Archive for the ‘குங்குமம்’ Category

பிள்ளையார் சிலை உடைப்பு, சனாதன ஒழிப்பு, நவராத்திரி விழா துவக்கம் – திராவிட ஆட்சியில், திராவிட ஸ்டாக்குகளின், திராவிட மாடலா, அழிப்பு திட்டமா?

ஒக்ரோபர்17, 2023

பிள்ளையார் சிலை உடைப்பு, சனாதன ஒழிப்பு, நவராத்திரி விழா துவக்கம் – திராவிட ஆட்சியில், திராவிட ஸ்டாக்குகளின், திராவிட மாடலா, அழிப்பு திட்டமா?

பிள்ளையார் சிலை உடைப்பு முதல், “சனாதன ஒழிப்பு” மாநாடு வரை: பிள்ளையார் சிலைகள் தமிழகத்தில் உடைக்கப் பட்டிருக்கின்றன; ராமர் படங்களுக்கு செருப்பு மாலைகள் பாடப் பட்டிருக்கின்றன; சிவ-முருக தூஷ்ணங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன; திக வகையறாக்களின் இந்துவிரோத வெறுப்பு-காழ்ப்பு பேச்சுகள், எழுத்துகள், கோஷங்கள் ஆர்பாட்டங்கள், ஊர்வலங்கள் தொடர்கின்றன; கருப்புப் பரிவார் கும்பலில் திக-திமுக என்று எல்லா கோஷ்டிகளும் ஒன்றாகத் தான் வேலை செய்து வருகின்றன. அதில் கிருத்துவ-துலுக்க-கம்யூனிஸ்ட் இந்துவிரோதிகளும் அடக்கம், அது தான், இப்பொழுதைய “சனாதன ஒழிப்பு” மாநாட்டிலும் வெளிப்பட்டுள்ளது. இப்பொழுது, இவர்களது குரூர முகம் இந்தியா முழுவதும் தெரிந்து விட்டது. பிள்ளையார் சிலை உடைப்பு, சனாதன ஒழிப்பு, நவராத்திரி விழா துவக்கம் – திராவிட ஆட்சியில், திராவிட ஸ்டாக்குகளின், திராவிட மாடலா அழிப்பு திட்டமா? இப்படியெல்லாம் ஒரு அப்பாவியான, சாதுவான, பயந்தாங்கொள்ளி இந்துக்களுக்கு சந்தேகம் வருகிறது!

திமுக ஆட்சியில் நவராத்திரி கொலு நடப்பது: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மகா சிவராத்திரி பெருவிழா பக்தர்கள் பங்கேற்புடன் விமரிசையாக நடத்தப்பட்டது[1]. அந்த வகையில், உலகில் தீமைகளை அழித்து தர்மத்தை நிலை நாட்டுகின்ற சக்தி வழிபாட்டின் தத்துவங்களை உணர்த்துகின்ற தொடர் நிகழ்வாக கொண்டாடப்படும் நவராத்திரி பெருவிழா இந்த ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கோவில்கள் சார்பில் சென்னை, மயிலாப்பூர், கபாலீசுவரர் திருமண மண்டபத்தில் கொலுவுடன் 14-10-2023 அன்று தொடங்கியது[2]. ஹிமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இந்து அறநிலையத் துறை, அதன் மந்திரி மற்ற அதிகாரிகள் அதிகமாகவே செயல்படுவது போல காண்பித்துக் கொல்கிறார்கள். முதல்வர் வழக்கம் போல பெரியாரிஸ-நாத்திக-இந்துவிரோத பாணியில் கிருத்துவ-முஸ்லிம் கூட்டங்களில் கலந்து கொள்ளும் நிலையில், மகன் சமீபத்தில் “சனாதனத்தை ஒழிப்போம்,” என்று பேசி மாட்டிக் கொண்டுள்ளார். வழக்குகளும் நிலுவையில் உளளது. இந்து அறநிலையத் துறைறாமைச்சர் சேகர் பாபு, “அல்லேலூயா” என்று கோஷம் எல்லாம் போட்டுள்ளதை மக்கள் அரிவர். இப்பொழுது, நவராத்திரி கொலு என்று அதிலும் இந்த திராவிடக் கூட்டத்தினர் நுழைந்துள்ளனர்ர்.

இந்த விழா வருகிற 24-ந் தேதி வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது, இப்படி ஊடகங்கள் குறிப்பிடுவது தமாஷான விசயம் தான். ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக நடக்கும் இதைப் பற்றி இவர்கள் சொல்லித் தானா தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது, அவை-அவர்கள் இல்லாத காலங்களில் மக்களால் கொண்டாடப் பட்டு வந்த விழாக்கள்-பண்டிகைகள் இவை. விழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்[3]. அவருடன் அவரது உறவினரும் வந்திருந்தனர்[4]. சந்நிதி-சந்ந்தியாக எல்வதும், சாமி கும்பிடுவதும், அர்ச்சகர் பூஜை செய்து பிரசாதம் கொடுப்பதும், அதனை அவர் பவ்யமாக வாங்கிக் கொள்வதும்……..வீடியோக்களில் பதிவாகியுள்ளன. தலையில் தெளித்துக் கொண்டு, பரவசமாக கைகூப்பிக்கும்பிடுவதும் தெரிகிறது. தனிப்பட்ட முறையில் அந்த அம்மணி செய்வதை எதிர்க்கவில்லை என்றாலும், அவரது கணவரின் இந்துவிரோதம் மற்றும் அந்த அமைச்சர் முதலிய கும்பலுடன் செய்வது நிச்சயமாக இந்துக்களுக்கு எதையோ உண்டாக்குகிறது. கொலுவை பார்வையிட்டதோடு, சகலகலாவல்லி மாலை பூஜையில் கலந்து கொண்டார்[5]. பிறகு, மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களையும் வழங்கினார்[6]. அப்போது எடுத்த புகைப்படங்களை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தன் ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த சுய-விளம்பரம் ஏன் என்று புரியவில்லை.

நிறைவாக, மாம்பலம் சகோதரிகள் ஆர்.விஜயலட்சுமி மற்றும் ஆர்.சித்ரா இசை நிகழ்ச்சி நடைபெற்றது[7]. விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், எம்.எல்.ஏ. மயிலை த.வேலு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் அ.சங்கர், ந.திருமகள், சி.ஹரிப்ரியா, இணை ஆணையர்கள் கி.ரேணுகாதேவி, ஜ.முல்லை மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்[8]. இதில் திருமகள் ஏற்கெனவே கைதாகியுள்ளார். மற்ற அறந் இலைத் துறை அதிகாரிகளின் மீதும் ஊழல் போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்நிலையில் அத்தகைய அதிகாரிகளும் இதில் கலந்து கொள்வதும் வருத்தமாக இருக்கிறது. உண்மையில் அவர்களுக்கே மனசாட்சி இருக்க வேண்டும்.

நவராத்திரி விழாவையொட்டி தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது[9]. இதேபோல் வடபழனி முருகன் கோவிலிலும் நேற்று நவராத்திரி விழா கொலுவுடன் தொடங்கியது[10]. ‘சக்தி கொலு’ எனும் பெயரில் அமைக்கப்பட்ட பிரமாண்ட கொலுவை உபயதாரர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்[11]. நவராத்திரி விழா 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது[12]. விழாவையொட்டி, அம்மன் கொலு சன்னதியில் காலை 11 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை சிறப்பு பூஜை, தீபாராதனை நடத்தப்படுகிறது. கொலுவை பக்தர்கள் காலை 6.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்வையிடலாம். நவராத்திரியின் நிறைவு நாளான 24-ந் தேதி, விஜயதசமி அன்று வித்யாரம்பம் எனும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இத்ற்கெல்லாம் செலவு எப்படி, யார் செய்கிறார்கள் என்பதும் கவனிக்கத் தக்கது. 

ஒரு இந்துவின் பணிவான வேண்டுகோள்!!!: கடந்த 70-100 ஆண்டுகளாக தமிழகத்தில் திராவிட, திராவிடத்துவ, ஈவேராயிஸ, பெரியாரிஸ, பகுத்தறிவு, நாத்திக, இந்துவிரோத பேச்சுகள், எழுத்துகள், கோஷங்கள், தாக்குதல், என்று எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்கும் எந்த இந்துவும் இதைப் பார்த்து, மகிழ்சியடைய மாட்டான்,  மாறாக, ஒருவேளை பயப்படலாம்! சனாத ஒழிப்பு கோஷங்களுக்குப்பிறகு, இவ்வாறு நடப்பது, இந்துக்களுக்கு அந்தேகமும், அச்சமும் ஏற்படுகிறது. இந்துக்களைத் தொடர்ந்து தூஷித்து வரும் இவர்கள், விலகி இருப்பதே சாலச் சிறந்தது! கோவில்களில் அரசியல் செய்ய வேண்டாம்!! இந்து அறநிலையத்துறை என்று கூடக் குறிப்பிடத் தயங்கும் நிலையிலுள்ள, ஏற்கெனவே ஊழல் புகார், வழக்குகளில் சிக்கியவர்கள், .தார்மீக ரீதியில், இத்தகைய புனித பண்டிகைகளில் கலந்து கொள்ளாமல் இருந்தாலே
இந்துக்கள் நிம்மதியாக இருப்பார்கள்.

© வேதபிரகாஷ்

16-10-2023


[1] தினத்தந்தி, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் நவராத்திரி பெருவிழா, தினத்தந்தி அக்டோபர் 16, 9:55 am.

[2] https://www.dailythanthi.com/News/State/navratri-festival-at-kapaleeswarar-temple-mylapore-1073802

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், மயிலாப்பூரில் அறநிலையத் துறை சார்பில் நவராத்திரி கொலு: தொடங்கி வைத்த துர்கா ஸ்டாலின், WebDesk, Oct 16, 2023 12:11 IST.

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-durga-stalin-inaugurates-navratri-golu-festival-1559174

[5] தினமலர், பெண்கள், பள்ளி மாணவர்களை கவர்ந்த நவராத்திரி கொலு, மாற்றம் செய்த நாள்: அக் 16,2023 01:50…; https://m.dinamalar.com/detail.php?id=3458514

[6] https://m.dinamalar.com/detail.php?id=3458514

[7] தமிழ்.ஒன்.இந்தியா, நவராத்திரி.. ராஜ்பவனில் கொலு.. மயிலாப்பூரில் சக்தியை பார்த்து பூரித்துப்போன துர்கா ஸ்டாலின், By Jeyalakshmi C Updated: Monday, October 16, 2023, 8:38 [IST].

[8] https://tamil.oneindia.com/spirtuality/navaratri-kolu-at-raj-bhavan-laxmi-ravi-performed-navaratri-puja-durga-stalin-lighting-the-lamp-at-m-548553.html?story=2

[9] தமிழ்.ஒன்.இந்தியா, மயிலாப்பூரில் நவராத்திரி கோலாகலம்.. 10 நாட்கள் கொலு வைத்து கொண்டாடும் இந்து சமய அறநிலையத்துறை, By Jeyalakshmi C Updated: Sunday, October 15, 2023, 14:56 [IST].

[10] https://tamil.oneindia.com/news/chennai/10-days-navratri-festival-organized-by-hindu-religious-charities-department-in-mylapore-says-ministe-548393.html

[11] குற்றம்.குற்றமே, நவராத்திரி விழாவை தொடங்கி வைத்த முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின்..!, Web Desk, October 16, 2023 .

[12]  https://www.kuttramkuttrame.com/2023/10/16/chief-ministers-wife-durga-stalin-started-the-navratri-festival/

சாத்தான் வேதம் ஓதும், பேய்கள் ஆட்சி செய்யும், சாத்திரங்கள் பிணங்கள் தின்னும், குங்குமம்-விபூதி அழித்தவர்கள் பக்தி புத்தகங்கள் வெளியிடுவார்கள்! (1)

ஜனவரி20, 2023

சாத்தான் வேதம் ஓதும், பேய்கள் ஆட்சி செய்யும், சாத்திரங்கள் பிணங்கள் தின்னும், குங்குமம்விபூதி அழித்தவர்கள் பக்தி புத்தகங்கள் வெளியிடுவார்கள்! (1)

படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில் என்பது திராவிடியன் மாடலா?: சிவபுராணம், கந்தப் புராணக் கதை, பதினெண் புராணங்கள் இவையெல்லாம் ஸ்டாலின் வெளியிட்டார் என்பதை நம்புகிறீர்களா? ஆனால், நடந்திருக்கிறது என்பது, சென்னையில் அதிசயமான நிகழ்வு எனலாம். திமுகவினர் இந்து அறநிலையத் துறையை வைத்துக் கொண்டு விளையாடுகின்றனர் என்று தெரிகிறது. அதனால், அது இந்துக்களுக்கு ஆபத்தாகவும் போகலாம். இந்து மதம், நம்பிக்கைகள், பண்டிகைகள் என்றாலே, அவதூறு, ஆபாசம், தூஷணம் என்று செய்தும், வக்கிரத்துடன் தூற்றும் இவர்களுக்கு, ஏன் இத்தகைய முரண்பாடுகளை செய்து வருகின்றனர் என்று தான் கவனிக்க வேண்டியுள்ளது. ஸ்டாலின் மனைவி துர்கா கோவில் விஜயங்கள் செய்வது, பூஜை அறை வைத்திருப்பது, பூஜைகள் செய்வது, முதலியவை தொடர்ந்தாலும், ஸ்டாலினின் இந்துவிரோத நாத்திகம் மாறாமல் தான் உள்ளது. அந்நிலையில் இந்த விழாக்கள் எல்லாமே அறநிலையத்துறைக்கு செலவு தான். லட்சக்கணக்கில் செலவைக் காட்டப் போகிறார்கள். ஆனால், எல்லாமே, இவர்களது நாடகங்களுக்கு, விளம்பரங்களுக்கு பிரச்சாரங்களுக்கு உபயோகப் படுகின்றன. படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில் என்பது திராவிடியன் மாடல் போலும்!

அறநிலையத்துறையில் அதீத ஈடுபாடு கொள்ளும் திமுக: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த ஆண்டு 2022ல் நடந்த இந்து அறநிலையத்துறை ஆலோசனைக்குழு கூட்டத்தில் –

  • இந்து அறநிலையத்துறை கோவில்களின் தலவரலாறு,
  • தலபுராணங்கள்,
  • கோவில் தொடர்பான ஆகமங்கள் –
  • ஆகியவற்றை ஆவணப்படுத்தி தமிழில் புத்தகமாக வெளியிடுதல், நாட்டுடைமையாக்கப்பட்ட பக்தி இலக்கியங்கள்,
  • பழமையான அரிய நூல்கள்,
  • கோவில் கட்டிடக்கலை,
  • செந்தமிழ் இலக்கியங்களை மறுபதிப்பு செய்வதுடன், புதிய சமய நூல்கள் மற்றும்
  • கோவில்களில் கண்டறியப்படும் பழமையான ஓலைச்சுவடிகளை திரட்டி நூலாக்கம் செய்திடவும்,
  • அந்த நூல்களை கோவில்கள் மற்றும் மடங்கள் வாயிலாக பக்தர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்திடவும் தீர்மானிக்கப்பட்டது[1].

அதன்படி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் பதிப்பகப்பிரிவு புதிதாக தொடங்கப்பட்டது[2]. இதன்மூலம் முதற்கட்டமாக, தமிழ் மொழி வல்லுனர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருப்பாவை, திருவெம்பாவை, அபிராமி அந்தாதி, நாலாயிர திவ்யபிரபந்தம், தமிழகக் கலைகள், சைவமும் தமிழும், இந்தியக் கட்டிடக் கலை வரலாறு, அவ்வையார் வரலாறு, பதினெண் புராணங்கள் உள்ளிட்ட 108 அரிய நூல்கள் மறுபதிப்பு செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் நூலாக்கம் செய்யப்பட்டுள்ளது[3]. திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே, அறநிலையத் துறையில் கொள்ளும் அதீத ஈடுபாடு, ஆர்வம் முதலியவை திகைப்பாக இருக்கிறது. இப்பொழுது, பக்தி புத்தகங்களை ஸ்டாலின் வெளியிடும் வரைக்கு வந்துள்ளது.

ஊடகங்கள் வர்ணித்துத் தள்ளின……….

செய்திகள் முழுவதும் ஸ்டாலின் மயம் தான்…….

நாத்திகபெரியாரிஸ, திராவிடயன் ஸ்டாக் ஸ்டாலின் இப்புத்தகங்களை வெளியிடும் ரகசியம், அர்த்தம் அல்லது தேவை என்ன?: புத்தகக் கண்காட்சி எல்லாம் நடந்து முடிந்துள்ள வேளையில், இப்புத்தகங்கள் ஏன் இப்பொழுது வெளியிடப் பட்டு, விழா நடத்துகின்றனர் என்பது வியப்பாக இருக்கிறது. ஜீயர்-மடாதிபதிகள் முதலியோரை வைத்து அல்லது வரவழைத்து, நாத்திக-பெரியாரிஸ குறிப்பாக இந்துவிரோத சித்தந்தம் கொண்ட அரசியல்வாதியை வைத்து நடத்த வேண்டிய அவசியம், கட்டாயம் மற்றும் தேவை என்னவென்றும் தெரியவில்லை. இதை திமுகத் தலைவர், “திராவியன் ஸ்டாக்” என்று மார் தட்டி பேசும் ஸ்டாலின், ஏன் ஒப்புக் கொண்டு அல்லது தீர்மானமாக கலந்து கொண்டு அத்தகைய தனக்குத் தேவையில்லாத புத்தகங்களை வெளியிட்டார் என்பதும் புதிராக உள்ளது[4]. இந்த புத்தக வெளியீட்டு விழா நுங்கம்பாக்கம் இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 9-01-2023 அன்று நடந்தது[5]. அதாவது, அந்த இடம் தேர்ந்தெடுக்கப் பட்டது என்று தெரிகிறது. சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன் வரவேற்றார்[6]. சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புத்தக விற்பனை நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்[7]. பின்னர், இந்து சமய அறநிலையத்துறையின் பதிப்பகப் பிரிவின் மூலம் மறுபதிப்பு செய்து புதுப்பொலிவுடன் நூலாக்கம் செய்யப்பட்டுள்ள 108 அரிய பக்தி நூல்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்[8].

ஓலைச் சுவடிகள்கண்டறியப் பட்டனவாஅல்லது ஏற்கெனவே இருந்தனவா?: அதனைத் தொடர்ந்து, 9 திருக்கோயில்களில் கண்டறிப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள 61, 600 சுருணை ஓலைகள், 10 செப்புப் பட்டயங்கள் மற்றும் 20 பிற ஓலைச்சுவடிகளையும், அவற்றை பராமரித்துப் பாதுகாக்கும் பணிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்[9]. பல்வேறு கோவில்களில் கண்டறியப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுருணை ஓலைகள், செப்புப் பட்டயங்கள் மற்றும் பிற ஓலைச்சுவடிகளையும், அவற்றை பராமரித்து பாதுகாக்கும் பணிகளையும், ஆணையர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது[10]. திடீரென்று, “கண்டறியப்பட்டு” என்று குறிப்பிடுவதும் விசித்திரமாக இருக்கிறது. அப்படியென்றால், இவற்றைப் பற்ரிய செய்திகள் வராதது நோக்கத் தக்கது. உண்மையில், பல ஓலைச் சுவடிகள் சரஸ்வதி மஹால் போன்ற ஊலகங்களிலிருந்து காணாமல் போனது, என்று தான் செய்திகள் வந்துள்ளன. செயல்பட்டு வரும் பதிப்பக பிரிவும் பல்லாண்டுகளாக உள்ளது. ரூ.15 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டிட பணி தொடர்கிறது[11]. இவற்றை எண்மியப்படுத்தி நூலாக்கம் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று இந்து சமய அறநிலையத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்ககப்பட்டு உள்ளது[12].

© வேதபிரகாஷ்

20-01-2023


[1] தினத்தந்தி, 108 பக்தி நூல்கள் புதுப்பொலிவுடன் மறுபதிப்பு: முதல்அமைச்சர் மு..ஸ்டாலின் வெளியிட்டார், தினத்தந்தி ஜனவரி 20, 5:43 am

[2] https://www.dailythanthi.com/News/State/108-bhakti-texts-reprinted-with-new-editions-published-by-prime-minister-mkstalin-882191

[3] மாலைமலர், தேவாரம், திருவாசகம், திருப்புகழ் உள்ளிட்ட 108 அரிய பக்தி நூல்களை முதலமைச்சர் வெளியிட்டார், By மாலை மலர்19 ஜனவரி 2023 3:29 PM.

தினத்தந்தி, மறுபதிப்பு செய்யப்பட்டுள்ள 108 அரிய பக்தி நூல்களை முதல்அமைச்சர் மு..ஸ்டாலின் வெளியிட்டார், ஜனவரி 19, 4:32 pm

[4] https://www.maalaimalar.com/news/state/cm-mk-stalin-released-108-rare-devotional-books-562418

மாலைமலர், தேவாரம், திருவாசகம், திருப்புகழ் உள்ளிட்ட 108 அரிய பக்தி நூல்களை முதலமைச்சர் வெளியிட்டார், By மாலை மலர்19 ஜனவரி 2023 3:29 PM.

[5] தினத்தந்தி, மறுபதிப்பு செய்யப்பட்டுள்ள 108 அரிய பக்தி நூல்களை முதல்அமைச்சர் மு..ஸ்டாலின் வெளியிட்டார், ஜனவரி 19, 4:32 pm.

[6] https://www.dailythanthi.com/News/State/chief-minister-mkstalin-released-108-rare-devotional-texts-which-have-been-reprinted-881552

[7] தினத்தந்தி, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 108 பக்தி நூல்களை வெளியிட்டார் முதல்வர் மு. ஸ்டாலின், By தந்தி டிவி, 19 ஜனவரி 2023 1:49 PM

[8] https://www.thanthitv.com/latest-news/cm-stalin-released-108-devotional-books-on-the-behalf-of-hindu-religious-endowments-department-162790

[9] தினமலர், 108 பக்தி நுால்கள் வெளியீடு Added : ஜன 20, 2023 00:19 …

[10] https://www.dinamalar.com/news_detail.asp?id=3221907

[11] தமிழ்.இந்து, புதுப்பொலிவுடன் 108 அரிய பக்தி நூல்கள்: முதல்வர் மு..ஸ்டாலின் வெளியிட்டார், செய்திப்பிரிவு, Published : 20 Jan 2023 05:49 AM, Last Updated : 20 Jan 2023 05:49 AM.

[12] https://www.hindutamil.in/news/tamilnadu/931352-108-rare-bhakti-books-with-new-editions.html

இந்து அறநிலையத்துறை மூலம் நடந்து வரும் அன்னதான திட்டம், உணவுப் பொட்டல விநியோகமாக மாறி, திமுக அரசு சேவை செய்வது போல பிம்பத்தை உண்டாக்கும் போக்கு (3)

மே15, 2021

இந்து அறநிலையத்துறை மூலம் நடந்து வரும் அன்னதான திட்டம், உணவுப் பொட்டல விநியோகமாக மாறி, திமுக அரசு சேவை செய்வது போல பிம்பத்தை உண்டாக்கும் போக்கு (3)

நாத்திக மற்றும் விரோத கருத்துக்களைக் கூறி வந்த திமுகவினர், ஏன் கோவில் அன்னதான உணவுப் பொட்டலங்களை விநியோகிக்க வேண்டும்?: நாத்திக அரசியல்வாதிகள் ஆட்சியில் வந்துள்ளார்கள். கடவுளின் பெயரால் கூட பிராமணம் எடுத்து, பதிவிக்கு வர துணிவில்லை. ஆனால், குங்குமம்-விபூதி வைப்பார்கள், துடைத்து எரிவார்கள்! கடவுளின் பேரால் பதவிப் பிரமாணம் எடுக்காத திமுகவினர் குங்குமம்-விபூதி வைத்திருந்தது என்ன சித்தாந்தம் என்று தெரியவில்லை. இன்றோ, தமிழகம் முழுவதும், கோவில்களின் பிரசாதம், அன்னதானம், பொட்டலங்களாக, விநியோகிக்கப் படுகின்றன. அதனை ஆட்சிக்கு வந்த அமைச்சர் முதல் மற்றவர்கள், ஏதோ தாங்கள் தான் தானம் செய்வது போல, புகைப் படங்கள் செய்திகள் வெளியிட, விளம்பரம் போல செய்யப் படுகின்றன. இந்த செலவுகள் அறநிலையத்துறைகள் கணக்கில் தான் எழுதப் படும், பிறகு. நாத்திக-அரசியல்வாதிகள் ஏன் விநியோகிக்க வேண்டும்? மடாதிபதிகள் செய்யலாமே? அந்தந்த அன்னதான திட்டங்களுக்கு கொடையளித்தவர்களைக் கூப்பீடு செய்திருக்கலாமே? நாத்திக மற்றும் விரோத கருத்துக்களைக் கூறி இந்து தூஷணத்தில் ஈடுபட்டு வரும் இவர்கள் ஏன் செய்ய வேண்டும்? அதற்கு நம்பிக்கை இல்லை என்றால், இதற்கு யோக்கியதை இல்லை என்றாகிறது.

ஊழலில் கைதானவர்கள், வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள், நாத்திகர்கள் இவ்வேலையில் ஈடுபட வேண்டிய தேவையில்லை:னைந்துஅறநிலையத் துறையில் ஊழல்கள், மோசடிகள், பணம் கையாடல்கள், சிலைத் திருட்டு, நில அகபரிப்பு, டென்டர் என்று பலதரப்பட்ட பித்தலாட்டங்களில் ஈடுபட்டு வழக்குகள் போடப் பட்டுள்ள நிலை, கைதானவர்கள், பெயிலில்வெளி வந்தவர்கள், இடம் மாற்றம் செய்யப் பட்டவர்கள், திரும்ப வந்து உட்கார்ந்து கொண்டிருப்பவர்கள் முதலியவர்கள் முதலியோருக்கு, அன்னதானம் செய்வதில் எந்த தார்மீகமும், யோக்கியதையும் இல்லை.

  • ஆகவே, சிறிதும் வெட்கப் படாலமல் அர்சியல்வாதிகள் போல அவர்களும் இதில் ஈடுபடுவது வெட்கக் கேடு, அவமானம் மகாப் பாவம் கூட.
  • நெற்றியில் குங்குமம்-விபூதி வைத்துக் கொண்டு பக்தர்களை ஏமாற்ற வேண்டாம். கடவுள் மீது நம்ப்பிக்கை இருந்திருந்தால், அவர்கள் அத்தகைய முறைகேடுகள், சட்டமீறல்கள் முதலியவற்றை செய்திருக்க மாட்டார்கள்.
  • இது அவர்களுக்கும், மக்களுக்கும், நாட்டிற்கும் நல்லதல்ல. கோவில் பிரசாதம் – சாப்பாட்டை பக்தர்களுக்கு அல்லாமல், ஆஸ்பத்திரிக்கு பொட்டலங்களாகக் கட்டிக் கொடுக்கும் திட்டத்தை இந்து அறநிலையத் துறையின் கீழ் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.
  • சாப்பாட்டை அவ்வாறு கொடுப்பது நல்லது தான்! ஆனால், அக்குழுவில் ந. திருமகள் போன்றோர் இருப்பதாக செய்தி சொல்கிறது…
  • முதல்வர் ஒரு நாத்திகர், இந்துமதத்திற்கு எதிராகக் கருத்துகளைச் சொல்லியவர்…….
  • அந்நிலையில், இதெல்லாம் எங்கு போகும் என்று தெரியவில்லை….

இதேபோல, ரம்ஜான் கஞ்சிக்கு கொடுத்த அரிசியும், உண்வாக மாற்றி, எல்லோருக்கும் கொடுத்திருக்கலாமே?

“….அறநிலையத்துறை தமிழக வரலாற்றில் இல்லாத அளவுக்கு….” என்றால் எப்படி?:

 “தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி: சேகர் பாபு சொன்னது போல, “இதுவரையில் அறநிலையத்துறை தமிழக வரலாற்றில் இல்லாத அளவுக்கு தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி சிறப்பாக செயல்பட்டு அனைவரது புருவத்தை உயர்த்தி பார்க்கும் வகையில் செயல்பாட்டில் ஜொலிக்கும் என்ற நம்பிக்கையில் எங்களது பயணத்தை தொடங்கியுள்ளோம்”, என்பார்கள் போலிருக்கிறது!

  1. இதுவரையில் அறநிலையத்துறை தமிழக வரலாற்றில் இல்லாத அளவுக்கு….” – இது வரை அறநிலையத் துறையில் ஊழல், மோசடி, பணம் கையாடல், கைது என்று எல்லாமே இருந்து வருகின்றனர். அப்படியென்றால் எந்த அளவுக்குச் செல்வார்கள் என்று தெரியவில்லை.
  2.  “தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி– இது, அந்த அம்மாவின் ஆணைப் படி, மாண்புமிகு அம்மா ஆட்சி என்று சொன்னது போலிருக்கிறது. நாத்திகராக இருந்து, இவர் என்ன வழி காட்டுவார் என்றும் தெரியவில்லை.
  3.  “சிறப்பாக செயல்பட்டு-? நாத்திகராக, கடவுள் மறுப்பு சித்தாந்தியாக, பல நேரங்களில் இந்துவிரோதித் தனமாக செயல்படும் போது, எப்படி, சிறப்பாக செயல்படுவார்கள் என்று தெரியவில்லை.
  4. அனைவரது புருவத்தை உயர்த்தி பார்க்கும் வகையில்”  – இதை +வாக அல்லது –வாக எடுத்துக் கொல்வது என்றும் தெரியவில்லை.
  5. செயல்பாட்டில் ஜொலிக்கும்– பொறுத்துப் பார்க்க வேண்டும்.
  6.  “என்ற நம்பிக்கையில்”  – நம்பிக்கைகளை தூஷிக்கும், கேலிபடுத்தும் இவர்கள் ஏன் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
  7. எங்களது பயணத்தை தொடங்கியுள்ளோம்”, – இதையும் பொறுத்துப் பார்க்க வேண்டும்.

அன்னதானம் போன்ற சேவைகள் அமைதியாக நடந்து கொண்டே இருக்கின்றன: திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது பேரவை தொகுதிகளிலேயே அதிமுகவின் கோட்டையாகவும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் விஐபி தொகுதியாகவும் மாறிய ஸ்ரீரங்கத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக தடம் பதித்துள்ளது. தஞ்சை மாநகர் முழுவதும் ஏராளமானோர் ஆதரவற்றோர் சாலைகளில் படுத்து உறங்கி அங்கேயே  காலத்தை போக்கி வருகின்றனர். மழை, புயல் அதிக வெயில் என்றாலும் அவர்களுக்கு இருக்க இடம் இல்லாமல் சாலை ஒன்றே அவர்களுக்கு வீடாக அமைந்து விடுகிறது[1]. அவர்களுக்கு உணவு வழங்குவது என்பது மனதிற்கு ஆறுதலை அளிக்கிறது என கூறிய ஜெய் பாரதமாதா சேவை மையத்தின் தலைவர் ஜெகதீஷ், சாலைகளில் இருப்பவர்கள் பெரும்பாலும் வயதானவர்கள், அவர்களுக்கு தொடர்ந்து  400 நாட்களுக்கும் மேலாக உணவு அளித்து வருகிறோம். என்றார்[2]. ஆகவே, அன்னதானம் போன்ற சேவைகள் அமைதியாக நடந்து கொண்டே இருக்கின்றன. இது இந்துமதத்தின் அங்கமாகும். அன்னத்தை மதிப்பது, போற்றுவது, பகிர்வது என்பதெல்லாம் சாதாரண விசயம். இதற்கெல்லாம் யாரும் விளம்பரம் கொடுக்கத் தேவையில்லை. தமிழகத்திலேயே சங்ககாலம் முதல், பல்லவர், சேரர், சோழர், பாண்டியர், சோழர், விஜயநகர மன்னர், நாயக்கர், மராத்தியர் என்று எல்லோருமே செய்துள்ளனர். ஆனால், அவர்கள் நாத்திகரோ, இந்துவிரோதிகளோ அல்லர். விளம்பரத்தையும் தேடவில்லை. மாறாக உதவியுள்ளனர், பாதுகாப்பு கொடுத்துள்ளனர்.

செக்யூலரிஸமாக திமுக ஆட்சி செயல்படவில்லை: அன்னதானத்தை வாங்கி, இதே போல உணவுப் பொட்டலங்களாக விநியோகிக்க வேண்டும். இப்பொழுது, ரம்ஜான் கஞ்சிக்கு அர்சி கொடுக்கப் பட்டு வருவது தெரிந்த விசயமே. ஆனால், அதே போன்று அரிசி கோவில்களுக்குக் கொடுக்கப் படுவதில்லை. வழிபடும் ஸ்தலங்கள் ஒரே மாதிரி பாவிக்கப் படவேண்டும் என்றால், அவ்வாறே செக்யூலரிஸ அரசியல் வாதிகள் நடந்து கொள்ள வேண்டும். ஆனால், நாத்திக திராவிட அரசியல்வாதிகள் இந்துவிரோதிகளாகத் தான் இருந்துள்ளனர், இருந்து வருகின்றனர். பகுத்தறிவுப் போர்வையில் ஈவேராவும், பிறகு பெரும்-ஞானம் பெற்று “பெரியாராக” மாறிய பின்னரும், பிள்ளையார் சிலைகளை உடைத்ததும், ராமர்-முருகன் படங்களுக்கு செருப்பு மாலை அணிவித்தது, தூஷித்தது எல்லாம், தமிழக மக்கள் அறிந்ததே. இப்பொழுது வரை ஸ்டாலின் முதல், கருப்பர் கூட்டம் வரை, அத்தகைய இந்துவிரோத தூஷணங்களில் ஈடுபட்டு வந்தனர். தேர்தல் பிரச்சாரம் போன்ற / கிருத்துவ-துலுக்கக் கூட்டங்களிலும் அவ்வாறே ஸ்டாலின் முன்னாலேயே பேசப் பட்டன. ஆகவே, இத்தகைய வேடங்கள் தேவையில்லை.

© வேதபிரகாஷ்

14-05-2021


[1] நியூஸ்.18, தஞ்சாவூர் : 400 நாட்களுக்கு மேலாக அன்னதானம் வழங்கி வரும் அமைப்பு, May 14, 2021, 23:03 IST

[2] https://tamil.news18.com/news/local-news/tanjore/tanjore-thanjavur-jai-bharat-mata-service-center-has-been-providing-free-food-for-over-400-days-due-to-corona-lockdown-vai-464069.html

கோவில்குத்தகை, வாடகைபாக்கி: திராவிடக்கொள்ளை தொடர்கிறதா?

ஒக்ரோபர்7, 2012

கோவில்குத்தகை, வாடகைபாக்கி: திராவிடக்கொள்ளை தொடர்கிறதா?

திராவிடக்கொள்ளைதொடர்வதுஏன்? பகுத்தறிவு-நாத்திகப் போர்வையில் தமிழர்களை “திராவிடர்களாக்கி”, இந்திய விரோதிகளாக்கி, இந்து விரோதிகளாக்கி, மற்ற இந்திய மொழி பேசும் மக்களுடனும் பிரச்சினையைக் கிளப்பி, அண்டை மாநிலங்களுடன் சண்டை போட்டுக் கொண்டு, “தெற்கு தேய்கிறது” என்று சொல்லி, இவர்களே நன்றாகத் தேய்த்து, கோடிகளில் சுருட்டிவிட்டு, மற்ற மாநிலங்களை விட பிற்படுத்தச் செய்தது தான் இவர்கள் ஆண்ட லட்சணம். அந்நிலையில் கோவில்களைக் கொள்ளையடித்ததில் இவர்கள் மாலிக்காபூர், ஔரங்கசீப் போன்றவர்களையும் மிஞ்சி விட்டனர்[1]. அவர்கள் மதவெறியால், கொள்ளையடித்ததை, இவர்கள் துவேஷத்தால், சட்டத்தை வளைத்து, விதிகளை மீறி, அதிகாரம் மூலம் கொள்ளையடித்து வருகின்றனர். “கருணாநிதி-ஜெயலலிதா” ஒன்றும் “திராவிட-ஆரிய” சின்னங்கள் அல்ல. திமுக-அதிமுகவும் அது போலத்தான். திராவிடப் பாரம்பரிய அரசியலில் ஊறிப் போனவர்களுக்கு, நெற்றியில் குங்குமம்-விபூதி-சந்தனம் வைத்துக் கொண்டாலும், வைத்துக் கொள்ளாவிட்டாலும், கொள்ளையடிப்பதில் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சித்தலைமை மாறினாலும், நடப்புகள், செயல்கள், முடிவுகள் எல்லாம் ஒரே மாதிரியாகத்தான் இருந்துள்ளன[2]. ஜெயலலிதா ஆட்சியில் கொஞ்சம் குறைந்துள்ளது எனலாம் அல்லது அவ்வாறு தோற்றமளிக்கலாம்[3].

 

இந்து அறநிலையத் துறையே கோவில் சொத்துக்களை விற்று மோசடி செய்து வந்த விவரங்களை கீழ் கண்ட கட்டுரைகளில் விவரித்துள்ளேன்:

எண்

தலைப்பு

இணைத்தள விவரம்

Tenants of mutt and temple lands seek ownership rights: The TN Government scam to grab the Temple lands (27-08-2008) http://vedaprakash.indiainteracts.in/2008/08/27/tenants-of-mutt-and-temple-lands-seek-ownership-rights-the-tn-government-scam-to-grab-the-temple-lands/
1 Tenants of mutt and temple lands seek ownership rights: The TN Government scam to grab the Temple lands (02-09-2008)) http://dravidianatheism.wordpress.com/2008/09/02/tenants-of-mutt-and-temple-lands-seek-ownership-rights-the-tn-government-scam-to-grab-the-temple-lands/
2 பல கட்டுரைகள் (குறிப்பாக கீழ்கண்டவை கொடுக்கப் பட்டுள்ளன) https://atheismtemples.wordpress.com
3 நாத்திக ஆட்சியாளர்களும், கோவில் நிர்வாகமும் https://atheismtemples.wordpress.com/2009/09/18/atheist-rulers-temple-administration/
4 இந்து அறநிலையத்துறைக்குப் பிறகுகுடிசைமாற்றுவாரியம் மூலம் கோவில் நிலங்களைஆக்கிரமிக்க முயலும் நாத்திக அரசு! https://atheismtemples.wordpress.com/2010/09/10/atheist-rulers-encroach-temple-lands-through-slum-clearance-board/
5 ரூ.5,000/- கோடி மதிப்புள்ள சிவன் கோயில்நிலம்ஆக்கிரமிப்புவிவகாரம்ரோசையா– கருணாநிதி சமரசம்! https://atheismtemples.wordpress.com/2010/08/09/%E0%AE%B0%E0%AF%82-5000-crores-valued-siva-temple-encroached-in-taamilnadu-belonging-to-andhrapradesh/
6 செஞ்சி கோவில் வழக்கு: இந்துக்களும்,கிருந்துவர்களும் தெரிந்து கொள்ள வேண்டியவைஎன்ன? https://atheismtemples.wordpress.com/2011/08/20/gingee-kothandaramar-temple-liberated-from-the-christians/
7 செஞ்சி கோவில் வழக்கு (2): இந்துக்களும்,கிருந்துவர்களும் தெரிந்து கொள்ள வேண்டியவைஎன்ன? https://atheismtemples.wordpress.com/2011/08/21/gingee-temple-liberated-duties-of-hindus/

முறைகேடாககுத்தகைக்குவிடப்பட்டகோவில்நிலங்கள்கையகப்படுத்தப்படும்[4]என்று அறிவித்தால் மட்டும் போதுமா, பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமே? இனி ஆளுங்கட்சியினர் பிரமிப்பை ஏற்படுத்தி, சில காரியங்களைச் செய்யலாம். ஆனால், பிறகு, ஊறிப்போன கோவில்-திருட்டுத் திராவிடம் பழையபடி, கமிஷன் வாங்கிக்கொண்டு வேலைக்கு இறங்கி விடும்.

அப்துல்லாவிற்கும்அகஸ்தீஸ்வரர்கோவிலுக்கும்என்னசம்பந்தம்?: அகஸ்தீஸ்வரர் கோவிலுக்கு அகஸ்திஸ்வரர் கோவிலுக்கு அதிகமாக அப்துல்லா என்பவர்[5] 32 லட்சம் பாக்கி வைத்துள்ளாறாம்! கலீல் உர் ரஹ்மான் 10 லட்சம் பாக்கியாம்! அதெப்படி இப்படி முஸ்லீம்கள் கோவில் சொத்தை அனுபவிக்க முடிகிறது? இந்த அழகில் இவர்கள் கோர்ட்டுக்கு வேறு போகிறார்கள். இந்துக்களை இன்னும் இழிவு பேசிவரும் முஸ்லீம்கள் இருக்கும் போது, முஸ்லீம்கள் இவ்வாறு கோவில் சொத்தைக் கொள்ளையடிக்கும் தொழிலை விடவேண்டும். இல்லையெனில் இவர்களை இக்கால ஔரங்கசீப்புகள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கும். தங்கள் கடவுள் தான் ஒசத்தி என்று தம்படாம் அடித்துக் கொள்ளும் இவர்களுக்கு இப்படி கோவில் சொத்தைக் கொள்ளையடிப்பதில் வெட்கம்கூடபடாமல், பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள் எனும்போது, இதுவும் ஜிஹாதின் ஒருவழியாகப் பின்பற்றுகிறார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது.

சென்னமல்லீஸ்வரர் கோவிலில் வாடகை பாக்கி 90 லட்சம் ரூபாய்[6]: சென்னமல்லீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான இடங்களில் வசிப்போர், தர வேண்டிய வாடகை பாக்கித் தொகை 90 லட்சம் ரூபாயை எட்டியுள்ளது. இதையடுத்து, பாக்கி வைத்திருப்போர் பெயர் அடங்கிய அறிவிப்பு பலகை கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. பாரிமுனை தேவராஜ முதலி தெருவில் உள்ளது பிரசித்திப்பெற்ற சென்ன மல்லீஸ்வரர் மற்றும் கேசவப் பெருமாள் கோவில். இக்கோவிலுக்கு சொந்தமான கட்டடங்களாக, 8 காணி 21 கிரவுண்ட் 1,323 சதுர அடி இடம் (1 காணி – 1.25 ஏக்கர்) உள்ளது. இதன் மொத்தப் பரப்பளவு ஐந்து லட்சம் சதுர அடி. அதே போல் மனைகளாக, ஐந்து காணி 3 கிரவுண்ட் 599 சதுர அடி இடம் உள்ளது. இதன் பரப்பளவு 4 லட்சம் சதுர அடி. 2001ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, இக்கோவிலுக்கு வாடகை பாக்கியாக 90 லட்ச ரூபாய் வரவேண்டியுள்ளது. இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தில் உள்ள பல கோவில்களில் வாடகை பாக்கி தற்போது “ஜரூராக” வசூல் செய்யப்படுவதை[7] அடுத்து, சென்னமல்லீஸ்வரர் கோவிலில் கட்டடங்களில் வசிப்போரில் அதிகபட்சமாக பாக்கி வைத்தவர்களில், முதல் பதினைந்து பேர்களின் பெயர்கள் மற்றும் பாக்கித் தொகை அடங்கிய அறிவிப்பு பலகை கோவில் வாசலில் வைக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, ஐவர் பாக்கித் தொகையை செலுத்தியுள்ளனர். விரைவில் மனை பிரிவில் தங்கியுள்ளவர்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலங்களின் மதிப்பு பல கோடி ரூபாயை தாண்டும் எனவும் நிர்வாகம் கூறியுள்ளது.

கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான, 180 கோடி ரூபாய் மதிப்பிலான, 30 “கிரவுண்ட்’: சென்னை, மயிலாப்பூர், கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான, 180 கோடி ரூபாய் மதிப்பிலான, 30 “கிரவுண்ட்’ இடத்தை மீட்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மயிலாப்பூர், கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோவி லுக்குச் சொந்தமாக சென்னை நகரின் பல்வேறு இடங்களில் சொத்துக்கள் உள்ளன. இவற்றில், பெரும்பாலானவை குத்தகை அடிப்படையில் தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. பல சொத்துக்கள், தனியாரின் பிடியில் சிக்கியுள்ளன. இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள கோவில் நிர்வாகம், கோவில் சொத்துக்களை மீட்கும் பணியில் இறங்கியுள்ளது. பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள், கடந்த மூன்று மாதங்களில் மீட்கப்பட்டுள்ளன.இந்த வகையில், தனியார் பள்ளியின் கட்டுப்பாட்டில் உள்ள, 30 “கிரவுண்ட்’ இடத்தையும் மீட்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து பக்தர் ஒருவர் கூறியதாவது: மயிலாப்பூர், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், 76 “கிரவுண்ட்’ சொத்து, கோவிலுக்குச் சொந்தமாக உள்ளது. இது, அங்குள்ள தனியார் பள்ளியின் விளையாட்டுத் திடலாக பயன்படுத்தப்படுகிறது. இதற்காக, குறைந்த தொகை, குத்தகை கட்டணமாக மாதந்தோறும் கொடுக்கப்படுகிறது. இதில், 30 “கிரவுண்ட்’ நிலத்தை, பள்ளியின், இணைப்பு பள்ளிக்கு குத்தகைக்கு வழங்க, முடிவு செய்யப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால், குத்தகை இடம் வழங்கப்படவில்லை.மொத்தம் உள்ள, 76 “கிரவுண்ட்’ இடத்தில், 46 “கிரவுண்ட்’ இடம், கோர்ட் விசாரணையில் உள்ளது. மீதம் உள்ள, 30 “கிரவுண்ட்’ இடத்தை கோவிலுக்கு ஒப்படைக்க, தனியார் பள்ளி நிர்வாகம் சம்மதித்தது. ஆனால், இதுவரை ஒப்படைக்கவில்லை. தொடர்ந்து, தனியார் பள்ளி வசத்திலேயே இடம் உள்ளது. இந்த இடத்தை மீட்டு, கோவில் சொத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு, அந்த பக்தர் கூறினார். இது குறித்து கோவில் நிர்வாகத்திடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:மொத்தம் உள்ள, 76 “கிரவுண்ட்’ இடத்தில், 30 “கிரவுண்ட்’ இடத்தை கோவிலுக்கு ஒப்படைப்பதாக பள்ளி நிர்வாகம், 1996ம் ஆண்டு, கடிதம் அளித்தது. 2005ம் ஆண்டு, ஒப்படைப்பு உறுதி செய்யப்பட்டது. குத்தகை நீட்டிப்பு செய்யப்படாத நிலையில், மீதம் உள்ள, 46 “கிரவுண்ட்’ இடத்திற்கு நஷ்ட ஈடாக, மாதம், 1,250 ரூபாயை பள்ளி செலுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, குறிப்பிட்ட இடத்திற்கு மாதம், ஐந்து லட்சம் ரூபாய் வாடகையாகச் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. கோவிலுக்கு ஒப்படைப்பதாகக் கூறப்பட்ட, 30 “கிரவுண்ட்’ இடத்தைக் கையகப்படுத்த, நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறித்த சட்ட நிபுணர்களின் கருத்துரு கேட்டபோது, “கோவில் இடத்தை, கோவில் நிர்வாகம் எடுத்து, மதில் சுவர் கட்டுவதில் சட்ட ரீதியான தடை ஏதும் இல்லை’ என்று கருத்து கூறப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள, 76 “கிரவுண்ட்’ இடத்தின் தற்போதைய சந்தை மதிப்பு, 456 கோடி ரூபாய். கோவிலுக்கு ஒப்படைக்கப்படுவதாகக் கூறப்பட்ட நிலத்தின் மதிப்பு, 180 கோடி ரூபாய். இவ்வாறு கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

456 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமித்துள்ளது ஏன் – எப்படி?: கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான, 76 “கிரவுண்ட்’ இடம், தனியார் பள்ளிக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது; குத்தகை, 1976ம் ஆண்டோடு முடிந்துவிட்டது; இருப்பினும், கோவில் இடத்தை, பள்ளி நிர்வாகம் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. 1994ம் ஆண்டில், குறிப்பிட்ட தனியார் பள்ளியின், இணைப்பு பள்ளியில் நடந்த விழாவில், முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டார்.அப்போது, தங்களின் இணைப்பு பள்ளிக்கு விளையாட்டுத் திடல் இல்லை என்றும், அதற்கான இடத்தைக் கொடுத்து உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது, “கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான இடம், விளையாட்டுத் திடலுக்காக வழங்கப்படும்’ என்று முதல்வர் அறிவித்தார். இதையடுத்து, 1995ம் ஆண்டு, தனியார் பள்ளியின் அனுபவத்தில் இருந்த, 76 “கிரவுண்ட்’ இடத்தில் இருந்து, 30 “கிரவுண்ட்’ இடத்தை, இணைப்பு பள்ளிக்கு, குத்தகை அடிப்படையில் ஒதுக்கி, இந்து அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து உத்தரவிடப்பட்டது. ஆனால், குறிப்பிட்ட இடத்திற்குச் செல்ல வழி இல்லை என்ற காரணத்தால், இணைப்பு பள்ளி நிர்வாகம், 30 “கிரவுண்ட்’ நிலத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இதைஅடுத்து, “இடத்தைப் பெற்றுக் கொள்ள இணைப்பு பள்ளி நிர்வாகம் முன்வரவில்லை’ என, அறநிலையத் துறை பதிவேட்டில், பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில், தனியார் பள்ளியின் பொறுப்பில் மீதம் உள்ள, 46 “கிரவுண்ட்’ இடத்தையும் திரும்ப எடுக்க, கோவில் நிர்வாகம் முயற்சி எடுத்தது. இது குறித்த வழக்கில், கோவில் நிர்வாகத்திற்கு பாதமாக தீர்ப்பு வந்த நிலையில், மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கோவில் தக்கார்கள் எப்படி வேலை செய்கிறார்கள்?: பி. விஜயகுமார் ரெட்டி என்பவர் கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்டு வருவதோடு, பாக்கியைச் செல்லுத்தாவிட்டால், காலிசெய்யுமாறு நோட்டீஸையும் கொடுத்துள்ளார்[8]. இவர் மீட்டுள்ள சொத்தின் மதிப்பு ரூ.230 கோடிகளுக்கு மேல் என்கிறார்[9]. இதேபோல மற்ற தக்கார்கள் ஏன் வேலை செய்வதில்லை? குறிப்பாக மேஎலேயுள்ள நிலத்தை ஏன் விட்டு வைத்தார்? கோர்ட் கேஸ் என்று சொல்லிவிடுவார், ஆனால், அது நியாயம் அல்லவே? திருமூலர் சொன்னதை, இந்துக்களும் மறக்கலாமோ? பிறகு, நாத்திகர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

திருத்தணியில் வரி பாக்கி செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு ‘சீல்’: கமிஷனர் அதிரடி நடவடிக்கை[10]: திருத்தணி நகராட்சிக்கு சொந்தமான 7 கடைகள் பஸ் நிலையம், சன்னதி தெருவில் உள்ளன. இதனை அதே பகுதியை சேர்ந்த தீனதயாளன், வெங்கடேசன், முருகேச ரெட்டி, ஜான்மனுவேல் கடந்த 15 ஆண்டுகளாக குத்தகை அடிப்படையில் நடத்தி வந்தனர்.  இதில் 6 கடைகளுக்கு அவர்கள் முறையாக வரி செலுத்தவில்லை. இதனால் ரூ.6 லட்சம் வரை நகராட்சிக்கு வரிபாக்கி ஏற்பட்டது. இதுகுறித்து பலமுறை நகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியும் வரிபாக்கியை செலுத்தாமல் அவர்கள் தொடர்ந்து கடை நடத்தி வந்தனர்.  இந்த நிலையில் நகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியம், என்ஜினீயர் சண்முகம், சுகாதார அதிகாரி லட்சுமி கணேசன், தலைமை எழுத்தர் அமராவதி பொன்மணி, பொதுப்பணி மேற்பார்வையாளர் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் வரிபாக்கி செலுத்தாத 6 கடைகளுக்கும் சென்று விசாரணை நடத்தினர்.  அதிரடியாக அவர்கள் 6 கடைகளுக்கும், சீல் வைத்தனர். இதனால் திருத்தணி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கமிஷனர் பாலசுப்பிரமணியம் கூறும்போது, 2011-12ம் ஆண்டு மட்டும் நகராட்சிக்கு ரூ.60 லட்சம் வரை வரிபாக்கி உள்ளது. வரிசெலுத்தாத தனியார் நிறுவனங்கள் மீதும் இந்த அதிரடி நடவடிக்கை தொடரும் என்றார். ஆனால், கோவில் குத்தகை, வாடகை பாக்கி என்றால் அதிகாரிகள் “சட்டப்படி நடவடிக்கை எடுத்து” அமைதி காத்துக் கொண்டிருப்பார்கள் போலும், அப்படியென்றால் திராவிடக் கொள்ளை தொடர்கிறதா?

நிர்வாக சீர்கேட்டால் ரூ.20 லட்சம் குத்தகை பணம் பாக்கி; கடும் நடவடிக்கை எடுக்க கவுன்சிலர்கள் வலியுறுத்தல்[11]: புதிய கட்சிகள் அதிகாரத்திற்கு வந்தாலும், பழைய புத்தி போகாது போலும்.திருவத்திபுரம் நகராட்சியில் நிர்வாக சீர்கேட்டால் 1 வருடங்களாக ரூ.20 லட்சம் குத்தகை பணம் வசூல் செய்யாமல் பாக்கியாக உள்ளது. கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தி உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் திருவத்திபுரம் நகராட்சியில் நகர மன்ற கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் ஏ.என்.சம்பத் தலைமை தாங்கினார். ஆணையாளர் உசேன் பாரூக் மன்னர், துப்பரவு அலுவலர் பாஸ்கர், துப்பரவு ஆய்வாளர் மதனராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் லோகநாதன், விஸ்வநாதன், எம்.எஸ்.செல்வ பாண்டியன், எல்.வி. நடேசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

திருவத்திபுரம் நகராட்சி கூட்டத்தில் நடந்த விவாதம் பின்வருமாறு:- பி.லோகநாதன் – தமிழகத்தில் 3 முறையாக ஜெயலலிதாவை முதல்வராக்கிய தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும்.

இல.ஆனந்தன்- தே.மு.தி.க வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெறசெய்து விஜயகாந்தை எதிர்கட்சி தலைவராக்கிய தமிழக வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

லோகநாதன்- சுகாதார பிரிவுக்கு 2011- 2012 ஆண்டிற்கு சுண்ணாம்பு நீருக்கு 3 லட்சம் தேவையா? கடந்த ஆண்டு 2 லட்சத்திற்கும் குறைவாக வாங்கியுள்ளீர்கள்.

சம்பத்(தலைவர்)-ஆடு அறுக்கும் தொட்டி குத்தகை பணம் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் பாக்கியுள்ளது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்.

ஆணையாளர்- குத்தகை பாக்கி வசூல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறேன்.

விஸ்வநாதன்-பஸ் நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பிட குத்தகை ரூ.5 லட்சத்து 66 ஆயிரம் பாக்கி உள்ளது ஏன் நகராட்சி நிர்வாகம் வசூல் செய்யவில்லை.

பி.லோகநாதன்-வார சந்தை குத்தகை ரூ. 7லட்சத்து 14 ஆயிரம் கடந்த 2009 ஆண்டு முதல் நிலுவையில் ஏன் வசூல் செய்யவில்லை.

சம்பத்(தலைவர்)- குத்தகை வசூல் செய்யாமல் ரூ.20 லட்சம் பாக்கியாக உள்ளது. இதற்கு காரணம் நிர்வாக சீர்கேடு தான்.

பச்சையப்பன் – இதற்கு காரணமான அதிகாரிகள் அனைவரும் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்வபாண்டியன்- பேருந்து நிலைய நுழைவு கட்டண குத்தகை ரூ.6 லட்சத்து 82 ஆயிரம் 500 குத்தகை வசூலில் பாக்கி உள்ளது என்ன நிர்வாகம் நடக்கிறது.

ஆணையாளர்- துறை அலுவலர் மீது விசாரணை நடத்தி வருகிறேன். அதில் முறைகேடு கண்டுபிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கபடும்.

சம்பத் (தலைவர்) -குத்தகை பணம் செலுத்தவில்லை என்றால் மறு டெண்டர் விட்டு விட்டு குத்தகை பாக்கி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது. ஆக, இப்படி பேசிக்கொண்டிருப்பார்கள் போலும். திருத்தணி நகராட்சி கமிஷனெர் போல, இங்குள்ள கமிஷனர் ஒன்றும் செய்யமாட்டார் போலும்.

ஊட்டியில் கோவில் சொத்துகளை அனுபவிப்பவர்கள்: 14 லட்சம் ரூபாய் வரை குத்தகை மற்றும் வாடகை பாக்கி வைத்துள்ளனர்.  ஊட்டி மாரியம்மன் கோவில், அதன் கட்டுப்பாட்டில் லோயர் பஜார் சுப்ரமணியசாமி, இரட்டை பிள்ளையார் கோவில்கள் உள்ளன. தவிர, ஆஞ்சநேயர், எல்க்ஹில் பாலதண்டாயுதபாணி, வேணுகோபால் சுவாமி, மூவுலகரசியம்மன் கோவில்களும் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளன. மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான எட்டு நிரந்தர, 3 தற்காலி கடைகள் குத்தகை, வாடகை அடிப்படையில் தனியாருக்கு விடப்பட்டுள்ளன.நிரந்தர கடைகள் மூலம் ஆண்டுக்கு 3 லட்சத்து 79 ஆயிரத்து 334 ரூபாய், தற்காலிக கடைகள் மூலம் 34 ஆயிரத்து 460 ரூபாய் வருமானம் ஈட்டப்படுகிறது. பிற கோவில்களுக்கு சொந்தமான கடை, வீடு, நிலங்கள் மூலமும் ஆண்டுக்கு சில லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது.

வாடகை பாக்கி: மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிரந்தர கடைகளை அனுபவித்து வருவோர் 3 லட்சத்து 15 ஆயிரத்து 390 ரூபாய், தற்காலிக கடைக்காரர்கள் 35 ஆயிரத்து 300 ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளனர். ஆஞ்சநேயர் கோவிலுக்கு சொந்தமான கடைகளை நடத்துவோர் 6 லட்சத்து 66 ஆயிரத்து 407 ரூபாய், வேணுகோபால் சுவாமி கோவிலுக்கு சொந்தமான கடைகளை நடத்துவோர் 2 லட்சத்து 5 ஆயிரத்து 82 ரூபாய், காந்தல் சுப்ரமணியர் கோவிலுக்கு சொந்தமான வீடுகளில் வசிப்போர் 64 ஆயிரத்து 124 ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளனர்.

காந்தல் மூவுலகரசியம்மன் கோவில் நில குத்தகைதாரர் 6 ஆயிரத்து780 ரூபாய், வீடுகளில் வசிப்போர் 1 லட்சத்து 17 ஆயிரத்து 173 ரூபாய் பாக்கி வைத்துள்ள நிலையில், கோவில் கஜானாவுக்கு செல்ல வேண்டிய 14லட்சத்து 10 ஆயிரத்து 256 ரூபாய் நிலுவையில் உள்ளது.

அரசாணையில்சலுகை 33.33லிருந்து 15%, கிட்டத்தட்ட 20% குறைப்பு[12]: கோவில்களுக்கு சொந்தமான வீடு, கடை, நிலத்தின் வாடகை, குத்தகை தொகையை மூன்றாண்டுக்கு ஒரு முறை 33.3 சதவீதம் உயர்வு செய்யப்பட்டு வந்தது; வாடகை உயர்வை குறைக்க வேண்டும் என்ற மாநிலம் முழுவதிலும் உள்ள கோவில் நிலங்களை அனுபவித்து வந்த குத்தகை, வாடகைதாரர்களின் கோரிக்கையை ஏற்று மாநில அரசு, மூன்றாண்டுக்கு ஒரு முறை 15 சதவீதம் வாடகை உயர்வு செய்து அரசாணை பிறப்பித்தது. இந்த உத்தரவு ஊட்டியில் அமலுக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்து முன்னணிக்குத்தான் இவ்விவரங்கள் தெரியும் போலும்: கோவை, நீலகிரி மாவட்ட இந்து முன்னணி அமைப்பாளர் செல்வகுமார், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில், கூறியுள்ளதாவது:மாநில இந்து சமய நலத்துறை குறிப்பிட்டுள்ள வாடகை, குத்தகை தொகை ஊட்டியில் வசூலிக்கப்படுவதில்லை; இதுதொடர்பான, அரசாணை தங்களுக்கு வரவில்லை, என ஊட்டி மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் கூறி வருகிறார். அரசாணை வெளியிடப்பட்டு நான்கரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், ஊட்டியில் மட்டும் இந்த அரசாணை கிடைக்கவில்லை, எனக் கூறி அரசின் சட்டத்தை பின்பற்ற காலம் தாழ்த்தும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தவிர, கோவில்களுக்கு சொந்தமான நிலம், வீடு, கடைகளை அனுபவித்து வருபவர்கள் பாக்கி வைத்துள்ள வாடகை, குத்தகை தொகையை உடனடியாக வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு செல்வகுமார் கூறியுள்ளார்.

ஆட்சி மாறினாலும், கதை தொடகிறது போலும்: தமிழகத்தில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 36,451 கோவில்கள் உள்ளன. புனித மடங்கள், 56 உள்ளன. கோவிலுடன் இணைந்த மடங்கள், 57 உள்ளன. ஜெயின் கோவில்கள், 17 உள்ளன. கோவிலுக்குச் சொந்தமான, 1,83,669 ஏக்கர் விளை நிலம், 2,18,226 ஏக்கர் தரிசு நிலம், 20,746 ஏக்கர் மானாவாரி நிலம் உள்ளது. இந்நிலங்கள், குறைந்த தொகைக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. பெரும்பாலான நிலம், ஆக்கிரமிப்பாளர்களிடம் சிக்கியுள்ளன. கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுத்தவர்கள், முறையாக, கோவிலுக்கு வாடகை செலுத்துவதில்லை. இதனால், கோவிலுக்கு வரும் வருமானம் பாதிக்கப்படுகிறது. கோவிலில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வது சிரமமாக உள்ளது. வாடகையை வசூலிக்க கோவில் நிர்வாகம், நடவடிக்கை எடுத்தால், சிலர் நீதிமன்றத்திற்கு சென்றுவிடுகின்றனர். சிலர் ஆளுங்கட்சியினர் உதவியை நாடுகின்றனர். இதனால், வாடகை வசூலிப்பது குதிரைக் கொம்பாக உள்ளது. ஆண்டுகணக்கில் வாடகை செலுத்தாமல், பல லட்சம் ரூபாய் பாக்கி வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் முக்கியப் பிரமுகர்களாக உள்ளனர். அவர்களிடமிருந்து வாடகை வசூலிப்பதற்காக, அதிக பாக்கி வைத்திருப்போரின் பெயர், அவர் செலுத்த வேண்டிய தொகை போன்ற விவரங்களை, கோவில் தகவல் பலகையில் எழுதி வைக்கும்படி, செயல் அலுவலர்களுக்கு அறநிலையத் துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தகவல் பலகையில் பெயர் இடம்பெற்று, பக்தர்களிடம் அசிங்கப்படுவதை தவிர்க்க, பாக்கித் தொகையை செலுத்துவர் என, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.

அண்ணா பிறந்த காஞ்சிபுரம் வழிகாட்டுகிறது: காஞ்சிபுரத்தில் கோவிலுக்குச் சொந்தமான நிலம் மற்றும் கட்டடத்தை அனுபவித்துக் கொண்டு, லட்சக்கணக்கில் பாக்கி வைத்துள்ளவர்கள் விவரங்களை, கோவில் தகவல் பலகையில் எழுதி வைக்கத் துவங்கி உள்ளனர். குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இருவருடைய பெயர் இடம் பெற்றுள்ளது. காங்கிரஸ் பிரமுகரான அரங்கநாதன், 19.61 லட்சம் ரூபாய் கடன் பாக்கி வைத்துள்ளார். நாராயணன், 3.12 லட்சம் ரூபாய் பாக்கி வைத்துள்ளார்[13]. இதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள பெரிய கோவில்களில், அறிவிப்புப் பலகைகளில் பெயர்களை எழுதி வைக்க, அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு, பாக்கி வைத்திருப்போர் பெயர்களை வெளியிடுவது, பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. பெயர் பலகையில் வெறும் பெயரை மட்டும் எழுதாமல், அவர்கள் என்னப் பதவியில் உள்ளனர், எந்த பொறுப்பில் உள்ளனர் என்ற விவரத்தையும் எழுதி வைத்தால், பாக்கி விரைவாக வசூலாக வாய்ப்புண்டு. காஞ்சிபுரம் மாவட்டத்தில், கோவில்களுக்கு, வாடகை பாக்கி வைத்திருப்போர் பெயர் பட்டியல் வெளியிடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. கோவில்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல், பாக்கி வைத்திருப்போர் பெயர் மற்றும் முகவரியை, கோவில் அறிவிப்பு பலகையில் வெளியிடும்படி, கோவில் செயல் அலுவலர்களுக்கு, உயர் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். அதன்படி காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பாக்கி வைத்திருப்போர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து பிற கோவில்களிலும், வாடகை பாக்கி வைத்திருப்போர் பட்டியலை வெளியிடும் பணி நடந்து வருகிறது. காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர்கோவில், வைகுண்ட பெருமாள் கோவில், பிள்ளையார்பாளையம் மகாஆனந்த ருத்ரேஸ்வரர் கோவில், அறம்வளத்தீஸ்வரர் கோவில், ஆகியவற்றில் வாடகை பாக்கி வைத்திருப்போர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது[14].

திருப்போரூர் என்ன சளைத்ததா?: திராவிடர் பாதை எல்லா ஊரிலும் பின்பற்றத்தான் செய்வார்கள். கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று தமிழன் சொன்னது அக்காலத்தில், இன்றோ, ஒரு கோவிலையும் கொள்ளையடிகாமல் இருக்கவேண்டாம் என்று திராவிடர்கள் செயல்பட்டு வருகின்றனர். கந்தசுவாமி கோவில் நிர்வாகம், கோவிலுக்கு மனை வரி, நிலம் குத்தகை, கட்டட வாடகை, என பாக்கி வைத்துள்ளவர்கள் பெயர் மற்றும் அவர்கள் செலுத்த வேண்டிய தொகை விவரம் அச்சிடப்பட்ட விளம்பரப் பதாகையை, கோவில் அலுவலகம் முன் வைத்துள்ளது.

கோவில்களில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும்: ராமகோபாலன்[15]: தரிசன கட்டணத்தை ரத்து செய்வதுடன் கோவில்களில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும் என இந்து முன்னணி நிறுவன தலைவர் கூறியுள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை விளக்குத்தூண் பகுதியில் இருந்து விநாயகர் சிலை நேற்று ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வைகை ஆற்றில் கரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி நிறுவன தலைவர் ராமகோபாலன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “’கோவில்களில் சுவாமி தரிசனத்துக்கு கட்டணம் வசூலிப்பது தமிழகத்தில் தான் நடக்கிறது. கேரளா மற்றும் வடமாநில கோவில்களில் இப்படி கட்டணம் வசூலிப்பது கிடையாது. காசு கொடுத்து சாமியை பார்க்க சாமி காட்சி பொருள் அல்ல. எனவே தரிசன கட்டணத்தை அரசு ரத்து செய்ய வேண்டும். மேலும் கோவில்களில் உள்ள கடைகள் அனைத்தையும் அரசு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள கோவில்களுக்கு குத்தகை பாக்கி ரூ.200 கோடி வரை உள்ளது. இவற்றை இந்து அறநிலையத்துறை முறையாக வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாக்கி தொகையை வசூலிக்க அரசு அவசர சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். இல்லை என்றால் கோவில் களை பாதுகாக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் போலீஸ் அதிகாரிகள், துறவிகள், இந்து அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் அடங்கிய ஒரு குழு அமைத்து அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்’’என்று பேசினார்.

வேதபிரகாஷ்

07-10-2012


[5] தினமலர், அக்டோபர் 6, 2012. சென்னைப் பதிப்பு.

[6] தினமலர், ஆகஸ்ட் 14,2012, http://www.dinamalar.com/district_detail.asp?id=529267

[7] இதிலென்ன “ஜரூராக” வசூல் செய்வது என்று தெரியவில்லை. கோவிலுக்கு பாக்கி செல்லுத்தாமல் இருப்பவர்கள் இந்துக்கள் என்றாலும் அவர்கள் இந்து மதத்தின் விரோதிகள் என்றுதான் ஆகிறார்கள். அவர்கள் நவீன கால இரண்யகசிபுகள் எனலாம். அனவே அவர்கள் பெருமைப்பட்டுக் கொள்வதில் ஒன்றும் விஷயமில்லை, மாறாக வெட்கப்பட்டு, கூனிக்குருக வேண்டும். நாத்திகர்கள் என்றோ, ககுத்தறிவுவாதிகள் என்றோ கூட சொல்லிக்கொள்ளமுடியாது, அப்படி செய்தால், அவர்கள் இந்து துரோகிகளைவிட மோசமானவர்கள் எனலாம்.

[9] “We have recovered a little more than 46 grounds from encroachers after starting our drive in March (2012). The property recovered is worth more than Rs 230 crore,” says P. Vijaykumar Reddy, the temple takkar (trustee).

[13] தினமலர், பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2012,23:46 IST; மாற்றம் செய்த நாள் : அக்டோபர் 01,2012,05:16 IST

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=557027

[14] தினமலர், அக்டோபர் 05,2012, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=560259

 

கோவில் நிலங்களை இனி விற்பதில்லை: இந்து அறநிலையத்துறை முடிவு!

நவம்பர்12, 2011

கோவில் நிலங்களை இனி விற்பதில்லை:  இந்து அறநிலையத்துறை முடிவு!

பகுத்தறிவு-நாத்திகப் போர்வையில் தமிழர்களை “திராவிடர்களாக்கி”[1], இந்திய விரோதிகளாக்கி[2], இந்து விரோதிகளாக்கி[3], மற்ற இந்திய மொழி பேசும் மக்களுடனும் பிரச்சினையைக் கிளப்பி[4], அண்டை மாநிலங்களுடன் சண்டை போட்டுக் கொண்டு[5], “தெற்கு தேய்கிறது” என்று சொல்லி, இவர்களே நன்றாகத் தேய்த்து, கோடிகளில் சுருட்டிவிட்டு[6], மற்ற மாநிலங்களை விட பிற்படுத்தச் செய்தது தான் இவர்கள் ஆண்ட லட்சணம். அந்நிலையில் கோவில்களைக் கொள்ளையடித்ததில் இவர்கள் மாலிக்காபூர், ஔரங்கசீப் போன்றவர்களையும் மிஞ்சி விட்டனர். அவர்கள் மதவெறியால், கொள்ளையடித்ததை, இவர்கள் துவேஷத்தால், சட்டத்தை வளைத்து, விதிகளை மீறி, அதிகாரம் மூலம் கொள்ளையடித்து வருகின்றனர். “கருணாநிதி-ஜெயலலிதா” ஒன்றும் “திராவிட-ஆரிய” சின்னங்கள் அல்ல. திமுக-அதிமுகவும் அது போலத்தான். திராவிடப் பாரம்பரிய அரசியலில் ஊறிப் போனவர்களுக்கு, நெற்றியில் குங்குமம்-விபூதி-சந்தனம் வைத்துக் கொண்டாலும், வைத்துக் கொள்ளாவிட்டாலும், கொள்ளையடிப்பதில் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சித்தலைமை மாறினாலும், நடப்புகள், செயல்கள், முடிவுகள் எல்லாம் ஒரே மாதிரியாகத்தான் இருந்துள்ளன. ஜெயலலிதா ஆட்சியில் கொஞ்சம் குறைந்துள்ளது எனலாம் அல்லது அவ்வாறு தோற்றமளிக்கலாம்.

இந்து அறநிலையத் துறையே கோவில் சொத்துக்களை விற்று மோசடி செய்து வந்த விவரங்களை கீழ் கண்ட கட்டுரைகளில் விவரித்துள்ளேன்:

எண்

தலைப்பு

இணைத்தள விவரம்

Tenants of mutt and temple lands seek ownership rights: The TN Government scam to grab the Temple lands (27-08-2008)  http://vedaprakash.indiainteracts.in/2008/08/27/tenants-of-mutt-and-temple-lands-seek-ownership-rights-the-tn-government-scam-to-grab-the-temple-lands/
1 Tenants of mutt and temple lands seek ownership rights: The TN Government scam to grab the Temple lands (02-09-2008))  http://dravidianatheism.wordpress.com/2008/09/02/tenants-of-mutt-and-temple-lands-seek-ownership-rights-the-tn-government-scam-to-grab-the-temple-lands/
2 பல கட்டுரைகள் (குறிப்பாக கீழ்கண்டவை கொடுக்கப் பட்டுள்ளன) https://atheismtemples.wordpress.com 
3 நாத்திக ஆட்சியாளர்களும், கோவில் நிர்வாகமும் https://atheismtemples.wordpress.com/2009/09/18/atheist-rulers-temple-administration/ 
4 இந்து அறநிலையத்துறைக்குப் பிறகு குடிசைமாற்றுவாரியம் மூலம் கோவில் நிலங்களை ஆக்கிரமிக்க முயலும் நாத்திக அரசு! https://atheismtemples.wordpress.com/2010/09/10/atheist-rulers-encroach-temple-lands-through-slum-clearance-board/
5 ரூ.5,000/- கோடி மதிப்புள்ள சிவன் கோயில்நிலம் ஆக்கிரமிப்புவிவகாரம்: ரோசையா கருணாநிதி சமரசம்! https://atheismtemples.wordpress.com/2010/08/09/%E0%AE%B0%E0%AF%82-5000-crores-valued-siva-temple-encroached-in-taamilnadu-belonging-to-andhrapradesh/
6 செஞ்சி கோவில் வழக்கு: இந்துக்களும், கிருந்துவர்களும் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன? https://atheismtemples.wordpress.com/2011/08/20/gingee-kothandaramar-temple-liberated-from-the-christians/
7 செஞ்சி கோவில் வழக்கு (2): இந்துக்களும், கிருந்துவர்களும் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன? https://atheismtemples.wordpress.com/2011/08/21/gingee-temple-liberated-duties-of-hindus/

இந்து சமய அறநிலையத் துறை எடுத்துள்ள முடிவு[7]: கோவில் சொத்துக்களை, குடியிருப்போருக்கு விற்பது, ஓர் ஆபத்தான முயற்சியாகவே கருதப்படுகிறது. எனவே,

தினமலர் 12-11-2011 தேதியிட்ட நாளிதழில் வெளியாகியுள்ள இக்கட்டுரையில் (சென்னைப் பதிப்பு, பக்கம்.2) இவ்வாறு செய்தி இருந்தாலும், ஏற்கெனவே விற்றது, விற்றதுதான் என்றாகிறது. அதனையும் சட்டரீதியாக அரசு மீகவேண்டும். கோவில் நிலத்தை அடாவடியாக வாங்கியவர்கள் நிச்சயமாக ஏழைகள் அல்லர். ஆகவே, சிவன் சொத்தை அவர்கள் தாராளமாக திருப்பிக் கொடுத்து கைலாசத்திற்குச் செல்ல தயாராக இருக்கலாம்.

இனி, கோவில் நிலங்களை விற்பதில்லை என, இந்து சமய அறநிலையத் துறை, அதிரடி முடிவை எடுத்துள்ளது. கோவில் நிலத்தை விற்பனை செய்யலாமா, கூடாதா என முடிவு செய்யும் அதிகாரத்தை, அறநிலையத் துறைச் சட்டம், 1959ன் பிரிவு 34, அத்துறை ஆணையருக்கு அளிக்கிறது. அந்த விற்பனையும், கோவிலின் நலன் கருதி, மிக மிக அவசியமாகக் கருதப்பட்டால் மட்டுமே, மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், எப்போதுமே, சட்டத்துக்கு மாறாகத் தானே நடைமுறை இருக்கும். உள்ளூர் பலம், அரசியல் பின்புலம் மூலம், சட்ட ரீதியாகவே வாங்கி, கோவில் சொத்துக்களை, “ஸ்வாகா’ செய்வோர் அதிகரித்து வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், முக்கியத்துவம் வாய்ந்த முடிவை, இந்து சமய அறநிலையத் துறை எடுத்துள்ளது.
திருவல்லீஸ்வரர் கோவில் நிலத்தை குறைந்த விலையில் 1984ல் விற்றது: சென்னையின் பிரபலமான கோவில்களில் ஒன்று, பாடி திருவல்லீஸ்வரர் கோவில்; பல்லவர்கள் காலத்துக்கும் முந்தையது. புண்ணியாத்மாக்கள் பலரின் முயற்சியால்,

அப்பொழுதெல்லாம் புண்ணிய ஆத்மாக்கள் கோவில்களுக்கு நிலம், வீடு என்று எழுதி வைத்து விட்டு சாகும். ஆனால், இப்பொழுதுள்ள தினமலர் 12-11-2011 தேதியிட்ட நாளிதழில் வெளியாகியுள்ள இக்கட்டுரையில் (சென்னைப் பதிப்பு, பக்கம்.2) இவ்வாறு செய்தி இருந்தாலும், ஏற்கெனவே விற்றது, விற்றதுதான் என்றாகிறது.

இந்தக் கோவிலுக்கு, பாடியிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், 55 ஏக்கருக்கும் மேல் நிலம் உள்ளது. இதில், 125 கிரவுண்டு மற்றும் 751.75 சதுர அடி நிலத்தில், 126 பேர் வரை குடியிருந்து வந்தனர். இவர்கள் அனைவரும், “ஜெகதாம்பிகை நகர் கூட்டுறவு வீட்டு மனை சங்கம்’ என்ற பெயரில் ஒரு சங்கத்தைத் துவக்கி, “நாங்கள் குடியிருக்கும் அடிமனையை எங்களுக்கே விற்று விடுங்கள்’ என, கோரிக்கை வைத்தனர். அப்போதிருந்த கோவில் நிர்வாகமும், அறநிலையத் துறையும் அதை ஏற்று, 66 பேருக்கு, அடிமனையை கிரையம் செய்து கொடுத்துவிட்டன. இது நடந்தது 1984ல். அப்போது, ஒரு கிரவுண்டு, வெறும் 12 ஆயிரம், 15 ஆயிரம் மற்றும் 16 ஆயிரம் என விற்கப்பட்டது.
நிலம் கிடைக்காதவர் வழக்குத் தொடுக்க ஆரம்பித்தது பிரச்னை: ஒரு பாதிப் பேருக்குக் கிடைத்துவிட்டால், மறு பாதியினர் விடுவரா? தங்களுக்கும் விற்பனை செய்ய வேண்டும் என, விடுபட்டவர்களுடன் புதிதாகச் சிலரும் சேர்ந்து, மொத்தம் 135 பேர், சட்டப் போராட்டத்தைத் துவக்கினர். சென்னை ஐகோர்ட்டில் வழக்கு, தள்ளுபடி,

சட்டத்தை அரசியல்வாதிகள் தாம் வளைப்பார்களா, அதற்கென வக்கீல்களும் உள்ளனரே. குங்குமம் / விபூதி / சந்தனம் வைத்துக் கொண்டால் என்ன, காசு என்றால், பக்தன்னான வக்கீலும் வாதிட வந்து விடுகிறார்களே? வென்றால் 1% என்றால் கூட லட்சங்களில் கிடைக்கும் எனும்போது, சிவனாவது, சொத்தாவது, தானே சிவனாகிவிட மாட்டானா?

உத்தரவு, ரத்து என, அத்தனை அத்தியாயங்களும் அரங்கேறின. கடைசியாக, கடந்த ஜூலையில், “இவர்களுடைய கோரிக்கைகளை ஏற்பதா, மறுப்பதா என்பது குறித்து, பரம்பரை அறங்காவலர் மற்றும் பொதுமக்களின் ஆலோசனை, ஆட்சேபனைகளைப் பெற்று, எட்டு வாரத்துக்குள், அறநிலையத் துறை ஆணையர் இறுதி முடிவெடுக்க வேண்டும்’ என, ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்பிய அறநிலையத் துறை அதிகாரிகளும், ஆணையரும், விரிவான ஆலோசனை மேற்கொண்டனர். வழக்கு யுத்தம் துவங்கிய 25 ஆண்டுகளில், எல்லாமே தலைகீழாக மாறிவிட்டிருந்தது. பாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள அம்பத்தூர், முகப்பேர், அண்ணா நகர் மேற்கு, கிழக்கு போன்ற பகுதிகளில், ஒரு கிரவுண்டு நிலத்தின் விலை, ஒரு கோடி ரூபாயை எட்டிவிட்டது. வாடகை, பூஜை கட்டணங்கள், உண்டியல் வருவாய், நன்கொடைகள் என, கோவிலின் வருவாயும் அதிகரித்து விட்டது. திருவல்லீஸ்வரரின் அருளால், வங்கியில் ஒரு கோடி ரூபாய் வைப்புத் தொகை இருக்குமளவு, கோவிலின் நிதிநிலை உயர்ந்து விட்டது. “”முன்னோர், கோவிலைப் பரிபாலனம் செய்வதற்குக் கொடுத்த சொத்துக்களை அபிவிருத்தி செய்யலாமே தவிர, விற்கக் கூடாது” என, அக்கோவிலின் பரம்பரை அறங்காவலர் சண்முகசுந்தரம், கடுமையாக வாதிட்டார்.

கோவில் நிலத்தை இனி விற்பதிலை – உருப்படியான முடிவு: நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, அறநிலையத் துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவு: “கோவில் இடத்தில் குடியிருந்து வருவோருக்கு, அந்த நிலத்தை விற்பனை செய்வது, ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்து, தமிழகம் எங்கும் உள்ள கோவில் சொத்துக்கள், பராதீனம் அடையும் சூழ்நிலையை ஏற்படுத்தும். மேலும்,

யார் தானமாகக் கொடுத்ததை யார் விற்பது? அறநிலையத் துறைக்கு அத்தகைய அதிகாரம் இருந்தால், அதுவே சட்டத்திற்குப் புறம்பானது. கொடையாக பக்தர்கள் கொடுத்த நம்பிக்கையை / பிணையை அறுப்பதற்கு எந்த சட்டத்திற்கும் உரிமை இல்லை. நூறு / ஆயிரம் ஆண்டுகளாக இருக்கும் கோவில் சொத்துகளை, வாங்க-விற்க யாருக்கும் அதிகாரம் இல்லை.

பணவீக்கத்தின் காரணமாக, ரூபாயின் மதிப்பு ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகிறது; அசையாச் சொத்துக்களின் மதிப்பு உயர்ந்து கொண்டே போகிறது. இன்றைய நில விற்பனைத் தொகை, நாளை எவ்விதத்திலும் கோவிலுக்குப் பயன்படாத நிலையாக மாறும். எனவே, கோவில் சொத்துக்களை, குடியிருப்போருக்கு ஒட்டுமொத்தமாக விற்பது, ஓர் ஆபத்தான முயற்சியாகவே கருதப்படுகிறது. எதிர்காலத்தில், கோவில்களின் நலன் பாதிக்கும் என்பது, தொலைநோக்குப் பார்வையில் புலப்படும். இவ்வாறான விற்பனை முடிவுகள், இதர கோவில்களுக்குச் சொந்தமான நிலங்களில் குடியிருப்போருக்கும், ஒரு தூண்டுகோலாக அமைந்து, கோவில் நிலங்களுக்கு, ஒரு பொதுவான ஆபத்து ஏற்படும். எனவே, திருவல்லீஸ்வரர் கோவில் மனைகளை விற்க முடியாது”, இவ்வாறு, ஆணையர் உத்தரவிட்டார். அறநிலையத் துறை ஆணையரின் இந்த அதிரடி உத்தரவால், இனி, தமிழகத்தில் உள்ள எந்தக் கோவிலின் சொத்துக்களும், விற்பனை செய்யப்பட முடியாத, ஆரோக்கியமான நிலை உருவாகியுள்ளது.

சிவன் சொத்து குலநாசம் / தெய்வம் நின்று கொல்லும்: 1968ல் குத்தகைக்கு என்று இந்நிலம் கொடுக்கப்பட்டது[8]. 1984ல் ஆணை போட்டு விற்கப்பட்டது[9]. 1984லிருந்து அனுபவித்து வந்த நிலையில், சிலர் 1987ல் அறத்துறை ஆணையை எதிர்த்து வழக்குப் போட[10], 1994ல் வழக்கு போல, உயர்நீதி மன்றம் தீர்ப்பை மறுபரிசீலினை செய்ய அறத்துறைக்கு திரும்ப அனுப்பியது[11]. 29.8.1997 to 8.6.2000. காலகட்டத்தில் நடந்ததை விசாரிக்கப்பட்டது. 2004ல் தீர்ப்பு வழங்க[12], 2007ல் உயர்நீதி மன்றம் ஆணையிட[13] இப்பொழுது நடவடிக்கை எடுக்கிறார்கள் போலும்.  இவ்வாறு 1968ல் அண்ணாதுரை காலத்தில் இருந்து, ஜெயலலிதா காலம் வரை இழுத்தடிக்க முயன்ரவர்களுக்கு, இன்னும் இழுத்தடிக்கவா தெரியாது. சட்ட ரீதியாக மேல் முறையீடு என்றெல்லாம் இருப்பதால், வாங்கியவர்கள் பழுத்த “சிவபக்தர்களாகவே” இருந்தாலும் விட்டுவிடப் போவதில்லை. ஆகவே இவர்கள் மறுபடியும், உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம் என்று போய்கொண்டுதான் இருப்பார்கள். அதற்கு அந்த வக்கீல்கள் உதவி செய்து கொண்டுதான் இருப்பார்கள். இறைவன் “திருவிளையாடல்” புரிந்து இவர்களை மாற்றினால் தான் உண்டு. இல்லையெனில், இவர்கள் எல்லாவற்றையும் மாற்றி விடுவார்கள். எப்படி கருணாநிதி / ஜெயலலிதா வாழ்க்கைகள்[14] இப்பொழுது உள்ளனவோ அல்லது முந்தைய ஆட்சியாளர்கள் இறந்து மறைந்தார்களோ, அதே நிலை தான் எல்லோருக்கும் ஏற்படும். தெய்வம் நின்று கொல்லும் என்பது தப்பாமல் நடக்கும்.
வேதபிரகாஷ்

12-11-2011


[1] சரித்திர ரீதியில் இல்லாத “ஆரிய-திராவிட” இனவாத கட்டுக்கதைகளை, இனவெறியோடு இன்றும் அத்தகைய மாயைகளை கட்டிப் பிடுத்துக் கொண்டு, மக்களை முட்டாளக்கி வருகின்ற மாநிலல் தமிழ்நாடு தான் அல்லது அவ்வறு உலகர்ட் உலகதிலேயே நம்பி வரும் கூட்டமும் இங்குதான் உள்ளது.

[2] 1969களில் அண்ணதுரை “அந்தர் பல்டி” அடித்து பயந்து இந்திய அரசியல் சட்டத்திற்கு பணிந்தாலும், தமிழ்நாட்டில், இன்னும் கூட சில “அறிவு ஜீவிகள்” தமிழ்நாடு, தனிநாடு என்றெல்லாம் பேசி-எழுதிக்கொண்டுதான் இருக்கின்றன.

[3] இங்குதான் மற்ற இந்து விரோதிகளும் சேந்து கொள்கின்றனர். அதனால் தான் கோவில் சொத்துகளை கிருத்துவர்கள், முஸ்லீம்கள் கூட வாங்கிக் கொள்கிறார்கள், திருடுகிறர்கள், கொள்ளையெடிக்கிறார்கள். அந்தகால சேவியர், மாலிக்காபூர், ஔரங்கசீப் போல நடந்து கொள்கிறார்கள். அநியாயம், அக்கிரமம், கொடுமை, கொடூரங்களை செய்து வருகிறார்கள்.

[4] ஹிந்து ஒழிக, ஹிந்திகாரர்கள் ஒழிக, வந்தேரிகள், உறிஞ்சிகள். என்றெல்லாம் பேசுவது, அவர்களைத் தாக்குவது, ஆனால் மறைமுகமாக அவர்களுடனே உறவுகள் வைத்துக் கொண்டு அல்லது பணத்தை வாங்கிக் கொண்டு மக்களை ஏமாற்றி வருவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே தான்! அப்பொழுது அவர்கள் ஹிந்தியில் பேசுவார்கள் பாருங்கள், அப்பொழுது தமிழர்களே முழிப்பார்கள், “”எப்படி இந்த திராவிடர்கள் இந்தி பேசுகிறார்கள் இல்லை இந்தி பாடையில் செல்கிறார்கள்?” என்று!

[5] எப்பொழுது பார்த்தாலும் நதி நீர் பிரச்சினை என்று வைத்த்க் கொண்டு கேரளா, கர்நாடகா, ஆந்திரா என்று பிரச்சினைகளை வைத்துக் கொண்டிருப்பதை காணலாம். மற்ற நேரங்களில் அதைப் பற்ரி பேச மாட்டார்கள். தொழிற்சாலைகள் அங்கு சென்றுள்ளதை கவனிக்கலாம். உற்பத்தி செய்யும் தொழிர்சாலைகள் இங்கு இருந்தாலும், விற்பனை செய்வது தமிழகத்திற்கு வெளியில் நடபதைப் பார்க்கலாம்.

[6] கான்டிரேக்டுகளில், டென்டர்களில் கொள்ளையெடித்ததை, இப்பொழுது 2-ஜி என்று, “ஆரியர்களுடன்” செந்து கொண்டு கொள்ளையெடித்திருக்கிறார்கள்.

[7] தினமலர் சிறப்பு நிருபர், கோவில் நிலங்களை இனி விற்பதில்லை: அறநிலையத்துறை முடிவு, பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2011,23:32 IST, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=347526

[8] மிக்கப்படித்த அறிஞர் அண்ணாதுரை எப்படி அப்படி 1968ல் குத்தகைக்குக் கொடுத்தார் என்று தெரியவில்லை. ஒருவேளை, பீரங்கியால் பிளக்க முடியாதத்தை இப்படி பிளந்து விடலாம் என்ற சாதுரியத்தில் கொடுத்தார் போலும்!

[9] Na.Ka.No.11/76 R2, dated 7.12.1984 followed with Government Order dated 7.12.1984.

[10] The said order dated 7.12.1984 was challenged by some of the individuals interested in the welfare of the temple in W.P.No.286 of 1986.

[11] The Court by order dated 11.1.1994 set aside the order of the second respondent dated 7.12.1984 and remitted the matter back to the Commissioner, HR&CE for fresh disposal by following the provisions of the Act and Rules.

[12] EXECUTIVE OFFICER versus JAGATHAMBIGAI NAGAR- High Court of Madras

http://www.rishabhdara.com/sc/view.php?case=75110

http://indiankanoon.org/doc/1730914/

[13] தீர்ப்புகளின் படி, வேலைசெய்ய எவ்வளவு காலத்தை எடுத்த்க் கொள்கின்றனர், அதற்கேற்றபடி, எப்படி கோவில் நிலம் அனுபவிக்கப் படுகிறது என்பதையெலாம் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

27Mar2007 (GJX) 0009 MAD

Madras High Court

THE EXECUTIVE OFFICER, CHENNAI & ANOTHER

Vs.

JAGATHAMBIGAI NAGAR CO-OPERATIVE HOUSE SITE SOCIETY, REP BY ITS PRESIDENT, CHENNAI & OTHERS

Decided on: March 27, 2007

http://www.ejurix.in/Cases/MAD/MAD-2007/27Mar2007%20(GJX)%200009%20MAD.htm

(2007) 4 MLJ 476 (Mad)

http://mljlibrary.com/nominal-index/C1MF4PC1MH6RF4P.htm

[14] இங்கு எந்த தனிப்பட்ட நபர்களைப் பற்றி குறைசொல்லவில்லை. ஆட்சியாளர்களாக இருக்கும் போது, எவ்வாறு கோவில் நிலம் விற்கப்படுகிறது, அக்காரியம் சாதாரணமாக நீதிமன்றங்களில் குறிப்பிட்ட சட்டப்பிரிவுகளில் அலசப்படுகின்றன என்ருதான் எடுத்துக் காட்டப்படுகிறது. ஏனெனில், அந்நிலத்தை கோவிலுக்கு தானமாகக் கொடுத்த போது, எந்த சட்டத்திற்கும் உட்பட்டு கொடுக்கவில்லை என்பத்கு தான் உண்மை. அதாவது அந்நிலத்தை யாரும் விற்கவும் முடியாது, வாங்கவும் முடியாது.

கோவில் கருவறை கதவில் வடகலை / தென்கலை நாமத்திற்கு எதிர்ப்பு – உள்மதப் பிரச்சினைகள் இந்து மதத்தை பாதிக்கும் (1)

செப்ரெம்பர்2, 2011

கோவில் கருவறை கதவில் வடகலை / தென்கலை நாமத்திற்கு எதிர்ப்பு – உள்மதப் பிரச்சினைகள் இந்து மதத்தை பாதிக்கும் (1)

இந்து மதத்தை பாதிக்கும் சச்சரவுகள்: நாமம் இடுவதற்கு இப்படி வைணவர்கள் அடிக்கடி பிரச்சினை கிளப்புவது, சண்டை போடுவது, ஏன் நீமன்றங்களுக்குச் செல்வது முதலியன, இந்துமதத்தை குறைகூற ஏதுவாகும் நிகழ்ச்சிகள் போல உள்ளன.  யானைக்கு, கதவிற்கு, என எல்லாவற்றிற்கும் சண்டை போடுவது கடவுளுக்கு சந்தோஷத்தையளிக்குமா என்று பக்தர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.  இது புறமதக்காரர்களுக்கு, நாத்திகர்களுக்கு மற்ற வேண்டாதவர்களுக்கு உபயோகமாக இருக்குமேத் தவிர, சண்டையிடும் பக்தகளுக்கு ஒரு பிரயோஜனமும் ஏற்படாது என்பதுதான் உண்மை. இதனால் தான், “வைணவர்களிலே – வடகலை நாமம், தென்கலை நாமம் போட்டவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டால் அதற்காக உடனே போய் சுவரில் முட்டிக் கொள்ளும் வழக்கம்”, என்று விடுதலை நாளிதழ் கிண்டலடிக்கிறது[1]. முன்பு “சடாரி மரியாதை” குறித்து பிரச்சினை ஏற்பட்டதற்கு உச்சநீதி மன்றம் வரை சென்றுள்ளனர். அப்பொழுது, இப்பிரச்சினைகளை நாத்திக அரசு அதிகமாக ஊக்குவிப்பதை எடுத்து காட்டியுள்ளேன்[2]. முடிவாக இப்படி பதிவு செய்தேன்.

இது வடகலை-தென்கலை என்ற பிரச்சினையைவிட நாத்திகர்கள் ஏற்படுத்திய குளறுபடியாகத்தான் தெரிகிறது: முன்னமே இவர்கள் இவ்வாறு நிறைய தகராறுகள் செய்துள்ளனர் அல்லது ஆங்கிலேயர்களால் தூண்டிவிடப் பட்டு அவ்வாறான கலாட்டாக்களை செய்துள்ளனர். இப்பொழுது இந்த கருப்புப் பரிவார் இதனை உபயோகித்துக் கொள்கிறது. மற்ற வழக்குகளை விட்டுவிட்டு சுப்ரீம் கோர்ட்டும், இதை விசாரித்து, இந்த சந்தர்ப்பத்தில் தீர்ப்பு அளிப்பதும் வினோதமா அல்லது அரசு இட்ட ஆணையா என்று காலம் தான் பதில் சொல்லியாக வேண்டும்.

கம் செப்டம்பர் – நாமப்பிரச்சினை: வைணவர்களுக்கு பிரச்சினைகள் ஆரம்பித்துவிடும் போல இருக்கிறது. செப்டம்பரில் இந்துக்களுக்கு பல முக்கியமான விழாக்கள், பண்டிகைகள் வரும். முக்கியமாக வைணவ கோவில்களில் பிரம்மோட்சவம் நடத்தப்படும். இதனுடன் நாமப் பிர்ச்சினையும் வந்து விடுவது வருத்தமாக இருக்கிறது. எந்த நாமத்தைப் போட்டால் என்ன, அல்லது அமைதியாகவே இருந்து விட்டால் என்ன என்று யோசிக்குக் நிலையில் ஊடகங்களில் செய்திகளாக வரும் அளவிற்கு பக்தர்கள் போராடுவது விந்தையே. இத்தகைய போராட்டங்களை கோவிலை கொள்ளைய்டிப்பவர்களுக்கு, சிலைகளை-விக்கிரங்களைத் திருடி விற்ப்பவர்களுக்கு, கோவில் நிலங்களை-சொத்துக்களை அபகரிப்பவர்களுக்கு எதிராக நடத்தினால் நன்றக இருக்கும்.

காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோவிலின் கருவறை வெள்ளிக் கதவில், வடகலை நாமம் பொறிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு (2011): காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோவிலின் கருவறை வெள்ளிக் கதவில், வடகலை நாமம் பொறிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோவிலில், அறநிலையத்துறை ஆணையரின் அனுமதியின்றி வடகலை, தென்கலை தொடர்பாக எதையும் சேர்க்கக் கூடாது, என்ற அரசின் உத்தரவு உள்ளது. இதை மீறி கடந்த மாதம் ஜூலை 25ம் தேதி, கோவிலின் கருவறையில் வெள்ளிக் கதவு பொருத்தப்பட்டுள்ள, சங்கு சக்கரம் சின்னங்களுடன் உள்ள கதவில், வெள்ளியிலான வடகலை நாமம் திடீரென பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு, சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள யதீந்த்ர ப்ரவண சபை எதிர்ப்பு தெரிவித்துள்ளது[3]. கோவிலின் அறிவிப்பு பலகையில் இதுகுறித்து முறையான அறிவிப்பு ஏதும் வெளியிடப்படாமல், கடந்த மாதம் 25ம் தேதி மாலை பக்தர்கள் அனுமதிக்கப்படாமல், மாலையில் ரகசியமாக வெள்ளிக் கதவு பொருத்தப்பட்டுள்ளது. எவ்வளவு கிலோ வெள்ளியால் செய்யப்பட்டது, யார் இந்த வெள்ளிப் பொருட்களை நன்கொடையாகக் கொடுத்தது என்ற அறிவிப்பின்றி இந்த கதவு பொருத்தப்பட்டுள்ளது. இக்கதவு செய்தது போக மீதமுள்ள வெள்ளிப் பொருட்களை, கோவில் நிர்வாகத்தில் உள்ளவர்கள் சுருட்டியிருப்பார்களோ, என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது[4]. புதிதாக பொருத்தப்பட்டுள்ள வெள்ளிக் கதவில் உள்ள வடகலை நாமத்தை அகற்ற முற்பட்டபோது, அங்கிருந்த அர்ச்சகர்கள் அதைத் தடுத்துவிட்டனர். அறநிலையத்துறை ஆணையர் போனில் உத்தரவிட்ட பின்னும், அந்த நாமத்தை அகற்ற அர்ச்சகர்கள் மறுத்தனர். இதற்கு முறையான விளக்கம் அளிக்கும்படி, யதீந்த்ர ப்ரவண சபைத் தலைவர் கே.எஸ்.சம்பத்குமார் கோரிக்கை வைத்திருக்கிறார்.

செப்டம்பர் 2010ல், திருமலையிலும் இதே போன்ற பிரச்சினை கிளம்பியது[5]: திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மத்தியில் எழுந்துள்ள வடகலை, தென்கலை திருநாமம் பிரச்னை குறித்து ஆந்திர மாநில கவர்னர் நரசிம்மன் கவனத்திற்கு புகார் அனுப்பியுள்ளதாக அகோபில மடம் செயலர் சேஷாத்ரி தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் திருமலையில் நடக்கும் ஆண்டு பிரம்மோற்சவ விழாவின் வாகன சேவையின்போது கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர்களிடையே திருநாமம் முக்கியத்துவம் குறித்து வடகலை, தென்கலை நாமப் பிரச்னை தொடர்ந்து பல ஆண்டுகளாக, “நீறுபூத்த நெருப்பு போல்’ இருந்து வருகிறது. இந்த ஆண்டும் 18-09-2010 சனியன்று திருமலையில் நடந்த ரத உற்சவத்தின்போது திருநாமத்துடன் கூடிய பெரிய துணியால் தயாரிக்கப்பட்ட ஆங்கில “ஏ’ எழுத்து போன்ற கூடாரம் வாகன சேவைக்கு முன்னும் பின்னும் அணிவகுத்து செல்வது வழக்கமாக நடந்து வருகிறது. இதில் வடகலை நாமம் வெளியில் தெரியாமல் துணியை மூடிவிட்டனர். தென்கலை நாமம் பிரிவைச் சேர்ந்த அர்ச்சகர்கள் வேண்டுமென்றே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் என வடகலை பிரிவைச் சேர்ந்த அர்ச்சகர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டினர். பிரம்மோற்சவ வாகன சேவையின்போது தொடர்ந்து, “வடகலை’ நாமத்திற்கு அவமானம் நடந்து வருவதாக இப்பிரிவைச் சேர்ந்த அர்ச்சகர்கள், கவர்னரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென கூறியதன் பேரில் வடகலை, தென்கலை திருநாமப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணக்கோரி அகோபில மடம் செயலர் சேஷாத்ரி 18-09-2010 அன்று பேக்ஸ் மூலம் கவர்னருக்கு புகார் அனுப்பி வைத்துள்ளார். இப்பிரச்னைக்கு கவர்னர் நரசிம்மன் சரியான தீர்வு காண வேண்டுமென அர்ச்சகர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும், உற்சவத்தின்போது ரதத்தின் மீதுள்ள மரத்திலான மரப்படிவம் உடைந்து விழுந்தது. இதனால் மேல் பகுதியில் தங்கக் தகடுக்கு கீழ் பாகத்தில் இருந்த துணி காற்றுக்கு விலகி விட்டது. இந்த சம்பவமும் அர்ச்சகர்கள், பக்தர்கள் மத்தியில் உற்சவத்தின்போது பரபரப்பாக பேசப்பட்டது[6].

மார்ச் 2001ல் ஸ்ரீரங்கத்தில் இதே பிரச்சினை[7]: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்து முடிந்த பின் ராஜகோபுரத்தில் தென்கலை நாமம் போடப்பட்டுள்ளது புதிய பிரச்சனையை கிளப்பியுள்ளது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு இந்த மாதம் 15-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின் உலகிலேயே உயரந்த 237 அடி உயரமுள்ள ராஜகோபுரத்தில் தென்கலை நாமம் போடப்பட்டது. இது வடகலை குழுவினரை புண்படுத்துவதாக ஸ்ரீரங்கம் அகோபில மடத்தின் 45-வது பீடாதிபதியான ஜீயர் சுவாமிகள் கூறியுள்ளார்.  இந்த விஷயத்தில் முதல்வர் கருணாநிதி தலையிட்டு சுமுகமான தீர்வு காணுமாறு அவர்கேட்டுக் கொண்டுளளார்[8].  இது குறித்து ஜீயர் சுவாமிகள் நிருபர்களிடம் கூறுகையில், ராஜகோபுரம் எனக்கு முன்பு இருந்த ஜீயர் சுவாமிகளால் கட்டப்பட்டது. அவர் வடகலை நாமம் போடுபவராக இருந்தாலும் அவர் எந்த விதமான பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காக எந்தவிதமான நாமமும் போடாமல் விட்டுவிட்டார்[9]. ஆனால் இப்போதுள்ள கோவில் அதிகாரிகள் கும்பாபிஷேக புணரமைப்புப் பணி எனக் கூறி கும்பாபிஷேகம் முடிந்தவுடன்  ராஜகோபுரத்தின் ஆறாவது வாயிலில் தென்கலை நாமத்தை வைத்து அதற்கு நியான் விளக்கும் போட்டுள்ளார்கள்[10]. இதுவடகலை நாமம் போடுபவர்களை புண்படுத்தும் செயலாகும். இதே போல் கோவிலின் தேசிகர் சுவாமி சன்னிதியிலும் தென்கலை நாமம் போடப்பட்டுள்ளது. இந்த கோவில் வடகலை நாமம் போடுபவரால் பராமரக்கப்பட்டு வருகிறது. ஆனால், இங்கு தென்கலை நாமம் போடப்படடுள்ளது.

நல்லவேளை நாமம் விவகாரத்தில் கருணாநிதி வரவில்லை போலும்: இந்த விஷயத்தில் முதல்வர் தலையிட்டு எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் சுமுகமான தீர்வு ஏற்படுத்த முயல வேண்டும் என்றார். [குங்குமம் வைத்ததற்கே என்ன நெற்றியில் ரத்தம் வருகிறதே என்ற கேட்ட ஆசாமியிடம் போய் புகார் கொடுக்கும் இவரை என்னென்று சொல்வது] கும்பாபிஷேகத்திற்கு முன், ஸ்ரீரங்கம் கோவில் கலாச்சார பாதுகாப்புக் குழு செயலாளர் கிருஷ்ணமாச்சாரி என்பவர் மூலஸ்தானத்தில் இருக்கும் ரங்கநாதர் மார்பில் இருந்த வஸ்தாலட்சுமியின் திருவுருவவம் நீக்கப்பட்டு அங்கு முக்கோண வடிவிலான எந்திரம் வைக்கப்பட்டிருக்கிறது என புகார் கூறினார். இது குறித்து தமிழக முதல்வருக்கும் தந்தி அனுப்பினார்.  கும்பாபிஷேகத்திற்கு முன்பே அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு மீண்டும் வஸ்தாலட்சுமியின் திருவுருவத்தை பிரதிஷ்டை செய்ய வைத்தது என்பது நினைவு கூறத்தக்கது [நல்லவேளை கருணாநிதி தான் செய்து வைத்தார் என்று குறிப்பிடாமல் இருந்தார்களே].

யானைக்கு எந்த நாமம் பொடுவது? ஸ்ரீ ரங்கத்திலே ஒரு யானை இருந்தது. 1918 -19 ல் ஒரு வழக்கு. யானைக்கு வடகலை நாமம் போடுவதா அல்லது தென்கலை நாமம் போடுவதா என்ற பிரச்சினை வைணவகளுக்குள் ஏற்பட்டது.  அப்பொழுது நீதி மன்றங்களை கடந்து, பிரைவி கவுன்சில் வரைக்கும் வழக்குப் போனது. கவுன்சிலிலே விசாரித்து ஒரு உத்தரவு போட்டார்கள். யானைக்கு ஒரு மாதம் வடகலை நாமம், ஒரு மாதம் தென்கலை நாமம் போடலாம் என்று சமரச தீர்ப்பு கொடுக்கப்பட்டது. அதன்படியே ஸ்ரீரங்கத்திலிருக்கிற வடகலை நாமக்காரர்கள் கெட்டிமேளத்தோடு வந்து ஒரு மாதம் யானைக்கு வடகலை நாமம் போட்டார்கள், பிறகு தென்கலை நாமக்காரர்கள் ஒரு மாதம் யானைக்குத் தென்கலை நாமம் போட்டார்கள். மூன்று மாதங்கள் நடந்த இந்த அல்லோகலத்தில் யானை சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டதாம். மறுநாள் பத்திரிகைக்கைகளில் ஸ்ரீரங்கத்து யானைக்கு மதம் பிடித்து சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டது என்று செய்தி வந்தது. ஆனால், அதற்கு அடுத்த நாள் அதே பத்திரிகைகளில் வேறு செய்தி கூறியதாவது, ஸ்ரீரங்கத்து யானைக்கு மதம் பிடிக்கவில்லை, அப்படி தவறுதலாகப் பிரசுரிக்கப்பட்டது, உண்மையில் யானைக்கு மதம் பிடிக்காமல்தான் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடியது, என்று விளக்கம் கொடுக்கப்பட்டதாம்.

வேதபிரகாஷ்

02-09-2011


[2] வேதபிரகாஷ், காஞ்சிபுரத்தில் சண்டை, https://atheismtemples.wordpress.com/2010/05/31/intra-religious-strife-in-kanchipuram-over-ritual-going-to-court/

தினமலர், கருட சேவையில் மணவாள மாமுனிகளுக்கு சடாரி மரியாதை: சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=7205&Print=1

[3] தினமலர், கோவில் கருவறை கதவில் வடகலை நாமத்திற்கு எதிர்ப்பு, செப்டம்பர் 02, 2011, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=305852

[4] வைணவர்கள் தமக்குள் நடக்கும் சண்டையில் இத்தகைய சர்ச்சைக்குரிய விஷயங்களை இப்படி வேடிக்கைக்காகவோ, விமர்சனத்திற்காகவோ, விவகாரத்திற்காகவோ தாமாகவோ அல்லது பத்திரிக்கை நிருபர் வழிகாகவோ “கமண்டாக”க் கூட அனுமதித்திருப்பது அல்லது நிருபரே சுதந்திரமாக நுழைத்து அவ்வாறு “கமண்ட்” அடித்திருப்பது என்பதையும் நோக்கத்தக்கது.

[6] இத்தகைய உணர்வுகள், சிந்தனைகள் இருக்கும் போது, ஏன் பக்தர்கள் சண்டை போட்டுக் கொள்ள வேண்டும் என்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

[8] இப்படி திருடனிடத்தில் சாவியைக் கொடுப்பது போல, இந்துக்களுக்கு விரோதியாக, இந்து-விரோத-நாத்திகனாக செயல்பட்டு வரும் கருணாநிதியிடத்தில் புகார் செய்ததே வேடிக்கை தான்.

[9] இதே சமரச அல்லது அமைதியான மனப்பாங்கு தான் மற்றவர்களிடமும் இருக்கவேண்டும், எதிர்பார்க்கப்படுகிறது.

[10] இதிலிருந்தே, நாத்திகக்காரர்கள் செய்துள்ள விஷமம் என்று நன்றாகவே புரிந்து கொள்ளலாமே. அறநிலையத்துறை ஆட்கள் அவ்வாறு செய்கின்றனர் என்றால், குடுமி முடிச்சி விடுகின்றனர் என்பதனைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதைவிடுத்து, அவர்களிடமே புகார் கொடுத்தால், உள்ள வேறுபாட்டை அறிந்து கொண்டு, அதிலிருந்து தங்களுக்கு என்ன ஆதாயம் கிடைக்கும் என்றுதான் பார்ப்பார்கள்.

குங்குமம் வைத்தவர்களைத் திட்டி, கஞ்சிகுடித்து, மஞ்சள் சைக்கிள்களை பண்டார-பரதேசிகளுக்குக் கொடுப்பது பிராயச்சித்தமா, தேர்தல் யுக்தியா?

ஒக்ரோபர்19, 2010

குங்குமம் வைத்தவர்களைத் திட்டி, கஞ்சிகுடித்து, மஞ்சள் சைக்கிள்களை பண்டார-பரதேசிகளுக்குக் கொடுப்பது பிராயச்சித்தமா, தேர்தல் யுக்தியா?

பண்டாரப்பரதேசிகளின் வெட்கமற்ற செயல்: கோவில்களில் பணியாற்றும், 10 ஆயிரம் பண்டார-பரதேசிகளுக்கு / அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு, இரண்டு கோடியே 78 லட்ச ரூபாய் செலவில், இலவச சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தை, முதல்வர் கருணாநிதி / இந்து விரோதி கருணாநிதி துவக்கி வைத்தார்[1]. பண்டாரப்பரதேசிகளும் வெட்கம் இல்லாமக் குழைக்குபிடு போட்டு தள்ளிக் கொண்டு போயினர். பகுத்தறிவு என்று இந்த பரதேசிகளுக்கு, பண்டாரங்களுக்கு ஏனில்லை என்று தெரியவில்லை! மேலும் இவர்கள் எல்லோரும் இந்துக்களா இல்லையா என்ற சந்தேகமும் வருகிறது!

இவ்வாறு கோவில் பூஜாரிகள் தன்மானம் இல்லாமல், கொடுப்பதை வாங்கிக் கொண்டு செல்கின்ற நிலையில் இருக்கின்றதால், இவர்கள் எல்லோருமே பூசாரிகளா அல்லது இந்து விரோதிகளா என்ற ஐயமும் எழுகின்றது.

ஒருகால பூஜை என்று கோவிலுக்குரிய சொத்துக்களை அபகரித்து போடும் நாடகம்: கோவிலுக்குரிய சொத்துக்கள் இருந்தால், கோவிலில் ஏன் ஒருகால பூஜை நடக்கவேண்டும் என்றரியாத பேதைகள். தமிழக அரசின், ஒரு கால பூஜைத் திட்டத்தில் நிதியுதவி பெறும் கோவில்கள் பெரும்பாலும், கிராமங்களில் உள்ளன. இக்கோவில்களின் அர்ச்சகர்கள், பூசாரிகள் குறித்த நேரத்தில் கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்ய ஏதுவாக, அவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுமென, சட்டசபையில் இந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்தது.

அடையாளமாக இலவசமா, இலவசமாகக் கொள்ளையா? இந்த அறிவிப்பை செயல்படுத்த, தமிழகம் முழுவதும், 10 ஆயிரம் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு, இரண்டு கோடியே 78 லட்ச ரூபாய் செலவில் இலவச சைக்கிள்கள் வழங்க, முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, 10 ஆயிரம் சைக்கிள்கள் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகம் முழுவதும் உள்ள அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு இலவசமாக வழங்கும் திட்டத்தை, முதல்வர் கருணாநிதி நேற்று பு‌னித ஜா‌ர்‌‌ஜ் கோ‌ட்டை‌யி‌ல் நடைபெ‌ற்ற ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் முத‌ல் பயனா‌ளி‌யிட‌‌ம் அவ‌ர் சை‌க்‌கிளை வழ‌ங்‌கினார். இதற்காக தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த விழாவில், அடையாளமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த, 200 பேருக்கு, முதல்வர் கருணாநிதி, சைக்கிள்களை வழங்கி, வாழ்த்தினார்.

கோவில்களை முழுவதுமாக அழித்துவிட இந்து விரோதிகள் போட்ட திட்டம் நன்றாகவே வேலை செய்ய ஆரம்பித்து விட்டது என்பது தெரிகின்றது. யார் வேண்டுமானாலும் பூசாரி ஆகலாம் என்ற தத்துவம் நன்றாகவே வைசெய்கிறது போலிருக்கிறது. இவ்வாறு இந்து-விரோதிகளே பூசாரிகளாக நுழைந்து விட்ட பிறகு, வெளியிலிருந்து எந்த ஔரங்கசீப்பும், மாலிக்காபூரும் வரத்தேவையில்லை!

ஆயுத பூஜையில் பெரியார் கரடிகள் புகுந்த போது, இந்த நாத்திக அரசன் மணி அணித்துக் கொண்டிருந்தானா? ஒரு பூசாரி சொல்கிறார்[2], “ஊர் ஊராகச் சென்று பூசை செய்வதற்கக வசதியாக இருக்குமாம்”! நாத்திக ஆட்சியிலேயே, கோவில்கள் இடிக்கப்படுகின்றன, விக்கிரங்கள் திருடப்படுகின்றன, சிலைகள் கடத்தப்படுகின்றன, உலோகமாக எது இருந்தாலும் திருடப்படுகிறது, கோவில் நிலைத்தை அரசே பட்டாப்போட்டு விற்க்கிறது,…………இந்நிலையில் பண்டாரங்களுக்கு மஞ்சள் சைக்கிள் கொடுக்கும் மர்மம் என்ன? அவர்கள் பூஜை செய்ய போவார்களா அல்லது கரடிகளுடன் சேர்ந்து கொண்டு உள்ளவற்றையும் கொள்ளையெடுத்துக் கொண்டு போவார்களா?


[1]தினமலர், அர்ச்சகர்களுக்கு இலவச சைக்கிள் திட்டம் : முதல்வர் துவக்கி வைத்தார், அக்டோபர் 18,2010,  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=108963