Archive for the ‘சேது சமுத்திரம்’ Category

மூன்று கோவில்களையும் இடித்தேன்- என்று டி.ஆர். பாலு பேசியது – ஔரங்கசீப், மாலிகாபூர் பாணியில், திமுகவினரின் கொக்கரிப்பு!

ஜனவரி30, 2023

மூன்று கோவில்களையும் இடித்தேன்என்று டி.ஆர். பாலு பேசியதுஔரங்கசீப், மாலிகாபூர் பாணியில், திமுகவினரின் கொக்கரிப்பு!

மூன்று கோவில்களையும் இடித்தேன்என்று டி.ஆர். பாலு பேசியது: வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற பல சமயங்களில் மத நம்பிக்கைகளை சமரசம் செய்ததாகக் கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார் திமுக பொருளாளரும், எம்பியுமான டி.ஆா்.பாலு[1]. 28-01-2023 அன்று மதுரையில் சேதுசமுத்திரத் திட்டத்துக்கு ஆதரவாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் டி.ஆர்.பாலு பேசுகையில்[2], “எனது தொகுதியில் 100 ஆண்டுகள் பழமையான சரஸ்வதி கோவில், லட்சுமி கோவில், ஜிஎஸ்டி சாலையில் உள்ள பார்வதி கோவில் என மூன்று கோவில்களையும் இடித்தேன். எனக்கு வாக்கு கிடைக்காது என்று தெரியும். ஆனால். எப்படி வாக்குகளை பெறுவது என்பதும் எனக்கு தெரியும். கோவில்களை இடித்தால் எனக்கு வாக்குகள் கிடைக்காது என கட்சி தோழர்கள் எச்சரித்தனர். ஆனால், வேறு வழியில்லை என்று நான் அவர்களிடம் கூறினேன். “கோயில் தேவை என்று கூறினேன். சிறந்த வசதிகளுடன் சிறந்த கோவில்களை கட்டினேன். இதுபோல் பல இடங்களில் மத நம்பிக்கைகளை சமரசம் செய்து திட்டங்களை நிறைவேற்றி உள்ளேன்,” என டி.ஆர் பாலு கூறினார்.

சேதுசமுத்திரம் கப்பல் கால்வாய்த் திட்டத்தை நிறுத்தும் மத்திய அரசின் முடிவு ரயிலை நடுவழியில் திடீரென நிறுத்துவது போன்றது:மேலும், தேசம் வளா்ச்சி பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு அரசியல் கட்சியினா் முன் மொழிந்ததன் பேரில் சேதுசமுத்திரம் கப்பல் கால்வாய்த் திட்டம் செயல்படுத்தப்பட்டது. சேதுசமுத்திரம் கப்பல் கால்வாய்த் திட்டத்தை நிறுத்தும் மத்திய அரசின் முடிவு ரயிலை நடுவழியில் திடீரென நிறுத்துவது போன்றது,” என்றார். அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், கி.வீரமணி, முதலியோர் இருந்தனர். “மத்திய அரசு அறிவியல் மற்றும் பகுத்தறிவு சிந்தனையைப் பயன்படுத்தாமல், மத வழிகளைப் பின்பற்றாமல் ராமா் பாலம் சேதமடைந்து விடும் என்பது போன்ற ஆன்மிக கருத்துக்களை கூறி சுமார் 23.5 கி.மீ பணிகள் மட்டுமே மேற்கொள்ள வேண்டிய நிலையில் திட்டத்தை நிறுத்துகிறது என்று பாலு குற்றம் சாட்டினார். இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் ஆண்டுக்கு ரூ.750 கோடி லாபம் கிடைத்திருக்கும். தென் மாநிலங்கள் வளா்ச்சி பெறும். குறிப்பாக தமிழகம் வளா்ச்சி பெறும். மக்கள் அனைவரும் பகுத்தறிவுடன் உள்ளனா். அவா்களை மதத்தின் பெயரால் இனி ஏமாற்ற முடியாது,” என்று டி.ஆர். பாலு கூறினார்.

திமுக சேது சமுத்திர திட்டத்தில் திடீரென்று ஆர்வம் காட்டுவது: இம்மாத தொடக்கத்தில், சேதுசமுத்திரத் திட்டத்தை மேலும் தாமதிக்காமல் மத்திய அரசை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டிற்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என்பதால், இத்திட்டத்தை மத்திய அரசு தாமதப்படுத்தக் கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றினார். இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே ஒரு பெரிய நீர்வழித் திட்டம், சேதுசமுத்திரம் திட்டம் பால்க் ஜலசந்தியை மன்னார் வளைகுடாவுடன் இணைக்க முன்மொழிகிறது. இந்த திட்டம் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பொருளாதார வளத்தை கொண்டுவருவதற்கான முக்கியமான திட்டமாகக் கருதப்படுகிறது. 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம், இலங்கையை அடைய ராமரால் கட்டப்பட்டதாக நம்பப்படும் ‘ராம் சேது’ பாலத்திற்கு தீங்கு விளைவித்துவிடும் என்பது போன்ற ஆன்மிக கருத்துக்களை கூறும் வலதுசாரிகளின் எதிர்ப்பால் இந்த திட்டம் நிறுத்தப்பட்டது. சேதுசமுத்திரம் திட்டத்தின் மூலம் கப்பலின் பயணத்தை கிட்டத்தட்ட 650 கி.மீ வரை குறையும். எவ்வித சான்றாவணமும் இல்லாமல், நாட்டின் தென்கோடி முனையான ராமேசுவரத்தில் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

டி.ஆர். பாலு பேசிய விடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தது: இந்நிலையில், டி.ஆர். பாலு பேசிய விடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது தனது ட்விட்டர் பக்கத்தில், “100 ஆண்டுகள் பழமையான இந்து கோவில்களை இடிப்பதில் திமுகவினர் பெருமை கொள்கின்றனர். இந்து சமய அறநிலையத் துறையை கலைத்து, கோவிலை அரசின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்”. வீடியோவில், பாலு நக்கலாகவும், திமிராகவும், பேசியது நன்றாகவே தெரிகிறது. இதைக் கேட்டு திமுகவினர் சிரிப்பதும் தெரிகிறது. அதாவது, அக்காரியத்தை பெரிய சாதனை போலத்தான் பேசியது தெரிகிறது.

100 வருட மசூதியையும் இடித்துள்ளோம்: அதில், நான்கு வழிச்சாலை அமைக்கிற நேரத்தில் 100 வருட கோவில், கொல்கத்தாவில் 100 வருட மசூதியை இடித்து இருக்கேன்[3]. கோவிலை இடித்து இருக்கேன், மசூதியை இடித்து இருக்கேன், மாதா கோவிலை இடித்து இருக்கேன்[4]. வழியில் இருக்கும் வீடுகளை எல்லாம் இடிக்கும் போது மக்கள் வந்தாங்க, இதுகுறித்து மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக இருந்த ஜோதிபாசு என்னை அழைத்து, இப்படி 100 வருட மசூதியை எல்லாம் இடித்தால் வாக்கு வங்கி பாதிக்கப்படுவது ஒருபுறம் இருந்தாலும், மத நம்பிக்கை எல்லாம் பாதிக்கும். இதெல்லாம் சரியான முடிவா எனக் கேட்டார். அதற்கு நான் சொன்னேன், எங்க ஊரில், என்னுடைய தொகுதியில் சரஸ்வதி கோவில், லெட்சுமி கோவில் , பார்வதி கோவில், இந்த கோவில்களும் என்னுடைய தொகுதியில் ஜிஎஸ்டி ரோட்டில் கட்டிருப்பாங்க.. இந்த மூன்று கோவிலை நான்தான் இடித்தேன்.

எனக்கு ஒட்டு வராதுன்னு தெரியும். ஆனா, ஒட்டு எப்படி வர வைக்குறதுனும் தெரியும்: எனக்கு ஒட்டு வராதுன்னு தெரியும். ஆனா, ஒட்டு எப்படி வர வைக்குறதுனும் தெரியும். ஒட்டு வராது, வராது, தயவு செய்து இடிக்காதீங்க என எனக்கு தோழர்களாம் சொன்னாங்க. ஆனால் எனக்கு வேறு வழி கிடையாது. அவர்களுக்கு என்ன வேற கோவில் கட்டி தர வேண்டும், இதை விட சிறந்ததாக, 100, 200 பேர் உட்கார்ந்து சாப்பிடக் கூடிய வகையில் மண்டபம் எல்லாம் செய்து தரேன்னு சொல்லி, அந்த இடத்தில் இருந்த கோவில்களை எல்லாம் இடித்து விட்டு பக்கத்தில் கோவில் கட்டி கொடுத்தேன்  என்று தான் டி.ஆர்.பாலு பேசியுள்ளதாக அந்த வீடியோவை வெளியிட்டு திமுகவினர் பாஜகவினருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்[5]. இப்படியாக அவருடைய முழுமையான வீடியோவில் அவர் பேசியுள்ள நிலையில், அதில் சிறு பகுதி மட்டும் எடிட் செய்யப் பட்டு பகிரப்பட்டு வருவது கண்டனத்திற்குள்ளாகி வருகிறது[6], என்று புதியதலைமுறை போன்ற ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஆனால், கோவில்கள் இடிக்கப் பட்ட உண்மையினை மறுக்கவில்லை.

அண்ணாமலை மறுப்பு: இதற்குள், திமுக அமைச்சர்களும் அந்த வீடியோ எடிட் செய்யப் பட்டது என்று பேசியுள்ளனர். அதற்கும், அண்ணாமலை, பதில் அளித்துள்ளார், “அமைச்சர் கே.என்.நேரு மற்றும் டி.ஆர்.பாலு பேசியவற்றை நான் எடிட் செய்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார், நிரூபிக்கவில்லை எனில் முதலமைச்சர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும்[7]. எடிட் செய்து வெளியிட்டதாக ..வேலு சொல்லியுள்ளார்[8]. கோயில் இடிப்பு தொடர்பாக டி.ஆர் பாலு பேசிய வீடியோ முழுமையானதுவீடியோ தடவியல் ஆய்வு செய்து டேப் எடிட் செய்யப்பட்டது என நிரூபணமானால் அரசியலைவிட்டு விலக தாயார் அவர் சொல்லும் இடத்தில் கே.என்.நேரு, .வி.கே.எஸ் பேசிய ஒரிஜினல் வீடியோவை தரத் தயார் அதனை முதலமைச்சர் தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தி கொள்ளலாம்[9]. தேர்தலுக்கு பணம் கொடுக்கிறார் என்பது ஒரு குற்றச்சாட்டு., உண்மை நிரூபிக்கப் பட்டால், ஸ்டாலின் பொது மன்னிப்புக் கேட்க வேண்டும்……” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்[10]. இந்த வீடியோவும் சுற்றில் உள்ளது.

© வேதபிரகாஷ்

30-01-2023.


[1] தினமணி, இந்து கோவில்களை இடிப்பதில் திமுகவினர் பெருமை கொள்கின்றனரா?, By DIN  |   Published On : 29th January 2023 07:23 PM  |   Last Updated : 29th January 2023 07:28 PM.

[2] https://www.dinamani.com/tamilnadu/2023/jan/29/demolished-temples-knew-wont-get-votes-dmks-tr-baalu-3992030.html

[3] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், 100 ஆண்டு கால கோயிலை இடித்ததாக பேசினாரா டி.ஆர்.பாலு.? அண்ணாமலையின் வீடியோவிற்க்கு பதிலடி கொடுக்கும் திமுக, Ajmal Khan, First Published Jan 30, 2023, 12:29 PM IST.

[4] https://tamil.asianetnews.com/politics/dmk-has-released-a-video-in-response-to-the-video-released-by-annamalai-in-which-tr-balu-spoke-about-the-demolition-of-temples-rpae2z

[5] FackCheck: புதியதலைமுறை, நூற்றாண்டு கோயிலை இடித்த டி.ஆர். பாலு?, இணையத்தில் உலா வரும் வீடியோவின் உண்மை நிலை, ஜனனி கோவிந்தன், Published: 30, Januay 2023 02:13 PM.

[6] https://www.puthiyathalaimurai.com/newsview/154754/fact-check-over-tr-baalu-speech-about-temple-demolition

[7] தமிழ்.ஏபிபி.லைவ், Annamalai Release Video: டி.ஆர்.பாலு பேசிய வீடியோவை வெட்டி ஒட்டவில்லைஅண்ணாமலை, By: செல்வகுமார் | Updated at : 30 Jan 2023 06:08 PM (IST), Published at : 30 Jan 2023 06:08 PM (IST).

[8]  https://tamil.abplive.com/news/tamil-nadu/t-r-baalu-s-video-was-not-cut-and-pasted-says-bjp-state-president-annamalai-attackdmk-99041

[9] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், அரசியலை விட்டு விலக நான் தயார்.. ஒரிஜினல் வீடியோ இருக்கு! திமுகவுக்கு சவால்அண்ணாமலை பரபரப்பு பேட்டி, Raghupati R, First Published Jan 30, 2023, 7:16 PM IST.

[10]https://tamil.asianetnews.com/politics/tn-bjp-president-annamalai-challenge-to-dmk-tr-baalu-controversy-video-matter-rpawx2