Archive for the ‘சுற்றுச் சுவர்’ Category

திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்: கோவில் நிலங்களுக்காக சட்டப்படி போராடும் பிரமிக்க வைக்கும் வீரர்! (2)

திசெம்பர்15, 2022

திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்: கோவில் நிலங்களுக்காக சட்டப்படி போராடும் பிரமிக்க வைக்கும் வீரர்! (2)

06-12-2022 அன்று பிறப்பிக்க்கப் பட்ட ஆணை – திருச்செந்தூர் ஆக்கிரமிப்பு: திருச்செந்தூரில் ஆக்கிரமிப்பில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்துக்கு ரூ.100 கோடி மதிப்பிலான சொந்தமான 3.5 ஏக்கர் நிலத்தை 12 வாரத்தில் மீட்க வேண்டும் என அறநிலையத் துறை ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[1]. ராமநாதபுரத்தைச் சேர்ந்த மார்கண்டன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு[2]: “திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே தருமபுரம் ஆதீன மடத்துக்கு சொந்தமான 3.5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். ஆதீன நிலத்தை மீட்கவும், அந்த சொத்தை பாதுகாக்கவும் அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும்,” இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு இன்று நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தருமபுர ஆதீன மடத்திற்கு சொந்தமான சொத்து ஆக்கிரமிப்பு தொடர்பான ஆதாரங்கள், போலி பத்திரப்பதிவு ஆவணங்கள் ஆகியன தாக்கல் செய்யப்பட்டன. திருச்செந்தூர் கோயில் உதவி ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு[3]: ”திருச்செந்தூரில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆதினத்திற்கு சொந்தமான சொத்துகளுக்கு 1971 வரை வாடகை செலுத்தி வந்தனர். அதன்பிறகு, முறைகேடாக பத்திரப் பதிவு செய்துள்ளனர். ….ஆதீன மடத்துக்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் வசமிருக்கும் ஆதீன மடத்தின் சொத்துக்களை அறநிலையத் துறை ஆணையர் உடனடியாக மீட்டு ஆதீன மடத்திடம் ஒப்படைக்க வேண்டும். இப்பணியை 12 வாரத்தில் முடிக்க வேண்டும்,” என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்[4]. அதற்குள் இன்னொரு வழக்கு வந்து விட்டது போலும்.

12-12-2022 அன்று மறுபடியும் விசாரணைக்கு வந்தது: திருத்தொண்டர் சபை நிறுவனர்  ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்[5]. அதில் மதுரை ஆதீன மடம் மிகவும் பழமையான, பிரசித்திபெற்ற மடமாக இருந்து வருகிறது[6]. இந்த மடத்திற்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சொத்துக்கள் உள்ளது[7]. இதன் தற்போதைய மதிப்பு பல நூறு கோடி ரூபாய் ஆகும்[8]. இந்நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு அப்போது இருந்த மதுரை 292 அருணகிரி ஆதீனம் தரப்பில் சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் தாலுகா மதுரை விமான நிலையம் அருகில் உள்ள 1191 ஏக்கர் நிலங்களை பாண்டிச்சேரியைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களுக்கு 99 வருட ஒத்திக்கு (பவர் ஒப்பந்தம்) செய்யப்பட்டுள்ளது[9]. இதை வைத்து 2018 ஆம் ஆண்டு பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது[10]. இது சட்டவிரோதமானது[11]. ஆதீன மடங்களுக்கு சொந்தமான சொத்தை தனியாருக்கு விற்பனை செய்ய முடியாது என சட்டம் உள்ளது[12]. மேலும் நீதிமன்ற தீர்ப்புகளும் உள்ளது. இந்நிலையில் ஆதீன மடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலம் தனியார் நிறுவனத்திற்கு சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது[13]. எனவே சட்ட விரோதமாக பதியப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்[14]. இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போதைய 293 வது ஆதீனமான ஞான சம்பந்தர் தரப்பில் வழக்கறிஞர் அருண் சாமிநாதன் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் மறைந்த 292 வது ஆதீனம் இருந்த போது, இந்த  ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தற்போது இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் சட்டவிரோதமாக பத்திர பதிவு செய்தவர்கள் வெளியேற மறுக்கின்றனர். அவர்கள் பண பலமிக்கவர்களாக உள்ளனர். எனவே நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பித்து சட்ட விரோதமாக பத்திரப்பதிவு செய்தவர்களை வெளியேற்ற வேண்டும் என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், மதுரை விமான நிலையம் அருகில் உள்ள மதுரை ஆதின மடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலத்தை மீட்க இந்து அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தேவைப்படும் பட்சத்தில் காவல்துறையினர் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

2016ல் மேல்நிலை நீர் தேக்க தொட்டிநாகப்பட்டினம் மாவட்டத்தில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டது: நாகப்பட்டினம் மாவட்டத்தில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை இடிக்கக் கோரி சென்னை உயர் நிதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது[15]. மதுரை ஆதீனத்தின் மேலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், மதுரைஆதீனத்துக்குச் சொந்தமாக மதுரை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நிலங்கள் உள்ளதாகவும், நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகேயுள்ள பன்னத்தெரு கிராமத்தில் உள்ள நிலத்தில் தங்களிடம் அனுமதி பெறமலேயே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியில் அரசு ஈடுப்பட்டடிருப்பதாக குறிப்பிடப்பட்டது. இது தொடர்பாக பன்னத்தெரு பஞ்சாயத்து தலைவரிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லையென குற்றம்சாட்டப்பட்டது. தங்களது நிலத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு இடைக்கால விதிப்பதோடு அதனை இடிக்க உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கூறப்பட்டது.இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்த போது,  நாகை மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகளை எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டு,  விசாரணையை வரும் 22ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது..

15-11-2022 – கோவில் நிலத்தை மீட்க ஒத்துழைக்காவிடில் சிறை! அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை: கோவில்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்கும் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்க மறுத்தால் சிறை செல்ல நேரிடும்’ என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரித்துள்ளது[16]. திருச்சி சாவித்ரி துரைசாமி என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது[17]: மயிலாடுதுறை மாவட்டம் தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமாக பல பகுதிகளில் சொத்துக்கள் உள்ளன. திருச்சி மற்றும் திருக்கற்குடியில் ஆதீனத்திற்கு சொந்தமான நிலத்தை சில மூன்றாம் நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் ஆதீனத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அறநிலையத்துறைக்கு புகார் அனுப்பினோம். நிலத்தை மீட்டு ஆதீனத்திடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். அந்த மனுவை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்தியநாராயணபிரசாத் அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: கோவில்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்கும் விவகாரத்தில் மெத்தனமாக செயல்படக் கூடாது. மீட்பு பணியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்க மறுத்தால் சிறை செல்ல நேரிடும். இவ்வழக்கில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அறநிலையத்துறை தரப்பில் வரம் 23ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.

© வேதபிரகாஷ்

15-12-2022.


[1] தமிழ்.இந்து,திருச்செந்தூரில் தருமபுரம் ஆதீன மடத்துக்கு சொந்தமான நிலங்களை மீட்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு, கி.மகாராஜன், Published : 07 Dec 2022 06:32 PM, Last Updated : 07 Dec 2022 06:32 PM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/911413-lands-of-darumapuram-atheena-mutt-in-tiruchendur-to-be-recovered-high-court-orders-charities-department-1.html

[3] பத்திரிக்கை.காம், தருமபுர ஆதீன மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான திருச்செந்தூர் நிலம் ஆக்கிரமிப்பு! மீட்டு ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு, By A.T.S Pandian, December 7, 2022.

[4] https://patrikai.com/thiruchendur-land-worth-rs-100-crore-belonging-to-dharmapura-aadheena-mutt-encroached-high-court-order-to-recover/

[5] மாலை முரசு, மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான நிலத்தை சட்ட விரோதமாக பதிவு செய்த தனியார் நிறுவனம்…! ரத்து செய்யகோரிய வழக்கு..!, webteam webteam, Dec 13, 2022.,19:26.

[6] https://www.malaimurasu.com/posts/tamilnadu/A-private-company-illegally-registered-the-land-belonging-to-Madurai-Adheenam–Cancellation-of-the-case

[7] தினகரன், மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான 1,191 ஏக்கர் நிலத்தை மீட்க ஐகோர்ட் கிளை உத்தரவு, 2022-12-14@ 00:11:35

[8] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=822214

[9] தினத்தந்தி, மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான 1200 ஏக்கர் நிலங்களை மீட்க வேண்டும்- அறநிலையத்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு, தினத்தந்தி டிசம்பர் 14, 1:40 am.

[10] https://www.dailythanthi.com/News/State/madurai-belongs-to-adeena1200-acres-of-land-should-be-recovered-madurai-high-court-orders-the-charities-department-857420

[11] தினகரன், மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான 1,191 ஏக்கர் நிலத்தை மீட்க ஐகோர்ட் கிளை உத்தரவு, 2022-12-13@ 17:19:26.

[12] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=822113

[13] தமிழ்.ஒன்.இந்தியா, 1191 ஏக்கர் நிலம்.. தனியார் நிறுவனத்திடம் வழங்கிய மதுரை முன்னாள் ஆதீனம்! மீட்க உயர்நீதிமன்றம் ஆர்டர், By Noorul Ahamed Jahaber Ali, Updated: Tuesday, December 13, 2022, 20:14 [IST]

[14] https://tamil.oneindia.com/amphtml/news/madurai/high-court-orders-to-seize-1191-acre-land-of-madurai-aadheenam-489467.html

[15] மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டு வரும் நீர்தேக்க தொட்டியை இடிக்கக் கோரி வழக்கு, NEWS18 TAMIL, LAST UPDATED : AUGUST 15, 2022, 22:06 IST  , Published by: Raj Kumar, First published: August 15, 2022, 22:06 IST

https://tamil.news18.com/news/tamil-nadu/madurai-adeenam-files-case-on-construction-of-water-tank-786692.html

[16] தினமலர், கோவில் நிலத்தை மீட்க ஒத்துழைக்காவிடில் சிறை! அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை, Updated : நவ 16, 2022  07:12 |  Added : நவ 16, 2022  07:11.

[17] https://www.dinamalar.com/news_detail.asp?id=3171654

திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்: கோவில் நிலங்களுக்காக சட்டப்படி போராடும் பிரமிக்க வைக்கும் வீரர்! (1)

திசெம்பர்15, 2022

திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்: கோவில் நிலங்களுக்காக சட்டப்படி போராடும் பிரமிக்க வைக்கும் வீரர்! (1)

திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்: திருக்கோவில் நிலங்களை ஆக்கிரமிப்புகளில்ருந்து மீட்கப் போராடி வருகிறவர்களில், சமீபத்தில், பல வழக்குகள், தீர்ப்புகள், நீதிபதி ஆணைகள், செய்திகள் என்று பலவற்றை வாசிக்கும் பொழுது, “திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்,” என்று தோன்றும் போது, பிரமிப்பாக இருக்கிறது. திருமூலர் சொல்லியபடி, “கோவில் மதிற்சுவரிலிருந்து ஒரு செங்கல் விழுந்தாலும், அரசாட்சி வீழும்,” என்பது போல, இவரது வழக்குகளிலிருந்து, நீதி வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆக்கிரமிப்பார்கள், குத்தகையாளர்கள், ஆட்சியாளர்கள் முதலியோர் அஞ்சுவார்களா, இல்லை, “கடவுள் இல்லை,” என்று ஈவேராவை நம்பி, திராவிடத்துவாதிகள் துணை கொண்டு, தொடர்ந்து, சட்டங்களை வளைப்பார்களா என்றெல்லாம் பொறுத்து தான் பார்க்க வேண்டும். ஆனால், நிச்சயமாக கடவுள் இருக்கிறார், “தெய்வம் நின்றுதான் கொல்லும்”! வாழ்க அவரது பணி!

36,590 கோயில்களுக்குக் கீழே 4,22,000 ஏக்கர் நிலங்களும் 56 மடங்களுக்குக் கீழே கிட்டத்தட்ட 56,000 ஏக்கர் நிலங்களும் இருக்கிறது: இந்து சமய அறநிலையத்துறை கொள்கைவிளக்கக் குறிப்பேட்டில் தமிழகத்தில் மொத்தம் 56 ஆதீன மடங்களும், அதற்குக் கீழே 57 கோயில்கள் இருப்பதாகவும் குறிப்பு இருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் 36,590 கோயில்களுக்குக் கீழே 4,22,000 ஏக்கர் நிலங்களும்; 56 மடங்களுக்குக் கீழே கிட்டத்தட்ட 56,000 ஏக்கர் நிலங்களும் இருப்பதாக அறநிலையத்துறையின் தகவல் தெரிவிக்கிறது. திருவாவடுதுறை ஆதீனம், வானமாமலை ஆதீனம், திருக்குறுங்குடி ஜீயர் மடம், தர்மபுரம் ஆதீனம், மதுரை ஆதீனம், திருப்பனந்தாள் காசி மடம், அகோபில மடம், காஞ்சி சங்கர மடம் போன்ற சில ஆதீன மடங்களுக்குச் சொந்தமாகத்தான் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் குவிந்துகிடக்கின்றன. திருவாவடுதுறை ஆதீனத்துக்கு மட்டும் சுமார் 19,000 ஏக்கர் நிலம் சொந்தமாக இருக்கிறது. ஆதீனத்துக்குச் சொந்தமான இந்த நிலங்கள் மக்களுக்குக் குத்தகைவிடப்படுகின்றன; வாடகைக்கும் விடப்படுகின்றன; இவற்றின் மூலமாக வருமானம் வருகிறது.

2018ல் திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் தொடுத்த வழக்கு: இந்தச் சூழலில் அண்மைக் காலமாக கோயில்கள், ஆதீனங்கள், மடங்களுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப் படுவதாகவும், சட்ட விரோதமாக விற்கப் படுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இது தொடர்பாக திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்[1]. அந்த மனுவில் இப்படிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது[2]… “தூத்துக்குடி மாவட்டம் நெடுங்குளத்தில் இருக்கிறது `செங்கோல் ஆதீனம்.’ இந்த ஆதீனத்துக்குச் சொந்தமான நிலங்கள் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் முறைகேடாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கின்றன. இதனால் அரசுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை உடனடியாக மீட்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.’ 

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீனங்கள் மற்றும் மடங்களையும் இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக இணைக்கஉத்தரவிட்டது: இந்த வழக்கு விசாரணையில், `தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீனங்கள் மற்றும் மடங்களையும் இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக இணைக்க’ உத்தரவிட்டிருக்கிறது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. மேலும், `தமிழகத்திலுள்ள ஆதீனங்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான சொத்துகள் மற்றும் நிலங்கள், இதரச் சொத்துகள், குத்தகை மற்றும் வாடகைக்கு விடப்பட்டுள்ள விவரங்களை அறநிலையத்துறை உடனடியாகத் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி அனைத்து ஆதீனம் மற்றும் மடங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.   

மனுதாரர் ராதாகிருஷ்ண சொன்னது: இது தொடர்பாக வழக்கை தாக்கல் செய்த திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனர் மற்றும் தலைவரான ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்… “உயர் நீதிமன்றம், `தமிழகத்திலிருக்கும் கோயில், ஆதீனங்கள் மற்றும் மடங்களின் நிலங்களை அளந்து ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை மீட்க வேண்டும்என்று அறநிலையத்துறையினருக்கு உத்தரவிட்டது. ஆனால், எந்த ஆக்கிரமிப்பு மீட்பு நடவடிக்கையையும் யாரும் மேற்கொள்ளவில்லை. மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் `செங்கோல் ஆதீனத்துக்கு உரிய நிலங்களை மீட்க வேண்டும் என்று கூறி பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தோம். நீதிமன்றமே மற்ற ஆதீன நிலங்களின் ஆக்கிரமிப்பு தகவல்களைக் கேட்டறிந்து, அனைத்து ஆதீன மடங்களையும் வழக்கில் எதிர் மனுதாரர்களாக இணைத்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை, 55,820 ஏக்கர் நிலங்கள் ஆதீனங்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. ஆனால், ஆதீன மடங்களுக்கு உரிய நிலத்தை அளந்தால் இதன் மதிப்பு இன்னும் அதிகமாகும். தனிப்பட்டவர்களின் சுயநலத்தால் நிலங்களை மீட்க முடியாத சூழல் நிலவிக்கொண்டிருக்கிறது. கண்துடைப்புக்காக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அனைவரையும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் அனைத்து நிலங்களையும் மீட்டு வருவாயை ஒழுங்குபடுத்தினால், பல்வேறு நலத்திட்டப் பணிகளை மேற்கொள்ள முடியும்.

கோயில் மற்றும் ஆதீன, மட நிலங்களை விற்பவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். வாங்கும் நடுத்தர மக்கள் சிக்கிக்கொள்கிறார்கள்; கோயில் மற்றும் ஆதீன, மட நிலங்களை விற்பவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். ஆனால், அதை வாங்கும் நடுத்தர மக்கள்தாம் சிக்கிக்கொள்கிறார்கள். திருக்கோயில், ஆதீன, மடங்களின் பட்டா, புறம்போக்கு நிலங்களுக்கு `தரும சாசன சொத்துகள்’ என்று பெயர். `இந்த தரும சாசனச் சொத்துகளை யார் வாங்கி பட்டா போட்டுக்கொண்டாலும், அது செல்லாது’ என்று உச்ச நீதிமன்றமே அறிவித்திருக்கிறது. பொது மக்கள் யாரும் கோயில் மற்றும் ஆதீன, மட நிலங்களை வாங்கி ஏமாற வேண்டாம். அந்த நிலங்கள் மீண்டும் தன்னிச்சையாக திருக்கோயில் வசம் வந்துவிடும். தர்ம சாசன நிலங்களை விற்பவர்கள் மீதும், வாங்குபவர்கள் மீதும் குண்டர் சட்டம் பாயும்படி சட்டம் இயற்றப்பட வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில் மக்களுக்கும் இது தொடர்பாக விழிப்புஉணர்வு அதிகம் வந்திருக்கிறது.. ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் தொடர்பாக வழக்கு, நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது. நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம்…,” என நம்பிக்கையுடன் பேசுகிறார் ராதாகிருஷ்ணன்.

`சிவன் சொத்து குல நாசம்என்றாலும், விற்கிறார்கள், வாங்குகிறார்கள்: `சிவன் சொத்து குல நாசம்’ என்பார்கள். பல்வேறு காலகட்டங்களில் நம் முன்னோர்களால் தானமாக, புனித காரியங்களுக்காக அளிக்கப்பட்ட இந்த நிலங்களை அத்துமீறி அனுபவிப்பது என்பது தவறான செயல். தர்ம சாசன சொத்துகளை முறைகேடாக வாங்கியவர்களே கோயிலுக்குத் திருப்பிக் கொடுக்க முன்வர வேண்டும். இந்து சமய அறநிலையத்துறையும் ஆக்கிரமிக்கப்பட்ட மற்றும் முறைகேடாக விற்கப்பட்ட நிலங்களை விரைந்து மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்..!

18-10-2022 அன்று விசாரணைக்கு வந்தது, 28-10-2022 தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டது: சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு, அக்டோபர் 18, 2022 அன்று  நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது[3]. அப்போது நீதிபதிகள், “ஆதீன மடத்தின் சொத்துகள் தனியாருக்கு குத்தகைக்கு வழங்கியது அதிர்ச்சி அளிக்கிறது. ஆதீன மடங்கள் மடங்களாக செயல்படுகிறதா? இல்லை, வியாபார நிறுவனங்களாக செயல்படுகிறதா? ஆதீன மடத்தின் சொத்துகளை குத்தகைக்கு விடுவதை எந்தச் சட்டம் அனுமதிக்கிறது? ஆதீன மடங்கள் அனைத்தும் இந்து சமய அறநிலைத்துறைக்கு கட்டுப்பட்டவை. இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் மடத்தின் மீது நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு அதிகாரம் உள்ளது. அதிகாரம் உள்ள நிலையில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?, ” என கேள்வி எழுப்பினர்[4]. தொடர்ந்து, மனுதாரர் கோரிக்கை தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் விசாரித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த நிலங்களில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு வந்தால் உடனடியாக நிறுத்த வேண்டும். வழக்கு விசாரணை அக்டோபர் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

© வேதபிரகாஷ்

15-12-2022.


[1] விகடன், கோயில், ஆதீனங்களுக்குச் சொந்தமான `தரும சாசன சொத்துகளை வாங்கலாமா?, சி.வெற்றிவேல், Published:12 Jun 2018 4 PM;; Updated:12 Jun 2018 4 PM.

[2] https://www.vikatan.com/news/agriculture/customers-are-on-the-waiting-list-for-our-ghee-amazing-youth-in-ghee-production?pfrom=latest-infinite

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், ஆதீன மடங்கள் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பட்டவைஉயர் நீதிமன்ற மதுரை கிளை, Written by WebDesk, Updated: October 20, 2022 7:20:27 am.

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/pil-plea-to-protect-and-safeguard-properties-of-madurai-adheenam-527641/

ஸ்ரீநாகநாத சுவாமி கோவில், மானம்பாடி, கும்பகோணம் –  இடிக்கப் பட்டதும், மிஞ்சியதும், மற்றும் இப்பொழுதைய நிலையும் (3)

நவம்பர்6, 2022

ஸ்ரீ நாகநாத சுவாமி கோவில், மானம்பாடி, கும்பகோணம் –  இடிக்கப் பட்டதும், மிஞ்சியதும், மற்றும் இப்பொழுதைய நிலையும் (3)

UNESCO குழு மே முதல் ஜூன் 2017 வரை ஆய்வு செய்து ஆய்வு முடிவுகளை  அண்மையில்  வெளியிட்டது: கோயில்கள் என்பவை வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல… நிர்வாக மையங்களாகவும், கல்விக் கூடங்களாகவும் விளங்கியுள்ளன.  நம் நாகரிகமும், பண்பாடும் கோயில்களை மையமாக வைத்தே வளர்ந்திருக்கின்றன. அரசர்களால் கட்டியெழுப்பப்பட்டு, இயற்கை சீற்றங்களையும் படையெடுப்புகளையும் தாங்கி பலநூறு ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கும் பழம் பெருமை மிக்கக் கோயில்களை நாம் உரிய முறையில் பாதுகாக்கிறோமா என்றால் வேதனை தான் விடையாக மிஞ்சுகிறது. யுனெஸ்கோ நிறுவனம் கோயில்களை பாதுகாப்பதில் நமக்கிருக்கும் அலட்சியத்தை கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது. அந்த நிறுவனத்தின் உண்மை கண்டறியும்  குழு,  தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கின்ற பழைமை வாய்ந்த கோயில்களை, கடந்த மே மாதம் முதல் ஜூன் மாதம் 2017 வரை ஆய்வு செய்தது. அந்த ஆய்வு முடிவுகளை அண்மையில்  வெளியிட்டது. அந்த ஆய்வு முடிவுகள் தான் தற்போது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளன. பழம் பெருமை மிக்க கோயில்களில் தமிழக அரசு மேற்கொண்ட புனரமைப்புப் பணிகளில் விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதாகவும், அதனால் கோயில்களின் ஸ்திரத்தன்மை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது[1].  யுனெஸ்கோவின் உண்மை அறியும் குழு அறிக்கையில் இடம்பெற்றுள்ள கோயில்களில் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மானம்பாடி நாகநாத சுவாமி கோயிலும் இடம் பெற்றிருக்கிறது[2].    

மானம்பாடிநாகன்பாடிவீரநாராயணபுரம் இருக்கும் இடம்: கும்பகோணம்-சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் சிற்றூர்தான் மானம்பாடி. இங்குள்ள இறைவன், நாகநாதசாமி எனஅழைக்கப்படுகிறார். ஆனால், கல்வெட்டுகளில் இவரது பெயர் கைலாச முடையார் என குறிப்பிடப்பட்டுள்ளது. சோழர் காலத்தில் இவ்வூர் வணிக தலமாக விளங்கியது. நாகன்பாடி என்று அழைக்கப்பட்ட இவ்வூர் பிற்காலத்தில் மானம்பாடி என மருவியது. இந்த ஊர் வீர நாராயணபுரம் என கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.இங்குதான் இருக்கிறது நாகநாத சுவாமி கோயில். இது, 11-ம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. இந்தக் கோயில் கல்வெட்டுகளில் கைலாசநாதர் கோயில் என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது.  காவிரி நங்கையின் அரிய சிற்பம் ஒன்று இந்தக் கோயிலில் இருக்கிறது.

2017ல் கோயிலைப் பற்றி ...விகடன் ஆய்வாளர்  குடவாயில் பாலசுப்பிரமணியனிடம் பேசியது:  பல்வேறு பெருமைகளைக் கொண்ட இந்தக் கோயிலைப் பற்றி வரலாற்று ஆய்வாளர்  குடவாயில் பாலசுப்பிரமணியனிடம் பேசினோம். “இந்தக் கோயில் கங்கை கொண்ட ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. ராஜேந்திர சோழன் பற்றியும் அவனது பேரன் குலோத்துங்கச் சோழன் பற்றியும் ஒன்பது கல்வெட்டுகள் இந்தக் கோயிலில் உள்ளன. எங்குமே காணக் கிடைக்காத அரிய சிற்பங்களும் உள்ளன. குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால், காவிரித் தாய் சிவலிங்கத்துக்கு பூஜை செய்யும் சிற்பமும் நடராஜப் பெருமானின் திருவடிகளுக்கு அருகில் ராஜேந்திர சோழன் குடும்பத்துடன் இருப்பது போன்ற சிற்பமும் ராஜேந்திர சோழனின் ஒன்றரை அடி உயர உருவச் சிற்பமும் இந்தக் கோயிலில் உள்ளன. இந்தக் கோயில் நெடுங்காலமாக சிதிலமடைந்த நிலையிலேயே இருந்தது. இதைப்பற்றி 25 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாடு தொல்லியல் துறையின்  அப்போதைய இயக்குனர் நாகசாமியின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். அவரும் கோயிலைப் பார்வையிட்டு தொல்பொருள் துறையின்  ஸ்தபதிகளைக் கொண்டு பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டார். ஆனால், அவர் பணி ஓய்வு பெற்ற பிறகு, பொறுப்புக்கு வந்த இயக்குநர்கள் யாரும் கோயிலைக் கண்டுகொள்ளவே இல்லை.

நெடுஞ்சாலைத்துறை கைப்பற்றி கோவிலை இடிக்க முற்பட்டது: ‘இந்தக் கோயில் தொல்பொருள் துறைக்குச் சொந்தம்’ என்று  அரசிதழில் வெளியிட்டிருக்கவேண்டும். அதையும் செய்யவில்லை. மற்றுமொரு சிக்கலும் இந்தக் கோயிலுக்கு ஏற்பட்டது. தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக மத்திய அரசு அந்தப் பகுதியில் இருந்த நிலங்களைக் கையகப்படுத்தியது. அப்போது இந்தக் கோயில் அமைந்திருக்கும் இடத்தையும் நெடுஞ்சாலைத்துறை கைப்பற்றியது. கோயிலை இடிப்பதற்காக அடையாளக் குறியீடும் செய்யப்பட்டு விட்டது. அப்போதுதான்  ஊர்மக்கள் மூலமாக எனக்குத்  தகவல் தெரிவிக்கப்பட்டது. ஊர்மக்கள், சமூக ஆர்வலர்களுடன் இணைந்து அதைத் தடுத்து நிறுத்தினோம்[3]. இத்தகவலைக் கேள்விப்பட்ட  இந்து சமய அறநிலைத் துறையினர், தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கோயிலைக் கொண்டு வந்தனர். அதன் பின்னர் தமிழக அரசு,  கோயில் திருப்பணிக்காக நிதி ஒதுக்கியது. கோயில் புனரமைப்பு வேலைகள், கான்ட்ராக்டர் ஒருவரிடம்  ஒப்படைக்கப்பட்டு வேலைகளும் நடந்து கொண்டிருந்தன. வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கும், கான்ட்ராக்டர்களுக்கும் பிரச்னை உருவானது. அதன் பின்னர், வேறோரு கான்ட்ராக்டரிடம் ஒப்படைக்கப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டன. 

திருப்பணிகள் தொடங்கப்பட்டபோது சில நடைமுறைகளைப் பின்பற்றி இருக்கவேண்டும்:

* தொல்பொருள் துறையின் மேற்பார்வையில்தான் திருப்பணிகள் நடைபெற வேண்டும்.

 * திருப்பணிகளைத் தொடங்குவதற்கு முன்பாகக் கோயில் முழுவதுமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கவேண்டும். 

* கோயிலின் தற்போதைய நிலையை, சரியான அளவீட்டுடன்  பொறியாளர்களைக் கொண்டு வரைபடம் ஒன்று தயாரித்திருக்க வேண்டும். 

* ஒவ்வொரு சிற்பத்தின் மீதும் அடையாள எண் குறிக்கப்பட வேண்டும். 

* முழுவதுமாக ஆவணப்படுத்திய பின்னர்தான் வேலைகளையே தொடங்க வேண்டும். 

* நன்றாக இருக்கும் சிற்பங்களை தொடாமல்,  சேதமடைந்த சிற்பங்களை மட்டும் தனியாக எடுத்து பழுதுநீக்க வேண்டும்.

மேற்சொன்ன எந்த நடைமுறையும் மானம்பாடி கோயில் திருப்பணியில்  பின்பற்றப் படவில்லை.  பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் என பல தரப்பிலும் இருந்து இதற்கு எதிர்ப்பு வந்தது. உடனே சிற்பங்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்துவிட்டுச் சென்று விட்டனர். அதனால் சிற்பங்கள் பலத்த சேதமடைந்தன. அதன் பின்னர் அது கண்டுகொள்ளப் படவே இல்லை.  இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலை உடனடியாக கைப்பற்றி, தமிழ்நாடு அரசு தொல்பொருள் துறையிடமோ, இந்தியத் தொல்லியல் துறையிடமோ ஒப்படைக்க வேண்டும். இதுதான் உடனடியாக மேற்கொள்ளவேண்டிய பணி” என்று ஆதங்கமாகக் கூறினார் பாலசுப்பிரமணியன். 

வேதபிரகாஷ்

06-11-2022


[1] விகடன், அலட்சியத்தால் சிதைக்கப்பட்ட, 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மானம்பாடி கோயில் சிற்பங்கள், ரா.செந்தில் கரிகாலன், Published: 14 Aug 2017,  7 PM; Updated:14 Aug 2017 7 PM.

[2] https://www.vikatan.com/spiritual/temples/99109-manambadi-temple-sculptures-that-were-destroyed-by-indifference#:~:text=%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%2D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D,%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81.

[3] A forum ‘Kudanthai Jyothirmani Iraippani Thirukoottam’ from Kumbakonam and Kudavayil Balasubramanian, temple researcher and epigraphist, wrote to the then Chief Minister to spare the temple as it is an ancient monument. The NHAI then decided to leave the temple alone and submitted three alternate proposals for road project skirting the temple.

Deccan Chronicle, Thanjavur: Road project spares 1,000-year-old temple, Published: Sep 12, 2018, 3:25 am IST; Updated: Sep 12, 2018, 3:25 am IST.

https://www.deccanchronicle.com/nation/current-affairs/120918/thanjavur-road-project-spares-1000-year-old-temple.html

ஸ்ரீ நாகநாத சுவாமி கோவில், மானம்பாடி, கும்பகோணம் –  இடிக்கப் பட்டதும், மிஞ்சியதும், மற்றும் இப்பொழுதைய நிலையும் (2)

நவம்பர்6, 2022

ஸ்ரீ நாகநாத சுவாமி கோவில், மானம்பாடி, கும்பகோணம் –  இடிக்கப் பட்டதும், மிஞ்சியதும், மற்றும் இப்பொழுதைய நிலையும் (2)

2017 – கோவில்களில் யுனெஸ்கோ மற்றும் தொல்லியல் துறையினர் ஆய்வுஅறிக்கை[1]: 2006ல் இவ்வழக்கு தொடரப் பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் அமர்வு, ஜூலை, 2016ல், ஒரு உத்தரவின் வாயிலாக, அறநிலையத்துறை திருப்பணி வேலைகள் செய்த, 10 கோவில்களில், ‘யுனெஸ்கோ’ ஆய்விற்கு வழிவகை செய்தது. அப்போது கோவில்களில் செய்துள்ள திருப்பணிகள், வர்ணங்கள் அழிந்துள்ள இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்[2]. அப்போது அறநிலையத்துறையின் மயிலாடுதுறை மண்டல இணை ஆணையர் கஜேந்திரன், உதவி ஆணையர் ஞானசேகரன், தஞ்சை தொல்லியல் துறை அலுவலர் தங்கதுரை ஆகியோர் உடன் இருந்தனர்.  இந்த ஆய்வை விரிவாக செய்த, யுனெஸ்கோ நிறுவன வல்லுனர்கள், விரிவான அறிக்கையை, 2017 ஆகஸ்டில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

யுனெஸ்கோ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான அம்சங்கள்: அந்த அறிக்கையில், ஹிந்து சமய அறநிலையத்துறை பற்றி, யுனெஸ்கோ கூறியுள்ளவை சில, நமக்கு மிகுந்த அதிர்ச்சி அளிப்பவை[3]:

* பெரிய அளவில் தொன்மை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள, அறநிலையத்துறைக்கு திறனும் இல்லை; தகுதி படைத்த வல்லுனர்களும் இல்லை.

* இத்தகைய வேலைகள் மேற்கொள்ள, இவர்களிடம் முறையான வழிமுறைகள் இல்லை. தொன்மை பராமரிப்பு அறிந்த ஒப்பந்தக்காரர்களும் இல்லை.

* வேலை நடக்கும் இடங்களை ஆய்வு செய்தபோது, பெரும்பாலான ஸ்தபதிகள் திறனற்றவர்களாக இருந்தனர். அவர்களின் தகுதி, சந்தேகத்துக்கு இடமாக இருந்தது.இதை, தலைமை ஸ்தபதியும் ஒப்புக் கொண்டார்.

*சில அதிகாரிகளிடம் தொன்மை குறித்து, சிறிது உணர்வு காணப்பட்டது போல் தெரிந்தது. அவர்களுக்கு, எதிர்காலத்தில் தொன்மை குறித்த பயிற்சி அளிக்கலாம். ஆனால், பெரும்பாலான அதிகாரிகள், சிறிது கூட அடிப்படை தகுதி இல்லாமலும், திறமை இல்லாமலும், அத்தகைய பொறுப்பிற்கு பொருந்தாதவர்களாகவும் காணப்பட்டனர்.

*எந்த தொன்மையான கோவில் திருப்பணியிலும், இவர்கள் ஆகம வல்லுனர்களை கலந்து ஆலோசித்ததாகவே தெரியவில்லை என, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவற்றைத் தவிர, பல கோவில்களில், திருப்பணி என்ற பெயரில் நடந்த மோசமான செயல்களை, யுனெஸ்கோ சுட்டிக் காட்டியுள்ளது.

குறிப்பாக, மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பொற்றாமரை குளத்தை ஒட்டி செய்யப்பட்ட வேலைகள், மிகுந்த குறைபாடுகள் உள்ளவை. மானம்பாடி நாகநாத சுவாமி கோவில், எந்த காரணமும், யோசனையும் இல்லாமல் இடித்து தள்ளப்பட்டது. மிகுந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த, பழவேற்காடு ஆதி நாராயண பெருமாள் கோவில், ஆகம, தொல்லியல் கொள்கை களுக்கு விரோதமாக இடிக்கப்பட்டது.

2017ல் நாத்திக ஸ்டாலின் வக்காலத்து வாங்கி அறிக்கை விட்டது[4]: திக, திக வழி திமுக, ஈவேரா-அண்ணா, கருணாநிதி போன்றோரின் நாத்திகம், இந்துவிரோதம் அறிந்ததே. அதைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவராக இருக்கும் பொழுது, கோவில்கள் பற்றி வக்காலத்து வாங்கியது போல அறிக்கை விட்டது தமாஷாக உள்ளது. அதிமுக அரசு உடனடியாக தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டு, பண்பாட்டுச் சின்னங்களைப் பாதுகாத்து, அவற்றை சிதைப்பதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்[5]. இது தொடர்பாக மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது[6]: “மக்களின் தாகத்தைத் தணிப்பதற்கான குடிநீரைக் கூட முறையாக வழங்கும் நிர்வாகத் திறனற்றதாக உள்ள தமிழகத்தை ஆளும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான .தி.மு.. அரசு, பாரம்பரியச் சின்னங்களான திருக்கோவில்களைப் பராமரிப்பதிலும் அலட்சியம் காட்டி, தமிழர்களின் பெருமை மிக்க வரலாற்று அடையாளங்களைச் சிதைத்து வருவதை .நா. அவையின் யுனெஸ்கோ அமைப்பு வெளியிட்ட இடைக்கால அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது[7]………..திராவிட முன்னேற்றக் கழகம் என்பது பகுத்தறிவு வழியில் நடைபோடுகின்ற இயக்கம். கோவில்கள்சிற்பங்கள் உள்ளிட்டவற்றை வரலாற்றுப் பார்வையுடன் அணுகுகின்ற இயக்கம்[8]. நீதிக்கட்சி ஆட்சியாளர்களின் மக்கள் நலச் சிந்தனையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கோவில்கள் பாதுகாப்புச் சட்டத்தினால் அமைந்த அறநிலையத்துறை வாயிலாக பாரம்பரியம்மிக்க கோவில்கள் சீரமைக்கப்பட்டு, அனைத்து மக்களுக்குமான வழிபாட்டு உரிமைகள் நிலைநாட்டப்பட்டன[9]………

ஸ்டாலின் திமுக சாதனைகளைப் பட்டியல் இட்டது: திமுக தலைவர் கருணாநிதியின் தலைமையிலான தி.மு.கழக ஆட்சியில் மயிலாப்பூர் கோவில் குளம் முறையாகத் தூர்வாரப்பட்டது. திருவாரூர் கோவிலின் ஆழித்தேர் பழமைத்தன்மை மாறாமால் நவீன தொழில்நுட்பத்துடன் இயக்கப்பட்டது. மாமன்னன் ராஜராஜசோழன் கட்டிய தஞ்சைப் பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டுவிழா சிறப்புடன் கொண்டாடப்பட்டது. வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டன. பழந்தமிழரின் கட்டடக் கலை இலக்கணங்களை அறிவியல் வளர்ச்சிக்கேற்ற வகையில் பயன்படுத்தி, குமரி முனையில் 133 அடியில் நிறுவப்பட்ட அய்யன் திருவள்ளுவர் சிலை ஆழிப்பேரலையையும் எதிர்கொண்டு உயர்ந்து நிற்கிறது. உடனடியாக தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டு, பண்பாட்டுச் சின்னங்களைப் பாதுகாத்து, அவற்றை சிதைப்பதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.…,” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். ஆனால், அட்சிக்கு வந்தவுடன், எத்தனை கோவில்கள் இடிக்கப் பட்டன என்பதை நினைவுகூற வேண்டும்.

வேதபிரகாஷ்

06-11-2022


[1] தினமலர், உண்மையை உணர்வோம்; கோவில்களின் தொன்மை காப்போம், Updated : மார் 11, 2020  03:32 |  Added : மார் 10, 2020  01:34

தமிழ்.வணக்கம், புனரமைப்பு பெயரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோவில்கள் சிடைப்பு: தமிழக அரசு மீது உனெச்கோ குற்றச்சாட்டு, அண்ணன், ஆகஸ்ட்.9, 2017.

[2] https://www.vikatan.com/arts/literature/133609-unesco-report-about-traditional-temples-destroys

[3]https://tamilvanakkam.com/2017/08/09/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/

[4] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், தமிழர்களின் பெருமை மிக்க வரலாற்று அடையாளங்களை தமிழக அரசு சிதைத்து வருகிறது: மு. ஸ்டாலின், Written by Ganesh Raj, August 16, 2017 6:51:39 pm

[5] https://tamil.indianexpress.com/tamilnadu/unesco-mentioned-tamilnadu-government-destroys-historical-symbols-says-mk-stalin/

[6] தமிழ்.இந்து,  அதிமுக அரசு திருக்கோயில்களை சிதைப்பது வரலாற்றை அழிக்கும் செயல்: ஸ்டாலின் தாக்கு, செய்திப்பிரிவு, Published : 16 Aug 2017 03:07 PM, Last Updated : 16 Aug 2017 03:07 PM.

[7] https://www.hindutamil.in/news/tamilnadu/232482-.html

[8] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழர்களின் வரலாற்றை அழிக்கும் அடாத செயல்அரசுக்கு ஸ்டாலின் கண்டனம், By Mayura Akilan Published: Wednesday, August 16, 2017, 17:58 [IST].

[9] https://tamil.oneindia.com/news/tamilnadu/stalin-condemns-historic-tn-temples-fallinginto-decay-292962.html

பவுண்டரீகம் சோமநாதசுவாமி கோயில் சிதிலமடைந்து, சிற்பங்கள் உடைந்த நிலையில், கவனிப்பாரற்று இருப்பதேன்? (1)

ஜனவரி3, 2022

பவுண்டரீகம் சோமநாதசுவாமி கோயில் சிதிலமடைந்து, சிற்பங்கள் உடைந்த நிலையில், கவனிப்பாரற்று இருப்பதேன்? (1)

10ம் நூற்றாண்டு ஏனாதிமங்கலம் 17ம் நூற்றாண்டில் பவுண்டரீகம் ஆனது- அப்பெயர் என்ற பெயர் வர காரணம்: பவுண்டரீகபுரம் கும்பகோணம் தாலுகா, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. பவுண்டரீகபுரம் சோமநாதசுவாமி கோயில் கும்பகோணம்- அய்யாவாடி- முருக்கன்குடி என்ற ஊரில் இருந்து இரண்டு கிமீ தூரத்தில் உள்ளது[1]. தற்போது பவுண்டரீகபுரம் என்று அழைக்கப்பட்டாலும் இவ்வூருக்கு ஏனாதிமங்கலம் என்ற பெயரும் உண்டு இக்கோயில் பிற்கால சோழர் காலத்தைச் சேர்ந்ததாக விளங்குகிறது[2]. முதலாம் குலோத்துங்க சோழரின் (1070-1120 CE) காலத்தினை சேர்ந்ததாக இருக்கலாம்.  ஆனால், சிற்பங்கள், கோவில் அமைப்பு ராஜராஜன் (985-1014 CE) – ராஜேந்திரன் (1012-1044 CE) கோவில் அமைப்பைக் காட்டுகிறது. முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் (c.17th cent.CE), தஞ்சாவூரை ஆண்ட ராஜாக்களுக்கு, அய்யா குமார தத்தா தேசிகர் என்ற ராஜகுரு இருந்தார்[3]. அவர் வெண்ணார் நதிக்கரையில் பௌண்டிரிகம் என்ற விசேஷ யாகம் செய்தார். அந்த நினைவாக இக்கோவில் பௌண்டரிகபுரம் கோவில் என்று அழைக்கப் படுகிறது[4].

இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் வரும் இக்கோவில்[5]: இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் வரும் இக்கோவில் இந்நிலையில் கவனிப்பாரற்று சிதிலமடந்த நிலையில் உள்ளது[6]. செடி-கொடிகள் மண்டி, இடிந்துள்ள கோவில் கட்டிடங்களின் இடிபாடுகளில் வலர்ந்துள்ளன. அவ்வப்போது, உழவாரப் பணி என்று சுத்தம் செய்யப் பட்டு வந்தாலும், அவை வளர்ந்து விடுகின்றன. இது நிச்சயமாக திராவிடத்துவ நாத்திக ஆட்சியாளர்களின் அலட்சியம், வெறுப்பு மற்றும் துவேச குணாதசியங்களை எடுத்துக் காட்டுகின்றன. ஏனெனில், நிர்வாகம் என்ற முறையில் பாரபட்சமில்லாமல் மராமத்து, சரிசெய்தல், நிர்வாகம் என நடவடிக்கை எடுத்திருந்தாலே, ஒழுங்காக இருந்திருக்கும். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கோவிலாக இருந்தாலும், சொல்லி வைத்தால் போன்று சோழர்கால கோவில்கள் இவ்வாறு விடப் பட்டது, கேள்விக் குறியாக உள்ளது. ஒரு புறம் சோழர்களை போற்றுவது, இன்னொரு பக்கம் சோழர்களைத் தூற்றுவது என்று சித்தாந்த ரீதியில் பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருக்கின்றது. கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோவிலின் இணைக்கோவிலாக பவுண்டரீகபுரம் சோமநாத ஸ்வாமி கோவில் உள்ளது[7]. இக்கோவில் எமன் சிவபெருமானை வழிபட்ட தலமாகவும் சிறப்புபெற்று விளங்குகிறது.

சிலைகள் உடைந்திருப்பது மற்றும் கோவில் சிதிலம்டைந்த நிலை ஏன்?: பொதுவாக இக்கோவில் நிலைப் பற்றி பலருக்குத் தெரிந்துள்ளது. வருடத்திற்கு ஒரு முறை, சுற்றுலா செஒலவர்கள், உழ்வாரப் பணி செய்பவர்கள் வந்து செலிகிறார்கள், புகைப்படம் எடுக்கிறார்கள், இணைதளங்களில் போடுகிறார்கள். ஆனால், யாரும், அதற்கு மேலாக எதையும் செய்வதில்லை. அதாவது அரசாங்கம், கண்டு கொள்வதே இல்லை. ஒருவேளை துலுக்கர் வந்து, சிலைகளைச் சிதைத்துள்ளதால், அக்கோவில் வழிபாட்டிற்கு உகந்ததல்ல, என்று ஒதுக்கி வைத்தனரா என்ற கோணத்தில் யாரும் பதிவு செய்வதாகத் தெரியவில்லை. இவ்வாறு ஒதுக்கப் பட்ட கோவில் என்றால், இருக்கும் சிலைகளை அபகரிக்க கூட்டங்கள் தயாராக இருக்கின்றன. இணைதளத்தில் உள்ள குறிப்புகள் மற்றும் முந்தைய புத்தகங்களில் உள்ள விவரங்களை வைத்து கவனிக்கும் போது, இருக்கின்ற விவரங்களை திரும்ப-திரும்ப நாளிதழ்களிலும், இணைதளங்களிலும் விவரித்துள்ளனர். கல்வெட்டுகள் காணப்படவில்லை என்பதும் அதிர்ச்சியாக உள்ளது, ஏனெனில், சோழர்கால கோவில்களில் கல்வெட்டுகள் இல்லை என்பது பொய்யாகும். மேலும், இக்கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் யாவை போன்ற விவரங்களும் அறியப் படவேண்டும்.

கோவில், விக்கிரங்கள், சிலைகள் விவரங்கள்: தொன்மை மிக்க இக்கோவில் கருங்கல் திருப்பணி கொண்டது. சோழர்கால கலையம்சத்துடன் அழகு மிளிரும் கோஷ்டமூர்த்திகளை கொண்டு திகழ்கிறது[8]. நந்தி, பலிபீடம் மூலவரை நோக்கி பிரகாரத்தில் உள்ளன. கர்ப்பகிருகம் ஒரு அர்த்த மண்டபம், மஹா மண்டபம் மூலவர் உறையும் இடம் என்றுள்ளன. கோவிலின் பிரதான சுவாமி ஶ்ரீ சோமநாதர் ஆவார். லிங்க உருவத்தில் இருக்கும் விக்கிரகம் / லிங்கம் கிழக்கு பார்த்து இருக்கிறது. கர்ப்பகிருகத்திற்குச் செல்ல, இரண்டு பக்கம் படிகளும் இருக்கின்றன. கிழக்கு நோக்கிய கோயில் அர்த்த மண்டபம் முகப்பு மண்டபம் என உள்ளது. கோயிலின் சுற்று சுவர்கள் இல்லை, மண்டப மேல் தளங்களில் பெரும் விருட்சங்கள் வளர்ந்து, பின் வெட்டப்பட்டு அடிக்கட்டகள் மீண்டும் துளிர்த்து மண்டபங்களை பிளக்கும் காட்சி. இருபத்து இரண்டுக்கும் மேற்ப்படட கருவறை கோட்டங்கள் அதில் சிவனின் வெவ்வேறு மாகேஸ்வர வடிவங்கள் அத்தனையும் சிதைக்கப்பட்டு, உடைந்துபோய் உள்ளன. பல நூறு கிமீ தூரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கருங்கல் அதற்கு பலநாள் குருதியும் வியர்வையும் சிந்த உழைத்து உருவம் கொடுத்து உயிர் கொடுத்த சிற்பிகளுக்கு நாம் கொடுத்திருக்கும் மரியாதையை எண்ணி யாரை நோவது. மொத்தம் 22 கோஷ்ட விக்கிரங்கள் உள்ளன.

பொய்-பிரச்சாரங்களினின்று மக்கள் விழித்துக் கொண்ட நிலை: கங்கைகொண்ட சோழபுரம் போன்ற அபூர்வ சிற்பங்களின் கைகளை முழுவதுமாக இடித்து இருப்பது, இடித்தவர்களின் குரூரமான எண்ணங்கள், அரக்கக் குணங்கள் மற்றும் கலையழிப்பு தீவிரவாதங்களை அப்பட்டமாக எடுத்துக் காட்டுகிறது. துலுக்கரின் அத்தகைய மிகக்கொடிய அழிப்புகளை இந்தியா முழுவதும் பதிவாகி உள்ளது. அதேபோல, மாலிகாபூர் தெற்கே வந்தபோது, பற்பல கோவில்களை இடித்து செல்வத்தை சூரையாடியுள்ளான். ஆனால், அந்த உண்மைகளை சொல்ல தமிழக சரித்திராசிரியர்கள், தொல்லியல் வல்லுனர்கள், கோவில் வல்லுனர்கள் தயங்குகிறார்கள் மறைக்கிறார்கள். இளம்.முருகு, கிருஷ்ணவேல் போன்ற மறைப்பு சித்தாந்திகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். இவ்வாறு தான் தமிழக சரித்திரம், சரித்திரவரைவியல் உண்மை-பொய்மைகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டு தவிக்கிறது. போதாக்குறைக்கு, திராவிடத்துவ, நாத்திக, இந்துவிரோத, பெரியாரிஸ, பகுத்தறிவு, கம்யூனிஸ, இந்தியதேச விரோத சித்தாந்திகளும் இவர்களுடன் சேர்ந்து கொண்டு செயல் படுவதால்ணொருதலைப் பட்சமாகவே கடந்த 70 ஆண்டுகள் சரித்திரம் ஓடிக் கொண்டிருக்கிறது. இருப்பினும், கோடிக்கணக்கில் மக்கள் கோவில்களுக்கு செல்லும் போது, உடைந்த சிலைகள், சிற்பங்கள், விக்கிரங்கள் முதலியவற்றைப் பார்க்கும் போது, உண்மையினை அறியத்தான் செய்கின்றனர். அதனால் தான், இன்றைக்கு கொஞ்சம்-கொஞ்சமாக மக்களிடையே விழிப்புணர்வு அதிகமாகி வருகின்றது.

© வேதபிரகாஷ்

03-01-2022


[1] விகிமேபியா, பவுண்டரீகபுரம் சிவன் கோயில், India / Tamil Nadu / Tiruvidaimarudur / முருக்கன்குடி ரோடு.

[2]http://wikimapia.org/36155075/ta/%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

[3] Tamilnadu Tourism, Somanatha Swamy Temple, Poundarigapuram, Thanjavur, Thursday, September 12, 2019.

[4] https://tamilnadu-favtourism.blogspot.com/2019/09/somanatha-swamy-temple-poundarigapuram-thanjavur.html

[5] Ramanan P Ranganathan, Pundarikapuram Temple, Rare Temple in ruins uncared for – Somanatha Swamy Temple, Poundarigapuram, Tamilnadu, 9 July 2020,

[6] https://sites.google.com/site/reclaimtemplesindia/home/pundarikapuram-temple

[7] தினமணி, பவுண்டரீகபுரம் சிவன் கோயிலுக்கு வாருங்கள்!, – கடம்பூர் விஜயன், Published on : 17th January 2017 04:19 PM.

[8] https://www.dinamani.com/religion/religion-articles/2017/jan/17/%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2633857.html