Archive for the ‘மனித மலம்’ Category

திராவிடநாடு எதற்காக மனிதமலத்தை அள்ள ஊக்குவிக்கிறது?

திசெம்பர்25, 2009
திராவிடநாடு எதற்காக மனிதமலத்தை அள்ள ஊக்குவிக்கிறது?
கருணாநிதி இந்த பிரச்சினையை அரசியலாக்க முனைந்தபோது, அதன் விஷமத்தை எடுத்துக் காட்டி இவ்வாறு எழுதியிருந்தேன்:
ஆனால், பிரச்சினை இப்படிக்கூட வரலாம் என்று இப்பொழுது தெறியவருகின்றது:
ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் மனிதக் கழிவு? ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகள் கைது
டிசம்பர் 25,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=14939

திருச்சி: மனித கழிவுகளை மனிதனே அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஸ்வாமி கோவிலுக்குள் வாளியில் மலம் எடுத்துச் சென்ற ஆதித்தமிழர் பேரவையை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஸ்வாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, தற்போது பகல்பத்து நிகழ்ச்சி நடந்து வருகிறது.

தமிழகம் மட்டுமன்றி வெளிமாநிலங்களில் இருந்து ஸ்வாமியை தரிசனம் செய்ய நாள்தோறும் ஏராளமானோர் வருவதால் கோவில் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்துடன், கடும் சோதனைக்கு பிறகே பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.நேற்று காலை 11 மணியளவில் இரு வாலிபர்கள் வாளி ஒன்றை எடுத்துச் சென்றனர். இவர்கள் கொண்டு சென்ற வாளியில் இருந்து கடுமையான நாற்றம் வீசவே, கோவிலுக்கு வந்த பக்தர்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாரிடம் தகவல் தெரிவித்தனர்.

விரைந்து சென்ற போலீஸார், வாளியுடன் சென்ற வாலிபர்களை பிடித்து சோதனை செய்தனர். வாளியில் மலம் இருந்தது தெரியவந்தது.இதையடுத்து இருவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், கோட்டை ரயில்வே காலனியை சேர்ந்த குப்புசாமி மகன் சோழன்(30), பாலக்கரை ஜெயிலர் பேட்டையை சேர்ந்த மலர்மன்னன்(34) என்பதும், இருவரும் ஆதித்தமிழர் பேரவையை சேர்ந்தவர்கள் என்பதும், மனிதக் கழிவுகளை மனிதனே அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கோவிலுக்குள் மலம் எடுத்து வந்ததாகக் கூறினர்.உடனடியாக கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆகஸ்டு மாதம் 2008 மத்திய தேசிய துப்புரவுப் பணியாளர் கமிஷனின் தலைவர் சந்தோஷ் சவுத்ரி தமிழகத்திற்கு வந்திருந்தபோது, மத்திய அரசு கொடுத்த பணம் மற்றும் மானியத்தை சரியாக செலவிடவில்லை மற்றும் பட்டுவாடா செய்யப்படவில்லை என்று எடுத்துக் காட்டினார். குறிப்பாக, “மனித மலத்தை அள்ளும் துப்புரவுத் தொழிலாளர் மேம்பாட்டிற்காக, மத்திய அரசு 57 கோடியே 80 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தது. அதில், 24 கோடியே 52 லட்சம் ரூபாய் மட்டும் மாநில அரசு செலவிட்டுள்ளது; 33 கோடியே 28 லட்சம் ரூபாய் செலவிடப்படாமல் உள்ளது. இது தவிர, இந்த ஆண்டு தமிழகத்திற்காக 21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதுவும் செலவிடப்படாமல் மொத்தம் 54 கோடியே 28 லட்சம் ரூபாய் செலவிடப்படவில்லை“, என்றும் எடுத்துக் காட்டினார். அன்றையிலிருந்துதான் அவருக்கு “அருந்ததியரின்”மிது மோகம் வந்தது! இருப்பினும், அவர்தான் எல்லாவற்றிற்கும் பதில் சொல்வதற்கு திறமையானர் தானே?

இதோ பதில்!

துப்புரவு பணியாளர் கமிஷன் குற்றச்சாட்டு : உண்மையில்லை என முதல்வர் மறுப்பு

ஆகஸ்ட் 24,2008,00:00 IST
http://www.dinamalar.com/Arasiyalnewsdetail.asp?News_id=3257&cls=row3&nc at=TN

சென்னை : “மத்திய தேசிய துப்புரவுப் பணியாளர் கமிஷனின் தலைவர் சந்தோஷ் சவுத்ரியின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை; பொறுப்புள்ள பதவிகளில் இருப்பவர்கள் பொறுப்புடன் பேசுவது தான் முறை’ என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை: “மனித மலத்தை அள்ளும் துப்புரவுத் தொழிலாளர் மேம்பாட்டிற்காக, மத்திய அரசு 57 கோடியே 80 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தது. அதில், 24 கோடியே 52 லட்சம் ரூபாய் மட்டும் மாநில அரசு செலவிட்டுள்ளது; 33 கோடியே 28 லட்சம் ரூபாய் செலவிடப்படாமல் உள்ளது. இது தவிர, இந்த ஆண்டு தமிழகத்திற்காக 21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதுவும் செலவிடப்படாமல் மொத்தம் 54 கோடியே 28 லட்சம் ரூபாய் செலவிடப்படவில்லை’ என்று மத்திய தேசிய துப்புரவுப் பணியாளர் கமிஷனின் தலைவர் சந்தோஷ் சவுத்ரி குறை கூறியுள்ளார். தமிழகத்திற்காக 57 கோடியே 80 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தது ஓராண்டுக்கானதல்ல. 1992ம் ஆண்டிலிருந்து 2007-08ம் ஆண்டு வரை இத்திட்டத்தின் கீழ் தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த தொகை. இந்த ஒதுக்கீட்டில் 24 கோடியே 52 லட்சம் ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டதாகக் கூறுவது தவறான புள்ளிவிவரம். தி.மு.க., ஆட்சி நடைபெறும் காலங்களில் எல்லாம் இத்திட்டத்தில் சிறப்பான முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. பொறுப்புள்ள பதவிகளில் இருப்பவர்கள் பொறுப்புடன் பேசுவது தான் முறை. இவ்வாறு முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்