Archive for the ‘மூன்று வேளையும் இலவச உணவு’ Category

இந்து அறநிலையத்துறை மூலம் நடந்து வரும் அன்னதான திட்டம், உணவுப் பொட்டல விநியோகமாக மாறி, திமுக அரசு சேவை செய்வது போல பிம்பத்தை உண்டாக்கும் போக்கு (3)

மே15, 2021

இந்து அறநிலையத்துறை மூலம் நடந்து வரும் அன்னதான திட்டம், உணவுப் பொட்டல விநியோகமாக மாறி, திமுக அரசு சேவை செய்வது போல பிம்பத்தை உண்டாக்கும் போக்கு (3)

நாத்திக மற்றும் விரோத கருத்துக்களைக் கூறி வந்த திமுகவினர், ஏன் கோவில் அன்னதான உணவுப் பொட்டலங்களை விநியோகிக்க வேண்டும்?: நாத்திக அரசியல்வாதிகள் ஆட்சியில் வந்துள்ளார்கள். கடவுளின் பெயரால் கூட பிராமணம் எடுத்து, பதிவிக்கு வர துணிவில்லை. ஆனால், குங்குமம்-விபூதி வைப்பார்கள், துடைத்து எரிவார்கள்! கடவுளின் பேரால் பதவிப் பிரமாணம் எடுக்காத திமுகவினர் குங்குமம்-விபூதி வைத்திருந்தது என்ன சித்தாந்தம் என்று தெரியவில்லை. இன்றோ, தமிழகம் முழுவதும், கோவில்களின் பிரசாதம், அன்னதானம், பொட்டலங்களாக, விநியோகிக்கப் படுகின்றன. அதனை ஆட்சிக்கு வந்த அமைச்சர் முதல் மற்றவர்கள், ஏதோ தாங்கள் தான் தானம் செய்வது போல, புகைப் படங்கள் செய்திகள் வெளியிட, விளம்பரம் போல செய்யப் படுகின்றன. இந்த செலவுகள் அறநிலையத்துறைகள் கணக்கில் தான் எழுதப் படும், பிறகு. நாத்திக-அரசியல்வாதிகள் ஏன் விநியோகிக்க வேண்டும்? மடாதிபதிகள் செய்யலாமே? அந்தந்த அன்னதான திட்டங்களுக்கு கொடையளித்தவர்களைக் கூப்பீடு செய்திருக்கலாமே? நாத்திக மற்றும் விரோத கருத்துக்களைக் கூறி இந்து தூஷணத்தில் ஈடுபட்டு வரும் இவர்கள் ஏன் செய்ய வேண்டும்? அதற்கு நம்பிக்கை இல்லை என்றால், இதற்கு யோக்கியதை இல்லை என்றாகிறது.

ஊழலில் கைதானவர்கள், வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள், நாத்திகர்கள் இவ்வேலையில் ஈடுபட வேண்டிய தேவையில்லை:னைந்துஅறநிலையத் துறையில் ஊழல்கள், மோசடிகள், பணம் கையாடல்கள், சிலைத் திருட்டு, நில அகபரிப்பு, டென்டர் என்று பலதரப்பட்ட பித்தலாட்டங்களில் ஈடுபட்டு வழக்குகள் போடப் பட்டுள்ள நிலை, கைதானவர்கள், பெயிலில்வெளி வந்தவர்கள், இடம் மாற்றம் செய்யப் பட்டவர்கள், திரும்ப வந்து உட்கார்ந்து கொண்டிருப்பவர்கள் முதலியவர்கள் முதலியோருக்கு, அன்னதானம் செய்வதில் எந்த தார்மீகமும், யோக்கியதையும் இல்லை.

  • ஆகவே, சிறிதும் வெட்கப் படாலமல் அர்சியல்வாதிகள் போல அவர்களும் இதில் ஈடுபடுவது வெட்கக் கேடு, அவமானம் மகாப் பாவம் கூட.
  • நெற்றியில் குங்குமம்-விபூதி வைத்துக் கொண்டு பக்தர்களை ஏமாற்ற வேண்டாம். கடவுள் மீது நம்ப்பிக்கை இருந்திருந்தால், அவர்கள் அத்தகைய முறைகேடுகள், சட்டமீறல்கள் முதலியவற்றை செய்திருக்க மாட்டார்கள்.
  • இது அவர்களுக்கும், மக்களுக்கும், நாட்டிற்கும் நல்லதல்ல. கோவில் பிரசாதம் – சாப்பாட்டை பக்தர்களுக்கு அல்லாமல், ஆஸ்பத்திரிக்கு பொட்டலங்களாகக் கட்டிக் கொடுக்கும் திட்டத்தை இந்து அறநிலையத் துறையின் கீழ் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.
  • சாப்பாட்டை அவ்வாறு கொடுப்பது நல்லது தான்! ஆனால், அக்குழுவில் ந. திருமகள் போன்றோர் இருப்பதாக செய்தி சொல்கிறது…
  • முதல்வர் ஒரு நாத்திகர், இந்துமதத்திற்கு எதிராகக் கருத்துகளைச் சொல்லியவர்…….
  • அந்நிலையில், இதெல்லாம் எங்கு போகும் என்று தெரியவில்லை….

இதேபோல, ரம்ஜான் கஞ்சிக்கு கொடுத்த அரிசியும், உண்வாக மாற்றி, எல்லோருக்கும் கொடுத்திருக்கலாமே?

“….அறநிலையத்துறை தமிழக வரலாற்றில் இல்லாத அளவுக்கு….” என்றால் எப்படி?:

 “தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி: சேகர் பாபு சொன்னது போல, “இதுவரையில் அறநிலையத்துறை தமிழக வரலாற்றில் இல்லாத அளவுக்கு தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி சிறப்பாக செயல்பட்டு அனைவரது புருவத்தை உயர்த்தி பார்க்கும் வகையில் செயல்பாட்டில் ஜொலிக்கும் என்ற நம்பிக்கையில் எங்களது பயணத்தை தொடங்கியுள்ளோம்”, என்பார்கள் போலிருக்கிறது!

  1. இதுவரையில் அறநிலையத்துறை தமிழக வரலாற்றில் இல்லாத அளவுக்கு….” – இது வரை அறநிலையத் துறையில் ஊழல், மோசடி, பணம் கையாடல், கைது என்று எல்லாமே இருந்து வருகின்றனர். அப்படியென்றால் எந்த அளவுக்குச் செல்வார்கள் என்று தெரியவில்லை.
  2.  “தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி– இது, அந்த அம்மாவின் ஆணைப் படி, மாண்புமிகு அம்மா ஆட்சி என்று சொன்னது போலிருக்கிறது. நாத்திகராக இருந்து, இவர் என்ன வழி காட்டுவார் என்றும் தெரியவில்லை.
  3.  “சிறப்பாக செயல்பட்டு-? நாத்திகராக, கடவுள் மறுப்பு சித்தாந்தியாக, பல நேரங்களில் இந்துவிரோதித் தனமாக செயல்படும் போது, எப்படி, சிறப்பாக செயல்படுவார்கள் என்று தெரியவில்லை.
  4. அனைவரது புருவத்தை உயர்த்தி பார்க்கும் வகையில்”  – இதை +வாக அல்லது –வாக எடுத்துக் கொல்வது என்றும் தெரியவில்லை.
  5. செயல்பாட்டில் ஜொலிக்கும்– பொறுத்துப் பார்க்க வேண்டும்.
  6.  “என்ற நம்பிக்கையில்”  – நம்பிக்கைகளை தூஷிக்கும், கேலிபடுத்தும் இவர்கள் ஏன் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
  7. எங்களது பயணத்தை தொடங்கியுள்ளோம்”, – இதையும் பொறுத்துப் பார்க்க வேண்டும்.

அன்னதானம் போன்ற சேவைகள் அமைதியாக நடந்து கொண்டே இருக்கின்றன: திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது பேரவை தொகுதிகளிலேயே அதிமுகவின் கோட்டையாகவும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் விஐபி தொகுதியாகவும் மாறிய ஸ்ரீரங்கத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக தடம் பதித்துள்ளது. தஞ்சை மாநகர் முழுவதும் ஏராளமானோர் ஆதரவற்றோர் சாலைகளில் படுத்து உறங்கி அங்கேயே  காலத்தை போக்கி வருகின்றனர். மழை, புயல் அதிக வெயில் என்றாலும் அவர்களுக்கு இருக்க இடம் இல்லாமல் சாலை ஒன்றே அவர்களுக்கு வீடாக அமைந்து விடுகிறது[1]. அவர்களுக்கு உணவு வழங்குவது என்பது மனதிற்கு ஆறுதலை அளிக்கிறது என கூறிய ஜெய் பாரதமாதா சேவை மையத்தின் தலைவர் ஜெகதீஷ், சாலைகளில் இருப்பவர்கள் பெரும்பாலும் வயதானவர்கள், அவர்களுக்கு தொடர்ந்து  400 நாட்களுக்கும் மேலாக உணவு அளித்து வருகிறோம். என்றார்[2]. ஆகவே, அன்னதானம் போன்ற சேவைகள் அமைதியாக நடந்து கொண்டே இருக்கின்றன. இது இந்துமதத்தின் அங்கமாகும். அன்னத்தை மதிப்பது, போற்றுவது, பகிர்வது என்பதெல்லாம் சாதாரண விசயம். இதற்கெல்லாம் யாரும் விளம்பரம் கொடுக்கத் தேவையில்லை. தமிழகத்திலேயே சங்ககாலம் முதல், பல்லவர், சேரர், சோழர், பாண்டியர், சோழர், விஜயநகர மன்னர், நாயக்கர், மராத்தியர் என்று எல்லோருமே செய்துள்ளனர். ஆனால், அவர்கள் நாத்திகரோ, இந்துவிரோதிகளோ அல்லர். விளம்பரத்தையும் தேடவில்லை. மாறாக உதவியுள்ளனர், பாதுகாப்பு கொடுத்துள்ளனர்.

செக்யூலரிஸமாக திமுக ஆட்சி செயல்படவில்லை: அன்னதானத்தை வாங்கி, இதே போல உணவுப் பொட்டலங்களாக விநியோகிக்க வேண்டும். இப்பொழுது, ரம்ஜான் கஞ்சிக்கு அர்சி கொடுக்கப் பட்டு வருவது தெரிந்த விசயமே. ஆனால், அதே போன்று அரிசி கோவில்களுக்குக் கொடுக்கப் படுவதில்லை. வழிபடும் ஸ்தலங்கள் ஒரே மாதிரி பாவிக்கப் படவேண்டும் என்றால், அவ்வாறே செக்யூலரிஸ அரசியல் வாதிகள் நடந்து கொள்ள வேண்டும். ஆனால், நாத்திக திராவிட அரசியல்வாதிகள் இந்துவிரோதிகளாகத் தான் இருந்துள்ளனர், இருந்து வருகின்றனர். பகுத்தறிவுப் போர்வையில் ஈவேராவும், பிறகு பெரும்-ஞானம் பெற்று “பெரியாராக” மாறிய பின்னரும், பிள்ளையார் சிலைகளை உடைத்ததும், ராமர்-முருகன் படங்களுக்கு செருப்பு மாலை அணிவித்தது, தூஷித்தது எல்லாம், தமிழக மக்கள் அறிந்ததே. இப்பொழுது வரை ஸ்டாலின் முதல், கருப்பர் கூட்டம் வரை, அத்தகைய இந்துவிரோத தூஷணங்களில் ஈடுபட்டு வந்தனர். தேர்தல் பிரச்சாரம் போன்ற / கிருத்துவ-துலுக்கக் கூட்டங்களிலும் அவ்வாறே ஸ்டாலின் முன்னாலேயே பேசப் பட்டன. ஆகவே, இத்தகைய வேடங்கள் தேவையில்லை.

© வேதபிரகாஷ்

14-05-2021


[1] நியூஸ்.18, தஞ்சாவூர் : 400 நாட்களுக்கு மேலாக அன்னதானம் வழங்கி வரும் அமைப்பு, May 14, 2021, 23:03 IST

[2] https://tamil.news18.com/news/local-news/tanjore/tanjore-thanjavur-jai-bharat-mata-service-center-has-been-providing-free-food-for-over-400-days-due-to-corona-lockdown-vai-464069.html

இந்து அறநிலையத்துறை மூலம் நடந்து வரும் அன்னதான திட்டம், உணவுப் பொட்டல விநியோகமாக மாறி, திமுக அரசு சேவை செய்வது போல பிம்பத்தை உண்டாக்கும் போக்கு (2)

மே15, 2021

இந்து அறநிலையத்துறை மூலம் நடந்து வரும் அன்னதான திட்டம், உணவுப் பொட்டல விநியோகமாக மாறி, திமுக அரசு சேவை செய்வது போல பிம்பத்தை உண்டாக்கும் போக்கு (2)

13-05-2021 – திருவாரூரில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில்நோயாளிகளுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடக்கம் : இந்து சமய அறநிலையத் துறை மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் அவர்களுடன் இருப்பவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கே.கலைவாணன் 13-05-2021 அன்று தொடங்கி வைத்தார்[1]. பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழகத்தில் கரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், மருத்துவமனைகளிலுள்ள நோயாளிகள் மற்றும் அவர்களுடன் இருப்பவர்களுக்கு உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதைக் கருத்தில்கொண்டு, முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்பேரில், இந்த உணவு வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் இருக்கும் வரை உணவு தொடர்ந்து வழங்கப்படும்,” என்றார்[2]. இந்நிகழ்வில் திருவாரூர் கோட்டாட்சியர் பாலசந்திரன், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ஹாஜீகரன், மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் கலியபெருமாள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

காஞ்சிபுரத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில்நோயாளிகளுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடக்கம் : காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு, அறநிலையத் துறை சார்பில், உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில், 375 பேர், கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். ஊரடங்கு காலத்தில் தொற்று பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில், அவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கும்படி, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டார்[3]. தொடர்ந்து, நேற்று காலை, காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில், கதம்ப சாதம் சமைக்கப்பட்டு, 500 பொட்டலங்களாக கட்டி, அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கல்பனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அறநிலையத் துறை இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் செயல் அலுவலர்கள் குமரன், பூவழகி, வேதமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்[4]. அறநிலையத் துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘கோவில்களில் மதியம் அன்னதானம் வழங்குவதை தொடர்ந்து, தற்போது, கொரோனா நோயாளிகளுக்கு, உணவு பொட்டலம் வழங்கப்படுகிறது. மறு உத்தரவு வரும்வரை, இப்பணி தொடரும். ‘மேலும், காஞ்சிபுரத்தில் முக்கிய கோவில்களில், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது’ என்றார்.

செய்யாரில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில்நோயாளிகளுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடக்கம் : செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகள், உதவியாளா்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கும் திட்டத்தை தொகுதி எம்எல்ஏ ஒ. ஜோதி 13-05-2021 வியாழக்கிழமை தொடக்கிவைத்தார்[5]. நிகழ்ச்சிக்கு கோட்டாட்சியா் ந.விஜயராஜ் தலைமை வகித்தார். 600 பேருக்கு உணவுப் பொட்டலம், குடிநீா், முகக் கவசம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன[6]. இப்படி, திருவண்ணாமலை மாவட்ட திமுகவினர், சேகர் பாபு சொன்னது போல, “இதுவரையில் அறநிலையத்துறை தமிழக வரலாற்றில் இல்லாத அளவுக்கு தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி சிறப்பாக செயல்பட்டு அனைவரது புருவத்தை உயர்த்தி பார்க்கும் வகையில் செயல்பாட்டில் ஜொலிக்கும் என்ற நம்பிக்கையில் எங்களது பயணத்தை தொடங்கியுள்ளோம்”, என்பார்கள் போலிருக்கிறது!

மதுரையில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில்நோயாளிகளுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து 2,000 உணவு பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது[7]. அங்கு மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. கோ.தளபதி நோயாளிகள் மற்றும் உறவினர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். “அரசு உத்தரவின்பேரில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் இருந்து அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் 2,000 பேருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முதல் நாளில் தக்காளி சாதம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தினமும் ஒரு வகையான சாதம் என்ற வகையில் வழங்கப்படும். உணவு பொட்டலங்கள் மீனாட்சி அம்மன் கோவிலில் தயாரிக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு நோயாளிகள் மற்றும் அவர்களுடன் இருப்பவர்களுக்கு வழங்கப்படும். உணவு பொட்டலங்களுடன் குடிநீர், கபசுர குடிநீர், முக கவசம் போன்றவையும் வழங்கப்படும். கோவிலில் இருந்து வழங்கப்படும் உணவு பொட்டலங்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது,” இவ்வாறு அவர்கள் கூறினர்[8].

சிலை திருட்டு, முறைகேடு மற்ற வழக்குகள்விவகாரங்களில் சிக்கி இடம் மாற்றம் பெற்ற அதிகாரிகள் இந்த உணவு பொட்டல விநியோகத்தில் ஈடுபட்டுள்ளது: கோவில்களிலிருந்து உணவு பொட்டலங்கங்கள் விநியோகங்களில் ஏற்கெனவே இடம் மாற்றம் செய்யப் பட்ட, அதிகாரிகள் மறுபடியும் அதே இடத்திற்கு இந்த புனித காரியத்தில் ஈடு பட்டுள்ளது ஆச்சரியமாக உள்ளது. சிலைகள் மாயம், பணியாளர் நியமனத்தில் முறைகேடு புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 2 இணை ஆணையர்களுக்கு மீண்டும் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறையில் ஐந்து இணை ஆணையர்களை பணியிட  மாற்றம் செய்து அரசு செயலாளர் விக்ரம் கபூர் உத்தரவிட்டுள்ளார்.  அதன்படி –

  1. விழுப்புரம் இணை ஆணையர் செந்தில்வேலன்
  2. கோவை இணை ஆணையர், கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணை ஆணையர் G.S. மங்கையர்க்கரசி ஈரோடு இணை ஆணையர்[9],
  3. ஶ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில் இணை  ஆணையர் ஜெயராமன் கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணை ஆணையர்,
  4. இணை ஆணையர் கஜேந்திரன் திருவண்ணாமலை
  5. இணை ஆணையர், பாரதி திண்டுக்கல் இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில், மயிலாடு துறை மண்டல இணை ஆணையராக கஜேந்திரன் இருந்த போது தான் கும்பகோணம் பந்தலூர் பசுபதீஸ்வரர் கோயில்களுக்கு சொந்தமான 6 சிலைகள் மாயமானதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மயிலாடுதுறை மண்டல இணை ஆணையர் கஜேந்திரன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்[10]. இந்த விவகாரம் காரணமாக கடந்த 2017ல் கஜேந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதே போன்று, திருச்செந்தூர் முருகன் கோயில் இணை ஆணையராக இருந்த பாரதி கோயில் கடைகளில் ஏலம் விடுவதில் முறைகேடு நடந்ததாக கூறியும், பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு உள்ளிட்ட பல புகார்கள் மீது சஸ்பெண்ட்  செய்யப்பட்டார். இந்த நிலையில் அவர்கள் இரண்டு பேருக்கு மீண்டும் பணி வழங்கியிருப்பது அறநிலையத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[11].

© வேதபிரகாஷ்

14-05-2021


[1] தமிழ்.இந்து, இந்து சமய அறநிலையத் துறை சார்பில்நோயாளிகளுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடக்கம், செய்திப்பிரிவு, Published : 14 May 2021 03:13 AM; Last Updated : 14 May 2021 03:13 AM.

[2] https://www.hindutamil.in/news/todays-paper/regional02/670540-.html

[3] தினமலர், கொரோனா நோயாளிகளுக்கு அறநிலைய துறை மதிய உணவு, Added : மே 13, 2021  05:51.

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2766578

[5] தினமணி,கரோனா நோயாளிகளுக்கு உணவுப் பொட்டலங்கள், By DIN  |   Published on : 14th May 2021 08:51 AM.

[6] https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2021/may/14/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3623045.html

[7] மாலைமலர், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் 2 ஆயிரம் உணவு பொட்டலங்கள், பதிவு: மே 14, 2021 09:41 IST

[8] https://www.maalaimalar.com/news/district/2021/05/14094137/2632434/Tamil-News-Madurai-Meenakshi-Temple-food-parcels-provide.vpf

[9] The Hindu, Food packets distributed, The Hindu, Friday, May 14 2021, p..2.

[10] தினகரன், முறைகேடு புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 2 இணை ஆணையர்களுக்கு மீண்டும் பதவி: அறநிலையத்துறை உத்தரவு, 2020-12-16@ 00:42:45

[11] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=639223

இந்து அறநிலையத்துறை மூலம் நடந்து வரும் அன்னதான திட்டம், உணவுப் பொட்டல விநியோகமாக மாறி, திமுக அரசு சேவை செய்வது போல பிம்பத்தை உண்டாக்கும் போக்கு (1)

மே15, 2021

இந்து அறநிலையத்துறை மூலம் நடந்து வரும் அன்னதான திட்டம், உணவுப் பொட்டல விநியோகமாக மாறி, திமுக அரசு சேவை செய்வது போல பிம்பத்தை உண்டாக்கும் போக்கு (1)

754 கோவில்களிலிருந்து அன்னதானம் விநியோகம்: தமிழக இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் மூலம் உணவுப் பொட்டலங்கள் மற்றும் கபசுர குடிநீர் வழங்குவது குறித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை  ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது[1]. “இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சுமார் 38,661 கோயில்கள் உள்ளன. இவற்றில் 754 கோயில்களில் அன்னதானத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது[2]. அன்னதானத் திட்டம் செயல்பாட்டில் உள்ள கோயில்கள் வாயிலாக சமூக இடைவெளி பின்பற்றபட்டு ஒவ்வொரு நாளும் சுமார் 45,200 பேருக்கு உணவு பொட்டலங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. தற்போதுள்ள முழு ஊரடங்குக் காலத்தில் அனைத்து கோயில்களில், அன்னதானம் வழங்குவதும் நிறுத்தப்படாமல் தொடர்ந்து உணவு பொட்டலங்களாகப் பொதுமக்கள் மற்றும் குடிசை பகுதியில் வசிப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன”.  

ரூ 30 லட்சம் செலவில் 1,00,000 மக்களுக்கு கோவில் பிரசாதம் / அன்னதானம்: “கொரோனா நோய் பாதிப்பு குறையும் வரை பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவைக்கேற்ப உணவு பொட்டலங்கள் உயர்த்தி வழங்க, இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி ஒரு லட்சம் பேருக்கு ரூ.30 லட்சம் செலவில் இந்து சமய அறநிலையத்துறை மூலம் மதிய உணவு வழங்கப்படும்இந்த உணவு பொட்டலங்கள் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள்உதவியாளர்களுக்கு வழங்கப்படும். அதேபோல இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் மருத்துவமனைகள் மற்றும் சித்த மருத்துவமனைகளில் கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசம் இலவசமாக வழங்கவும் நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகள் இன்று முதல் அமலுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். இதுவரையில் அறநிலையத்துறை தமிழக வரலாற்றில் இல்லாத அளவுக்கு தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி சிறப்பாக செயல்பட்டு அனைவரது புருவத்தை உயர்த்தி பார்க்கும் வகையில் செயல்பாட்டில் ஜொலிக்கும் என்ற நம்பிக்கையில் எங்களது பயணத்தை தொடங்கியுள்ளோம்”, என்றார். இதில் முகத்திற்கு மாஸ்க் / முகக்கவசம், கபசுர குடிநீர் முதலியனவும் வழங்கப் படும் என்றுள்ளதால், அவற்றிற்கு, எங்கிருந்து நிதி வரும், செலவழிக்கப் படும் என்று தெரியவில்லை.

12-05-2021லிருந்து கோவில் அன்னதானம் திராவிட அரசியல்வாதிகள் மூலம் விநியோகம்: கரோனா நோயாளிகளுக்கு 12-05-2021 முதல் தினமும் ஒரு லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படும் என இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்[3]. இதுகுறித்து அவர் கூறியதாவது, “கரோனாவால் பாதிக்கப்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், உடனிருப்போருக்கு நாளைமுதல் ரூ. 30 லட்சம் செலவில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மதிய உணவு வழங்கப்படும். தமிழக கோயில்கள் சார்பாக நாள்தோறும் ஒரு லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படவுள்ளது,” என்றார்[4]. அன்னதானத்திற்காக எத்தனையோ பக்தர்களான புண்ணியவான்கள் கொடையளித்து ஏற்படுத்தியுள்ளார்கள். ஆனால், அவர்களை மக்கள், பக்தர்கள் அல்லது அவ்வுணவை உண்பவர்கள் நினைத்துப் பார்க்கிறார்களா, பார்ப்பார்களா என்று தெரியவில்லை. ஆனால், ஸ்டாலின் பெய்ரால், ஆணையால், “இதுவரையில் அறநிலையத்துறை தமிழக வரலாற்றில் இல்லாத அளவுக்கு தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி சிறப்பாக செயல்பட்டு அனைவரது புருவத்தை உயர்த்தி பார்க்கும் வகையில் செயல்பாட்டில் ஜொலிக்கும் என்ற நம்பிக்கையில் எங்களது பயணத்தை தொடங்கியுள்ளோம்”, என்று தமிழக இந்து அறநிலையத்துறை கூறியிருப்பது வேடிக்கைத்தான்!

மானவ் மித்ரா சேவா சமிதிசெய்யும் சேவையை ஸ்டாலின் செய்வது போலக் காட்டிக் கொள்ளலாமா?: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படும்,” என, ஹிந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்[5]. சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், ‘மானவ் மித்ரா சேவா சமிதி’ என்ற தொண்டு நிறுவனம், 24 மணி நேர இலவச உணவு சேவையைதுவக்கியது. இச்சேவையை துவக்கி வைத்த ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி[6]: “கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பாதிப்பை தடுக்க, முதல்வர், முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளார். இதனால் மக்கள் பாதிக்காத வகையில், அனைத்து அரசு மருத்துவமனை களிலும் உணவு வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் இத்திட்டம் துவக்கப்பட்டது. மேலும் கொரோனா பரவலை தடுக்க, அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டாலும், கட்சி சார்பில் நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தி.மு..,வினர் செயல்படுவர். நில அபகரிப்பு புகாரில், எங்கு, யார் தவறு செய்தாலும், எங்கள் கவனத்திற்கு வந்தால், தி.மு.., ஆட்சியில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.ஹிந்து சமய அறநிலையத்துறை கூட்டம் நடக்க உள்ளது. அதில், ஸ்ரீரங்கம் ஜீயர் தேர்வு தொடர்பாக ஆலோசிக்கப்படும்.தி.மு.., ஆட்சி வெளிப்படையான ஆட்சியாக இருக்கும். ஹிந்து சமய அறநிலையத்துறை செயல்பாடுகளும், எந்தவித ஒளிவு மறைவு இன்றி வெளிப்படையாக இருக்கும்,” இவ்வாறு அவர் கூறினார்.

மற்ற நகரங்களிலும் கோவில் உணவுப் பொட்டலங்கள் விநியோகம், ஆனால், செய்வது நாத்திக திமுகவினர்: தமிழக அரசின் உத்தரவின்படி, இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கரோனா தொற்றாளா்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது[7]. இதன்படி, பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவா்களது உதவியாளா்கள் பயன்பெறும் வகையில் சிறுவாச்சூா் அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில் சார்பில் 100, செட்டிக்குளம் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரா் திருக்கோயில் சார்பில் 50 மற்றும் பெரம்பலூா் அருள்மிகு மதனகோபால சுவாமி திருக்கோயில் சார்பில் 50 என மொத்தம் 200 பேருக்கு மதிய உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன[8]. பெரம்பலூா் வட்டாட்சியா் சரவணன், கரோனா தொற்றாளா்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினார்..

© வேதபிரகாஷ்

14-05-2021


[1] The Hindu, Temples distribute 6,000 food packets to the needy, STAFF REPORTER, MADURAI , MAY 14, 2021 04:29 IST; UPDATED: MAY 14, 2021 04:29 IST

[2] https://www.thehindu.com/news/cities/Madurai/temples-distribute-6000-food-packets-to-the-needy/article34553795.ece

[3] தினமணி, நாள்தோறும் ஒரு லட்சம் உணவுப் பொட்டலங்கள்: அமைச்சர் சேகர்பாபு, By DIN  |   Published on : 11th May 2021 08:05 PM.

[4] https://www.dinamani.com/latest-news/2021/may/11/one-lakh-food-parcels-daily-minister-sekarbabu-3621443.html

[5] தினமலர், அரசு மருத்துவமனைகளில் இலவச உணவு, Added : மே 11, 2021  20:39.

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2765731

[7] தினமணி, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 200 கரோனா தொற்றாளா்களுக்கு மதிய உணவு அளிப்பு, By DIN  |   Published on : 13th May 2021 06:34 AM.

[8] https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2021/may/13/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-200-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3622257.html