Archive for the ‘திருக்கோஷ்டியூர்’ Category

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலுக்கு, துர்கா ஸ்டாலின் விஜயம் – கணவர் வெற்றி பெற்றதும் நேர்த்திக் கடன் செல்லுத்த வந்தாரா? (1)

மே20, 2022

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலுக்கு, துர்கா ஸ்டாலின் விஜயம் – கணவர் வெற்றி பெற்றதும் நேர்த்திக் கடன் செல்லுத்த வந்தாரா ? (1)

நான்காவது முறையாக 14-05-2022 அன்று துர்கா ஸ்டாலின் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலுக்கு விஜயம்: சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலுக்கு, துர்கா ஸ்டாலின் விஜயம் செய்தார்[1]. முதல்வராக வேண்டும் என்ற வேண்டுதல் நிறைவேறியதால் பெருமாளுக்கு நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்[2]. துர்கா ஸ்டாலின். கோவிலுக்கு வருகை தந்த துர்கா ஸ்டாலினுக்கு, கோயில் பட்டாச்சாரியர்கள் வேதமந்திரம் முழங்க, தேவஸ்தான அறங்காவலர் முன்னிலையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது[3]. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனரெட்டி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்[4]. இதனிடையே, மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வரவேண்டும் என துர்கா ஸ்டாலின் ஏற்கெனவே மூன்று முறை இந்தக் கோயிலுக்கு வந்து வேண்டிக் கொண்டதாகவும், தற்போது அந்த வேண்டுதல் நிறைவேறியதால் நான்காவது முறையாக வருகை புரிந்ததாகவும் கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர். அப்படியென்றால் முன்னர் மூன்று முறை எப்பொழுது வந்தார் என்று தெரியவில்லை. துர்கா ஸ்டாலின் வருகையையொட்டி, சிவகங்கை எஸ்.பி செந்தில்குமார் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஸ்டாலின் இந்துமதத்தை எதிர்த்து, கேலி பேசும்போது, அவர் மனைவி இப்படி கோவில் விஜயம் செய்வது, தெரிந்த விசயம் என்றாலும், சில பிரச்சினைகள் எழுகின்றன.

கோவில் அஷ்டாங்க விமானத்திற்கு தங்கத் தகடு வேயும் பணியை துவக்கி வைத்தார்: கோவில் அஷ்டாங்க விமானத்திற்கு தங்கத் தகடு வேயும் பணியை முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா 14-05-2022 அன்று துவக்கி வைத்தார்[5]. அப்படியென்றால், அது முன்னாலேயே தீர்மானிக்கப் பட்டது, ஏற்பாடு செய்யப் பட்டது, என்றாகிறது. இக்கோயில் அஷ்டாங்க விமானம் மிக பிரசித்தி பெற்றது. இந்த கோபுரத்தில் நின்றுதான் ராமானுஜர் மந்திர உபதேசத்தை பொதுவெளியில் வெளியிட்டார். இக்கோயிலில் அஷ்டாங்க விமானத்திற்கு தங்கத்தகடு வேய திட்டமிடப்பட்டது[6]. மதுரை ஆண்டாள் பேரவையினர் 36 கிலோ தங்கம் வழங்க உள்ளனர். முதற்கட்டமாக 4 கிலோ வழங்கியுள்ளனர்[7]. கோயிலில் 20 கிலோ தங்கம் இருப்பில் உள்ளது. தங்கத்தகடு வேயும் பணியை துர்கா இன்று காலை துவக்கி வைத்தார்[8]. ஸ்டாலின் முதல்வராக இக்கோயிலில் துர்கா நேர்ந்து கொண்டதாகவும், அதை நிறைவேற்ற இன்று வந்ததாகவும் கட்சியினர் கூறினர். மாலை சித்திரை தேரோட்டம் நடந்தது. சிவகங்கை தேவஸ்தான அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் தலைமையில் வரவேற்பு அளித்தனர். பின்னர் கோவிலில் உள்ள அனைத்து சன்னதிகளுக்கும் சென்று தரிசனம் செய்தார். தேரில் எழுந்தருளிய உற்சவரை தரிசனம் செய்தார். இது தான், பின்னர் சர்ச்சைக்குண்டானது. ஆனால், முன்னரே

05-05-2022 அன்று தொடங்கிய தேத் திருவிழா, 14—05-2022 அன்று பிரச்சினையானது: ஸ்ரீ சவுமிய நாராயண பெருமாள் திருநட்சத்திரமான சித்திரை நட்சத்திரத்தில் சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் கோயிலில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். இந்த ஆண்டு தேர்த் திருவிழாவானது கடந்த 5-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது[9]. விழாவையொட்டி தினந்தோறும் இரவு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா மூலம் பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார்[10]. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலையில் ரிஷப வாகனத்தில் திருத்தேருக்கு ஸ்ரீதேவி பூதேவியருடன் பெருமாள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்கள் வடம் பிடித்து தேரை சிறிது தூரம் வடம் பிடித்து சென்றனர். 4 மாட வீதிகளில் அக்னி மூலையில் சென்று கொண்டிருந்த பொழுது திடிரென கனமழை கொட்டியது. இதனால் தேரை பிடித்து இழுக்க முடியாமல் பக்தர்கள் தடுமாறினர். சுமார் ஒரு மணி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கன மழையால் தேரோடும் வீதியில் வெள்ளம் போல் மழைநீர் கரைபுரண்டு ஓடியது. இதனால் தேரை தொடர்ந்து இழுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் நேற்று தேரோட்டம் தடைபட்ட நிலையில் இன்று மீண்டும் ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் கோவில் தேரோட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. பத்து நாட்கள் கழித்து, மறுபடியும், இதே போன்ற பிரச்சினை வந்தது. அதற்கு காரணம், துர்கா ஸ்டாலின்.

திருக்கோஷ்டியூரில் உள்ள சவுமிய நாராயணர் கோவில் தேர் உற்சவம் மே 14ல் நடந்தது: ‘தேர் புறப்பாட்டுக்கு முன், தேரில் ஏறி முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா தரிசனம் செய்தார். அது தெய்வ குற்றம்; வைணவ தலங்களில் தேர் உற்சவத்திற்கு முன், தேரில் ஏறி பெண்கள் தரிசனம் செய்ய கூடாது என்பது ஐதீகம். அதை துர்கா மீறி விட்டார்’ என, சமூக வலைதளங்களில் கருத்து பகிர்ந்து வருகின்றனர். இது குறித்து, திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணர் கோவில் தீர்த்தகாரரும், கோவிலுக்குள் இருக்கும் உடையார் சன்னிதி பட்டாச்சாரியாருமான ராமானுஜம் கூறியதாவது: “திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணர் கோவில் நாராயண மந்திரத்தை ராமானுஜர் வெளிப்படுத்திய ஆலயம். 108 திவ்ய தேசங்களில் 95வது தலம். நரசிம்ம அவதாரத்திற்கு முன்பாகவே நரசிம்ம கோலத்தை பெருமாள், தேவர்களுக்கு காட்டி அருளிய இடம். இந்திரன் பூஜித்த சவுமிய நாராயணர் விக்கிரகம், உற்சவராக இருக்கும் ஆலயம் என பல்வேறு சிறப்புகள் இந்த கோவிலுக்கு உண்டு. இந்த கோவிலின் தேர் உற்சவம் ஆண்டு தோறும் மே மாதத்தில் நடக்கும். கோவிலின் அத்யயன பட்டராக இருக்கும் திருக்கோஷ்டியூர் மாதவன் தான், தேர் உற்சவத்துக்கான நாள் குறித்து கொடுப்பார். கோவிலில் நடக்கும் எல்லா காரியங்களுக்கும் அவர் தான் பொறுப்பு. ‘மே 14 மாலை 5:00 மணிக்கு தேர் உற்சவம் நடக்கும்‘ என, அவர் தான் நாள், நேரம் குறித்து கொடுத்தார்.

திருகோஷ்டியூர் தேரில் துர்காவை ஏற விட்டதால், தெய்வ குற்றமாகி விட்டது: என்றைக்கு தேர் உற்சவம் நடக்கும் என அறிவிக்கப்படுகிறதோ, அன்றைய தினம் காலையிலேயே உற்சவர் தேருக்கு வந்து விடுவார். அப்படித்தான், இந்த ஆண்டும் வந்தார். வழக்கம் போல, திருக்கோஷ்டியூர் கிராமத்தில் இருக்கும் ஆண்களும், பெண்களும், தேர் மீது அமைக்கப்பட்டு இருக்கும் படிகள் வழியாக ஏறிச் சென்று பெருமாளை வணங்கினர்[11]. அர்ச்சனைகளும் செய்யப்பட்டன. கிராம மக்களோடு மக்களாக, இந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்காவும் வழிபட்டார்[12]. என்றெல்லாம் செய்திகள் வந்தாலும், சில பட்டர்களின் துணையோடு தான் அவ்வாறு நடந்திருக்கிறது என்று தெரிகிறது. வீட்டில் பூஜை அறையில், பல விக்கிரங்களை வைத்துக் கொண்டு, சுலோகங்கள், மந்திரங்கள் எல்லாம் சொல்லிக் கொண்டு பூஜை செய்து வரும் அவரிடம், உண்மையை சொன்னால், தேரில் ஏறாமல் இருந்திருப்பார்.

© வேதபிரகாஷ்

19-05-2022


[1] குமுதம், வேண்டுதலை நிறைவேற்றும் முதல்வர் மனைவி!, kumudam bookmark line | TAMILNADU| Updated: May 14, 2022; https://www.kumudam.com/news/national/43522

[2] https://www.kumudam.com/news/national/43522

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், வேண்டுதலை நிறைவேற்றிய பெருமாள்; நேர்த்திக்கடன் செலுத்திய துர்கா ஸ்டாலின், Written by WebDesk, May 16, 2022 10:40:53 pm,

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/durga-stalin-prays-at-sivaganga-perumal-temple-454734/

[5] தினத்தந்தி, திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம், Update: 2022-05-14 10:34 GMT.

[6] https://www.dailythanthi.com/amp/News/State/2022/05/14160405/Sami-Darshan-of-Durga-Stalin-at-the-Thirukkoshtiyur.vpf

[7] தினமலர், திருக்கோஷ்டியூர் விமானத்திற்கு தங்கத்தகடு: வேண்டுதலை நிறைவேற்றுகிறார் ஸ்டாலின் மனைவி,  -நமது நிருபர், Added : மே 14, 2022  07:31 |

[8] https://www.dinamalar.com/News_Detail.asp?Id=3029515

[9] தமிழ்.சமயம், கடுப்பான வருண பகவான்: தடைப்பட்டு போன திருக்கோஷ்டியூர் கோவில் தேரோட்டம்!, Curated by Srini Vasan | Samayam TamilUpdated: 15 May 2022, 1:24 pm

[10] https://tamil.samayam.com/latest-news/sivagangai/thirukoshtiyur-temple-car-festival-stopped-by-rain/articleshow/91574812.cms

[11] தினமலர், திருக்கோஷ்டியூர் கோவில் தேரில் ஏறிய துர்கா, நமது நிருபர் –Added : மே 17, 2022  02:05; https://www.dinamalar.com/News_Detail.asp?Id=3031646&Print=1

[12] https://www.dinamalar.com/News_Detail.asp?Id=3031646&Print=1