Archive for the ‘வீரபத்ர சுவாமி’ Category

தமிழக அரசு நிர்வகிக்கும் கோவில் கருவறையில் சாமி சிலை மீது பெட்ரோல் குண்டு வீசியது ஒரு தொடர்-குற்றவாளி! ஆகவே உண்மை மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும் (2)

நவம்பர்11, 2023

தமிழக அரசு நிர்வகிக்கும் கோவில் கருவறையில் சாமி சிலை மீது பெட்ரோல் குண்டு வீசியது ஒரு தொடர்குற்றவாளி! ஆகவே உண்மை மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும் (2)

குற்றங்களுக்கு லாப-நஷ்டங்களுக்கு சாமி காரணமா?; குற்றத்தை செய்வதற்கு இப்படியெல்லாம் நியாயப் படுத்தப் படுவது ஏன் என்றும் கவனிக்க வேண்டியுள்ளது. உண்மையில் வியாபாரத்தில் நஷ்டம் என்றால், அதற்கான காரணமானவர் மீது தான் தாக்குதல் இருக்க வேண்டும். கோவிலோ, கர்ப்பகிரகமோ, உள்ளே இருக்கும் மூலவரோ குறியாக இருக்க முடியாது[1]. “சாமி தான், சிலை தான்” என்று குறியாக பாம் போடுகிறான்[2] என்றால், அத்தகைய மனப்பாங்கு, குற்ற மனபாங்கு என்னவென்று போலீஸார் தான் ஆராய வேண்டும். அப்படியென்றால், இத்தகைய குற்றவாளிகளை வேண்டுமென்றே இவ்வாறு செய்கிறார்களா அல்லது செய்விக்கப் படுகிறார்களா போன்ற சந்தேகங்களும் எழலாம். குற்றவாளிகளை, அவ்வாறே நடத்தாமல், ஏதோ தியாகி, சித்தாந்தி போன்று சித்தரித்திக் காட்டுவது, பிறகு மனநோயாளி என்பது முதலியவை முறையான விசாரணையாகத் தெரியவில்லை. பெட்ரோல் குண்டு வீசப்பட்ட கோவில், சென்னை உயர் நீதிமன்றத்தின் அறக்கட்டளையின் கீழ் நிர்வகிக்கப்படுவதால், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, நீதிபதி நிரஞ்சன் ஆய்வு செய்தார். தடய அறிவியல் துறை நிபுணர்களும் ஆய்வு செய்தனர்.

முதலில் குண்டு போட்டவனின் பெயரைக் குறிப்பிடாமல், பிறகு குறிப்பிட்டது: ஹிந்து கோவில் கருவறைக்குள் பெட்ரோல் குண்டு வீசிய முரளிகிருஷ்ணன், கழுத்தில் அணிந்திருந்த மாலைகள், போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர், கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவரா, பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்திற்கு பின், ஏதேனும் மதவாத சக்திகள் உள்ளனரா என்ற கோணத்திலும், போலீசார் விசாரித்து வருகின்றனர். சமீபத்தில், ரவுடி கருக்கா வினோத் என்பவர் கவர்னர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசினார். சில நாட்களில் அடுத்த சம்பவம் நடந்துள்ளதால், காவல் துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீ வீரபத்ரா சுவாமி கோவில் முன், ‘டீ கடை’ ஒன்றில் அமர்ந்து, சாகவாசமாக பெட்ரோல் குண்டு தயாரித்துள்ளார் முரளிகிருஷ்ணன்[3]. கடையில் இருந்தோர் பார்த்தும், அவரிடம் எதுவும் கேட்கவில்லை[4]. ஆனாலும், அங்கிருந்த ‘சிசிடிவி’ கேமரா பதிவில், தெளிவாக தெரிகிறது[5]. இது, இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக சேகரிக்கப்பட்டுள்ளது[6]. கோவை உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், கடந்தாண்டு, அக்., 23ல், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த, ஜமேஷா முபின், 29, என்பவர் கார் குண்டு வெடிப்பை நடத்தினார். ஜூலையில், சிவகங்கை மாவட்டத்தில், நில தகராறு தொடர்பாக, மதுரை விராதனுார் பகுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தப்பட்டது.சமீபத்தில், பள்ளிக்கரணையில், பா.ஜ., நிர்வாகியும், ரவுடியுமான பல்லு மதன் வீட்டில், ரவுடிகள் மண்ணெணெய் குண்டு வீசினர்.அதேபோல, நந்தனம் எஸ்.எம்., நகரைச் சேர்ந்த ‘சி’ பிரிவு ரவுடி கருக்கா வினோத், 42, கவர்னர் மாளிகையான ராஜ்பவன் மீது, இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசினார். சென்னை மட்டுமல்ல, தமிழகத்தின் பல பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு கலாசாரம் பரவி வருவது பொதுமக்களை பீதியடைச் செய்துள்ளது.

அரசு நிர்வாகத்தில் உள்ள கோவில் என்பதால் நீதிபதி ஆய்வு பிரச்சினையை மறைக்கக் கூட்டாது: சென்னையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வீரபத்ர சுவாமி கோவில், அரசு சொத்தாட்சியர் மற்றும் அதிகாரபூர்வ அறங்காவலரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது[7]. அதனாலேயே, பெட்ரோல் குண்டு வீசப்பட்டதும், நீதிபதி நிரஞ்சன் விசாரணை நடத்தி வருகிறார்[8]. கைது செய்யப்பட்ட முரளிகிருஷ்ணன், தெளிவான மனநிலையில் இல்லை என, போலீசார் கூறுகின்றனர். உள்ளுக்குள் ஆழமான விஷயங்கள் இருக்கலாம் என்றெல்லாம் செய்திகள் கூறுகின்றன. பண்டிகை காலங்களில் கூட்டம் மிகுந்த இடங்களில் கோவிலுக்கு அருகில், கோவிலுக்குள் இத்தகைய குண்டுவெடிப்புகள் நடக்கின்றன என்பதைக் கவனிக்கலாம். கூட்டநெரிசலிலேயே அதிக பாதிப்பு ஏற்படலாம். ஆகவே, இத்தகைய குண்டுவெடிப்புகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. “நீட், சாமி உதவவில்லை, மனநோயாளி,….” என்றெல்லாம் கூறி பிரச்சினையை மறைத்து விட முடியாது. உண்மையினை மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

உளவுத் துறை அதிகாரிகள் கூறுவது: போலீஸ் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என, உளவுத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்கள் மேலும் கூறியதாவது: “தமிழகத்தில் ஒரு மாத காலத்துக்குள், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன. கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து, தமிழக பா.., தரப்பில், 30 கேள்விகள் கேட்கப்பட்டன; அவை மிக நுட்பமானவை. தமிழகத்துக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கிறது. .எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு, தமிழகத்தில் இருந்து மூளை சலவை செய்து, ஆட்கள் அனுப்பப்படுவது, தேசிய புலனாய்வு அமைப்பு எனும் என்..., விசாரணையில் தெரியவந்துள்ளது. .எஸ்., அமைப்பில் சேர்க்கப்படும் நபர்கள், பயங்கரவாத பயிற்சிக்கு பின், பல்வேறு திட்டங்களோடு திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஹிந்து மற்றும் பிற மதங்களைச் சேர்ந்த இளைஞர்களை, .எஸ்., பயங்கரவாதியாக மாற்றும்போது, பெயர் மாற்றம் செய்யப்படுகின்றனர். அவர்கள் போலீசிடம் சிக்கும்போது, மதத்துக்கு கெட்ட பெயர் ஏற்படுவதால் நடைமுறையில் மாற்றம் கொண்டு வந்துள்ளனர். தற்போது, .எஸ்., அமைப்புக்கு அழைத்து செல்லப்படுபவர் பெயர்கள் மாற்றப்படுவதில்லை. ஹிந்துவாக இருந்தால், அதே பெயருடனே இருப்பர். அதனால், பயங்கரவாத செயலில் ஈடுபட்டு சிக்கினாலும், ஹிந்துவாகவே அடையாளம் காட்டப்படுவர்.எனவே, வழக்கமான நடைமுறையை விட்டு, ஆழமான விசாரணை மேற்கொள்ள வேண்டும்; கிடைக்கும் தகவல்களை மறைக்காமல் பதிவு செய்ய வேண்டும்,” இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவித்துள்ளது: இந்த சம்பவம் தொடர்பாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது[9]: “சென்னை பாரிமுனை கோவிந்தப்ப நாயக்கன் தெரு, ஸ்ரீவீரபத்ர சுவாமி கோயில் கருவறைக்குள்ளே, சுவாமி சிலையின் மீதே பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதள பாதாளத்திற்குப் போய்விட்டது. போலி மதச்சார்பின்மையும், அரைகுறை நாத்திகமும் பேசித் திரியும் பிரிவினைவாத அமைப்புக்களை கட்டுப்படுத்த, தி.மு.., தவறியதன் விளைவு, இன்று கோயிலுக்குள்ளேயே பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்குக் கொண்டு வந்திருக்கிறது,” இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்[10]. அதிமுக தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

© வேதபிரகாஷ்

11-11-2023.


[1] தமிழ்.ஒன்.இந்தியா, ‛சிலை தான் குறி’.. சென்னை கோவில் மீதான பெட்ரோல் குண்டு வீச்சின் பரபர பின்னணி.. போலீஸ் விளக்கம், By Nantha Kumar R Published: Friday, November 10, 2023,

[2] https://tamil.oneindia.com/news/chennai/what-happened-in-petrol-bomb-thrown-on-kothavaalchavadi-temple-chennai-police-explains-556071.html

[3] தினமலர், சென்னையில் மீண்டும் பெட்ரோல் குண்டு வீச்சு அதிர்ச்சி! கோவில் கருவறைக்குள் வீசப்பட்டதால் பதற்றம், பதிவு செய்த நாள்: நவ 10,2023 22:52.

[4] https://m.dinamalar.com/detail.php?id=3478549

[5] நக்கீரன், டீக்கடையில் சாவகாசமாக அமர்ந்து பெட்ரோல் குண்டு தயாரித்த நபர்; அதிர வைக்கும் சிசிடிவி காட்சி, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 10/11/2023 (15:11) | Edited on 10/11/2023 (15:26)

[6] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/person-sitting-tea-shop-casually-made-petrol-bomb-shocking-cctv-footage

[7] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், சென்னை பாரிமுனை கோயிலில் பெட்ரோல் குண்டு வீச்சு: ஐகோர்ட் நீதிபதி நேரில் ஆய்வு, WebDesk, Nov 10, 2023 15:44 IST

[8] https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-parrys-corner-temple-petrol-bombing-high-court-judge-inspects-in-person-tamil-news-1692013

[9] தினமலர், சென்னையில் கோயிலுக்குள் மதுபோதையில் பெட்ரோல் குண்டு வீசியவர் கைது: அண்ணாமலை கண்டனம், மாற்றம் செய்த நாள்: நவ 10,2023 15:4.

[10] https://m.dinamalar.com/detail.php?id=3478443

தமிழக அரசு நிர்வகிக்கும் கோவில் கருவறையில் சாமி சிலை மீது பெட்ரோல் குண்டு வீசப் பட்டது, வீசியது ஒரு தொடர்-குற்றவாளி! (1)

நவம்பர்11, 2023

தமிழக அரசு நிர்வகிக்கும் கோவில் கருவறையில் சாமி சிலை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது, வீசியது ஒரு தொடர்குற்றவாளி! (1)

ஸ்ரீவீரபத்ர சுவாமி கோவில் கொத்தவால்சாவடியில், ஆதியப்பா தெரு மற்றும் கோவிந்தப்பா நாயக்கர் தெரு சந்திப்பில் உள்ளது: தீபாவளி நேரத்தில் “டவுன்” எனப்படும் “பாரீஸ் கார்னரில்” கூட்டம் அதிகமாகத்தான் இருக்கும். மற்ற இடங்களை விட, இங்கு கொஞ்சம் விலை குறைவாக இருக்கும் என்ற நம்பிக்கையில் நடுத்தர-சாதாரண மக்கள் இங்கு வந்து பொருட்களை வாங்கிக் கொண்டு, அப்படியே பஸ்-டிரைன் என்று ஏறி வீடுகளுக்குத் திரும்பிச் செல்வர். அதனால், மூன்று நாட்கள் விடுமுறை என்ற நிலையில் வெள்ளிக் கிழமை 10-11-2023 அன்று அனைவரும் சந்தோசமாக, கடைகளுக்குச் சென்று வந்தனர். பொருட்களை வாங்கி வந்தனர். அந்நிலையில் தான், இந்த பெட்ரோல் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில், மக்கள் கூட்டம் அதிகம் உள்ள சந்தை பகுதியான கொத்தவால்சாவடியில், ஆதியப்பா தெரு மற்றும் கோவிந்தப்பா நாயக்கர் தெரு சந்திப்பில், ஸ்ரீவீரபத்ர சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில், சென்னை உயர் நீதிமன்றம் அறக்கட்டளையின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. அர்ச்சகர்களாக வெங்கட சுப்பிரமணிய அய்யர் உட்பட மூன்று பேர் பணிபுரிகின்றனர். 10-11-2023 அன்று காலை 7:00 மணிக்கு கோவிலை திறந்து, மூலவர் உள்ளிட்ட சுவாமி சிலைகளுக்கு, அர்ச்சகர்கள் அலங்காரம் செய்தனர்.

பெட்ரோல் குண்டுடன் வந்த பக்தர்!: இந்த நிலையில், 8:45 மணிக்கு அங்குள்ள டீ கடைக்கு குடிபோதையில் வந்த மர்ம நபர், திரியுடன் பீர் பாட்டில் வைத்திருந்தார். அதில், பெட்ரோல் நிரப்பி இருந்தார். இதை பார்த்ததும் கடைக்காரர்கள் அதிர்ச்சியடைந்தனர். கண் இமைக்கும் நேரத்தில், அந்த நபர் கோவில் கருவறைக்குள் புகுந்து, ‘நீ எனக்கு எதுவுமே செய்யவில்லை’ என, ஆவேசமாக கத்தியபடி, சுவாமி சிலை மீது பெட்ரோல் பாட்டில் குண்டில் தீ வைத்து வீசினார். அது, சுவாமி சிலைக்கு பக்கத்தில் விழுந்து, பலத்த சத்தத்துடன் வெடித்தது. பட்டப் பகலில் பலர் பார்க்கும் நிலையில் இந்நிகழ்ச்சி அரங்கேறியுள்ளது. தீ பற்றி எரிந்ததால், பக்தர்கள் அலறியடித்து கோவிலில் இருந்து வெளியேறினர். அர்ச்சகர்களும், உயிர் பயத்தில் செய்வதறியாது தவித்தனர். சுவாமி சிலைக்கு தீ பரவாமல் இருக்க, குண்டு வீசப்பட்ட இடத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட குடங்களில் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

பெட்ரோல் குண்டு வெடிப்புப் பற்றி விதவிதமான செய்திகள்: சென்னை பாரிமுனை கோவிந்தப்ப நாயக்கன் தெருவிலுள்ள கோயில் வாசலில் திடீரென வெடிச்சத்தம் கேட்டது[1]. கோயிலின் உள்ளே இருந்த பூசாரி வெளியே ஓடி வந்ததால் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினார்[2]. உடனடியாக கோயில் பூசாரி மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், கோயிலுக்கு வெளியில் வந்து பார்த்தனர். இன்னொரு செய்தியில், “8:45 மணிக்கு அங்குள்ள டீ கடைக்கு குடிபோதையில் வந்த மர்ம நபர், திரியுடன் பீர் பாட்டில் வைத்திருந்தார். அதில், பெட்ரோல் நிரப்பி இருந்தார். இதை பார்த்ததும் கடைக்காரர்கள் அதிர்ச்சியடைந்தனர்,” என்றுள்ளது. அதாவது, பலர் பார்த்துள்ளனர் என்றாகிறது. அப்போது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரியவந்தது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உடனடியாக கொத்தவால்சாவடி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது[3]. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், விசாரணை மேற்கொண்டனர்[4]. மேலும் தடய அறிவியல் நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன[5]. சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வுசெய்தபோது, கோயிலுக்கு வந்த ஒருவர் பெட்ரோல் குண்டை வீசியது தெரியவந்தது[6]. அவர் யார்… எதற்காக வீசினார் என்று போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின[7].

முதலில் போலீஸார் விசாரித்து வருகிறோம், விசாரணை முடிந்த பின்பு விவரங்கள் சென்னை காவல்துறை மூலமாக வெளியிடப்படும் என்று அறிவித்தது: இது குறித்து போலீஸாரிடம் விசாரித்தபோது, “பெட்ரோல் குண்டை வீசியவர் கோயில் அருகே கடை நடத்திவரும் முரளி கிருஷ்ணா என்பது தெரியவந்தது. உடனடியாக அவரைப் பிடித்து விசாரித்தபோது, `கடந்த சில ஆண்டுகளாக இந்தக் கோயிலுக்கு வந்து சாமி கும்பிட்டுவருகிறேன். ஆனால் சாமி எனக்கு எதுவும் செய்யவில்லை. அந்த விரக்தியில்தான் கோயிலில் பெட்ரோல் குண்டை வீசினேன்என்று தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் விசாரித்துவருகிறோம்[8]. சம்பவத்தின்போது முரளி கிருஷ்ணா போதையில் இருந்ததாகத் தெரிகிறது[9]. அவர்மீது மூன்று பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்திருக்கிறோம். விசாரணைக்குப் பிறகு முரளி கிருஷ்ணாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவிருக்கிறோம்,” எனத் தெரிவித்தனர்[10]. பின்னர், செய்தியாளர்களை சந்தித்த சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், கோவிலுக்குள் குண்டுவீச்சு சம்பவம் தொடர்பாக பதிலளித்த அவர்[11], ” சென்னை கொத்தவால்சாவடி பகுதியில் கோவிலுக்குள் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணை முடிந்த பின்பு விவரங்கள் சென்னை காவல்துறை மூலமாக வெளியிடப்படும்” எனவும் தெரிவித்தார்[12].

பெட்ரோல் குண்டு போட்டவன் ஜார்ஜ்ஷீட்டர்தொடர் குற்றவாளி: விசாரணையில், பெட்ரோல் குண்டு வீசியவர், சென்னை எம்.கே.பி., நகர், 17வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த முரளி கிருஷ்ணன், 39 என்பதும், அவர் தற்போது, ஏழு கிணறு போர்ச்சுகீஸ் சர்ச் தெருவில் வசித்து வருவதும் தெரியவந்தது. அவர், காவல் துறையின் ‘சி’ பிரிவு ரவுடி பட்டியலில் உள்ளார். கொத்தவால்சாவடி, எம்.கே.பி., நகர், புளியந்தோப்பு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை, அடிதடி என, ஒன்பது வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, சுவாமி சிலை மீது பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக, வெடி பொருட்கள் தடுப்பு சட்டம் உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, முரளிகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். ரவுடி ஒருவர், மக்கள் கூட்டம் நிறைந்த சந்தை பகுதியில் உள்ள கோவில் கருவறைக்குள் புகுந்து, பெட்ரோல் குண்டு வீசி அட்டூழியம் செய்திருப்பது, பக்தர்கள் மற்றும் அர்ச்சர்களின் உயிருக்குமான பாதுகாப்பில் கேள்விக்குறியை ஏற்படுத்தி உள்ளது.

முரளிகிருஷ்ணன், போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம்[13]: “ஸ்ரீ வீரபத்ர சுவாமி கோவில் அருகே, ‘ஜி.கே.டிரேடர்ஸ்எனும் பெயரில், முந்திரி வியாபாரம் செய்து வருகிறேன். தொழில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. ரவுடி தொழில் ஓரளவு கை கொடுத்தது. கொஞ்சம் கடன் தொல்லையும் உள்ளது. இந்த கோவிலுக்கு நான்கு ஆண்டுகளாக சென்று வருகிறேன். சுவாமி எனக்கு எதுவும் செய்யவில்லை. அதனால், பெட்ரோல் குண்டு வீசினேன்,” இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்[14]. சரி, கொலை வழக்கு, ரவுடியிஸம், கைது, ஜெயில் எல்லாவற்றிற்கும் சாமி தான் அனுமதி கொடுத்ததா? இப்பொழுது கைவிட்ட்தா? இது போன்று வாக்குமூலம் கொடுக்கப் பட்டது என்றெல்லாம் செய்திகளாக வெளிவருவதே கேடிக்கையாக இருக்கிறது[15]. “கொலை வழக்கில் ஜெயிலுக்கு போவாராம்…..சாமி வரம் கொடுக்கலைன்னு பெட்ரோல் பாம் வீசுவாராம்……!.” என்று பாலிமர்.டிவி தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருப்பது பொறுத்தமாகத்தான் இருக்கிறது[16]. நான்கு ஆண்டுகளாக குற்றங்கள் செய்து வருவதும், சாமி கும்பிடுவதும் எதனைக் காட்டுகிறது என்றும் ஆராய வேண்டியுள்ளது.

© வேதபிரகாஷ்

11-11-2023.


[1] தினமணி, ‘கடவுள் கைவிட்டதால்கோயிலுக்குள் பெட்ரோல் குண்டு வீசியவர் சிக்கினார்!, By DIN  |   Published On : 10th November 2023 01:32 PM  |   Last Updated : 10th November 2023 01:32 PM  |

[2] https://www.dinamani.com/tamilnadu/2023/nov/10/petrol-bomb-inside-the-temple-4103993.html

[3] மாலைமலர், சென்னையில் பரபரப்பு: பாரிமுனை கோவிலில் பெட்ரோல் குண்டு வீச்சு, By மாலை மலர்10 நவம்பர் 2023 10:54 AM.

[4] https://www.maalaimalar.com/news/district/petrol-bomb-in-chennai-parrys-temple-683895

[5] காமதேனு, சென்னையில் பரபரப்புபோதையில் கோயில் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது!, Updated on : 10 Nov 2023, 11:11 am.

[6] https://kamadenu.hindutamil.in/crime-corner/man-arrested-for-throwing-petrol-bomb-on-temple

[7] விகடன், `சாமி எனக்கு எதுவும் செய்யவில்லை, அதனால்தான்..!’ – கோயிலில் பெட்ரோல் குண்டு வீசியவர் `பகீர், எஸ்.மகேஷ், Published: 10-11-2923 at 4 PMU; pdated: 10-11-2023 at 5 PM.

[8]  https://www.vikatan.com/news/general-news/petrol-bomb-hurled-in-a-temple-in-chennai

[9] தினகரன், பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது: காவல்துறை விளக்கம், Published: November 10, 2023, 5:35 pmLast Updated on November 10, 2023, 5:46 pm.

[10] https://www.dinakaran.com/alcohol_addiction_temple_petrol_bomb_arrest/

[11] தமிழ்.நியூஸ்.18, கோவிலுக்குள் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய சம்பவம் : சென்னை காவல் ஆணையர் விளக்கம், FIRST PUBLISHED : NOVEMBER 10, 2023, 5:56 PM IST; LAST UPDATED : NOVEMBER 10, 2023, 5:56 PM IST.

[12] https://tamil.news18.com/tamil-nadu/chennai-police-clarifiesabout-history-sheeter-hurls-petrol-bomb-inside-the-temple-1227897.html

[13] ஜீ.டிவி, சாமி எதுவும் தராததால் கோயிலில் பெட்ரோல் குண்டு வீச்சு…!, பதிவு செய்த நாள்: நவ 10,2023.

[14] https://zeenews.india.com/tamil/videos/chennai-paris-temple-petrol-bomb-cctv-video-472117

[15] பாலிமர்.டிவி, கொலை வழக்கில் ஜெயிலுக்கு போவாராம்…..சாமி வரம் கொடுக்கலைன்னு பெட்ரோல் பாம் வீசுவாராம்……!. நவம்பர்.10, 2023. 08:49:32 PM.

[16] https://www.polimernews.com/dnews/209675