-security-in-coimbatore-vin-504635.html

[9] இ.டிவி.பாரத், கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிப்பு, Published on: Jul 7, 2021, 10:17 AM IST

[10] https://react.etvbharat.com/tamil/tamil-nadu/state/coimbatore/murugan-temple-land-recovered-in-coimbatore/tamil-nadu20210707101755516

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் – உண்மை-பொய்மை; தமிழக சட்டம்-அரசிய நிர்ணய சட்டம் மற்றும்  திராவிட கட்சிகளின் இந்துவிரோத வேடங்கள் – நீதிமன்ற தீர்ப்புகளை மீறி அறநிலையத் துறை அமைச்சர் செயல்படுவாரா? (3)

ஜூன்11, 2021

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்உண்மைபொய்மை; தமிழக சட்டம்அரசிய நிர்ணய சட்டம் மற்றும்  திராவிட கட்சிகளின் இந்துவிரோத வேடங்கள்நீதிமன்ற தீர்ப்புகளை மீறி அறநிலையத் துறை அமைச்சர் செயல்படுவாரா? (3)

ரங்கநாதனின் முரண்பட்ட வேடங்கள், தோற்றங்கள்: இவரது வேடங்களும் திகைப்படையச் செய்கின்றன. புகைப்படங்களில் தாராளமாக போஸ் கொடுக்கும் இவர், பிள்ளையாருக்கு மற்றும் அச்சிலைகளை உடைத்த பெரியார் சிலைக்கும் மாலை போடும் போது பூணூல் போட்டுக் கொண்டு, பட்டை-கொட்டைகளுடன் காட்சியளிக்கிறார். போராட்டம், ஆர்பாட்டம் என்று வரும் போது பூணூலை கழற்றி வைத்து விட்டு வருகிறார். கிருதா-மீசை சகிதம் வெறியோடு கத்தும் தோற்றம் காணப் படுகிறது. அத்தகைய நடத்தைகளை யார் அர்ச்சகப் பள்ளியில் சொல்லிக் கொடுத்தார்கள் அல்லது எந்த ஆகமம் சொல்லிக் கொடுத்தது என்று தெரியவில்லை. பெரியாருக்கு மாலை போடும் போது, இவர் வலது பக்கமாகவும், இன்னொருவர் இடப் பக்கமாகவும் (மாலை போல) பூணூல் போட்டிருப்பதை கவனிக்கலாம். அடிக்கடி ஊடகங்களுக்கு பேட்டிக் கொடுப்பது போன்ற விளம்பர யுக்திகளில் ஈடுபட்டுள்ளார் அல்லது ஊடகங்கள் இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன என்றாகிறது.

உச்சநீதி மன்ற தீர்ப்பை மீறி திமுக அரசு ஒன்றும் செய்து விட முடியாது: இந்து அறநிலைச் சட்டப் பிரிவை மாற்றித் தான், திமுக அரசு 2006ல் அத்தகைய அரசாணை [(No. 5 /2006) dated 14.07.2006] பிறப்பித்தது[1]. ஆனால், பிரச்சினை அறிந்தவுடன், மறுபடியும் மாற்றி [The Tamil Nadu Act No. 15 of 2006], இன்னொரு ஆணையை வெளியிட்டது. அதற்கு கவர்னர் 29.08.2006 அன்று ஒப்புதல் அளித்தார். ஆனல், ஆதி சிவாச்சாரியார்கள் சங்கம் வழக்கு தொடுத்தது[2]. உச்சநீதி மன்றம் 16-12-2015 அன்று தீர்ப்பு அளித்தது[3]. “மேற்காணும் விவரமான வாதவிவாதங்களுக்குப் பிறகு அர்ச்சகர் நியமனம் ஆகமசாத்திர விதிமுறைகளுக்கு ஏற்ப செய்யப்பட வேண்டும். அவை அரசியல் நிர்ணய சட்டத்தின் பிரிவுகள் மற்றும் கொள்கைளுக்கு இயைந்த வகையில் இருக்க வேண்டும். இது சேஷம்மாள் தீர்ப்பின் படியும் பொறுந்தும். அதன்படியே, எல்லா மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன,” என்று ஆணையிட்டது[4]. இதை எதிர்த்து தமிழக அரசோ, எந்ஹ சங்க்சமோ மேல்முறையீடு செய்யப் படவில்லை.அதாவது ஒப்புக் கொண்டனர் என்றாகிறது. பிறகு இப்பொழுது, 100 நாட்களில் அர்ச்சகராக நியமிப்பேன் என்று அமைச்சர் பேசுவது வேடிக்கையான விசயம் தான். நீதிமன்ற தீர்ப்பின் மகத்துவம் அறிந்து தான் பேசுகிறாரா இல்லையா என்ற கேள்வியும் எழுகின்றது. உள்ள பல பிரச்சினைகளைத் திசைத் திருப்ப, இவ்வாறு கூறியிருக்கலாம் என்றாலும், இவர்களுக்கு கோவில்கள், கோவில் சொத்துகள் முதலியவற்றின் மீது ஒரு கண் இருப்பதனால், பக்தர்கள் பொறுட்திருந்து தான் கவனிக்கபேண்டும், பார்க்க வேண்டும்.

திக-திமுக-நாத்திக-இந்துவிரோத சக்திகள் ஒன்றாக இணைந்து வேலை செய்வது தெரிகிறது

அனைத்து ஜாதியினரும் அர்ச்சராகலாம் என்ற தீவிர-வாத-விவாதங்களில், அரசியல் தான் அதிகமாக இருக்கிறதே தவிர, ஆகம நியதிகள் இல்லை.

  • ஈவேரா சொன்னார், கருணாநிதி சட்டம் போட்டார், அரசு ஆணை வெளியிடப் பட்டது போன்ற திரும்ப-திரும்ப செய்யும் வாதங்கள் சட்டமுறைப்படி இல்லை.
  • உச்சநீதி / உயர்நீதி மன்ற தீர்ப்புகள், ஏற்கெனவே இருக்கும் சட்டம், நீதிமுறை, வரையறை, முதலியவற்றைக் கொண்டு வழங்குபவை.
  • அரசியல் 25-சாசனப் பிரிவை நீக்க வேண்டும் என்றால், அம்பேத்கரை எதிர்ப்பதாகாதா, சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்பதை எதிர்ப்பதாகாதா, என்பதையும் யோசிக்க வேண்டும்.
  • 2008ல் தீட்சை பெற்ற பிறகு, சிறிய தனியார் கோவில்களில் பணியாற்றுவது, வேறு வேலைகளைச் செய்வது என்றிருந்தார்கள், இருக்கிறார்கள் என்பது, அவர்களது அரசியலை, விருப்பத்தைக் காட்டுகிறது.
  • அதாவது, பொருளாதார ரீதியில் சம்பளம் பெற்று திருப்தியாக, வசதியாக, 12 ஆண்டுகள் இருந்து வந்திருக்கிறார்கள் வருகிறார்கள், என்று உறுதியாகிறது.
  • ஒவ்வொரு முறையும் பளிச்சென்று ஆடைகள் அணிந்து, ஊடகங்களுக்கு போஸ் கொடுக்கின்ற நிலையில் அவர்களது நிலையும் வெளிப்படுகிறது.
  • M.B.B.S, B.E, B.Tech, Bio-Tech என்றெல்லாம் படித்தவர்களுக்கு அத்தகையத் துறை வேலைகள் கிடைப்பதில்லை. சான்றிதழ் உள்ளது வேலைக்கு உத்திரவாதம் என்பது பொலித்தனம்!
  • இவர்கள் சான்றிதழ்களை வைத்துக் கொண்டு, வேலை கொடு என்று உட்கார்ந்திருந்தால், யாரும் அவர்களை மதிக்க மாட்டார்கள்!
  • சான்றிதழ் வைத்துக் கொண்டு 12 வருடங்களாகக் காத்துக் கிடக்கிறோம் என்பதும், வேறு வேலை செய்கிறோம் என்பதும், வேலை-சம்பளம் இவற்றையும் மீறியதாக உள்ளது.
  • அதாவது, அர்ச்சராக வேண்டும் என்பதில் அரசியல் தான் உள்ளதே தவிர, அதில் உண்மையான பக்தி, சிரத்தை, லயம் முதலியவை இல்லை.
  • அத்தகைய பக்தியுடன் கடவுளிடம் உருகி வேண்டியிருந்தால், நிச்சயம் வேலை கிடைத்திருக்கும். ஆனால், பெரியார் சிலைக்கு மாலை போடுவேன் என்ற ரீதியில் இருந்து வருவது, நாத்திக-இந்து விரோத அரசியலை ஆதரிப்பது புலப்படுகிறது.
  • மேலும், இவர்களை அவ்வாறு ஊக்குவித்து வருவதும் புலனாகிறது. நீதிமன்ற வழக்குகளுக்கு ஆதாரங்களாக, அத்தாட்சியாக தயாரிக்கப் பட்டிருக்கின்றனர்!
  • இவ்வாறு உள்நோக்கத்துடன், நாத்திக அரசியல் செய்யும் இவர்கள் எவ்வாறு ஆகம சாத்திரங்களுக்கு உகந்தவர்களாக இருப்பார்கள்?
  • படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில் என்ற ரீதியில் செயல் பட்டால், ரகளை செய்தால் என்ன செய்ய முடியும்?
  • நாத்திகன், பெரியாரிஸ்ட், திராவிடத்துவ வாதி, இந்து-விரோதி, சான்றிதழ் வைத்துக் கொண்டு அர்ச்சகர் ஆனால், என்னாகும்?

© வேதபிரகாஷ்

11-06-2021


[1] An Ordinance (No. 5 /2006) dated 14.07.2006 followed the aforesaid G.O. seeking to further amend sub-section (2) of Section 55 of the Tamil Nadu Act. The said provision of the Act i.e. Section 55(2), by virtue of the 1971 amendment referred to above and the 2006 Ordinance, read as follows.

“(2) No person shall be entitled to appointment to any vacancy referred to in sub-section (1) merely on the ground that he is next in the line of succession to the last holder of office.” [Change brought about by amendment of S.55(2)] “or on the ground of any custom or usage”. [Change brought about by Ordinance 5/2006).

The Ordinance was replaced by The Tamil Nadu Act No. 15 of 2006 which received the assent of the Governor on 29.08.2006. The Act, however, did not contain the amendment to Section 55 as was made by the Ordinance. In other words, the said amendment brought by the Ordinance was dropped from the Amending Act 15 of 2006.

[2] Supreme Court of India- Adi Saiva Sivachariyargal … vs Govt. Of Tamil Nadu & Anr on 16 December, 2015; Author: ……………….…………………J.

Bench: Ranjan Gogoi, N.V. Ramana

                                             REPORTABLE

                        IN THE SUPREME COURT OF INDIA

                         CIVIL ORIGINAL JURISDICTION

                    WRIT PETITION (CIVIL) NO. 354 OF 2006

ADI SAIVA SIVACHARIYARGAL NALA SANGAM & ORS.                      …PETITIONER (S)

                                   VERSUS

THE GOVERNMENT OF TAMIL NADU & ANR.                             …RESPONDENT (S)

                                    WITH

                          W.P. (C) No. 355 of 2006, W.P. (C) No.383 of 2006 AND   W.P. (C) No. 384 of 2006.

[3] https://indiankanoon.org/doc/143215272/

[4] “Consequently and in the light of the aforesaid discussion, we dispose of all the writ petitions in terms of our findings, observations and directions above reiterating that as held in Seshammal (supra) appointments of Archakas will have to be made in accordance with the Agamas, subject to their due identification as well as their conformity with the Constitutional mandates and principles as discussed above.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் – உண்மை-பொய்மை; தமிழக சட்டம்-அரசிய நிர்ணய சட்டம் மற்றும்  திராவிட கட்சிகளின் இந்துவிரோத வேடங்கள் (1)

ஜூன்11, 2021

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்உண்மைபொய்மை; தமிழக சட்டம்அரசிய நிர்ணய சட்டம் மற்றும்  திராவிட கட்சிகளின் இந்துவிரோத வேடங்கள் (1)

2006ல் திமுக சட்டம்அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்: 2006ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக்கப்படலாம் என்ற சட்டம் இயற்றப்பட்டு, இதற்கென திறக்கப்பட்ட பயிற்சிப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கோவில்களில் தங்கள் நியமனத்திற்காகக் காத்திருக்கின்றனர். அப்படியென்றால் திட்டத்துடன் உறுதியாக இருக்கிறார்கள் என்றாகிறது. தமிழ்நாட்டில் உள்ள இந்துக் கோவில்களில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்க அனுமதிக்கும் வகையில் 2006ஆம் ஆண்டில் இருந்த தி.மு.க. அரசு சட்டம் ஒன்றை இயற்றியது. இதற்கென அரசாணை ஒன்றும் 2006ல் வெளியிடப்பட்டது. அந்த அரசாணையின் அடிப்படையில், நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு அர்ச்சக மாணவர்களின் தகுதி, பாடத்திட்டம், பயிற்சிக் காலம், கோவில்களில் நடைபெறும் பூஜை முறைகள் ஆகியவற்றை ஆராய்ந்து பரிந்துரைகளை அளித்தது. இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் சென்னை பார்த்தசாரதி கோவில், திருவரங்கம் ஆகிய இடங்களில் வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளிகளும் மதுரை, திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர் ஆகிய இடங்களில் சைவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளிகளும் உருவாக்கப்பட்டன.

2007ல் பயிற்சி வகுப்புகள் ஆரம்பம் ஆனது: ரங்கநாதன் என்ற அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவர் ஊடகங்களுக்கு அவ்வப்போது பேட்டி கொடுத்து வருகிறார். அவற்றை வைத்து, ஊடகங்களும், சட்டப்படியுள்ள நிலைமையை எடுத்துக் காட்டாமல், ஏதோ உணர்ச்சிப் பூர்வமாக, ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். “இந்தப் பயிற்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக அரசு விளம்பரம் வெளியிட்டு, நேர்காணல் செய்தபோது ஒவ்வொரு நாளும் நேர்காணலுக்கு 300 பேருக்கு மேல் வந்தனர். இவர்களில் இருந்து ஒவ்வொரு மையத்திற்கும் 40 பேர் வீதம் ஆறு மையங்களுக்குமாக சேர்த்து 240 பேர் பயிற்சிக்காகத் தேர்வுசெய்யப்பட்டனர். இவர்களில் 33 பேர் பயிற்சிக் காலத்தில் விலகிவிட, 207 பேர் முழுமையாக பயிற்சியை முடித்தோம்” என்கிறார் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவரான ரங்கநாதன். “இந்த 240 பேரில் எல்லா ஜாதியினரும் இடம் பெற்றிருந்தனர். இவர்களுக்கான பயிற்சிகள் 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்டது. அடுத்த 13 மாதங்களில் தமிழ் மந்திரங்கள், பூஜை முறைகள், கோவில்களின் பழக்க வழங்கங்கள் ஆகியவை தொடர்ந்து கற்பிக்கப்பட்டன. ஆனால், இந்தப் பயிற்சிகள் நடப்பது எளிதாக இருக்கவில்லை,” என்கிறார் ரங்கநாதன்.

சாதியில் பிரிந்து கிடந்தவர்களுக்கு, சாதி சங்கத்தினர் வகுப்பு எடுக்க மறுத்தது: ரங்கநாதன் சொன்னது, “எங்களுக்கு நேர்காணல்களைச் செய்யும் குழுவில் அதிகாரிகளுடன் பல அர்ச்சகர்களும் இருந்தனர். ஆனால், பயிற்சி என்று வரும்போது அவர்கள் அதற்கு மறுத்துவிட்டனர். தங்களது சங்கத்தினர், மற்ற ஜாதியினருக்கு பயிற்சியளிக்கக்கூடாது என கூறிவிட்டதால் தங்களால் பயிற்சியளிக்க முடியாது என்று தெரிவித்துவிட்டனர். பிறகு பெங்களூரில் இருந்து ராமகிருஷ்ண ஜீவா பிராமணர் சமஸ்கிருதத்தில் பயிற்சியளிக்க வந்தார். அவர் பயிற்சியளிக்க ஆரம்பித்து சில நாட்களிலேயே, அவர் மீது தாக்குதல் நடந்தது. பிறகு அவர் வெளியில் செல்லும்போதெல்லாம் மாணவர்களின் பாதுகாப்புக் கொடுக்கப்பட்டது”. அரசாணைக்கு எதிராக அவர்கள் “மற்ற ஜாதியினருக்கு பயிற்சியளிக்கக்கூடாது,” என்று சொல்லியிருந்தால், அரசோ, கருணாநிதியோ, இப்பொழுது கூவுகின்ற சித்தாந்திகளோ, உடனடியாக, சட்டப் படி நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனல், அரசியல் நிர்ணய சட்டத்திற்கு புறம்பாக வகுப்புகளை விடாப்பிடியாக நடத்த வேண்டிய போக்கில் தான் விவகாரம் இருக்கிறது. கர்நாடகாவை எதிர்த்து வரும் தமிழகர்களுக்கு, பெங்களூரிலிருந்து ஒரு பார்ப்பனர் வர அவசியம் ஏன்? அதிலும் செத்த மொழியில் பயிற்சியளிக்க அவசியம் என்ன? உடனே, அவர்கள் செட்த மொழியில் பாண்டித்யம் பெற்று விடுவார்களா?

கடவுளின் திருவுருவங்களைச் செய்து, தரச் சொன்னது: ரங்கநாதன் சொன்னது, “அதேபோல முறைப்படி பூஜை செய்து பயிற்சி செய்வதற்காக அறநிலையத் துறையிடம் கடவுளின் திருவுருவங்களைச் செய்துதரச் சொன்னோம். அவர்கள் செய்து கொண்டுவரும் வழியில், அதனைத் தடைசெய்தார்கள். பிறகு நாங்களே திருவுருவங்களை செய்துவைத்து பூஜை பயிற்சியைச் செய்தோம். இவ்வளவு தடைகளுக்கு மத்தியில்தான் பயிற்சியை முடித்தோம்,” என்கிறார் ரங்கநாதன். பிள்ளையாரை உடைத்த ஈவேரா சிலைக்கு மாலை போட்டு, ரங்கநாதன் இவ்வாறெல்லாம் 07-06-2021ல் பேட்டிக் கொடுப்பது வேடிக்கைத் தான்! இவர்கள் கடவுள் உருவங்களை உடைப்பார்களா என்று தான் மற்றவர் நினைத்திருப்பர். இரட்டை வேட போட்டுக் கொண்டு, போலித் தனமாக இவர்கள் நடந்து வந்ததும் வெளிப்படுகிறது. அதாவது, முரண்பாடுகளுடன், அரைகுறையாகத் தான் இவர்கள் பயின்றுள்ளார்கள். உண்மையில் பூசாரி / அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் கற்கவில்லை என்பது தெரிகிறது. எப்படியாவது, கோவில்களுக்குள் நுழைந்து விடவேண்டும் என்ற வெறித்தான் தெரிகிறது. சிலைகளை உடைத்த ஈவேராவைப் போற்றி, இவர்கள் கோவில்களுக்கு என்ன செய்யப் போகிறார்கள்?

ஆதி சிவாச்சாரியார்கள் சங்கம் நீதிமன்றத்தை அணுகி, பணி நியமனத்திற்கு தடை உத்தரவைப் பெற்றது: ரங்கநாதன் தொடர்ந்து சொன்னது, “ஆனால், இதற்குள் இது தொடர்பாக மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள ஆதி சிவாச்சாரியார்கள் சங்கம் நீதிமன்றத்தை அணுகி, பணி நியமனத்திற்கு தடை உத்தரவைப் பெற்றது. பயிற்சி பெற்ற மாணவர்கள் 2008ஆம் தீட்சையை முடித்துவிட்ட நிலையில், இவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஆனால், வழக்கின் முடிவின் அடிப்படையில்தான் பணி நியமனங்கள் இருக்குமெனத் தெரிவிக்கப்பட்டது”. பிறகு சங்கம் மேல் முறையீட்டிக்கு செல்வது தானா? ரங்கநாதன் சொன்னது, “இந்த நிலையில், 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி பயிற்சி பெற்ற மாணவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதற்கு இந்து அமைப்புகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன,: இந்த சமயத்தில் பயிற்சிபெற்ற மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் நடந்ததாகக் கூறுகிறார் ரங்கநாதன். கடவுளுக்கு பூஜை செய்யப் படித்தவர்கள், கோவிலுக்குள் சென்று முறைப் படி, மாலையை கடவுளுக்குப் போட்டிருக்கலாமே? இதிலிருந்தே, இவர்கள் திக-திமுக ஆட்கள் என்று தெரிகிறது.

2015ஆம் ஆண்டு டிசம்பர் மாத மத்தியில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பளித்தது: ரங்கநாதன் தொடர்ந்து சொன்னது, 2011ல் புதிதாகப் பதவியேற்ற அ.தி.மு.க. அரசு இந்த விவகாரத்தில் பெரிதாக ஆர்வம்காட்டவில்லை. இதற்குப் பிறகு கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாத மத்தியில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பளித்தது. “தமிழக கோவில்களில் ஆகமவிதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்கும் மரபு உள்ள இடங்களில் அதே முறைப்படி நியமிக்க வேண்டுமென்றும் ஆகம விதிகளின் கீழ் அர்ச்சகர் நியமனங்கள் நடக்கும்போது, பாதிக்கப்படுபவர்கள் நீதிமன்றங்களை அணுகி, தனித்தனியாக நிவாரணம் கோர வேண்டுமென்றும்,” உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தெரிவித்தது. ஆனால், இந்தத் தீர்ப்பின் மூலம் எல்லா ஜாதியைச் சேர்ந்தவர்களும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாமா என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தவில்லையென அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் கருதினர். தமிழ்நாடு அரசும் இது தொடர்பாக தன்னுடைய நிலைபாடு எதையும் தெரிவிக்கவில்லை”. அதாவது, சட்டநிலை அறிந்து விட்டதால், உள்ள பிரச்சினைகளுடன், இதையும் ஒரு தேவையற்றப் பிரச்சினை ஆக்க விரும்பவில்லை என்று அமைதியாக இருந்தார்கள் எனலாம்.

இரு கோவில்களில் பயிற்சி பெற்ற மாணவர்கள் அர்ச்சகராக நியமிக்கப் பட்டது: ரங்கநாதன் தொடர்ந்து சொன்னது, “இந்த நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டில் மதுரையில் அழகர் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு சிறிய ஐயப்பன் கோவிலில் மாரிமுத்து என்ற பயிற்சிபெற்ற மாணவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார். ஆனால், இது தொடர்பான அறிவிப்பு எதையும் இந்து சமய அறநிலையத் துறை வெளியிடவில்லை. இதற்குப் பிறகு 2020ஆம் ஆண்டில் மதுரை நாகமலைப் புதுக்கோட்டையில் உள்ள பிள்ளையார் கோவில் ஒன்றில் தியாகராஜன் என்ற பயிற்சி பெற்ற மாணவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். “பயிற்சி பெற்ற 207 பேரில் 2 பேர் சிறிய கோவில்களில் பணிவாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். ஐந்து பேர் இறந்து போய்விட்டனர். மீதமுள்ள 200 பேரில் 4 பேருக்கு வேறு அரசு வேலைகள் கிடைத்திருக்கின்றன. மீதமுள்ள 196 பேர் தொடர்ந்து இதற்காகப் போராடிவருகிறோம்,” என்கிறார் ரங்கநாதன். அதாவது, உச்சநீதி மன்ற தீர்ப்பின் படி, இந்த இருவருக்கு பணி நியமனம் கொடுக்கப் பட்டது தெரிகிறது.  அரசியல் ரீதியில் நாளைக்கு என்ன செய்தீர்கள் என்று கேட்டால், இருவருக்கு பணி  கொடுத்து விட்டோம், மற்றவர்கள் ஒரு மாதிரியாக செயல்பட்டு வருவதால், பரிசீலித்து வருகிறோம் என்று சொல்லி முடிக்க தோதுவாக செய்துள்ளனர் எனலாம்.

© வேதபிரகாஷ்

11-06-2021

குங்குமம் வைத்தவர்களைத் திட்டி, கஞ்சிகுடித்து, மஞ்சள் சைக்கிள்களை பண்டார-பரதேசிகளுக்குக் கொடுப்பது பிராயச்சித்தமா, தேர்தல் யுக்தியா?

ஒக்ரோபர்19, 2010

குங்குமம் வைத்தவர்களைத் திட்டி, கஞ்சிகுடித்து, மஞ்சள் சைக்கிள்களை பண்டார-பரதேசிகளுக்குக் கொடுப்பது பிராயச்சித்தமா, தேர்தல் யுக்தியா?

பண்டாரப்பரதேசிகளின் வெட்கமற்ற செயல்: கோவில்களில் பணியாற்றும், 10 ஆயிரம் பண்டார-பரதேசிகளுக்கு / அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு, இரண்டு கோடியே 78 லட்ச ரூபாய் செலவில், இலவச சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தை, முதல்வர் கருணாநிதி / இந்து விரோதி கருணாநிதி துவக்கி வைத்தார்[1]. பண்டாரப்பரதேசிகளும் வெட்கம் இல்லாமக் குழைக்குபிடு போட்டு தள்ளிக் கொண்டு போயினர். பகுத்தறிவு என்று இந்த பரதேசிகளுக்கு, பண்டாரங்களுக்கு ஏனில்லை என்று தெரியவில்லை! மேலும் இவர்கள் எல்லோரும் இந்துக்களா இல்லையா என்ற சந்தேகமும் வருகிறது!

இவ்வாறு கோவில் பூஜாரிகள் தன்மானம் இல்லாமல், கொடுப்பதை வாங்கிக் கொண்டு செல்கின்ற நிலையில் இருக்கின்றதால், இவர்கள் எல்லோருமே பூசாரிகளா அல்லது இந்து விரோதிகளா என்ற ஐயமும் எழுகின்றது.

ஒருகால பூஜை என்று கோவிலுக்குரிய சொத்துக்களை அபகரித்து போடும் நாடகம்: கோவிலுக்குரிய சொத்துக்கள் இருந்தால், கோவிலில் ஏன் ஒருகால பூஜை நடக்கவேண்டும் என்றரியாத பேதைகள். தமிழக அரசின், ஒரு கால பூஜைத் திட்டத்தில் நிதியுதவி பெறும் கோவில்கள் பெரும்பாலும், கிராமங்களில் உள்ளன. இக்கோவில்களின் அர்ச்சகர்கள், பூசாரிகள் குறித்த நேரத்தில் கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்ய ஏதுவாக, அவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுமென, சட்டசபையில் இந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்தது.

அடையாளமாக இலவசமா, இலவசமாகக் கொள்ளையா? இந்த அறிவிப்பை செயல்படுத்த, தமிழகம் முழுவதும், 10 ஆயிரம் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு, இரண்டு கோடியே 78 லட்ச ரூபாய் செலவில் இலவச சைக்கிள்கள் வழங்க, முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, 10 ஆயிரம் சைக்கிள்கள் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகம் முழுவதும் உள்ள அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு இலவசமாக வழங்கும் திட்டத்தை, முதல்வர் கருணாநிதி நேற்று பு‌னித ஜா‌ர்‌‌ஜ் கோ‌ட்டை‌யி‌ல் நடைபெ‌ற்ற ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் முத‌ல் பயனா‌ளி‌யிட‌‌ம் அவ‌ர் சை‌க்‌கிளை வழ‌ங்‌கினார். இதற்காக தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த விழாவில், அடையாளமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த, 200 பேருக்கு, முதல்வர் கருணாநிதி, சைக்கிள்களை வழங்கி, வாழ்த்தினார்.

கோவில்களை முழுவதுமாக அழித்துவிட இந்து விரோதிகள் போட்ட திட்டம் நன்றாகவே வேலை செய்ய ஆரம்பித்து விட்டது என்பது தெரிகின்றது. யார் வேண்டுமானாலும் பூசாரி ஆகலாம் என்ற தத்துவம் நன்றாகவே வைசெய்கிறது போலிருக்கிறது. இவ்வாறு இந்து-விரோதிகளே பூசாரிகளாக நுழைந்து விட்ட பிறகு, வெளியிலிருந்து எந்த ஔரங்கசீப்பும், மாலிக்காபூரும் வரத்தேவையில்லை!

ஆயுத பூஜையில் பெரியார் கரடிகள் புகுந்த போது, இந்த நாத்திக அரசன் மணி அணித்துக் கொண்டிருந்தானா? ஒரு பூசாரி சொல்கிறார்[2], “ஊர் ஊராகச் சென்று பூசை செய்வதற்கக வசதியாக இருக்குமாம்”! நாத்திக ஆட்சியிலேயே, கோவில்கள் இடிக்கப்படுகின்றன, விக்கிரங்கள் திருடப்படுகின்றன, சிலைகள் கடத்தப்படுகின்றன, உலோகமாக எது இருந்தாலும் திருடப்படுகிறது, கோவில் நிலைத்தை அரசே பட்டாப்போட்டு விற்க்கிறது,…………இந்நிலையில் பண்டாரங்களுக்கு மஞ்சள் சைக்கிள் கொடுக்கும் மர்மம் என்ன? அவர்கள் பூஜை செய்ய போவார்களா அல்லது கரடிகளுடன் சேர்ந்து கொண்டு உள்ளவற்றையும் கொள்ளையெடுத்துக் கொண்டு போவார்களா?


[1]தினமலர், அர்ச்சகர்களுக்கு இலவச சைக்கிள் திட்டம் : முதல்வர் துவக்கி வைத்தார், அக்டோபர் 18,2010,  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=108963